பரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐம்பது வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் வழிபட சென்றதலால் தங்களுடைய மனுதரும சாஸ்திரம் கெட்டுவிட்டதாக வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளன இந்துத்துவ அமைப்புகள்.

மூன்று மாத கால, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் புதன்கிழமை பிந்து, கனகதுர்கா ஆகிய இருபெண்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். உண்மையான பக்தர்கள் எவரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அரசியல் பிழைப்பு நடத்தப் பார்க்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் எதிர்ப்பு என்கிற பெயரில் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சபரிமலையில் ஆலயப் பிரவேசம் நிகழ்த்திய பிந்து, கனகதுர்கா

சாலை மறியல், கல்லெறிதல், போலீசாருடன் மோதுதல் என கேரளத்தின் பல இடங்களில் காவிக் கும்பல் வன்முறையில் இறங்கியதோடு, இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். வியாபாரிகள் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்துவிட்ட நிலையில், வன்முறை நடத்தியே வயிறு வளர்க்கும் கும்பல் ஆங்காங்கே வெறியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

பந்தளத்தில் நடந்த வன்முறையின் போது, கல்வீச்சில் தாக்கப்பட்ட சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த உன்னிதான் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பந்தளம் சிபிஎம் அலுவலகத்தை நோக்கி இந்த அமைப்பினர் சென்று கொண்டிருந்தபோது, அலுவலகத்தின் மீதிருந்து கற்கள் வீசப்பட்டதாகவும் அப்போது ஒரு கல் உன்னிதான் மீது விழுந்ததாகவும் சொல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காங்கிரசும் பாஜகவும் இடது முன்னணி அரசின் செயலை ஒரே குரலில் எதிர்க்கின்றன. கேரள காங்கிரஸ் இன்று ‘கருப்பு தின’த்தை கடைப்பிடிக்கிறது. உண்மையில் காங்கிரசின் வரலாற்றின் இந்த ஆக பிற்போக்குத்தனமான எதிர்ப்பு கருப்பு பக்கமாகவே இருக்கும் என்பதை காங்கிரஸ் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் உணரவே இல்லை.

படிக்க:
♦ சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
♦ அறிவுத்துறையினரை ஏன் குறிவைக்கிறது ஆர்.எஸ்.எஸ் ? | சென்னை கருத்தரங்கம் | நேரலை | Live Streaming

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “கேரள அரசுதான் ஐயப்பன் நம்பிக்கையில் பெண்களை தலையிட அனுமதித்திருக்கிறது. கடவுள் நம்பிக்கையற்றவர்கள், நம்பிக்கையை குலைக்க உதவியிருக்கிறார்கள். சுத்திகரிப்பு பூஜை செய்த தந்திரி சரியான செயலையே செய்திருக்கிறார்” என்கிறார்.

வழக்கம்போல, மத பிரச்சினைகளுக்காக காத்திருக்கும் பாஜக, கோயில் பாரம்பரியத்தை மீறி விட்டதாக ஆட்டம் போடுகிறது.  கேரள பாஜக தலைவர் ஸ்ரீதர், இந்துக்களின் நம்பிக்கை மீது அடி விழுந்திருக்கிறது என்கிறார். அதாவது, பெண்களை தள்ளி வைப்பது, வழிபடும் உரிமையை மறுப்பது இந்துகளின் நம்பிக்கையாம்!

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதை பாஜக ஒருபோதும் ஏற்காது என்கிறார் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் தமிழிசை. வரலாறு முழுவதும் மனு தர்மத்தின் அடிமைகள் இப்படித்தான் உளறித் திரிகிறார்கள்.  தமிழக பரிவாரங்கள் சென்னையில் உள்ள கேரள சுற்றுலாத் துறை கட்டிடத்தின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டன. பாஜக அடிமை எடப்பாடி அரசு குறைந்தபட்ச நடவடிக்கையைக்கூட எடுக்கவில்லை.

சபரிமலையில் இரண்டு பெண்கள் நுழைந்ததைக் கண்டித்து சங்கிகளின் ஆர்ப்பாட்டம்

அடிப்படையில் உச்சநீதிமன்றம் என்ன காரணங்களைச் சொல்லி தீர்ப்பு வழங்கியதோ, அதே காரணத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் சபரிமலை பூசாரிகள். “எந்த விதத்திலாவது பரிசுத்தம் மற்றும் அசுத்தம் எனக்கூறி ஒதுக்குவது  பிரிவு 17-ன் கீழ் தீண்டாமையின் கீழ் வரும்” என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் தரிசனம் செய்ததை வெளிப்படையாக அசுத்தம் எனக்கூறி, சுத்திகரிப்பு பூஜை செய்ய ஆணையிட்டார் தலைமை தந்திரி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமலில் உள்ள நிலையில் இப்போது தன் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டம் பாயும் என்கிற பயத்தில், “தீண்டாமையாக இதைப் பார்க்ககூடாது” என பம்முகிறார் தந்திரி.

கேரள தேவசம் போர்டின் ஆளுகைக்கு உட்பட்ட ஐயப்பன் கோயிலை மூட தந்திரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அவர் ஒரு பணியாள் மட்டுமே என்கிறார் அந்தத்  துறைக்கான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன். ஐயப்பன் கோயில் அரசுக்குத்தான் சொந்தமே தவிர, தந்திரிக்கோ அல்லது பந்தளம் அரச குடும்பத்துக்கோ சொந்தமானதல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“பெண்களுக்கு பாரபட்சமான, பெண்களின் மாதவிடாயை தொடர்புபடுத்தி பேசும் அசுத்தம், அழுக்கு என்கிற நம்பிக்கைகள், ஒதுக்குதலின் குறியீடுகள். மாதவிடாயை காரணம் காட்டி பெண்களை ஒதுக்குவது, தீண்டாமையின் ஒரு வடிவம். அது அரசியலமைப்புக்கு எதிரானது” என தனது தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

படிக்க :
♦ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !
♦ சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்

“இன்னமும் மாதவிடாயை காரணம் காட்டி, ஒதுக்கி வைப்பது அரசியலமைப்பு உறுதி செய்கிற பெண்களின் மரியாதையை குலைப்பதாகும்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பதுபோல, நாட்டை ஆளும் பெரிய காவி தலைவர் மோடி, சமீபத்தில் வழங்கிய நேர்காணலில் மாதவிடாய் ஆகும் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பது இந்து பாரம்பரியம் என பேசியிருந்தார். அரசியலமைப்புக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ அப்பாற்பட்டவர்களாகவே காவி கும்பல் தங்களை நினைத்துக் கொள்கிறது. அரசியலமைப்பை காலில் போட்டு மிதிப்பதையே பெருமையாக நினைக்கிறது இந்த கும்பல், என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?

கலைமதி
கலைமதி
செய்தி ஆதாரம்: Two women under 50 enter Sabarimala temple
purification rites violate sc verdict

27 மறுமொழிகள்

 1. உச்ச நீதிமன்றம் கேரளா சர்ச் பற்றி கொடுத்த தீர்ப்பை அமல்படுத்த வக்கில்லை ஏன் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்று கேள்வி கேட்க துப்பில்லை இவர்கள் எல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக பேச வந்துவிட்டார்கள்.

  ஹிந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவது அதற்கு ஹிந்துக்கள் பொங்கி எழுந்தாள் உடனே வன்முறை என்று பிரச்சாரம் செய்வது.

  இதே உச்சநீதிமன்றம் தானே ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக தீர்ப்பு சொன்னது அப்போது மட்டும் ஏன் தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

  நீதிமன்றம் தானே ஸ்டெர்லைட் அலையை திறக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது ஏன் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறீர்கள். இது எல்லாம் மட்டும் நீதிமன்ற அவமதிப்பு கிடையாதா ?

  நேர்மையின்மைக்கு மறுபெயர் கம்யூனிஸ்ட் அயோக்கியத்தனம்

  • What is your point Mr. Manikandan ?

   Women (10-50) are forbidden from entering the temple based on that they are not pure (based on periods) ? Do you agree with that ?

   Looking from you a straight answer !!!!!!!

   If you do not have one, please do not answer this question.

   • அந்த வயதுடைய பெண்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் சபரிமலைக்கு போக மாட்டார்கள். இது கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் (கிறிஸ்துவ) பெண்கள். நிச்சயம் அவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தாலே நான் சொல்வது உண்மை என்பது தெரியும்… ஹிந்து கோவில்கள் அனைத்திலும் பெண்கள் நுழைய கூடாது என்ற தடை கிடையாது, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இந்த வயதுடைய பெண்கள் செல்ல கூடாது என்று ஐதீகம் உள்ளது அதை நான் நம்புகிறேன்.

    இதை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கம்யூனிஸ்ட்களோ அல்லது கிறிஸ்துவர்களோ புரிந்துகொள்ள முடியாது… ஒன்று மட்டும் நிச்சயம் இந்த காரியத்தை நீங்கள் பாகிஸ்தானிலோ அல்லது வேறு நாடுகளிலோ செய்ய முடியாது. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்பதால் தான் இந்த அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

    • Manikandan,

     I asked you a straight question. Very simple question. But you …. bla bla bla bla ……. (as usual)

     Yes, I know. A man must have some ghuts to tell the truth.

      • Are your mother’s belly is not pure ? If not then she should not be allowed to this temple. Do you agree with that ?
       (May be I am using inappropriate and offensive language. My sincere apology for that)

       • எல்லா கிறிஸ்துவர்களை போலவே நீங்களும் ஹிந்து தெய்வத்தை பற்றிய மட்டமான சிந்தனையை தான் கொண்டு இருக்கிறீர்கள்.

        சபரிமலை ஐயப்பன் ’நைஷ்டிக பிரம்மாச்சாரி’. அதனுடைய அர்த்தம் அவர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பார் என்பதுதான். அதற்கான காரணம் பந்தளம் மகாராணிக்கு அவர் கொடுத்த வாக்குறுதி… ஐயப்பன் தன்னை பார்க்க வருபவர்கள் எப்படிப்பட்ட விரதம் இருக்க வேண்டும் என்று எல்லாம் சொல்லி இருக்கிறார். ஐயப்பனை பார்க்க போகவேண்டும் என்றால் 41 நாட்கள் பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும்…

        ஐயப்பனுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் செய்வது நியமற்றம் செயல்…

        ஐயப்பன் உயிரோடு இருக்கும் சாமியார் என்று வைத்துக்கொள்வோம். என் ஆசிரமத்திற்கு ஆண்கள் மட்டும் தான் வரவேண்டும், பெண்கள் யாரும் வர கூடாது என்று சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா மாட்டிர்களா ? ஐயப்பன் என்ற சாமியாருக்கு உரிமைகள் உள்ளது… அந்த உரிமையை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது என்று பெண்கள் சொல்வதும், நாங்கள் அந்த சாமியாரை பார்க்க போவோம் என்று சொல்வது சரியா ?

        உண்மையில் சொல்லப்போனால் இங்கே ஐயப்பனின் தனிமனித உரிமை மீறப்பட்டு இருக்கிறது.

        • பெண்கள் சபரிமலைக்கு சென்றாலே “நைஷ்டிக பிரமச்சரியம்” கெட்டுவிடுமா?இது இன்னாங்கடா சாமி?ஐய்யப்பனால் தனது நைஷ்டிக பிரமச்சரியத்தையே” காப்பாற்றி கொள்ள துப்பில்லாமல் பக்தர்களையா காப்பற்றப்போகிறார்?

         • ஐயப்பன் பெண்கள் யாரும் தன்னை தரிசிக்க கூடாது என்று சொல்லவில்லை. ஐயப்பன் தன்னை தரிசிக்க வருபவர்கள் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதன்படி ஆண்களால் இந்திரியங்களை கட்டுப்படுத்தி ஒரு மண்டலம் ஐயப்பன் சொன்னபடி விரதம் இருக்க முடியும் ஆனால் பெண்கள் மனதை கட்டுப்படுத்தினாலும் அவர்களால் இயற்க்கை நியதியை மீற முடியாது.

          ஐயப்பன் கோவிலுக்கு போவது என்பது பெண்களுக்கு எதிரானது அல்ல… அவர்கள் விரதத்தை சரியாக கடைபிடித்தால் அவர்களும் போகலாம் ஆனால் அந்த விரதத்தை மாதவிடாய் வரும் வயதிற்கு முன்போ அல்லது மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகோ தான் கடைபிடிக்க முடியும்…

          நிச்சயம் இந்த 2 பெண்கள் சென்றது தவறு ஏற்க முடியாத செயல்.

          இதே போல் பாகிஸ்தானிலோ அல்லது வேறு இஸ்லாமிய நாடுகளிலோ இவர்கள் செயல்பட்டு இருக்க முடியாது. ஹிந்துக்கள் அமைதியானவர்கள் என்ற துணிச்சல் தான் இவர்களை இந்த மாதிரி செய்ய வைத்து இருக்கிறது… இந்த மாதிரியான செயல்கள் படிப்படியாக மதவாதத்தை வளர்க்கும்.

          • //ஐயப்பன் பெண்கள் யாரும் தன்னை தரிசிக்க கூடாது என்று சொல்லவில்லை. //
           அப்புறம் என்னா ம . . . க்கு பெண்கள் வரக்கூடாதுங்கிற ?
           சாமி சரணம் . . .
           //ஐயப்பன் தன்னை தரிசிக்க வருபவர்கள் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். //
           யாருகிட்ட சொல்லியிருக்காரு ?
           எப்ப சொன்னாரு ?
           //ஆனால் அந்த விரதத்தை மாதவிடாய் வரும் வயதிற்கு முன்போ அல்லது மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகோ தான் கடைபிடிக்க முடியும்…//
           புருசன்சாமி, மாதவிடாய் ஆன பொண்டாட்டி சமைச்சத திங்கிறது, அவ தொவச்சிப் போட்ட வேட்டி சட்டைய மாட்டிக்கிறது, அவ விட்ட மூச்சுக் காத்தை சுவாசிக்கிறது, அவ கிட்ட பால் குடிச்ச பிள்ளையை தூக்குறது, அவ பேண்ட கக்கூசுல இவன் பேளுறது, மத்தபடி அவரு பீடி சிகரெட் பிடிக்கிறது, டாஸ்மாக்ல தனிக் கிளாஸ்ல தீர்த்தம் குடிக்கிறது இதெல்லாம் தீட்டாகாதா சாமி . .
           சாமி சரணம் . .

          • S.S.கார்த்திகேயன் முதலில் ஐயப்ப விரதம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசு.

          • பக்கம் பக்கமா போஸ்ட் போடுறயே மணிகண்டா,
           உன்னோட முத்தான போஸ்ட்ல இருந்துதான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு.
           பதில் சொல்ல வக்கில்லயா உனக்கு ?

        • வாரே வாவ் . . !
         அற்புதமான விளக்கம் . . !
         என்ன அறிவு . . ! என்ன அறிவு . !
         கண்ணுபடப் போகுது மணிகண்டா . .
         வீட்ல சுத்திப் போடச் சொல்லுப்பா !

        • “இங்கே ஐயப்பனின் தனிமனித உரிமை மீறப்பட்டு இருக்கிறது.”

         Soooooo, he is not a god anymore ?????

         Tellme the truth Mr. Manikandan.
         Do you believe in the concept that the men and women are equal. If yes, then what kind of rights men have ? to ban female devotees to visit god Iyappa ?

         From the begining, men decide, set the rules for women and they wanted to keep their control over women. This is the history (All over the world)

   • உங்களை போன்றவர்களுக்கு ஒரு கேள்வி உச்சநீதிமன்றம் செயின்ட் மேரி’ஸ் சிரியன் சர்ச் சம்பந்தமாக ஒரு தீர்ப்பை கொடுத்தது அதை ஏன் கேரளா அரசு செயல்படுத்தவில்லை ? அதை ஏன் உங்களை போன்றவர்கள் கேள்வி கேட்கவில்லை ? அதை பற்றி ஏன் வினவு பேசவில்லை ?

    இந்த விஷயத்தில் இருந்தே தெரியவில்லையா அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறார்கள் என்பது.

  • கேரளாவுல நீ கலவரம் பண்ணினா அது போராட்டம்.
   தூத்துக்குடியில நாங்க போராட்டம் பண்ணினா அது கலவரம்.
   ஆமா . . . கேரளா மலப்புரத்துல சங்கிகளை மக்கள் பொலந்து கட்டிட்டாங்களாமே ! அடி பலமா மணிகண்டா . . !
   அப்பறம் உனக்கு . . . .
   “பேட்டா ” piece rate ஆ இல்லை daily basis ஆ

   • உங்களின் இந்த செயல்கள் நிச்சயம் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வரும்… தற்போது ஹிந்துக்களுக்கு பிஜேபியை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையை கம்யூனிஸ்ட்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் மத அடிப்படைவாதம் வளர்ந்தால் அதற்கு முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    • //உங்களின் இந்த செயல்கள் நிச்சயம் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வரும்… //
     கொண்டு வந்த ஆட்சி ஐந்து மாநிலங்களில் கிழிஞ்சு போச்சே . . ஏன் மாட்டு மூளையாரே !
     அப்புறம் மணிகண்டா . . உனக்கு “பேட்டா ” piece rate ஆ இல்லை daily basis ஆ

    • //இந்தியாவில் மத அடிப்படைவாதம் வளர்ந்தால் அதற்கு முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.//
     அப்ப மோடு முட்டி ‘மோடி’ பிரதமர் ஆனதுக்கு கம்யூனிஸ்ட்கள் தான் காரணமா ? அவரோட 56 இஞ்ச் மார்பு இல்லையா ?
     அப்புறம் மணிகண்டா . . உனக்கு “பேட்டா ” piece rate ஆ இல்லை daily basis ஆ

     • நான் அடிப்படையில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளனாக இருந்தவன் ஆனால் வினவு படிக்க ஆரம்பித்த பிறகு மதமாற்ற கூட்டங்களோடு சேர்ந்து கொண்டு ஹிந்து மதத்திற்கு எதிராக எவ்வுளவு பெரிய மோசமான சதி திட்டங்கள் நடத்தப்படுகிறது என்று புரிய ஆரம்பித்து இருக்கிறது. அதனால் நான் இப்போது பிஜேபியை ஆதரிக்கிறேன். வரும் தேர்தலில் பிஜேபிக்கு தான் வாக்கு அளிக்க போகிறேன்.

      இதற்கு அடிப்படை காரணம் உலகம் முழுவதும் இந்தியாவிலும் இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்கள் செய்த கொடூரங்களை படித்த பிறகு, மீண்டும் இந்தியாவில் அப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்க கூடாது என்ற காரணத்திற்காக பிஜேபியை ஆதரிக்கிறேன். மதசார்பின்மை என்பது எல்லாம் பித்தலாட்டம் ஆதற்கு வினவு மற்ற கம்யூனிஸ்ட்கள் செயல்களே ஆதாரமாக இருக்கிறது.

      ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதற்கு தான் இந்த நாட்டில் மதசார்பின்மை பேசப்படுகிறது அதை உங்களை போன்ற வினவு கூட்டங்களால் மறுக்க முடியாது.

      • //நான் அடிப்படையில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளனாக இருந்தவன் //
       //வினவு படிக்க ஆரம்பித்த பிறகு //
       //நான் இப்போது பிஜேபியை ஆதரிக்கிறேன். //
       வினவு உனக்கு நல்லதுதானப்பா பன்னியிருக்கு . . .
       அப்புறம் ஏன் திட்டுற . . .
       கூலி வாங்கிக்கிட்டு மாரடிக்கிற . . . !
       ஓ . . . மாட்டுமூளைங்கிறது இதுதானா . . ?

      • “உலகம் முழுவதும் இந்தியாவிலும் இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்கள் செய்த கொடூரங்களை படித்த பிறகு, மீண்டும் இந்தியாவில் அப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்க கூடாது”

       That what we all care about. India should not ba another Iraq, Syria or Afganistan (I am talking abuout the present situation), BJP’s ajanda is a disaster for this country. It will accelerate the distruction of India.

       • I don’t believe either BJP or RSS creating trouble… Several times I had noticed whatever allegations Christians tell about RSS or BJP, most of them are pure lies. Even in Vinavu several articles spreads hatred towards BJP RSS based on lies.

        In the name of religious conversion Chrisitians are spreading racism and separatism in Tamil Nadu (Eg. Seeman Vaiko Thirumurugan Gandhi etc) several of protests are purely based on the the hatred towards BJP.

        • I don’t believe either BJP or RSS creating trouble…”

         That is the problem Mr. Mani. When you are blinded with casteism, hatred based on religion YOU CAN NOT SEE AND YOU WOULD NOT SEE ANYTHING.

         That’s why we all asking you to open your heart and mind.

 2. மோடி இந்துக்களை ஏமாற்றிவிட்டார். பாராளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்திருந்தால் இந்து பாரம்பரியம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
  மோடிக்கு இந்துக்கள் ஓட்டு மட்டும் தான் வேண்டும். இந்துக்கள் மோடியை புறக்கணிக்க வேண்டும்.

 3. ஒன்று மட்டும் நிச்சயம் பல நூறு வருடங்களாக இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் பல கொடுமைகளை ஹிந்துக்களுக்கு செய்தும் மாறாத ஹிந்துக்களின் நம்பிக்கை இந்த மாதிரியான ஈன கம்யூனிஸ்ட்கள் செயல்களால் மாற்ற முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க