நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் எப்போதும்
ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீதி என்ற ஒன்று இருக்கிறது என
இவ்வளவுக்கும் பிறகு நம்பிக்கொண்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
இணக்கமாக வாழும் பொறுப்பு
எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் ஒரு அன்னியனின்
கடவுச் சீட்டுடன் நின்றுகொண்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் நிபந்தனையற்று
விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம்
மெளனமாக இருக்க
நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
என் தேசபக்தியை நிரூபிக்க
எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து
காட்டி வந்திருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால்
முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் எனறால்
வேறு யாராகவும் இருக்க
நான் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறேன்
படிக்க :
♦ ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !
ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே
இருக்க விரும்புகிறேன்
என் நெஞ்சில் நீங்கள்
கடைசியாகப் பாய்ச்சப்போகும்
ஈட்டியின் கூர்மையை
நான் காண விரும்புகிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீங்கள் அதை ஒவ்வொரு கணமும்
நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்
உங்களை முகம் சுழிக்க வைக்கும்
அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு
ஒரு இஸ்லாமிய கதகதப்போடு
உங்களை அணைத்து
முகமன்கூற விரும்புகிறேன்
ஒரு போதும் நாங்கள் சண்டையிட வரவில்லை
இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புகிறோம்
பிரார்த்தனையின் அமைதியை
கபர்ஸ்தான்களின் அமைதியை
ஒரு தரப்பான நீதியின் அமைதியை
ஒரு இஸ்லாமியனாக வாழ்வது
மிகவும் கடினமானது நண்பர்களே
அவன் எப்போதும் உலகத்தின் சமாதானத்திற்காக வாழவேண்டும்
பிறகு தன்னைத்தானே
சமாதானப்படுத்திக்கொண்டு வாழ வேண்டும்
மேலும் ஒரு இஸ்லாமியனாக இருப்பது
தனியனாக இருப்பதல்ல
அது
ஒரு கூட்டு மனம்
ஒரு கூட்டுக் காயம்
ஒரு கூட்டுத்தண்டனை
ஒரு கூட்டுத் தனிமை
அதை இன்றுதான் அறிந்து கொண்டேன்
நன்றி: மனுஷ்ய புத்திரன்
இந்து ராஷ்டிரத்தின் வெற்றி என்பது,
மசூதியை இடித்ததில் அல்ல;
இடித்தவனுக்கே கோயில் கட்ட
அனுமதி கொடுத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அல்ல.
யாரெல்லாம் ஜனநாயகவாதிகளாகக் கருதப்பட்டார்களோ அவர்கள், தங்கள் குரல்வளையை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பலமாக மூச்சு விட்டால் தாங்களும் பலியாவோமோ என்று உறைந்து கிடக்கிறார்கள். அவர்களின் மவுனத்தில் ஜனநாயகம் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது; அதில்தான் பாசிஸ்டுகள் தங்கள் வெற்றிக்கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனதருமை இஸ்லாமியனே நான் இனிமேலும் ஒரு இந்து என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். ஜனநாயகத்தின் உச்ச நிறுவனத்தால் இப்போது, மொத்த இஸ்லாமியனின் ஆன்மாவும் சிதைக்கப்பட்டுவிட்டது.
சங்கிகள், கொலைவாளை கடைசியில் நீதி தேவதையிடம் கொடுத்துவிட்டார்கள். இனி முஸ்லீம் பிணங்கள் அரசு முத்திரையுடன் அடக்கம் செய்யப்படும். ஜெய் ஹிந்த்!
அப்ப பேசாம முஸ்லீமாக மாறிவிடுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது நாட்டிக்கும் நல்லது. ஜெய்ஹிந்த்.
ஆமாம் நீங்கள் இஸ்லாமியராக தான் இருக்கிறீர்கள்… ஹிந்து கடவுளை இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அவமதிக்கும் போது நீங்கள் இஸ்லாமியராக தான் இருந்திர்கள். ஹிந்துக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது அதை வேடிக்கை பார்க்கும் ஒரு இஸ்லாமியராகவே நீங்கள் இருக்கிறீர்கள்… பாகிஸ்தானில் ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்ட போது நீங்கள் இஸ்லாமியராகவே இருந்து வேடிக்கை பார்த்திர்கள்…
இஸ்லாமிய ஆட்சியில் ஹிந்து கோவில்கள் ஆயிரக்கணக்கில் இடிக்கப்பட்ட போது அதற்காக சிறிது கூட வருத்தம் தெரிவிக்காத இஸ்லாமியராகவே இன்று வரையில் இருக்கிறீர்கள்.
எப்போதுமே மனுஷ்னுக்கு பிறந்த புத்திரன் அப்படித்தான் இருப்பார்.
ஓ கடவுளே! நான் “வினவு” வின் ஒரு தனிப்பட்ட திருட்டு வாசகன். அதாவது கூலியைச் செலுத்தாமலேயே அங்கு விளையும் தேன் சொட்டுகளை நக்கி உருசி பார்க்கின்றவன். இந்த “மனுஷ்ய புத்திரன்” னின் இந்த அவல ஓலத்தை அப்படியே பிரசுரிக்க “வினவு” க்கு இந்தத் துணிச்சல் எப்படி வந்தது. ஏழை இஸ்லாமியனின் உள்ளத்தை திறந்து காட்ட “வினவு” க்கு எப்படி இந்தத் தைரியம் வீரியம எங்கிருந்து வந்தது. நானும் மிக விரைவில் வினவு” வின் பங்குதாரனாக மாறுவேன்.
மணிகண்டன் பாரதிமுருகன் போன்றோர் இந்திய மக்கள் வறுமை பட்டினியில் உழண்டு செத்தாலும் இந்த இந்து ஆட்சி பற்றி எந்தக்கருத்தும் சொல்லாமல் அயோத்திய காரணத்துடன் நடந்து கொள்வார்கள்..இஸ்லாமியரை அவதூறாக்க வேண்டும் என்றால் போதும் தங்கள் இந்து நாக்கை தொங்கப்போட்டு வந்து விடுகிறார்கள்…
பாபரி மசூதி கோவிலை இடித்து கட்டப்பட்டது பற்றி உங்களுக்கு கவலையில்லை, பாபரி மசூதியின் கீழ் ஹிந்து கோவில் இருந்ததற்கு ஆதாரம் பற்றியும் உங்களுக்கு கவலையில்லை.
எப்படியாவுது ஹிந்துக்களின் உணர்வுகளை அவமதிக்க வேண்டும் அது தான் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் நோக்கமாக இருக்கிறது.
இது சரியா ?
நண்பா miy ..திருட்டுத்தனமாக வினவை வாசிப்பது குற்றமே இல்லை..ஆனால் வினவை இதுகாறும் புரிந்து கொள்ளாமலேயே தொடர்கிறீர்களே அதுதான் அசட்டுத்தனமாய் தெரிகிறது…
மனுஷ்யபுத்திரன் அவர்களே உங்கள் கவிதையின் எல்லா இடங்களிலும் நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் என்றும் நீங்கள் இந்த வலி மிகுந்த கவி படைக்கலாம்..இந்தியாவில் இந்துக்களும் அப்படித்தான் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. கண்ணீரின் வலி காவிகளுக்கு ஒரு போதும் புரியாது ….கரங்கள் இணையும் போது நம் கரசேவையே அதை புரிய வைக்கும்…
இஸ்லாமிய ஆட்சி வரலாற்றில் பல ஆயிரம் ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை தானே, அதேபோல் கிறிஸ்துவ ஆட்சியிலும் ஹிந்து கோவில்கள் கோவாவில் இடிக்கப்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
இந்த நாட்டில் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் இடிக்கப்பட்டால் அது தான் ஜனநாயகம், ஹிந்துக்கள் அவமதிக்கப்பட்டால் அது தான் புரட்சி என்று பேசுவது மிக கேவலமான சிந்தனை.
மணிகண்டன் சார் கிறித்துவனோட ஸ்டெர்லைட் மட்டும் தூத்துக்குடி “குடிகளின் ” உயிர் பறிக்கலாம் உங்களுக்கு கவலை இல்லை… ரோசப் பட்டு விரட்டி விடுங்களேன் பார்ப்போம்..
வேதாந்தா தலைவர் மோடியை லண்டனில் சந்தித்தார் என்பதால் கிறிஸ்துவர்களாலும் அவர்களின் கைக்கூலிகளாலும் தூத்துக்குடியில் பொய்களை பரப்பி தூண்டி விடபட்ட போராட்டம் தானே…
இந்த பொய்களால் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், இது பற்றி உங்களுக்கு துளியும் கவலையில்லை.
தொழிலாள வர்க்கத்தின் தோழன் என்று போலியாக பேசும் கம்யூனிஸ்ட் பொய்களால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து நடு தெருவிற்கு வந்தது பற்றி உங்களுக்கு துளியும் கவலையில்லை.
கம்யூனிஸ்ட்களை தொழிலாளிகளின் தோழன் என்று சொல்லும் பொய்களை என்றுமே நான் நம்புவது இல்லை, பல ஆயிரம் தொழிலாளிகளில் வேலை பறிபோனதற்கு கம்யூனிஸ்ட்கள் பதில் அளிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட்கள் அன்றும் இன்றும் என்றும் இந்திய மக்களின் விரோதிகளாக தான் இருப்பார்கள்.
//வேதாந்தா தலைவர் மோடியை லண்டனில் சந்தித்தார் என்பதால் கிறிஸ்துவர்களாலும் அவர்களின் கைக்கூலிகளாலும் தூத்துக்குடியில் பொய்களை பரப்பி தூண்டி விடபட்ட போராட்டம் தானே… // உங்க பொன்னார் “நான் அன்றே எதிர்த்தேன்” என பேசினாரே அப்போ பொன்னார் எந்த மதத்துல இருந்தாராம்…?
சரி இப்ப பாஜக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என பேச சொல்லுங்களேன்…
//தொழிலாள வர்க்கத்தின் தோழன் என்று போலியாக பேசும் கம்யூனிஸ்ட் பொய்களால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து நடு தெருவிற்கு வந்தது பற்றி உங்களுக்கு துளியும் கவலையில்லை.// ஐ.டி நிறுவன ஆட்குறைப்புகளுக்கும் கம்யூனிஸ்ட்கள்தான் காரணமா ?
திருப்பூரில் வேலைவாய்ப்புகள் பறிபோகிறதே அதற்கும் கம்யூனிஸ்ட்கள்தான் காரணமா ?
நீங்க அடிச்சி விடுறதுக்கு அளவே இல்ல தலைவரே…
தூத்துக்குடி போராட்டம் சர்ச்சில் ஆரம்பிக்கவில்லை என்று உங்களால் மனசாட்சியை தொட்டு சொல்ல முடியும்மா ?
கம்யூனிச கூட்டங்கள் (மாவோ நக்சல்) போராட்டத்தை தூண்டினார்கள் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்களே அதை இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இதில் நாம் தமிழர் கட்சியின் வன்முறையாளர்களும் சேர்ந்து கொண்டார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?
இவ்வுளவு பேர் சேர்ந்து கொண்டு பல ஆயிரம் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பினார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன், இதை உங்களால் மறுக்க முடியுமா ?
கம்யூனிஸ்ட்கள் என்றுமே இந்திய தொழிலாள வர்க்கத்தை பற்றி கவலைப்படுபவர்கள் இல்லை, அவர்கள் பாக்கிஸ்தான் சீனாவிற்காக செயல்படுபவர்கள், இதை உங்களால் மறுக்க முடியுமா ?
தூத்துக்குடி தொழிலாளிகளின் வேலை இழப்பிற்கு கம்யூனிஸ்ட்களும் சர்ச் இருவருமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
//தூத்துக்குடி போராட்டம் சர்ச்சில் ஆரம்பிக்கவில்லை என்று உங்களால் மனசாட்சியை தொட்டு சொல்ல முடியும்மா ?//
போராட்டத்தில் அனைத்து பிரிவு மக்களும் தானே கலந்து கொண்டார்கள் அதை இல்லை என உங்களால் சொல்ல முடியுமா? ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் கூடி நடத்தப்பட்டது… கடல்கரையில் வசிப்பவர்கள் மீனவர்கள் அதனால இடத்தை மட்டும் வச்சி போராடியவர்களை வகைப்படுத்த முடியுமா? சொல்லுங்க. சர்ச்சா, மசூதியா அப்படி எந்த இடம் என ஆராய்ச்சி செய்வது மணிகண்டனுக்கு தான் முக்கியம்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பகுதி வணிகர் சங்கமும் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியது. அதை நீங்கள் மறுக்க முடியுமா?
//கம்யூனிச கூட்டங்கள் (மாவோ நக்சல்) போராட்டத்தை தூண்டினார்கள் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்களே அதை இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?// பண்டாரம்பட்டி கிராம மக்கள் இன்றும் ஸ்டெர்லைட் கிரிக்கட் போட்டி, மருத்துவ முகாம் என எந்த போர்வையில் வந்தாலும் விரட்டுகிறார்களே அவர்கள் எல்லாம் யார்? அப்பகுதி மக்கள் கிடையாதா?
//இதில் நாம் தமிழர் கட்சியின் வன்முறையாளர்களும் சேர்ந்து கொண்டார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?// நா.த.க -வை இதில் கோர்த்துவிட காரணம் என்ன? புரியலியே… அண்ணன் சீமானே அப்ப அடக்கி தானே வாசிச்சாரு… மணி ஜி அதபத்தி தெரியல வியனரசு கிட்ட வேனுமுன்னா கேளுங்க…
//இவ்வுளவு பேர் சேர்ந்து கொண்டு பல ஆயிரம் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பினார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன், இதை உங்களால் மறுக்க முடியுமா ?//ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் ஏற்பட்ட வேலையிழப்பு எவ்வளவுன்னு நான் தெரியாமதான் கேக்குறேன்… எவ்வளவு? சரி அவுங்க வேலை போச்சுன்னா அவர்கலுக்கு இலண்டன் பிராஞ்சுல வேலை கொடுக்க சொல்லி பா.ஜ.க கோரிக்கை வைக்கலாமே? அப்படி நாராயணன் ஏதும் கேட்டு இருக்காறா?
//கம்யூனிஸ்ட்கள் என்றுமே இந்திய தொழிலாள வர்க்கத்தை பற்றி கவலைப்படுபவர்கள் இல்லை, அவர்கள் பாக்கிஸ்தான் சீனாவிற்காக செயல்படுபவர்கள், இதை உங்களால் மறுக்க முடியுமா ?// இது நல்ல காமெடி… சுயம் சேவக்குகள் தான் இப்படி யோசிக்க முடியும்… ஏன்னா ரேகை கையில மட்டும் இல்ல மூளையிலையும் தேஞ்சி போயிருக்கும்.
//தூத்துக்குடி தொழிலாளிகளின் வேலை இழப்பிற்கு கம்யூனிஸ்ட்களும் சர்ச் இருவருமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.// இதுக்கு நீங்களே புள்ளி விவரம் சொல்லுங்க எவ்வளோ வேலையிழப்புன்னு.
சரி இவ்வளோ மெனக்கெட்டு மணிகண்டன் ஜிக்கு நான் பதில் சொல்லி இருக்கேனே… ஜி நான் கேட்ட பொன்னார், ஐடி கம்பனி வேல, திருப்பூர் மேட்டர் இந்த கேள்வி எதுக்கும் ஜி பதில் சொல்லலியே… என்னவா இருக்கும்
தென்னக இரயில்வே முழுக்க வடநாட்டவருக்கு வேலையை கொடுத்துட்டு ரயில்வே ஸ்டேஷன்க்கு மட்டும் எம்ஜிஆர் பேரு..மணிகண்டன் சார் ரயில்வேயில் இருக்கிற வடநாட்டவர ஸ்டெர்லைட் ல போடுங்க தூத்துக்குடி சொந்தங்களுக்கு ரயில்வேயை கொடுங்க…..
அதெப்படி கண்ணப்பன் நண்பா ,மணி சார் பதில் சொல்வாரு…நீங்க நியாயமான கேள்விகளாக கேட்கலாமா?
தோழர்கள் என்னவோ சாக்கடையில் உழன்று பிய் தின்னும் பன்றிகளிடமும் ஒரு உயிரின மரியாதையுடன் நடந்து கொள்ளுகிறீர்கள்.
எனக்கென்னவோ உவமையாக்கியதற்காக நிஜ பன்றிகளிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றுகிறது..!
கார்த்திகேயன் நண்பா, மாற்றுக்கருத்து கொண்டோரிடமும் நாம் மாண்புடனேயே விவாதம் புரிவோம்..”களம்” காணும் வரை காத்துமிருப்போம்….