தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு! சொத்துக்களை பறிமுதல் செய்! | மக்கள் அதிகாரம்

இந்த நாட்டை கொள்ளையடித்த அதானி, அம்பானி, கேத்தன் பரேக், முகுல் சோஷி என அனைத்து பனியா கிரிமினல்களும் குஜராத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் முதுகெலும்பாக செயல்பட்டவர்கள்.

தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு!
சொத்துக்களை பறிமுதல் செய்!

மக்கள் அதிகாரம் பிரச்சார இயக்கம் – ஆர்ப்பாட்டம்

லகிலேயே இரண்டாவது பணக்காரன், ஆசியாவிலேயே முதல் பணக்காரன் இப்படி பல பெருமைகளையும்’ அடைமொழிகளையும் வாங்கிக்குவித்தவன் அதானி. இவன் பங்குகள் எல்லாம் தற்போது பலூன் போல வெடித்துச்சிதறிவிட்டன. மற்ற நாட்டு அதிபர்கள் எல்லாம் சுற்றுப்பயணம் செல்லும்போது தங்கள் மனைவியை அழைத்துச் செல்வார்கள். ஆனால் மோடியோ எல்லா நாடுகளுக்கும் அதானியைத்தான் அழைத்துச்சென்றார். பாகிஸ்தான் முதல் ஆஸ்திரேலியா, இலங்கை, இஸ்ரேல் வரை அதானி முதலீடு செய்யாத நாடே இல்லை. அதானியின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று ஊதிப்பெருக்கினார்கள். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நான்கு நாட்களிலேயே உலகப் பணக்கார வரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டான் அதானி.

அயோக்கியனின் கடைசிப்புகலிடம் தேசபக்தி என்பார்கள்; அதுபோல, பதறி அடித்துக்கொண்டு ஒடி வந்த அதானியும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளும் “இது இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்” என்று பொங்கினார்கள். அடுத்தடுத்த நாட்களில் 4 லட்சம் கோடிகளை பங்குச் சந்தையில் இழந்தது அதானி குழுமம். அதானி ஒரு பிராடு, மோசடி மன்னன் என்பது ஊரறிந்த விசயம்தான் என்றாலும் ஹிண்டன்பர்க் அறிக்கை படம் பிடித்து ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறது.

இந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு மொத்த பங்குசந்தை உலகமும் ஆடிப்போனப் பின்னரும் நிர்மலா சீதாராமன், “இந்திய வங்கி அமைப்பு மிகவும் பலமாக உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை” என்கிறார். அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.யின் முதலீடு ரூ.24000 கோடிகள் சரிந்துள்ளன. ஆனாலும் எல்.ஐ.சி நிர்வாகம் “மொத்த சொத்தில் 1% மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளோம்” என்று திமிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

படிக்க : அதானியே நமோ நமஹா!

2 லட்சம் கோடி கடன்காரனான அதானி, பாரத ஸ்டேட் வங்கிக்கு தர வேண்டிய தொகை மட்டும் இருபதாயிரம் கோடிகளுக்கு மேல். எல்.ஐ.சி.யின் முதலீடும் எஸ்.பி.ஐ கொடுத்த கடன்களும் பொது மக்களின் சொத்து. மாதம் ஆயிரம், ஐநூறு என்று பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றும் என்று நம்பி எல்.ஐ.சி.யிலும்  எஸ்.பி.ஐ.யிலும் சேர்த்து வைத்த பணத்தைத் திருடி அதானியின் வாயில் போட்டுவிட்டார் மோடி.

அதானி பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டவன். அவனுக்காகத்தான் கடல்வளத்தை அழிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழ்நாட்டிலும், விழிஞம் துறைமுகம் கேரளத்திலும் அமைக்கப்படுகின்றன. அதானி, சிமெண்ட் ஆலைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து சிமெண்ட் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறான். தன்னுடைய தனியார் மின் உற்பத்தி, விநியோக நிலையங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்காக அரசு மின் நிறுவனங்களை ஒழித்துக்கட்டினான். மீத்தேன், ஹைட்ரோ-கார்பனை கொள்ளையடிக்க விவசாய நிலங்களை சூறையாடுகிறான். எஸ்.பி.ஐ வங்கியில் பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கி பைனான்ஸ் தொழில் செய்கிறான்.

தனது சமையல் எண்ணை நிறுவனம் மூலம் மற்ற எண்ணை நிறுவனங்களை எல்லாவற்றையும் புதைகுழிக்கு அனுப்பினான். காப்பர், அலுமினியம், பெட்ரோ கெமிக்கல், சோலார் என நாட்டின் அனைத்து வளங்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் நெறித்துக் கொண்டிருக்கிறான். இவையெல்லாம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் தொலைக்காட்சி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். இதைப்போலத்தான் அம்பானியும் செய்து கொண்டு வருகிறான்.

இப்போது அதானியின் மோசடிகள் வெளியாகிவிட்டன. அம்பானியின் மோசடிகள் வேறொரு நாள் வெளியாகலாம். ஆனால், இவை எல்லாம் அரசுக்கு எதுவும் தெரியாமல் நடந்ததா என்ன? மோடி – அமித்ஷா – நிர்மலா என அனைவருமே அதானியின் கூட்டுக் களவாணிகள்தான். அதானால்தான் அதானி கையும் களவுமாக சிக்கிக்கொண்ட பின்னரும் அவனை காப்பாற்றுவதற்கு இவர்கள் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் நாடே பசி, பஞ்சம், பட்டினி, சாவை எதிர் கொண்ட போது அதானியின் சொத்து மட்டும் 800 மடங்கு உயர்ந்தது. அதானி நிறுவனங்கள் மீதிருந்த 17 வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. 2004 ஆண்டு கருப்புப்பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதானியின் தம்பி ராஜேஷ் அதானி, தற்போது அதானி குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்.

பல ஊழல் வழக்குகள் உள்ள அதானியின் மைத்துனன் சமீர் வாரா ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி குழுமத்தின் சி.ஈ.ஓ., அதானியின் இன்னொரு தம்பி வினோத் அதானியின் மகள் வின்சம் வைர வியாபாரியின் மகனையும், வினோத் அதானியின் மகன் ரோட்டோமேக் முதலாளியின் மகளையும் திருமணம் செய்துள்ளனர். வின்சம் வைர வியாபாரியும் ரோட்டோமேக் முதலாளியும் பல்லாயிரம் கோடிகள் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்கள். அதானியின் மகனோ பங்குச்சந்தைகளை கட்டுப்பாடுத்தும் செ.பி.யின் கமிட்டி உறுப்பினர் மகளை திருமணம் செய்திருக்கிறார்.

இந்த நாட்டை கொள்ளையடித்த அதானி, அம்பானி, கேத்தன் பரேக், முகுல் சோஷி என அனைத்து பனியா கிரிமினல்களும் குஜராத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் முதுகெலும்பாக செயல்பட்டவர்கள். பா.ஜக.வுக்கும் பல்லாயிரம் கோடிகளை தேர்தல் நிதியாக அளித்தவர்கள். இதுதான் மோடி உருவாக்கிய குஜராத் மாடல்.

நீதிமன்றம், சட்டம், அரசியல் அதிகாரம் என அனைத்துமே இவர்கள் கையில். இந்தக் கிரிமினல் முதலாளிகளை பாதுகாப்பதுதான் பாசிச மோடி அரசின் வேலை. இதை அம்பலப்படுத்திப் போராடுபவர்களைத்தான் அர்பன் நக்சலைட்டுகளாக சித்தரித்து ஊ.பா போன்ற கருப்புச்சட்டங்களால் கைது செய்து சித்தரவதை செய்கின்றனர்.

அதானியும் அம்பானியும் வெறும் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல; அவர்கள் பாசிஸ்டுகள். இந்த நாட்டை கொள்ளையடிக்கவும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருக்கவும் அவர்களுக்குத் தேவை இந்துராஷ்டிரம்.

படிக்க : நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு இந்த நாட்டின் இயற்களை வளங்களை சூறையாடவும் கார்ப்பரேட் முதலாளிகளை கட்டுப்படுத்தவும் அதானி – அம்பானி பாசிசக் கும்பல் தேவை. ஆக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசமே இந்த நாட்டின் நாட்டு மக்களின் எதிரி என்பதையும் இந்த நாட்டு மக்களின் அனைத்து துன்பங்களுக்கும் அவர்களே காரணம் என்பதைத்தான் நாம் உணர வேண்டும்.

ஆக, தேச விரோதியும் கொள்ளைக்காரனும் பயங்கரவாதியுமான அதானி பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டு அவனுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

ஆனால், இதெல்லாம் இப்போதிருக்கிற ஆட்சி முறையிலே சாத்தியமில்லை. ஏனென்றால் இது காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சி. நீதித்துறை, ராணுவம், நிர்வாகம் என அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிக்காமல் நமக்கு வாழ்வே இல்லை.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து நாடு முழுவதும் ஒவ்வொரு வீதியிலும் இந்த பாசிசக்கும்பலை எதிர்த்துப்போராடி முறியடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு மாற்றான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க