வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம் | துண்டறிக்கை!

மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் உருவாக்கிய தமது இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளமான சட்டத்திட்டங்களை ரத்துசெய்யவும் மக்களுக்கான மாற்று ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கவும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

2024 நாடாளுமன்ற தேர்தல்:
வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம்!
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

த்தாண்டுகள் நாட்டையே சூறையாடி அம்பானி – அதானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு வாரிக்கொடுத்து, நமது நாட்டை பார்ப்பன பாசிச பயங்கரவாத நாடாக மாற்றிவருகிறது பாசிச மோடி – அமித்ஷா கும்பல்.

2022 நவம்பரில் நடந்த ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இராமர் கோவில் திறப்பு தொடங்கி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் வரை தனது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை அடுத்தடுத்து அரங்கேற்றி வந்து கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவற்கு எந்தக் கட்சிக்கு ஓட்டு போடலாம் என்று பலரும் சிந்திக்கும் வேளையில், பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்கள், நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நடத்தும் போராட்டங்கள் பாசிச மோடி கும்பலைப் பின்வாங்கச் செய்வதோடு, பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

தலைநகரமான டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளின் போராட்டம், மகாராஷ்டிராவில் மராத்தாவினரின் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம், மணிப்பூரில் குக்கி மக்களின் எழுச்சி ஆகியவற்றை தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் இஸ்லாமிய மக்களும், ஜனநாயக சக்திகளும், மாணவர்களும் நடத்தும் போராட்டங்கள் நாளும் முன்னேறி வருகின்றன.

பாசிச மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் உருவாக்க முனையும் “வளர்ச்சி நாயகன்” என்ற பிம்பத்தைத் திரைகிழித்து, ஆர்.எஸ்.எஸ் உருவாக்கும் இந்துமுனைவாக்கத்தைத் தகர்த்தெறிந்து முன்னேறிவரும் இம்மக்கள் போராட்டங்கள் மோடி-அமித்ஷா கும்பலின் தோல்வி முகத்தை மேலும் பின்னோக்கித் தள்ளுகின்றன. ஆகையால், தனது அதிகார பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அனைத்து சதி, மோசடி, முறைகேடுகளை செய்தும் தேர்தலில் வெற்றியடைய வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல்.

ஆகையால், மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் உருவாக்கிய தமது இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளமான சட்டத்திட்டங்களை ரத்துசெய்யவும் மக்களுக்கான மாற்று ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கவும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்த வகையிலான மக்கள் போராட்டங்கள் மூலமே மோடி-அமித்ஷா கும்பலைத் தேர்தலிலும் வீழ்த்த முடியும்.

மக்கள் கோரிக்கைகள்:

 • நீட், கியூட், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்!
 • ஜி.எஸ்.டி. வரி முறையை ரத்து செய்!
 • சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.ஐ ரத்துசெய்!
 • பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்காதே!
 • ஊபா போன்ற கருப்புச் சட்டங்களை ரத்துசெய்!
 • என்.ஐ.ஏ.வை கலைத்திடு! ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்!
 • சமூகசெயல்பாட்டாளர்கள், இசுலாமியர்கள், ஈழத் தமிழ் போராளிகள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்!
 • அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!
 • இசுலாமியர்கள், கிருத்துவர்கள், தலித்துகள், பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்து!
 • ஈழத் தமிழ் அகதிகளை அகதி முகாம்களில் இருந்து விடுதலை செய்! குடியுரிமை வழங்கு!
 • சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் மீதான கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தை தடை செய்!
 • மீத்தேன், பரந்தூர் விமான நிலையம், எண்ணூர் துறைமுகம், சாகர்மாலா, பாரத்மாலா… கடல் வளத்தையும் இயற்கை வளங்களையும் சூறையாடும், விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை திரும்பப் பெறு!
 • ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டம் இயற்று!
 • டாஸ்மாக்கை மூடு!
 • ஆளுநர் முறையை ரத்துசெய்!
 • அமலாக்கத்துறையை கலைத்திடு!
 • விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைத் திணிக்காதே! மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடைசெய்! விளைபொருட்களுக்கு விலைநிர்ணயம் செய்யும் அதிகாரம் விவசாயிகளுக்கே!
 • தொழிலாளி வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக்கும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்துசெய்!
 • தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை, எட்டுமணிநேர வேலைமுறையை நிலைநாட்டு! ஒப்பந்த பணி முறையை ஒழித்துக்கட்டு!
 • வங்கிகள், இரயில்வே, எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறைகளில் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்து!
 • சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்து!
 • இந்தியைத் திணிக்காதே! அனைத்து மொழிகளையும் சமத்துவமாக நடத்து!
 • காஷ்மீருக்கான சிறப்புரிமையை அங்கீகரி!
 • அமெரிக்காவுடனான குவாட் இராணுவக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறு! போர் வெறிப்பிடித்த ஆயுதக்குவிப்பை நிறுத்து!
 • பாசிசப்படையின் கொல்லைப்புற வழிகளான அ.தி.மு.க, கமலஹாசன், குமாரசாமி, மாயாவதி போன்றவர்களை விரட்டியடிப்போம்!
 • ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் ஐந்தாம் படையான சீமான், பா.ம.க, புதிய தமிழகம், ஓவைசி போன்ற சாதிவெறி, இனவெறிக்கட்சிகளை விரட்டியடிப்போம்!
 • பா.ஜ.க மற்றக் கட்சிகளைப் போல ஒரு சாராசரி அரசியல் கட்சி அல்ல; பார்ப்பன – இந்து மதவெறி பாசிசத்தை சித்தாந்தமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-ன் தேர்தல் கட்சி. நமது நாட்டின் போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கங்களையும். ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவிக் கைப்பற்றி உள்ளது.
 • பா.ஜ.க என்ற கட்சியை தேர்தல் வீழ்த்தலாம். ஆனால், பாசிசத்தை தேர்தலில் வீழ்த்த முடியாது. ஒரு மாற்று அரசியல் திட்டம்தான் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தை வேரடி மண்ணோடு வீழ்த்தும், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றே அத்தகைய மாற்றாக இருக்க முடியும்!
 • பாசிஸ்டுகளுக்கும் சுதந்திரம் வழங்குகின்ற அரசியலமைப்பு சட்டம் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியாது!
 • ஆர்.எஸ்.எஸ்.யையும் அதன் பரிவாரக் கும்பல்களான பா.ஜ.க., பசுப்பாதுகாப்புப் படை, பஜ்ரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி போன்ற பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!
 • அம்பானி, அதானி, அகர்வால் போன்ற மார்வாடி, குஜராத்தி, பார்ப்பன – பனியா கார்ப்பரேட் கும்பல்களின் சொத்துக்களை பறிமுதல் செய்!
 • மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற பாசிச சக்திகள் மீண்டெழுவதைத் தடுக்கின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசியல் அமைப்புக்கான மக்கள் எழுச்சியை கட்டியமைப்போம்!
 • தற்போதுள்ள இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சட்டம் இயற்றவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஒருங்கே அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்பை உருவாக்குவோம்!
 • தேர்ந்தெடுக்கமட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப்பெறும் உரிமையையும் நிலைநாட்டுவோம்!
 • அனைத்து தேசிய இனங்களும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டுவோம்!
 • தன்விருப்பத்தின் அடிப்படையில் தேசிய இனங்கள் இணைந்து இந்திய நாட்டை கட்டியமைப்போம்!
 • இந்துராஷ்டிரத்தை தகர்த்து, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.

தொடர்புக்கு:- 97916 53200; 94448 36642; 73974 04242; 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க