பாரிஸ் கம்யூன் 155-ஆம் ஆண்டு
“வர்க்கங்களின் ஆட்சியில் இருந்து மனித இனத்தை நிரந்தரமாக விடுவிக்கும் மாபெரும் சமுதாய புரட்சியின் விடியல்” என்று பாட்டாளி வர்க்கம் ஆசான் தோழர் காரல் மார்க்சால் வர்ணிக்கப்பட்ட பாரிஸ் கம்யூனின் 155-ஆம் ஆண்டு!

***
பாரிஸ் கம்யூன் 155-ஆம் ஆண்டு
மார்ச் 18, 1871 அன்று ஆயுதமேந்திய தொழிலாளர்கள் பாரிஸ் நகரின் அரசு அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டு உலகின் முதல் பாட்டாளி வர்க்க ஆட்சியை அமைத்தனர். அது புரட்சியின் போது நொறுக்கப்படும் முதலாளித்துவ அரசு எந்திரத்திற்கு பதிலாக பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் முயற்சியாகும்.
72 நாட்களில் பாரிஸ் கம்யூன் ஆளும் வர்க்கங்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டாலும், பாரிஸ் கம்யூன் பாட்டாளி வர்க்கத்திற்கு மகத்தான படிப்பினைகளை வழங்கியது! புரட்சிப் பாதையில் பீடுநடைபோட வழிகாட்டுகிறது!

***
பாரிஸ் கம்யூன் 155-ஆம் ஆண்டு
முதலாவது அகிலத்தின் குழந்தையான பாரிஸ் கம்யூனின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்திய மார்க்ஸ் அதை ஒரு புதிய ரகத்தைச் சேர்ந்த அரசாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக, உழைப்பின் பொருளாதார விடுதலை தொடங்கக் கூடிய ஒரே அரசியல் வடிவமாகக் கண்டார். உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசின் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். கம்யூன் அதிகாரவர்க்க உணர்ச்சியை வேரோடு அகற்றுவதை, எல்லா அரசு ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும் பெருந்திரளான மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை, கம்யூன் தன்னுடைய நடவடிக்கைகளுக்குப் பெருந்திரளான உழைக்கும் மக்களை ஆதாரமாகக் கொள்வதை மார்க்ஸ் வரவேற்றார்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











