மே தினம்: புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் | பகுதி 2

“டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை – இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு) ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக மே 1 அன்று தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் எழுச்சிகரமாக நடைபெற்றன.

தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் திரளான மக்கள், ஜனநாயக சக்திகளின் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கம்யூனிசப் பேராசான்களின் புகைப்படங்கள், கூர்மையான அரசியல் முழக்கங்களைக் கொண்ட பதாகைகளையும் செங்கொடிகளையும் ஏந்தி கம்பீர பேரணிகள் நடைபெற்றன.

மேலும், கோவை, புதுச்சேரியில் தொழிலாளி வர்க்கத் தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டுத் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்; பல பகுதிகளில் வீடுகளிலும் தெருமுனைகளிலும் செங்கொடி ஏற்றி மே தினத்தை வர்க்க உணர்வுடன் கடைப்பிடித்தனர்.

***

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் மக்கள் அதிகாரக் கழகம், மதுரை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக மே தின நிகழ்வு ஜனநாயக சக்திகளின் பங்களிப்புப்போடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!

நாட்டை மறுகலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

என்ற முழக்கத்தை மையமாகக் கொண்டு மே 1 சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காலை 7 மணி முதல் கருக்கட்டான்பட்டி மற்றும் ஆரியபட்டி ஆகிய இரண்டு கிளைகளில் கொடி ஏற்றப்பட்டது.

மாலை 5 மணி அளவில் உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டி பகுதியில் இருந்து மே தின பேரணி தோழர் குருசாமி தொடக்க உரை நிகழ்த்தி துவங்கி வைத்தார்.

தோழர்களின் உற்சாக முழக்கங்களுடன் மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஸ்டாலின், லெனின் மாவோ பதாகைகள் உயர்த்திபிடித்து முருகன் கோயில் அருகே அமைக்கப்பட்ட மேடையினை வந்து அடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் மதுரை மேற்கு மாவட்டம், உசிலை பகுதி தோழர் ரவி அவர்கள் ஒருங்கிணைத்தார், மக்கள் அதிகாரக் கழகம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம், மக்கள் அதிகாரக் கழகம் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி, கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டங்ஸ்டன் பிரகாஷ், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் தீபன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் ஜனநாயக சக்திகளான 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் தோழர் சிவப்பிரகாசம், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தோழர் சந்தானம் SKM மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாட்டு மாடுகள் நல சங்கம் தலைவர் தோழர் கலைவானண், தோழர் பழனிச்சாமி வி.சி.க, மாவட்ட செயலாளர், அ.தி.ம.மு.க பொதுச்செயலாளர் தோழர் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர்.

இதில் தோழர்கள் பொதுமக்கள் 100 முதல் 120 பேர் வரை கலந்துகொண்டனர்.

குறிப்பாக இன்று உசிலம்பட்டியில் ஆதிக்க சாதி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்-இன் வாலாக மாறிப் போய் உள்ள சூழலில் இந்த மே தின பேரணி ஆர்ப்பாட்டம் என்பது ஜனநாயக சக்திகளுக்கு மிகவும் நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளிப்பதாக அமைந்தது.

மே தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும், உலக மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவையும் அதற்கு துணை போகும் மோடி அரசையும் கண்டித்து சிறப்பாக உரையாற்றினர்.

கூட்டம் தொடங்கும் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் வழக்கறிஞர் பிரித்திவ்ராஜ் என்ற நபர் 10 பேர் கொண்ட ஒரு ரவுடி கும்பலை தோழர்கள் இல்லாத நேரத்தில் ஆர்பாட்டம் நடகக்கும் இடத்தில் வந்து மைக் செட் வயரை எடுத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்தனர்.

பேரணி மேடை அருகே வரும் முன்பு போலீசு அவர்களை கைதுசெய்ய தொடங்கினர். அதில் வந்தவர்கள் பாதிப்பேர் போலீசை கண்டதும் பின்வாங்கி ஓடிவிட்டனர். ஒருவேளை தோழர்கள் அங்கு இருந்திருந்தால் கைகலப்பாக மாறி இருக்கும் சூழல் இருந்தது. ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது உசிலம்பட்டி பகுதியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை ஜனநாயக சக்திகளும் தோழர்களும் புரிந்து கொள்ள முடிந்தது.

தொடர்ந்து ஒரு கூட்டமைப்பாக இங்கு இயங்க வேண்டிய அவசியம் பற்றி அனைவரும் உணர்வுபூர்வமாக தங்களது உரையில் பேசினர்.

முடிவாக திருமங்கலம் பகுதி தோழர் நாகராஜ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தகவல்
தோழர் சிவகாமு,
மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.

***

நெல்லை:

மே நாள் வாழ்க! உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! ட்ரம்ப் – மஸ்க் பாசிசக் கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

என்ற முழக்கத்தின் கீழ் மே 1, 2026 அன்று தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் கீழ் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுன்டாணா பகுதியில் மே நாள் ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது, மாலை 6 மணி அளவில் மே தின தியாகிகளுக்கு வீர வணக்க முழக்கத்துடன் ஆரம்பமாகியது.

இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரக் கழக நெல்லை, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

தோழர் தனது உரையில், சிகாகோ நகரத்தில் உதித்தெழுந்த மே தின போராட்டம் பற்றியும், இந்திய தொழிலாளி வர்க்கப் போராட்டம் பற்றியும், கோரல் ஆலைத் தொழிலாளிகளை ஒருங்கிணைத்து வ.உ.சி நடத்திய தொழிலாளி வர்க்க போராட்டம் பற்றியும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் உழைக்கும் மக்களை சாதி, மத, இன ரீதியாக பிளவுபடுத்துவதையும் அதைத் தாண்டி உழைக்கும் வர்க்கமாக நாம் ஒன்றிணைந்து அக்கும்படி வீழ்த்த வேண்டிய அவசியம் பற்றியும் தனது தலைமையில் எடுத்துரைத்தார்.

அடுத்ததாக வி.சி.க நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் முத்துவளவன் தனது உரையில், இந்த நாட்டில் நிகழ்த்தப்பட்ட பார்ப்பனிய சதியையும், அது இன்று பா.ஜ.க வடிவில் அதிகாரத்தில் இருப்பதையும் குறிப்பிட்டு அதை வீழ்த்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

அடுத்து பேசிய திமுக நெல்லை மாநகர துணைச் செயலாளர் தோழர் அப்துல் கையூம் மே தின போராட்டத்தை எடுத்துரைத்து நமது நாட்டில் வடமாநிலங்களில் மதவெறியையும், தென் மாநிலங்களில் சாதி வெறியையும் தூண்டிவிட்டு பாசிசத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலை வீழ்த்திட அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் அவர்கள், ட்ரம்ப் – மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்கா, தனது மேலாதிக்கத்திலிருந்து சரிந்து வருவதையும், அதை ஈடு செய்ய உலக நாடுகள் மீது போர் தொடுப்பதையும், அதோடு அமெரிக்காவில் பாசிசத்தை நிறுவி, அமெரிக்க உழைக்கும் மக்களை பாசிசவலைக்குள் சிக்க வைப்பதையும், இதன் வழியாக உலகு தழுவிய தொழிலாளர்களின் வேலை இழப்பிற்கும், பசி, பட்டினிக்கும் உள்ளாக்கப்படுவதையும், தனது சொந்த நலனுக்காக காசா, ஈரான் போன்ற நாடுகளில் மீது போர் தொடுத்து, மக்களைக் கொன்று குவிப்பதையும், உலக நாடுகளை நெருக்கடிக்குள் தள்ளுவதையும் தனது உரையில் எடுத்துரைத்தார். மேலும் பாசிச பா.ஜ.க மோடி அரசு, அம்பானி – அதானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்காக சொல்லிக் கொள்ளக்கூடிய இறையாண்மையை ஒழித்துக் கட்டி, அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் புரிந்து கொண்டிருக்கும் மோடி அரசை வீழ்த்திட, உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, ஷஹீது Dr பழனி பாபா பாசறை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் பங்கு கொண்டனர். மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் ராமகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொகுத்து வழங்கினார்.

மழை மற்றும் காற்று குறுக்கே வந்து இடையூறு செய்த போதும், ஆர்ப்பாட்டம் வர்க்க கண்ணோட்டத்துடன் உறுதியாக, எழுச்சிகரமாக கொண்டு செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் சுற்றி இருந்தவரின் கவனத்தை ஈர்த்து, உணர்வை மீட்டெடுழுப்பியது. அருகில் இருந்த கடைக்காரர்கள், சுற்றி இருந்த பொதுமக்கள் அனைவரும் தோழர்களின் உரையை ஆழமாக உள்வாங்கிக் கேட்டனர். இந்த வகையில் இந்த மே தினமானது வர்க்கக் கண்ணோட்டத்துடன், உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையம் பகுதியில் சிறப்பானதொரு அளவில் கொண்டு செல்லப்பட்டது.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

***

கடலூர்:

மே நாள் வாழ்க!
உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடலூர் மாவட்டம் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் மே தின ஆர்ப்பாட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிளை பொருளாளர் தோழர் பெருமாள் தலைமை தாங்கி நடத்தினார். ஓங்கி ஒலிக்கும் உணர்வுப்பூர்வமான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

தோழர் ராமலிங்கம், இணைச் செயலாளர், மக்கள் அதிகார கழகம், கடலூர் கிளை.

தோழர் விடுதலை பெரியார் சிந்தனையாளர்.

தோழர் தீனதயாளன் தலைவர் LIC லிக்காய் முகவர் சங்கம், கடலூர் கிளை.

தோழர் விஜயன், மாநில இளைஞரணி செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புதுச்சேரி.

தோழர் சாந்தகுமார், மாநில அமைப்பு செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம், தமிழ்நாடு-புதுச்சேரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக கடலூர் கிளை செயற்குழு உறுப்பினர் தோழர் ஜெயக்குமார் நன்றி உரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.
9443849915

***

கள்ளக்குறிச்சி

மே நாள் வாழ்க!
உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

தேதி: 01/05/2026 | நேரம்: மாலை 6:30

இடம்: அம்பேத்கர் நூலகம், பாலி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாகக் கொடியேற்றப்பட்டது. இதில் தோழர் விநாயகம் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொருளாளர் தோழர் பரந்தாமன், நிர்வாகிகள் மணிமுத்து மற்றும் கழகத்தின் தோழர் கார்த்திக், தோழர் மணிபாலன், தோழர் தமிழ், ஊர்ப் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

தோழர் விநாயகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
7200112838

***

வேலூர்:

மே நாள் வாழ்க!
உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் எதிரில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகார கழகம் ஜனநாயக சக்திகள் இணைந்து மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரக் கழகம்,
வேலூர் மாவட்டம்.
8489735841

***

திருவாரூர்:

மே தினத்தை முன்னிட்டு மே தின தியாகிகளை நினைவு கூருகின்ற வகையில் மக்கள் அதிகாரக் கழகம் திருவாரூர் சார்பாக அம்மையப்பனில் இரண்டு இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டது. இருசக்கர வாகனத்தில் பேரணி நடைபெற்றது. திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக பழைய ரயில்வே நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் கழகம் பங்கேற்றது. இறுதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கழக தோழர்கள் உரையாற்றினர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க