
13.05.2026
கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன
தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், அயர்னப்பள்ளியில் செயல்பட்டு வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இன்று (13/05/2026) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தூய்மைப் பணிக்காக டி.சி.எஃப்.எம் (TCFM) என்ற காண்ட்ராக்ட் நிறுவனம் மூலம் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாட்டா நிறுவனத்திடமிருந்து ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதம் சுமார் ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்பட்டாலும், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.15,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், மீதமுள்ள ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு நியாயமான சம்பளமும் உரிய உரிமைகளும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து நிறுவனத்தின் முன்பு அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்து துணை நிற்போம்!
தொழிலாளர்களை ஏமாற்றும் TCFM நிறுவனத்தின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கேட்டுக்கொள்கிறது.
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





