வணிக சிலிண்டர் விலையேற்றம்: ம.அ.க., பு.ஜ.தொ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை

சிலிண்டர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாமலும் வணிக சிலிண்டர் விலையை உயர்த்தியும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, கடந்த மே 16, 2026 அன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிலிண்டர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாமலும் வணிக சிலிண்டர் விலையை உயர்த்தியும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, கடந்த மே 16, 2026 அன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரக் கழகத்தின் பனப்பாக்கம் பகுதி உறுப்பினர் தோழர் எழில் தலைமையேற்று நடத்தினார். மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலாகவே அமைகிறது; பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அம்பலப்படுத்தியும், வேலூர் மாவட்டத்தில் சிப்பாய் கலகம் நடத்தப்பட்டதை போன்று, இன்று பாசிசத்திற்கு எதிரான ஒரு போராட்டம் தேவை என்பதை வலியுறுத்தியும் தலைமை உரை நிகழ்த்தினார்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் திலகவதி கண்டன முழக்கம் எழுப்பினார்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் உறுப்பினர் தோழர் தாமோதரன், சிலிண்டர் தட்டுப்பாட்டாலும் வணிக சிலிண்டர் விலை உயர்வாலும் தான் நடத்திவரும் தேநீர் கடையில் ஏற்படும் அசாதாரண சூழல் குறித்தும் பாதிப்புகள் குறித்தும் சிற்றுரை நிகழ்த்தினார்.

கண்டன உரை ஆற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர் சுந்தர், மோடி அரசு சட்டத்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து வருவது குறித்தும் தொழிலாளர் போராட்டங்கள் மீதான ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஒடுக்குமுறை குறித்தும் பேசினார். விலைவாசியை உயர்த்தி சாமானிய மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு, கொள்ளையடிக்கும் அதானி-அம்பானி கார்ப்பரேட்களுக்கு எடுபிடி வேலை செய்கிறது என ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து உரை நிகழ்த்தினார்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் சங்கர், பனப்பாக்கத்தில் அமைந்துள்ள சிப்காட் நிறுவனத்தில் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களுக்கு வலியுறுத்தி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் ஜனார்த்தனன் சிற்றுரை நிகழ்த்தினர்.

இறுதியாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்டப் பொருளாளர் தோழர் மோகனின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகள், பகுதி மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். மக்கள் அருகில் நின்று ஆர்ப்பாட்டத்தை கவனித்தது சிறப்பம்சமாக விளங்கியது.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.),
ராணிப்பேட்டை மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க