அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !
தமிழகம் முழுவதும் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே தினத்தன்று பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்மனசு-வின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!
இறுதியாக அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான்.
தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது
விவசாயிகள் விடுதலை முன்னணியையும், அதன்பின் மக்கள் அதிகாரத்தையும் ராஜபாளையம் பகுதியில் கட்டிக்காத்த மூத்த தோழர். அவருடைய இழப்பு மக்கள் அதிகாரம் அமைப்புக்கு பேரிழப்பாகும்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!
10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன.
மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம்.
ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்: இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!
சீர்குலைவுவாதிகளிடமிருந்து பு.ஜ.தொ.மு–வை மீட்டெடுக்கும் நோக்கத்தில் புதிய மாநில ஒருங்கிணைப்புக்குழு 16.4.2021 அன்று அறிவித்தது. இணையக் குரலாக “புதிய தொழிலாளி” முகநூல் 22.4.2021 களமிறங்கியது.
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
லாக்கப்பில் சித்திரவதை செய்தது, உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, இளைஞரின் உடலை தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?
தமிழகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஆசான் லெனினின் 152-வது பிறந்தநாள் விழா !
உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தில் மகத்தான தலைவர் தோழர் லெனினில் 152-வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்ப்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
இது ஏதோ குஜராத் பிரச்சினை அல்ல; ஜிக்னேஷ் மேவானியின் கைதினை எதிர்த்துப் போராடாவிட்டால் அடுத்து தமிழ்நாட்டிலும் மோடிக்கு எதிரானவர்களை வேறு மாநில போலீசை வைத்து கைது செய்யும் நிலை ஏற்படும்.
NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !
ஒரு திட்ட மேலாளர் கூறுகையில், ”இது தூத்துக்குடி துறைமுகத்தையும் கொல்லம் துறைமுகத்தையும் இணைப்பதற்கானது.” என்றார். இப்போதுதான் நமக்கு பிடிபடுகிறது இது பாரத் மாலா, சாகர் மாலா ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியென்று.
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !
எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது. என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை. நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார் கணேசன்.
அயோத்தியா மண்டபம் விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !
உமா ஆனந்தன் கவுன்சிலர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் - பாஜக பார்ப்பன ரவுடிக் கும்பல் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !
ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் மாவட்ட நிர்வாகமோ போலீசோ கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆலைக்கு எதிராக பேசினால், போஸ்டர் ஒட்டினால், அவர்களிடம் வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டுகிறது தூத்துக்குடி போலீசு.
விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி
விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மீண்டும் ஏமாற்ற நினைத்தால் விவசாயிகளை திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்த கூடும் என்பதை எச்சரிக்கையாக விடுத்து மனு கொடுக்கப்பட்டது.
நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
நான் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு சட்டம் இயற்றுவேன் ! நினைவு சின்னம் அமைப்பேன் ! சுட்டு கொன்ற அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என வாக்கு அளித்து இன்று வரை ஒரு வழக்கு கூட போட முடியவில்லை ஏன் ?























