உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் பயங்கரவாதம்!
புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கை மூலம், குஜராத் மாநில அரசானது முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைச் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது.
JAAC கூட்டுக் குழு அறிவிப்பு || தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக் கூட்டம்
17-11-2024 ஆம் தேதியன்று தென் மாநில வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கில் தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ள போலீசு!
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர்கள் போலீசின் தாக்குதலுக்கும் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கும் ஆளாவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது.
ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 | வினவு நேரலை
இன்று (அக்டோபர் 8) மாலை 6:00 மணிக்கு வினவு நேரலையில் சந்திப்போம்!
பணிச்சுமை ஏற்றப்பட்டு பறிக்கப்படும் இளைஞர்களின் உயிர்கள்!
“ஒருபுறம் வேலை போய்விடுமோ என்கிற பயம், மறுபுறம் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் போன்றவற்றாலும், வேலை அழுத்தம் காரணமாகவும் 45 நாட்களாகத் தூங்கவில்லை. எப்போதாவது தான் சாப்பிட முடிந்தது" - தருண் சக்சேனா
கூடங்குளம் போராட்டம் – ஆவணப்படுத்திய ஆஸ்திரேலியர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
தமிழ்நாடும் மத்திய அரசும் ஒரு பெரிய நிலநடுக்கப் பிழைக் கோட்டில் ஆறு அணு உலைகளைக் கட்ட முடிவு செய்தபோது, அது தங்கள் சொந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கே - இலங்கை மற்றும் பிற சுற்றுப்புற நாடுகளுக்கும் - பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் பிராட்பரி.
தாழ்த்தப்பட்ட மக்களை மலக்குழிக்குள்ளேயே இருத்தும் பாசிச மோடி அரசு!
2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில், நாடு முழுவதும் 377 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. களநிலவரம் இவ்வாறிருக்க 2023 ஆம் ஆண்டில் மலக்குழி மரணங்கள் நிகழவேயில்லை என்று சாதிக்கிறது ஒன்றிய அரசு.
உத்தரப்பிரதேசம்: பட்டியல் சாதியினருக்கு எதிராக அதிக வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம்
முக்கியமாக பாசிசக் கும்பல் ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடைபெற்றுள்ளதாக அரசு அறிக்கையே கூறுகிறது.
மகாராஷ்டிரா: மருத்துவ ஊழலில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல்!
மருந்துப்பொருட்களில் கலப்படம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மாஃபியா கும்பல்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இது நடந்திருக்காது.
உ. பி: பள்ளியின் வளர்ச்சிக்காக நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்
உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை விடுதிக்கு பின்புறம் உள்ள கிணற்றின் அருகே நரபலி கொடுத்துக் கொன்றுவிட்டு மீண்டும் சிறுவனின் உயிரற்ற உடலை விடுதியில் கொண்டு வந்து போட்டுள்ளனர்.
சென்னையில் இளம்பெண்ணை படுகொலை செய்து மூளையை வறுத்து தின்ற கொடூரம்!
மறுகாலனியாக்க கொள்கைகளைத் திட்டமிட்டே சமூகத்தில் பரப்பும் செய்தி ஊடகங்கள், ஆபாச சினிமா போன்றவற்றிற்கு எதிராகவும், இவற்றைத் தடுக்காமல் கட்டிக்காக்கும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும்.
உ. பி: இஸ்லாமிய உணவகங்கள் மீது வன்முறைக்கு வழிவகுக்கும் யோகி அரசு!
உ. பி யின் அனைத்து சாலையோரக் கடைகள், தாபாக்கள், சிறிய மற்றும் பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள், உணவகத்தில் வேலை செய்பவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டையினை கடைகளின் முன்பாக தொங்கவிட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பாசிசக் கும்பலை விரட்டி அடித்த ஹரியானா மக்கள்!
முதல்வர் சைனி தனது சொந்த தொகுதியான கர்னலின் லட்வா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஹரியானா மக்கள் “இங்கே எதற்கு வந்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பியதோடு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களிடையே மதக்கலவரத்தைத் தூண்டும் பாசிச கும்பல்!
“இந்து பழங்குடியினர் மட்டும்தான் உண்மையான பழங்குடியினர்; கிறிஸ்தவ பழங்குடியினர் போலியானவர்கள். அதனால் அவர்கள் பழங்குடியின பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்தவ பழங்குடியினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் பாசிச கும்பல் ஈடுபட்டுள்ளது.
திருப்பதி லட்டில் செலுத்தப்படும் இந்துத்துவ விஷம்
பவன் கல்யாண், ஜக்கி போன்றவர்களின் விஷமப் பிரச்சாரம் என்பது தேவஸ்தான வாரியம், இந்து அறநிலையத்துறை போன்ற அரசுத் துறைகளை ஒழித்துக்கட்டி விட்டு தீட்சிதர்கள் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆகியவர்களிடம் கோவில்களை ஒப்படைப்பதற்கான சதி.

























