நீரவ் மோடி சொத்துக்களை பறிமுதல் செய்த விவசாயிகள் !
மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட பண முதலைகளை வெளிநாடுகளுக்கு தப்பிக்கவிடுகிறது மத்திய அரசு. அவர்கள் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்கின்றனர். மல்லையாகள் மோடிகளிடம் எப்படி கடன் வசூலிக்க வேண்டும் என பாடம் கற்று தருகின்றனர் மகாராஷ்டிர விவசாயிகள்.
மதுரையில் நாளை கூட்டம் : கமல் – ரஜினி வருகை புது வசந்தமா ? புஸ்வாணமா ?
கமல் - ரஜினி அரசியல் வருகை புதுவசந்தமா ? புஸ்வாணமா ? என்ற தலைப்பில் மதுரை மூட்டா அரங்கில் 24.03.2018 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் அரங்கக்கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
திருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு !
திருச்சி கர்ப்பிணி பெண் உஷா -வை எட்டி உதைத்து கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் -க்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. போலீசு அராஜகத்தை கண்டித்து போராடிய போராளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.
அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !
தமிழகமானாலும் சரி மகாராஷ்டிரா ஆனாலும் போராடுபவர்களை ஒடுக்க எஸ்மா உருட்டுக் கட்டையை பயன்படுத்துகிறது அரசு.
அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !
ஐந்து கோடி பயணர்களின் விவரங்களை அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு ஆதரவான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.
பார் கவுன்சில் தேர்தல் – 2018 : சாதி … பணம் … துட்டு … மணி …...
மக்களின் உரிமைக்காக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திய வரலாறு கொண்ட தமிழக வழக்கறிஞர்களின் உரிமைகளை அடமானம் வைப்பவர்கள்தான், பார் கவுன்சில் தேர்தலில் வாக்குக்கு பணம் தருகின்றனர். வழக்கறிஞர்களே சாதி... பணம்... பார்டி... என வருபவர்களை விரட்டியடியுங்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
மார்ச் -23 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! பார்ப்பன பாசிசத்திற்கும் பன்னாட்டு கொள்ளைக்கு முடிவுகட்ட உறுதி ஏற்போம். பு.மா.இ.மு மாணவர்களிடம் பிரச்சாரம்.
ஆதாரில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளை : ஏர்டெல் ஆதாரம் !
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை உபயோகித்து அவர்களது மானியத் தொகையை தமது பேமண்ட் வங்கி கணக்கில் முறைகேடாக சேர்த்திருக்கிறது. இது ஆதார் எண்கள் மூலமாக நடத்தப்படும் மிகப்பெரிய மோசடியின் ஒரு சிறு துளியே ஆகும்..
விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !
தமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத்த யாத்திரை. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் காவி கும்பலுக்கு பெரியார் மண்ணில் கல்லறை கட்டுவோம்.
ஓலா – ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் !
மாதம் 1,50,000 வருமானம் எனக் கூறி ஓட்டுனர்களை தன் வலையில் சிக்கவைத்த ஓலா, ஊபர் நிறுவனங்கள் தற்போது தங்கள் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளன.
ஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் !
பிள்ளையாரைக் காட்டி அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து புஷ்பக விமானம் தான் அந்தகால “ஏர்பஸ்” என அடித்துவிடும் இந்துத்துவா ட்ரோல்கள் ஸ்டிபன் ஹாக்கிங்கை மட்டும் விட்டு விடுவார்களா?
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
பிராந்திய அளவிலான மொழிகள் அழிந்து வருவது கவலைக்குறியதாக கூறியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏன் இந்த திடீர் அக்கறை?
பிரேசில் : மனித உரிமை செயற்பாட்டாளர் மரில்லா ஃப்ரான்கோ படுகொலை !
பிரேசிலின் ரியோடி ஜெனிரா நகரில் ஒரு கவுன்சிலர் கொல்லப்பட்டிருக்கிறார். மனித உரிமை செயற்பாட்டளாரான மரில்லோ ஃபிரான்கோ தொடர்ந்து இராணுவம், போலீசின் அத்துமீறல்களை எதிர்த்து வந்தார். விளைவு அவருக்கு இந்த 'தண்டனை'!
பாலிடெக்னிக் – ஐ.டி.ஐ தரம் பற்றி ஒரு அமெரிக்க கவலை !
முறைபடுத்தப்பட்ட தொழில்களில் 12% பேர் மட்டும்தான் ஐ.டி.ஐ. முடித்த தொழிலாளிகள் உள்ளார்களாம்! ஐ.டி. துறையாகட்டும் ஐ.டி.ஐ. முடித்தவர்களாகட்டும் இந்தியாவில் யாருக்கும் வேலைவாய்ப்பு இல்லை.
ஹாக்கிங் – காலத்தின் வரலாறு !
தனது 21 வயதில் நரம்பு மண்டல கோளாரால் பாதிக்கப்பட்டு சராசரி வாழ்வே கடினமான சூழலிலும் தனது அறிவியல் பங்களிப்புகள் மூலம் ஹாக்கிங் மனித குலத்துக்கு பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளார்.