Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 258

PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்

2

கொரோனா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீள, இந்திய அளவில் நிதியைத் திரட்ட “பிரதம மந்திரி – அவசரகால நிலைமைகளுக்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (Prime Minster Citizens Assistance and Relief in Emergency Situations fund – PM CARES)” எனும் தனியார் அறக்கட்டளையை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள், பெரும் முதலாளிகள், நடிகர் – நடிகைகள் பொதுமக்கள் என பல தரப்பினரிடமிருந்து பணம் பெறும் இந்த அறக்கட்டளை மத்திய தலைமைக் கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் வராது என்று தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் இத்தகைய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தனியார் அறக்கட்டளைகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வருமா என்பதும் தீர்க்கப்படாத பிரச்சினையாக நீதிமன்றத்தில் தேங்கி நிற்கிறது.

PM CARES திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தி, கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தாராளமாக நிதி உதவி செய்து துணை நிற்குமாறு கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள், முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை அனைவரும் வாரி வழங்கினர். பே-டிஎம் போன்ற செயலிகளின் வழியே சிறிய அளவிலான தொகைகளையும் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதுபோக அனைத்து அரசு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்தும் இந்த நிதிக்கு பெரும் தொகைகள் செலுத்தப்பட்டன. பல இடங்களில் இது நிர்பந்திக்கப்பட்டும் மிரட்டியும் பெறப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில், மார்ச் 2020 ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) வழங்குமாறு கோரி அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரின் ஒருநாள் ஊதியம் சேர்ந்து ரூ. 4 கோடி திரட்டப்பட்டது. ஆனால் PMNRF திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பல்கலைகழக துணைவேந்தர் PMCARES திட்டத்திற்கு திருப்பிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திலிருந்து வந்த நெருக்குதலின் பெயரிலேயே PMNRF-க்கு ஒதுக்கப்பட்ட பணம் PM-CARES திட்டத்திற்கு திருப்பிவிடப்பட்டது என தி ஹிந்து நாளிதழுக்கு அடையாளத்தை தெரிவிக்க விரும்பாத டெல்லி பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போல டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பயிற்சி மருத்துவர்களின் ஒருநாள் சம்பளத்தை கட்டாயப் பிடித்தம் செய்து பிரதமரின் PM CARES நிதிக்கு அளிக்கும்படி சுற்றறிக்கை அனுப்பியதை பயிற்சி மருத்துவர் சங்கம் நிராகரித்துள்ளது. மேலும் இந்த நிதிக்குத்தான் நன்கொடை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது தவறானது என்பதையும், ஏற்கெனவே மருத்துவர்கள் பலரும் தாமாகவே பல்வேறு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் PMNRF ஆகியவற்றின் மூலம் நன்கொடை வழங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

படிக்க:
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !
♦ ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?

ஆகையால் தானாக முன் வந்து யாரேனும் கொடுக்க விரும்பினால் மட்டுமே கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிவாரண நிதி பங்களிப்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் தங்களது உரிமையை பறிக்கக் கூடாது என்றும் பயிற்சி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலை, எய்ம்ஸ் மருத்துவமனை வரிசையில் வருவாய்த்துறை ஒரு படி மேலே சென்றிருக்கிறது. இங்கு பணிபுரியும், அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஏப்ர்ல 2020-லிருந்து மார்ச் 2021 வரை ஒவ்வொரு மாதமும் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து 1 நாள் ஊதியத்தை PM-CARES திட்டத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 17 அன்று வருவாய்த்துறையின் இயக்குனர் மற்றும் தலைவரிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில் முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு ஆட்சேபணை ஏதும் இருந்தால் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் அதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது அந்த சுற்றறிக்கையைப் படித்துவிட்டு அமைதியாக இருந்தால், PMCARES நிதிக்கு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதாமாதம் நிதி தானாக எடுத்துக் கொள்ளப்படும். மறுப்பு இருந்தால், தனிக் கடிதத்தில் பெயரையும் பணியாளர் அடையாள எண்ணையும் சேர்த்து எழுதித் தர வேண்டும்.

பிற அரசாங்க நிறுவனத்தின் மூலமோ, லாக்டவுன் சமயத்தில் தொண்டு செய்யும் வேறு ஒரு தன்னார்வ நிறுவனத்தின் மூலமோ கொடுக்க வழியிருக்கும் போது, PM-CARES-க்கு ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில் நன்கொடையே அதிகாரத் தொனியில்தான் கேட்கப்பட்டிருப்பதாகவும், நன்கொடை தராதவர்களை மறைமுகமாக மிரட்டும் தொனியிலும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இங்கு மட்டுமல்ல, பல இடங்களில் நீதிமன்றங்களே இது போன்று PM CARES நிதிக்கு ஆள் சேர்த்துவிடும் வேலையைச் செய்திருக்கின்றன. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் பிணை வழங்குவதற்கான நிபந்தனையில் PM-CARES நிறுவனத்திற்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்றும் அரசின் ஆரோக்ய சேது நிரலை கைபேசியில் தரவிறக்கம் செய்து அதற்கு ஆதாரம் காட்டிய பின்னரே பிணை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஒரு நீதிபதி.

அரசாங்கம் இவ்வாறான சூழலில் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாகக் கேட்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நிதி பொதுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படாது என்பதுதான் பிரச்சினையே! PMCARES பொதுத்துறை நிதி அல்ல என்பதை இதுகுறித்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

இதற்கு முன்னர், இயற்கைப் பேரிடர் காலங்களில் நன்கொடை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட PMNRF பணத்தை இயற்கைப் பேரிடருக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், PMCARES என்ற தனியார் அறக்கட்டளை துவங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது அரசு. ஆனால், PMNRF உருவாக்கபட்ட நோக்கம் அதுவாக இருந்தாலும், “மருத்துவ ரீதியான அவசரத் தேவைகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. அந்த விதியைப் பயன்படுத்தியோ, அல்லது அதன் விதிகளில் கொள்ளை நோய்க் காலங்களிலும் இந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம் என்று மாற்றம் செய்வதன் மூலமோ அப்பணத்தைப் பயன்படுத்த முடியும். அப்படி செய்யாமல் PMCARES என்ற புதிய நிதி அறக்கட்டளையை மோடி அரசு துவங்கியிருப்பதன் பின்னணி என்ன ?

இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக உருவாக்கப்பட்ட PMNRF மூலம் வரும் பணமும் கூட பொதுப்பணக் கணக்கில் வருமா வராதா என்பது குறித்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள சமயத்தின் போது தொடுக்கப்பட்டது. அதே போல, அதன் கணக்கு வழக்குகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு 2018 முதல் இப்போது வரை தீர்வு காணப்படாமல் நீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள PM CARES திட்டமும் இது போன்று எதற்குக் கீழும் வராத போது, வெளிப்படைத்தன்மை என்பது இங்கு எவ்விதத்திலும் உறுதி செய்யப்படவில்லை. தனியார் அறக்கட்டளைகளை தணிக்கை செய்ய தமக்கு அதிகாரம் இல்லை என மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான தொகையை நன்கொடையாகப் பெறும் PM-CARES அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கும் மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் யாரைக் கை காட்டுகிறார்களோ அவர்கள்தான் தணிக்கை செய்ய முடியும்.

கார்கில் போரில் மரணமடைந்த இராணுவ வீரர்களின் சவப்பெட்டி தொடங்கி ரஃபேல் உள்ளிட்ட இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் வரை அனைத்திலும் ஊழல் செய்த ஒரு கட்சியின் அமைச்சர்களின் கீழ் செயல்படும் இந்த PMCARES அறக்கட்டளைக்கு மக்கள் வழங்கும் கோடிக்கணக்கான நன்கொடைத் தொகை, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும், மருத்துவ சேவையை செழுமைப்படுத்தவும் பயன்படுமா? அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப் பயன்படுமா?

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளைக் கையாளும் PM-CARES அறக்கட்டளை, அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அல்லது குறைந்தபட்சம், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்பிலாவது கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் இவை எதற்கும் மோடி அரசு தயாராக இல்லை. கடந்த ஏப்ரல் 21 அன்று விக்ராந்த் தொகாட் என்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, சப்பைக் காரணங்களைக் கூறி அந்த விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

வெளிப்படைத்தன்மை என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் மோடி அரசு, நிதி கையாளுதலில் மட்டும் கண்காணிப்புக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளுமா என்ன ?


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ DU Teachers Allege VC Diverted Rs 4-Crore Staff Donations From PMNRF to PM CARES, 
♦ FinMin Tells All Staff, Officers to Donate One Day’s Salary Per Month to PM-CARES.
 

உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

‘40 ஆயிரம் சம்பளம் வாங்கின இடத்துல 30 ஆயிரம் குடுத்தா கூட போதும். மொத்தத்துல வேலைன்னு ஒண்ணு இருந்தாலே பெரிய விசயம்’ – என்றார் ஓர் ஊடக நண்பர். அவர் ஊடகத் துறைக்கு வந்து 8 வருடங்களாகிறது. எட்டு வருடங்களில் அவர் சம்பளம் 40 ஆயிரம். அதை நம்பி திருமணம் முடித்து ஒரு குழந்தையாகி, குடும்பமாகி நிற்கையில் இப்போது அவரது ஊதியம் 40-ல் இருந்து கீழே இறங்கப் போகிறது. எவ்வளவு என்று அடுத்த மாதம் தெரிந்துவிடும். வேலையே நிலைக்குமா என்பது அதற்கும் அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

இவரைப் போல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊடகங்களில் சராசரியாக 30-40 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிகிறார்கள். அனைவரின் மனதிலும் இப்போது கவ்வியிருக்கும் அச்சம், ‘இந்த வேலை நிலைக்குமா?’. ஊடகம் மட்டுமல்ல… பெரும்பான்மையான துறைகளில் பணிபுரியும் அனைவரது மனதிலும் இந்த கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

இந்த நிச்சயமின்மை இதற்கு முன்பும் இருந்ததுதான். இப்போது அது திட்டவட்டமான ஆபத்தாக எழுந்து நிற்கிறது. முன்பு ஓர் ஊழியரை வேலைநீக்கம் செய்வதற்கு நிறுவனத்துக்கு, பெயரளவுக்கேனும் ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது கொரோனா வந்து, எதையும் செய்வதற்கான ‘பிளாங்க் செக்’-ஐ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. ‘நஷ்டம்.. அதனால் வேலையில்லை’, ‘நஷ்டம்.. அதனால் சம்பளம் குறைப்பு..’.. அவ்வளவுதான். மேலதிகமாக எதுவும் தேவையில்லை. ஆகவே தொழிலாளர்களின் மனம் இயல்பாகவே, ‘சம்பளத்தையாச்சும் குறைச்சுக்க… வேலையை விட்டு தூக்கிராதே..’ என்று சிந்திக்கிறது.

‘வேறு என்ன செய்வது? இது வரலாறு காணாத நோய்த்தொற்று. பழைய மாதிரி நிறுவனம் இயங்க முடியாது. பழைய மாதிரி சம்பளம் மட்டும் எப்படி வழங்க முடியும்?’ என்பது நியாத்தோற்றம் கொண்ட விளக்கம்தான். ஒருவகையில் இந்த விளக்கம், முதலாளிகளின் கையறு நிலையை புரிந்துகொள்ளும்படி தொழிலாளிகளிடம் கோருகிறது. அதாவது, ‘கொடுக்க மனம் இருக்கிறது. ஆனால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறதே… என்ன செய்வது? புரிந்துகொள்ளுங்கள்’ என்று பாவனை செய்கிறது.

உண்மை என்னவெனில், கம்பெனி நன்றாக நடந்த காலங்களிலும் இத்தகைய ஊதியக் குறைப்பையும், ஆள்குறைப்பையும் இவர்கள் செய்தார்கள் என்பதுதான். அப்போது வேலை கொடுக்கப்பட்டது. மூவர் செய்யும் வேலை ஒருவருக்கு வழங்கப்பட்டு அதன்மூலம் மறைமுக ஆட்குறைப்பு நடந்தது. அப்போது ஊதியம் கொடுக்கப்பட்டது. அது, கம்பெனியின் லாபத்துக்கேற்ற ஊதியமோ, தொழிலாளியின் வேலைக்கேற்ற ஊதியமோ அல்ல… மிக சொற்ப சம்பளம். அதன்மூலம் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டது. ஆகவே, ‘நாங்க அந்த காலத்துல நல்லவங்களா இருந்தோம்’ என்ற பாவனை, ஒரு பம்மாத்து.

படிக்க:
♦ கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்
♦ உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

நிறுவனம் லாபத்தில் இருக்கும்போதும் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டார்கள். நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும்போதும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். லாபத்தில் இருந்தபோது நீங்கள் சேர்த்து வைத்த சொத்து உங்களுக்கு இருக்கிறது. தொழிலாளிக்கு, சேர்த்து வைத்த கடனைத் தவிர என்ன இருக்கிறது?

‘சரி நீங்களே சொல்லுங்க.. என்ன செய்வது?’

என்ன செய்வது என்றால், இத்தனை நாளாய் தொழிலாளியின் உழைப்பில் சேர்த்த உபரி சொத்து, எல்லா முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது. இந்த உபரி இல்லாத நிறுவனம் எது? முதலாளி யார்? அதை வெட்டி எடுத்து வெளியே கொண்டு வாருங்கள். இத்தனை நாள் உங்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்த தொழிலாளியை இந்த நேரத்தில் கைவிடாமல் தொடர்ந்து வேலை கொடுங்கள்; ஊதியம் கொடுங்கள். நாளை நிலைமை சரியாகும்போது, இந்த உபரி உங்களிடம் வந்து சேரத்தானே போகிறது? உங்களுக்கு குறையப்போவது லாபவிகிதம்தானேயன்றி, லாபமே அல்ல.

இத்தனை தூரம் நீட்டி முழக்காமல், யாரும் எடுத்துச் சொல்லாமல் நிறுவனங்களின் கஷ்டத்தை தொழிலாளிகள் புரிந்து கொள்கிறார்கள். எந்த தொழிலாளியை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். ‘பாவம், கம்பெனியே நஷ்டத்துல ஓடுது..’ என்று இயல்பாக சொல்வார்கள். அது, பிறர் துன்பத்தை தனதாக கருதும் தொழிலாளி வர்க்கத்தின் குணம்; உங்களிடம் இல்லாத குணம்.

பஞ்ச காலத்தில் இருப்பதை பகிர்ந்து உண்ணும் எளிய பண்புதான் இப்போதைய தேவை. உங்களிடம் உபரி செல்வம் இருக்கிறது. அப்படி ‘இருப்பது’ எதுவும் உங்கள் சொந்த உழைப்பினால் மட்டும் விளைந்தது அல்ல. அதில் தொழிலாளிகளின் உழைப்பும், உதிரமும் கலந்திருக்கிறது. அதை பெறுவது தொழிலாளியின் உரிமை. அதை வழங்குவது உங்களின் பெருந்தன்மை அல்ல… கடமை.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

கொரோனா நிவாரண – மக்கள் உதவிக்குழு – விழுப்புரம் !

ணக்கம்,

கொரோனா நோய் தொற்றின் காரணமாக அரசு அமுல் படுத்தியுள்ள ஊரடங்கால் முடங்கிப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அளவில் நிதியும், உணவு பொருட்களும் வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து போராடுவது தங்களுக்கு தெரியும். அதே வேளையில் கொரோனா நிவாரண உதவி குழுவின் சார்பில் முடிந்த அளவில் நண்பர்கள், ஆதரவாளர்களிடம் நிவாரண பொருட்களை திரட்டி தமிழகம் முழுவதும் மக்களுக்கு உதவி வருகிறோம். அதன்படி 30.04.2020 அன்று மாலை 5.00 மணியளவில் விழுப்புரம் பகுதியில் 38 – வது வார்டு M. குச்சிபாளையத்தில் உள்ள குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள் 60 குடுபங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிவாரண வேலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அவரவர் இல்லங்களுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டது. அப்போது அப்பகுதி மக்கள் நாங்கள் நகரத்தை ஒட்டிய பகுதியில் இருந்தாலும் அனைவரும் தினக்கூலிகள் தான் எங்கள் பகுதி மக்கள் எந்த வருமானமும் இன்றி மூன்று வேளை உணவுக்கே வழி இல்லாமல் தவித்து வருகின்றோம். எனவே நாங்கள் நிவாரண பொருட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசும் எங்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என எதிர் பார்த்து காத்திருக்கின்றோம் என்று தங்களின் நிலைமைகளை கூறி ஆதங்கப்பட்டனர்.

மேலும் சில பகுதி பொதுமக்கள் எங்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களிடம் வரும் நாட்களில் எங்களால் முடிந்த உதவிகளை தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் பெற்று செய்வதாக கூறியுள்ளோம். எனவே போதுமான உணவு பொருட்கள் இன்றி தவிப்பவர்களுக்கு உதவ தயாராக உள்ளவர்கள் தங்களால் முடிந்த அரிசி, மளிகை பொருட்களையோ, நிதியாகவோ வழங்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு;

1.தோழர். மோகன்ராஜ்‌,
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள்அதிகாரம், விழுப்புரம் ,
போன்: 99949 79490.

2. தோழர். ஞானவேல், அமைப்பாளர்,
புரட்சிகரமாணவர் – இளைஞர்முன்னணி (RSYF), விழுப்புரம்.
போன் : 7358869232

3. தோழர், திலீபன், பொருளாளர்,
புரட்சிகரமாணவர் – இளைஞர்முன்னணி (RSYF), விழுப்புரம்.
போன் : 82203 00906

4. தோழர், ராஜீவ்காந்தி,
மக்கள்அதிகாரம், விக்கிரவாண்டி, வட்டாரம்,
போன் : 96262 76877

தகவல் :
மக்கள்அதிகாரம்,
விழுப்புரம்.

ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?

0

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த உட்கட்டமைப்பு நிதி மூலதன நிறுவனமான ப்ரூக்ஃபோர்ஸ் நிறுவனம் செய்யவிருக்கும் ரூ.25,215 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு கடந்த ஒன்பது மாதங்களாக ஒப்புதல் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.

அம்பானியின் நெருங்கிய நண்பரான மோடி ஆட்சியில் இருக்கும் போது, இப்படி எல்லாம் நடப்பது சாத்தியமா என்ற சந்தேகம் வரலாம். அதுவும் சுமார் 25,000 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடி அரசு எப்படி ஒப்புதல் கொடுக்காமல் மறுத்திருக்கும் ?

இது குறித்து தி வயர் இணையதளம் உள்துறை அமைச்சகம் மற்றும் தொலை தொடர்புத்துறையைச் சார்ந்த அதிகாரிகளிடமிருந்து பல்வேறு தகவல்களைத் திரட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ டிஜிட்டல் பைபர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) என இரு உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கியது.
இதில் அலைபேசி கோபுரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பது RJIPL நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக தற்போது 1,06,000 கோபுரங்கள் இருக்கின்றன. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 39, 920 கோடி ரூபாயாகும். மேலும் சுமார் 68,000 கோபுரங்கள் கட்டப்படவுள்ளன. அதன் பின்னர் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 60,600 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றொரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் (RIIHL) எனும் நிதி மூலதன நிறுவனம், டவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ட்ரஸ்ட் (TIT) எனும் உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தைத் துவக்குகிறது.

இந்த TIT நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 51% பங்குகளை வாங்குகிறது. அதாவது தனது துணை நிறுவனத்தைக் கொண்டே மற்றொரு துணை நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குகுறது. இந்த நிறுவனத்திலிருந்து (TIT) தனக்கான கோபுரங்களை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ஜியோ நிறுவனம் போட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2019, ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கனடாவைச் சேர்ந்த ப்ரூக்ஃபீல்ட் என்ற உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.

படிக்க:
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
♦ ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !

இந்த ஒப்பந்தத்தின் படி TIT நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நிறுவனத்தோடு கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்தின் துணைநிறுவனமான BIF IV Jarvis India Pvt. Ltd என்ற நிறுவனமும் பங்குதாரராக இணைந்து கொள்ளும். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு நிறுவனமான செபி (SEBI), நிறுவனப் போட்டி கட்டுப்பாட்டு நிறுவனமான CIC, மற்றும் உள்துறை அமைச்சகம், தொலைதொடர்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்த பின்னர், TIT நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை BIF IV Jarvis நிறுவனம் ரூ. 25,215 கோடி கொடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொள்ளும். இதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாரம்.

செபி (SEBI) வழிகாட்டுதல்களின்படி தனியார் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து நேரடி முதலீட்டாளர்களோ அல்லது பங்குதாரர்களோ தேவை. அந்த வகையில், ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் கனடியன் பென்சன் ஃபண்ட், பிரிட்டிஷ் கொலம்பியா இன்வெஸ்ட்மெண்ட் மெனேஜ்மெண்ட் கார்ப்பரேசன், பப்ளிக் இன்வஸ்ட்மெண்ட் ஃபண்ட் ஆஃப் சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தனியார் உட்கட்டமைப்பு அறக்கட்டளையில் முதலீடு செய்துள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் செபி (SEBI) இதற்கான ஒப்புதலை அளித்துவிட்டது. ஜனவரி 2020-ல் CIC-யும் இந்த இணைப்பிற்கான ஒப்புதலை வழங்கிவிட்டது. இறுதியாக தொலைதொடர்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்து நிற்கிறது. இந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் மொத்த தொகையான ரூ. 25,215 கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்குக் கிடைக்கப் பெறும்.

உட்கட்டமைப்புத் துறையில் ஒரே நிறுவனத்தின் மூலம் வரும் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு இது. அப்படியிருக்கையில் தொலை தொடர்புத்துறையும் உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்க தயக்கம் காட்டுவது ஏன் ?

ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் தனது மூலதனத்தைக் கொண்டு வரும் வழிமுறையும், அம்மூலதனத்திற்கான வட்டியாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாட்டில் இருந்து வெளியேற்றப்படப் போகும் அந்நியச் செலாவணியும்தான் இந்த தயக்கத்துக்குக் காரணம் என்கிறது தி வயர் இணையதளம்.

முதல் விசயம், இந்த முதலீடு சிங்கப்பூர், பெர்முடா போன்ற வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் கொண்டு வரப்படுகிறது. சிங்கப்பூரில் மட்டும் மூன்று அடுக்குகளாக கைமாறி இந்த மூலதனம் கொண்டு வரப்படுகிறது. அந்நிய மூலதனம் வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் வருவது இந்தியாவில் சட்டப்படியாக செல்லுபடியாகும் என்ற போதிலும், இந்த பணப் பரிவர்த்தனையில், பணம் எங்கிருந்து உள்ளே நுழைகிறது என்பது குறித்து துளியும் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தால் தொலைதொடர்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கத் தயங்குவதாகத் தெரிவிக்கிறது வயர் இணையதளம்.

மேலும் இந்தியாவிற்குள் இம்மூலதனம் வந்த பின்னர், இந்த நிறுவனத்தின் (TIT) நிர்வாகம் சிங்கப்பூருக்கு மாற்றப்படவிருப்பதால், வழக்குகள் அனைத்தும் சிங்கப்பூர் நீதிமன்றத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

இரண்டாவது விசயம், உள்ளே கொண்டு வரப்படும் மூலதனமான ரூ.25,215 கோடியில் பெரும்பகுதி 15% வட்டிக்குப் பெறப்பட்ட கடனாகக் காட்டப்பட்டு உள்ளே கொண்டு வரப்படுகிறது. இந்தக் கடனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி இந்தியாவில் இருந்து அந்நியச் செலாவணியாக வெளியேறும். இந்த வட்டி விகிதமும் வரம்புமீறி இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடன் மற்றும் வட்டி விகிதம் குறித்து தொலைதொடர்புத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், நிர்வாக அமைச்சக அதிகாரிகளும் தயக்கம் காட்டியுள்ளனர். நிதியமைச்சகத்தின் ஒரு பிரிவாகிய வெளி வர்த்தகக் கடன் குழுவால் இந்தக் கடன் விவகாரம் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிர்வாக அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

தொலை தொடர்புத்துறை மற்றும் நிர்வாகத்துறை அமைச்சகம் ஆகியவை முன்வைத்த விவகாரங்களை உள்துறை அமைச்சகமும் சுட்டிக் காட்டியுள்ளது. அதன் பின்னரே ரிலையன்ஸ் நிர்வாகம் இந்த வட்டிவிகிதத்தை 15%-லிருந்து 9%-மாக குறைத்து தனது முன்மொழிதலை வைத்துள்ளது என்கிறது தி வயர் இணையதளம்.
அந்நிய நேரடி முதலீடு எனும் பெயரில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் பணப் பரிமாற்றம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ப்ரூக்ஃபோர்ஸ் நிறுவனம் செய்யப் போகும் முதலீட்டிற்கான கடனுக்கான வட்டியாக 15%-ஐ முதலில் தெரிவித்துவிட்டு, பின்னர் 9%-மாக மாற்றியதன் பின்னனி என்ன ?
இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்டுள்ளது தி வயர் இணையதளம். ஆனால் அதற்கும் அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

எது எப்படி இருந்தாலும், விரைவில் அதிகாரிகளோ, சட்ட வரம்புகளோ மாற்றப்பட்டு அந்த அந்நிய முதலீடு உள்ளே வந்துவிடும் என்பது உறுதிதான். ஆனால் இது போன்ற சிறிதளவு கேள்விகளும், கட்டுப்பாடுகளும் கூட இருக்கக்கூடாது என்பதுதான் அம்பானிகளின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. ‘ஆப் கி பார்’ மோடி சர்க்கார் அதனையும் நிறைவேற்றும்.


நந்தன்

நன்றி :  எக்கனாமிக் டைம்ஸ்,  த வயர். 

கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை

0

மார்ச் – 24 ஊரடங்கிற்குப் பிறகு இந்தியாவெங்கிலும் சாலைகளில் சாரைசாரையாக இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பி சென்றனர். பிரிவினைக்குப் பிறகு நாடு முழுதும் நடக்கும் நீண்ட பயணமிது. தொடர்ந்து சில பத்தாண்டுகளாக இந்தியாவின் விவசாய கிராமங்கள் வெறிச்சோடி வருகின்றன. இந்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கையே இதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தாலும் மக்கள் சொல்லும் ஒரே காரணம் – கிராமத்தை விட நகரங்களில் கூலி அதிகம். தாயாராம் வாழும் மத்தியப்பிரதேசத்தின் பண்டல்காந்த் பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல.

தயாராமும் அவரைப்ர போன்ற சமூகத்தின் கீழ்மட்டத்தில் வாழும் மக்களுக்கும் நம்பிக்கை என்று ஏதாவது இருக்க முடியுமா? தாயாராம் போன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தாம் இந்திய நகரங்களின் முதுகெலும்பாக உள்ளனர். ஒரு பகுதியினர் பெரும் நகரங்களையும் அவற்றை இணைக்கும் சாலைகளையும் மேம்பாலங்களையும் கட்டியெழுப்புகிறார்கள். இன்னொரு பகுதியினர் கழிப்பறைகளை தூய்மை செய்கின்றார்கள், வாடகை மகிழுந்து ஓட்டுகிறார்கள். இவர்கள் அனைவரும் தினக்கூலிகள். ஆண்டுதோறும் சுமார் 228,840‬ கோடி இந்திய ரூபாயை தத்தமது கிராமங்களுக்கு எடுத்து சென்று குற்றுயிராய் கிடக்கும் கிராம பொருளாதாரத்திற்கு பேருதவி செய்கின்றனர்.

ஊரடங்கு, மறு ஊரடங்கு அப்புறம் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்று உலகின் மிகப்பெரிய ஊரடங்கு சோதனைக்களமாக கைதட்டியும், தட்டாலடித்தும், விளக்கேற்றியும் ஒரு சாரார் கொண்டாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஆலைகளிலும் சாலைகளிலும் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு அகதிகள் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்வதற்கான ஒரு நீண்ட பயணத்தை தொடங்கினார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களான குஷ்வாஹா (Kushwaha)குடும்பத்தின் நண்பர்களும் உறவினர்களும் தங்கள் கிராமங்களுக்கு திரும்ப புது தில்லியில் ஒரு சாலையில் நடந்து செல்கின்றனர்.

குடும்பத்திற்கு உணவளிக்கவோ அல்லது வாடகை செலுத்தவோ வழியில்லாத நிலையில் தனது 5 வயது மகன் சிவத்தை தோள்களில் ஏற்றிக்கொண்டு 500 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு தாயாராம் நடக்க தொடங்கினார். வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் வயதான உறவினர்களுடன் கிராமத்தில் விட்டுச் செல்லப்பட்ட தனது மற்றொரு ஏழு வயது மகன் மங்கலைப் பற்றிய நினைவுடன் இருப்பதாக அவர் கூறினார். அவனுடன் இருப்பது தொற்றுநோய்க்கு நடுவில் குறைந்தபட்சம் ஒரு ஆறுதலை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ளா ஜுகாய் கிராமத்தில் தாயாராம் கோதுமையை அறுவடை செய்கிறார். அவரது வீட்டின் இருட்டான ஒரு அறையில் தானியங்கள் மற்றும் உடைகள் சாக்குகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சட்டமில்லா சுவரொட்டி சுவரில் தொங்குகிறது. ஒரு ஏரியின் மீது சிவப்பு கூரை கொண்ட வீட்டை சித்தரிக்கின்ற அந்த படத்தில் பனி மூடிய மலைகளுக்கு பின்னால் சூரியன் மறைகிறது. ”சின்னஞ்சிறிய கிராமங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்திற்கு கடிகாரத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன்” என்று அது கூறுகிறது.

படிக்க:
♦ ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !
♦ “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

தயாராம் மற்றும் அவரது மனைவி கயன்வதி ஆகியோர் கோதுமை அறுவடைக்கு இடையில் ஓய்வு எடுக்கும் நேரத்தில் தங்கள் மகன்கள் மங்கல் மற்றும் சிவம் ஆகியோருடன் விளையாடுகிறார்கள். ”நான் டெல்லியை நேசிக்கிறேன் என்பதல்ல. பிழைப்பதற்கு எனக்கு பணம் தேவை. எங்களிடம் அது இருந்திருந்தால் நாங்கள் இங்கே தங்கியிருப்போம். இது தான் எங்களது வீடு” என்று கூறினார்.

மங்கல் பிறந்த பிறகு, அவனைப் பார்த்துக் கொள்ள ஜுகாயிலேயே கயன்வதி தங்கியிருந்தார். அவன் மட்டும் இருந்தபோது அவனையும் புதுதில்லிக்கு அழைத்து வந்தார். ஆனால் சிவம் பிறந்த பிறகு, ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது: மங்கலையும் அழைத்துச் செல்வதா அல்லது கிராமத்திலேயே அவனை விட்டு விடுவதா. ”வேலையின் போது ஒரு குழந்தையை சுமப்பது எளிது. ஆனால் இருவரை சுமப்பது மிகவும் கடினம். எனவே நாங்கள் அவனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்று கயன்வதி கூறினார். ‘

தயாராம் தன்னுடைய விதியைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார். அவரது திருமணம், புதுடெல்லிக்கு அவர் சென்றது, வீட்டிற்கு திரும்பிச் செல்வது – எதுவும் விட முடியாத கட்டாயத்தேவைகள். தயாராமின் அத்தை அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தார். அவரும் கியான்வதியும் தொன்றுத்தொட்டு இந்திய சமூக ஏணிப்படியில் கீழ்மட்டத்திலிருக்கும் பாரம்பரியமாக உழவுத்தொழிலில் ஈடுபட்ட குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் முதன்முதலாக சந்தித்தனர். ”அவர் பொருத்தமாக தான் இருந்தார்” என்று தாயாராம் தனது மனைவியுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த போது அவரது முகத்தை ஒரு புன்னகை சுருக்கமாக கடந்தது. ”ஆனால் என் தலைவிதியில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் சரிதான்” என்று கூறினார்.

தயாராம் குஷ்வா மற்றும் கியான்வதியின் இரண்டு அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு. நான்கு நாட்கள் தொடர்ச்சியான நடைப்பயணம் மற்றும் சரக்குந்துகள் பயணத்திற்கு பிறகு 2,000 மக்கள் வாழும் விவசாய கிராமமான ஜுகாயில் (Jugyai) உள்ள தங்கள் வீட்டை அவர்கள் சென்றடைந்தனர்.

புதுதில்லியில் இருந்து வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளி பிரமோத் குஷ்வாஹா மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தன்னுடைய சுராரி (Churari) கிராமத்தில் உள்ளார்.

நாடு தழுவிய ஊரடங்கின் போது வெறிச்சோடிய ஜுகாய் கிராமத்தின் தெரு வழியாக பெண்கள் நடந்து செல்கின்றனர். இந்த ஊரடங்கு தனது குழந்தைகளின் கல்விக்கான எல்லா நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிடும் என்று தயாராம் கவலைப்படுகிறார். ”எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை ஒரு வேலையாளாக பணிப்புரிய விரும்புவதில்லை. ஆனால் வேறு வழியில்லை. நான் செய்வதை தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கவலையுடன் கூறினார்.

தயாராமின் பெற்றோர்கள்: இடப்புறத்தில் கேஸ்ரா மற்றும் வலப்புறத்தில் தாகூர் தாஸ். இருவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். வழக்கமாக வீட்டில் இருப்பவர்களின் செலவிற்கு அனுப்பிய பணத்திற்கு பதிலாக வெறுங்கையுடன் தனது கிராமத்திற்கு வந்தவுடன் என்ன நடக்கும் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று முயற்ச்சி செய்ததாக அவர் கூறினார். குறைந்தது அவருக்கு ஒரு வீடாவது இருக்கிறது என்றார் அவர்.


தமிழாக்கம்: -சுகுமார்
நன்றி: அல்ஜசீரா

 

ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !

PP Letter head

பத்திரிக்கை செய்தி

29.04.2020

கொரோனாவை விடக் கொடியவை மத்திய மாநில அரசுகள் என்பதை அன்றாடம் மக்கள் உணர்ந்து வருகின்றனர். இழவு வீட்டில் கூட களவாடும் கேவலத்திற்கு மத்திய அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனம் உதவி செய்திருக்கிறது. கொரோனா அச்சத்திலும் வாழ்வாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் வரிப்பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்து கீழ்த்தரமான ஊழலில் ஈடுபட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் விரிவான சோதனைகளை வேகமாக மேற்கொண்டு வரும் வேளையில், விரைவு சோதனை கிட் வாங்குவதில் ஊழல் செய்து வாங்கிய கிட்டையும் பயன்படுத்த முடியாமல் முடக்கி வைத்துள்ளது. விரைவு சோதனை கிட் என்பது சமூகத்தில் மக்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அளவிடும் கருவிதான், இது ஆய்வுக்கான கருவியே தவிர கொரோனா தொற்றைக் கண்டறியும் கருவியல்ல என்பதை கடந்த மார்ச் மாதமே உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தி விட்டது. ஆயினும் மத்திய அரசும், தமிழக அரசும் விரைவு சோதனைக் கருவி இதோ வருகிறது, அரை மணி நேரத்தில் முடிவு தெரியும் என்றே ஏமாற்றி வந்தன. இப்போது அவற்றை வாங்கியதில் ஊழல் அம்பலமாகி உள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனமும், புனேயிலுள்ள தேசிய தீநுண்மி ஆய்வகமும் சீனாவிலிருந்து வந்த மாதிரிகளை கள ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்திய பின்னரே 5 லட்சம் கிட்டுகள் வாங்க அய்.சி.எம்.ஆர் அனுமதியளித்துள்ளது. இதில் ஊழல் மட்டுமல்லாது வேறு சில பிரச்சனைகளும் இருப்பது உறுதியாகிறது. சீனாவிலிருந்து இறக்குமதியான விரைவு கிட்டுகளின் சோதனை முடிவுகள் 5% மட்டுமே சரியாக இருக்கின்றன என ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையிலும், இறக்குமதியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இவ்வூழல் இப்போது அம்பலமாகியுள்ளது.

சீனாவின் வெண்ட்போ நிறுவனத்தின் இந்திய இறக்குமதி நிறுவனமான மேட்ரிக்ஸ் லேப் ஒரு கிட் ரூ 245/- என்ற விலையில்(போக்குவரத்து உட்பட) இறக்குமதி செய்து ரூ 145/- லாபம் வைத்து ரூ 400/- என்ற விலையில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்திற்கு விற்றது. இதன் மீது ரூ 200/- லாபம் வைத்து ஒரு கிட் ரூ 600/- என்ற விலையில் அய்.எம்.சி.ஆருக்கு ரேர் மெட்டபாலிக் நிறுவனம் விற்றுள்ளது. அதாவது ரூ 245/- க்கு வாங்கப்பட்ட கிட் இரண்டு இடைத்தரகர்கள் கை மாறி ரூ 600/-க்கு மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு என்ன பங்கு என்பது யாருக்கும் தெரியாது. பங்கு இல்லாமல் இருக்காது என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். சந்தடிசாக்கில் எடப்பாடி அரசு ஷான் பயோடேக் என்ற நிருவனம் மூலம் இறக்குமதியாளர் மேட்ரிஸ் லேப் இடம் நேரடியாக வாங்கி கணிசமாக சுருட்டியுள்ளது.

விநியோகஸ்தரான ரேர் மெட்டபாலிக் நிறுவனத்திற்கும் இறக்குமதியாளரான மேட்ரிக்ஸ் லேப் நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கிட்டின் விலை ரூ 400/- என சமரசம் செய்து வைத்துள்ளது. இது குறித்து அய்.எம்.சி.ஆரும், மத்திய சுகாதாரத் துறையும் கொடுக்கும் விளக்கங்கள் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அரசே துணை போனதை உறுதிப்படுத்துகின்றன.

படிக்க:
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
♦ இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !

நமது கேள்விகள்:

  • மத்திய அரசின் வர்த்தக நிறுவனம் (State Trading Corporation) இருக்கும் இருக்கும்போது தனியார் நிறுவனத்தை நாடியது ஏன்?
  • 100% முன்பணம், காலக்கெடு உத்தரவாதம், டாலர் விலை காரணமாக ஏற்ற இறக்கம் குறித்து விதி இல்லாதது ஆகிய காரணங்களால் தான் நேரடியாக இறக்குமதி செய்வதைக் கைவிட்டதாக அய்.எம்.சி.ஆர் கூறுகிறது. அப்படியானால் இந்த உத்தரவாதங்களை தனியார் நிறுவனம் எப்படிப் பெற்றது? இந்திய அரசுக்கு உத்திரவாதம் கொடுக்க மறுத்த வெண்ட்போ நிறுவனம் அந்த உத்தரவாதத்தை தனியாருக்குக் கொடுத்த போது அரசு ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை?
  • ரூ.600க்கும் குறைவாக விலைப்புள்ளி கொடுத்த கேட் இன் பயோ டெக் நிருவனத்தை காரணமின்றி நிராகரித்ததேன்?
  • கிட்டின் தரம் பற்றி மாநிலங்கள் புகார் கூறியும் அது குறித்து அய்.எம்.சி.ஆர் கருத்து தெரிவிக்காதது ஏன்?
  • தகுதியான மருத்துவ நுட்புநர்கள்தான் விரைவு சோதனை கிட்டை கையாண்டார்களா என சீனா எழுப்பும் கேள்விக்கு என்ன பதில்?
  • தனது கிட்டின் தரத்திலும், செயல்பாட்டிலும் எந்தக் குறையுமில்லை; இந்தியாவில் கையாண்ட விதம், சரியாகப் பாதுகாக்காதது ஆகிய காரணமாக இருக்கலாம். எந்த விசாரணைக்கும் தயார் என்ற வெண்ட்போ நிறுவனத்தின் அறிக்கை, அதை உறுதிப்படுத்தும் சீனத்தூதரின் கருத்து இவை குறித்து அய்.எம்.சி.ஆர் மத்திய சுகாதாரத்துறை ஏன் கருத்து கூறவில்லை? மீண்டும் புதிய கொள்முதலை சீனாவிடமே மேற்கொள்வதேன்?
  • விரைவு சோதனை கிட் தயாரிப்பு ராக்கெட் விஞ்ஞானமல்ல. உள்நாட்டில் தயாரிக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை?
  • ரேர் மெட்டபாலிக் பெரிதும் அறியப்பட்ட நிறுவனமல்ல. அதன் உரிமையாளர் கிருபா சங்கர் குப்தா, மேட்ரிக்ஸ் லேப் நிறுவனம் ஆகியோரின் அரசியல் தொடர்பு என்ன?

மேற்கண்டவற்றை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரக்கூடும். தடுப்பில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு உணவு கூட கொடுப்பதிலும் படுதோல்வி அடைந்து நிற்கின்றன மத்திய மாநில அரசுகள். நிராதரவாக நிற்கும் மக்களை மேலும் மேலும் வீட்டுக்குள் முடக்கி பட்டினியில் தள்ளிக் கொல்கின்றன மத்திய மாநில அரசுகள். மேக் இன் இந்தியா (உள்நாட்டில் தயாரிப்போம்) என்று சவடால் வசனம் பேசிய மோடி அரசு சாதாரண மருத்துவ சாதனங்களைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியவுடன் தடையை நீக்கி மருந்தை அனுப்பிய மோடி அரசு உள்நாட்டு மக்களையும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களையும் கொரோனாவிலிருந்து காக்க எந்த வேகமும் காட்டாமல் தற்புகழ்ச்சியிலும், சுய திருப்தியிலும் காலம் கடத்துகிறது.

நடைபெற்றிருப்பது வெறும் ஊழல் மட்டுமல்ல; மக்கள் உயிரோடு விளையாடும் குற்றமுறு அலட்சியம். விரைவு சோதனை கிட்டை மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டு பத்து நாட்களுக்குப்பிறகே கிட்டை பயன்படுத்தும் வழிமுறைகளை ஐ சி எம் ஆர் அனுப்பியுள்ளது.

மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் மருத்துவம் என அனைத்தையும் வழங்கவேண்டிய அரசே இன்று மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிப்போயிருப்பதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

மருத்துவத்துறை மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே
தோற்றுப்போய் திவாலாகிப் போயிருக்கிறது. கொரோனாவின் தாக்குதல் ஒரு கட்டத்தில் நிச்சயம் நிற்கும். ஆனால் இந்த அரசின் தாக்குதல் நிற்கப்போவதில்லை. நமக்குப் போராடுவதைத்தவிர வேறு வழியேயில்லை.

தங்கள்

தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழகம் மற்றும் புதுவை

மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

மே நாளில் சூளுரைப்போம்!
மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானாபொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே!

 அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

கொரானா வைரஸ் தாக்குதலால் இன்று உலகமே உறைந்து கிடக்கிறது. 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வைரஸ் தொற்றியுள்ளது. இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. பொருளாதர நெருக்கடி கொள்ளைநோய் கொரானாவைவிட பல மடங்கு அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

நாட்டின் மருத்துவத்துறையில் சுமார் 80% தனியார்மயம். அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. விரிவான பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான மையங்கள் இல்லை. மருத்துவப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், வசதிகள் இல்லை.

ஊரடங்கில் உள்ள மகக்ளுக்கு உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இந்திய உணவுக்கிடங்கில் 8 கோடி டன் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிந்த போதும், மத்திய மாநில அரசுகளோ 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு, 1000 ரூபாய் நிவாரணம் என உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகின்றன. பெருவாரியான உழைக்கும் மக்கள் நோய் அச்சத்தாலும், உணவின்றியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.

கொரானாவை கட்டுப்படுத்துவதை விட ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் உரிமையை மறுப்பதிலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதிலும்தான் தீவிரம் காட்டி வருகிறது மோடி அரசு. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணி நேரமாகவும், 44 தொழிலாளர்நல சட்டங்களை வெட்டிச்சுருக்கி நான்கு தொகுப்புகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேலையின்மையும், ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 70 சதவீத (95 கோடி) மக்களின் சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாக ஒரு சதவீத பணக்காரர்களிடம் சொத்து குவிந்துள்ளது என்கிறது சமீபத்தில் வெளிவந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. வேலையற்றவர்கள், வாங்கும் சக்தியற்றவர்கள்  ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் அம்பானி – அதானிகளின் எண்ணம். இப்போது கொள்ளை நோய் கொரானாவும் இவர்களுக்கு துணை சேர்ந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி – பட்டினிச்சாவையும் கொரானா கணக்கில் எழுதி விடுவார்கள். தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக் கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம் நாடு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டங்கண்டு போயுள்ளன. அமெரிக்காவில் கொரானா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் மரணங்களை கண்டு அந்நாட்டு அரசுகளெல்லாம் அலறுகின்றன. “எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்’’ என்று இத்தாலி பிரதமர் வெளிப்படையாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேட்டி அளிக்கிறார். காரணம், இத்தாலியில் மருத்துவத்துறையில் 85 சதவீதம் தனியார் கையில் உள்ளது. அங்கு மட்டுமல்ல, பிரிட்டன்,  ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இதுதான் நிலை.

அரசாங்கம் எல்லா விசயங்களிலும் தலையிடக்கூடாது; சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியை பளிச்சென்று காட்டியுள்ளது கொரானா. பொதுசுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, பொது விநியோகம் போன்றவைகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது அரசுகளின் வேலை இல்லை. அதை தனியார்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் முதலாளித்துவ நாடுகளில் மக்கள் சேவைகள் அனைத்தும் தனியார் கையில் உள்ளது. இதனால் தான் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாமல் முதலாளித்துவ அரசுகள் தோல்வியடைந்துள்ளன.

கொரானா வைரஸ் தாக்குதல் குறித்து உலக சுகாதார நிறுவனமும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த போதும் பல முதலாளித்துவ நாடுகள் அதை அலட்சியம் செய்தன. ஊரடங்கை அறிவித்த பின்பும் பொருளாதார நெருக்கடியைக் காட்டி பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான கடைகள், பல தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்தன. இதன் விளைவாக வைரஸ் தொற்று வேகம் அதிகரித்தது.

ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ கட்டமைப்பு அந்நாட்டு அரசுகளிடம் இல்லை. வெண்டிடேட்டர், மாஸ்க், பாதுகாப்பு உடைகள் போன்ற அடிப்படையான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் சாகிறார்கள். அவர்களை புதைக்கக்கூட இடுகாட்டில் இடமில்லை. இத்தாலியின் வீதிகள் எங்கும் பிணங்கள்,  யாரும் எடுத்து அடக்கம் செய்யவும் முன் வருவதில்லை.

படிக்க:
மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !
♦ “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

முதலாளித்துவ நாடுகளில் மருத்துவச் செலவு அதிகம் என்பதால் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு மருத்துவம் பார்ப்பதில்லை. குறிப்பாக, 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம் என இத்தாலியும், பிரான்சும் கைவிடுகின்றன. அமெரிக்காவில் ஏழை கருப்பின மக்கள் தான் அதிகம் சாகிறார்கள் என்பதில் இருந்தே ஏழைகளில் நிலையை புரிந்து கொள்ளலாம்.

உலக  முதலாளித்துவ கட்டமைப்பில் எந்த ஒரு தயாரிப்புகளும் கண்டுபிடிப்புகளும் சந்தையின் தேவையைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கை நமது அனைத்து தேவைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோய் தடுப்பு மருந்து தயாரிப்பதை விட அதிக லாபம் கொண்ட அழகு சாதன பொருட்களை தயாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. பெரிய வல்லரசு என பீற்றிக் கொண்ட நாடுகளுக்கு சொந்த நாட்டு மக்களை தொற்றுநோயில் இருந்து காக்க வழியுமில்லை; சோறு போடவும் வக்கில்லை. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி அழுகி நாறிக்கொண்டுள்ளதை கொரானா வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

உலகளவில் சீனா போன்ற முன்னாள் சோசலிச நாடும் மற்றும் கியூபா போன்ற மக்கள் நல அரசுகளும் மட்டுமே கொரானாவை கட்டுப்படுத்துவதில் முன்நிற்கின்றன. இதற்கு காரணம் அந்நாட்டு புரட்சிகளின் போது ஏற்படுத்தப்பட்டிருந்த சோசலிச கட்டமைப்பு. உலகையே  ஆண்ட பிரிட்டன் தனது நாட்டு மக்கள் 600 பேரை காக்கும்படி கியூபாவிடம் கைகூப்பி  உதவி கோரியது. கியூபாவும், தென்கொரியாவும் மருத்துவர்களை பிறநாட்டு மக்களைக் காப்பற்ற அனுப்பிக் கொண்டுள்ளன. கொரானா நோயை கண்டறிந்தவுடன் 10 நாட்களில் 1200 படுக்கை வசதி கொண்ட இரண்டு மருத்துவமனையை கட்டி முடித்து கொரானாவைக் கட்டுப்படுத்தியது சீனா.

இன்னொரு பக்கம், தனிவுடைமை எனும் முதலாளித்துவக் கொள்கையை சொர்க்கம் என பீற்றி வந்த  ஸ்பெயினும், அயர்லாந்தும் இப்போது தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளன. 1990 களின் தொடக்கத்தில் புதிய தாராளவாத உலகத்தை முன்னறிவித்த மார்க்கரெட் தாட்சரின் பிரிட்டனில் தனிமையில் வாடும் 15 லட்சம் முதியவர்களைப் பராமரிக்க 5 லட்சம் இளைஞர்கள் தன்னார்வலர்களாக முன் வந்திருக்கிறார்கள். தேசிய மருத்துவ சேவையில் தொண்டர்களாகப் பணியாற்ற 7.5 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு 4300 வட்டார உதவிக்குழுக்களை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தோல்விக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

தொற்றுநோய் அபாயங்களில் இருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மனிதகுலத்தைக் காக்க முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பதை சமூகத்தின் தேவைக்கானதான மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தோற்றுப்போன முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிசத்தை படைக்க வேண்டும். நம் நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை  நடத்தி முடிக்க மே நாளில் சூளுரைப்போம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு.

வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !

ங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார். அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.

அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.

ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.

படிக்க:
♦ எஸ்.வீ சேகரின் அதிரடி ஆக்சன் – பால் திரிந்த வேளையிலே !
♦ மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !

கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவர்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.

காங்கிரஸ் கண்டனம்

ஆர்பிஐ அளித்துள்ள பதில் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாஜக-வின் நண்பர்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்ற வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் !

வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் ! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

இந்திய அரசே!

கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க…

1) உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!

2) நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!

3) ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!

4) தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!

5) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்ற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்றது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், நமது ஆதரவாளர்களும், நண்பர்களும் பங்கேற்ற புகைப்படங்கள்!

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வீட்டிலிருந்து குரலெழுப்புவோம். திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்த நிகழ்வு புகைப்படங்கள்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !

மனித குலத்தை அச்சுறுத்தும் கொரானா – பொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே!

மே-1, சர்வதேச தொழிலாளர் தினத்தில்…

மாலை – 5 மணி முதல் 5.10 வரை
வீட்டிருந்தே உரிமைக் குரலெழுப்புவோம்!

மாலை 5.30 மணிக்கு
இணையவழி பொதுக்கூட்டம்

பு.மா.இ.மு முகநூல் பக்கம் நேரலையில்….

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிகழ்ச்சி நிரல்:

தலைமை:

தோழர் அ.முகுந்தன்,
மாநிலத்தலைவர், பு.ஜ.தொ.மு

உரையாற்றுவோர்:

தோழர் கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.

தோழர் கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு.

சிறப்புரை:

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.

தோழர் பா.விஜயகுமார்,
மாநிலப் பொருளாளர்,
பு.ஜ.தொ.மு.

ம.க.இ.க கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி.

அனைவரும் பாருங்கள்
மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.
9444442374

எஸ்.வீ சேகரின் அதிரடி ஆக்சன் – பால் திரிந்த வேளையிலே !

தேதி: 27, மாதம்: ஏப்ரல், ஆண்டு: 2020, நாள்: திங்கள்கிழமை.

மொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நோய்த் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் தனிமையில் இருக்க வேண்டும் என உலக நாடுகள் அறிவித்திருந்தன. இதை உறுதிப் படுத்த பல்வேறு நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலை ஒருமாதத்தை எட்டியிருந்தது. மே மூன்றாம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த முடக்கநிலை மேலும் கூட்டப்படும் சூழல் இருப்பதாக பேச்சு பரவி வந்தது.

அன்றாடங்காய்ச்சித் தொழிலாளர்கள் வேலையும் கூலியுமின்றி தவித்துப் போயிருந்தனர்; சிறு குறு தொழில் செய்பவர்களோ முடக்க நிலைக்குப் பிந்தைய நிலைமையை நினைத்து திகைத்துப் போயிருந்தனர்; மாதச் சம்பளக்காரர்களோ இனிமேல் வேலை நிலைக்குமா, சம்பளம் கிடைக்குமா, கடனுக்கு வட்டி கட்டுவதெப்படி என்கிற நிச்சயமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டு மலைத்துப் போயிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் கொரோனா உண்டாக்கிய பேரிடரை சென்னையில் நடந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.

சம்பவ தினமாம் 27-ம் தேதி அன்று சென்னையைச் சேர்ந்த மொக்கை ஜோக் நடிகர் எஸ்.வீ சேகர் 13 பாக்கெட் ஆவின் பால் வாங்கியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு 13 பாக்கெட் பாலா?? என்று வாயைப் பிளக்க வேண்டாம். அன்னாரின் வீட்டில் வயதான பிள்ளைகளும், இனிமேல் வயதாகப் போகும் பிள்ளைகளும் உள்ளனர் என்பதை அவரே கூறியுள்ளார். மேலும் ‘அரிய வகை ஏழைகள்’ என்பதால் இந்த 13 பாக்கெட் பாலே கூட குறைவு தான்.

இந்நிலையில் வாங்கிய பால் பக்கெட்டுகளை வெட்டி குக்கரில் இட்டு காய்ச்சும் பணியைத் துவங்கிய போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நீங்கள் செய்திகளில் படித்தது உண்மை தான். அதில் 9 பாக்கெட்டுகள் திரிந்து போனது. இந்த துயர சம்பவத்தைக் கண்டு கதிகலங்கிப் போன எஸ்.வீ சேகர் அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார். நடந்த பேரிடர் குறித்த தகவலை முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் முகவரிக்கும், துணைமுதல்வரின் ட்விட்டர் முகவரிக்கும் புகாராக தெரிவித்தார்.

எஸ்.வீ சேகரின் புகாரையடுத்து மொத்த அரசு நிர்வாகமும் பரபரப்புடன் செயல்பட்டது. ஆவின் நிர்வாகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கெட்டுப் போன 9 பாக்கெட்டுகளுக்கு பதிலாக வேறு 9 பாக்கெட் டபுள் டோன் பாலை சேகரின் வீடு தேடி வந்து கொடுத்துள்ளார்.

இத்தனையும் மூன்றே மணி நேரத்துக்குள் நடந்துள்ளதால் சேகரின் வீட்டில் வாழும் அரிய வகை ஏழைகள் பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையில் மாற்றாக கொடுக்கப்பட்டது “டபுள் டோன் பால்” என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி உண்மையில் பல்லாண்டுகள் அரசு பணியில் ஈடுபட்டு பட்டை தீட்டப்பட்டவர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. எனவே தான் அரிய வகை ஏழைகளை டீல் செய்யும் கலையை நன்கு கற்று கடைத்தேறியுள்ளார்.

படிக்க:
♦ தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !
♦ எஸ்.வி.சேகர் – எச். ராஜாவை என்ன செய்ய ? கருத்துப் படம்

***

இதற்காகவே காத்திருந்த திமுகவைச் சேர்ந்த உடன் பிறப்புகள் அம்மாவின் வழியில் ஆட்சி செய்து வரும் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் மாண்புமிகு முதல்வரை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் “பால்பாக்கெட் பழனிச்சாமி” உள்ளிட்ட ஹேஷ்டேக் போட்டு கேலி செய்யத் துவங்கினர். இன்னும் சிலர் மீம்கள் மூலம் ஒரண்டை இழுத்தனர். (மாதிரிக்கு ஒன்று மட்டும்)

கொரோனா பேரிடர் காலத்தில் செய்வதற்கு உருப்படியான ஆயிரம் வேலைகள் இருக்க, போயும் போயும் ஒரு கொழுப்பெடுத்த பாப்பான் வீட்டுக்கு பால் சப்ளை செய்வது தான் முக்கியமா என்பது திமுகவினரின் கிண்டல்களின் சாரம். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மருத்துவர்கள் தவித்து வரும் நிலையில், சோதனைக் கருவிகளையே சோதனை செய்யும் ஒரே கரகாட்ட கோஷ்டியாக தமிழ்நாடு இருக்கும் நிலையில், பொருளாதார மீட்சிக்கான வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் நிலையில் – ஒரு மாநில முதல்வர் திரிந்த பால் விவகாரத்தில் எல்லாம் தலையிட வேண்டுமா? என்பது உடன் பிறப்புகளின் ஆத்திரத்துக்கு காரணம்.

ஒரு முதல்வரை இவ்வாறு விமர்சிக்கலாம் தான், ஆனால், மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இக்கட்டான நிலைமையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பால் திரிந்தது யாரோ வீட்டில் இல்லை – எஸ்.வீ சேகரின் வீட்டில். அவர் ஒரு அரிய வகை ஏழை. சாதாரண அரிய வகை ஏழை என்றால் இந்து பத்திரிகைக்கு “லெட்டர் டூ எடிட்டர்” பகுதிக்கு எழுதுவதோடு அடங்கி விடுவார். ஸ்பெசல் சாதா என்றால் மொட்டை பெட்டிசன். ஆனால் இவர் ஸ்பெசல் ஸ்பெசல் அரிய வகை ஏழை – நடவடிக்கை இல்லையென்றால், பெட்டிசன் நாக்பூருக்கும் டெல்லிக்கும் போகும்.

நாம் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமியின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டும். மனசாட்சியின்றி விமர்சிக்க கூடாது.

நாம் புரிந்து கொள்ள வேண்டியது பார்ப்பனியம் எப்படி எளிய மக்களை பார்க்கிறது, பழிவாங்குகிறது என்பதைத் தான்.

சாதாரணமாக நம் வீடுகளில் பால் திரிந்து போனால் திரிந்த பாலை வீணாக்காமல் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம், ஒரு படி மேல் போனால் நம் அம்மாக்கள் காலையில் யார் மூஞ்சியில் விழித்தோம் என்று யோசிப்பார்கள், கொஞ்சம் விவரமானவர்கள் என்றால் பால் பாத்திரத்தை நாளையில் இருந்து ஒழுங்காக கழுவ வேண்டும் என்று சிந்திப்பார்கள்; அதிகபட்சம் போனால் மறுநாள் பால் பூத் அண்ணாவிடம் ‘நேத்து பால் திரிஞ்சிடிச்சிண்ணே’ என்று ஏக்கமாக சொல்லி விட்டு இனாமாக ஒரு ரூபாய்க்கு மிட்டாயோ கடலை உருண்டையோ கிடைக்குமா என்று பார்ப்போம்.

நம்மில் வெகுசிலருக்குத் தான் கஸ்டமர் கேருக்கு புகார் தெரிவிக்க முடியும் என்பதே தெரிந்திருக்கும். ஆனால், எஸ்.வீ சேகர் நேரடியாக முதல்வர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கிறார். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாநிலத்தின் முதல்வர்; ஒன்பது கோடி மக்களுக்கு முதல்வர். ஒரு முதல்வருக்கு தினசரி எத்தனை வேலைகள், அக்கப்போர்கள், பஞ்சாயத்துகள் இருக்கும் என்று நாம் யோசிப்போம். இது போன்ற சில்லரை விசயங்களை ஒரு முதல்வர் அலுவலகத்திற்கு எடுத்துப் போக கூச்சப்படுவோம்.

ஆனால், அரியவகை ஏழைகள் கூச்சப்பட மாட்டார்கள். உலகமே அழிந்தாலும் கூட காலையில் பேப்பர் பையன் இந்து பேப்பரை வீசி விட்டுப் போனது குறித்து தான் அரிய வகை ஏழைகளின் மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். பேப்பர் பையனின் அடாவடித்தனத்தை அவனது முதலாளிக்கு போட்டுக் கொடுத்து அவன் வேலையை காலி செய்தால் தான் மனம் ஆறும்.

அலுவலகங்களில் அரிய வகை ஏழைகள் சூழ வேலை பார்ப்போருக்குத் தெரியும் – மொட்டை பெட்டிசனின் வலிமை குறித்து. இந்த ஜந்துக்களிடம் எதற்கு வீண் வம்பு என சகித்துக் கொண்டு ஒதுங்கிப் போவோர் தான் அதிகம். சில்லரை விசயங்களில் தனது “கெத்தை” காட்டி மகிழும் குரூர புத்தி அரியவகை ஏழைகளுக்கு உண்டு. ஊரே சுடுகாடானால் என்ன, என் தட்டில் காசு விழ வேண்டும் என்கிற சின்ன புத்தியும் அரியவகை ஏழைகளுக்கே உரியது.

இதைத் தான் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

– தமிழண்ணல்

அயோக்கியர் அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் !

0

“பிரபல ‘ஊடகவியலாளர்’ அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டார்” என்ற ‘அதிர்ச்சிகரமான’ சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக் கிழமை (23-04-2020) அன்றே இது குறித்து அறிக்கை தருமாறு மராட்டிய அரசின் தலைமைச் செயலரையும் மும்பை போலீசு கமிசனரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22, 2020 அன்று இரவில், அர்னாப் கோஸ்வாமி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தாம் தனது மனைவியோடு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்புகையில் இரண்டு காங்கிரஸ் குண்டர்கள் தமது காரை வழிமறித்து மை பாட்டிலைக் கொண்டு தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாகவும், தமது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்ததாகவும் தெரிவித்தார்.

அண்டப்புளுகன் அர்னாப்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீசு விசாரித்து வருகிறது. இந்நிலையில்தான் தாக்குதல் நடந்த அடுத்த நாளே இந்திய பிரஸ் கவுன்சில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் தங்களது கருத்தைத் தெரிவிக்க உரிமை உள்ளது. அது பலருக்கும் ஏற்புடையதாக இல்லாத போதும், அத்தகைய ஒரு குரலை நெறிக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. இந்தத் தாக்குதலை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாநில அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்தும் என்று கவுன்சில் எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்திய பிரஸ் கவுன்சிலைப் பொருத்தவரை பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-ன் படி, அதன் அதிகாரம் செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதுமட்டுமே செல்லத்தக்கது ஆகும். எனில் ஒரு தொலைக்காட்சி ஊடகத்தின் உரிமையாளர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரஸ் கவுன்சில் அக்கறை செலுத்துவதன் காரணம் என்ன?

கருத்துரிமைக்கு ஒரு ஆபத்து என்றால் பிரஸ் கவுன்சில் களமிறங்குவது நியாயம் தானே? கடந்த சில ஆண்டுகளாகவே பல பத்திரிகையாளர்கள், அரசாலும், பிற நபர்களாலும் குறிவைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட போதெல்லாம் பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை. அப்படியே வாயைத் திறந்தாலும், பத்திரிகையாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர் மட்டும்தான் வாயைத் திறந்திருக்கிறது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினையில் தப்லிகி ஜமாத் கூட்டத்தைக் காரணம் காட்டி மதவெறுப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படுவதற்கு ஊடகங்கள் துணைபோவதை தடுத்து நிறுத்தக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் பதிலளித்த உச்சநீதிமன்றம், ஊடகங்களைத் தங்களால் கட்டிப்போட முடியாது என்றும், இது தொடர்பாக பிரஸ் கவுன்சிலையும் இவ்வழக்கிற்குட்படுத்துமாறும், அதன் பின்னர், இவ்வழக்கை விசாரிப்பதாகவும் மனுதாரர்களிடம் தெரிவித்தது.

படிக்க:
♦ தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !
♦ விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !

இதற்கு மறுநாளே இந்திய பிரஸ் கவுன்சில், “மின் ஊடகங்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை இந்திய பிரஸ் கவுன்சிலின் அதிகார வரம்புக்குள் வராதவை…” என்று விளக்கமளித்து அந்த வழக்கிலிருந்து நழுவிக் கொண்டது. ஆனால் இப்போது அர்னாப் கோஸ்வாமி பிரச்சினைக்கு மட்டும் தானாக முன் வந்து அறிக்கை விடுகிறது. இது இந்திய பிரஸ் கவுன்சிலின் சார்புநிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது.

இந்திய பிரஸ் கவுன்சில் இவ்வாறு நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. பத்திரிகை நடத்தையின் விதிமுறைகளை மீறி பல்வேறு அச்சு ஊடகங்கள் தவறிழைக்கும் போது அது குறித்து வாயைத் திறக்காத பிசிஐ, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழான தி டெலிகிராப் நாளிதழிற்கு சமீபத்தில் ஒரு கண்டன நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

“இதைச் செய்தது கோவிட் அல்ல கோவிந்த்” (Kovind, not Covid, did it) – என்ற தலைப்பில் முதல் பக்க தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது, “தி டெலிகிராப்” நாளிதழ். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கிய செய்தியை விமர்சனப்பூர்வமாக அவ்வாறு தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத இந்திய பிரஸ் கவுன்சில், பத்திரிகை நடத்தை விதிமுறையை மீறியதாகக் கூறி அப்பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் தப்லிகி ஜமாத் விவகாரத்தில் பொய்ச் செய்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பி, பத்திரிகை நடத்தை விதிமுறைகளை மீறிய பிற பத்திரிகைகளை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டுகொள்ளவுமில்லை, அவ்விவகாரத்தில் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தவும் இல்லை.

இந்தியில் பெருமளவில் விநியோகிக்கப்படும் பத்திரிகையான “அமர் உஜாலா”வில், “சஹரன்பூரில் உள்ள தனிப்படுத்துதல் முகாமில் இருக்கும் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள், அசைவ உணவுகள் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்கள்; திறந்தவெளியில் மலம் கழித்தார்கள்” என்ற பொய்ச் செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியை அப்பகுதி போலீசே மறுத்தது. அதே போல, “டைனிக் ஜாக்ரன்” என்ற பத்திரிகையின் மீரட் பதிப்பில் மதவெறுப்பைத் தூண்டும் விதமான விளம்பரம் வந்திருந்தது. அப்போதெல்லாம் இந்திய பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை.

பத்திரிகைகளைக் கண்டிப்பதற்கும் எச்சரிப்பதற்கும் இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு பத்திரிகை கவுன்சில் சட்டம் – 1978, முழு அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஆனாலும் வாய் திறக்கவில்லை.

சமீபத்தில், இதே பிரஸ் கவுன்சிலின் வரம்புக்குக் கீழ் வரும் “தி இந்து” பத்திரிகையின் பத்திரிகையாளர் உட்பட மூன்று பத்திரிகையாளர்கள் மீது காஷ்மீரில் ஊபா சட்டம் பாய்ந்த போதுகூட இந்திய பிரஸ் கவுன்சில் கருத்துச் சுதந்திரம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

இதற்கு முன்னர், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தொலைதொடர்புக் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களை அனைத்து பகுதிக்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் செயல் ஆசிரியர் அனுராதா பாஷின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த சமயத்தில் இந்த வழக்கில் தாமாக முன்வந்து தனது கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது இந்திய பிரஸ் கவுன்சில். நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பிசிஐ சமர்ப்பித்த மனுவில், “காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தொலைதொடர்புக் கட்டுபாடுகள் இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான்; எனவே கட்டுபாடுகள் தொடரலாம்” என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

நடந்திருக்கும் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரு விசயத்தை மட்டும் உறுதிப்படுத்துகின்றன. கருத்துச் சுதந்திரத்தைவிட தனது எஜமானர்களின் மனத் திருப்திதான் முக்கியம் என்ற வகையில்தான் ஆளும் காவி பாசிச கும்பலுக்குச் சேவை செய்து வருகிறது இந்திய பிரஸ் கவுன்சில்.

நந்தன்
செய்தி ஆதாரம், நன்றி :  த வயர். 

தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !

PP Letter head
வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் ! – 26.04.2020 ஞாயிறு மாலை 5 மணி

கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.

1) உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!

2) நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!

3) ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!

4) தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!

5) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வினை தமிழகம் முழுவதும் நடைபெற மக்கள் அதிகாரம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, தமிழ்த் தேச மக்கள் முன்னணி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம், மா.லெ மக்கள் விடுதலை, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி

தமிழர் விடுதலைக் கழகம், மக்கள் சட்ட உரிமை இயக்கம், மக்களரசுக் கட்சி அம்பேத்கர் சிறுத்தைகள் கட்சி, தமிழ் சிறுத்தைகள், வெல்ஃபேர் கட்சி ஆகிய அமைப்புக்கள் அழைப்பு விடுத்தன. அதன் படி தமிழகம் முழுவதும் திரளானவர்கள் இந்த கவன ஈர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூரில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் புதுவையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ் நாடு – புதுவை

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?

னந்த் டெல்டும்டேவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் “அவர் மீதான வழக்குக்கு போதுமான அடிப்படை (Prima facie) இருக்கிறது” என்று தள்ளுபடி செய்துள்ளது.

ஜாமீன் என்பது ஒருவர் மீதான வழக்குக்கு போதுமான அடிப்படை ஆதாரங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. குற்றம் நிரூபிக்கப் படாதவரை அவர் நிரபராதி என்பதே இந்திய சட்டம். எனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் வழக்கு நடத்த ஒத்துழைப்பாரா, ஓடிவிடுவாரா, சாட்சிகளை மிரட்டிக் கலைப்பாரா என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்தே ஜாமீன் வழங்குவதும் வழங்க மறுப்பதும் நடக்கிறது.

Prima facie என்பதற்கு based on the first impression; accepted as correct until proved otherwise என்பதுதான் பொருள். முதல் பார்வையின் அடிப்படையில் வரும் கருத்து, இல்லையென்று நீருபிக்கப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த கருத்து என்பதுதான் Prima facie. அது இறுதியானதும், முற்று முடிவானதும் அல்ல.

வழக்கு விசாரணையின் போது சாட்சிகள், நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனது தரப்பு ஆவணங்களையும், சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பளித்த பின்பே குற்றம் நிரூபிக்கப்படும் அல்லது இல்லை என்பது இறுதியாக முடிவு செய்யப்படும்.

அதுவரை குற்றம் சாட்டப்பட்டவரை வெளியில் இருக்க அனுமதிப்பதே ஜாமீன்.

வழக்கு தொடுக்கப்பட்டு விசரணை நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகளாவது ஆகிறது. அதுவரை ஒருவருக்கு ஜாமீன் வழங்கப் படாமல் சிறையில் இருந்து விட்டு பின்பு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டால் என்னவாவது?

எனவே டெல்டும்டே சாட்சிகளைக் கலைக்கும் பலம் உள்ளவரா, தலைமறைவாகிவிடுவாரா, என்றுதான் பார்க்க வேண்டும்.

இதில் பிரதான சாட்சியம் பிரதமரைக் கொல்ல வேண்டும் என்று அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல். எனவே டிஜிடல் சாட்சியம்தான். அது போலீஸ் வசம் இருக்கிறது. எனவே சாட்சிகளைக் கலைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த ஓராண்டாக இந்த வழக்கு இருக்கிறது. அவர் நாட்டை விட்டு ஓடவும் இல்லை. பிறகு என்ன?

இதெல்லாம் சட்டத்துறையோடு தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்ததுதான். Unlawful Activities Prevention Act (UAPA) படி ஒருவர் மீது குற்றம் சுமத்த அடிப்படை முகாந்திரம் இருந்தால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. ஆனால் ஜாமீன் அளிக்கவும், வேறு கோணத்தில் பரிசீலிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

படிக்க:
♦ “வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்
♦ உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

இறுதியாக இரண்டு தகவல்கள்.

  • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த சிலர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனு பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டது.
  • ஆனந்த் டெல்டும்டே வழக்கின் தாய் வழக்கான பீமா கொரேகான் வழக்கில் மராத்தா உயர்சாதியினருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வந்த ஒரு 18 வயது இளம் பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் இரா. முருகவேள் 

“வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்

“வீட்டில் முடங்கச் சொல்லும் அரசே வயிற்றுக்கு சோறு போடு ! செலவுக்கு காசு கொடு !” என்ற முழக்கத்தை முன்வைத்து வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் ! என்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் கடந்த 26.04.2020, ஞாயிற்று கிழமை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளிலும், சமூக இடைவெளியுடன் தெருக்களிலும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இப்போராட்டத்தில், மே 17, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்களும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு… பாருங்கள்… பகிருங்கள்…

***

கொரானாவால் சாவா! பட்டினியால் சாவா!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுர் வட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக கொரோனா நிதியாக மாதம் குடும்பத்திற்கு 6000 ரூபாய் வழங்க கோரியும், மக்களுடைய பட்டினியை போக்க இந்திய உணவு கழகத்தில் தேங்கி இருக்கும் உணவு பொருட்களை இந்தியா முழுவதும் இருக்க கூடிய ஏழை குடும்பங்களை தேர்வுசெய்து உணவு பொருட்களை உடனடியாக பகிர்ந்து கொடுக்க கோரியும் கவன ஈர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

மேலும் கொராரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை பாதுகாக்கின்ற பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மேலும் சமூக ஆதரவாளர்களுக்கு போதிய பாதுகாப்பும் நிதியும் ஒதுக்க கோரி, காரப்பட்டு – பொய்கை அரசூர் ஆகிய பகுதிகளில் கோரிக்கையை பதாகைகளில் பதிவு செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்சியில் மக்கள் அதிகாரம் தலைமையில் தி.மு.க , வி.சி.க , CPM , போன்ற பல்வேறு கட்சிகளின் முன்னணியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் கிராம பொதுமக்கள், பெண்கள் குழந்தைகள் உள்பட சாலையின் இருபுறமும் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்ற வகையில் இரண்டு மீட்டருக்கு ஒரு கட்டம் என்ற வகையில் நின்று காரப்பட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோரும் , பொய்கை அரசூர் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்டோரும் கலந்துகொண்டு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த நிகழ்சி சுமார் 20 நிமிடம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

படிக்க:
♦ கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
♦ கொரோனா ஊரடங்கு : உதவிப்பணிகள் மேற்கொள்ளும் மதுரை மக்கள் அதிகாரம் !

***

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி  மே 17 இயக்கத் தோழர்கள் கையில் பதாகைகளுடன் பல்வேறு இடங்களில் கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களும் பல இடங்களில் மத்திய மாநில அரசுகளுக்கான கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கையில் பதாகைகளுடன் !

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

க்கள் அதிகாரம் மற்றும் இதர அமைப்புகள் நடத்திய இந்த கவன ஈர்ப்பு நிகழ்வு போராட்டம் குறித்து செய்தித் தாள்களில் வெளியான செய்திகள் !

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.