Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 257

டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !

சி பட்டினியோடு குடிமக்கள் துயரப்படுகிறார்கள் என்று ரேஷன் கடைகளில் அரிசி கூடுதலாக வழங்க உத்தரவிடவில்லை, மாறாக குடிமகன்கள் துயரப்படுகிறார்கள் என்று டாஸ்மாக் கடையைத் திறக்க மத்திய அரசுடன் அனுமதி வாங்கி உத்தரவிடுகிறார் ‘தாயுள்ளம் கொண்ட ஆட்சி’யின் தனயன் எடப்பாடி அவர்கள்.

மே 7 ந் தேதி சென்னை மாநகராட்சி தவிர தமிழகம் முழுமைக்கும் டாஸ்மாக் கடைகள் நெஞ்சில் ஈரமின்றி திறக்கப்பட்டன. ‘கொரோனா வீரர்களின்’ துணையோடு “கடமை, கண்ணியம், கட்டுபாடு” குறையாமல் 40 நாட்களுக்கு மேலாக இவர்களின் அனுமதியில்லாமல் எந்த வீட்டு வாசலிலும் கூட்டிப் பெருக்கி வாசலில் தண்ணிர் தெளிக்க முடியாத அளவுக்கு அதிகாரமும் தடிக்கம்பும் கொஞ்சம் நீண்டதாகவே இருந்ததை அனைவரும் பார்த்தோம்.!சரிதானே???

சேர் போட்டு, குடைப்பிடித்து, ஆறு அடி இடைவெளியை உறுதிசெய்தல் தொடங்கி கிட்டிவாசல் (டாஸ்மாக் வாசலில் கம்பு கட்டி கடையை சீரோடு நடத்துவதற்கு) கட்டி குடிமக்களின் ஜனநாயகப் பூர்வமான வரிசையை ஒழுங்கு படுத்துதல் வரை கூடுதல் அதிகாரமாக (ஸ்பெஷல்பவர்) வழங்கும் அதிகாரமும் கொரோனா வீரர்களுக்கு அரசு கண்ணியத்துடன் வழங்கியது. அவர்களும் கடுகளவுகூட கெளரவம் குறையாமல் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இவர்களின் மொய்க் கணக்கு பொய்க்கணக்காக போகும் விதமாக தாய்மார்கள் தயாராகினார்கள். தமிழகமே தயாரானது. தாய்மார்கள் தலைமையில் ஆங்காங்கே போராட்டம் தன்னெழுச்சியாக விழாக்கோலம் பூண்டது. அதில் மதுரை செல்லூர் பகுதி மக்களின் போராட்டம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.

மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி சற்றும் பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்றே சொல்லலாம். 2019 பிக்பாஸ் தேர்தலும் (பாராளுமன்றத் தேர்தல்) அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ஒரேநாளில் வந்தது. பதறிப்போன சில தேர்தல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலைத் தள்ளிவையுங்கள் யாரும் வாக்களிக்க வரமுடியாத போக்குவத்து சிரமும் வரும். இதையெல்லாம் தாண்டி மக்கள் வாக்களிக்க வர ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்று முறையிட்டார்கள். ஆனாலும் இரண்டும் ஒரே நாளில் நடந்தது. மக்கள் அனைவரும் ஆத்துக்குப் போனார்களே தவிர பூத்துக்குப் போகவில்லை. வாக்கு சதவீகிதம் சற்றுக் குறையத்தான் செய்தது. தேர்தல் நம்பிக்கையை விட திருவிழா நம்பிக்கை ஓரளவுக்கு வென்றது எனச் சொல்லலாம்.

சரி சங்கதிக்கு வருவோம். இப்போதும் கொரோனாவை அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்த தடிக்கம்பில் அதிகாரம் தரிக்க முச்சந்தியில் நின்றார்கள் கொரோனா வீரர்கள். கையில் கிடைக்கும் முள்ளுக்கம்பையெல்லாம் உடைத்து வைத்துக்கொண்டு பால், தண்ணி, பலசரக்கு வாங்கப் போனவர்கள் எல்லாரிடமும் அதிகாரம் செலுத்தி அவமானப்படுத்திய துன்பங்களையெல்லாம் மக்கள் கொரோனாவிற்காகக் பொறுத்துக் கொண்டார்கள்.

வீட்லயிருக்கச் சொன்ன ‘தாயுள்ளம் கொண்ட’ ஆட்சியாளர்கள் ரேஷனில் போட்ட அரிசியில் புழுத்துப்போன அரிசிக்கும் புழுவுக்கும் பஞ்சமில்லை. கையில காசுமில்ல. நல்லது பொல்லது வாங்கித் திண்ணவும் கடையில்ல. யார்கிட்டையும் கைய நீட்டி கடனும் கேட்க முடியல. அக்கம் பக்கத்துலயும் அதே நிலைதான். தன்மானம் தடுக்குது. பிள்ளைக ஆசப்பட்டுக் கேட்டத எதுவும் வாங்கிக் கொடுக்க காசுமில்ல கடையுமில்ல. புள்ளைக மூஞ்சி வீங்கிப் போறதையும் பாக்க முடியல.
இந்த துயரப் பட்டியல் நீண்டது. பட்டப்பாடும் கொடியது. தீப்பட்டு வெந்துப்போன நிலையில் உள்ள மக்களிடம் சிறிது மகிழ்ச்சின்னா அது வூட்ல உள்ள ஆளுக தான். குடிக்காமல் சண்டை தண்ணியில்லாமல் இருப்பதே போதும் என்கிற நிம்மதியில் மக்களின் துயரம் சற்று இளைப்பாரியது.

படிக்க:
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

வெந்தப்புன்னுல வைக்கல வச்சுத் தேச்சு விடுவது போல இருந்தது டாஸ்மாக் திறப்பதற்கான அறிவிப்பு.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் அலங்காநல்லூரை மையம் கொண்டு தமிழத்தை பற்றிய போது மதுரை செல்லூர் பகுதி மக்களும் ஓடும் ட்ரெயினில் ஏறிக்கொண்டு ரயிலை நிறுத்தி மறியல் செய்தார்கள்.

அதே செல்லூர் பகுதியில்தான் டாஸ்மாக் போர் எந்த இயக்கங்களின் தூண்டுதலுமில்லாமல் தன்னெழுச்சி என்பதைவிட, தன்னுணர்வோடு தயாராகினாா்கள். கடை திறக்கும் முதல்நாள் இரவே கர்ணன் என்பவரும் மற்றொருவரும் இணைந்து பகுதி மக்களிடம் கூடிப் பேசி முழக்கங்கள் தயாராகின. “உணவு கொடு, மருந்து கொடு, போதையை கொடுக்காதே! இளைஞர்களை சீரழிக்காதே!” எனும் முழக்க அட்டைகளுடன் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே முற்றுகையிட்டனர். முன்னணியில் நின்ற பெண்கள் 55 வயதுக்கு மேலான முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்தான் ஷட்டரை இழுத்து சாத்தியவர்கள்.

சிறிது நேரத்தில தனி அதிகாரமும் அடாவடித்தனமும் நிறைந்த “டெல்ட்டா போர்ஸ்” டீம் வந்தது. ஆம் புதியதாக திருமணம் முடித்திருந்த டயர் தொழிலாளி விவேகானந்தனை கொன்ற அதே டெல்ட்டா தான். “மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின்” வழக்கறிஞர் தோழர்கள் போராடியும், மேநாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்களும் இணைந்து கொண்டு டெல்ட்டா போர்ஸ் ஒரு ‘சட்ட விரோத துறை’ இதை நீக்குங்கள்! என்று குரல் கொடுத்தார்களே! அதே டெல்ட்டா கும்பல்தான்.

பேச்சுவார்த்தையில் ஒரு போலிசுமட்டும் பழைய உளுத்துப்போன டயலாக்கைப் பேசினார். “ஏம்மா இங்கே வந்து போராடுரீங்க, உங்க பிள்ளைகளையும் வூட்டுக்காரனையும் ஒழுங்கா குடிக்க வராம வூட்லயே இருக்கச் சொல்லுங்கம்மா” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே இரு ஆண்களை மட்டும் நேக்கா கைது செய்கிறோம் என வண்டியில் ஏத்த, அங்கேயிருந்த மக்கள் “எங்களையும் கைது செய்யுங்கள்” என்று வண்டியில் ஏற அது ஒரு போராட்டமாக மாறி டெல்ட்டா பின்வாங்கியது. “அனைவரும் கலைந்து செல்லுங்கள்… கடையைத் திறக்க மாட்டார்கள்..” என வாக்குறுதியோடு மக்களை மடைமாற்றியது.

ஒரு நெல்லிக்காய் வியாபாரம் பார்க்கும் பெண் தொழிலாளி கூறினார். நெல்லிக்காய் வியாபாரத்தை ஒரு ஓரத்தில எங்க வண்டியை (இருசக்கர வாகனம்) நிறுத்தியிருந்ததற்கு போலீசு புடிச்சுட்டுப்போய் ஊரடங்குப் போட்ருக்கோம் உங்கள யாரு வண்டிய ரோட்ல நிறுத்தச் சொன்னது என்று பேசி 2000 ரூபாயை புடுங்கிகிட்டுத்தான் விட்டாங்கப்பா., ஏன் இந்த சாராயக் கடைய திறந்து எல்லாரும் முண்டியடிச்சிட்டுத்தான் நிக்கிறாங்க இங்க கொரோனா வராதா என்னா?? நம்மள எல்லாப்பேரும் ஏமாத்துறாங்கப்பா என்றார். ஒட்டு மொத்த அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் மீது நம்பிக்கையற்றுப் பேசினார் அந்தப்பெண் தொழிலாளி.

அவன் 40 நாள் வூட்லையே கிடந்தான். கடை திறந்ததுலயிருந்து போனவன்தான் இன்னமும் ஆளேக்காணோம். எப்ப வருவானோ எப்புடி வருவானோ என்று வயித்தெறிச்சலுடன் புலம்பினாா். வருமானமில்லை இருந்த காசும் வூட்டு செலவுக்கே காலியாப் போச்சு. கடையத் திறந்தா குடிக்க காசு குடுன்னு கேப்பானுக. நான் எங்கேயிருந்து கொடுக்குறது. காசு இல்லையின்னா வூட்ல சாமான்களை எடுத்துட்டுப் போயி வித்து குடிப்பாங்க. எதிர்த்து கேட்டா அடிப்பானுக..
என்றார்.

யாரும்மா உங்கப் பையனா? என்று கேட்டதற்கு இல்லப்பா வூட்டுக்காரர் என்றார் அந்தம்மா. மேலும், அலங்காநல்லூர்ல தாயும் பிள்ளையும் மண்ணெண்ணெய ஊத்திக் கொளுத்திக்கிட்டாங்களாமே? இனி எல்லா வூட்லையும் அதானப்பா நடக்கப்போகுது என்றார். சமூகப் பதற்றத்தை உருவாக்கிய அரசின் டாஸ்மாக் ஏற்படுத்திய விளைவுகளை, கவனித்த துயரத்தை கவலையுடன் தாய் உள்ளத்துடன் பகிர்ந்தார் அந்தப் பெண் தொழிலாளி.

இதே ஏரியாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர், வான்புகழ் பெற்ற செல்லூர் ராஜூ உள்ளார். அவர்தான் ‘தாயுள்ளம் கொண்ட’ அம்மாவின் புனித ஆத்மாவின் ஆட்சியை நேரடியாக வைகை ஆத்துக்கே இறக்கி வந்து ஆட்சி செய்பவர். அவர் டாஸ்மாக் திறக்கும் முடிவு குறித்த பேட்டியில் “இந்த முடிவை அரசு விரும்பி செய்யவில்லை, மதுப்பிரியர்களின் நலன்கருதியும் பொருளாதாரத்தை சரிசெய்யவும் எடுத்த முடுவு” என சிலாகித்துப் பேசிவிட்டு, கொரோனா சமூகப் பரவுதலை தடுக்கும் நோக்கத்துக்கு தடை போட்டுள்ளோம். ஆகையால் தனித்திருங்கள், வீட்டிலேயேயிருங்கள், ஊரடங்கு நீட்டிக்கக் கூடாதென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கொரோனா போதனை வேற கூறிவிட்டு பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

ஆனால் மக்கள் கண்ணை மூடிக் கடவுளை வேண்டவில்லை, கண்ணைத் திறந்து விழிப்புடன் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு சொல்கிறார்கள் “மூடு டாஸ்மாக்கை!” என்று. இந்த விழிப்புதான் டாஸ்மாக்கை மூடும். இந்த விழிப்பைப் பற்றிப் படரச்செய்வோம்!ஆட்சியாளர்களின் உறக்கத்தைக் கெடுப்போம்! விழிப்பை விரிவுப்படுத்துவோம்!

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை ஒத்தக்கடைப்பகுதி.

அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

1

டந்த வெள்ளிக்கிழமை, மத்திய பிரதேசத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு ரயிலில் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவுரங்காபாத் ரயில் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது 16 இடம்பெயர் தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி கொல்லப்பட்டனர்.

சாலைகளில் சென்றால் காவல்துறையினரால் தாக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் ரயில்கள் ஓடவில்லை என்ற அறிவோடு அவர்கள் ரயில் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். பல மணி நேரம் நடந்த பிறகு, தொழிலாளர்கள் களைத்துப் போன நிலையில், அவர்கள் ஓய்வெடுக்க அமர்ந்து அப்படியே தூங்கியும் விட்டார்கள். அதிகாலை 5.20 மணியளவில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ரயில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது.

இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஒரு தனியார் எஃகு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள், மார்ச் 24 முதல் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவர்களது சம்பளம் பெறப்படவில்லை. அவநம்பிக்கையான சூழ்நிலையையும், அவர்கள் எப்போது மீண்டும் வேலை செய்ய முடியும் என்று தெரியாமலும், தங்கள் குடும்பங்களுடன் இருக்க வீடு திரும்ப விரும்பினர். வீடு திரும்ப ஒரு ரயிலைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நடக்க முடிவு செய்தனர்.

சனிக்கிழமை இரவு நடந்த மற்றொரு விபத்தில், மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் 18 இடம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த லாரி கவிழ்ந்ததில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் ; 13 பேர் காயமடைந்தனர். தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரத்திலிருந்து உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிட் – 19ஐத் தவிர ஊரடங்கு காலத்தில் மற்ற காரணங்களுக்காக உயிர்களை இழந்தவர்கள் இந்த இரண்டு விபத்துக்களில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல…

படிக்க:
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

உண்மையில், ஆய்வாளர்கள் தேஜேஷ் ஜி.என்., கனிகா சர்மா மற்றும் அமன் ஆகியோரின் கூற்றுப்படி, சனிக்கிழமை வரை, நோய்த் தொற்று தவிர மற்ற காரணங்களால் ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து 378 பேர் இறந்துவிட்டனர். அவர்களில், 69 பேர் தங்கள் வீடுகளுக்கு நடந்து செல்லும் போது ரயில் அல்லது சாலை விபத்துக்களில் இறந்தவர்கள் – கிடைக்கக்கூடிய ஒரே பயண முறையான பொதுப் போக்குவரத்து பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

மே 10-ஆம் தேதி வரையான கணக்குப்படி,

  • நிதி நெருக்கடி மற்றும் பட்டினியால் இறந்தவர்கள் 47 பேர் நடந்ததாலும்,
  • வரிசையில் நின்றதாலும் களைத்து இறந்தவர்கள் 26 பேர்,
  • போலீசு அராஜகத்தாலும் அரசு வன்முறையாலும் கொல்லப்பட்டவர்கள் 12 பேர்
  • முதியோர் அல்லது நோயாளிகளுக்கு போதிய மருத்துவ கவனிப்பின்மையால் உயிரிழந்தோர் 40 பேர்
  • தொற்று அச்சம், தனிமை, ஊரடங்கால் சுதந்திரமாக இயங்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டவர்கள் 83 பேர்.
  • மதுவை நிறுத்தியதால், மது பழக்கம் தொடர்பான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் 46
  • நடப்பதாலும், இடம்பெயர்வதாலும் சாலை அல்லது ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் 74 பேர்.
  • ஊரடங்கு தொடர்புடைய குற்றங்களால் (மதம் அல்லாத) நிகழ்ந்த மரணங்கள் 14.
  • காரணம் கண்டுபிடிக்கமுடியாத உயிரிழப்புகள் 41.

செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களைத் தொகுத்து, குழுவால் ஒன்றிணைக்கப்பட்ட தரவுத்தளம், ‘சுயாதீன அறிஞர்கள் மற்றும் மாணவர் சார்ந்த தன்னார்வலர்கள் நடவடிக்கை சார்ந்த ஆய்வு, சமூக-பொருளாதார உரிமைகள் மற்றும் தொடர்புடைய சிக்கல்களில் ஆர்வமுள்ளவர்கள்’ என்ற குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது சாலை விபத்துக்கள், பட்டினி கிடத்தல், மருத்துவ பராமரிப்பு மறுப்பு, போலீசின் மிருகத்தனம், சோர்வு, தற்கொலைகள் போன்ற காரணங்களுக்காக ஏராளமான மக்கள் இறந்துவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன.

“ஊரடங்கு தொடங்கப்பட்ட உடனேயே, இறப்புகள் பற்றிய பல செய்திகளைப் பார்க்கத் தொடங்கினோம். வீட்டிற்கு திரும்பிச் செல்லும்போது மக்கள் இறக்கின்றனர், சுகாதாரப் பாதுகாப்பு மறுக்கப்பட்டதால் பெண்கள் இறக்கின்றனர். இந்த மரணங்கள் மிகவும் வேதனையளித்தன” என்கிறார் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பி.எச்டி படித்து வரும் கனிகா சர்மா.

அவர்களின் தொகுப்பின்படி, அவுரங்காபாத்தில் குடியேறிய 16 தொழிலாளர்களின் மரணமே, அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்ட ஒற்றை நிகழ்வு. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 28 க்குப் பிறகு, வீடு திரும்பிய 8 குடியேறிகள் கர்நாடகாவின் ராய்ச்சூரில் சாலை விபத்தில் கொல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் அல்லாத இறப்புகளில் (83) இதுவரை அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் தொற்று பயம், மதுவை நிறுத்தியதற்கான அறிகுறிகள் மற்றும் வேலை இழப்பு போன்ற காரணங்களுக்காக நிகழ்ந்தன. பட்டினி, மருத்துவ கவனிப்பு மறுப்பு மற்றும் வீட்டிற்கு நடந்து செல்லும்போது அல்லது ரேஷன் அல்லது பணத்திற்காக வரிசையில் நிற்கும்போது ஏராளமான மக்கள் இறந்துள்ளனர்.

தகவல்களை ஒன்றாக இணைக்க, ஆராய்ச்சியாளர்கள் கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கூகிள் அலர்ட்களை அமைத்துள்ளனர். “நாங்கள் கூகிள் தேடல்களைச் செய்கிறோம், மேலும் மக்கள் எங்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள். நாங்கள் அவற்றை சரிபார்க்கிறோம், அவற்றை மொழிபெயர்க்க தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள்” என்கிறார் கனிகா.

‘நம்பகமான’ செய்தி ஆதாரங்களால் அறிவிக்கப்பட்ட இறப்புகளை மட்டுமே ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். “இதில் வரம்புகள் உள்ளன. நாங்கள் நேரடியாக சரிபார்க்க முடியாது. நாங்கள் நிறைய இறப்புகளை கணக்கில் கொள்ளவில்லை. உள்ளூர் ஊடக செய்திகள் எங்களை அடையவில்லை. மேலும், நிறைய இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை” என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வசித்து வந்த, உணவுக்காக பயணிகளை நம்பியிருந்த 80 வயது நபர் ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்னர், பயணிகள் யாரும் இல்லை என்பதால் இறந்தார். முதல் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு புறப்பட்ட பெற்றோருடன் 100 கிலோமீட்டர் தூரம் நடந்து 12 வயது சிறுமி சோர்வு காரணமாக இறந்தார்.

சர்மாவின் கூற்றுப்படி, தரவுகளிலிருந்து வெளிவந்த ஒரு தெளிவான முறை என்னவென்றால், இறப்பவர்கள் விளிம்பு நிலையில் வாழ்கிறார்கள். “இவர்கள் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர். பதிவான மரணங்களில் பெண்களைவிட அதிகமான ஆண்கள் அதிகமாக உள்ளதை நாங்கள் கண்டோம், ஏனெனில் ஆண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

ஏராளமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக, பெற்றோரின் வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்ற காரணத்தால்…
“இவை அந்த பெண்கள் புண்படுத்தக்கூடிய உறவுகளில் இருந்ததால் விளைந்த நிகழ்வுகளாக இருக்கலாம்” என கனிகா யூகிக்கிறார்.

COVID-19 பயத்தால் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை மறுக்கப்படுவது மற்றொரு வகையான மரணங்களுக்குக் காரணம். தெலுங்கானாவில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஆறு மருத்துவமனைகளால் திருப்பி விடப்பட்டதாக ஏப்ரல் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அவர் COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்டு, முடிவுகள் எதிர்மறையாக வந்த பின்னரே அரசாங்க மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாமதம் காரணமாக, குழந்தை சிக்கல்களுடன் பிறந்து இறந்தது. ஒரு நாள் கழித்து, அந்தப் பெண்ணும் இறந்தார்.

இதேபோன்ற மற்றொரு நிகழ்வில், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இரட்டைக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சரியான நேரத்தில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டதால் இறந்தார். உள்ளூர் நிர்வாகத்தால் ‘சிவப்பு மண்டலம்’ என வகைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் வசிப்பவர், அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தயங்கினர்.

ஊரடங்கின் விளைவாக நிகழ்ந்த அனைத்து மரணங்களும் தங்களுடைய தொகுப்பில் இல்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“இந்த மரணங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்: இறப்புகளில் ஒரு பகுதியே ஊடகங்களில் பதிவாகியுள்ளன, உள்ளூர் ஊடகங்களிலும் பதிவான சில மரணங்களை நாங்கள் தவறவிட்டிருக்கலாம்” என அவர்கள் கூறுகின்றனர்.


செய்தி கட்டுரை: கபீர் அகர்வால்
கலைமதி

நன்றி : த வயர்

இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா

ன்றரை மாதங்கள் ஆகப்போகிறது இந்த ஊரடங்கை அறிவித்து. வெறும் நான்கே நான்கு மணிநேரங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டு எல்லோரும் கூடடையுங்கள் என விரட்டியடித்த உலகின் மிகப்பெரிய நிகழ்வு. டீமானிடைசேஷன் என்ன செய்ததோ அதையேதான் இந்த ஊரடங்கும் இந்தியாவுக்கு செய்துகொண்டிருக்கிறது. இனியும் செய்யும்.

ஊரடங்கால் தொழில் அகதிகள் எல்லாம் வருமானத்திற்கு வழியில்லாமல் உணவுக்காக அலைந்து திரிந்து தவித்தபோது… பசியோடு ஒருவரைக் கூட தவிக்க விடமாட்டோம்… என்கிற சூளுரைகளை நிதி அமைச்சர் நமக்கு வழங்கினார். ஆனால் நாற்பது நாள்களா நாடே பசியின் கொடுமையால் துடித்தது. இப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் பசியால் செத்துப்போனார்கள். தொழில் நசிந்து தற்கொலை செய்துகொண்டார்கள்.

பொருளாதார பின்னடவை சமாளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு கையாளப்படும் என்றார் பிரதமர். இன்றுவரை அந்த குழு என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது… அதனால் விளைந்த பயன் என்ன யாருக்கும் தெரியாது. வீட்டிற்குள் இருந்து தன்னுடைய தட்டுகளால் சத்தமெழுப்பியதை தவிர நிதியமைச்சர் செய்த உருப்படியான காரியம் என்னவென்று யாருக்காவது தெரியுமா…

தொழில்கள் நசிந்துவிட்டன. வேலை இழப்புகள் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு எட்டியிருக்கிறது. சம்பளத்தை குறைக்காதீர்கள், வேலையை பறிக்காதீர்கள் என்று சொன்ன அரசு… ஆனால் யாருமே செய்யவில்லை. எப்படி செய்ய முடியும். என்னதான் மோடி ஆதரவு சங்கியாகவே இருந்தாலும் நஷ்டத்தில் இயங்கும்போது யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியும் மீறி தொழிலாளர் நலனை காக்கிற நிறுவனங்களுக்கு உரிய நிதிபாதுகாப்பை இந்த அரசுகள் அளித்திருக்க வேண்டாமா… இதுவரை அப்படி எதாவது அறிவிப்புகளை நீங்கள் கண்டீர்களா? அதையும் செய்யவில்லை. வருமானமில்லாமல் தொழில் நடக்காமல் எந்த சிறுகுறு தொழில் முதலாளியும் தொடர்ச்சியாக சம்பளம் கொடுக்க முடியாது. காரணம் இங்கே சிறுகுறு மைக்ரோ லெவல் தொழில் நடத்துகிறவனும் ஒருவகையில் தொழிலாளிதான். அவனுடைய நிதிநிலைக்கு உதவிக்கரம் நீட்டாமல் வெறும் வாய்ஜாலாங்களால் நிகழ்த்தி காட்ட இது என்ன மதக்கலவரமா… சாதிக்கலவரமா… சொன்னதும் ஆளுக்கு ஒரு அரிவளோடு சென்று கண்டவனையும் வெட்டித்தள்ள.. இது உயிர்காக்கும் நடவடிக்கை. இங்கே சொல்லைவிட செயல்தான் பேசும்.

படிக்க:
♦ பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !
♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்

கொரானாவுக்கு எதிரான போரில் அனைவரும் கைகோர்ப்போம் என்றார் பிரதமர். இந்தியாதான் கொரானாவை மிகச்சரியாக கையாளுகிறது. உலக நாடுகளே மோடிதான் சிறந்த பிரதமர் என்கிறார்கள் என்று வாட்ஸ் அப் வட்டாரங்கள் எல்லாம் கொண்டாடித்தீர்த்தன. சொல்லப்போனால் கொரானாவை வைத்து தன்னுடைய கட்அவுட்டை இன்னும் நான்கு அடி உயர்த்திக்கொள்ளத்தான் பார்த்தார் பிரதமர். இதை மிகச்சரியாக கையாண்டிருந்தால் அது நாற்பதடி கூட உயர்ந்திருக்கும். ஆனால் அதை செய்ய மிகுந்த பொருப்புணர்வும் ஆளுமையும் வேண்டும். வெற்று உதார்களால் உதவாது. அவர் கைதட்டசொன்னார்… விளக்குப்பிடிக்க சொன்னார்… ஹெலிகாப்டர் வைத்து பூத்தூவசொன்னார். ஒரு கொள்ளைநோயை கையாளும் விதம் இதுதானா.

இதுபோன்ற வெத்து பம்மாத்துகள் எதுவும் ஒரு கொள்ளைநோயை கட்டுப்படுத்துவதில் உதவாது. முறையான திட்டமிடலும் அறிஞர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற அதிகாரிகளும்தான் தேவை. தொடர்ச்சியாக பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட எச்சரிக்கைகளை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை காதுகொடுத்து கேட்பதற்கு அரசு தயாராக இல்லை. இந்த அரசுக்கு காதுகள் கிடையாது.

ஜெயலலிதா காலத்தில் எப்படி ஒருநபர் ஆட்சி தமிழகத்தில் நடந்ததோ அதுபோல இன்று இந்தியாவில் நடப்பது இருநபர் ஆட்சி. எல்லா முடிவுகளுக்கும் இந்த இருவர் அனுமதிக்காக காத்திருக்கவேண்டும். காத்திருந்து காத்திருந்து மக்கள் செத்துக்குவிந்தாலும் காத்திருக்கவேண்டும். அவர்கள் தூங்கி எழுந்து வரும் வரை காத்திருக்க வேண்டும். அவர்களுடைய கழிவறை வாசலில் தவமிருக்கவேண்டும். இந்திய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அப்படித்தான் இன்று காத்திருக்கிறார்கள். மேமாதம் அறிவித்த மூன்றாவது ஊரடங்கிலும் கூட இதே மெத்தனம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு ஜோசியக்காரர்கள் மீது இருக்கிற மரியாதை கூட அறிவியலாளர்கள் மீது இருக்கிறதா என்று தெரியவில்லை.

இன்று மற்ற நாடுகளில் எல்லாம் கொரானா ஒரளவு கட்டுக்குள் வரத்தொடங்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை குறைகிறது. பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்கு குறைந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. கொரானா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய அரசோ… போர் உச்சத்தை எட்டுகிற சமயத்தில் நம்மை சானிட்டைசர் போட்டு கைகழுவிவிட்டது. இனி நாம் கொரானாவோடு வாழப்பழகவேண்டும் என்று அறிவிக்கிறார் சுகாதார செயலாளர்.

படிக்க:
♦ டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

இந்தியா இன்று இரண்டு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஒன்று கொரானாவை இந்தியா நினைத்தபடி வெறும் ஊடரங்கால் மட்டுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் தாக்கம் நினைத்துப்பார்க்கவும் முடியாத அளவில் வளர்ந்துகொண்டே செல்கிறது. இரண்டாவது இந்தியாவை சூழும் வறுமை. ஒருபக்கம் வேலையிழப்பால் அவதிறும் மக்கள். தொழில்நசிந்து போனதால் திண்டாடும் முதலாளிகள். அதன் தொடர்ச்சியாக வீழும் இந்திய பொருளாதாரம்.

அதோடு இந்தியாவின் பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயருகிறார்கள். இந்த தொழில் அகதிகளை மீட்கவோ அவர்களை உரிய இடத்தில் சேர்க்கவோ அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவோ அரசு எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. போர்க்கதைகளில் மட்டுமே படித்த பசியோடு குடும்பம் குடும்பமாக நிகழும் இந்த இடப்பெயர்வுகளை முதன்முறையாக நாம் வாழும் காலத்தில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிர்கதியாக விடுகிற போர்ச்சூழலும் இங்கே இல்லை. அரசு நினைத்தால் வாகனங்களை ஏற்பாடு செய்து இந்த அகதிகளை மீட்கவும் முடியும். ஆனால் இவர்கள் அடையாளமிலிகள். இவர்களுக்கு ஆதார் அட்டையோ வாக்களர் அட்டையோ வாக்குகளோ கூட இருக்குமா தெரியாது. இவர்களுடைய வாக்குகளால் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புகளில்லை. கிரிகெட் ஸ்கோர் போல அன்றாடம் வந்து விழும் கொரானா பட்டியல்கள் போல இந்த நீண்ட பயணங்களில் பசியால் பிணியால் சோர்வால் இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கைகள் எங்கும் வரக்காணோம்.

ஊரடங்கை திட்டமிடும்போது ஒழுக்கமாக திட்டமிட்டிருந்தால் இன்று இந்த நிலை உருவாகி இருக்காது. ஆனால் அவசரம். அதில் ஒரு விளம்பரம் தேடவேண்டும். ஒரு ஹீரோயிசம் காட்டவேண்டும். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவது போல டிவியில் முகத்தை காட்டி பேசவேண்டும். பிரதமரின் இந்த முட்டாள்தனங்களுக்கு சப்பைக்கட்டு கட்ட பெரும்பான்மை ஆதரவு என்கிற ஊரில் பிணந்தின்னிகளுக்கு கொண்டாட்டம்தான்.

கொரானாவை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டது கேரளா மட்டும்தான். அவர்களால்தான் உருப்படியாக இந்த கொள்ளை நோயை கையாள முடிந்தது. ஆரம்பத்தில் அதிக கேஸ்கள் கொண்டிருந்த மாநிலம் இன்று பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை மருத்துவர்ளை கொண்ட தமிழ்நாடே திணறிக்கொண்டிருக்கிறது. காரணம் என்ன? முடிவெடுக்கும் திறன். ஆரம்பத்திலேயே பினராயி விஜயன் செய்தது ஒன்றுதான்… தன்னை இந்தியா என்கிற கூட்டமைப்பிலிருந்து விலக்கிக்கொண்டு அதன் உதவிகளுக்கோ முடிவுகளுக்கோ காத்திருக்காமல் அவர்களாகவே கொரானாச்சூழலை கையாளத்தொடங்கியதுதான். நம்முடைய அடிமை அரசோ இப்போதும் மேலிடத்து உத்தரவுக்காக டயர்களை வணங்கி காத்திருக்கிறது. பழக்கப்படுத்தப்பட்ட மிருகம் அப்படித்தான் சவுக்கு சத்தமில்லாமல் அதனால் இயங்க முடியாது. ஆனால் அறிவற்ற சவுக்குகள் அடுத்து என்ன செய்வது என்பதைக் குறித்து எந்த திட்டங்களுமற்றவை. கலவரங்களை உருவாக்குவதை மட்டுமே அறிந்தவை. யோசித்துப்பாருங்கள் இந்த ஆட்சியாளர்கள் ஏன் எதை முன்னெடுத்தாலும் அது ஒரு கலவரச்சூழலுக்கே நம்மை தள்ளுகிறது.

மக்களுடைய உயிர்குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாத அரசு இது. அதிலும் அகதி உழைப்பாளர்களின் உயிருக்கெல்லாம் மயிரளவுக்குகூட இங்கே மதிப்பு கிடையாது. அதனால்தான் கர்நாடகாவில் கட்டுமான நிறுவனம் கேட்டுக்கொண்டது என்று ஊருக்கு திருப்பி அனுப்பவேண்டிய தொழிலாளர்களை அனுப்பாமல் பிடித்து வைக்கிறார்கள். ரயில்தண்டவாளங்களில் சாலைகளில் மனிதர்கள் செத்துவிழுகிறார்கள். அதைப்பற்றி எங்காவது பிரதமரோ அவரை இயக்கும் நிழல்பிரதமரோ அமைச்சரவையின் வேறுயாருமோ எதாவது அறிவித்து பார்த்தீர்களா… செத்துப்போகிறவன் எவனோ ஏழை என்கிற மெத்தனத்தில்தானே நாம் இருக்கிறோம். இந்த அரசு இந்த நாற்பது நாள்களில் அந்த அகதி தொழிலாளர்களை எப்படி கையாண்டதோ அப்படித்தான் அடுத்த நாப்பது நாள்களும் நம்மையும் கையாளப்போகிறது. சாலைகளில் நடக்கும் அகதிகளின் நிலை நமக்கும் நாளை வரக்கூடும். நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நீண்டசாலைகளில் வறண்ட நாவுகளோடும் பசித்த வயிறுகளோடும் நடப்பதை தவிர…

முகநூலில்:Athisha Vino(அதிஷா)

disclaimer

பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !

ணக்கம்,

கொரோனா நோய் தொற்றின் காரணமாக அரசு அமுல் படுத்தியுள்ள ஊரடங்கால் முடங்கிப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அளவில் நிதியும்,  உணவு பொருட்களும் வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து போராடுவது தங்களுக்கு தெரியும். அதே வேலையில் கொரோனா நிவாரண உதவிக்காக பசியைப் போக்குவோம் குழுவின் சார்பில் முடிந்த அளவில் நண்பர்கள், ஆதரவாளர்களிடம் நிவாரண பொருட்களை திரட்டி தமிழகம் முழுவதும் மக்களுக்கு உதவி வருகிறோம். அதன்படி 08.05.2020 அன்று  காலை 11.00  மணியளவில் விழுப்புரம்  9- வது வார்டு முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியில் உள்ள  குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிவாரண பணியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அவரவர் இல்லங்களுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டது. அப்போது அப்பகுதி மக்கள்  அனைவரும் தினக்கூலிகள் தான் என்றும் நாங்கள் எந்த வருமானமும் இன்றி  மூன்று வேலை உணவுக்கு வழி   இல்லாமல் தவித்து வருகின்றோம். எனவே நாங்கள் நிவாரண பொருட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசும் எங்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என எதிர் பார்த்து காத்திருக்கின்றோம் என்று தங்களின் நிலைமைகளை கூறி ஆதங்கப்பட்டனர்.

மேலும் சில பகுதி பொது மக்கள் எங்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களிடம்  வரும் நாட்களில் எங்களால் முடிந்த உதவிகளை தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் நிவாரண பொருட்களை பெற்று செய்வதாக கூறியுள்ளோம்.

படிக்க:
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

எனவே போதுமான உணவு பொருட்கள் இன்றி தவிப்பவர்களுக்கு உதவ தயாராக உள்ளவர்கள் தங்களாலும்  தங்கள் நண்பர்கள் மூலமாகவும் முடிந்த அரிசி, மளிகை பொருட்களையோ, நிதியாகவோ வழங்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு : 99949 79490 / 73588 69232

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

TASMAC கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு ! மக்கள் போராட்டத்தால் மாறிய தீர்ப்பு !!

கொரோன நோய்த் தொற்று காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, மக்கள் அத்தியாவசிய நிகழ்வுகளான திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு, வேலை – தொழில் இல்லை, உணவு தவிர்த்த அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு கூட அரசு தடை விதித்திருந்தது.

பெறுபான்மையான மக்கள் வருமானம் இல்லாத இந்த சூழலில், அதிக அளவில் கூட்டம் சேரும்மென்ற அடிப்படையில் ஏற்கனவே டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது. வருமானம் ஈட்டுவதற்காக டாஸ்மாக்கை திறப்பார்களேயெனில் கோயம்பேடு போல நோய் தொற்று பரவும் இடமாக டாஸ்மார்க் மாறும் என்று 06.05.2020 அன்று மக்கள் அதிகாரம், மக்கள் ஆயம் சார்பாக நாம் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். நமது சார்பாக மூத்த வழக்கறிஞர் வைகை மற்றும் பாலன் ஹரிதாஸ் அவர்கள் வாதாடினார்.

நமது தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும், அவற்றிற்கு எந்தவித பதில்களையும் எடுத்துரைக்காமல் மதுபானக்கடைகள் மூடலால் ஒரு நாளைக்கு 90 கோடி இழப்பு ஏற்பட்டு வருவது, உட்பட சில விசயங்களை அரசு தரப்பில் முன் வைத்தனர். நீதிமன்றமும் டாஸ்மார்க்கை திறக்க தடைகோரிய வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் சில ஆகாத கட்டுப்பாடுகளை விதித்து திறக்க அனுமதி அளித்தது.

ஆனால், நேற்றைய ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பெண்கள், வீதியில் இறங்கி ஆவேசத்துடன் போராடினர். சில இடங்களில் கடையை மூடவும் வைத்தனர். அமைப்புகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நீதிமன்றமும் மக்களின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை.

இப்படி இருக்கக்கூடிய சூழலில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஏற்கனவே மனு தாக்கல் செய்து வழக்கு நடத்திய வழக்கறிஞர் G.ராஜேஷ் இணையவழியில் விற்பனை செய்வதை அரசு தொடங்கவில்லை. அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று ஒரு இடைநிலை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இடைக்கால மனுவுடன் நாம் தாக்கல் செய்த வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு லாக் டவுன் முடியும் வரை டாஸ்மாக் நேரடி விற்பனைக்கு தடை விதித்தது நீதிமன்றம்.

படிக்க:
♦ டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம் தான் இன்று நீதிமன்ற தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யபோவதாக அறிந்தோம். உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

40 நாட்கள் தந்த இடைவெளியை பயன்படுத்தி டாஸ்மாக்கை முழுமையாக மூட வேண்டும் என்பதே தமிழக மக்களின் – பெண்களின் கோரிக்கை.

தற்போது கொரானா காலத்திலாவது மூட வேண்டும் என்பதே வழக்கு. மக்களின் கோப ஆவேசத்தை பார்த்துதான் உயர்நீதிமன்றம் தீர்ப்பை மாற்றி டாஸ்மாக்கை மூடியுள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்ய துடிக்கிறது குடி கெடிக்கும் அரசு.

உச்ச நீதிமன்றத்திலும் நமது சட்டப் போராட்டத்தை தொடர்வோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அரசுக்கு சாதகமாக அமையலாம். ஆனால் டாஸ்மாக் கொடுமைக்கு பலியான மக்களின் போராட்டம் அதற்கு எதிராகவும் பொங்கி எழும் என்பது நிச்சயம். மக்களின் வேதனை, வலியின் உணர்வோடு வழக்கை நடத்தி டாஸ்மாக்கை மூடும் உத்தரவை பெற நாமும் சட்டப் போராட்டத்தை நடத்திடுவோம்.

தோழமையுடன்,
சு. ஜிம்ராஜ் மில்ட்டன்
வழக்கறிஞர்
மக்கள்‌ உரிமை பாதுகாப்பு மையம்.

தகவல் :
மக்கள்‌ உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !

PP Letter head

பத்திரிக்கை செய்தி

நாள் : 08.05.2020

144 தடை உத்தரவு போட்டது எதற்காக, கொரோனாவிலிருந்து எங்களை காக்கவா டாஸ்மாக் வியாபாரத்தை நடத்தவா என்று கேட்பதற்கு உரிமை இல்லையா? கோர்ட் இல்லை, கோவில் இல்லை, ஆஸ்பத்திரி இல்லை, பள்ளி, கல்லூரி இல்லை, டாஸ்மாக் திறக்க என்ன அவசரம்? என கேட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 45 வயதான தோழர் மோகன், அவருடைய 72 வயது தந்தை வெங்கடேசன், ஆகிய இருவர் மீதும் வாலஜாபாத் – ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியால் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டு (இ.த.ச. பிரிவுகள் 144,188,269,270) அரக்கோணம் கிளைச்சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதுடன், சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

டாஸ்மாக் திறக்கும் முடிவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் செய்திருக்கிறது. பல இடங்களில் பெண்கள் ஆத்திரம் பொங்க கடைமுன் போராடியதால் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வில்லை. ஆனால் ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதிக்கு சட்டமும் தெரியவில்லை, கொரோனா நோய் தொற்றைப் பற்றியும் அறிவில்லை. வக்கிர புத்தியுடன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மனித உரிமை தொடர்பாக, கைது தொடர்பாக போலீசுக்கு சொன்ன உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தனது பூட்ஸ்காலில் போட்டு மிதித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக்கை திறக்ககூடாது என மக்கள் அதிகாரம் உட்பட பலர் பொதுநல வழக்கு தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வருகிறது. (அதில் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என தீர்ப்பளித்துள்ளது) சமூக இடைவெளி, ஒருவருக்கு ஒரு பாட்டில், ஆதார் அட்டை பதிவு ஆகிய நீதிமன்ற உத்திரவுகளை கட்டாயம் அமல்படுத்துவோம் எனச் சொல்லிய எடப்பாடி அரசாங்கம் ஏன் செய்யவில்லை?. பல ஆயிரம் மக்கள் நெருக்கி அடித்துக் கொண்டு நின்றார்கள்.

சமூக இடைவெளி என்பது அறவே இல்லை. ஒவ்வொருவரும் பல பாட்டில்கள் வாங்கி சென்றார்கள். இதன் மூலம் பல ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கொரோனாவால் சிறையில் உள்ள தண்டனை கைதிகளையே விடுதலை செய்து வரும் நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை எதற்கு சிறைபடுத்த வேண்டும்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் வேண்டாம் என சொன்னால், சிறை தண்டனை என்றால் என்ன ஜனநாயகம் இருக்கிறது?

தங்கள்
அமிர்தா
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
9176801656

விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

0

நின்று கொண்டு இருக்கும்போதே ஒரு பெண் மயங்கிச் சரிகிறார். பேச்சுமூச்சின்றிக் கிடக்கும் சிறுவர்களும், சிறுமிகளும் அவசரஊர்தியில் ஏற்றப்படுகின்றனர். மயங்கிக் கிடக்கும் தனது தாயின் முகத்தைத் தட்டி எழுப்பப் போராடுகிறாள் ஒரு சிறுமி. நாய்களும் கால்நடைகளும் வாயில் நுரைதள்ளி துடித்துச் சாகின்றன. பார்க்கும்போதே குலைநடுங்கி நம்மை பதட்டம் கொள்ளச் செய்கிறது விசாகப்பட்டிணம் விசவாயுக் கசிவு தொடர்பான காட்சிகள்.

விசாகப்பட்டிணத்தின் புறநகர்ப்பகுதியான கோபாலப்பட்டிணத்தில் இயங்கிவரும் LG பாலிமர்ஸ் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை (07.05.2020) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த விசவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விசவாயுக் கசிவில் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட 12 பேர் இறந்துள்ளனர்.
மூச்சுவிடுவதில் சிரமம், கண் எரிச்சல், தொடர் வாந்தி, சுயநினைவற்ற நிலை (கோமா), மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தன்னார்வலர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ஆந்திர மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வீட்டிற்குள் பாதிப்புக்குள்ளாகி மயங்கிக் கிடந்த மக்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். சுற்றுப்பகுதி கிராமத்தில் இருக்கும் வளர்ப்புப் பிராணிகளும், கால்நடைகளும் மரணமடைந்துள்ளன.

ஆலைகளுக்கு அருகிலேயே குடியிருக்கும் நவீன் என்ற இளைஞர், நடந்த சம்பவங்களைக் கூறுகிறார். “அதிகாலை 2.30 மணியளவில், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதையடுத்து முழிப்பு தட்டியது. வீதிக்கு வந்து பார்த்த போது பெரும் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. வீட்டிலிருக்கும் அனைவரும் முகக்கவசம் மாட்டிக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் கிளம்பிச் செல்கையிலேயே பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்கள் பலரும் மயக்கமடைந்து விழுந்தனர். ஆலையின் அதிகாரிகள் தங்களது கார்களில் மக்களை மீட்டுச் செல்ல வாய்ப்பிருந்தும் அமைதி காத்தனர்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ”இரண்டாண்டுகளுக்கு முன்னரே இதைப் போன்ற ஒரு வாயுக் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதை மூடி மறைத்து விட்டனர். இந்த ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

காற்றில் பரவிய “ஸ்டைரின் மோனோமர்” என்ற வாயுவைக் குறைவான அளவில் சுவாசித்தால் அது கண்களிலும், தோல்களிலும் சுவாசக் குழாயிலும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளையும் ஏற்படுத்தும். அதிகமான அளவில் சுவாசிக்கப்பட்டால், மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். கோமா நிலை ஏற்படுத்தும். தொடர்ச்சியான சுவாசம் மரணத்திற்கு இட்டுச் செல்லும். இதன் பின்விளைவுகளாக, சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய் போன்றவை ஏற்படும்.

படிக்க:
♦ புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான LG பாலிமர்ஸ் நிறுவனம், தென்கொரியாவைச் சேர்ந்த LG (மின்னணு சாதன உற்பத்தி) குழுமத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனம் பாலி-ஸ்டைரீனால் உருவாக்கப்படும் நெகிழி, நாரிழைக் கண்ணாடி உள்ளிட்டவற்றைத் தயாரித்து வருகிறது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில் முக்கியமானது ஸ்டைரீன் மோனோமர் எனப்படும் இரசாயனம். தீப்பற்றத்தக்க, திரவ நிலையிலான இந்த இரசாயனம்தான், அதிக வெப்பத்தில் வாயுவாக மாறி அழுத்தம் தாளாமல் வெளியேறி பலரது உயிரையும் வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது.

இந்த விசவாயுக் கசிவு எப்படி ஏற்பட்டது ? LG பாலிமர்ஸ் நிறுவனம் விட்டுள்ள அறிக்கையில், ஸ்டைரீன் மோனோமரைத் தேக்கி வைத்துள்ள தொட்டியில் ஏற்பட்ட வெப்ப மாற்றம், அதனை மீச்சேர்மமாக்கலுக்கு (Polymerization) உள்ளாக்கி வாயுவாக மாற்றியிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. விசவாயுக் கசிவு சமயத்தில் சுமார் 1800 டன் ஸ்டைரீனை அந்த நிறுவனம் தேக்கியிருக்கிறது.

இந்நிறுவனம், ஆபத்துமிக்க இந்த இரசாயனத்தைத் தேக்கி வைக்க முறையான அனுமதியும், மாசுக் கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி என எதுவும் பெற்றதாகத் தெரியவில்லை. கடந்த 1997 முதல் 2019 வரை, இவ்வளாகத்தில் இயங்கி வந்த பெட்ரோ கெமிக்கல் ஆலைக்கு எந்தவித சுற்றுச் சூழல் அனுமதியும் பெறாமலேயே செயல்பட்டிருகிறது என்பதை அந்த நிறுவனமே கடந்த மே 10, 2019 அன்று தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளது.

தனது உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 415 டன்னில் இருந்து 655 டன்னாக உயர்த்திக் கொள்ள அனுமதி வேண்டி முன் வைத்த கோரிக்கை மனுவில் தான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்து, “இனி அதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

யுனைடெட் ப்ரூவெரீஸ் குழுமத்தைச் (UB Group) சேர்ந்த மெக்டவல் நிறுவனம், கடந்த 1982 முதல் 1997 வரை இந்நிறுவனத்தை நடத்திவந்தது. அந்தப் பகுதியில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்து வந்த சூழலைக் கணக்கில் கொண்டு, ஸ்டைரீன் மற்றும் சாராய உற்பத்தியை நிறுத்திக் கொள்ள அந்நிறுவனம் முடிவெடுத்தது. கடந்த 1997-க்குப் பிறகு இந்த நிறுவனத்தை தென் கொரிய நிறுவனமான எல்.ஜி கெமிக்கல்ஸ் (LG Chem) வாங்கியது. இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டைரீனைக் கொண்டு பாலி-ஸ்டைரீன், விரியத்தக்க பாலி-ஸ்டைரீன் மற்றும் அல்பெய்ட் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கத் துவங்கியது.

இந்த ஆலையின் பிரதான மூலப் பொருளாகிய ஸ்டைரீன், “ஆபத்துமிக்க மற்றும் விசத்தன்மை வாய்ந்த இரசாயனம்” என்று இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஸ்டைரீன் மோனோமெர் என்ற இரசாயனத்தை 17 டிகிரி செல்சியசுக்குக் குறைவான வெப்பநிலையில்தான் சேமித்து வைக்க வேண்டும். அப்படி இல்லாத சமயத்தில் இதன் அழுத்தம் அதிகமாகி கொள்கலன்களை வெடிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

கோவிட்-19 நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆலைகளும் செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இந்நிறுவனம் இந்த இரசாயனத்தி பாதுகாப்பிற்குத் தேவையான குளிர்ச்சியான வெப்பநிலையை தக்கவைக்கத் தவறியிருக்கலாம். அதன் காரணமாகவே இந்தக் கசிவு ஏற்பட்டிருக்க முடியும். ஏனெனில் திரவ நிலையில் உள்ள இந்த இரசாயனம் வாயுநிலைக்கு மாறுவதற்கு அடிப்படையான தேவை அதிகரித்த வெப்பம்தான்.

படிக்க:
♦ முப்பதாம் ஆண்டில் போபால் படுகொலை – துரோகத்தின் விலை
♦ ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !

ஆனால் ஆந்திர தொழில்துறை அமைச்சர் மேகாபதி கவுதமனோ, அந்நிறுவனம் ஒழுங்குமுறையை மீறியதாக விசாரணையில் தெரியவந்தால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச போலீசும், பிரிவு 278, 284, 285, 337.338 மற்றும் 304(II) போன்ற பல மொன்னையான (கவனக் குறைவால் ஏற்பட்ட குற்றம், காற்று, சுற்றுச் சூழல் மாசுபாடு, கொலையல்லாத நிகழ்ந்த மரணம் விளைவிக்கும் குற்றம் உள்ளிட்ட) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் மத்திய ஆற்றல்துறை செயலர் ஈ.ஏ.எஸ். சர்மா, ஆந்திர மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் இவ்வளவு நாட்களாக எவ்வித ஒழுங்குமுறையும் அற்று இந்நிறுவனம் செயல்பட அனுமதியளித்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார். அந்த நிறுவனத்தின் மீதும் அதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அனுப்பியுள்ள தனது கடிதத்தில், இந்த நிறுவனம் ஆட்சிக்குவரும் அனைத்து அரசாங்கங்களாலும் தொடர்ந்து பாதுக்காப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான அரசாங்க நிலத்தின் மீது தனது ஆலையை விரிவுபடுத்தியிருக்கும் இந்நிறுவனத்திடமிருந்து அந்த நிலங்களை மீட்க அரசு முயற்சிக்கையில், அதனைக் கொடுக்காமல் அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது இந்நிறுவனம் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைப் பற்றி துளியும் அக்கறையில்லாமல் இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கான அனைத்து ஒப்புதல்களையும் அதிகாரிகள் வழங்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டுகிறார் சர்மா.

“இந்தச் சம்பவம் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையிலான கூட்டை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய மாசுபடுத்துவோர், அனைத்து மட்டங்களிலுமுள்ள அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்றிருப்பார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் சர்மா.

மேலும் இரண்டாம் கட்ட லாக்-டவுனிற்குப் பிறகு இந்நிறுவனம் இயங்க மத்திய அமைச்சரகத்திலிருந்து தடையில்லாச் சான்றையும் இந்நிறுவனம் பெற்றுள்ளதாகவும், “அவசியமான தொழிற்சாலை” என்ற அடிப்படையில் இந்த அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார் சர்மா.

டில்லியில் செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “ஸ்டைரீனை அதற்குப் பொருத்தமான வெப்ப நிலையில் வைக்கத் தவறியதே இந்தப் பிரச்சினையின் காரணமாகும். அதிக வெப்பம், அதிக அழுத்தத்தை கொள்கலன்களில் ஏற்படுத்தியதன் விளைவாக, பாதுகாப்பு வால்வுகள் உடைந்து ஸ்டைரீன் வாயு வெளியேறியுள்ளது. மேலும் ஸ்டைரீனை சேமிக்கப் பயன்படுத்திய கொள்கலன்கள் பழையனவாகவும், முறையாகப் பராமரிக்காமலும் விடப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கொள்கலனில் உள்ள ஸ்டைரீனின் நிலையை கண்காணிக்கும் பொறிமுறை எதுவுமே அந்த ஆலையில் நிறுவப்பட்டிருக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை.
“மீண்டும் ஆலையைத் துவக்கும் அவசரத்தில், பராமரிப்புக்கான முன்னெச்சரிக்கை செயல்முறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றத் தவறியதும், போதுமான வெப்பநிலையில் ஸ்டிரைன் கொள்கலன்களை பராமரிக்காததும் இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணம்.” என்று தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

அறிவியல் துறைசார் வல்லுனர்கள் மற்றும் சுற்றுச் சூழலியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த ஆலை போதுமான அனுமதியில்லாமல், போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், செயல்பட்டு வந்ததே 13 அப்பாவிகளின் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாகும். விசவாயுக் கசிவு, விபத்து என்றெல்லாம் அழைக்கப்பட்டு வரும் இந்த நிகழ்வை சரியாகக் குறிப்பிடவேண்டுமெனில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் இலாப வெறிக்காக நிகழ்த்தப்பட்ட படுகொலை என்றுதான் குறிப்பிட முடியும்.

1984-ல் நடந்த போபால் விசவாயுப் படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத நிகழ்வு இது. போபாலை ஒப்பிடுகையில் அங்கு கசிந்த மெத்தில் ஐசோ சையனைட் (methyl isocyanate) என்ற இரசாயனத்தின் நச்சுத் தன்மையை விட ஸ்டைரீன் மோனோமெர் (Styrene Monomer) ஒப்பீட்டளவில் குறைவான நச்சுத்தன்மை கொண்டதாக இருந்ததால் மட்டுமே மரணம் 13-ஆக இருந்தது. இல்லையெனில் போபாலைப் போல இங்கும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்திருப்பர்.

இன்னும் இரண்டு வாரங்களில் (மே 22) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் லாபவெறியாட்டத்தின் குறியீடான தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவுநாள் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியாட்டத்தின் குறியீட்டை மே 7-ல் விசாகப்பட்டிணம் சந்தித்திருக்கிறது.

போபால் தொடங்கி தற்போது விசாகப்பட்டிணம் வரை கார்ப்பரேட் லாபவெறியின் குறியீடுகள் கெக்கலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நாமும் சில வாரம் அவற்றை அங்கலாய்த்துவிட்டுக் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். கார்ப்பரேட் – அரசு கூட்டு அவ்வப்போது கோரமாக அம்பலமான பின்னரும், இந்த அரசு நம்மைக் காப்பாற்றத்தான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நம்புகிறோமெனில் கசாப்புக் கடைக்காரன் தன் பசியைப் போக்கத்தான் தீனி போடுகிறான் என நம்பும் ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Vizag gas leak: Don’t have green nod, company told state last May
♦ Vizag gas leak: Company compromised safety standards, activists allege

மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கோ மீட்பு நடவடிக்கைக்கோ ஆர்வம் காட்டாத தமிழக அரசு, நீதிமன்றத்தில் போராடி டாஸ்மாக்கை மீண்டும் திறந்திருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அச்செய்திகளின் தொகுப்பு…

***

சென்னை வேளச்சேரி, முகப்பேர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில்,  டாஸ்மாக் சாராய கடைகள் திறப்பதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! பெருவளப்பூர் மக்கள் ஆவேசம் !

கொரானா தொற்றின் கோரதாண்டவம் அதிகரித்துள்ளதை அன்றாட செய்திகள் அறிவிக்கின்றன. கொரானா சமூகப் பரவலாகியுள்ளதை கோயம்பேடு சந்தை பறைசாற்றியுள்ளது. மக்கள் முன் எச்சரிக்கை மற்றும் திட்டமில்லாத தான்தோன்றித்தனமான ஊரடங்கில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சாராய ஆலை அதிபர்களை கட்சி வேறுபாடு இன்றி பாதுகாக்கவும், கொள்ளையடிக்கவும் வசதியாக கஜானாவை நிரப்பிக் கொள்ளவும் டாஸ்மாக் கடையை திறப்பதென பாஜக அடிமை எடப்பாடி அரசு அவசர முடிவெடுத்துள்ளது.

கொரானா பாதிப்பு அதிகமாகி இருக்கும் இந்தநேரத்திலும் 07-05-2020 முதல் டாஸ்மாக் விற்பனை ஆயத்த பணிகள் தொடங்கிய உடனேயே ஆங்காங்கு மக்கள் எதிர்ப்பு வலுப்பெற தொடங்கியது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு வெளிவந்த உடனேயே முற்றுகை போராட்டத்தை பெருவளப்பூர் மக்கள் அறிவித்தனர்.

முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் தயாராகி கொண்டிருந்த நிலையில்,
மக்களின் கோபத்தை உணர்ந்த காவல்துறை தண்டோரா மூலமாக காலை 8.30 மணிஅளவில் கடையை திறக்க மாட்டோம் என அறிவித்தது. போராட்டத்திற்க்கு ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், பல்வேறு கட்சியினரும், சாதி, மத வேறுபாடின்றி அணி திரண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அரசுதரப்பின் அறிவிப்பின் உண்மை தன்மையை அறிய கடை திறக்கும் நேரம் வரை மக்கள் காத்திருந்தனர். என்னதான் இருந்தாலும் காவல்துறையின் பேச்சை நம்ப முடியாது அல்லவா ! கடை உண்மையில் திறக்கப் போவது இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், மக்கள் நம்பிக்கை பெற்றனர். போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களான பெருவை மணி, இராசேந்திரன் மற்றும் திமுக சார்பில் TKR மோகன் அவர்களும் அனைத்துக் கட்சிகள் அமைப்புகளின் முன்னணியாளர்களும் மீண்டும் கடையை திறந்தால் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்குமிடத்தில் தனி மனித இடைவெளியுடன் கூடி ஆர்ப்பாட்டம் மூலம் எச்சரித்தனர்.

தற்போது காவல்துறை கடையை திறக்க மாட்டோம் என்று கூறியிருப்பது தற்காலிக வெற்றிதான். என்ன இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் அரசாங்கம் அதிக அளவில் போலீசாரை கொண்டு வந்து கடையை திறக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

எனவே ஊர் பொது மக்கள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி டாஸ்மாக் கடையை அரசாங்கம் எப்போது திறந்தாலும் இழுத்து மூட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் இன்னும் அதிக அளவில் மக்கள் பங்கு பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்

அது மட்டுமின்றி டாஸ்மாக் சரக்கை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் சில நபர்கள் அதை கண்டிக்கும் வகையில் இனி பிளாக்கில் விற்றாலோ அல்லது கடையை திறந்தாலோ பாட்டில்களை உடைப்போம் என மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

***

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில், டாஸ்மாக் சாராய கடை திறக்க கூடாது என எதிர்த்து போராடிய தோழர்களை ஆவலூர் காவல் துறை கைது செய்துள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பில் 07.05.2020 அன்று காலை 10 மணிக்கு  சித்திரப் பட்டு கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஒருங்கிணைந்து டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று ஆர்பாட்டம் நடத்தினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

***

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு, பொய்கை அரசூர் பகுதியில் எடப்பாடி அரசு டாஸ்மார்க் திறப்பதை கண்டித்து கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொய்கை அரசூரில் தோழர் ஞானஒலி தலைமையிலும் காரப்பட்டில் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது, கொரோனாவில் மக்களை பாதுகாக்காத அரசு டாஸ்மாக்கை திறந்து மக்களை கொல்ல கேவலமாக நடந்து கொள்வதை அம்பலப்படுத்தி தோழர் மாயவனும், தோழர் அம்பேத்கரும் உரையாற்றினார்கள்.

மேலும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி போர் குணமான முழக்கம் போடப்பட்டது. 144 தடை உத்தரவு இருந்தும் அதை மீறி ஒவ்வொரு பகுதியிலும் தலா 50 பேர் கூடினர் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கொரோனோ வைரஸ் பரவுதலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இந்த 40 நாள் ஊரடங்கில் பெருந்திரளான பொதுமக்களுக்கு அரசு கொடுத்த நிவாரண தொகை வெறும் 1000 ரூபாய் ஆனால் வெறும் 50 முதல் 60 வரை உள்ள முதலாளிகளுக்கு அதுவும் வங்கியே திவாலாக காரணமாக இருந்த முதலாளி உட்பட அவர்களுக்கு 60000 கோடி அதாவது ஒரு முதலாளிக்கு தலா 2000 கோடி வரை தள்ளுபடி செய்து இருக்கிறது இந்திய அரசு.

இதை கேள்வி கேட்க கூட திராணி இல்லாமல் நிற்கிறது எடப்பாடி அரசு. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தரவேண்டிய GST பணம் பல கோடிகள் இன்னும் வரவில்லை. இதை கேட்க வாய் வராமல் எடப்பாடி அரசு கோமாவில் விழுந்து விட்டது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருசில தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு பண உதவியும் உணவு பொருளும் கிடைத்தது.

இக் காலகட்டத்தில் மக்களுக்கு போதிய நிவாரண நிதி மற்றும் மருத்துவ வசதி, இரவும் பகலும் கொரோனோவுடன் போராடும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் போன்றோர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் சிறப்பு சம்பளத் தொகை இவையேதும் செய்யாமல் ஏற்கனவே அழிவின் விழும்பில் இருக்கும் குடும்பங்களை படுகுழியில் தள்ளும்விதமாக டாஸ்மாக்கை திறந்திருக்கிறது தமிழக அரசு.

குழந்தைக்கு பால் வாங்க பிஸ்கட் வாங்க பணம் இல்லாமல் மணலைத் தின்று இறந்த குழந்தைகள், குழந்தையுடன் கிணற்றில் விழுந்த குடும்பங்கள், குழந்தையுடன் தூக்கில் தொங்கிய குடும்பம் என்று வறுமை நிலை இப்படி இருக்க ஆனால் இந்த வெக்கங்கட்ட அரசு டாஸ்மாக்கை திறந்து மீதமுள்ள குடும்பங்களையும் அழிக்க திட்டமிட்டுள்ளது.

இதனை கண்டித்து “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பெண்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசை வீதியில் வைத்து கேள்வி கேட்க வேண்டும்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவையில் டாஸ்மாக்கை திறக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருப்பூரில் கொரானா-வில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது டாஸ்மாக்கை திறந்து, மக்களை மரண குழியில் தள்ளும் எடப்பாடி அடிமை அரசை கண்டித்து,  மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் வி. சி. க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ருமபுரி மாவட்டத்தில், உள்ள கள்ளிபுரம், கரியம் பட்டி மற்றும் கரியம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்ராம்பாளையம் பகுதியில் டாஸ்மாக்கை திறக்காதே, தமிழக பெண்களின் தாலியை அறுக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் உடன் இணைந்து மக்கள் அதிகாரம்  தோழர்கள் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !

டலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள (பெண்களின் தாலியறுக்கும்) டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மக்கள் அதிகாரம் தோழர்கள் 15 பேர் எடப்பாடி அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக் கோரியும் பதாகைகளுடன், முழக்கங்களை எழுப்பி டாஸ்மாக் கடை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தை கவனித்தனர், சிறிது நேரம் கழித்து காவல் துறையினர் தோழர்களை கைது செய்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர், தொடர்புக்கு : 81108 15963.

படிக்க:
♦ கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?

***

கொரானாவில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது, டாஸ்மாக்கை திறந்து மக்களை மரண குழியில் தள்ளும் வேலையை செய்கிறது அடிமை எடப்பாடி அரசு. இதனை கண்டித்து, விருத்தாசலம் கடலூர் சாலையில் (ஸ்டேட் பேங்க் எதிரில்) மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்திய தோழர்களை தற்போது போலீசு 20 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம். தொடர்புக்கு : 97912 86994.

***

டாஸ்மாக்கை இழுத்து மூடுபோராட்டம் நடத்திய திருச்சி மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது!

குடும்பத்தை சீரழிக்கும் –
டாஸ்மாக்கை மூடு

மக்களிடம் வழிப்பறி செய்யும் –
டாஸ்மாக்கை மூடு

கொரனா தொற்றை உருவாக்கும் –
டாஸ்மாக்கை மூடு

குழந்தைகள் கல்வியை பறிக்கும் –
டாஸ்மாக்கை மூடு
மன நோயாளியாக்கும் –
டாஸ்மாக்கை மூடு!

வருமானம் முக்கியமா?
மக்களின் வாழ்க்கை முக்கியமா?

வருமானம் பெருக்க டாஸ்மாக்கு திறப்பாம்
சொல்லுறாறு முதல்வரு
உண்மையா?உண்மையா?

எடப்பாடி கூறுவது
உண்மையா?உண்மையா?

வருமானம் வர வழி சொல்லுறோம்.
கடைய மூடுவியா? எடப்பாடி அரசே ?

G ST பங்கு நிதிய
கொரோனா தடுப்பு நிதிய ….
மத்திய அரசிடம் வசூல் செய்!

மாணவர் நடத்திய ஜல்லிக்கட்டை
மறந்து போனதா தமிழகம்.
மெரினாவை திறந்து விடு
மோடி அரசை பணிய வைப்போம்.

கல்வி கொடுக்க வக்கில்ல….
வேலை கொடுக்க துப்பில்ல….
நோய் பரப்பும் டாஸ்மாக்கை
திறக்கப் போற ஊருக்குள்ள….

சசிபெருமாள் உயிர் நீத்ததை,
பச்சையப்பன் கல்லூரி மாணவர் இரத்தம் சிந்திய
போராட்டத்தை விரயமாக விடமாட்டோம்!

காவல்துறையே காவல்துறையே
சாராயம் காய்ச்சினால் கைய உடைக்கிற…
சவுக்கு தோப்புல ஊரல் அழிக்கிற…
கொரோனா தடுக்கும் பணிய விட்டு
சரக்குக்கு காவல் காக்குற ….

மேற்கண்ட முழக்கங்களை எழுப்பி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி உறையூர் கடைவீதியில் இன்று காலை மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஊரடங்கையும் காவல் துறை தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைபின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ந.க. தமிழாதன் , தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் வின்சென்ட் | ம க .இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் முன்னாள் பொதுச் செயலர் தோழர் சுந்தர ராசு மற்றும் தோழர்கள் கைது செய்யப்பட்டு புத்தூர் முகூர்த்தம் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக உறையூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதீன், தோழர் வின்சென்ட் தந்தை பெரியார் திராவிடர் கழகம்.மா. தலைவர் வாழ்த்தி பேசினார். தோழமை அமைப்பினர் இசுலாமிய நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோசமிட்டனர். ஏராளமான பொதுமக்கள் கூடி ஆதரவளித்தனர். பல காவலர்கள் இவ்வளவு நாள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வாங்கிய நற்பெயர் கெட்டு போய் விட்டதாக நொந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !

குமரெட்டியாபுரத்தில் வெள்ளத்தாயம்மாள் ஸ்டெர்லைட் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கையெழுத்து வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் கடந்த 25-04-2020 அன்று சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவர் மீது பிப்ரவரி 2018-ல் ஸ்டெர்லைட் விரிவாக்க இடத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக ஒரு வழக்கு இருப்பதாகவும் அது சம்பந்தமான விசாரணைக்கு 26-04-2020 அன்று சிப்காட் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் ஆஜரான இவரை ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெறக் கூடாது என்று காவல் ஆய்வாளர் மிரட்டியுள்ளார். குமரெட்டியாபுரத்தில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக இருந்தாலும் வெள்ளத்தாயம்மாள் முன்னணியாளராக இருப்பதால் காவல்துறை மூலம் இவ்வாறு ஒடுக்கப்படுகிறார். ஆனால் அதேவேளையில் தெற்கு வீரபாண்டியபுரத்தில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் நிவாரணப் பொருள் வழங்குவதை தடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை.

பண்டாரம் பட்டியில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் அரசு அனுமதி வாங்காமல், சமூக இடைவெளியின்றி – முகக்கவசமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கியதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய சகாயம், சந்தோஷ் மற்றும் ஊர் நாட்டாமைகள் மீது ஸ்டெர்லைட்டின் மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர் என்று அறியப்பட்ட தனலட்சுமி புகார் கொடுக்கிறார். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அன்று ஏற்பட்ட பிரச்சனையில் மாரியம்மாள் என்பவர் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார். 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் காவல்துறை மாரியம்மாளிடம் புகார் வாங்கவே இல்லை.

சந்தோஷ் கல்லூரி மாணவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டதில் வீரியமாக கலந்து கொண்டவர். ஊர் நாட்டாமைகள் கிராம மக்கள் எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்றுவரை தோள் கொடுக்கிறார்கள்.

மீளவிட்டானில் முத்து அவர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்கனவே சிறை சென்றவர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இன்றுவரை உறுதியாக இருப்பவர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எந்த உதவிகளையும் வாங்குவதில்லை என்ற கிராம மக்களின் முடிவில் துணை நிற்பவர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றுபவர் ஸ்டெர்லைட் ஆதரவாளராக இருப்பதாகவும், தண்ணீர் ஏற்றாமல் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே உருவாக்குவதாகவும் அவர் மீது ஊர் மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். குற்றச்சாட்டு அடிப்படையில் டேப் இன்ஸ்பெக்டர் வரும் போது அவரை பணிசெய்ய விடாமல் முத்து உட்பட நால்வர் தடுத்ததாக புகார் செய்து அதனடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பணியை சரிவர செய்யவில்லை என்பது தான் ஊர் மக்களின் உண்மையான குற்றச்சாட்டு.

படிக்க:
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
♦ கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !

முத்து அவர்களை சிறை வைக்க காவல்துறை கொடுக்கும் விண்ணப்பத்தினை நீதித்துறை நடுவர் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பிணையில் விடுவதற்கு தான் உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஏனெனில் உயர் நீதிமன்ற வழி காட்டுதல்படி கொடுங்குற்றம் புரிவோர் மட்டுமே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆனால் இந்த வழக்கில் முத்து அவர்களை நீதித்துறை நடுவர் ரிமாண்ட் செய்தது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஒருவேளை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்தாலும், கொலை குற்றத்துக்கு சமமாக பாவிக்கப் படுகிறதோ என்னவோ?

இப்போது இந்த மூன்று வழக்குகளிலும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். முதலாவதாக குமரெட்டியாபுரம் வெள்ளையம்மாள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. 2- வதாக பண்டாரம்பட்டியில் சகாயம், சந்தோஷ், ஊர் நாட்டாமைகள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆனால் காவல் நிலைய ஜாமினில் விடாமல் கைது செய்ய காத்திருக்கிறார்கள். மூன்றாவது முத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வருகிறார்களா? இல்லையா? என்று மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்து, கடைசியில் முத்து அவர்களை கைது செய்வது வரை காவல்துறை சென்றுள்ளது.

தமிழக அரசிற்கு 5 கோடியை ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பின்பு ஸ்டெர்லைட்டின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறு அவதாரம் எடுத்துள்ளது.

இவ்வளவு செல்வாக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இருந்தும் அவர்கள் நினைத்ததை அத்தனை சுலபமாக நடத்தி முடிக்க வெள்ளத்தாயம்மாக்களும், சந்தோஷ்களும், முத்துக்களும் பெரும் தடையாக இருப்பதால் வழக்கு, ஜெயில் என ஒடுக்கப்படுகிறார்கள்.

ஸ்டெர்லைட் விவகாரம் தற்போது பத்திரிக்கை – ஊடகங்களில் பேசும் பொருளாக இல்லை என்பதால், நாங்கள் எங்களுடைய உரிமைகளுடனும், சட்டத்திற்குட்பட்டும் நடத்தப்படுகிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

பலம் வாய்ந்த வேதாந்தா கார்ப்பரேட்டுடன் நாங்கள் தினமும் போராடுவது சுகாதாரமாக வாழ்வதற்காக! நம்மை நம்பி போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக! சல்பர் சனியனிலிருந்து நமது சந்ததிகளை நிரந்தரமாக வாழ வைப்பதற்காக!

எனவே,
தூத்துக்குடி மக்களுக்காக குரல் கொடுங்கள்!

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு கிராமம் சார்பாக கோவில் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றினைந்து “நமக்கு நாமே கரம் கோர்ப்போம்! கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்வோம்!!” என்ற பதாகையின் கீழ் 05.05.2020 காலை 10 மணியளவில், 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் கடலை எண்ணை என வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது.

இதற்கான தொகை அரசு உதவியோ அல்லது தனிநபர் மூலம் நன்கொடை பெற்றோ செய்யவில்லை, மாறாக காரப்பட்டு கிராமத்தில் வசிக்கும் மக்கள், கோவில் திருவிழாவிற்காக சேமித்துவைத்த சுமார் 1-லட்சம் ரூபாய் வீணாக முடங்கி கிடப்பதைவிட அல்லது திருவிழா என்ற பெயரில் அதிக ஆடம்பரம் செய்வதைவிட இந்த கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு முற்போக்கான விசயத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

குறிப்பாக காரப்பட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக குழுவில் உள்ளவர்கள் கடவுள் பக்தி என்று இருந்தாலும், பகுத்தறிவோடு இந்த தருணத்தில் செயல்பட்டது மக்கள் மத்தியிலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியிலும் அக்கம் பக்கத்து கிராமங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
காரப்பட்டு.

தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !

0

வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட இந்த மே தினத்தை சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மே தினம் என கல்வியாளர்களும் தொழிற்சங்க இயக்கங்களும் குறிப்பிடுகின்றன. பணியமர்த்துதல் மற்றும் பணிநீக்கத்தை எளிதாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் நிலையில், ஐந்து மாநிலங்கள் சத்தமில்லாமல் பணி நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக சட்டப்பூர்மாக மாற்றியுள்ளன.

மே தினம் தொழிலாளர்களின் உரிமைகள் கொண்டாடப்படுவதைக் குறிக்கிறது. ஆனால் இந்த மே 1, கோவிட் -19 நெருக்கடியால் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, பல தசாப்த கால போராட்டத்தின் மூலம் அவர்கள் பெற்ற சில உரிமைகளையும் இழந்துள்ளனர்.

மேற்கு வங்கம் கே.ஆர். ஜாம்ஷெட்பூரின் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தொழிலாளர் ஆய்வுகள் பேராசிரியர் சியாம் சுந்தர், இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் “19 ஆம் நூற்றாண்டின் தொழிலாளர் சுரண்டல் மாதிரியை மீண்டும் கண்டுபிடித்து வருகின்றன” என்கிறார்.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்பும்போது, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்படலாம்.

குஜராத்தில், முதல் எட்டு மணிநேரங்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தையே கூடுதலாக பணியாற்றும் நேரத்துக்கும் அவர்களுக்கு வழங்கப்படும். தொழிற்சாலைகள் சட்டம் கூடுதல் மணிநேரங்களுக்கு இரண்டு மடங்கு ஊதியத்தை கட்டாயம் தர வேண்டும் என்கிறது.

1940களில் அம்பேத்கரின் முயற்சியின் மூலம்தான் தொழிலாளர்களின் அன்றாட பணி நேரம் 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலையும், வாரத்தில் 48 மணிநேரமும் நிர்ணயித்தது, வாரத்திற்கு அதிகபட்சம் 60 மணிநேரம் கூடுதல் பணி நேரத்திற்கான ஊதிய விகிதத்தில் இரட்டிப்பாக செலுத்த வேண்டும் என சொல்கிறது..

படிக்க:
♦ மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?

தொழிலாளர் பொருளாதார நிபுணர் அமிதாப் குண்டு, ஐந்து மாநிலங்கள் அனைத்து துறைகளிலும் வேலை நேரத்தை அதிகரிக்கும் முடிவை கேள்வி எழுப்பினார்.

“ஒரு அவசர நடவடிக்கையாக, குறிப்பிட்ட துறைகளில் மாநிலங்கள் வேலை நேரத்தை அதிகரிக்க முடியும், ஓய்வு, சுகாதாரம், உணவு, தங்குமிடங்கள் போன்ற சில சலுகைகள் பணியிடங்களில் தருவதன் மூலம் வேலை நேரத்தை அதிகரிக்கலாம். ஆனால் அனைத்து துறைகளிலும் வேலை நேரம் அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என்கிறார் அவர்.

சுரங்க மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் அதிகரித்த வேலை நேரமும் கவனிக்கத்தக்கது. வேலை நேரத்தை அதிகரிக்கும் போது, பணியிட சூழலை மேம்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உள்ள தொழில்சாலைகள் தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்யும் வியர்வை உழைப்பை சுரண்டிய மாதிரியைப் போல, ஐந்து மாநில அரசாங்கங்கள் முதலாளிகளைச் செய்ய அனுமதிக்கின்றன” என்கிறார் சியாம் சுந்தர்.

பொது அவசரத்தை முன்வைத்து வேலை நேரத்தை அதிகரிக்கலாம் என தொழிற்சாலைகள் சட்ட பிரிவு 5 கூறுவதை குஜராத் அரசு முறையற்ற முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் விமர்ச்சிக்கிறார்.

“சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, ஒரு பொது அவசரநிலை என்பது போர் போன்ற இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளிப்புற அல்லது உள் அச்சுறுத்தலை தரக்கூடிய சூழல் என சொல்கிறது. கோவிட் -19 தொற்றுநோய் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பொது அவசரநிலை அல்ல” என அவர் கூறுகிறார்.

ஜேஎன்யூ-வின் அமைப்புசாரா துறை மற்றும் தொழிலாளர் ஆய்வுகள் மையத்தின் தலைவர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, இந்த ஆண்டின் மே தினம் நிச்சயமாக சமீபத்திய ஆண்டுகளில் மிக மோசமானது என்கிறார்.

ஏற்கனவே, மோசமான வேலையின்மை பிரச்சினை இருந்த நிலையில், கோவிட் -19 பிரச்சினையால் அது இன்னும் மோசமடைந்துள்ளது என்கிறார் அவர்.

படிக்க:
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

“அமெரிக்காவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 25 மில்லியன் மக்கள் வேலையின்மை காப்பீட்டிற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் இதே நிலைதான் உள்ளது. 2018 ஆம் ஆண்டில், இந்தியா 45 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகமான வேலையின்மை விகிதத்தைக் கண்டது; தொற்றுநோய் காரணமாக இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது” என்கிறார் மெஹ்ரோத்ரா.

காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு அசோக் சிங், மோடி அரசாங்கம் தொழிலாளர் விரோதமாக நடந்து கொள்கிறது என குற்றம்சாட்டுகிறார். கடந்த குளிர்கால கூட்டுத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்துறை உறவுகள் வழிகாட்டு மசோதாவை அவர் குறிப்பிட்டு பேசுகிறார்.

இந்த மசோதா 100 ஊழியர்கள் வரை அரசின் எந்தவொரு அனுமதியும் இன்றி பணிநீக்கம் செய்ய முதலாளிக்கு அனுமதி அளிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஒரு கூட்டத்தை கூட அழைக்கவில்லை. இது ஒருபோதும் ஆலோசனையை நம்பவில்லை. நீண்ட போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் அடைந்த சலுகைகள் திரும்பப் பெறப்படுகின்றன. நாங்கள் அனைத்து தொழிலாளர் சங்கங்களும் ஏப்ரல் 21 அன்று சமூக ஊடகங்கள் வழியாக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினோம்” என்கிறார் அவர்.

சிபிஎம் ஆதரவு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தபன் சென், “கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு அதிக நிதி தருவதால், அவர்களாக தொழிலாளர் சட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

“தனியார் முதலாளிகள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவோ அல்லது சம்பளத்தை குறைக்கவோ கூடாது என அரசாங்கங்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. நிச்சயமாக, இது நூற்றாண்டின் கடுமையான மே தினம் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் சென்.


– கலைமதி

நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். சாதாரண நாட்களிலேயே போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தொற்று காலகட்டத்திலும் அதே நிலையில்தான் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சீனிவாசலுவிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு சீரிய விளக்கமளித்தார்.

***

மிழகத்திலேயே கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சென்னையில், துப்புரவு பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்கிறது ?

கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்.

தோழர் சினிவாசலு (கோப்புப் படம்)

சென்னையில் பதினைந்து மண்டலங்களில் மட்டும் 6,401 பேர் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர். இது போக ஒப்பந்தப் பணியாளர்கள், என்.யு.எல்.எம் தொழிலாளர்கள், டி.பி.சி மற்றும் ராம்கி ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் என சுமார் 22,430 பேர் பணியாற்றுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கும் அவலங்களை சென்னையின் சில உதாரணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
தற்போது சென்னை முழுவதும் நோய் தொற்று பரவாலாக அதிகரித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்வதில்லை.

தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்கிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர், வாரத்திற்கு ஒரு மாஸ்க், சில இடங்களில் வாரத்திற்கு 2 மாஸ்க் மட்டுமே தருகின்றனர். இவர்களைப் பொருத்த வரையில் ஒரு மாஸ்க்கை ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. அதேபோல் அவர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரப்படவில்லை. தொழிலாளர்கள் பணி முடிந்து வந்தால் கூட வெறும் தண்ணீரில்தான் கையைக் கழுவுகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

படிக்க:
♦ நீடிகப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி
♦ மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !

கொரோனா தொற்று இல்லாத காலங்களிலும் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். அப்போதே பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை கிடப்பில் போட்டார்கள். இவ்வசாதாரண அபாய காலத்திலாவது முறையாக கொடுக்க வேண்டாமா?

துப்புரவுப் பணியாளர்களின் வேலை நிலைமைகள் எவ்வாறு உள்ளது ?

கொரோனா தொற்று தடுப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்தான் முதன்மையானவர்கள். அதிகாலை 5 மணிக்கு பணிகளை தொடங்க வேண்டும். எந்த பாதிப்பாக இருந்தாலும் முதலில் தூய்மை பணியாளர்தான் சந்திக்க நேரிடும். இது போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களும் மனமுவந்து அவர்களும் பணியாற்றுவார்கள்.
அவர்களுக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தோம். தொற்று பரவியியுள்ள வீடுகளில் உள்ள குப்பையை அகற்றுவதற்குகூட போதிய பாதுகாப்பு உபகரணம் இல்லை. “தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் கடமை. எல்லோருக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ளோம்” என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், ஊழியர்களிடம் கேட்டால் தரவில்லை என்று கூறுகின்றனர்.

அப்படியானால் பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே சென்றன?

லாக்டவுன் அறிவித்த பிறகு, மார்ச் மாத அறிக்கையின்படி சுமார் 17,944 பேர் அதாவது 80 விழுக்காட்டினர் வேலைக்கு வந்துள்ளனர். இதுபோக மண்டலங்களில் உதிரியாக பணியாற்றுபவர்கள் 2,250 என மொத்தம் 20,194 பேருக்கு கணக்கீடு செய்து, ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.100 வீதம், 15 நாட்களுக்கு ரூபாய் மூன்று கோடியே மூன்று லட்சத்து இருபதாயிரம் தேவைப்படும் என்று (ரூ.303,20,000) 28.03.2020 அன்று ஒரு எஸ்டிமேட் கொடுக்கிறார்கள்.

இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்து கேட்கப்பட்ட போது 20.04.2020 அன்று ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். அதில் 15 மண்டலங்கள், 3 வட்டார அலுவலகம், எலட்ரிகல், மெக்கானிகல், திடக்கழிவு மேலாண்மை துறை, கட்டிட பராமரிப்பு, மற்றும் சுகாதாரம் என்று பெரிய பட்டியலே போட்டு 17 கோடியே 99 லட்சத்து 19 ஆயிரத்து 726 ரூபாய் செலவாகி இருப்பதாக சொன்னார்கள்.

இவற்றில் திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு மட்டும் 10 கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 732 ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். பில்டிங் பராமரிப்பு செலவு 76 லட்சத்து 34 ஆயிரம். ஆனால் 20,194 தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரத்திற்கு செய்த செலவு வெறும் 85 லட்சம்தான். ஒரு கட்டிடத்திற்கு கொடுக்கும் மதிப்பு கூட பணியாளர்களின் சுகாதாரத்திற்கு இல்லை. இவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

லாக்-டவுன் சமயத்தில் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றதா ?

ஊரடங்கு அமலில் உள்ளதால் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வருவது சிரமம். 100 பேருந்து மட்டும் விட்டிருக்கிறார்கள். அதில்தான் பல தடங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. அங்கே சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான சூழலே இல்லை. பலர் குப்பை வண்டி, லாரிகளில் பணிக்கு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளிகள்.

படிக்க:
♦ PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

தன்னார்வலர்கள் கொடுத்தது போக, மாநகரட்சியிலிருந்து காலை, மதியம் இரண்டு வேளை உணவு தருகிறார்கள். உண்மையில் சாப்பிட முடியவில்லை என்கிறார்கள் தொழிலாளர்கள். ஆனால், அதனை பெரிய குறையாக சொல்லவில்லை. இந்த சூழலில் பசிக்கு தருகிறார்களே… அதுபோதும் என்ற மன நிறைவு மட்டுமே பணியாளர்களிடம் உள்ளது. மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்க களத்தில் நமது பணி பிரதானமானது என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. அதற்காக எங்களுக்கு அச்சம் இல்லை என்பதல்ல. அதனைவிட, நாங்கள் முடங்கினால் பலரும் தொற்றுக்கு பலியாகி விடுவார்களே என்ற கவலை எங்களை களப்பணியை நோக்கி தள்ளுகிறது.

தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா ? எத்தனை தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ?

எங்களில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்பது கூட தெரியாது. எங்களிடமிருந்து மற்றவர்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் பரவி விடக்கூடாது என்பதாலேயே தொடர்ந்து சோதனை செய்ய வலியுறுத்தினோம்.

சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்றும் புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். பாத பூஜையும் கூட செய்கிறார்கள். இதெல்லாம் வெற்று ஜாலம்.

தூய்மைப் பணியாளர்கள் வாழும் பகுதிகள் மிகவும் அடர்த்தியானவை. சென்னையில் சுமார் 16 இடங்கள் தூய்மைப் பணியாளர்கள் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். பத்துக்கு பத்து குடிசையில் 4, 5 பேர் வசிக்கிறார்கள். இங்கெல்லாம் தொற்று பரவினால் மிக மோசமான சூழலை சந்திக்க நேரிடும் என்பதால் பாதுகாப்பை அதிகப்படுத்தக் கோரினோம். ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கோ, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு வசதியை செய்யாததன் விளைவாக தற்போது நான்கு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு சுமார் 30 பேர் வரை பரவியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. உடனடியாக அனைவருக்கும் சோதனையை தீவிரப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். ஆனால் சோதனை செய்வதில் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

இவர்களிடம் போதிய சோதனைக் கருவியும் இல்லை. தற்போது பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியில் உள்ளனர். நாங்கள் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை சந்தித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி தர வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். தொற்று இருப்பது தெரிய வந்தால் மருத்துவ செலவு மற்றும் நிவாரணத் தொகை வழங்க நேரிடும் என்பதால்தான் இவர்கள் சோதனை செய்ய மறுக்கிறார்களோ அல்லது உண்மையை சொல்ல தயங்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் பற்றிய பார்வை இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களிடையே மாறியிருக்கிறதா ?

சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்றும் புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். பாத பூஜையும் கூட செய்கிறார்கள். இதெல்லாம் வெற்று ஜாலம். அதனால் எங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. இதே கொரோனா காலகட்டத்தில் தான் நாட்டின் பல இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல்களும் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.

சுனாமி, புயல், மழை வெள்ளம் என பல பேரிடர் காலங்களில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். அவற்றில் மக்களை காப்பதில் முதன்மையான பங்கு தூய்மைப் பணியாளர்களுக்கு இருந்தது. மோடி, எடப்பாடி உட்பட எல்லோரும் எங்களைப் போற்றலாம். மக்களும் எங்களைப் புகழலாம். பாத பூஜை செய்யலாம். அதனால் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை.
எங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் எங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் எங்களோடு கைகோர்த்து நில்லுங்கள் !

– வினவு செய்தியாளர்

மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !

மிழகத்தின் பல பகுதிகளில் உழைப்பாளர் தினமாம் மே 1 அன்று, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்படும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மட்டுமல்லாது, அவர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையிலும் போராட்ட நிகழ்வுகளையும் மேற்கொண்டனர்.

***

மே தினத்தில் மதுரை ஒத்தகடை பகுதி வாழ் எவர்சில்வர் தொழிலாளர்கள் மற்றும் அபே ஆட்டோ தொழிலார்கள் வீட்டிலிருந்தே குரலெழுப்பினார்கள். கொராவினாலும் அரசின் புறக்கணிப்பிற்கும் ஆளாகியிருக்கும்  இவர்கள் மாதம் ஆறாயிரம் நிதி வழங்கு!! மக்களை பாதுகாத்திடு!! என்ற பதாகைகளுடனும்.

அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் 40 நாட்களாக முடங்கியிருக்கும்  மக்களை எப்படி பாதுகாக்கும் என்ற கேள்வியுடனும் பரவலாக குடும்பமாக கலந்து கொண்டார்கள். முன்மாதிரியாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் குடும்பங்கள் மற்ற மக்களுக்கும் ஒரு தூண்டுதல்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதே போல மதுரை பகுதி பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க தோழர்களும் மே தினத்தில் தோற்றுப்போன முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்ற முழக்கங்களுடனும் வீட்டிலிருந்தே குரலெழுப்பினார்கள்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை, தொடர்புக்கு : 82200 60452, 97916 53200.

***

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுர் வட்டம் சார்பில் பொய்கையரசூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் மே-1 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தோழர்கள் மக்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மே-நாள் போராட்டத்தை நினைவு கூர்ந்து ஊரடங்கு உத்தரவு என்ற பெயரில் மக்கள் உரிமையை பறிக்கும் இந்திய அரசை கண்டித்து காட்டமான முழக்கமும், உரையும் பதிவு செய்யப்பட்டன.

இறுதியில் பொய்கையரசூர் பகுதியில் இருக்க கூடிய ஜனநாயக சக்கிகளிடம் மக்களை கொரோனா நெருக்கடியிலிருந்து உணவு ரீதியாக பாதுகாக்கும் வகையில் நிதிஉதவி பெற்று குறிப்பாக 45 அரிசி மூட்டை பெற்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ என்ற அடிப்படையில் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் மேலும் நமது அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்பட்த்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்படிக்கு
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணைநல்லுர் வட்டாரம்.

தஞ்சை : நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் !

ஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள ஐயந்திருவள்ளுவர் நகர்,உப்பரிகைத்தெரு, வனதுர்கா நகர், சரஸ்வதி நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற பெண்கள் கொண்ட எழுபது குடும்பங்களுக்கு அரிசி, மசாலாப் பொருட்கள் கொண்ட தொகுப்பு மக்கள் அதிகாரத்தின் சார்பில் கொரோனா நிவாரண உதவியாக 01.05.2020 அன்று வழங்கப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தேவா, பாலாஜி, பொறியாளர் சந்திரமோகன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.