Tuesday, August 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 262

நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !

“இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தேவையையும் மருத்துவர்களின் பற்றாக்குறையையும் ஈடுகட்டும் அளவிற்கு மைய, மாநில அரசுகளிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், அரசு – தனியார் கூட்டு (PPP) அடிப்படையில் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தனியாரை அனுமதிக்கலாம்” என கடந்த ஜனவரி மாதத்தில் நிதி ஆயோக் பரிந்துரைத்தது. இந்த அபாயகரமான பரிந்துரைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்த பின்னும் அது பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், நிதி ஆயோக்கின் பரிந்துரையை பட்ஜெட் அறிவிப்பாகவும் வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு.

இப்பரிந்துரையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மைய அரசு நிதியுதவியும் அளிக்கும் என்ற தூண்டிலையும் போட்டிருக்கிறது, மைய அரசு.

தனியாரிடம் ஒப்படைக்கப்படும் அம்மருத்துவமனைகளில் கட்டணமில்லா இலவச சிகிச்சை மற்றும் கட்டணத்துடன் கூடிய சிகிச்சை என இரண்டுவிதமான சிகிச்சைகள் வழங்கப்படுமென்றும், கட்டணத்துடன் கூடிய சிகிச்சையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அம்மருத்துவமனைகளைத் தனியார் நிர்வகிப்பார்கள் என்றும் நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரத் துறையைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லவும் மைய அரசு திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் சதி என்பதோடு, மாநில அரசுகளின் எதிர்ப்பையும் மீறி மருத்துவத் துறையில் தனியார்மயத் திட்டங்களை நிறைவேற்றவும் இந்த மாற்றம் மைய அரசிற்குப் பயன்படும்.

***

கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் எனக் கீழிருந்து மேலாக உருவாக்கப்பட்டுள்ள வலைப்பின்னலைக் கொண்டுதான் தமிழகத்தில் சுகாதாரத் துறை இயங்கிவருகிறது.

மாவட்ட அரசு மருத்துவமனைகளைத் தனியார்மயமாக்குவது கிராமப்புற மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதமாகும்.

இந்தியாவில் கேரளாவைத் தவிர்த்து, மற்ற பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பொது சுகாதாரமும் நோய்த்தடுப்பு சிகிச்சைகளும் சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பொதுமக்களுக்குக் கிடைத்துவருவதற்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்புதான் அடிப்படை ஆதாரமாக உள்ளது. இவ்வலைப் பின்னலின் ஒரு முக்கிய ஆதாரத்தைப் பிடுங்கித் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் இந்தக் கட்டமைப்பையே சிறுகச்சிறுக வீழ்த்தத் திட்டமிடுகிறது, நிதி ஆயோக்.

மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், கிராமப்புற, சிறு நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் இலவச சிகிச்சை கிடைக்க வழியின்றிக் கட்டண சிகிச்சை என்ற வலைக்குள் தள்ளப்படுவார்கள். இந்த அபாயத்தை உணர்ந்துதான் சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரும் சென்னை மருத்துவக் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியருமான அமலோற்பவநாதன், மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார் நிர்வகிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் எனத் தனது எதிர்ப்பைப் பகிரங்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

படிக்க:
எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

அரசு மருத்துவமனைகளில் எக்ஸ் – ரே, ஸ்கேன் உள்ளிட்ட சில ஆய்வக சேவைகளைக் கட்டணச் சேவைகளாக மாற்றி, அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்திருப்பது; கீழ்மட்ட ஊழியர்களை அவுட் சோர்சிங் என்ற முறையில் தனியார்மயபடுத்தியிருப்பது; மிக முக்கியமாக, அனைத்து வகை அறுவைச் சிகிச்சைகளுக்கும் மருத்துவக் காப்பீடைக் கட்டாயமாக்கியிருப்பது என்ற வகைகளில் தனியார்மயம் ஏற்கெனவே இந்தக் கட்டமைப்பை அரிக்கத் தொடங்கிவிட்டது. இதனின் அடுத்த கட்டமாக, மருத்துவமனை நிர்வாகத்தையே தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை எதிர்ப்புகளையும் மீறி அடாவடித்தனமாக எடுத்திருக்கிறது, மைய அரசு.

இத்தீமை 2017 -ஆம் ஆண்டிலேயே சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத். “சித்தூரிலுள்ள மாவட்ட மருத்துவமனையை அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது” எனச் சுட்டிக்காட்டும் அவர், “நாடு முழுவதும் உள்ள 1,50,000 துணை சுகாதார நிலையங்களை,  நல மற்றும் சுகாதார மையங்கள் என பெயர் மாற்றி, அவற்றை கார்ப்பரேட் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வசம் ஒப்படைக்கவும்; ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தை நடத்து (Run a PHC) என்ற திட்டத்தின் மூலம் அதனை  கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும்” நிதி ஆயோக் சதியாலோசனைகளை வைத்திருப்பதாக எச்சரிக்கிறார்.

அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைத்தால் சிகிச்சையின் தரம் மேம்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை குஜராத் மாநில அனுபவம் உணர்த்துகிறது. மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை அறிமுகப்படுத்தியதன் விளைவாக அம்மாநில அரசு மருத்துவமனைகளில் தனியாருக்கு நிகராகக் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் பத்திரிக்கையாளர் ரேமா ரங்கராஜன்.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தக் கோரிப் போராடுவதுதான் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்வாக அமையுமே தவிர, குறைபாடுகளைக் காட்டியோ, வேறு காரணங்களை முன்வைத்தோ அவற்றைத் தனியார்மயமாக்குவது, கட்டண முறைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை கண்ணை விற்று ஓவியம் வாங்கும் மூடத்தனத்திற்கு ஒப்பானது.

“அரசாங்கம் எதற்குத் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும்?” எனக் கேட்டுப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்றார்கள். அடுத்ததாக, நட்டம், நிர்வாகச் சீர்கேடுகளைக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்றார்கள். இப்பொழுது எல்.ஐ.சி.யின் மீது கைவைக்கத் துணிந்திருக்கும் ஆளுங்கும்பல், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவையும் அறிவித்திருக்கிறது. முந்தைய அரசுகள் ஆட்டை, மாட்டைக் கடித்தால், மோடி அரசோ மனுசனையும் கடிக்கத் துணிகிறது. இதனை அனுமதித்தால், ஏழைகளுக்குச் சிகிச்சையும் பொது சுகாதாரமும் இனி எட்டாக்கனிதான்.

பூங்குழலி

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

லேரியாவுக்கு பயன்படுத்தப்படும் Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு உலகின் பல நாடுகள் கையாள்கின்றன. இது, பலன் அளிக்கிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை. இருந்தாலும், ’கிடைக்கும் மருந்துகளில் ஓரளவுக்கு பயன் தரக்கூடியது’ என்ற அடிப்படையில், இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.

இந்த Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா ஆர்டர் கொடுத்திருந்த நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி அனைத்துவிதமான மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கும் இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மோடியுடன் பேசி, தாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மருந்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஆரம்ப கட்ட செய்திகள் வந்தன. ஆனால், இப்போது ட்ரம்ப் அப்பட்டமாக இந்தியாவை மிரட்டியிருக்கிறார்.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?

“உனக்கு குடுத்துட்டு, நாளைக்கு எங்க நாட்டுல பிரச்னைன்னா மருந்துக்கு எங்கே போறது? அதெல்லாம் தர முடியாது” என்று சொல்லப் போகிறாரா, அல்லது ‘அனுப்பி வைன்னா அனுப்பிடப் போறேன். அதுக்கு ஏன் இப்படி மிரட்டி, வேஸ்ட்டா எனர்ஜியை வீண் பண்றீங்க என் தெய்வமே..’ என்று கமுக்கமாக மருந்துகளை அனுப்பிவிட்டு, ‘பரஸ்பர நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பி வைத்தோம்’ என்று சொல்லப் போகிறாரா தெரியவில்லை.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அனுப்பி வைப்பதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வரத் தொடங்கிவிட்டதாக Livemint பத்திரிகையின் இணையச் செய்தி தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமாக இன்னும் வரவில்லை.

இந்தியாவுக்கு உரிய அளவில் கையிருப்பு இருக்கும்பட்சத்தில் இந்த மருந்தை அனுப்பி வைப்பதில் தவறேதும் இல்லை. நமக்கு நாளை, வேறு ஏதேனும் ஒரு மருந்துப் பொருள் தேவையெனில், அமெரிக்காவிடமோ, வேறு எந்த நாட்டிடமோ கேட்கத்தான் வேண்டியிருக்கும். இப்போதே வெண்டிலேட்டர்ஸ் போன்ற உபகரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

உலகின் அனைத்து நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாராள மனதுடன் ஒருவருக்கு ஒருவர் அள்ளிக்கொடுக்க முடியாது என்றாலும் இடர்காலத்தில் கொடுத்து உதவுவது அவசியம்தான்.

ஆனால், இப்போது கேள்வி அமெரிக்காவின் அணுகுமுறை குறித்தது. இப்போது உலகிலேயே அதிக கொரோனா பாதித்தவர்கள் இருப்பது அமெரிக்காவில். மரண எண்ணிக்கையில் அந்நாடு மிக விரைவில் உச்சம் தொடும் அபாயமும் இருக்கிறது. இப்படி ஒரு இக்கட்டில் இருக்கும்போது, ‘நான் கேட்டதை குடுக்கலன்னா, விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்று மிரட்டுகிறது. இது, டொனால்ட் ட்ரம்ப் என்ற தனிப்பட்ட நபரின் அணுகுமுறை அல்ல. இதுதான் அமெரிக்கா.

இந்த திமிருக்கு அடிபணிந்து போகவில்லை எனில், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை தடுத்து நிறுத்துவார்கள். ஈரானுக்கும், வெனிசூலாவுக்கும், கியூபாவுக்கும் இன்று என்ன நடக்கிறதோ, அது நாளை இந்தியாவுக்கும் நடக்கும்.

ஆனால், நாம் கவலைப்படத் தேவையில்லை. கண்டிப்பாக மோடி இந்தியாவை அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டுசெல்ல மாட்டார். அடிபணிவார்; ட்ரம்ப் கேட்டதை அனுப்பி வைத்து தன் விசுவாசத்தை பறைசாற்றுவார். சப்இன்ஸ்பெக்டர் சவுண்ட் விடுறது எல்லாம் உள்ளூர் ஸ்டேஷன்லதான். ஐ.ஜி.கிட்ட உதார் விட்டா தூக்கிப்போட்டு மிதிப்பானா இல்லையா? அந்த பயம் வந்து போகும்ல…

குறிப்பு: நமது நம்பிக்கையை மோடி ஏமாற்றவில்லை. இந்தப் பதிவு எழுதப்பட்டு அரை மணி நேரத்தில் வந்திருக்கும் செய்தி, ஏற்றுமதிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

மினாஸ் கரெய்ஸ் மாநிலத் தலைநகரான பெலோ ஒரிசோன் நகரின் உணவு விடுதியொன்றில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உணவு பரிமாறுபவராகபா பணியாற்றி வருகிறார் ஏய்மே அகியுனா. முப்பது வயது கியூப தொழிலாளியான இவர் ஓட்டல் தொழிலாளியாக மாறுவதற்கு முன் பிரேசில் மாநிலமொன்றின் தொலைதூரத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் நாளொன்றுக்கு இருபது நோயாளிகளுக்குக் குறையாமல் சிகிச்சையளித்த மருத்துவர். பிரேசிலின் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், 2018 நவம்பரில் கியூபாவுக்கும் பிரேசிலுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் வேலை இழந்தவர் அகியூனா. ஏதாவதொரு படிப்பைத் தொடரும் நோக்கில் பிரேசிலில் தங்க முடிவு செய்து, வயிற்றுப் பாட்டுக்காக ஓட்டல் பணியாளராக வேலை செய்தார்.

Jair-Bolsonaro
போல்சனாரோ

ரத்து செய்யப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் வழியாக பிரேசிலுக்கு வந்து, இப்போது பிரேசிலில் தங்கிவிட்ட 1800 மருத்துவர்களில் திருமதி அகியூனாவும் ஒருவர். 21 கோடி மக்கள் கொண்ட இந்த நாட்டில், கொரோனா கிருமி எங்கும் பரவி வருவதன் காரணமாக அதன் மருத்துவக் கட்டமைப்பு இதுவரை கண்டிராத மருத்துவ நெருக்கடியை சந்திக்கும் நிலையில், இப்போது கியூபா அரசின் உதவியை நாடி வருகிறது பிரேசில்.

பிரேசில் மத்திய அரசு மருத்துவ கட்டமைப்பில் கியூபா மருத்துவர்களை ஒன்றிணைக்கப் போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கேட்ட திருமதி அகியூனா ‘ஒரு மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பை கண்டு நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டுள்ளேன். இங்கு நோய் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். அபாயம் நிறைந்த, தொலை தூரங்களில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கில் 2013 இல் அன்றைய பிரேசில் ஜனாதிபதி தில்மா ரௌசெப் தொடங்கிய “அதிக மருத்துவர்கள்” என்ற திட்டத்தின் கீழ் கியூபா மருத்துவர்கள் பிரேசில் வந்தனர். ஐந்தே ஆண்டுகளில் 3,000 நகராட்சிகளில் உள்ள அடிப்படை நலவாழ்வு மையங்களில் 8000 கியூபா மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். 2018 தேர்தலில் “கம்யூனிஸ்ட் கியூபா மருத்துவர்களை விற்பனை செய்கிறது” எனப்பிரச்சாரம் செய்த போல்சொனாரோ ஜனாதிபதியானதைத் தொடர்ந்து கியூபா பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து பெரும்பாலான மருத்துவர்கள் கியூபா திரும்பினர். ஆனால் திருமதி அகியூனா போன்ற சிலர் சில்லரை வேலைகளைச் செய்வது அல்லது மேலும் படிப்பது என பிரேசிலிலேயே தங்கிவிட்டனர். தற்போது 9200 பேருக்கு மேல் கொரோனா தொற்றி, 365 பேர் இறந்துள்ள நிலையில் நம்பிக்கையிழந்த பிரேசில் கியூபாவிடம் கையேந்தி நிற்கிறது. அவர்களும் உதவி செய்ய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

படிக்க:
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

‘மருத்துவ பணியாற்றவும், உதவி செய்யவுமான பேரார்வம் மிக அதிகமாக இருக்கிறது’ என்கிறார் பிரேசிலில் தங்கியுள்ள கியூப மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் நூர்காபெரெஸ். ‘நாடு நெருக்கடியில் இருக்கிறது. எங்களை எப்போது அழைக்கப் போகிறார்கள் என்று இன்னமும் தகவல் இல்லை’ என்கிறார் பெரஸ்.

உள்ளூர் மருத்துவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை வலுப்படுத்த 5811 மருத்துவர்களை நியமிக்கப் போவதாக பிரேசில் நலவாழ்வு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. அடுத்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் கியூப மருத்துவர்கள் வேலைக்கு அழைக்கப்படக் கூடும். கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது. இதுவரை உதவி கிட்டாத மக்களுக்கு உதவி கிடைக்கவும், நலவாழ்வு உத்திரவாதப்படவும் இத்திட்டம் அவசியமானது. திடீரென திட்டம் தடைபட்டதால் பல சமூகக் குழுக்கள் குறிப்பாக உள்நாட்டு மக்கள் மருத்துவ உதவி இல்லாமல் கைவிடப்பட்டனர். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.” என்கிறார் சாவோ பவ்லோ பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் டெனிஸ் பிமென்டா.

‘1.15 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவிடமிருந்து மருத்துவர்களை அழைப்பது பிரேசிலுக்கு தேவையாகி விட்டது. பிரேசிலில் மருத்துவக்கல்வி மேட்டுக்குடி தன்மை கொண்டது’ என்கிறார் விளிம்புநிலை மக்களிடம் விரிவாகப் பணியாற்றிய திருமதி பிமென்டா. ‘பெரும்பாலான மருத்துவர்கள் சலுகை பெற்ற பின்னணி கொண்டவர்களாகையால், தொலைதூரப் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன’ என்கிறார் பிமென்டா. மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிக ஊதியம் பெறும் மருத்துவர்கள் பிரேசிலில் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பெருநகர மையங்களையும், அங்குள்ள வசதிகளையும் விட்டுவிட்டு மோசமான நிலையிலுள்ள, புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. ஆனால் உலகின் கழிசடைப் பகுதிகள் எனக் கருதப்படும் பகுதிகளுக்கும் சென்று கியூப மருத்துவர்கள் பணியாற்றினர்.

படிக்க:
கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்
♦ எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

கொரோனா பெருமளவில் பரவி வரும் இன்று, தனியார் மருத்துவ மையங்கள் முன்னரே நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில், நாட்டின் ஒருங்கிணைந்த நல வாழ்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மருத்துவமனைகளையே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். 2016இல் ஜனாதிபதி ரௌசெப் பதவி நீக்கம் செய்யப் பட்டதிலிருந்து இத்திட்டம் பெருமளவான நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. நடைமுறையிலிருக்கும் இந்த ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்டம்தான் இப்போதுவரை மிகச் சிறந்த திட்டம். கியூப மருத்துவர்கள் இத்திட்டத்தின் வழிகாட்டுதலுடன் முழுதும் ஒன்றிணைந்தவர்கள். அவர்கள் திரும்ப வந்தால் தொலைதூரப் பகுதிகளுக்கும், குடிசைப் பகுதி போன்ற புறநகர் பகுதிகளுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவார்கள் என்கிறார் திருமதி பிமென்டா.

ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்ட மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கும் நிலையில், மருத்துவப் பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அபாயம் உள்ளது. சாவோ போலோ மாநிலம் போலவே சுமார் 600 மருத்துவப் பணியாளர்கள் தொற்றுக்கு உள்ளானதாக அஞ்சப்படுகிறது. இந்தக் கொள்ளை நோயிலிருந்து உயிர் பிழைக்க குடிசைப் பகுதி மக்கள் தாங்களே முகமூடிகளைத் தயாரித்துக் கொள்வதோடு, தனியார் சேவையையும் பயன்படுத்துகின்றனர். உலகு தழுவி இந்நோய் பிரேசிலில் உச்சத்தையடைய இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் சிதைந்து கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பைத் தாங்கிப்பிடிப்பதற்கு கியூப மருத்துவர்கள் திரும்பி வர பிரேசில் மக்கள் நீண்ட நாள் காத்திருக்க முடியாது.


கட்டுரையாளர் : ஷோபன் சக்சேனா

தமிழாக்கம் : காளியப்பன்
நன்றி : THE HINDU. 

கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

“வைரலாகிவிட்டது” என்ற வார்த்தையை சிறிதேனும் அச்சமின்றி நாம் யாரேனும் இனி பயன்படுத்த இயலுமா?

நம்முடைய நுரையீரல்களைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத, செத்துப் போகாத ஆனால் உயிரும் இல்லாத சின்னஞ்சிறிய உறிஞ்சு குமிழ்கள், படைபடையாக அப்பிக் கொண்டிருக்குமோ என்றெண்ணி பீதியடையாமல், ஒரு கதவின் கைப்பிடியையோ, ஒரு அட்டைப்பெட்டியையோ, ஒரு காய்கறிப் பையையோ இனிமேலும் நம்மால் தொட முடியுமா?

அறிமுகமில்லாத ஒருவரை முத்தமிடலாம் என்றோ, பேருந்தில் தாவி ஏறலாமென்றோ, குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமென்றோ, அச்சம் சிறிதுமின்றி நம்மால் இனி யோசிக்க முடியுமா? சின்னச் சின்ன சந்தோசங்களாகக் கூட இருக்கட்டும். அவற்றில் பொதிந்திருக்கும் அபாயங்களை எடை போட்டுப் பார்க்காமல் அத்தகைய சந்தோசங்களைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? நாம் ஒவ்வொருவருமே இப்போது போலி தொற்றுநோய் வல்லுநர்கள் (Quack), போலி நச்சுயிரி வல்லுநர்கள், போலி புள்ளிவிவர வல்லுநர்கள் ஆகிவிட்டோம், இல்லையா? ஏதேனும் ஒரு அற்புதம் நிகழாதா என்று ரகசியமாக பிரார்த்தனை செய்யாத மருத்துவரோ அறிவியலாளரோ இருக்கிறார்களா? அல்லது ரகசியமாகவேனும் அறிவியலுக்குத் தலைவணங்காத மதகுருவோ புரோகிதனோ இருக்கிறார்களா?

வைரஸ் ஒருபுறம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் நகரங்கள் அனைத்திலும் பறவைகளின் இசை ஓங்கி ஒலிப்பதையும், சாலைச் சந்திகளில் மயில்கள் நடனமாடுவதையும், அமைதியான வானத்தையும் கண்டு மனக்கிளர்ச்சி கொள்ளாதவர்கள் நம்மில் யார்?

உலகெங்கும் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தில் பத்து லட்சத்தைக் கடந்து விட்டது. 50,000 பேருக்கு மேல் இறந்து விட்டனர். உயிரிழப்பின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. சர்வதேச வர்த்தகத்தின் பாதைகளின் வழியே, சர்வதேசத் தலைநகரங்கள் அனைத்திற்கும் சுதந்திரமாகப் பயணம் செய்திருக்கிறது இந்த வைரஸ். அது தோற்றுவித்த கொடிய நோய், மனிதர்கள் அனைவரையும் தத்தம் நாட்டுக்குள், தமது நகரத்துக்குள், தமது வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டது.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

இந்த வைரஸ் பல்கிப் பெருக விரும்புகிறது. ஆனால் எல்லை கடந்து பாயும் மூலதனத்தைப் போன்ற லாபவெறி இந்த வைரஸுக்கு இல்லை. அதனால்தானோ என்னவோ, மூலதனம் பாயும் திசைக்கு எதிர்த்திசையில் இந்த வைரஸ் பாய்ந்திருக்கிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள், பயோமெட்ரிக் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்புகள், சகலவிதமான தகவல் பகுப்பாய்வுகள் ஆகிய அனைத்தையும் கேலிப்பொருளாக்கி விட்டு, உலகின் வலிமை வாய்ந்த பணக்கார நாடுகளுக்குள் நுழைந்து அவர்களைத்தான் இந்த வைரஸ் இதுவரையில் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. முதலாளித்துவத்தை இயக்கிச்செல்லும் எந்திரமான அவர்களைத் திடுமென உலுக்கி நிறுத்தியிருக்கிறது. இதுவொரு தற்காலிகமான நிறுத்தம் மட்டுமே என்பது உண்மைதான். ஆனால் இந்த முதலாளித்துவ எந்திரத்தின் உறுப்புகளைப் பிரித்துப் பார்த்து, இதையே சீர் செய்வதற்கு நாம் உதவ வேண்டுமா, அல்லது இதனைத் தலைமுழுகிவிட்டு, வேறொரு நல்ல எந்திரத்தைத் தேடவேண்டுமா என்று ஆராய்வதற்கு இந்த இடைநிறுத்தம் வழங்கியுள்ள அவகாசம் நமக்குத் தாராளமாகப் போதும்.

இந்தப் பெருந்தொற்று  நோயை  சமாளிக்கும் அதிகாரத்தில் அமர்ந்திருப்போருக்கு, போர் பற்றிப் பேசுவதுதான் மிகவும் பிடிக்கும். போர் என்ற சொல்லை ஒரு உருவகமாக அவர்கள் பயன்படுத்தவில்லை. உண்மையிலேயேதான் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு  யுத்தம்தான் என்றால், அமெரிக்காவைக் காட்டிலும் யுத்தத்துக்குத் தயார் நிலையில் இருக்கவல்ல நாடு எது? கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தின் படையணியாய் முன்வரிசையில் நிற்பவர்களுக்குத் தேவைப்படுவன, முக கவசங்களாகவோ கையுறைகளாகவோ இல்லாமல், துப்பாக்கிகள், குறிதவறாக் குண்டுகள், நிலவறை தகர்க்கும் குண்டுகள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள், அணு குண்டுகள் போன்றவையாக இருப்பின் அமெரிக்காவில் அதற்குப் பற்றாக்குறை வந்திருக்குமா என்ன?

இரவுகள் தோறும் நியூயார்க் நகரின் ஆளுநர் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியை, பூமியின் இந்தப் புறத்திலிருந்து நம்ப முடியாத ஆச்சரியத்துடன் நாம் பார்க்கிறோம். புள்ளி விவரங்களைக் காண்கிறோம். அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழியும் கதைகளைக் கேட்கிறோம். குறைந்த ஊதியத்துக்கு மிதமிஞ்சி உழைக்கும் செவிலியர்கள், முகக் கவசங்கள் கிடைக்காமல், குப்பைக் கூடைக்குப் பயன்படுத்தப்படும் பாலித்தின் பேப்பர்களையும், பழைய மழைக்கோட்டுகளையும் வைத்து முகக் கவசம் தயாரித்துக் கொள்வதையும், நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக தங்களையே பணயம் வைப்பதையும் பார்க்கிறோம். வென்டிலேட்டர்களை வைத்திருக்கும் மாநிலங்கள் அவற்றை ஏலம் விடுகின்றன. பற்றாக்குறையாக உள்ள மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. எந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் தருவது – யாரை வென்டிலேட்டர் இல்லாமல் சாக விடுவது என்று தீர்மானிக்க முடியாத மருத்துவர்களின் ஊசலாட்டத்தையும் பார்க்கிறோம். “கடவுளே, இதுதான் அமெரிக்காவா?” என்று நமக்குள் அதிர்ந்து உறைகிறோம்.

***

ந்தப் பெருந்துயர் உண்மையானது, உடனடியானது, பிரம்மாண்டமானது, நம் கண்முன்னே விரிந்து கொண்டிருப்பது. ஆனால் புதியது அல்ல. இது பல ஆண்டுகளாகத் தடம் புரண்டு தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்த ரயிலுக்கு நேர்ந்திருக்கும் விபத்து. கைகழுவப்படும் அமெரிக்க நோயாளிகள் குறித்த வீடியோக்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவற்றை மறக்க முடியுமா? பின்புறம் நிர்வாணமாகத் தெரிகின்ற மருத்துவமனை உடை அணிவிக்கப்பட்ட நிலையிலேயே, (பணம் கொடுக்க முடியாத) பல நோயாளிகள் கள்ளத்தனமாக மருத்துவமனையிலிருந்து விரட்டப்பட்டு தெருவோரத்தில் வீசப்படுவதில்லையா? அமெரிக்க மருத்துவமனைகளின் கதவுகள் ஏழை அமெரிக்க குடிமக்களுக்கு எந்தக் காலத்தில் திறந்திருக்கின்றன? ஏழைகளுடைய நோயையோ, துயரையோ மருத்துவமனைகள் எப்போதாவது பொருட்படுத்தியிருக்கின்றவா?

இதுவரை இல்லை. ஆனால் இப்போது? இந்த கொரோனா வைரஸின் யுகத்தில், ஏழை மனிதனின் நோய், பணக்கார சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதே! ஆயினும் என்ன, இப்போதும் கூட, “அனைவருக்கும் மருத்துவம்” என்ற கோரிக்கைக்காக விடாப்பிடியாகப் போராடிவரும் செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், வெள்ளை மாளிகைக்கு உள்ளே நுழையக்கூடாதவர் என்றுதானே கருதப்படுகிறார் – அவருடைய சொந்தக் கட்சியினரே அப்படித்தானே கருதுகிறார்கள்!

இந்தப் பக்கமும் கொஞ்சம் ஒளியைக் காட்டுங்கள் ஐயா! பிபிஇ பரிசோதனை கருவியின் இருப்பை சோதிக்க வேண்டியிருக்கிறது!

என்னுடைய நாட்டின் கதை என்ன? நிலப்பிரபுத்துவத்துக்கும் – மத கடுங்கோட்பாட்டுவாதத்துக்கும், சாதிக்கும் – முதலாளித்துவத்துக்கும் இடையிலான ஏதோ ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டு, தீவிர வலதுசாரி இந்து தேசியவாதிகளால் ஆளப்பட்டு வரும் என்னுடைய ஏழ்மை நிறைந்த பணக்கார நாடான இந்தியாவின் கதை என்ன?

டிசம்பரில் வூகானில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக சீனா போராடிக் கொண்டிருந்தது. இங்கே பல்லாயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட, அப்பட்டமான ஓரவஞ்சனை கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். இந்திய அரசு இந்தப் போராட்டத்தை கையாண்டு கொண்டிருந்தது.

அமேசான் காடு தின்னியும், கொரோனா மறுப்பாளருமான பிரேசில் அதிபர் பொல்சானரோ, நமது குடியரசு தினக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விடைபெற்றுச் சென்ற சில நாட்களில், அதாவது ஜனவரி 30 அன்று இந்தியாவின் முதல் கொரோனா தொற்று குறித்த செய்தி வெளியானது.  இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் ஆளும் கட்சியால் கொரோனாவுக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. அவர்களுக்கு நிறைய வேலை இருந்தது. பிப்ரவரி இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகார பூர்வ விஜயம். குஜராத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தில் பத்து லட்சம் பேர் கொண்ட கூட்டத்தை உங்களுக்கு கூட்டிக் காட்டுகிறோம் என்று டிரம்ப்புக்கு ஆசை காட்டியிருந்தார்கள். இதற்கெல்லாம் பெருமளவு பணத்தை மட்டுமல்ல, நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது.

அப்புறம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஏறி அடிக்காவிட்டால் பாஜக தோற்றுவிடும் என்று கணிப்புகள் கூறின. பாஜக ஏறி அடித்தது. வரைமுறையற்ற வன்மம் நிறைந்த இந்து தேசவெறியைத் தூண்டியதுடன், வன்முறையில் இறங்குவோம் என்றும்  துரோகிகளைச் சுட்டுக் கொல்வோம் என்றும் பிரச்சாரம் செய்தது.

படிக்க:
பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே !
♦ கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்

இருந்த போதிலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து, இந்த அவமானகரமான தோல்விக்குக் காரணமான டெல்லி முஸ்லிம்களுக்குத் தண்டனை வழங்கும் படலம் தொடங்கியது. வட கிழக்கு டில்லியின் உழைக்கும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், ஆயுதம் தாங்கிய இந்து காலாட்படையினர் போலீசின் உதவியுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். வீடுகள், கடைகள், மசூதிகள், பள்ளிகள் எரிக்கப்பட்டன. இப்படி ஒரு தாக்குதல் வரும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடினார்கள். 50 க்கும் மேற்பட்டோர் – முஸ்லிம்களும் சில இந்துக்களும் – கொல்லப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் உள்ளூர் கல்லறைகளில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். டில்லியின் நாற்றமெடுத்த பாதாள சாக்கடைகளிலிருந்து சிதைந்து போன உடல்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான் கொரோனா வைரஸ் தொடர்பான முதல் கூட்டத்தை அரசு அதிகாரிகள் நடத்தத் தொடங்கினர். ஹாண்ட் சானிடைசர் என்றொரு திரவியம் இருப்பதாக பெரும்பாலான இந்தியர்கள் அப்போதுதான் கேள்விப்படத் தொடங்கினர்.

மார்ச் மாதத்திலும் அவர்களுக்கு வேலை அதிகம். முதல் இரண்டு வாரங்கள், ம.பி காங்கிரசு அரசைக் கவிழ்த்து பாஜக அரசை நிறுவும் பணிக்கு செலவிடப்பட்டன. கோவிட்-19 அல்லது கொரோனா என்பது உலகு தழுவிய பெருந்தொற்று (பாண்டமிக்) என்று உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 அன்று அறிவித்தது. இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 13 அன்று கொரோனா தொற்று நோயை சுகாதார அவசரநிலைப் பிரச்சனையாக கருதவியலாது” என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

இறுதியாக மார்ச் 19 அன்று இந்தியப் பிரதமர் தேசத்துக்கு உரையாற்றினார். அவர் அதிகம் மெனக்கிடவில்லை. பிரான்சும் இத்தாலியும் என்ன செய்தார்களோ அதை அப்படியே கடன் வாங்கிக் கொண்டார். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். (சாதியப் பண்பாட்டில் ஊறிய இந்த சமூகத்துக்கு சமூக இடைவெளி என்பது எளிதில் புரியக் கூடியதே.) மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு என்று அறிவித்தார். இந்த நெருக்கடியை சமாளிக்க தனது அரசு என்ன செய்யப் போகிறது என்று அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக, எல்லோரும் பால்கனியில் நின்று மணியடிக்க வேண்டும் என்றும் பாத்திரங்களையும் தட்டுகளையும் தட்டி மருத்துவப் பணியாளர்களுக்கு தமது மரியாதையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், அந்த மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கியிருக்க வேண்டிய பாதுகாப்புக் கவசங்களையும், மருத்துவமனைகளுக்கு ஒதுக்க வேண்டிய சுவாச மீட்புக் கருவிகளையும் அந்தக் கணம் வரை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது என்ற விசயத்தை மட்டும் அவர் சொல்லவில்லை.

நரேந்திர மோடியின் வேண்டுகோள் பெருத்த உற்சாகத்துடன் நிறைவேற்றப்பட்டதில் வியப்பில்லை. பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பிய வண்ணம் ஊர்வலங்களும், கும்பல் நடனங்களும் ஊர்வலங்களும் நடந்தன. சமூக இடைவெளி என்பதெல்லாம் காற்றில் பறந்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் புனிதமான சாணம் நிரம்பிய தொட்டிகளில் பலர் குதித்தனர். பாஜக ஆதரவாளர்கள் பசு மூத்திரம் குடிக்கும் விழாக்களை நடத்தினர். உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லை என்று சொல்லும் விதமாக, பல முஸ்லிம் அமைப்புகள் இசுலாமிய மக்களை மசூதிகளில் திரளுமாறும், வைரஸை ஒழிக்க வல்லவன் அல்லா மட்டும்தான் என்றும் அறைகூவல் விடுத்தனர்.

***

மார்ச் 24 ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினார். நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு என்று அறிவித்தார். சந்தைகள் மூடப்படும். பொதுப் போக்குவரத்து, தனியார் போக்குவரத்து ஆகிய எதுவும் அனுமதிக்கப்படாது என்றார்.

பிரதமர் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு குடும்பத் தலைவனாகவே இந்த முடிவினை நான் எடுத்திருக்கிறேன் என்று அவர் கூறினார். சரிதான். 138 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசம் முழுவதும், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், ஊரடங்கின் விளைவாக எழும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய  பொறுப்பில் இருக்கும் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல், வெறும் நான்கு மணி நேர அவகாசத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதென்று வேறு யாராவது இப்படி முடிவெடுக்க முடியுமா?  இந்தியாவின் பிரதமர் தன்னுடைய குடிமக்களை நம்பத்தகாதவர்களாக, எதிர்பாராமல் தாக்கி வீழ்த்தப் படவேண்டிய பகை சக்திகளாகவே கருதுகிறார். இதுதான் மோடியின் வழிமுறைகளிலிருந்து அவரைப்பற்றி நாம் பெறுகின்ற சித்திரம்.

படிக்க:
முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை ! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு ! மக்கள் அதிகாரம் கோரிக்கை !
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

அனைவரும் ஊரடங்கின் கீழ் கொண்டுவரப் பட்டுவிட்டோம். சுகாதாரத்துறை வல்லுநர்களும் கொள்ளைநோய் மருத்துவர்களும் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். ஒரு கோட்பாடு என்ற வகையில் அவர்களது கூற்று சரியானதுதான். ஆனால் உலகின் மிகப்பெரிய ஊரடங்கு நடவடிக்கையான இது, போதுமான திட்டமிடலோ, முன்தயாரிப்போ இல்லாத காரணத்தினால், மிகக் கொடிய தண்டனையாக மாறிவிட்டதை, ஊரடங்கின் நோக்கத்துக்கு நேர் எதிரான விளைவை அது உருவாக்கிவிட்டதை அவர்கள் யாரும் ஆதரிக்கவியலாது.

அதிசயங்களை நிகழ்த்துவதில் பெருங்காதல் கொண்ட மனிதரான மோடி, அதிசயங்கள் அனைத்துக்கும் தாய் போன்றதொரு நிகழ்வை உருவாக்கிக் காட்டி விட்டார்.

இந்த ஊரடங்கு ஒரு வேதியல் சோதனையைப் போல வேலை செய்தது. இதுகாறும் கண் மறைவாக இருந்த பல விசயங்களின் மீது அது ஒளியைப் பாய்ச்சியது. கடைகள், உணவு விடுதிகள், ஆலைகள், கட்டுமானத் தொழில்கள் ஆகிய அனைத்தும் இழுத்து மூடப்பட்ட பின், செல்வந்தர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தத்தம் குடியிருப்புகளுக்குள் தம்மைப் பாதுகாத்துக் கொண்ட பின், நமது நகரங்களும் பெரு நகரங்களும் தமது உழைக்கும் வர்க்க குடிமக்களையும், புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும், தேவையின்றி சேர்ந்து விட்ட சுமையாகக் கருதி, அவர்களைப் பிதுக்கி வெளியேற்றத் தொடங்கின.

அவர்களில் பலர் தமது முதலாளிகளாலும், வீட்டு உரிமையாளர்களாலும் வெளியேற்றப்பட்டவர்கள்.  பசியாலும் தாகத்தாலும் வாடிய ஏழைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், என லட்சக்கணக்கான மக்கள், போக்கிடம் ஏதும் இல்லாமல், பொதுப் போக்குவரத்தும் இல்லாமல், தத்தம் கிராமங்களை நோக்கி ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினார்கள். பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆக்ரா, பதுவான், ஆசம்கார், அலிகார், லக்னோ, கோரக்பூர் என்ற ஊர்களை நோக்கி நாள் கணக்கில் நடந்தார்கள். சிலர் போகும் வழியிலேயே இறந்தும் போனார்கள்.

வீட்டை நோக்கிச் சென்ற அனைவருக்கும் நாம் அரைப்பட்டினி நிலையை நோக்கித்தான் செல்கிறோம் என்று தெரியும். தாங்கள் வைரஸை சுமந்து செல்லக்கூடும் என்பதும், ஊரில் இருக்கும் தம் குடும்பத்தினரையும் பெற்றோரையும் பாட்டன் பாட்டிகளையும் தாங்கள் சுமந்து செல்லும் நோய் தொற்றிக் கொள்ளக்கூடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனினும் தமக்குத் தெரிந்த மனிதர்கள் வாழும் இடத்துக்குப் போய்விட வேண்டுமென அவர்கள் தவித்தார்கள். பாசமோ அன்போ கிடைக்கவில்லை என்றாலும், குடியிருக்க ஒரு வீடும், கவுரவமும், சோறும் கிடைக்கின்ற இடத்துக்குப் போய்விடவேண்டுமென அவர்கள் தவித்தார்கள்.

ஊரடங்கை கறாராக அமல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்த போலீசாரால், கால்நடையாகச் சென்ற அந்த மக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள், அவமானப் படுத்தப்பட்டார்கள். நெடுஞ்சாலையில் தவழ்ந்து செல்லுமாறும், தவளை போல தத்திச் செல்லுமாறும் இளைஞர்களை போலீசார் துன்புறுத்தினர். பரேலி நகருக்கு வெளியே மக்களை ஒரு இடத்தில் கூட்டி வைத்து அவர்கள் மீது இரசாயனம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.

நகரத்திலிருந்து வெளியேறும் மக்கள் இந்த வைரசை கிராமத்துக்குப் பரப்பி விடுவார்களோ என்ற ஐயம் சில நாட்களுக்குப் பின் அரசுக்கு வந்துவிட்டது. உடனே மாநில எல்லைகளை மூடினார்கள். நடந்து செல்பவர்களைக் கூட அனுமதிக்கவில்லை. நகரங்களிலிருந்து கிளம்பி  நாள் கணக்கில் நடந்து வந்த மக்கள், எந்த நகரத்தை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டார்களோ அதே நகரத்திற்கு – அங்கு அமைக்கப்பட்ட முகாம்களுக்கு – திரும்பிச் செல்லுமாறு விரட்டப்பட்டார்கள்.

1947 இல் இந்தியா பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானபோது, பெருந்திரளான மக்கள் புலம் பெயர்ந்த நினைவுகளை இது முதியவர்களிடையே கிளர்த்திவிட்டது. அன்றைய புலம்பெயர்தலுக்கு மதப் பிளவு அடிப்படையாக அமைந்திருந்தது. வர்க்கப் பிரிவினை இந்தப் புலம்பெயர்தலைத் தீர்மானித்தது. இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களை இந்தியாவின் கடைக்கோடி ஏழை மக்கள் எனக் கூற முடியாது. இவர்களுக்கு இதுநாள் வரை நகரத்தில் ஒரு வேலை இருந்தது. திரும்பிச் செல்வதற்கு கிராமத்தில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் வேலை கிடைக்காதவர்களும், வீடற்றவர்களும், கதியற்றவர்களும் – கிராமம் ஆயினும் சரி, நகரமாயினும் சரி – எங்கே இருந்தார்களோ அந்த இடத்தை விட்டு அகலவில்லை. இந்த அவலம் நிகழ்வதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே, அவர்கள் மீளாத துயரில் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொடிய நாட்களின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுமக்கள் பார்வையிலேயே தென்படவில்லை.

டில்லியிலிருந்து இந்த நடைபயணம் தொடங்கிய நாட்களில், நான் அடிக்கடி எழுதுகின்ற ஒரு பத்திரிகையின் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்திக் கொண்டு, டில்லி –  உ.பி எல்லையில் இருக்கும் காசிபூருக்கு வாகனத்தில் சென்றேன்.

நான் கண்ட காட்சி விவிலியத்தின் சித்தரிப்பை நினைவூட்டியது. அப்படிக்கூட சொல்ல முடியாது. இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தை விவிலியம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது. உடல் ரீதியான விலகியிருத்தலை உத்திரவாதப் படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, அதற்கு நேரெதிரான விளைவைத் தோற்றுவித்திருந்தது. எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவுக்கான ஜன நெரிசலை அது தோற்றுவித்திருந்தது. புலம் பெயர்ந்தோரின் கூட்டத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் நகரங்கள் பெருநகரங்கள் அனைத்திற்குள்ளும் நிலவும் உண்மை இதுதான். நகரங்களின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி இருக்கலாம். ஆனால் சேரிகளின் எட்டடிக் குச்சுகளுக்குள் ஏழைகள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதே உண்மை.

நடந்து சென்ற மக்களிடம் நான் பேசினேன். என்னுடன் பேசிய அத்தனை பேரும் கொரோனா வைரஸ் குறித்து கவலை தெரிவித்தார்கள். ஆனால் அச்சுறுத்தும் வேலையின்மை, பட்டினி, போலிசின் வன்முறை ஆகியவைதான் அவர்களது வாழ்வின் எதார்த்தமாக இருந்தன. இவற்றுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரசுக்கு அவர்கள் வாழ்வில் இடமில்லை, வைரஸ் என்பது அவர்களது வாழ்க்கையில் அந்த அளவுக்கு உண்மையான அச்சுறுத்தலாகவும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதலில் தப்பிப் பிழைத்த முஸ்லிம் தையற்கலைஞர்கள் சிலர் உள்ளிட்ட பலருடன் நான் பேசினேன். அவர்களில் ஒரு மனிதரின் சொற்கள்தான் என்னைப் பெரிதும் துன்புறுத்தின. அவர் ஒரு தச்சர். பெயர் ராம்ஜித். நேபாள எல்லையில் இருக்கும்  கோரக்பூருக்கு டில்லியிலிருந்து நடந்தே செல்வது என்ற திட்டத்துடன் கிளம்பியிருந்தார்.

“மோடிஜி இதனைச் செய்வது என்று முடிவு செய்வதற்கு முன், எங்களைப் பற்றி யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை எங்களைப் பற்றி அவருக்குத் தெரியாமலும் இருக்கலாம்” என்றார் ராம்ஜித்

“எங்களை” என்று அவர் குறிப்பிட்டாரே, அவர்களின் எண்ணிக்கை சுமார் 46 கோடிப் பேர்.

***

ந்த நெருக்கடியான காலத்தில் இந்தியாவின் மைய அரசைக் காட்டிலும் (அமெரிக்காவைப் போலவே) மாநில அரசுகள்தான் புரிதலையும் அக்கறையையும் காட்டியிருக்கின்றன. தொழிற்சங்கங்களும், தனிப்பட்ட குடிமக்களும் பிற அமைப்புகளும் மக்களுக்கு உணவையும் அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கின்றன. மாநில அரசுகள் பணம் வேண்டும் என்று கதறிய போதிலும், மைய அரசின் எதிர்வினை மெத்தனமாகவே இருந்து வருகிறது. பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் பணம் இல்லையெனத் தெரிகிறது. இதற்குப் பதிலாக “பிரதமரின் கருணை” என்று பெயரிடப்பட்ட மர்மமான கணக்கில்  பணம் வந்து குவிகிறது. மோடியின் முகம் அச்சிடப்பட்ட தயார் நிலை உணவுப் பொட்டலங்கள் ஆங்காங்கே தலை காட்டுகின்றன.

இவை தவிர, தன்னுடைய யோக நித்திரையைக் காட்டும் வீடியோக்களையும் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அனிமேசன் முறையில் தயாரிக்கப்பட்ட அந்த வீடியோக்களில் கச்சிதமான உடற்கட்டு கொண்ட மோடி பல யோகாசனங்களைச் செய்து காட்டி தனிமை தோற்றுவிக்கும் மன அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிக்க உதவுகிறார்.

இந்த சுயமோகத்தை சகிக்க முடியவில்லை. வேண்டுகோள் ஆசனம் என்றொரு ஆசனத்தை மோடி செய்தால் நன்றாக இருக்கும். அந்த ஆசனத்தின் மூலம் பிரெஞ்சு பிரதமரிடம் மோடி ஒரு வேண்டுகோள் வைக்கலாம். பிரச்சனைக்குரிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அதில் கிடைக்கும் 60,000 கோடி ரூபாயை பட்டினியில் வாடும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு அவரிடம் கோரலாம். பிரெஞ்சுக்காரர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

இதோ, ஊரடங்கின் இரண்டாவது வாரம் தொடங்குகிறது. நாடெங்கும் பொருள் விநியோக நடவடிக்கைகளின் சங்கிலி அறுந்து விட்டது. மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ளின் விநியோகத்தில் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. சோறும் தண்ணீரும் இல்லாமல் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைகளில் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவடைக்குத் தயாராக நிற்கும் பயிர்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடி கண் முன்னே அச்சுறுத்துகிறது. அரசியல் நெருக்கடியோ ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மைய நீரோட்ட ஊடகங்கள் 24 மணி நேரமும் தாங்கள் மேற்கொண்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்திற்குள் கொரோனா கதையை செருகி விட்டனர். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னால் டெல்லியில் ஒரு கூட்டத்தை நடத்திய தப்லிக் ஜமாத் என்ற அமைப்பு முதன்மையான “நோய் பரப்பி” ஆகிவிட்டது. முஸ்லிம்களை கொடியவர்களாக சித்தரிப்பதற்கும் பழிதூற்றுவதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது.

இப்படி ஒரு வைரசை கண்டுபிடித்து அதனை வேண்டுமென்றே சமூகம் முழுவதும் பரப்புவதை ஜிகாத்தின் இன்னொரு வடிவமாக இசுலாமியர்கள் செய்து வருகிறார்கள் என்ற கருத்தை உருவாக்கும் விதத்தில் இந்த பிரச்சாரத்தின் தொனி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா நோய்த்தொற்று ஒரு மாபெரும் நெருக்கடியாக உருவெடுப்பதென்பது இனிமேல்தான் நடக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு நடக்காமலும் போகலாம். நமக்குத் தெரியாது. ஒருவேளை அப்படியொரு நெருக்கடி வரும் பட்சத்தில், சாதி – மத – வர்க்க ரீதியான காழ்ப்புகள் என்னவெல்லாம் சமூகத்தில் தற்போது நிலவுகின்றவோ, அவற்றின் அடிப்படையில்தான் இந்த நெருக்கடியும் அணுகப்படும் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

இன்றைய (ஏப்ரல் 2) கணக்குப்படி  நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் 2000 பேர். இறந்தவர்கள் 58 பேர். மிகவும் குறைவான அளவில் செய்யப்பட்ட சோதனைகளின் அடிப்படையில்தான் இந்த புள்ளிவிவரங்கள் தரப்படுகின்றன ஆகையால், இவை நம்பத்தக்கவை அல்ல. வல்லுநர்களின் கருத்துகளும் பெரிதும் வேறுபடுகின்றன. சிலர் லட்சக்கணக்கில் பாதிப்பு வரும் என்கிறார்கள். பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். நெருக்கடியை நாம் சந்திக்க நேர்ந்தாலும், அப்போதும் கூட அதன் பரிமாணமும் வீச்சும் என்ன என்பது ஒருபோதும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்குத் தெரிவதெல்லாம் ஒன்று மட்டும்தான். மருத்துவமனைகளை நோக்கி மக்கள் கும்பல் கும்பலாக ஓடும் நிலை இன்னும் தொடங்கவில்லை.

இந்தியாவின் பொதுமருத்துவமனைகள் மற்றும் தனியார் சிகிச்சையகங்களின் நிலை என்ன? வயிற்றுப்போக்கு, ஊட்டச் சத்துக் குறைவு மற்றும் பிற உடல்நலக் குறைவுகளினால் ஆண்டுக்கு பத்து லட்சம் குழந்தைகள் இறப்பதை இவற்றால் தடுக்க முடியவில்லை. லட்சக்கணக்கான காச நோயாளிகளை (உலகின் கால்பங்கு) குணப்படுத்த முடியவில்லை. சாதாரண நோய்களே உயிரைப் பறித்துவிடும் என்ற அளவுக்கு ரத்த சோகையினாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாத இந்திய மருத்துவத்துறையால் இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் எதிர்கொண்டு வரும் நெருக்கடியைப் போன்றதொரு நெருக்கடியை சமாளிக்க முடியுமா?

கொரோனாவுக்கு சேவை செய்யும் பொருட்டு மற்றெல்லா நோய்களுக்குமான மருத்துவ சேவைகளை எல்லா மருத்துவ மனைகளும் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன. டெல்லியிலுள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவே மூடப்பட்டுவிட்டது. புற்று நோய் அகதிகள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான கான்சர் நோயாளிகள் அந்த பிரம்மாண்டமான மருத்துவமனையின் வாசலில் நெடுநாட்களாய்க் குடியிருந்து வருகிறார்கள். இன்று அவர்களெல்லாம் ஆடுமாடுகளைப் போல அடித்து விரட்டப்படுகிறார்கள்.

நோய்வாய்ப்படும் மக்கள் பலர் வீட்டிலேயே இறக்கக் கூடும். அவர்களின் கதை நமக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. அவர்களால் புள்ளி விவரங்களிலும் இடம்பிடிக்க முடியாது. குளிர்ந்த வானிலைதான் கொரோனாவுக்குப் பிடிக்கும் என்று கூறும் ஆய்வுகளின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர (மற்ற பல ஆய்வுகள் இதனை மறுத்த போதிலும்) நமக்கு வேறு வழியில்லை. கோடைகாலத்தில் வெயில் தீயாய் தகித்தால் நன்றாக இருக்குமே, என்று அறிவுக்குப் புறம்பான முறையில் இந்திய மக்கள் முன்னெப்போதும் ஏங்கியிருக்க மாட்டார்கள்.

என்ன இது? நமக்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இது ஒரு நச்சுக்கிருமி. ஆம். அந்தக் கிருமிக்கு அறம் ஏதும் கிடையாது. ஆனால் இது வெறும் நச்சுக்கிருமி அல்ல. நிச்சயம் அதற்கு மேலே ஏதோ ஒன்று. இது மனிதர்களுக்கு கடவுள் கற்பிக்கும் பாடம் என்று சிலர் நம்புகிறார்கள். தனது ஆதிக்கத்தின் கீழ் உலகத்தைக் கொண்டு வருவதற்கு சீனா செய்கின்ற சதி என்று சிலர் கூறுகிறார்கள்.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கொரோனா வைரஸ் எல்லாம் வல்லவர்கள் எனப்படுவோரை மண்டியிட வைத்திருக்கிறது. வேறு எதனாலும் சாதிக்க முடியாத வகையில் உலகத்தின் அசைவை நிறுத்திக் காட்டியிருக்கிறது. நமது சிந்தனை பின்னும் முன்னும் அலைபாய்கிறது. இயல்பு நிலை திரும்பாதா என்று ஏங்குகிறது. நம்முடைய எதிர்காலத்தை நம்முடைய கடந்த காலத்துடன் எப்படியாவது இழுத்துப் பிடித்துத் தைத்து விட முடியாதா என்று நம் சிந்தனை முயற்சிக்கிறது. இழைகள் அறுபட்டுக் கிழிந்து தொங்குகின்ற எதார்த்தநிலையை நம் சிந்தனை அங்கீகரிக்க மறுக்கின்றது. அங்கீகரிக்க மறுத்தாலும், முறிவு இருக்கத்தான் செய்கிறது. நம்பிக்கைகள் தகர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நமது இறுதித் தீர்ப்பினை எழுதுவதற்கு நம் கைகளால் நாமே உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்திரம் குறித்து மீளாய்வு செய்து பார்ப்பதற்கு இந்த முறிவு நமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறது. இயல்புநிலை என்று சொல்கிறோமே, அந்த இயல்புநிலை அப்படியே திரும்புவதுதான் மிகமிக ஆபத்தானது.

பெருந்தொற்று நோய்கள் கடந்த காலத்திலிருந்து முறித்துக் கொண்டு, தங்களது உலகை புதிய முறையில் கற்பனை செய்து பார்க்க மனித குலத்தை நிர்ப்பந்தித்திருக்கின்றன. இது வரலாறு. இன்று நாம் எதிர்கொள்ளும் சூழலும் அப்படிப்பட்டதே. இதோ இது ஒரு திறப்பு. ஒரு உலகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிச் செல்வதற்கான நுழைவாயில்.

நாம் இதற்குள் நுழைந்து கடந்து செல்லலாம். அவ்வாறு போகும்போது, நமது தப்பெண்ணங்கள், வெறுப்புகள், பேராசைகள், நமது தரவுக் கிடங்குகள் – மக்கிப்போன கருத்துகள், நமது செத்துப்போன ஆறுகள் – புகை மண்டிய வானங்கள் அனைத்தையும் நம்முடனே இழுத்துச் செல்லலாம்.

அல்லது அவற்றையெல்லாம் துறந்து விட்டு, கடந்த காலத்தின் சுமைகள் ஏதுமின்றி, புதியதோர் உலகினைக் கற்பனை செய்த வண்ணம், மிதந்தும் செல்லலாம். புதிய உலகிற்காகப் போராடுவதற்கும் ஆயத்தமாகலாம்.

நன்றி: அருந்ததி ராய், பைனான்சியல் டைம்ஸ்.
தமிழாக்கம்: முத்து
பைனான்சியல் டைம்ஸ், ஏப்ரல் 3, 2020 நாளேட்டிலிருந்து…

கம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 02

3.பொதுவுடைமைவாத நடவடிக்கையின் கடமைகள் பற்றி

கட்சி உறுப்பினரின் கடமை

8. புரட்சிகர மார்க்சிய பயிற்சிப் பள்ளியாக பொதுவுடைமைக் கட்சி விளங்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் அன்றாட பொது வேலைகள் வாயிலாக கட்சி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் உயிரோட்டமுள்ள உறவுகள் நிறுவப்படுகின்றன.

கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்பது சட்டபூர்வ பொதுவுடைமைக் கட்சிகளில் இன்றும் கூட குறைவாக உள்ளது. இது இந்தக் கட்சிகளின் தலையாகக் குறைபாடாகும். அவற்றின் முன்னேற்றத்தில் தொடர்ச்சியான உத்திரவாதமின்மைக்கு அடித்தளமாக இக்குறைபாடு விளங்குகிறது.

9. பொதுவுடைமைவாதத்துக்கு மாறும் ஆரம்பக் கட்டங்களில் ஒவ்வொரு தொழிலாளர் கட்சியும் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது, தனது பிரச்சாரத்தில் பழைய கோட்பாட்டுக்குப் பதில் பொதுவுடைமைவாத போதனைகளைக் கடைபிடிப்பது, எதிர் முகாமைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து பொதுவுடைமைவாத நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது ஆகியவற்றுடன் மனநிறைவு அடையக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவுடைமைவாதியாவதற்கான விருப்பதைக் குறிப்பது மட்டுமேயாகும். பொதுவுடைமைவாத நடவடிக்கை இல்லாமலிருந்தால், பரந்துபட்ட கட்சி உறுப்பினர்கள் இன்னமும் செயலின்றி இருந்தால், பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் கட்சியானது ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்றே ஆகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது. மேலும், பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

10. பொதுவுடைக் கட்சியானது, உண்மையிலேயே செயல் திறனுள்ளவர்களை மட்டுமே கொண்டிருக்க முயல வேண்டும். கட்சியின் தேவைக்கு உட்பட்டு தனது அணிவரிசையிலுள்ள கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது முழு பலத்தையும் காலத்தையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் முடிந்தவரை கட்சி வேலைகளுக்காக ஒதுக்கி தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். தனது மிகச் சிறந்த சக்திகளை கட்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோர வேண்டும்.

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது இயல்பாகவே பொதுவுடைமைவாத நம்பிக்கைகளுடன் சேர்ந்து முதலில் தேர்வுநிலை உறுப்பினராகவும், பின்னர் உறுப்பினராகவும் அதிகார பூர்வமாகப் பதிவு செய்வது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாகச் செலுத்துவது, கட்சிப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துவது போன்றவற்றையும் கொண்டதாகும். ஆனால் மிகமிக முக்கியமானது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதாகும்.

ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் ஒரு குழுவில் இருப்பது

11. கட்சி வேலைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக ஒரு விதி என்ற முறையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குழு, கமிட்டி, கமிஷன், பெரிய குழு, பிராக் ஷன் அல்லது கருக்குழு போன்று செயல்படும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே கட்சி வேலைகளைச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும். வழிகாட்ட முடியும். நிறைவேற்ற முடியும்.

உள்ளூர் அமைப்பின் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே வேண்டியதில்லை. சட்டபூர்வ சூழ்நிலைகள் நிலவும்போது, குறிப்பிட்ட காலக்கிரமத்தில் நடைபெறும் இக் கூட்டங்களுக்கு பதிலாக, உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவது உசிதமானதல்ல. அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டஙெகளில் முறையாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. இந்தக் கூட்டங்களுக்கான தயாரிப்பு என்பதே சிறு குழுக்களாக வேலையைப் பிரித்து செய்வது அல்லது குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சில தோழர்கள் ஒதுக்கப்படுவது என்பதை முன் அனுமானமாகக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தியே தொழிலாளர்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள்திரள் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலதரப்பட்ட கடமைகளை சிறு குழுக்கள் மட்டுமே எச்சரிக்கையாக ஆய்வதும், ஆழமாக நடைமுறைப்படுத்துவதும் இயலும். உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும். இவ்வாறே ஒன்றுபட்ட திறன்மிக்க பொதுவுடைமைக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள புரட்சி சக்திகள் அனைத்தையும் கொண்டுவந்து கெட்டிப்படுத்துவது இயலாது.

ஆலை செல்களின் (Factory Cells) முக்கியத்துவம்

12. கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அன்றாட வேலைகளைச் செய்ய பொதுவுடைமைக் கருக்குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கிளர்ச்சிகளை நடத்துதல், கட்சி ஆய்வு, செய்திப் பத்திரிகை வேலை, கட்சி வெளியீடுகளை விநியோகித்தல், தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான பணிகள் – இன்னும் இதுபோன்றவற்றைக் கருக்குழுக்கள் செய்யும்.

பொதுவுடைமைக் கட்சிக்கு ஒருசில உறுப்பினர்கள் அல்லது தேர்வுநிலை உறுப்பினர்கள் உள்ள இடங்களில் எல்லாம் தொழிற்சாலை மற்றும் பணிமனைகளில் உள்ள தொழிற்சங்கங்களில், பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இராணுவப் பிரிவுகளில், அன்றாட கட்சி வேலைகளைச் செய்வதற்கான சிறு குழுக்களே பொதுவுடைமைவாதக் கருக்குழுக்களாகும். ஒரே தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்கள் இருந்தால், கருக்குழுவானது பிராக் ஷனாக மாற்றப்பட்டு, அது சிறு குழுக்களின் வேலைகளை வழிநடத்தும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது.

பரந்த தன்மையுடைய எதிர்த்தரப்பு பிராக்ஷனை அமைப்பதோ, அல்லது ஏற்கெனவே உள்ளதில் பங்கேற்பதோ அவசியமாகும்போது சிறப்புக் கருக்குழுவின் வாயிலாக தொழிற்சங்கத் தலைமையைக் கைப்பற்ற அல்லது தலைமை ஏற்க பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும். தனது சொந்த சுற்றுச்சூழலைப் பொருத்து கருக்குழு வெளிப்படையாக வருவதா, அல்லது பொது மக்கள் மத்தியில் கூட வெளிப்படையாக வருவதா என்பது விசேட சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து அவ்வாறு வருவதன் அபாயங்கள் மற்றும் சாதகங்களை ஆழமாகப் பரிசீலிப்பதைச் சார்ந்திருக்கும்.

13. பொதுக் கடமையான வேலைகளைக் கட்சியில் அறிமுகப்படுத்துவதும், சிறு வேலைக் குழுக்களைக் கட்டியமைப்பதும் மக்கள்திரள் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு (மிகக் குறிப்பாக) கடினமான பணியாகும். இதை எடுத்த எடுப்பிலேயே சாதித்துவிட முடியாது. இதற்கு சலிப்பற்ற விடாமுயற்சி, முதிர்ச்சி பெற்ற அறிவு, மகத்தான ஆற்றல் ஆகியவை வேண்டும்.

இந்தப் புதிய வடிவிலான நிறுவனத்தைத் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கையுடனும் முதிர்ச்சியான அறிவுடனும் கட்டியமைப்பது குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் பெயரளவிலான திட்டத்தின்படி கருக்குழுக்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து உடனடியாகக் கட்சியின் அன்றாட பொது வேலைகளைச் செய்யுமாறு அவற்றை அறைகூவி அழைப்பது என்பது மிகச் சுலபமான வேலையாகும். ஆனால், இத்தகைய தொடக்கம் என்பது தொடங்காமல் இருப்பதைவிட மோசமானது. இந்த மகத்தான கண்டுபிடிப்புகளின்பால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மன நிறைவின்மையும் வெறுப்பையுமே இது தூண்டிவிடும்.

பொதுவுடைமைவாத செல்களை (Cell) எப்படிக் கட்டியமைப்பது?

உறுதியான நம்பிக்கையும் ஊக்கமும் உடைய பொதுவுடைமைவாதிகளான செயல்திறனுள்ள பல அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து – நாட்டின் பல்வேறு மையங்களில் உள்ள இயக்கத்தின் நிலைமையை அறிந்தவர்களைக் கலந்தாலோசித்து இந்தப் புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவதற்கான விவரமான அடிப்படைகளை விரிவாக வகுக்க வேண்டும் என்பதை நாம் சிபாரிசு செய்கிறோம். இதன்பின்னர், பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாளர்கள் அல்லது அமைப்புக் கமிட்டிகள், களத்தில் வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழுக்களின் முதல்தரமான தலைவர்களைத் தெரிவு செய்து கொண்டு ஆரம்ப வேலைகளைத் துவக்க வேண்டும். அதன்பின்னர் கட்சி நிறுவனங்கள், வேலைக்கான குழுக்கள், கருக்குழுக்கள், தனிப்பட்ட உறுப்பினர்கள் அனைத்துக்கும் பருண்மையான, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகள் முன்வைக்கப்பட வேண்டும். இவற்றை முன்வைக்கும்போது, அவை அவர்களுக்குப் பயனுள்ளவையாகவும், விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அமல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமான இடங்களில் இக்கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்போது தவிர்க்கப்பட வேண்டிய தவறான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.

14. இந்த மறு ஒழுங்கமைப்பு வேலைகள் நடைமுறையில் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் எண்ணற்ற கருக்குழுக்கள் அல்லது வேலைக்கான குழுக்களை உள்ளூர் நிறுவனங்களில் அமைக்கக் கூடாது. தனியாகப் பிரிக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் அமைக்கப்பட்ட சில கருக் குழுக்கள் சரியாக இயங்குவதையும், கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அவசியமான அளவு அவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் (எடுத்துக்காட்டாக, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, மகளிர் இயக்கம், கிளர்ச்சித்துறை, பத்திரிகை வேலை, வேலையின்மை எதிர்ப்பு இயக்கம் போன்றவை) நிரூபணமாக்க வேண்டும். புதிய நிறுவன எந்திரம் குறிப்பிடத்தக்க நடைமுறை அனுபவம் பெறும்வரை பழைய நிறுவனக் கட்டமைப்பு அவசர கோலமாகக் கலைக்கப்படக் கூடாது. அதேவேளையில், கட்சி நிறுவன வேலைகளின் இந்த அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இடத்திலும் மீமிகு ஆற்றலுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இவை சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகளுக்கும் மகத்தான கடமைகளை சுமத்துகின்றன.

பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

பாட்டாளி வர்க்கப் போராட்ட மையங்கள் அனைத்திலும் பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்ஷன், தொழிலாளர் குழுக்கள் பரந்துவிரிந்து வலைப்பின்னல் ஆக அமைக்கப்பட்டு இயங்கும் வரையில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாட புரட்சி வேலையில் தனது பங்கைச் செய்யும் வரையில் இவ்வாறு செய்வது உறுப்பினர்களுக்கு இயல்பானதாகவும் வழமையானதாகவும் ஆகும் வரையில் இக்கடமைகளை நிறைவேற்றுவதில் கடின உழைப்பைச் செலுத்துவதிலிருந்து கட்சியானது ஓய்வாக இருக்க தன்னைத்தானே அனுமதிக்கக் கூடாது.

சோதித்தறிவது

15. இந்த அடிப்படையிலான நிறுவனக் கடமையானது கட்சித் தலைமை உறுப்புகளின் மீது ஒரு கடப்பாட்டைச் சுமத்துகின்றது. கட்சி வேலைகளின் மீது முறையான, தொடர்ச்சியான, செல்வாக்கு செலுத்தும்படியான முறையில் இடையறாது வழிகாட்டுவதும் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதுமே அக்கடப்பாடு. கட்சி நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் செயலூக்கமிக்கத் தோழர்கள் தமது பங்குக்கு பன்முக செல்வாக்கு செலுத்துவதானது இதற்குத் தேவைப்படுகிறது. பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

மேலிருந்து அறிவிப்பதும் கீழிருந்து அறிக்கை பெறுவதும் – தலைமையின் மையக் கடமை

16. நமது கட்சி வேலைகள் முழுவதும் சித்தாந்த அல்லது நடைமுறைப் போராட்டங்களாகவோ அல்லது போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையாகவோ இருக்கின்றன. இதுவரையில் இப்பணியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைபாடுள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சி நடவடிக்கைகள் அரிதாகவே இருப்பது என்பது மிக முக்கிய துறைகளில் கூட காணப்படுகின்றன. உதாரணமாக, இரகசிய உளவாளிகளை எதிர்ப்பது என்ற விசயத்தில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகள் மிகச் சிறிய அளவு பணிகளையே செய்துள்ளன. நமது கட்சித் தோழர்களுக்கு ஒரு விதி என்ற முறையில் செய்ய வேண்டிய அறிவுறுத்தும் (Instruct) வேலை எப்போதாவது செய்யப்படுகிறது – அல்லது இரண்டாம் பட்சமாக செய்யப்படுவதாக இருக்கிறது. இது எந்த அளவு மேலோட்டமாகச் செய்யப்படுகிறது என்றால், கட்சியின் தீர்மானங்களும் ஏன் கட்சித் திட்டமும் பொதுவுடைமை அகிலத்தின் தீர்மானங்களும்கூட மிகப் பெருமளவில், மிகப் பரவலான பிரிவினரான கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. மிக உயர்ந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்காக கட்சி நிறுவனக் கட்டமைவு முழுவதிலும் கட்சியின் செயல்பாட்டுக் கமிட்டிகள் அனைத்திலும் முறையாகவும், இடையறாதும் அறிவுறுத்தும் வேலை செய்யப்பட்டாக வேண்டும்.

17. (கீழிருந்து) அறிக்கைகள் சமர்ப்பிப்பது என்பதும் பொதுவுடைமைவாத நடவடிக்கையில் கடமைகளைச் சேர்ந்ததாகும். இது, கட்சியின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்புகளின், இதுபோலவே ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் கடமையாகும். குறுகிய காலத்துக்கான பொது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்சியின் விசேடமான கமிட்டிகளின் வேலைகளைப் பற்றி விசேடமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முறையாகவும் தொடர்ச்சியாகவும் அறிக்கை சமர்ப்பிப்பது என்பதை எந்த அளவு அவசியமானதாக செய்ய வேண்டும் என்றால், இது ஒரு நிரந்தரமாக நிறுவப்பட்ட வழிமுறை என்ற அளவுக்கு, பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த பாரம்பரியம் என்ற அளவுக்கு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தனது மேல்மட்ட கமிட்டிக்கு வேலை அறிக்கை சமர்ப்பிப்பது

18. ஒவ்வொரு கட்சியும் தனது காலாண்டு வேலை அறிக்கையை பொதுவுடைமை அகிலத்தின் தலைமை உறுப்புக்குத் தருதல் வேண்டும். கட்சி நிறுவனம் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த மேல் கமிட்டிக்கு (எடுத்துக்காட்டாக, பகுதி அடிப்படையிலான ஒவ்வொரு கிளையும் தனக்கு மேலான கட்சிக் கமிட்டிக்கு) மாதாந்திர வேலை அறிக்கையை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக் கருக்குழுவும், பிராக்ஷனும், தொழிலாளர் குழுவும் எந்தக் கட்சி உறுப்பின் பொறுப்பில் இருக்கின்றனவோ, அவற்றுக்குத் தமது அறிக்கையை அனுப்புதல் வேண்டும். தனி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் அங்கம் வகிக்கும் கருக்குழு அல்லது தொழிலாளர் குழுவுக்கு (முறையே அவற்றின் தலைவருக்கு) அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோலவே குறிப்பிட்ட விசேட பொறுப்பை நிறைவேற்றியது பற்றி எந்தக் கட்சி உறுப்பு அந்த வேலையை ஒப்படைத்ததோ, அதற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்த அறிக்கையானது எப்போது சாத்தியப்பட்ட அளவுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அளிக்கப்பட வேண்டும். வேலையைச் செய்யுமாறு பணித்த கட்சி உறுப்பு அல்லது தோழர் எழுத்து பூர்வமான அறிக்கை வேண்டுமெனக் கோரினால் ஒழிய, அறிக்கை வாய் மூலமாகவே இருக்க வேண்டும். அறிக்கைகள் குறிப்பாகவும் விசயத்தை விட்டு விலகாமலும் இருக்க வேண்டும். வெளியிடப்படக் கூடாத அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருக்கவும், முக்கியமான அறிக்கைகளைக் காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட கட்சி அங்கங்களுக்கு அனுப்புவதும் அறிக்கைகளைப் பெறுபவரின் பொறுப்பாகும்.

வேலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

19. இந்த அறிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே, அறிக்கை அளிப்பவரின் வேலைகளைப் பற்றிய விவரங்களுடன் வரம்பிட்டுக் கொள்பவையாக இருக்க வேண்டும். நமது வேலையின்போது கவனத்துக்கு வந்த, நமது எதிர்காலப் போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவமுடைய விசேட சூழ்நிலைகள், நமது எதிர்கால வேலைகளில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தைக் கொண்டுவரத்தக்கதான குறிப்பான பரிசீலனைகள், வேலையை நிறைவேற்றும்போது உணரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அனைத்தும் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்க வேண்டும்.

பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்ஷன், தொழிலாளர் குழுக்கள் அனைத்திலும் எல்லா வேலை அறிக்கைகளும் – அவை பெறுகின்றவையும், அதுபோலவே அவை அனுப்புபவையும் – முற்று முழுதாக விவாதிக்கப்பட வேண்டும். இத்தகைய விவாதங்களை நடத்துவது ஒரு முறையான பழக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிறுவனங்களின் குறிப்பாக குட்டி முதலாளித்துவ தொழிலாளர் நிறுவனங்களின் அதிலும் முக்கியமாக சோசலிஸ்டு கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிப்பதையும், அவை பற்ற அறிக்கை செய்வதையும் கருக்குழுக்களிலும் தொழிலாளர் குழுக்களிலும் உள்ள தனிப்பட்ட கட்சி உறுப்பினர்களும் அல்லது குழுவாக உள்ள கட்சி உறுப்பினர்களும் கவனமாகச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

கொள்ளை நோயில் A , B , C & D type மக்கள் உண்டு. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். உதாரணத்திற்கு, கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர் விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு விமான நிலையத்தில் அல்லது ரயில் நிலையத்தில்
காய்ச்சல் இருக்கிறதா ? என்று சோதிக்கப்பட்டு அவருக்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதியானதும் அவருக்கு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுரை கூறி அவரிடம் இருந்து சுயப் பிரமாணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறோம்.

அவர் வீட்டில் இருக்கிறார். இதற்கு நடுவில் அவரது வீட்டிற்கு சில உறவினர்கள் வந்து அவரை பார்த்து செல்கின்றனர். அவரும் தனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று கருதி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறார். இன்னும் ஒரு வாரம் சென்ற பிறகும் அவருக்கு காய்ச்சல் எதுவும் வராததால் அவருக்கு பிரச்சனை இல்லை என்று முடிவு செய்து அவரது குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கித்தர வீட்டுக்கு கறி எடுக்க மனைவியுடன் கோயிலுக்கு கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கும் சென்று வந்திருப்பார் …

இப்போது இரண்டாவது வாரத்தின் இறுதியில் அவருக்கு காய்ச்சல் அடிக்கும்.
உடனே பயந்து அஞ்சி சுகாதாரத்துறைக்கு போன் செய்வார். அவரை உடனே தனிமைபடுத்தும் வார்டில் அட்மிட் செய்து நோய் தொற்று அறியப்படும்.
இவரே டைப் A ஆவார்.

இவருடன் நேரடி தொடர்பில் இருந்த இவரது குடும்பத்தார் மற்றும் இவர் சென்று பார்த்த உறவினர் வீட்டு மக்கள் மற்றும் அவர் சென்று பார்த்த அவரது தாய் தந்தை , மற்றும் அந்த திருவிழாவில் அவர் கண்ட அவரால் அடையாளம் காண முடிந்த உறவினர்கள், அவர் சென்ற மிட்டாய் கடை வைத்திருப்பவர், கறி கடை வைத்திருப்பவர் இவர்கள் அனைவரும் “Type C”

மேற்சொன்னவர்கள் அனைவரைப் பற்றியும் நமக்கு தெரிந்திருப்பதால் நம்மால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். எனவே இது நம் கையில் இருக்கும் விசயம்.

இப்போது நம் கையில் இல்லாத டைப் B மற்றும் டைப் D மக்களுக்கு செல்வோம். யாரெல்லாம் டைப் B?

அந்த நபர் மிட்டாய் வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று வேறு பொருட்கள் வாங்க வந்த நபர்கள் அவர் கறி வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று கறி வாங்கிய நபர்கள் அந்த திருவிழாவில் அவருக்கு இதுவரை தொடர்பில் இல்லாமல் இவர் அருகில் வந்து சென்ற மக்கள். அவர் தாய் தந்தையை பார்க்க பேருந்தில் சென்றிருந்தால் அந்த பேருந்தில் முன் சீட் பின் சீட் பயணித்த அடையாளம் காண முடியாத மக்கள் இவர்கள் அனைவரும் டைப் B.

இந்த டைப் B மக்களை அந்த பாதிக்கப்பட்ட டைப் A நபரால் கூட அடையாளம் கூற முடியாது. மேலும் அந்த டைப் B நபர்களுக்கும் தாங்கள் நோயைப் பெற்றுள்ளோம் என்பது தெரியாது. இவர்கள் சமூகத்தில் தங்களை அறியாமல் தொற்றைப்பரப்பிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் மூலம் தொற்றைப் பெறுபவர்கள் தான் Type D மக்கள். இந்த டைப் D மக்களிடம் இருந்து நோய் தொற்றை பெறுபவர்கள் B1 , B2 என்று சாரை சாரையாக உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

சரி இந்த கொள்ளை நோய் சங்கிலித்தொடரை எப்படி முறிப்பது? சமூகம் தனித்திருப்பதனால் மட்டுமே இதனை செய்ய முடியும். காரணம்
டைப் A மற்றும் டைப் C-ஐ மட்டும் தனிமையில் வைத்திருந்து டைப் B மற்றும் டைப் D வெளியில் உலாவிக்கொண்டிருந்தால் கொள்ளை நோய் வீரியமாக காட்டுத்தீ போல் பரவும்.

எனவே அனைவரையும் வீட்டில் இருக்கச்சொல்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த டைப் B மற்றும் டைப் D மக்கள் தங்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த உடன்
வெளியே மருத்துவமனைகளை நாடுவார்கள். உடனே அவர்களது வீட்டை முழுமையாக இன்னும் கடினத்தன்மையுடன் தனிமைப்படுத்திட வேண்டும்.

படிக்க:
கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்
கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

இப்படியாக நோயின் காத்திருப்பு காலமான 14 முதல் 21 நாட்களை நாம் கடந்தால் முழுமையாக டைப் B மற்றும் டைப் D மக்களை வெளியே கொண்டு வந்து கண்டறிந்து தனிமைப்படுத்திட முடியும். இதனால் கொள்ளை நோய் பரவுவது தடுக்கப்படும். இதுவே இந்த 21 நாள் ஊரடங்குக்கு பின்னால் உள்ள சூத்திரமாகும்.

இதை உணர்வோம் தெளிவோம். தனித்திரு!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD.

மூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 58

மூலதனம்

அ.அனிக்கின்

மார்க்சுக்கு முந்திய காலகட்டத்தைச் சேர்ந்த பொருளியலாளர்கள் (மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளியலாளர்களும் இதில் அடங்குவர்) மூலதனம் என்பது கருவிகள், மூலப் பொருள், பிழைப்புச் சாதனங்கள், பணம் ஆகியவற்றின் சேமிப்புக் குவியல் என்று கருதினார்கள். மூலதனம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. இனியும் எப்போதும் இருக்கும், ஏனென்றால் அப்படிப்பட்ட சேமிப்பு இல்லாமல் உற்பத்தி என்பது சாத்தியமல்ல என்பதே இதன் பொருளாகும்.

மூலதனம் என்பது வரலாற்று ரீதியான இனம் என்று விளக்கமளித்ததன் மூலம் மார்க்ஸ் இந்தக் கருத்தை மறுத்தார். உழைப்புச் சக்தி ஒரு பண்டமாக மாறும் பொழுது, உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளியும் உழைக்கக் கூடிய சக்தியைத் தவிர வேறு எதுவுமே உடைமையாக இல்லாத கூலி உழைப்பாளியும் சமூகத்தின் முக்கியமான நபர்களாக இருக்கும் பொழுது மட்டுமே மூலதனம் தோன்றுகிறது என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். இந்த சமூக உறவின் வெளியீடு தான் மூலதனமாகும். அது எப்பொழுதுமே இருந்து வந்திருக்கவில்லை, என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியதும் அல்ல. மூலதனத்தைப் பண்டங்கள், பணத்தின் மொத்தம் என்று கருதலாம். ஆனால் அப்பொழுதும் அவை முதலாளியால் ஒதுக்கிக் கொள்ளப்படுகின்ற, கூலி உழைப்பாளிகளின் கூலி கொடுக்கப்படாத (உபரி) உழைப்பைக் கொண்டிருக்கின்றன, இந்த உழைப்பின் புதிய பகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன என்ற பொருளில் மட்டுமே அவ்வாறு கருத முடியும்.

கார்ல் மார்க்ஸ்

ஸ்மித்தின் புத்தகத்தில் ஒரு இடத்தைப் பற்றி, இங்கே ஸ்மித் உபரி மதிப்பின் உண்மையான பிறப்பிடத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று மார்க்ஸ் எழுதுகிறார். அந்தப் பகுதி கீழே தரப்படுகிறது: “குறிப்பிட்ட சில நபர்களின் கைகளில் பணம் குவிந்தவுடன், அவர்களில் சிலர் சுறுசுறுப்பான நபர்களுக்கு வேலை கொடுப்பதற்கு அதை இயற்கையாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுடைய உழைப்புப் பொருள்களை விற்பனை செய்து லாபமடைவதற்காக அல்லது அவர்களுடைய உழைப்பின் மூலம் தங்களுடைய பொருள்களின் மதிப்பை அதிகப்படுத்துவதற்காக பொருள்களையும் உயிரோடிருக்கத் தேவையான கூலியையும் அவர்களுக்குக் கொடுப்பார்கள்” (1)  இங்கே ஸ்மித் மூலதனம் தோன்றிய வரலாற்று ரீதியான நிகழ்வுப் போக்கையும் அது ஏற்படுத்துகின்ற சமூக உறவுகளின் சாராம்சம் சுரண்டும் தன்மையைக் கொண்டிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

எனினும் தமது இரண்டாவது புத்தகத்தில் மூலதனத்தைப் பற்றி தனி வகையான ஆராய்ச்சிக்கு முன்னேறுகின்ற பொழுது இந்த ஆழமான கருத்து நிலையை ஸ்மித் அநேகமாக முற்றிலுமே கைவிட்டுவிடுகிறார். மூலதனத்தைப் பற்றிய அவரது தொழில் நுட்ப ஆராய்ச்சி டியுர்கோ செய்த ஆராய்ச்சியைப் போலவே இருக்கிறது. ஆனால் நிலையான மூலதனம், செலாவணியாகும் மூலதனம், மூலதனத்தின் முதலீட்டில் வெவ்வேறு துறைகள், கடன் மூலதனம் மற்றும் கடன் வட்டி முதலிய பிரச்சினைகளை ஸ்மித் டியுர்கோவை அல்லது வேறு யாரையும் காட்டிலும் அதிகமான விவரத்தோடும் முறைப்படியாகவும் ஆராய்கிறார்.

படிக்க:
♦ கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

ஸ்மித்தை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவருடைய மொத்த விரிவுரைக்குமே ஒரு வகையான வன்மையைக் கொடுப்பது பொருளாதார முன்னேற்றத்தின் தீர்மானமான காரணியாக மூலதனக் குவிப்புக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தமே எனலாம். குவித்தலே ஒரு நாட்டின் செல்வத்துக்குத் திறவுகோல், சேமிப்பவர்கள் ஒவ்வொருவரும் நாட்டைக் காப்பவர்கள், ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் ஒவ்வொருவரும் நாட்டின் எதிரி என்று நிரூபிப்பதற்கு ஆடம் ஸ்மித் அதிகமான கொள்கை மாறாமையோடும் விடாமுயற்சியோடும் பாடுபடுகிறார். தொழில் துறைப் புரட்சியின் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினையை அவர் எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. நவீன ஆங்கிலப் பொருளியலாளர்களின் மதிப்பீடுகளின்படி, பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இங்கிலாந்தில் சேமிப்பு விகிதம் (தேசிய வருமானத்தின் குவிக்கப் பட்ட பகுதி) சராசரியாக 5 சதவிகிதத்துக்கு அதிகமல்ல. தொழில்துறைப் புரட்சி அதன் மிகத் தீவிரமான கட்டத்தை சுமார் 1790-ல் அடைகின்ற வரையிலும் சேமிப்புவிகிதம் அநேகமாக அதிகரிக்கத் தொடங்கவில்லை. ஐந்து சதவிகிதம் என்பது மிகவும் குறைவுதான். இன்று சேமிப்பு விகிதம் 12 முதல் 15 சதவிகிதமாக இருந்தால் அது ஏறத்தாழ திருப்திகரமான நிலைமை என்று வழக்கமாகக் கருதப்படுகிறது. 10 சதவிகிதம் என்றால் அது அபாயத்தின் அறிகுறி. 5 சதவிகிதம் என்றால் விபத்து என்று பொருள். சேமிப்பு விகிதத்தை எப்பாடுபட்டாவது அதிகப்படுத்துங்கள்! நவீனமான சொற்களில் ஸ்மித்தின் வேண்டுகோள் இதுவே.

யாரால் சேமிக்க முடியும்? யார் சேமிக்க வேண்டும்? முதலாளிகள், பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோர் தான். இது அவர்களுடைய முக்கியமான சமூகக் கடமை என்று ஸ்மித் கருதுகிறார். ஸ்மித் முன்பே தம்முடைய கிளாஸ்கோ விரிவுரைகளில் மூலதனத்தின் உள்ளூர்ப் பிரமுகர்களின் “இன்பமறுப்பைப்” பாராட்டிக் கூறியிருக்கிறார். அந்தப் பெரிய நகரம் முழுவதும் தேடினால் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வேலைக்காரனை வைத்திருக்கும் பணக்காரரைப் பார்க்க முடியாது. பயன் தருகின்ற தொழிலாளிகளுக்கு வேலை கொடுப்பதன் மூலம் ஒரு நபர் பணக்காரராக முடியும்; அதே நபர் வெறும் வேலைக்காரர்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏழையாவார் என்று ஸ்மித் எழுதினார். இது நாடு முழுமைக்கும் மொத்தத்தில் பொருந்தக் கூடியதே. மக்கள் தொகையில் பயனுள்ள உழைப்பில் ஈடுபடாத பகுதியை இயன்ற அளவுக்குக் குறைவாக வைத்திருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். பயன் கொடுக்கும் உழைப்பைப் பற்றிய ஸ்மித்தின் கருதுகோள் சமூகத்திலிருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளையும் அவற்றோடு இணைந்த- அரசாங்க அதிகார வர்க்கம், இராணுவம், திருச் சபை ஆகியோர் ஒவ்வொருவரையும் வன்மையாகத் தாக்கியது. மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, உற்பத்தியின் மீது பெருஞ்சுமையாகவும் மூலதனக் குவிப்புக்குத் தடையாகவும் இருந்த இக்கும்பலைப் பற்றிய ஸ்மித்தின் விமர்சன அணுகுமுறை அந்தக் காலகட்டத்திலிருந்த முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் ஆகிய இரண்டு தரப்பினரின் கருத்து நிலையையும் பிரதிபலித்தது.

படிக்க:
♦ கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்

ஸ்மித் பின்வருமாறு எழுதினார்: “உதாரணமாகச் சொல்வதென்றால் அரசரும் அவரின் கீழ் பணியாற்றும் நீதித்துறை, யுத்தத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், மொத்த இராணுவத்தினரும் கடற்படையினருமே பயனில்லாத உழைப்பைச் செய்கின்ற தொழிலாளர்களாவர். அவர்கள் மக்களின் ஊழியர்கள்; மற்ற மக்களின் கடும் உழைப்பினால் கிடைக்கும் வருட உற்பத்திப் பொருளின் ஒரு பகுதியைக் கொண்டு அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.. இதே ரகத்தில் தான் முக்கியத்துவமும் பொறுப்பும் நிறைந்த சில தொழில்களையும் பொழுதுபோக்கான வேறு தொழில்களையும் மதகுருக்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், எல்லா ரகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கோமாளிகள், பாடகர்கள், இசை நாடகக் கலைஞர் கள், நடனக்காரர்கள், இன்னும் பலரையும் சேர்க்க வேண்டும்”.  (2) 

ஆக, அரசரும் கோமாளிகளும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்! அதிகாரிகளும் மதகுருக்களும் மற்றவர்களுடைய இரத்தத்தைக் குடித்து வாழ்பவர்கள்! ஸ்மித்தும் ஒரு எழுத்தாளரே, ஆனால் பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்பொழுது ”எல்லா ரகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள்” பயனில்லாத உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களே என்று ஸ்மித் ஒத்துக் கொள்வது அவருடைய அறிவுத் துறை நேர்மையைக் காட்டுகிறது. மேலே தரப்பட்ட பகுதியில் துணிவும் கிண்டலும் இருக்கின்றதென்பதில் சந்தேகமில்லை; எனினும் ஒரு பேராசிரியரின் கருத்தாழத்திலும் புறநிலைச் சிந்தனையிலும் அது நன்றாக மறைந்திருக்கிறது. அது தான் ஆடம் ஸ்மித்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  A. Smith, The Wealth of Nations, Vol. II, p. 42.
 (2)  A. Smith, The Wealth of Nations, Vol. I, London, 1924, p. 295.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்

PP Letter head24.03.2020

♦ அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணை!

♦ புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்று!

♦ போர்க் கால அடிப்படையில் இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை வழங்கிடு!

♦ குடும்பம் ஒன்றிற்கு இருபதாயிரம் நிவாரணத் தொகை அளித்திடு!

♦ கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அனைத்து வகையிலும் அரசு செயல்பட குரல் எழுப்புவோம்!

அன்பார்ந்த மக்களே,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டு இலட்சம் பேருக்கு மேல் தாக்கி உள்ளது. இதுவரை பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கி உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவி வரும் வேகம் இனி எத்தனை உயிர்கள் போகும் என தெரியவில்லை. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் என மருத்துவம், தொழில்நுட்பம், நிதிவளம் மிக்க நாடுகளே திணறிவரும் நிலையில், மக்களை பற்றி கவலைப்படாத பாசிச பா.ஜ.க அரசால் இந்தியாவில் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் பன்மடங்கு இருக்கப் போகின்றது.

கடந்த மூன்று மாதங்களாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சீனா எவ்வாறு போர்க்கால முறையில் கையாண்டது என்ற அனுபவத்தை மோடி அரசு அலட்சியம் செய்துள்ளது. நோய் தொற்றலுடன் இந்தியாவிற்குள் நுழைவோரை பரிசோதித்து மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல்; சந்தேகப்படும் நிலையில் உள்ளோரை விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகிலேயே அரசு காப்பகங்களை உருவாக்கி 14 நாட்கள் தனிமைப்படுத்தி பராமரித்தல்; அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடத்தி நோய் தொற்றுயில்லை என உத்திரவாதப்படுத்தி வெளியே விடுதல் என இந்திய அரசு துவக்க நிலையிலேயே செயல்பட்டிருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

சீனாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை.

கோவிட்-2019 கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்ததாகும். சீனாவைத் தொடர்ந்து ஈரானுக்கும், சில அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருந்த நிலையிலேயே, அரசு இயந்திரத்தை ஒருங்கிணைந்த முறையில் முடுக்கி விட்டு மேற்கூறிய நடவடிக்கைகளை செய்திருந்தால் பிறருக்கு கொரோனா பரவியதை தடுத்திருக்கலாம். சமூக பரவலாக்கல் (community transmission) ஆகியுள்ளதா என கண்டறிய கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்கள் தொகையினரை ஒரே நேரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம். இவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக செய்வதை விடுத்து, அது குறித்து விவாதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, கையை கழுவுவது எப்படி, தும்முவது எப்படி என்ற பிரச்சாரத்தில் மக்களை முழ்கடித்து தனிநபர் ஒழுங்கு தான் தீர்வு என நிலைநாட்டி வருகின்றன அரசு நிர்வாகங்களும், ஊடகங்களும். கொரோனா வைரஸ் பரவல் போன்ற திடீர் தாக்குதல்களை எதிர்கொள்கின்ற வகையில் நம் அரசு மருத்துவ கட்டமைப்போ, பரவலான மருத்துவ பரிசோதனை செய்யும் வசதிகளோ நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை.

ஸ்பெயின் நாட்டில் நோய்பரவல் தீவிரமான நிலையில், வீட்டிற்குள் தங்களை முடக்கிக் கொண்ட மக்கள், பொதுவெளியில் நோய் தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாடிகளில் நின்று கைதட்டினர். அந்நாட்டு மக்களின் இந்த உணர்வெழுச்சி வடிவத்தினை, ஒரு பாசிஸ்டுக்கே உரிய நயவஞ்சக விளம்பர உத்தியுடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரு நாள் மக்கள் ஊரடங்கு என்றும், கைத்தட்டுங்கள் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மோடி. இந்த 14 மணி நேர ஊரடங்கால் வைரஸ் பரவல் தடுத்து நிறுத்தப்படும் என இரஜினிகாந்த் உள்ளிட்ட சங்கி முட்டாள்கள் மருத்துவ அறிவியலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் மீட்பராக மோடியை காட்ட முயற்சித்தனர். மருத்துவர்களோ கைத்தட்டல் வேண்டாம் நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க உபகரணங்களை தாருங்கள் என மன்றாடுகின்றனர். இருந்த போதிலும் மேட்டுக்குடியினரும், சங்பரிவாரங்களின் பிரச்சாரத்தில் பலியான மக்களும் தேசியக் கொடியுடன் அருகருகில் நின்று கரவொலி எழுப்பினர். இப்போது மேலும் இரு வாரங்கள் ஊரடங்கினை அமுல்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது.

படிக்க:
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா
கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை போன்ற மாநகரங்களில் தஞ்சமடைந்து இருந்த மக்கள்  கொத்துக்கொத்தாக வெளியேறுகிறார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் சொந்த ஊர்களுக்கே செல்கிறார்கள். வெளிமாநில தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் ரயில் நிலையங்களிலேயே படுத்துக்கிடக்கிறார்கள்.  மாவட்ட எல்லைகளை மூடுவது, பொதுப் போக்குவரத்தினை துண்டிப்பது, தொழிற்சாலை – நிறுவனங்களுக்கு விடுமுறை, அரசு நிறுவனங்களை குறைவான ஊழியர்களை கொண்டு இயக்குவது எனப் புதுப்புது அறிவிப்புகளை அரசு நிர்வாகம் வெளியிட்டுக்கொண்டே உள்ளது. சமூக விலக்கல் தூரத்தினை (Social distancing) எவ்வாறு பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற பொது வழிகாட்டுதல் வழங்கி ஒரு பரிசோதனை முயற்சியினை கூட செய்யாமல், சமூகத்தின் இயக்கம் மொத்தமாக முடக்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக பரிசோதித்து தனிமைப்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்ட மோடி அரசு, இப்போது ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத மக்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதினை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.

பல இலட்சம், பல்லாயிரம் என சம்பளம் வாங்கும் ஐ.டி. ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கும், பணக்கார மேட்டுக்குடியினரும் சில மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டார்கள். அவர்கள் எத்தனை மாதங்கள் வீட்டில் முடங்கினாலும் கவலையில்லை. தொழிற்சாலை முதலாளிகள் கம்பெனிகளை மூடுவதால் பெயிலவுட் என அறிவித்து தொழில்நட்டம் என அரசிடம் நட்ட ஈடு பெற்றுக்கொள்வார்கள்.    (2008-இல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது பல நிறுவனங்கள் இப்படி செய்துள்ளன.)  ஆனால், பெரும் பாதிப்படையும் ஏழை மக்களுக்கு அரசு என்ன செய்யப் போகின்றது. தினக்கூலிகள், வீடற்ற ஏழை மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், வாகன ஒட்டுநர்கள், சிறுவியாபாரிகள் என வருமானம் இன்றி, உணவின்றி முடங்கப் போகும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு யார் பொறுப்பேற்பது. சுனாமி, கனமழை –பெருவெள்ளம், சூறாவளி, புயல்,வறட்சி போன்ற இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பொருளாதார நெருக்கடி, தொழில் முடக்கம், ஆலை மூடல் – வேலையின்மை போன்றவைகளானாலும் ஏழைகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மற்ற நாடுகள் பல இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும் போது, தொலைக்காட்சியில் நீட்டி முழங்கிய மோடி இது குறித்து அன்றும் பேசவில்லை. தற்சமயம் உரையாற்றிய போது இது குறித்து நிதி அமைச்சர் தலைமையில் கமிட்டி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி மாநில பங்குத் தொகை பல ஆயிரம் கோடிகளை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையினால் தடுமாறுகின்றது. சுமார் ஐந்து லட்சம் கோடி நிதி ஒதுக்கினால்தான் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

அரசு மருத்துவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அவலம்.

சமூக நலன் கொண்ட மருத்துவர்கள் கவலைப்படுவதெல்லாம் கொரோனா பாதிப்பில் இருந்து நோயாளிகளை எப்படி காப்பது என்பதினை விட, சமூக பரவலாக்கல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி விட்டால் சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கைகள் இல்லாத நெருக்கடியான நிலை கண்டு தான். தனியார் மருத்துவமனைகளையும் உள்ளடக்கி இது தான் மொத்த நிலை எனும் போது, அரசோ தனியார் மருத்துவமனைகளை ரூ.4500 மிகாமல் பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கிறது. உங்களிடம் வருவோருக்கு மருத்துவம் பாருங்கள், பணம் தருகிறோம் என தனியாரிடம் பேரம் பேசுகிறது. அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து, புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, போர்க் கால நடவடிக்கையாக இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படுவதும் உடனடித் தேவையாக உள்ளது. இவ்வாறான நெருக்கடியான தருணத்தில் பாசிசத்தின் தலைமையிலான அரசு கட்டமைப்பினை அம்பலப்படுத்தி போராடாமல், கொரோனாவின் பாதிப்பிலிருந்தோ, அதனால் ஏற்படயுள்ள பொருளாதார இழப்புகளிலிருந்தோ மக்களை சிறிதளவெனினும் நம்மால் பாதுகாத்திட இயலாது.

மத்திய, மாநில அரசுகளே!

♠ கொரோனாவில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து, புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, போர்க் கால அடிப்படையில் இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை வழங்கிடு!
♠ மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ உபகரணங்களையும், பாதுகாப்பு கவசங்களையும் வழங்கிடு!
♠ வீடற்றவர்கள், போக்குவரத்து முடக்கத்தால் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முடங்கியோருக்கு உணவு, குடிதண்ணீர், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்திடு!
♠ குடும்பம் ஒன்றிற்கு இருபதாயிரம் நிவாரணத் தொகை அளித்திடு!
♠ தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடு!
♠ ஜி.எஸ்.டி. வரி, வங்கி கடனுக்கான வட்டி, வங்கி கடன் தவணை, மகளிர் சுய உதவி குழு கடன் என அனைத்து வரி, கடன் வசூல் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்க உத்திரவிடு!
♠ கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் விபரம், சிகிச்சை விபரம், நோய் பரவல் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்திடு!

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !

பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழின் மின்பதிப்பை மிகவும் தாமதமாக மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இந்த இதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்த பதிவுகளில்  அவை வெளியிடப்படும்.

– வினவு

எழுகிறது புதிய இந்தியா !
புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !

1. ”கார்ப்பரேட் விவசாயி”களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா!

2. நிதி மூலதன ஆட்சி!

3. மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை தனியார்மயம்: ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…!

4. சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா?

5. சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம்: பல்லிளிக்கும் பொய் வழக்குகள்!

6. ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!

7. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள்!

8. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

9. தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!

10. டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்!

11. அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி: கார்ப்பரேட்மயமாக்கும் சதி!

12. கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் …

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க ! கருத்துப்படம்

தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க !

கருத்துப்படம் : வேலன்

நன்றி : மூலப்படம் – சதீஷ் ஆச்சார்யா

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்

3

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 01

ஹிட்லர் என்ற பாசிச சர்வாதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து இந்த உலகத்தை தனது வீரத்தாலும், தியாகத்தாலும் மீட்டது சோசலிச சோவியத் ரஷ்யா. தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், ரசிய மக்களும் பெரும் தியாகங்களை ஈந்து இந்த உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டனர். இன்று இந்தியா உள்ளிட்டு உலகம் முழுவதும் வலதுசாரி பாசிச அரசுகள் உருவாகிவரும் இந்தச் சூழலில் பாசிசத்தை வீழ்த்தவல்லதாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டுமெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை தோழர் லெனின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் எனும் தனது நூலில் வரையறுத்துள்ளார்.

இந்நூலின் முதல் பகுதியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், ஜனநாயகமும் மத்தியத்துவமும் தனித் தனியே பிரிக்க முடியாதது என்பதையும்  பெயரளவிலான ஜனநாயகம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் எளிமையாக விளக்கியுள்ளார் லெனின் !

 

அறிமுகக் குறிப்பு

தோழர் லெனினது வழிகாட்டுதலின்கீழ் எழுதப்பட்டு, தோழர் லெனின் தலைமை தாங்கிய பொதுவுடைமை அகிலத்தின் மூன்றாவது பேராயத்தில் (1921-ல்) நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம், புரட்சிகர பொதுவுடைமைவாத நிறுவனக் கோட்பாடுகளை வரையறுத்துத் தருகின்றது. “லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற நூலில் தோழர் ஸ்டாலின் இந்தப் பொதுக் கோட்பாடுகளைச் சுருக்கமாக, எளிமையாக விளக்கியுள்ளார்.

பொதுவுடைமைவாத நிறுவனங்களுக்கான கோட்பாடுகள் சாரமாக வழங்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில், பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகளைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்க வேண்டும். எனவே, நாடாளுமன்ற வடிவங்களைப் பயன்படுத்துவது, மையமான பெரிய நகரங்களில் குவிந்து வேலை செய்ய வேண்டும் என்பன போன்று வருகின்ற அனுபவங்களை, அந்த நாடுகளின் போர்த்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவைகளோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டிற்குப் பொருத்தும்போது, நமது நாட்டு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நீண்டகால மக்கள் யுத்தப் பாதை எனும் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இந்த ஆவணத்தில் வருகின்ற சோசலிஸ்டுக் கட்சிகள் என்பவைகள் சீர்திருத்தவாத கட்சிகளாகச் செயல்பட்டவை; இவைகளில் ஒரு சிலவோ, அல்லது பகுதிகளோ பொதுவுடைமைக் கட்சிகளாக மாற்றம் பெற்றன.

♦ ♦ ♦

 

பாட்டாளி வர்க்கக் கட்சியின் நிறுவனமும் கட்டமைப்பும்

1.பொதுவான கோட்பாடுகள்

1. நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியினுடைய நடவடிக்கைகளின் குறிக்கோளுக்கும் பொருத்தமாகக் கட்சியின் நிறுவன அமைப்பு இருத்தல் வேண்டும். புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும், அதைத் தொடர்ந்து சோசலிசத்தை அடைவதற்கான இடைக்காலத்திலும், அதாவது பொதுவுடைமைச் சமுதாயத்தின் முதல் கட்டத்திலும் பொதுவுடைமைக் கட்சியானது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைவரிசையாகவும் விளங்க வேண்டும்.

2. முழுக்க முழுக்க தவறற்றதும் மாற்றக்கூடாததுமான ஒரு நிறுவன வடிவம் ஏதும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட சூழ்நிலைகள் தொடர்ச்சியான பரிணாம நிகழ்வு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ற பொருத்தமான வடிவங்களை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையினுடைய நிறுவன அமைப்பு இடையறாது மேற்கொள்ள வேண்டும். இதுபோலவே ஒவ்வொரு நாட்டினுடைய தனிவகைப்பட்ட சூழ்நிலைகள், குறிப்பிட்ட நாட்டு கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிறுவன அமைப்பு வடிவங்களைத் தீர்மானிக்கின்றன.

ஆனால், இத்தகைய பாகுபாட்டுக்கு நிச்சயம் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. தனிச்சிறப்புத் தன்மைகள் எதுவாயினும், பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பல்வேறு இடைக்கட்டங்களிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்ட சூழ்நிலைகளின் தன்மை, உலகப் பொதுவுடைமை இயக்கத்திற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது, அனைத்து நாடுகளிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவன அமைப்புக்கு பொதுவான அடிப்படையைத் தோற்றுவிக்கின்றது.

இந்த அடிப்படையில் பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவனத்தைக் கட்டி வளர்ப்பது அவசியம். ஆனால், இப்போது உள்ளவற்றுக்கு முற்றிலும் மாறாக, புதிய மாதிரியிலான கட்சிகளை நிறுவுவதற்கோ, முற்றிலும் முழுதான சரியான நிறுவன வடிவம் மற்றும் உன்னத அமைப்பு விதிகள் என்று ஏதோ ஒன்றுக்கு முயலவோ கூடாது.

புரட்சிக்கான கருவி

3. ஆகப் பெரும்பான்மையான பொதுவுடைமைக் கட்சிகளும், இதன் விளைவாக புரட்சிகர உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட கட்சியான பொதுவுடைமை அகிலமும், தமது போராட்டச் சூழ்நிலைகளில் பொதுவான குணாம்சத்தைப் பலம் வாய்ந்த முதலாளித்துவ வர்க்கத்தை இன்னமும் எதிர்த்துப் போரிட வேண்டியதாக இருப்பதைக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதும், அதனிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுப்பதுமே – புதிய மாற்றங்கள் ஏற்படும்வரை – எல்லா பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பொதுவுடைமை அகிலத்திற்கும் வழிகாட்டுகின்ற மற்றும் தீர்மானிக்கின்ற பிரதான லட்சியமாக இருக்கும். இதற்கேற்ப முதலாளித்துவ நாடுகளில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளினுடைய நிறுவன நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் காரணி என்னவென்றால், உடைமை வர்க்கங்களின் மீதான பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றியைச் சாத்தியப்படுத்தும் மற்றும் உத்திரவாதப்படுத்தும்படியான நிறுவனங்களைக் கட்டியமைப்பதாகும்.

தலைவர்களின் நிறுவனம்

4. எந்தப் பொது நடவடிக்கைக்கும் தலைமை என்பது அவசியமான நிபந்தனை. ஆனால், உலக வரலாற்றில் அதி மகத்தான போரில் (போராட்டத்தில்) தலைமை என்பது, அதிமிக புறக்கணிக்க இயலாத ஒன்று. பொதுவுடைமைக் கட்சி நிறுவனம் என்பது, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் பொதுவுடைமைவாதத் தலைமையளிக்கும் நிறுவனம் ஆகும்.

பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும்.

சிறந்த தலைவர்களாக இருக்க கட்சி சிறந்த தலைமைப் பண்பைக் கொண்டிருக்க வேண்டும். அதையொட்டி நமது நிறுவன வேலையின் பிரதானப் பணியானது, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் தலைமையிடத்திற்குத் திறமையுள்ள பொதுவுடைமைக் கட்சிகளைக் கொண்டுவர தகுதி வாய்ந்த, நெறிப்படுத்துகின்ற உறுப்புகளின் (organs) கீழ் கல்வியளித்தல், அமைப்பாக்குதல் மற்றும் பயிற்றுவித்தல் ஆகும்.

5. எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் போராட்டச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொதுவுடைமைக் கட்சியும் அதன் தலைமை நிறுவனங்களும் ஆகப்பெரும் அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் வகையிலும் தனது அங்கக் சேர்க்கையைக் கொண்டிருப்பது புரட்சிகர வர்க்கப் போராட்டத்திலுள்ள தலைமைக்கு முன்நிபந்தனைகளாகும். மேலும், வெற்றிகரமான தலைமைக்குப் பாட்டாளி வர்க்கத்துடன் முற்று முழுதாக நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது அவசியம். இத்தகைய நெருக்கமான உறவு இல்லாவிடில், தலைமையானது பரந்துபட்ட மக்களுக்குத் தலைமை ஏற்றுச் செல்லாது. மாறாக, அதிகபட்சம் போனால், மக்களுக்குப் பின்னால் செல்வதாக இருக்கும்.

ஜனநாயக மத்தியத்துவத்தின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியில் அங்ககச் சேர்க்கையானது அடையப்பட வேண்டும்.

2. ஜனநாயக மத்தியத்துவம் பற்றி

இது எப்படி இருக்க வேண்டும்?

6. பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும். பொதுவுடைமைக் கட்சி நிறுவனத்தில் உள்ள மத்தியத்துவம் பெயரளவிலான மற்றும் இயந்திரகதியான மத்தியத்துவம் என்று பொருள்படாது.

படிக்க:
சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
♦ மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

ஆனால், பொதுவுடைமைவாத நடவடிக்கைகளின் மத்தியத்துவமாக, அதாவது, போர் நிலைமைக்கும் அதேவேளையில் எந்த நிலைமைக்கும் மாறிக் கொள்வதற்கும் தயாராக உள்ள பலமான தலைமையை உருவாக்குவதாகும். பெயரளவிலான அல்லது இயந்திரகதியான மத்தியத்துவம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது கரங்களில் ‘அதிகாரத்தை’ மத்தியத்துவப்படுத்தும் தொழிற்துறை அதிகாரத்துவம் ஆகும். இது, பிற உறுப்பினர்கள் மீது அல்லது கட்சி நிறுவனத்திற்கு வெளியில் உள்ள புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற, பொதுவுடைமைவாதத் தலைமையை மத்தியத்துவப்படுத்துகின்ற பொதுவுடைமைக் கட்சியானது, புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக பொதுவுடைமைவாதிகளின் எதிரிகள் மட்டுமே குற்றம் சாட்டுவர். அவர்களது இத்தகைய கூற்று அப்பட்டமான பொய்யாகும். பொதுவுடைமை அகிலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவ அடிப்படைக் கோட்பாடுகளுக்கு, அதிகாரத்துக்கான போட்டியோ அல்லது மேலாதிக்கத்துக்கான போட்டியோ அறவே பொருத்தமற்றதாகும்.

அதிகாரத்துவமும் அல்ல, பெயரளவிலான ஜனநாயகமும் அல்ல

புரட்சிகரமற்ற பழைய தொழிலாளர் இயக்க நிறுவனங்களில், முதலாளித்துவ அரசில் உள்ளது போன்ற இயல்புடைய, எங்கும் விரவிய இருமைவாதம் (இருமைவாதம் – தனித்தனியாகப் பிரிந்திருப்பது – மொழிபெயர்ப்பாளர்) அதாவது, அதிகாரத்துவத்துக்கும் ‘மக்களுக்கும்’ இடையிலான இருமைவாதம் வளர்ச்சியுற்று இருந்தது. முதலாளித்துவச் சூழலின் இந்த நச்சுச் செல்வாக்கின்கீழ் செயல்பாடுகள் பிரிந்திருப்பது – பொது முயற்சியுடைய உயிரோட்டமான அமைப்புக்குப் பதில், பயனற்ற பெயரளவிலான ஜனநாயகத்தை வைப்பதும், ஊக்கமான நிர்வாகிகள், செயல்படாத மக்கள் என்று அமைப்பைப் பிளவுபடுத்துவது – வளர்ச்சியுற்றது. முதலாளித்துவ சூழலின் காரணத்தால், புரட்சிகர தொழிலாளர் இயக்கம் கூட இருமைவாதம் மற்றும் சம்பிரதாயவாதம் என்ற போக்கைத் தவிர்க்கவியலாதபடி வழிவழியாகப் பெற்றுள்ளது.

முறையான மற்றும் விடாப்பிடியான அரசியல், அமைப்புப் பணிகள் மூலமாகவும் இடையறாது செழுமைப்படுத்துவது மற்றம் சரிசெய்வது மூலமாகவும் பொதுவுடைமைக் கட்சி இந்த எதிர்மறையான பண்புகளை அடியோடு வெற்றி கொள்ள வேண்டும்.

7. சோசலிஸ்டுக் கட்சியை பொதுவுடைமைக் கட்சியாக மாற்றியமைக்கும்போது பழைய கட்சி அமைப்பை அப்படியே விட்டு வைத்துவிட்டு தனது மத்தியத் தலைமையின் கரங்களில் அதிகாரத்தைக் குவிப்பதுடன் மட்டும் கட்சியானது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. மத்தியத்துவம் ஏட்டளவில் மட்டும் இல்லாமல் உண்மையில் உணர்வு பூர்வமாகக் கடைபிடிக்கப்படுவதாக அமைய வேண்டும். இதைச் சாதிப்பது எப்போது சாத்தியமாகும் என்றால், தமது பொது நடவடிக்கைகளிலும், போராட்டத்திலும் இந்த அதிகாரம் (Authority) அடிப்படையிலேயே திறனுள்ள கருவியாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் உணரும்போதுதான். அப்படியில்லையெனில், மத்தியத்துவமானது பரந்துபட்ட மக்களுக்கு, கட்சிக்குள்ளேயே உள்ள அதிகாரத்துவமாகத் தோன்றும். எனவே, இது அனைத்து வகையான தலைமைக்கும் அனைத்து வகையான உருக்குக் கட்டுப்பாட்டுக்கும் எதிர்ப்புணர்வைத் தூண்டுவதாக அமையும். அராஜகவாதமானது அதிகாரத்துவத்தின் எதிர்துருவமாகும்.

கட்சி நிறுவனத்தில் வெறும் பெயரளவிலான ஜனநாயகம் இருப்பது அதிகாரத்துவ போக்குகளையோ அல்லது அராஜகவாதப் போக்குகளையோ ஒழிக்காது. ஏனெனில், பெயரளவிலான ஜனநாயகம்தான் அந்தப் போக்குகளுக்கு செழுமையான விளைநிலமாக இருக்கிறது. எனவே, பெயரளவிலான ஜனநாயகத்தினை அடிப்படையாகக் கொண்டு கட்சி நிறுவனத்தின் மத்தியத்துவம், அதாவது பலமான தலைமையைப் படைக்கும் நோக்கம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட முடியாது. கட்சிக்குள்ளேயே தலைமை நிறுவனங்களுக்கும் உறுப்பினர்களுக்கு இடையிலேயும்  – அதுபோலவே கட்சிக்கும் வெளியில் உள்ள திரளான பாட்டாளி வர்க்கத்துக்கும் கட்சிக்கும் இடையிலும் உயிரோட்டமான இணைப்புகளையும் பரஸ்பர உறவுகளையும் வளர்ப்பதும் நிலைநிறுத்துவதும் இதற்கான மிக அவசியமான முன்நிபந்தனைகள் ஆகும்.

(தொடரும்)

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !

குடியுரிமை திருத்தச்சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என இந்தியா முழுவதும் பார்ப்பனப் பாசிசம் தலைவிரித்தாடும் இந்த அரசியல் சூழலில் மதவெறிக்கு எதிரான தோழர் பகத்சிங்கின் பார்வையை வினவு வாசகர்களின் முன் வைக்கிறோம் ! தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே

“பகத்சிங் சிறையில் இருந்தபோதுதான் மார்க்சியத்தை கற்றுக் கொண்டார்; போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற போதும் அவர் தனி நபர் பயங்கர வாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்; உண்மையான புரட்சிகர சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் மீது அப்போது அவருக்கு நம்பிக்கையிருக்கவில்லை” என்று இன்றுவரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அல்லது நம்பிக் கொண்டிருப்பவர்கள் இக்கட்டுரையை சற்று கூடுதல் கவனம் எடுத்து படிக்க வேண்டும்.

ஏனென்றால் இக்கட்டுரை அவர்களது முன் கணிப்புகளில் பல அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. இது, சாண்டர்ஸ் கொலைக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இக்கட்டுரையில் மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே என்பதை ஒரு தீர்க்கமான மார்க்சிய வாதியின் வர்க்கப் பார்வையுடன் முன் வைக்கிறார். இக்கட்டுரை 1928 ஜுன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.

♦ ♦ ♦

மதக் கலவரங்களும் நமது கடமையும்

இந்தியாவின் நிலைமை தற்போது வருந்தத்தக்க ஒன்றாக ஆகிவிட்டது. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றொரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஜென்ம விரோதிகளாக ஆகிவிட்டனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மட்டுமே நீங்கள் மற்ற மதத்தவர்களுக்கு எதிரியாக கருதப்படுவீர்கள். இதை நீங்கள் நம்பவில்லையென்றால் தயவுசெய்து லாகூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களைப் பாருங்கள். சீக்கியர்களையும் இந்துக்களையும் எவ்வளவு கொடூரமாக முஸ்லீம்கள் கொலை செய்தனர். சீக்கியர்களும் அதே விதத்தில் பதிலுக்குச் செய்தனர். இந்தக் கொலைகள் சில மனிதர்கள் குற்றம் செய்துவிட்டார்கள் என்பதற்காக நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். முஸ்லீம்களால் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் சீக்கியர்களாகவோ இந்துக்களாகவோ இருந்தாலே போதும். அதே போன்று இந்துக்களாலும் சீக்கியர்களாலும் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலே போதும்.

மதங்கள் இந்தியாவை அழித்து விட்டன

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் இருண்டதாகவே தெரிகிறது. இந்த மதங்கள் இந்தியாவை அழித்து விட்டன. இந்த வெறுப்புகளின் பிடியில் இருந்து நாடு என்றைக்கு விடுபடும் என்று ஊகிக்க முடியவில்லை. இந்தக் கலவரங்கள் உலகத்தின் பார்வையில் இந்தியாவின் நன்மதிப்பை குலைத்து விட்டன. இந்த மதவாத வெறுப்பு எங்கும் பரவிக் கிடக்கும் நிலையில் வெகுசில முஸ்லீம்கள், சீக்கியர்கள் அல்லது இந்துக்கள் மட்டுமே தங்களது மனதை அமைதியாக வைத்திருப்பதைக் காணமுடிகிறது. மற்றவர்கள் தங்கள் கைகளில் எப்போதும் கம்புகளோடும் கத்திகளோடும் வாட்களோடும் தங்களது மதங்கள் என்று சொல்லப்படுவதை பாதுகாக்கத் தயாராக இருக்கின்றனர். முடிவில் ஒருவரையொருவர் கொன்று குவிக்கின்றனர். இதில் தப்பிப் பிழைப்பவர்களில் சிலர் தூக்குமேடையில் மரணமடைகின்றனர் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஏராளமான இரத்தம் சிந்தப்பட்ட பிறகு பிரிட்டிஷாரின் குண்டாந்தடிகள் இந்த மதவெறிபிடித்த மனிதர்களின் தலைகளைப் பிளக்கும் போதுதான் அவர்கள் தங்களது சுயநினைவுக்கு வருகின்றனர்.

மதக்கலவரங்களைத் தூண்டுவது மதவாதிகளும் செய்திப் பத்திரிக்கைகளுமே

பொதுவாக, மதவாதத் தலைவர்களும் செய்திப் பத்திரிக்கைகளுமே இக்கலவரங்களுக்குப் பின்னணியில் இருக்கின்றனர். இந்தியத் தலைவர்கள் நமக்கு மிக மோசமான துரோகம் செய்துவிட்டனர். யாரும் இதை மறுக்க முடியாது. இந்தியாவை விடுதலை செய்வதற்கான பொறுப்பை உடைய இத்தலைவர்கள், “ஒரே தேசியம்” (Common Nationality) “சுயராஜ்யம்” போன்ற முழக்கங்களை முழங்கினர். ஆனால் இவர்கள் ஒன்று தங்களது மௌனத்தின் மூலம் மதக்கலவரங்களில் முனைப்புடன் இருக்கின்றனர் அல்லது குருட்டுத்தனமான மதவெறிவாத நீரோட்டத்தின் போக்கில் நீந்திக் கொண்டுள்ளனர். மௌனமாக இருக்கும் தலைவர்களின் எண்ணிக்கை குறைவானது அல்ல. ஆனால் மதவாத இயக்கத்தில் சேர்ந்த தலைவர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் அதிகம். அனைத்து மக்களின் நன்மையை விரும்பும் தலைவர்கள் வெகுசிலரே. இந்த மதவாதப் பேரலை அவர்கள் அனைவரையும் அடித்துச் சென்று விட்டது. வழிகாட்டும் தலைமை இல்லாத நாடாக இந்தியா ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது.

தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.

இத்தலைவர்களைத் தவிர, மதக்கலவரங்களைத் தூண்டிவிடும் மற்றவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஒருகாலத்தில் உன்னதமான தொழிலாக கருதப்பட்ட பத்திரிக்கையாளர் தொழில் இன்று மிக மோசமாக சீரழிந்து விட்டது பத்திரிக்கைகள் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உண்டாக்குகின்றன. பத்திரிக்கைகளில் வெளிவந்த உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுரைகளால் வெடித்த கலவரங்களுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் அமைதியாக இருக்கும் எழுத்தாளர்கள் வெகுசிலரே.

மக்களுக்கு அறிவூட்டுவதும், குறுகிய மனப்பான்மையிலிருந்து அவர்களை விடுவிப்பதும், அவர்களது மதவாத உணர்வுகளை மட்டுப்படுத்தி மத நல்லிணக்கத்தை ஊக்குவித்து அனைவருக்கும் பொதுவான ஒரே (இந்திய) தேசியத்தை கட்டியமைக்க வேண்டியதும் பத்திரிக்கைகளின் கடமை. ஆனால் அவர்கள், மக்கள் மத்தியில் அறிவீனத்தையும், குறுகிய மனப்பான்மையையும் மதவாதத்தையும் பரப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உண்டாகும் அத்தகைய கலவரங்களின் மூலம் ஒரே (இந்திய) தேசியத்தைச் சிதைக்கின்றனர். பத்திரிக்கைகளின் இச்செயலின் விளைவாக இந்தியாவின் இன்றைய நிலையை நினைக்கும் போது நமது கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி நம் இதயத்தைப் பிளக்கின்றது.

ஒத்துழையாமை இயக்க காலத்தின் போது மக்களிடம் இருந்த கிளர்ச்சி உணர்வைப் பார்த்தவர்களுக்கு இன்றைய சூழ்நிலை பெரும் மனவருத்தத்தை உண்டாக்குகிறது. அன்றைய காலத்தில் சுதந்திரம் நமது வாயிற்படி வரை வந்ததை நாம் காணமுடிந்தது. இன்றோ அது வெறும் கனவாக மட்டுமே ஆகிவிட்டது. இது பிரிட்டிஷார் பெற்ற வெற்றிகளுள் ஒன்று. தனது இறுதிக் கட்டத்தில் இருக்கும் அதிகார வர்க்கம் ஒரு பாறையைப் போல் உறுதி பெற்றுவிட்டது.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை பொருளாதாரப் பிரச்சனையே

இந்த மதக்கலவரங்களின் ஆணிவேர் எங்கிருக்கிறது என்று நாம் ஆழமாகச் சென்று பார்த்தால், அவை பொருளாதாரக் காரணங்களில் இருப்பதை நாம் காணலாம். தலைவர்களும் பத்திரிக்கையாளர்களும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது நிறைய தியாகங்கள் செய்தனர். அவர்களது பொருளாதார நிலைமை சீரழிந்து போனது. ஆனால் ஒத்துழையாமை இயக்கம் தோல்வியடைந்ததால் அவர்கள் நம்பிக்கையிழந்தனர். தங்களது வேலைகளை இழந்த பெரும்பாலான மதவாதத் தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி தங்களது தொழிலை மறுபடியும் தொடங்கினர். எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக பொருளாதாரப் பிரச்சனையே இருக்கும். இது கார்ல் மார்க்ஸின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று. இதுவே, நிலைமையை மோசமானதாக்கிய, தாப்லிக் (Tablique), தாம்கீன் (Tamkeen), சுத்தி (Shuddhi) போன்ற அமைப்புகள் உருவானதற்கான காரணம்.

எனவே, இத்தகைய கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தரத் தீர்வு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே, ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து, மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் (Marta kya na karta) என்பது உண்மையே.

ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேயப் பேரரசால் ஆளப்படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

மதக்கலவரங்களுக்குத் தீர்வு

வர்க்க உணர்வை உருவாக்குவதே நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும். ஏழை உழைப்பாளிகளும் விவசாயிகளும் தங்களது உண்மையான எதிரிகள் முதலாளிகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முதலாளித்துவவாதிகளின் கைப்பாவை களாக ஆகி விடக்கூடாது. தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.


அந்த வீரன் இன்னும் சாகவில்லை ! கோவன் பாடல்!


ரஷ்யாவின் வரலாற்றை அறிந்தவர்கள், அவர்களது நிலைமையும் நம்முடைய நிலைமையைப் போன்றே இருந்தது என்பதை அறிவார்கள். ஜாரின் ஆட்சியின்போது நம்மைப்போலவே அந்த மக்களும் பல குழுக்களாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஒட்டுமொத்த சூழ்நிலையே மாறிவிட்டது. இப்பொழுது அங்கே, கலவரங்கள் நடப்பதில்லை. பொருளாதார வறுமையின் காரணமாகவே ஜார் ஆட்சிக் காலத்தில் கலவரங்கள் ஏற்பட்டன. (சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு இப்பொழுது அவர்களது பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளது. “மனிதர்கள்” ஒவ்வொருவரும் “மனிதர்களாகவே” நடத்தப்படுகின்றனர். அவர்கள் “பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக” நடத்தப்படுவதில்லை. மக்கள் வர்க்க உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே இப்பொழுது அங்கே கலவரங்கள் பற்றிய செய்தியை எங்குமே கேட்க முடியாது

வர்க்கப் போராட்டங்களே மக்களின் ஒற்றுமையை சாதிக்கும்

மாறாக நமது நாட்டில் கலவரங்களின் போது பொதுவாக நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யும் செய்திகளே நமக்கு வருகின்றன. ஆனால் கல்கத்தா கலவரங்களில் ஓர் நம்பிக்கை ஒளிக்கீற்று நமக்குத் தென்படுகிறது. அங்கே, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இந்து முஸ்லீம் தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததுடன் கலவரங்களை அமைதிப்படுத்தவும் முயன்றனர். அவர்கள் வர்க்க உணர்வு பெற்றவர்களாக இருந்ததனாலேயே அவர்களால் இதைச் செய்ய முடிந்தது. அவர்களுடைய நலன் எதில் அடங்கியிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வர்க்க உணர்வு மட்டுமே இத்தகைய கலவரங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி.

வெறுப்பை விதைக்கும் மதங்களில் இருந்து நமது இளைஞர்கள் விலகியிருக்கின்றனர் என்பது நமக்குக் கிடைத்த மற்றொரு நல்ல செய்தி. அவர்கள் திறந்த மனதுடன் மனிதர்களை மதிப்பிடுகின்றனர். அவர்கள் மக்களை ஹிந்துக்களாக அல்லது முஸ்லீம்களாக அல்லது சீக்கியர்களாகப் பார்ப்பதில்லை. முதலில் மனிதர்களாகவும், பின்னர் இந்தியர்களாகவுமே மக்களை மதிப்பிடுகின்றனர். இந்தியாவின் வருங்காலம் பிரகாசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இந்த கலவரங்களைக் கண்டு அஞ்சக் கூடாது. மாறாக இது போக கலவரங்களே இனி ஏற்படாதவாறு அத்தகைய வர்க்க உணர் தட்டியெழுப்புவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

அரசியலிலிருந்து மதம் பிரித்து வைக்கப்பட வேண்டும்

1914-1915ம் ஆண்டுகளின் தியாகிகள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைத்திருந்தனர். மதம் என்பது தனிநபர்களின் விவகாரம். அதனை சமூக வாழ்க்கையில் கலக்க விடக்கூடாது. ஏனென்றால் அது சமூகம் ஒன்று படுவதற்கான வளர்ச்சிப் போக்கை தடைப்படுத்துகிறது என்றனர். அவர்களது இந்த நிலைபாட்டின் காரணமாகவே கெதார் கட்சி ஒன்றுபட்டதாகவும் வலிமையானதாகவும் இருந்தது. அக்கட்சியின் கீழ் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் அனைவருமே நாட்டிற்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

தற்காலத்தில் ஒருசில தலைவர்கள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மக்களிடையே உள்ள வெறுப்புகளை மட்டுப்படுத்த இது சரியான வழியே. நாங்கள் அவர்களது முயற்சிகளை ஆதரிக்கிறோம். அரசியலில் இருந்து மதம் பிரித்து வைக்கப்பட்டு விட்டால், நாம் நமது மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றுபட முடியும்.

இந்தியாவின் உண்மையான நலம் விரும்பிகள், நாங்கள் முன்வைக்கும் இந்த வழிமுறைகளைப் பற்றி ஆழமாக சிந்திப்பார்கள் என்றும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்தியாவைக் காப்பாற்றுவார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். (கேளாத செவிகள் கேட்கட்டும்… நூலிலிருந்து பக்.104-110)

சமன்லால் தொகுத்து வெளியிட்ட “பகத்சிங்கின் முழு ஆவண தொகுப்பு” எனும் ஹிந்தி நூலில் இருந்து நமது நாக்பூர் தோழர் க. ஜாம்தாரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில மொழிபெயர் தமிழாக்கம். இது பின்னர் K.C. யாதவின் தொகுப்பில் இருந்த மொழிபெயர்ப்புடன் ஒப்பிடப்பட்டு சீர் செய்யப்பட்டது. உட்தலைப்புகள் நம்முடையவை.

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

மீண்டும் இயங்குகிறது வினவு தளம் !

35

தேதி: 23.3.2020

ன்பார்ந்த வாசகர்களே, நண்பர்களே!

எமது வினவு இணைய தளத்தின் ஆசிரியர்குழு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி “விடைபெறுகிறோம் வினவு ஆசிரியர் குழு’’ என தமது விலகல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அவர்களை அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறோம்.

தற்போதைய அரசியல் சூழலில் கடந்த ஒரு மாத காலமாக தளம் செயல்படாததற்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வினவு தளம் அரசியல் அரங்கில் தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியம் கருதியும், வினவின் வாசகர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வினவை விரைந்து செயல்பட வைக்குமாறு கோரிய வகையிலும் நான் பொறுப்பாசிரியராக இருந்து வினவு தளத்தை இயக்கத் தொடங்கியுள்ளோம். இதுவரை எமக்கு உறுதுணையாக இருந்து வந்த வாசகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

வினவு பொறுப்பாசிரியர்,
காளியப்பன்.

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

80

அன்பார்ந்த தோழர்களே,                                                            24.02.2020

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும், இவையன்றி வேறு சில பொறுப்புகளிலும் செயல்பட்டு வந்த நான், எல்லா பொறுப்புகளிலிருந்தும், குறிப்பாக, இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்து விலகுகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற காரணத்தினாலும், தமிழகமெங்குமுள்ள அமைப்புத் தோழர்களுக்கு எனது விலகலையும்  அதற்கான காரணத்தையும் தெரிவிப்பதற்கு வேறு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், அவசியமான விவரங்களை மட்டும் கோடிட்டுக் காட்டி எனது விலகலைத் தவிர்க்கவியலாமல் பொதுவெளியில் அறிவிக்கிறேன்.

எனக்கும் என்னுடன் இணைந்து விலகலை அறிவித்திருக்கும் தோழர் நாதனுக்கும் இது மிகவும் கடினமான ஒரு முடிவு. கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எனக்கும், 30 ஆண்டுகளாக அவருக்கும் அமைப்பு நடவடிக்கைகள்தான் வாழ்க்கையாக இருந்தன. ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.

தோழர் மருதையன்

அயோத்தி தீர்ப்பு, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்று மோடி அரசின் பார்ப்பன பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், எங்களது இந்த விலகல் அறிவிப்பு பலருக்கு வருத்தமளிக்கலாம், சிலருக்கு அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கலாம். நாடெங்கும் மாணவர்களும் முஸ்லிம் பெண்களும் இன்னும் பல்வேறு தரப்பினரும், அஞ்சாநெஞ்சினராய் பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கின்றனர். ஜனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதென்பது காலத்தின் தேவை. அத்தகைய முயற்சியில் முன்நிற்க வேண்டிய அமைப்பின் தலைமைத் தோழர்கள், அமைப்புக்கு உள்ளேயே இப்படியொரு நிலைமையைத் தோற்றுவிக்கிறோமே என்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.

சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்குப் பின்னர், எமது அமைப்புகளிலிருந்து சிலர் வெளியேறியதையும், வெளியேற்றப்பட்டதையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள். கார்ப்பரேட் காவி பாசிசம் அல்லது பார்ப்பன பாசிச அபாயத்தை அமைப்பிலிருக்கும் சில மூத்த தோழர்கள் மறுத்தனர். தங்களது எதிர்ப்பை எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி, சமூக ஊடகங்களின் வாயிலாக அமைப்புக்கு எதிராக ஒரு “பதிலிப்போர்” நடத்தினர்.

“1. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்தை ஆய்வின்றி சதித்தனமாக புகுத்திவிட்டேன் 2. அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்து செல்கிறேன் 3. நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும் திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன். 4. அமைப்பின் மூத்த தோழர்களுக்கிடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன் 5. கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன் 6. மூத்த தோழர்களை வீழ்த்தி விட்டு மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன்” – என்பன எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள். (கீற்று இணையதள கட்டுரை மற்றும் எழில்மாறன் உள்ளிட்ட சிலரின் முகநூல் பதிவுகள்). இவை தவிர தரம் தாழ்ந்த பல அவதூறுகளையும் கடந்த ஓராண்டாக வாய்வழியே பரப்பி வந்தனர்.

தங்களுக்கு உவப்பில்லாத அமைப்பின் முடிவுகள் அனைத்தையும் ஒரு சதிக்கோட்பாடாக மாற்றி, “குற்றத்தை” என் தலையில் சுமத்தினர். “போம்பழியெல்லாம் அமணன் தலையோடே” என பழி எதுவாகிலும் அதனைச் சமணர் தலையில் சுமத்திய ஆழ்வார்கள் நாயன்மார்களின் தந்திரம் இது.

அவதூறு செய்தவர்கள் என்னை மட்டும் தாக்கவில்லை. சென்ற ஆண்டு அமைப்பின் பிரதிநிதிகளால் ஜனநாயக பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கொச்சைப்படுத்தினர்.  அவ்வாறு முடிவெடுத்த பிரதிநிதிகள் அனைவருமே “செட் – அப் செய்து கொண்டுவரப்பட்ட மோசடிப்பேர்வழிகள்” என்று அனைவரையும் தூற்றினர். இந்த நபர்களை “சீர்குலைவு சக்திகள்” என்று அமைப்பின் தலைமை அறிவித்தது. அத்தகைய சிலர் அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

னால், வேறு சிலர் இதே அவதூறுகளை, அமைப்புக்குள் இருந்தபடியே ஓராண்டாகப் பரப்பி வந்தனர். சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரைத் தூண்டிவிடுவதே அமைப்பிற்கு உள்ளே இருக்கும் இந்த “தந்திரசாலிகள்”தான் என்று தலைமைக்குழுவுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும். இவர்கள்தான் சீர்குலைவு நடவடிக்கைகளின் ஆணிவேர் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தலைமைக்குழு ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவு காகிதத்தில் இருக்கிறது.

இருப்பினும், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று, இப்பிரச்சனை, சில முன்னணித் தோழர்களின் முன் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமைக்குழுவின் பெரும்பான்மையான தோழர்கள், அவதூறுப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைப்பிற்குள் செயல்பட்டு வந்தவர்களுக்கு “குற்றமற்றவர்கள்” என்று நற்சான்று கொடுத்து, அவர்களை நம்பவைத்தார்கள்.

அமைப்பை அவதூறு செய்தவர்களுக்குத் தலைமை சூட்டிய பெயர் “சீர்குலைவு சக்திகள்”. அத்தகைய சீர்குலைவு நடவடிக்கையைத் தூண்டியவர்களைக் காப்பாற்றுவதற்காக பொய் பேசிய தலைமைக்குழுவினை என்ன பெயரிட்டு அழைப்பது? இப்படியொரு தவறை கீழ்மட்டத்தில் யாரேனும் செய்திருந்தால், “சீர்குலைவு சக்திக்கு துணைபோனார்கள்” என்று குற்றம்சாட்டி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அமைப்பின் காவலர்களாக இருந்திருக்க வேண்டிய தலைமைக்குழுவின் பெரும்பான்மைத் தோழர்கள் சீர்குலைவின் காவலர்களாக நடந்து கொண்டிருக்கிறார்களே, என்ன செய்வது?

“அமைப்பின் பொதுமேடையில் அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள் தலைமைக்குழுவினரை விசாரிப்பதுதான் நியாயமான அமைப்புமுறை” என்று நானும் வெறு சில முழுநேர ஊழியர்களும் வலியுறுத்தினோம். “தாங்கள்தான் அமைப்பின் அதி உயர் தலைமை” என்பதால், தவறு செய்தவர்கள் தங்களுக்குள் சுயவிமர்சனம் செய்து பிரச்சனையை முடித்துக் கொள்வதுதான் அமைப்புமுறை  என்பது தலைமைக்குழு பெரும்பான்மையினரின் நிலை.

முதலாளித்துவ நீதிமுறையாலேயே ஒப்புக்கொள்ளப்படாத, “எனக்கு நானே நீதிபதி” என்ற நெறியை, இதுதான் பாட்டாளிவர்க்க அமைப்புமுறை என்று கூறியதை எங்களால் ஏற்கமுடியவில்லை. “பொறுப்புகளிலிருந்து விலகுகிறோம். சாதாரண உறுப்பினராக செயல்படுகிறோம்” என்று அக்டோபர் 16 அன்றே கடிதம் கொடுத்து விட்டோம். அதற்குப் பின்னரும் அவர்கள் நிலையில் மாற்றமில்லை. “உங்கள் தவறை அணிகள் மத்தியில் ஒப்புக்கொள்ளாவிட்டால், நாங்கள் அமைப்பிலிருந்தே வெளியேறுவோம்” என்று நாங்கள் கூறவில்லை. “இந்த முறைகேட்டுக்கு உடன்பட்டு தலைமைப் பொறுப்புகளில் நாங்கள் நீடிக்க முடியாது. உறுப்பினராக வேலை செய்கிறோம்” என்று மட்டுமே வலியுறுத்தினோம்.

எங்களது பதவி விலகல் அணிகளுக்குத் தெரிந்தால், ஏன், எதற்கு என்ற கேள்வி எழுமே, தங்களது தவறுகளும் தவிர்க்கவியலாமல் வெளியே வருமே என்பது அவர்களது கவலை. இதனால்தான் எனது கடிதத்தின் மீது முடிவே எடுக்காமல் 4 மாதங்களாக இழுத்தடித்தார்கள். நான் ம.க.இ.க வின் செயலராக இருக்கும்போதே என்னை மாநாட்டுப் பணிகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கி வைத்து எனக்குப் “பாடம்” புகட்டினார்கள். “மருதையன் எங்கே” என்று கேட்ட தோழர்களிடம் நான் ஆய்வுப்பணியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்தார்கள். தலைமையின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் அணிகளும் இதையெல்லாம் நம்பினார்கள்.

தாங்கள் செய்த முதல் தவறு அணிகளுக்குத் தெரிந்துவிடாமல் மறைப்பதற்காக, “அமைப்புமுறை” என்ற திரைக்குள் மறைந்து கொண்டு, அவர்கள் செய்த அடுத்தடுத்த தவறுகள், முதல் தவறைப் பன்மடங்கு விஞ்சிவிட்டன. இந்த நடவடிக்கைகளின் ஊடாக, அவர்களிடம் வெளிப்பட்ட நேர்மையின்மையும் அதிகாரத்துவப் போக்கும் அவர்களது இன்னொரு முகத்தை எனக்கு அறியத்தந்தன.

னது விலகலுக்கான காரணம் இதுமட்டுமேயல்ல. “அம்பேத்கரியம் + பெரியாரியம் + மார்க்சியம்” என்று அமைப்பின் கொள்கையை  கள்ளத்தனமாக மாற்றுவதற்காகத்தான்  “நீலநிற ஜீன்ஸ், கருப்பு சட்டை, தலையில் சிவப்பு துணி” என்று ம.க.இ.க கலைக்குழுவின் சீருடையை மருதையன் மாற்றிவிட்டார்” என்று ஒரு பிரச்சாரத்தை சென்ற ஆண்டு திருச்சி மாநாட்டிற்குப்பின் மேற்சொன்ன தந்திரசாலிகள் சமூக ஊடகங்களில் அவிழ்த்துவிட்டனர். இது ஒரு மலிவான அவதூறு என்று நான் விளக்கிய பின்னரும், தலைமைக்குழுவின் முக்கியத் தோழர்கள் இந்த சந்தேகப் பார்வையிலிருந்தே என்னை அணுகினர். அமைப்புக்குள் இருந்துகொண்டே இப்படிப்பட்ட அவதூறுகளைக் கிளப்பியவர்கள் கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டையே எதிர்ப்பவர்கள் என்பது தலைமைத் தோழர்களுக்குத் தெரியும். இருப்பினும் தலைமைத் தோழர்களின் “சந்தேகப்பார்வை” என்மீது இருந்ததேயொழிய, பார்ப்பன பாசிசம் என்ற அரசியலையே எதிர்ப்பவர்கள் மீது இல்லை.

“அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி”, “சதி நடக்கிறது”, “முக்கியத் தோழர்களை ஒதுக்கும் முயற்சி” என்பன போன்ற சொற்கள் என்னைக் குறிவைத்து ஓராண்டாகவே பேசப்பட்டு வருகின்றன. அவற்றை அப்போதெல்லாம் பொருட்படுத்தாத நான், இப்போது அந்தச் சொற்களின் முழுப்பொருளை புரிந்து கொள்கிறேன். இவை குறித்த விவரங்கள் தலைமைக்கு நான் எழுதிய கடிதங்களில் உள்ளன. மேற்கண்ட சொற்கள் அனைத்தும் எழில்மாறன் என்பவரின் கடிதத்தில் இடம்பெற்றிருப்பவை என்பதை மட்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

இறுதியாக, சனவரி,11 ஆம் தேதியன்று எங்கள் மீதான விமர்சனம் என்ற பெயரில் 20 பக்க கடிதமொன்றை அமைப்பின் முன்னணியாளர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். “எங்கள் மீதான விமர்சனத்தை எங்களிடம் கொடுத்து விளக்கம் கேட்காமல், மற்றவர்களிடம் கொடுத்து என்னைப் பற்றிக் கருத்துருவாக்கம் செய்வது நெறியற்ற செயல். எங்களுக்குக் கொடுங்கள், விளக்கமளிக்கிறோம்” என்று கேட்டுவிட்டோம். தரமறுக்கிறார்கள்.

ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகின்ற அதிகாரவர்க்கம், அதனை கேள்விக்குள்ளாக்குகின்ற செயல்பாட்டாளர்களை (whistle blowers) அவதூறு செய்து, பொய்வழக்கு போட்டு “உள்ளே” தள்ளுவது போல, என்மீது “பொய்வழக்கு” தொடுத்து “வெளியே” தள்ளுவதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். எனக்கெதிரான விமர்சனங்களை எனக்குத் தெரிவிக்க மறுத்து, என் முதுகுக்குப் பின்னால் மற்றவர்களிடம் சுற்றுக்கு விடுகிறார்கள். “அமைப்பு நலனை முன்னிட்டு இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது” என்று இந்த முறைகேட்டுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள்

தனிப்பட்ட தாக்குதலைச் சந்திப்பது எனக்குப் புதிய அனுபவமல்ல. அமைப்பின் முகமாக நான் அறியப்பட்ட காரணத்தினால், அமைப்பில் யாரோ செய்த தவறுகளுக்கெல்லாம் என் தலை உருண்டிருக்கிறது. இதை அமைப்பின் முன்னணித் தோழர்கள் அறிவார்கள். பல சந்தர்ப்பங்களில் நமது அமைப்பை விமர்சிப்பவர்களுக்கு எளிய தாக்குதல் இலக்காக நான் இருந்து வந்திருக்கிறேன்.

மொத்த அமைப்பின் தலைமை நானல்ல என்ற போதிலும், பார்ப்பனத்தலைமை என்ற விமர்சனத்தை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து என்னை மையப்படுத்தி பலர் வைத்திருக்கின்றனர். அப்படி விமர்சித்தவர்கள் யாருக்கும் என்மீது தனிப்பட்ட பகை கிடையாது. அது அவர்களது அரசியல் பார்வை. அத்தகைய பார்வை வருவதற்கான சமூக எதார்த்தமும் உள்ளது என்ற காரணத்தினால், அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் காட்டியதில்லை. பொதுமேடையில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது, தி.க வைச் சேர்ந்த எனது நண்பர்கள், அங்கேயே தமது கட்சியினரை மறுத்து வாதாடியிருக்கிறார்கள்.

அவர்கள் காட்டிய நேர்மை நமது அமைப்பின் முக்கியத் தோழர்களிடம் இல்லை. தம்மை விமர்சித்த ஒரே காரணத்துக்காக என் மீது தரம்தாழ்ந்த தாக்குதல் தொடுக்கவும்,  பொய்ப்பழி சுமத்தவும் இவர்கள் தயங்கவில்லை. எதுவாக இருந்தாலும் விமர்சனத்தை வெளிப்படையாக நேருக்குநேர் என்னிடம் சொல்லும் நேர்மை, அமைப்புக்குள்ளே இருந்து கொண்டு பதிலிப்போர் நடத்துவோரிடமும் இல்லை. தலைமைத் தோழர்களிடமும் இல்லை.

நான் உள்ளேயிருந்து போராடவே விரும்பினேன். “தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, உறுப்பினராக அமைப்பில் இயங்குகிறேன்” என்ற எனது கோரிக்கையை 4 மாதங்களாக முடக்கி வைத்திருந்தார்கள். தம் தவறை நியாயப்படுத்த எந்த அளவுக்கு நிலை தாழ்ந்து செல்வார்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில் பார்த்துவிட்டேன். நான் “வெளியேறுகிறேன்” என்று சொல்வதை விட, “வெளியேற்றப்படுகிறேன்” என்பதே உண்மை.

“இந்த அரசியல் தருணம் விலகுவதற்கு ஏற்றதல்ல” என்று பலரும் கருதலாம். ஆனால் இந்த அரசியல் – அமைப்புத் தலைமை மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். 35 ஆண்டுகள் முழுநேரமாகப் பணியாற்றி விட்டு, தவறை நேர்மையாக விமர்சித்த குற்றத்துக்காக, “சதிகாரன் – பதவி வேட்டைக்காரன் என்பன போன்ற அவதூறுகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், அமைப்பில் நீடிப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நான்கரை மாதங்களில் தலைமைக்குழுவுடனான எனது கடிதப் போக்குவரத்து, முன்னணித் தோழர்கள் குழுவின் கூட்டக் குறிப்புகள், எனக்கே தரப்படாத என் மீதான விமர்சனக் கடிதம் ஆகியவை உங்களுக்கு வாசிக்க கிடைக்குமானால் என்னுடைய கூற்றில் இருக்கும் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

தலைமையின்மீது நம்பிக்கை வைத்து, அதற்குக் கீழ்ப்படிந்து உழைக்கும் தோழர்களிடம், தலைமை தனது தவறுகளை மறைக்கிறது. நேர்மையின்றி நடந்து கொள்கிறது. “அமைப்பில் எல்லோரும் சமம்” என்று ஏட்டளவில் கூறிக்கொண்டாலும், “சிலர் மட்டும் கூடுதலாகச் சமம்” என்ற கருத்து தலைமைத் தோழர்கள் மனதில் இருக்கிறது. இவ்வாறு சிந்திப்பவர்கள், தங்கள் தவறை அணிகளுக்கு மறைப்பதும் கூட “அமைப்புநலனை முன்னிட்டுத்தான்” என்று நம்புகிறார்கள். தவறு வெளியில் தெரிந்தால் “தங்கள் மீது அணிகள் நம்பிக்கை இழக்கக் கூடும்” என்பது அவர்கள் கவலை. ஆனால் “அமைப்பின் மீது நம்பிக்கை போய்விடும்” என்று அதை சித்தரிக்கிறார்கள். “அணிகள்தான் அமைப்பு – தாங்கள் பிரதிநிதிகள் மட்டுமே” என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

அமைப்பு என்பது சிலரின் உடைமையல்ல. தலைமையால் தனது அதிகாரத்தின் துணை கொண்டு,  தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும். எத்தகைய கண்காணிப்புகளை உருவாக்கினாலும், “சரி – தவறுக்கிடையே நடுநிலை வகிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்” பலர் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது ஏட்டில் மட்டுமே இருக்க முடியும். இது இப்பிரச்சனையில் நான் பட்டுத் தெரிந்து கொண்ட கசப்பான உண்மை.

நான்கரை மாதங்களாக அமைப்புக் கட்டுப்பாடு கருதி நான் தோழர்கள் யாரிடமும் பேசவில்லை. இப்போது பேசுகிறேன். “பார், அமைப்பு விசயங்களைப் பொதுவெளியின் பேசுகிறான், சீர்குலைவு சக்தி” என்று அவர்கள் என்னை அழைக்கக்கூடும். அவர்களால் இவ்வாறு அழைக்கப்படுவதை ஒரு நகைச்சுவையாகவே நான் எடுத்துக் கொள்வேன். “அமைப்பின் கவுரவத்தைக் குலைக்கிறேன்” என்று குற்றம் சாட்டுவார்கள். தங்கள் போலி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமைப்பின் கவுரவத்தை சந்திக்கு கொண்டு வந்திருப்பவர்கள் அவர்கள்தான் என்பதே எனது பதில்.

பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு –  அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது. “அமைப்பு நலன்”, “அமைப்பு முறை” என்ற இரு சொற்றொடர்களைத் தங்களது தவறை மறைப்பதற்கான கேடயமாகவும், விமர்சிப்போரை வீழ்த்துவதற்கான வாளாகவும் இந்தத் தலைமை தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊன்றி நின்று போராடிப் பாருங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

நாங்கள் இந்த அமைப்பிலிருந்து விலகுகிறோம். நாற்பதாண்டு அமைப்பு வாழ்க்கையில் தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை. இன்று அவை வெறும் நினைவுகள் மட்டுமே.

நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன.

எனினும் நினைவுகளில் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை நான் அறிவேன். இன்று என்னுடைய நிஜம் இதுதான்.

விடைபெறுகிறேன் தோழர்களே!

தோழமையுள்ள,
மருதையன்

 ________________

 அன்பார்ந்த தோழர்களே,

சுமார் 30 ஆண்டுகளாக முழு நேர ஊழியராக அமைப்பில் செயல்பட்டு வருகிறேன். புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறேன். வினவு தளத்தை உருவாக்கி நடத்தி வருவதில் முக்கியப் பங்காற்றி வருகிறேன். ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன்.

கடந்த நான்கரை மாதங்களாக தோழர் மருதையனுடன் இணைந்து தலைமையின் நேர்மையின்மைக்கும் அதிகாரத்துவத்துக்கும் எதிராக நானும் போராடினேன். அவரது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதே காரணங்களுக்காக,  நானும் ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் விலகுகிறேன்.

தோழமையுள்ள,
நாதன்

_______

ன்று 24.2.2020 தேதியன்று எமது கோரிக்கையின் பேரில் கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் எமது விலகலை முன்வைத்தோம். மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிராகரித்தனர். ம.க.இ.க. செயலராக மருதையனும், மாநில செயற்குழு உறுப்பினராக நாதனும் செயல்படுவதில் எங்களுக்கு எவ்வித மாறுபாடும் இல்லாத நிலையில், உங்களுக்கும் எங்களுடனான உறவில் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலையில் நீங்கள் இருவரும் தொடர்ந்து பொறுப்பில் நீடிக்க வேண்டும் என மாநில செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க விரும்பிய போதிலும் தவிர்க்கவியலாத நிலையில் எமது இந்த விலகலை அறிவிக்கிறோம். மாநில செயற்குழு உறுப்பினர்களும் ம.க.இ.க தோழர்களும் புரிந்து கொள்ளுமாறும் எமது விலகலை அங்கீகரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுள்ள
மருதையன்
நாதன்

தேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் ! தோழர் மருதையன் உரை | காணொளி

டந்த 2016-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பின் (DE MONETISATION) நோக்கம் – சிறுதொழில், விவசாயத்தை கார்ப்பரேட் நலனுக்கு பலியாக்குவது

2019-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமையழிப்பின் (DE CITIZENISATION) இலக்கு – முஸ்லிம் சமூகத்தினர் மட்டும்தானா?

பணமதிப்பழிப்பு கருப்புபண பேர்வழிகளைத்தான் பாதிக்கும் என்று மோடி சொன்னார். ஏமாந்தீர்கள்….

படிக்க :
♦ எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
♦ நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
♦ கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
♦ வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

குடியுரிமை அழிப்பின் பாதிப்பு முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்கிறார்கள். மீண்டும் நம்பி ஏமாறப்போகிறீர்களா?

இந்த அரசமைப்புக்கு இறையாண்மையை வழங்கியவர்கள் மக்கள்.    மக்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டா?

இந்தியாவைக் கொள்ளையடிக்க சவுதி இளவரசரின் மூலதனம் எல்லை தாண்டி வரலாம். வங்க தேசத்திலிருந்து முஸ்லிம் தொழிலாளி உழைத்துப் பிழைக்க இங்கே வரக்கூடாதா?

கீழடி நாகரிகத்தின் மைந்தனே!
நீ இம்மண்ணின் குடிமகனா என்பதை டில்லியிலிருந்து
ஒரு அகர்வாலோ, அணில்வாலோ தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்கிறாயா?

ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ,    அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்…

எச்சரிக்கிறது… கேள்விகளை எழுப்புகிறது… விடை தேடுகிறது… தோழர் மருதையனின் இந்த உரை.

பாருங்கள் ! பகிருங்கள் !