Tuesday, August 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 263

அஞ்சாதே போராடு ! மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் !!

PP Letter head

தேதி: 21-2-2020

பத்திரிக்கைச் செய்தி

ன்புடையீர், வணக்கம்,

வரும் 23-2-2020 ஞாயிறு மாலை 5-00 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மாநகராட்சி திடலில், மக்கள் அதிகாரம் சார்பில் CAA – NRC – NPR  வேண்டாம், கல்வி வேலை ஜனநாயகம் வேண்டும், அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. போலீசாரின் உத்திரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசாரின் உத்திரவை ரத்து செய்து மாநாடு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைத்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சி.ஏ.ஏ – என்.பி.ஆர். தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கைகாக தமிழகம் தொடர் போராட்டங்களால் குமுறி கொண்டே இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் இரவு பகலாக போராட்ட களத்தில் இருப்பது அனைவரும் பின்பற்ற தக்கவையாக உள்ளது.

தமிழக முதல்வர் சட்டமன்ற உரையில் சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ஆதாரம் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், வரலாற்று ஆய்வாளர்கள், மெத்த படித்த உயர்கல்வி மாணவர்கள், பேராசிரியர்கள் கடந்த இரண்டு மாதமாக குடியுரிமை சட்டத்தின் அபாயத்தை விளக்கி களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள்.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 25 பேர் வரை பலியாகி உள்ளனர். உலக நாடுகள் பல கண்டித்திருக்கின்றன. அசாமில் கண்முன்னே பல லட்சம் மக்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு வதை முகாமை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் குடியுரிமையை நிரூபிக்க சொல்லி ஆதார் அட்டையை ரத்து செய்து ஆயிரம் முசுலீம்களுக்கு நோட்டிசு அனுப்பி உள்ளனர். எனவே, என்.ஆர்.சி-யின் முன்தயாரிப்பான  என்.பி.ஆர். திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் :

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உயர்திரு. கோபால கவுடா அவர்கள்
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்கள்.

பதவியை ராஜினாமா செய்த மாவட்ட ஆட்சியர் திரு. சசிகாந்த் செந்தில்,

எழுத்தாளர் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்கின்
கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர். பாலன்,

திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி,

தமிழ்தேச விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர். தியாகு,

டெல்லி ஜவகர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தலைவர்,
ஆராய்ச்சி மாணவர் திரு. சாய் பாலாஜி,

மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். சி. ராஜு ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழக கலைக் குழுத் தோழர்கள் கோவன் தலைமையில் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

சி.ஏ.ஏவை எதிர்த்து பாடி வரும் ராப் பாடகர். தெருக்குரல் அறிவு அவர்களும் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

மாநாட்டிற்கு மக்கள் அதிகார பொருளாளர் தோழா். காளியப்பன் அவர்கள் தலைமை தாங்கவும்,  கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்கள் வரவேற்புரை வழங்கவும், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் அவர்கள் நன்றியுரை வழங்கவும் உள்ளார்கள்.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் பாசிச பா.ஜ.க ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும் போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வே தனது பாசிச நடவடிக்கையால் அதை துரிதபடுத்துகிறது. தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடியால் வாழ முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் மக்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் முன்வைக்காமல் துன்பப்படும் மக்களை மேலும் மேலும் அடக்கி ஒடுக்க முனைகிறது. இன்று நாட்டில் நிலவுகின்ற அமைதியற்ற சூழல் அனைத்திற்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க தான். கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது.

மாநாட்டிற்கு பத்திரிக்கை ஊடக தொலைகாட்சி நண்பர்கள் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கோருகிறோம். பொது மக்கள் அனைவரும் மாநாட்டிற்கு குடும்பத்தோடு பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இருகரம் கூப்பி அழைக்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பங்கேற்பாளர்கள் :
1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
2. காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள்  அதிகாரம்.
3. மருது, செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்.
4. கோவன், புரட்சிகர பாடகர், ம.க.இ.க
5. லெ. செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321

தலைமை அலுவலகம்:
16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை-083.
E-mail : ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn

சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !

1
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 05

முதல் பாகம்

சோழர் ஆட்சியில் அறப் போர்கள் (தொடர்ச்சி…)

« முந்தைய பாகம்

சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது.

இது மட்டுமல்ல; போர்களுக்கும், கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும், கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரிகொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ’சிவத் துரோகி’ என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்’ என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையைப் படைகளின் பாதுகாப்போடும், மதக் கொள்கைகளின் அனுசரனை யோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.

இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவு மீறும் போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல.

அப்போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள். இன்று நடைபெறும் உழவர் தொழிலாளிகளின் அறப்போர்களின் முன்னோடிகள். வரலாற்றை இயக்கும் தலைமையான சக்தியான சக்தி அவை. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதும், அப்போர்களின் முறைகளை எடுத்துக் காட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

தற்காலத்தில் அநீதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் ஒரு போர் முறையாகக் கையாளப்படுகிறது. இது உயிரைப் பணயம் வைத்து மக்களை அநீதிகளுக்கு எதிராகத் திரட்டும் முயற்சி. இது போலவே உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் ஓர் கல்வெட்டு அகப்பட்டது. அதன் விவரம் வருமாறு :- அக்கோயிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்ட நிலத்தை ஊர்ச் சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப் பார்த்தனர். பயனில்லை. அவ்வந்தியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்து கொண்டனர்.

இதேபோலத் தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் அபூர்வமாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. தங்களுடைய உரிமைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், மன்னனது கவனத்தை ஈர்க்கவும், சிலர் ஊர்க் கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகின்றன.

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்தவும், பணி செய்யவும். தேவரடியார்கள் இருந்தனர். அவர்களில் இரு வகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் பெயரிலிருந்து இவர்களது சமூக நிலையை அறியலாம். அதிகாரிகளின் பட்டங்கள் இவர்கள் பெயரோடு சேர்த்து வழங்கப்படும். உதாரணமாக, நக்கன் ஸ்ரீதேவி, சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம் என்ற பெயர்கள் பட்டம் சேர்ந்து வழங்குபவை. இவர்கள் கொணர்ந்த செல்வங்களால் கோயில்களுக்கு நிலங்கள் வாங்கி அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உரிமைகள் இத்தேவரடியார்க்கு உண்டு.

படிக்க:
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா

தேவரடியாரில் மற்றோர் வகையினர் ஏழைப் பெண்கள். பஞ்சக்காலத்தில் நிலமிழந்தவர்களும், வெள்ளக் காலத்தில் நிலமிழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோயில்களுக்கு விற்று விடுவார்கள். அப்பெண்களுக்கென்று கொடுக்கப்படும் விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். அப்பெண்களின் தந்தையோ, தமையனோ அல்லது உறவினனோ அதனைக் காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும் போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக் குறைக்கச் சபையாரும், அரசனும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவார்கள். அச்சமயங்கள் உழவர்களாயிருக்கும் தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள். இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும்படி நாடாள்வனான சோழ மன்னனது அதிகாரி கட்டளை அனுப்பினான். சபையார் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியாரான திருவீதிப் பணி செய்வாரும் திரண்டனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட ஒரு தேவரடியாள் முன் வந்தாள். அவள் பெயர் சதுரி மாணிக்கம். அவள் தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்டக் கோபுரத்தின் மேலேறி விழுந்து உயிர் விட்டாள், நாட்டார் கட்டளையை எதிர்த்தனர்! சபையார் கட்டளையை மாற்ற அரசனிடம் விண்ணப்பித்தனர். கட்டளையை மாற்ற அரசன் திருமுகம் (ஓலை) அனுப்பினான்.

அநியாயமான வரிகளை எதிர்க்க மக்கள் வரி கொடா இயக்கம் நடத்தியதும் உண்டு. அப்போர் முறை மேற்கூறிய தனிப்பட்ட தியாகங்களால் மக்கள் உணர்வைத் திரட்டிய பின் நடத்தப்படும்.

அதற்கு ஒரு உதாரணம் ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன், வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளைக் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார் அந்தக் காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக்கிணங்கக் கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல், எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும், அதனால் அதிகாரியான சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதத்தையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள். இதே சாசனத்தின் பிரதி உத்தனூரிலிருந்து கிடைத்துள்ளது (கோயில் சாசனங்கள் முன்னுரை).

பெரிய விஷயத்தார் என்பவர் நாட்டாரின் பிரதிநிதிகள். மக்களின் கிளர்ச்சி வலுப்படவே மேல் வர்க்கப் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள்கூட மக்களின் கோரிக்கைகளை ஆதரித்தன. இந்நிகழ்ச்சி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும், நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயதம் தாங்கிப் போராடியுமிருக்கிறார்கள். அரசனது ஆணைகளும், சபையாரின் முடிவுகளும், கோவில் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததால், இம்முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகச் சில சமயங்களில் மக்கள் கோவில் – சுவர்களை இடித்து கல்வெட்டுகளை அழித்திருக்கிறார்கள். அநியாயமான நிலப் பரிவர்த்தனைகள், கோயில் மூர்த்தியின் பெயராலோ, சாண்டேசுவரா பெயராலேயோ, செய்யப்பட்டிருந்ததால் விக்கிரகங்களைப் புரட்சிக்காரர்கள் உடைத்திருக்கிறார்கள். அக்கல்வெட்டுக்கள் மன்னர் ஆணையால் வெட்டப்பட்டதால் கலகங்களின் காரணங்கள் எவை என்பதைக் குறிப்பிடமாட்டா. ஆனால் கலகங்களால் கல்வெட்டுகள் அழிந்து விட்டதையும், மூல பத்திரங்கள் அழிந்ததையும் குறிப்பிட்டு புதிய பத்திரங்கள் பிறப்பித்ததை மட்டும் குறிப்பிடும் இக்கலகங்கள் வர்க்கப் போராட்டமே என்பதும் உறுதி.

இத்தகைய கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, உடையாளூர் சாசனத்தையும், தலைச் செங்காட்டுக் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மூன்றாம் ராஜராஜனது 5-ம் ஆண்டு கல்வெட்டு, அதற்கு முன் நடந்த கலகங்களால் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோகப் பற்றொழுகை ஒட்டி புதிய பத்திரங்கள் வழங்க அரசன் ஆணையிட்டதைக் கூறுகிறது. (உடையாளூர்). இதுபோன்றே மூன்றாம் ராஜராஜனது 19ம் ஆண்டுக் கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்ததால் அனுபோகப்படி புதிய ஆதாரச் சீட்டுகள் பிறப்பிக்கப்பட்டன என்று கூறுகிறது (தலைக் செங்கோடு சாசனம்). இக்கலகங்களில் நிலவுடைமையைக் குறிக்கும் கல்வெட்டுக்களும், ஆதாரச் சீட்டுகளுமே மக்கள் கோபத்துக்கு இலக்காயின என்பது குறிப்பிடத்தக்கது. ‘அவை நம் வாழ்க்கையை அழிக்கும் சின்னங்கள் அவற்றை அழித்து நமது உரிமையை நிலைநாட்டுவோம்’ என்று பழந்தமிழ் உழவர்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும்.

இக்கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும் சில சலுகைகள் உழவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்களென்றும் தெரிகிறது. மேற்குறித்த புரட்சிகளுக்குப் பின் வரி கழித்ததையும் தேவரடியார் முதல் கொள்ளாதபடி ஆணை பிறப்பித்ததையும் நிலங்களை உரியவர்களுக்கு அளித்ததையும், பற்றி சாசனங்கள் கூறுகின்றன. இக்கிளர்ச்சிகள் இன்றைய வர்க்கப் போராட்டத்தில் முதல் சுடர்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா

“கலை – கலாசாரத்தில் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், கலாச்சாரத்தை ஒரு ஜனநாயக உரையாடலாகவே யாரும் யோசிக்கவேயில்லை. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை ஜனநாயகப்படுத்த வேண்டுமென நினைக்கிறோம். கலாச்சாரம், கலை குறித்து அப்படி நினைத்ததில்லை. மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது?” – டி.எம். கிருஷ்ணா

பேட்டியிலிருந்து ஒரு பகுதி :

கே : மிருதங்கம் செய்பவர்களிடமும் வாசிப்பவர்களிடமும் பேசும்போது, ஜாதி தொடர்பான அம்சங்கள், பாகுபாடுகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதா?

ப : இதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதில் உள்ள நுணுக்கம், கண்ணுக்குத் தெரியாத அம்சங்கள்தான். அதை யாரும் பொதுவாகப் பார்ப்பதில்லை. அவர்கள் சிந்தனையிலேயே இந்தப் பாகுபாடு குறித்த கவனம் இல்லை.

மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான உறவே வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருக்கும். ஒரு பக்கம் பிராமணர்கள். அவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழக்கமான சமுதாயத்தில் என்ன ஓர் உறவு இருக்கிறது? ஒன்றும் இல்லை. அதிகபட்சம் கடைகளில் ஏதாவது வாங்கியிருப்பார்கள்.

ஆனால், இங்கே ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. ஏனென்றால் மிருதங்கம் என்பது வெறும் இசைக்கருவி அல்ல. அது ஒரு உணர்வுரீதியான கருவி. இம்மாதிரி உணர்வுள்ள ஒரு இசைக் கருவி மூலமாக இரு சமூகத்தின் இடையிலேயும் ஓர் உறவு ஏற்படுகிறது. இந்த உறவு நிச்சயம் சிக்கலானதாகத்தான் இருக்கும். எளிதாக, சாதாரணமானதாக இருக்க முடியாது.

ஆகவே மிருதங்கம் என்பது வெறும் இசைக் கருவி மட்டுமல்ல. உறவுக்கான பாலமாகவும் இருக்கிறது. சாதாரணமாகத் தெரியும் விஷயங்களுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்று சிந்திக்க எனக்கே இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

படிக்க:
♦ ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்
♦ காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !

***

கர்நாடக இசையில் உள்ள ஜாதிப் பாகுபாடு, தன்னுடய புதிய புத்தகம் ஆகியவை குறித்து டி.எம். கிருஷ்ணாவின் விரிவான பேட்டி கீழே லின்கில்…

ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்

ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – பாகம் 01

மலையாள இலக்கிய எழுத்தாளர், விமர்சகர், கல்வியாளருமான எஸ்.குப்தன் நாயர் எழுதிய முன்னுரை:

தகழி சிவசங்கரன் பிள்ளை.

நாவல், மத்தியதர வர்க்கத்தினரின் – அல்லது பூர்ஷ்வா (முதலாளித்துவ) வர்க்கத்தினரின் – கலையுருவமாகத்தான் பிறவி எடுத்தது. மத்தியதர வர்க்கத்தினரின் உயர்வு தாழ்வுகள், கனவுகள், இவற்றின் சீரழிவு – ஆகியவற்றையே இந்தக் கலையுருவம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து வந்திருக்கிறது. சமூகமென்ற பெரும் கோட்டையின் நடுவில் யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்ற தனிமனிதனே, பழைய நாவலின் இடையறாத மையக் கருத்து. பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற தொழில் புரட்சியின் விளைவாக, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதியதொரு மத்தியதர வர்க்கம் உருப்பெற்றது; இன்றைய நாவல் இலக்கியம் பிறந்ததும் இந்நாடுகளில் தான். மாறுபட்ட சூழ்நிலையில், வாழ்வது என்பதே மத்தியதர வர்க்கத்தினருக்குச் சாகசம் மிக்க ஒரு செயலாகிவிட்டிருந்தது. இந்தச் சாகசங்களைச் சித்திரிப்பதில் தான் அன்றைய நாவலாசிரியர்கள் ஆர்வம் காட்டினார்கள். ராபின்ஸன் குரூஸோ, டான் க்விக்ஸாட், பிக்விக் ஆகியோர் இந்தச் சாகசங்களின் பிரதிநிதிகளேயாவர்.

இலக்கியத்தில் தோன்றிய நாவல் என்ற இந்த நவீன இலக்கிய வடிவம் நம் நாட்டில் உதயமானபோது, அது புராணங்களின் சாயல் உடையதாக இருந்தது. மலையாளத்தில் எழுதப்பட்ட முதல் நாவலாகக் கருதப்படும் ‘குந்தலதா'(1887), ஒரு புராணத்தின் பண்புகளை உடையதாகவே இருக்கிறது. அதில் பல சிறப்பம்சங்கள் இருக்கலாம்; ஆனால் கேரள நாட்டுப் பண்பாடு என்ற அம்சம் மட்டும் அதில் அறவே காணப்படவில்லை. அது கலிங்க நாட்டில் நடைபெற்ற ஒரு கதை என்று அந்த நாவலாசிரியர் நம்மை நம்ப வைக்க முயல்கிறார். கலிங்கம், அல்லது வங்கம், அல்லது மாளவம் ஆகிய எந்த ஒரு தேசத்தில் அது நடைபெற்றதாக இருந்தாலும் நமக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் கதை புனைய வேண்டுமென்ற நோக்கத்தைத் தவிர, அந்த ஆசிரியருக்கு வேறு எந்த நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்று எவரும் வாசிக்க விரும்பாததும், இலக்கிய வரலாற்றுப் பட்டியல்களில் மட்டுமே இடம் பிடித்துக் கொண்டிருப்பதுமான ஒரு நாவலாக ‘குந்தலதா’ விளங்குவதற்கு இதுவே காரணமாக இருக்கவேண்டும்.

அடுத்தாற்போல, குந்தலதாவை அடுத்து-1888ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இந்துலேகா’ என்ற நாவலை இன்றும் ஏராளமான மக்கள் விரும்பிப் படிக்கின்றனர். லார்ட் பீக்கன்ஸ்ஃபீல்ட் என்பவர் எழுதிய ’ஹென்ரீடா டெம்பிள்’ என்னும் நாவலை முன்மாதிரியாகக் கொண்டே இந்துலேகாவை அதன் ஆசிரியர் சந்து மேனன் உருவாக்கினாரென்றாலும், அந்த நாவல் முழுக்க முழுக்கக் கேரளத் தன்மை கொண்டதாகவே விளங்குகிறது. பழையதொரு தாய்வழி உறவுக் குடும்பத்தின் கதையைத் தான் சந்து மேனன் அந்நாவலில் கூறுகிறார். வேறு எந்தச் சமூத்திலும் நடைபெறாத ஒரு திருமண முறை, உயர் மட்டத்திலுள்ள அன்றைய நாயர் குடும்பங்களில் நடைமுறையில் இருந்து வந்தது. ஜாதி உயர்வினை மட்டும் ஆதாரமாகக் கொண்டு நம்பூதிரிப் பிராமணர்களுக்கு நாயர் பெண்களை மணம் செய்து கொடுக்கும் முறையே அது. இப்படி மணந்து கொள்ளும் நம்பூதிரிகளில் பலர் வயோதிகர்களாகக்கூட இருப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் திருமணம் வைதீகக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறவு. அவர்கள் மனைவி வீட்டில் மிகவும் மதிக்கப்படுகின்ற விருந்தினர்களாக இருந்தார்கள். இந்தத் திருமண முறை அவ்விரு வகுப்பினரையுமே – குறிப்பாக அந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களை – சீரழிக்கத்தான் உதவிற்று என்பதைச் சமூக சீர்திருத்தவாதிகள் உணரவில்லை. உணர்ந்தவர்கள் பகிரங்கமாக அதைச் சொல்லவும் இல்லை.

அவர்கள் மனத்திலே பதிந்துவிட்ட எண்ணங்களுக்குச் சக்தி மிக்க, மறைமுக வர்ணனைகளால் அழகியதோர் உருவம் கொடுத்தார் சந்து மேனன். அதுதான் இந்துலேகா! மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதொரு காதல் கதையாகவே தோற்றமளிக்கிறது. கதையைவிட எளிமையாக இருக்கிறது. அதைச் சொல்லப் பயன்படுத்தியுள்ள மொழி. ஓர் இலக்கியப் படைப்பினை உருவாக்குகிறோம் என்ற உணர்வே அவருக்கு இருக்கவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இந்த எளிமைக்கும் சாதாரணத் தன்மைக்கும் பின்னால் பிரமிப்பூட்டும் ஒரு வேகமும், என்றும் மங்காத ஒரு புதுமையும் மறைந்திருக்கின்றன. அதனால் தான் இன்றும் மக்கள் அந்த நாவலை ஆர்வத்துடன் படிக்கிறார்கள். அந்த நாவலில் சித்திரிக்கப்பட்டிருக்கிற பாத்திரங்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்து மடிந்த மனிதர்கள் என்று நமக்குத் தோன்றுவதில்லை; மாறாக, நமது கிராமங்களில் ஆங்காங்கே இன்று கூடப் பார்க்க முடிகிற, நமக்கு நன்கு அறிமுகமான சில மனிதர்களாகவே அவர்கள் காட்சி தருகின்றனர்.

குந்தலதா நாவல்.

மேற்கத்திய நாகரிகத்துக்கே உரிய அழகிய சில அம்சங்களைப் பலவந்தமாக இந்த நாட்டின் சூழலில் புகுத்தியிருக்கிறார் சந்து மேனன். பியானோ வாசிக்கிற ஒரு கதாநாயகியை எண்பது வருடங்களுக்கு முன்னால் கற்பனை செய்து பார்த்தார் அவர். இன்றைய நாவலாசிரியர்கள் தங்கள் கதாநாயகிகளை வீணைதான் வாசிக்கவைப்பார்கள்.

பஞ்சாலை, ஏலத் தோட்டம் ஆகியவை பற்றி இந்துலேகாவில் சொல்லப் பட்டிருக்கிறது. நாத்திகவாதத்தை ஆசிரியர் பகிரங்கமாக ஆதரிக்காவிட்டாலும், டார்வின், தாமஸ் ஹக்ஸ்லி ஆகியோரின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் சர்ச்சை செய்திருக்கிறார். சுருங்கக் கூறின், சந்து மேனன் ஒரு புரட்சிவாதியாகவே இருந்திருக்கிறார்.

மலையாள நாவலாசிரியர்களிலேயே மிகப் பெரிய கற்பனைத் திறன் படைத்தவராயிருந்த சி.வி.ராமன் பிள்ளை (1858-1922), வரலாற்றுக்குக் கதை உருக்கொடுப்பதில் தான் தம் ஆற்றலைக் காண்பித்தார். ராமன் பிள்ளை ஒரு சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை. ஸனாதனவாதியாக, ராஜபக்தராக, தம் ஜாதியைப்பற்றிப் பெருமையுள்ளவராக, பண்டைய அறநெறிகளைப் பின்பற்றுகிறவராக, வீரர்களை வணங்குபவராக இருந்திருக்கிறார். புதிய தலைமுறையினர் அவரை ஒரு பிற்போக்குவாதி என அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சி.வி.ராமன் பிள்ளை அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்திருந்த, அல்லது வாழ்ந்து வருகின்ற, எந்த ஒரு நாவலாசிரியருக்கும் இல்லாத ஒரு திறன் படைத்தவராயிருந்தார் – அது தான் ஒரே சமயத்தில் மூன்று காலங்களையும் பார்த்தறியவல்ல கண் – all seeing eye. ஹென்ரி ஜேம்ஸின் வார்த்தைகள் இவை.

எஸ்.குப்தன் நாயர்.

இருநூறு வருடங்களுக்கு முன்னாலுள்ள, நிகழ்ச்சிகள் நிறைந்த திருவாங்கூரின் வரலாற்றைப் பெரும் பிரதாபசாலிகளான மாவீரர்களைச் சுற்றிப் புனையப்பட்ட கதைகள் மூலம் வரைந்து காட்டினார் சி.வி.ராமன் பிள்ளை. கற்பனை வளம் மிக்க அந்தப் படைப்பாளியின் கண்ணெதிரில், புராதனமான நிகழ்காலம், ஆடை அணிகலன்களுடன் ஆடம்பர மேள தாளங்களுடன் நடனமாடியது. வியப்பைத் தருகின்ற எத்தனை எத்தனைக் காட்சிகள்! நிகழ்காலமென்னும் திரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்ட எத்தனை எத்தனை உக்கிரமான மூர்த்திகள்! மலையாளத்தில் மாபாணி (grand style) என்று ஒன்று உண்டானால் அது சி.வி.யின் பாணிதான். அவர் படைத்தது எல்லாமே மகத்தானவை; விரிவானவை. ‘மாத்தாண்டவர்மா’, ’தருமராஜா’, ‘ராமராஜ பகதூர்’ என்ற அந்த மூன்று படைப்புகளின் ஆழமும், வரலாற்றுப் பரப்பும், ஸ்காட்டையல்ல, டால்ஸ்டாயைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. குழந்தைபோல் தடுமாறித் தடுமாறி நடை பயின்று கொண்டிருந்த மலையாள நாவல் இலக்கியத்தைப் பிரபஞ்ச இலக்கியத்தின் ராஜ தர்பாருக்கு அவர் அழைத்துச் சென்றார் எனலாம்.

இவ்விரு மாமேதைகளின் காலத்துக்குப் பிறகு பல வருடங்கள் வரையில் மலையாள நாவல் இலக்கியம் இரண்டாந்தர எழுத்தாளர்களின் விளையாட்டு அரங்கமாக விளங்கியது. அப்பன் தம்புரான், கே.எம்.பணிக்கர் முதலியோர் சில சரித்திர நாவல்களைப் படைத்தனர் என்றாலும், அவர்களால் சி.வி.யின் அருகில் கூட நெருங்க முடியவில்லை. 1930-ஆம் வருடத்துக்குப் பிறகு தான் புதிய சில அசைவுகள் தென்படத் தொடங்கின. புகழ்பெற்ற சிந்தனையாளரும், பத்திரிகை ஆசிரியருமான ஏ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய கட்டுரைகள் வாயிலாக, யதார்த்தவாதம், மனோ தத்துவம் போன்ற புத்தம் புதிய உத்திகளைப் பற்றி எழுத்தாளர்கள் அறிந்துகொண்டனர். பாலகிருஷ்ண பிள்ளையின் சீடர் குழாமைச் சேர்ந்த சில இளம் எழுத்தாளர்கள் புதிய படைப்பு முறைகளைச் சோதித்துப் பார்க்கத் துணிந்து முன்வந்தனர். அவர்களில் ஒருவர்தாம் தகழி சிவசங்கரன் பிள்ளை. தொழிலாளர் இயக்கங்களிலே பங்கு பெற்றவரான கேசவதேவ், அவற்றின் வாயிலாகப் புதியதோர் இலக்கியப் பாதையை வகுத்துக்கொண்டார். பொட்டேகாட், பஷீர் ஆகியோர் மாறிவரும் காலத்தின் தவிர்க்க இயலாத தூண்டுதலால் சிறு கதைகளிலே புதிய உத்திகளைப் புகுத்திப் பார்க்க முயன்று கொண்டிருந்தனர்.

சி.வி.ராமன் பிள்ளை.

இவர்கள் அனைவரும் சிறுகதைகளையும், குறுநாவல்களையுமே முதலில் எழுதினர். தகழியின் ‘பதிதபங்கஜம்’, ’தியாகத்தின் பிரதிப் பயன்’ ஆகிய கதைகள், நவீன உத்திகளாலும், உள்ளடக்கத்தின் விசேஷ குணாதிசயங்களாலும், சொல்முறையின் மேன்மையினாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தன. இவர்களைப் புகழ்ந்தவர்கள் இருந்ததுபோல இகழ்ந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். நச்சு இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள், ஆட்சேபங்கள் பல கிளம்பின. தகழி மட்டுமன்றி, கேசவதேவ், பஷீர் போன்றவர்களும் இத்தகைய ஆட்சேபங்களுக்கு இலக்காயினர். இவர்களுடைய படைப்புகளிலே வறுமை, சமூகக் கொடுமை ஆகியவற்றின் சித்திரங்கள் சில சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான வண்ணங்களில் தீட்டப்படவில்லை என்று சொல்ல முடியாது. இத்தகைய மிகைப்படுத்திக் கூறும் தன்மை, விக்டர் ஹயூகோ, எமிலி கோலா போன்றவர்களின் படைப்புகளில் கூட இருக்கத்தானே செய்கிறது?

மேற்சொன்ன நாவலாசிரியர்கள் எவருமே, பழங்காலத்து ஆசிரியர்களைப் போல், தங்கள் கதாபாத்திரங்களை வாழ்க்கை எனும் நாடகத்தின் துவக்கம் முதல் இறுதி வரையிலுமுள்ள எல்லாக் காட்சிகளையும் நடிக்க வைக்க முற்படவில்லை. சிறுகதையைவிடச் சற்றே அதிகமான விஸ்தாரத்தை இவற்றில் பார்க்கமுடியும், அவ்வளவுதான். ஏறத்தாழ 1945-ம் வருடம் வரையிலும் நிலைமை இவ்வாறாக இருந்து வந்தது. பிறகு இலக்கியம் திசை மாறிச் சஞ்சரிக்கத் தொடங்கியது. முற்போக்கு இலக்கியம் உருவெடுக்கத் தொடங்கியது. விஷயங்களை விரிவாக, முன்னை விடப் பகிரங்கமாக எடுத்துரைக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்தக் கால கட்டத்திலேதான் ’சாக்கடையிலிருந்து’, ‘இரண்டு படி’, ‘தோட்டி மகன்’, ‘குழந்தைப் பருவத் தோழி’, ‘விஷக்கன்னிகை’ முதலிய புகழ்பெற்ற நாவலகள் நமக்குக் கிடைத்தன. இந்த நாவல்கள் அனைத்திலுமே ஆசிரியர்களின் சொந்த அனுபவங்கள் பெருமளவில் கலந்திருக்கின்றன. வறுமை எனும் புதிய அம்சம் இந்த நாவல்களில் தான் முதல் முதலாகக் காட்சி தருவதை நாம் பார்க்கிறோம். ரிக்சாக்காரன், தோட்டி, குட்டநாட்டு விவசாயத் தொழிலாளியான புலையன் ஆகியோர் இதற்கு முன்புள்ள காலகட்டங்களில் வெளிவந்த மலையாள நாவல்களில் இடம் பெறவில்லை. புதியதொரு வாழ்க்கை முறைக்காகத் தாகமுற்றுக் குமுறியெழுகிற தொழிலாளியும், விவசாயியும் சமூகத்தின் மேல் தட்டினை நோக்கி மெல்ல மெல்லக் கிளர்ந்தெழுந்து வரும் தோற்றத்தை இந்த நாவலாசிரியர்களே முதல் முதலில் வெளிக்காட்டினர். இந்தக் கைங்கரியத்தைச் சிறுகதைகள் வாயிலாக இவர்கள் ஏற்கனவே செய்தவர்கள் தாம். ’இந்துலேகா’விலிருந்து ’இரண்டு படி’ வரையிலுமுள்ள தூரம், பிரமுக நாயர் குடும்பங்களின் மாடி வீட்டிலிருந்து விவசாயத் தொழிலாளியின் மண் குடிசை வரையிலுமுள்ள தூரமேயாகும்.

செம்மீன் நாவல்.

இங்குள்ள நாவல் இலக்கியம் பூர்ஷ்வா (முதலாளித்துவ) வாழ்க்கை முறையிலிருந்து புராலிடேரியன் (தொழிலாளி வர்க்க) வாழ்க்கை முறையை நோக்கி முழுதும் நடந்தேறிச் சென்றதென்று இதனால் அர்த்தம் கொள்ளக்கூடாது. இந்த நாவல் – ஆசிரியர்களில் பெருவாரியினர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தமையால் இயற்கையாகவே அந்த வர்க்கம் நாவலின் பின்னணியாகத் தோன்றிக் கொண்டிருந்தது. தகழி, பொட்டேகாட், உரூப் ஆகியோரின் நாவல்களிலே குறிப்பாக இந்தக் குணாம்சத்தைப் பார்க்கலாம். ஆயினும், அவர்கள் புதிய அரங்கங்களை, சமூகத் துறைளைக் கண்டுபிடிக்க நிரந்தரமாக முயன்று கொண்டிருந்தனர். தகழி செம்படவர்களின் வாழ்க்கைத் துறைக்குள்ளும் (செம்மீன்), உரூப் மலபார் முஸ்லிம்களின் வாழ்க்கைத் துறைக்குள்ளும் (உம்மாச்சு), பொட்டேகாட் கோழிக்கோடு நகரத்தின் இருள் சூழ்ந்த கீழ்ப்பகுதிகளுக்குள்ளும் (தெருவின் கதை) நுழைந்து பார்த்தது இவ்வாறாகத்தான்.

இந்த நாவல்களெல்லாம் வெவ்வேறு வகைளில் இலக்கிய உலகிலே அசைவுகளை ஏற்படுத்தியிருக்கிற நிகழ்ச்சிகளாகப் பரிணமித்தன என்று சொல்வதில் தவறு இல்லை. ஒரு நாவலாசிரியருக்கு இரண்டு விதமான பார்வைகள் இன்றியமையாதவை எனச் சொல்லப்படுகிறது: பௌதீகமும் ஆன்மிகமுமான இரண்டு பார்வைகள். மேற்சொன்ன நாவல்களில் இவ்விரு பார்வைகளும் சிறப்பான முறையில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

படிக்க:
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

தகழியின் ‘செம்மீன்’ நாவல் செம்படவர்களின் வாழ்க்கைப்பற்றிய ஒரு செய்திக் கதிர் (டாகுமெண்டரி) சித்திரமன்று. அவர்கள் வாழ்க்கையின் எத்தனையோ துறைகளை அவர் அந்நாவலில் தொடவில்லை. அது அவசியமும் இல்லை. செம்மீன் செம்படவச் சமூகத்தைப் பற்றிய அடிப்படை உண்மையின் சாரம் என்று நம்மை நம்ப வைக்கத் தகழியால் முடிந்தது. அதுதான் அந்த நாவலின் வெற்றி. நான் குறிப்பிட்ட ஏனைய நாவல்களைப் பற்றியும் இதையே கூறலாம். உரூபின் ‘சுந்தரிகளும், சுந்தரன்மார்களும்’ என்ற படைப்பைப் பொறுத்தவரையில் ஒரு தகவல் திரைப்படத்தின் தன்மை இதில் அதிகம் காணப்படுகிறது. மலபாரில் நடைபெற்ற மாப்பிள்ளைக் கலவரத்தின் பின்னணியில் அங்குள்ள மக்களின் வாழ்க்கை எவ்வாறு சீர்குலைந்த தென்பதையும், அந்தச் சீர்குலைவிலே எத்தனையோ குடும்பங்கள் சின்னா பின்னமாகி, எத்தனையோ நபர்கள் வேறு மதத்தைத் தழுவி மாறுபட்ட வாழ்க்கை முறையைத் தேடிக் கண்டுபிடித்தனரென்பதையும் உரூப் சித்திரித்துக் காட்டுகிறார். கண்ணிகள் அறுந்து போகாமல், தேவையற்ற ஒட்டு வேலைகளைச் செய்யாமல், மனித மகிமையின் இனிமையுடன், மூன்று நான்கு தலைமுறையினரின் கதையை அவர் விவரித்துள்ளார். உரூபின் இந்த நவீனம், தேசச் சுதந்திரத்துக்குப் பின் படைக்கப்பட்ட மிகவும் அருமையான இலக்கிய சிருஷ்டி என்ற முறையில், இவ்வாசிரியருக்குச் சாகித்திய அகாதெமிப் பரிசைப் பெற்றுக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.

(தொடரும்)

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா

கொரோனா அப்டேட்ஸ் : கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ?

வீடு, பொது இடங்கள், மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் முறைகள் குறித்த பதிவு…

Isolation, Infection control ஆகிய இரண்டும் கொள்ளை நோய் தடுப்பின் இரு கண்கள் போன்றவை. இவற்றில் Isolation என்பது நோய் குறி இருப்பவர்களை உடனே தனிமைப்படுத்துவது.

Quarantine என்பது நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்படுபவர்களை அவர்களுக்கு நோய் அறிகுறி ஆரம்பிக்கும் முன்னமே தனிமைப்படுத்துவது.

சீனாவில் இருந்து இங்கு வந்த பயணிகளில் கோவிட்-19 நோய்குறி இருப்பவர்கள் அனைவரும் isolation செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கு இருந்து வந்த பயணிகளில் நோய் குறி இல்லாதவர்கள் அனைவரும் quarantine செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொள்ளை நோய் தடுப்பின் மற்றொரு கண்… Infection control (தொற்றை நீக்குதல்)

கொரோனா வைரஸ் தனது மூதாதையர்களான SARS-CoV மற்றும் MERS-CoV ஐ பெரும்பாலும் ஒத்துப்போகின்றது. மேலும் இதுவும் வவ்வால் இனத்திடம் இருந்து தான் மனிதனுக்கு தாவியுள்ளது.

மேலும் 80% கொரோனா நோய் தொற்றுகள் Fomite infection எனப்படும் கைகளால் வைரஸ் தொற்றுள்ள பகுதிகளை தொடுவதாலேயும்; அந்த கிருமி பாதித்த கைகளை மூக்கு, வாய் போன்ற பகுதிகளுக்கு கொண்டு போவதாலுமே பரவுவதாக
கண்டறியப்பட்டுள்ளது. 20% கொரோனா தொற்று தான்.. நேரடியாக மற்றவர் மீது தும்முவது இருமுவது மூலம் பரவி இருக்கிறது.

சமீபத்திய ஆய்வில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 41% பேர் கொரோனா நோய் தொற்றை வூஹானின் மருத்துவமனைகளில் இருந்து பெற்றுள்ளனர். இதை Nosocomial infection என்போம்.

இதற்கு காரணம் இதோ..

கொரோனா வைரஸ் குடும்பத்தின் முந்தைய வைரஸ்களை வைத்து செய்யப்பட்ட 22 ஆராய்ச்சிகளின் சாராம்சம். உங்களுக்காக..

கொரோனா குடும்ப வைரஸ்கள் வெளி உலகில் அது இரும்பாக, பொருளாக இருக்கட்டும், கண்ணாடியாக இருக்கட்டும் அல்லது நெகிழி எனப்படும் ப்ளாஸ்டிக்காக இருக்கட்டும், குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் இருந்து அதிக பட்சம் 9 நாட்கள் வரை உயிருடன் இருந்து நோயை பரப்பும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

படிக்க :
நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

30 முதல் 40 டிகிரி வெப்ப நிலையில் இந்த உயிருடன் வாழ்ந்து நோய் பரப்பும் கால அளவு கனிசமான அளவு குறைகிறது. (இது தான் இந்திய தீபகற்பத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன்னும் கொரோனா நோய் பரவாமல் இருக்க காரணமாக இருக்கலாம்)

மேலும் 4 டிகிரி வெப்பம் கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் 28 நாட்கள் வரை கூட வெளிப்புறத்தில் வாழும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கிருமிகள் வெளிப்புறத்தில் உயிரோடு அதிக நாள் இருப்பதற்கு மூன்று விசயங்கள் உதவி புரிகின்றன

1. வெப்பம்
2. ஈரப்பதம்
3. இருமல் துளியில் இருக்கும் மொத்த வைரஸ்களின் எண்ணிக்கை.

வெப்பம் குறைவாக இருந்து, ஈரப்பதம் அதிகமாக இருந்து, பல பேருக்கு ஒரே நேரத்தில் நோய் பரவினால் கொரோனா வைரஸ்க்கு கொண்டாட்டம் தான். நமது பாடு தான் திண்டாட்டம் ஆகும்.

சரி.. இப்போது நாம் முறையாக அறிவியல் பூர்வமாக எப்படி இந்த வைரஸ் தொற்றை அழிக்கலாம் என்று பார்க்கலாம்:

நமது வீடுகளில் உள்ள டாய்லெட் மற்றும் பாத்ரூம்களை கட்டாயம் ஒரு முறையேனும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு வீட்டு பாத்ரூம்களை சுத்தம் செய்ய
நமது ப்ளீச்சிங் பவுடர் அல்லது 1% லைசால் உபயோகிக்கலாம்.

ப்ளீச்சிங் பவுடர் கரைசலை தண்ணீருடன் ஒன்றுக்கு 99 பங்கு விகிதத்தில் கலந்து பாத்ரூம் டாய்லெட்டுகளை கழுவி சுத்தம் செய்யவேண்டும்.

அதாவது 10 கிராம்/மில்லி ப்ளீச்சிங் பவுடர்/திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தால் 1% ப்ளீச்சிங் திரவம் கிடைத்து விடும். அன்றாடம் உபயோகிக்கும் சட்டை துணி மணி , பெட்ஷீட், தலையணை கவர் போன்றவற்றை டிடர்ஜெண்ட் போட்டு
துவைத்து 60-90 டிகிரி வெப்பமுள்ள நீரில் மூழ்கி எடுக்க வேண்டும்.

லைசால் (Lysol) உபயோகிக்கிறீர்கள் என்றால், வீடுகளுக்கு 1% லைசால் தேவை
(ஒரு லிட்டர் லைசாலை 49 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்).

மருத்துவமனைகளுக்கு 5% லைசால் தேவை (ஒரு லிட்டர் லைசாலை 9 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்)

பஸ் ஸ்டாண்டுகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு
2.5% லைசால் (ஒரு லிட்டர் லைசாலை 19 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்)

இந்த திரவங்களை ஊற்றி குறைந்தபட்சம் பத்து நிமிடம் விட வேண்டும்.

படிக்க :
குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !
♦ கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா

மருத்துவ ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு

மருத்துவமனை ஊழியர்கள் 7.5% பாவிடோன் ஐயோடின் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு சுத்தம் செய்கையில் கட்டாயம் 15 விநாடிகள் நேரம் எடுத்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 7.5% பாவிடோன் ஐயோடின் திரவம் 15 நொடிகளில் MERS, SARS போன்ற கொரோனா வைரஸ்களை கொல்வதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD.

குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !

0

மாதவிலக்கு இல்லை என நிரூபிக்க 68 இளங்கலை மாணவர்களின் உள்ளாடைகளை அகற்றுமாறு ஃபிப்ரவரி 13 அன்று குஜராத்தில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக அகமதாபாத் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மாதவிலக்கு சமயத்தில் இந்து மத விதிமுறைகளை மாணவர்களில் சிலர் மீறுவதாக விடுதி மேற்பார்வையாளார் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததையடுத்து புஜ் நகரில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் (Shree Sahajanand Girls Institute) இந்த வக்கிர நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிரந்திகுரு ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மா கட்ச் பல்கலைக்கழகத்தின் (Krantiguru Shyamji Krishna Verma Kutch University) கீழ் இயங்கும் இந்த கல்லூரி 2012 இல் தொடங்கப்பட்டது. இதை சுவாமிநாராயண் மந்திரைப் (Swaminarayan Mandir) பின்பற்றுபவர்கள் நடத்துகிறார்கள். இதன் விதிகளின்படி மாதவிடாய் சமயத்தில் கோயில் மற்றும் சமையலறை வளாகங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. விடுதி மாணவிகள் ஒருவருக்கொருவர் சேர்ந்து பழக கூட அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் மாதவிலக்கு சமயங்களில் மூன்று நாட்களுக்கு தரைத்தளத்திலுள்ள அறையில் பூட்டி வைத்து உணவு வழங்கப்படுவதாகவும் விடுதி மாணவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்லூரி நேரத்தில் தங்கள் வகுப்பறைகளை விட்டுவிட்டு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மாணவர்களில் ஒருவர் அகமதாபாத் மிரரிடம் கூறினார். “கல்லூரி முதல்வர் எங்களை அவமதித்ததுடன் எங்களில் யாருக்கெல்லாம் மாதவிலக்கு இருக்கிறது என்று கேட்டார். மாதவிலக்கு இருப்பதாக நானும் மற்றொருப்பெண்ணும் ஒப்புக்கொண்டாலும் நாங்கள் அனைவருமே குளியலறைக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு பெண் ஆசிரியர்கள் எங்கள் உள்ளாடைகளை தனித்தனியாக அகற்றினால் தான் நாங்கள் மாதவிடாய் இருக்கிறோமா என்று சோதிக்க முடியும் என்று கூறினார்கள்” என்று மேலும் கூறினார்.

படிக்க:
வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57
♦ கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

விடுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலான மாணவர்கள் வெகு தொலைவிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று மற்றொரு மாணவர் கூறினார். “மாதவிலக்கு பிரச்சினை தொடர்பாக கல்லூரி முதல்வர், விடுதிக்காப்பாளார் மற்றும் அறங்காவலர்கள் தொடர்ந்து எங்களை துன்புறுத்துகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டினார். “நாங்கள் மாதவிலக்கில் இருப்பதற்காக தண்டிக்கப்படுகிறோம். அவர்களின் மத விதிகளை நாங்கள் பின்பற்றினாலும் இது நிகழ்கிறது. எங்களில் சிலருக்கு மாதவிலக்கு இருப்பதாகவும் அந்த நேரத்தில் மற்றவர்களுடன் பழகியதாகவும் சந்தேகித்ததால் எங்கள் அனைவரது உடைகளையும் கலைய சொன்னார்கள். கடைசி அவமானமாக இது இருக்கட்டும். இதற்கு மேலும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.

விடுதியை காலி செய்த பிறகே சட்ட நடவடிக்கை எடுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் இருப்பதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினரான பிரவீன் பிண்டோரியா மாணவர்களிடம் கூறினார். மேலும் அத்தகைய நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை என்று ஒரு கடிதத்தில் கையெழுத்திட பிண்டோரியா கட்டாயப்படுத்தியதாக அந்த மாணவர் குற்றம் சாட்டினார்.

கல்லூரி நிர்வாகத்தின் மூன்று அதிகாரிகள் மற்றும் விடுதி மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பூஜின் போலீஸ் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். “இரண்டு பெண் அதிகாரிகளும் பெண் மாணவர்களுடன் பேசியுள்ளனர்” என்று ஒரு அதிகாரி ANI இடம் கூறினார்.

“நாங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதன் அதனடிப்படையில் வெறுமனே பேருக்காக ஒரு சிறிய கட்டணத்தை மட்டுமே வாங்குகிறோம்” என்று கல்லூரி அறங்காவலர் பி.எச்.ஹிரானி கூறினார். “இந்த கல்லூரி வளாகத்தில் ஒரு கோயில் இருப்பதால், மாணவர்களுக்கு இந்த மதப்பிரிவின் விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்களுக்கு நடந்தது நியாயமற்றது. நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். குஜராத் சுவாமி நாரயண் மந்திரை சேர்ந்த சாமியார் ராதாராமனுடம் ஐந்து பேர் கும்பல் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள 2000 ரூபாய் தாள்களை அச்சிட்டதற்காக 2019, நவம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பொறுப்பாளர் தர்ஷனா தோலாகியா உறுதியளித்தார். பின்னர் இந்த நிகழ்வு விடுதியுடன் தொடர்புடையது என்றும், யாரும் மாணவிகளை தொடவில்லை என்றும் அவர் ANI -யிடம் கூறினார். “இதற்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார். “மாணவிகளின் அனுமதியின் பேரில் தான் இது நடந்தது. யாரும் அதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை” என்று அவர் கூறினார்.

படிக்க:
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ தொடரும் நேபாளப் பெண்களின் மாதவிடாய் அவலம்

மாணவர்களைச் சந்தித்து ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் குழுவை தேசிய பெண்கள் ஆணையம் அமைத்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த “வெட்கக்கேடான செயல்முறையின்” காரணத்தை விளக்குமாறு ஆணையம் அதிகாரிகளிடம் கேட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தோலகியா மற்றும் காவல்துறை இயக்குனரையும் குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மாநில மகளிர் ஆணையமும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்தோ-ஆசியன் செய்திச் சேவை (IANS) கூறியது.

இந்த நாரயண் மந்திர் உலக மகளிர் தினத்தை கொண்டாடவும் அழைப்பு கொடுத்துள்ளது தான் இதில் இன்னும் கொடுமை.

இந்து மதத்திற்கு சீர்திருத்தம் வேண்டும் என்று இன்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்து மதத்தின் நம்பிக்கைகள், விதிமுறைகள் ஒன்று, இரண்டு… என்று நீங்கள் பட்டியலிட்டு பாருங்கள். அத்தனை விதிகளுமே பார்ப்பனியப் பிற்போக்கு சடங்குகளாகவும், ஆபாசப் புளுகுககளாகவும், புராணக்கதைகளாகவும் தான் இருக்கும். இந்த பிற்போக்குத்தனத்திற்கும் இதர பெரும்பாலான இந்து மக்களுக்கும் சம்மந்தமே இருக்காது.


சுகுமார்
நன்றி :  ஸ்க்ரால். 

ஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

ள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் புத்தகங்களை தாறுமாறாக தரையில் எறிந்தேன். ஒருவருமே என்னை திரும்பி பார்க்கவில்லை. அம்மா குனிந்தபடி அரிவாளில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். என் அண்ணன்மாரைக் காணவில்லை. அக்கா சங்கீத நோட்டுப் புத்தகத்தை திறந்துவைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். என் சின்னத் தங்கச்சி வாய்துடைக்காமல் தள்ளாடி நடந்து வந்து தன்கையை என்வாய்க்குள் நுழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்தாள். நான் என் பிரகடனத்தை வெளியேவிட்டேன். ‘இன்று முதல் நான் மச்சம், மாமிசம் சாப்பிடமாட்டேன். இனி மேல் என் உணவு மரக்கறிதான்.’ அப்பவும் அம்மா நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்கு வயது எட்டு.

அன்று குடுமி வாத்தியார் வகுப்பில் பாடம் எடுத்தபோது சொன்ன கதை மனதில் பதிந்துவிட்டது. ஒன்றும் புரியாமல் அன்றும் திருக்குறளை பாடமாக்கி ஒப்புவித்தோம். ஒருமுறை எங்கள்வாத்தியார் கடலில் விழுந்துவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியும் ஆனால் உடம்பில் காயம்பட்டு ஒரு துளிரத்தம் சிந்திவிட்டது.  சுறாமீன்கள் அவரை நோக்கி வரத்துடங்கின. சுறாக்களுக்கு ரத்தம் கால்மைல் தூரத்துக்கு மணக்கும். அவைக்கு நாலுவரிசைப் பற்கள். ஒரு பல்போய்விட்டால் இன்னொருபல் அந்த இடத்தை நிரப்பிவிடுமாம்.  சுறாக்களின் செட்டைகள் குவிந்து கும்பிடுவது போல தோற்றமளிக்க நாலுதரம் வாத்தியாரை சுற்றிவிட்டு அவை போய்விட்டனவாம். ஏன் தெரியுமா?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.”
என்ற குறள் தான்.

என் தம்பி அடாவடித் தனமானவன். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான். அவன் கேட்டான், ‘சுறாக்களுக்கு வாத்தியார் மரக்கறிக்காரர் என்பது எப்படித் தெரியும். ஏன் நாலு வரிசைப்பல்லை வைத்துக்கொண்டு அவரை கடித்துக் குதறவில்லை.’ ‘மக்கு, மக்கு. ரத்தத்துளியை அவை மணந்துதான் வந்தன. அது மரக்கறி ரத்தத்துளி என்பது அவைக்கு தெரியாதா? நீபோ’ என்று தள்ளினேன். அவன் எரிச்சலோடு திரும்பும்போது ‘சுறாக்களுக்கு மணக்கவும் தெரியும்.  திருக்குறளும் தெரியும்’ என்றான்.

அன்றிரவு சாப்பாட்டுக்கு நான் உட்கார்ந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது.  எங்கள் குடும்பத்தில் நாங்கள் சகோதரங்கள் ஏழு பேர்.  எல்லோரும் நிரையாக அவரவர் தட்டுகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தட்டில் மீன்குழம்பு கமகமவென்று மணந்தது.  தரையிலே கொஞ்சம் இடைவெளிவிட்டு சின்ன வாழைஇலை ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் இடியப்பம், சம்பல், கத்தரிக்காய் குழம்பு என்று பரிமாறப்பட்டிருந்தது. நான் அம்மாவை பார்த்தேன். அவர் சாப்பிடு என்பதுபோல தலையை ஆட்டினார். அப்படித்தான் நான் மரக்கறிக்காரன் ஆனேன்.

அதன் பின்னர் அம்மா எனக்காக தனிச் சமையல் செய்ய ஆரம்பித்தார். தனித்தனி சட்டி பானைகள், தனியாக வாழை இலை.  அடுப்புக்கூட தனி அடுப்பு என்றால் நம்பமுடியாது தான்.  அகப்பையை அக்கா கவனயீனமாக மாறிப்பாவித்துவிட்டால் அதைதூக்கி எறிந்துவிட்டு அம்மா புது அகப்பைவாங்குவார்.  வீட்டிலே என் மகத்துவம் திடீரென்று உயர்ந்தது.  எல்லோரும் நிரையாக உட்கார்ந்து சாப்பிடும்போது எனக்கு நடக்கும் பிரத்தியேக கவனிப்பும் உபசரிப்பும் எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பிவிடும்.  ஒருதடவைஐயா,  ‘ஒரு தடியெடுத்து முழங்காலுக்கு கீழே நாலு அடிகொடுக்காமல் செல்லம் கொடுக்கிறீர்’ என்றார். அம்மா, ‘வாத்தியார் நல்லது தானே செய்தார். உயிர் கொலை பாவம் தானே.  அவனை தடுத்தால் அந்தப்பாவம் என்னைத்தானே வந்து சேரும்’ என்றார்.

படிக்க:
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

நான் மரக்கறிக்கு மாறியதில் என் மகிமை வரவர உயர்ந்து கொண்டே போனது.  பக்கத்து வீட்டில் இருந்து யாராவது வந்தால் என் புகழ் பாடாமல் அம்மா அவர்களை திருப்பி அனுப்பமாட்டார்.  எதோ நான் பள்ளிக்கூடத்தில் முதல் பரிசு பெற்றதுபோல பாராட்டுவார். மரக்கறி சாப்பிட்டால் சுறாக்கள்கூட கும்பிடுமாம்.  அப்பிடி வாத்தியார் சொல்லியிருக்கிறார். இது வீட்டிலே பெரும்புயலைக் கிளப்பியது.  எல்லோருடைய எரிச்சலையும் செயலாக மாற்றியது என் தம்பி தான்.

எனக்கு முன் வந்து உடம்பை நெளித்தபடி ‘ஓ, எங்களுக்கு இன்றைக்கு வாளை மீன் கறி. உனக்கு பாவம் வாழைக்காய் வெள்ளைக்கூட்டு’ என்று விட்டு வயிற்றைப் பிடித்துச் சிரிப்பான். அடுத்த நாள் ‘எங்களுக்கு இன்றைக்கு றால் பொரியல்.  உனக்கு முசுட்டை இலை வறை. பாவம்’ என்பான்.  இன்னொருநாள் எட்டத்தில் நின்று தன் பின்பக்கத்தை காட்டி நெளிப்பான்.  பின்னர் முன்னுக்கு வந்து நின்று நாலுபக்கமும் வளைவான்.  நான் பாய்ந்து கைகளைப் பிடித்து மிரட்டுவேன்.  விட்டதும் நாடாச்சுருள் போல தானாகச் சுழன்று உள்பக்கம் ஓடிவிடுவான். ‘ஓ, பாவம் உனக்கு பூசணிக்காய்.  பினைந்து பினைந்து சாப்பிடு. எங்களுக்கு ஆட்டு இறைச்சி வறுவல்.’ எனக்கு தாங்க முடியவில்லை.  நான் சேர்த்து வைத்த புகழ் எல்லாம் இவனால் சேதம் அடைந்து கொண்டே போனது.

அரிதட்டு

ஒரு நாள் பின்னேரம் அம்மா அரிதட்டில் மாவை இட்டு இரண்டு கைகளையும் முழுக்கநீட்டி அரித்துக் கொண்டிருந்தார். அருமையான சமயம். இரண்டு கைகளும் வேலையில் இருப்பதால் அடிப்பதற்கு அவை உதவப்போவதில்லை. கெஞ்சுவதுபோல குரலை மாற்றி அம்மாவிடம் முறைப்பாடு வைத்தேன். அவையளுக்கு நல்லநல்ல இறைச்சிக்கறி, சாப்பாடு, எனக்குபூசணிக்காயா? தம்பிகூடச் சிரிக்கிறான். நான் பேசிக் கொண்டேபோக அம்மா ஒன்றுமே சொல்லாமல் உடம்பிலேமா படாமல் அரித்துக் கொண்டே இருந்தார். எனக்கு அது துணிச்சலைக் கொடுத்தது.  அவர்களுக்கு இறைச்சி என்றால் எனக்கு உருளைக்கிழங்கு. அந்தக் காலத்தில் உருளைக் கிழங்கு சரியான விலை. அதன் ருசிக்கு ஈடுஇணை கிடையாது. மீன் என்றால் எனக்கு கத்தரிக்காய் குழம்பு. றால் பொரியல் என்றால் எனக்கு வாழைக்காய் பொரியல். நண்டுக்கு ஈடு முருங்கைக் காய். இப்படி நீண்ட பட்டியல் தயாரித்து சமையல் சுவற்றில் சோற்றுப்பசையால் ஒட்டிவைத்தேன். அம்மா அதைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லவில்லை.

அதன் பிறகு பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் என் உணவில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் என் மனம் சிலவேளைகளில் தடுமாற்றம் கண்டிருக்கிறது. ஒரு நாள்படலையை திறந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன். நண்டுக் குழம்பு வாசனை மூக்கிற்குள் நுழைந்து வயிற்றுக்குள் போய் விட்டது. வாய் ஊறத் தொடங்கியது. நண்டுக் காலை அம்மா ஒவ்வொன்றாக உடைத்துத்தர நான் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. நான் அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தேன். அம்மா ‘நண்டு தானே. ஒரு சின்னக் காலை உடைத்துதாறேன், கொஞ்சம்சாப்பிடு’ என்று சொல்லியிருந்தால் என் வைராக்கியம் உடைந்து சிதறியிருக்கும். அம்மா என்னைக் கண்டதும் ஊர்ப் பெரியவரைக் கண்டது போல சட்டியை சட்டென்று மூடி மணம் என் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டார். பட்டியலில் நான் எழுதியபடி பக்கத்து அடுப்பில் முருங்கைக்காய் வேகிக் கொண்டிருந்தது.

படிக்க:
நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை
♦ பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

ஒரு நாள் அம்மாவுக்கு பெரிய சவால் ஒன்று வந்தது. எங்கள் ஊரில் சாம்பல் கணவாய் அருமையாகத் தான் கிடைக்கும். அதன் ருசி தனியாக இருக்கும். கணவாய் சமைப்பதில் அம்மாவுக்கு ஒரு ரகஸ்யத் திறமை இருந்தது. அம்மாவினுடைய சமையலை ஐயா பாராட்டினதே கிடையாது. ஆனால் கணவாய் சமைத்தால் அந்தப் பாராட்டுக் கிடைக்கும். அன்று ஐயா எப்படியோ சிரமப்பட்டுத் தேடி வாங்கிவந்த சாம்பல் கணவாயை அம்மா தன் முழுத் திறமையை பாவித்து சமைத்தார். கணவாய் சமைக்கும் போது இரண்டு பிடிமுருங்கை இலைபோட வேண்டும். அதுருசியைகூட்டும். அம்மா எங்கேயோ அலைந்து முருங்கை இலை சம்பாதித்து கணவாய் கறியை சமைத்து முடித்து விட்டார். அது எழுப்பிய மணத்திலிருந்து உச்சமான ருசியை அது கொடுக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிட்டது. அம்மா ருசி பார்ப்பதே இல்லை. மணத்தை வைத்தே அவருக்கு தெரிந்து விடும்.

கணவாய்கறி சமைக்கும் நாட்களில் அம்மா வேறு ஒரு கறியும் வைப்பது கிடையாது. கணவாயும், வெள்ளை சோறும் மட்டுமே. அப்போழுதுதான் அதன் முழுச்சுவையையும் உள்வாங்கி அனுபவிக்க முடியும். கணவாய் என்றால் அம்மா ஒரு சுண்டு அரிசி கூடப் போட்டு சமைத்திருப்பார். எல்லோரும் இரண்டு மடங்கு சாப்பிடும் நாள் அது. முழுச் சமையலையும் முடித்து ஓய்ந்த போது தான் அம்மாவுக்கு திடுக்கிட்டது. எனக்கு என்ன சமைப்பது என்று அவர் தீர்மானிக்கவில்லை. சுவரிலே ஒட்டிவைத்த நீண்ட பட்டியலைப் பார்த்தார். அதிலே கணவாய் கிடையாது. அம்மாவுக்கு பதற்றம் தொற்றியது. என்ன சமைப்பது? நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.

கணவாய் கறி – மாதிரிப்படம்.

அன்று மத்தியானம் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தபோது அம்மா எனக்கு தனியாக வாழை இலை போட்டு வெள்ளைச் சோறும் அதன்மேல் ஒருவித குழம்பும் ஊற்றியிருந்தார். எனக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த என் தம்பி விளிம்பு உடைந்த என்னுடைய பீங்கான் கோப்பையை தனதாக்கியிருந்தான். ஏராளமான மக்கள் கூடியிருப்பதுபோல பெரும்கூச்சலுடன் கணவாய் கறியை சப்பி..சப்பி சாப்பிட்டனர். எனக்கு முன் இருப்பது என்ன என்று எனக்கு தெரியாது. பெயர் தெரியாத ஒன்றை நான் அதுவரை உண்டது கிடையாது. ஒரு வாய் அள்ளி வைத்தேன். என் எட்டு வயது வாழ்க்கையில் அதுபோல ஒன்றை நான் ருசித்தது கிடையாது. முன்னரும் இல்லை. பின்னரும் இல்லை. கணவாய் கறிபோலவே சதுரம்சதுரமாக வெட்டியிருந்தது. மிருதுவாகவும் அதேசமயம் இழுபடும்தன்மையுடனும் இருந்தது. கடிக்கும் போது சவ்வு சவ்வாக ருசியை நீடித்தது. கணவாய் போல வேகுணம், மணம் ருசி. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ருசி என்றென்றும் என் நாவில் தங்கிவிட்டது. அதன் பின்னர் அப்படியான ருசி என் வாழ்வில் மறுபடியும் கிடைக்கவே இல்லை.

என்னுடைய ராச்சியம் இப்படி சில வருடங்கள் ஓடியது. பின்னர் அம்மா இறந்துவிட்டார். பத்து வருடங்களுக்குப் பின்னர் அக்கா அந்த ரகஸ்யத்தை சொன்னார். சமையல் கட்டிலிருந்து அம்மா வெறி பிடித்தவர்போல வெளியே ஒடினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்கு என்ன சமைப்பது என்று அவரால் முடிவெடுக்க முடியவில்லை. அவர் என்ன சமைத்தாலும் அது கணவாய்க் கறியின் ருசிக்கு சமானமானதாக இருக்க வேண்டும். எங்கள் வளவில் 20 -25 தென்னை மரங்கள் நின்றன. அதிலே வெவ்வேறு மரங்களில் 12 இளம் காய்களை பறிப்பித்தார். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக அவரே வெட்டித் திறந்து ஆராய்ந்தார். சிலதிலே வழுக்கை தண்ணீர்போல படர்ந்திருந்தது. சில கட்டிபட்டு தேங்காயாக மாறியிருந்தன. இரண்டுக்கும் இடைப்பட்டதாக ஒரு தேங்காயை கண்டுபிடித்து அந்த வழுக்கையை பக்குவமாக தோண்டி எடுத்தார். அது தோல் போல மெத்தென்று இருந்தது. அதை ஐந்து தரம் தொட்டு அது ஆட்டுச் செவிப்பதம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். சதுரம் சதுரமாக வெட்டி ஒரு கணவாய்க் கறி சமைப்பதுபோல பக்குவமாகச் சமைத்தார்.

அன்று எல்லோரும் நிரையாக உட்கார்ந்த பிறகு எனக்கு பரிமாறினது அது தான். முதலும் கடைசியுமாக அதைசாப்பிட்டேன். அதன் பிறகு அப்படி ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை. ஏனென்றால் ஒருவருக்கும் அப்படி ஓர் உணவு இருப்பது தெரியாது. ஒரு பழ இலையான் போல பிறந்த அன்றே அது மறைந்துவிட்டது.

இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். ஒரு வார்த்தை பேசாமல் ஒரு தாய் தன் 8 வயது மகனை திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்தார். உலகத்தில் பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறுமாதிரி இருப்பார்கள். தாய்மார் எல்லாம் ஒன்றுதான்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 57

வர்க்கங்களும் வருமானங்களும்

அ.அனிக்கின்

திப்புத் தத்துவம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது என்பது நமக்குத் தெரிந்ததே. விலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது என்பவை இத்தகைய கேள்விகளாகும். முதல் கேள்விக்கு ஸ்மித் பகுதியளவுக்குச் சரியான பதிலைக் கூறினார்; ஆனால் அதை யதார்த்தத்தோடு சமரசப்படுத்த முடியவில்லையாகையால் பிறகு கொச்சையான கருத்து நிலையை மேற்கொண்டார். உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை வளர்க்கும் பொழுது இரண்டாவது கேள்விக்கு விஞ்ஞான ரீதியாகத் தீர்வு காண்பதில் அவருடைய பங்கும் இருந்தது. ஆனால் அது மறுபடியும் முரண்பாட்டைக் கொண்டிருந்தது.

ஸ்மித் “பூர்வீக சமுதாயம்” என்று சொல்லும் பொழுது எவ்விதமான அர்த்தத்தில் அதைக் கையாள்கிறார்? அது அநேகமாக ஒரு கற்பனையே என்று அவர் கருதியபோதிலும் அந்தக் கற்பனை ஒரு முக்கியமான அர்த்தத்தைக் கொண் டிருப்பதாக அவர் நினைத்தார். அது தனிச் சொத்துடைமை இல்லாத சமூகம் என்று அவர் நினைத்தாரா? அநேகமாக அப்படி நினைத்திருக்க மாட்டார். மனிதகுலத்தின் கடந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில் இத்தகைய ஒரு “பொற்காலத்தை” ஸ்மித் காணவில்லை. அவர் அநேகமாக தனிச் சொத்துடைமை உள்ள, ஆனால் வர்க்கங்கள் இல்லாத ஒரு சமூகத்தையே மனதில் எண்ணியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமூகம் சாத்தியமா அல்லது எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறதா என்பது முற்றிலும் வேறு வகையான கேள்வியாகும்.

பத்து லட்சம் விவசாயிகளைக் கொண்ட ஒரு சமூகத்தை நாம் கற்பனை செய்வோம். அங்கே ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே போதுமான நிலமும் உழைப்புக் கருவிகளும் வைத்திருக்கிறார், தன்னுடைய குடும்பத்தின் நுகர்வுக்கும் பரிவர்த்தனைக்கும் மட்டுமே போதுமான அளவுக்கு உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர்களைத் தவிர, அந்த சமூகத்தில் இன்னொரு பத்து லட்சம் சுதந்திரமான கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த உழைப்புக் கருவிகளைக் கொண்டும் மூலப் பொருள்களைக் கொண்டும் பாடுபடுகிறார்கள். இந்தச் சமூகத்தில் கூலி உழைப்பு என்பது கிடையாது.

கெனேயின் கருத்தின்படி இந்த சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன. ஸ்மித்தின் கருத்தில் ஒரே ஒரு வர்க்கம் மட்டுமே இருக்கிறது. ஸ்மித்தின் அணுகுமுறையே அதிகம் சரியானதாக இருக்கிறது. ஏனென்றால் வர்க்கங்கள், அந்த வர்க்கங்களை அமைக்கின்ற மக்கள் பொருளாதாரத்தின் எந்தத் துறையில் உழைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடுவது கிடையாது, உற்பத்திச் சாதனங்களோடு இவர்கள் கொண்டிருக்கும் உறவைப் பொறுத்தே இந்த வேறுபாடு ஏற்படுகிறது. மேலே கொடுக்கப்பட்ட உதாரணத்தில் பண்டங்களின் பரிவர்த்தனை உழைப்பின் மதிப்புக்குத் தகுந்தவாறு நடைபெறுகிறது, உழைப்பின் மொத்த உற்பத்திப் பொருள் (அல்லது அதனுடைய மதிப்பு) தொழிலாளிக்குச் சொந்தமாக இருக்கிறது என்று ஸ்மித் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அதைப் பகிர்ந்து கொள்வதற்கு யாரும் இன்னும் தோன்றவில்லை. ஆனால் அந்தக் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது. நிலம் நிலவுடைமையாளர்களின் தனிச் சொத்தாக மாறிவிட்டது, பட்டறைகளும் தொழிற்சாலைகளும் முதலாளிகளின் உடைமைகளாக இருக்கின்றன. இதுதான் நவீன சமூகமாகும். அது கூலித் தொழிலாளர்கள், முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் என்ற மூன்று வர்க்கங்களைக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையேயும் பல்வேறு இடைநிலை அடுக்குகளையும் குழுக்களையும் இனம் காண்பதற்குரிய அளவுக்கு ஸ்மித் யதார்த்தவாதியாக இருக்கிறார். ஆனால் கோட்பாட்டளவான பொருளாதார ஆராய்ச்சியில் ஒருவர் இந்த அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு மூன்று வர்க்கங்கள் என்ற மாதிரிப்படிவத்திலிருந்து முன்னேறலாம்.

படிக்க:
♦ தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

இன்று ஒரு தொழிலாளி யாரோ ஒருவருடைய நிலத்தில் யாரோ ஒருவருடைய மூலதனத்தின் உதவியைக் கொண்டு பாடுபடுவது ஒரு விதியாகவே இருக்கிறது. எனவே அவருடைய உழைப்பின் மொத்த உற்பத்திப் பொருளும் இனியும் அவருக்குச் சொந்தமாக இருப்பதில்லை. இந்த உற்பத்திப் பொருளிலிருந்து அல்லது அதனுடைய மதிப்பிலிருந்து நிலவுடைமையாளரின் குத்தகைப் பணம் முதலில் கழிக்கப்படுகிறது. இரண்டாவதாக, தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொண்டு அவர்களுடைய வேலைக்குத் தேவையான கருவிகளையும் பொருள்களையும் கொடுக்கின்ற முதலாளியின் லாபம் கழிக்கப்படுகிறது.

உபரி மதிப்பு என்பது முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் உழைப்பைச் சுரண்டுவதன் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளுகிற அளவுக்கு ஸ்மித் நெருங்கி வருகிறார். எனினும் மார்க்சுக்கு முன்பிருந்த எல்லாப் பொருளியலாளர்களையும் போலவே அவர் உபரி மதிப்பை ஒரு தனிவகையான இனமாகப் பிரித்துக் கூறவில்லை; முதலாளித்துவ சமூகத்தின் மேற்பரப்பில் அது மேற்கொள்ளும் ஸ்தூலமான வடிவங்களான லாபம், குத்தகை, வட்டி என்பவற்றை மட்டுமே அவர் ஆராய்ந்தார். ஸ்மித் நாடுகளின் செல்வத்தில் ஒரு காலத்தில் தொழிலாளிக்குச் சொந்தமாக இருந்த உழைப்பின் முழு உற்பத்திப் பொருள் பிறகு அவரிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டதைக் குறிப்பிடுகின்ற ஐந்து இடங்களை பி. டக்ளஸ் எடுத்துக் காட்டுகிறார். இந்தச் சொற்றொடர் “சோஷலிசச் சிந்தனையின் வரலாற்றில் மிகவும் அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது, அதை ஆடம் ஸ்மித்தின் புத்தகத்தில் காண்பது அதிகமாகக் குறிப்பிடக் கூடியதாகும்…” (1)  என்று டக்ளஸ் எழுதுகிறார். இது மிகவும் உண்மையே. நாடுகளின் செல்வம் புத்தகத்தை அறிஞர்கள் மிக நுட்பமான சோதனைக்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இவ்வளவு அதிகமான அளவுக்கு மாறுபட்ட – முரண்பாடாகவும் இருக்கின்ற வாசகங்களைக் கொண்ட மாபெரும் இலக்கியங்கள் மிகச் சிலவே.

ஸ்மித்தினுடைய சிந்தனையில் மற்றொரு கருத்தோட்டம் கூலி, லாபம், வாரம் ஆகிய வருமானங்களின் மொத்தமே மதிப்பு என்ற அவருடைய அபிப்பிராயத்திலிருந்து தோன்றுகிறது. லாபமும் வாரமும் ஒரு பண்டத்தின் மதிப்பைப் படைக்கின்றன என்றால் அந்தப் பண்டத்தின் முழு மதிப்பிலிருந்து அவற்றைக் கழிக்க முடியாது என்பதே உண்மையாகும். இங்கே வருமானங்களைப் பகிர்ந்தளிப்பதைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் காண்கிறோம். உழைப்பு, மூலதனம், நிலம் என்ற ஒவ்வொரு உற்பத்திக் காரணியும் (இந்தச் சொல் பிற்காலத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது) பண்டத்தின் மதிப்பைப் படைப்பதில் பங்கு கொள்கின்றன, அதற்குரிய பங்கை இயற்கையாகவே கோருகின்றன என்பது இக்கருத்தாகும். தன் கருத்துக்கு ஆதரவான வாதத்தைக் கொடுத்த பொருளியலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பறைசாற்றிய “மூலதனத்தின் தெய்விக உரிமை” என்பது இங்கேயிருந்து வெகு தூரத்தில் இல்லை.

வருமானங்களிலிருந்து மதிப்பை உருவாக்கிக் கொண்ட பிறகு ஸ்மித் ஒவ்வொரு வருமானமும் நிர்ணயிக்கப்படுகின்ற இயற்கையான விகிதத்தை ஆராய்வதற்கு முடிவு செய்கிறார், அதாவது சமூகத்தின் வர்க்கங்களுக்கிடையே தனிப்பட்ட பண்டம் மற்றும் மொத்த உற்பத்திப் பொருளின் மதிப்பு எந்த விதிகளின்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை ஆராய்வதற்கு முடிவு செய்கிறார்.

முக்கியமான மூன்று வருமானங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்த பிறகு ஸ்மித் மறுபடியும் ஓரளவுக்கு அவருடைய உபரி மதிப்புத் தத்துவத்துக்குத் திரும்புகிறார். கூலியைப் பற்றிய அவருடைய கருத்து இன்றைக்கும் கூட அக்கறை கொள்வதற்கு உரியதாக இருக்கிறது. கூலியைப் பற்றிய அவருடைய தத்துவம் பல அம்சங்களில் திருப்திகரமாக இல்லை என்பது சரியே, ஏனென்றால் தொழிலாளி முதலாளியிடம் தன்னுடைய உழைப்புச் சக்தியை விற்பனை செய்வதில் அடங்கியுள்ள உறவுகளின் உண்மையான தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர் நடைமுறையில் உள்ள உழைப்பையே பண்டம் என்றும் அதன் காரணமாக அதற்கு ஒரு இயற்கையான விலை இருப்பதாகவும் அனுமானித்தார். ஆனால் அவர் இந்த இயற்கையான விலையை மார்க்ஸ் உழைப்புச் சக்தியின் மதிப்பை வரையறுத்த அதே விதத்தில் – தொழிலாளியும் அவருடைய குடும்பமும் உயிரோடிருக்கத் தேவையான சாதனங்களின் மதிப்பின் மூலமாகஉண்மையாகவே வரையறுத்தார். ஸ்மித் இதற்கு யதார்த்த ரீதியான, முக்கியமான சேர்ப்புகளின் தொடரையும் கொடுத்தார்.

படிக்க:
♦ “அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்
♦ ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

முதலாவதாக, உழைப்புச் சக்தியின் மதிப்பு (”இயற்கையான கூலி” என்பது அவருடைய சொற்றொடர்) உயிரோடிருக்கத் தேவையான சாதனங்களின் குறைந்த பட்சத்தினால் நிர்ணயிக்கப்படுவது மட்டுமல்லாமல், கால, நேர நிலைமைகளையும் பொறுத்திருக்கிறது, அதில் வரலாற்று ரீதியான, கலாச்சார ரீதியான கூறுகளும் அடங்கியிருக்கின்றன என்பதை முன்பே உணர்ந்திருந்தார். தோலினால் செய்யப் படும் காலணிகளை ஸ்மித் உதாரணமாகக் காட்டினார். இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது அவசியமிக்க பொருள், ஸ்காட்லாந்தில் ஆண்களுக்கு மட்டும் அது அவசியமான பொருள், பிரான்சில் இருபாலாருக்குமே அது அவசியமான பொருளல்ல. பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்ற பொழுது தேவைகளின் வட்டம் விரிவடைகிறது, உண்மையான பண்டங்களில் எடுத்துரைக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் அதிகரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஒருவர் வருவது இயற்கை.

இரண்டாவதாக, தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட குறைவான கூலிக்கு அது குறைந்த பட்சத்தை ஒட்டியே இருந்தது – முக்கியமான காரணங்களில் ஒன்று முதலாளியோடு ஒப்பிடுகின்றபொழுது அவர்களுடைய பலவீனமான நிலைமையே என்பதை ஸ்மித் தெளிவாகப் பார்த்தார். அவர் இதைப் பற்றி மிகவும் வன்மையாக எழுதினார். தொழிலாளர்களின் ஸ்தாபனமும் ஒருமைப்பாடும், அவர்களுடைய எதிர்ப்புமே தொழிலதிபர்களின் பேராசையைக் கட்டுப்படுத்தும் என்று ஒருவர் முடிவு செய்வது இயற்கையே.

கடைசியில் மூன்றாவதாக, அவர் கூலியில் ஏற்படும் போக்குகளை நாட்டின் பொருளாதார நிலைமையோடு இணைத்தார்; முற்போக்கான பொருளாதாரம், பிற்போக்கான பொருளாதாரம், மாற்றமில்லாத பொருளாதாரம் என்று நாட்டின் பொருளாதாரத்தில் மூன்று வகைகளைப் பிரித்துக் காட்டினார். முதல் வகையில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் காரணமாக உழைப்புக்கு அதிகமான தேவை ஏற்பட்டுக் கூலி அதிகரிக்கும் என்று அவர் நம்பினார். வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு உண்மையாகவே உதவியாக இருப்பதை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பிற்காலத்திய வளர்ச்சி எடுத்துக் காட்டியிருக்கிறது.

அரசியல் பொருளாதாரத்தில் லாபத்தை ஒரு விசேஷமான பொருளாதார இனமாகப் பிரித்துக் காட்டுகின்ற பணியை ஸ்மித் பூர்த்தி செய்தார். ”மேற்பார்வையிடுதல் மற்றும் இயக்குதல்” என்ற விசேஷமான வேலை ரகத்துக்குக் கொடுக்கப்படும் கூலியே லாபம் என்ற கருத்தை அவர் அடிப்படையில் நிராகரித்தார். லாபத்தின் அளவு மூலதனத்தின் அளவினால் நிர்ணயிக்கப்படுவதையும் இந்த உழைப்பிலுள்ள சிரமத்தைப் பற்றிக் கற்பனையாகச் சொல்லப்படுவதற்கும் அதற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லையென்பதையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். இங்கும் இன்னும் சில பகுதிகளிலும் லாபம் என்பது சுரண்டுபவருடைய வருமானம், அது உபரி மதிப்பின் முக்கியமான வடிவம் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

இந்தக் கருத்துக்குப் பக்கத்திலேயே லாபத்தைப் பற்றிய மேலெழுந்தவாரியான முதலாளித்துவக் கருத்தையும் நாம் பார்க்கிறோம். லாபம் என்பது ஆபத்தை மேற்கொள்வதற்காக, தொழிலாளி பிழைப்பதற்குரிய சாதனத்தைக் கொடுப்பதற்காக, தவிர்ப்பு என்று சொல்லப்படுவதற்காக முதலாளிக்குத் தரப்படுகின்ற இயற்கையான வெகுமதி என்றும் எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  Adam Smith, 1776-1926, “Lectures to Commemorate the 150th Anniversary of the Publication of The Wealth of Nations”, Chicago, 1928, p. 96.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

டந்த பத்தாண்டில் ஒவ்வொரு வருடத்தின் மே மாதத்திலும் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாவதும், சர்வதேசம் முழுவதும் பேசப்படுவதுமான ஒரு பூமி உண்டெனில் அது முள்ளிவாய்க்கால்தான். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் பதினெட்டாம் திகதி வரைக்கும் ‘மனிதாபிமான நடவடிக்கை’ எனும் பெயரில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் குருதி சிந்திய நிலம் முள்ளிவாய்க்கால்.

முள்ளிவாய்க்கால் மனிதப் புதைகுழிகள் இன்றும் கூட முற்கம்பி வேலிகளுக்குள் அரச பாதுகாப்புப் படையினரின் காவலின் கீழ் இருப்பதைக் காண நந்திக்கடல் களப்பைத் தாண்டி புதுக்குடியிருப்பை நோக்கிப் பயணித்தால் போதுமானது. இப்போதும் தமிழர்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டிருப்பது அரச தீவிரவாதத்தின் இன்னும் முற்றுப் பெறா சர்வாதிகாரத்தின் பெயரிலேயே அன்றி நல்லாட்சிக்காகவல்ல.

முள்ளிவாய்க்கால் கூட்டுப் படுகொலையின் சாட்சிகளான சடலங்களின் சிதிலங்களையும் கூட புல்டோஸர்களைக் கொண்டு அழித்து விட்டது இராணுவம். மக்கள் இருந்தார்கள் என்பதற்கு அடையாளமாக அந் நிலங்களில் கைக் குழந்தைகளின் நைந்த ஆடைகள், சிறிய பாதணிகள், தாய்மார்களின் கந்தல் சேலைத் துண்டுகள், பீங்கான் தட்டுக்கள், கோப்பைகள் போன்றவைகள் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட உயிர்களை நினைவுகூர ஒவ்வொரு மே மாதத்திலும் தமிழ் மக்கள் முனையும் போதெல்லாம் அரசாங்கத்தின் அதிகாரக் கரங்கள் அதைத் தடுத்திடக் காத்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட இந்த வன்முறை இன்று வரைக்கும் தீர்ந்த பாடில்லை.

2012 ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் திகதி பளை கத்தோலிக்க தேவாலயத்துக்குள் திடீரென நுழைந்த இராணுவம், இறுதி யுத்தத்தின் போது மரித்தவர்களை நினைவுகூரும் விதமான எவ்விதப் பூஜைகளும் நிகழ்த்தப்படக் கூடாதென அங்கிருந்த அருட்தந்தையிடம் உத்தரவிட்டது. அது மஹிந்த ராஜபக்‌ஷவின் சர்வாதிகார ஆட்சி நிகழ்ந்த காலம். அவர் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டு, மரித்தவர்களை நினைவுகூரும் மனிதாபிமானத்துக்கெதிராகக் கிளர்ந்து நின்ற நாள் அது.

அது மாத்திரமல்லாது 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலைக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் சிறைக் கைதிகளான வவுனியா கணேஷன் நிமலரூபன், யாழ்ப்பாணம் தில்ருக்‌ஷான் மரியதாஸ் ஆகியோரது சடலங்களும் கூட ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அக் காலத்தில் அச்சுறுத்தின. அந்த உடல்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் வாரக் கணக்கில் தாமதப்படுத்தியது அரசாங்கம். இறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னரும் கூட இறுதிச் சடங்குகளை எவ்வாறு எளிமையாக நடத்த வேண்டும் என்று தீர்க்கமாக உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறாக, அக் காலத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தமிழர்களின் சடலங்களைக் கூடக் கண்டு பயந்தது போலத்தான் கடந்த நல்லாட்சி அரசாங்கமும் கூட, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவைக் கையில் வைத்துக் கொண்டு யுத்தத்தில் மரித்தவர்களின் பெயர்கள் தாங்கிய கற்பதாகைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறது.

படிக்க:
♦ ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

எவ்வாறாயினும், தமிழர்கள் ஒவ்வொருவரும் மஹிந்த ராஜபக்‌ஷவின் மோசமான சர்வாதிகார ஆட்சியை தோற்கடிக்கச் செய்து தாம் கனவு கண்ட சுதந்திரமான நல்லாட்சியைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் 2015 ஜனவரி மாதம் எட்டாம் திகதி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க, தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.

அதன் பலனாக 2015 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு, யுத்தத்தில் மரித்த தம் சொந்தங்களை நினைவுகூர அனுமதி கிடைத்தது. 2016 ஆம் ஆண்டும் கூட முள்ளிவாய்க்காலிலும், கிளிநொச்சியிலும் இன்னும் வடக்கின் பல இடங்களிலும், கிழக்கிலும் தமிழர்கள் தாம் இழந்த உறவுகளை நினைவு கூர்ந்து விளக்கேற்றி பூஜை செய்தார்கள். அதற்கு அப்போது எவ்வித தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அப் பூஜைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் கூட ஏற்படவில்லை.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந் நிலைப்பாடு தடம் புரண்டது. இலங்கையில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூர்வதற்காக அவர்களது பெயர் விபரங்கள் கற்பதாகைகளில் பொறிக்கப்பட்டு அவை முள்ளிவாய்க்கால் தேவஸ்தானத்துக்கு அண்மித்த நிலத்தில் புதைக்கப்பட்டு, மரணித்தவர்களை நினைவுகூரும் சடங்கிற்கெதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி நீதிமன்றத் தடையை இட்டது.

வருடத்துக்கொரு தடவை தமது உறவுகளை நினைவுகூறும் அச் சடங்கு தீவிரவாதக் கொண்டாட்டம் எனக் கூறியவாறு ராஜபக்‌ஷவின் அடிச் சுவட்டிலேயே தமது பாதங்களைப் பதித்துச் சென்று மரித்தவர்களை நினைவுகூர்வதற்கான தடையுத்தரவை நீதிமன்றத்தினூடாகப் பெற்றுக் கொண்டது கடந்த அரசாங்கம். இதன் மூலமாக ‘நல்லாட்சி’ எனும் பெயரில் ஒளிந்து கொண்டிருந்த அரசின் கோரமான நிஜ முகமும், மஹிந்தவின் மோசமான எண்ணக் கருக்களும் வெளிப்பட்டிருந்தன. இவ்வாறாக கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களை நினைவு கூர்வதைத் தடுக்க நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டிருந்த ஒரு அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான நல்லாட்சியை எதிர்பார்த்திருக்க முடியும்?

படிக்க:
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!
♦ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்

முள்ளிவாய்க்காலில் படுகொலையான ஆயிரக்கணக்கான மக்களுக்கென்று 2017-ம் ஆண்டு வரைக்கும் ஒரு கல்லறை கூட இருக்கவில்லை. அதுவரைக்கும் மரித்தவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் மெழுகுதிரி ஏற்றி வைத்து பூக்களிட்டு வழிபட்டதெல்லாம் தாமாக மனதில் வைத்துப் பூஜித்து வந்த கல்லறைகளின் முன்புதான். குரூரமான இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மனிதர்களில், இருநூற்றைம்பது பேரை அவர்களது உறவுகளின் சாட்சிகளோடு இனம் கண்டு பெயர், முகவரி, வயது, காலமான தினம் போன்ற தகவல்களைத் திரட்டியெடுத்து அவற்றை கருங்கல் பதாகைகளில் தமிழில் பொறித்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவிடத்துக்கருகிலேயே புதைக்க ஏற்பாடு செய்தது ஒரு அரச சார்பற்ற நிறுவனம். அந்த இடம் 2017-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பதினேழாம் திகதி இரவு அதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மரணித்தவர்களை நினைவுகூர்வது மக்களின் உரிமை என்றபோதும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவில் ‘நாட்டின் ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை’ ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, காவல்துறையினரால் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவுக்கேற்ப எதிர்காலத்தில் மீண்டும் தலைதூக்கக் கூடிய தீவிரவாதப் போக்கை உத்தேசித்து இத் தடை உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

பல மணித்தியாலங்களாக நீடித்த வாதப் பிரதிவாதங்களின் பின்னர் முள்ளிவாய்க்கால் தேவாலயத்தினுள்ளே மாத்திரம் மரித்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய அனுமதித்த நல்லாட்சி அரசாங்கம் கற்பதாகைகள் பொறிக்கப்பட்டிருந்த நிலத்தில் எவ்விதப் பூஜையையும் செய்ய அனுமதிக்கவில்லை.

இந்த நிலைப்பாடு கடந்த 2018-ம் ஆண்டு வேறொரு விதத்தில் தொடர்ந்தது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற செய்தி மாநாடொன்றில் வைத்து அமைச்சர் ராஜித, யுத்த கால கட்டத்தில் பொதுமக்களும் கூட கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டுமென்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து தீப்பற்றிக் கொண்ட ஊடகங்கள், சமூக வலைத்தளங்களினூடாக பற்றியெரியத் தொடங்கியிருந்தன.

இந் நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி கடற்கரையில் ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூர்ந்து மெழுகுதிரி ஏற்றி வைத்து அமைதியாக பிரார்த்தித்தார்கள். அந்த அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாத சிங்கள சமூக வலைத்தள வீரர்கள் அங்கு இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்வைக் கண்டு தமது இராணுவத்தின் பெருமை பாடத் தொடங்கினார்கள்.

அதாவது மரித்தவர்களை நினைவு கூர வந்த தமிழ் மக்களுக்கு, இலவச குளிர்பானங்களை வழங்கிக் கொண்டிருந்தது இராணுவம். அதனைக் கருத்திற்கொண்டு மீண்டும் இராணுவத்தின் புகழ்பாடி அதனை உச்சத்திலேற்றிக் கொண்டாடித் தீர்த்தன சிங்கள சமூக வலைத்தளங்கள்.

விடயம் அதுவல்ல. இன்றும் கூட தமிழர்களின் இடங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் இராணுவம், இன்றும் கூட அப் பகுதிகளில் இராணுவ முகாம்களை நிறுவி வரும் இராணுவம், மரித்தவர்களின் கல்லறைகளையும் கூட புல்டோஸர்களால் அழிக்கும் இராணுவம், கிளிநொச்சியில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்த தமது உறவுகளைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ‘எம்மிடம் அவ்வாறானதொரு பட்டியல் இல்லை’ எனக் கூறும் இராணுவம், உண்மையில் மரித்தவர்களை நினைவுகூர வந்த தமிழ் மக்களுக்கு இவ்வாறாக இலவச குளிர்பானங்களை வழங்கியது ஏன்?

கொலைநிலமான முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வதை தெற்கிலிருக்கும் சிங்கள மக்களில் அனேகமானவர்கள் எதிர்க்கும்போது வடக்கின் இராணுவம், நினைவுகூர வருபவர்களுக்கு இலவச குளிர்பானங்களை வழங்கியது ஏன்?

சித்திரவதைகளையும், படுகொலைகளையும் முற்றுமுழுதாக எதிர்க்கும் பௌத்த மதத்தை முன்வைத்து தம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள இராணுவம் முயற்சிப்பதை வடக்கில் பரவலாக வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகளின் மூலமாகக் காணலாம். உண்மையில், இராணுவம் வடக்கில் இன்றும் கூட தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இவ்வாறுதான்.

இராணுவத்தின் அவ்வாறானதோர் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே இந்த இலவசக் குளிர்பானத் திட்டம். முள்ளிவாய்க்காலில் கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கொல்லப்பட்டார்கள். அது இலங்கை இராணுவத்துக்கு நன்றாகத் தெரியும். அந்தக் குற்ற உணர்விலிருந்து விடுபட அது எடுக்கும் முயற்சிகளில் ஒன்றே இவ்வாறான ‘நற்சேவை’.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். இலங்கை இராணுவமானது தனது குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டிச் செய்யும் இவ்வாறான நற்கருமங்கள் மீண்டும் மீண்டும் வடக்கின் தமிழ் மக்களது சுதந்திரத்தைப் பறிப்பதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

எனவே தற்போதைய அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் தமிழர்கள் கூடுமிடங்களிலெல்லாம் இராணுவத்தைக் கொண்டு இலவச குளிர்பானங்களைப் பகிர்வதல்லாது, தமிழர்களது இடங்களிலிருந்து இராணுவத்தையும், இராணுவ முகாம்களையும் முற்றுமுழுதாக அகற்றி அம் மக்களுக்கு பரிபூரணமான சுதந்திரத்தை வழங்குவதுதான். இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதுவும், முள்ளிவாய்க்காலின் அடிப்படை உரிமையை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுவும்தான் உண்மையில் இலங்கையின் சிறந்த ஆட்சியாக அமையும்.

– எம். ரிஷான் ஷெரீப்

disclaimer

நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். தென்னிந்தியாவின் மிகப்பெரும் நுழைவாயில். இங்கிருந்து காஷ்மீர், கன்னியாகுமரி, கவுகாத்தி என்று இந்தியாவின் எல்லா முனைகளுக்கும் 70 க்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள் இயங்குகின்றன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள். ஆக வாரத்தின் 7 நாட்களிலும் 24 நேரமும் கண்ணயராமல் இருக்கும் இடம்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் முக்கிய இயங்கு உறுப்பாக இருப்பவர்கள் 300-க்கும் மேற்பட்ட போர்ட்டர்கள் எனப்படும் சுமைதூக்கும் தொழிலாளிகள்.

20 முதல் 80 வயது வரை உள்ள இந்தத் தொழிலாளிகள் சிவப்பு சீருடை அணிந்து நடைபாதையின் எல்லா முனைகளுக்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டத்தின் இடையே ஒரு காலைப்பொழுதில் அவர்களைக் குறுக்கிட்டோம்.

***

கோவிந்த்

லக்கேஜ பாத்துட்டு பிளாட்பாரத்தின் அடுத்த முனைக்கு ஓடுவோம்; பக்கத்தில போனதும், வேணாம் நாங்களே இழுத்துப் போறோமுன்னு சொல்வாங்க.

“எனக்கு எங்கப்பா கொடுத்த வேல இது; அவருக்கு எங்க தாத்தா கொடுத்தது. நான் மூனாவது தலைமுறை. எம் பையன் இந்த வேலைய விரும்புவானான்னு தெரியல. விடியக்கால 3 மணிக்கு வந்தேன், இப்ப பகல் 11 மணியாகுது. இதோ இந்த ஒத்த 50 ரூபாதான் வருமானம்” என்று பணத்தை நீட்டினார்.

“இன்னும் காலையில சாப்பிடல, அடுத்து கூலி கெடக்குமான்னு தெரியல, அதனால இத ஒடைக்காத (செலவு செய்யாமல்) வச்சிருக்கேன். மதியம் சாப்பிடணும், எந்த கெட்ட பழக்கமும் இல்ல, அதனால தப்பிச்சிட்டேன். கட்டிங் போடுறவனாயிருந்தா இன்னேறம் பயித்தியம் புடிச்சிருக்கும்.

படிக்க:
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை

ஒரு ரயிலுக்கு ரெண்டு மூனு பேர்தான் கூலின்னு கூப்பிடுறாங்க- ஒரு ட்ரெயினுக்கு 12 கோச். ஒரு கோச்சுக்கு 72 சீட்டு. கணக்கு போட்டுக்குங்க. இதில அதிகபட்சம் 5 பேருகூட கூலிக்கு கூப்பிடுறதில்ல. எவ்வளவு வெயிட்டா இருந்தாலும் அவங்களே இழுத்து போயிடுறாங்க. நாலு வீலு, ஆறு வீலு, எட்டு வீலு சூட்கேசல்லாம் வந்துருச்சு. 5 வயசு கொழந்த 50 கிலோ சூட்கேச விளையாட்டா இழுத்துப் போகுது. குழந்தைங்களுக்குள்ளே போட்டி வேற. அழுது அடம்புடிச்சு அப்பா கையிலேருந்து வாங்கி இழுத்துப் போகுதுங்க. நாம பேச முடியல. லக்கேஜ் இருக்குறத பாத்துட்டு இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு ஓடுவோம், வேணாம் நாங்களே இழுத்துப் போறோமுன்னு சொல்வாங்க, வெறுங்கையோட திரும்புவோம். ஒரு பிளாட்பாரத்தை ஓடி திரும்புனா ஒரு கிலோ மீட்டர். இப்படி சும்மா சும்மா பல கிலோ மீட்டர் ஓடுவோம்.

சுமைதூக்கும் தொழிலாளர்களின் அடையாள அட்டை.

அடுத்தடுத்து ட்ரெயின் வரும்போது விடாம ஓடுறதுனால கிர்ருனு தலை சுத்தும். அப்பப்ப உட்கார்ந்து சமாளிப்போம். மாசத்துல சில நாளுகூட முழுசா 500 ரூபாய எடுத்துப் போகமுடியல. 200, 300ஐ தாண்ட மாட்டேங்குது. பல நேரம் அதுவும் கெடைக்காது.

பல வேளை டீ கூட கடன்லதான் குடிப்போம். 30 ரூபா பட்ட சோத்துக்கு பக்கத்துல உள்ளவன்தான் கடன் கொடுப்பான். இப்படித்தான் போகுது பொழப்பு.

வீட்டு வாடகை, பசங்க படிப்பு, சாப்பாட்டுச் செலவு, கரண்ட் பில்லுனு இந்த கஷ்டத்த தலையில ஏத்துனா வேற சுமைய தலையில ஏத்த முடியுமா? இப்படித்தான் வாழ்க்கை ஓடுது” என்றார்.

நாம் அவரிடம், “இவ்வளவு ஜனங்களையும், ரயிலையும் பார்க்குறீங்களே, நீங்க குடும்பத்தோட டூர் போயிருக்குறீங்களா? என்றோம்.

நம்மை ஆழமாகப் பார்த்தார். பிறகு பெருமூச்சுவிட்டபடி, “அப்படியெல்லாம் நெனச்சுக்கூட பார்த்ததில்ல…” என்றார்.

***

மதுரை

நடக்க முடியாதவுங்கள மூட்ட மாதிரி தோளு மேல சாச்சிகிட்டு போயி வண்டியில ஏத்தி விடுவோம். ஆனா, எங்கள தாங்குறதுக்குத்தான் யார் இருக்கா?

எனக்கு 54 வயது. கூலியா வந்து 25 வருஷமாகுது. கேரள பொழப்பு மொத்தமா போயிருச்சு. இங்கேருந்து யாரும் எந்த சரக்கும் வாங்கிப் போறதில்ல. ‘எந்தப் பொருள் கையில இருந்தாலும் அதுக்கு பில்லு எங்கேன்னு கொடச்சல் கொடுக்குறாங்க; ஜி.எஸ்.டி இல்லாத பில்ல ஏத்துக்க மாட்டேங்குறாங்க; நாங்க பொழப்பு நடத்த முடியலன்னு’ வியாபாரிங்க சொல்றாங்க. என்னமோ நடக்குது நாட்டுல. எல்லாரு வயித்துலயும் அடிச்சிட்டாங்க.

பணம் செல்லாதுன்னு சொன்னபோதே பாதி தொழில் போச்சு. இப்ப ஜி.எஸ்.டியால மீதித் தொழிலும் போச்சு.

படிக்க:
நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை
♦ ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

எங்க பொழப்ப ஏன் கேக்குறீங்க… வெள்ளச்சட்ட போட்ட பிளைட் டிரைவரா இருந்தாலும், ட்ரெயின் கார்டா இருந்தாலும் சரி…! அவங்களுக்கெல்லாம் குறிப்பிட்ட நேரந்தான் வேல, எங்கள மாதிரி செவப்புச் சட்டக்காரங்களுக்கு 24 மணி நேரமும் வேல. நடு ராத்திரி 12 மணிக்கு வந்து லக்கேஜோடு வந்தாலும் நாங்க ஓடுவோம்.

கூலி மட்டுமில்ல, நடக்க முடியாதவங்கள மூட்ட மாதிரி தோளு மேல சாச்சிகிட்டு போயி வண்டியில ஏத்தி விடுவோம். ஆனா, எங்கள தாங்குறதுக்குத்தான் யாரும் இல்ல.

நாள் முழுக்க இங்கே இருந்துட்டு வெறுங்கையோட வீட்டுக்கு போனா, சண்டைதான் வருது. நாங்க ஏதோ தெண்டச் செலவு செய்யிற மாதிரி, வீட்டம்மாங்க நேரடியா இங்கேயே வந்து கூலிக்காக நிக்கிறாங்க. கையில இருக்குற 50, 100 வாங்கிட்டுப் போறாங்க.

எங்க பாடாவது பரவாயில்ல, கல்யாணம் கட்டுன சின்னதுங்க, ‘இவன கட்டிகிட்டு நான் என்னதான் பண்றதுன்னு’ கண் கலங்குதுங்க. எதிர்காலம் கலக்கமா இருக்கு.

***

முருகேசன் (74)

சின்ன வயசுல 100 கிலோ லக்கேஜ அனாயசமா தோள்ல தூக்கிப் போடுவேன். இப்போ, 40, 50 கிலோவுக்கே மூச்சு வாங்குது.

அடுத்த வருசம் வந்தா, நான் சென்ட்ரலுக்கு வந்து 50 வருசமாகுது. சின்ன வயசுல 100 கிலோ லக்கேஜ அனாயசமா தோள்ல தூக்கிப் போடுவேன். இப்போ 40, 50 கிலோவுக்கே மூச்சு வாங்குது. அந்தக் காலத்துல இவ்வளவு போக்குவரத்து இல்ல. இப்ப எது கேட்டாலும் வாசல்படிக்கே வந்து நிக்குது. நம்மள மாதிரி கூலிகள யாரு சட்டப்பண்ணுவாங்க-

எனக்கு வயசாயிடுச்சு, நான் போகப்போறேன். படிச்சி முடிச்ச சின்னப் பசங்க இங்கே அல்லாடுறதுதான் கஷ்டமா இருக்கு.

***

ஜெயவேலு

ஃபோன தட்டுனா எல்லாமே கெடைக்குது. பின்ன எதுக்கு சுமைய தூக்கிகிட்டு வரணும். இப்பல்லாம் ஸ்டைலா தோள்பையோட போறாங்க.

நான் பிளஸ் டூ படிச்சிருக்கேன். நான் கூலியா வந்து 10 வருசமாகுது. இப்ப எல்லாமே ஆன்லைனிலேயே கிடைக்குது. ஊருக்குப் போக டிக்கெட்டு முதற்கொண்டு, சாப்பிடுற சோறு வரை எல்லாமே ஃபோன தட்டுனா கெடைக்குது. பின்ன எதுக்கு சுமைய தூக்கிகிட்டு வரணும். கைய ஆட்டிகிட்டு வர்றாங்க, ஸ்டைலா தோள்பையோட போறாங்க. முன்ன மாதிரி மூட்ட முடிச்சோட இப்ப யாரும் வர்றதில்ல.

***

பாலகுரு

போர்ட்டருக்கு சேர்ந்தா கேங்க் மேன் வேல கெடைக்குமுன்னாங்க; இப்போ கூலி வேலைதான் நெறந்தரமுன்னு ஆயிடுச்சு.

12-வது படிச்சிட்டு ஐடிஐ முடிச்சிருக்கேன். இங்கே போர்ட்டருக்கு சேர்ந்தா கேங்க் மேன் வேல கெடைக்குமுன்னு சொன்னதுனால ஆசைப்பட்டு வந்தேன். ஆனா, கூலி வேலைதான் நெறந்தரமுன்னு ஆயிடுச்சு.

படிக்க:
திருச்சி: ரெயில்வே திமிரை அடக்கிய சுமைப்பணி தொழிலாளிகள்
♦ நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

நாங்க ரவுடித்தனம், திருட்டுத்தனம் பண்றதா சிலர் புரளியை கௌப்புறாங்க. ஆனால், பயணிங்க மறந்து  போன, விட்டுட்டுப் போன பொருளுங்களையெல்லாம் எஸ்.எம்.ஆர் ரூம்ல ஒப்படைச்சிருக்குறோமுன்னு போயி கேளுங்க.

இரயில் நிலையத்திலேயே தவறவிட்ட பயணிகளின் பொருள்களை அலுவலகத்தில் ஒப்படைத்ததற்கான ஒப்புகைச் சான்று.

***

பீட்டர்

தண்டவாளத்துல தலைய கொடுத்த மாதிரிதான் எங்க கதை. இப்ப இருக்கவும் முடியல, வெளிய போகவும் முடியல.

நான் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கேன். எங்கப்பா எடத்துல கூலியா வந்தேன். 2008ல லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சரா இருந்தபோது, போர்ட்டருங்கள கேங்மேனா நெரந்தரமாக்குனாரு. அந்த மாதிரி இப்ப செய்வாங்களோன்னு எதிர்பாக்குறேன். இப்போ போகவும் முடியல, இருக்கவும் முடியல. தண்டவாளத்துல தலைய கொடுத்த மாதிரிதான் எங்க கதை.

***

சைமன்

இப்போ போலீசு கெடுபிடி அதிகமாயிடுச்சு. காக்கிச் சட்டப் போட்டு வர்றவனெல்லாம் எங்கள அதட்டுறாங்க. இங்கே உட்காராதே, அங்கே நிக்காதேன்னு ரூல்ஸ் பேசுறாங்க. 24 மணி நேரமும் இங்கே நிக்கிறது போலீஸ்காரங்களுக்கு தலைவலியா இருக்கு. அவங்கள வாச் பண்றதா நெனச்சிக்கிறாங்க. அவங்களோட தப்ப மறைக்கிறதுக்கு நம்ம மேலே திருட்டுப்பட்டம் கட்டுறாங்க.

***

ஜெகன் பவுல்ராஜ் (ரயில்வே போர்ட்டர் சங்கத்தின் பொறுப்பாளர்)

வீல் வச்ச சூட்கேசு, பேட்டரி காருன்னு வந்தது போயி, இப்போ செல்ஃப் ட்ராலி வேற வரப்போகுதாம். இனி நாங்க வீட்டுக்குப் போகவேண்டியதுதான்.

இங்கே யார்கிட்டேயும் ஒற்றுமை இல்ல. பின்னாலதான் புலம்புவாங்க, எதையும் தடுக்க முடியல.

பேசஞ்சர் வீல் வச்ச சூட்கேச எடுத்து வந்தது போயி, இப்போ இங்கேயே பேட்டரி கார் வந்துருச்சு. மொதல்ல ஹான்டிகேப்புக்குனு சொன்னாங்க. இப்ப பேட்டரி கார கான்ட்ராக்டுக்கு விட்டு ஒருத்தருக்கு 10 ரூபா வசூல் பண்றாங்க. லக்கேஜ் மொத்தமும் அதுலதான் போகுது. இத கேக்க யாரும் வரல.

இதுல செல்ப் ட்ராலி வேற வரப்போறதா சொல்றாங்க. அது வந்தா சுத்தம். எல்லா கூலிகளும் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

ஊருக்குப் போற ஒவ்வொரு டிக்கெட்டையும் நிமிசத்துக்கு ஒரு வெல விக்கிறான். டைனமிக், தக்கல் விதவிதமா பேரு வேற. அத யாரும் கேக்கல. ஆனால், கூலி கொஞ்சம் அதிகம் கேட்டா, ரவுடித்தனமுன்னு போலீசிடம் கம்ப்ளயின்ட் பண்றாங்க.

சமீபத்துல வெளியில நிக்கிற ஆர்.பி.எப் எங்கள அதிகமா மெரட்டுறாங்க. இவங்க எல்லாம் நேத்து வந்த சின்னப் பசங்க. நாங்க 50 வருசமா தொழில் பண்றோம். இனிமே அவங்ககிட்டேதான் கையெழுத்து போட்டு உள்ளே போகணுமுன்னு சொல்றாங்க. இப்பவே அவங்களோட அட்டகாசம் தாங்க முடியல. சட்டம் வந்தா என்ன பண்ணுவாங்களோ, எங்க தலையெழுத்து.

இலவச வாடிக்கையாளர் சேவை மையம் போல, தங்களிடம் இரயில் பற்றிய விவரம் கேட்கும் பயணிகளுக்கு சளைக்காமல் உதவுகிறார்கள் இந்த செஞ்சீருடை பணியாளர்கள்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் !
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !
அஞ்சாதே போராடு !

மாநாடு – கலைநிகழ்ச்சி

நாள் : 23 பிப்ரவரி, ஞாயிறு மாலை 5 மணி,
இடம் : திருச்சி உழவர் சந்தை.

ன்பார்ந்த நண்பர்களே, வணக்கம்.

என்றுமில்லாத வகையில் இன்று நாடு இருபெருந் தாக்குதல்களை எதிர் கொண்டு வருகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சீர்குலைவும், தோல்வியும் பெரும்பான்மையான தொழிலாளிகள், விவசாயிகள், சிறு உடைமையாளர்களை போண்டியாக்கி வருகிறது. மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முக்த்தன்மை ஆகிய அடிப்படைகள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து கொடிய சட்டங்களின் கீழ் சிறை வைக்கிறது.

இத்தகைய இரட்டைத் தாக்குதலை முறியடிக்க வேண்டிய அவசர சூழலில் தான் மக்கள் அதிகாரம் சார்பில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறோம். பேருந்து, இரயில், கடை வீதி போன்று மக்களிடம் நிதி திரட்டும் வாய்ப்பை காவல் துறை தடுத்து விடுகிறது. அனுமதி பெறுவதற்கே உயர் நீதிமன்றம் செல்லவேண்டியிருக்கிறது. அரசின் அடக்குமுறைக்கு ஆளாகும் எமக்கு நிதி பெரும் நெருக்கடியாகவே தொடர்கிறது. மாநாடு வெற்றி பெற உங்கள் வருகை மட்டுமல்லாது நிதி உதவியும் பெரிதும் தேவைப்படுகிறது. தாராளமாக உதவுங்கள்.. நன்றி..

கீழ் காணும் வங்கிக் கணக்கில் நன்கொடை செலுத்தலாம்.

மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை :

தோழர் சூர்யா
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தலைமை :

தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

தொடக்க உரை :

நீதிபதி கோபால கவுடா
மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

உரையாற்றுவோர் :

திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)

வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு

தோழர் தியாகு 
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்

திரு. பாலாஜி
ஜெ.என்.யூ மாணவர் (JNUSU முன்னாள் தலைவர்), டெல்லி

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கலை நிகழ்ச்சி : ம.க.இ.க. கலைக்குழு

நன்றியுரை :

தோழர் செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மோடி – அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும்.
புதிய இந்தியா எழட்டும்! கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழட்டும்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321

தலைமை அலுவலகம்:
16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை-083.
E-mail : ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி

னநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காக்கும் போராட்டம் இன்னும் நீண்ட பாதையைக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்துத்வா சங்பரிவாரங்கள் இன்னமும் வீளவுமில்லை; நாம் மீளவும் இல்லை.

இதை நாம் உணருவதற்கு பாஜக பிறந்த கதையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச சூழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வகுத்துக் கொண்டுள்ள வேலைப் பிரிவினையை அம்பலப்படுத்த வேண்டும்.

இதற்குத் துணைபுரியும் அரிய புத்தகமே – இது. முக்கியத்துவமிக்க ஒரு சில அரசியல், பொருளாதார எழுத்தாளர்களில் ஏ.ஜி. நூரனி ஒருவர். அவர் இப்புத்தகத்தில்,

வெள்ளையனை வெளியேற்றும் யுத்தத்தில் இந்துத்வா சக்திகளின் பங்கு என்ன?

காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேகளும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் இடையே இருந்த உள் கூட்டு என்ன?

ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கருவியான (கட்சியின்) ஜனசங்கம், அது பின்னர் மறுபிறவி எடுத்த பா.ஜ.க.வும் எவ்வாறு உருவாயின?

இந்திய அரசியல் வரைபடத்தில் பா.ஜ.க.வும், அதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ்.ஸும் தமக்கான ஒரு பிரபலத்தை அடைந்தது எப்படி?

சங் பரிவாரங்களான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., வி.எச்.பி., பஜ்ரங்தள் என்று சங்பரிவாரங்கள் எந்தவகையான வேலைப்பிரிவினையை செய்து கொண்டு செயல்படுகின்றன?

வாஜ்பாயிக்கும் அத்வானிக்கும் இடையேயான உள்கூட்டு என்ன? என்ற கேள்விகளுக்கும், புதிர்களுக்கும் விடையளிக்கிறார் ஏ.ஜி. நூரனி. (நூலின் பதிப்புரையிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்திய அரசியல் சாசனமும்

இந்திய அரசியல் சாசனம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச் சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை சங்பரிவார் கும்பல் 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது. அவர்கள் நிறுவ திட்டமிட்டுள்ள அரசியல் அமைப்பு முறையைப் பற்றி அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது. வெள்ளை அறிக்கையின் முன் பக்க அட்டையில் இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்தியாவின் ஒருமைப்பாடு, சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைத்தது யார்? இது முதல் கேள்வி. பட்டினி, வேலையின்மை, லஞ்ச ஊழல் மத நம்பிக்கையின்மை இவற்றையெல்லாம் பரப்பியது யார்? இது எழுப்பப்பட்டிருந்த இரண்டாவது கேள்வி. அதற்கான பதில் வெள்ளை அறிக்கையின் தலைப்பில் அளிக்கப்பட்டது. வெள்ளை அறிக்கையின் தலைப்பு ‘தற்போதைய இந்திய அரசியல் சாசனம்’.

இந்தி மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் இந்தியன் என்ற சொல் ஒரு காரணத்துடன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் இந்தியத் தன்மை வாய்ந்தது. அது இந்துக்களின் அரசியல் சாசனமல்ல என்பதை உணர்த்துவதற்கே அவ்வாறு குறிப்பிடப்பட்டது அந்த வெள்ளை அறிக்கையின் முன்னுரையில் ஸ்வாமி ஹீரானந்த எழுதுகிறார்:

“நாட்டின் கலாச்சாரமும், குணநலன்கள், சூழ்நிலைகள், ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியல் சாசனம் அமைந்துள்ளது. அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது” இந்த ஆவணத்தைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவிட்டு அவர் கூறுகிறார். “இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்தபிறகு தான் நம்முடைய பொருளாதாரக் கொள்கை நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகள் மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய மறு சிந்தனையில் ஈடுபடவேண்டும். அதனை முழுமையாக ஒதுக்கித் தள்ளுவது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குகளுடன் ஒப்பிடும் போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது. உலகம் முழுவதும் தற்போது இந்தியர்கள் என்றே அறியப்படுகிறோம்” என்று வருத்தப்படுகிறார். ”இந்துஸ்தானைப் பெறுவதற்காக விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உருவான இந்தியாவில் இந்துஸ்தானமும் வந்தேமாதரமும் அழிக்கப்பட்டு விட்டன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காகப் பாடப்பட்ட பாடல் தேசிய கீதமாக மாறியுள்ளது. ”

உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக அந்தப் பிரசுரம் உருவாக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முழுமையான விவாதத்திற்குப் பிறகு திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப்பிறகு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று சுவாமி முக்தாநந்த் ஒரு பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சுவாமி வாமதேவ் மஹாராஜும் அவருடன் பேட்டியில் கலந்து கொண்டார்.

இந்து எதிர்ப்பு அரசியல் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் தேசத்திற்கு அறைகூவல் விடுத்தனர். “இந்த நாட்டின் சட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாதுக்கள் நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியாவின் இயற்கையான குடிமக்கள் என்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டங்கள் கூறுவது ஒரு மோசடி ஆகும்.” ஒரு வாரம் கழித்து முக்தானந்தின் பிரசுரம் வெளியிடப்பட்டது.

ராஜேந்திர சிங்.

சங்பரிவாரின் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் தான் வெள்ளை அறிக்கை பற்றி கருத்துக்களை முதலில் வெளியிட்டது. இது மிகவும் பொருத்தமானதே. 1993ஆம் ஆண்டு ஜனவரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த ராஜேந்திர சிங் பின்வருமாறு எழுதினார்:

“இந்தியாவின் இன்றியமையாததேவைகளை ஈடுசெய்யும் வகையிலோ, அதன் பாரம்பரியம், அது உயர்வாகப் போற்றும் அம்சங்கள், அதன் உயர்ந்த பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இல்லாத வகையில் நமது அமைப்புகள் இருப்பதே தற்போது நடைபெறும் மோதலுக்கு ஓரளவு காரணமாக அமைந்துள்ளன என்று கூறலாம். இந்த நாட்டின் சில சிறப்புத்தன்மைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்தியா எனப்படும் பாரத் என்பதற்கு பதிலாக பாரத் எனப்படும் இந்துஸ்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் என்று அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் நமது கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதல்ல என்பது உறுதி. அணியப்படும் ஆடைகளோ, பேசும் மொழிகளோ கலாச்சாரமல்ல. அடிப்படை யான நிலையில் பரிசீலித்தால் கலாச்சார ரீதியில் நாடு ஒன்றுபட்டு நிற்பது தெரிய வரும். எந்த ஒரு நாடும் நீடித்து நிலைக்க வேண்டுமானால் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கக் கூடாது. இவைகளெல்லாம் மாறுதல் செய்யப்பட வேண்டியதன் தேவையைக் காட்டுகின்றன. இந்த நாட்டின் உயர்பண்புகளுக்கும், அறிவுத்திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியல் அமைப்புச்சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படவேண்டும்” (இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 14,1993)

அன்றைய பா.ஜ.க. தலைவரான எம்.எம். ஜோஷி 1993 ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் நகரத்தில் பேசும் போது, “அரசியல் அமைப்புச்சட்டத்தைப் புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் ‘என்ற தமது கோரிக்கையை வலியுறுத்தினார்” இது தான் சங்பரிவாரின் பிரத்தியேக பாணி. அதனையே இம்முறையும் கடைப் பிடித்தனர்.

படிக்க:
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

சங்பரிவார் கும்பல் முழுமையுமே அடிப்படையில் தாராளமான சிந்தனைப் போக்கு கொண்டதல்ல, அவை அறிவாளிகளுக்கு எதிரானது, மேற்கத்திய அறிவுப் பாரம்பரியத்தை நிராகரிக்கும் அமைப்புகள் அவை. பிரசுரம் புகார் கூறுகிறது, “ இந்தியாவின் கலாச்சாரத்துடனும் வரலாற்றுடனும் அறிமுகமில்லாத மேற்கத்திய பாணி சிந்தனை கொண்ட மக்கள் உருவாக்கியதுதான் நமது அரசியல் அமைப்புச்சட்டம்.” தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராகப் பிரசுரம் கண்டனம் முழங்குகிறது. சிறுபான்மையினர் தொடர்பான விமர்சனங்கள் மிகவும் மோசமானவை. அதுவும் அமைப்புச்சட்டத்துக்கு எதிராக நிதானமற்ற சொற்களைப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் அமைப்புச்சட்டமே ஒரு குப்பைக் குவியல் என்று வருணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நூலிலிருந்து பக்.150-153)

நூல் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும்
ஆசிரியர் : ஏ.ஜி.நூரனி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 176
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த பிப் 14 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் மற்றும் ஆதரவு அமைப்பினர், தங்கள் குடும்பத்துடன் போராடினர். பகல் 2 மணிக்கு கூடியவர்கள் இரவு வரை கலையாமல் போராடினர், அவர்களை போலீசு வெறிகொண்டு தாக்கி கலைத்தது. அந்தக் கொடூரத்தை சொல்லி மாளாது.

போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை, தினத்தந்தி, தினமலர் போன்ற தமிழ் பத்திரிகைகள் ‘லேசான தடியடி’ என்று மைபூசி, அதை, மூன்றாம் பக்கச் செய்தியாக்கி மறைக்கப் பார்க்கின்றன. ’இந்து தமிழ் திசை’ பத்திரிகையோ போராட்டத்தை மூன்றாம் பக்க செய்தியாக்கி போக்குவரத்து இடைஞ்சலை மிகப்பெரும் பிரச்சினையாக சித்தரித்தது. தங்கள் குடியிருப்புக்கு அருகில் அமைதியாக எதிர்ப்பை பதிவிட்ட மக்கள் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதலால் நாலாபுறமும் சிதறி ஓடுகிறார்கள். சமூக ஊடகங்களில் வெளியான அந்தக் காட்சி, பார்ப்போரை திகிலூட்டியது. இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களும் இதற்கு தப்பவில்லை. போராடியவர்களை தனித்தனியாக இழுத்துச் சென்று பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்துகொண்டு கண்மண் தெரியாமல் தாக்கியது மொத்த தமிழகத்தையும் கலங்கச் செய்தது.

இரவு 8 மணிக்குத் துவங்கிய இந்தக் கொடூரம் 2 மணி நேரத்திற்கும் மேலாகவே நீடித்தது. முஸ்லீம் தலைவர்களும் பலவந்தமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை அருகமை மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது.

செய்தியறிந்து, தமிழ்நாடு முழுதும் உள்ள முஸ்லீம்களும் – ஜனநாயக சக்திகளும் நள்ளிரவிலேயே போராட்டத்தைத் துவக்கினர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இராமதாசும், ‘முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்’ என்ற ரஜினியும் முக்காடு போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள் போலும்.

போலீசின் நரவேட்டையை கண்ணுற்ற ஒரு முஸ்லீம் முதியவர் மூச்சடைத்து விழ மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். அவர் மீது எவ்வித தடியடியும் நடத்தவில்லை, இயற்கையாகவே மரணமடைந்தார் என்றது போலீசு. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பால், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சியோர் சாலையில் அமர்ந்து மீண்டும் போலீசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஒன்றுசேர்ந்தனர். அடுத்த நாள்(15.02.2020) வண்ணாரப்பேட்டை ரவுண்டானா சென்னையின் ஷாகீன் பாக் ஆனது…

நாங்கள் போராட்டக் களத்தை அடைந்தபோது சாரைசாரையாக மக்கள் வெள்ளம் குவிந்துகொண்டிருந்தது. சில மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மூவாயிரம், நான்காயிரம் என பெருகியது. இந்துமத அடையாளங்களோடு வந்து கலந்துகொண்ட பெண்கள் பலரையும் போராட்டத்தில் பார்க்க முடிந்தது. மேலும், முதல் நாளில் போலீசாரின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு உணர்ச்சிபூர்வமாக முழக்கமிட்டது நம்மை ஆச்சரியப்படுத்தியது.

படிக்க :
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை

கூட்டத்தின் எதிர்வினை பல்வேறு தொடர்முழக்கங்களால் எதிரொலித்தது. முஸ்லீம் பெரியவர்கள், வயது முதிர்ந்த பெண்கள் உரத்த குரலில், ‘அல்லாஹ் ஹு அக்பர்’ என முழங்கினாலும்! இளைஞர்களும் சிறுவர்களும், ‘இன்குலாப் சிந்தாபாத், ஆசாதி… ஆசாதி’ என்றும் கரம் உயர்த்தி முழங்கினர்.

அவர்களிடம் பேசியபோது, “அடக்குமுறைக்கு கடுகளவும் அஞ்சமாட்டோம், உரிமைக்கு உயிர் கொடுக்கவும் தயங்கமாட்டோம்” என்று ஆவேசமாக பேசி முழக்கமிடத் தொடங்கினர்.

கூட்ட நெரிசலில் நிற்கமுடியாமல் திணறிய நாம் ஒருவழியாக பெண்கள் பகுதியை அடைந்தோம். முஸ்லீம் மக்களோடு இணைந்து முழக்கமிட்ட இந்துப் பெண்களை அணுகினோம்.

“அவுங்க முஸ்லீமா இருந்தா என்ன? அத பத்தி கவலை இல்லை, நாங்க இதுநாள் வரைக்கும்  அப்படி பழகல. கூடவே உறவாடுற அவங்களை வேற்றாளாவா பார்க்க முடியும்? ஒன்னாதான் உழைக்கிறோம், ஒன்னாதான் கஷ்டப்படுறோம். எங்களோட நல்ல நாளுக்கு அக்கா தங்கச்சியா வந்து போறாங்க, அவங்க வீட்டுக்கும் நாங்க போறோம்.

எங்க குடும்பத்துக்கு ஒன்னுன்னா, பக்கத்தில் உள்ள சொந்தக்காரங்க அவங்கதான். கோடைக்காலத்துல தண்ணி, கரெண்ட் இல்லாது தவிக்கும்போதும், கொசுக்கடி, மழை, வெயிலுன்னு எல்லாக் காலத்துலயும் ஒன்னாதான் கஷ்டப்படுறோம்.

இந்துன்னு சொல்றதுனால எங்களுக்கு வானத்திலேருந்து எதுவும் விழப்போறதில்ல. உழைக்கிறோம், ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சிருக்கிறோம். நான் பக்கத்துல இருக்குற பிஸ்கெட் கம்பெனிக்கு போயி குடும்பத்த காப்பாத்துறேன். அதே கம்பெனிக்குத்தான் அவங்க புர்கா போட்டுகிட்டு வர்றாங்க. ரெண்டு பேருமே மாடா உழைக்கிறோம். இதிலே என்ன வித்தியாசம்?” என்றார் தீர்க்கமாக.

அப்போது,  பக்கத்தில் இருந்த முஸ்லீம் மூதாட்டி, “அதோ அந்த அம்மா எங்க தெருதான், என் பொண்ணு மாதிரி” என்றார். அங்கு பொட்டு, மாங்கல்யம், அணிந்தபடி சக பெண்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பவானியை அணுகினோம்.

படிக்க :
ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு
♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?

“எங்க வீட்டுக்காரரே என்ன எதுவும் சொல்லல. போகட்டுமான்னு கேட்டதுக்கு போய் வான்னு சொன்னாரு. நாங்க முஸ்லீமாவோ இந்தாகவோ இருந்தா உங்களுக்கென்ன? வெயில் காலத்துலயும், மழைக் காலத்துலயும் நாங்க படுற கஷ்டத்த பாத்திருக்கீங்களா?

போன வெள்ளத்தில 7 நாள் வீட்டச் சுத்தி தண்ணி. அப்போ இந்துன்னு சொல்ற யாரும் வரல, இந்த முஸ்லீம் பசங்கதான் அக்கா அக்கான்னு ஓடிவந்து உதவுனாங்க. கரெண்ட் இல்லாம இருட்டுல இருந்த எங்களுக்கு மெழுகுவர்த்தி, பால் பாக்கெட், சோத்து பொட்டலமுன்னு என்னன்னமோ எடுத்து வந்து கொடுத்தாங்க.

ஏதோ, குடியுரிமை ரத்துன்னு சட்டம் சொல்றாங்களே, அத சொல்லி இவங்க படுற வேதனைய எங்களால பார்க்க முடியல. அதான் போராட்டமுன்னு சொன்னதும், நானும் வர்றேண்டின்னு அவங்ககூட வந்துட்டேன்.

யாரோ, எச்ச ராசா, நொச்ச ராசாவாமே, எங்ககிட்டே பேசச்சொல்லுங்க, செருப்பால அடிப்பேன். ஏன் நாங்க ஒன்னா இருக்கக்கூடாதா? அவங்களுக்கு எங்கே நோகுது?

அவர் அருகே இருந்த நந்தினி என்பவர், “நானும் இந்துதான். இப்ப என்ன வேணும்?” என்று நம்மை முறைத்தார்.

“ஒன்னுமில்ல, தெரிஞ்சுக்கத்தான்” என்று சமாளித்தோம். நாம் கூட்டத்திலிருந்து ஓரமாக வந்தபோது, பொட்டுவைத்த இளம் பெண், உட்கார இடம்தேடி அலைந்துகொண்டிருந்தார். “எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள்?” என்றோம்.

நம்மை வித்தியாசமாக ஏற இறங்க பார்த்தவர், “முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கணுமுன்னு தோனுச்சு வந்தேன். நான் ஐ.டி. -யில வேலை பார்க்கிறேன். என்கூட வேல பாக்குற நெறைய பேரு வந்திருக்காங்க. இது என்னோட கடமையா நினைக்கிறேன். இந்த நேரத்துல அவங்ககூட இருக்கனுமுன்னு மனசுக்கு தோனுது. நாம கேக்கலன்னா வேறு யாரு இருக்காங்க? நாம படிச்சது எல்லாம் அப்ப பொய்யா?” என்று நம்மையே கேள்வி கேட்டார். மேலும் தொடர்ந்தார்.

“டெல்லியில் இந்தியா கேட் போயி பாருங்க. அதுல சுதந்திரத்துல உயிர்த்தியாகம் பண்ணுனவங்கங்கன்னு ஒரு லிஸ்ட் இருக்கும். அதுல 80% பேரு முஸ்லீம்தான். அப்போ அவங்க ஜனத்தொகையோ நாட்டுல வெறும் 20% தான். இப்ப பேசுற யாரும் (மோடி வகையறா) அப்போ எங்கே போனாங்க. வெள்ளக்காரங்கிட்டே இவங்க (சங்கிகள்) என்ன ஆதாரம் காமிச்சு உயிர் தப்பினாங்கன்னு நமக்குத் தெரியாதா? இப்ப முஸ்லீமுக்கு ஆதாரம் கேக்குறாங்க.

ஏதாவது செஞ்சு அவங்க கூட இருக்குறோமுன்னு நாம காமிக்கணும். போலீசு இங்கே வந்து அடிச்சா நான் என்ன பண்ண முடியும்? ஒருபக்கம் பயம்தான். வேறு என்ன செய்யிறது? அவங்க அடிவாங்கும்போது நாமளும் வாங்கினா என்ன தப்பு? அவங்க அப்படி நம்மள விட்டுற மாட்டாங்க, அந்த தைரியத்துல இங்கே வந்தேன்” என்றார் கண்கள் பிரகாசிக்க.

ஆர்ப்பாட்டத்தில் ஓரமாக அமர்ந்திருந்த முஸ்லீம் இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

“சார் நீங்க எந்த பத்திரிகை?” என்று ஆரம்பித்து, நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே “ஏன் சார் எங்கள மட்டும் விடாம அசிங்கப்படுத்துறீங்க. எங்க உயிரையும் வாங்கிட்டு, மானத்தையும் வாங்குறீங்க. இது நியாயமான்னு யாரு சார் கேக்குறீங்க. நாங்க இன்னும் எவ்வளவுதான் பணிஞ்சு போறது” என்றனர்.

“பகல் 2 மணியிலிருந்து எல்லோரும் அங்கேதான் இருந்தோம். சாயாங்காலம் கலைஞ்சிடுவோம், பெண்களா இருப்பதால் போய்விடுவோம் என்று போலீசு நினைத்தது. நாங்கள் போக மாட்டோம், இரவு இங்கேதான் படுக்கப்போகிறோம் என்று சொன்னதும், பேய் பிடித்தது மாதிரி ஆனார்கள் போலீஸ்காரர்கள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜனங்க கத்திக்கொண்டு ஓடினர். போலீசு லத்தி சார்ஜ் செய்கிறார்கள் என்பது தெரியும். குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று கூட பார்க்காமல் போலீசு எங்களை துரத்தியடித்தது. ஒரு மணிநேரத்தில் அந்த இடமே மயான அமைதியானது.

அடிவாங்கியவர்கள் மற்றவர்களை உதவிக்கு ஃபோனில் அழைக்க முடியவில்லை. யாருக்குமே ஃபோன் போகல. பிறகுதான் தெரிந்தது, ஃபோன் வேலை செய்யவில்லைன்னு. போனை செயலிழக்க வைக்க ஜாமர் கருவியை பொருத்தி விட்டுத்தான் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர்கள் நடத்தும் குரூரத்தை லைவாக சோசியல் மீடியாவில் காட்டி விடுவோம் என்று பயந்திருக்கிறார்கள். இதன் பிறகுதான் பல நண்பர்கள் சொன்னார்கள். மாடியிலிருந்து லைவ் முயற்சிக்கும் போது, ஃபோன் எர்ரர் வந்தது என்று. அதனால், இந்த விஷயம் உடனே வெளியே போக முடியவில்லை.

நாங்கள் வக்கீல் படிக்கும் மாணவர்கள்தான். இந்தக் கருப்புச் சட்டத்தை அரசு வாபஸ் வாங்காமல் விட மாட்டோம். இந்திய தேசியக் கொடிக்காக உயிர் கொடுத்தவர்கள் நாங்கள். அது எங்களை காப்பாற்றும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் கையிலேந்திருக்கிறோம்” என்று உணர்ச்சியில் வார்த்தை வராமல் தடுமாறினர். வரும் கண்ணீரை மறைக்க தலைகுனிந்து கொண்டனர்.

கூட்ட மேடையில் பேசிய பல கட்சித் தலைவர்கள், ஜனநாயகக் கட்சிகள், அறிவுத்துறையினர், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் ஒரே குரலில் பேசினார்கள். தன்மானமும் சுயமரியாதையும்தான் உயிரைவிட மேலானது, என்று எங்கள் முன்னோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். அந்தப் போராட்ட வழியில் எங்கள் உயிரைக் கொடுத்து இந்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று உணர்ச்சி மேலிட பேசினர்.

கூட்டத்தில் பேசிய வி.சி.க மாநில துணை பொதுச் செயலாளர், ஆளூர் ஷாநவாஸ், தனது பேச்சின் மையமாக, இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார். “மிருக பலம்கொண்டு மோடி அரசு முஸ்லீம்கள் மீதான தொடர் வேட்டையை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது தொடர்கிறது. காஷ்மீர், முத்தலாக், பாபர் மசூதி, சி.ஏ.ஏ போன்ற அவமானகரமான இழிவுகள், அரசியல் சட்டம் மற்றும் உச்சநீதி மன்ற துணையுடன் அதிகாரபூர்வமாக முஸ்லீம்கள் மீது ஏவப்படுகிறது.

இவ்வளவுக்கும் முஸ்லீம்களிடம் கனத்த மவுனமே நிலவியது. கடைசியில் இப்போதுதான் மோடி அரசு விக்கித்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைகிறது. அதற்குக் காரணம், நம்முடைய இந்து சகோதரர்கள் மோடி அரசுக்கு எதிராக நம்மோடு களத்தில் இறங்கியதுதான்.

பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிகள் வழங்கிய இந்த ஜனநாயக ஒளியை அணையவிடாமல் நாம் முன்னெடுக்க வேண்டும். நாம் நமது மத அடையாளங்களை துரந்துவிட்டு, நம்முன் உள்ள ஜனநாயகக் கடமைக்காக ஒன்றிணைய வேண்டும்” என்று சங்கிகளின் முஸ்லீம் – இந்து மத பிளவுக்கு ஆப்பறைந்தார்.

மறுபுறம் தமிழகத்தின் மரபுரிமையாக வரும் ஜனநாயக அறிவுத்துறையினரை கண்டு சகிக்காத பிரபல சங்கி ஊடகங்கள், மோடிக்கு எதிரான மதச்சார்பற்ற போராட்டங்களை முஸ்லீம் சாயம்பூசி பின்னிழுக்கப் பார்க்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மீது கல்லெறிந்தனர். போலீஸ் படுகாயமடைந்தனர் என்று உண்மையை மடைமாற்றுகின்றனர்.

ஜனநாயக விரோத பாசிச மோடி கும்பலை நாம் தோலுரிப்பது போல், அவர்களுக்கு பட்டுப் பாவாடை விரிக்கும் இந்த சங்கி ஊடகங்களையும் உடன் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு மோடி எதிர்ப்புப் போராட்ட அலைகளை அதன் செய்திகளை தீயாக எங்கும் பரப்புவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


– வினவு களச்செய்தியாளர்

நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

0
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 04

முதல் பாகம்

சோழர் ஆட்சியில் அறப் போர்கள்

மிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி. 846-ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம்பாடி, வேங்கைநாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப்படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை.

குலோத்துங்க சோழன்.

கி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென்கலிங்கம், வடகலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன். மூவரும் ஒட்டக்கூத்தர் பாடிய ‘மூவருலா’வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்ட மெய்திய சோழ மன்னர்கள் காலத்தில் வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள், பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.

இதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.

சோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப் பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.

ராஜ ராஜ சோழன்.

இப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களின் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன.

உதாரணமாகச் சில சாசனச் செய்திகளைக் கீழே தருவோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார், பக்தவத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு. பிரம்மதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று. அவ்வூர்க் கோவிலையும் – ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது. இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.

அப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்துக்கு முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான் . ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும், ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட, போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்டு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்.

‘ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்புள்ளவை; மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை, இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு’ (சோழர் வரலாறு, மு. இராச மாணிக்கனார்). கல்வெட்டுக்களில், கிராமங்களின் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை(சொந்த நிலம்)யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் காளியாக எடுத்துக் கொண்ட விவரங்களையும் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. உதாரணமாகக் கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்.

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டூரமர்ந்தார்க்கும், (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நியந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக் கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக’

சேரன்மகாதேவி கல்வெட்டு.

இவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழ்நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது. (1) வெள்ளான் வகை: இது சொந்த நிலம். இந்நிலங்களில் ஒரு பகுதி ‘உழுவித்துண்பார்’ என்ற உழவர்களிடமிருந்தன. (2) தேவதானம்: இந்நிலங்கள் கோயில்களுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை படையாரிடம் இருந்தன. (3) பிரமதேயம்: இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன. (4) ஜீவிதம்: இந்நிலங்கள், கோயில் பணி செய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.3000 கோடிக்கு மேல் நடுவண் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதை செயல்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. விரைவில் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) திட்டம் ஆதாரமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும் நாடு முழுவதற்கும் செல்லத்தக்கது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256 -இன் படி இதை நடைமுறைப்படுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் சட்டத்தின் ஒரு பகுதியா என்பதிலிருந்தே இதற்கான விடையைத் தேட வேண்டும்.

இந்தக் கேள்வி மிக முக்கியமானது. அரசியலமைப்புச் சட்டப்படி பார்த்தால் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசுகள் மறுக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும். மத்திய அரசின் உத்தரவை மீறும் மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 இன்படி கலைப்பதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் இடமிருக்கிறது.

அத்தகைய சூழல் இன்னும் உருவாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அதைத் திரும்பப் பெறக்கோரி சில மாநில அரசுகள் வெறுமனே தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றி உள்ளன. முதன் முதலில் கேரளதான் இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானங்களுக்கு சட்டமன்ற விதிகளின்படி எவ்வித அனுமதியும் கிடையாது என்றாலும், ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்காக சட்டமன்ற விதிகளைக்கூட நிறுத்தி வைக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

CAA செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள சட்டவிரோதக் குடியேறிகள் குறித்து நீதிமன்றம் எத்தகைய ஒரு தீர்ப்பையும் வழங்கி இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஏதோ வகையில் நீண்ட காலத்துக்கு இந்தியர்களை விரட்டிக் கொண்டே இருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், தாங்கள் முகாம்களில் அடைக்கடுவோமோ அல்லது நாடு கடத்தப்படுவோமோ என்கிற ஒரு சாராரின் அச்சம் மட்டும் நீங்கப் போவதில்லை.

படிக்க:
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) உருவாக்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது நடுவண் அரசு. குடியுரிமைச் சட்டம் 1955, விதி 18 இன் கீழ் வரும் துணை விதிகள் 1 மற்றும் 3 இன் படி குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 உருவாக்கப்பட்டுள்ளன. இதன் பிரிவு 2(l) இன் படி வரையறுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது ஒரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவேடாகும்.

மாநில அரசின் வருவாய் அலுவலரே உள்ளூர் பதிவாளராகவும் செயல்படுவார்.  இவர்தான் தனது ஆளுகைக்கு உட்பட்ட கிராம மட்டம் வரை வசிக்கும் மக்கள் அனைவரையும் பற்றிய விவரங்களை சேகரித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் (NPR) தயாரிப்பார் என துணை விதி 4 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) உள்ள விவரங்கள்தான் உள்ளூர் பதிவேட்டிலும் இருக்கும் என துணை விதி 5 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சரிபார்க்கப்பட்ட பிறகு அதன் விவரங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்கப்படும்.

ஆக NPR என்பது குடிமக்களைப் பற்றிய விவரம் மட்டுமன்றி கிராம மட்டம் வரை வசிக்கும் அனைவரின் விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும். NRC -க்கான தரவுகள் இதிலிருந்தே எடுக்கப்படும். எனவே NRC தயாரிப்பதற்கு NPR மிகவும் அவசியமானது. NPR மற்றும் NRC ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன. NRC உடன் CAA சட்டபூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் இவற்றுக்குள்ள இணைப்பை தெளிவு படுத்துகின்றன.

CAA, NRC மற்றும் NPR பற்றிப் பேசும் பொழுது இவை சட்டப்படி செல்லத்தக்கவைதானா? என்கிற முக்கியமான விசயம் மட்டும் விவாதிக்கப்படாமலேயே விடுபட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட குடியுரிமை சட்ட விதிகளில் NPR நடைமுறை பற்றி பேசப்பட்டாலும், இதன் மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டம் 1955-ல், எந்த ஒரு விதியிலும் NPR நடைமுறைப்படுத்துவதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. இது ஆச்சரியமானது என்றாலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

குடியுரிமைச் சட்டத்தின் 18-வது பிரிவின் (1) மற்றும் (3) துணைப் பிரிவுகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள NPR குறித்த விதிகள் மிகவும் விசித்திரமானது. குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று பிரிவு (1) தெளிவாகக் கூறுகிறது. ஆனால் NPR தயாரிப்பது பற்றி குடியுரிமைச் சட்டத்தில் எங்குமே பேசப்படவில்லை. மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டத்தில் சொல்லியிருந்தால் மட்டுமே அது பற்றிய விதிகளை உருவாக்க முடியும். விதிகள் உருவாக்குவதற்கு இது மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும். விதிகள் தனிப்பட்ட முறையில் அதிகாரம் கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை என்றால் எந்த ஒரு முக்கியமான திட்டத்தையும் இந்த விதிகளை மட்டும் கொண்டு  நடைமுறைப்படுத்த முடியாது. அதிகார முறைகேட்டுக்கு வழிவகுக்கும் இத்தகைய விதிகள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல. சட்டக் கோட்பாடுகளும் கொள்கைகளும் போதுமான அளவு வகுக்கப்பட்டிருந்தால் மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்கப்படுகிறது என டாடா நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது.

NPR தயாரிப்பதற்கு  குடியுரிமைச் சட்டம் 1955 இல் இடமில்லை என்பதே உண்மை. எனவே அதற்கான விதிகளையும் வகுக்க முடியாது. அதற்கான சட்டக் கொள்கைகளும் கோட்பாடுகளும் முதலில் வகுக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் விதிகளை வகுக்க முடியும். இதுதான் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும். விதிகள் என்பவை துணைச் சட்டமாகும், அவை மூலச் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.

மூலச்சட்டத்திற்குப் புறம்பாக விதிகள் இருந்தால் அவை முறைகேடானவை எனக்கூறி நீதிமன்றம் அவற்றை இரத்து செய்து விடும். அரசுத் துறைகள் இந்த விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மூலச்சட்டத்திலிருந்தே பெறுகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்து மூலச்சட்டத்தில் இடமில்லை என்றால் அது குறித்த விதிகளை உருவாக்க அரசுத் துறைகளுக்கு அதிகாரமில்லை.

NPR தொடர்பான விதிகள் பாரதூரமான குறைபாடுகளைக் கொண்டதாகவே உள்ளது. விதிகள் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்தே இக்குறைபாடுகள் நீடிக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டதாலேயே இவ்விதிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்துவிட முடியாது. மூலச் சட்டத்தில் வழிவகை செய்தால் மட்டுமே இக்குறைபாடுகளை சரி செய்ய முடியும்.


கட்டுரையாளர் : P.D.T Achary
தமிழில் : 
ஊரான்
நன்றி :  தி வயர். 

குறிப்பு : P.D.T ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் அரசியலமைப்பு நிபுணர் ஆவார்.