Wednesday, November 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 381

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

ரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றிவிட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

‘’தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்‌ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையிதோ இல்லியோ நிகழ்ச்சியோட பேரக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி ‘’மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், ‘’கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’ என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர கலகம் செய்தனர். ‘’எக்ஸாம் ஸ்ட்ரசுக்கா நடத்துறியா? எலெக்சன் ஓட்டுக்கா நடத்துறியா?’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். முற்போக்கு மாணவர்களுக்கு ஆதரவாக, கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கரவொலியும் விசில் சத்தமும் காதை பிளந்தது. மோடியின் நேரலை நிகழ்வும் அத்தோடு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலைந்து சென்றனர்.

அரசு அதிகாரத்தை முறைகேடான நோக்கத்துக்கு பயன்படுத்த எத்தனிக்கிறது, மோடி அரசு. சங்கிகள் கொண்டையை மறைத்துவிட்டு வந்தாலும் தப்ப முடியாது என வச்சி செய்திருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்.  கல்லூரியின் பெயரில் மட்டுமல்ல; பார்ப்பன எதிர்ப்பு மரபில் வந்தவர்கள் நாங்கள் என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். மோடிக்கு தமிழகத்தில் எங்கும் இடமில்லை.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்,
திருச்சி. தொடர்புக்கு: 99431 76246


இதையும் பாருங்க

எலே எங்க வந்து நடத்துற ரத யாத்திரை !

மறுபிறவி எடுத்த தாயின் ஆன்மா ! மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் இறுதிப் பகுதி !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 58

மாக்சிம் கார்க்கி

அன்பார்ந்த நண்பர்களே,

சோவியத் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக தாய் நாவல் தொடரை வெளியிட்டோம். அந்த தொடர் இன்றுடன் முடிகிறது. அக்டோபர் 12, 2018 அன்று ஆரம்பித்த தொடர் இந்த கடைசி பாகத்துடன் சேர்த்து மொத்தம் 74 பாகங்கள் வெளி வந்திருக்கிறது. படிப்பதற்கு தோதான வடிவமைப்பு, படங்களுடன் இந்நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இலக்கியம் வழியாக அரசியலை அறிமுகம் செய்வதற்கு இந்த நாவல் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இந்நாவலின் மாந்தர்கள் வெறுமனே ஒரு இலக்கியத்தில் உருவான பாத்திரங்கள் அல்ல. அவர்கள் பொதுவுடமைக் கட்சியின் வரலாற்றில், புரட்சிக்கான போராட்டத்தில் பங்கேற்ற நிஜ மனிதர்கள். ஆகவே அனைவரும் இதை அவசியம் படிக்க வேண்டும். படிக்காதோர் கண்டிப்பாக படிக்க வேண்டும். புதியவர்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவும் வேண்டும்.

தாய் நாவல் குறித்து உங்கள் கருத்துக்கள், நினைவுகள், அனுபவங்களை எழுதி அனுப்பலாம். தெரிவு செய்யப்படும் பதிவுகள் வெளியிடப்படும். விரைவில் அடுத்த நாவல் தொடரை வெளியிடுகிறோம். நன்றி!

வாழ்த்துக்களுடன்
வினவு

தாய் தெருவுக்கு வந்தவுடன், குளிர்ந்து விறைக்கும் வாடைக்காற்று அவளது உடம்பை இறுகப் பிணைத்து அவளது நாசியைத் துளைத்தது; ஒருகணம் மூச்சையே திணற அடித்தது. அவள் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். பக்கத்து மூலையில் தொளதொளத்த தொப்பியோடு ஒரு வண்டிக்காரன் நின்றுகொண்டிருந்தான். அதற்கு அப்பால் தெருக்கோடியில் கூனிக்குறுகி தனது தலையை உள்ளிழுத்து தோள்களுக்குள் புதைந்தவாறே ஒரு மனிதன் நடந்து சென்றான்; அவனுக்கும் அப்பால் ஒரு சிப்பாய் தன் செவிகளைத் தேய்த்து விட்டவாறே ஓடிக்கொண்டிருந்தான்.

“அந்த சிப்பாயை எங்காவது கடைக்கு அனுப்பியிருப்பார்கள்” என்று அவள் எண்ணினாள். எண்ணிக்கொண்டே, தனது காலடியில் நசுங்கி நொறுங்கும் பனிக்கட்டிகளின் சத்தத்தைக் கேட்டவாறே நடந்து போனாள். அவள் ரயில் நிலையத்துக்கு நேரங்காலத்தோடேயே வந்து சேர்ந்துவிட்டாள். அழுக்கும் அசுத்தமும் அடைந்திருந்த மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் அறையில் ஒரே ஜனக்கூட்டமாக இருந்தது. அங்கிருந்த தொழிலாளர்களை எல்லாம் குளிர் உள்ளே அடித்து விரட்டியிருந்தது. வண்டிக்காரர்களும், வீடு வாசலற்று கந்தல் கந்தலான உடையணிந்த அனாதைகளும் அங்கு நிறைந்திருந்தார்கள். அங்கு பிரயாணிகளும் இருந்தார்கள். சில விவசாயிகள், மென்மயிர்க்கோட் அணிந்த கொழுத்த வியாபாரி ஒருவன், ஒரு மதகுரு, அம்மைத் தழும்பு முகங்கொண்ட அவரது மகள், ஐந்தாறு சிப்பாய்கள், நிலை கொள்ளாது தவிக்கும் சில அங்காடிக்காரர்கள். இவர்கள்தான் அங்கிருந்தார்கள்.

ஜனங்கள் தேநீர் குடித்தார்கள், புகைபிடித்தார்கள்; ஓட்கா அருந்தினார்கள், சளசளத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிற்றுண்டிச்சாலையின் அருகே யாரோ குபுக்கென்று வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்களது தலைக்கு மேலாக புகைச் சுழல் வட்டமிட்டுச் சுழன்றது. கதவுகளைத் திறக்கும்போது அவை முனகிக் கீச்சிட்டன. கதவுகளை அடைக்கும்போது ஜன்னல் கண்ணாடிகள் நடுநடுங்கி கடகடத்து ஒசை செய்தன. அந்த அறையிலே சுருட்டு நாற்றமும் கருவாட்டு நாற்றமுமே நிறைந்திருந்தன.

தாய் வாசல் பக்கத்தில் ஓர் எடுப்பான இடத்தில் உட்கார்ந்து காத்திருந்தாள். எப்போதாவது கதவு திறக்கப்பட்டால் அவளது முகத்தில் குளிர்ந்த காற்று உறைக்கும். அந்தக் குளிர் அவளுக்கு இன்பம் அளித்தது. அப்படிக் காற்று உறைக்கும் போதெல்லாம் அவள் அதை இழுத்து சுவாசித்து அனுபவித்தாள். ஜனங்கள் பெரும்பாலோர் மூட்டை முடிச்சுகளோடும் கனத்த மாரிக்காலத் துணிமணி அணிந்து உள்ளே வந்தார்கள். அவர்கள் கதவு வழியே நுழைய முடியாமல் திண்டாடினார்கள்; திட்டிக்கொண்டார்கள். தரைமீதோ பெஞ்சின் மீதோ சாமான்களைத் தாறுமாறாகப் போட்டுவிட்டு, தமது கோட்டுக் காலரிலும் கைகளிலும் தாடி மீசைகளிலும் படிந்துகிடக்கும் பனித்துகள்களைத் தட்டிவிட்டார்கள்.

ஒரு தோல் பெட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு ஓர் இளைஞன் உள்ளே வந்தான், சுற்றுமுற்றும் பார்த்தவாறே அவன் தாயை நோக்கி நேராக வந்தான்.

“மாஸ்கோவுக்கா?” என்று கேட்டான்.

”ஆமாம். தான்யாவைப் பார்க்கப் போகிறேன்” என்றாள் அவள்.

“ஆஹா”

அவன் அந்தத் தோல் பெட்டியை அவளருகிலே பெஞ்சின் மீது வைத்தான், சிகரெட்டைப் பற்ற வைத்தான். தன் தொப்பியை உயர்த்தி வைத்தான். அடுத்த வாசல் வழியாகச் சென்று மறைந்தான். தாய் அந்தக் குளிர்ந்துபோன தோல் பெட்டியைத் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். பிறகு அதன் மீது முழங்கையை ஊன்றிச் சாய்த்தவாறே திருப்தியுணர்ச்சியோடு தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களைப் பார்த்தாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் அந்த இடத்தைவிட்டு எழுந்து வெளிவாசல் புறத்துக்கு அருகிலுள்ள பெஞ்சை நோக்கி நடந்தாள். அவள் தலையை நிமிர்த்தித் தன்னைக் கடந்து செல்பவரின் முகங்களைக் கவனித்தவாறே அந்தத் தோல் பெட்டியைக் கையில் சுமந்து கொண்டே நடந்து சென்றாள். பெட்டி ஒன்றும் அவ்வளவு பெரியதாகவோ கனமாகவோ இல்லை.

ஓர் இளைஞன் தனது குட்டையான கோட்டின் காலரைத் தூக்கி விட்டவாறே தாயின் மீது மோதினான். அவன் தன் கையால் தலையைத் தடவியவாறே பேசாமல் ஒதுங்கிச் சென்றான். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனை எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது. அவள் திரும்பிப் பார்த்தாள். அவனும் தனது வெளுத்த கண்களால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கூரிய பார்வை அவளது நெஞ்சைக் கத்தி போலக் குத்தியது, தோல் பெட்டியைப் பிடித்திருந்த அவளது கரம் பலமிழந்து தள்ளாடியது. திடீரென்று அந்தப் பெட்டியின் கனம் அதிகரித்துவிட்டது போல் தோன்றியது.

”இவனை நான் இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறேனே” என்று யோசித்தாள் அவள். தனது இதயத்திலே தோன்றிய புழுக்க உணர்ச்சியை அவள் வெளியேற்றிவிட முனைந்தாள். தனது இதயத்தை மெதுவாக, எனினும் தவிர்க்க முடியாதபடி உறையச் செய்யும் அந்த உணர்ச்சியை அலசி ஆராய அவள் விரும்பவில்லை. அதை ஒதுக்கித் தள்ளினாள். ஆனால் அந்த உணர்ச்சியோ விம்மி வளர்ந்து அவளது தொண்டைக் குழி வரையிலும் முட்டி மோதி அவளது வாயில் ஒரு வறண்ட கசப்புணர்ச்சியை நிரப்பியது. அவள் தன்னை அறியாமலேயே அந்த மனிதனை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு ஆளானாள். அவள் திரும்பினாள். அவன் அதே இடத்தில் கால் மாறி நின்று கொண்டு ஏதோ செய்ய எண்ணுவது போலவும் நின்று கொண்டிருந்தான். அவனது வலது கை கோட்டுப் பித்தான்களுக்கிடையில் நுழைந்து போயிருந்தது. இடது கை கோட்டுப் பைக்குள் இருந்தது. எனவே அவனது வலது தோள் இடது தோளைவிட உயர்ந்ததாகத் தோன்றியது.

அவள் பெஞ்சை நோக்கிச் சென்று மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் தன்னுள் உள்ள எதுவோ நொறுங்கிப் போய்விடும் என்ற பயத்தோடு உட்காருவது போல் ஓரிடத்தில் அமர்ந்தாள். வரும் துன்பத்தை உணர்த்தும் கூரிய முன்னுணர்வினால் கிளரப்பட்ட நினைவில், இரண்டு முறை அம்மனிதனைப் பார்த்ததாக திடுமென்று அவளுக்கு நினைவு வந்தது. ரீபின் தப்பியோடும்போது நகரின் கோடியிலுள்ள வெட்டவெளி மைதானத்தில் அவனை ஒருமுறை அவள் கண்டிருக்கிறாள். இரண்டாவது முறையாக அவனை விசாரணையின்போது பார்த்திருக்கிறாள். ரீபின் தப்பியோடும் போது தன்னை விசாரித்த போலீஸ்காரனுக்குத் தப்பான வழியைச் சுட்டிக் காட்டினாள். அந்தப் போலீஸ்காரனும் நீதிமன்றத்தில் இவன் பக்கத்தில் அப்பொழுது நின்று கொண்டிருந்தான். சரிதான். தன்னைப் பின்தொடர்ந்துதான் அவன் வருகிறான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். தெளிவாக அறிந்து கொண்டாள்.

“அகப்பட்டுவிட்டேனா?” என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் தன்னுள் நடுங்கிக்கொண்டே அதற்குப் பதிலும் கூறிக்கொண்டாள்.

”இன்னும் அகப்படவில்லை.”

ஆனால் உடனேயே அவள் பெரு முயற்சி செய்து மீண்டும் தனக்குள் உறுதியோடு சொல்லிக் கொண்டாள்:

”அகப்பட்டுவிட்டேன்!”

அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்; ஆனால் எதுவும் அவள் கண்ணில் படவில்லை. அவள் மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பளிச்சிட்டுத் தோன்றின.

“இந்தத் தோல் பெட்டியை விட்டுவிட்டு நழுவிவிடலாமா?”

இந்த எண்ணத்தை மீறி இன்னொரு எண்ணம் பளிச்சிட்டது.

”என்னது? என் மகனது வாசகங்களை நிராகரித்துவிட்டுச் செல்வதா? இவர்கள் போன்றவர்களிடம் விட்டுவிட்டுச் செல்வதா?”

அவள் பெட்டியை இறுகப் பிடித்தாள்.

“இதையும் தூக்கிக்கொண்டே போய்விடலாமா? ஓடி விடலாமா?”

இந்த எண்ணங்கள் எல்லாம் அவளுக்கு அன்னியமாய்த் தோன்றின. யாரோ வேண்டுமென்றே இந்த எண்ணங்களைத் தன் மனத்தில் திணிப்பது போல் இருந்தது. அவை அவளது மனக்குகையிலே எரிந்து கனன்றன; ஊசி முனைகளைப் போல் அவளது நெஞ்சைத் துளைத்தன. அந்த வேதனையுணர்ச்சியால் அவள் தன்னை மறந்தாள். தனக்கு அருமையான சகலவற்றையும், பாவெலையும்கூட மறந்தாள். ஏதோ ஒரு பகைச் சக்தி அவளது தோள்களையும் நெஞ்சையும் அழுத்திக்கொண்டு அவளை மரண பயத்துக்கு ஆளாக்குவது போலிருந்தது. அவளது நெற்றிப்பொட்டிலுள்ள ரத்தக் குழாய்கள் படபடத்துத் துடித்தன. அவளது மயிர்க்கால்களில் உஷ்ணம் பரவுவது மாதிரி இருந்தது.

திடீரென்று அவள் பெருமுயற்சி செய்து தன் எண்ணங்களையெல்லாம் கேவலமானதாக, வலுவற்றதாகக் கருதி அவற்றை மிதித்து ஒதுக்கினாள். தனக்குத் தானே கம்பீரமாகச் சொல்லிக்கொண்டாள்:

”உனக்கு வெட்கமாயில்லை?”

இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அவள் தெளிவடைந்தாள். அவள் மனத்தில் தைரியம் குடிபுகுந்தது. தனக்குள் பேசிக்கொண்டாள்:

”உன் மகனை இழிவுபடுத்தாதே. இதற்குப் போய் யாராவது பயப்படுவார்களா?”

அவளது கண்களில் யாரோ ஒருவனின் சோகமான மங்கிய பார்வை பட்டது. அவளது மனத்தில் ரீபினின் முகம் தோன்றியது. சில கணநேரத் தயக்கத்துக்குப் பின்னர் அவளது உள்ளமும் உடலும் நிதானத்துக்கு வந்தன, இதயத்துடிப்பு சமனப்பட்டது.

“இப்போது என்ன நடக்கும்?” என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தவாறே எண்ணிக்கொண்டாள்.

அந்த உளவாளி ஸ்டேஷன் காவல்காரனைக் கூப்பிட்டு அவனிடம் அவளைக் கண்ணால் சுட்டிக்காட்டி ஏதோ ரகசியமாகக் கேட்டான். அந்தக் காவலாளி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போனான். இன்னொரு காவலாளி வந்தான். அவனிடமும் அவன் ரகசியம் பேசினான். அதைக் கேட்டு அவன் முகத்தைச் சுழித்தான். அவன் ஒரு கிழவன், நரைத்த தலையும் சவரம் செய்யாத முகமும் கொண்டவனாகத் தோன்றினான். அவன் அந்த உளவாளியை நோக்கித் தலையை ஆட்டிவிட்டு, தாய் அமர்ந்திருந்த பெஞ்சை நோக்கி வந்தான்.

அந்த உளவாளி அதற்குள் மறைந்து போய்விட்டான்.

அந்தக் காவலாளி நிதானமாக அவளிடம் வந்து அதிருப்தியுணர்ச்சியோடு தாயைப் பார்த்தான். அவள் பெஞ்சிலிருந்தவாறே குன்றிக் குறுகினாள்.

“இவர்கள் என்னை மட்டும் அடிக்காமலிருந்தால்!” என்று எண்ணினாள்.

அவன் அவள் முன் நின்றான். ஒரு நிமிஷம் பேசாது நின்றான், கடுமையாகச் சொன்னான்:

“நீ என்ன பார்க்கிறாய்?”

“ஒன்றுமில்லை.”

“அப்படியா? திருடி! இந்த வயசிலுமா திருட்டுப்புத்தி?”

அந்த வார்த்தைகள் அவளது முகத்தில் ஓங்கியறைந்தன. ஒருமுறை – இரு முறை அந்தக் குரோதத் தாக்குதல் அவளது தாடையையே பெயர்த்து, கண்களைப் பிதுங்கச் செய்வது மாதிரி வேதனை அளித்தது.

”நானா? நான் ஒன்றும் திருடியில்லை. பொய் சொல்கிறாய்” என்று தன்னால் ஆனமட்டும் உரத்த குரலில் கத்தினாள் அவள். அவமானத்தின் கசப்பாலும், கோபவெறியின் சூறாவளியாலும் அவளது சர்வ நாடியுமே கதிகலங்கிப் போயின. அவள் தோல் பெட்டியை உலுக்கித் திறந்தாள்.

”பாருங்கள்; எல்லோரும் பாருங்கள்!” என்று கத்திக்கொண்டே அவள் துள்ளியெழுந்தாள். அவளது கைகளில் ஒரு கத்தைப் பிரதிகளை எடுத்துக்கொண்டு தலைக்கு மேலே உயர்த்தி ஆட்டிக் காட்டினாள்.

அவளை நோக்கி நாலா திசைகளிலிருந்தும் ஓடி வரும் ஜனங்களின் பேச்சுக்குரல் அவளது காதின் இரைச்சலையும் மீறிக் கேட்டது.

“என்ன நடந்தது?”

“அதோ அங்கே – ஓர் உளவாளி.”

”என்ன அது?”

“இவளை அவர்கள் திருடியென்கிறார்கள்.”

”பார்த்தாலே கண்ணியமானவளாய்த் தெரிகிறதே! இவளையா? ச்சூ! ச்சூ!”

”நான் திருடியல்ல” என்று உரத்தக் குரலில் சத்தமிட்டாள் தாய். தன்னைச் சுற்றி சூழ்ந்த ஜனக்கூட்டத்தைக் கண்டு அவளுக்கு ஓரளவு அமைதி ஏற்பட்டது.

”நேற்று அரசியல் குற்றவாளிகள் சிலரை விசாரணை செய்தார்கள். அந்தக் குற்றவாளிகளில் என் மகனும் ஒருவன். அவன் பெயர் விலாசவ். அவன் அங்கு ஒரு பிரசங்கம் செய்தான். இதுதான் அந்தப் பேச்சு அதை நான் மக்களிடம் வழங்கப் போகிறேன். அவர்கள் இதைப் படிக்கட்டும். உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும்…”

யாரோ மிகுந்த ஜாக்கிரதையோடு அவள் கையிலிருந்து ஒரு பிரதியை உருவிப் பிடுங்கினார்கள். அவள் அவற்றை மேலே உயர்த்தி ஆட்டிக் கொண்டே, ஜனக்கூட்டத்தில் விட்டெறிந்தாள்.

”இதற்கு உனக்குச் சரியான தண்டனை கிடைக்கும்” என்று யாரோ, கூட்டத்திலிருந்து பயந்த குரலில் சத்தமிட்டார்கள்.

ஜனங்கள் அந்தப் பிரதிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்துத் தமது கோட்டுகளுக்குள்ளும் பாக்கெட்டுகளுக்குள்ளும் மறைத்துக் கொள்வதைக் கண்டாள். இதைக் கண்டவுடன் அவளுக்கு மீண்டும் உறுதி பிறந்தது. அசையாமல் நின்றாள். அவள் அமைதியோடு அழுத்தத்தோடு பேசினாள். அவளது இதயத்தினுள்ளே ஓங்கி வளரும் இன்பத்தையும் பெருமிதத்தையும் உணர்ந்தாள். பேசிக்கொண்டே பெட்டியிலிருந்து அந்தப் பிரதிகளை வாரியெடுத்து அங்குமிங்கும் கைகளை நீட்டிப் பிடிப்பதற்காகத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்தை நோக்கி விட்டெறிந்தாள்.

”என் மகனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள் தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு தாயின் இதயத்தை, என் போன்ற ஒரு கிழவியின் பேச்சை நீங்கள் நம்ப முடியும் அல்லவா? அவர்களை விசாரணைக்குக் கொண்டு வந்தது ஏன்? எல்லோருக்கும் அவர்கள் உண்மையை எடுத்துக் கூறியதற்காகத்தான். அந்த உண்மையை மறுத்துப் பேச ஒருவன்கூட இல்லை என்று நேற்று நான் உணர்ந்தேன்.”

கூட்டம் அவளைச் சுற்றி அமைதியோடு பெருகியது. வட்டமிட்டுச் சூழ்ந்து நின்றது.

“வறுமை, பசி, பிணி — தங்களது உழைப்புக்கு பிரதியாக, மக்களுக்கு இவைதான் கிடைக்கின்றன. சகல விஷயங்களுமே நமக்கு எதிராக இயங்குகின்றன. நமது வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு நாளும், நமது கடைசி மூச்சுவரை, இறுதி பலத்தையும் நமது உழைப்புக்காக அர்ப்பணம் செய்வதால் எப்போதும் நாம் அழுக்கடைந்து அவர்களால் ஏமாற்றவும்படுகிறோம். நாம் பெற வேண்டிய இன்பத்தையும், நலன்களையும் மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள். சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நாய் மாதிரி நம்மை அவர்கள் அறியாமையில் ஆழ்த்தியுள்ளார்கள் – நமக்கு எதுவுமே தெரிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் பயப்படுகிறோம் – நாம் எதையும் தெரிந்து கொள்ளவே அஞ்சுகிறோம். நமது வாழ்க்கையே விடியாத இருள் நிறைந்த இரவாகப் போய்விட்டது!”

”சரிதான்” என்று ஒரு மங்கிய குரல் எதிரொலித்தது.

“அவளது வாயை மூடு!”

கூட்டத்திற்குப் பின்னால் அந்த உளவாளியும் இரண்டு போலீஸ்காரர்களும் வருவதை தாய் கண்டுவிட்டாள். அவள் அவசர அவசரமாக மிஞ்சியிருந்த பிரதிகளை விநியோகிக்க முனைந்தாள். ஆனால் அவளது கை தோல் பெட்டியைத் தொட்டபோது, அவளது கையோடு யாரோ ஒருவனின் கையும் மோதியது.

”எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக் கொள்ளுங்கள்” என்று குனிந்து கொண்டே சொன்னாள் அவள்.

“கலைந்து போங்கள்!” என்று சத்தமிட்டுக்கொண்டே போலீஸ்காரர்கள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஜனங்கள் வேண்டா வெறுப்பாக வழிவிட்டு, அந்தப் போலீஸ்காரர்களை முன்னேற விடாமல், தம்மையறியாமலேயே அவர்களை நெருக்கித் தள்ளினார்கள். அன்று விரித்த பிரகாசமான கண்களோடு அந்த அன்புருவான கிழவியைக் கண்டு எல்லாரும் தவிர்க்க முடியாதபடி கவர்ச்சி கொண்டார்கள். வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் ஒட்டின்றிப் பிளந்து போயிருந்த அந்த ஜனங்கள், அந்தப் பொழுதில் தாங்கள் அனைவரும் ஒரே இனமாக மாறிவிட்டது போல் உணர்ந்தார்கள். அந்த உத்வேகமான வார்த்தைகளை ஆழ்ந்த மன உணர்ச்சியோடு கேட்டார்கள். அந்த வார்த்தைகள்தான் வாழ்க்கையில் அநீதியால் துன்பத்துக்காளான எண்ணற்ற இதயங்கள் எவ்வளவோ காலமாகத் தேடித் திரிந்த வார்த்தைகளாக ஒலித்தன. தாய்க்கு அருகில் நின்ற ஜனங்கள் மெளனமாக நின்றார்கள். அவளையே விழுங்கிவிடுவதுபோல் இமை கொட்டாமல் பார்த்தார்கள். அவர்களது உஷ்ண மூச்சுக் காற்றுக் கூடத் தன் முகத்தில் உறைப்பதை அவள் உணர்ந்தாள்.

“ஏ, கிழவி, போய்விடு!”

“அவர்கள் உன்னை ஒரு நிமிஷத்தில் பிடித்துவிடுவார்கள்.”

“இவளுக்குத்தான் என்ன தைரியம்!”

“போங்கள் இங்கிருந்து! கலைந்து போங்கள்!” என்று கத்திக்கொண்டே போலீஸ்காரர்கள் மேலும் நெருங்கி வந்தார்கள். தாய்க்கு எதிராக நின்ற ஜனங்கள் ஆடியசைந்து ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தன்னை நம்பவும், தான் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் தயாராயிருப்பதாகத் தோன்றியது. எனவே அவள் அவசரமாக, தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையும், தனது அனுபவத்தால் கண்டறிந்த சகல எண்ணங்களையும் அவர்களுக்குச் சொல்லித் தீர்த்துவிட எண்ணினாள். அந்த எண்ணங்கள் அவளது இதயத்தின் அடித்தளத்திலிருந்து லாவகமாகப் பிறந்தெழுந்து, கவிதா சொரூபமாக இசைத்துக்கொண்டு வெளியேறின. ஆனால் அந்தக் கவிதையை தன்னால் பாடிக்காட்ட முடியவில்லையே என்று அவள் வேதனைப்பட்டாள். அவளது குரல் நடுநடுங்கி உடைந்து கரகரத்து ஒலித்தது.

“தனது ஆன்மாவை விற்றுவிடாத ஒரு தொழிலாளியின் நேர்மை நிறைந்த பேச்சுத்தான் என் மகனின் பேச்சு. நேர்மையான வாசகம்! அந்த வாசகத்தின் தைரியத்தைக் கொண்டே நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள்?”

ஒரு இளைஞனது இரண்டு கண்களும் அவளைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்துக்கொண்டேயிருந்தன.

யாரோ அவளது மார்பில் தாக்கினார்கள். அவள் பெஞ்சின் மீது விழுந்தாள். ஜனக்கூட்டத்துக்கு மேலாக போலீஸ்காரர்களின் கைகள் தெரிந்தன. ஜனங்களைத் தோளைப் பிடித்தும் கழுத்தைப் பிடித்தும் தள்ளிக்கொண்டும் தொப்பிகளைப் பிடுங்கியெறிந்து கொண்டும் அவர்கள் முன்னேறி வந்தார்கள். தாயின் கண்களில் எல்லாமே இருண்டு மங்கித் தோன்றின. அவள் தனது ஆயாசத்தை உள்ளடக்கி வென்று கொண்டே, தனது தொண்டையில் மிஞ்சி நின்ற சக்தியோடு உரத்துக் கத்த முனைந்தாள்.

”ஜனங்களே! ஒன்று திரளுங்கள் ஓரணியில் பலத்த மாபெருஞ் சக்தியாகத் திரண்டு நில்லுங்கள்!”

ஒரு போலீஸ்காரன் தனது கொழுத்த பெருங்கையினால் அவளது கழுத்தை எட்டிப்பிடித்து உலுக்கினான்:

“வாயை மூடு!”

அவளது தலை சுவரில் மோதியது. ஒரு கணநேரம் அவளது இதயத்தில் பயம் சூழ்ந்து இருண்டது. ஆனால் மறுகணமே அந்தப் பயம் நீங்கி ஒரு ஜோதி வெள்ளம் பொங்கியெழுந்து அந்த இருளை அப்பால் துரத்தியடித்தது.

“போ, போ” என்று சொன்னான் அந்தப் போலீஸ்காரன்.

“எதைக் கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்! நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையைவிட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப் போவதில்லை …”

“வாயை மூடு. நான் சொல்லுகிறேன், வாயை மூடு”

அந்தப் போலீஸ்காரன் அவள் கையைப் பிடித்து, வெடுக்கென்று இழுத்தான். இன்னொரு போலீஸ்காரன் அவளது மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டான். இருவருமாக அவளை இழுத்துச் சென்றனர்.

“உங்களது இதயத்தையே தின்று கொண்டிருக்கும் கசப்பைவிட தினம் தினம் உங்களது நெஞ்சையே சுவைத்துக் கடிக்கும் கொடுமையை விட…”

அந்த உளவாளி அவளை நோக்கி ஓடி வந்தான். தனது முஷ்டியை அவளது முகத்துக்கு நேராக உயர்த்திக் காட்டிக் கத்தினான்:

“ஏ, நாயே! வாயை மூடு!”

அவளது கண்கள் அகன்று விரிந்து பிரகாசித்தன. அவளது தாடை துடிதுடித்தது. வழுக்கலான கல் தரையின் மீது காலைப் பலமாக ஊன்றிக்கொண்டு அவள் மேலும் கத்தினாள்:

”அவர்கள் மறு பிறவி எடுத்த என் ஆத்மாவைக் கொல்லவே முடியாது.”

”ஏ நாயே!”

அந்த உளவாளி அவளது முகத்தில் அறைந்தான்.

“வேண்டும், அந்தக் கிழவிக்கு!” என்று யாரோ வெறுப்போடு கத்தினார்கள்.

ஒரே கணத்தில் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்த ஏதோ ஒன்றால் அவள் கண்கள் இருண்டன. ரத்தத்தின் உப்புக்கரிக்கும் ருசி அவள் வாயில் தட்டுப்பட்டது.

அவளைச் சுற்றிலும் எழுந்த ஆவேசக் குரல்களால் தாய் மீண்டும் உணர்ச்சி பெற்று விழிப்புற்றாள்.

“அவளைத் தொடாதே!”

“வாருங்களடா பயல்களா!”

“டே போக்கிரி, உன்னைத்தான்!”

”அவனை உதையடா!’

“அவர்கள் நம் அறிவை ரத்தமயமாக்க முடியாது!”

”அவர்கள் அவளைப் பின்னாலிருந்து கழுத்தில் கைகொடுத்துத் தள்ளினார்கள்; அவளது தலையிலும் தோளிலும் அறைந்தார்கள். கூச்சலும் கும்மாளமும் அலறலும் விசில் சப்தமும் ஒன்றோடொன்று எழும்பியொலித்த குழப்பத்தில் அவள் கண் முன்னால் பளிச்சிட்டுத் தோன்றி எல்லாம் சுழல ஆரம்பித்தன; அந்தக் கூக்குரல்கள் அவள் காதைச் செவிடுபடச் செய்தன. அவளது தொண்டை அடைத்தது, திணறியது; அவளது காலடியிலே இருந்த நிலம் நழுவி இறங்கியது. அவள் கால்கள் தள்ளாடின. உடம்பு வேதனையின் குத்தல் உணர்ச்சியால் பளுவேறி உழலாடி, ஆதரவற்றுத் தடுமாறியது. எனினும் அவளது கண்கள் மட்டும் தமது பிரகாசத்தை இழக்கவில்லை. அந்தக் கண்கள் மற்ற கண்களை நெருப்பாகக் கனன்றெரியும் கண்களை, தனக்குப் பழக்கமான துணிவாற்றலின் ஜோதியோடு ஒளி செய்யும் கண்களை, தனது இதயத்துக்கு மிகவும் அருமையாகத் தோன்றிய கண்களைக் கண்டு களித்தன.

அவர்கள் அவளை வாசற்புறமாகத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

அவள் ஒரு கையைப் பிடுங்கி விடுவித்துக்கொண்டு கதவின் கைப்பிடியை எட்டிப் பிடித்தாள்.

“இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது!”

அவர்கள் அவள் கையில் பட்டென்று அறைந்தார்கள்.

”ஏ, முட்டாள்களே நீங்கள் வீணாக எங்கள் பழியைத்தான் தேடிக் கொள்கிறீர்கள். உங்களது கொடுமைகளெல்லாம் ஒரு நாள் உங்கள் தலையிலேயே வந்து விடியப்போகின்றன!”

ஒரு போலீஸ்காரன் அவளது தொண்டையைப் பிடித்து அவளது குரல்வளையை நெரித்துத் திணறடித்தான்.

”அதிருஷ்டங்கெட்ட பிறவிகளே!” என்று அவள் திணறினாள்.

யாரோ ஓர் உரத்த தேம்பலால் அதற்குப் பதில் அளித்தார்கள்.

(முற்றும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? – ‍மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

வசரநிலை காலத்தில், இந்திரா காந்தியின் மத்திய அரசு அரசமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்திருந்தது (suspended fundamental rights); விசாரணை இன்றி சிறையில் அடைக்கும் “மிசா” சட்டத்தின் கீழ் ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட ஆயிரக் கணக்கானோரை சிறையில் அடைத்தது; சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சட்டப்படி அடைக்கப்பட்டார்களா என்ற கேள்வியை ஆட்கொணர்வு ரிட் மனுவில் உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ விசாரிக்க முடியுமா என்ற வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

நீதிபதி H.R.கன்னா

அதில் நான்கு நீதிபதிகள், அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். ஆனால், நீதிபதி H.R.கன்னா மட்டும் அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 21 வழங்கும் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையும் தனிநபர் சுதந்திரமும் ஒவ்வொரு மனிதனும் பெற்ற இயற்கையான உரிமைகள் என்பதால் மற்ற அடிப்படை உரிமைகளை அவசரநிலை காலத்தில் நிறுத்தி வைக்கலாமே ஒழிய, மனித சமூகம் பெற்ற இந்த இயற்கையான உரிமைகளை எந்த அரசும் நிறுத்தி வைக்க முடியாது என்றார். இதனால் மூத்த நீதிபதியான அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டு அவருக்கு இளைய நீதிபதி தலைமை நீதிபதியாக்கப்பட்டார்.

இதனை கண்டிக்கும் விதமாக H.R.கன்னா உச்சநீதிமன்ற நீதிபதி பதவியையே துறந்தார். மனித உரிமை காப்பாளர் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக உறுதியாக நின்றவர் என சமூகம் — குறிப்பாக நீதித்துறையை சார்ந்தவர்கள் — அவரை இன்றும் கொண்டாடுகிறது. 42 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிபதி H.R.கன்னாவின் தீர்ப்பே சரியானது என்று வரலாற்று சிறப்பான தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கன்னாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 10-01-2019 அன்று தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு (collegium) பரிந்துரைத்தது என்றும், உடனே 16-01-2019 அன்று மத்திய அரசு அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.

சஞ்சய் கன்னா, மேற்சொன்ன H.R.கன்னாவின் சகோதரரின் மகன். டில்லி உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 3 மூத்த நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டு, நான்காவது இடத்தில் இருக்கும் சஞ்சய் கன்னாவிற்கு இப்பதவி கொடுக்கப்படுகிறது. இது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியை துறந்த H.R.கன்னாவிற்கு செய்யும் அவமரியாதை.

இந்த 3 மூத்த நீதிபதிகளில் இருவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக உள்ளனர். சஞ்சய் கன்னா தலைமை நீதிபதியாகவே ஆகவில்லை.

படிக்க:
♦ நீதித்துறையை மிரட்டும் மோடி அரசு ! நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்
♦ அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்

முதல் நிலையில் இருக்கும் பிரதீப் நந்ராஜோக்-ஐ உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 12-12-2018 அன்று கூடிய தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு முடிவெடுத்தது. அந்த ஐவரில் ஒருவரான மதன் B. லோகூர் 12-12-2018-க்கு பின்னர் ஓய்வு பெற்தால் தேர்வுக்குழுவில் 5-வது நீதிபதியானார் அருண்மிஸ்ரா.

அருண்மிஸ்ராவை உள்ளடக்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு 12-12-2018 முடிவை கைவிட்டது. அருண்மிஸ்ரா தவிர்த்து மற்ற நால்வரும் 12-12-2018 மற்றும் 10-01-2019 ஆகிய இரு தேர்வுக்குழுக்களிலும் இருந்தனர்.

முன்னாள் தலைமை நீதிபதி லோதா, ஒரு தேர்வுக்குழு எடுத்த முடிவை, அதில் ஒருவர் ஓய்வு பெற்றார் என்ற நிலையில் அடுத்த தேர்வுக்குழு மாற்றுவது சரியில்லை என்று கூறியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு அடுத்த நிலையில் இருந்த 4 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் — செல்லமேஸ்வர், தற்போதைய தலைமை நீதிபதி, குரியன் ஜோசப், மதன் B. லோகூர் — ஊடகத்தை சந்தித்தது நீதித்துறை வரலாற்றில் முதல்முறை நடந்த நிகழ்வு. மத்திய அரசு விரும்பும் வகையில், அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை தீர்மானிக்க அனுப்புவதில் அவர்களுக்கு ஆட்சேபனை உள்ளது என்று ஊடக சந்திப்பில் கூறினர்.

டில்லி உயர்நீதிமன்றத்தை சேர்ந்த மூன்று மூத்த நீதிபதிகளை புறந்தள்ளி சஞ்சய் கன்னாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதை ஆட்சேபித்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் முன்னர் பணியாற்றி தற்சமயம் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் கிஷன் கவுல் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதும் சுட்டிக் காட்டப்படவேண்டும். இந்திய பார் கவுன்சிலும் இதை கண்டித்துள்ளது.

இந்த நேரத்தில், கேரளத்தை சேர்ந்த K.M.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில் மத்திய அரசின் நிலைபாட்டை கவனிக்க வேண்டும். அவர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவர். அவர் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரும் மத்திய அரசின் உத்தரவை அவர் ரத்து செய்தார். எனவே அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்தது.

K.M.ஜோசப்பை நிராகரிப்பதற்கு அவர் அகில இந்திய சீனியாரிட்டியில் 42-வது இடத்தில் இருப்பதாக காரணம் காட்டிய மத்திய அரசு, அகில இந்திய சீனியாரிட்டியில் 33-வது இடத்தில் இருக்கும் சஞ்சய் கன்னாவின் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் தந்துள்ளது.

அகில இந்திய சீனியாரிட்டியைக் காட்டிலும் மிக முக்கியமானது, உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுபவர் முதலில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியா என்பதே ஆகும்.

இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்படாத அவசரகாலநிலை (undeclared emergency) இருப்பதையும் நீதித்துறையின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதையும் தெளிவாக்குகிறது.

முகநூலில்: மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

தேழ்தா குருப்ஸ்கயா 1894-ல் ஒரு மார்க்சிய படிப்பு வட்டத்தில் லெனினை முதன் முதலில் சந்தித்தார். அப்போதே தன்னளவில் ஒரு மார்க்சிஸ்டாக ஆகியிருந்த நதேழ்தா, 1898-ல் லெனின் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டபோது உடன் சென்றார். பின் 1924-ல் லெனின் மறையும் வரை அவரது ‘வாழ்க்கைத் துணை’ ஆக இருந்தார். குருப்ஸ்கயா தனித்துவமானதும், முக்கியமான கட்சிப் பணியை தொடர்ந்து ஆற்றி வந்துள்ளார். புரட்சிக்குப் பின் சோவியத் அரசில் கல்விக்கான அமைச்சகத்தில் அனடோலிலுனாசார்ஸ்க்கியின் கீழ்துணை அமைச்சரானார். 1939-ம் ஆண்டுவரை அந்தப் பணியில் இருந்துள்ளார்.

லெனின் ஒரு மகத்தான மார்க்சிஸ்ட்டாக உருவானதை அருகிலிருந்து நோக்கிய மற்றுமொரு சக மார்க்சிஸ்ட்டான குருப்ஸ்கயா, லெனினின் கற்றல் முறையைப் பற்றி எழுதியிருப்பது அனைவருக்குமான பாடம் ஆகும். (நூலிலிருந்து பக்.3)

மார்க்சின் எழுத்துக்களை லெனின் வாசிக்கும் போது கணக்கிலடங்காத அளவு அதன் உள்ளடக்கங்களை அவர் குறிப்பெடுத்துக் கொள்வார். லெனின் கல்விக் கழகத்தில், மார்க்சின் புத்தகங்களை படித்து அவர் எடுத்திருந்த பல குறிப்பேடுகள் உள்ளன.

மார்க்சின் எழுத்துக்களை அவர் மீண்டும், மீண்டும் படித்து, குறிப்புகள் எடுத்து அதன் உள்ளீடுகளை தனது எழுத்துக்களில் கொண்டு வந்தார். மார்க்சின் எழுத்துக்களை நன்கு அறிந்தவராக மட்டும் லெனின் இருந்துவிடவில்லை. மார்க்சின் கற்பித்தல்கள் மீது தனது ஆழமான சிந்தனையையும் செலுத்தினார். “கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்” என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவது மாநாட்டில் (1920) லெனின் குறிப்பிட்டுள்ளார். “அனைத்து தரவுகளையும் – மிகக் கடினமாக உழைத்து அறிந்து கொள்ளாமல், விமர்சனப்பூர்வமாக அணுகுமுறையின்றி, ஆயத்த (Readymade) முடிவுகள் அடிப்படையில் ஒருவர் கம்யூனிசம் பேசினாரென்றால் அவர் மோசமான கம்யூனிஸ்ட் இருப்பார்”. (லெனின் தேர்வுநூல்கள் தொகுதி – XXV) (நூலிலிருந்து பக்.8)

“ஒன்றை முழுமையாக தெரிந்து கொள்ள, ஒருவர் அதுபற்றியான அனைத்து வகையான அம்சங்களையும் உள்வாங்க வேண்டும். குறிப்பிட்ட சூழலில், அதன் நிலையில் அதனூடான அனைத்து தொடர்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரால் இந்நிலையை முழுமையாக அடைய முடியாது, ஆனால் நான் கூறுவது, இது உங்களின் சோம்பலையும், தவறுகளையும் தவிர்க்க உதவும்.

இரண்டாவது, இயக்கவியல் தர்க்கமுறை படி, எடுத்துக் கொண்ட அம்சத்தின் வளர்ச்சி, தன்னியக்கம் மற்றும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். மூன்றாவதாக, உண்மையின் அடிப்படையில் குறிப்பிட்ட அம்சத்தின் மனித நடைமுறையிலான முழுமையான வரையறைக்கு வந்து, மனித தேவையின் அடிப்படையில் நடைமுறை காரணிகளின் தொடர்பை பார்ப்பது, நான்காவதாக ஹெகலை பின்பற்றும் பிளெக்னவ் சொல்ல விரும்புவது போல், இயக்கவியலின் தர்க்கமுறை கற்றுக் கொடுத்தது. “உண்மை என்பதில் அருவமானது என்று ஒன்றில்லை, உண்மை என்பது எப்போதும் திட்டமானது.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

லெனினுடன் குருப்ஸ்கயா.

இந்த வரிகள்தான் பல ஆண்டுகளாக தத்துவார்த்த கேள்விகள் குறித்து லெனினுடைய ஆய்வின் அடிப்படை சாரமாகும். அதாவது, அதில் எல்லா நேரமும் மார்க்சுடன் கலந்துரையாடி, இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் வழிமுறைகள் மூலம் கண்டடைவதாகும். அனைத்தையும் சேர்த்து பார்த்தால், இவ்வரிகளில் உள்ளது போல் செயலுக்கான வழிகாட்டியாக உள்வாங்குவதுதான் அவசியமானதாகும்.
மார்க்சை பயில லெனின் கையாண்ட முறையே, லெனினை பயில்வதற்கான முறையுமாகும். மார்க்சின் பங்களிப்பிலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒன்றுதான் லெனினின் பங்களிப்பும். அது செயல்படும் மார்க்சியம், லெனினியம் என்பது ஏகாதிபத்திய மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மார்க்சிய சகாப்தமாகும். (நூலிலிருந்து பக்.24)

நூல்: லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
ஆசிரியர்: நதேழ்தா குருப்ஸ்கயா (1869-1939)
தமிழில்: ச.லெனின்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 2433 2424
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 24
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: marinabooks | thamizhbooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

சனாதனமா ? சனநாயகமா ? தொல் திருமாவளவன் உரை | வீடியோ

‘‘சனாதனமா..? சனநாயகமா..?” என்ற தலைப்பில் “தேசம் காப்போம் மாநாடு’’  கடந்த 23.01.2019 அன்று திருச்சியில்  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய முஸ்லிம் லீக், தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் சிறப்புரையாற்றிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் சனாதன தர்மத்தை தனது உரையில் அம்பலப்படுத்தி பேசியுள்ளார். வேதங்கள், இதிகாசங்கள் தொடங்கி இன்று வரையிலும் பார்ப்பனியம் நம்மை அடிமைப்படுத்துவதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். அனைவரும் கேட்க வேண்டிய உரை. பாருங்கள்… பகிருங்கள்…

நன்றி : நக்கீரன்

மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் !

ந்திய பிரதமராக நரேந்திர மோதி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து எந்த பெரிய பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

உண்மை என்ன? அரசு தரவுகள் மற்றும் சுதந்திரமாக பெற்ற தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் 2014-ம் ஆண்டுக்குப் பின் பல பயங்கரவாத சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. இந்த கால இடைவெளியில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் இரண்டு தாக்குதல்கள் மிகப் பெரியவை என அரசுத் தரவுகளே கூறுகின்றன.

இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில், 2009- 2014 கால கட்டங்களில் தாக்குதல் சம்பவங்கள் மெல்ல குறைந்து வந்துள்ளன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பின் அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

2018-ம் ஆண்டில்தான், அதிகளவிலான மக்கள் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களில் பலியாகி உள்ளனர். அதாவது 451 பேர். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கைதான் அதிகம் என்கிறது எஸ்.ஏ.டி.பி-யைச் சேர்ந்த அஜய்.

நன்றி: முகநூலில் Muralidharan Kasi Viswanathan

இது குறித்த பிபிசியின் கட்டுரை :

கடந்த 5 ஆண்டுகளில் எந்த பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லையா? உண்மை என்ன?

கூறப்படுவது: இந்திய பிரதமராக நரேந்திர மோதி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து எந்த பெரிய பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

உண்மை என்ன? அரசு தரவுகள் மற்றும் சுதந்திரமாக பெற்ற தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் 2014-ம் ஆண்டுக்குப் பின் பல பயங்கரவாத சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. இந்த கால இடைவெளியில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் இரண்டு தாக்குதல்கள் மிகப் பெரியவை என அரசுத் தரவுகளே கூறுகின்றன.

இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அமைச்சர் கூறியவை: அண்மையில் நடந்த ஆளும் பா.ஜ.க-வின் கட்சி மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காத்திரமாக ஒரு கூற்றை பகிர்ந்தார்.

அந்த காத்திரமான கூற்று இதுதான்: “2014ஆம் ஆண்டுக்குப் பின் பெரிதாக எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை.”

அந்த மாநாட்டில் மேலும் அவர், “எல்லையில் சில தொந்தரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால், இந்திய ராணுவம் அந்த ஊடுருவல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்துள்ளது”

எதிர்க்கட்சிகள் கூறியவை: எதிர்க்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், “இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதான்கோட்டும், உரியும் எங்கு இருக்கிறது இந்திய வரைபடத்தை எடுத்து பார்ப்பாரா?” என்று டிவிட்டரில் ட்வீட் செய்திருந்தார்.

இவை இரண்டும் ராணுவ தளங்கள் மீது 2016-ம் ஆண்டு நடந்த தாக்குதல்கள்.

2016-ம் ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்களும், ஆயுத குழுக்களை சேர்ந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆயுத குழுக்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் உரியில் நடந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அரசு தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்திய பாதுகாப்புத் துறை தனது உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறது.

  1. இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்கள்.
  2. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் கிளர்ச்சி.
  3. இடதுசாரி பயங்கரவாதம்.
  4. இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்கும் தாக்குதல்கள்.

அரசின் தரவுகளின்படியே, அதாவது உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்களின்படியே, இந்தியாவின் உட்பகுதிகளில் (பிரிவு 4) 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

மற்ற மூன்று பிரிவுகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றதாக கூறப்பட்டு இருந்தாலும், மிகப் பெரிய என்ற வார்த்தை இந்தியாவின் உட்பகுதிகள் குறித்து கூறும் போதுதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சரி, பெரிய தாக்குதல் என்றால் என்ன?

பாதுகாப்புத் துறை வல்லுநர் அஜய் சுக்லா, “எது பெரிய தாக்குதல், எது சிறிய தாக்குதல் என்று தெளிவாக விவரிக்கும் கொள்கை சார்ந்த எந்த தரவுகளையும் அரசு வெளியிடவில்லை. அது நம் பார்வையை பொறுத்தது” என்கிறார்.

“எங்கு தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது, தாக்குதல் மேற்கொள்ளப்படும் இடத்தின் முக்கியத்துவம், அந்த தாக்குதலால் ஏற்படும் விளைவு. இவற்றைக் கொண்டே எது பெரிய தாக்குதல், எது சிறிய தாக்குதலென புரிந்துக் கொள்ளப்படுகிறது.” என்கிறார்.

இது குறித்து இந்திய அரசிடம் விளக்கத்தை பெற பிபிசி முயன்றது. அதாவது, அவர்களின் தரவுகளில் கூறப்பட்டுள்ள ‘பெரிய தாக்குதல்’ என்பதை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியது. ஆனால், இந்த கட்டுரை எழுதப்படும் வரை அவர்களிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

அரசுசாரா அமைப்பான, தெற்காசிய பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த தரவுகளை வைத்திருக்கும் எஸ்.ஏ.டி.பி தளம் பெரிய தாக்குதல் என்றால் என்ன என்று விளக்குகிறது.

மூன்றுக்கும் மேற்பட்ட சாமனியரோ அல்லது ராணுவத்தினரோ ஒரு தாக்குதலில் இறந்திருந்தால், அது பெரிய தாக்குதல் என்கிறது அந்த தளம்.

388 பெரிய தாக்குதல்கள்.

அதன் கணக்கின்படி, 2014 – 2018 இடையேயான கால இடைவெளியில் 388 பெரிய தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.

அமைச்சக தகவல்கள் மற்றும் ஊடக செய்திகளை கொண்டு அவர்கள் இதனை தொகுத்துள்ளார்கள்.

வன்முறை சம்பவங்கள்

எங்கு அதிகமான தாக்குதல் சம்பங்கள் நடந்துள்ளன, எங்கு குறைவான சம்பவங்கள் நடந்துள்ளன என்று ஆராய்ந்தோமானால், போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் இது வேறுபடுகிறது.

பயங்கரவாதத்தில் 451 பேர் பலி

அதே நேரம், இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில், 2009- 2014 கால கட்டங்களில் மெல்ல தாக்குதல் சம்பவங்கள் குறைந்து வந்துள்ளன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்றப் பின் அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

2018-ம் ஆண்டில்தான், அதிகளவிலான மக்கள் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களில் பலியாகி உள்ளனர். அதாவது 451 பேர். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கைதான் அதிகம் என்கிறது எஸ்.ஏ.டி.பி-யை சேர்ந்த அஜய்.

காங்கிரஸ் ஆட்சியில், 2008-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது.

அரசு தரவுகளின் படி, 2012-ம் ஆண்டை தவிர, மற்ற ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன, சாமானியர்கள் கொல்லப்படுவதும் 2015-ம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளது.

இந்த பகுதிகள் பல இன மற்றும் பிரிவினைவாத பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயுத குழுக்கள் சுயாட்சிக்காகவும், தனி நாடு வேண்டியும் போராடி வருகின்றன.

இடதுசாரி பயங்கரவாத சம்பவங்களை பார்க்கும் போது, பிரதமர் நரேந்திர மோதி முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.

ஜுலை 2018-ம் ஆண்டு சுவராஜ்யா பத்திரிகையிடம் பேசிய நரேந்திர மோதி, மாவோயிச தாக்குதல் சம்வங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளன என்றும், இந்த சம்பவங்களில் மரணமடைவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளன என்றும் 2013 மற்றும் 2017 ஆண்டு தரவுகளை ஒப்பிட்டு பேசினார்.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் உள்ள மாவோயிச புரட்சி குழுக்கள் தாங்கள் கம்யூனிச ஆட்சி வேண்டியும், பழங்குடிகள் மற்றும் ஏழைகளின் உரிமைக்காகவும் போராடுவதாக கூறுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோதி கூறியது அரசு தரப்பு கணக்குடன் சரியாக இருந்தாலும், உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த பயங்கரவாத சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2011-ம் ஆண்டிலிருந்தே குறைந்த வண்ணம்தான் உள்ளது.

நன்றி: பிபிசி தமிழ்

கார்ப்பரேட் அதிகாரத்தை மக்களின் அதிகாரத்தால் வீழ்த்துவோம் !

கார்ப்பரேட் அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தால் வீழ்த்துவோம் !

போலீசு மட்டுமல்ல, நீதிமன்றங்களும் ஸ்டெர்லைட் முதலாளியின் கூலிப்படைதான் என்பதைத் தமிழக மக்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு. ஸ்டெர்லைட்டை மூடுவதற்குத் தமிழக அரசு போட்ட அரசாணை வெறும் சோளக்காட்டு பொம்மைதான் என்ற போதிலும், அந்த அரசாணையைக் கூடச் சட்ட விதிமுறைகளை மீறித்தான் ரத்து செய்திருக்கிறது, தீர்ப்பாயம்.

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடுத்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத்திற்குக் கிடையாது; உயர்நீதி மன்றமோ அல்லது உச்சநீதி மன்றமோதான் அவ்வழக்கை விசாரிக்க முடியும்” என்பதை ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய அமைப்புகள் மட்டுமின்றி, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனாலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது அதிகார வரம்பை மீறி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு, அதில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தீர்ப்பையும் அளித்திருக்கிறது.

இவ்வழக்கில் திட்டமிட்டே தமிழக அரசைத் தவிர வேறுயாரும் எதிர்த்தரப்பாகத் சேர்க்கப்படவில்லை. பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்க நிர்வாகி ராஜா, மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ. ஆகியோர் தலையீட்டாளர்கள் என்ற வகையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இத்தலையீட்டாளர்கள் வல்லுநர் குழுவின் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அல்லது நீதிபதி சிவசுப்பிரமணியத்தை நியமிக்க வேண்டும் எனக் கோரினர்.

ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகமோ தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் அனைவரும் இவ்விவகாரத்தில் பக்கச் சார்பாக நடந்துகொள்வார்கள் எனப் பழிபோட்டு, அவர்களை நியமிக்க மறுப்புத் தெரிவித்தது. தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் ஸ்டெர்லைட்டின் மறுப்புக்குப் பணிந்து, ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலை வல்லுநர் குழுவின் தலைவராக நியமித்தார். இந்நியமனத்தை எதிர்க்காமல் அமைதி காத்து, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நடந்து கொண்டது தமிழக அரசு.

ஸ்டெர்லைட் நிர்வாகம் வல்லுநர் குழுவிடம் அளித்த ஆவணங்களின் நகலைத் தலையீட்டாளர்களுக்கும் அளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவின் தலைவர் நீதிபதி தருண் அகர்வால் அந்த ஆவணங்களை தலையீட்டாளர்களுக்கும் கொடுக்குமாறு உத்தரவிட மறுத்தார். இதனால் பக்கச் சார்பற்ற விசாரணை என்பதற்கே இடமில்லாமல் போனது. அது மட்டுமின்றி, இவ்விசாரணைக் குழு தனது வரம்புகளை மீறி, “ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது” என இறுதித் தீர்ப்பு போலவே அறிக்கையை எழுதித் தீர்ப்பாயத்திடம் அளித்தது. தமிழக அரசின் அரசாணையைத் தீர்ப்பாயமே விசாரிக்க முடியாது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், வல்லுநர் குழுவிற்கு இந்த வானளாவிய அதிகாரம் எங்கிருந்து வந்தது?

வல்லுநர் குழு அளித்த அறிக்கையைத் தமிழக அரசு, தலையீட்டாளர்கள், ஸ்டெர்லைட் ஆகிய மூன்று தரப்புக்குமே அளிக்க மறுத்தார், தீர்ப்பாயத் தலைவர். நடுநிலை போலத் தெரியும் இந்த முடிவு உண்மையில் ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமானது. இதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, இரண்டு தரப்புக்கு மட்டுமே வல்லுநர் குழு அறிக்கையை அளித்த தீர்ப்பாயம், தலையீட்டாளர்களுக்கு அந்த அறிக்கையைத் தர மறுத்தது. இறுதியாக, வல்லுநர் குழு கூறியதையே, “ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது” என மண்டபத்தில் எழுதப்பட்ட மணிவாசகத்தையே தீர்ப்பாகவும் அளித்துவிட்டது.

படிக்க:
தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !
♦ அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !

மேலும், ஸ்டெர்லைட் எப்படியெல்லாம் காற்றையும், நீரையும், உப்பாற்றையும் மாசுபடுத்தியிருக்கிறது என விசாரணையில் எடுத்துக்காட்டப்பட்டதோ, அக்குற்றங்களில் இருந்தெல்லாம் ஸ்டெர்லைட்டை விடுவித்தும்விட்டது, தீர்ப்பாயம். தூத்துக்குடி நகர மேம்பாடு என்ற பெயரில் ஸ்டெர்லைட் தர முன்வந்திருக்கும் 100 கோடி ரூபாயைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசிற்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறது. இது உதவியல்ல, இலஞ்சம்! ஸ்டெர்லைட் தனது குற்றங்களைக் கழுவிக் கொள்ள தீர்ப்பாயம் கூறியிருக்கும் பரிகாரம்.

இத்தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது. அத்துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர் தலை மற்றும் மார்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும், இதில் பாதிப்பேர் பின்புறமாகச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதி செய்திருக்கிறது.

ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாகத் தமிழக போலீசு செயல்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் வழியாக மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. எனினும், இப்படுகொலைகளை விசாரிப்பதாகக் கூறிவரும் சி.பி.ஐ., கொலைக் குற்றமிழைத்த எந்தவொரு போலீசுக்காரனையும் இதுநாள் வரை கைதும் செய்யவில்லை, வழக்கும் பதியவில்லை. அதேபொழுதில், இக்கொலைகளின் சூத்திரதாரியான ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆலையை மீண்டும் திறந்து நடத்திட அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

“ஆலையை மூடும் அரசாணையை வெளியிடுவதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். மாசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட்டுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்” எனத் தனது ஆணையில் ஸ்டெர்லைட்டின் வக்கீலாக நின்று வாதாடியிருக்கிறது, தீர்ப்பாயம்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமைக்காக இந்தளவிற்கு வாதிட்டிருக்கும் தீர்ப்பாயம், “காற்றையும், நீரையும் நச்சுப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்” எனக் கோரிவரும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் குரலுக்கு என்ன மதிப்பு அளித்திருக்கிறது? 100 கோடி பணத்தை வீசி அவர்களின் வாயை அடையுங்கள் எனக் கீழ்த்தரமாக வழிகாட்டியிருக்கிறது.

தீர்ப்பாயத்தின் ஆணைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக உதார்விட்டு வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி. அந்த உதார் உண்மையானால்கூட, தீர்ப்பு மக்களுக்குச் சாதகமாகக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால், தீர்ப்பாயத்தின் முன்னோடியே உச்சநீதி மன்றம்தான். நச்சு ஆலை ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்து, 100 கோடி அபராதம் கட்டிவிட்டு ஆலையை நடத்திக் கொள்ள அனுமதியளித்த இழிபுகழ் கொண்டதுதான் உச்சநீதி மன்றம்.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருவதாகப் பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருந்ததைக் கலைத்துப் போட்டது, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. தீர்ப்பாயத்தின் ஆணையோ, சட்டத்தின் ஆட்சியெல்லாம் இனி இல்லை, நடைபெறுவது கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஆட்சி என்பதைப் பாமரனும் புரிந்துகொள்ளும்படி தெளிவுபடுத்திவிட்டது. இன்றைய அரசியல், பொருளாதாரக் கட்டுமானம் பொதுமக்களுக்கு எதிரானது, விரோதமானது என்பதை ஐயந்திரிபுற நிரூபித்திருக்கிறது ஸ்டெர்லைட் விவகாரம்.

பொதுமக்களுக்கு விரோதமான, எதிரான இந்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தேர்தல்கள் மூலமோ ஆளுங்கட்சிகளை மாற்றுவதன் மூலமோ வீழ்த்திவிடலாம் என்பதெல்லாம் வீண் கனவு. மாறாக, பொதுமக்களை அணிதிரட்டி, அமைப்பாக்கி, கீழிலிருந்து கட்டப்படும் மக்கள் அதிகார அமைப்புகள் மூலமே கார்ப்பரேட் கும்பலின் அதிகாரத்தைத் தடுத்து நிறுத்த முடியும், வீழ்த்த முடியும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று என்ற கோரிக்கை தமிழக மக்கள் மத்தியில் இருந்து எந்தளவிற்கு வீச்சாகவும் சமரசமின்றியும் எழுகிறதோ, அப்போராட்டத்தின் ஊடாக மட்டுமே நமது வெற்றியை உறுதி செய்யமுடியும்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

மீண்டும் நாம் மனு தர்மப்படிதான் வாழ்கிறோமா ? பேராசிரியர் கதிரவன்

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, ”சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு” என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் ஆற்றிய உரையின் காணொளி …

உரையிலிருந்து சில துணுக்குகள்…

♣ எந்தக் கூலித்தொழிலும் செய்யாமல், எந்த வறுமைக் கோட்டுக்கும் கீழ் இல்லாமல், சாப்பாட்டு அரிசிக்கு  ரேஷன் கடையில் நிற்காமல், எந்த பிளாட்பாரத்திலும் படுத்து உறங்காமல் இருப்பவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு…

♣ உயர்ஜாதியினருக்கு அவுங்க பிக்ஸ் பண்ணி வச்சிருக்க ரேட்டு 8 இலட்ச ரூபாய். நம்மல்லாம் 2.5 இலட்சத்துக்கு மேல போனா இன்கம்டாக்ஸ் கட்டியாகனும். எந்த ஸ்கேல வச்சி பேலன்ஸ் பண்ண போறாங்க..?

♣ அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களில் மொத்தமுள்ள 14,18,000 பேராசிரியர் பணியிடங்களில்: தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. எல்லாம் சேர்த்து டோட்டல் 4,84,000. ஆனால், அதுல மிச்சம் இருக்கிற 10 இலட்சம் போஸ்ட் வெறும் 3% மட்டுமே இருக்கின்ற பிராமணர்கள் ஆக்கிரமிச்சிருக்காங்க… திரும்பவும் நாம் மனு சாஸ்திரப்படி, வருணாசிரம படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் !

மிழகம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ நடத்திவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியை சார்ந்த மாணவர்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். தங்களது போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் கலந்து கொண்டதை அங்கிருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.

மாணவர்கள்  ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினார்கள். அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதையும், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதையும் சகித்துக்கொள்ள முடியாத போலீசு மாணவர்களை மிரட்டினர். அங்கிருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்  இவர்கள் எங்க பசங்க நாங்க இருக்கிற வரைக்கும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அரவணைத்துக்கொண்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றதையடுத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உற்சாகமடைந்தனர். மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்: 97888 08110.

♦ ♦ ♦

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் நேற்று (28.01.19) திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்,
திருச்சி. தொடர்புக்கு: 99431 76246

♦ ♦ ♦

க்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான்  தீர்வா? விடக்கூடாது !
அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !
அனைவரும் ஆதரிப்போம்!ஜாக்டோ  ஜியோ போராட்டம்! மக்களோடு இணையட்டும்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு: 99623 66321.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

தொகுப்பு:

நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 57

மாக்சிம் கார்க்கி

சில நிமிஷ நேரம் கழிந்த பின்னர், தாய் லுத்மீலாவின் சிறிய அறைக்கு வந்து, அங்கிருந்த அடுப்பருகிலே குளிர்காய்ந்து கொண்டிருந்தாள். லுத்மீலா கறுப்பு உடை அணிந்திருந்தாள். இடையிலே ஒரு தோல் பெல்ட் கட்டியிருந்தாள். அவள் அந்த அறைக்குள்ளே மேலும் கீழும் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். உடையின் சரசரப்பும் அவளது கம்பீரமான குரலும் அந்த அறையில் நிரம்பியொலித்தன.

அடுப்பிலிருந்த தீ பொரிந்து வெடித்துக் காற்றை உள்வாங்கி இரைந்து கொண்டிருந்தது. அதேவேளையில் அவளது குரல் நிதானமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

“ஜனங்கள் கொடியவர்களாயிருப்பதைவிட முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது கண்முன்னால் உள்ள விஷயங்களைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்; அதைத்தான் உடனே புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் கையெட்டும் தூரத்திலுள்ள எல்லாம் மலிவானவை, சாதாரணமானவை. தூரத்தில் உள்ளவைதான் அருமையானவை, அபூர்வமானவை. அந்தத் தூரத் தொலை விஷயத்தை நாம் எட்டிப் பிடித்துவிட்டால் வாழ்க்கையே மாறிப்போய் மக்களுக்கு அறிவும் சுகமும் கிட்டுமானால், அதுவே எல்லோருக்கும் ஆனந்தம். அதுவே சுகம். ஆனால் அந்த வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகியே தீரவேண்டும்.”

திடீரென்று அவள் தாயின் முன்னால் வந்து நின்றாள்.

“நான் ஜனங்களை அதிகம் சந்திப்பதில்லை. யாராவது என்னைப் பார்க்க வந்தால், உடனே நான் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுவேன். வேடிக்கையாயில்லை?” என்றுதான் ஏதோ மன்னிப்புக் கோருவதைப் போலக் கூறினாள் அவள்.

“ஏன்?” என்றாள் தாய். அந்தப் பெண் அவளது அச்சுவேலைகளை எங்கு வைத்துச் செய்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினாள் தாய்.

ஆனால் அங்கு எதுவுமே வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகத் தெரியவில்லை. தெருவை நோக்கியிருக்கும் மூன்று ஜன்னல்கள், ஒரு சோபா, ஒரு புத்தக அலமாரி, ஒரு மேஜை. சில நாற்காலிகள், ஒரு படுக்கை, அதற்கருகே ஒரு மூலையில் கை கழுவும் பாத்திரம் இருந்தது. இன்னொரு மூலையில் அடுப்பு இருந்தது. சுவர்களில் புகைப்படங்கள் தொங்கின. அங்குள்ள எல்லாப் பொருள்களுமே சுத்தமாகவும், புத்தம் புதிதாகவும் நல்ல நிலைமையிலும் ஒழுங்காக இருந்தன; இவை எல்லாவற்றின் மீதும், அந்த வீட்டுக்காரியான லுத்மீலாவின் சன்னியாசினி நிழல் படிந்திருந்தது. அங்கு ஏதோ ஒளிந்து மறைந்துகொண்டிருப்பதாக உணர்ந்தாள் தாய். ஆனால் எது எங்கே ஒளிந்து பதுங்கியிருக்கிறது என்பதைத்தான் அவளால் ஊகிக்க முடியவில்லை. அவள் கதவுகளைப் பார்த்தாள். அவற்றில் ஒரு கதவு வழியாகத்தான் சிறு நடைவழியிலிருந்து இந்த இடத்திற்கு வந்தாள். அடுத்தபடியாக, அடுப்பிருந்த பக்கத்தில் ஓர் உயரமான குறுகலான கதவு காணப்பட்டது.

“நான் இங்கு ஒரு காரியமாக வந்திருக்கிறேன்” என்று தன்னையுமறியாமல் சொன்னாள் தாய். அதே சமயம் லுத்மீலாவும் தன்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதையும் அவள் கண்டாள்.

“தெரியும். என்னைத் தேடி வருபவர்கள் சும்மா வருவதில்லை.”

லுத்மீலாவின் குரலில் ஏதோ ஒரு விசித்திர பாவம் தொனிப்பதாகக் கண்டறிந்தாள் தாய். அவளது முகத்தைக் கவனித்தாள். அந்தப் பெண்ணின் மெல்லிய உதடுகளின் ஓரத்தில் ஒரு வெளுத்த புன்னகை அரும்புவதையும், அவளது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால், அவளது உணர்ச்சியற்ற கண்கள் பிரகாசிப்பதையும் அவள் கண்டாள். தாய் வேறொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டு பாவெலின் பேச்சின் நகலை நீட்டினாள்.

”இதோ… இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அச்சேற்றியாக வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.”

பிறகு அவள் நிகலாய்க்கு நேரவிருக்கும் கைது விஷயத்தைப் பற்றிச் சொன்னாள்.

லுத்மீலா ஒன்றும் பேசாமல் அந்தக் காகிதத்தைத் தன் இடுப்புக்குள் செருகிக்கொண்டு, கீழே உட்கார்ந்தாள். அடுப்புத் தீ அவளது மூக்குக் கண்ணாடியில் பளபளத்துப் பிரகாசித்தது. நெருப்பின் அனல் அவளது அசைவற்ற முகத்தில் களித்து விளையாடியது.

“அவர்கள் மட்டும் என்னைப் பிடிக்க வந்தால், நான் அவர்களைச் சுட்டே தள்ளிவிடுவேன்” என்று தாய் கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு உறுதியோடும் அமைதியோடும் கூறினாள் லுத்மீலா. “பலாத்காரத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. நான் அடுத்தவர்களைச் சண்டைக்கு அழைக்கும்போது நானும் சண்டை போட்டுத்தானே தீர வேண்டும்.”

நெருப்பின் ஒளி அவள் முகத்திலிருந்து நழுவி மறைந்துவிட்டது. எனவே மீண்டும் அவளது முகத்தில் அகந்தையும் கடுமையும் பிரதிபலித்தன.

”உன் வாழ்க்கை மோசமாயிருக்கிறது” என்று அனுதாபத்தோடு தன்னுள் நினைத்துக்கொண்டாள் தாய்.

லுத்மீலா பாவெலின் பேச்சை விருப்பமின்றிப் படிக்கத் தொடங்கினாள்; ஆனால் படிக்கப் படிக்க அவளுக்கு ஆர்வம் அதிகரித்து அந்தக் காகிதத்தின் மீதே குனிந்து விழுந்து படித்தாள். அந்தப் பேச்சுப் பிரதியைப் பக்கம் பக்கமாகப் பொறுமையற்றுப் புரட்டினாள்; கடைசியாக, படித்து முடிந்தவுடன் அவள் எழுந்தாள்; தோள்களை நிமிர்த்தி நின்றாள். தாயை நோக்கி வந்தாள்.

”அருமையான பேச்சு!” என்றாள் அவள்.

ஒரு நிமிடம் தலையைத் தாழ்த்தி யோசனை செய்தாள்.

”நான் உங்கள் மகனைப் பற்றி உங்களிடமே பேச விரும்பவில்லை; நான் அவனைச் சந்தித்ததும் இல்லை. ஏன் துயரப் பேச்சில் ஈடுபடவேண்டும், எனக்கு அது பிடிப்பதில்லை. உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவனை தேசாந்திர சிட்சை விதித்து அனுப்புவதால் உங்களுக்கு ஏற்படும் வேதனை என்ன என்பதை நான் அறிவேன். ஆனால் ஒன்று கேட்கிறேன் – இந்த மாதிரிப் பிள்ளை பெற்றிருப்பது நல்லதுதானா?”

“ரொம்பவும் ……..” என்றாள் தாய்.

“பயங்கரமாயில்லைா?”

”இப்போது இல்லை” என்று அமைதி நிறைந்த புன்னகையோடு சொன்னாள் தாய்.

லுத்மீலா தனது பழுப்புக் கரத்தால் தன் தலைமயிரைக் கோதித் தடவிக் கொடுத்தவாறே ஜன்னல் பக்கம் திரும்பினாள். அவளது முகத்தில் ஏதோ ஒரு சாயை படர்ந்து மறைந்தது. ஒருவேளை அவள் தன் உதட்டில் எழுந்த புன்னகையை மறைக்க முயன்றிருக்கலாம்.

”சரி, நான் விறுவிறென்று அச்சு கோத்துவிடுகிறேன். நீங்கள் கொஞ்சம் படுத்துத் தூங்குங்கள். இன்று பூராவுமே உங்களுக்கு ஒரே ஆயாசமும் சிரமமுமாயிருந்திருக்கும். இதோ இந்தப் படுக்கையில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தூங்கமாட்டேன். ஒருவேளை நடுராத்திரியில் உதவிக்காக உங்களை எழுப்புவேன்…… படுத்தவுடனே விளக்கை அணைத்துவிடுங்கள்.”

அவள் அடுப்பில் இரண்டு விறகுகளை எடுத்துப்போட்டுவிட்டு அந்தக் குறுகிய கதவைத் திறந்து கொண்டு அப்பால் சென்றாள்; கதவையும் இறுக மூடிவிட்டுப் போனாள். தாய் அவள் போவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு உடுப்புக்களைக் களைந்தாள்; அவளது சிந்தனை மட்டும் லுத்மீலாவைச் சுற்றியே வந்தது.

”அவள் எதையோ எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறாள்…..”

தாய்க்குக் களைப்புணர்ச்சியால் தலை சுற்றியது. எனினும் அவளது உள்ளம் மட்டும் அற்புதமான அமைதியோடு இருந்தது. அவளது கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் அவளது இதயத்தை ஒளி செய்து நிரம்பிப் பொழிந்தன. இந்த மாதிரியான அமைதி அவளுக்குப் புதிதானதல்ல. ஏதாவது ஒரு பெரும் உணர்ச்சிப் பரவசத்துக்குப் பிறகுதான் இந்த மாதிரி அவளுக்குத் தோன்றுவதுண்டு. முன்பெல்லாம் அந்த உணர்ச்சி அவளைப் பயந்து நடுங்கச் செய்யும். இப்போதோ அந்த உணர்ச்சியமைதி அவளது இதயத்தை விசாலமுறச் செய்து, அதில் ஒரு மகத்தான உறுதிவாய்ந்த உணர்ச்சியைக் குடியேற்றி வலுவேற்றியது. அவள் விளக்கை அணைத்துவிட்டு, குளிர் படிந்த படுக்கையில், போர்வையை இழுத்து மூடிச் சுருட்டி முடக்கிப் படுத்துக்கொண்டாள். படுத்தவுடனேயே அவள் சீக்கிரத்தில் ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளாகிவிட்டாள்.

அவள் கண்களை மீண்டும் திறந்தபோது அந்த அறையில் மாரிக்காலக் காலைப் பொழுதின் வெள்ளிய, குளிர்ந்த ஒளி நிறைந்திருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சோபாவின் மீது சாய்ந்திருந்த லுத்மீலா அவளைப் பார்த்தாள். புன்னகை செய்தாள்.

”அடி கண்ணே!” என்று கலங்கிப்போய் கூறினாள் தாய். ”நான் என்ன பிறவியிலே சேர்த்தி? ரொம்ப நேரம் ஆகிவிட்டதோ?”

“வணக்கம்!” என்றாள் லுத்மீலா. ”மணி பத்தடிக்கப் போகிறது. எழுந்திருங்கள். தேநீர் சாப்பிடலாம்.”

”நீங்கள் ஏன் என்னை எழுப்பவில்லை?”

”எழுப்பத்தான் வந்தேன். ஆனால் நான் வந்தபோது தூக்கத்தில் அமைதியாகப் புன்னகை செய்து கொண்டிருந்தீர்கள். அதைக் கலைக்க எனக்கு மனமில்லை.”

அவள் தன் சோபாவிலிருந்து நாசூக்காக எழுந்திருந்தாள். படுக்கையருகே வந்து, தாயின் பக்கமாகக் குனிந்தாள். அந்தப் பெண்ணின் ஒளியற்ற கண்களில் ஏதோ ஒரு பாசமும் பரிவும் கலந்து, தனக்குப் பரிச்சயமான உணர்ச்சி பாவம் பிரதிபலிப்பதைத் தாய் கண்டாள்.

“உங்களை எழுப்புவது தப்பு என்று பட்டது. ஒருவேளை இன்பக் கனவு கண்டு கொண்டிருந்தீர்களோ.”

”நான் கனவு காணவில்லை.”

“எல்லாம் ஒன்றுதான். எப்படியானாலும் நான் உங்கள் புன்னகையை விரும்பினேன். அது அத்தனை அமைதியோடு அழகாக இருந்தது…. உள்ளத்தையே கொள்ளை கொண்டது.”

லுத்மீலா சிரித்தாள், அந்தச் சிரிப்பு இதமும் மென்மையும் பெற்று விளங்கியது.

“நான் உங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் வாழ்க்கை என்ன, சிரமமான வாழ்க்கையா?”

தாயின் புருவங்கள் அசைந்து நெளிந்தன, அவள் அமைதியாகத் தன்னுள் சிந்தித்தாள்.

”ஆமாம், சிரமமானதுதான்” என்றாள் லுத்மீலா.

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியாது” என்று மெதுவாய்ப் பேசத் தொடங்கினாள் தாய். “சமயங்களில் இந்த வாழ்க்கை சிரமமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த வாழ்க்கைதான் பூரணமாயிருக்கிறது. இந்த வாழ்வின் சகல அம்சங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாயும் வியப்பு தருவனவாயும் இருக்கின்றன. ஒவ்வொரு விஷயமும் ஒன்றையொன்று விறுவிறுவென்று தொடர்ந்து செல்கின்றன…”

அவளது இயல்பான துணிச்சல் உணர்ச்சி மீண்டும் அவள் நெஞ்சில் எழுந்தது. அந்த உணர்ச்சியால் அவளது மனத்தில் பற்பல சிந்தனைகளும் உருவத் தோற்றங்களும் தோன்றி நிரம்பின. அவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு தனது சிந்தனைகளைச் சொல்லில் வார்த்துச் சொல்லத் தொடங்கினாள்.

“இந்த வாழ்க்கை அதன் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரே முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. சமயங்களில் இது மிகவும் சிரமமாய்த்தானிருக்கிறது. ஜனங்கள் துன்புறுகிறார்கள். அவர்களை அடிக்கிறார்கள். குரூரமாக வதைக்கிறார்கள்; அவர்களுக்கு எந்த இன்பமும் கிட்டாமல் போக்கடிக்கிறார்கள். இதைக் கண்டால் மிகுந்த சிரமமாயிருக்கிறது!”

லுத்மீலா தன் தலையைப் பின்னால் சாய்த்துத் தாயை அன்பு ததும்பப் பார்த்துக்கொண்டே சொன்னாள்:

”நீங்கள் சொல்வது உங்களைப் பற்றியில்லையே!’

தாய் படுக்கையை விட்டு எழுந்து உடை உடுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

”தன்னை எப்படிப் பிறரிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியும்? ஒருவனை நேசிக்கிறாய். அவனோ விலைமதிப்பற்றவன். அனைவரின் நலத்திற்காகவும் பயப்படுகிறான். ஒவ்வொருவருக்காகவும் அனுதாபப்படுகிறான். இவையெல்லாம் உன் இதயத்தில் மோதுகின்றன. ஒருபுறமாய் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்?”

படிக்க:
♦ இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் !
♦ தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை , விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது

அவள் அந்த அறையின் மத்தியிலே ஒரு கணம் நின்றாள். பாதி உடுத்தியவாறே சிந்தனையில் ஆழ்ந்து நின்று போய்விட்டாள். ஒரு காலத்தில் தன் மகனது உடம்பை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே மூழ்கிப்போய் என்றென்றும் தன் மகனைப் பற்றிய கவலையிலும் பயத்திலும் அலைக்கழிந்த அந்தப் பழைய பெண் பிறவியாக, அவள் இப்போது இல்லை என்பது அவளுக்குத் தோன்றியது. அவள் எங்கோ தூரத் தொலைவில் போய்விட்டாள்; அல்லது அவளது உணர்ச்சி நெருப்பில் அவள் சாம்பலாகிப் போயிருப்பாள். இந்த மாதிரி எண்ணிய தாயின் மனத்திலே ஒரு புதிய ஆவேசமும் பலமும் தோன்றின. அவள் தன் இதயத்தைத் துருவிப் பார்த்தாள்; அதன் துடிப்பைக் கேட்டாள். பழைய பயவுணர்ச்சிகள் மீண்டும் வந்துவிடக் கூடாதே என்று பயந்தாள்.

”என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே லுத்மீலா அவள் பக்கம் வந்தாள்.

“தெரியாது” என்றாள் தாய்.

இருவரும் மெளனமாக ஒருவரையொருவர் பார்த்தார்கள்; புன்னகை புரிந்தார்கள். பிறகு லுத்மீலா அந்த அறையைவிட்டு வெளிச் சென்றவாறே சொன்னாள்:

“அங்கே என் தேநீர்ப் பாத்திரம் என்ன கதியில் இருக்கிறதோ?”

தாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வெளியில் வெயிலும் குளிரும் பரவியிருந்தது. அவளது இதயமோ வெதுவெதுப்போடும் பிரகாசத்தோடும் இருந்தது. அவள் சகலவற்றைப் பற்றியும் சாங்கோபாங்கமாக மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்க விரும்பினாள். சந்தியா கால சூரிய ஜோதியைப் போல் இனிமையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்க எண்ணங்களைத் தன் இதயத்திலே புகுத்திவிட்ட யாரோ ஓர் இனம் தெரியாத நபருக்கு நன்றி காட்டிப் பேசவேண்டும் என்ற மங்கிய உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை நாட்களாக பிரார்த்தனை செய்வதையே கைவிட்டுவிட்ட அவளுக்கு அன்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஆசை யெழுந்தது.

அவளது மனக்கண்ணில் ஒரு வாலிப முகம் பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த முகம் அவளை நோக்கித் தெள்ளத் தெளிவான குரலில், “இவள்தான் பாவெல் விலாசவின் தாய்!” என்று கூறியது. அவள் கண் முன்னால் மகிழ்ச்சியும் அன்பும் துள்ளாடும் சாஷாவின் நயனங்கள்: ரீபினின் கரிய தோற்றம், உறுதிவாய்ந்த உலோகம் போன்ற தன் மகனின் முகம். நிகலாயின் கூச்சத்துடன் கண்சிமிட்டும் பார்வை முதலியன எல்லாம் தோன்றின. இந்த மனத்தோற்றங்கள் எல்லாம் திடீரென ஓர் ஆழ்ந்த பெருமூச்சாக ஒன்றுகலந்து உருவெடுத்து, வானவில்லின் வர்ணம் தோய்ந்த மேகப்படலத்தைப் போன்ற ஒளி சிதறி அவளது கன்னங்களைக் கவிழ்த்து சூழ்ந்து அவள் மனத்தில் ஒரு சாந்தியுணர்ச்சியை உருவாக்கின.

”நிகலாய் சொன்னது சரிதான்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் லுத்மீலா மீண்டும் வந்தாள்; “அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தப் பையனை அனுப்பித் தெரிந்து வரச் சொன்னேன். வீட்டுக்கு வெளியே போலீஸ்காரர்கள் இருந்ததாகவும், வெளிக்கதவுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் ஒளிந்து கொண்டிருந்ததாகவும் அவன் சொன்னான். சுற்றிச் சூழ உளவாளிகள் இருக்கிறார்களாம். அந்தப் பையனுக்கு அவர்களையெல்லாம் தெரியும்.”

“ஆ!” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்:

”பாவம், அப்பாவி…”

அவள் பெரு மூச்சுவிட்டாள். அதில் துக்க உணர்ச்சியில்லை. இதைக்கண்டு அவள் தன்னைத்தானே வியந்து கொண்டாள்.

”சமீபகாலமாக அவன் இந்த நகரத்திலுள்ள தொழிலாளர்களுக்கு எவ்வளவோ வகுப்புகள் நடத்தி வந்தான். பொதுவாக இது அவன் அகப்பட்டுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம்தான்” என்று அமைதியாக, ஆனால் முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னாள் லுத்மீலா. “அவனது தோழர்கள் அவனைத் தலைமறைவாகப் போகச் சொன்னார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இவனைப் போன்ற ஆசாமிகளைப் போ, போ என்று போதித்துக் கொண்டிருக்கக்கூடாது, நிர்ப்பந்த வசமாகத்தான் போகச் செய்ய வேண்டும்.”

இந்தச் சமயத்தில் சிவந்த கன்னங்களும் கரிய தலைமயிரும் முன்வளைந்த மூக்கும் அழகிய நீலக் கண்களும் கொண்ட ஒரு சிறுவன் வாசல் நடையில் வந்து நின்றான்.

“நான் தேநீர் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டான் அவன்.

கொண்டு வா, செர்கேய் என்று கூறிவிட்டுத் தாயின் பக்கமாகத் திரும்பினாள் லுத்மீலா. ”இவன் என் வளர்ப்புப் பையன்” என்றாள்.

அன்றைய தினத்தில் லுத்மீலா வழக்கத்துக்கு மாறாக சுமூகபாவத்தோடும் எளிமையோடும் பழகுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவளது உடலின் லாவகம் நிறைந்த அசைவுகளிலே ஒரு தனி அழகும் உறுதியும் நிறைந்திருந்தன. இத்தன்மை அவளது வெளுத்த முகத்தின் நிர்த்தாட்சண்ய பாவத்தை ஓரளவு சமனப்படுத்தியது. இரவில் கண் விழித்ததால் அவளது கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் விழுந்திருந்தன. என்றாலும் அவளது இதய வீணையில் ஏதோ ஒரு தந்தி முறுக்கேறி விறைத்து நிற்பது போன்ற தன்மையை எவரும் கண்டு கொள்ள முடியும்.

அந்தப் பையன் தேநீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தான்.

”செர்கேய்! உனக்கு இவளை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவள்தான் பெலகேயா நீலவ்னா. நேற்று விசாரணை நடந்ததே. அந்தத் தொழிலாளியின் தாய்.”

செர்கேய் ஒன்றும் பேசாமல் தலைவணங்கினான். தாயின் கையைப் பிடித்துக் குலுக்கினான். அறையை விட்டு வெளியே போனான். ஒரு ரொட்டியை எடுத்துக் கொண்டுவந்து, மீண்டும் தன் இடத்தில் அமர்ந்துகொண்டான். லுத்மீலா நேநீரைக் கோப்பையில் ஊற்றியவாறே, தாயை வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும், அந்தப் போலீசார் யாருக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்பது தெளிவாகிற வரையில், அவள் அந்தப் பக்கமே செல்லாமலிருப்பதே நல்லதென்றும் எடுத்துக்கூறினாள்.

“ஒருவேளை அவர்கள் உங்களையே எதிர்பார்த்துக் கிடக்கலாம். பிடித்துக் கொண்டு போய் ஏதாவது கேள்விகளைக் கேட்டுத் தொலைப்பார்கள்.”

”இருக்கட்டுமே” என்று பதில் சொன்னாள் தாய். “அவர்கள் விரும்பினால் என்னையும்தான் கைது செய்து கொண்டு போகட்டுமே. அதனால் என்ன பெரிய குடி முழுகிவிடப் போகிறது? ஆனால் பாவெலின் பேச்சை மட்டும் நாம் முதலில் விநியோகித்து விட்டோமானால்!”

”நான் அச்சுக் கோத்து முடித்துவிட்டேன். நாளைக்கு நகரிலும் தொழிலாளர் குடியிருப்பிலும் விநியோகிப்பதற்குத் தேவையான பிரதிகள் தயாராகிவிடும். உங்களுக்கு நதாஷாவைத் தெரியுமா?”

”நன்றாய்த் தெரியும்.”

”அவற்றை அவளிடம் கொண்டு சேருங்கள்.”

அந்தப் பையன் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான், அவர்கள் பேசியது எதையுமே அவன் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் இடையிடையே பத்திரிகைக்கு மேலாக நிமிர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான். அவனது உணர்ச்சி நிறைந்த பார்வையைக் காணும் போதெல்லாம், தாய்க்கு மகிழ்ச்சி பொங்கும்; புன்னகை புரிந்து கொள்வான். கொஞ்சம்கூட வருத்தமின்றி மீண்டும் நிகலாயைப் பற்றிப் பேசத் தொடங்கினாள் லுத்மீலா. அவள் அப்படிப் பேசுவது இயற்கைதான் என்பதைத் தாய் கண்டுகொண்டாள். நேரம் வழக்கத்தை மீறி வெகு வேகமாகச் செல்வது போலிருந்தது. அவர்கள் காலைச் சாப்பாட்டை முடிப்பதற்குள்ளே மத்தியானப் பொழுது வந்துவிட்டது.

”எவ்வளவு நேரமாகிவிட்டது!” என்று அதிசயித்தாள் லுத்மீலா.

அந்தச் சமயத்தில் யாரோ வெளியிலிருந்து கதவை அவசர அவசரமாகத் தட்டினார்கள். அந்தப் பையன் எழுந்திருந்து கண்களைச் சுருக்கி விழித்தவாறே லுத்மீலாவைப் பார்த்தான்.

“கதவைத் திற செர்கேய். யாராயிருக்கலாம்?

அவள் தனது உடுப்பின் பைக்குள்ளே அமைதியாகக் கையை விட்டவாறே தாயைப் பார்த்துச் சொன்னாள்:

“அவர்கள் போலீஸ்காரராயிருந்தால், பெலகேயா நீலவ்னா, அந்த மூலையிலே நின்று கொள்ளுங்கள். செர்கேய், நீ …”

“எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு அந்தப் பையன் வெளியே சென்றான்.

தாய் புன்னகை புரிந்தாள். இந்த மாதிரியான ஏற்பாடுகள் அவளைக் கலவரப்படுத்தவே இல்லை; ஏதோ ஒரு விபரீதம் நிகழப் போகிறது என்ற பயபீதி உணர்ச்சியும் அவளுக்கு இல்லை.

ஆனால் உள்ளே அந்த குட்டி டாக்டர்தான் வந்து சேர்ந்தான்.

வந்ததுமே அவன் அவசரமாகப் பேசத் தொடங்கினான்; ”முதலாவது – நிகலாய் கைதாகிவிட்டான். ஆஹா! நீலவ்னா, இங்கேயா வந்திருக்கிறீர்கள்? கைது நடந்தபோது நீங்கள் வீட்டில் இல்லையா?”

“அவன்தான் இங்கு அனுப்பினான்.”

“ஹூம். இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. சரி, இரண்டாவது – நேற்று இரவு சில இளைஞர்கள் பாவெலின் பேச்சை சைக்கோஸ்டைலில் ஐநூறு பிரதிகள் தயார் பண்ணிவிட்டார்கள். நான் அவற்றைப் பார்த்தேன். மோசமாக இல்லை. எழுத்துத் தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தது. அவர்கள் அவற்றை இன்றிரவு நகர் முழுவதிலும் விநியோகித்து விடுவதை விரும்பினார்கள். நான் அதை எதிர்த்தேன். அச்சடித்த பிரதிகளை வேண்டுமானால் நகரில் விநியோகிக்கலாம், இவற்றை வேறு இடங்களுக்கு அனுப்புவோம் என்றேன்.”

“அவற்றை என்னிடம் கொடுங்கள். நான் இப்போதே நதாஷாவிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.

பாவெலது பேச்சை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விநியோகிக்க, தன் மகனது சொற்களை உலகமெங்கும் பரப்ப, அவள் பேராவல் கொண்டு தவித்தாள்; எனவே கொஞ்சுவது போல அந்த டாக்டரின் முகத்தை பார்த்தாள், அவனது பதிலுக்காகக் காத்து நின்றாள்.

”நீங்கள் இந்த வேலையை இப்போது மேற்கொள்ளத்தான் வேண்டுமா என்பது சைத்தானுக்குத்தான் தெரியும்” என்று தயங்கிக்கொண்டே கூறிவிட்டு, அவன் தன் கடிகாரத்தை எடுத்தான். “இப்போது மணி பதினொன்று நாற்பத்தி மூன்று. இரண்டு மணி ஐந்து நிமிஷத்துக்குப் புறப்பட்டு ஐந்தே கால் மணிக்குப் போய் சேருவதற்கு ஒரு ரயில் இருக்கிறது. மாலை வேளைதான். இருந்தாலும் அப்படியொன்றும் காலதாமதமில்லை. ஆனால் இப்போது அது பிரச்சினையல்ல…”

“அது பிரச்சினையில்லை” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அதையே திரும்பக் கூறினாள் லுத்பீலா.

“எதுதான் பிரச்சினை?” என்று கேட்டுக்கொண்டே அவன் பக்கமாகச் சென்றாள் தாய். “காரியம் வெற்றியோடு முடிய வேண்டும். அவ்வளவுதானே…”

லுத்மீலா அவளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நெற்றியைத் துடைத்துவிட்டுக்கொண்டாள்.

“இந்தக் காரியத்தை மேற்கொள்ளுவது ஆபத்தானது.”

“ஏன்?” என்று அழுத்தத்தோடு கேட்டாள் தாய்.

”அதனால்தான்” என்று படபடவென்று பேசத் தொடங்கினான் அந்த டாக்டர். “நிகலாய் கைதாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கிறீர்கள். தொழிற்சாலைக்கும் போய் வந்திருக்கிறீர்கள். எனவே அந்த ஆசிரியையின் அத்தை என்று எல்லோரும் உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்தச் சட்ட விரோதமான பிரசுரங்கள் தொழிற்சாலையில் தலைகாட்டிவிட்டன. இதையெல்லாம் வைத்து ஜோடித்தால், உங்கள் கழுத்தில் சரியான சுருக்கு வந்து விழுந்துவிடும்.”

“என்னை அங்கு எவரும் கண்டுகொள்ள முடியாது!” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினாள் தாய். ”தான் திரும்பி வரும்போது அவர்கள் ஒருவேளை என்னைக் கைது செய்து எங்கு போய்விட்டு வருகிறாய்?’ என்று கேட்டாலும்…”

அவள் ஒரு கணம் தயங்கினாள். பிறகு சத்தமிட்டுச் சொன்னாள்:

”என்ன சொல்வேன் என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்து நேராக நான் தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்வேன். அங்கு எனக்கு ஒரு சிநேகிதன் இருக்கிறான் – சிஸோவ். விசாரணை முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு மன ஆறுதல் பெறுவதற்காகச் சென்றுவிட்டு வருவதாகக் கூறுவேன். அவனுக்கு ஆறுதல் தேவைதான். அவனது மருமகனும் தண்டனை பெற்றிருக்கிறான். அவனும் நான் சொல்வதையே ஆமோதிப்பான்.”

அவர்கள் நிச்சயம் தனது ஆசைக்கு இணங்குவார்கள் என்று அவள் உணர்ந்தாள்; எனவே அவர்களைச் சீக்கிரம் இணங்க வைக்கவேண்டும் என்பதற்காக அவள் ஆத்திரத்தோடும் அழுத்தத்தோடும் பேசிக்கொண்டே போனாள். கடைசியில் ஒருவழியாக அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.

”சரி. துணிந்து போங்கள்” என்று விருப்பமின்றிச் சொன்னான் அந்த டாக்டர்.

லுத்மீலா எதுவும் சொல்லவில்லை. சிந்தனையில் ஈடுபட்டவாறே முன்னும் பின்னும் நடந்துகொண்டுதானிருந்தாள். அவளது முகம் குழம்பி வாடிப்போயிருந்தது. அவளது எழுத்துத் தசைநார்கள் அவளது தலையைக் கீழே சாய்க்காதபடி இறுக்கமாய்த் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. தாய் இதைக் கவனித்துவிட்டாள்.

”நீங்கள் எல்லோரும் என்னைப் பற்றியே கவலைப்படுகிறீர்களே” என்று புன்னகையோடு கூறினாள் தாய்: “நீங்கள் உங்களைப் பற்றித்தான் கவலையே படக்காணோம்!”

“நீங்கள் சொல்வது உண்மையல்ல” என்றான் அந்த டாக்டர். “நாங்கள் எங்களைப் பற்றியும் கவலைப்படுகிறோம். அது எங்கள் கடமை. ஆனால் ஒன்றுமற்ற காரியத்துக்காக, தங்கள் சக்தியை விரயம் செய்பவர்களிடம்தான் நாங்கள் கடுமையாக நடந்து கொள்கிறோம். சரி போகட்டும். பேச்சின் நகல் பிரதிகள் நீங்கள் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்கு வந்து சேரும்…”

அவன் அவளுக்கு அந்தக் காரியத்தை எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிக் கூறினான். பிறகு அவளது முகத்தையே கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான்:

“சரி, உங்களுக்கு அதிருஷ்டம் உண்டாகட்டும்!”

ஆனால் அவன் வெளியே செல்லும்போது அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின்மை பிரதிபலித்தது. லுத்மீலா தாயை நோக்கினாள்.

“உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும்” என்று அமைதி நிறைந்த சிரிப்போடு சொன்னாள் அவள்.

பிறகு அவள் தாயின் கரத்தை எடுத்துப் பிடித்தாள், மீண்டும் மேலும் கீழும் உலாவ ஆரம்பித்தாள்.

“எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு இப்போது பதின்மூன்று வயதாகிவிட்டது. ஆனால், அவன் தன் தந்தையோடு வாழ்கிறான். என் கணவர் ஓர் அரசாங்க வக்கீலின் நண்பர். அந்தப் பையன் அவரோடு இருக்கிறான். அவன் எப்படி மாறப் போகிறானோ? அதைப் பற்றி நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு……”

அவளது குரல் அடைபட்டு நின்றது. ஒரு நிமிஷம் கழித்து அவள் மீண்டும் அமைதியாக, சிந்தனையோடு பேசத் தொடங்கினாள்.

”நான் எந்த ஜனங்களை நேசிக்கிறேனோ, இந்த உலகத்தில் எந்த ஜனங்களை அருமையான மக்கள் என்று மதிக்கிறேனோ அந்த ஜனங்களுக்குப் பரம எதிரியானவரிடம்தான் அவன் வளர்ந்து வருகிறான். என் மகனே எனக்கு எதிரியாக வளர்ந்து வரக்கூடும்; அவனால் என்னுடன் வாழ முடியாது. நான் இங்கு மாற்று பெயரில் வாழ்ந்து வருகிறேன். அவளை நான் பார்த்தே எட்டு வருஷங்கள் ஆகின்றன. எட்டு வருஷங்கள்! எவ்வளவு காலம்!”

அவள் ஜன்னலருகே நின்றாள். நிர்மலமாக வெளுத்துக்கிடந்த வானத்தைப் பார்த்தாள்.

“அவன் மட்டும் என்னோடு வாழ்ந்திருந்தால். நான் இன்னும் பலம் பெற்றிருப்பேன். எனது இதயத்தில் இந்த வேதனை இன்னும் உறுத்திக்கொண்டிருக்காது……. அவன் இறந்து போயிருந்தால்கூட எனக்குச் சிரமமில்லாது போயிருக்கும்……”

“அடி என் கண்ணே?” என்று பாசத்தால் புண்பட்ட இதயத்தோடு பெருமூச்செறிந்தாள் தாய்.

”நீங்கள் அதிருஷ்டக்காரர்” என்று ஒரு கரத்த புன்னகையோடு சொன்னாள் லுத்மீலா. “அதிசயமான ஒற்றுமை – தாயும் மகனும் ஒரே அணியில் ஒருவர் பக்கம் ஒருவர் – அபூர்வமான நிகழ்ச்சி!”

”ஆமாம், அதிசயமானதுதான்” என்று தன்னைத்தானே வியந்து கூறிக்கொண்டாள் பெலகேயா. பிறகு தன் குரலைத் தாழ்த்தி ஏதோ ஓர் அந்தரங்க ரகசியத்தைக் கூறுவதுபோல அவள் பேசினாள். “நீங்கள் எல்லோரும் – நிகலாய் இவான்விச்சும், சத்தியத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் – நீங்கள் எல்லோருமே ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் நிற்கிறீர்கள். திடீரென்று மக்கள் அனைவரும் நமக்கு உறவினர்களாகிவிடுகிறார்கள். உங்கள் அனைவரையும் நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு வார்த்தைகள்தான் புரியாது போகலாம்; ஆனால் அதைத் தவிரப் பிறவற்றையெல்லாம் என்னால் புரிந்து கொள்ளமுடியும்.”

“ஆமாம். அப்படித்தான்” என்று முனகினாள் லுத்மீலா: “அப்படித்தான்…”

தாய் தன் கையை லுத்மீலாவின் மார்பின் மீது வைத்துக் கொண்டே ரகசியக் குரலில் மேலும் பேசினாள்; ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து நினைத்துப் பேசுவது போலிருந்தது அவள் பேச்சு.

“நமது பிள்ளைகள் உலகில் அணிவகுத்துச் செல்கிறார்கள். அதைத்தான் நான் புரிந்து கொள்கிறேன் – நமது பிள்ளைகள் உலகில் அணி வகுத்துச் செல்கிறார்கள், உலகெங்கும், சகல மூலைமுடுக்குத் திசைகளிலிருந்தும் ஒரே ஒரு லட்சியத்தை நோக்கி அணிவகுத்து முன்னேறுகிறார்கள். பரிசுத்தமான உள்ளத்தோடும், அருமையான மனத்தோடும், தீமையை எதிர்த்து தமது பலத்த காலடியால் பொய்மையை மிதித்து நசுக்கிக்கொண்டே, கொஞ்சங்கூடத் தயக்கமின்றி முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் இளைஞர்கள். ஆரோக்கியசாலிகள்; அவர்களது சகல சக்தியையும் ஒரே ஒரு விஷயத்தை நோக்கி – நியாயத்தை எதிர்நோக்கிப் பிரயோகித்துச் செல்கிறார்கள். மனிதகுலத்தின் துயரத்தை வெல்வதற்காக அவர்கள் முன்னேறுகிறார்கள். சகல துரதிருஷ்டங்களையும் துடைத்துத் தூர்ப்பதற்காக சகல அசுத்தங்களையும் கழுவிப் போக்குவதற்காக அவர்கள் அணியணியாக முன்னேறிச் செல்கிறார்கள். அவற்றை அவர்கள் போக்கித்தான் தீருவார்கள். அவர்கள் ஒரு புதிய சூரியனை உலகுக்குக் கொண்டுவருவார்கள் என்று அவர்களில் ஒருவன் சொன்னான்; நிச்சயம் அந்தச் சூரியனை அவர்கள் கொண்டு வந்தே தீருவார்கள்! மனமுடைந்து போன சகல இதயங்களையும் ஒன்றுபடுத்துவார்கள்; ஒன்றுபடுத்தியே தீருவார்கள்!”

அவள் தான் மறந்துவிட்ட பிரார்த்தனை வாசகங்களை எண்ணிப் பார்த்தாள். அந்த வார்த்தைகளால் அவளது மனத்திலே புதியதொரு நம்பிக்கை பிறந்தது. அந்த வாசகங்கள் அவளது இதயத்திலிருந்து தீப்பொறிகளைப் போல் சுடர்விட்டுத் தெறித்துப் பிறந்தன:

“நமது பிள்ளைகள் சத்தியமும் அறிவும் சமைத்த பாதையிலே செல்கிறார்கள். மனித இதயங்களுக்கு அன்பைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இவ்வுலகத்திலே புதியதொரு சொர்க்க பூமியை உண்டாக்குகிறார்கள். இவ்வுலகத்தைப் புதியதொரு ஒளி வெள்ளத்தால், ஆத்ம ஆவேசத்தின் அணையாத தீபத்தால், ஒளிரச் செய்கிறார்கள். அந்த ஒளிப்பிழம்பின் தீ நாக்குகளிலிருந்து புதிய வாழ்க்கை பிறப்பெடுத்துப் பொங்குகிறது. மனித சமுதாயத்தின் மீது நமது பிள்ளைகள் கொண்டுள்ள அன்பிலிருந்து அந்த வாழ்க்கை பிறப்பெடுக்கிறது. அந்த அன்பை எவரால் அணைக்க முடியும்? இதை எந்த சக்திதான் அழிக்க முடியும்? எந்த சக்திதான் இதை எதிர்க்க முடியும்? பூமியிலிருந்து இது ஊற்றெடுத்துப் பொங்கி வருகிறது; வாழ்க்கை முற்றும் இதன் வெற்றிக்காகப் பாடுபடுகிறது. ஆம், வாழ்க்கை முற்றும்தான்!”

அவளது உணர்ச்சியாவேசத்தால் அவள் சோர்ந்துபோய் லுத்மீலாவை விட்டுப் பிரிந்து இரைக்க மூச்சு வாங்கிக்கொண்டே கீழே உட்கார்ந்தாள். லுத்மீலாவும் சத்தம் செய்யாமல் ஜாக்கிரதையோடு நடந்து சென்றாள். எதையோ கலைத்துவிடக் கூடாது என்ற பயத்தோடு நடந்தாள். அவள் தனது ஒளியற்ற கண்களை முன்னால் பதித்துப் பார்த்தவாறு அந்த அறைக்குள்ளே நாசூக்கோடு நடந்தாள். அவள் முன்னைவிட உயரமானவளாக, நிமிர்ந்தவளாக, மெலிந்துவிட்டதாகத் தோன்றினாள். அவளது மெலிந்த கடுமை நிறைந்த முகத்தில் ஓர் ஆழ்ந்த கவனம் தோன்றியது. அவளது உதடுகள் துடிதுடித்து இறுகி மூடியிருந்தன. அந்த அறையிலே நிலவிய அமைதி தாயின் மனத்தைச் சாந்தி செய்தது. லுத்மீலாவின் நிலைமையைக் கண்டறிந்த தாய்தான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டதுபோல் கேட்டாள்:

“நான் ஏதும் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டேனா?”

லுத்மீலா அவள் பக்கம் திரும்பி, பயந்து போனவள் மாதிரி அவளைப் பார்த்தாள். பிறகு எதையோ நிறுத்தப் போவது மாதிரி தாயை நோக்கிக் கையை நீட்டிக்கொண்டு அவசர கதியில் பேசினாள்:

“இல்லையில்லை. இப்படித்தான் இருக்கிறது, இப்படித்தான். ஆனால் அதைப் பற்றி நாம் இனிமேல் பேசவே கூடாது. நீங்கள் சொன்னதோடு இருக்கட்டும்.” அவளது குரல் மிகுந்த அமைதியோடிருந்தது. அவள் மேலும் சொன்னாள்: “சரி சீக்கிரம் புறப்பட வேண்டும். நீங்கள் போக வேண்டிய தூரமோ அதிகம்.”

“சீக்கிரமே கிளம்புகிறேன். நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் என்னுடைய மகனின், என்னுடைய சதையையும் ரத்தமும் கொண்ட என் மகனுடைய வாசகங்களை நான் பிறரிடம் கொண்டு செல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன். எனது இதயத்தையே வழங்குவதுபோல் இருக்கிறது எனக்கு!”

அவள் புன்னகை செய்தாள். ஆனால் அந்தப் புன்னகையால் லுத்மீலாவின் முகத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. அந்தப் பெண்ணின் அடக்கக் குணத்தால் தனது மகிழ்ச்சியெல்லாம் அடைபட்டு ஆழ்ந்து போவது மாதிரி தாய்க்குத் தோன்றியது. அந்தக் கடின சித்தக்காரியின் இதயத்திலே தனது உணர்ச்சித் தீயை மூட்டிவிடத்தான் வேண்டும் என்ற உறுதியான ஆர்வ உணர்ச்சி தாயின் மனத்தில் திடீரெனத் தோன்றியது. அந்தக் கடின சித்தத்தையும் வசப்படுத்தி, ஆனந்தப் பரவசமான தன் இதயத்தின் உணர்ச்சிகளை அந்தக் கடின சித்தமும் பிரதிபலிக்கும்படி செய்துவிட வேண்டும் எனத் தாய் விரும்பினாள். அவள் லுத்மீலாவின் கைகளை எடுத்து அவற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டே பேசினாள்:

“அன்பானவளே, சகல மக்களுக்கும் ஒளியூட்டுவதற்கு ஒன்று இருக்கிறதென்பதை அந்த ஜோதியைச் சகல மக்களும் ஏறிட்டு நோக்கும் காலம் வரத்தான் செய்யும் என்பதை, அந்த ஜோதியை அவர்கள் இதயபூர்வமாக வரவேற்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க எவ்வளவு நன்றாயிருக்கிறது!”

தாயின் அன்பு ததும்பும் அகன்ற முகத்தில் ஒரு நடுக்கம் குளிர்ந்தோடிப் பரந்தது, அவளது கண்கள் பிரகாசம் எய்தின. புருவங்கள் அந்தப் பிரகாசத்தை நிழலிடுவது போலத் துடிதுடித்தன. பெரிய பெரிய எண்ணங்களால் அவள் சிந்தை மயங்கிப் போயிருந்தாள். அந்த எண்ணங்களுக்குள் தனது இதயத்துக்குள்ளே உள்ள சகல நினைவுகளையும், தான் வாழ்ந்த வாழ்வனைத்தையும் பெய்துவைத்தாள். அந்த எண்ணங்களின் சாரத்தை அவள் ஸ்படிக ஒளி வீசும் உறுதியான வார்த்தைகளாக வடித்தாள். அந்த வார்த்தைகள் அவளது இலையுதிர்கால இதயத்தில் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்தது. அங்கு வசந்தகால சூரியனின் சிருஷ்டி சக்தியைக் குடியேற்றி ஒளி ஊட்டின. என்றென்றும் வளர்ந்தோங்கும் பிரகாசத்தோடு அவை அவள் இதயத்தில் நின்று நிலைத்து ஒளி செய்தன.

“மக்களுக்கு ஒரு புதிய கடவுளே பிறந்து விட்டது போல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் – எல்லாம், எல்லோருக்காகவும் – ஒவ்வொன்றும் இப்படித்தான் நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அனைவரும் தோழர்கள்; நீங்கள் அனைவரும் அன்பர்கள், நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள்!”

மீண்டும் அவள் உணர்ச்சியாவேசத்துக்கு ஆளாகிவிட்டாள். அவள் பேச்சை நிறுத்தி மூச்செடுத்தாள். தழுவப் போகிற மாதிரி தனது கைகளை அகல விரித்துக் கொண்டு பேசினாள்:

“அந்த வார்த்தையை – தோழர்கள் என்னும் அந்த வார்த்தையை – எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்போது, என் இதயத்திலே அவர்கள் அணிவகுத்துச் செல்லும் காலடியோசையை என்னால் கேட்க முடிகிறது.”

அவள் தன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டாள். லுத்மீலாவின் முகம் சிவந்தது, உதடுகள் துடிதுடித்தன; தெள்ளத் தெளிந்த பெருங் கண்ணீர்த்துளிகள் அவளது கன்னத்தில் வழிந்தோடின.

தாய் அவளைத் தன் கரங்களால் இறுகத் தழுவினாள். மெளனமாகப் புன்னகை செய்தாள். தனது இதயத்தின் வெற்றியை எண்ணி அன்போடு மகிழ்ந்து கொண்டாள்.

அவர்கள் பிரியும்போது, லுத்மீலா தாயின் முகத்தைப் பார்த்து, மெதுவாகச் சொன்னாள்:

“உங்களருகில் இருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறது தெரியுமா?”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

த்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் இந்தாண்டு ஜனவரி 14 தொடங்கிய “அர்த் கும்பமேளா” மார்ச் 3 வரை நடைபெறவிருக்கிறது. அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றிய ஆதித்யநாத் அரசு 6 ஆண்டுகளுக்கொருமுறை வரும் அர்த் கும்பமேளாவை “கும்ப்” என்றும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வரும் கும்பமேளாவை “மஹாகும்ப்” என்றும் மாற்றியுள்ளது. இந்த கும்பமேளாவின் முதல் நாளில் 2 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள் என்று தெரிவித்திருக்கிறது அம்மாநில அரசு.  கங்கை, யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புராணப் புரட்டின்படி சரஸ்வதி நதியும் கலக்கிறதாம். இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் அது பெரும் புண்ணியம் என்பது வட இந்திய ‘இந்துக்களிடையே’ அழுத்தமாக நிலவும் ஒரு மூடநம்பிக்கை!

ஊரான் காசை எடுத்து உலையில் போட்டுவிட்டு விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் மோடி, யோகி

மோடி அரசின் திட்டங்களால் பாஜக-வின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் வாய்ப்புள்ள இடங்களில் பார்ப்பனிய இந்துமதத்தின் பிற்போக்குத்தனத்தை கட்டவிழ்த்து விட நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பமேளா நிகழ்வுக்காக ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அதற்கான திட்டங்களை போட்டு செயல்படுத்தியிருக்கிறது சாமியார் யோகியின் தலைமையிலான உ.பி. அரசு. இந்த அரசுதான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்ததற்குக் காரணம். மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்க பணமில்லாத உ.பி. பாஜக அரசு இந்த அர்த் கும்பமேளா விழாவிற்காக ரூ.4300 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்த ஒதுக்கீட்டில் மத்திய அரசின் ஒதுக்கீடும் உண்டு. மறைமுகமாக இரு அரசுகளும் இன்னும் அதிக பணத்தை ஒதுக்கியிருப்பது நிச்சயம்.

இம்மாதிரியான கும்பமேளாக்கள் இந்தியாவின் அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதனை பூர்ண கும்பமேளா என்கிறார்கள். அதில் அலகாபாத் மற்றும் ஹரித்துவார் ஆகிய இடங்களில் மட்டும் ஆறு ஆண்டுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகிறது. தற்போது உபி அலகாபத்தில் நடைபெற்று வருவது இந்த வகையைச் சார்ந்ததுதான்.

குவிந்து கிடக்கும் மீடியாக்கள்

கும்பமேளா தோன்றிய புராணக்கதை மற்ற எந்த பார்ப்பனிய புரட்டுக் கதைகளுக்கும் குறைவானது அல்ல. தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்து போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்கள் உள்ளிட்ட தேவலோக வாழ்க்கை ஆட்டம் காண்கிறது.

இதனால் அசுரர்கள் கை ஓங்கியது. இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின் படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.

ஆனால் அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ‘சேசிங்கில்’ அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.

அமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். மோடி அரசு பதவியேற்ற பிறகு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி திட்டங்களால் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வேலைகளை பறிகொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் மக்களை ஒடுக்குமுறையால் மோடி அரசு பூலோக வாழ்விலிருந்து ‘விடுதலை’ செய்யும் போது தனியே ஆற்றில் முங்கி முக்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை.

கும்பமேளா நிகழ்வை நேரில் கண்டு, அங்கு தங்கி மக்களோடு உரையாடுவதன் மூலம் வட இந்திய, இந்து உளவியலை அறிந்து கொள்ளலாம் என்று வினவு செய்தியாளர்கள் அங்கே சென்றார்கள். நேரில் பேசிய பலரும் மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவித்தாலும் கும்பமேளாவின் புனிதத்தை நம்புகிறார்கள். பலர் ஆற்றில் முங்கி குளிக்கவில்லை என்றாலும் திரிவேணி சங்கமத்திற்கு வந்து செல்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள்.

இந்த கும்பமேளாவிற்காக அலகாபாத் என்கிற பெயரை “பிரயாக்ராஜ்” என மாற்றி தங்களது நீண்டநாள் கனவை நிறைவேற்றிக் கொண்டது உ.பியை ஆளும் இந்துத்துவ கும்பல். பெயர் மாற்றப்பட்டு நடக்கும் உபியின் முதல் கும்பமேளா இது. இதையே இந்து ராஷ்டிரத்தின் மாபெரும் வெற்றியாக பிரகடனம் செய்து கொள்கின்றது இக்கும்பல்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சில மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டுவிட்டன. அலகாபாத்தின் சுவர்கள் முதல் பாலத்தின் தூண்கள் வரை கும்ப மேளா கதையை விளக்கும் வண்ண ஓவியங்கள், அலகாபாத்தில் மூன்று மாதங்கள் திருமணம் நடத்த தடை, சாமியார்கள் மற்றும் மேட்டுக்குடிகளின் ஆன்மிக பயணத்துக்கு தோதாக சுங்கக் கட்டணம் ரத்து என பல அறிவிப்புகள் வெளியாகின. அரசுத்துறைகளின் செயல்பாடு அனைத்தும் பாஜக முதல்வர் யோகியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

சுமார் பத்து கிலோ மீட்டருக்கு  தூரத்தில் இருந்தே மேளாவிற்கான வரவேற்பு தூண்கள் மற்றும் மோடி-யோகியின் முகம் பொறித்த பேனர்கள், சாலைகள் எங்கும் ஆக்கிரமித்திருந்தன. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலிசு-ராணுவத்தின் பாதுகாப்பு வேறு!

படிக்க:
♦ உத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்
கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்கா?

குடில்கள் மற்றும் தற்காலிக பாலங்கள், மின்விளக்குகள் அமைப்பது, சாலைகள் அமைப்பது, கழிவறை அமைப்பது என அனைத்து பணிகளும் ஒப்பந்தம் விடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உ.பி போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாநிலத்தில் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாய் இருந்தன. இந்த ஏற்பாடுகளின் மூலம் பாஜக ஆதரவு முதலாளிகள், வணிகர்கள், சங்கி பிரமுகர்கள் பலர் ஆதாயம் அடைந்திருப்பதோடு, பாரதிய ஜனதா கட்சிக்கும் கமிஷன் என்பது சட்டப்பூர்வமான நன்கொடையாக கூட வந்திருக்கலாம். 4000 கோடி ரூபாய் என்றால் சும்மாவா என்ன?

கும்பமேளாவின் நுழைவுவாயிலில் ருத்ராட்ச கொட்டை தாங்கிய தூண்கள் வரவேற்க, சாலையின் இரு புறங்களிலும் மோடி மற்றும் யோகியின் சாதனை விளக்க விளம்பர பேனர்கள் கண்களை பறித்தன. அதை விட முக்கியம் மோடி அரசின் “மேக் இன் இந்தியா” திட்டத்தை காட்சிபடுத்தும் விதமாக உ.பியின் ஒவ்வொரு மாவட்ட சுய தொழில் கண்காட்சியை யார் கண்களில் இருந்தும் தப்பிவிடாத வண்ணம் வைத்திருந்தனர். வாங்கும் சக்தியற்று மக்கள் இருக்கையில் மேக் இன் இந்தியா என்பது மாபெரும் தோல்வித் திட்டம் என்றால் பதாகைகள் என்னவோ அதன் வெற்றியை பயங்கரமாக பீற்றிக்கொண்டன.

அதனைத் தாண்டி சென்றால் பிரமாண்டமாக அமைப்பட்ட உபி சுற்றுலாத் துறையின் சார்பாக மேட்டுக்குடியினர் தங்கும் ஐந்து நட்சத்திர குடில்கள், தனியார் உணவகத்தின் கூடாரங்கள், போலிசு – ராணுவத்திற்கான பிரமாண்ட பரேடு கிரவுண்டு மற்றும் அவர்கள் தங்குவதற்கான குடில்கள் என  ஒரு மாபெரும் நகரையே உருவாக்கியிருந்தனர். ஹாலிவுட் புராணப் படங்களுக்கு போடப்படும் மாபெரும் செட்டுக்கள் போல இங்கே உண்மையாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஒரு புராணப் புரட்டிற்காக இத்தனை ஏற்பாடுகள், நிதி ஒதுக்கீடு, மனித வளம் என்று பார்த்தால் இந்தியா ஏன் வளரவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்டுவிட முடியாது.

சுருக்கமாக சொல்வதன்றால் ஒரு புதிய நகரத்திற்குள் நுழைவது போன்றதொரு உணர்வு. 3200 ஹெக்டேர் பரப்பளவு. 15 கிலோ மீட்டர் சுற்றளவில் கும்பமேளா நகரம்…! இதில் காமெடி என்னவென்றால் அலகாபாத்தின் நகருக்குள் நுழையும்போது கூட இப்படியொரு உணர்வு வரவில்லை. பார்க்கும் இடமெல்லாம் படுமோசமாக இருந்தன. மாடுகள் சாலையில் திரிவதும், பாழடைந்த கட்டிடங்களும்-புழுதியுமான மனிதர்களும் என்று நகரமே புழுதியிலும் அழுக்கிலும் குடியிருந்தது.

இதனைக் கடந்து சென்றால் எந்த திசையில் திரிவேணி சங்கமத்தை நோக்கி செல்வது என்று தெரியாமல் திக்குமுக்காட வைக்கும்படியான நிறைய சாலைகள். அதாவது இந்த சாலைகளே மொத்தமாக 250 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதில் எப்படி செல்வது என்ற ஒரு குழப்பம். ஒரு வழியாக விசாரித்துச் சென்றால் திரிவேணி சங்கமம் வரவில்லை. காஞ்சி சங்கராச்சாரியின் மடம்தான் வந்தது.

அலகாபாத்தில் உள்ள காஞ்சி சங்கர மடம்

சும்மா சொல்லக்கூடாது. சங்கரராமனை கொன்ற பாவத்தை கங்கை கரையில் கழுவிவிடலாம் என்று எண்ணும்படியாக பிரமாண்டமாக ஒரு கோவிலைக் கட்டியிருந்தது சங்கராச்சாரி மடம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கங்கா-யமுனா மற்றும் இல்லாத நதியான சரஸ்வதி சங்கமிக்கும் இடம் உள்ளதென்றார்கள்.  குறுக்கும் நெடுக்குமாக செல்லும் சாலைகள் அனைத்திலும் இரும்பு தகடுகள் போட்டிருந்தனர். வெறுமனே மணலில் கார்கள் சென்றால் சிக்கிக் கொள்ளுமல்லவா? அதில்தான் மக்களும் நடந்து செல்கிறார்கள்.

அலகாபாத்தின் பல கிராமங்களுக்கு சென்று வர போதிய சாலைகளோ, பேருந்து வசதிகளோ இன்றும் இல்லை. இன்னமும் சைக்கிள் ரிக்‌ஷாவும், ஷேர் ஆட்டோவும்தான் மக்களுக்கு உதவுகிறது. ஆனால் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக பல பத்து தற்காலிக சாலைகள், 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

சங்கம ஏரியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. இது கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களில் மூன்றில் ஒரு பகுதி. ஒரு மாவட்டத்துக்கு தேவையான பாதி மின்கம்பங்களை அந்த குறுகிய இடத்தில் மட்டும் வைத்திருந்தார்கள். உண்மையில் உபியில் பல கிராமங்களுக்கு இன்னமும் மின்சாரம் இல்லை என்பது ஒரு மன்னிக்க முடியாத உண்மை.

புனித நீராடும் மக்களுக்காக 1,22,000 கழிப்பறைகள் வைத்திருந்தார்கள். ஆனால் இந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாது. எதிலும் நீர் இல்லை. மோடி அரசின் ஸ்வச்ச பாரத் விளம்பரம் போல நாற்றமெடுக்கும் கழிவறைகள் சங்கம பகுதியின் மணத்தை தீர்மானித்தன. அவசரத்துக்கு போகிறவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் நிச்சயம் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.

அடுத்து கங்கையை கடந்து சாமியார்களிடம் ஆசி வாங்குவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலங்கள் மட்டும் 22 இருந்தன. பல மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்களின் உழைப்பில் இந்த பாலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த தொழிலாளிகள் யாருக்கும்  கங்கையில் புனித நீராடும் நேரம் கூட இருந்திருக்காது. உண்மையில் இப்பால கட்டுமானம் அவ்வளவு பெரிய வேலை.

படிக்க:
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
♦ கோவில் சொத்துக்களை அபகரிக்க காவிகளின் சதி | காணொளி

எந்த பாலத்தில் நடந்து சென்றாலும் அந்த வீதியில் இருக்கும் சாதா மற்றும் ஸ்பெசல் சாமியார்களான நாகா சாமியார்களிடம் சென்று தரிசனம் பெறலாம்.  இந்த நாகா சாமியார்களுக்கு மட்டும் பலநூறு ஏக்கரில் நிலம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. கூடாரம், மின்சாரம் என்று ஏக போகமாய் இந்த முற்றும் துறந்த அம்மண சாமியார்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

நாகா (நிர்வாண) சாமியார்களின் கூடாரம் அனைத்தும் கங்கை ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அமைத்திருக்கிறார்கள். ஒரு சாமியாரே முதல்வராக இருக்கும் போது நாகா சாமியார்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். அதில் கார்ப்பரேட் சாமியார்களுக்கு தனி குடில், சாதா சாமிகளுக்கு தனி குடில் என்று காசுக்கு ஏற்ற மாதிரி அமைதிருந்தார்கள். சாமியார்களும் வர்க்க ரீதியாக பிரிந்திருந்தார்கள். இதில் வேடிக்கை என்ன்வெனில் கார்ப்பரேட் சாமியார்களுக்கும், மடாதிபதிகளுக்கும் ஏர்டெல், குயிக் ஹீல் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்திருக்கின்றன.

அதேபோல் கவுரி எண்டர்பிரைசஸ், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற பல தனியார் நிறுவனங்கள் சார்பில் பக்தர்கள் குளித்துவிட்டு உடைமாற்றுவதற்கென்று தங்கள் நிறுவன விளம்பரத்தை தாங்கிய கூடாரத்தை அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கம் திருநீறு பூசிய நிர்வாண சாமியார்கள். மறுபக்கம் சிவப்பாக்கும் களிம்பு விளம்பரம். இல்லறம் துறவறம் இரண்டையும் கார்ப்பரேட் அறம் கவுட்டுக்கிடையில் பிடித்து வைத்திருந்தது.

பாரம்பரிய விழாவிற்கான UNESCO-வின் அங்கீகாரத்தை கும்பமேளா பெற்றுள்ளதால் 192 நாடுகளின் ஆன்மீகவாதிகளை கவர சுமார் 450 கோடி வரை விளம்பரத்திற்காக செலவிடப்பட்டதாக பீற்றிக் கொள்கிறது பாஜக அரசு. இந்த வெளிநாட்டு ஆன்மீகவாதிகளுக்காக தனிச் சிறப்பான நட்சத்திரக் குடில்கள் திரிவேணி சங்கமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு ஆன்மீகமானாலும் இந்த விதேசிகள் இந்தியா எனும் பாம்பாட்டி நாடுகளின் விசித்திரங்களை கண்டு ரசித்து சிரித்திருப்பார்கள்.

அடுத்தபடியாக இந்தியாவின் பணக்கார மேட்டுக்குடியினர் தங்குவதற்கு கங்கா மற்றும் யமுனா நதிக்கரையில் பல ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தார்கள். இதில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட குடில்கள் போடப்பட்டுள்ளன. இந்தக் குடில்கள் அனைத்தும் ஒரு நட்சத்திர விடுதியின் விருந்தினர் அறையோடு போட்டி போடும் தன்மை கொண்டவை. இந்த ஆடம்பர குடில்களுக்கு சற்று தள்ளி பொது மக்கள் அல்லது ஏழைகள் சதையைக் கிழித்து எலும்பைத் துளைக்கும் கடுங்குளிரில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். ஆக வறுமைதான் உண்மையான துறவறம். துறவறம்தான் உண்மையான இல்லறம். இதுதான் இந்துத்துவ அறம்.

இந்திய  தொழில் கூட்டமைப்போ  “இந்த திருவிழாவின் மூலம் சுமார் 1.2 லட்சம் கோடி வருவாய் வரும்” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறது. சில நாடுகள் விபச்சாரத்தை உள்ளடக்கி சுற்றுலாத்தலமாக்கி வருமானம் பார்ப்பது போல இது ஆன்மீக சுற்றுலா. அதில் அரசுகள் மக்கள் பணத்தை வீசியெறிந்து பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவ முயல்கின்றன. ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல் தமது  பரிவாரப்படையை களத்தில் இறக்கி பக்தர்களுக்கு சேவை செய்வதென்ற பெயரில் இந்து வெறியூட்டி தங்களுடைய கேடான நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேலை செய்து வருகிறது. அதற்கு கும்பமேளா ஒரு முகாந்திரம்!

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து

#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

துரைக்கு வந்த மோடி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க செய்த வரவேற்பை விட ‘தரமான’ வரவேற்பு தந்தவர்கள் தமிழக மக்கள்தான். சும்ம சொல்லக்கூடாது செய்முறை செய்வதில் நம்மை மிஞ்ச ஆளில்லை என பெருமை கொள்ளலாம். நம்மைப் போன்றே கேரள மக்களும் சிறப்பாக செய்துள்ளனர்.

டிவிட்டரில் உலக அளவில் #PoMoneModi, #GoBackModi இரண்டும் டிரண்டிங் ஆனது. இப்போது மெய்நிகர் உலகில் டிரண்டிங் ஆனது நாளை மெய்யுலகிலும் ஆகும், ஆக்குவோம்…

*****

Villavan Ramadoss :

நீ வர்றது தெரிஞ்சா அவனுங்க லீவு போட்டுட்டு வந்து ட்வீட்டர்ல குத்த வைப்பானுங்க. இதுல நீ ரெண்டுநாள் லீவு இருக்குறப்போ அங்க போயிருக்க..

Joe Milton :

மோடி : மூன்று பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம்
தமிழன் : தமிழ்நாட்டுல எத்தனை பாராளுமன்ற தொகுதி ?
மோடி : 39
தமிழன் : அப்போ எத்தனை கல்லூரி ?
மோடி : 13
தமிழன் : இங்க ஏற்கனவே 29 இருக்கே . மீதி 16 – ஐ மூடுறதா ப்ளானா ?
மோடி : புடுச்சேரிக்கோ வணக்கம் !

Lakshmanasamy Odiyen Rangasamy :

அடேய்…..ரொம்ப ஓவராத்தான் போறீங்கடா

 

Villavan Ramadoss :

ஏம்பா மோடி, கம்பெனி கொஞ்சம் டல்லா போவுது.. தமிழ்நாட்டுக்கு ஒருக்கா போயிட்டு வா. ஏன்னா நீ போனாத்தான் இவனுங்க டிவிட்டர் பக்கமே வர்றான்னுங்க.

– டிவிட்டர் ஓனர். #GoBackModi

Arul Ezhilan :

#GoBackModi
முகிலனின் தரமான சம்பவம்!


Kalis Kalimuthu :

Troll Mafia

மோடியின் தமிழக வருகை மரண கலாய் #GoBackModi 😅 வச்சு செஞ்சிருக்காங்க

Mathavaraj :

மதுரைக்கு வந்த சோதனை இது.

தனது முதல் சுதந்திர தின உரையின் போது “குண்டு துளைக்காத கண்ணாடிக்குள்ளிருந்து பேச மாட்டேன், என் மக்களிடையே பேச எனக்கு எதற்கு பாதுகாப்பு?; என வீறாப்பு பேசியவர்தான் இந்த மோடி. அப்போது அதை ஆஹோ ஓஹோவென்று சங்கிகளும், ஊடகங்களும் புகழந்து தள்ளினர்.

இன்று அதே மோடி மதுரையில் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் 3 கி.மீ சுற்றளவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதையும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். மத்தியப்படை, சிஐஎஸ்எப், அதிரடிப்படை, கருப்புப் பூனைப்படை, சிறப்புப் படை, சிறப்பு கண்கானிக்கும் பிரிவு, ஆயுதப்படை, உள்ளூர் போலீஸ் எல்லாம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எதோ படையெடுப்பு போல பரிவாரங்கள் அணிவகுத்து இருக்கின்றன. இவ்வளவு செலவும், இவ்வளவு பாதுகாப்பும் இவ்வளவு அவமானமும் எதற்கு? பொன்னார், தமிழிசை, எச்சை ராஜாவைத் தவிர மோடி வந்து அடிக்கல் நாட்ட வேண்டும் என யார் இங்கு அழுதார்கள்?

இதையெல்லாம் விட மகா கேவலம் என்னவென்றால், அருகிலேயே பாஜகவின் கட்சிக் கூட்டம் நடக்க இருக்கிறதாம். அதில் பங்கேற்க வரும் சொந்தக் கட்சியினரைக் கூட மெடல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப் போகிறார்களாம். பாஜக விலும் ’தமிழக’ பாஜக என்றால் தனி கெத்துத்தான் போல.

அது.
#GobackModi #GobacksadistModi #BoycottModi

Abdul Hameed Sheik Mohamed :

தமிழ் நாட்டில் ஆயிரம் பற்றி எரியும் பிரச்சினைகள். கஜா புயல் நிவாரணம் உட்பட ஆயிரம் கோரிக்கைகள். எதைப்பற்றியும் பிரதமர் வாய் திறக்கவில்லை. மாறாக தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையைப் பற்றி பேசுகிறார். மத அரசியல்- சாதி அரசியல் இரண்டையும் தவிர ஒரு பிரதமருக்கு எந்த ஆர்வமும் அரசியலில் இல்லை #GoBackModi

Aazhi Senthil Nathan :

சேச்சே, தமிழர்களுக்கு வரவர டிப்ளமசின்னாவே என்னென்னு தெரியமாட்டங்குது. தமிழ்நாட்டை அந்நிய நாடாக நினைக்கும் நம்ம அண்டைநாட்டுப் பிரதமர் மோடி வரார்னா, சர்வதேச மரபுப்படி நாம வரவேற்கத்தானே செய்யணும்! கோல்டு வார் பீரியட்ல கூட இப்படியெல்லாம் கிடையாதேய்யா! இப்படி மூணு லட்சம் நாலு லட்சம் ட்வீட் போட்டு ஓடவச்சா நாளைக்கு அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகள்ளாம் எப்படியா நம்மூருக்கு வருவான்? வந்தாரை வரவேற்கும் தமிழகம் இப்படி குட்டிச்சுவரா போச்சேன்னு நினைக்கும்போதுதான் –
(சோடா குடுய்யா!) – மிடில!
( #GoBackModi ன்னு இங்க ஹேஷ்டேக் போடணும்னு ஒருத்தர் மிரட்டரார். முடியாது முடியாது. போட மாட்டேன்).

Vijai Prasad :

தவறான பிரச்சாரங்களை மக்கள் கருத்தில் கொள்ள கூடாது. யாரும் எங்களை எதிர்க்க கூடாது. பயத்தாலும், எதிர்மறை எண்ணங்களாலும் எனக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோர். மோசமானவர்களை புறந்தள்ளுங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்.. பாரத் மாதா கீ ஜெ.. வணக்கம்

Rajagopal Subramaniam :

என்ன இருந்தாலும் அவர் நம்ம பிரதமர்டா..கொஞ்சம் நாகரீகமா செய்ங்கடா…

விசாரணைன்னு வந்துட்டா ஜட்ஜை கொலை பண்றவன், உச்சநீதிமன்றத்தை மயிரா கூட மதிக்காம சிபிஐ டைரக்டரை கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சொரணை இல்லாம மாத்துற பிரதமனுக்கு இல்லாத நாகரிகம் எங்களுக்கு எதுக்குடா இருக்கணும்…?
#GoBackModi

தமிழச்சி (Tamizachi) :

#GoBackModi ஹாஷ்டேக் இந்திய அளவில் இருந்து உலகளவில் முதலிடத்திற்கு வந்துள்ளது. சொந்த நாட்டு பிரதமரை தங்கள் மாநிலத்திற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை நோக்கி  #தேச_விரோதிகள்  என்று  #பாஜக / #ஆர்எஸ்எஸ்  கும்பல்கள் குற்றம் சாட்டலாம்.

ஆனால் உலகளவில் அரசியல் ஆய்வாளர்களாலும், உலக மக்களாலும் கவனிக்கும்படி #மோடி வெறுப்பை தமிழர்கள் காட்டுகிறார்கள் என்றால் மோடியின் கழிச்சடை திட்டங்களும், தமிழக மக்களுக்கு எதிரான செயல்களும் #தமிழர்கள் மீதான வெறுப்பை எவ்வாறு அரசியலாக்கினார் என்பதையும் இன்று உலகத்தினரே கவனிக்கும்படி மோடியின் தமிழக வருகை அடையாளப்படுத்தி இருக்கிறது.

கேவலம் ஒரு செங்கல்லை நட்டு #எய்ம்ஸ்_மருத்துவமனை க்கு அடிக்கல் நாட்டுவிழா நடத்தி, “முட்டாள் மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து விடலாம் என்பது மகா முட்டாள் மோடியின் கணக்கு.” அது தமிழர்களிடம் எடுபடாது என்பதை மக்கள் நிருபித்துவிட்டார்கள்.

சென்ற முறை மோடி தமிழகம் வந்தபோது கருப்பு கொடிகளுக்கு பயந்து சந்து பொந்து சுவர்களை இடித்து திருட்டுத்தனமாக ஒருவழியாக தப்பிச் சென்ற கோழை இம்முறை மதுரையில் சிக்கிக் கொண்டு உலகளவில் அவமானத்தோடு நிற்பதற்கான காரணத்தை அவர்களுக்கு மக்களே உணர்த்திவிட்டார்கள்.
வாழ்க! வெல்க!! தமிழர்களின் எதிர்ப்பு அரசியல் விழிப்புணர்வு!!!
தமிழச்சி (Tamizachi)
27/01/2019
#GoBackSadistModi

படிக்க:
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !

Abdul Hameed Sheik Mohamed :

மோடியை வைகோ திட்ட ஆரம்பித்ததும் ஒரு சேனல் மின்னல் வேகத்தில் லைவ் வை கட் பண்ணின வேகம் இருக்கே…..ஒரு தனியார்சேனலில் வேலை பார்க்கும் ஆன் லைன் எடிட்டர் சொல்கிறார் ‘ சர்க்கஸ் கம்பெனில வேலை பார்க்கிற மாதிரி இருக்கு ப்ரோ….தினமும் நெருப்பு வளையத்தில் புகுந்து வெளிய வர வேண்டியிருக்கு..”

Bala G :

அடிமைகள் vs தமிழர்கள்..

Bala G :

விடாது கருப்பு..

தமிழர்கள் பாதிக்கப்பட்டு நிற்கும் போது ஒரு பிரதமரா வந்து எட்டிப்பார்க்க துப்பில்ல..

Bala G :

Mathavaraj :

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

Aazhi Senthil Nathan :

Cpiml Tamilnadu :

#GoBackModi
பாசிச பாஜக ஆட்சி ஒழிக!

கதிர் நிலவன் :

 

ராஜ குலோத்துங்கன் :

பெரியார் மண்ணில்..
Sadist-க்கு இடமில்லை..

Ramesh Periyar :

Arunkumar Veerappan :

பாவத்த😒😒😒

#PoMoneModi
#GoBackModi

Error 404 Tamil
என்னாமா கூவுறண்டா கொய்யால 🤣🤣🤣🙈🙈👏👏
Dumilisai Vera Level Kalaaai

 

ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

0

சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வழங்கியது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முக்கிய வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறது என சிபிஐ கருதுகிறது. அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை தனக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக ‘ஜனநாயக’ அமைப்புகளின் துணையுடன் தூக்கி அடித்தது மோடி அரசு. சுதந்திரமான அமைப்பான சிபிஐ-க்கு இந்த நிலைமையா எனக் கூப்பாடு போட்டாலும் மோடி அரசு அதை பொருட்படுத்தவில்லை. சிபிஐ இயக்குனரை அவமானப்படுத்தி அனுப்பியதோடு, பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த மோடி அரசுக்கு ‘ஒத்துழைக்காத’ சிபிஐ அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டனர். அனைத்தையும் ஐசிஐசிஐ – வீடியோகான் போன்ற சில வழக்குகளில் குறைந்தபட்சமாக செயல்பட பார்க்கிறது சிபிஐ. எதேச்சதிகாரத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி கும்பலுக்கு அது எரிச்சலை, குடைச்சலைத் தருகிறது.

திசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டிருக்கிறார். தங்களுடைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத நிலையில் உள்ள அருண் ஜேட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண் ஜேட்லி ஐசிஐசிஐ – வீடியோகான் முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ என தனது முகநூலில் எழுதுகிறார்.

“புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது” என ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிப்போன இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜேட்லி, ஐசிஐசிஐ மோசடியாளர்களுக்கு ஒத்து ஊதும் பதிவை தொடங்குகிறார்.

“ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன். ஐசிஐசிஐ வழக்கின் முக்கியமான இலக்குகளின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் மீண்டும் அது வந்து போனது. முக்கியமான இலக்குகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போகத் தெரியாத இடத்துக்கு (அல்லது எல்லா இடங்களிலும்) பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்?” என வங்கி மோசடிகளை விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜேட்லி. இதைச் செய்வது யார்? நிதியமைச்சராக இருந்தவர். இந்தியா திரும்பி வந்தால் இப்போது நிதியமைச்சர் ஆகக் கூடியவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.

இந்த வழக்கின் பின்னணி என்ன? யாரெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?

2012-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை கடனாகக் கொடுத்தார். வீடியோ கான் நிறுவனம், இந்த பணத்தை, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு அப்படியே மாற்றிவிட்டது. இந்த முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார். சிபிஐ முறைகேட்டில் தொடர்புள்ள மூவர் மீது வழக்கு பதிவு செய்தது.

இடமிருந்து: தீபக் கோச்சார், சாந்தா கோச்சார், மற்றும் வேணுகோபால் தூத்.

ஆனால், முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை. ஐசிஐசிஐ-யின் தற்போதைய செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்மென் சாக்ஸின் தலைவர் சஞ்ஜோய் சாட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார். ஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸாரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர். கிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க  வேண்டிய அல்லது கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜேட்லி, வெளிப்படையாக நோய் படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத் துடிக்கிறார்.  சிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜேட்லி.

prashant-bhushan
பிரசாந்த் பூஷண்

“மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது சரியானதல்ல.  சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது,  அது சுதந்திரமாக தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

“எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது.  மேற்பார்வையில் நடப்பது என்பதும்கூட பரந்துபட்ட மேற்பார்வை என்பதுதான் பொருளே அன்றி, குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் தலையிடுவது அல்ல” என்கிறார்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.

படிக்க:
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

கடந்த நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் ‘ஜனநாயக’ப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் துணை அமைப்புகளை காலில் போட்டு மிதித்தது.  கார்ப்பரெட் கயவாளிகள் ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு ‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர். மீதமிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார். இதெல்லாம் அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.


கலைமதி
செய்தி ஆதாரம்:த வயர்


இதையும் பாருங்க …

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தை தலைமையேற்று நடத்திய CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை…

♠ இந்த அறிவியல் மாநாடு என்பது பல ஆண்டுகளாக அதன் போக்கில் பல விஞ்ஞானிகள் தங்களுக்குள் கலந்துரையாடக்கூடிய ஒரு இடமாக அதைப்பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அண்மையில் அந்த மாநாட்டை மூடநம்பிக்கை சார்ந்த கருத்துக்களின் பிரச்சாரத் தளமாக அதை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
மதம் சார்ந்த கருத்தாக்கங்களைத்தான் அறிவியல் என்று சொல்லக்கூடிய மிகக் கேவலமான தன்மையை இந்த நாட்டின் தலைமையாக இருக்கக்கூடிய மோடி முன்னெடுக்கிறார்.

♠ எது எப்படி இருந்ததோ? அது அப்படி இருக்கிறது… எது எப்படி நடக்கிறதோ… அது அப்படி நடக்கிறது… எது எதிர்காலத்தில் எப்படி நடக்குமோ? அது அப்படி நடக்கும்… இடியட்ஸ் இதவந்து பிலாசபிங்கிறான்…

முழுமையான வீடியோவைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

இலங்கையில் நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் இயக்கம் !

தோட்டத்தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாயக மாற்ற வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்றும் (28.01.2019) போராட்டங்கள் நடைபெருகின்றன.

தொழிலாளிகள் கோரிக்கையை நீத்துப் போகச் செய்யும் சதித்தனமான அறிவிப்பாக நாளொன்றுக்கு 700 ரூபாய் சம்பளம் என பேசப்படுகிறது. ஆனால் தொழிலாளிகள் இதனை ஏற்கவில்லை. மேலும் இப்போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல 1000 Movement என்ற அடிப்படையில் ஒரு முகநூல்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தகவல் :
1000 இயக்கம் முகநூல் பக்கத்திலிருந்து…

*****

லங்கையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து, கரடுமுரடான மலைகளை சீர்படுத்தி தங்கள் “உள்ளங்கால் வெள்லெலும்பு” தெரிய உழைத்த மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

ஆம் கடந்த 23 ஜனவரி 2019 அன்று தோட்டத் தொழிலாளர்கள் தங்களது தினக்கூலியாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுதழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தங்கள் போராட்டத்தை நடத்தினர். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக இலங்கையின் மூன்று இன மக்களும் ஒன்றாக கைகோர்த்து உள்ளனர்.

இந்த போராட்டத்தை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைத்து நடத்தினர்.

மாத்தளையில் நடந்த போராட்டம்…

யாழ்பாணத்தில் நடைபெற்ற போராட்டம்…

கண்டியில் நடைபெற்ற போராட்டம்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இலங்கை
முகநூல் பக்கத்திலிருந்து…

*****

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து பலரும் தங்களது முகநூல் பக்கத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்…

Mohana Dharshiny

லையக தோட்டத் தொழிலாளர்களின் 1000/- அடிப்படைச் சம்பளக் கோரிக்கைகான போராட்டங்கள் இலங்கை முழுவதும் சுமார் 30 இடங்களில் இன்று நடைபெற்றிருக்கிறது. இன, மொழி , பிரதேசவாதங்களைக் கடந்து இலங்கை முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரும் அவர்தம் பிள்ளைகளும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருக்கிறார்கள்.

அரசியலற்றவர்களாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் நலன்விரும்பிகளும் இளைஞர்களும் சமூக ஜனநாயகவாதிகளும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் கேட்கும் மலையக மக்களின் போராட்டத்தில் பங்கேற்றிருப்பது நம்பிக்கையான முன்னேற்றம்.
ஆனால் , இந்த சம்பள கோரிக்கையை வென்றெடுப்பதில் தொழிற்சங்க அரசியல் இருக்கிறது.

40% தொழிற்சங்க பலத்தைக் கொண்ட தொழிற்சங்கங்களே , முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள்.

அவர்கள் யாருக்கு சார்பாக முடிவெடுப்பார்கள் என்பது தொழிலாளர்கள் அறிந்ததே…
பெருந்தோட்ட கம்பனிகளுக்காக உழைக்கும் அதே தொழிற்சங்கங்களுக்கு தொடர்ந்தும் சந்தா செலுத்திக் கொண்டு இருக்கப் போகிறோமா என்பதை தோட்டத் தொழிலாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

*****

Kalai Marx

லையகத் தமிழர்கள் வெறும் கூலிக்காக மட்டும் போராடவில்லை. அது அவர்களது நில உரிமைக்கான போராட்டமும் கூட. நூற்றி ஐம்பது வருடங்களாக பண்படுத்தி பயிரிட்டு வந்த நிலம், அந்த மக்களுக்கு சொந்தமாக வேண்டும். அதை மறுப்பதற்கு நீங்கள் யார்?

“வடக்கிற்கு வந்து குடியேறுங்கள். அதிக கூலி கொடுக்கிறார்கள்.” என்று சில வடக்கத்திய வலதுசாரிகள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். மலையகத் தமிழர்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை இது.

பெருந்தோட்ட முதலாளிகள் அந்த மக்களை சுரண்டி முடிந்து, தற்போது வடக்குத் தமிழ் முதலாளிகள் சுரண்ட விரும்புகிறார்கள். “அதிகம் சுரண்டுவது யார்?” என்று சிங்கள முதலாளிகளும், தமிழ் முதலாளிகளும் போட்டி போடுகிறார்கள். இந்த அயோக்கியத்தனத்திற்கு தமிழ்த் தேசிய முகமூடி ஒரு கேடு.

ஏற்கனவே கிளிநொச்சி போன்ற இடங்களில் குடியேறிய பெருந்தொகையான மலையகத் தமிழர்கள், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் ஏழைகளாக, கூலித் தொழிலாளர்களாக தான் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு முதலாளியை காட்டுங்கள் பார்ப்போம்.

உங்களுக்கு தெரியுமா? நீங்கள் குறிப்பிடும் அதிக கூலி மலையகத்திலும் கிடைக்கிறது! தேயிலைத் தோட்டங்களை விட்டு விட்டு வேறு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நாட்கூலி ஆயிரம் ரூபாய்களுக்கு மேலே கிடைக்கிறது. இதனால் பல மலையக இளைஞர்கள் காய்கறித் தோட்டங்களிலும், கட்டுமானத் துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.

ஆகவே, மலையகத் தமிழரின் கோரிக்கை வெறும் கூலி உயர்வு சார்ந்தது அல்ல. அதுவும் அரசியல் உரிமைப் போராட்டம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.