Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 490

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

60

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் வீடியோ…

தோழர் மருதையன் உரையின் சுருக்கம்:

வ 26, 1957 -ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அரசியல் சட்டம் 25, 26 பிரிவு சாதி அதிகாரத்தையும், சாதிக்கான உரிமையையும் நியாயப்படுத்துகிறது என்று கூறி சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்து ரிமாண்டு செய்தது அரசு.

அதில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் பேசிய அதிகாரி ஒருவர், “தெரியாமல் செய்துவிட்டேன், செய்தது தவறு” என எழுதிக் கொடு. உன்னை விட்டுவிடுகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அச்சிறுவனோ தான் செய்தது நியாயம் என்று கூறினார். “என்னை வெளியே விட்டாலும் மீண்டும் கொளுத்துவேன்” என்று கூறினார். அப்போராட்டத்தில் உயிரிழப்பு மொத்தம் 20 பேர்.

சாதாரண மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சாதி என்னும் இழிவை நியாயப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்தை கொளுத்தினால் போதும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

இன்று கேரளாவில் யதுகிருஷ்ணா என்றொரு தலித் இளைஞர் அர்ச்சகர் பயிற்சி பெற்று அங்கு அர்ச்சகர் ஆகியிருக்கிறார். அவருக்கு பயிற்சியளித்த குரு, “யதுகிருஷ்ணா 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார். இப்போது அவர் எல்லாவிதங்களிலும் ஒரு பார்ப்பனர்” என்று கூறியிருக்கிறார்.

ஒரு சூத்திரன் பார்ப்பனியத்தைக் கடைபிடித்து அர்ச்சகர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அக்காரணத்தால் தான் ஆர்.எஸ்.எஸ். இந்த நியமனத்தை வரவேற்கிறது. அது தான் இப்போது கேரளாவில் நடந்திருப்பது. இது தான் ஒழிக்கப்படவேண்டும். பெரியார் ஜாதியை அழிக்க விரும்பினார். ஆர்.எஸ்.எஸ். கும்பல் சாதியை நிலைநாட்ட விரும்புகிறது.

அரசுக்கு கோவில் மீது உரிமை கூடாது என்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்து அறநிலையத் துறையை மூடத் திட்டம் தீட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கோவில்களை மீட்போம் என்ற பெயரில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணிய சாமி புள்ளி விவரங்களோடு பேசுகிறார். தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமாக கிராமப்புறங்களில் 4.7 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.  2.6 கோடி சதுர அடி நிலம் இருக்கிறது. நகர்ப்புறங்களில், 20 கோடி ச.அடி. இடம் இருக்கிறது. இதனை மொத்தமாக சுருட்டிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல் விழைகிறது. வெறும் விநாயகர் ஊர்வலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாடு முழுக்க இவ்வளவு பெரிய கலவரங்களைச் செய்தவர்கள், கோவில்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்?

சி.பி. இராமசாமி ஐயர் கொடுத்த அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு கோவில்களின் விக்கிரகங்கள், நகைகள், நிலங்கள் பிராமணர்களால் திருடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்து அறநிலையத் துறை வசம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 1993 -ம் ஆண்டு மே மாதம், ம.க.இ.க கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தியது. மே -1 அன்று சுமார் 1000 பேரை தடுத்து கைது செய்து ரிமாண்ட் செய்தது. மே 24 அன்று பெண்கள் உட்பட தோழர்கள் கருவறைக்கு உள்ளே நுழைந்து பெரியார் அம்பேதக்ர் படம் வைத்தும் போட்டோ எடுத்தனர். அப்போது ம.க.இ.க. -வினர் நீதிமன்றத்தில் உள்ளே சென்றோம் எனக் கூறினர். ஆனால் சாட்சி சொல்ல வந்த பார்ப்பனர்கள் யாரும் அவர்களைப் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டுச் சென்றனர்.

இவ்வழக்கு வெற்றி எனப் பேசுகிறார்கள். அது நடைபெறவில்லை. அரசியல் சட்டம் அப்படி ஒளிரவில்லை. தற்போது அர்ச்சகர் வழக்குத் தீர்ப்பு, யானையை பானைக்குள் அடைக்கத் தடையில்லை என்பதைப் போன்றதுதான்.

அன்று நூற்றுக்கணக்கான பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்தது போல் இன்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் செய்கின்றன. சாதி உரிமைகளை அரசியல் சட்டம் 25, 26 பாதுகாக்கிறது. வெறும் இந்துத்துவம் மட்டும் அல்ல அனைத்தும் மதங்களிலும் நடக்கும் ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது.

அம்பேத்கர் இந்த அரசியல் சட்டத்தை கொளுத்துவேன் என்றார். பெரியார் 1957 -லேயே கொளுத்திவிட்டார். இது கொளுத்தப்பட வேண்டியது. இப்பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது. பிரச்சினையை தெருவில் தான் தீர்க்கவேண்டும்.

 

 

கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !

0

மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்க ‘நீட்’ (NEET) தொழிலாளிகளின் தொழில் உரிமையைப் பறிக்க ‘நீம்’ (NEEM) குடிமக்கள் வாழ்வை அழித்துக் குடியரசுக் கொண்டாட்டம்!

ண்ணூர் அசோக் லேலாண்டில் பணி புரியும் 100 தொழிலாளர்கள் தங்கள் உணவு இடைவேளையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அசோக் லேலாண்ட் நிர்வாகம் நிரந்தரப் பணியாளர்களின் உற்பத்தி சார்ந்த வேலைகளில் தொழிற் பழகுநர்கள் (Apprentices) மூலம் நடத்துவதற்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த எதிர்ப்பை அவர்கள் நிர்வாகத்திற்காக மட்டுமின்றி, இதற்கு ஆதரவாகச் செயல்பட்ட தொழிற்சங்கத் தலைமைகளுக்கு எதிராகவும் பதிவு செய்தார்கள்.

நிரந்தரத் தொழிலாளர்களின் பணியில் இப்படி நேரடியாக தொழில் பழகுநர்களைப் பயன்படுத்தும் திட்டத்திற்கு, தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘நீம்’ எனப்படும் திட்டம் வழி வகுக்கிறது. இந்தத் திட்டத்தின்படி தொழிற்சங்கமும் நிர்வாகமும் போட்டுள்ள ஒப்பந்தம் தொழிலாளர்களை நிர்பந்தப்படுத்துகிறது.

(மாதிரிப்படம்)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள “தேசிய வேலை வாய்ப்பை உயர்த்தும் திட்டம் (National Employability Enhancement Mission) என அழைக்கப்படும் இந்த ‘நீம்’ -ஐக் கண்டு நிரந்தரப் பணியாளர்கள், அஞ்சுகிறார்கள். இது கொல்லைப்புற வழியாக தொழிற்சாலையின் நேரடி உற்பத்தியில் சட்டவிரோதமாக நுழைக்கப்படும் ஒப்பந்த முறை என்பதாலும் தொழிலாளிகளின் கூட்டு பேர உரிமையை ஒழித்துக் கட்டிவிடும் என்பதாலும் இதனைக் கண்டு தொழிலாளர்கள் அஞ்சுகிறார்கள்.

அகில இந்திய தொழிற்கல்வி மையம், AICTE (ALL India Council for Technical Education) மூலம் 2013 -இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீம்’ திட்டம் 2017 -இல் பா.ஜ.க.வின் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் இந்தத் திட்டத்தின் மூலம் பணிக்கு வரும் தொழிற் பழகுநர்கள் இதுவரை நிரந்தரப் பணியாளர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நேரடி உற்பத்தியில் ஈடுபடும் விதமாக கனரக வாகன உற்பத்தி (Automobiles), மின்னணுவியல் (Electronics) துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சமென இந்தத் திட்டத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2006 -இல் இந்தத் திட்டம் நோக்கியா, ஃபாக்ஸ்கான், ஹூண்டாய் போன்ற நிறுவனங்களால் அவர்களின் நிறுவன உற்பத்திக்கான புதிய உற்பத்தி சக்திகளை உருவாக்குவது என்ற வகையில் அவர்களே இதுபோன்ற பயிற்சியினை அளித்து உருவாக்கினார்கள். இந்த வகை தொழில் பழகுநர்கள் தொழிலக நிலை ஆணைகள் சட்டம் (Industrial Standing Orders Act) அல்லது தொழிற்பழகுநர்கள் சட்டம் (Apprentices Act) கீழ் வராது.

இது தொழிற்சாலை பயிற்சியாளர்கள் என்று அழைக்கப்படும் முற்றும் முழுவதும் நிர்வாகத்தின் பொறுப்பில் வரும் புதிய திட்டமாகும். இந்தத் திட்டம் நிரந்தரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் நிறுவனத்தின் மையமான உற்பத்தியை நிரந்தரப் பணியாளர்களுக்கு நேரடியாக பல கோணங்களில் உதவும் திட்டம் என மத்திய அரசால் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் எடுக்கப்படும் பயிற்சியாளர்கள் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத அதே மாதிரியான வேலையாட்களாக நிர்வாகத்தால் எடுக்கப்படுவார்கள். இப்படி எடுக்கப்படும் இளம் தொழிலாளர்கள் ஒரு வேளை 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகத்திற்குத் தேவைப்படுவார்களேயானால் பணி நிரந்தரமும் செய்யப்படலாம் என்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதுவும் இதுவரை தனியார் நிறுவனங்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட எல்லா வகை தொழிலாளர்களுக்கும் நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு உகந்ததாக இல்லாத வாக்குறுதியாகவே கடந்த காலங்களில் இருந்தது போலவே இதுவும் இருக்கும்.

முதலாளிகளுக்கு இந்தப் பயிற்சியாளர்களைச் சட்டப்பூர்வமாக்கியது மட்டுமல்ல, அதற்கு மேலும் செல்கிறது இந்தத் திட்டம். இது தனியார் துறைக்கு மட்டுமேயானது, மேற்படி நிறுவனங்கள் இந்த நீம் திட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. இந்தப் புதியத் திட்டம் பயிற்சியாளர்கள் என்ற வரையறையையே மாற்றுகிறது.

தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான ஒரு சிறந்த தரகனைப் போல் இந்தத் திட்டம் செயல்படுமென மத்திய அரசு வாய்க் கூசாமல் முன் மொழிகிறது. இந்த நீம் திட்டம் மூலம் எடுக்கப்படும் தொழிலாளர்களுக்கு தொழில் துறையில் பணி புரியும் பயிற்சியற்ற பொது ஊழியர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் படி ஊதியம் வழங்கப்படும். அதே சமயம், இந்தத் தொழிலாளர்கள் Skilled Labour -களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுவார்கள். Skilled Labour -களுக்கு வழங்கப்படும் எந்த வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

பணியின் போது பாதுகாப்பு என்பதும் இவர்களது சொந்தப் பொறுப்பையே சாரும். பணியில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டப்படியான (Workmen Compensation Act) எந்தவித பாதுகாப்பையும் இழப்பீட்டையும் இந்தப் பணியாளர்கள் கோரமுடியாது.
இதுவரை நிரந்தரப் பணியாளர்களை ஒழித்துக் கட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திக் கொண்ட முதலாளிகளுக்கு இப்போது ஒப்பந்தக்கார முதலாளிகளையும் ஒழிப்பதன் மூலம் இரட்டிப்பு உழைப்புச் சுரண்டலை ஏகபோகமாக்கிக் கொள்ள இந்த நீம் திட்டம் வழி வகுக்கிறது.

தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இவர்களை விடுவிக்கும்போது தொழிலாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள், உரிமைகளுடன் கூடிய தொழிலாளர்கள் தேவைகள் இந்த நீம் திட்டத்தின்படி இல்லாமல் ஒழிக்கப்படுகிறது. இவர்களுக்கு ESI, PF கூட கட்டவேண்டியது இல்லை. இதுவரை ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு இந்த உரிமைகள் வழங்கப்பட்டு வந்ததோடு, சில இடங்களில் பணி தொடர்ச்சியும் போனசும் குறைந்த பட்சமாவது வழங்கி வந்தார்கள். இந்தச் சட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற முறையில் பெற்று வந்த குறைந்தபட்ச சலுகைகளையும் பறித்துவிட்டது.

அசோக் லேலாண்ட், மாருதி, ஹூண்டாய், ஃபோர்டு, நிசான், மெர்சடிஸ் பென்ஸ் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களும், நோக்கியா, ஃபாக்ஸ்கான், சாம்சங் போன்ற மின் அணுவியல் நிறுவனங்களும் மற்றும் GEC, L&T போன்ற மின் பராமரிப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சட்டப்படியான சுரண்டலுக்கு வழி வகுப்பதற்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் உற்பத்தியில் தொழிலாளர்களிடம் நல்ல முன்னேற்றத்தையும் திறமையையும் உருவாக்கும். ஆனால் நிறுவனங்கள் இந்தத் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் போது மிகச்சிறந்த திறனாளிகளாக தொழிலாளிகளோடு நிபந்தனை இல்லாமல் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் எனக் கோருகிறது. இதன்மூலம் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு நிபந்தனைகள் மேல் நிபந்தனைகளைப் போட்டு, ஏதோ தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற தொழிலாளர்களை கம்பெனிகள் ஏன் எடுக்கவேண்டும்?

இந்த நீம் திட்டம் 16 வயதிலிருந்து 40 வயது வரைக்கும் தொழிலாளர்களை வேலைக்காக பயிற்றுவிக்கப் படுபவர்களாகவே அறிவிக்கிறது. இதுவரை ITI, Diploma, Engineering என படித்து வந்தவர்கள் செய்து வந்த வேலையை அவர்கள் அல்லாதவரை பயிற்சி அளிப்பதன் பேரில் ஈடுபடுத்தித் தங்களது சுரண்டலை நிர்வாகம் தடையின்றி நடத்திக் கொள்ளும் அதே வேளையில் இதற்காகவே படித்த இளைஞர்களையும் அவர்கள் படித்தப் படிப்பையும் லாயக்கற்றதாக மாற்றுகிறது இந்தத் திட்டம்.

இதன்மூலம் தொழிற்கல்வி பயில்வதில் ஆர்வம் குன்றி, அடுத்தக்கட்ட தொழில் முன்னேற்றத்திற்கான உந்துதல் இன்றி எதிர் காலத்தில் தொழில்துறை நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது.

2013 -இல் இதை அறிமுகம் செய்தபோது, 18 வயதிலிருந்து 35 வயது வரை என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இப்போது இது 16 வயதிலிருந்து 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 40 வயது வரை வேலை தேடுபவராகவே அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.

இது தொழிலாளிகளுக்கு எதை உணர்த்துகிறது?

முதலாளிகளுக்கான அதிகப்படியான உற்பத்தி என்பதில் மட்டுமே இந்தத் தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இது அசோக் லேலாண்டில் பணி புரியும் நிரந்தரத் தொழிலாளிகளுக்கு, GEC-ல் பணி புரியும் நிரந்தரத் தொழிலாளிகளுக்கும் புதுமையான திட்டம் அல்ல.

இந்த ஆலைகளை குசேலர், பிரகாஷ், மைக்கல் பெர்னான்டஸ் போன்ற தொழிற்சங்க தலைவர்கள் மூலம் தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வாங்கிக் கொடுக்கும் நோக்கத்திற்காக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளுடன் இந்த Outsourcing முறை கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அப்போதுதான் முதன் முறையாக நிரந்தரப் பணியாளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான வாய்ப்பை இந்தத் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் மீது திணிக்கப் பட்டது.

இந்த நீம் திட்டத்தை இப்போது தொழிற்சாலையில் புகுத்தியதால் இவர்கள் எச்சரிக்கை அடைகிறார்கள். நிரந்தரத் தொழிற்சங்க பண்பாடு கொண்ட நிறுவனங்கள் இவை. அசோக் லேலாண்டில் பணி புரியும் 1,750 நிரந்தரத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவே இங்கு அயல் பணி (Out source) முறையில் வேலை வாங்கப்பட்டு வந்தது.

இந்தக் கம்பெனியில் 6000 -க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்களால் நிர்வாகத்துடன் சம்பள உயர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. தற்போது 2016 செப்டம்பரில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்த நிர்வாகம் முனைகிறது.  இதில் 400 விதமான வேலைகள் வெளியில் இருந்து செய்யும் ஒப்பந்த முறைக்கு விடப்பட்டுள்ளது.

அசோக் லேலாண்ட்டின் எண்ணுரர் மற்றும் ஒசூர் பணி மனைகளில் 2,154 நிரந்தரப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். உற்பத்தி சார்ந்த தொடர் வேலையில் நீம் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களைக் கொடுத்து அனுபவமிக்க தொழிலாளர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். இந்த சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் இதை மட்டும் சொல்லவில்லை. தொழிலாளர்களின் பணிக்கு பாதுகாப்பே இல்லாத வகையில் இந்த ஒப்பந்தத்தில் நீக்கு போக்காக உற்பத்தி உயர்வுக்காக மட்டுமே இது செயல்படுத்தப்படும் என அறிவிக்கிறது.

இந்த எதிர்ப்பை தங்களுக்கு இதுநாள் வரை அறிமுகமான தொழிற்சங்க இயக்கங்கள் CITU, WPTUC, முற்போக்கு தொழிலாளர் மன்றம், குசேலர் நலமன்றம், தொழிலாளர் பேரியக்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற சங்கங்களின் தலைவர்களை இந்த ஒப்பந்த முறை சம்மந்தமான குற்றவாளிகளாக அறிவித்து, தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

ஒரு சில தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தின் போதே தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள். நிர்வாகம் இந்த வகைப் பயிற்சியாளர்களை உற்பத்தியில் அனுமதிக்கா விட்டால், நிரந்தரப் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து 4000 மணி நேர சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொள்வதுடன் இந்த எதிர்ப்பில் கலந்து கொள்ளும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்வோம் என நிபந்தனை போட்டுள்ளது.

நிர்வாகத்திற்கு ஆதரவான தொழிற்சங்க முடிவை எதிர்த்து, 1500 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பமிட்ட மனுவை வழங்கியுள்ளார்கள். தொழிலாளிகளின் பாதுகாப்பினைத் தொழிற்சங்க இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததே இந்தத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்குக் காரணமான அமைந்தது. மத்திய அரசு உழைக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை ‘நீட்’ என்ற தேர்வு முறையின் மூலம் பறித்தது போல, தொழிலாளர்களின் தொழில் உரிமையை இந்த ‘நீம்’ திட்டத்தின் மூலம் பறிக்கிறது.

தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை ஒழித்துக் கட்டும் ஆர்.எஸ்.எஸ். மோடி, குடிமக்களின் வாழ்வை அழித்து குடியரசைக் கொண்டாட இந்திய மக்களை அழைக்கிறார். தான் உலக முதலாளிகளுக்காக இதுவரை 1400 விதித் திருத்தங்களைச் செய்துள்ளதாகவும் இந்தியாவில் 90% அந்நிய நேரடி முதலீட்டினை நம்பகமாக தேசம் கடந்த தொழில் நிறுவனங்கள் செய்யலாம் என உலக நாடுகளிடம் அறை கூவுகிறார்.

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் தொழில் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இதுவரை போராடிப் பெற்ற உரிமைகள் என்பதை உணராமல் தொழிலாளி வர்க்கம் புதிய உரிமைகளுக்காக போராடாமல் இருப்பதுடன், இருப்பதை இழப்பதற்கு எதிராகவும் போராடாமல் இனியும் இருக்கமுடியாது என்பதை உணரவேண்டும்.

பிழைப்புவாத தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவையை உணர்ந்து செயல்படவேண்டும். புரட்சிகர தொழிற்சங்கத்துக்குள் அணி சேரவேண்டும்.

-பழனி

 

மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு -வை ஆதரியுங்கள் !

0

ன்பார்ந்த தொழிலாளர்களே !

தொழிற்சங்கம் என்றால் என்ன? என்று ஒரு தொழிலாளியிடம் கேட்டால், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சூப்பர்வைசர் அல்லது மேனேஜரை உடனே வந்து கேட்க வேண்டும். வருடந்தோறும் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பெற்றுத் தர வேண்டும் என கூறுவார். இதை தவிர்த்து ஒரு தொழிற்சங்கத்தின் வேலை என்று எதுவும் இல்லை என்று தான் நாம் நினைக்கின்றோம்.

இது சரிதானா? “ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்களை பெற்றுத் தருவது, நிம்மதியான பணிச்சூழலை உருவாக்கி தருவது என்பது தொழிற்சங்கத்தினுடைய கடமைதான்.” ஆனால் இது மட்டும் தான் தொழிற்சங்கத்தினுடைய வேலையா? இதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என நினைப்பது சரியா?

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கக்கூடிய பயிற்சி பள்ளி என்று தொழிலாளிகள் தலைமையில் மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டிய ஆசான் லெனின் சொல்லியிருக்கிறார்.

அரசியல் எங்களுக்கு எதற்கு என்று கேட்கிறீர்களா? நாம் எதற்காக நிர்வாகத்திடம் ஊதிய உயர்வு கேட்கிறோம். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, சமீபத்தில் பேருந்து கட்டண உயுர்வு போன்ற விலைவாசி ஏற்றங்களால் நாம் தற்போது வாங்கிக் கொண்டிருக்கின்ற சம்பளம் போதவில்லை. அதனால் தானே ஊதிய உயர்வு கேட்கிறோம்.

நம் முதலாளியிடம் நாம் போராடிப் பெறுகின்ற ஊதிய உயர்வை வெளியில் இருக்கின்ற டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு நாம் வாங்கும் பொருட்கள் மூலமாக பிரித்து தருகிறோம். சரி, விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு தான் காரணம். இந்த வகையில் பார்க்கும் போது நம்முடைய ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் இந்த அரசும், அரசியலும் காரணமாக இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடாமல் அரசியல் வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று நீங்கள் சொல்லுங்கள்.

ஆனால் உங்களிடம் ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் இதை பற்றி பேசுவதில்லை. மாறாக எப்படி அரசாங்கம் மக்கள் விலைவாசி உயர்வு பற்றியோ அல்லது மற்ற பிரச்சனைகள் பற்றியோ யாரும் சிந்திக்கக் கூடாது என்பதற்காக, வீதிக்கு வீதி சாராயக் கடைகளையும், வீட்டுக்கு வீடு வாட்ஸ் அப், பேஸ்புக், ஆன்லைன் விளையாட்டு ஆகியவைகள் மூலம் மக்களை சீரழிக்கிறதோ அதைப் போல நமது ஆலையிலும் தொழிலாளர்களை போதை கலாச்சாரத்திற்கு மாற்றி வருகின்றனர்.

இந்த சமூகமோ சக மனிதனோ எப்படியோ போகட்டும், நான் மட்டும் நல்லா இருந்தால் போதும், எனக்கு என் பணம் கிடைத்தால் போதும் என்று நினைக்க முடியுமா? இந்த சமூகத்தில் நடக்கும் எதுவும் என்னை பாதிக்காது என்று யாரேனும் ஒருவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

சில நாட்கள் முன்பு உயிர்காக்கும் வேலை செய்கின்ற செவிலியர்கள் போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம்முடைய அக்கா, தங்கைகளோ சொந்த பந்தங்களோ இல்லையா? உயிரைப் பனையம் வைத்து மழையிலும், வெயிலிலும் அயராது உழைக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா?

சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இப்படி ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் நம் தலையில் இடியை இறக்குகின்றன. இந்த சமூகத்தில் தான் SRF -ல் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களாகிய நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கூறிய இந்த பிரச்சனைகளுக்காக எமது அமைப்பான பு.ஜ.தொ.மு. ஆலலகளிலும் சமூகத்திலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

உங்களிடம் வந்து ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் தொழிலாளர்களின் பிரச்சனைக்காக ஆலைக்குள்ளும் போராட்டம் நடத்துவதில்லை. சமூகப் பிரச்சனைகளுக்காக இம்மியளவு கூட கவலைப்படுவதுமில்லை. இவர்களா நம்மை காப்பாற்றக் போகிறார்கள் வேலையை விட்டு வேண்டுமானால் அனுப்புவார்கள் (2016ல் 4 தொழிலாளர்களை அனுப்பியது போல்).

ஆக நம்முடைய ஆலைக்குள் நடக்கின்ற பிரச்சனைகள் வேறு சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளும் வேறானவை அல்ல. இரண்டுக்குமே மூல காரணம் ஒன்றுதான். இந்த சமூக அறிவியலை புரிந்துகொள்வது தான் மார்க்சிய விஞ்ஞானம். அதனடிப்படையில் தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களை ஒரே வர்க்கமாக அணிதிரட்டும் வேலையை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் காண்ட்ராக்ட் தொழிலாளைகளை அணி திரட்டுகிறவிதமாக 28.01..2018 அன்று இந்திய அளவில் உள்ள தொழிற்சங்கங்களை இணைத்து மிகப்பெரிய அளவில் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான விடுதலைக்குப் போராடும் ஒரு சங்கத்தால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா? அல்லது எவன் செத்தால் நமக்கென்ன நம் வயிறு நிறைந்தால் போதும் என்று இருப்பவர்களால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா?

முடிவு உங்கள் கையில்…

இறுதியாக ஹிட்லர் கால ஜெர்மானிய கவிஞனின் கவிதை வரிகள்.

  • ஹிட்லர் யூதர்களை கொன்றொழித்தான். நான் அமைதியாக இருந்தேன்.
  • கத்தோலிக்கர்களை தேடிப்பிடித்து வெட்டினான். அவர்களைத் தானே கொல்கிறான் என அப்போதும் நான் அமைதியாக இருந்தேன்.
  • புரோட்டஸ்டண்டுகளை கொன்றான். அப்போதும் நான் இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.
  • கம்யூனிஸ்டுகளை கொன்றான். நான் கம்யூனிஸ்ட் இல்லை என்பதால் எனக்கு கவலை இல்லை என்று இருந்தேன்.
  • தொழிற்சங்கத் தலைவர்களை கொன்றான். நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
  • இறுதியில் அவன் என்னிடமே வந்துவிட்டான். திரும்பி பார்த்தால் என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை.

சிந்திப்பீர்… வாக்களிப்பீர்… தராசு சின்னத்தில்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
SRF மணலி கிளை.

*****

மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில்  பு.ஜ.தொ.மு வேட்பாளர்களை ஆதரித்து தராசு சின்னத்தில் வாக்களியுங்கள் !

அன்பார்ந்த தோழர்களே!

ணலி SRF தொழிற்சங்க தேர்தலில் ஏன் பு.ஜ.தொ.மு வெற்றி பெறவேண்டும் என்றால் வட சென்னை பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளிலுல் முதலாளித்துவம் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தி வருகின்றது. இந்த அடக்குமுறைகளிலிருந்து  தொழிலாளி வர்க்கத்தை காப்பாற்ற பு.ஜ.தொ.மு சங்கத்தால் மட்டுமே முடியும் என நடைமுறையில் கடந்த 6 ஆண்டுகளாக SRF MANALI தொழிற்சாலையில் சாதித்து காட்டியுள்ளோம்.

மேலும் மணலி தொழிற்சங்க கூட்டமைப்பில்(FMTU) அங்கம் வகித்து செயல்பட்டு கொண்டு இருக்கக்கூடிய பு.ஜ.தொ.மு சங்க நிர்வாகிகள் மணலி சுற்றுவாட்டாரத்தில் இருக்கக்கூடிய PALMALLORRY, TPL, MPL, CPCL, KOTHARI ஆகிய தொழிற்சாலைகளில் நடக்கக்கூடிய தொழிலாளர் விரோத போக்கான  செயல்களை கண்டித்துள்ளோம். குறிப்பாக TPL நிர்வாகத்தின் பெரும்பான்மை பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது தமிழக அரசின் TIDCO – வே TPL நிர்வாகத்தை நேரடியாக ஏற்று நடத்து என்ற முழகத்தின் கீழ் நடந்த போராட்டங்களுக்கு பு.ஜ.தொ.மு சங்கத்தின் சார்பாக முழு ஆதரவு கொடுக்கப்பட்டது.

திருவொற்றியூர் MRF ஆலையில் தொழிலாளர்கள் மீது செலுத்தப்படுகின்ற அடக்குமுறைகள் குறித்து கடந்த 26.01.2018 தேதியன்று பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு அவர்கள் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து MRF நிர்வாகத்தின் அடக்குமுறையை எப்படி முறியடிப்பது என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.

இப்படி மணலி, எண்ணுர், திருவொற்றியூர் பகுதிகளில் இயங்கக், கூடிய ஆலைகளில் தொழிலாளர் அடக்குமுறைகளுக்கு தீர்வு; அரசிடம் வெறும் சட்ட வாதத்தில் மட்டும் தற்போதைய தொழிலாளர்களின் உரிமையை தக்கவைத்து கொள்ள முடியாது. ஏனெனில் தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிற்சங்க சட்டஉரிமைகளை முதலாளிகளின் லாபத்திற்காக திருத்தி குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு! இதனை போர்க்குணத்தோடு எதிர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மீண்டும், மீண்டும் இந்த அரசிடமே கோரிக்கையை வைத்து மன்றாடி வருகின்றன.

ஆனால் நாளுக்கு நாள் வேலைபறிப்பு, ஆட்குறைப்பு, உச்சகட்டமாக நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து காண்ட்ராக்ட் கொத்தடிமை முறையை சட்ட பூர்வமாக செயல்படுத்த முதலாளிகளுக்கு அரசே ஆசி வழங்குகிறது!

நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராடாமல் இருக்க சில சீர்திருத்தங்கள் செய்தும், கைகூலி, பிழைப்புவாத, கலைப்புவாத தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களின் அரசியல் உணர்வை மழுங்க செய்கிறது ஆளும்வர்க்கம். இந்நிலையில் வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டும் போராடமல், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை சாதிக்க அரசியல் உணர்வு பெறவேண்டும் என புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவி அழைக்கின்றது.

அந்த வகையில் 29.01.2018 தேதியன்று நடைபெறும் மணலி SRF தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுத் தேர்தலில் பு.ஜ.தொ.மு தலைமையின் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண் :
பு.ஜ.தொ.மு
SRF மணலி கிளை.

 

புதிய கட்டணத்தை மறுப்போம் ! திருச்சி – திருப்பூரில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் “புதிய பேருந்து கட்டணத்தை செலுத்த மறுப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் பிரச்சாரம் நடத்தப்பட்டது ! அதில் சில போராட்டங்கள்…

***

திருச்சியில்…

குடியரசு தினமான 26.01.2018 அன்று ” மக்கள் வழிப்பறி திருடர்களிடம் ” சிக்கிய பயணிகளாக தவித்து வரும் நேரத்தில் “பழைய கட்டணத்தையே கொடுப்போம் புதிய கட்டணத்தை ஏற்க மறுப்போம்.”- என்ற முழக்கத்துடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் 30 -க்கு மேற்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் பிச்சாரம் செய்தனர்.

முழக்க அங்கி அணிந்து பிரசுரங்களை தோழர்கள் மக்களிடம் வினியோகித்த போது அனைவரும் ஆர்வமுடன் வாங்கி படித்தனர். பெண்கள், பயணிகள் படித்து விட்டு ஆர்வத்துடன் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த அரசு சாமானிய மக்களை ஒழித்து கட்டும் சதியில் தான் கட்டண உயர்வும் நடவடிக்கைகளும் உள்ளதாக கூறி ஆதரித்தனர். பலர் நிதியுதவி செய்தனர்.

டிரைவர் – கண்டக்டர்களும் ஆர்வத்துடன் பிரசுரத்தை வாங்கி படித்தனர். காவலர்கள் பிரச்சாரத்தை தடுக்க முனைந்த போது   “ஜனநாயக பூர்வமான எமது பிரச்சாரத்தை நிறுத்த முடியாது” என்று கூறி தொடர்ந்து செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

*****

திருப்பூரில்…

மோடியின்  அடிமை எடப்பாடி கும்பலால் பஸ் கட்டணம் 50 % முதல் 100 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என வரும் 31.01.2018 அன்று புதன்கிழமை காலை 11  மணிக்கு    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால் அனைத்து  பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஏற்கனவே திருப்பூரில் GST வரிவிதிப்பால் ஏற்றுமதி தொழிலும், உள்நாட்டு வேலைவாய்ப்பும் குறைந்து விட்டநிலையில் பிக்பாக்கெட் திருடன் போல நள்ளிரவில் பஸ் கட்டணத்தை ஏற்றி, கொஞ்சநஞ்ச பணத்தையும் புடுங்கி உழைக்கும் மக்களை நடுவீதியில் விட்டுள்ளார்கள்.
திருப்பூரில் பிடித்த கன்டைய்னர் பணம் எங்க? ரயிலில் காணாமல் போன பணம் எங்க? சேகர் ரெட்டி, அன்புநாதன்களின் கொள்ளைக்கும், அரசியல்வாதிகளின் – அதிகாரிகளின் மடத்தனத்தால் ஏற்படும் நஷ்டத்திற்கும் நாம் ஏன் வரி செலுத்தவேண்டும்? நஷ்டத்திற்கு காரணமான அமைச்சர் – அதிகாரிகளின் சொத்தை பறிமுதல் செய்து ஈடுசெய்யவேண்டும் . அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து   போராட வாருங்கள் – என மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

திருப்பூர் பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடத்தப்படும் தொடர் பிரச்சாரம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர் – 99658 86810.

*****

சிதம்பரத்தில்…

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் மாணவர்கள் போராடினார். இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த முனைவர் பட்டம் படிக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணிவாசகம் உள்பட 10 பேர் கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றது பின்னர் அவர்களை விடுவித்தது போலீசு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சிதம்பரம்.

 

சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் – ம.க.இ.க முற்றுகை ! வீடியோ

1

விஜயேந்திரனுக்கு செருப்படி – சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகை ! வீடியோ

மிழை அவமதித்த சின்ன சங்கரன், விஜயேந்திரனே தமிழகத்தை விட்டு ஓடு ! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், 27.01.2018 அன்று காலை 10:40 -க்கு சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகையிடப்பட்டது.

சேத்துப்பட்டு பேருந்து நிருத்தத்தில் இருந்து பறைமுழக்கத்துடன் துவங்கிய ஊர்வலம் சங்கரமட அலுவலகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றது. இதைக் கண்டு ஏற்கனவே அங்கு குவிந்திருந்த போலீசு பதறியடித்து ஓடிவந்து, போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறியது. ஆனால் தடையை மீறி சங்கரமட வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் முன்பு நின்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சென்னை ம.க.இ.க செயலர் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக விஜயேந்திரனுக்கு செருப்படி பூஜை செய்யப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்தது போலீசு. பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை – தொடர்புக்கு : 95518 69588

 

பேருந்து கட்டணம் செலுத்தாதே ! ஓடும் பேருந்தில் மாணவர்கள் அதிரடி – வீடியோ

3

பேருந்து கட்டணம் செலுத்தாதே ! ஓடும் பேருந்தில் பிரச்சாரம் – வீடியோ

க்களை கொள்ளையடிக்கும் புதிய பேருந்து கட்டணத்தை செலுத்த மறுப்போம்! பழைய கட்டணத்தையே செலுத்துவோம்! என மக்கள் மத்தியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் ஓடும் பேருந்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த பிரச்சாரத்தினை பொதுமக்களைத் தாண்டி பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளிகளும் ஆதரிக்கவே செய்கின்றனர். அதிமுக -வின் அல்லக்கையாக இருக்கும் ஒருசிலர் பிரச்சாரத்தை தடுக்க முயன்றாலும், மக்களே அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கின்றனர். பாருங்கள்!…பகிருங்கள்!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

விஜயேந்திரனுக்கு என்ன தண்டனை ? மாணவர்களின் எச்சரிக்கை வீடியோ !

13

விஜயேந்திரனுக்கு மாணவர்கள் எச்சரிக்கை !

தமிழை அழித்து, இந்தியை திணித்து, செத்த மொழி சம்ஸ்கிருதத்திற்கு சிங்காரம் செய்து இப்படியாக இந்தியாவில் பார்ப்பனியம் தலைவிரித்தாடுகிறது. அப்படித்தான் எச்ச ராஜாவின் ‘பிதாஜி’ வெளியிட்ட தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியிடும் விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்தின் போது சின்ன சங்கரன் தெனாவட்டாக உட்காந்திருந்தார். இதை ஒட்டு மொத்த தமிழகமும் கண்டித்து வருகிறது.

இந்த வீடியோவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் சங்கராச்சாரிகளையும், பார்ப்பனக் கூட்டத்தையும் நேருக்கு நேர் குற்றம் சாட்டுகிறார்கள்.

உரை:

மிழ்னா அவ்ளோ இளக்காரம்!
ம்……
தமிழ்த்தாய் வாழ்த்துன்னா உனக்கு உடம்பே எரியுது,

***********

ராஜாஜி ரெண்டு வாட்டி இந்தியை திணிக்க பாத்தாரு.
மொத வாட்டி தாளமுத்து, நடராஜன்னு ரெண்டு பேர் தியாகியானாங்க!
விருகம்பாக்கத்துல அந்த தியாகிங்க வீட்டுக்கு
போன வருசந்தான் நாங்க போனோம்!
அவரு வாரிசுங்க உன்னமாதிரி மாட மாளிகையில வாழலடா

அவங்கள ஏண்டா கொன்னீங்கன்னு அன்னைக்கு ராஜாஜிகிட்ட கேட்டா சட்டசபையில எகத்தாளமா சிரிச்சாரு

அந்த எகத்தாளம்தானே உனக்கும்?

அன்னைக்கு இந்தி திணிப்பை எதிர்த்து ஜீயரா போராடினான்?
தமிழுக்காக போராடுன தலைவருங்கள்ள ஒருத்தரு யாரு தெரியுமாடா?
எங்க மூவலூர் ராமாமிர்தம் அம்மாடா!
தேவதாசி குலத்தில் பொறந்து அதை ஒழிக்க பாடுபட்ட எங்க அம்மாடா!

எங்க பொம்பளைங்களை தேவதாசியாக்கினது யாரு? நீங்கதான்.

தாசிகங்க எங்க வீட்டு பெண்ணுங்கண்ணா தேவருங்க யாரு?
நீங்கதானே பூதேவர்கள்?
கோயில்ல உடைக்கிற தேங்காயும் உனக்குத்தான்,
தேவதாசியும் உனக்குத்தான்.

சத்தியமூர்த்தி அய்யரு அன்னைக்கு என்ன சொன்னாரு?
தேவசாசிய ஒழிச்சுட்டா
அப்புறம் கடவுளுக்கு யார் சேவை செய்வாங்கன்னு குதிச்சாரு!
ஏன் நாங்கதான் சேவை செய்யணுமா
உங்க அய்யரு குடும்பத்து பொண்ணுங்கள சேவை செய்ய அனுப்புன்னு
உங்க பூணூலைக் கோத்துப் புடிச்சி கேட்டது
எங்க முத்துலட்சுமி அம்மாடா!

தேவதாசி முறை வேணும்னு சொன்னவன் உங்களுக்கு பெரியவாளா?
ச்சீ த்தூ, வெக்கமாயில்ல?

தமிழ்நாட்டு பெண் குலத்தை உங்க கிட்டேயிருந்து காப்பாத்துனது
பெரியாரும், திராவிட இயக்கமும்தான், தெரியுமாடா?

ரெண்டாவது வாட்டி இந்தி திணிப்பு கொண்டு வந்தப்போ
கவர்ண்மென்டு கணக்குப்படியே 70 பேரைக் கொன்னீங்க!

இப்டியே செத்துகிட்டே இருப்போம்னு நெனச்சியா?
அதனாலதான நீயும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுன போது உக்காந்திருக்க!

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
ஏன் எந்திரிச்சு நிக்கலை” ன்னு கேட்டா – தியானமாம்

அதென்னடா தியானம்?
ஆ ஊன்னா தியானம் கிறாங்க
ஊரைக் கொள்ளையடிச்ச ஜெயலலிதா சமாதியில
மிச்சரு பன்னீரு குந்திக்கிணு தியானம்ங்குறாரு
சசிகலா பெங்களூரு ஜெயில்ல மவுன விரதமாம்! தியானமாம்!

உங்க ஜீயரு, பருப்புச் சோறை நெய்யில முக்கித் துண்ணுட்டு
பெருமாள் கோயில் வவ்வாலைப் பாத்துகினே குசு விட்டா
அதுக்குப் பேரு உண்ணாவிரதப் போராட்டமா?

இன்னாடா காமெடி பண்றீங்க?

*********

துல கதவத் தொற காத்து வரட்டும்னு தத்துவம் பேசுறான் ஒரு பாடு!
கதவைத் தொறந்தா காத்தா வருது? நாத்தமுல்ல வருது?
அவன் பேரு நித்தியானந்தாவாம்.

அவன் கம்பெனி பேரு சங்கர மடம்.
இவன் கம்பெனி பேரு நித்தியானந்தா தியான பீடமாம்!

நடிகையோட சாமியாருக்கு தனியா இன்னாடா வேலைன்னு கேட்டா,
அவனும் தியானம்கிறான்.

நித்தியானந்தா பெட்ரூம்ல தியானம் பண்றான்
விஜயேந்திரன் மேடையில தியானம் பண்றாராம்

ரஞ்சிதா மேட்டர்ல சிக்கினப்போ
நித்தியானந்தா என்ன சொன்னான் தெரியுமா?
ஆன்மீகவாதியை ஆன்மீகவாதிதான் விசாரிக்கணும்னான்

அதாவது இவரு பெட்ரூம்ல தியானம் பண்ணுனத
மடத்துல தியானம் செஞ்ச
தொழில் தெரிஞ்ச சாமியாருதான்
விசாரிக்கணுகுறான்.

ஒரு விதத்துல இதுவும் கரெக்டுதான்
பொம்பளை பொறுக்கிங்க, 420 ஃபிராடுங்க, கூலிக்கு கொல்றவங்கள
விசாரிக்கணும்மானா இன்னொரு ரவுடிதான செய்ய முடியும்?

பண்றதெல்லாம் பண்ணிபுட்டு சிக்காம தப்பிக்க தெரிஞ்சவன்தானே
பாஸ் ஆக  முடியும்.
அதுனாலதான் சங்கராச்சாரி பாஸ்.
அதுவும் லோகத்துக்கே கைடு பண்ற சூப்பர் பாஸ்

*********

நித்தியானந்தாவ பாரு

அந்தப்புரம் மாதிரி பொம்பள புள்ளைங்களா புடிச்சி போட்டிருக்கான்
எல்லாருக்கும் ஒரு காவித்துணியை சுத்தி விட்டு
சாமியாருங்கிறான்.
அவங்க வாயைத் தொறந்த வண்டை வண்டையா வருது
இதென்னடா புது டிரென்டா?

இனிமே பிராத்தல் நடத்துறவன் கூட
கஸ்டமருக்கெல்லாம் காவித்துணிய கட்டிவுட்டு
தியான பீடம்பான்.

கேள்வி கேட்டா,

எங்க இந்து மத உணர்வை புண்படுத்திட்டீங்க
பிராத்தல் வாசல்ல மண்டியிட்டு மன்னிப்பு கேள்னு
கேட்டாலும் கேப்பான்.

ஏன்னா, இது ஆன்மீக ஆட்சியாச்சே!

*******

க்தி, தியானம், சாமின்னா
இவங்களுக்கு அஜால், குஜால், கசமுசான்னு ஆயிப் போச்சு

சிவனடியார் ஆறுமுகசாமிய தெரியுமாடா?
அந்தத் தாத்தா முகம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது

சிதம்ரம் நடராஜர் கோவில்ல
உள்ள மேடையில ஏறி நின்னு தேவாரம், திருவாசகத்த பாடினாரு

உனக்கு பக்தி இருந்தா நீ இன்னா பண்ணியிருக்கணும்!

ஒரு வயசான சாமியாரு பாடுறார்னு, அவர மரியாதை செஞ்சிருக்கணும்
என்னடா பண்ணீங்க!

ஒரு நாயை இழுத்துப் போட்டு அடிக்கிற மாறி அடிச்சீங்க.
இன்னக்கி ஆண்டாளு நோண்டாளுன்னு குதிக்கிறீங்க

அன்னக்கி ஏண்டா எந்த நாயும் கேக்கல?
ஏன்னா ஆறுமுகசாமி சூத்திரன்.
கருவறைக்குள்ளே சூத்திரனும் நுழையக் கூடாது
சூத்திரனோட தமிழும் நுழையக் கூடாது

விஜயேந்திரன் பேசுறான் பாரு

நடராசப்பெருமான் உடுக்கு அடிச்சாராம்
அதிலேருந்து சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வந்திச்சாம்
வரும் வரும்.

உடுக்கடிச்சா இலக்கணம் வரும்
தவில் அடிச்சா  தத்துவம் வரும்
சொம்படிச்சா பதவி வரும்.

ஆனா உனக்கு ஆப்படிச்சிச்சிதுல்ல தமிழ்த்தாய் வாழ்த்து?

**********

விஜயேந்திரன் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
எழுந்திரிச்சி நிக்கல தெரியுமா?

அந்தப் பாட்டிலயே இவனுக்கு இருக்குது ஆப்பு.
உங்க தேவ பாடை மாதிரி பாடையில போகாம
உயிரோட இருக்குற மொழிடா எங்க தமிழ்னு
ஒரு ஆப்பு வச்சிருக்காரு மனோன்மணியம் சுந்தரனார்

“ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து”
-அந்த ஆப்பு சங்கராச்சாரி ஆசனவாய்ல ஏறிடிச்சி

அதான் அந்தாளால எந்திருக்க முடியல.
ரெண்டாவது ஆப்பு – திராவிடம்

“எக்கணமும் அதிற்சிறந்த திராவிட நற் திருநாடும்” –
இந்த வரி எச்சை ராசாவின் வாயிலயே வச்ச ஆப்பு.

சங்கராச்சாரி ஏன் எழுந்து நிக்கிலேன்றது
அவன் பேச்சிலய தெரியுது பாருங்க

தென்னாட்டுக்கு தமிழாம்
என்னாட்டுக்கும் சமஸ்கிருதமாம்

எந்த நாட்டில எவன்டா பேசுறான் சமஸ்கிருதம்?

வயசுப் பொண்ணை எவனாவது பொணத்துக்கு கட்டி வைப்பானாடா?
செத்த மொழிக்கு எதுக்குடா உயிருள்ள மொழியில அகராதி?
அத எவனாவது பேச முடியுமா?

மொழி மட்டுமா செத்த மொழி ?

“யமஹா, நமஹா, ஸ்வாகா” ன்னு அந்த மொழிய எவனாவது பேசினா
பேசுறவன் சீக்கிரமே ஆஸ்துமா வந்து இருமி
ரத்தம் கக்கியே செத்துருவான்!

தயவு செஞ்சு பிஜேபி காரனெல்லாம் சமஸ்கிருதம் கத்துகிட்டு  – அதுலயே பேசுங்க
எங்களுக்கு வேலை மிச்சம்.

மர்டர் கேசுல உள்ளே போன ஒரு அக்யூஸ்டை
மேடை போட்டு உட்கார வைக்கிறியே
ஏண்டா ஒங்களுக்கெல்லாம் வெக்கமானமே கிடையாதா?

அதென்னடா தனி மேடை? சாதித்திமிர்தானே?
தட்டுல காசு, பெட்டுல பொம்பள –
இது ரெண்டுக்கும் மட்டும் தீட்டு பாக்க மாட்டீங்க அப்படித்தானே?

“சாமியார்னு சொல்லிக்கிட்டு பொம்பளை பொறுக்காதீங்கடா”ன்னு
சங்கரராமன்னு ஒரு யோக்கியன் சொன்னாரு

சொன்னவரு அய்யருன்னாலும், லோககுருவ நாறடிச்சிட்டாருன்னு
அவரை வரதராஜ பெருமாள் கோயிலுக்குள்ளயே வச்சி கொன்னீங்க
இன்னக்கி ஆண்டாளு ஆண்டாளுன்னு அலப்பறை பண்றீங்க

இந்த ஸ்டாண்டு வச்ச நாமம், வெக்காத நாமமெல்லாம்
அன்னக்கி எங்கடா போனீங்க?

ஆண்டாளுக்கு குதிக்கிறியே
பெருமாள் கோயில்ல கொலையே பண்ணினானே
அங்கே செத்தவனும் ஐயிருதானடா
நீங்க கொலைகார ஐயிருக்குத்தான்டா சப்போர்ட் பண்ணினீங்க?

காசைக் கொடுத்து கோல்மால் பண்ணி
மொத்தப் பேரும் வெளியே வந்துட்டா
நீங்களெல்லாம் யோக்கியனாயிருவீங்களா?

அப்போ சங்கரராமனை கொலையை யாரு பண்ணுணா?
வரதராஜப் பெருமாளா?

கேட்டா ஜெகத்குருங்கிறான்
எப்புடி?  உலகத்துக்கே… குருவாம்
அதாவது அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா
டிரம்ப், புடின், எல்லாருக்கும் சேத்து
இவனுங்க ரெண்டு பேரும்தான் குருவாம்.

ஏண்டா, காஞ்சிபுரத்துல இருக்கிறது என்ன ஐ.நா சபையா?

டேய்….. நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கிறது
எங்களுக்கும் தெரியும்

நேத்து டிவி விவாதத்துல ஒரு பாப்பான் கேக்குறான்
தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்கலைன்னா தண்டனைன்னு சட்டம் இருக்கு
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிக்கலைன்னா தண்டனைன்னு சட்டமா இருக்குன்னு கேக்குறான்

ஐயிரு கேக்குறாருல்ல சொல்லுங்கப்பா

சின்னவாளு, பெரியவாளு, எச்ச ராஜா
இவங்க ரவுடித்தனத்துக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்?

செருப்பால அடிக்கலாமா?
சிறையில போடலாமா?
நாடு கடத்தலாமா?

சீக்கிரம் சொல்லுங்க!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

ஓட்டு கேட்டு வா துடப்பக் கட்டையாலே அடிப்பேன் ! வீடியோ

1

பேருந்து கட்டணக் கொள்ளை : கொந்தளிக்கும் கோயம்பேடு மார்க்கெட் தரைக்கடை வியாபாரிகள் ! வீடியோ

பேருந்து கட்டணத்தை அக்கியூஸ்டு அம்மா வழியில் அடிமை எடப்பாடி அரசு உயர்த்தி மக்களை வதைக்கிறது. இன்னொரு அடிமையான ‘தெர்மாகோல் விஞ்ஞானியோ’ மக்கள் கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டனர் என திமிராக கூறுகிறார்.

தங்கள் குமுறல்களையும், கோபங்களையும் கொட்டுகிறார்கள், சென்னை கோயம்பேடு காய் – கனி – பூ சந்தையில் உள்ள எளிய மனிதர்கள். பாருங்கள்… பகிருங்கள்…

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள் !

0
“பேருந்து கட்டண உயர்வு , நீ அடித்த கொள்ளைக்கு நாங்க ஏன் தாலி அறுக்கனும்!” என்ற முழுக்கத்தின் கீழ்  மக்கள் அதிகாரம் சார்பாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் 25-01-2018 மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் போலீசார் தடையை மீறி நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இதில் தோழர் . மாயாண்டி தலைமை தாங்கினார். தோழர் கோபிநாத் கண்டன உறையாற்றினார். நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். “கூலி வேலை செய்து நாம பொழைக்கிறோம், இனி என்ன எந்த அமைச்சராவது வந்தால் ஊர் பக்கம் வரமல்  விரட்டியடிக்கனும். எவனுக்குமே ஓட்டே போடக் கூடாது” என்று மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர். வெகு விரைவிலேயே வீதிக்கு வந்து போராடுவது தான் தீர்வு என்பதனை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 தகவல் :
மக்கள் அதிகாரம் 
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு: 81485 73417.
________

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ தமிழகமெங்கும் பற்றி பரவட்டும்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம். தொடர்புக்கு : 97888 08110.

__________

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கரூர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். அப்போராட்டம் மீண்டும் தொடரக்கூடாது என்பதால் கல்லூரியின் முதல்வர் பாண்டியம்மாள் மாணவர்களை மிரட்டும் தொனியிலும், மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளார்.

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூாி முதல்வா் பாண்டியம்மாளின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்!

மிழக அரசே!

  • பேருந்து கட்டண உயா்வை எதித்து போராடிய மாணவா்களை மயிா், மட்டை, புடுங்கிறிவீங்களாடா, என பேசி மிரட்டிய பாண்டியம்மாள் பதவியை பறி!

ளைஞா்களே மாணவா்களே !

  • லட்சகணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரத் திமிரை அடக்குவோம் !
  • ஏழை எளிய மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயா்வை கட்டமறுப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவா்- இளைஞா் முன்னணி.
கரூா்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புமாஇமு கோயம்பேடு முற்றுகை !

0

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 25.01.2018 (இன்று) காலை 11:00 மணியளவில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிறுத்த வாயிலில் போராட்டம் நடத்தப்பட்டது.

 

“போக்குவரத்துத்துறையின் நட்டத்திற்கு காரணம் அதிகாரிகள் அமைச்சர்களின் ஊழல் கொள்ளையே! ஆகவே நட்டத்தை ஈடுகட்ட அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்!” என முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து போராடும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைய வேண்டும். அரசு ஊழியர்கள், செவிலியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைப்போம். இந்த கட்டண உயர்வை மாற்றும் வரை போராடுவோம் எனக் கூறினர்.

இந்த போராட்டத்தில் பள்ளி – கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். சரியாக பேருந்து வாயிலில் இப்போராட்டம் நடைபெற்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்தை கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்ட முழக்கங்கள் :

  • போக்குவரத்துத்துறை நட்டத்திற்கு காரணம் அதிகாரிகள் – அமைச்சர்கள் ! அவர்களை ஏன் கைது செய்யவில்லை ?
  • போக்குவரத்துத் துரையை ஊழல் முரைகேடுகளால் கொள்ளையடித்த அமைச்சர்கல் – அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய் ! நட்டத்தை ஈடுகட்டு !
  • சீட்டு கிழிஞ்சி போச்சு… டாப்பு ஒடஞ்சி போச்சு… வெயிலில காயுறோம் ! மழையில நனையிறோம் என்ன மையி…க்கு கட்டண உயர்வு !
  • பேருந்து காட்டன உயர்வை ஏற்க மறுப்போம் ! கட்டணம் கொடுக்காமல் பயணம் செய்வோம் !
  • போக்குவரத்துத்துறையில் நட்டம் – நடத்தமுடியவில்லை என்றால் அரசு எதற்கு ? ஒதுங்கிக் கொள் ! மக்கள் பார்த்துக் கொள்கிறோம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை, தொடர்புக்கு – 94451 12675.

 

திருச்சியில் சின்ன சங்கரனுக்கு ம.க.இ.க-வின் செருப்படி பூஜை – வீடியோ

10

மிழை அவமதித்த சங்கராச்சாரி விஜயேந்திரனை எதிர்த்து திருச்சி பேருந்து நிலைய சந்திதிப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விஜயேந்திரனுக்கு செருப்படியுடன் பூஜை நடந்தது. இன்று (25.1.18 வியாழன்) நடந்த இந்தப் போராட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

 

 

நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு – வீடியோ

0

நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு – வீடியோ

டந்த 2017 ஜனவரி மெரினா போராட்டமானது நமது நினைவுகளில் இருந்து நீங்கியிருக்காது. மோடி அரசுக்கும், பார்ப்பனியத்திற்கும் தமிழ் மக்கள் போர்க்குணத்துடன் பாடம் புகட்டிய போராட்டமது. அந்த போராட்டத்தின் சிறு கீற்றினை தொகுத்து தருகிறது, இந்த வீடியோ தொகுப்பு. இந்தக் காட்சிகள் பல வினவு செய்தியாளர்கள் எடுத்தவை. பாருங்கள்… பகிருங்கள்…

 


 

பேருந்து கட்டணம் : மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் அரசு !

0

பேருந்து கட்டணம் மட்டுமல்ல – அனைத்திலும் மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் இந்த அரசு இனியும் நீடிக்கலாமா ?

பொதுமக்களே, மாணவ சமூகமே !

விடாதே. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்து “நீ அடிச்சகொள்ளைக்கு நாங்க ஏன் தாலி அறுக்கணும்?” என்று கேள்வி எழுப்பு !

லாப நட்டம் பார்ப்பதற்கு அரசு என்ன அம்பானியின் கிளை நிறுவனமா? போக்குவரத்துத் துறை நட்டத்திற்கு காரணமானவர்களை ஜெயிலில் ஏன் போடவில்லை? கொள்ளையடிச்ச அமைச்சர்கள் – அதிகரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நட்டத்தை ஈடுகட்டு.

கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய வற்றை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் உன்னை யார் ஆளச்சொன்னது?

150 ரூபா விவசாயக்கூலியில், தினமும் காலேஜுக்கு செல்லும் மாணவருக்கு எப்படி 50 ரூபாய் கொடுக்க முடியும்? ஒரு நாளைக்கு 100 ரூபா செலவு செஞ்சு 2 பிள்ளைகளை படிக்கவைக்க முடியுமா? 250 ரூபாய் சம்பளத்தில் 80 ரூபாய் பஸ் கட்டணம் என்றால் நாங்க வாழ்வதா இல்லை சாவதா?

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வேலை கொடுக்க துப்பில்லை. உத்திரவாதமான சம்பளம் இல்லை. விக்கிற விலை வாசியில் வாழ முடியல, கட்டண உயர்வை அறிவிக்க அரசுக்கு என்ன அரு கதை இருக்கு?

தனியார் பேருந்து லாபத்தில் ஓடும்போது, அரசுப் பேருந்து எப்படி நட்ட மாகும்? டீசல் வரி, டோல்கேட் வரியை தள்ளுபடி செய்! அதிமுக அமைச்சர்கள் சிலரது ஊழல் பணத்தை பறிமுதல் செய்தாலே பல ஆண்டுகால நட்டத்தை ஒரேநாளில் சரிசெய்ய முடியும்,

நட்டத்தை மக்கள்தான் ஏற்க வேண்டுமாம்? பேருந்துக் கட்டணத்தை குறைக்கமுடியாதாம்? மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களாம்,தெர்மக்கோல் முட்டாள் சொல்கிறார். தமிழகத்தில் மாணவர்கள் என்ற போராட்ட வெள்ளம் இந்த கிருமிகளை நிரந்தரமாக அழிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்கள் தமிழகமெங்கும் போராடி வருகிறார்கள், பள்ளி மாணவர்கள்கூட போராடுகிறார்கள். “பழைய கட்டணம்தான் தருவோம், புதிய கட்டணம் கொடுக்க முடியாது: யாரை கேட்டு இவ்வளவு கட்டணத்தை உயர்த்தினாய், திரும்பப்பெறு” என தமிழகம் முழுவதும் அனைத்து பஸ்களி லும் மக்கள் புதிய கட்டணம் செலுத்த முடியாது என மறுத்தால், அரசு என்ன செய்ய முடியும்?

எதிரி அடித்தால் தடுக்க வேண்டும் அல்லது திருப்பி அடிக்க வேண்டும் ஓடிக்கொண்டே இருந்தால் விரட்டி விரட்டி அடிப்பான். அதுபோல் மக்களுக்கு எதிரான இந்த அரசின் தாக்குதல்களை நாம் எதிர்த்து போராடா மல் சகித்து கொண்டு போவதால்தான் நள்ளிரவில் இரு மடங்கு அரசுப் பேருந்து கட்டண உயர்வை அமுல்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரங்களை – வாழ்வுரிமைகளைப் பறித்து அகதிகளாக, அடிமைகளாக மாற்றி வருகிறன்றன. நமக்கு பயன்படாத அரசை நாம் ஏன் மதிக்க வேண்டும். நம் வரிப்பணத்தை வாரிக்கொடுத்து ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

மக்களுக்கு எதிரான இந்த அரசின் அதிகாரத்தை அமுல்படுத்த விடாமல் கீழிருந்து மக்களை பயிற்றுவிக்கும் போராட்டமாக மாற்ற வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம் – 91768 01656

 

சின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

123

ச்ச ராஜாவின் தந்தையார் “தமிழ் – சமஸ்கிருதம்” அகராதி தயாரித்து, அதை வெளியிடும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது சபை நாகரீகத்துக்காகக் கூட எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார் சின்ன‘வாளு’. அதனை பல முகநூல் பதிவர்களும் கண்டித்துள்ளனர். இதே விஜயேந்திரன், தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்திருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏன் எழுந்திருக்கவில்லை என்றால் அப்போது அவர் தியானம் செய்தாராம். இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறது, காஞ்சி சங்கர மடம். அவாளின் கொழுப்புத் திமிரை ஆக்ரோசமாக கேள்வி கேட்கிறார்கள் நமது தமிழ் ஃபேஸ்புக் பதிவர்கள்.

– வினவு

*****

 Arul Doss Borntowin

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் , மதக் கலவரத்தை தூண்டும் எச்.ராஜா , மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வரும் நித்தியானந்தா பெண் சீடர்கள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானதே .

__________

__________

KR Athiyaman

அந்த நிகழ்ச்சியில் எதுக்கு தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பனும் ? அருமை தெரியாதவர்கள், அடிப்படை சபை நாகரீகம் தெரியாதவர்கள் chief guestஆ இருக்கும் நிகழ்ச்சியில் இதை இசைத்தது தான் தவறு.

_______________

Nelson Xavier

கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண விழாவில் வீட்டார் அன்போடு தந்த குங்குமத்தை நெற்றிப் பட்டையில் இட்டும், திருச்சியில் இராமசாமி அய்யர் கட்டிய மகளிர் கல்லூரி திறப்பு விழாவில் சமஸ்கிருதத்தில் ஒலித்த இறை வாழ்த்துப் பாடலுக்கு சபை மரியாதைக்காக எழுந்து நின்ற பெரியாரின் அணுகுமுறைதான் இந்த மண்ணின் பெருமிதம்.

யாருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதல்ல, யாரிடமிருந்து பாடம் கற்கப் போகிறோம் என்பதே எப்போதும் முக்கியம்

_________

“தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர்,
மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்”

-தந்தை பெரியார் திராவிடர் கழகம் .

_______________

Thiru Yo

செத்துப்போன தனது தாய்மொழிக்காக ‘தியானமிருந்த’ விஜயேந்திரனை இப்படி வறுத்தெடுக்கலாமா?

_______________

Panuval Mugund

இனி தேசிய கீதம் பாடும் போது தியானம் செய்வோம் என்று உறுதி ஏற்ப்போம்

-காஞ்சி பாறைகள்

_______________

_______________

Poornachandran Ganesan

ஓர் ஆள், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்கவில்லை. தேசியகீதம் பாடுமபோது மட்டும் எழுந்து நிற்கிறார். தமிழ அவருக்குத் தாய்மொழியாக இல்லாமல் போனால் போகிறது. மேடை மரபைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்தந்த நாட்டின் மரபுகளுக்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்பதுதான் நல்லொழுக்கம். அதெல்லாம் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

நேற்று (23.1.2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார் என்ற செய்தி இன்றைய (24.1.2018) டெக்கான் கிரானிக்கள் ஆங்கில நாளேட்டில் வந்துள்ளது!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து, அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?
தமிழ் நீஷ பாஷை – சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் – கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்?

தந்தை பெரியார் கட்டிக் காத்த தனிப் பண்பாடு

தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை, பார்ப்பனர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்!

மன்னிப்புக் கேட்கவேண்டும் சங்கராச்சாரியார்!

தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் பார்ப்பன மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை – தமிழர்கள் புரிந்துகொள்வார்களா – அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட?

தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்!

-கி.வீரமணி, தலைவர்
திராவிடர் கழகம்.

_______________

Karthik Meka

வள்ளலாரை ஏற்று கொள்வதும் தமிழ் அய்யா வழியை ஏற்று கொள்வதும் தமிழ். காஞ்சி மடத்தை விரட்டுவதும் தமிழ். நித்தியானந்தாவை விரட்டுவதும் தமிழ்.

தமிழுக்கு ஆக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும்.

_______________

Shankar A

இப்படி தமிழர்களையும் தமிழையும் தொடர்ந்து அவமதிப்பீர்கள். நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா ? உங்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை ? வெளியேறுங்கள்.

_______________

_______________

Mathava Raj

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எல்லோரும் எழுந்து நிற்கும்போது நீ ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டால், அந்த நேரம் அவாள் தியானத்தில் இருந்ததாகவும், கடவுள் வாழ்த்தின் போது பெரியவாள், சிறியவாள் எல்லாம் தியானத்தில் இருப்பதுதான் வழக்கம் என்றும் ஒரு விளக்கம் மடத்திலிருந்து தரப்பட்டு இருக்கிறது.

தமிழ் மொழியை, தமிழர்களை துச்சமாக மதித்து விட்டு அதற்கு இப்படியொரு திமிரான விளக்கம் அளிக்க பார்ப்பனிய பீடங்களுக்கு மட்டுமே இங்கு சாத்தியமாகும்.

அந்த எழவு தியானத்தை எழுந்து நின்று செய்தால் என்ன, மடத்தின் குடி முழுகியாப் போய்விடும்?

_______________

Keetru Nandhan

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜயேந்திரனால் தமிழர்களின் மனம் புண்பட்டு விட்டது. எனவே மனோன்மணியம் சுந்தரனார் சமாதிக்குச் சென்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது…

அவர் மன்னிப்பு கேட்கும்வரை, இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் காஞ்சி மடத்தின் முன்பு தொடர் போராட்டங்களை அறிவிக்க வேண்டும்.

_______________

ராஜா ஜி

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதும் பாடினால் மட்டுமே ஆரியம் நடுநடுங்கும், 1970-இல் கலைஞரின் பெருந்தன்மையால் விடுபட்ட இந்த வரிகளை பாடி மனோன்மணியம் சுந்தரம்பிள்ளைக்கு நன்றி சொல்லுவோம்;
இதோ பாடல் வரிகள்…..?

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.
இதை இணைத்தே பாடுவோம், ஆரிய கூட்டம் நடுங்கட்டும்…..

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

_______________

Kasi Krishna Raja

கல்வி அறிவற்ற ஒரு தற்குரி பிராமணன் ஒரு அடி மேலே…உயர் தமிழறிவு பெற்ற பேராசான் பாப்பையா ஓரடி கீழே…இது தான் பிராமண ஹிந்தியா…நீ பண்ணிய செயலுக்கு பாப்பையாவும் இந்நேரம் தீவிர தமிழ் தேசியவாதியாகியிருப்பார். தமிழன் மதமற்றவன். உன் அஸ்திவார செங்கல்லை ஓவ்வொன்றாக உருவுவோம்.

_______________

R T Muthu

விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவின் பொழுது தேசிய கீதமும் இசைப்பது என்பது தமிழ்நாட்டில் யாவரும் பின்பற்றும் நடைமுறை என்று , சின்னசங்கரனுக்கு அந்த காமாட்சி கூட, அசரீரி சொல்லவில்லையா?

_______________

மலையமான் தே.கி.

ஆண்டாள் டிஸ்சார்ஜ்ட்; சங்கராச்சாரி சின்னது அட்மிட்டட்..(பெருசும் அட்மிட்டட் தான்)

_______________

Villavan Ramadoss

ஐ திங்க்,

நாம ஈக்வலா ஓட்ட வேண்டியது சாலமன் பாப்பையாவையும்தான். சோறு திங்கிறது இங்க, பில்லை கட்டுறது அங்கயா?? ஜயேந்திரா, என்னை வாழ்த்தும்போது ஏண்டா ஏந்திரிக்கல?

_______________

ராஜா ஜி

ஏற்கனவே வைரமுத்து – ஆண்டாள் பிரச்சினையில் மாட்டிக்கிட்டோம்,
இப்போ விஜயேந்திரன் பிரச்சினை வேறு வந்துவிட்டதே!
– புலம்புறது யாரு தெரியுமா?

வைரமுத்துவை அழைத்து, விழா ஏற்பாடு செய்த தினமணி வைத்தியநாதய்யர் செய்யாத தப்புக்கு அய்யங்கார் ஜீயரிடம் மன்னிப்பு கேட்டுட்டார்.

எச்.ராஜா சர்மா முன்னிலையில் தமிழை அவமதித்த சங்கரரை , சர்மாஜி என்ன சொல்லி திட்டப்போகிறார்?
சர்மாஜியை நித்தியானந்த சீ.டிகள் என்ன அர்ச்சனை செய்யப் போகிறார்கள்?
நைனார் நாகேந்திரன் யாருக்கு என்ன விலை வைக்கப்போகிறார்?
தலை உருளப்போகிறதா?
நாக்கை வெட்ட வேண்டுமா?
மாமிகள் தலைமையில் போராட்டம் தொடங்கிய ஜீயர் என்ன செய்யப்போகிறார்?
2000 சிப்ஸ் விஞ்ஞானி எஸ்.வி.சேகரின் வாய்மூலம் என்ன?

_______________

Sivasankaran Saravanan

தேசியகீதம் பாடினால் எழுந்து நில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தலை வணங்கு, தேசிய கொடியை கண்டால் வணக்கம் செலுத்து என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்துவதற்கு நாம் நீதிமன்றம் போல கொடுங்கோலர்கள் அல்ல.

ஆனால் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க தெரிந்த விஜயேந்திரருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது தெனாவட்டாக உட்கார்ந்திருந்தார் என்றால் அது நிச்சயமாக தமிழர்களையும் தமிழையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.

என்னதான் அவர்கள் தமிழ்நாட்டில் உண்டு, தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுத்தாலும் ஆரியக்கூட்டம் தங்களை தமிழர்களாக உணரமாட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று!

தமிழ்த்தாயை அவமானப்படுத்தி ஒட்டுமொத்த தமிழர்கள் மனதையும் புண்படுத்திய சங்கராச்சாரி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!

_______________

வினோத் களிகை

செய்யாத தவறுக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்க சொன்னார்கள்

இப்போ (இந்து) தமிழரால் பிழைப்பு நடத்தும் காஞ்சி சின்னவா தமிழ்த்தாயை அவமரியாதை செய்துட்டா

மன்னிப்பு கேட்பாரா? மன்னிப்பு கேட்க செல்வார்களா?

_______________

இரவிக்குமார்

“ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ”
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே…

என்றிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏன், கலைஞர் 1970-ல் ” ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ” என்ற வரிகளைக் கலைஞர் ஏன் உருவினார்?

அங்கிருந்து துவங்குகிறது திராவிடத்தின் வாயடைத்தது…

அத்தகைய திருத்தம் செய்தவர், “செயல் மறந்து வாழ்ததுதுமே” என்பதைச் “செயல் புரிந்து வாழ்த்துதுமே” என்று திருத்தியிருந்தால் அது வரவேற்கத் தக்கதாயிருந்திருக்கும்…

அன்றிலிருந்தே தமிழை வளர்க்கும் செயல் மறந்துதான் போனார்கள் திராவிடக் கட்சியினர்…

அதன் நீட்சிதான், இன்றும் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாகவில்லை, கல்வி மொழியாகவில்லை, வழக்கு மொழியாகவில்லை, மருத்துவ மொழியாகவில்லை, பொறியியல் மொழியாகவில்லை…

திராவிடக் கட்சியின் தலைகள் பலரும், தமிழ்ப்பள்ளி துவங்கவில்லை… ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்து, அங்கே தமிழில் பேசினால், பேசுகிற மாணவருக்குத் தண்டனை வழங்கும் வழக்கத்தை இயல்பாக நிறுவினர்…

தமிழ் கற்காமலேயே மிக்குயர் கல்வி வரை ஒருவர் தமிழ்நாட்டில் மட்டுமே கற்க முடியும்…

உலகத் தமிழ் மாநாடுகளைப் படாடோபமாய் நடத்தி என்ன பயன்?

தமிழர் நாவுகளிலிருந்து தமிழை அறுத்தெறியும் கொடுமையை இவர்களின் புற்றீசல் ஆங்கிலப் பள்ளிகள் செவ்வனே செய்கின்றன…

அதோடு ஏற்கெனவே உள்ள வடக்கு அபாயங்களான இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு…

தமிழ் இத்தனை இடிகளையும், துரோகங்களையும் தாண்டித்தான் மக்கள் நாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது…

_______________

பெருமாள்சாமி சுப்புராஜ்

தமிழ் மொழியை அவமரியாதை செய்த விஜயேந்திரன் காஞ்சிபுரம் மடத்தின் வாசலில் நின்று கொண்டு அங்கு வருவோர் போவோர் காலில் எல்லாம் ஒரு நாள் விழ வேண்டும் அப்போதுதான் செய்த தவறுக்கு தமிழகம் ஓரளவுக்கு அமைதியாகும் . தமிழுக்காகவே ஆண்டாள் பிரச்சினையில் குரல் கொடுத்த ராஜா இதை வலியுறுத்துவார்

 

கட்டணம் இல்லா பேருந்து பயணம் – சென்னையில் துவங்கியது மக்கள் அதிகாரத்தின் போராட்டம் !

2

நள்ளிரவில் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்து மக்களிடம் வழிப்பறி செய்து வருகிறது எடப்பாடியின் தலைமையிலான பாஜகவின் அடிமை அரசு. இந்த அநீதியான கட்டண உயர்வு மக்களிடம் ஏற்படுத்திய கொந்தளிப்பைப் போராட்டமாக மாற்றுவதற்கு மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களோடு போராடியும் வருகிறது. சென்னையில் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்களான ஐந்து மாணவிகள் பாரிமுனை பேருந்து நிலையத்தில் 21.1.2018 அன்று நடத்திய பிரச்சாரத்தின் அனுபவத்தை அவர்கள் மொழியிலேயே தருகிறோம்.

*****

காலை 10 மணியளவில் பாரிமுனை பணிமனைக்குள் நுழைந்தோம். முதலில் பேருந்து கட்டண வழிப்பறியை கண்டிக்கும் சுவரொட்டிகளை பணிமனை முழுவதும் ஒட்டினோம். அதைப் படித்த மக்கள் மோடியின் பினாமி எடப்பாடி கும்பல் மீது கோபத்தைக் கொட்டினார்கள். சரியாக சொன்னால் கழுவி ஊற்றினார்கள்.

பாரிமுனை பேருந்து நிலையம் மாதிரிப்படம்

பின் பேருந்துகளில் ஏறி பிரச்சாரத்தைத் தொடங்கினோம். போராட்ட முழக்கம் எழுதப்பட்ட அட்டையை உயர்த்திப் பிடித்தோம். இந்த சின்னப் பொண்ணுங்க என்ன செய்யப் போகுதுங்க என கேள்வி மக்களின் கண்களில் தெரிந்தது.

  • போக்குவரத்து துறையை மொட்டை அடிக்குது அதிகாரிகள் கும்பல்!
  • பி.ஜே.பி பினாமி அதிமுக அரசின் ஊதாரி செலவை ஈடுகட்டவே கட்டணக் கொள்ளை!
  • ஊழல் கும்பலை சந்தியில் விட்டு செருப்பால் அடிப்போம்!
  • கட்டண உயர்வை செலுத்த மறுப்போம்!

என நாங்கள் முழக்கம் எழுப்பியதும் அனைவரும் ஆர்வமுடன் கவனித்தனர். ஒரு தோழர் மக்களிடம் பேச ஆரம்பித்தார் “போக்குவரத்து துறை நஷ்டத்துக்கு காரணம் நிர்வாகத்தோட ஊழல்தான். நாம கொடுக்கிற காசையும், தொழிலாளிங்க காசையும் அள்ளித் தின்ன அதிகாரிகளும், அமைச்சர்களும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள். இப்போ நஷ்டம்ங்கிற பேருல திரும்பவும் நம்ம கிட்ட கொள்ளையடிக்க வர்ராங்க. இந்த ஊழல் கும்பல் திருடி சேர்த்த சொத்தை பறிமுதல் செஞ்சா நஷ்டத்தை ஈடுகட்டலாம். அதனால, பேருந்து கட்டண உயர்வை செலுத்த மறுப்போம்.” –என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து, மக்கள் துண்டறிக்கைகளை கேட்டுவாங்கி படிக்க ஆரம்பித்தனர். இக்கருத்துக்கள் சரியென அனைவரும் பேசினார்கள். பழைய கட்டணம்தான் கொடுப்பேன்னு சொல்லுங்க, இல்லைன்னா டிக்கெட் எடுக்க மாட்டேன்னு சொல்லுங்க என்ற போது தயங்கினார்கள். மற்றவர்களை ஏமாற்றி வாழக் கூடாது என்ற உழைக்கும் வர்க்கத்தின்நேர்மை உணர்வு அந்த தயக்கத்தின் பின்னே இருந்தது. நாம் யாரையும் ஏமாற்றவில்லை. இந்த அரசுதான் நம்மளை ஏமாத்துது. பழைய கட்டணத்தை செலுத்த தயாராகத்தான் இருக்கிறோம். ஈவு இரக்கமில்லாத இந்த அரசை பணிய வைக்க வேறு என்ன வழி இருக்கிறது என பேசினோம்.

இதே போல மதியம் வரை பிரச்சாரம் செய்தோம். எல்லா பேருந்துகளிலும் மக்கள் நம் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், பேருந்துகள் கிளம்பும் போது டிக்கெட் வாங்கினார்கள். மக்களின் தயக்கத்தை எப்படி உடைப்பது என விவாதித்தோம். மக்களின் தயக்கத்தை வெறும் வார்த்தைகளால் உடைக்க முடியாது. அதற்கு செயல் வேண்டுமென புரிந்து கொண்டோம். அதன் பின்னர் பேருந்தில் பிரச்சாரம் செய்வதோடு நின்று கொள்ளாமல் மக்களோடு பயணம் செய்து டிக்கெட் எடுக்காமல் இருந்து நம்பிக்கையூட்டுவது என முடிவு செய்தோம்.

பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய 15G பேருந்தில் ஏறினோம். அதே போல முழக்கம், பிரச்சாரம். பேசி முடித்ததும் மக்களின் குமுறல் வெளிப்பட்டது. ஒரு பெரியவர் சொன்னார் “ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடிக்கணும்னு சரியா சொல்றேம்மா. அந்த நோட்டீசை கொடும்மா. எங்க ஊருல மத்தவங்க கிட்ட கொடுக்கிறேன்” என்று சொல்லி ஒரு கட்டு துண்டறிக்கைகளை வாங்கினார்.

இன்னொரு அம்மா நடத்துனரைப் பார்த்து, “நீங்க போராடுனதால தான் டிக்கெட் வெலைய ஏத்திடாங்க” என்றார். உடனே அவர், “அந்த பிள்ளைங்க சொன்னத கேட்டுட்டு பேசும்மா” என்றார். நாம் அந்த அம்மாவிடம் அதிகாரிகளின் ஊழலை எடுத்து சொல்லி, அவர்கள் அடித்த கொள்ளையை ஈடுகட்ட தொழிலாளிகளோட பி.எஃப் பணம் 7000 கோடியை சுருட்டிக்கிட்ட கொடுமையை விளக்கினோம். மக்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னோம். நமக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஓட்டுநர் மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில் நடத்துநர் டிக்கெட் கொடுக்க எழுந்தார். மக்களிடம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட தயக்கம் வெளிப்பட்டது.

எங்களைத் தவிர எல்லோரும் டிக்கெட் எடுத்தார்கள். ஆனால், 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி டிக்கெட் எடுக்க மறுத்தார். “இந்த பிள்ளைங்க சொல்றதுதான் சரி. டிக்கெட் விலையை குறைக்கிற வரை நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்.” என ஓங்கிய குரலில் அறிவித்தார். அந்த அறிவிப்பு ஒரு போராட்ட விதையின் துவக்கமாக இருக்குமா? என்ற யோசனையுடன் சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம்.

இறங்கும் போது ஓட்டுநர் , “பார்த்து பத்திரமா இறங்குங்கம்மா”, என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து 15B பேருந்தில் ஏறினோம். அங்கும் இதே போல முழக்கத்தோடு, பிரச்சாரத்தோடு ஆரம்பித்தோம். முதல் பேருந்தை விட இங்கு நிறைய ஆதரவு இருந்தது. ஒரு மாணவர் “இவங்க சொல்றதுதான் சரி. அவனுங்க கொள்ளையடிக்க நான் காசு தர மாட்டேன். நீங்களும் யாரும் டிக்கெட் எடுக்காதீங்க” என்றார். இதே போல பலர் டிக்கெட் எடுக்க மறுத்தார்கள். அரசைக் கிழித்து தொங்க விட்டார்கள்.

எழும்பூரில் நாம் இறங்கிய போது ஒருவர் சொன்னார், “மக்கள் அதிகாரம் கீழே இறங்கிட்டாங்க இனி அவ்வளவுதான்”. இதைக் கேட்டதும் மீண்டும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னோம். பலர் அமைப்பின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்கள். அவர்களது எண்ணைக் கொடுத்தார்கள். தங்கள் பகுதிகளில் நம் பிரசுரத்தை விநியோகிக்கப் போவதாக சிலர் கூறினார்கள்.

ஒரு பாட்டி நம்மிடம் 100 ரூபாயை நீட்டி, “பசியோட இருப்பீங்க ஏதாவது சாப்பிடுங்கம்மா” என்றார். அவருடைய பாசத்தை ஏற்றுக் கொண்டு சொன்னோம், “பாட்டி, நாங்க இந்த காசுல இந்த நோட்டீசை ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு கொடுப்போம். ” என்றோம். அவர் மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். அரை மணி நேர பயணத்தில் கிடைத்த புதிய சொந்தங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறங்கினோம்.

அடுத்து கோயம்பேட்டிற்கு சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏறினோம். நாம் முழக்கம் போட ஆரம்பித்ததும் நடத்துனர் தடுத்தார். நாம் அவருக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்த போதே ஓட்டுநர் நாம் யாரென விசாரித்தார். நமது முழக்க அட்டையைப் பார்த்ததும் சொன்னார், “மக்கள் அதிகாரம் நமக்காக போராடுனவங்களாச்சே. எல்லா இடத்திலேயும் உங்க போஸ்டரை பார்த்து இருக்கேன்மா” என நம்மை அடையாளம் காட்டினார். நம் பேச்சைக் கேட்டு இங்கும் பலர் டிக்கெட் எடுக்கவில்லை.

இந்தப் பேருந்தில் ஒரு வயதான அம்மா நம்முடன் சேர்ந்து கொண்டார். உற்சாகமாக முழக்கம் போட்டார். பிரச்சனைக்கு அவர் சொன்ன தீர்வு முக்கியமானது. “மக்களைக் கொள்ளையடிச்சி ஜெயலலிதா சேர்த்த எல்லா சொத்தையும் எடுத்து போட்டு நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லு அவனை….”. நாம் வண்டியை விட்டு கீழே இறங்கும் போது மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார், “எனக்கும் உங்களோட வரணும்னுதான்மா ஆசையா இருக்கு. ஆனா இன்னைக்கு அடகு கடைக்கு போகணும். கடையை மூடிடுவான். அதான் …”

அன்று முழுவதும் பயணங்களைப் பிரச்சாரம் ஆக்கினோம். நாம் எதை செய்தாலும் மக்கள் வாய் மூடி மவுனியாக இருப்பார்கள் என மக்களைப் புழுவாகப் பார்க்கும் இந்த அரசுக்கு எதிராக மக்களால் பேச முடியும், போராட முடியும் என்பதை நேரடியாக அறிந்து கொண்டோம்.

எங்களைப் போன்ற நூற்றுக் கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்தி வருகிறோம். இந்த எண்ணிக்கை லட்சக்கணக்காக மாறினால் அரசின் எல்லா வழிப்பறிகளையும் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியுமே என்ற ஏக்கம் நெஞ்சை வாட்டுகிறது.

அதனால்…

வாருங்கள், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் இணைந்தால் மெரினா தூரமில்லை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.