Sunday, June 14, 2026
முகப்பு பதிவு பக்கம் 544

ஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் – ஒரு தொகுப்பு

0
அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.

வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக…

 ‘‘ஒன்றரைக்கோடிஉறுப்பினர்களைக்கொண்டபெரியதொருஅரசியல்கட்சிக்குத்தலைமைதாங்கியஜெயலலிதா, தன்மீதுதொடரப்பட்டவழக்குகளைமுகாந்திரமாகக்கொண்டு, வன்முறையில்ஈடுபடக்கட்சியினரைநேரடியாகவோ, மறைமுகமாகவோதூண்டியதில்லை.’’ (புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், தினமணிக் கதிர், 11.12.2016)

‘‘அவரது ஆட்சியைப் பற்றி எத்தனையோ குறைகளைக் கூறலாம். ஆனால், ஜெயாவின் நிர்வாகத் திறமையும், அவரது ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சட்டம்ஒழுங்கு நிலையும், ….. பெண்மைக்குத் தரப்பட்ட மரியாதையும் பாதுகாப்பும் தமிழகம் உள்ளவரை நினைவுகூரப்படும்.’’ (தினமணி தலையங்கத்தில்)

L&O_P1
ஸ்பிக் நிறுவனப் பங்குகள் விற்பனை ஊழல் வழக்கில் ஜெயாவிற்கு எதிராகக் கோப்பில் குறிப்புகள் எழுதியதற்காக ஆசிட் வீசித் தாக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா.

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே, ‘‘தமிழகத்தில் இருந்த தாலி பறிக்கும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக’’த் தடாலடியாக அறிவித்தார், ஜெயா.  இதன் மூலம் தனது வருகையே, இருப்பே சமூக விரோதக் கும்பலுக்குக் கிலி ஏற்படுத்திவிட்டதாகக் காட்டிக் கொண்டார், அவர்.

ஆனால், கடந்த ஐந்தாண்டில், 2016 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை, தமிழகத்தில் 7,630 கொலைகளும், 8,119 கொள்ளைச் சம்பவங்களும், 11,245 கொலை முயற்சிகளும் நடந்துள்ளன.

பெண்களின் பாதுகாப்போ, தினமணி தலையங்கத்தில் மெச்சிப் பாராட்டியிருப்பதற்கு நேர்மாறாக, 3,360 பாலியல் வன்முறைகளும், 6,431 பெண் கடத்தல் சம்பவங்களும் நடந்து, பெண்கள் அச்சத்தோடுதான் தெருவில் இறங்கி நடமாட வேண்டிய சூழ்நிலை நிலவியது.

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற உள்ளூர் இளைஞர்கள் மட்டுமல்ல, போலீசு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்கூட மணல் கொள்ளை மாஃபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய பல பேர் காணாமல் போனார்கள். ரியல் எஸ்டேட் தொழில் தகராறு, போட்டி காரணமாக நடுரோட்டில் படுகொலைகள் நடந்தன. இப்படித் தமிழகம் தொழில்முறை கிரிமினல் மாஃபியா கும்பலின் களமாக மாறிப் போயுள்ள சூழ்நிலையில், ஜெயா ஆட்சியில் சட்டம்−ஒழங்கு சிறப்பாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகவும் இருந்ததாகப் பச்சைப் பொய்யை எழுதுவதற்கு தினமணி கூச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனைவிடப் பெரிய பொய் அ.தி.மு.க.வை அகிம்சாமூர்த்திகளாகப் பாராட்டும் பத்திரிகையாளர் மாலனின் புகழாரம். தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், அக்கட்சியும், முதலமைச்சர் ஜெயா தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரையிலான அக்கட்சியின் அதிகாரப் பிரதிநிதிகளும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சட்டத்தின் ஆட்சிக்கே சவாலாக இருந்தனர் என்பதும், அந்த வகையில் சட்டவிரோத கிரிமினல் மாஃபியா கும்பலைவிட அ.தி.மு.க. அபாயகரமானதாக இருந்தது, இருந்து வருகிறது என்பதும்தான் உண்மை.

ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.
ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.

பத்திரிகையாளர் மாலன் அ.தி.மு.க. வன்முறையை ஆராதிக்கும் கட்சி அல்ல என்ற தனது புகழாரத்தில் அ.தி.மு.க.வினரால் மூன்று கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வன்முறைச் சம்பவத்தை விதிவிலக்கு எனக் குறிப்பிடுகிறார். ஆனால், தன்னை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் ஜெயா வகுத்த விதியாக இருந்தது. ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய வன்முறைகளை, கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டுப் பாருங்கள், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்று குற்றஞ்சுமத்த, யாரும் தயங்கவே மாட்டார்கள்.

ஜெயா, முதல் முறையாகத் தமிழகத்தின் முதல் அமைச்சராக மே,1991−இல் பதவியேற்றார். அவர் முதலமைச்சராகிய அடுத்த மூன்றாவது மாதத்திலேயே ”தராசு” வார இதழ் அலுவலகம் மீது அ.தி.மு.க. கும்பல் கொலை ஆயுதங்களைக் கொண்டு நடத்திய வன்முறைத் தாக்குதலில், அப்பத்திரிகையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கத்திக் குத்துப்பட்டு இறந்து போனார்கள்.

மே 19, 1992 அன்று பட்டப்பகலில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் அவரது முகம், கழுத்து மற்றும் கைகள் வெந்து போயின. இத்தாக்குதல் நடந்தபோது, அவர் தமிழக வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தார். ஜெயா சம்பந்தப்பட்டிருந்த ஸ்பிக் பங்குகள் விற்பனை ஊழல் தொடர்பான கோப்புகளில், சந்திரலேகா ஜெயாவிற்கு எதிராகக் குறிப்புகளை எழுதியிருந்தார் என்ற காரணத்திற்காகவே, அதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வெறியோடு அவர் மீது ஆசிட் வீசப்பட்டது என்பது பின்னர் அம்பலமானது.

இந்த இரண்டு தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில், அப்பொழுது மைய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், அவர் பயணம் செய்த காரின் மீது கற்கள், தடிகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ப.சிதம்பரத்தின் மீது தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பலுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

ஜெயா−சசி கும்பல் தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவன நிலத்தை அடிமாட்டு விலையில், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வளைத்துப் போட்டது அம்பலமான நிலையில், அவர்கள் மீது இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 169−ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.  இதையடுத்து அவரது அலுவலகத்தில் புகுந்த ரவுடிக் கும்பல், ‘‘அம்மா மீதே வழக்குத் தொடரும் தைரியமா உனக்கு?’’ எனக் கேட்டபடியே, கத்தி, இரும்புக் கம்பிகளைக் கொண்டு அவரைத் தாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைத்துப் போட்டது. உடம்பின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவரை எப்படியாவது கொன்றுவிடத் திட்டம் தீட்டிய அ.தி.மு.க. கும்பல், அந்த மருத்துவமனையின் மின் இணைப்பைத் துண்டித்தது.

ஜெயா ஆட்சியின் ஊழல்களையும், வன்முறைகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்த நக்கீரன் இதழின் பிரிண்டர் கணேசன் அய்யா போலீசு நிலையத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டு, போலீசாரல் சித்திரவதை செய்யப்பட்டார். இச்சித்திரவதை நடந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே உடல் நலிவுற்று இறந்துபோனார் அவர்.

எதிர்கட்சியினர், பத்திரிகைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல, அச்சமயத்தில் தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சேஷன் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் ஜெயா−சசி கும்பல் வன்முறைகளையும் மிரட்டல்களையும் ஏவிவிட்டது.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி தந்து உத்தரவளித்தார், ஆளுநர் சென்னா ரெட்டி. இதற்குப் பாடம் கற்பிக்கும் முகமாக, சென்னாரெட்டி புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த வழியில் திண்டிவனம் அருகே வழிமறித்த அ.தி.மு.க. கும்பல், அவர் காரின் மீது  கற்களையும் செருப்புகளையும் வீசியெறிந்து தாக்குதல் தொடுத்தது. சுப்பிரமணிய சுவாமி உரையாற்றிக் கொண்டிருந்த சென்னை பொதுக்கூட்டத்தில் ஆசிட் பல்புகளும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.

அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.
அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.

ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்த சென்னாரெட்டியின் உத்தரவு குறித்த வழக்கில், அந்த உத்தரவை ஏற்றுத் தீர்ப்பளித்த நீதிபதி சீனிவாசனின் வீட்டிற்கு மின் இணைப்பும், குடிநீர் விநியோகமும் நிறுத்தப்பட்டன.

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அருணாச்சலத்தின் மருமகன் மீது கஞ்சா வழக்கைப் போட்டு, அந்நீதிபதியை மறைமுகமாக மிரட்டியதையடுத்து, அவர் விசாரணையிலிருந்து விலகிக் கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனா மீதும், அவ்வழக்கின் அரசு வழக்குரைஞராக இருந்த பி.வி. ஆச்சார்யா மீதும அடுக்கடுக்காக அவதூறுகளையும் வழக்குகளையும் தொடுத்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இந்த மனரீதியான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா அவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.

ஜெயாவின் இரண்டாவது தவணை ஆட்சியில், தி.மு.க. சென்னையில் நடத்திய ஊர்வலத்தைக் கலைப்பதற்காக, அயோத்திகுப்பம் வீரமணியைப் பயன்படுத்திக் கொண்டது அவரது அரசு. கடற்கரைச் சாலையில் ஊர்வலம் சென்றபோது, ரவுடி வீரமணி கும்பல் கற்களை வீசித் தாக்கி மோதலை ஏற்படுத்தியது. இதனைச் சாக்கிட்டு போலீசும், வீரமணி கும்பலும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு தி.மு.க.வினரையும் பத்திரிகையாளர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தனர். ஒரு பெண்ணின் ஆட்சியில் நடந்த இந்தத் தாக்குதலின்போது, பெண் பத்திரிகையாளர்களைக்கூட போலீசு விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியின்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால் ஜெயா தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அ.தி.மு.க.வினர் சட்டம்−ஒழுங்கை, பொதுமக்களின் பாதுகாப்பை, நீதித்துறையை எந்தளவிற்கு மதித்து நடந்து கொண்டனர் என்பது உலகமே காறிஉழிழ்ந்த ஒன்று.

அ.தி.மு.க. கும்பல் நடத்திய அத்துணை ரவுடித்தனங்களுக்கும் தமிழக போலீசு உடந்தையாக இருந்தது என்பது மட்டுமல்ல, ஜெயாவின் ஆட்சியில் போலீசும் உளவுத் துறையும் போயசு தோட்டத்தின் கூலிப்படையாகவே நடந்து கொண்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதியை வீடு புகுந்து கைது செய்தபொழுது, தமிழக போலீசும் உயர் அதிகாரிகளும் ஆடிய ஆட்டமும்; ஜெயாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் கணவர் நடராஜனின் தோழி செரீனா, ஜெயாவின் ஆடிட்டராக இருந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது தமிழக போலீசு போட்ட கஞ்சா வழக்குகளும் அத்துறை ஜெயாவின் ஏவல் நாய் என்பதைத் தமிழகத்திற்கே புரிய வைத்தன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.

கட்சிக்காரர்களை வேவு பார்ப்பது தொடங்கி, அவர்கள் மேலிடத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைத்த சொத்துக்களைக் கைப்பற்றி போயசு தோட்டத்தில் ஒப்படைப்பது வரை ஜெயாவிற்கு அனைத்துமாக இருந்து சேவை செய்தது, தமிழக போலீசு. இந்த விசுவாசம் காரணமாக, போலீசுக்கு சலுகைக்கு மேல் சலுகையாக வாரி வழங்கி, அதனை வளர்த்துவிட்டார். பெருந்தீனி தின்று கொழுத்துப் போன பங்களா நாய் சும்மா இருக்குமா? பொய் வழக்குகள், கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட போலீசின் அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்ததோடு, தமிழகத்தின் பாளையக்காரனாகவும் போலீசு நடந்து கொண்டது.

கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய போலீசு, அம்மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் கிணற்றில் விஷத்தைக் கலந்தது. இந்த அட்டூழியம் நடந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயாவோ, தனது வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமண தயாரிப்புகளில் மூழ்கிப் போயிருந்தார். பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைச் சட்டமன்றத்திலேயே ஆதரித்துப் பேசினார், அவர்.

இவை அனைத்தும் கால்தூசு என்பது போல, அரசியல் சாசனத்திற்கே பெப்பே காட்டியவர்தான் புரட்சித் தலைவி; எவையெல்லாம் புனிதமாகக் கூறப்படுகிறதோ, அவற்றின் டவுசரைக் கழட்டி, அம்மணமாக்கியவர்தான் அம்மா.

சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில், சபாநாயகரைத் தவிர வேறு யாரும் அமரக்கூடாது என்பது மரபு. அந்த மரபைத் துச்சமாகத் தூக்கிப் போட்டு, அந்த இருக்கையில் தான் அமர்ந்தும், சட்டமன்ற உறுப்பினரே அல்லாத சசிகலாவைத் துணை சபாநாயகர் இருக்கையில் உட்கார வைத்தும் சட்டமன்றத்தை போயசு தோட்டமாக்கினார்.

2001 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வந்த சமயத்தில், ஜெயா, பிளஸண்டே ஸ்டே விடுதி வழக்கிலும், டான்சி ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார். ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற உண்மையை மறைத்து இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெயாவின் வேட்பு மனு தாக்கல் விவாதப் பொருள் ஆன நிலையில், மேலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார், ஜெயா.

ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.
ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாதென்பது தேர்தல் விதி. அந்த விதியை மீறி அவர் நான்கு தொகுதிகளுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததற்குக் காரணம், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் தனது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடக் கூடாதென்ற கிரிமினல் தந்திரப் புத்தியாகும். அவர் போட்ட கணக்குப்படியே அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், அப்போதிருந்த தி.மு.க. அரசுதான் சதி செய்து, ஜெயாவைப் போட்டியிட முடியாதவாறு செய்துவிட்டதாக ஜெயாவும் அவரது விசுவாசிகளும் கூசாமல் அவதூறுகளை அள்ளிவிட்டனர்.

அச்சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்திருந்த அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்த ஜெயா, அப்போதைய தமிழக ஆளுநராக பாத்திமா பீவியை விலைக்கு வாங்கி முதலமைச்சராகி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த குற்றவாளி நாட்டை ஆளலாம் என்ற புரட்ச்சியை நிகழ்த்திக் காட்டி, மரபு, சட்டம், அரசியல் சாசனம் என்ற புனிதங்களின் மீது சாணியைக் கரைத்து ஊற்றினார்.

இங்கே நாம் தொகுத்திருக்கும் ஜெயா−சசி கும்பலின் கிரிமினல் குற்றச் செயல்கள் அனைத்தும் ஏதோ அநாதிக் காலத்தில் நடந்தவை அல்ல. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழக மக்களின் கண் முன்னே நடந்தவை. 1996 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வைத் தமிழக மக்களே ஓரங்கட்டித் தோற்கடித்தனர். 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மட்டுமல்ல, ஜெயாவும் தோற்கடிக்கப்பட்டதற்கு அவரது ஊழல், வக்கிர ஆட்சிதான் காரணமாக இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைத்துவிட்டு, ஜெயாவை உன்னதத் தலைவியாகப் புகழந்து தள்ளுகின்றன, ஊடகங்கள். தமிழக மக்களும் பழசையெல்லாம் மறந்துவிட்டு, தமக்கேயுரிய இரக்க குணம் காரணமாக, ஊடகங்களின் பொய்யுரைக்குத் தலையாட்டுகிறார்கள்.

ஜெயலலிதா மீது ஒன்பது ஊழல் வழக்குகள் பதியப்பட்ட பிறகு, ஒரு பொட்டு நகைகூட அணியாமல் தனது தோற்றத்தை எளிமையாக மாற்றிக்கொண்ட அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நகைநட்டு இல்லாமல் பார்த்த பெண்கள், ‘‘அந்தப் படுபாவி (கருணாநிதி) எல்லாத்தையும் புடுங்கி வெச்சுக்கிட்டாராமில்லே’’ எனப் பேசிக் கொண்டதாகத் தனது அஞ்சலியில் பதிவு செய்கிறார், பத்திரிகையாளர் வாஸந்தி. பொதுமக்களிடம் காணப்படும் இந்தப் பாமரத்தனம்தான், ஒரு கிரிமினல் மாஃபியா தலைவியைத் தமிழகத்தின் அம்மாவாகத் திணிப்பதற்கான அடிப்படையைத் தருகிறது.

– குப்பன்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !

1

ருப்புப் பணத்தையும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பது, போதை மருந்து கடத்தல் ஆகியவற்றையும் தனது பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒழித்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் மோடி.  ஆனால், நவம்பர் 8−ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 50 நாட்களில் கருப்புப்பணம் கடுகளவும் ஒழியவில்லை. கருப்புப்பண பேர்வழிகள் அஞ்சி நடுங்கிடவுமில்லை. மாறாக,  ஒரு புதிய கருப்புப்பணச் சந்தை உருவாகியுள்ளதோடு, வங்கிகளின் துணையோடு கருப்பை வெள்ளையாக்கும் மோசடிதான் பெருகியுள்ளது.

பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.
பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.

கருப்பை வெள்ளையாக்குவதிலும் பணக்கடத்தலிலும் ஈடுபட்ட குற்றத்துக்காக கடந்த ஜூன் 2013−இல் ரிசர்வ் வங்கியால் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட தனியார் நிறுவனம்தான், ஆக்சிஸ் வங்கி. அப்பேர்பட்ட யோக்கியவானாகிய ஆக்சிஸ் வங்கியின் டெல்லி− சாந்தினி சவுக் கிளையில், கடந்த நவம்பர் 8−ஆம் தேதி முதலாக ஒருவார காலத்திற்குள் போலி ஆவணங்கள் மூலம் 44 புதிய வங்கி கணக்குகளைத் தொடங்கி, அவற்றில் ஏறத்தாழ ரூ.450 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதவிர, பல நூறு கோடி அளவுக்குப் பணப்பரிமாற்ற மோசடிக்கு உடந்தையாக இருந்த டெல்லி காஷ்மேரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையை சேர்ந்த இரு மேலாளர்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

‘‘கோப்ரா போஸ்ட்’’ எனும் வலைத்தளம், நாட்டின் ஐந்து மண்டலங்களில் நடத்திய இரகசிய விசாரணையின் மூலம் ( Operation Red spider)  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய தனியார் வங்கிகள் பல்வேறு வழிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 8−ம் தேதி முதல் டிசம்பர் 7−ம் தேதி வரை தமிழகத்தில் 9,000 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு, ஒரு கிளைக்கு ஏறத்தாழ ரூ.87 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 900 கிளைகளைக் கொண்டுள்ள தனியார் வங்கிகளுக்கு, ஒரு வங்கிக் கிளைக்கு ஏறத்தாழ ரூ.6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட 8 மடங்கு அதிகமாகும்.

கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.
கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.

பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகவும், தனியார் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் உள்ள நிலையில், இவ்வளவு பணத்தை கொண்டு தனியார் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக பணம் வழங்கியிருக்கலாம். ஆனால், தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது. இதிலிருந்தே தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட புதிய நோட்டுகள் கருப்புப் பணப் பேர்வழிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதை உணர முடியும்.  நவ.8 முதல் ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி. ஆகிய தனியார் வங்கிகள் எவ்வளவு பழைய நோட்டுக்களை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கியுள்ளன என்பதை ரிசர்வ் பாங்க் கவர்னர் தேதி வாரியாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ள போதிலும், இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளிலும் பழைய நோட்டுகளை மாற்றவும், பணப் பரிமாற்றங்களுக்கும் தடை விதித்து, தமிழகம் உள்ளிட்ட எதிர்த்தரப்பு ஆளும் மாநிலங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையினரைக் கொண்டு சோதனைகள் நடத்துகிறது, மோடி அரசு. ஆனால், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவை நிர்வாக இயக்குனராகக் கொண்டுள்ள குஜராத்தின் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.500 கோடி அளவுக்கும், குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக இருக்கும் மற்றொரு கூட்டுறவு வங்கியில் ரூ.200 கோடி அளவுக்கும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளபோதிலும், மோடி அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. குஜராத் கூட்டுறவு வங்கிகளில் கமிசன் அடிப்படையில் புதிய நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருவதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக யாதீன் ஓசா என்கிற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மோடிக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை மோடி அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

axis bank_pic3
தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே, ஏடிஎம் கடவு எண்களைத் திருடும் மோசடிகள் தொடரும் நிலையில், ஒருவரது வங்கிக் கணக்கில், அவருக்குத் தெரியாமல் பணத்தைப் போட்டு எடுப்பதென்பதும் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. உ.பி. மாநிலம் மீரட்டில் வசிக்கும் ஏழைப் பெண்ணாகிய ஷீதல் யாதவ் என்பவரது பாரத ஸ்டேட் வங்கியிலுள்ள ஜன்தன் கணக்கில் ரூ. 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பின்னர் அது கணினிக் கோளாறினால் ஏற்பட்ட தவறாகச் சித்தரிக்கப்பட்டது. தருமபுரியிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியிலுள்ள புலிகரை கிராமத்தின் இந்தியன் வங்கியில், நகைக் கடனுக்கு வட்டிக் கட்டவில்லை என்பதால் முடக்கப்பட்டிருந்த சிவகுமார் என்ற விவசாயியின் கணக்கில் 1,32,758. ரூபாய் போடப்பட்டு பின்னர் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. வங்கி மேலாளரான பிரபாகரன், இதுபோல பல விவசாயிகளது வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு பின்னர் வேறு கணக்கிற்கு பல இலட்சங்களை பரிமாற்றம் செய்துள்ள மோசடியை மக்கள் அதிகாரம் அம்பலப்படுத்தியது.

இறக்குமதிக்கான கோடிக்கணக்கான தொகையை வெளிநாட்டிலுள்ள நிறுவனத்துக்கு அனுப்புவதாகக் கூறித்தான், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி − இறக்குமதி வர்த்தகம் வாயிலாக வருடந்தோறும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் கருப்பணம் வெளியேறி வருகிறது. இந்த வர்த்தகத்திற்குரிய பில்கள் உள்ளிட்ட மின்னணு பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் நடந்துள்ளன. இப்படிச் சட்டபூர்வமாக மட்டுமின்றி, சட்டவிரோத வழிகளிலும் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு  இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி. என்ற தனியார் வங்கி போதை மருந்து கடத்தல் பணத்தைக் கைமாற்றிய விவகாரமும், டெல்லியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையொன்றின் வழியாகப் போலியான ஏற்றுமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கருப்புப் பணம் கடத்தப்பட்ட விவகாரமும் வங்கிகளின் நிழல் உலகப் பின்னணியை ஏற்கெனவே அம்பலமாக்கியிருக்கின்றன.

மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு...!
மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு…!

உண்மை இவ்வாறிருக்க, மோடியும் பா.ஜ.க. கும்பலும் வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள்தான் வெளிப்படையானவை என்றும், அதில் முறைகேடுகள் இருக்காது, இதன் மூலம் சட்டப்படியான வருமான வரியை விதிக்க முடியும், மின்னணு பரிமாற்று முறை வந்தால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் நாட்டு மக்களின் காதுகளில் இன்னமும் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கிகள் மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் அச்சகம், ரொக்கப் பணத்தைப் பாதுகாக்கும் கருவூலம் ஆகியவற்றின் வழியாகவும் பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த இடங்களிலும் சோதனை நடத்த வேண்டுமென்கிறார். ஆனால் இதற்கு விளக்கமளிக்காத மோடி அரசோ, ஒருசில வங்கிக் கிளைகளில் மட்டும் சோதனை நடத்துவதோடு நின்றுவிட்டது. மணற்கொள்ளை மாஃபியா சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட புதிய ரூ. 2,000 நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து வந்தது என்பதை அந்த நோட்டுகளின் எண்ணை வைத்தே கண்டறிய முடியும் எனும் போது, மோடி அரசோ அது பற்றி வாய்திறக்க மறுக்கிறது. மறுபுறம், நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் சோதனை செய்து மோசடிகளைத் தடுப்போம் என்று வெற்றுச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் சோதிக்குமளவுக்கு அடிக்கட்டுமான வசதிகளோ, போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகளோ இல்லை என்று வங்கி ஊழியர் சங்கங்களே இந்த வெற்று வாக்குறுதியை அம்பலப்படுத்துகின்றன.

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது உலகறிந்த ஒரு மோசடி. மோடி அரசோ, இன்றைய கிரிமினல் முறையிலான அரசுக் கட்டமைப்பைக் கொண்டே இதனைச் சாதிக்க முயற்சிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகளும் கருப்புப் பணப் பேர்வழிகளும் தங்களது வழக்கமான கிரிமினல் நடவடிக்கைகளால், மோடியின் ஊதிப் பெருக்கப்பட்ட கருப்புப்பண ஒழிப்புத் திட்டத்தின் காற்றைப் பிடுங்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

– குமார்

***

பணமற்ற பொருளாதாரம்: உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர், அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.

swipingலாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து, போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து, போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.

அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணை முதலாளிக்கிட்ட குடுத்து, போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், போன மாசம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2,000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், போன மாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை லாட்ஜ் ஓனர்கிட்ட குடுத்தாரு.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை, நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.

இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே திரும்பிப் போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, வைத்திய பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி, யாருக்கும் இழப்பில்லாம.

இப்ப நம்ம மோடியின் புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்?

வேலைக்கார அம்மாவோட பே டிஎம் ஆப்ல 1%, டீக்கடை ஆப்ல 1%, பால் பண்ணை ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பே டிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பே டிஎம் ஆப்ல 1% – இப்பிடி பே டிஎம் பாக்கெட்டுக்கு ரூ.5 + 4.95 + 4.90 + 4.85 + 4.80 = ரூ.24.50- போயிடும். 500 ரூவாயில ஆரம்பிச்ச ட்ரான்ஷாக்சன், லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது ரூ.475.50 ஆகிடும்.

(குறிப்பு : இப்போதைக்கு ட்ரான்ஷாக்சன் சார்ஜ் 2.9% வரைக்கும் இருக்கு. எளிதா கணக்குப் போடுறதுக்காக 1% ஆக எடுத்துக்கிட்டோம்.)

இதுல யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? இப்பவாவது புரிஞ்சிக்குங்கோ, இது யாருக்கான திட்டம்னு !

– அன்பு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?

0

ஞ்சம் பொழைக்க
தவிக்கும் ஊரில்
பஞ்சரத்ன கீர்த்தனை
பட்டுப்போன
ஆற்றங்கரையில்
பட்டுப்புடவைகள் வாசனை.

slideரசிக்க முடிந்தவர்
ரசிக்கலாம்
உழவர் நெஞ்சு வெடித்த
ஓசை மறந்து
உஞ்ச விருத்தி பஜனை !

காவிரியின் தாள கதி
காவியால் நிர்க்கதி
கர்நாடாகாவிடம் மல்லுக்கட்டி
கழனிகள் அதோ கதி !
இதற்கு இல்லை
உங்களிடம் ஒரு சுருதி
கூச்சமில்லாமல்
கொலைக்களத்தில்
களிப்புடன் கர்நாடக `சங்கதி’ !

வந்தவருக்கெல்லாம்
சோறு போட்ட
தஞ்சை பூமியே காலி
தியாகய்யரையும்  ஊட்டி வளர்த்த
நெற்களஞ்சியம் மூளி !

நாற்றசையும் சுவரம் இன்றி
மருதப்  பண் மரணம்
பார்த்துப் பதறாத
உங்கள் `அலங்காரம்’.
பசும் பால் காபிக்கு
கும்பகோணம்
பாடி மகிழ
ஆரோகணம், அவரோகணம்.

“கருணையிலாதது கண்ணா ?”
கேட்டார் வள்ளுவர்
கண்டும் சுரணையிலாதது
பண்ணா ?
கேட்கத் துடிப்பது உழவர்.

கார்ப்பரேட்  ஆராதனை
விளைநிலம் விழுங்கி
கொள்ளையிடுது நாட்டை.
வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல்
உங்கள் நாவில் துள்ளுது ‘நாட்டை

மதகோசை முடங்கி
பயிரோசை ஒடுங்கி
உயிரோசை அடங்கும் புல்லினம்.
இதற்கொரு உணர்ச்சியில்லாமல்
இதயம் மரத்தது இசையா !
நீங்கள்
என்ன வகை உயிரினம் ?

கழுத்து மணி இல்லாமல்
கலை இழந்து
கால்நடைகள் குரலெடுக்க  முடியாமல்
வாயில் நுரை தள்ளி.
கழுத்து ஆரம் ஆட்டி
காதணி குழையக் காட்டி
காய்ந்த ஊருக்கு நடுவே
களைகட்டும் உங்கள்
ஆரபி, வராளி

குரல், துத்தம், கைக்கிளை
உழை, இளி, விளரி, தாரம்
எனும் ஏழுவகைத் திருடி
தமிழ் தாள உறுப்புகள்
“அலகு ”  லகுவாகி
“துரிதம்”  த்ருதம்  ஆகி
‘அரைத்துரிதம்’ அனுத்ருதம்  ஆகி
களவாடி   தமிழிசையை
கர்நாடக இசையாக்கி
தமிழ் நிலம் பாடாமல்
வக்ர ராகமும்,
தமிழில் பாடினால் தீட்டு எனும்
அக்ரகாரமும்

கெளளை‘ பாடும் சத்தத்தில்
தன்மானத்தில்
தவளை சாகுது  மொத்தத்தில்.

வரப்பில்
வேலி முள்
எனத் தொட்டால்
வெளுத்து காய்ந்து கிடக்கும்
ஓணாண்.

வெங்காயச் சருகென
விலக்கினால்
வாசலில்
மக்கிக்கிடக்கும்
வண்ணத்துப் பூச்சி

தொட்டிலின் மேல்
ஒட்டடை
எனத் தட்டினால்
துருப்பிடித்து
வெகு நாளாய்
மறந்துபோன கருக்கரிவாள்

இறந்த விவசாயியின் முகத்தை
நிழற்படத்தில் வெறித்து,
வடியும் தாயின் கண்ணீரைப்   பார்த்து
விளங்காமல் பயந்து
செதும்பும் குழந்தை.

ஏன் இந்தத் துயரம்
எது இதன் அடி நாதம் ?
ஊன் உருகும்
உங்கள் புல்லாங்குழலில்
இதற்கோர் இழை உண்டா…

‍பொங்கலுக்கு வழியின்றி
உழவன் வீட்டில் கருமாதி
உங்களுக்கு என்ன ?
உறுத்தாமல்   அனுபவிக்க
காம்போதி

இந்தனைக்கும்  நடுவே
இத்தரையில் அமர்ந்து
தொடை தட்டி, சுதி கூட்டி
பஞ்சமம், சட்சம்
உங்களால் முடியும்
ஆம்
உங்களால் முடியும்
பசையற்ற நிலத்தில்
இசைக் கூத்தடித்த
உங்களால் மட்டுமே முடியும் !

– துரை. சண்முகம்

குறிப்பு: ஒற்றை மேற்கோளில் வருபவைகள் ராகங்களின் பெயர்கள்.

டெல்லிக்கட்டுக்காக விழுப்புரத்தில் திரண்ட மாணவர் படை !

0

மிழகம் முழுவதும் “ஜல்லிக்கட்டு வேண்டும்” என்று ஆரம்பித்த மாணவர்களின் போராட்டம் தமிழக மக்களின் போராட்டமாக எப்படி மாறியதோ, அதேபோல் தான்   “ ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு” என்ற முழக்கமாக மாறி, சென்னை மெரினாவில் ஆரம்பித்த  இந்த போராட்டம் தமிழகமெங்கும் பற்றிப் பரவியது.

 

villupuram_jallikattu-protestகடந்த ஜனவரி 19-ம் தேதி விழுப்புரத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த போராட்டம் நடைபெற்றது. மாணவர்களில் ஒரு பகுதியினர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் திரட்டினர்.

இந்த போராட்டத்தை  மாணவர்களும், இளைஞர்களும் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். புரட்சிகர சக்திகள் அதிக அளவில் இருப்பதை மோப்பம் பிடித்த காவல்துறை, ஒருங்கிணைப்பில் உள்ளவர்களை அழைத்து  பு.மா.இ.மு மற்றும்  மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர்கள் அதிக அளவில்  வந்துள்ளார்கள் அவர்களை பேச விடாதீர்கள் என்று எச்சரித்தது.  தோழர்கள் பேசிவிடக்கூடாது என்பதிலேயே இந்த ஏவல்துறை குறியாக இருந்தது.

மாணவர்களின் இந்த தன்னெழுச்சியை பார்த்து விட்டு வெகுஜன மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து  கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் தங்களால் முடிந்த உதவிகளையும் இந்த போராட்டத்திற்கு செய்து வந்தார்கள்.

புமாஇமு விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் மற்றும் உறுப்பினர்கள்
புமாஇமு விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் மற்றும் உறுப்பினர்கள்

திருவிழாவை போன்று மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். தொடர்ந்து போராடக்கூடிய மாணவர்களுக்கு ஓர் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது  என்றே கூறலாம். மாணவ – இளைஞர்களின் இந்த போராட்டம் தமிழகத்தின் விடிவெள்ளி என்றே பலரும் கருதினார்கள்.

பெண்கள் ஆயிரக்கணக்கில்  வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர். சிலர் கைக்குழந்தைகளோடு பங்கேற்றனர். வெயில், மழை, பனி, குளிர் என்று எதையும் பார்க்காமல் மாணவர்கள், இளைஞர்கள் அங்கே சங்கமித்தனர். சாதி, மதம் கடந்து அனைவரும் ஓர் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டதோ ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதோ அனைத்தும் மறக்க முடியாத நினைவுகளோடு நீடித்திருக்கும்.

போராட்டத்தின் இரண்டாவது நாள், மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இளைஞர்களையும், மக்களையும் வெகுவாக அணிதிரட்டி மோடியை அம்பலப்படுத்தி ஊர்வலமாக வந்தனர். எக்காரணம் கொண்டும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பெயர் மாணவர்களிடம்  தெரிந்து விடக்கூடாது என்று கியூ, மற்றும் பல்வேறு உளவு அமைப்புகள் தீவிரமாக இருந்ததன. ஆனால் அரசியல் கருத்து என்ற வகையில் மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை மாணவர்கள் வரித்துக் கொண்டனர். அதை போலீசு தடுக்க முடியவில்லை.

villupuram_jallikattu-protest2இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்த போராட்டம் மூன்றாவது  நாள் காவல்துறை போராட்டத்தை முடித்துக்கொள்ள தொடர்ந்து நிர்பந்தித்து மாணவர்களையும், ஒருங்கிணைப்பில் இருந்தவர்களையும் மிரட்டிக்கொண்டே இருந்தனர். இதனால் போராட்டத்தை ஒருங்கிணைத்த இளைஞர்களும் முடித்துக்கொள்வதென முடிவெடுத்து இரவு எட்டு மணிக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்.

எனினும் இந்த போராட்டத்திற்கு உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கினார்கள். இதனை பார்த்த காவல்துறை தடியடி நடத்தப்போவதாக அறிவித்து கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தது. இதனை அறிந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் இரவு அந்த மாணவர்களுடன் தங்கி அடுத்த நாள் போராட்டத்தை தொடருவதற்கு ஆதரவாக நின்றனர். நான்காவது நாள் தொடர்ந்த இந்த போராட்டத்தில் மாணவர்களை மட்டுமே தலைமை ஏற்று  நடத்த வழிகாட்டுதல் கொடுத்து காவல்துறையின் மிரட்டலுக்கு எதிராக அஞ்சவேண்டாம் என்று மாணவர்களும் நம்பிக்கை பெற்றனர்.

மூன்றாவது நாள் இளைஞர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள்
மூன்றாவது நாள் இளைஞர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள்

இதனை மோப்பம் பிடித்த காவல்துறை RSS – BJP, இந்து முன்னணி காலிகளை களத்தில் இறக்கி விட்டு ஒவ்வொருவராக சந்தித்து  மோடிக்கு எதிராக முஸ்லீம்கள் பேசுகிறார்கள் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். மோடிக்கு எதிராக பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். மீறி பேசினால் அவர்களிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொள்வது என்று தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினார்கள். மற்றொரு புறம் கியூ மற்றும் உளவுப்பிரிவு அமைப்புகள் மாணவர்களை சந்தித்து “ஜல்லிக்கட்டுக்கு தான் அனுமதி கொடுத்து விட்டார்கள் பிறகு ஏன் போராட்டம் செய்கிறீர்கள்” என்று கூறி மாணவர்களை கலைத்தது.

தொடர்ந்து மாணவர்களை மிரட்டி தனது நோக்கத்தை நிறைவேற்றியது காவல்துறை. பிஜேபியும் – காவல்துறையும் கூட்டு சேர்ந்து இந்த போராட்டத்தை சதித்தனமாக முறியடித்து விட்டது என்பது தான் உண்மை. காவல்துறை காவிமயமாகிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? எனினும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் அரசியல் மற்றும் போராட்டத்தின் பாடங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொண்டு சென்றிருக்கின்றனர். மாணவர்கள் அரசியல்படுத்தப்பட்ட நிகழ்வை காவிகளோ இல்லை காவல் துறையோ என்ன செய்து விட முடியும்?

(படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)

– வினவு செய்தியாளர், விழுப்புரம்.

“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி ?

25
panneer selvam  (2)
பன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது?

ன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது?

பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?

கொஞ்ச நாளுக்கு முன்னர்தான் ”மிக்சர் பன்னீர்” என்று கடற்கரையே அவரைக் கழுவி ஊற்றியது.

அப்படிப்பட்ட பன்னீர் இன்றைக்கு தைரியமாகப் பேசுகிறார், கேள்வி கேட்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?

ஏனென்றால், தமிழக மக்கள் கேள்வி கேட்பதை அவர் பார்த்துவிட்டார். காற்று வீசும் திசையைப் பார்த்து விட்டார்.

000

“குறுக்கு வழியிலே ஆட்சியைப் பிடிச்ச குலேபகாவலி சசிகலா” என்று மெரினாவில் கோவன் பாடத் தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

போயஸ் தோட்ட வீதியிலேயே சசி கும்பலை எதிர்த்துப் பாடுகிறார் ஒரு பெண்.

சசிகலாவை தெருவில் போட்டுத் துவைக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்.

அந்தப் பெண்கள் ஜெ மீது வைத்திருக்கும் பக்தி முட்டாள்தனமாக இருக்கலாம். ஜெயாவை சதி செய்து கொன்று விட்டதாக அவர்கள் கூறும் குற்றச் சாட்டு ஆதாரமற்றதாகவும் இருக்கலாம்.

ஆனால், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

“70 நாட்களாக என்ன நடந்தது? எனக்கு பதில் சொல்” என்று கேட்கிறார்கள். அது சசிகலாவைக் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, சசிகலாவுக்கு துணை நின்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம், கவர்னர், மோடி, அப்போலோ சென்று வந்து சசிகலாவுக்கு சான்றிதழ் கொடுத்த கட்சித் தலைவர்கள் – ஆகிய அத்தனை பேரையும் பார்த்து கேட்கும் கேள்வி.

000

panneer selvam  (3)
பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?

“ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் போட்டுவிட்டோம் கலைந்து போ” என்கிறது போலீசு. “முடியாது. சட்டத்தைக் காட்டு, படித்துப் பார்க்காமல் எப்படி போக முடியும்?” என்று கேட்கிறார்கள் மாணவர்கள்.

“போலீசையே கேள்வி கேட்கிறாயா?” என்று ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறது போலீசு. “ஏன் அடித்தாய் எங்கள் பிள்ளைகளை?” என்று மீனவர்கள் கேள்வி கேட்கிறார்கள். மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். “ஏன் அடித்தாய் மீனவர்களை என்று தமிழகமே கேள்வி எழுப்புகிறது“

அகிலா என்ற ஒரு பெண் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வானதி சீனிவாசனும், போலீசு அதிகாரியும், புதிய தலைமுறை நெறியாளரும் தடுமாறுகிறார்கள். உளறுகிறார்கள்.

ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் உலவும் ஆளும் வர்க்க எடுபிடிகளின் சாயம் வெளுக்கிறது. மைக்கை நீட்டிக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்து, மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஊடக மாமாத்தனத்தின் மானம் கப்பலேறுகிறது.

மாணவர்களையும் இளைஞர்களையும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று நினைத்துக் கொண்டு அறிவுரை சொன்ன லாரன்சு, ஹிப்ஹாப் ஆதி முதல் ரஜனிகாந்த் வரை அத்தனை சினிமாக்காரர்கள் முகத்திலும் அச்சம் படர்கிறது. ரிலீஸ் ஆனால் அசிங்கமாகி விடுவோமோ என்று “சிங்கம்” பம்முகிறது.

000

து பன்னீருக்கு வந்த தைரியம் அல்ல நண்பர்களே, தமிழ் மக்களுக்கு வந்திருக்கும் தைரியத்தின் விளைவு. பன்னீருக்கு சுயமரியாதை உணர்வு வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். இது தமிழக மக்களிடம் பொங்கிய சுயமரியாதை உணர்வின் விளைவு.

எல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை – நிமிர்ந்து விட்டார்.

000

panneer selvam  (1)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி.

ல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி. பன்னீரோடு சேர்ந்து கரையேறிவிடலாம் என்று பார்க்கிறது சங்க பரிவாரம். மன்னார்குடி மாபியாவிடமிருந்து தாங்கள்தான் தமிழகத்தைக் காப்பாற்றியது போலக் காட்டுவதன் மூலம், காவிரி உள்ளிட்ட எல்லா துரோகங்களையும் மறைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யும்.

அம்மா ஆன்மாவுடன் பன்னீர் பேசிய காட்சி என்பது ஏ, பி, சி – மூன்று ஏரியாக்களிலும் நூறு நாள் ஓடும். இனிமேல்தான் இருக்கிறது படத்தின் காமெடி டிராக். சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றும், அந்தக் கட்சியின் ஜனநாயக உரிமை என்றும் வக்கணை பேசிய யோக்கியர்களெல்லாம் “அது போன மாசம்” என்று சமாளிப்பார்கள். “உஸ்ஸ்… யப்பா…. எப்டியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கு” என்று தெனாய்ஞ்சு போவார்கள்.

அல்லது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு “மாநில உரிமை” என்று காமெடி பண்ணுவார்கள். உடனே “ஊழல் என்ன மாநில உரிமையா” என்று பாஜக நாராயணனும், வானதி சீனிவாசனும் தகரத்தில் ஆணியால் கீறியது போலக் கத்துவார்கள்.

000

ன்னீர் பேசியிருக்கும் எதுவும், யாருக்கும் புதிய விசயமல்ல. பன்னீர் பேசி விட்டார் என்பது மட்டும்தான் புதிய விசயம்.

இரவு முழுவதும் வெள்ளை வேளேரென்ற சொகுசு கார்கள் வரிசை வரிசையாக போயஸ் தோட்டத்தை மொய்க்கின்றன. காருக்குள்ளேயிருந்து மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட்டில் பன்றிகள் பரபரப்பாக இறங்குகின்றன. இது “வந்தனோபசார கடைசி ஆட்டம்”, இந்த நான்கு ஆண்டுகளுடன் கதை முடிந்தது என்று எம்.எல்.ஏ க்கள் எல்லோருக்கும் தெரியும்.

மிச்சமிருக்கும் நான்கு வருசம் சசிகலாவுடன் இருப்பதா, அதற்குப் பிந்தைய எதிர்காலத்தை யோசித்து இப்போதே தாவுவதா என்பதுதான் அவர்கள் எல்லோருடைய கவலையும்.

சசிகலாவா, ஸ்டாலினா, பாரதிய ஜனதாவா – யாருக்கு “பொக்கே” கொடுத்து கும்பிடலாம். என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடைய கவலை.

இனி, இவர்களெல்லாம் தங்களுடைய கவலையை மக்களுடைய கவலையாக மாற்றுவார்கள். அதாவது திருடர்கள் தங்களுடைய கவலையை, பறிகொடுத்தவர்களான நம்முடைய கவலையாக மாற்றுவார்கள்.

அந்த  *$#*#$*  வேலையை ஊடகங்கள் செய்யும்.

000

“கவர்னர் என்ன செய்வார்? மோடி என்ன செய்வார்? ஸ்டாலின் என்ன செய்வார்” என்று விவாதங்கள் நடக்கும்.

“பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, இதை கவர்னர் ஒப்புக்கொள்வாரா?” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு டயம் கொடுப்பாரா அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா?” “ஜனாதிபதி ஆட்சி வருமா? தேர்தல் வருமா?”

“அரசியல் சட்டத்தின் 9999(அ) பிரிவு என்ன சொல்கிறது (ஓ) பிரிவு என்ன சொல்கிறது?” “இதற்கு முன் இதே போன்ற சூழ்நிலையில் அரியானாவில் கவர்னர் என்ன செய்தார், கர்நாடகாவில் என்ன செய்தார், வெங்காயத்தில் என்ன செய்தார்?”

“குதிரை பேரம் நடக்குமா? பன்னீரை ஸ்டாலின் ஆதரிப்பாரா? அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவார்களா? எம்.எல்.ஏ க்களை கடத்துவார்களா? ஒரு எம்.எல்.ஏ வின் விலை என்ன? எந்த சாதி எம்.எல்.ஏ எந்தப் பக்கம் போவான்?” – இப்படி விவாதங்கள் நடக்கும்.

இதற்கு அன்றாடம் பத்து வல்லுநர்கள், ஆர்வலர்கள், நிலைய வித்வான்கள் பவுடர் போட்டுக் கொண்டு, நாக்கைத் தீட்டிக்கொண்டு தயாராக இருப்பார்கள். திருவிழா சீசன் கரகாட்ட செட் போல, இந்த சானலுக்கும் அந்த சானலுக்கும் பறந்து கொண்டிருப்பார்கள்.

000

panneer selvam  (1)_1
பன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல

ன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல.

அம்மா சமாதியில் உருக்கமாகப் பேசும் பரிதாப பன்னீரைப் பார்க்கும்போது, மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் பன்னீர் நிற்கும் திருப்பதி மொட்டை படத்தையும், பன்னீரின் சகோதரர்தான் தமிழக மணல் கொள்ளைக்கு மன்னார்குடி மாபியாவால் நியமிக்கப்பட்ட இன்சார்ஜ் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று சசிகலாவுக்கும் அதிமுகவின் ஜனநாயக உரிமைக்கும் பரிந்து பேசும் முன்னாள் மக்கள் நலக்கூட்டணியினர்தான், “அதிமுகவின் வெற்றி பணம் கொடுத்து, தில்லுமுல்லு செய்து பெறப்பட்ட முறைகேடான வெற்றி” என்று பேசியவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த தேவதூதர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்ற பாஜகவினர்தான், சசிகலாவையும் ஜெயாவையும் ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற அரும்பாடு பட்டவர்கள், காவிரியைத் தடுத்து தமிழக விவசாயிகளின் குடி கெடுத்தவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

000

“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார் நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !

லை முதல் கால் வரை கிரிமினல் மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு பிறகு ஏமாந்து விட்டதாகப் புலம்பியது போதும்.

மெரினா மாணவர்களும் இப்படி யோசித்து போராட்டத்தை ஏதாவது ஒரு கட்சியிடம் ஒப்படைத்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றப்பட்டிருப்பார்கள். வாடிவாசல் திறந்திருக்காது.

“உன் கட்சி, சட்டம், கோர்ட்” பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. “வாடிவாசலைத் திறக்காமல் வீடுவாசல் போவதில்லை” என்று தமிழகமே தெருவில் நின்றதன் விளைவாகத்தான் வாடிவாசல் திறந்தது. பொறுப்பை கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு நாம் வீட்டுக்குப் போயிருந்தால், வாடிவாசல் திறந்திருக்காது.

“அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.

“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார்

நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !

  • சூரியன்

ஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!

3
அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
  • ஜெயா, அறிவில் அவ்வையார், துணிவில் ஜான்சி ராணி, அன்பில் அன்னை தெரசா! (தினமணி, மகளிர் மணி, 14.12.2016)
  • ஜெயாவின் மனம் பொன்மனம் போன்றது. (நடிகர் ரஜினிகாந்த்)
  • போயசு கார்டனில் இட்லி கடை நடத்த அனுமதித்த மகராசி ! (இட்லிக் கடை நடத்தும் சரசுவதி, தமிழ் இந்து, 09.12.2016)
  • துணிச்சலான அரசியல் நடவடிக்கைகளாலும், ஆட்சிக் காலங்களில் உறுதியோடு அவர் எடுத்த முடிவுகளாலும் இன்னும் பல்லாண்டு காலம் தமிழர்களால் நினைவுகூரப்படுவார். (ஆனந்த விகடன், 14.12.2016)

ன்பு, துணிவு − இந்த மனிதப் பண்புகளுக்கான வரையறை என்ன?

1996−இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் அறிக்கை விட்டதைக்கூட மனதில் வைத்துக் கொள்ளாமல், எனது மகளின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் எனக் கூறுகிறார், ரஜினிகாந்த்.

ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல்.
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல்.

போலீசாரிடம் என்னைத் தேடிக் கொண்டு வரச் செய்து, போயசு கார்டனில் மீண்டும் இட்லிக் கடை தொடங்கி நடத்த அனுமதித்தார் என நினைவுகூர்கிறார், சரசுவதி.

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவக்குமார், சரசுவதி உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடம் ஜெயா வெளிப்படுத்திய அக்கறையை, பெருந்தன்மையை, அன்பைக் கொண்டு அவரை மதிப்பிடுவதா? அல்லது தமிழகத்தின் பல்வேறு மக்கட் பிரிவினரின் கோரிக்கைகளின்பால் அவரும், அவரது அரசும் காட்டிய ‘‘அக்கறையை’’க் கொண்டு அவரை மதிப்பிடுவதா?

அறக்கட்டளை நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் நன்கொடை அளிக்கும் முதலாளிகள்தான், தனது தொழிலாளர்கள் அரைக்காசு சம்பளம் அதிகமாகக் கேட்டால் வேலையை விட்டுத் துரத்தி அடிக்கிறார்கள். முதலாளிமார்கள் தொழிலாளிகளின் வயிற்றலடிப்பதை மறைத்துவிட்டு, அவர்களது வள்ளல்தனத்தைக் கொண்டாட முடியுமென்றால், ஜெயாவின் கருணையையும் தமிழகம் கொண்டாடலாம்..

சரசுவதியைத் தேடிப்பிடித்து இட்லிக் கடை நடத்த அனுமதித்த ஜெயா, அதேவிதமான அன்பை, அக்கறையை, பள்ளிக்கூட மாணவர்களுக்குச் சமைத்துப் போடும் சத்துணவுப் பணியாளர்கள், அமைப்பாளர்களின்பால் காட்ட மறுத்தார். தமக்கு மற்ற அரசு ஊழியர்கள் போல ஊதியமும், ஓய்வூதியமும் தரக் கோரி அவர்கள் போராட முனைந்தபோது, அப்பணியாளர்களை சென்னைக்குள்ளேயே வராமல் தடுத்துத் துரத்தியது, ஜெயாவின் போலீசு.

2001 சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வரான ஜெயா, கிட்டதட்ட பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலையிலிருந்து ஒரே நாளில் துரத்தியடித்து, அவர்களின் வாழ்க்கையைச் சூனியமாக்கினார். இதற்கு, அப்பணியாளர்கள் முந்தைய தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காழ்ப்புணர்ச்சியைத் தவிர, வேறு காரணங்கள் ஜெயாவிற்குத் தேவையாக இருக்கவில்லை. இந்த அநீதிக்கு எதிராக அப்பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்காடி வென்ற பிறகும், ஜெயாவின் மனதில் கருணை பிறக்கவில்லை. இறுதியாக, 2006 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், தனது தேர்தல் வெற்றிகளைக் கணக்கிட்டு, அவர்களை மீண்டும் பணியில் எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவைப் பெறுவதற்குள்ளாக, 80−க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் மாண்டு போனார்கள்.

அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

இதைவிடக் கொடுமையானது, மக்கள் நலப் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிய ஜெயாவின் அடாவடித்தனம். மக்கள் நலப் பணியாளர்கள் 1989−ஆம் ஆண்டில் அப்போதிருந்த தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டவர்கள். 13,500 ஊழியர்கள் இருபது ஆண்டு காலம் பணியாற்றி வந்ததை ஒரு பொருட்டாகவே கருதாமல், 2011−இல் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே அவர்களை வேலையிலிருந்து நீக்கியது, அம்மா அரசு.

மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இந்த அநீதியை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்களைப் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இதனை எதிர்த்து அ.தி.மு.க. அரசு தொடுத்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவர்களுக்குப் பணி வழங்காவிட்டால், ஆறு மாத சம்பளத்தை வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையில், அவர்களைப் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இந்த உத்தரவை அமல்படுத்த மறுத்து, அ.தி.மு.க. அரசு உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அம்மா அரசின் இந்த அலைக்கழிப்புகளையும், போதிய வருமானம் இல்லாத வாழ்க்கையையும் எதிர்கொள்ள முடியாத அப்பணியாளர்களுள் இருபதுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர்.

தன்னை எதிர்த்து அறிக்கைவிட்ட, மேட்டுக் குடி வர்க்கத்தைச் சேர்ந்த ரஜினிகாந்திடம் காட்டிய பெருந்தன்மையை, மக்கள் நலப் பணியாளர்களிடம் ஜெயா காட்ட மறுத்தது ஏன்? தி.மு.க.வால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காழ்ப்புணர்ச்சி மட்டும் இதற்குக் காரணமில்லை. மக்கள் நலப் பணியாளர்கள் தன்னிடம் கையேந்தி நிற்காமல், விடாப்பிடியாக தன்னை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்ற ஜெயாவின் பாசிசத் திமிர்தான் இதன் அடிப்படை.

ஜெயாவின் கருணையும், எம்.ஜி.ஆரின் வள்ளல்தனமும், மக்கள் தம்மை அண்டி, தமது கருணைக்காகக் கையேந்தி நிற்க வேண்டும் என்ற பண்ணையார்களுக்கே உரிய சிந்தனையிலிருந்து பிறந்தவை. எந்தவொரு மக்கட்பிரிவும் எந்தவொரு கோரிக்கைகாகவும் போராடக் கூடாது. மாறாக, தம்மிடம் இறைஞ்சிப் பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்ட கட்சி அ.தி.மு.க. இந்த விதியை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் உரிமைகளை மறுப்பதற்கும், அவர்களை ஒடுக்குவதற்கும் எந்த எல்லை வரையும் செல்லக்கூடியவர்களாக அவர்கள் இருவருமே இருந்தனர்.

பெப்சி நிறுவனத்துக்கு நாளொன்று 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து தாரை வார்ப்பதை ரத்து செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருநெல்வேலி−சிப்காட் வளாகத்தின் அருகே நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தடியடியில் காயமுற்ற அக்கட்சியின் தொண்டர்கள்.
பெப்சி நிறுவனத்துக்கு நாளொன்று 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து தாரை வார்ப்பதை ரத்து செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருநெல்வேலி−சிப்காட் வளாகத்தின் அருகே நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தடியடியில் காயமுற்ற அக்கட்சியின் தொண்டர்கள்.

கும்பகோணம் பள்ளி தீக்கிரையான சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் இழப்பீடு வழக்கை எடுத்துப் பாருங்கள், கூடுதல் இழப்பீடு கோரிப் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களால் தொடரப்பட்ட வழக்கில், அது பற்றி விசாரணை நடத்த நீதிபதி சண்முகம் தலைமையில் கமிசனை அமைக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். நீதிமன்ற உத்தரவுப்படி கமிசன் அமைப்பதால் ஜெயா அரசிற்கு நட்டமோ, அவமானமோ ஏற்படப் போவதில்லை. ஆனாலும், தன்னகங்காரம் காரணமாக அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது, அம்மா அரசு.

பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் சில சலுகைகளைக் கோரித் தொடர்ச்சியாகப் போராடுகிறார்கள் என்பதாலேயே, அவர்களைச் சந்திக்க மறுத்தது, ஜெயா அரசு. அதோடு, பார்வையற்றோர் என்ற பச்சாதாபம்கூட இன்றி, போலீசை ஏவிவிட்டு அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி, அவர்களை நகரத்திற்கு வெளியே கடத்திக்கொண்டு போய் சுடுகாட்டில் வீசியெறிந்தது.

தாமிரவருணி தண்ணீரை அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனமான கோக்கிற்கு அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொடுப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்ட ஜெயாதான், அம்மா குடிநீரை அறிமுகப்படுத்தினார்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது எனத் திமிராக அறிவித்த ஜெயாதான், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க முன்வந்தார்.

இப்படித் தமிழக மக்களின் மீது அம்மா பொழிந்த கருணை மழையின் பின்னே ஏமாற்றுத்தனங்களும் மோசடிகளும் நிறைந்திருக்கின்றன. நம் மீது அடிமைத்தனத்தைத் திணிக்கிறது, ஜெயாவின் கருணை. அவரது துணிவோ ரவுடிக் கும்பலின் அடாவடித்தனத்தை மட்டுமே நமக்கு நினைவூட்டுகிறது.

2006−11 தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஜெயாவைத் தவிர மற்ற அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்ட சமயத்தில், ஜெயா, சட்டசபைக்குள் அ.தி.மு.க.வின் சார்பாகத் தனியொரு ஆளாகச் சென்று ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசியதைச் சுட்டிக்காட்டி, ஜெயாவின் துணிச்சலை அசாதாரணமான ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள். ஜெயாவின் இந்தத் துணிச்சலுக்கு அச்சட்டமன்றத்தில் தி.மு.க. கடைப்பிடித்துவந்த குறைந்தபட்ச ஜனநாயகம் முக்கிய காரணமாக இருந்ததை ஊடகங்கள் வசதியாக மறைத்துவிடுகின்றன.

அ.தி.மு.க. அரசால் வேலைநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் திருச்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. அரசால் வேலைநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் திருச்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்

அதேசமயம், ஜெயா, தனது ஆட்சி நெடுகிலும் சட்டமன்றத்தை எப்படி நடத்தினார்? தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை எதிர்த்தோ, விமர்சித்தோ பேச எழுந்தாலே, அக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதை, இடைநீக்கம் செய்வதை விதியாகவே மாற்றினார். சட்டமன்றத்தில் தான் ஆற்றும் உரைகளை, அறிவிக்கும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்துப் பேசக் கூடாது என்பதற்காகவே, சட்டமன்றத்தை ‘‘110 மன்றமாக’’ மாற்றினார். சட்டமன்றத்திற்கு வெளியே அவரை, அவரது ஆட்சியை விமர்சித்த எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்குகளை அடுக்கடுக்காகப் போட்டு, விமர்சன உரிமையைப் பறித்தார். ஆளுங்கட்சியை எதிர்த்து நின்ற ஜெயாவின் ‘‘துணிச்சல்’’, எதிர்க்கட்சிகளை, பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள மறுப்பதேன்?

காரணம், ஜெயா போன்ற பாசிச ஆட்சியாளர்களுக்கு உரித்தான பயம். பொதுமக்களை, எதிர்த்தரப்பை, விமர்சனங்களை எதிர்கொள்ள ஜெயா போன்ற பாசிச ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். 2011−இல் அவர் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, இனி பத்திரிகையாளர்களைத் தான் வாரம் ஒருமுறை சந்திக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என்பது உடனடியாகவே அம்பலமானது. அவரது ஆட்சியில் உயர் அதிகாரிகள்கூட அவரைச் சந்திக்க முடியாது என்றபடி ஜெயா போயசு தோட்டத்திற்கு பதுங்கிக்கொண்டு, மர்மமான வாழ்க்கையைத்தான் நடத்தி வந்தார்.

அவர் முதல்வராக இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களைச் சந்தித்ததே கிடையாது. அவரோ, அவரது கட்சியோ மக்கள் பிரச்சினைகளுக்காக எந்தப் போராட்டங்களையும் நடத்தியது கிடையாது. பேரரசர்கள் உப்பரிகையிலிருந்து மக்களுக்குத் தரிசனம் தருவது போல, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் நான்கைந்து பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டுப் பறந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

ஜெயா, தனது ஆட்சியில் துணிச்சலான பல நடவடிக்கைகளை, முடிவுகளை எடுத்ததாக அவரைத் துதிபாடும் பத்திரிகைகள் எழுதுகின்றன. அந்த நடவடிக்கைகளுள் பெரும்பாலானவை, அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நினைத்த நேரத்தில் தூக்கியடித்தவைதான். அடிமைகளைக் கொல்லும் வழக்கம் இன்று இருந்திருந்தால், அமைச்சர்கள், அதிகாரிகள் என்ற பெயரில் உலவி வந்த அடிமைகளின் கதி அதோகதியாகியிருக்கும்.

இதற்கு அப்பால், பால் விலை மற்றும் பேருந்து, மின்சாரக் கட்டணங்களைத் தடாலடியாக உயர்த்தி அறிவித்ததை; வேலை நிறுத்தம் செய்த இரண்டு இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலைநீக்கம் செய்ததை; தமிழின உரிமைக்காகக் குரல் கொடுப்பதை ஒடுக்கியதையெல்லாம் அவரது துணிச்சலாக, திறமையாகச் சொல்லுகிறார்கள். குரூரமான மனோநிலை கொண்டவர்கள்தான் மக்களின் மீதான பாசிச ஒடுக்குமுறைகளைத் துணிச்சல், திறமை என்று பாராட்ட முடியும்.

ஜெயா, பார்ப்பன சாதியில், மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர். கான்வெண்டில் படித்தவர். இந்தச் சூழலில் வளரும் யாருக்கும் தான்தோன்றித்தனமும் திமிரும் கூடப் பிறந்த குணமாகவே இருக்கும். ஜெயாவிடமோ இதற்கு மேலே அதிகாரமும் இருந்தது. அவரது துணிவு இதிலிருந்துதான் கருவாகி உருவானது. சுருக்கமாகச் சொன்னால், சரளமாக இங்கிலீஷ் பேசும் மேட்டுக்குடி பார்ப்பனத்தி என்பதாலேயே ஜெயாவின் ரவுடித்தனங்களும் தான்தோன்றித்தனங்களும் துணிவாகக் காட்டப்பட்டன.

ரவுடிகளைக் கண்டு மக்கள் ஒதுங்கிச் செல்லுவதை, ரவுடியின் வீரமாக, துணிவாக மொழிபெயர்க்க முடியாது. அதுபோலத்தான் ஜெயாவின் துணிச்சல். உண்மையில், அவர் யாரையும் நம்பவில்லை. சந்தேகம், பயம் காரணமாக தனது கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், மன்னார்குடி குடும்பத்தை உளவுத்துறையைக் கொண்டு வேவு பார்த்தார். எம்.ஜி.ஆரைப் போல, ஜெயாவிற்குத் தனது உறவினர்களோடு நெருக்கம் இருந்திருந்தால், அவர்களையும் வேவு பார்த்திருப்பார். பாசிஸ்டுகள் தமது நிழலைக்கூட நம்புவதில்லை. அதைக் கண்டும் அஞ்சும் கோழைகள் அவர்கள்.

வெளிச்சத்தைப் பார்த்துப் பயந்து சந்துபொந்துகளுக்குள் மறைந்துகொள்ளும் கரப்பான் பூச்சிகள் போல, ஜெயாவும், சசியும் அச்சம், சந்தேகம், கோழைத்தனம் காரணமாக, போயசு தோட்டம், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட்டுகளில் பதுங்கியே காலம் கழித்தனர். ஊழல் பணத்தை எண்ணிப் பதுக்கி வைக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கும் இந்தத் தலைமறைவு வாழ்க்கையே வசதியாகப் போனது.

– அறிவு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

ஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் !

17
marina2
தமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது.

மிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு அடங்க மறுத்த தமிழகம் எழுச்சியுடன் போராடியதை பார்த்தோம். அந்த எழுச்சியை அடக்குவதற்கு போலீசை ஏவி வன்முறை வெறியாட்டம் போட்டது அரசு. தமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது. போலீசு மீதிருந்த மிச்சசொச்ச நம்பிக்கைகளும் தகர்ந்தன. தட்டிக்கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட போலீசின் ரவுடித்தனத்தை கண்டித்து ’போலீசு ராஜ்ஜியம்.. எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்’ என்கிற தலைப்பில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை முழுவதும் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நாங்கள் சில பெண் தோழர்கள் ரயில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தோம்.  சென்னையின் புறநகர் ரயில் வழித்தடங்களில் மாதந்தோறும் நாங்கள் பிரச்சாரம் செய்வது வழக்கம். தமிழக உரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் அடியாளாக செயல்படும் தமிழக போலீசைக் கண்டித்தும் பேசும் போது மக்கள் கூர்ந்து கேட்டதோடு பெரும் ஆதரவளித்தனர். நிதியுதவி செய்தனர்.

காலை முதல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம். மதியம் ஒரு மணி  அளவில் பிரச்சாரம் முடிக்க நினைத்தோம். அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கைபேசியில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். மூணு லேடிஸ் இருக்காங்க, லாஸ்ட் கம்பார்ட்மெண்ட்டுக்கு சீக்கீரம் வாங்க என்றார். காவல் துறையை சேர்ந்தவர் மஃப்டியில் வந்திருக்கிறார் என்று நினைத்தோம். ரயில்வே போலிசால் பிரச்சாரத்திற்கு அவ்வப்போது இடையூறு நடப்பதுண்டு. அவ்வப்போது அதை பேசி சரி செய்வோம்.

அச்சமயம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வரவிருந்த கோடம்பாக்கம் ரயில்நிலையத்தில் இறங்கத் தயாராக நின்றோம்.

திடீரென அந்த பெண் இருக்கையை விட்டு எழுந்து எங்களுக்கருகில் வந்து நின்று கொண்டார். சைதாப்பேட்டையில் வண்டி நின்றது. வாசற்படியில் நின்றுகொண்டு பிளாட்பாரத்தை நோக்கி கையை ஆட்டி இங்கே வாங்க இங்கே வங்க என்று யாரையோ அழைத்தார். சில நொடிகளில் வண்டி கிளம்பியது, அப்போது வேகமாக ஓடிவந்த ஒரு ரயில்வே காவலர் கம்பியை தொற்றிக்கொண்டு உள்ளே வந்தார். காவலர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.

அவரிடம் அந்த பெண் எங்களைக்  காட்டி இந்த லேடிஸ் தான் அரஸ்ட் பண்ணுங்க என்றார். அத்துடன் ஒரு தோழர் வைத்திருந்த உண்டியலை பாய்ந்து பிடிங்கி அதை மேலே தூக்கிக்காட்டி பாருங்க, எல்லோரும் பாருங்க இவங்க எல்லோர்கிட்டயும் கட்டாயமா காசு வாங்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்களே கேளுங்க என்றார். பிறகு போலீஸ்காரரிடம் திரும்பி இந்தியில் ஏதோ கூறினார்.

chennai
மாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு – மாதிரிப் படம்

அந்த பெண் உண்டியலை பிடுங்கிய அதே வேகத்தில் தோழர் மீண்டும் அதை பிடுங்கினார். இது போராட்டத்திற்காக மக்கள் கொடுத்த நிதி. உண்டியல் மேல் கை வைத்தால் மரியாதை கெட்டுவிடும். உனக்கு என்ன வேண்டுமோ அதை எங்களிடம் கேள் என்று குரலை உயர்த்தியதும், அருகில் நின்றுகொண்டிருந்த காவலர் லத்தியை ஒங்கிக் கொண்டு அடிப்பது போல தோழருக்கு அருகில் வந்து இந்தியில் மிரட்டினார். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு தோழர் எதுக்கு அடிக்கிற மாதிரி பாய்றீங்க? நாங்க என்ன பிரச்சாரம் பண்றோம்னு தெரியுமா உங்களுக்கு? என்றார்.

அதற்கு அவர் “தமிழ் நஹி” என்றார்.

”எங்களுக்கும் இந்தி நஹி. இது தமிழ்நாடு, தமிழ்ல தான் பேசுவோம். தமிழ் போலீஸ்காரங்களை வரச்சொல்லு” என்றதும் என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார்.

நாங்கள் உடனடியாக மக்களிடம் திரும்பி துண்டறிக்கையை காட்டி “நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மெரினா போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய வன்முறைத் தாக்குதலை கண்டித்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் அமைப்பு தேர்தலில் பங்கேற்காத அமைப்பு. தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைக்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்கள் தரும் நிதியிலிருந்து தான் அனைத்து போராட்டங்களையும் நடத்துகிறோம். நாங்கள் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் கூறுங்கள்” என்று கூறிய மறுகணமே பெட்டியிலிருந்த மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சாதாரண அடித்தட்டு மக்கள் என்று அனைவரும் திபுதிபுவென எங்களை நோக்கித் திரண்டனர்.

வந்த வேகத்தில் சிலர் அந்த பெண்ணை நோக்கி ”எதுக்குமா நீ இந்த கத்து கத்துற? உனக்கு என்ன பிரச்சனை, எதுக்காக போலீசை கூட்டிட்டு வந்திருக்க? இவங்களை பத்தி உனக்கு தெரியுமா, எங்களுக்குத் தெரியும் பேசாம எறங்கி போம்மா” என்றனர்.

உடனே அந்த பெண் ”கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்க கேக்க மாட்டீங்களா” என்றார். “அவங்க யாரையும் கட்டாயப்படுத்தி கேக்கமாட்டாங்க. எங்களுக்கு எல்லாம் தெரியும். உனக்கு கொடுக்க விருப்பம்னா கொடு இல்லைன்னா அமைதியா இரு” என்றார் ஒருவர்.

images
அவங்க அப்படித்தான் பேசுவாங்க பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப? ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ.

அந்தப் பெண்ணோ சளைக்காமல் ”மாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு” என்றார். அவர் பேசி முடிப்பதற்குள் முன்னால் வந்த ஒருவர் ” நிறுத்துமா சும்மா கத்தாத… நீ பேசுறதுதான் எங்களுக்கு தொந்தரவா இருக்கு ஒன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போம்மா” என்றார்.

அடுத்து சில இளைஞர்கள் “அவங்க எப்ப மாணவர்கள்னு சொன்னாங்க? மக்கள் அதிகாரம்னு தான் சொன்னாங்க. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப? ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ. அவங்க போகமாட்டாங்க நீ கெளம்பு முதல்ல. அக்கா நீங்க பேசுங்கக்கா” என்று சொல்லி நிதி போட்டனர்.

சில நிமிடங்களில் பெட்டியில் இருந்த மொத்த மக்களும் அவருக்கு எதிராக திரும்பியது, எனினும் அவர் சளைக்கவில்லை.

மோடியை பத்தி எதுக்கு தப்பு தப்பா பேசுறீங்க என்றார்.

”நீ BJP தானே ? மோடி அரசு தொடர்ச்சியா தமிழ்நாட்டுக்கு எதிரா செயல்படுதே அதை ஆதரிக்கிறியா ? போலீசு அடிச்சதையும், குடிசையை கொளுத்தினதையும் சரின்னு சொல்லுறியா” என்று ஒரு தோழர் கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்க வாய் திறப்பதற்குள் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து அந்தப் பெண்ணை நோக்கி ஒருமையில் பேசத் துவங்கிவிட்டார்.

”ஏய்.. மரியாதையா இறங்கிப் போய்டு. நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும். அரசியலே சாக்கடையா கெடக்கு இதுல அவனைப் பேசாத இவனைப் பேசாதன்னு வந்துட்ட. எல்லாத்தை பத்தியும் தான் பேசுவாங்க. மரியாதையா இறங்கிப் போய்டு” என்றார்.

அவருக்கு எதிராக பேசிய அனைவரும் எங்களுக்கு அருகில் வந்து நின்று கொண்டனர். மொழி புரியாவிட்டாலும் நடந்துகொண்டிருந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ரயில்வே காவலருக்கு, மக்கள் தோழர்களுக்கு ஆதரவாகவும் அந்த பெண்ணுக்கு எதிராகவும் பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டதால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழக காவலர்கள் இருவர் ஏறினர். லத்தியை சுழட்டியவாறே என்ன பிரச்சனை இங்கே என்றனர்.

அந்த பெண்ணோ நீங்களாவது கேளுங்க சார் என்று எங்களை நோக்கி கையை காட்டி பொங்கினார். நாங்கள் பதில் கூற வாயெடுப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் நீங்க அமைதியா இருங்கம்மா நாங்க பேசிக்கிறோம் என்று கூறிவிட்டு காவலர்களிடம் பேசினர். முதல்ல அந்தம்மாவை எறக்கி விடுங்க சார். இவங்களால எங்களுக்கெல்லாம் ரொம்ப தொந்தரவா இருக்கு. இவங்க மேல எந்த தப்பும் இல்ல என்றனர். அதற்கு பிறகும் கூட அந்தப் பெண்  கத்தி கூச்சல் போடுவதை நிறுத்தவில்லை.

”என்னை கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க சார். மாணவர்கள்னு பொய் சொல்றாங்க” என்று மறுபடியும் பழைய பொய்யையே கூறினார். ஆனால் மொத்த கூட்டமும் அவருக்கு எதிராக பேசுவதைப் பார்த்த காவலர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இறங்கிக் கொண்டனர். பல திசைகளிலிருந்தும் மக்கள் அவரை தாளித்துக்கொண்டிருந்தனர்.

எங்களிடம் வந்த சில இளைஞர்கள் “அக்கா நீங்க எங்க போகனும்? ” என்றனர். “கோடம்பாக்கம்பா” என்றோம்.

பாத்துப் போங்கக்கா எதுக்கும் பயப்படாதீங்க என்றனர். பலரும் பலவிதமாக ஆறுதல் கூறி உற்சாகமூட்டினர். வண்டி கோடம்பாக்கத்திற்குள் நுழைந்தது. மொத்த பெட்டியும் எங்களுக்கு ஆதரவாக பேசி வழியனுப்பிக்கொண்டிருந்ததை பார்த்ததும் அந்த பெண்ணின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நாங்கள் இறங்கிய அதே இடத்தில் அவரும் இறங்கினார்.வேறு எங்கோ இறங்க வேண்டியவர் குழம்பி போய் எங்களுடனே இறங்கிவிட்டார் என்று தவறாக நினைத்துவிட்டோம்.

railway-station
இல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க – மாதிரிப் படம்

வண்டியை விட்டு இறங்கிய உடனே பிளாட்பாரத்தில் உட்காந்திருந்தவர்களை நோக்கி சத்தமாக கத்தி இவங்க எல்லாம் கிறிஸ்டியன் ஆளுங்க டிரைன்ல வந்து பிச்சை எடுக்குறாங்க. எல்லோரும் வந்து கேளுங்க என்றார்.

பிளாட்பாரத்திலாவது தனக்கு ஆதரவாக வருவார்கள் என்று நினைத்தார். ஆனால் உட்கார்ந்திருந்த அனைவரும் அவரை வித்தியாசமாக பார்த்தனரே தவிர எழக்கூடவில்லை. ரயில் கிளம்பத் தயாராக இருந்தது. நாங்கள் வந்த பெட்டியின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் அந்த பெண் கீழேயும் இறங்கி பிரச்சினை செய்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு கையை நீட்டி எச்சரித்தனர். ரயில் கிளம்பியது.

” ஏய்…  நீ கீழே இறங்கியும் கத்திக்கிட்டு இருக்கியா… அடிவாங்காம போகமாட்டியா மரியாதையா ஓடிடு” என்று வண்டி பிளாட்பாரத்தைவிட்டு கடக்கும் வரை பல்வேறு வார்த்தைகளில் திட்டிக்கொண்டே சென்றனர்.

நாங்கள் உடனே துண்டறிக்கையை உயர்த்திக்காட்டி பிளாட்பார்மில் அமர்ந்திருந்த மக்களிடம் எங்களை அறிமுகம் செய்துகொண்டு என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறோம், என்ன பிரச்சாரம் செய்கிறோம் என்பதை விளக்கினோம். நாங்கள் விளக்கிக்கொண்டிருக்கும் போதே ”இல்ல இல்ல.. இவங்க பொய் சொல்றாங்க இவங்க கிறிஸ்டின்ல ஆளுங்க” என்கிற பொய்யை மீண்டும் கூறினார். அவர் சத்தம் போட்டு முடித்ததும் அமர்ந்திருந்த இருவர் எழுந்து அவர் அருகே சென்று “நீங்க தப்பா புரிஞ்சிட்ருக்கீங்கம்மா. இவங்க கிறிஸ்டின் பிரச்சாரம் செய்யலை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவங்க. இவங்க டிரெய்ன்ல பிரச்சாரம் பண்ணுவாங்க எங்களுக்குத் தெரியும்” என்றனர் பொறுமையாக.

தொடர்ச்சியாக அவமானத்திற்கு மேல் அவமானத்தை சந்தித்து வந்தவர் பிளாட்பாரத்திலும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியில் சோர்ந்துவிடாமல் கத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக எங்களைச் சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது.

”இல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க” என்றார்.

அதற்கு கூட்டத்திலிருந்த மற்றொருவர் கோபமாக பதிலளித்தார். “அவங்க அப்படியெல்லாம் கேக்க மாட்டாங்கம்மா உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி கத்துற?” என்றார்.

அங்கேயும் தன்னுடைய வேலை எடுபடவில்லை என்பதை உணர்ந்திருந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதேதோ பேசினார். மக்களும் அவருக்கு சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தனர். அனைவருமே தனக்கு எதிராக பேசிக்கொண்டிருந்ததால் சற்று தள்ளி நின்று நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு (தோற்றத்தில் பார்ப்பனர் போன்ற) பையனை நோக்கி சென்றவர் நீயாவது வந்து கேளுப்பா என்றார். அந்த பையனோ அந்தப் பெண் தன்னை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்ததுமே ஓடிவிட்டான்.

இறுதியாக அந்தப் பெண்ணிடம் எச்சரித்தோம். நீங்க யார், எதுக்காக இப்படி துள்றீங்கன்னு எங்களுக்குத் தெரியும். இது தமிழ்நாடு, புதிய தமிழ்நாடு. இனிமேலும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி கும்பலுக்கு இங்கே இடமில்லை. குஜராத் வேற தமிழ்நாடு வேற. ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சமாதியே தமிழ்நாட்ல தான். இது பெரியார் பிறந்த மண்.  என்று கூறியதும் அவர் கர்ண கொடூரமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.

அவர் யார்? அமெரிக்காவோ, இல்லை மயிலாப்பூரோ தெரியவில்லை. ஆனால் ரயில்களில் தோழர்கள் செய்யும் பிரச்சாரத்தை இப்போதுதான் முதல் முதலாக பார்க்கிறார். மெரினா எழுச்சியில் மாணவர் – இளைஞர்களிடம் மோடி வறுபடுவதை நேரிலோ இல்லை தொலைக்காட்சியிலோ அவர் பார்த்திருக்க மாட்டார். அல்லது அந்நேரம் எஸ்.வி.சேகர் நாடகத்திற்கு சென்று சிரித்து விட்டு வந்திருப்பார். இங்கே ரயிலில் பா.ஜ.க அரசை, மோடியை எதிர்த்தும், போலீசைக் கண்டித்தும் பேசுவது அவருக்கு தூக்கி வாறிப் போட்டிருக்கும்.

மோடியை இப்படி பகிரங்கமாக எதிர்ப்பதை எப்படி விட்டு வைப்பது என்ற ‘கடமை’ உணர்வுடன் போலீசை வரவழைத்தார். மக்களிடம் பேசினார். இறுதியால் அனாதையாக புலம்பிக் கொண்டு வெளியேறினார். இப்போது அவர் என்ன நினைப்பார்? தமிழகத்தில் இராணுவ ஆட்சியை அமல்படுத்தி தோழர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்வதற்கு பல்வேறு அரசு துறைகளுக்கு மனு எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனாலும் என்ன?  மோடியைத் திட்டுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் இங்கே முழு தமிழகமே சமூக விரோதியாக இருக்கிறதே? அதை என்ன செய்ய?

– மக்கள் அதிகாரம்
சென்னை.

போலீசு ராஜ்ஜியம் ஒழிக – திருச்சி, நெல்லை, கோவை, விருதை ஆர்ப்பாட்டம்

0

“போலீசு ராஜ்ஜியம் – ஒழிக”   திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்

tiruchy-protest-for-condemn-police-posterமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் மீது அதிகார போதையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது காவல்துறை. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து கைது செய்யக்கோரியும், போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் 31.01.2017 அன்று மாலை காந்தி மார்க்கெட் இராமகிருஸ்ணா தியேட்டர் பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தலைமையுரையாற்றிய திருச்சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த், மாணவர் போராட்டத்தில் சமூகவிரோதிகள் – தேசவிரோதிகள் புகுந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது போல போலீசார் புகுந்த பின் தான் கண்ணியமான, கட்டுப்பாடான, அமைதியான போராட்டக்களம் வன்முறையானது. முன்பு ரவுடி ஒருவன் இறந்துவிட்டால் கடையை மூடு என ரவுடிகள் கூட்டம் மிரட்டும் அதுபோல இன்று ஜெயா இறப்பிற்கு கடையை அடைக்கச் சொல்லி நாங்கள் ரவுடிகள் தான் என்பதை நிரூபிக்கின்றனர் என போலீசை அம்பலப்படுத்தினார்.

tiruchy-protest-for-condemn-policeகண்டன உரையாற்றிய, குளக்குடி விவசாயி ரவி தான் திருச்சியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதையும், அங்கே மாணவர்கள் விவசாயிகளுக்காக போராடுவதைப் பார்த்து அங்கிருந்த ஒரு மாணவரிடம் பேசியதில் “நாங்கள் இருக்கிறோம்” எனக் கூறியது நம்பிக்கையளிப்பதாக கூறினார். விவசாயிகளுக்காக போராடி தடியடி வாங்கிய மாணவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் முடக்கி இருக்க வேண்டும். அவ்வாறு நடக்காதது துரோகமிழைத்துவிட்ட உணர்வை உருவாக்குவதாக கூறினார். மேலும், கீழரசுர் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு பதிலடி கொடுத்த இளைஞர்களை தடுத்து அவர்களை மக்கள் விடுவித்ததை ஒப்பிட்டு பேசி போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தினார்.

லால்குடி வட்டத்திலிருந்து திருநாவுக்கரசு என்ற விவசாயி, மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்ததுடன், தங்கள் பகுதியில் மணல்கொள்ளையை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியதை விளக்கினார்.

தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தபால்நிலையத்தை முற்றுகையிட்டதையும், மணல்கொள்ளை, விவசாயிகள் பிரச்சினை ஆகியற்றில் அரசு அதிகாரிகளும், போலீசும் தான் சட்டத்தை மதிப்பில்லை என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

tiruchy-protest-for-condemn-police2சிறப்புரையில் கரூர் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமசாமி, ஜல்லிக்கட்டுக்கெதிரான மாணவர் போராட்டம் என்பது பறிக்கப்படும் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் என்பதையும், போராட்டத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், மாணவர் போராட்டம் என்பது விவசாயிகள் பிரச்சினை, மணற்கொள்ளை என நீண்டு செல்வதை தடுத்து நிறுத்துவதே அரசின் நோக்கம் என்பதையும் அதற்கு எட்டப்பர்களான ஹிப் ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டுப் பேரவை ராஜசேகரன் போன்றோரை பயன்படுத்திக்கொண்டதையும், இவர்கள் RSS-BJP’ன் கைக்கூலிகள் என்பதையும் அம்பலப்படுத்தினார். மணல் கொள்ளை கிரிமினல்கள் சேகர் ரெட்டி, ராம்மோகன ராவ் போன்றோருடன் பன்னீருக்குள்ள நெருக்கத்தையும், இந்த அரசுக்கட்டமைப்பே மக்களுக்கு எதிராகி, ஆள அருகதையற்றுத் தோற்றுப்போனதையும் அம்பலப்படுத்தினார். திருச்சி மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சத்யா நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு அங்கு கூடியிருந்த மக்கள் மாணவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை பேசினர். இத்தகைய போராட்டம் இதோடு நின்றுவிடப்போவதில்லை தொடரும்… தமிழக போலீசாரில் விதிவிலக்காக பேசப்படும் ஜல்லிக்கட்டுப்புகழ் திரு.மயில்வாகணன் (திருச்சி மாவட்ட உதவி ஆணையர்) உள்ளிட்டவர்களின் முகத்திரையை விரைவில் அவர்களே கிழித்துக் கொள்வர்.

செய்தி: மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்! – நெல்லையில் ஆர்ப்பாட்டம்.

nellai-protestமிழர்களின் பண்பாட்டில் தலையிடும் டில்லியை எதிர்த்து ஜல்லிக்கட்டுக்காகவும், காவிரி, கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட  பிரச்சினைகளில் மோடி தலைமையிலான மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து தமிழகமெங்கும் நடந்த மாணவர்கள் – இளைஞர்களின் மகத்தான போராட்டத்தின்மீது ஏவப்பட்ட காவல்துறையின் கொலை வெறித்தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பரவலாக பிரசாரம் செய்து 01.02.17 மாலை நெல்லை, பாளையங் கோட்டையிலுள்ள ஜவஹர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு முதல்நாள் தான் காவல்துறை அனுமதி அறிவிப்பை தந்தது.  நம் பிரச்சாரத்தை முடக்கும் விதமாக கல்லூரி வாயிலில் பிரசுரம் தருவதை தடுக்க பல இடங்களில் காவலர்கள்  களமிறக்கப்பட்டனர். அதையும் மீறி பள்ளி கல்லூரிகளில் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

காக்கிகள் கோவில்பட்டியில் சுவரொட்டி ஒட்டிய தோழர்களை  காவல்நிலைத்துக்கு கொண்டுசென்று வழக்கு போட்டு அச்சுறுத்தினர். நேரில் சென்ற வழக்குறைஞரிடம் “இவங்க நக்சலைட்டுங்க; இவங்களுக்கெல்லாம் நீங்க ஆஜராகலாமா?” என்று பேசியுள்ளனர். “கேடி கிரிமினல்களுக்கு நாங்க ஆஜராகரப்ப எல்லாம் இப்படி நீங்க கேட்டதில்லையே. இவங்களுக்கு ஆஜராகரதுல என்ன தப்பு!!” என்று பதிலுக்கு பேச மூக்கறுபட்டது காவல்துறை.

பல இடங்களில் சுவரொட்டிகளை கிழித்துவிட்ட சூழலில் 01.02.17 மாலை 4.00 மணிக்கு அறிவித்தபடி தோழர்கள் பேனர், கொடிகளுடன் திரண்டனர். அரசு, போலீசின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் ம.க.இ.க. வின் பாடல்கள் போடப்பட்டது.

nellai-protest33.00 மணியிலிருந்தே உளவுத்துறையினர் சுற்றி நின்று வருபவர்களை போட்டோ எடுத்தபடி இருந்தனர்.  நிகழ்ச்சியை படமெடுத்தபடி தோழர் கணேசன் சுற்றி வந்தபோது சீருடை அணியாமல் கேமரா எடுத்துக்கொண்டிருந்த காவலர்கள் இவருடன் வாக்குவாதம் செய்து தாக்கி, கேமராவை பிடுங்கினர். இதை கண்டித்து வழக்குறைஞர்களும் தோழர்களுமான பூபதி, தங்கபாண்டி, அரிராகவன் உள்ளிட்டோர் பேச கைகலப்பானது. தோழர் பூபதியின் கையில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க ஆத்திரத்தை தூண்டுகிறார்கள் என்பதால் அணிவகுத்திருந்த தோழர்களை கலைய வேண்டாம் என்று கட்டுப்படுத்தி நிழக்ச்சியை தொடங்கினோம். அப்பொழுது ஒலித்த “பஞ்சாயத்த கலைக்கப்பாக்குறான் பன்னீரு” நிலைமையை எடுப்பாக விளக்கியது.

மக்கள் அதிகாரம் தோழர் ஆதி தலைமை தாங்க பாளையை அதிரவைக்கும்படி முழக்கங்கள் போடப்பட்டது. தமது தலைமை உரையில்   “மெரினா போராட்டத்தில் மாணவர்கள் ஒழுங்குடனும் ,கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பெண்களை மதித்து பாதுகாத்தும் போராடினர். ஆனால் போலீசு திட்டமிட்டே தாக்கி கலவரத்தை நடத்தியுள்ளது. இதற்கான ஆதாரம் குவிந்துள்ளது. ஆனால் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீஸ் மீது மக்களுக்கு பயம் இருக்கவேண்டும் என்றுதான் இப்படி தாக்கியுளனர்” என்று அம்பலப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கண்டன உரையாற்றிய     நெல்லை தி.மு.க. இலக்கிய அணியின் கவிஞர் மூர்த்தி பேசும்போது “1965 இன் இந்தி எதிர்பு போராட்டம் போல் இன்று தமிழ் கலாச்சாரத்தை காக்க போராட்டம் நடக்கிறது. நாம் அச்சமின்றி வாழ மக்கள் அதிகாரம் தொடர்ந்து வளர வேண்டும்” என்று வாழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகளின் நெல்லை மண்டல செயலாளர் தோழர் சேனா. ஐகோர்ட் பாண்டியன் “காவல்துறை இனி திருந்தியாக வேண்டும்” என்றார்.

ஆதித்தமிழர் கட்சியின் தென் மண்டல வழக்கறிஞர் அணியின் தோழர்  இளமாறன் கோபால் “ 7வது நாளில் ஏழரை நாட்டு சனியாக வந்தது ஏவல்துறையான காவல்துறை. தீவிரவாதி வந்துவிட்டான் என்று கதை விட்டது. காவல்துறை சட்டம் ஒழுங்கை எவ்வாறு மதித்து நடக்கும் என்பதற்கு சற்று முன்னர் பொதுமக்கள், வணிகர்கள் முன்பாக போட்டோ கிராபரையும், வழக்குறைஞரையும் போலீசார் தாக்கியதே சாட்சி. இதுபோலத்தான் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் வந்ததால்தான் வெறிகொண்டு குப்பத்தை சூறையாடியது.” என்று அம்பலப்படுத்தினார்.

சிபிஎம்-மின் பாளை தாலுகா செயலாளர் தோழர் சிரீராம் மற்றும் சிபிஐ மாவட்ட துணை செயலாளர் தோழர் பெரும்படையான் உள்ளிட்டோரும் அரசு மீதான கண்டனங்களை பதிவு செய்தனர்.

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் மநிலக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் தோழர் ரமேஷ் “மணவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் மெரினாவில் ஒரு புரட்சியை நடத்தியுள்ளனர். அதை போலீசு நசுக்குகிறது. மக்கள் அதிகாரத்தின் போராட்டத்தில் என்றும் துணைநிற்போம்” என்றார்.

மக்கள் அதிகாரத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கோ. நாகராஜன் காவல்துறையில் புறையோடிப்போயுள்ள ஒழுக்கக்கேடுகளை, பாலியல் வெறிபிடித்த மிருகமாக நடப்பதை சிவகங்கை உதாரணத்துடன் அம்பலப்படுத்தினார். “ மாணவர்களின் போராட்டத்தை சுமுகமாக முடிக்க அனுமதித்தால் அது ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும் என்ற அச்சத்தில்தான் அரசு தாக்கியது.  கல்வி உரிமை போராட்டத்தை ஒடுக்குவது முதல், மணல் கொள்ளைக்கு துணை நிற்பது வரை அனைத்திலும் ஒன்று தெளிவாகிறது. அதாவது அரசின் அனைத்து உறுப்புகளும் அழுகி நாறுகிறது. அவர்கள் உருவாக்கிய சட்டம், விதிகளை அவர்களே மதிப்பதில்லை. எனவே மெரினா போராட்டம் ஒரு தொடக்கம் மட்டுமே. அது மீண்டும் வீறுகொண்டு எழும்! இந்த் அரசமைப்பையும் துடைத்தெறியும்” என்றார்.

எழுச்சியுடன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றது. சாலையில் சென்ற பலரும் வாகனத்தை ஒதுக்கி நிறுத்தி நிகழ்ச்சியை பார்த்தனர். பிரசுரத்தை வலிய வந்து கேட்டும் வாங்கினர். நம் பாடல்கள் ஒலித்தபோது “எங்கிருந்து இந்த மாதிரி பாட்டை புடிச்சாங்க!” என்று வியந்து பாராட்டினர். மக்கள் ஆதரித்து பேசப்பேச காக்கிகளின் முகத்தில் ஈ ஆடவில்லை. கடைநிலை காவலர்கள் பலரும் தமது துறையின் உயரதிகாரிகளை நாம் அம்பலப்படுத்துவதை ரசித்துப் பார்த்தனர். அந்த வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அரசின் அடக்குமுறைக்கு பணியக்கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

 

மக்கள் அதிகாரம்,
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டம்

***

கோவையில் போலீசைக் கண்டித்து போராட்டம்!

ல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர் மற்றும் பொது மக்களின் அமைதி வழிப் போராட்டத்தில் தமிழக போலிசு நடத்திய கொலைவெறி தாக்குதலை கண்டித்து, ஆர்பாட்டம் நடத்த கோவை முழுவதும் 250 சுவரொட்டி ஒட்டப்பட்டு 11000  துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. கோவையில் மக்கள் அதிகாரம் சார்பாக தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரே அனுமதிப் பெற்று  31-01-2017 காலை 11 மணிக்கு “ போலிசு ராஜ்ஜியம் ! எழுந்து நின்ற தமிழகமே, எதிர்த்து நில் !! ” என கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒலிப்பெருக்கி, கொடிகள், முழக்க அட்டைகளுடன், முழக்கங்கள் முழங்க 2 மணி நேரம் வரை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர், போராட்டத்தில் கலந்து கொண்டு தாக்கப்பட்டு கை உடைந்த நிலை மாணவி, போராடிய மாணவர் மற்றும் பெண்கள் குழந்தைகள், தோழமை இயக்கங்கள் என  பேர் கலந்து கொண்டனர்.

பகுதி ஒருங்கிணைப்பாளர்
கோவை

***

viruthai-protest

போலீசைக் கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்!

ல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவியது.குறிப்பாக மெரினாவில் லட்சகணக்கானவர்கள் திரணடனர்.மாணவர் போராட்டமாக தொடங்கியது. மக்கள் போராட்டமாக மாறியது. தமிழகமே எழுந்து நின்றது. காவிரி, முல்லை பெரியார், பணமதிப்பு நீக்கம், பொங்கல் விடுமுறை ரத்து, இந்தி சமஸ்கிருத திணிப்பு, இவை அனைத்தும் ஜல்லிக்கட்டு போராட்டம் எனும் ஈட்டிமுனையால் மத்திய – மாநில அரசுகளை குத்தியது. இந்நிலையில் தான் ஜனவரி 23-ம் தேதி காவல்துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவரை சீராக இருந்த சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது. பாதுகாப்பாக இருந்த பெண்கள் தாக்கப்பட்டனர். ஆபாசமாக திட்டப்பட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக இருந்த மீனவர்களின் சந்தை மீன் சந்தை, வீடு காவல் துறையினரால் கொளுத்தப்பட்டது. ஆட்டோ எரிக்கப்பட்டது. இவை ஊடங்களில் வந்து அம்பலப்பட்டுப் போன அரசும், போலீசும் விசாயத்தை மடை மாற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் புளுகுகிறது.

இதைக் கண்டித்து விருத்தாசலத்தில் 03-02-2017 அன்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம், விருதை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைக் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள், மாணவர்கள் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

IMG_20170203_181602மக்கள் அதிகாரம், விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம்:

இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மீண்டும் ஒரு 1965 இந்தி திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டம் என்று அரசுக்கு உரைத்தது. அதனால்தான் போலீசை கொண்டு ஒடுக்கியது. தொடர்ச்சியாக காவேரி, முல்லை பெரியார், மீத்தேன், கூடங்குளம் என அனைத்திலும் தமிழர்களின் உணர்வு பரிக்கப்பட்டதன் வெளிப்பாடே தன்னெழுச்சியான இந்த மக்கள் பேராட்டம். இந்த திசை திருப்பலால் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டார்கள் எனக் கூறி போலீசு தாக்குதல் நடத்தியது. அந்த 1 வாரம் மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்தனர் ஜல்லிக்கட்டு போராட்டம் வென்றது. அவர்களை அடிப்பணிய வைக்க தான் இந்த தாக்குதல். தாக்குதலுக்கு அஞ்சி போராட்டம் ஓயாது.

தோழர் மணிவாசகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி-விருத்தாசலம் பகுதி செயலர்

காவல்துறையில் கிட்டத்தட்ட 40 உட்பிரிவுகள் உள்ளது. இவை அனைத்துக்கும் இருக்கும் ஒரே வேலை மக்களை ஒடுக்குவது. சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவதாகக் கூறி போராடும் மக்களை ஒடுக்குகின்றனர்.

IMG_20170203_173802உண்மையில் இவர்கள்தான் சமூக விரோதிகள். லஞ்சம் வாங்குவது, ஆட்டோ எரிப்பது, பெண்களை சீண்டுவது என சட்டத்தை காலில் போட்டு மிதிப்பது இவர்கள் தான்.

இவர்களை இந்த அரசுக் கட்டமைப்பு தண்டிக்காது. உதாரணமாக பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை இதுவரை இல்லை. பகத்சிங் பாதையை, கொள்கை பிடிப்புள்ள போராட்டம் மூலம் மட்டுமே இவர்களை தண்டிக்க முடியும்.

அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்

தமிழர் உரிமைக்கான மாணவர் போராட்டம் மிகப் பெரிய அளவில் வென்றது. அதை ஒடுக்க ஜனவரி 23 அன்று காவல் துறையினர் அராஜகத்தை செய்திகளாக பார்த்தோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர் குப்பங்களை காவல்துறை குறி வைத்து தாக்கியுள்ளது. காவல்துறை சட்டத்தை மதிக்க வேண்டும். அவர்கள் மீறும் போது மக்கள் அவர்களுக்கு எதிராக புரட்சியில் இறங்குவார்கள்.

ராமர் , கம்யுனிஸ்ட் கட்சி மா.லெ மக்கள் விடுதலை

வர்ணாசிரமத்திற்கும், அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டம். போலீசின் அடக்குமுறையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவே இந்த ஆர்ப்பாட்டம். மத்தியில் ஆளும் இந்து மதவெறி கும்பல் தமிழர்களின் பாரம்பரியத்தில் கை வைக்கின்றது. இதை எதிர்த்து தான் மாணவர்கள் போராடினர். இந்த போராட்டம் தமிழக அரசை டெல்லி நோக்கி ஒடசெய்தது. அவசர சட்டம் இயற்றியது. அந்த நகலை மாணவர்கள் கேட்டனர். தரவில்லை மாறாக காவல் துறையை கொண்டு தடியடி நடத்தியது. சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என அடக்குமுறைக்கு காரணம் காட்டினர். போலீஸ் அதிகாரிகள் இதை நம்ப யாரும் தயாராக இல்லை. தமிழக மாணவர்கள் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டார்கள் மீண்டும் தொடரும் போராட்டம்.

வழக்கறிஞர் செந்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

இது சட்டத்தின் ஆட்சி கிடையாது. காவல் துறையின் ஆட்சி என்பது இந்த தடியடி மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எரித்த,  குடிசைக்கு தீ வைத்த போலீசுதான் சமூக விரோதி இவர்களின் வேலை லஞசம் வாங்குவது, டாஸ்மாக்கை காவல் காப்பது, சட்ட விரோதமாக செயல்பட்ட காவல்துறையில் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. மாணவர்கள் நினைத்தால் முடியும் மெரினாவில் போடப்பட்டிருக்கும் 144 தடையும் உடையும்.

IMG_20170203_171934வழக்கறிஞர் அம்பேத்கர், விருத்தாசலம்.

போலிசின் இந்த அராஜகம் அரசின் கொள்கை பிரதிபலிப்பே. அரசு என்பது உழைக்கும் மக்களுக்கானது அல்ல, நம்மை ஒடுக்க அது பயன்படுத்தும் தடியே போலீசு. உயர்நீதிமன்ற போராட்டத்தில் வழக்கறிஞர்களை கல்லால் அடித்து பொலீசு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த மாணவர் போராட்டம் – பண்பாடு, கலாச்சார போராட்டம்.

திருமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

நடப்பது மக்களாட்சியா?  போலீசு ஆட்சியா? அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்படவில்லை, சர்வாதிகார போக்கே உள்ளது. மன்னர்களை விட அடக்குமுறை செலுத்துகிறது.

நாங்கள் – மனித நேயத்தை காக்க புத்தரின் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்கள். சட்டம் போராட அனுமதித்துள்ளது, காவல்துறை மறுக்கிறது. மக்கள் அதிகாரத்தை எடுக்கும் போது காவல்துறை அதிகாரம் செல்லாது. போலீசு – அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக வேலை செய்கிறது. மாணவர்களை ஒடுக்கிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கறிஞர் கருணாநிதி, விருத்தாசலம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் கலாச்சார உரிமைக்காக மீட்டெடுக்க நடத்திட்ட மாணவர் போராட்டம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்தது. சட்டம் பேச்சு உரிமை கொடுக்கிறது. போலிசு பெசக் கூடாது எனத் தடுக்கிறது. அரசு எந்திரம் தள்ளாடுகிறது. மாணவர்கள் அரசியல் புரிதலை வளர்த்து தொடர்ந்து போராட வேண்டும்.

வழக்கறிஞர் பஷ்தேவன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்  

IMG_20170203_193058காவல்துறை அராஜக போக்கினை நக்கீரன் போன்ற இதழ்கள் சிறப்பாக வெளியிகாட்டியுள்ளன. சமூக விரோதி புகுந்துவிட்டதால் தடியடி நடத்தினோம் என்கிறார்கள். சமூக விரோதி யார் என தீர்மானிக்கும்அதிகாரம் காவல் துறைக்கு  கிடையாது. நந்தினியை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கிய இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் சமூக விரோதி இல்லையா? அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சமூகவிரோதி என முத்திரை குத்தினாலும் அடக்கு முறை செலுத்தினாலும் மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்.

வழக்கறிஞர் தோழர். ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளார், மக்கள் அதிகாரம்

ஜல்லிக்கட்டு உரிமைக்காக தமிழக வரலாற்றில் முதன்முறையாக மெரினா முதல் குமரி வரை போராட்டங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க சொல்கின்றனர். காவிரியில் கர்நாடகம் மதிக்கவில்லை,முல்லை பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மக்கள் நலபணியாளர் விசயத்தில் தமிழகம் மதிக்கவில்லை. டெல்லியில் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான மக்களின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.

வெறிநாயை அவிழ்த்துவிட்டால் எப்படி கடிக்குமோ அப்படி நடந்து கொண்டது போலீசு.  மக்கள் மீண்டும் போராடக்கூடாது என்பதற்காக தடியடி நடத்தியது காவல்துறை. போராட்டம் சுமூகமாக முடிந்து விட்டால் காளையில் பற்றிய தீ காவிரி முதல் கல்வி எனப் படர்ந்து விரிவடையும் எனும் அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்த தடியடி.

IMG_20170203_191606இந்த தடியடி அராஜகத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய கோரி போராடுகிறோம். அப்படி இதுவரை நடந்ததாக வரலாறு இல்லை. மக்கள் செய்யும் குற்றத்திற்கு ஆயுள்தண்டனை என்றால் அதையே போலீசு செய்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் யார் கொடுப்பது?  மனித உரிமை ஆணையத்திற்கு தண்டிக்கும் அதிகாரம் இல்லை. சான்றாக, டாஸ்மாக் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளரின் கை-காலை சட்ட விரோதமாக உடைத்தது காவல்துறை. மனித உரிமை ஆணைய விசாரணை, உயர்நீதிமன்ற வழக்கு – எதுவும் போலீசை இன்னும் தண்டிக்கவில்லை.

இங்கு தனிப்பட்ட அதிகாரிகளின் நேர்மை உதவாது. ஓட்டு மொத்த அரசு கட்டமைப்பும் மக்களுக்கு எதிரானதாகவும், குற்றவாளிகளால் நிரம்பி உள்ளது. அதோடு தமிழ்நாட்டை ஆள்பவர்கள் கிரிமினல்களின் மையமாக உள்ளனர். இதில் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. நமது பிரச்சினைகளுக்காக நாம்தான் போராட வேண்டும். உண்மையாக போராட வேண்டும்.  அதற்கான உத்வேகத்தை ஜல்லிக்கட்டு போராட்டம் அளிக்கிறது.

தடியடியும், பொய் வழக்கும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெரினாவை  கட்டியமைப்போம். தொடர்ந்து முன்னேறுவோம்.    

மக்கள் அதிகாரம்
விருதை

சசிகலா : குற்றம்தான் முதல்வர் பதவிக்கான தகுதி

3

TALENT_P2மெரினா எழுச்சியால் தலை நிமிர்ந்த தமிழகத்தின் முகத்தில் சாணியால் அடிக்கப் பட்டதைப்  போன்றதொரு உணர்வு. எனினும் இது எதிர்பாராத அடி அல்ல. முதன்முறையாக வாங்கும் அடியும் அல்ல. மாண்புமிகு அம்மா ஏற்கனவே பலமுறை தமிழகத்தின் முகத்திலும், இந்த “மாபெரும்” ஜனநாயக அமைப்பின் முகத்திலும் காறி உமிழ்ந்து செருப்பால் அடித்திருக்கிறார்.

அறிவு ஜீவிகள் வலிக்காதது போல நடிக்கிறார்கள். அறிவில்லா ஜீவிகளான பாமர மக்களுக்கோ வலி பழகி விட்டது. அந்த தைரியத்தில்தான் சசிகலா முதல்வராகிறார்.

மெரினா எழுச்சி தோற்றுவித்திருக்கும் சொரணை மரத்துப் போவதற்கு முன்னால், தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.

சென்ற ஜனவரி – 2017 புதிய ஜனநாயகம் இதழில் “மாண்புமிகு மன்னார்குடி மாபியா”, என்ற தலைப்பிலும், “அ.தி.மு.க வை அழிக்காவிடில் தமிழகமே அழியும்” என்ற தலைப்பிலும் வெளிவந்த இரு கட்டுரைகளிலிருந்து சில பத்திகளை மட்டும் இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

எதிரிகளைப் பற்றி விளக்குவதன் நோக்கம் அவர்களை எதிர்த்துப் போராடுவதுதான்.

தேவைப்படுவது இன்னொரு மக்கள் எழுச்சி. அதனைத் தமிழகம் உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.

வினவு

ன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை (தற்போது முதல்வர் பதவியையும்) அதிகாரப் பூர்வமாக கைப்பற்றிவிட்டது

தனக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றுமாறு புரட்சித்தலைவர் தன்னிடம் ரகசியமாக சத்தியம் செய்து வாங்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்க வேண்டியிருப்பதாகவும் தனது வாரிசுரிமைக்கு ஆதாரம் காட்டி வாதாட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை அம்மாவுக்கு இருந்தது.

அத்தகைய நிலைமை சின்னம்மாவுக்கு இல்லை.  அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி அவர்தான் என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை.

_______

42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)
42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)

ம்மாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப ஒரு வார்தா புயல்தான் வரப்போகிறது” என்று வட இந்திய அரசியல் ஞானிகள் கூறிக்கொண்டிருக்க, சங்க பரிவாரத்தினரையே விஞ்சும் ராணுவக் கட்டுப்பாட்டை அதிமுகவினர் வெளிப்படுத்தினர். மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அந்த ஞானம் தோற்றுவித்ததுதான் இந்த அதிசயிக்கத்தக்க ஒற்றுமை!

______

“முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். “தகுதி” பற்றிய கேள்வியை ஜெயலலிதாவோடு நிறுத்திக் கொண்டாலோ, எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

எப்படிப் பார்த்தாலும் சசிகலா என்பவர் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கத்தின் தலைவி. நாளை மறுநாள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். இருப்பினும்,  நாளை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அவர் அமரும்போது, “மாண்புமிகு முதல்வர்” என்று என்று அவரை நாம் அழைக்காமலிருக்க முடியாது.

சசிகலாவை அவ்வாறு அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மன்னார்குடி மாஃபியாவையும் “மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு என்ன தெரியவேண்டுமோ அது சசிகலாவுக்குத் தெரியும். நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, மதுவிலக்கு, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் என்று ஒவ்வொரு துறை அமைச்சரின் அன்றாட வசூல் எவ்வளவு, அதில் தோட்டத்துக்கு சேர வேண்டிய தொகை எவ்வளவு என்பது சசிகலாவுக்குத் தெரியும். அதை வேவு பார்த்து சொல்வதற்கு உளவுத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்த தெரியும். ஏமாற்றுகின்ற அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பதவியைப் பறிப்பதற்கும் தெரியும்.

சாதிக்காரர்களை நியமித்து போலீசு துறையை கட்டுப்படுத்துவது எப்படி, மற்ற ஆதிக்க சாதி அமைச்சர்கள் அதிகாரிகளை கண்காணிப்பது எப்படி, சமாளிப்பது எப்படி, மற்ற கட்சிகளில் கைக்கூலிகளை உருவாக்குவது எப்படி என்பது உள்ளிட்ட நிர்வாகக் கலைகள் தெரியும்.  தேர்தல் கமிசன் அதிகாரிகள் முதல் நீதியரசர்கள் வரை அனைவரையும் விலைக்கு வாங்கும் வழிமுறைகள் தெரியும். ஒரு கிரிமினல் மஃபியாக் கும்பலின் தலைவிக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அத்தனையும் தெரியும்.

. “சசிகலாவைப் பற்றி அவருடைய எதிர்காலச் செயல்பாட்டை வைத்துத்தான் கருத்து கூற முடியும்” என்கிறார்கள் மாண்புமிகு எதிர்க்கட்சிகள். “கடந்த காலச் செயல்பாட்டை”க் காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன். சொத்துக் குவிப்பு வழக்கு முதல் சேகர் ரெட்டியின் மணற்கொள்ளை வரை அனைத்தும் கடந்த காலச் செயல்பாட்டில் விளைந்தவையே என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா என்ன?

முதல்வரின் தோழியாக இருந்தபோதே அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர், முதல்வராகிவிட்டால் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கும்போதே நமக்கு நெஞ்சு நடுங்குகிறது!

“சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார், அ.தி.மு.க வும் இருந்திருக்காது” என்று வெளிப்படையாக பொதுக்குழுவில் பேசினார் வளர்மதி. “விசுவாசமான கூட்டுக் குற்றவாளி” என்பதுதான், இன்று அம்மாவுக்கு அடுத்தபடி முதல்வராவதற்கு சசிகலா பெற்றிருக்கும் முதன்மையான தகுதி.

ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக.

உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது.

குற்றம்தான் முதல்வர் பதவிக்கான தகுதி.

  புதிய ஜனநாயகம் ஜனவரி – 2017

மெரினா வன்முறை – வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழு அறிக்கை

6

மெரினாவில் மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை செய்தது காவல்துறை தான்” – சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை !

ல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும்” என்ற கோரிக்கையோடு மெரினாவில் போராடிய மாணவர்கள் போராட்டத்திலும், மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 23/01/2017 அன்று  வன்முறை வெடித்தது.  நடந்த உண்மைகளை கண்டறிய, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உண்மையறியும் குழுவாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களிடம் நேரடி ஆய்வு செய்து, அறிக்கையாக தொகுத்து 31/01/2017 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்கள்.

chennai-lawyers-press-meet
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உண்மையறியும் குழுவாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களிடம் நேரடி ஆய்வு செய்து, அறிக்கையாக தொகுத்து 31/01/2017 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்கள்.

வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் பாவேந்தன், மில்ட்டன் ML (செயலர், மக்கள் உரிமைப்  பாதுகாப்பு மையம், சென்னைக் கிளை) இருவரும் அறிக்கையின் சாரத்தை தொகுத்து பேசினர்.

”மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளான அம்பேத்கர் பாலம், நடுக்குப்பம், மாட்டங்குப்பம், ரோட்டரி நகர் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டோம்.  ஆய்வின் முடிவாக, மாணவர்களின் போராட்டத்தை முறியடிப்பதற்காக, தமிழக அரசு தான் திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்துள்ளது.

மெரினாவில் சமூகவிரோதிகள் தாக்கினார்கள்.  காவல்துறை தாக்குதல் நடத்தவில்லை என அரசு தரப்பில் திரும்ப திரும்ப சொல்லிவருகிறார்கள்.  மெரினாவில் இருந்து ரத்த காயங்களுடன் ஓடிவந்த மாணவர்களுக்கு மக்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  அதற்காக, காவல்துறை பல வீடுகளின் கதவை உடைத்துள்ளனர்.  65 வயது பெண்கள் முதல் 10 வயது குழந்தைகள் வரை தாக்கியுள்ளனர்.  அனைவர்களுடைய சாட்சியங்களையும் விரிவாக பதிந்துள்ளோம்.  ஆகவே, காவல்துறை தரப்பு வாதம் பொய். வன்முறைக்கு சமூக விரோதிகள் காரணமில்லை.  போலீசு தான் முழுமையான காரணம்.

வன்முறையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 250 பேரை போலீசு கைது செய்திருக்கிறது.  200 எப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளது.   250 பேரை எப்படி விசாரிக்காமல் கைது செய்யமுடியும்?

வன்முறைக்கு காரணம் போலீசு தான்.  அதனால் விசாரணையும் காவல்துறையிடமிருந்து தான் துவங்கவேண்டும்.  வன்முறை நடந்து ஒரு வாரம் கடந்தும். இன்றுவரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை.  ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை.  இப்பொழுது தான் இரண்டு காவலர்களை அடையாளப்படுத்துகிறார்கள்.   மேலும் வன்முறை செய்த போலீசே எப்படி விசாரிக்கவும் முடியும்? தார்மீக ரீதியாகவே விசாரிக்கமுடியாது.   அதனால், விசாரணை செய்ய நடுநிலையான, நேர்மையான நீதிபதியை வைத்து நீதி விசாரணை செய்யவேண்டும், கிரிமினல் நடவடிக்கைகளை விசாரணை செய்ய சுதந்திரமான, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படவேண்டும்” என கோருகிறோம்.

விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்கும் வரை கைது செய்த அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி சொந்த பிணையில் விடுதலை செய்யவேண்டும். காவலர்களின் வன்முறையை நியாயப்படுத்தி பேசிய ஆணையாளர் திரு. ஜார்ஜ், துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.

chennai-lawyers-press-meet3
வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் பாவேந்தன், மில்ட்டன் ML (செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னைக் கிளை) இருவரும் அறிக்கையின் சாரத்தை தொகுத்து பேசினர்

இதுவரை கைது செய்யப்பட்ட பலரையும் பிணையில் எடுத்துள்ளோம்.  பலர் தங்கள், கை, கால்கள் பாதிப்படைந்தும், தலையில் தாக்கப்பட்டும் மருத்துவமனைகளிலும்,  உரிய சிகிச்சை இல்லாமல் சிறையிலும் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் பிணையில் எடுப்பதற்கு குழு அமைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.   காவல்துறையின் திட்டமிட்ட கலவரத்தை, அரசு தங்கள் மீது தொடுத்த போராக மக்கள் கருதுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.  மக்களோடு வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக தான் தமிழக மக்களுக்கு இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறோம். அறிக்கையில் ஒவ்வொரு சாட்சியங்களையும் விரிவாக பதிவு செய்துள்ளோம்.  எங்கள் குழு வந்தடைந்த முடிவுகளையும் மற்றும் பரிந்துரைகளையும் தெரிவித்துள்ளோம்.”

குறிப்பு: வழக்கறிஞர்களின் உன்மை அறியும் குழுவினரின்  அறிக்கை (PDF வடிவில்) தேவைப்படுவோர்  chennaiprpc@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

***

ஜல்லிக்கட்டு போராட்டம் :  சென்னை : காவல்துறை வன்முறை

உண்மை அறியும் குழு அறிக்கை

I. மெரினா போராட்டத்தின் பின்னணி

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரை – அலங்காநல்லூரில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறை கடந்த 16.01.2017 அன்று தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் 17.01.2017 அன்று கூடினர். சில நூறு பேராக இருந்தவர்களின் எண்ணிக்கை மிக விரைவிலேயே பல லட்சங்களானது

இந்த போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக முதலமைச்சர் வேறு வழியில்லாமல் டெல்லிக்கு சென்றார். அங்கு பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் மத்திய அரசால் ஒன்றும் செய்யமுடியாது என கைவிரித்தார். அதன்பிறகு 21.01.2017 அன்று தமிழக அரசு மிருக வதை தடை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்து அவசர சட்டம் ஒன்றை இயற்றியது. மறுநாளே ஜல்லிகட்டை நடத்தலாம் என்றும், மதுரை அலங்காநல்லூரில் முதல்வரே தொடங்கிவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டன. தமிழக அரசு அவசர சட்ட அறிவிப்பை  அறிவித்தாலும் மாணவர்களும், இளைஞர்களும் நிரந்த சட்டமே இதற்கு நிரந்த தீர்வு என கருதினர்.

அதனால் தமிழகம் முழுவதும் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்ததோடு, ஜல்லிக்கட்டை நடத்தவும் முன்வரவில்லை. மதுரைக்கு முதல்வர் சென்றபோதுகூட அலங்காநல்லூரில் கூடியிருந்த மக்கள் நிரந்தர சட்டமில்லாமல் ஜல்லிக்கட்டை நடத்த முன்வரவில்லை. முதல்வரும் அவசர சட்டத்தை தொடர்ந்து 23ம் தேதி நிரந்தர சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்படும் என்றும், மக்கள் என்று விரும்புகிறார்களோ அன்று ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். தமிழகம் முழுதும் போராட்டத்தில் உள்ள மக்கள் – மாணவர்கள் அனைவரும்  சட்டசபை கூடும்நாளான  23ம் தேதியை நோக்கி காத்திருந்தனர்.

22ம் தேதி வரை அமைதிகாத்த காவல்துறை அதிகாலை 4 மணியிலிருந்தே தங்களது படைகளை திரட்டி, மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களை வெளியேற்ற தொடங்கியது. அதற்கு முன்பாகவே மெரினாவிற்கு செல்லும் வழிகளை அடைக்கும் வேலைகளையும் மேற்கொண்டது. காவல்துறை மாணவர்களுக்கு எந்த அவகாசமும் கொடுக்காமல் பலவந்தமாக கூட்டத்தை கலைத்ததை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

பின்னர் சென்னை, அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள்மீதும், அவர்களை ஆதரித்த மக்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.   பெரும் வன்முறை ஏற்பட்டது. போலிசாரே வாகனங்களை அடித்து நொறுக்குவது, வாகனங்களுக்கு தீ வைப்பது, கற்கள், பாட்டில்களை கொண்டு அடிப்பது, பெண்களை லத்தி, இரும்பு குழாய்களைக் கொண்டு ஆண் போலீசார் தாக்குவது, பொருட்களை சூறையாடுவது, காய்கறி கடைகளை சூறையாடுவது போன்ற வன்முறை செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டது ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த சூழலில் வழக்குரைஞரகளாகிய நாங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டுவரும் பொருட்டு குழுவாக சென்று 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, மாட்டாங்குப்பம், அனுமந்தபுரம், ஐஸ் அவுஸ், அம்பேத்கர் பாலம், ரூதர்புரம், மீனாம்பாள்புரம், ரோட்டரி நகர், கபாலி நகர், மாயாண்டி நகர்  ஆகிய இடங்களில் மக்களையும் காவல் துறை அதிகாரிகளையும்  சந்தித்தோம்.

எமது குழு உறுப்பினர்கள்

  1. கோ.பாவேந்தன்
  2. சா.ரஜினிகாந்த்
  3. சாரநாத்
  4. கார்கி வேலன்
  5. காந்தி குமார்
  6. பார்வேந்தன்
  7. பொற்கொடி
  8. முத்துக்குமரன்.ஜி
  9. கோகுல்ராம்
  10. செங்கொடி
  11. கு.பாரதி
  12. சுரேசு சக்தி முருகன்
  13. கேசவன்
  14. ஜாண்சன்
  15. மார்க்ஸ் ரவீந்திரன்
  16. மீனாட்சி
  17. சிவகுமார்
  18. குபேந்திரன்
  19. இளங்கோ
  20. ஜிம்ராஜ் மில்ட்டன்(வாழ்நாள் தடை)
  21. கயல் @ அங்கயர்கன்னி
  22. சண்முகம்
  23. வாசுதேவன்
  24. ராதிகா
  25. தமிழினியன்
  26. சு.ப.மனோகரன்
  27. சேல்முருகன்
  28. செல்வகுமார்
  29. பி.சரவணன்
  30. அதியமான்
  31. தாணு
  32. தாமரைக் கண்ணன்
  33. பாணு
  34. செந்தமிழ் செல்வன்
  35. திருமூர்த்தி
  36. ஹெமா

மேலும் சமூக ஆர்வலர்களான ஜாக்கிர் உசைன், காயத்ரி, சாரு நிவேதா, சங்கீதா, பேராசிரியர் லெனின் ஆகியோரும் நம்முடன் இணைந்து கொண்டனர்.

அந்த சந்திப்பின் ஊடாக இலவசமாக அவர்களுக்கு பிணை எடுப்பது போன்ற சட்ட பாதுகாப்பை வழங்கி வருவதோடு, ஒரு சிலரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடும் செய்தோம், அத்துமீறிய கைது நடவடிக்கைகளில் காவல்துறையினரிடம் பேசி முதல்நிலையிலேயே அதாவது விசாரணை நிலையிலேயே சிலரை விடுவிக்க உதவினோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக பிரச்சனையில் இருந்து விடுபட இவ்வறிக்கை பயன்படும் என கருதி வெளியிடுகிறோம்.

II. நேரடியான மக்களின் சாட்சியங்கள்

திருவல்லிக்கேணி வி.ஆர். பிள்ளை நகரைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் மீனா

”காலையில் டிவி பார்த்துனு இருந்தேங்க அப்ப பசங்கள போலீசு அடிச்சிட்டு இருந்தத பார்த்த ஒடனே என் கைகுழந்தைய பக்கத்து வீட்டில குடுத்துட்டு அந்த இடத்திக்கு (மெரினா) ஓடுனே. அங்க பாத்தா போலீசு பொம்பள பசங்களையும் ஆம்பள பசங்களையும் பயங்கரமா அடிச்சிட்டு இருந்தாங்க. அடி தாங்க முடியாத சில பசங்க போலீசு காரங்க கால விழுந்து சார் எங்களுக்கு 2 மணி நேரம் டைம் கொடுங்க நாங்க போயிறோனு கெச்சினாங்க அப்ப கூட போலீசு அவங்கள அடிச்சிகிட்டிருந்தாங்க. இன்னொரு இடத்தில 7 பசங்க கை கோத்துகின்னு நின்னுட்டிருந்தாங்க அவங்க கை மேலையே போலீசு லத்தியால அடிச்சிட்டுஇருந்தாங்க ஆனா அப்ப கூட அந்த பசங்க கைய விடவே இல்ல. கிட்ட போய் பாத்தா அந்த பசங்களுக்கு பின்னாடி இருந்த கர்பிணி பொண்ணு போலிசு வயத்து மேலேயே போலிசு எட்டி எட்டி ஒதைச்சாங்க. அந்த பொண்ணுக்கு அந்த இடத்திலேயே அபாசன் ஆயிடிச்சு. மயக்கம் போட்டு விழுந்திடிச்சு. பசங்க தான் அந்த பொண்ண துாக்கிட்டு யாராது ஒதவி பண்ணுங்கனு கத்திட்டே ஓடினாங்க. ஆனா போலீசு ரொம்ப அநியாயம் பண்ணாங்க. பசங்க எதுக்கு போராடினாங்க நியாயத்துக்கு தானே. தமிழர்களுக்கு தானே. ஏன் பிள்ளைக்கு நாளைக்கு நல்ல பாலு வேணுன்றதுக்காக தான் போராடினாங்க. அது நியாயம் தான. நாங்க அவங்களுக்கு உதவி செய்வோம்.

அடிபட்டு கை ஒடைச்சு கால் ஒடைச்சு மண்ட ஒடைச்சு ஓடி வந்து விழறாங்க. நாங்க எப்படி விடமுடியும். நாங்க அவங்கள பாதுகாப்போம். போலீசு கண்ணீர் பொகை ஏன் போட்டாங்க? யாருக்கு கண்ணே தெரியல அதுலேயே போட்டு அடிக்கிறாங்க. ஒரு பொண்ணோட பேண்டைய உருவிட்டாங்க. நான் என் துணிய கொடுத்தேன். போலிசு பண்ணது அராஜகம். பசங்க வந்தே மாதரம்னு சொன்ன பின்னாடியு அடிச்சாங்க. வந்தே மாதரம்னு சொன்ன அடிக்கலாமா? காந்தி தாத்தா போராட்டம் பண்ணாருனு சொல்லுவாங்க அத நான் பாத்தது இல்ல. ஆனா மாணவர் போராட்டத்த நான் பாத்தேன். வந்தே மாதரம்னு சொன்ன வெள்ளகாரன்தான் அடிச்சான்… ஆனா நம்ம பசங்கள இந்த போலீசு காரங்க அடிச்சாங்க. வந்தே மாதரம்னு சொன்ன போதும் அடிச்சது ரொம்ப தப்பு. ஆறு நாளா ரொம்ப அமைதியாக இருந்தது. போலீசு வேலைய அந்த பசங்கதான் செச்சாங்க. அவங்கள அனுப்பனுன்னு நெச்சிருந்த மொத நாளே அனுப்பியிருக்கனும். குழந்தைங்க, வயசானவங்க வெளியிலே போகனுனா டைம் ஆகும்ல. ஒடனே போகனுன்னு அடிச்சா எப்படி? கை குழந்த வைச்சிருந்தத கூட பாக்காம அடிச்சாங்க. அடி தாங்க முடியாம தான் கொஞ்ச பசங்க கடலு பக்கம் போனாங்க.   முக்கியமா இந்த பிரச்சனையே போலீசு வந்த பேசியிருக்க கூடாது. அதுக்குன்னு இருக்கும் ஆப்பிசர் வந்து பேசிருக்கனும். அடிச்சது கட்டகூட இல்ல. மச்ச கலர்ல இரும்பு பைப். கண்ணீர் பொகை ஏன் போட்டாங்க? போலீசு காரங்க பெரிய கல்ல எடுத்து ஒடைச்சு அதுல அடிக்கிறாங்க. அடி தாங்காம ஓடியாராங்கள ஏன் பாதுகாப்பு கொடுக்கிறீங்கனு எங்க அடிச்சாங்க. அவங்க எங்க போவாங்க. எல்லா பக்கமு சுத்தி போலீசு எல்லா பக்கத்திலேயும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. அப்ப இங்க தான ஓடியார முடியும். என் குழந்தைகாக போராட்றாங்க. நல்ல பாலுக்காக போராட்ராங்க எப்படி விட முடியும். போலீசுகாரங்க பொம்பளங்க எல்லாத்தையும் அசிங்க அசிங்கமா பேசராங்க. ஒருத்திய அடிச்சா எல்லாரும் ஓடிடுவாலுங்கனு சொல்லி அடிக்கிறாங்க. எல்லா ஆம்பளங்களையும் அரஸ்ட் பண்ணிடுவேன்னு மெரட்டிராங்க. நாங்க எல்லாம் துாங்கி 3 நாளாச்சு. ஒரு வீட்லயும் ஆம்பளங்க இல்ல. நானு வேலைக்கு போய் 3 நாளாட்சு. எங்க வீட்டுகாரு பெயின்டர் வேல செய்யாராரு. அவரு வேலைக்கு போல. கைகுழந்தைய வச்சிகிட்டு நான் கஷ்டபடுரன். ஆன எவ்லோ கஷ்ட பட்டாலு எப்போதும் போராட்டத்துக்கு ஆதரவா இருப்போம். அத நான் எங்க வந்தாலும் சொல்லு.

வண்டி எல்லாம் எரிச்சதா சொல்றாங்க. நீங்க டிவில பாத்திருப்பீங்க ஒரு பொம்பள போலீசு தான் மூச்சில கர்சீப் கட்டிகினு ஆட்டோவ எரிச்சா. கஷ்டப்பட்டு புள்ளைங்களுக்கு அப்பா அம்மா வண்டி வாங்கி கொடுத்திருகாங்க. அவங்க ஏன் அத ஒடைக்க போராங்க? போலீசு தான் வண்டிய ஒடைச்சுது.”

கிருஷ்ணாபேட்டையை சேர்ந்த செந்தாமரை இந்த பகுதி கலவரம் நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது.

உண்மை அறியும் குழுவை பார்த்ததும் ஆவேசமாக துவங்கியவர் ”மீட்டிங் நடந்த இடத்திற்கு சம்மந்தமே இல்லாத 2 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற எங்க ஊருக்கு ஏன் போலீசு வரனு. பொம்பளங்க தனியா இருக்க கூடிய வீட்டுக்குள்ள போலீசு எப்படி நுழையலாம்.? ரவுடிங்க. போலீசு தான் ரவுடிங்க. வீட்டில துாங்கிட்டிருந்த என் தங்கச்சியோட மாராப்பு துணிய பிடிச்சு இலுத்து அவ கலுத்துல போட்டிருந்த 5 பவுன் செயின அருத்துட்டு போய்ட்டான் ஒரு ஆம்பல போலீசு. இவனுக தான் திருடனுங்க. திருடனுன்னு தான் அவனுங்க ஊருக்குள்ள நுழைச்சிருங்காங்க. அவனுங்களுக்கு பீச்சில தான வேலை. இங்க எதுக்கு வந்தாங்க?. இவ்லோ நாள நாங்க நகை போட்டிருந்தோம். நைட் சோ சினிமாக்கு போனோ ஆனா அப்போ எல்லாம் திருட்டு நடக்கல. போலீசு காரங்கதான் பாதுகாப்புனு சொன்னாங்க. அவனுங்க தான் இப்போ திருடிருக்காங்க. பொம்பளங்க தனியா தயிரியமா வீட்டில இருக்க முடியல. வன்முற பண்ணாங்கனு ஜெனங்கல சொல்றாங்களே அதுக்கு ஆதாரம் காட்ட சொல்லுங்க. அவன் வண்டிய ஒடைச்சதுக்கு, அடிச்சதுக்கு நாங்க வாட்சப்புல ஆதாரம் காட்டியிருக்கோம். போலீச அடிச்சதா சொல்றாங்க. போலீச பாத்தா பொம்பளங்க பயந்து தானே போவாங்க. எவ்ளோ பெஸ்ட்டா நடத்துனாங்க போராட்டத்த. எனக்கு 45 வயசு ஆகுது. இது மாதிரி ஒரு பெஸ்டா ஒரு போராட்டத்த பாத்தது கிடையாது. குடியரசு தினம் நடக்குது. நாங்க யாரும் போகல. இந்த மாதிரி குடியரசு தினத்திலே கூட சண்டை நடந்திருக்கு. பொம்பளய கிண்டல் பண்றது, திருட்டு எல்லாம் நடந்திருக்கு. ஆனா பசங்க நடத்தின ஜல்லிக்கட்டு போராட்டத்துல எதுவுமே நடக்கல. அவ்வளவு கண்ணியமா அந்த போராட்டம் நடந்தது. ஜல்லிகட்டு வேண்ணுறது எல்லாருக்கும் வேண்ணுறது தான். நம்ம பாராம்பரிய விளையாட்டு அது அதை எப்படி விட முடியும். மாணவர்கள் எல்லாத்தையும் அவ்வளவு பெஸ்டா நடத்தி காமிச்சாங்க. இவங்கனால எதுவு முடியாது. எங்க அடிச்சா அடங்கிடுவோம்னு நினைக்கிறாங்க. அடங்க மாட்டோம். இன்னும் எவ்ளோ இருக்கு. காவிரி பிரிச்சனை, விவசாயம் என கண்ணுக்கு தெரியாம எவ்ளோ இருக்கு. ஒரே நைட்ல 500 ரூபாய் 1000 ரூபாய நோட்டு செல்லாதுனு சட்டம் போட 2000 ரூபாய மாத்திரதுக்கு லைன்ல நின்னு ஆஸ்பத்திரிக்கு 2000 ரூபாய் செலவு பண்ணோம். பத்து நிமிஷத்துல அதுக்கு சட்டம் போட தெரிச்ச உனக்கு இதுக்கு சட்டம் போட தெரியாதா? எங்க உரிமைய உட்டு கொடுக்க மாட்டோம்.”

வி.ஆர். பிள்ளை தெரு, அனுமந்த புரத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற 16 வயது இளைஞர்

ஆம்புலன்ஸ் வண்டியில் உதவியாளராக வேலை பார்க்கிறார். அப்பா இல்லை. வேலைக்குச் சென்றால்தான் சோறு என்ற குடும்பம். வலது முழங்கை முழுவதும் கட்டு போட்டு கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. கட்டுக்கு வெளியில் தெரிந்த விரல்களில் காய்ந்த ரத்தத்தை நம்மால் பார்க்க முடிந்தது. முதுகில் பட்டை பட்டையாக சூடியிருந்தது. தொடையில, மூஞ்சில், கண்ணுக்கு அருகில் இரத்தம் கட்டியிருந்தது.

“சாப்பிடுட்டு இருந்தேன். அப்போ ஓடு ஓடுன்னு சத்தம் கேட்டது, என்டான்னு பாக்கறதுக்குள்ள நெரைய போலீசுகாரங்க 10, 15 பேரு பயங்கரமா அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. வேண்ல தூக்கி போட்டாங்க. ஒடம்புல எல்லா இடத்திலேயும் கை, காலு, தலை என கண்ணு மண்ணு தெரியாம அடிச்சாங்க. வலி தாங்க முடியாம கத்தின. அப்பவும் விடல. என்னால நடக்கவோ கையால அசைக்கவோ முடியாம அப்படியே கிடந்தே. கொச்ச நேரம் வேன்லையே வைச்சு சுத்தினாங்க. வண்டிலே இருக்கும் போது அடிச்சிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனா கூட்டிட்டு போனாங்க. என்னோட சேந்து சில பசங்க இருந்தாங்க. அந்த ஸ்டேசன்ல இறக்கி விட கேட்டாங்க. எந்த ஸ்டேசன்லயும் ஒத்துக்கல. போலீஸ்காரங்க அடிக்கும் போது எல்லாரோட கை காலையும் ஒடைச்சறனுன்னு சொல்லியே அடிச்சாங்க. எனக்கு வலி தாங்கவே முடியல. செத்துடா நல்லாயிருக்கும் போல இருந்துது. தண்ணி கேட்டோம். தண்ணீயா கேக்கற. மூத்திரம் பேச்சுதரோம், குடிக்கிறியாடானு கேட்டாங்க. கடைசி வரைக்கும் தண்ணி குடுக்கவே இல்லை. மூனு மணிக்கு புடிச்சிட்டு போய் ஆறு இருக்கும் அப்போ சரியா தெரியல மயிலாப்புர் கிட்ட ஒரு இடத்தில இறங்கி ஓடுங்கடான்னு சொன்னாங்க. நடக்கவே முடியல, வண்டியிலே இருந்து எல்லாரையும் கீழே தள்ளிவிட்டுட்டு வண்டி போயிடிச்சி. அதுக்கப்பறம் போன் பண்ணி ஏறியாலேந்து எங்க அம்மா, அண்ணணுங்க எல்லா வந்து ராயபேட்ட ஆஸ்பத்திரிக்கு துாக்கிட்டு போனாங்க. டாக்டர் பாத்து எக்ஸ்ரே எடுத்தாங்க. கை பிரேக்சர் ஆயிடிச்சின்னு சொன்னாங்க. அங்க இருந்த போலீசுகாரங்க எஸ்ரே எல்லாம் வாங்கிட்டாங்க. எனக்கு மாவு கட்டு போட்டு அனுப்பிச்சிட்டாங்க. நைட்டு புல்லா துாங்க முடியாம இருந்ததாலே எங்க அம்மா பக்கத்துல இருக்கிற டாக்டர்கிட்டே கூட்டிட்டு போனாங்க. எனக்கு அப்பா இல்ல. எங்க அம்மாவையும், தம்பியையும் நான் தான் வேலைக்கு போயி காப்பாத்துர. வேலைமேல போன் பண்ணி சொன்னேன். ஓனரு நல்லான பிறகு வா பான்னு சொன்னாறு. வேலைக்கு போனா தான் சம்பளம். இப்போ சம்பளமு இல்லாம, டாக்டர்கிட்ட போயி பாக்க காசும் இல்லாம கஸ்ட படரோம்.

  • திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் பிரகாஷ், அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆகியோர் அவர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது சுமார் ஏழெட்டு அதிரடி படையைச் சேர்ந்த போலீசார் முழு கவசத்துடன் வந்து லத்தியால் வலது காலில் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. நாம் பார்க்கும்போது ரத்தம் கட்டி நடக்க முடியாத நிலையில் இருந்தார். தடுக்க வந்த அவரது சகோதரரை அந்த போலீஸ் கையால் அவரது முகத்தில் தாக்கியதில் முன்பற்கள் உடைந்து போனது. இதையொட்டி பகுதியில் சூழ்ந்திருந்த மக்களை பெண்கள் – குழந்தைகள் என்றும் பாராமல் அங்கு நின்றுகொண்டிருந்த பெண்களை “ஏன்டி தேவிடியா! இங்க என்னடி பண்ற! வீட்டுக்குள்ள ஓடிப்போ! இல்லன்னா மண்டைய ஒடச்சிடுவேன்“ என்று சொல்லி அடிக்க ஓடி வந்தனர் என்று அப்பகுதி இளைஞர் முருகவேல் என்பவர் நம்மிடம் தெரிவித்தார்.
  • தாக்குதலுக்கு உள்ளான மற்றும் ஒருவரான மணி, ஆட்டோ ஓட்டுனரை சந்தித்தோம். அவர் வீட்டில் நடக்க முடியாத நிலையில் அமர்ந்துகொண்டிருந்தார். நாம் வெளியில் அழைத்து பேசினோம். ஐந்து நிமிடம் அவரால் நிற்க முடியாமல் ஒரு  இருக்கை எடுத்துவரச்செய்து அவரிடம் பேசியதில் சுமார் பதினொன்னரை மணியளவில் தனது ஆட்டோவை நிறுத்துவதற்கு வந்தபோது விரைந்து வந்த அதிரடிப்படை போலீசார் அவரை சூழ்ந்துகொண்டு துப்பாக்கியை திருப்பி அடித்ததில் வலது கால் முட்டியில் பலத்த அடி ஏற்பட்டது. இவரிடம் பேசும்போது இதனால் நான்கு நாட்களாக ஆட்டோ ஓட்டும் வேலைக்கு போக முடியவில்லை. அதை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறோம் என்றார்.
  • பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் குமார் என்பவரை சந்தித்ததில் வயது 40. வீட்டில் சும்மா உக்கார்ந்திருந்த என்னை போலீசார் ஓடிவந்து லத்தியால் அடிக்க வந்தனர். அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த லத்தி என் கால் கட்டை விரலில் பட்டு நகம் பெயர்த்துக்கொண்டு வந்து இரத்தம் வந்தது. இதை நினைத்துப் பார்த்தால், “ஏதாவது பிரச்சினைன்னா போலீஸ் ஸ்டேஷனுக்கே போகக் கூடாதுன்னு தோனுது. ரொம்ப அராஜகம் செய்யராங்க சார்“ என்று கண்கள் கலங்கிய நிலையில் கூறினார்.

ரோட்டரி நகர்:

  • ரோட்டரி நகரைச் சோ்ந்த ராஜி (வயது 48) என்பவர் காவல் துறை உங்கள் நண்பன் என்று சொல்வதெல்லாம் பொய் என்றும். “என் கண்ணெதிரே பொம்பளங்கள பாத்து வாடி போடி தேவிடியான்னு திட்ரான். கேக்க போன என்னை லத்தியத் தூக்கி தலையில் அடிக்க வரும்போது நான் சென்னை மாநகராட்சியில் வேலை பாக்கிறவன் என்னை எதுக்கு அடிக்கிறிங்கன்னு கேட்டினுந்தப்ப பின்னாலருந்து வந்து போலீஸ் முதுகுல சரியான அடி. அடிச்சதுல தலையில ஆறு தையல். கை காலில் சரியான அடியும். முதுகில் பட்டை பட்டையா வீங்கியிருக்கிறது.
  • கே.சுரேஷ் என்ற (38 வயது). ஓட்டுனர் போலீஸ் கண்ணீர் புகைக் குண்டு வீசினர். எங்களை அடித்தனர். தொடர்ந்து பிரச்சினை தருகிறார்கள். எப்ப வீடு பூந்து தூக்குவாங்கன்னு தெரியல. வண்டிக்கு போகமுடியல. பெண் போலீசே அசிங்கமாக பேசுகிறார்கள். ஆண் போலீஸ் பெண்களை “வாங்கடி, வீட்டுக்குள்ள பூருவோம்“ என்று அசிங்கமா பேசுகிறார்கள். என்றார். முதுகில் அடித்த அடி இன்னும் மூச்சு விடமுடியல. ஊருக்குள்ள வரும்போது I.D Proof காட்டிட்டுத்தான் தெருவுக்குள்ள வரனும்னு சொல்லறாங்க. “நாங்க தீவிரவாதியா. நாங்க பிறந்து வளர்ந்த ஏரியாவில் நாங்க ஏன் ID proof காட்டனும். போலீஸ் திபு திபுன்னு ஓடிவந்தாங்க. பொம்பளங்கள மாராப்பு துணிய யெடுத்து அடிச்சாங்க என்றார்.
  • அனுமந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற 50 வயது பெண்மணி – போலீஸ்காரன் தமிழந்தான. எங்களுக்கு உணர்வு இருக்காதா? “தேவிடியாக்களா ஏன் உள்ள (போராட்டக்காரர்களை) விடுறீங்க“ என்று திட்டினர்“. அவர் ஆவேசமாக “உரிமைகளைப் பரிக்கக் கூடாது. எல்லோரும் இந்திய குடிமக்கள்தான்” என்றார்.
  • வி.ஆர்.பி தெரு, அனுமந்தபுரத்தைச் சார்ந்த பார்த்தசாரதி என்பவர் தனது உடைக்கப்பட்ட வீட்டுக்கதவைக் காட்டி. இங்க ஒரு பெண் வந்தார். அதுக்காக உள்ள பூந்து போலீஸ் அடித்தனர். பொம்பளங்கள வாடி போடின்னு போசினாங்க. காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றார்.
  • ஒரு Bike water wash கடையை முன்பு காய்ந்து கிடந்த ரத்தக்கரையை காண்பித்து அந்த கடையின் ஓனர் இந்த ரத்த கரைய பாருங்க. “எங்க கடையில வேலை செய்யர பையன் குகன், வாய் பேசத் தெரியாவனை அடி அடின்னு அடிச்சி மண்டைய உடைச்சிட்டாங்க. நான் அந்த சமயத்துல கடையில இல்ல. ஷட்டர இறக்கனவன இழுத்து போட்டு அடிச்சிருக்காங்க“ என்றார்.
  • விமலா என்ற 35 வயது பெண்மணி. எங்க வீட்டுல சோறு கொழம்பெல்லாம் கொட்டிடாங்க. வயசு பசங்க வந்து தண்ணி கேட்டாங்க. கொடுக்கரப்ப தண்ணி கொடுக்க விடாம, தண்ணி குடத்தை காலால் உடைத்துவிட்டு அந்த பசங்கள பிடித்துக்கொண்டு போய்விட்டனர். “வீட்டு கதவ ஒடச்சி, சோறு கொழம்பெல்லாம் கொட்டி நாசம் பன்னிடாங்க. குடிக்க தண்ணி குடுத்தது தப்புனா என்ன?” என்றார்.
  • அதே ஏரியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க வசந்தி என்பவர் “இதுவரைக்கும் நான் பொறந்து வளந்த இந்த ஏரியாவுல போலீஸ் உள்ள வந்ததில்ல. ஆம்பள இல்லாத வீடு. ஏதோ நான் பொம்பள… பூ விக்கிறேன். பொம்பள பசங்கள விட்டுட்டு போறோம். நான் இல்லாத சமயத்துல வந்து தண்ணி குடத்தை உடைச்சி, டாய்லெட் கதவு என்ன பன்னுச்சி அதை உடைச்சி போட்டுட்டாங்க. (கழிப்பறை கதவு உடைத்து ஓரமாக வைக்கப்பட்டிருக்க கதவின்றி திறந்து கிடந்தது) வீட்டுக்கு செஞ்சி வச்ச சாப்பாடு கொழம்ப காலால தள்ளி ஊத்தியிருக்காங்க. பொம்பள பசங்கள இனிமே எப்படி நம்பி விட்டுட்டு போறது. வீட்டுக்குள்ள ஏன் வந்தானுங்க நாங்க என்ன பன்னோம். நியாயத்ததான கேட்டோம் என்றார்.
  • இரண்டு வீடு தள்ளியிருந்த செந்தாமரை என்பவர் என் தங்கச்சி வீட்டுல தணியா இருந்திருக்கா. வீட்டுக்குள்ள இருந்தவள மாராப்பு துணிய புடிச்சி தள்ளி அடிச்சி 5 பவுனு செயின அறுத்துகிட்டு போயிருக்கான் ஒரு ஆம்பள போலீஸ். அவளுக்கு appendix வலி தாங்க முடியாம கூடவே அதிர்ச்சி ஆகிவிட்டது. கோஷ் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்றார். எங்க வீடுங்க சந்துல இருக்குது. பொம்பளங்க இப்படி பன்னலாமா. எவளாவது பொம்பளங்க கெடச்சிருந்தா போலீசு கெடுத்துட்டு போயிருப்பானுங்க என்றார்.
  • அருகில் நின்றிருந்த கண்ணியம்மாள் என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி காய்கறி கடை என்ன பன்னிச்சி அதை உடைச்சி நாசம் பன்னிடாங்க. ஷட்டரை இறக்கிவிட்டேன். அதுக்குள்ள காய்கறிகளை தூக்கி வீசி என்னை அடிச்சாங்க என்றார்.
  • சாந்தி என்ற பெண்மணி ”எங்க வீட்டில் நாலு பேருக்கும் அடி. போலீஸ்தான் தீவிரவாதி. போலிசில்ல ரவுடிங்க. ராவுல தூக்கமில்ல. இதோ வரான், அதோ வரான்னு பீதியா இருக்குது. என்னா பேச்சு… தேவிடியா எனன்னன்ட வாடின்றான். சொல்லமுடியல.. கிட்டவந்து உன்ன ஓப்பன்டின்றான் போலீசு”. அந்தம்மா பேசப் பேச நமக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

பள்ளி மாணவர்களையும் தாக்கிய போலிசு:

  • பெரியவர்கள் இப்படிப் கதற இந்து மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், மதன் என்பவரின் மகன், வசந்த் என்ற 11 வயதுச் சிறுவன், நான் கருப்பு கலர் T Shirt போட்டிருந்ததற்காக அடித்தார்கள். என் அப்பாவை அடித்தனர். எனக்கு வலிக்கிறது. வலதுபுற முதுகில் அடித்த காயம் காய்ந்திருந்தது. அந்தச் சிறுவனை இரத்தம் வர அடித்திருக்கிறார்கள். “எங்க அம்மாவை அடித்தார்கள் அசிங்கமா திட்டினாங்க என்றார். என்ன திட்டினார்கள் என்று கேட்டதற்கு “அப்படி பேசமுடியாது எங்க அப்பா அடிப்பார்” என்றார்.  ஜல்லி கல்லால அடிச்சாங்க. ரப்பர் புல்லட்டால் சுட்டனர். கண்ணீர் புகைக்குண்டு போட்டனர். நாங்க என்ன தீவிரவாதியா என்று கேள்வி எழுப்பினார்.
  • சுகுமார் என்பவரின் மகன் 13 வயதுடைய துஷ்யந்த் என்ற சிறுவன் வலது கையில் கட்டு போட்டு கழுத்தில் மாட்டியிருந்தார். அம்மா துணிகடையில வேலை செய்கிறார். அப்பா ஓட்டுனர். நான் ஸ்கூல் விட்டு வந்த வழியில பிள்ளையார் கோயிலில் நின்றிருந்தேன். லத்தியால புடிச்சி அடிச்சிட்டாங்க. “நான் கம்முன்னுதான் இருந்தேன். என்னை எதுக்கு அடிக்கனும். அடிச்சபிறகு ரொம்ப வலிக்குது. போலீசை சுத்தமா பிடிக்கல. திருப்பி அடிக்கனும்னு தோனுது” என்றார்.
  • பிரதாப் என்ற 11 வயது சிறுவன் போலீஸ் பாட்டிலால அடிச்சாங்க எம்மேல பட்டுச்சி என்றார்.
  • பிரகாஷ் என்ற 13 வயது சிறுவன் கடைக்கு போகலாம்னு போனேன் போலீஸ் கல்லு தூக்கி அடிச்சி கையில பட்டு காயமானது என்று கையிலிருந்த காயத்தை காட்டினார்.
  • காவ்யா என்ற 15 வயது சிறுமி கே.வி. பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். 30ம் தேதி தேர்வு இருக்கிறது. ஆனால் பள்ளிக்கு போக முடியவில்லை. அப்பாவைப் பார்த்தால் அடிப்பாங்களோ. பிடிச்சிகிட்டு போய்டுவாங்களோ என்று பயமாக இருக்கிறது. பாக்கெட்டில் செல்போன் வீடியோ எடுக்கறாங்க. எதுக்கு வீடியோ எடுக்கறாங்கன்னு கேட்டா திருட்டு கேஸ் போட்டுவோம்னு மிரட்டராங்க. மறுநாள் எங்களயெல்லாம் டிவியில காட்டினாங்க என்றார். நாங்க பசங்க வேடிக்கைதானே பார்த்தோம். முதலில் கல் எரிந்தது போலீஸ்தான். தீ வைத்தது போலீஸ்தான். இதை எப்படி பார்த்துக்கொண்டிருப்பது. அடித்தால் அடிப்போம். இது அரசியலா? ஜனநாயகமா? பசங்க வந்தே மாதிரம் என்று சொன்ன போது அடிச்சாங்க. காந்தி சுதந்திரம் வாங்குவதற்காக வந்தே மாதிரம்னு சொன்னாறு. அதையே பசங்க சொன்னபோது எப்படி அடிப்பார்கள். அந்த வார்த்தைக்கு மரியாதை தரவிலை. எனக்கு தேசப்பற்று இருக்கிறது. எங்க வீட்டில் போலீஸ் ஆகனும்னு ஆசை இருந்தது. தற்பொழுது ஆகமாட்டோம் என்றார்.
  • குரு வித்யா பள்ளியில் படிக்கும் 7 வயது கௌதம் போலீஸ் கல்லால் அடித்து முட்டியில் அடி என்று தனது முட்டியில் ரத்தம் காய்ந்திருந்த காயத்தை காட்டினார். “என்னை அடிச்சாங்க, எங்க அம்மாவையும் அடிச்சாங்க” என்றார். புவனேஷ் என்ற 8 வயது சிறுவன் ”நான் ஜல்லிக்கட்டுக்கு போகலன்னு சொல்லியும் கேக்காம எதையோ தூக்கி அடிச்சாங்க. கொண்ணுருவோம்னு சொன்னாங்க“. என்றார்.
  • குரு வித்யா பள்ளியில் படிக்கும் கல்யாணி என்ற 11 வயது சிறுமி பள்ளியிலிருந்து வரும்பொழுது கல்லால் அடித்தனர். தம்பி மேலும் கல் பட்டது. எங்க அப்பாவுக்கு காலில் அடி என்றார்.
  • கிருஷ்ணாம்பேட்டை, முனுசாமி நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்ற 40 வயதுடையவர் தன் கையில் இருந்த நீண்ட காய்ந்த இரத்தகோட்டினை காட்டி, எக்ரேயில் லேசாக கிராக் இருப்பதாகச் சொன்னாங்க. கே.வி. பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை அழைத்துவரச் சென்றபோது கண்ணகி சிலை அருகில் மடக்கி அடித்துவிட்டனர். பைக்க அடித்து உடைத்துவிட்டனர். சாவுக்கு வந்தவங்கள கூட விடல அடி அடியென்று அடித்துவிட்டனர் என்றார். அரசு மருத்துவமணைக்குப் போனால் கலவரக்காரர் என்று வழக்கு போட்டுவிடுவார்களோ என்று பயந்து தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். அடிச்சி விரட்டினாங்க. போலீஸ் உள்ள பூந்த பிறகுதான் கலவரம். கொலுத்தன போலீஸ் பொம்பள. ஏட்டா இருக்கும்போதே இப்படி பன்னா மேல்பதவிக்குப் போனால் என்ன பன்னவாங்க. “ஜார்ஜ் மார்பிங் என்று சொல்கிறாரே. அரைமணிநேரத்தில் மார்பிங் செய்ய முடியுமா? ஒரு கமிஷனர் இப்படிப் பேசலாமா? 6 நாள் அமைதியாதான இருந்தது. மாணவர்களுடைய அறப்போராட்டத்தைத்தான பாத்தாங்க. அதிகாரத்தை கையில எடுத்தா என்ன செய்வாங்க தெரியுமா? வத்திபெட்டி வாங்கினாலும் வரி கட்டுறோம். குடியரசு தினம் எங்களுக்கு கருப்பு தினம் என்றார்.
  • அதன்பின் அவ்வூர் மக்கள் ஆனந்த் என்பரை அழைத்துவந்து காட்டியபோது தான் வேலைக்குப் போகும் போது வழியில் கண்ணீர் புகைகுண்டு போட்டார்கள். பயந்து ஒதுங்கி நிற்கும்போது போலீஸ் சுற்றி வளைத்து அடித்தார்கள். இடது முழங்கை உடைந்துவிட்டது. அதற்காக ஆப்பரேஷன் செய்திருக்கிறேன். நகைகளை அடமானம் வைத்து 45000 ரூபாய் செலவு செய்து வைத்தியம் பார்த்திருக்கிறேன். மூன்று மாத குழந்தை உள்ளது. அப்பா அம்மா கிடையாது. அக்காதான் பார்த்துக்கொள்கிறார். நான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் போராட்டத்தை ஆதரிக்கிறேன். யாரும் சமூக விரோதியல்ல. எங்களை ரவுடி போல நடத்திய போலீஸ்தான் தீவிரவாதி. அதற்குமேல் அவரால் நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. ஆகையால் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பிவிட்டோம்.

மாட்டாங்குப்பம்

  • பிரேம்நாத் நீச்சல் வீரர் இவர் பல நுாறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல நுாறு மெடல்களையும் சான்றிதழ்களையும், முதலமைச்சரிடம் விருதுகளையும் பெற்றவர். இதனால் இரயிவே துறையில் வேலை பெற்றவர். தற்போது சீனியர் டி.டி.ஆராக பணிபுரிந்து வருகிறார். இவரின் அம்மாவை சந்தித்த போது” சம்பவம் நடந்த அன்று வேளச்சேரி ரூட்டில் இரயில்களை நிருத்திவிட்டதால் மதியம் 1 மணிக்கே வீடு திரும்பி விட்டான். எப்போதும் போல் வீட்டின் வாசலில் நண்பனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தான்.  தீடீரென நுழைந்த போலீசு அடிக்க ஆரம்பிச்சுடாங்க. தலைய குறிபாத்து அடிக்க போனப்போ அவன் தலைய காமிக்காம முழுக்க இரண்டு கையையும் துாக்க இரண்டு கையையும் சரமாரியா அடிச்சு காவாகிட்ட துாக்கி போட்டுடாங்க. கை, கால் என மாறி மாறி அடித்ததில் கை, கால் எல்லாமே நொருங்கி போச்சு. அவனோட ID Card – யை காம்ச்சிருக்கா. Central Government Staff – னு சொல்லிருக்கு, ID Card ச்சி மயிராச்சுன்னு அவன்ட்ட இருந்த எல்லா காடையும், செல்போனையும் புடுங்கிகிட்டாங்க. ஏன் புள்ள இப்படி கை கால் நொறுங்கி இருக்குது ஆனா அவன ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணாம கொலை கேசு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிச்சுடாங்க. இரயில்வே ஸ்டாப்புன்னு வெளியே சொல்லகூடாது, எங்கேயும் கம்லைன்ட் கொடுக்ககூடாது அப்படி வெளியே சொன்ன, அவன் சட்டைய கலட்டாம விடமாட்டோன்னு, புழல் ஜெயிலே என்ன வேன்னாலும் நடக்குனு சொன்னாங்க. என் புள்ள பொருக்கி கிடையாது, ரவுடி கிடையாது அவன எதுக்கு ஜெயில வைக்கனும்? பெயில வெளில விடனுனா 10,000 ரூபாய் கட்டனுன்னு நேத்து டிவில சொல்ராங்க. ஏழைங்க எப்படி கட்ட முடியும்? எதுக்கு கட்டனு? டெயிலி கையெழுத்து போடனுமா? எப்படி வேலைக்கு போரது?  யாரும் எந்த பொறுக்கி தனமும் பண்ணல. எந்த ரவுடித்தனமும் பண்ணல. நாட்டுக்காக பாடுபட்ட என் புள்ளைய இப்படி நாசமாக்கிடாங்க. எம்புள்ளய அடிக்கும் போது எப்படி கத்தின கதறினேன். எதையுமே கேக்காம எதுக்கு அந்த பசங்கள சேத்துவைச்சீங்க தேவிடியாங்கள துணிய உருவிட்டு அடிப்போம். அவனுங்க போலிசே இல்ல பொம்பள பொறுக்கிங்க. ரவுடி வீரமணி இருக்கும் போது கூட இப்படி இல்ல. எனக்கு 18 வயசு இருக்கும். அப்போ மீனவ ஜெனங்க மேல குண்டடி நடத்தினாங்க. அப்ப கூட இப்படி இல்ல. போலீசு கார சொல்றா நாங்க அடிக்கும் போது உயிர் மட்டுதான் போகாதமாறி அடிப்போ எல்லா உடல் உறுப்பும் நாசமாயிடும். ஒரு ஆம்பள கூட வீட்ல இருக்க கூடாதுன்றான். ஊருல ஒரு ஆம்ள கூட இல்ல. நாங்க சொந்த வீடு வைச்சுட்டு அதுல இருக்க முடியல. நீங்க பீச்ல அனுமதி கொடுத்தீங்க… அது மாதிரி நாங்க வீட்ல பாதுகாப்பு கொடுத்தோம். மீனவங்க அந்த பசங்களுக்கு தையிரியம் கொடுத்திருக்கீங்க. மீனவர்களையும் முஸ்லீம்களையும் துாக்குவோம்னு எங்கள மிரட்டுராங்க.
  • சென்னை GPOவில் வேலை பார்க்கும் சேகர் என்பவர் வேலைக்குப் போய்விட்டு வந்தவரை மடக்கி அடித்து நொறுக்கி பாலத்தில் தூக்கிப் போட்டுவிட்டனர். யாரையும் அவரை தூக்கக் கூட விடாமல் அடித்தனர். போலீஸ் அடித்ததில் தலையில் பத்து தையல் போடப்பட்டுள்ளது. தொடைக்கு மேல் நரம்பு அறுந்துவிட்டது. கோஷ் மருத்துவமணையில் காலை எடுக்க வேண்டுமென்று சொல்லிவிட்டதால், மியாட் தணியார் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், அறுவை சிகிச்சைக்காக இதுவரையில் 75 ஆயிரம் வரை கட்டியுள்ளதாக அவரது மனைவி கல்பனா தெரிவித்தார்.
  • அதைத் தொடர்ந்து பக்கத்து தெருவில் அம்சா என்ற பெண்மணி போலீஸ் எங்களவிட பச்ச பச்சையாய பேசறாங்க. ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல் புகையை போட்டுகொண்டு உக்கார்ந்துகிட்டிருக்கிறோம் என்றார். எதிர்வீட்டிலிருந்து நீங்கள்ளாம் உடனே வரக்கூடாதா? இப்பதான் வரீங்களா? என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தென்பட்டது. ஒரு பெண் நண்பர் அருகில் சென்று என்ன பிரச்சினை என்றது மளமளவென கண்ணீர் கொட்ட உள்ளே அழைத்துப் போய் புடவையை தூக்கிக் காட்டினார் தொடைக்கு மேல் ஒரு கையளவு கருத்து கண்ணிப்போயிருந்தது. கால் தொடையில் பட்டை பட்டையாய் சூடியிருந்தது. இன்னும் சில பெண்களும் வந்து இது போன்ற காயங்களையும் காண்பித்தனர். இதை எப்படி வர்றவங்ககிட்ட நாங்க காட்ட முடியும். நாங்க என்ன பண்ணோம். “ஓட்டு கேக்க வரட்டும் பீய கரச்சி ஊத்தறோம்” என்று கண்ணீர் வழிய தேம்பினார். சில பெண்கள் நாங்கள வீட்டு மாடியில் இருந்தோம். எங்கள பார்த்து “வாங்கடி தேவிடியாக்களா என்று ஆண் போலீஸ்காரர்கள் கூப்பிட்டனர். “Bridge மேலயிருந்து ஜிப்ப அவுத்து உறுப்ப காட்டி வாங்கடின்னு காட்டி கூப்பிடுறானுங்க. பச்சை பச்சையா பேசறாங்க” என்றார்.
  • புவனேஸ்வரி என்ற பெண் ஓடிவந்து என்னுடைய அண்ணன் ராஜசேகர் என்பவரை அன்றைய தினம் போலீசார் சராமாரியாக தாக்கி பிடித்துக்கொண்டு போய்விட்டனர். அவர் இப்பொழுது ஜெயிலில் உள்ளார். அவர் தூய்மைப் பணி வேலை செய்பவர். அவருக்காக பிணை எடுக்கவும் எங்களிடம் எந்த பணமும் இல்லை. அதற்காக என்ன செய்வதென்றும் தெரியவில்லை என்று தன் கையறு நிலையைத் தெரிவித்தார்.
  • தேசிங்கு என்ற 57 வயது மதிக்கத்தக்கவர் – பேரப்பசங்கள வைச்சிகிட்டு நின்றிருந்தேன். போலீஸ் கல்லால் அடித்து இரண்டு தையல் போடுமளவுக்கு காயம் என்று காலில் தையல் போட்டிருந்த காயத்தைக் காட்டினார்.
  • விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம்  50 வயது மதிக்கத்தக்க வசந்தி என்ற பெண்மணி தலை முழுக்க கட்டு போட்டிருந்தார். பார்ப்பதற்கே மனம் பரிதவித்தது. நான் வீட்டுக்குள்ள இருந்தேன். ஒரு மாணவன் உயிருக்கு பயந்து ஓடிவந்து என் வீட்டில் ஒளிந்தார். 3 போலீஸ் என் வீட்டு கதவை உடைத்து என் மண்டையை உடைத்தனர் என்றார்.
  • வினோத் என்ற 29 வயதுடைய இளைஞரை 7 போலீசார் அடித்துள்ளனர். முகம் முழுக்க காயங்கள் மற்றும் வாய் திறக்க முடியாமல் தையல் போடப்பட்டிருந்தது. Staw வைத்து திறவ உணவு மட்டும் தான் அவரால் சாப்பிட முடிகிறது என்று அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
  • ஏலாயி என்ற பெண்மணி தனது சிறிய வீட்டை காண்பித்தார். கதவு தொடங்க ஒவ்வொரு பொருளும் நொருக்கப்பட்டு சிதறிக்கிடந்தது. அதனுடன் ஒரு போலீஸ் தொப்பியும் கிடந்தது. “2000 ரூபாய் வாட்ச்ச காணோம். நேத்து அண்ணாநகர் போலீஸ் வந்து தொப்பிய கேட்டார். நான் தரல. காச எடுத்கினு போயிட்டாங்க”. நாம் உள்ளே கால் வைத்தபோது பார்த்து கண்ணாடி துண்டுகள் கிடக்கின்றன என்று எச்சரித்தார். எங்க வீட்டுல இரண்டு மூனு பசங்க பயந்து பதுங்கியிருந்தாங்க. என்னை அடித்த அடியில் தாங்க முடியாமல் நான் ஓடிவிட்டேன். அந்த பசங்கள அடி அடின்னு அடிச்சாங்க என்ன ஆனாங்கன்னு தெரியல என்று வீட்டு வாசலில் திட்டு திட்டாக காய்ந்திருந்த அந்த மாணவர்களின் ரத்தக்கறைகளைக் காண்பித்தார். போலீஸ்காரங்க பேசறத கேக்க முடியவில்லை “முண்ட மவள, புண்டய அறுத்துடுவோம்“ னு எங்கள பாத்து கேட்டானுங்க. சும்மா விடமாட்டோம். யாருக்கும் ஓட்டு போடமாட்டோம்”. என்றார். 
  • முரளி என்ற 40 வயது மதிக்கத் தக்கவர் நல்ல உயரமான சிவந்த நிறமுடைய அவர் சட்டையை கழற்றி முதுகைக் காட்டினார். ஒரு இடம் விடாமல் பட்டை பட்டையாய் சூடியிருந்தது. அவருடைய அருகில் இருந்த ஒரு பெண்மணி அவரை அடிக்காதீர்கள் நாங்கள் மீன் வியாபாரம் செய்பவர்கள், யாருக்கும் தொந்தரவு கொடுப்பவர்கள் அல்ல என்று அவருக்காக போச வந்தபோது “அப்படியா மீன்கார கட்ட, செம கட்டயா மாட்டிகிச்சின்னு என்னையும் மானபங்கப்படுத்த வந்தார் ஒரு போலீஸ்” என்றார். உடல் முழுக்க ரத்தம் கட்டி சூடியிருந்தது. அந்தம்மா 24.01.2017 அன்றைய தினகரன் நாளிதழில் வெளிவந்த முரளியை போலீஸ் தாக்கும் படத்தை  நம்மிடம் காண்பித்தார்.
  • இதற்கிடையே வந்த கலா என்ற பெண்மணி காய்கறி வியாபாரம் செய்பவர். அந்த வழியாக வந்துகொண்டிருந்த என்னை மாரியம்மாள் என்ற பெண் போலீஸ் என்னை பிடித்து அடித்து வியாபாரம் செய்த பணமாகிய ரூபாய் 5,000 த்தை என்னிடமிருந்து பலவந்தமாக பறித்துக்கொண்டு போடி நாய என்று திட்டி அடித்து ஓடவிட்டார் என்றார்.
  • இரண்டு வீடு தள்ளியிருந்த துரை என்பவரை சந்தித்தோம். அவர் வி.ஜி.பி கோல்டன் பீச்சில் உள்ள கடையில் வேலை செய்பவர். 23.01.2017 அன்று ஒரு மாணவர் உயிர்பிழைத்து ஓடி வந்து எங்கள் வீட்டிற்குள் ஓடிவந்து அவரைத் துரத்தி வந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் அவரை சராமாரியாக தாக்கி அவரது பிறப்புறுப்பில் பூட்ஸ் காலால் எட்டி எட்டி உதைத்தனர். போலீஸ்காரரை தடுக்கப்போன என் கையை பைப்பை வைத்து அடித்ததில் என் இடது முழங்கை உடைந்துபோனது. முழு கட்டுடன் நம்முடன் பேசிய அவர் தன் கை உடைந்ததை விட அந்த 20 வயது மாணவன் இங்கேயே தலை தொங்கி விழுந்துவிட்டான். மருத்துவமணைக்குப் போகும் போது அவன் இறந்துவிட்டான் என்று சொல்லி வருத்தப்பட்டார்.
  • லட்சுமி என்ற 70 வயதுப் பெண்மணி என்னை அடித்தார்கள். வீட்டு தாழ்பாளை உடைத்தார்கள் என்று உடைக்கப்பட்ட தாழ்ப்பாளை கையில் கொண்டுவந்து காண்பித்தார். அவருடைய கணவரை காண்பித்து பெரியவரை முதுகிலேயே அடித்துவிட்டனர். “இத்தன வயசாயி இப்படி பார்த்ததில்லை. ராவுல படுக்க முடியலஎன்றார். ஒரு வயதான பெண்மணி “நான் மீன் வித்து பொழக்கிறேன். பக்கத்தில் இருந்தவர் “ஒரு பையன் ஓடறப்ப பர்ஸ் கீழ விழுந்துடுச்சி அதை எடுத்துவச்சிகிட்டான் போலீசு“ என்றார்.

நடுக்குப்பம்:

  • சுமார் 384 கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் முழுவதுவதுமாக போலிசாரால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிறுத்திவக்கப்பட்டிருந்த கார் உட்பட இரு சக்கர வாகனங்கள் போலீசாரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சார்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கண்ணில் மறையாத மரண பயத்துடன் நம்முடன் பகிர்ந்து கொண்டது. ”போலிசு காரங்க அடிச்சதும் தாங்கமுடியாம பொம்பள பசங்கக்கூட சட்டை கிழிஞ்சி, காப்பத்துங்கனு ஓடிவந்தாங்க, 6 நாலா எந்த பிரச்சினையும் இல்லாம அமைதியா போராடினு இருந்தவங்கள போலிஸ்காரங்க ஏன் இப்படி பண்ணனும் ?   வேலியே பயிரை மேய்ஞ்சிடிச்சி. அவங்க தான் மக்களை பாதுகப்பாங்கனு சொன்னாங்க . ஆனா அவங்க பண்ணதுதான் பெரிய அராஜகம். பசங்கள எப்படி தங்க வைக்கலாம்னு சொல்லி அடிசாங்க, வீட்டுங மேல கல்லு, சோட [பாடில்லாம் அடிச்சாங்க . 20 கிலோ மீனை எடுத்துக்கினு போய்ட்டாங்க. லேடி வெலிங்டன்ல கேம்ப் போடிருக்காங்களே , அங்க சமைச்சி சாப்பிட எடுத்துனு போய்ட்டாங்க..   கண்ணீர் புகை குண்டு வீசினாங்க, என்னோட பேத்திக்கு ஒரு வயசு கொழைந்த . மூச்சு தெனரி அழுதது. செத்துபொய்டுமோனு பயந்தோம். மார்க்கெட்ட மட்டுமில்ல, இங்க  நின்னூகிட்டு இருந்த வண்டிங்க எல்லாத்தையும் அடிச்சாங்க ,அதோ நிக்கிரதே அந்த காரையும் எரிச்சாங்க. எதோ மருந்து பொடிய தூவிதான் எரிச்சாங்க, நல்ல வேலை நாங்க தண்ணிய ஊத்தி அணைச்சிட்டோம். இல்லானா நெருப்பி அப்படியே பரவி வீட்டுக்குள்ள புடிச்சி இருக்கும். கரண்டுல்லாம் பத்தியிருந்தா என்னா ஆவரது? நாங்க செத்து போயிருந்தா என்ன ஆவுரது?”
எண் பெயர்/பாலினம்/வயது உடல் ரீதியான பாதிப்பு உடமை இழப்பு
1 அஞ்சலை/பெ 50
க.பெ.முருகானந்தம் பிரசாந்த்
2, ரூதர் புரம்
கால் கையில் கடுமையானகாயங்கங்கள் ஜன்னல் உடைப்பு ஆட்டோ முற்றிலும் எரிப்பு TN 07BF4137 இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிப்புTNO96104
2 சக்தி வேல்
5, ரூதர் புரம்
ஆட்டோ கண்ணாடி உடைப்பு TN07 9787
3 லட்சுமி /பெ
27, ரூதர் புரம்
2 சக்கர வாகன சேதம்
4 ரீட்டா/பெ/47
27, ரூதர் புரம்
தலையில் லத்தி அடி வீக்கம் 2 சக்கர வாகன சேதம்TN 82 Z 8672
5 இன்ப ராஜ்/ஆ/30
27, ரூதர் புரம்
காலில் காயம்
6 சாந்த லிங்கம்/ஆ/39
27, ரூதர் புரம்
2 சக்கர வாகன சேதம்TN 22 CL 2932
7 சிவகாமி/பெ/34
27, ரூதர் புரம்
மகன் கைது (கிருபாகரன்) வீட்டின் மேற்கூறை சேதம்
8 ஈஸ்வரி/பெ/
26, ரூதர் புரம்
காலில் லத்தி அடியினால் காயம் மகன் மகேஷ் உடல்முழுவதும் காயம் மருத்துவமனையில் உள்ளார் கதவு உடைப்பு , இரு சக்கரவாகனம் எரிப்பு TVS 50
9 பாக்கியம்/பெ/36
22, ரூதர் புரம்
ஆட்டோ முற்றிலும் எரிப்பு TN 07 4342
10 ஆறுமுகம்/ஆ/48
22, ரூதர் புரம்
ஆட்டோ முற்றிலும் எரிப்பு TN 06 B9049
11 மங்கையரசி/பெ/35
22, ரூதர் புரம்
விக்கி ராஜா, தீபன், ராஜ் என்கிற நந்தகுமார் அடித்து கைது
12 ரவீந்திரன்/ஆ/31
22, ரூதர் புரம்
ஆட்டோ முழுமையான சேதம்
13 கௌரி /பெ/37
22, ரூதர் புரம்
தலையில் ரயில் பாதை கருங்கல்லால் தாக்கபட்டு காயம்
14 மலர் /பெ/
22, ரூதர் புரம்
கதவு.கண்ணாடி,ஓடு உடைப்பு
15 ராணி பெ/30
22, ரூதர் புரம்
கர்பிணி பெண்ணை அடித்து காயம் வீடு மேற்கூறை உடைப்பு
16 நளினி/பெ/45
14, ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
17 பரமேஸ்வரி/பெ/39
14, ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
18 சரண்யா பெ/31
ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
19 ஜெகதம்ப்பாள் /பெ/31
ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
20 நாகேஷ்வரி /பெ/25
16 ரூதர் புரம்
மேற்கூறை உடைப்பு
21 புஷ்பா /பெ/50
17, ரூதர் புரம்
மேற்கூறை உடைப்பு
22 சூர்யா /ஆ/22
32 ரூதர் புரம்
உடல் முழுவதும் பலத்த காயம்
23 சசிகலா /பெ/25
17 ரூதர் புரம
கதவு உடைப்பு
24 சுதாகரன் 24 மாஞ்சா கோவில் கைது
25 வைதீஸ்வரி/பெ/
18, ரூதர் புரம்
பாட்டில்கள் வீசி மேற்கூறை சேதம்
26 கனிமொழி/பெ/22
ரூதர் புரம்
உடலில் காயம் கதவுகள் உடைப்பு
27 தங்கமணி/பெ/10
ரூதர் புரம்
உடலில் காயம் கதவுகள் உடைப்பு
28 சுஜாதா/பெ
988442466055
ரூதர் புரம்
ஆட்டோ எரிப்பு TN07AZ2802
29 ஈஸ்வரி/பெ/33
10 ரூதர் புரம்
கார் சேதம் TN22CU8556
30 சாந்தி/பெ/35
ரூதர் புரம்
கதவுகள் சேதம்
31 கமலா
6 மீனாம்பாள் புரம்
கதவுகள் சேதம்
32 நாகம்மாள்/பெ/70
6 மீனாம்பாள் புரம்
லத்தியால் அடித்து கை, காலில் காயம்
33 மணிகண்டன்(எ)சுகுமார்/ஆ/47
மீனாம்பாள் புரம்
கைது செய்யப்பட்டுள்ளார்
34 செல்வக்குமார்/ஆ/24
43, மீனாம்பாள் புரம்
ராயப்பேட்டையில் அனுமதிக்கபட்டுள்ளார்
35 ராஜராஜன் 27
மீனாம்பாள் புரம்
கைது செய்யப்பட்டுள்ளார்
36 வாசுகி/பெ/45
45, மீனாம்பாள் புரம்
தலையில் 7 தையல் போடப்பட்டுள்ளது கையிலும் காயம்
37 ரமணி/பெ/48
33, மீனாம்பாள் புரம்
கதவுகள், மேற்கூரை சேதம்
38 கொல்லபுரி/ஆ/45
52, மாயாண்டி காலனி
காலில் தாக்கியுள்ளனர் 10 தையல் போடபட்டுள்ளது
39 முரளி/ஆ/27
122, மாட்டாங்குப்பம்
பலமாக தாக்கியுள்ளனர் தலை, முதுகில் காயம்
40 துரை/ஆ/40
1/3, மாட்டாங்குப்பம்
கையில் காயம்
41 வசந்தி/பெ/30
1/1, மாட்டாங்குப்பம்
தலையில் காயம்
42 முகமது பாசித் கான்
1/1, மாட்டாங்குப்பம்
உடலில் காயம்
43 கலா/பெ/55
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
44 லட்சுமி/பெ/37
மாட்டாங்குப்பம்
உடலில் அடித்துள்ளனர்
45 ராஜேஸ்வரி/34
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
46 ஜானகி/பெ/45
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
47 பழநி/ஆ/24
மாட்டாங்குப்பம்
தையல் போடப்ட்டுள்ளது
48 சங்கீதா/பெ/25
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
49 தமயந்தி/பெ/68
122, மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்

 

 1. கபூர் உசைன் ஆ/ 43 சண்முகம் பிள்ளை தெரு உடல் முழுதும் கடுமையாக தாக்கப்பட்டு , கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.
 2. தனலஷ்மி பெ/ 60 சண்முகம் பிள்ளை தெரு லத்தியால் அடித்ததால் 2 கால்களிலும் வீக்கம் TN05AD 4663 எண்ணுள்ள இரண்டு சக்கர வாகனம் போலிசாரால் உடைக்கப்பட்டது
 3. தமிழ்செல்வன்ஆண்/9 சண்முகம்பிள்ளை தெரு லத்தியால் வலது கரத்தில் தாக்கியதால் கை வீக்கம். வழக்கு போடப்பட்டுள்ளது. தடுக்க வந்த அம்மாவை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
 4. எட்டியப்பன் ஆ/35 சண்முகம்பிள்ளை தெரு வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 5. பிரபு ஆ / 20 சண்முகம் பிள்ளை தெரு மண்டை உடைப்பு, காலில் தையல் போடப்பட்டுள்ளது.
 6. சிவா ஆ/26 ஏகாம்பரம்பிள்ளை தெரு வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 7. சந்தோஷ் ஆ/26 ஏகாம்பரம்பிள்ளை தெரு உடல் முழுவதும் காயம் கொடுரமான தாக்குதல்
 8. சுப்பிரமணி ஆ/54 ஏகாம்பரம்பிள்ளை தெரு வீடு சேதப்படுத்தப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 9. சுரேஷ் ஆ/27 ஆறுமுகம்பிள்ளை தெரு கற்கலால் அடித்ததில் வீட்டின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன.
 10. தமிழ் செல்வி ஆறுமுகம்பிள்ளை தெரு தொடையில் பலமான அடி
 11. முத்துவேல் ஏகாம்பரம் பிள்ளை தெரு இடுப்பில் பலத்த அடி
 12. ராணி ஏகாம்பரம்பிள்ளை தெரு கை, கால்களில் ரத்தகட்டி பலமாக காயம் உள்ளது. வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 13. இந்திராணி ஏகாம்பரம்பிள்ளை தெரு பலமாக அடிப்பப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்
 14. சுரேஷ் ஏகாம்பரம்பிள்ளை தெரு ஆட்டோ கண்ணாடி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 15. அருண் ஆறுமுகம்பிள்ளை தெரு உடல் முழுவதும் பலத்த அடிபெற்று புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
 16. கலைச்செல்வி ஆறுமுகம் தெரு வண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 17. கோமதி ஆறுமுகம் தெரு காலில் இரும்பு கம்பியால் அடி வீட்டை சூறையாடியுள்ளனர்.
 18. முனியம்மாள் ஆறுமுகம் தெரு வீடு தாக்கப்பட்டுள்ளது
 19. ரேவதி ஆறுமுகம் தெரு காலில் காயம்
 20. கற்பகம் ஆறுமுகம் தெரு வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது
 21. ரூபாவதி ஆறுமுகம் தெரு லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

III.  எமது குழு வந்தடைந்த முடிவுகள்

  1. மேற்கண்ட வகையில் நாங்கள் சந்தித்த மக்கள் மிகவும் சொற்பமானவர்களே. தாக்குதலுக்கு ஆளாகி போலிசு கைது செய்துவிடும் என்ற அச்சத்தால் வீடுகளைவிட்டு பலநூறு மக்கள் வெளியேறியுள்ளனர். சிலநூறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும் தாக்கல் கடற்கறை ஓரத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் தலித் மக்கள் குடியுருப்பிகளில் மட்டுமல்லாது நகரம் முழுக்க போலிஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
  2. தமிழகத்தில் மாணவர்கள் – இளைஞர்கள் – பொது மக்கள் இணைந்து ஒரு கோரிக்கைக்காக ஒற்றுமையுடன் ஒரு மாபெரும் போராட்டம் நடத்திள்ளனர். ஆறு நாட்கள் எவ்விதமான சிறு பிரச்சனை கூட இல்லாமல் போராட்டத்தை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் நடத்தினர். பல ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மாணவர்களை, இளைஞர்களை, மக்களை 23.01.2017 அன்று காலை 6 மனியளவில் ஒரே ஒரு அறிவிப்பு அறிவித்து கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் உடனே வெளியேற வேண்டும் என அறிவித்தது தான் பிரச்சனைக்கு மூல முதல் காரணம் ஆகும்.
  3. மெரினாவில் துாங்கிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் விடப்பட்ட அறிவிப்பை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கே குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது. காவல் துறை அறிவிப்பு வந்தவுடன் மாணவர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர சட்டம் வரும்வரை அனுமதியுங்கள் என கோரிக்கை விடப்பட்டது. பின்னர் 4 மணி நேரமாவது கொடுங்கள், எங்கள் வழக்கறிஞர்கள் வந்ததும் பேசிவிட்டு கலைந்து செல்கிறோம் என்று கெஞ்சியுள்ளனர். குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது வேண்டும், எங்களுக்குள் ஆலோசனை நடத்திவிட்டு சொல்கிறோம் என மீண்டும் தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்க மறுத்ததுடன் வலுக்கட்டாயமாக அவர்களை அப்புறப்படுத்த துவங்கியுள்ளனர் காவல் துறையினர். குழுந்தைகள், வயதானோர், கர்ப்பிணி பெண்கள் என்று கூட பார்க்காமல் காவல்துறை அவர்களை நெட்டித்தள்ளி அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
  4. மெரினாவில் போராட்டக்காரர்களை பலாத்காரமாக அப்புறப்படுத்த துவங்கிய மறுகணமே இச்செய்தி சென்னை மாநகர் எங்கும் காட்டுத்தீயாய் பரவியது. போலிசின் இந்த தாக்குதலை கண்டித்து சுமார் 200 இடங்களில் மறியல் போராட்டம் நடந்திருக்கிறது. இது எதுவும் அவர்கள் சொல்வதுபோல் எந்த ’சமூக விரோதிகளும்’ திட்டமிட்டு நடத்தவில்லை. அந்த போராட்டங்கள் சுமார் இரவு 9 மணி வரை தொடர்ந்துள்ளது. தடியடி, கண்ணிர் புகை வீச்சு என சென்னை நகரமே போர்களம் போல அன்று காட்சியளித்தது.
  5. மெரினாவில் தடியடி நடத்தவில்லை என போலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் மெரினாவில் போராடியவர்களில் ஒரு பிரிவினர் கடலை நோக்கி நெட்டி தள்ளப்பட்டனர். இன்னொரு பிரிவினரோ போலீசின் தாக்குதலுக்குள்ளாகி கடற்கரையெங்கும் உள்ள ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசண்ட் சாலை ஆகிய சாலைகள் வழியாக மீனவ மக்களின் குப்பங்களிலும், தலித் மக்கள் குடியிருப்புகளிலும் தஞ்சம் புகுந்ததை நேரில் பார்த்த மக்கள் கூறுகின்றனர். விவரங்களிலிருந்து மெரினாவில் தடியடி நடத்தவில்லை என போலிஸார் தெரிவிப்பது முழுவதும் பொய் என்பது தெரியவருகிறது.
  6. அவர்கள் மீதான தாக்குதலை கண்ட மீனவ மக்கள் மற்றும் தலித் மக்கள் அவர்களுக்கு உறைவிடம் வழங்கியதோடு தாக்குதல் தொடுக்கும் காவல்துறையை கண்டித்து மெரினாவிற்கு செல்லும் அனைத்து சாலையிலும் தன்னெழுச்சியான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை பொறுக்காத காவல்துறை மிக கொடூரமாக மீனவ மற்றும் தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பார்க்காமல் தாக்குதல் நடத்தி அவர்கள் உடைமைகளை சூறையாடியுள்ளனர். இதன் சுவட்டை அனைத்து மீனவ குடியிருப்புகளிலும் காண முடிந்தது. போலீஸின் பயமுறுத்துதலுக்கு அஞ்சாமல் மாணவர்களை பாதுகாத்தார்கள் என்ற ஒரே காரணத்தினால் வன்மத்தோடு காவல்துறை வன்முறையை நடத்தியுள்ளது.
  7. அரசிடம் கோரிக்கை வைத்து போராடிய மாணவர்களின் போராட்டத்தை முடிக்க வேண்டும் என அரசு கருதினால் அரசின் பிரதிநிதிகளான அதிகாரிகள், அமைச்சர்கள்தான் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அந்த பொறுப்பை தட்டி கழித்து காவல்துறையை அனுப்பியதுதான் இந்த வன்முறைக்கு அடிப்படையாக உள்ளது.
  8. நீதிபதி அரிப்பரந்தாமன், மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆகியோர் மாணவர்களை சந்தித்து  விளக்கியது போல ஜல்லிக்கட்டிற்காக அரசு எடுத்த முயற்சிகளை அவசர சட்டம் மற்றும் நிரந்தர சட்டம் பற்றி தெரிவித்து சட்ட நுணுக்கம் தெரியாத இளைஞர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும். அதில் முடிவெடுக்கும் கால அவகாசத்தையும் அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்.
  9. மெரினாவை நோக்கி யாரும் வந்துவிட கூடாது என்பதற்காக திட்டமிட்டே இரயில்களையும், பேருந்துகளையும் நிறுத்தியுள்ளனர். இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு போவதற்கோ, அலுவலகத்திற்கு போவதற்கோ முடியாமல் போனது. இந்த அசாதரண சூழல்நிலையால் பள்ளிக்கூடங்கள் பாதியிலேயே மூடப்பட்டன. ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்துவர முடியவில்லை. இன்னொருபுறம் பள்ளியை விட்டு வந்த 10 வயது மாணவர்களை கூட காவல் துறை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த வகையில் போராட்டக்காரர்களை காரணம் காட்டி காவல்துறை ஒட்டு மொத்த மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
  10. கர்பிணி பெண்கள், பள்ளி குழந்தைகள் என்றும் பாராமல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. வயோதிகத்தால் முடங்கிபோயுள்ள வயதானவர்கள் மீதும் வன்முறையை உபயோகித்து உள்ளது. மக்கள் வந்தே மாதரம், தேசிய கொடியை உயர்த்திக்காட்டியவர்களை கூட வாயை உடைத்து, கொடியை கிழித்து, ஆண் துணை இல்லாமல், பெற்றோர்கள் துணை இல்லாமல் வீடுகளில் இருந்த பெண்களை அடித்து ஆடைகளை கிழித்து, ஆபாச வார்த்தைகளை பேசி ஆபாசமாக நடந்து கொண்டதின்மூலம் போலிசு எதிரி நாடு மீது தாக்குதல் நடத்துவதுபோல மக்கள் மீது நடத்தியுள்ளது.
  11. நிராயுத பாணியாக இருந்த தங்களை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாக்கி கடுமையான இழப்பு உள்ளாகியுள்ளதால் நிர்கதிக்குள்ளான மனநிலையிலும், எப்போதும் ஒரு அச்சத்துடனும் மக்கள் காணப்படுகின்றனர்.

IV. பரிந்துரைகள்

  1. மெரினாவை ஒட்டியுள்ள மீனவர் மற்றும் தலித் மக்கள் குடியிருப்புகள் மீதும் மாணவர்கள் மீதும் மேலும் 23.1.2017 அன்று தமிழ்நாடு முழுக்க காவல் துறையால் நடத்தப்பட்ட தாக்குதலை விசாரிக்க வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் கொண்ட விசாரணை குழு நீதிபதி ஒருவர் தலைமையில் அமைக்க வேண்டும்.
  1. தாக்குதலுக்குண்டான மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அவர்கள் பெயரையும் வழக்கில் சேர்த்து கைதுசெய்து சிறையலடைக்கிறது காவல்துறை. எனவே பல நூற்றுக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாமல் உள்ளனர். எனவே அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து பாதிக்கப்பட்ட இடங்களிலும் மருத்துவ கேம்ப் அமைத்து மக்கள் அச்சமின்றி சிகிச்சை பெற உடனடியாக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாக உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டியவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும். அப்படி சிகிச்சைக்கு வருபவர்கள் மீது பொய்வழக்கு போடப்படாது, கைது செய்யப்படமாட்டார்கள் என உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
  1. மக்களை தொடர்ந்து மிரட்டியும், கைது செய்தும்   ,அவர்களை மருத்துவ சிகிச்சைகூட எடுக்கவிடாமல் காவல்துறை ஈடுபட்டு வருகின்றது. மேலும் தங்களது உடைமைகளை இழந்தவர்கள் நட்டைஈடு கேட்டு, புகார் அளிக்க முன்வருபவர்கள்மீது வழக்குபோட்டு கைது செய்கின்றது காவல்துறை.  எனவே நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவை உடனே அமைத்து மக்களுக்கான நிவாரணத்தையும் , பாதுகாப்பையும் வழங்கவேண்டும்.
  1. நடுக்குப்பம் பகுதியில் எரிந்துபோன மீன் மார்க்கெட்டை உடனடியாக அரசே கட்டித்தர வேண்டும்.
  1. எரிந்து போன ஆட்டோக்கள், உடைந்து போன ஆட்டோக்கள், எரிந்து போன பைக்குகள், வீணடிக்கப்பட்ட வீட்டு பொருட்களை கணக்கிட்டு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
  1. நடுக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீன் வியாபாரம் செய்யும்படியாக உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ. 50,000 இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்.
  1. காயம்பட்டவர்களுக்கு ஐம்பதினாயிரம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும் பொருளாதார மற்றும் மருத்துவ செலவை ஈடுகட்டும் வகையில் உடனடியாக வழங்க வேண்டும்.
  1. கைது செய்யப்பட்ட அனைவரையும் பத்தாயிரம் ரூபாய் பிணைய தொகைக் கட்ட வேண்டும் போன்ற எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
  1. மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் இனி கைது நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.
  1. வாகனங்களை, குடியிருப்புகளில் புகுந்து உடைமைகளை சேதப்படுத்திய, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைத்த , அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து பெண்களை மானபங்கம்படுத்திய, குழந்தைகள்,பெண்கள், முதியவர்களை தாக்கிய  காவலர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பணிஇடைநீக்கம் செய்யபடவேண்டும். இவர்களுக்கு தலைவராக உள்ள , ஊடகங்களில் செய்திகள் வெளியானபோதும் அதனை மறுத்து காவலர்களின் வன்முறையை நியாயப்படுத்திய ஆணையாளர் திரு ஜார்ஜ் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.. அவர்களின் சம்பளத்திலிருந்து மக்களுக்கு  நட்டஈடு வழங்கவேண்டும்.

ஊழலுக்காகவே ஆட்சி ! இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !

0

‘‘நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவுமறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு நிர்வாகத்தை நான் கொடுப்பேன்.’’ (ஜெயா தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி − ஆனந்த விகடன், 14.12.16)

‘‘அரசு நிர்வாகத்தில் தெளிவான பார்வையும் புத்திக் கூர்மையும் கொண்டவராக ஜெயலலிதா இருந்தார். (அவரது மறைவு) நிர்வாகத் திறன் கொண்ட அரசாங்கத் தலைமைக்கான இடத்திலும் வெற்றிடத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதே உண்மை.’’ (துக்ளக், 21.12.16)

TALENT_P2ஜெயா என்றொரு தனி மனுஷி குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலும், அ.தி.மு.க.வின் கூலிக்கார ஊடகங்களும் உருவாக்கி உலவ விட்டிருக்கும் பிம்பங்களுள் ஒன்று, ஜெயா மிகுந்த திறமைசாலி, சாட்டையைச் சொடுக்கி அதிகாரிகளிடம் வேலைவாங்கும் திறன் கொண்டவர்,  திறமை வாய்ந்த நிர்வாகத்தை அவர் மட்டுமே தர முடியும் என்பது. இந்தப் பிம்பத்தின் இன்னொரு புறத்தில் கருணாநிதியும், தி.மு.க. ஆட்சியும் திறனற்ற நிர்வாகத்தின் உருவாக முன்னிறுத்தப்பட்டனர்.

பார்ப்பான் புத்திசாலி, சூத்திரன் மூடன் என்ற மனுதர்மத்தின் நீட்சியாகவே தமிழக அரசியலில் ஜெயா குறித்து நேர்மறையான பிம்பமும் கருணாநிதி குறித்து எதிர்மறையான பிம்பமும் உருவாக்கப்பட்டு உலவ விடப்பட்டிருக்கிறது. பார்ப்பனக் கும்பலால் தூக்கி நிறுத்தப்பட்டு வரும் ஜெயாவின் திறமை, ஒரு வெத்துவேட்டு, மோசடி என்பதை நிரூபிப்பதற்குப் பெரிய பொருளாதார அறிவெல்லாம் தேவையில்லை. தமிழக மின்வாரியத்தின் இன்றைய பரிதாபகரமான நிலைமை ஒன்றே போதும்.

2011−இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்று, அ.தி.மு.க. வெற்றிபெற்றதற்கு அப்போது நிலவிய மின் வெட்டு முக்கிய காரணமாய் இருந்தது. அம்மின்வெட்டுப் பிரச்சினையையும், தமிழக மின்சார வாரியம் அச்சமயத்தில் சுமார் 50,000 கோடி ரூபாய் கடனில் இருந்ததையும் கருணாநிதியின் திறமையற்ற நிர்வாகத்தின் விளைவாகக் காட்டினார், ”துக்ளக்” சோ. ‘‘தான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்த்து, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன்’’ என வாக்குறுதி அளித்தார், ஜெயா.

‘‘திறமையாக’’த் தமிழகத்தை மொட்டையடித்துக் குவித்த சொத்தின் சிறு பகுதி.
‘‘திறமையாக’’த் தமிழகத்தை மொட்டையடித்துக் குவித்த சொத்தின் சிறு பகுதி.

ஆனால், நடந்தது என்ன? ஒருபுறம், மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வாய்தா வாங்கியே ஆட்சியை ஓட்டிய ஜெயா, இன்னொருபுறத்திலோ மின்சார வாரியத்தின் நட்டத்தைக் காட்டி மின் கட்டணத்தை இரு முறை உயர்த்தினார். மின் கட்டண உயர்வுக்கும் தனது அரசுக்கும் சம்மந்தமில்லை என்றும், மின்சார ஒழுங்குமுறை வாரியம்தான் அதற்குப் பொறுப்பேன்றும் நாடகமாடினார்.

மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் (2006−11) தொடங்கப்பட்டிருந்த அரசு மின் திட்டங்களை உரிய காலத்தில் முடிக்காமல், காழ்ப்புணர்ச்சியோடு அவற்றைக் கிடப்பில்போட்டது மட்டுமின்றி, தனது ஆட்சியில் புதிதாக எந்தவொரு மின் திட்டமும் தொடங்கும் எண்ணமே இல்லாமல் நடந்து கொண்டார். தனியாரிடமிருந்து அநியாய விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது, அதில் கமிசன் அடிப்பது என்ற நோக்கத்திற்காகவே அரசு மின் திட்டங்களை முடக்கியது, அவரது அரசு. இந்தத் தனியார் மின் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஜெயா−சசி கும்பலுக்குப் பணங்காய்ச்சி மரங்களாக இருந்ததை அதானி சூரிய ஒளி மின் திட்டமும், உடன்குடி மின் திட்டமும் அம்பலப்படுத்தின. இதன் விளைவாக, தமிழக மின்சார வாரியம் எதிர்காலத்தில்கூட மீள முடியாத அளவிற்குக் கடுமையான நட்டத்தில் தள்ளப்பட்டது.

ஜெயாவின் மூன்றாவது தவணை ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கம் ஒரு பெருங்கொள்ளைக் கூட்டமாகச் செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்தி, மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பால் வைக்கப்பட்ட விளம்பரத் தட்டி
ஜெயாவின் மூன்றாவது தவணை ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கம் ஒரு பெருங்கொள்ளைக் கூட்டமாகச் செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்தி, மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பால் வைக்கப்பட்ட விளம்பரத் தட்டி

தி.மு.க. ஆட்சியில் 50,000 கோடி ரூபாயாக இருந்த தமிழக மின்சார வாரியத்தின் கடன் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் (2011−16) இறுதியில் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. தி.மு.க. ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் நான்கு இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. ஜெயாவின் ஆட்சியில் நடந்த ஊழல், கொள்ளை காரணமாக கடன் சுமை அதிகரித்துப் போனதை ”துக்ளக்” சோ உள்ளிட்டு எந்தவொரு பார்ப்பன ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு, மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாதென்ற நோக்கத்தில், தி.மு.க. பலமானதொரு கூட்டணியை அமைப்பதைத் தடுத்து, மக்கள் நலக் கூட்டணி என்ற ஐந்தாம் படையை உருவாக்கினார்கள்.

ஜெயாவின் ஆட்சியில் அரசும், அரசு நிறுவனங்களும் கடனிலும், நட்டத்திலும் மூழ்கிக் கொண்டிருந்த அதேவேளையில், ஜெயா−சசி கும்பலோ கண்டெய்னர், கண்டெய்னராகப் பணத்தைக் கடத்தியது. மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் துபாயில் சொத்துக்களையும், இந்தோனேஷியாவில் நிலக்கிரி வயல்களையும் வாங்கிப் போட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

தமிழகத்தை அரைகுறையாக இல்லாமல், முழுதாக மொட்டையடிப்பது; அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர் வரை அடிக்கும் கொள்ளையில் உரிய பங்கை போயசு தோட்டத்தில் காணிக்கையாகச் செலுத்த வைப்பது; காணிக்கையைச் செலுத்தாமல் கம்பி நீட்டுபவர்களைக் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் தூக்கியெறிவது என்பதுதான் ஜெயாவின் தனித்திறமை.

tagline

ஊழல்தான் நிர்வாகம், நிர்வாகம்தான் ஊழல் என ஆட்சி முறைக்குப் புதிய பொழிப்புரை எழுதியவர் ஜெயா. ஜெயாவின் முதல் தவணை ஆட்சியில் தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை அபகரித்துக் கொண்டது தொடங்கி சுடுகாட்டு கொட்டகை போட காண்டிராக்டு விட்டது வரை ஊழலும், கொள்ளையும்தான் அரசின் செயல்பாடுகளாக இருந்தன. சிறுதாவூர், நீலாங்கரை தொடங்கி கோடநாடு முடிய கண்ணில் கண்ட நிலங்களெல்லாம் ஜெயா−சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்டன. அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், அடித்த கொள்ளை எவ்வளவு என்பதை வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் எடுத்துக் காட்டியது. அத்திருமண ஊர்வலத்தில் ஜெயாவும், சசிகலா குடும்பத்தினரும் கொஞ்சம்கூடக் கூச்சமின்றி, யாரும் எங்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற திமிரோடும், கொழுப்போடும் தங்க நகைக் கடைகளாக நடந்து வந்தனர்.

ஜெயா−சசி கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திப் போட்ட ஆட்டத்தின் விளைவாகவே, அக்கும்பல் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்டு டான்சி நில ஊழல் வழக்கு, பிளஸண்ட் ஸ்டே விடுதி ஊழல் வழக்கு, நிலக்கிரி இறக்குமதி ஊழல் வழக்கு, ஸ்பிக் பங்குகள் விற்பனை வழக்கு, அந்நியச் செலாவணி மோசடி வழக்கு என ஒன்பது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயாவின் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் சேர்த்துக் கொண்டால், 1991−96−இல் நடந்த ஜெயா ஆட்சியின் மீது  தொடரப்பட்ட ஊழல், கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை 46.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியை (2011−16) 40 பர்செண்ட் ஆட்சி எனக் குற்றஞ்சுமத்திய பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்வாகத்தில் யார் யாருக்கு எவ்வளவு கமிசன் செல்லுகிறது என்பதை அம்பலப்படுத்தி பிளக்ஸ் பேனரே வைத்தார்கள். அந்த அளவிற்கு அரசு திட்டங்களில் கையூட்டுப் பெறுவதில் புதிய சரித்திரத்தைப் படைத்தார், ஜெயா. இதற்கு அப்பால், உதவி செயற்பொறியாளர் முத்துக் குமாரசாமியின் தற்கொலையும், ஆவின் பால் கலப்பட ஊழலும், மணல் மற்றும் கிரானைட் கொள்ளைகளும், 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அம்பலமான கண்டெய்னர் விவகாரமும், ஜெயாவால் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் வீட்டில் தற்பொழுது நடந்துள்ள வருமான வரிச் சோதனையும் ஜெயாவின் நிர்வாகத் திறமை என்னவென்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்த ஊழல்களின் வழியாக ஜெயாவின் திறமை என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கும் உறைக்கும்படி சென்னை பெருவெள்ளம் அமைந்தது. பெருமழைக்கு முன்னதாகவே செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடக் கோரிப் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அனுப்பி வைத்த கோப்பை ஜெயா உதாசீனப்படுத்தியதன் விளைவு, சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது ஜெயலலிதா எதை வாசித்துக் கொண்டிருந்தார் என்பதை வரலாறு இனி பதிவு செய்யலாம்.

இலட்சக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து, தொழிலை இழந்து, உடமைகளை இழந்து அநாதரவாகத் தெருக்களிலும், மொட்டை மாடிகளிலும் பரிதவித்து நின்றபோது, ஜெயா அவர்களை ஹெலிகாப்டர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்; தனது செருப்புகூடத் தண்ணீரில் நனைந்துவிடாதபடி ஏ.சி. வேனில் குந்தியபடி நகர் வலம் வந்து, தனது ஆர்.கே.நகர் தொகுதி மக்களைப் பார்த்து, வாக்காளர்களே என ஏளனமாக அழைத்துவிட்டுப் போனார். ஜெயாவின் விசுவாசிகளோ, சோற்றுக்கும் குடிநீருக்கும் கையேந்தி நின்ற மக்களின் முகத்தில்கூட ஜெயாவின் ஸ்டிக்கரை ஒட்டிவிடக்கூடிய திமிருடன் அலைந்தனர்.

TALENT_P4
2011-16 ஆட்சிக் காலத்தில் ஜெயா−சசி கும்பல் ஊழல்-கொள்ளை மூலம் சேர்த்த சொத்து எத்துணை ஆயிரம் கோடி என்பதை வெளியுலகுக்குக் காட்டிய கண்டெய்னர்கள்.

சீனாவில் ஊழல், கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு பிடிபிடும் ஆளுங்கட்சியினர், அதிகாரிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட அதிபர்கள்கூட நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். ஆனால், இந்தியாவிலோ, ஊழல் குறித்து அதிகமாக சவுண்டுவிடும் பார்ப்பனக் கும்பல் ஜெயாவைக் காப்பாற்றிக் கைதூக்கிவிடுவதில் மட்டுமே அக்கறை கொள்கிறது.

‘‘பல்வேறு ஊழல் வழக்குகளை அவர் எதிர்கொண்டாலும், அவரது அரசியல் வாழ்க்கையை அவற்றால் முடக்க முடியவில்லை. ஏனெனில், பெரும்பான்மையான மக்கள் அவர் பக்கம் நின்றனர். குடும்பம் இல்லாத அவர் எதற்காக ஊழல் செய்து பணம் சேர்க்கப் போகிறார் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக இருந்தது’’ என எழுதி ஜெயாவை அனைத்துக் கிரிமினல் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கிறார், ஆர்.எஸ்.எஸ்.−ஐச் சேர்ந்தவரும் ”துக்ளக்” இதழின் புதிய ஆசிரியருமான குருமூர்த்தி.

அடித்தட்டு மக்களிடம் மட்டுமல்ல, உலக விசயம் தெரிந்தவர்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்திடமும் காணப்படும் அரசியல் பாமரத்தனமும் பிழைப்புவாதக் கண்ணோட்டமும்தான், ஜெயா தமிழகத்தின் அம்மாவாக அவதாரமெடுத்ததற்கான அடிப்படையை வழங்கியிருக்கிறது. தனக்காகத் தீச்சட்டி ஏந்தும் பாமரத் தமிழன் தொடங்கி உச்சநீதி மன்ற நீதிபதி முடிய அனைவரையும் விலைக்கு வாங்க முடியும் என்பதைத் தனது அரசியல் வாழ்க்கை நெடுகிலும் நிரூபித்திருக்கிறார், ஜெயா. தான், தனது கட்சி மட்டுமல்ல, சமூகத்தையே ஊழல்மயப்படுத்துவதில் மற்ற அரசியல் தலைவர்கள், ஓட்டுக்கட்சிகளைக் காட்டிலும் புதிய எல்லைகளைத் தொட்டவர்தான் ஜெயா. இதுதான் அவரது திறமை, இதுதான் அவர் நிகழ்த்திக் காட்டிய புரட்ச்சி!

– மாணிக்கம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

இருநூறு டன் கேரட்டை அழித்த ஒரு விவசாயியின் துயரம் !

2

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது மற்றும் பணமதிப்பு நீக்கம் என இரண்டு கத்திகளை மோடிஅரசு தமிழக விவசாயிகளின் முதுகில் பாய்ச்சியிருக்கிறது. காவிரி விவசாயம்தான் இம்முறையும் மத்திய அரசின் துரோகத்தால் சுடுகாடாகிவிட்டதென்றால் ஏனைய பகுதிகளின் விவசாயிகளின் விளைபொருட்களை விதைப்பதற்கும், அப்படியே விதைத்தாலும் பராமரிப்பதற்கும், தப்பித்தவறி விளைந்துவிட்டால் அதை அறுவடை செய்யவதற்கும் , அறுவடையே செய்தாலும் அதை விற்பதற்கும், தடையை உருவாக்கி விவசாயிகளின் எல்லா வழியிலும் தாக்கி  “செக் மேட்” செய்திருக்கிறது மோடி பாசிச கும்பல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் நகரத்தை சுற்றிலும் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாகும், இங்கு நிலவும் குளிரான தட்பவெப்பத்தின் காரணமாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகிய காய்கறி வகைகளும், ரோஜா,சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளும் அதிகம் விளையக்கூடிய பயிர்களாகும் அதுதவிர சோளம்,கேழ்வரகு, கம்பு ,உள்ளிட்ட தானிய வகைகளும் கீரை வகைகளும் சாகுபடி செய்யப்பட்டு வடமாநிலங்களுக்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் சென்னை,பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பபடுகிறது.

அசோக்
விவசாயி அசோக்

ஓசூர் அருகே தாசரப்பள்ளி எனும் கிராமத்தில் அசோக் எனும் விவசாயிக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் கேரட் பயிரிட்டிருந்தார், விதைத்ததில் இருந்து விதைக்கு, உரத்துக்கு, பராமரிப்புக்கு , பூச்சிக்கொல்லிக்கு என மொத்தமாக பத்து லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். ஏக்கருக்கு இருபது டன் வீதம் பத்து ஏக்கருக்கு இருநூறு டன் அறுவடைக்கு தயாராய் இருந்த நிலையில் கேரட்டின் விலை மார்கேட்டிலேயே சில்லறை விற்பனையில் கிலோ பத்து ருபாய்க்கு கீழே வீழ்ந்துவிட்டது. மொத்த வியாபாரிகள் கிலோ இரண்டு ருபாய்க்கு கேட்டிருக்கிறார்கள்.அதிலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கயால் இப்போது வெறும் ஒரு லட்சம் மட்டுமே பணம் தர முடியும் எனவும் வியாபாரிகள் அசோக்கிடம் கூறியுள்ளனர். குறைந்த பட்சம் அறுவடைக்கூலிக்கு அந்த பணம் ஆகுமென்றால் அதை அறுவடை செய்வதில் அசோக்கிற்கு எந்த சிக்கலும் இல்லை எனக் கூறுகின்றார்.

அறுவடை செய்ய வேண்டுமானால் தினமும் சில பத்து தொழிலாளர்ளுக்கு  ரொக்கமாக சம்பளம் தர வேண்டும்,மோடியின் கற்பனை தேசத்தில் இருக்கும் ஸ்விப்பிங் மெஷின் கொண்ட பிச்சைகாரர்களோ, மோடி பக்கதர்கள் சினிமா  காட்டுவதைப்போல வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் ஃபோன் ,பான் கார்டு,டெபிட்கார்டு, கிரடிட் கார்டு சகிதம் இருக்கும் விவசாயியோ அந்த பிராந்தியத்திலேயே  இல்லை. மேலும்  அசோக்கிற்கு தேவையான அளவு ரொக்கப்பணம் தர வங்களிடமும் கையிருப்பு இல்லை, ஒரு வேளை இருந்தாலும் அதும் “செல்லாத” புது இரண்டாயிரம் ரூபாய்த்தாள். கறிக்குதவா ஏட்டுச்சுரைக்காய். வியாபாரிகள் தரும் ஒரு லட்சம் பணத்தைக் கொண்டு பத்து ஏக்கர் நிலத்தில் கேரட்டை அறுவடை செய்து சுத்தம் செய்ய தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாது. அந்த தொகையும்  போதாது, நோட்டு பிரச்சனையால் எங்கும் கடன்வாங்க முடியவில்லை என்று மனமுடைந்த அவர் மொத்த விளைச்சளையும் அதாவது இருநூறு டன் கேரட்டையும் டிராக்டரை கொண்டு உழுது வயலிலேயே அழித்துவிட்டார். ஆம், மொத்தம் இரண்டுலட்சம் கிலோ கேரட்.

மண்ணோடு மண்ணாய்ப் போனது நூற்றுக்கணக்காண விவசாயிகளின் உழைப்பும், செலவழிக்கப்பட்ட நீரும், மின்சாரமும் , அவரின் முதலீடும். மாதக்கணக்கில் உழைத்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு அவர் திட்டங்கள் (கடனை அடைக்கவோ, திருமணத்துக்கோ, மருத்துவச்செலவுக்கோ, குழந்தைகளின் படிப்புச்செலவுக்கோ ) வைத்திருக்கும் போது  அது ஈடேறாமல் சொந்த டிராக்டரை ஓட்டி விளைந்த பயிரில் ஓட்டி அழிக்கும் போது அவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் ?

இது எல்லா பத்திரிக்கையிலும் செய்தியாக வந்திருக்கிறது ஆனாலும் எந்த அரசு அதிகாரியும் (வி.ஏ.ஓ தாசில்தார் என ஒருவரும்) வந்து பார்க்கவோ விசாரிக்கவோ இல்லை. இதுதான் விவசாயிகளுக்கான ஆட்சியாக மாநில மத்திய அரசுகள் மார்தட்டிக்கொள்ளும் யோக்கியதை, இந்த லட்சணத்தில்தான் விவசாயிகளின் வருமானதை இருமடங்கு ஆக்கப்போவதாக  நம்மை நம்பச்சொல்கிறார் மோடி.

கூலிக்குக் கூட கட்டுப்படியாகத காரணத்தால் நிலத்திலேயே அழிக்கப்பட்ட கேரட்
கூலிக்கு கொடுக்கக் கூட கட்டுப்படியாகத காரணத்தால் நிலத்திலேயே அழிக்கப்பட்ட கேரட்

கேரட் விவசாயம் மட்டுமல்ல. இன்னொமொரு மூன்று ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருக்கிறார். ஏற்கனவே அவரின் நிலத்தை சுற்றி இருக்கும் விவசாயிகள் தக்காளியை ஆள் வைத்து பறிக்க  முடியாமலும்,   விலை இல்லாமலும் வயலிலேயே அவற்றை அழித்து வருகின்றனர். அதன் நிலமை என்னவாகும் எனத்தெரியவில்லை என்கிறார் அசோக். ஏற்கனவே கேரட் விதைப்புக்கு வாங்கிய கடன் மிச்சமிருக்கிறது. அதையே அடைக்க முடியவில்லை. தினமும் நாற்பது தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். சராசரியாக மாதம் ஐந்து லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கிறது. மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்  அந்த நாற்பது பேருக்கும் சம்பளமளிக்க இயலாது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.

சம்பளம் சுத்தமாக கொடுக்க முடியாமல் நிலத்தை தரிசாக போட ஒருவேளை முடிவெடுத்தால் அந்த நாற்பது பேரின் குடும்பமும் பட்டினிதான், கேரட் அதிகம் விளைந்திருப்பதால் பட்டினி, எவ்வளவு பெரிய முரண்பாடு? இது ஏதோ ஒற்றை விவசாயியின் கதை அல்ல. அசோக் இதில் ஒரு சோறு பதம். கிராமப்பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டுறவு வங்கிகளை முடக்கிவைத்திருப்பதால் இது ஏதோ விலை வீழ்ச்சியால் நடக்கும் வழக்கமான நடவடிக்கை என சுருக்கி பார்க்க முடியாது.

கிட்டத்தட்ட நாடுமுழுதும் விவசாயிகள், ரொக்கப்பணம் இல்லாமல் சம்பளமளிக்க முடியாமலும், கடன் பெற முடியாமலும், விதைக்க முடியாமலும், அறுக்க முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் விளைபொருட்கள் அழிந்து கொண்டிருப்பதும் அதனுடன் சேர்ந்து விவசாயியும் மடிந்து கொண்டிருப்பதும் கண்கூடு. மேலும் அசோக் லாபத்தை எதிர்பார்த்து இருநூறு டன் கேரட்டை அழிக்கவில்லை. மேற்கொண்டு நான்கு ஐந்து லட்சம் கடனாளியாக முடியாது என்பதால் அழித்திருக்கிறார்.
அடுத்து என செய்வது எனப்புரியவில்லை என்கிறார் அசோக்.

ஒருமாதம் கழித்து மீண்டும் முட்டை கோஸ் அல்லது கேரட் பயிர் செய்யலாம் என்றிருக்கிறேன் என்கிறார் . நிஜத்தில் உழைத்து பிழைத்தும் கூட விவசாயியின் வாழ்க்கையை சீட்டாட்டம் போல மாற்றி வைத்திருக்கிறது இந்த அரசுகள். எல்லா முறையும் நட்டம், வரும் எனத்தெரிந்தே விதைப்பதைப் போன்ற துயரம் எதுவுமில்லை. அசோக்கின் நம்பிக்கைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைக்க என்ன இருக்கிறது? வைத்துதான் என்ன நடக்கும்? அதை அசோக் போன்ற விவசாயிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். நட்டத்தை தாங்கிக்கொள்ள முடியும் போது விவசாயிகள் பயிரை அழிக்கிறார்கள் அது முடியாத போது மாண்டு போகிறார்கள்.

அரசின் கொள்கை முடிவே பெரும்பான்மை விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதுதான். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஸ்மார்ட் சிட்டிகள், என நகரத்தின் எல்லையை விரிவாக்கிக்கொண்டே பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றத் துடிக்கிறது மோடி தலைமையிலான பாசிசக்கும்பல். தொழில் நுட்பத்தை புகுத்துகிறேன் என தற்சார்பை ஒழித்துக்கட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களை திணிக்கிறது அரசு. நமது விதைகளை ஒழித்து பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் ஏகபோக விதைச்சந்தையின் கட்டுப்பாட்டில் விவசாயிகளை நிறுத்துவது, தண்ணீரை விற்பனைப் பொருளாக்குவது. தவறான ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கை மூலம் விலை வீழ்ச்சி அல்லது விலையுயர்வை ஏற்படுத்துவது, பெருமளவு நிலங்களை கார்பரேட்டுகளுக்கு கையளிப்பது ,சில்லறை விற்பனைச் சந்தையில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்து,  நாட்டை மறுபடியும் ஏகாதிபத்தியங்களின் காலனியாக்குவது தான் இவர்களின் திட்டமே அதைத் தான் வளர்ச்சி எனகூவுகிறார் மோடி.

IMG-20170103-WA0075காவிரியில் மோடி அரசு செய்த துரோகத்தால் கிட்டத்தட்ட நூறு விவசாயிகள் தமிழகத்தில் மட்டும்  மாண்டு போயிருக்கிறார்கள்.  தமிழக பினாமி அரசு வெறும் பதினேழு விவசாயிகள் மரணத்தையே கணக்கு வைத்திருக்கிறதாம். அந்த பதினேழு பேருக்கும் தலா மூன்று லட்சம் நிவாரணம் என்ற பெயரில் அளித்திருக்கிறது. இந்தியா முழுவதுமே விவசாயிகளின் தற்கொலையை அப்படியே பதிவு செய்யக்கூடாது என்பதுதான் காவல் நிலையங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்மொழி உத்தரவு. விவசாயி சாகிறான் என்பதையே ஒத்துக்கொள்ள விரும்பாத அரசுகளா அதற்கான தீர்வைத்தரப் போகிறது?

இந்த அரசுக்கட்டமைப்பை இயக்குவதே அல்லது அரசுக்கட்டமைப்பு இயங்குவதே உள்ளூர்  கார்பரேட்டுகளுக்காகவும், பன்னாட்டு கம்பெனிகளுக்காகவும் தான். விவசாயிகளின் பிரச்சனை அவர்களுக்கு தேவையுமல்ல முக்கியமும் அல்ல. அவர்களின் பிரச்சனையே விவசாயத்தை விட்டு வெளியேறாத விவசாயிகள் தான். இந்த ஆளத்தகுதி இழந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுவது என்பது இடிகின்ற வீட்டுக்கு சுண்ணாம்படிக்க முயற்சிப்பது போன்றது.  பெரும்பான்மை மக்களுக்கெதிரான இந்த கட்டமைப்பு பேரழிவைத்தான் நமக்கு பரிசாக வழங்கும். அதை நொறுக்கி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவாதவரை, ஊட்டச்சத்தில்லாமல் மடியும் குழந்தைகள் மற்றும் பயனில்லாமல் மண்ணிலேயே அழிக்கப்படும் கேரட்டுகளும் சேர்ந்த இந்த கொடூர முரண்பாட்டை சரிசெய்ய முடியாது.

-புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்
செல்- 9944958840.

நந்தினி ஒரு ’இந்துப்’ பெண், திரிசூலம் – இந்து உணர்வு !! கேலிச்சித்திரம்

6

நந்தினி ஒரு ’இந்துப்’ பெண்
திரிசூலம் – இந்து உணர்வு !!

nanthini-cartoon-updated

ஓவியங்கள் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
பேச: 95518 69588

இணையுங்கள்:

தானாடா விட்டாலும் எங்கள் தசையாடியது – துரை சண்முகம் கவிதை

0

தமிழர் மேல் விழுந்த அடி!

jallikattu-protestலையில் சிக்கிய மீன்களை
வக்கிரமாய் நாங்கள் அடித்ததில்லை.
சிக்கியது என்பதற்காக
செவுள்களை பிய்த்ததில்லை
சினைமுட்டை சிதைத்ததில்லை.

திருக்கை அடித்தபோதும்
சுறா கடித்தபோதும்
நொறுக்கிடும் வெறி வந்ததில்லை
கொடுவால் முகத்தில்
ரத்தம் வரச்செய்ததில்லை.

திசைவழி தேடி அலைந்து
மீன் ஏதும் கிடைக்காத போதும்
தசை வலியோடு திரும்பினாலும்
கடுப்பில் துடுப்பால்
கடலையும் நாங்கள் அடித்ததில்லை.

கரைமேவும் நண்டுக்கும்
காவல் எமது கட்டுமரம்
இரைதேடும் பறவைக்கும்
அடைக்கலமாகும் நெய்தல் நிலம்.

துடிக்கும் நெத்திலிக்கும்
நீர் தெளிக்கும் எம் கைகள்
அடித்து ரத்தம் சொட்ட
அடைக்கலம் தேடிய பிள்ளைகளுக்கு
தண்ணீர் தருவது எங்கள் இயல்பு
தடுக்க நீ யாரடா விலகு!

nadukkuppamசோறின்றி, நீரின்றி
நெடுநேரம் கடலோரம்
தவிக்கும் பிள்ளைகளைப் பார்த்து
துடித்தது எங்கள் மனது
தானாடா விட்டாலும்
எங்கள் தசையாடியது
மனிதாபிமானத்தில் காப்பாற்ற
எங்கள் கலம் ஓடியது
மறுக்க நீ யாரடா
முதலில் மனிதனாகப் பழகு!

உப்புக் காற்றில் தினம்
உயிர் மூச்சு வேகுது
சிங்கள கடற்படையால்
ஒரு தலைமுறையே சாகுது
தட்டிக் கேட்க
உங்கள் தடிகளைக் காணோம்,
இனத்தைக் கட்டிக் காத்ததற்கா
இத்தனை கொடூரம்?

கானாங்கெளுத்தியும், வவ்வாலும்
மீனில் மட்டுமா பார்த்தீர்கள்
எங்கள் ஊனிலும் பார்த்தீர்கள்
காரப்பொடியும், ஓட்டாம்பாறையும்
எங்கள் உடம்பில் தின்றீர்கள்
வஞ்சிரத்தை
எம் மீனவப் பெண்களின்
நெஞ்சுரத்தில் பார்த்து பயந்தீர்கள்.

தரையிறங்கிய விண்மீனாய்
எம் தமிழர் கூட்டம்
திரைகடலும் பெருமிதத்தால்
திமிறிக் காட்டும்
கரைக்குலமாம் மீனவர் கூட்டம்
தமிழ் உணர்வுக்கு தாய்ப்பால் ஊட்டும்.

ஆழமாய்… அமைதியாய்
நாட்டுப் பற்றாய்… நனிநாகரிகமாய்
விளைந்த மெரினாவின் விளைச்சலை
இமை மறந்து வியந்தது உலகமே
யாரால் விளைந்தது கலகமே?

Police-sliderஅடித்தீர்கள்
ஆடை அவிழ்த்தீர்கள்
எரித்தீர்கள்
யார் சமூக விரோதிகள்?

தமிழர் தாலாட்டில்
இன
யாரடித்தார் சொல்லி அழு
என்ற வார்த்தையை
அவசியம் இல்லாமல் ஆக்கிவிட்டது
உங்கள் அடையாளம்.

துடுப்பசைப்பது இருக்கட்டும்
உடுப்பணியவும் முடியாமல்
உடைக்கப்பட்ட எலும்புகளோடு
தழும்பேறிய எம் விழிகள்
உலகுக்கே அடையாளம் காட்டுகின்றன!
“தடை செய்யப்பட வேண்டிய பயங்கரவாதிகள்,
தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள்…
ஏவிவிட்ட காவிகள்
ஏறிமிதித்த காக்கிகள்.

— துரை.சண்முகம்

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

0

க்கள் அதிகாரம் மதுரை மாவட்ட ஒருங்கிணப்பு குழுவின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், மக்கள் மீது நடத்தப்பட்ட தமிழக காவல்துறையினரின் வன்முறையை கண்டித்து மதுரை பழங்காநத்தம் அருகில் 30.01.2017 அன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமை வகித்தார்.

வட இந்திய மக்களின் மத்தியில்தமிழ் சமூகத்தை கூனிக்குறுக செய்த அதிமுக-வின் காலில் விழும் கலாச்சாரத்தை தோலுரித்த அவர்  இந்தக் கூட்டம் தான் போராடும் மாணவர்களை வன்முறை கும்பலாக சித்தரிக்கிறது என்றார். இவர்களுக்கு பின்புலமாக செயல்படுவது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இவர்களை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிப்பது தான் நம்முடைய உரிமைகளை பெறுவதற்கு முதல் படியாகும் என உரையாற்றி சுற்றி கூடியிருந்த பொதுமக்களின் கவனத்தை ஆர்ப்பாட்டத்தில் குவியவைத்தார்.

Madurai PP Protest (5)அடுத்து பேசிய புமாஇமு-வை சேர்ந்த கல்லூரி மாணவர் தோழர் ஆனந்த் ஓ.பி.எஸ் பின்லாடன் பூச்சாண்டி காட்டுகிறார்.  ஆனால் வன்முறை கும்பலாக செயல்பட்டது காவல்துறைதான். நீங்கள் வராவிட்டாலே போதும் நாங்களே பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வோம், பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் கூடங்குளம் போராட்டம் வரையிலும் காவல்துறையின் வன்முறையே இதற்கு உதாரணம் எனக்கூறி உரையாற்றினார்

பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத் கலவரம் வரை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க எப்படி நடந்து கொண்டதோ அதே போல்தான் இங்கே காவல் துறை நடந்து கொண்டது. எனவே இந்த வன்முறை முழுவதிலும் அர்.எஸ்.எஸ், பாஜக-வின் அடியாட்படையாகத் தான் காவல்துறை நடந்து கொண்டது எனக்கூறி  ஆர்.எஸ்.எஸ்-க்கும் காவல்துறைக்கும் இருந்த தொடர்பை தோலுரித்தார் புஜதொமு வை சேர்ந்த தோழர் பிரகாஷ்.

முற்போக்கு மாணவர் கழகத்தின் மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் இனியன் தருமபுரியில் பா.ம.க  தலித் மக்களின் சொத்துக்களை சூறையாடியது காவல்துறைதான். சாதி மத வெறியர்களுக்கும் காவல்துறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை இவர்கள் அனைவருமே தலித் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரிகள் எனக்கூறி உழைக்கும் மக்களின் எதிரிகளை அம்பலப்படுத்தினார்.

அடுத்தாக  6 அமைப்புகளுக்கு தடையாம், யார் அந்த 6 அமைப்பு? டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டம் செய்தவர்கள், விவசாயிகள் தற்கொலைக்கு எதிராக போராடியவர்கள், முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக போராடியவர்கள். இவர்கள் தான் ஓ.பி.எஸ் மற்றும் காவல்துறை சொல்லும் சமூக விரோதிகள் எனில் இவர்களுடைய திட்டம் இதை சாக்காக வைத்து மக்களுடைய பிரச்சினைகளுக்காக போராடக் கூடிய  அமைப்புகளை மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்ச்சிக்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டின் பிரதமரே ஒரு பயங்கரவாதப் பிரதமர்தான். இவர்கள்  மாணவர்கள் அரசியல் பேசுவதை வன்முறை கொண்டு தடுத்து விடலாம் என முயல்கிறார்கள். மாணவர்கள் இவர்களை புரிந்து கொண்டு தமிழக உரிமையை நிலை நாட்டி சாதிப்பார்கள். இவர்கள் சமூக விரோதிகள் எனச்சொல்லும் அந்த அமைப்புகள்தான் உண்மையில் தேசப்பற்றாளர்கள் என கூறி மாணவர்கள் அரசியல் கற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசிமுடித்தார், விவசாயிகள் விடுதலை முன்னணியி-ன் தோழர் ஆசை.

அடுத்ததாக பேசிய  தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பு செயலர் முகிலரசன், எச்.ராஜா என்ற தரங்கெட்ட அரசியல்வாதிதான் முதலில் இந்த போராட்டத்தை இந்து முஸ்லிம் கலவரமாக மாற்றப் பார்த்தார். இதை ஒட்டித்தான் ஓபிஎஸ்–ம் பின்லேடன் படம் கதை விடுகிறார். ஆனால் இந்த வன்முறை என்பது ஒரு திட்டமிடப்பட்ட ஒன்று. இல்லையென்றால் அங்கே எப்படி வெண் பாஸ்பரஸ் வந்தது? முதல் நாள் இரவே இதற்காக பயிற்சி கொடுத்துள்ளனர். அதனால்தான் அந்த பெண் போலீஸ் யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற தயக்கம்கூட இன்றி வீடுகளை எரிக்கிறார். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிலும் இப்படித்தான் காவல்துறை வன்முறையை திட்டமிட்டு நடத்தியது. நடுக்குப்பத்தில் புகுந்த காவல்துறை அருகில் இருந்த மைலாப்பூர் அக்ரஹாரத்தில் நுழையவில்லையே ஏன். ஏனெனில் அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்   கும்பலுக்கு அடிப்படை. அடித்தட்டு மக்களை தாக்கும் இந்த காவல்துறை எப்போதும் கிரிமினல்களை, அரசியல் ரவுடிகளை நெருங்காது. ஏன் அவர்களுடைய வீட்டு வாட்ச்மேனைகூட நெருங்காது. எனவே வன்முறையில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரிகளை பதவிநீக்கம் செய்ய வேண்டுமேன கோரினார்.

இறுதியாக சிறப்புறையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் பேசும்போது இந்த தீவிரவாதி பயங்காட்டுவது யார்? மத்திய மாநில அரசில் அங்கம் வகிக்கும் அதிமுக ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவல் துறை மட்டும்தான்.  மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இதை கண்டிக்கின்றன.

அங்கே வன்முறை நடந்தது உண்மை, அதை செய்தது காவல் துறைதானே தவிர மாணவர்களோ முற்போக்கு அமைப்புகளோ அல்ல. உதாரணமாக அலங்காநல்லூரில்  மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்பதற்காக வயதான பெண்மனிகளைகூட அரக்கத்தனமாக தாக்கியுள்ளது காவல்துறை. மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு வீட்டில் குடும்பத்தோடு தாக்கி “ஆண்களுக்கு பெண்கள் இருக்கும் இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளாயே நீ என்ன பெண்களை வைத்து வியாபாரம் பார்க்கிறாயா” என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதை அந்த வீட்டில் உள்ள ஒரு சிறுவன் சொல்கிறான். அதே போல் மதுரையில் ரயில் மறியல் செய்த இடத்தில் சுற்றி இருந்த தொழிலாளர்கள் தள்ளு வண்டி கடைக்காரர்கள், ஆற்றில் வேடிக்கை பார்த்தவர்கள் என ஒருவர் விடாமல் தாக்கியுள்ளது. ஏன் இந்த வன்மம் என்றால் முற்போக்கு அமைப்புகள் மக்களுடைய பிரச்சினையை இந்த போராட்டத்தினூடாக எழுப்பியதும் அதற்கு மக்கள் ஆதரவு கிடைத்ததும் தான் போலீஸ் மற்றும் அரசின் இந்த வன்மத்திற்கு காரணம். மதுரை தமுக்கத்தில் நாங்கள் வழக்கறிஞர்கள் இருந்ததால் தடியடி நடத்தவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி   அமைப்புகள்தான் இறுதிவரை கலையமாட்டோம் எனக்கூறி இறுதியில் மாணவர்களை கைவிட்டு சென்றார்கள். அவர்களை ஏன் தேசவிரோதிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. உண்மையில் இவர்கள்தான் தேசவிரோதிகள். இவர்களைத்தான் தடை செய்யவேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் இவர்களுடைய  அரசை கலைக்க வேண்டும். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். எனவே மக்களுடைய போராட்டமே ஒரே தீர்வு என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை திரளன மக்கள் நின்று கவனித்தனர். இறுதியில் மக்கள் அதிகாரத்தின் தோழர் ராஜா நன்றியுரையாற்ற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.

____________________

திருவாரூர் ஆர்ப்பாட்டம்

மெரினா : போலீசின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டிப்போம் என்ற அடிப்படையில் திருவாரூர் பேருந்து நிலைம் எதிரில் 31.01.17 அன்று மக்களதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை இடைமறித்து திருவாரூர் DSP தலைமையில் தோழர்களை கைது செய்து காட்டூர் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

  • வரவேற்புரை :
    தோழர்
    சண்முகசுந்தரம்,
    மக்கள் அதிகாரம்.
  • தலைமை :
    தோழர் முரளி, 
    மக்கள் அதிகாரம், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர்.
  • கண்டன உரை :
    திரு கூடூர் சீனிவாசன், மதிமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்.
    நாத்திகம் சம்சுநிசியா.
    மாணவர் பிரசாந்த்.
    திரு சி.மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள்.
    தோழர் ஆசாத் புதிய ஜனநாயகம் முகவர்.
  • சிறப்புரை :
    தோழர் கரூர் ராமசாமி மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

____________________

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டம்

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து தஞ்சை ரயிலடியில் மக்கள் அதிகாரம் சார்பில் 30.01.17 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை சுற்றியிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்துச் சென்றனர்.

தலைமை :
தோழர் அருள், மக்கள் அதிகாரம்.

கண்டன உரை :
தோழர் தேவா, மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர்.
தோழர் சேவையா, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர்.
திரு பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் இயக்கம்.
தோழர் மாதவராஜ், ஆட்டோ ஓட்டுனர் சங்க கூட்டமைப்பு.
தோழர் ராஜா, மக்கள் அதிகாரம் திருச்சி.

சிறப்புரை :
தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர். மக்கள் அதிகாரம்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
தஞ்சை.

____________________

கோத்தகிரி ஆர்ப்பாட்டம்

டந்த 16.01.2017 முதல் சல்லிகட்டு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் இளைஞர்கள் தொடர்ந்து 6-நாள் போராட்டம் நடத்தினார்கள்.  மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம் கட்டுக் கோப்பான பண்பாடு எல்லாம் இந்தியாவையே வியப்படையச் செய்தது.  ஒன்றும் செய்ய முடியாத அரசு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து அவசர சட்டம் இயற்றி சல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து அதை அறிவித்தது.

அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் தான் வேண்டும் என்று தொடர் முழக்கத்துடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.  ஆனால் அரசு ஊடகங்கள் மற்றும் துரோகிகளை வைத்து நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது.  நாம் இத்தோடு போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தனர்.  எங்களுக்கு நிரந்தர சட்டம் இயற்றி அதன் நகலை எங்கள் கையில் கொடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதனை ஏற்றுக் கொள்ளாத மத்திய மாநில அரசு இணைந்து போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கி பெண்களை மானபங்கம் செய்தும், பாலியல் தொந்தரவு கொடுத்தும் விரட்டைடித்தது. மேலும் ஆட்டோக்களை காவல்துறையே எரித்தது, வீடுகளுக்கு தீ வைத்தது.  காவல்துறை தனது வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டது.  வீடு புகுந்து பெண்களை அடித்து விட்டு ஆண்களை கைது செய்து சென்று உள்ளது.

அதை நியாயப்படுத்தும் விதமாக சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக கூறி திசை திருப்ப வெறியாட்டத்தை நியாயப்படுத்தியது.  இதனை கோத்தகிரி மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது.  கொலை வெறி தாக்குதலில் ஈடுப்பட்ட காவல்துறை கண்டிக்கிறோம்.  மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை 03.02.2017 அன்று காலை 10 மணிக்கு கோத்தகிரி மக்கள் அதிகாரம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி.