மெக்சிகோவின் மோங்கிலோவா நகரத்தில் நடக்கும் போராட்டத்தில் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர்.
2017, ஜனவரி முதல் நாள் மெக்சிகோ அரசு 20% க்கும் அதிகமாக பெட்ரோல் விலையை உயர்த்தியதன் எதிர்வினையாக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்வு என்பது மட்டுமல்லாமல் அரசின் அலட்சியம், ஊழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியும் இதில் அடங்கியுள்ளதால் இந்தப் போராட்டம் காட்டுத்தீ போல 14 க்கும் அதிகமான மாநிலங்களில் பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் போராட்டக்காரர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“எங்களிடம் கார் இருப்பதனால் அல்ல இந்தப் போராட்டம். பெட்ரோல் விலை அதிகரித்தால் ரொட்டிகள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கான செலவீனங்களும் அதிகரிக்கும்” என்று காப்பீடு நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக இருக்கும் ஹெக்டர் பெரெஸ் கூறுகிறார். மெக்சிகோ மக்களின் குறைந்தபட்ச நாள்கூலி 4 டாலர்கள் (280 ரூபாய்) என்று இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு அவர்களது பொருளாதாரப் பிரச்சினைகளை மென்மேலும் அதிகரிக்கும் என்பதை அம்மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.
மெக்சிகோவின் தானியங்கி மோட்டார் தொழிற்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு மூலதனமிட்டு இருக்கின்றன. மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிகவரி விதிக்கப்படும் என்று ஜனவரி 3 ஆம் நாள் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய சில மணிநேரங்களிலேயே வில்லா டி ரெய்ஸில் சுமார் 1.6 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்பட இருந்த ஒரு தொழிற்சாலைக்கான திட்டத்தை இரத்து செய்வதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்தது.
இந்த காரணங்களால் இந்தப் போராட்டத்திற்கான அடித்தளம் நீறு பூத்த நெருப்பு போல சில மாதங்களாகவே இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த விலை உயர்வு என்பது மெக்சிகோ மக்களால் ஏற்றுகொள்ள முடியாத ஒரு கொடுஞ்சுமையாக மாறி இந்தப் போராட்டத்திற்கான தீப்பொறியாக அமைந்து விட்டது.
மெரினாவில் இலட்சக்கணக்கான மக்கள் குழுமி போராடியதை முதன்முறையாக பார்த்த நாம் மெக்சிகோ நாட்டில் அடிக்கடி நடக்கும் இத்தகைய போராட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்கும் ஓட்டுக் கட்சிகள், ஊடகங்கள், முதலாளிகள், அரசுகள் மீது மக்கள் அதிருப்பதி அடைந்திருப்பதோடு இவர்களைக் காப்பாற்ற வரும் போலீசை எதிர்த்து அன்றாடம் போராடுகின்றனர்.
மெக்சிகோவின் மோங்கிலோவா நகரத்தில் நடக்கும் போராட்டத்தில் காவல்துறையினர் ஒரு போராட்டக்காரரைத் தடுத்து நிறுத்துகின்றனர்.போகா டெல் ரியோவில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது எரிவாயு நிலையங்களைச் சூறையாடிய மக்களைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்கின்றனர்.மோங்கிலோவா நகரத்தில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர் ஒருவரைக் தரையில் போட்டு மிதிக்கின்றனர்.மோண்டிரே மாநகரத்தின் மேக்ரோபிளாசாவில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பதாக அட்டைகளைப் போராட்டக்கரார்கள் கையிலேந்தி இருக்கின்றனர்.போகா டெல் ரியோவில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் எரிவாயு நிலையங்களைச் சூறையாடிய மக்களைக் காவல்துறை அதிகாரிகள் தடுக்கின்றனர்.மோண்டிரேவில் உள்ள மேக்ரோபிளாசாவில் மெக்சிகோ அரசை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் அரசு மாளிகையை அடித்து நொறுக்கும் சக போராட்டக்காரர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்துகிறார் ஒருவர்.மோண்டிரேவில் உள்ள மேக்ரோபிளாசாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மல்டிமீடியோ டி.வி நெட்வொர்க் நிறுவனத்தின் கார் ஒன்றை புரட்டிப் போட்டு போராட்டக்காரர்கள் சூழ்ந்து நிற்கிறார்கள்.மோண்டிரேவில் உள்ள மேக்ரோபிளாசாவில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடிக்கிறார்கள்.மோண்டிரேவில் உள்ள மேக்ரோபிளாசாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மல்டிமீடியோ டி.வி நெட்வொர்க் நிறுவனத்தின் கார் ஒன்றை போராட்டக்காரர்கள் புரட்டித் தள்ளுகிறார்கள்.மெக்சிகோவின் மோங்கிலோவா நகரத்தில் நடக்கும் போராட்டத்தில் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மெக்ஸிகோ, சிவாவா மாநிலத்தின் சியுடாட்டில் இருக்கும் சர்வதேச எல்லையில் போரட்டக்காரர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நமது தேசம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மூன்றாம் உலக ஏழை நாடுகளின் நீர்வளத்தை சுரண்டி வியாபாரமாக்கி வரும் கோக், பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராய்… களமாடுவோம்!
ஜல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மெரினா மற்றும் தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத அளவில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் ஏழாம் நாளான ஜனவரி 23 அன்று சென்னை மெரினா மற்றும் அலங்காநல்லூரில் போலிசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மற்றும் ,தீ வைப்பு, வாகனம் உடைப்பு போன்ற வன்முறை செயல்களை கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட போலிசாரை தண்டணைக்குள்ளாக்க கோரியும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருச்சி கிளையின் சார்பில் 30/01/2017 திங்களன்று மாலை 6.00 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளையின் செயலர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் அவர்கள் தலைமை வகிக்க , கண்டன உரை திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் சீனிவாசன் B.com.,B.L அவர்களும், மூத்த வழக்கறிஞர் மருதநாயகம் B.A.,B.,L., அவர்களும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.ஆதிநாரயணமூர்த்தி B.com.,B.L அவர்களும் கிளைத் தலைவர் தோழர்.காவிரிநாடன் அவர்களும் கண்டன உரையாற்ற இறுதியாக செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சாருவாகன் நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்களும் அரங்கின் நண்பர்களும் சுமார் 100 பேர் அளவில் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் இரவு 9.00 மணியளவில் நிறைவுற்றது. திரளான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினை இறுதிவரை கேட்டு ஆதரவளித்தார்கள். கண்டன உரையாற்றியவர்கள் பேசியதாவது
தலைமை உரையில் வழக்கறிஞர் முருகானந்தம் பேசியதாவது: ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக்கோரிக்கைக்காக நடந்துவிடவில்லை. இதுநாள் வரையில் தான் சகித்துவந்த காவிரி பிரச்சினை, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் தாக்கத்தினால் வெகுண்டிருந்தனர். அதன் காரணமாகவும் நமது நாட்டில் நிலவுகிற பண்பாட்டு கலாச்சாரத்தினை குலைக்கும் விதத்தில் இந்த மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு இருந்ததையும் எதிர்க்கும் விதத்தில் அதற்கு தங்களுக்குள் இருக்கும் ஆதங்கத்தினை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். அது மாணவர் போராட்டமாக துவங்கி பின் மக்கள் போராட்டமாக மாறி இருந்தது.
அத்தகைய போராட்டத்தில் வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக போலிசாராலும், ஆளும் வர்க்கத்தினராலும் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மாணவர்கள் பொதுமக்கள் போராட்டத்தினால் கிடைத்த வெற்றி என்ற பெயர் ஜல்லிக்கட்டிற்கு வந்துவிட்டால் போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை அவர்கள் சுவைத்துவிட்டால் அரசின் பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட்டத்தில் இறங்குவார்கள் என்று பயந்த இந்த அரசும் காவல்துறையும் இத்தகைய வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 14-ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்திய தண்டனைச் சட்டம் போலீசுக்கும் பொருந்தும். அந்த வகையில் இந்த கலவரத்தை ஏற்படுத்திய காவல் துறையினர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பேசினார்.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் சீனிவாசன் பேசியது: மாணவர் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று 17/01/2017 அன்று பொதுக்குழுவை கூட்டி மாணவர்கள் போராட்டத்திற்கு எங்களது வழக்கறிஞர் சங்கம் ஆதரவு அளிப்பதாக தீர்மானம் இயற்றினோம். அந்த மாணவர்களிடம் சென்று போராட்டத்திற்கு ஆதரவு அளித்தோம். இரண்டு நாள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பு செய்தோம். போராடுபவர்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் அதனை வழக்கறிஞர் சங்கம் இலவசமாக நடத்தி கொடுக்கும் என்றெல்லாம் தீர்மானம் இயற்றியிருந்தோம். காளை காட்டு விலங்கு அல்ல அது வீட்டு விலங்கு அதை கொடுமை படுத்துவதாக சொல்வது பொய் அப்படி ஒன்றும் நடப்பது இல்லை. ஒருநாள் அந்த காளையோடு விளையாடுவதற்காக மக்கள் வருடம் முழுவதும் பாசத்தோடு வளர்க்கிறார்கள். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்திருத்தத்தை கவனிக்காமல் இருந்ததோடு எதற்காக நாம் அவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினோமோ அந்த வேலையை அவர்கள் செய்யாமல் இருந்துள்ளனர். அந்த வகையில் இந்த காவல் துறையினர் மாணவர்களை அடித்திருக்க கூடாது. அவர்கள் அடித்திருக்க வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களைத்தான் காவல் துறையின் வன்முறைதாக்குதல் கண்டிக்க வேண்டியது என்று பேசினார்.
மூத்த வழக்கறிஞர் மருதநாயகம் பேசியதாவது: இந்த மோடி அரசு தொடர்ந்து மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. போராட்டத்தில் வன்முறையாளர்கள் என்று கூறுவது மோடியுடைய மோசடி இந்த மாநில அரசு மத்திய அரசின் காவிக்கொள்கையை பற்றியிருக்ககூடிய ஒன்றாக இருக்கிறது. அது மத்திய அரசின் கைப்பாவையாக முற்றிலுமாக மாறிவிட்ட ஒன்றாக உள்ளது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றம் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. அது தொடர்ந்து மக்களுக்கு எதிரான போக்கை கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக விளங்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சியெல்லாம் மக்களுடைய நம்பிக்கையை இழந்து நிற்கிறது. அந்த வகையில் இந்த மாணவர்களின் போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்க கூடிய புரட்சியின் தொடக்கம் என்று பேசினார்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி பேசியது: திருச்சியை பொருத்தவரை போலிசார் சாதுர்யமாக கையாண்டதாக சொல்கிறார்கள். கடந்த 23/01/2017 அன்று மாணவர்கள் போலிசாரால் துரத்தப்பட்டபோது அவர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். காவல் துறையினர் நீதிமன்ற வளாக கதவுகளை அடைத்தனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள் யாரும் செல்ல முடியாத நிலையில் அராஜகமாக நடந்து கொண்டனர். போராடும் மாணவர்களுக்கு உணவு செல்ல முடியாதபடி தடுத்தனர். வழக்கறிஞர்கள் சென்று காவல்துறையினரை தடுத்தோம். நீதிமன்ற கதவை திறக்க வைத்தோம். மாணவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடந்துவிடாதபடி பாதுகாத்தோம். அதோடு தமிழகம் முழுவதும் போராடிய மாணவர்களை தாக்கியது அராஜகமானது. அமைதியாக போராடும் மாணவர்களை எந்த சட்டமும் தாக்க சொல்லவில்லை. காவல் துறையினர் நடந்து கொண்டது சட்டவிரோதமானது. காவல் துறையினர் திடிரென இந்த தாக்குதலை நடத்தவில்லை. அவர்கள் திட்டமிட்டே வெண்பாஸ்பரஸ் கொண்டு வந்து சொத்துக்களை கொளுத்தியிருக்கிறார்கள். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சொந்த பணத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேசினார்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர் காவிரிநாடன் பேசியது:
உலகில் பல நாடுகளில் மக்கள் புரட்சிகள் வெடித்திருக்கிறது. ஒருசில நாடுகளில் தொழிலாளி வர்க்கம் புரட்சிகர சக்திகளாக இருக்கிறது. சில நாடுகளில் விவசாயிகள் புரட்சிகர சக்திகளாக இருந்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தமிழகத்தில் மாணவர்களும் இளைஞர்களுமே புரட்சிகர சக்திகளாக இருக்கிறார்கள். இந்த போராட்டங்களுக்கு முன்பு மாணவர்களை சமூகமும் ஊடகங்களும் சமுக அக்கறை அற்றவர்களாக பொறுப்பற்றவர்களாகவே சித்தரித்து வந்ததன. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் மோசடி பொய்யான அரசியலால் துரோகத் தனத்தால் புழுங்கி கொண்டிருந்த மாணவர் சமுதாயம் வெடித்து கிளம்பி இருக்கிறது.
இந்த ஜல்லிகட்டு பிரச்சினையில் பீட்டாவை மட்டுமே எதிரியாக காட்டுவது சரியல்ல. மொத்த பாரதிய ஜனதா அரசே தேசிய இனங்களின் அடையாளத்தை அழிப்பது என்பதை குறிப்பாக தமிழர் பண்பாட்டு அடையாளத்தை அழிப்பதை கொள்கையாக கொண்டுள்ளது. போராட்டத்தின் தேசவிரோதிகளும் சமுக விரோதிகளும் ஊடுறுவினார்கள் அதனால்தான் கலவரம் நடந்தது என்கிறார்கள். நடைமுறையில் பி.ஜே.பி. தான் தேசவிரோத சமூக விரோத சக்தியாக உள்ளது என்று பேசினார்.
இறுதியாக நன்றி தெரிவித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சாருவாகன் பேசினார்.
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட் – 2
தலையில் காவித் துண்டு கட்டிய சிறு கும்பல் அந்த மேடையின் அருகில் பெரும் கூச்சலோடு நிற்கிறது. ஒவ்வொருவரின் நெற்றியிலும் செந்தூரத் தீற்றலும், வாயில் டாஸ்மாக் சரக்கு வாடையும் தூக்கலாக இருக்கின்றன. அந்த வாய்களில் வழிந்த மட்டமான சாராய வாடைக்கு இடையே அவ்வப் போது பாரத மாதாவும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேடையில் இவர்களை உற்சாகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தான் அவன். அந்த நேரம் பார்த்து மேடைக்கு சற்றுத் தொலைவில் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்று கொண்டிருந்தார் ஒரு கருப்புச் சட்டைக் காரர்.
“டேய்… போடா போ… என்னிக்கு இருந்தாலும் உன்னோட நெஞ்சுல கடப்பாறையை விட்டுச் சொருகப் போறது நான் தாண்டா” என கருப்புச் சட்டையைப் பார்த்து மேடையிலிருந்தவன் மைக்கின் வழியே கூச்சலிடுகின்றான். கருப்புச் சட்டைக்காரர் ஒரு கணம் துணுக்குற்றுப் போகிறார்; அக்கம் பக்கத்திலிருந்த மக்களோ அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் எவருக்கும் எதிர்த்துக் கேட்கத் தோன்றவில்லை பயம்.
மக்களின் இந்தப் பயமும், ‘நமக்கேன் வம்பு’ என ஒதுங்கிச் செல்லும் குணமும் தான் மேடையில் நின்ற ரவுடியின் மூலதனம். அந்த மூலதனத்தின் விளைவு தான் சிறுகடம்பூர் நந்தினியின் பச்சைப் படுகொலை.
அந்த ரவுடி – ராஜசேகரன். இந்து முன்னணியின் அரியலூர் மாவட்டச் செயலாளர்.
ராஜசேகரனால் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தி.க பிரமுகர் முத்தமிழ்செல்வன் அளித்த புகார் கடிதம்
ராஜசேகரனால் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தி.க பிரமுகர் முத்தமிழ்செல்வனைச் சந்தித்தோம்.
“அவன் மேடையில் பகிரங்கமா கொலை மிரட்டல் விடுத்தது இப்ப ரெண்டு மாசத்துக்குள்ளே நடந்த விசயம் தான். உடனே நான் போலீசிலே புகார் கொடுத்தேன். இப்ப வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லெ” என்றார்.
“அரியலூர் மாவட்டம் திராவிட இயக்கங்கள் வலுவாக இருந்த பகுதி. அப்பேர்பட்ட ஒரு மாவட்டத்தில் இந்து முன்னணி வளர்வதை எப்படி அனுமதித்தீர்கள் தோழர்? ”
“அவனைச் சுற்றி எப்போதும் பத்துப் பதினைந்து ரவுடிகளை வைத்திருப்பான் தோழர். எல்லோரும் இருபதுல இருக்குற இளைஞர்கள். கஞ்சா, சாராயம், விபச்சாரம் என அந்த இளைஞர்களை சீரழித்து வைத்துள்ளான். அவங்களுக்கு எதிரா எங்களால பிரச்சாரம் மட்டும் தான் செய்ய முடிகிறது; இந்து முன்னணிகாரங்களுக்கு போட்டியா நாங்களும் கஞ்சா வாங்கிக் குடுத்து இளைஞர்களை கவர முடியாதே?”
தி.க, முற்போக்கு அமைப்பினர் மட்டுமின்றி பொதுவான வேறு சிலரிடம் பேசிப் பார்த்த போது இந்து முன்னணி அமைப்பைக் கட்டும் ரகசியம் நமக்குப் பிடிபட்டது. இவர்களுக்கு நந்தினியின் கொலையில் மட்டுமின்றி வேறு பல குற்றச் சம்பவங்களிலும் தொடர்பிருப்பதோடு எதிர்காலத்தில் இன்னும் பல கொலைகளையும் கூட்டு வல்லுறவு செய்யும் மிருகங்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள். இவர்களைப் புரிந்து கொள்வதே தமிழ்நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக இந்த பார்ப்பன பயங்கரவாத கும்பலை வேரறுப்பதற்கான முதல் படி.
சுமார் பத்துப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் ராஜசேகரன் ஒரு சில்லரைக் கிரிமினல்; போலீசால் அறியப்பட்ட சிறு ரவுடி. அது தான் அவனது அடையாளம். ஒரு கட்டத்தில் விசாரணை வழக்குகள் அதிகரிக்கவே போலீசுக்கு அஞ்சி ஊரை விட்டு சென்னைக்கு ஓடியிருக்கிறான். ஏ.சி மெக்கானிக் படித்திருந்த ராஜசேகர், சென்னை சிறிய அளவில் குளிர்சாதன இயந்திரங்கள் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளான். அந்த சமயத்தில் அவனுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியின் அறிமுகம் கிடைக்கிறது.
பெரியார் இயக்கங்களின் தாக்கத்தில் இருந்த அரியலூரில் தற்போது அவ்வியக்கங்கள் வீரியமிழந்து போயுள்ளன. அதே போல மார்க்சிய லெனினியப் பாதையிலிருந்து விலகி, குறுக்கு வழி புரட்சிக்கு முயன்ற குழுக்களும், கட்டப்பஞ்சாயத்து குற்றக் கும்பல்களாக சீரழிந்திருந்தன. இதனால் ஏற்பட்ட இடைவெளியில் பாமக வை ஆளும் வர்க்கம் திட்டமிட்டே வளர்த்தது.
இந்து முன்னணி பிரசுரத்தில் மணிகண்டனின் பெயர்.
சாதி அரசியல் இளைஞர்களை கணிசமாக ஈர்த்திருந்தாலும், பெரியார் இயக்கம் மற்றும் இடதுசாரி அரசியல் மரபின் தாக்கம் காரணமாக, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் அரியலூருக்குள் ஊடுருவுவது சவாலாகவே இருந்துள்ளது. இந்த மாவட்டத்தைக் கபளீகரம் செய்யத் தகுந்த தருணத்தையும் தளகர்த்தரையும் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காவிகளுக்கு ராஜசேகரன் பொருத்தமான தேர்வாக தெரிந்ததில் எந்த வியப்புமில்லை.
சென்னையில் தமக்கு அறிமுகமாகும் ராஜசேகரனிடம் அரியலூரில் இயக்கத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்து அவரை ஊருக்கு அனுப்பி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மற்ற கட்சிகளுக்கும் இந்து முன்னணிக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. அங்கெல்லாம் கட்சியில் சேர்ந்து ஒரு ஆளான பின்னர் ரியல் எஸ்டேட், கட்டபஞ்சாயத்து, ரவுடித்தனம் என வளரும் வாய்ப்பு உள்ளது. இந்து முன்னணி மற்றும் சங்க பரிவாரம் சார்ந்த அமைப்புகளில், ஏற்கெனவே தொழில்முறை ரவுடிகளாகவும் கிரிமினல்களாகவும் இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து பதவிகள் வழங்கப்படுகின்றன.
காலித்தனமும் கலவரமும்தான் இங்கே கட்சிப்பணி என்பதால், அதற்குப் பொருத்தமானவர்களை அந்தப் பதவிகளில் அமர்த்துகிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல்.
இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அரியலூர் திரும்பும் ராஜசேகரன் உடனடியாக தனது “கட்சிப் பணி”களைத் துவக்குகிறான். பொன்பரப்பி வட்டாரத்தில் உள்ள இரண்டு கிருஸ்தவ வழிபாட்டு நிலையத்தைத் தாக்கி உடைத்தது மற்றும் இசுலாமிய மசூதிகளில் பாங்கு ஒலிக்க கூடாது என தகராறு செய்தது என தனது பெயரை மக்களிடையே பதிய வைக்கிறான். அதோடு எந்நேரமும் தன்னைச் சுற்றி சில்லறை ரவுடிகள் கொண்ட பட்டாளம் ஒன்றையும் திரட்டுகிறான். இந்த ரவுடிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் தான் நந்திதினியைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்ற மணிகண்டன், மணிவண்ணன் உள்ளிட்டவர்கள்.
தன்னைச் சுற்றி இருந்த கிரிமினல் கும்பலின் பராமரிப்புச் செலவை ராஜசேகரன் ஈடுகட்டியது எப்படி?
சென்னையிலிருந்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கி அரியலூர் திரும்பிய அதே நேரம் அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திரங்களைப் பழுது பார்த்து பராமரிக்கும் காண்டிராக்ட் ஒன்றும் ராஜசேகரனுக்குக் கிடைக்கிறது. தனது நிறுவனங்களின் காண்டிராக்ட் வேலையை ஒரு லோக்கல் ரவுடியை நம்பி டால்மியா கொடுத்ததெப்படி?
அரியலூரியில் இயக்கத்தைக் கட்டும் பொறுப்பை ராஜசேகரனுக்கு வழங்கிய இந்து முன்னணி மாநில தலைமை, டால்மியா நிறுவனங்களின் ஆடிட்டராக உள்ள குருமூர்த்தியின் (துக்ளக் ஆசிரியர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரான சுதேசி ஜாக்ரன் மன்ச்சின் முக்கிய தலைவர்) சிபாரிசு மூலம்தான் டால்மியா காண்டிராக்ட்டை ராஜசேகருக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. இந்த விவரத்தை நாம் சந்தித்த பலரும் கூறினர். பல நிகழ்ச்சிகளில் சங்க பரிவாரத் தலைவர்களுடன் ஒரே மேடையில் ராஜசேகர் பங்கு பெற்றுள்ளதையும் கூறினர்.
குளிர்சாதன இயந்திரங்களின் பராமரிப்பு (AMC) என்கிற பெயரில் மாதம் தோறும் சில லட்ச ரூபாய் வருமானத்துக்கு சங்க பரிவாரத் தலைமை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இது தவிர டால்மியாவில் ஏற்படும் தொழிலாளர் பிரச்சினைகளின் போது தொழிலாளர்களை மிரட்ட ரவுடி கும்பலின் துணை அந்நிறுவனத்திற்கு தேவைப் பட்டுள்ளது – ராஜசேகர் அந்த பணியையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளான் – இதற்காக கிடைக்கும் வருமானம் தனி.
இவ்வாறு ரவுடித் தொழில் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் கிடைக்கும் அளவுக்கு மிஞ்சிய வருமானம் மற்றும், இந்து முன்னணி என்கிற அமைப்பு பலத்தின் துணையோடு காவல் நிலையங்களில் செல்வாக்கை உறுதிப் படுத்திக் கொள்வதன் மூலம் தனது ரவுடித்தனத்துக்கு கிடைக்கும் பாதுகாப்பு ஆகியவற்றின் துணையோடு தான் அரியலூரில் இந்து முன்னணியை கட்டியுள்ளான் ராஜசேகர். கடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்ட பொன்பரப்பி வட்டாரத்தில் இந்தாண்டு ஐம்பதுக்கும் அதிகமான சிலைகளை ராஜசேகர் நிறுவியுள்ளான்.
டால்மியாவில் வேலை வாங்கிக் கொடுப்பதாக இளைஞர்களை வசியப்படுத்தும் ராஜசேகர், தன்னுடைய வட்டத்துக்குள் அவர்கள் வந்த பின் சொந்த செலவில் கஞ்சா, சாராயம் என ஏற்பாடு செய்து கொடுத்து சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளான். நந்தினி கொல்லப்படுவதற்கு சில வாரங்கள் முன் ஆசிரியர் ஒருவரை இரவில் மறித்து தோளில் வெட்டி வழிப்பறி செய்துள்ளது மணிகண்டன், மணிவண்ணன், மணிமொழி, வெற்றிச் செல்வன், திருமுருகன் உள்ளிட்ட இந்து முன்னணி கும்பல்.
சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் பொன்பரப்பியைச் சேர்ந்த வன்னிய சாதிப் பெண் ஒருவரை இந்த கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளது. பின்னர் இது ஊர் பஞ்சாயத்தில் விவகாரமான போது ராஜசேகரே தலையிட்டு பஞ்சாயத்து பேசியுள்ளான். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு விசயத்தை அப்படியே அமுக்கியுள்ளனர்.
ராஜசேகரையும், மணிகண்டனையும் கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட சுவரொட்டி
ராஜசேகரின் துணையும் இந்து முன்னணி என்கிற அமைப்பின் பின்னணியும் தமக்கிருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம், எவரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்கிற துணிவு செந்துறை இந்து முன்னணி குண்டர்களுக்கு பிறந்துள்ளது.
எந்நேரமும் வேலை வெட்டியில்லாமல் ஊருக்குள் மைனர் தனம் செய்து திரிந்த இந்த கும்பலுக்கென்று பொன்பரப்பியில் ஒரு அறையை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்துள்ளான் ராஜசேகர். வெறும் முன்னூறு ரூபாய் வாடகைக்குப் பெறுமானமுள்ள அந்த வீட்டுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகையாக கொடுக்கப்படுகின்றது. பொன்பரப்பி வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் சிலரிடம் இந்த வீட்டில் இருப்பவர்கள் பற்றியும் அவர்களது செயல்பாடு பற்றியும் விசாரித்தோம். நாங்கள் கேட்ட அனைவருமே ஏதாவது உண்மையைச் சொன்னால் தங்களுக்கு ஆபத்து வந்து விடும் என அஞ்சினர். பெயர் வெளியிடப்படாது என்கிற உத்திரவாதத்தின் பேரில் சிலர் பேச முன்வந்தனர்.
சிறீரங்கத்தைச் சேர்ந்த குணா என்கிற குணசேகரனும் ராஜா என்பவரும் இந்து முன்னணியில் முழு நேர ஊழியர்களாக அந்த வீட்டில் தங்கியிருப்பதாகச் சொன்ன பகுதி மக்கள், நந்தினியை கொன்ற மணிகண்டனும், மணிவண்ணனும் அந்த வீட்டுக்கு தினசரி வந்து போவார்கள் என்றும் தெரிவித்தனர். அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் சிலிண்டர்களைத் திருடி விற்பது, பகுதியில் உள்ள ஆடுகளைத் திருடி அடித்துத் தின்பது என சில்லறைத் திருட்டுக்களை செய்வதோடு எந்நேரமும் கஞ்சா போதையில் இவர்கள் திளைத்துக் கிடந்துள்ளனர்.
மேலும், கஞ்சா போதையோடு இரவு நேரங்களில் விலைமாதர்களை அழைத்து வந்து இரவு முழுவதும் கொட்டமடித்துள்ளனர். இவர்களுக்காக ராஜசேகரே அரியலூரில் இருந்து விலைமாதர்களை தனது வெள்ளை நிற ஜைலோ காரில் அழைத்து வருவதுண்டு என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்களின் அருவெறுப்பான செயல்களில் மக்கள் ஆத்திரமுற்று இருந்தாலும், எதிர்த்துக் கேட்டால் நம்மை ஏதும் செய்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றனர்.
நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்ட காட்சிகளைக் காணொளியாக கண்ட போது நமது நெஞ்சே அடைத்துக் கொண்டது. ஒரு மனிதனால் இந்தளவுக்கு விகாரமாக கொலை செய்ய முடியுமா என திகைத்துப் போனோம். தன்னால் கருவுற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை நண்பனோடு சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து அவளது பிறப்புறுப்பைச் சிதைத்துக் கொல்வதை ஒரு ‘மனிதனால்’ செய்ய முடியும் என்பதைக் கண்ட போது விக்கித்துப் போனோம்.
கடந்த ஓராண்டாக ராஜசேகரின் ரவுடிப் படையிலும் இந்து முன்னணியிலும் முக்கிய தளபதியாக செயல்பட்டதே மணிகண்டனுக்கு அத்தனை கொடூரமாக நந்தினியை கொல்லும் வெறியை வழங்கியுள்ளது. மத்தியில் தமது சக அமைப்பு அதிகாரத்தில் இருக்கும் தெனாவெட்டு, போலீசின் துணை, பணம், இந்து அமைப்பின் பின்னணி, சாதித் திமிர் ஆகிய அனைத்தும் சேர்ந்து சில்லறைக் காலிகளாக இருந்த இவர்களை கொலை வெறியர்களாக்கியுள்ளது.
சிதைந்த நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படும் நந்தினியின் உடல்
நந்தினியைக் கொன்ற பின் அவளது உடலை ஒரு வெள்ளை எஸ்.யூ.வி மாடல் காரில் போட்டுத் தூக்கி வந்து தான் கிணற்றில் போட்டுள்ளான் மணிகண்டன். ராஜசேகரைத் தவிர மணிகண்டனுக்கு அறிமுகமான வேறு எவரிடமும் அந்த ரக கார் இல்லை என்பதை எமது விசாரணைகளில் உறுதிப்படுத்திக் கொண்டோம். நந்தினி கொலை விவகாரத்தின் பின்னுள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வர போராடி வரும் சமூக ஆர்வலர்கள் ராஜசேகரின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்திருந்த போதும், இதுவரை அவனை அழைத்து விசாரிக்க மறுத்து வருகிறது காவல் துறை.
ஏற்கனவே பொன்பரப்பியில் நடந்த பாலியல் வல்லுறவு விவகரத்தை பணத்தால் அடித்து தீர்த்தது போல் நந்தினியின் குடும்பத்தாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என ராஜசேகர் கணக்குப் போட்டுள்ளான். ஏழைகள் தானே பணத்தை விட்டெறிந்து விடலாம் மிஞ்சிப் போனால் தனது இந்து முன்னணி செல்வாக்கை கொண்டு சமாளித்து விடலாம் என ராஜசேகர் கணக்குப் போட்டிருக்கிறான்.
நந்தினியின் கொலையில் நேரடியாக தொடர்புடைய மணிகண்டனையும் அவனது கூட்டாளிகளையும் தற்போது கைது செய்துள்ளது காவல்துறை. ஆனால், இந்தக் கொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட ராஜசேகரோ வெளியில் சுதந்திரமாக நடமாடுவதோடு மணிகண்டனைப் போன்ற கொலைகாரப் பட்டாளம் ஒன்றையும் உடன் அழைத்துக் கொண்டு திரிகிறான். நந்தினிக்கும் பொன்பரப்பியைச் சேர்ந்த அந்த பெயர் தெரியாத பெண்ணுக்கும் நேர்ந்த கொடுமைகள் வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாதெனில் உடனடியாக இந்த கும்பலைக் கைது செய்து உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை.
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து ஜனவரி 14-ம் தேதி சிறியளவில் துவங்கிய போராட்டம் ஒரே வாரத்தில் தமிழகத்தின் வீதியெங்கும் மாபெரும் மக்கள் எழுச்சியாக வளர்ந்துள்ளது. மெரினா கடற்கரையிலும் தமிழகமெங்கும் இரவு பகலாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போராடினர். ஆண்களும் பெண்களும் பெருமளவில் குழுமியிருந்தாலும் ஒரே ஒரு சந்தர்பத்தில் கூட எவ்வித பாலியல் சீண்டல்களுக்கும் பெண்கள் ஆளாகவில்லை என்பதை அகில இந்திய அளவில் ஊடகங்கள் ஆச்சர்யமாக குறிப்பிடுகின்றன – இது தமிழகம் பெற்ற கவுரவம். அதே ஜனவரி 14-ம் தேதி தான் நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது அரியலூரில் உள்ள சிறுகடம்பூர் என்கிற குக்கிராமத்தில் உள்ள பெண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத அசம்பாவிதம் அல்ல. இது தமிழகத்தின் அவமானம்.
2002 குஜராத் இனப்படுகொலையின்போது கவுசர் பீ என்ற இசுலாமியப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அதே கொடுமையைத்தான் நந்தினி என்ற “இந்து” பெண்ணுக்கும் இழைத்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள். ஆர்.எஸ்.எஸ் ஒழுக்கசீலர் சண்முகநாதனிடம் கவர்னர் மாளிகை இருந்ததால் அவர் பாழுங்கிணற்றைத் தேடி அலையவில்லை. மணிகண்டன் சண்முகநாதனைப் போல இன்னும் வளரவில்லையாதலால், குற்றத்தை மறைக்க அவனுக்கு ஒரு பாழுங்கிணறு தேவைப்பட்டிருக்கிறது.
சங்க பரிவாரத்தின் விஷக் கொடுக்குகளைக் கிள்ளியெறியும் மாபெரும் வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது.
பாஜக பாசிஸ்டுகள் இசுலாமியர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் இனிமேலாவது சிந்திக்கவேண்டும். ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் ஒரு முடிவுக்கு வந்த பின் நாம் காளைகளின் கொம்பைப் பிடிக்கச் செல்ல வேண்டியதில்லை; சங்க பரிவாரத்தின் விஷக் கொடுக்குகளைக் கிள்ளியெறியும் மாபெரும் வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது.
அந்தக் கடமையை நிறைவேற்றுவீர்களா என்று நம்மைக் கேட்கிறாள் நந்தினி.
இவர்தான் ‘வீரமரணம்’ அடைந்த திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் மாரிமுத்து!
டாடா சுமோ, ஸ்கார்பியோ, ரியல் எஸ்டேட் கட்டப் பஞ்சாயத்து, மினிஸ்டர் காட்டன் சட்டை, ராமராஜ் ’ஒட்டிக்கோ கட்டிக்கோ’ வெல்குரோவ் வேட்டி, சட்டைப் பையில் தெரியும் படி சின்னம்மா அல்லது அய்யா அல்லது தளபதி அல்லது எழுச்சித் தமிழர் மற்றும் இதர ‘தலை’களின் புகைப்படம், கூலிக் கொலைகள், சாக்கடை காண்டிராக்ட், பொதுக் கழிப்பறை காண்டிராக்டு, சைக்கிள் ஸ்டேண்ட் காண்டிராக்ட், சினிமாவுக்கு பைனான்ஸ், கமிசன், லஞ்சம், கழுத்தில் தங்கத்தில் தாம்புக்கயிறு, பத்து விரல் தங்க மோதிரங்கள், டாஸ்மாக் மதுவறை கமிசன், ஸ்கார்பியோவின் டாஷ்போர்டில் பாரின் சரக்கு பாட்டில், பியர் தொப்பை, சுற்றிலும் பத்து எடுப்புகள் மற்றும் ஊருக்கு ரெண்டு தொடுப்புகள், இரண்டு பெரிய வீடுகள், மூன்று சின்ன வீடுகள், நான்கு சின்னஞ்சிறு வீடுகள் போதாக்குறைக்கு மார்கெட் போன நடிகைகளின் தொடர்பு…..
நீங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு முழி பிதுங்குவது தெரிகிறது. ஆனால் வேறு வழியில்லை; சாக்கடையைப் புரிந்து கொள்ளாமல் அடைப்பெடுப்பது சாத்தியமா என்ன? போகட்டும் – பொது நலன் கருதி பட்டியலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.
மேற்படி வாழ்க்கையை நீங்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் வட்டச் செயலாளர் வண்டு முருகன்களில் இருந்து மாவட்டங்கள் வரைக்கும் பார்க்கலாம்; தனித் திறமையைப் பொறுத்து பட்டியலில் உள்ளவை கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளில் கீழ் நிலை தொண்டனாகச் சேர்ந்து சின்னச் சின்னக் கிரிமினல் வேலைகள் பார்த்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி மேற்கண்டபடி செட்டிலாவதற்கு எப்படியும் சிலபல ஆண்டுகள் ஆகிவிடும்.
ஆனால், அரசியலில் ‘உழைக்காமலேயே’ இந்த மேன்மையை அடையும் வாய்ப்பை இந்தியாவில் ஒரு கட்சிதான் வழங்குகின்றது – அது தான் பாரதிய ஜனதா கட்சி. மற்ற கட்சிகளில் சேர்ந்து சில ஆண்டுகளில் கெட்டுச் சீரழிந்து வாழ்க்கையில் முன்னேறும் வாய்ப்பு உள்ளதென்றால் பாரதிய ஜனதாவோ நேரடியாகவே குற்றக்கும்பல்களில் இடம்பெற்றிருப்போரை மாபெரும் தகுதியாக நிர்ணயித்து சேர்த்துக் கொள்கிறது.
கள்ளக்காதலை இஸ்லாமிய பயங்கரவாதமாக மாற்றுகிறார், முரளிதர் ராவ்! அதன்படி கள்ளக்காதலர்கள் அனைவரும் பாஜகவில் சேர்ந்தால் பாதுகாப்பு கிடைக்குமோ?
தயவு செய்து இந்தக் கட்டுரை மோடியைப் பற்றியது என்று நீங்கள் தவறாக நினைக்க கூடாது – இக்கட்டுரை ஸ்ரீமான் மாரிமுத்துவைப் பற்றியது. இவரும் முன்னவரைப் போல் இந்துக்களின் போர்வாளாக இருந்து சமீபத்தில் ‘வீரமரணம்’ அடைந்துள்ளார். இருப்பினும் இக்கட்டுரையில் மோடி வருகிறார். காரணம் நாமல்ல!
கள்ளக்காதல் தற்கொலையை முஸ்லீம்கள் செய்த கொலையாக மாற்ற மோடியின் படமும், பிஞ்ச செருப்பும் போதுமாம்!
மாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள். காவல்துறை வந்து பார்த்த போது பிணத்தின் வாயில் துணி திணிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்தது. பக்கத்திலேயே ஒரு அட்டையில் 1,2,3,4,5 என எண்கள் எழுதப்பட்டு அதில் 3-ம் எண் அடிக்கப்பட்டிருந்தது – அதாவது, மாரிமுத்து மூன்றாவது பலி; மேலும் சில பலிகள் இருக்கும் என போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாம்.
முக்கியமாக பிணத்துக்கு பக்கத்திலேயே மோடியின் படம் ஒன்று வைக்கப்பட்டு அதன் மேல் செருப்பு மாலை போடப்பட்டிருந்தது – ஒரு தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டிருந்தது.
காவி கும்பலுக்கு இது போதுமே. உடனடியாக திருப்பூரில் ஒரு கலவர நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரமாக இருந்த அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள் – ஜல்லிக்கட்டு பின்னுக்குப் போய் டெல்லிக்கட்டு முன்னுக்கு வந்திருந்த நாட்கள் அவை. தமிழ்ச் சமூகத்தின் மேல் பார்ப்பனியத்தின் கலாச்சாரத்தை வலிந்து திணிக்கும் இந்துத்துவ செயல்திட்டத்தை ‘ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு’ என்கிற குறியீட்டின் மூலம் தமிழர்கள் எதிர்த்தார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக வீதிகளில் எழுந்த பேரெழுச்சி இயல்பாகவே இந்துத்துவ எதிர்ப்புடன் கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நிலையில் அதை மத ரீதியில் பிளவு படுத்த ஹெச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் தலைமையில் இந்துத்துவ கும்பல் படாதபாடுபட்டது. என்றாலும் அவர்களின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிந்த தமிழ் மக்கள், அந்த முயற்சிகள் ஒவ்வொன்றையும் எள்ளி நகையாடினர்.
போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்ட படம் ஒன்றை பகிர்ந்த ஹெச்.ராஜா, இசுலாமியர்கள் பின்லேடன் படம் அச்சிட்ட இருசக்கர வாகனத்தில் வந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கொளுத்திப் போட்டார். சமூக வலைத்தள மக்களோ, அந்தப் படம் மெரினாவிலேயே எடுக்கப்பட்டதில்லை என்று நிரூபித்தார்கள். பாரதிய ஜனதா மதக் கலவரங்களைத் தின்று வளரும் கட்சியென்பதும், அது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி பரந்துபட்ட மக்களுக்கே எதிரானது என்றும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியிருந்த நிலையில் தான் மாரிமுத்து ‘வீரமரணம்’ அடைகிறார்.
இந்தப் பின்புலத்தில் இந்துத்துவ கும்பல் மாரிமுத்துவின் பிணத்தைக் காட்டி கலவரத்தைத் தூண்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள் அத்தனையும் கருவிலேயே சிதைந்து போயின. இதற்கிடையே விசாரணையைத் துவக்கியிருந்த போலீசாருக்கு, மாரிமுத்து மரணமும் அவரது பிணம் கிடந்த இடத்தைச் சுற்றி தூவி விடப்பட்டிருந்த ‘தடயங்களும்’ தங்களது என்கவுண்டர் திரைக்கதைகளை விட ஏராளமான பொத்தல்களோடு இருப்பது உறுத்தியிருக்க வேண்டும்.
ஒருவனைக் கொன்றதோடு, சிரமப்பட்டு மரத்தில் ஏறி கயிறு கட்டி தூக்கில் தொங்குவது போல் செட்டப் செய்வதைக் கூட புரிந்து கொள்ள முடியும் – ஆனால், வேலை மெனக்கெட்டு அட்டையில் நெம்பர்களை எழுதுவதும், எங்கிருந்தோ மோடியின் படத்தைப் பீறாய்ந்து வந்து அதற்கு செருப்பு மாலை போட்டு (பிய்ந்த செருப்புகளை எத்தனை பேர், எத்தனை இடங்களில் தேடியிருக்க வேண்டும்?), தேசியக் கொடியை தலைகீழாக வேறு பறக்க விட்டுச் செல்வதென்றால் – வந்தவர்கள் கொலைகாரர்களா அல்லது சங்க பரிவாரத்திற்கு திரைக்கதை எழுதும் அறிஞர் பெருமக்களா?
இந்த அடிப்படை சந்தேகங்களெல்லாம் எலியளவு மூளை இருந்தால் எழுந்திருக்கும் – பாரதிய ஜனதா தலைவர்களுக்கு அந்தக் கொடுப்பினையும் இல்லை என்பதால் மாரிமுத்துவும் சாவுச் செய்தி கேட்டதும் இசுலாமிய ’தீவிரவாதிகளுக்கும்’ ‘தேசவிரோத சக்திகளுக்கும்’ எதிராக கம்பு சுற்றத் துவங்கி விட்டனர். தமிழ்நாட்டு பாரதிய ஜனதா பஜனை கோஸ்டியிலேயே வித்தியாசமாக கூவும் திறன் ‘அக்கா’ வானதி சீனிவாசனுக்கு இருப்பதால் அவரது கூவல் மட்டும் ஒரு தினுசாக இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும் – கீழே உள்ள படங்கள் ‘அக்கா’ விட்ட சவுண்டிலிருந்து சில உதாரணத்துக்காக.
மாரிமுத்துவுக்க்கா பொங்கிய வானதி சீனிவாசன்!
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்த செய்தி வந்துள்ளது. முதலில் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாரிமுத்துவின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்பதை உறுதி செய்தனர் போலீசார். இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மாரிமுத்துவுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இருந்துள்ளது; இது குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக் காதல் தற்கொலையை மூடி மறைப்பதோடு, கூடவே மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடையவும், பாஜகவினரே மோடி படத்துக்கு செருப்பு மாலை போட்டதும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கப் போகிறது என வதந்தி பரப்பிவிட்டதும் தெரியவந்தது.
கள்ளக்காதல் தற்கொலைக்கு தமிழக சிறப்புக் காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்துவது எப்படி?
இதற்கிடையே தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு திருப்பூர் பகுதியில் கலவரம் நடக்காத நிலையில் ‘வீரமரணம்’ அடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க பொன்னார்ஜி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பொன்னார்ஜி திருப்பூருக்கு வண்டியைப் பிடிக்க கிளம்பிக் கொண்டிருந்த நிலையில் போலீசாரின் விசாரணை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி விட்டதால் தட்கல் டிக்கட் காசை தேசத்துக்காக தியாகம் செய்ய முடிவெடுத்தார் என கமலாலயம் பகுதியில் வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகார் வாட்சப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.
சென்ற வாரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான சண்முகநாதனின் அந்தப்புற லீலைகள் வெளியாக நாடே நாறியது – அதற்குள் ஒரு கள்ளக்காதல் தற்கொலையும் அதைக் கொலையாக மாற்றி கலவரத்தைத் தூண்ட முயற்சித்த தமிழக காவிகளின் இன்னொரு முயற்சியும் அம்பலமாகியுள்ளது.
ஆனாலும் ஒரு விசயத்தை இங்கே ஒப்புக் கொள்ளவேண்டும். கள்ளக்காதல் தெரியவந்ததால் ஊருக்கும், உறவுக்கும் பிரச்சினை என்று முடிவு செய்து மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டார். அப்படி தெரிந்தாலும் நான் யோக்கியன் என்று சங்கராச்சாரி, நித்யானந்தன் போல மூடர்களை நம்ப வைக்க முடியும் என்பதோடு, அந்த நம்பிக்கைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கும் மோடி எனும் இந்துத்துவா செக்யூரிட்டி சர்வீஸ் இருப்பதால் சண்முகநாதன் தற்கொலை செய்யவில்லையோ என்னமோ!
‘‘நமது அரசியல் விமர்சன உலகம் அவரைப் பற்றி எதிர்மறையாகவே அதிகம் பேசியிருக்கிறது. ஆனால், அவரது மிக முக்கியமான சில பங்களிப்புகளையும் நாம் பேச வேண்டும். …. 2009 ஈழ இனப் படுகொலைக்குப் பிறகு ஈழம் தொடர்பான விவகாரங்களில் ஜெயலலிதா வழக்கத்துக்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்து ஆச்சரியப்படுத்தினார்….. டெல்லியைநோக்கிச்சவாலானஒருபார்வையைவீசியதிலும், நீமகாராஜாஎன்றால், நான்மகாராணிஎன்றுஅட்டகாசமாகச்சிரிப்பதிலும், பலமாநிலமுதல்வர்களிடையே,மற்றபலதமிழகமுதல்வர்கள்உட்பட,அவர் வித்தியாசப்பட்டுதான்இருந்தார்என்பதைஉறுதியாகச்சொல்லமுடியும்’’ எனக் குறிப்பிடுகிறார், இடதுசாரி எழுத்தாளர் ஆழி.செந்தில்நாதன்.
1993−இல் காவிரி நதி நீர்ப் பிரச்சினையையொட்டி ஜெயா நடத்திய உண்ணாவிரத அரசியல்.
ஜெயாவைப் படிப்பாளி, தைரியசாலி, சிறந்த நிர்வாகி எனப் புகழுவதைவிட அருவருப்பு நிறைந்தது அவரை ஈழத் தாயாக, மாநில உரிமைப் போராளியாகத் துதிப்பது. ஜெயாவை, அ.தி.மு.க. அடிமைக் கூட்டம் தமிழகத்தின் அம்மாவாக முன்னிறுத்தியது என்றால், பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், சீமான், வை.கோ., உள்ளிட்ட தமிழின பிழைப்புவாதக் கூட்டம்தான் ஜெயாவை, ஈழத் தாயாகத் தூக்கி நிறுத்தியது.
ஜெயாவின் கடந்த கால ஈழ எதிர்ப்பு, புலி எதிர்ப்பு அரசியல் பற்றியோ, ‘‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’’ என ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்களை ஜெயா நியாயப்படுத்தியதையோ தமிழினவாதிகள் சட்டை செய்யவில்லை. தி.மு.க.−காங்கிரசு கூட்டணியைத் தோற்கடிக்கும் அரசியல் நோக்கத்திற்காக, ‘‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என நாக்கூசாத புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தினார்கள், அவர்கள்.
மூவர் தூக்கு தண்டனை மற்றும் எழுவர் விடுதலை விவகாரங்களில் ஜெயா தமிழின உணர்வோ அல்லது கருணை உணர்வோ உந்தப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினைகளில் தமிழகம் தழுவிய எழுந்த ஆதரவைத் தனது அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நெருங்கி வந்த நேரத்தில் தமிழகத்தின் மாணவர்களும், வழக்குரைஞர்களும் அவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய அளவில் கிளர்ச்சியில் இறங்கினர். தமிழக மக்களின் அரசியல் உணர்வே அக்கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதை இந்திய ஆளும் வர்க்கமும் உணர்ந்து கொண்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை அளித்துவிடும் என உறுதியானவுடன்தான், அம்மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரும் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார், ஜெயா.
ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு அருகிலுள்ள சிறுகளஞ்சி கிராமத்தில் கெயில் குழாய்களைப் பதிப்பதற்காக இறக்கிவிடப்பட்ட போலீசு பட்டாளம்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இச்சமயத்தில் வெளிவந்தது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட ஜெயா, அம்மூவர் உள்ளிட்டு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய இருப்பதாகவும், மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்கத் தவறினால், அவர்களைத் தமிழக அரசு விடுவித்துவிடும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது, ஈழத்தில் பொது வாக்கெடுப்பது நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஒரு காகிதம் என்பதற்கு மேல் வேறு எந்த மதிப்பையும் இத்தீர்மானத்திற்கு மைய அரசு தரப் போவதில்லை எனத் தெரிந்தும், அத்தீர்மானத்தை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விடப்பட்ட சவாலைப் போல முறுக்கேற்றினார்கள் தமிழினவாதிகள். இந்த பில்ட்−அப் அவர்களின் நேர்மையின்மையை மட்டும் காட்டவில்லை. தமது சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டி, செயலூக்கமிக்க போராட்டங்களை நடத்த முடியாமல், ஜெயாவின் முந்தானைக்குப் பின்னே மறைந்து கொள்ளும் அவர்களின் அரசியல் ஓட்டாண்டித்தனத்தையும் எடுத்துக் காட்டியது.
ஜெயாவின் திடீர் ஈழ ஆதரவை இந்தப் பின்னணியிலிருந்துதான் மதிப்பிட வேண்டும். சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிப்பட்ட மோசடியோ, அதற்கு இணையானது ஜெயாவின் ஈழத் தாய் அவதாரம். ஈழ ஆதரவு, ஈழ எதிர்ப்பு இரண்டையுமே தனது சுயநல அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தத் தயங்காதவர்தான் ஜெயா.
கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வந்த மீனவர்கள், கிராம மக்கள் மீது அம்மா போலீசு நடத்திய வன்முறைத் தாக்குதல்.
1989−இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசை, அப்பொழுது நடந்த பத்மநாபா கொலையைக் காரணமாக வைத்து, புலி பீதியூட்டி, மைய அரசைப் பயன்படுத்திக் கலைக்கச் செய்தவர்தான் ஜெயா.
1991, மே மாதத்தில் ராஜீவ் கொலைக்குப் பிறகு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்பொழுது, அக்கொலையில் தி.மு.க.விற்கும் பங்குண்டு என அபாண்டமாகப் பழிபோட்டும், ஈழ எதிர்ப்பு அரசியலை முன்னிலைப்படுத்தியும், ராஜீவ் கொலை அனுதாப அலையைப் பயன்படுத்தியும் ஆட்சியைப் பிடித்தார், ஜெயா. அதன் பிறகு, ஈழ ஆதரவு, தமிழின ஆதரவு கருத்துக்களைக்கூடப் பேச முடியாதபடி தடா சட்டத்தை ஏவி, பயங்கரவாத ஆட்சியை நடத்தினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதற்கு இரங்கற்பா எழுதிய கருணாநிதியைச் சாடியும், நளினிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த தி.மு.க. அரசை எதிர்த்தும், நோய்வாய்ப்பட்டிருந்த தனது தந்தையைப் பார்க்க தனக்கு பரோல் வழங்குமாறு நளினி கோரியதை ஏற்க மறுத்தும் ஈழ எதிர்ப்பு, புலி எதிர்ப்பு அரசியலை நடத்திவந்த ஜெயாவை ஈழத் தாய் எனத் துதிப்பது, அவரது ஊழல், கிரிமினல் குற்றங்களை மறைப்பதைவிட ஆபத்தானது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல நடித்த ஜெயா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு, போராடிய மக்கள் மீது போலீசு அடக்குமுறையை ஏவிவிட்டதோடு, தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடுத்தார்.
விளைநிலங்களில் கெயில் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய மேற்கு மாவட்ட விவசாயிகள் மீது போலீசை ஏவிவிட்ட ஜெயாதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அக்குழாய் பதிப்பிற்குத் தடை போட்டார். அந்தத் தடையை உச்சநீதி மன்றம் ரத்து செய்துவிடும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாத விசயமல்ல. இப்பொழுது அதுதான் நடந்திருக்கிறது.
மூவர் தூக்கு தண்டனை மற்றும் எழுவர் விடுதலை விவகாரங்களில் ஜெயா தமிழின உணர்வோ அல்லது கருணை உணர்வோ உந்தப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினைகளில் தமிழகம் தழுவிய எழுந்த ஆதரவைத் தனது அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.
69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவந்த ஜெயாதான், அரசுப் பணிகளுக்கு ஆளெடுப்புத் தடைச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இட ஒதுக்கீடின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை, தி.மு.க. அரசு நியமித்தது என்ற ஒரே காரணத்திற்காக, ஒரேயொரு கையெழுத்து மூலம் வேலையை விட்டுத் தூக்கியடித்தார்.
தனது சுயநல அரசியல் இலாபத்திற்காக, எந்த எல்லை வரையும் செல்லக் கூடியவர்தான் ஜெயா. அவரது திடீர் ஈழ ஆதரவு, ஜி.எஸ்.டி. எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாடுகளின் பின்னே மறைந்துள்ள இந்தக் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, ‘‘அவரது இந்த நிலைப்பாடுகளில் சந்தர்ப்பவாதம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனாலும், செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறியவர்களுக்கு மத்தியில், தன் எல்லைக்குட்பட்ட அளவிலேனும் தைரியமாகச் செய்ய முன்வந்த ஒருவரை நாம் எப்படிக் குறைத்து மதிப்பிடுவது’’ என வலிந்து எழுதி ஜெயாவிற்கு முட்டுக் கொடுக்கிறார், ஆழி.செந்தில்நாதன்.
இந்த வாதம் நரகலில் நல்லரிசி தேடச் சொல்லும் மோசடி. மேலும், செத்துப் போன பிறகும்கூட, ஜெயாவை விமர்சித்து எழுதாமல் பூசி மெழுகும் தமிழகத்து அறிவுஜீவிகளின் ‘‘துணிவையும்’’ பறைசாற்றுகிறது.
மெரினாவில் அமைதி போராட்டத்தை கலவரமாக்கிய
போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்! கைது செய்!
சென்னை, குமணன்சாவடியில் 30.01.17 – மாலை 4 மணிக்கு மக்கள் அதிகாரத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிமிடம் முதல் போலீசு தனது கெடுமிடியைத் தொடங்கியது. மக்கள் யாரையும் கூட்டத்திற்குள் அனுமதிக்கவே கூடாது என்பதிலும் கூட்டத்தை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்று டார்ச்சர் செய்வதையுமே வேலையாகக் கொண்டு இருந்தது. முன்தினம் ஆர்ப்பாட்ட இடத்தில் வைத்த இரண்டு பிளக்ஸ் பேனர்களை இரவோடு இரவோடு பிய்த்து எறிந்துவிட்டது. கொடி கட்டக்கூடாது. மேடையெல்லாம் போட கூடாது. மைக் செட் வைக்க கூடாது என எதாவது சொல்லி கொண்டேயிருந்தது.
இதை தாண்டியும் பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வந்தனர். பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வர கூடாது என போலீசு தடுத்தது. தோழர்கள் பேசி வர வைத்த போது, நாளைக்கு பள்ளிக்கு வா! போட்டோ எடுத்துள்ளேன், தொலைத்து விடுவேன் என்று போலீசு மிரட்டியது. எங்களிடம் உன் பாச்சாவெல்லாம் செல்லாது என உற்சாகமான மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்தது குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் என்பதால் பேருந்து நிலையத்தில் அதிகமான மக்கள் நின்று கவனித்தனர். வாகனங்களில் செல்பவர்கள் நின்று கேட்டுவிட்டு சென்றனர். கடை வீதி என்பதால் வியாபாரிகள், பொது மக்கள் என பலர் கவனித்தனர். போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! அனைவரையும் நின்று கவனிக்க வைத்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமை உரையில் மெரினா கடற்கரையில் மாணவர்களின் போராட்டத்தை எப்படி அரசு ஒடுக்குகிறது என்பதுதான் முக்கியம் .போராடிய பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. ஓடி தஞ்சம் புகுந்த வீடுகளை உடைத்து போலீசு தாக்கியது. எதிரி நாட்டு படைகள், ஊருக்குள் புகுந்ததைப்போல போலீசு அட்டூழியம் செய்தது. போலீசு கேட்கிறது “மக்களும் தான் எங்களை தாக்கினர்” அதற்காக எங்களைப் பற்றி பேச மாட்டீர்களா? என்று கேட்கின்றனர். மக்கள் போலீசை தாக்கியது என்பது தற்காப்பு தாக்குதல் தான். காவல்துறையை சேர்ந்தவர்களே உங்களை உங்கள் மேல் அதிகாரி தாக்க சொன்னால் எங்கள் சகோதர சகோதரிகளை அடிக்க முடியாது என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
கார்த்திகேயன் – மக்கள் கலை இலக்கிய கழகம்
முத்துகுமார் தீக்குளிப்பின் போது மாணவர்கள் திரண்டனர். நாங்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம். மீண்டும் 2017 ஜனவரியின் போது மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்டம், காவிரிப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை பற்றிய போராட்டமாக மாறியது. மக்களுக்கு போலீசு மீது எப்போதுமே பயம் இல்லை. திருடனை விட பெரிய திருடன் போலீசு தான். மெரினாவில் நடந்த போராட்டத்தில் போலீசு ஒன்றும் மாணவர்களை பாதுகாக்கவில்லை. இளைஞர்கள், முஸ்லீம்கள், மாணவர்கள் தான் செயின் போட்டு போராடியவர்களை பாதுகாத்தனர். விவேகானந்தர் மண்டபத்தில் உட்கார்ந்து போராடியவர்களுக்கு மக்கள் கொண்டு வந்த கொடுத்த சாப்பாடு, பிஸ்கட்டை பிடுங்கி தின்றவர்கள் தான் இந்த போலீசு.
சிங்கம் 3 படம் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. போலீசு பற்றி மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். இப்போ வெளிவந்தால் படம் ஊத்திக்கும் என்று தள்ளி போட்டுள்ளனர். ஒரு போலீசு அடிவாங்கியதை போல அவர்களே ரெடி செய்து வாட்ஸ்அப் பில் அனுப்புகின்றனர். இது பற்றி அந்த போலீசே இது ஓவர் தான் என்கிறார். இனி போலீசு ராஜ்ஜியத்தை ஒழித்து மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் .
அஜிதா – பெண்கள் விடுதலை முன்னணி – இணை செயலாளர், சென்னை
மெரினா கடற்கரையில் நடந்த மாணவர், மக்கள் போராட்டம், திறந்தவெளி பல்கலை கழகம் போல இருந்தது. கற்கவும் கற்றுக் கொடுக்கவும் முடிந்தது. இளைஞர்கள்தான் இந்த போராட்டத்தில் பெண்களை பாதுகாத்தனர். ஒரு பெண், முகம் தெரியாத நபருக்கு தனது போர்வையை போர்த்தினார். போராட்டம் நடந்த ஆறு நாட்களுக்கு போலீசு இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். 7 வது நாள் அவிழ்த்து விடப்பட்ட வெறிநாயைப் போல போலீசுகாரர்கள் மக்களை அடித்தனர். போலீசு மட்டுமல்ல இந்த அரசே நமக்கு தேவை இல்லை என்பதை இச்சம்பவங்களே உணர்த்துகின்றன
பி. சுகுமார் – சி.பி.ஐ – மாநில குழு உறுப்பினர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
போலீசை கண்டித்து இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சமூகத்தில் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. காவிரி, பணமதிப்பிழப்பு நீக்கம், வேலையில்லா திண்டாட்டம் வரை நாம் போராடிய வேண்டிய பிரச்சனை நீள்கிறது.
காக்கிச்சட்டை அணிவதற்கு முன்பு மனிதர்களாகத்தான் உள்ளனர், அணிந்த பின்பு தான் மாறுகின்றனர். திருமண வீட்டில் சீப்பை ஒளித்து விட்டால், திருமணம் நின்றுவிடும் என்று நினைத்தது போலீசு.
இது தை மாதம் நடந்ததால் இது “தை புரட்சி” . மாணவர்கள் போராட்டத்தை வேவு பார்த்தது போலீசு. 10 லட்சம் பேர் மெரினாவில் போராடினார்கள். ஒரு கோடி பேர் தமிழகம் முழுவதும் போராடினார்கள்.
தனது மகன், தனது அண்ணன், தனது பேரன் என்றுதான் தமிழக மக்கள் அடிப்பட்டவர்களுக்காக போலீசை எதிர்த்து போராடினார்கள். இந்த போராட்டத்தில் சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, எவ்வித வேறுபாடும் இல்லை. 200 பேரை கைது செய்தது போலீசு, ஆனால் 47 பேர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மீதி பேர்கள் எங்கே? அவர்கள் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பிரின்ஸ் என்னரசு பெரியார் – திராவிடர் கழகம், மாநில இளைஞரணி செயலர்
என்னதான் அமைதிப்போராட்டமாக இருந்தாலும், ஒரு ஸ்டண்ட் சீன் இல்லையானால் முழுமைபெறாது என்று போலீசு மக்களை அடித்தது. போராட்டம் என்பது ஜாலியாக இருக்காது அடிதடியாக தான் இருக்கும் என மாணவர்களுக்கு பாடம் கற்பித்த போலீசுக்கு நன்றி. போலீசு இரண்டு காமிராக்களை வைத்து வீடியோ எடுக்கின்றது. ஆனால் 1000 கேமாராக்கள் அவர்களை வீடியோ எடுத்தது அவர்களுக்கு தெரியாது. போலீஸ்காரர்கள் மனநோயாளியை போல இரவில் பார்த்த வாகனகளையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதை இரண்டு பெண்கள் மாடியில் இருந்து படம் பிடித்தார்கள். இப்படிதான் பலர் போலீசின் அட்டூழியங்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்தனர்.
இன்று தோழர் என்று சொன்னால் பிரச்சனையா? சாதி, மதம், இனம் கடந்தது தோழர் என்ற வார்த்தை. பெரியார் ரஷ்யாவிற்கு சென்று திரும்பிய போது திரு என்று அழைப்பதற்கு பதிலாக அனைவரையும் தோழர் என்று அழைக்க சொன்னார்.
கருப்பு சட்டை எங்கள் பக்கம், சிகப்பு சட்டை எங்கள் பக்கம், காக்கி சட்டை எங்கள் பக்கம் என கோஷம் போட்டவர்களை தான் அடித்தது போலீசு. இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமா? இல்லை. தண்ணீர் எப்படி 100 டிகிரி கொதிநிலையில் ஆவியாகுமோ? அதுபோல 100-வது டிகிரியாக ஜல்லிக்கட்டு பிரச்சனை. யார் சமூக விரோதி? ஆரியமே சமூகம், ஆரியர்களே மக்கள் என்றால், நாங்கள் சமூக விரோதிகள் தான். மக்கள் போராட்டம் ஒன்றே அனைத்துக்கும் தீர்வு என்று பேசினார்.
முனுசாமி – சி.பி.ஐ(எம்.எல்) – மாநிலக் குழு உறுப்பினர்.
மெரினாவில் போலீசு நடத்திய வன்முறைக்குப் பின்னரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராடிய மக்கள் மீது போலீசு அடக்குமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை மக்கள் போராட்டத்தின் மூலம் தான் வெல்ல முடியும்.
ராஜூ – மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர்
போராடுபவர்களை போலீசு தாக்குவது புதிதல்ல. வழக்கறிஞர்கள் போராட்டத்தில் நீதிமன்றத்திலேயே ஆறுமுகம் என்ற நீதிபதியை அடித்தனர். உன்னை பார்த்தால் நீதிபதி மாதிரி தெரிவில்லையே என்று கூறி போலீசு நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் அடித்தது. போலீசை பற்றி நாம் சொல்வது வேறு, போலீசே தன்னை நல்லவன் என்று சொல்வதில்லை. சிங்கம் சூர்யா போல ,வேட்டையாடு விளையாடு கமல் போல போலீசு ரொம்ப நல்லவன் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? இந்த குமணன்சாவடி எஸ்.பி ரொம்ப நல்லவர் லஞ்சம் வாங்க மாட்டாரு என்று நாம் சொன்னால் மக்கள் நம்புவார்களா?
ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு என்று மெரினாவில் திரண்டது மாணவர் படை. இடதுசாரிகளை விட மாணவர்கள், இளைஞர்கள் தான் மோடியை பற்றி அதிகம் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஏன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் கீழடியில் தொல்லியல் ஆய்வுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
பிழைப்பு தேடி ஆந்திராவிற்கு போகிறவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள், டெல்லிக்கு போகிறவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள். கேரளாவிற்கு போகிறவர்கள் மலையாளம் பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் யாருக்காவது பேச தெரியுமா? சொல்லி கொடுக்க கூடாது என்று வைத்துள்ளான். நம்மவர்கள் இரண்டு வார்த்தை மட்டும் சுவாகா, நமகா மட்டும் கற்றுள்ளனர். இந்த புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருததிற்கு பல கோடி ஒதுக்கீடு. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
போலீசை ஏவியது தமிழ்நாடு அரசு அல்ல, மோடி அரசு தான். இங்கு மக்களின் கொந்தளிப்பை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் ஒரு மாணவனை சுற்றி எல்லா பாதுகாப்போடும் உள்ள அதிரடிப்படை போலீசு தாக்குகிறது. ஒரு மீனவ பெண் கேட்கிறார். “உனக்கு தைரியமிருந்தால் ஒண்டிக்கு ஒண்டி வாடா” என்கிறார். பத்து பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரமா? கோழைத்தனம்.
“தோழர் என்று பேசினால் போனை கட் செய்து விடுங்கள்” என்று கோவை கமிஷனர் பேசுகிறார். போலீசு பயிற்சியில் இது தான் கற்று தருகிறார்களா? இல்லை இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தான் கற்று தர படுகிறது. எல்லாரும் சமம். போலீசை எதிர்த்து போராடினாலும் அனுமதி தரவேண்டும் என்று தான் சட்டத்தில் உள்ளது. அது தான் ஜனநாயகம். யாரோ பின்லேடன் படத்தை வைத்திருந்தார், ஜனவரி 26-ஐ கருப்பு நாளாக அனுசரிப்போம் என அட்டை வைத்திருந்தனர் என கூறி மக்கள் அனைவரையும் அடிப்பதற்கு போலீசு காரணம் கூறுகிறது.
போலீசை கண்டு அஞ்சி போராட்டம் ஓயாது. அது நெருப்பை பொட்டலம் கட்டுவதைப் போல கொள்கைக்காக போராடுபவர்களை கூலிக்காக அடிப்பவர்களால் ஒடுக்க முடியாது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், சென்னை. தொடர்புக்கு : 91768 01656.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் :
ஓரவஞ்சனையை எதிர்க்கும்-உரிமைகளை மீட்கும் குறியீடு !
மக்களை சாதி, மதமாக பிளவுபடுத்தும் சதிகள் முறியடிப்பு!
அன்புடையீர் வணக்கம்!
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது. ஜனவரி 23 தொடங்கிய போலீசாரின் வன்முறை வெறியாட்டம் இன்று வரை தொடர்கிறது. சென்னை, மதுரை, கோவையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டு அடித்து சித்ரவதைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசின் தாக்குதலுக்காளான நூற்றுக்கணக்கானோர் தலைமறைவாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த வீட்டிற்கு வராமல் அச்சத்தில் வெளியில் இருக்கின்றனர்.
மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்தரவு, போலீசை கண்டித்து போஸ்டர் ஒட்டத்தடை, போலீசை கண்டித்து பேச தடை, பிரச்சாரம் செய்தால் பொய் வழக்கில் சிறை, என காவல் துறையின் அடக்குமுறை இன்று வரை தொடர்கிறது. ஏன் இந்த வன்மம்?.
தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படுவதற்கு எதிராக குமுறிக்கொண்டிருந்த மக்கள் ஜல்லிக்கட்டில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் மெரினாவில் அலைகடலென திரண்டனர். திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, கோவை, என தமிழகம் முழுவதும் மக்கள் பல வடிவங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வேறுவழியின்றி ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
“மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் தோற்று விட்டீர்கள். யாருடைய வக்குறுதிகளையும் நம்ப மாட்டோம். நாங்களே பார்த்து கொள்கிறோம், அரசியல் கட்சிகள் வேண்டாம், எந்த தலைவரும் வேண்டாம் என” மாணவர்களும், இளைஞர்களும், உறுதியாக போராடினர். ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதோ, அலைக்கழிப்பதோ, ஏமாற்றுவதோ மத்திய மாநில அரசுகளுக்கு இனி சாத்தியமில்லை என்ற நிலையால் ஐந்தாண்டுகளாக இழுத்தடித்த பிரச்சினை 5 நாட்களில் முடிந்தது.
காவிரி நீர் மறுப்பு, மீத்தேன், அணு உலை, கெயில் குழாய் பதிப்பு. புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு, தமிழக மீனவர் பிரச்சினை , விவசாயிகள் சாவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், என அனைத்திலும் டெல்லி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் பங்கேற்ற வரலாற்றுப் போராட்டமாக மாறியது. போலீசு தலையீடின்றி மெரினாவில் பெரும் மக்கள் திரள் தன்னைத்தானே ஒழுங்குபடுத்தி கொண்டு ஏழுநாட்கள் போராடியது, உலகமே உற்றுப்பார்க்க முன்னேறியது. தமிழகத்தின் ஒட்டு மொத்த சமூகமும் அணிவகுத்தது. இதுதான் மக்கள் அதிகாரம்.
இந்த அரசு அமைப்புகளை நம்பி, பின் தொடர்ந்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஏனென்றால் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தான் வகுத்த சட்டங்களை, கொள்கைகளை தானே ஏற்று அமுல்படுத்த முடியாமல் நெருக்கடியில் சிக்கியதுடன் ஆளும் அருகதையை இழந்து விட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக தமிழக வணிகர் சங்கங்கள் மார்ச் மாதம் முதல் கோக், பெப்சி விற்க மாட்டோம் என அறிவித்திருக்கிறார்கள். மாணவர்கள் புறக்கணிப்பால் பல பள்ளி, கல்லூரிகளில் கோக் பெப்சி விற்பது நின்று போயுள்ளது.
தலையாரி முதல் தலைமைச்செயலாளர் வரை கிரிமினல்மயமாக, ஊழல்மயமாக மக்கள் விரோதமாக மாறியதை நாள்தோறும் வெளிவரும் செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டே இருக்கின்றன. கல்வித்துறை முதல் கலால் துறை வரை பல துறைச் செயலாளர்கள் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவால் நியமிக்கப் பட்டவர்கள். துறைவாரியாக மொத்தமாக வசூல் செய்து போயசுக்கு கொடுத்தவர்கள். இந்த அரசே சட்ட விரோதமானது. ஷீலா பால கிருஷ்ணன், ராமாநுஜம் போன்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளால் சட்டப்புறம்பாக வெளி அதிகார மையத்தால் நடத்தபட்டு வருகிறது.
எங்கே போய் சொல்வது? யாரிடம் சொல்வது? என மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் வரிசையாக தீர்க்கப்படாமல் முற்றிய நிலையில் நிற்கின்றன. அதன் குறியீடாகவே ஜல்லிகட்டு போராட்டம் வெடித்தது. சாதி மத பேதங்கள் கடந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்படுத்திய போராட்டத்தின் அழகை, ஆசிட் ஊற்றி சிதைத்துவிட்டது தமிழக காவல் துறை.
மெரினாவில் போலீசு தாக்குதலுக்கு காரணம் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் என சொல்லப்படுகிறது. அலங்காநல்லூரிலும், தமுக்கத்திலும், கோவையிலும் நடத்திய தாக்குதலுக்கு என்ன காரணம்? காளைக்கான இத்தகைய அமைதிப் போராட்டம், நாளை காவிரிக்கான போராட்டத்திலும் தொடரக்கூடாது என்பதுதான் அரசின் அச்சம், பீதி. ஜனவரி 23 அன்று போலீசார் நடத்திய வன்முறை தாக்குதலின் நோக்கம் முக்கியமானது.
போலீசின் தாக்குதல், ரப்பர் குண்டு, கல்வீச்சு, கண்ணீர் புகை, தீ வைப்பு, சித்ரவதை, சிறை, என்ற சுவடுகளும் மக்கள் மனதில் ஆறாத ரனமாக இருக்க வேண்டும். இத்தகைய அடக்கு முறைகளை உலகமே பார்க்க வேண்டும். அப்போதுதான் போலீசின் மீதான அச்சம் பொது மக்களுக்கு இருக்கும். போலீசு பார்க்காத விசாரணை கமிசனா? “எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் போலீசு தயவில்லாமல் ஆள முடியாது.” என்று கடந்த காலங்களில் குற்றம் செய்த போலீசார் யாரும் எதற்கும் தண்டிக்கபட்டது இல்லை.
மோடி அரசின் நோக்கங்களை நிறைவேற்றவே, தமிழக காவல் துறை வன்முறையை நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தில் காக்கி உடையில் காவி புகுந்து விட்டது என்பதை காவல் துறை அதிகாரிகளின் பேச்சுக்களும் உறுதி செய்கின்றன. மாநில உரிமைகளுக்கான போராட்டமாக ஜல்லிகட்டில் வெடித்தது. சாதி மத பாகுபாட்டை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி.யின் சதி தோல்வி அடைந்தது. தமிழர் பண்பாட்டை அழிக்க முயல்வது. இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டது, மாநிலம் முழுவதும் மோடியை கடுமையாக விமர்சிக்கபட்டது என அனைத்திலும் டெல்லி மோடி அரசுக்கு எதிராக நடந்தது. இந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி ஊடுருவி ஒன்றும் செய்ய முடியவில்லை. பழி தீர்க்கவே காவல் துறையை கூலிப்பைடையாக ஏவி தமிழக மக்களை தாக்கியுள்ளது.
அரசின் கொள்கை முடிவுகளில் அரசியல் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்க விடாமல், இந்த அமைப்பு முறை முற்றிலும் புறக்கணித்து வெறும் பார்வையாளர்களாக, வாக்காளர்களாக மட்டுமே வைத்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக மட்டுமல்ல, தார்மீக ரீதியில்கூட மக்களை கட்டுப்படுத்தும் அருகதையை இழந்து விட்டன. அதிகார வர்க்கமும், போலீசும் மக்களுக்கு தேவையற்றதாக மாறியதுடன் எதிராகவும் மாறிவிட்டது என்பதை மீண்டும் மெரினா போரட்டத்தில் போலீசு நிருபித்து உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக மாற்றியதற்கு அரசும், காவல் துறையும்தான் காரணம், பொறுப்பு. நீதிவிசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்த போலீசார் தண்டிக்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் கைதானவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். காயம் பட்டவர்களுக்கும் உடமைகளை இழந்தவர்களுக்கும் உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக முதல்வரும், காவல்துறையும் பெரும் திரளான மக்கள் அமைதியாக போராடியதை மதித்து போற்றி பாதுகாக்காமல் பின்லேடன் படம், தனித் தமிழ்நாடு என ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை காட்டி பொய் பிரச்சாரம் செய்வது, சமூக விரோதிகள் என பொதுவாக சொல்லி சில அமைப்புகள் பெயரை கசியவிட்டு பழிபோடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஜனநாயக விரோதமாக சென்னையில் பல இடங்களில் போடப்பட்ட144 தடையுத்திரவை நீக்குவதோடு, காவல்துறையின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு, நிவாரணம் கேட்டு நடைபெறும் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொது கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க கூடாது.
முதல்வர் அறிவித்துள்ள விசாரணை கமிசன் என்பது போதாது, குற்றம் செய்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். கலவரத்தில் சம்பத்தப்பட்ட உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஆதரவளித்த மீனவர்கள் என பலரையும் பழி தீர்க்கும் போலீசின் அடக்கு முறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.
பங்கேற்பாளர்
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
தோழர்.த.கணேசன்,மாநிலஒருங்கிணைப்பாளர்,பு.மா.இ.மு.
வழக்கறிஞர்.சரவணன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம். சென்னை.
தோழர்.கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு. ஐ.டி.ஊழியர்கள் பிரிவு.
திரு. வாசுதேவன், மாணவர். பச்சையப்பன் கல்லூரி.
தோழமையுடன்
வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் 20.01.2017 அன்று பதவியேற்றார். ஒரு அதிபர் பதவியேற்றபோது, அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடந்திருப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.
பதவியேற்ற ஒரு வாரத்திலேயே 7 நாடுகளைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற இசுலாமியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்று திமிர்த்தனமான அறிவிப்பையும், கூடவே 120 நாட்களுக்கு எந்த அகதிகளும் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு ஐரோப்பா உள்ளிட்ட ஒட்டுமொத்த நாடுகளின் எதிர்ப்பையும் விலையில்லாமலேயே வாங்கிக் கட்டிக்கொண்டார். போதாத குறைக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் டிரம்பின் அறிவிப்புக்குத் தடைவிதித்து விட்டது.
இதுகுறித்த கேலிச்சித்திரங்கள்….
இசுலாமியருக்கெதிரான அமெரிக்க அதிபர் டிரம்பின் இனவெறி அறிவிப்பால் தலைதாழ்ந்து நிற்கும் சுதந்திரதேவி சிலை.
நான் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறேன் – ஒரு மிருகத்தின் வாக்குமூலம்
சாகச வீரன் சூப்பர்மேன், டிரம்பிடமிருந்து சுதந்திர தேவியைக் காக்க முயல்கிறார்
சுதந்திர தேவியின் சிலையை, தன்னுடைய ஆசான் ஹிட்லர் போன்று மாற்ற முயற்சிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஒருமைப்பாடு குறித்து சொந்த மக்களையே அச்சுறுத்தும் டிரம்ப்
இசுலாமியர் வெறுப்பைத் தூண்டுவது, எங்கள் அமைப்பை வளர்க்க மிக்க உதவி செய்யும் என டிரம்பிற்கு நன்றி கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்.
இனவெறி, மதவெறியின் ஊற்று டிரம்ப் என்பதை விளக்கும் டவர்
ஹிட்லர் வேறு வடிவில் வந்துவிட்டான் டிரம்பாக…..
டிரம்ப் டவர்..இங்கே இசுலாமியர்களுக்கு அனுமதி கிடையாது
இசுலாமியருக்கு இங்கே பாதுகாப்பில்லை…எனவே தான் இந்த அறிவிப்பு…
வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் ! – பாடல்
மெரினாவில் சில நூறு பேருடன் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகத்தின் பல லட்சம் மக்களை இணைத்து மோடிக்கு எதிரான டெல்லிக்கட்டாக மாறியது. தமிழக மக்கள் மத்தியில் குமைந்து கொண்டிருந்த காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மீனவர் பிரச்சினை, சமஸ்கிருதத் திணிப்பு, பணமதிப்பழிப்பு, நீட் தேர்வு, பொங்கலுக்கு விடுமுறை ரத்து என அனைத்துப் பிரச்சினைகளையும் ஜல்லிக்கட்டு போராட்டம் இணைத்தது. மக்களின் வலிமையை அவர்களுக்கே உணர்த்தியது.
ஒரு வாரம் பிரதமர், முதல்வர், கமிஷ்னர் என யாருடைய அதிகாரமும் இங்கு செல்லாது எனக் காட்டியது இந்தப் போராட்டம். இனியும் இதை அனுமதித்தால் மக்களின் அதிகாரமே நிரந்தரமாகி விடும் என அஞ்சிய அரசு தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. நேற்று வரை நண்பன் போல வேசமிட்ட காவல்துறை 23.01.2017 அன்று தனது அரிதாரத்தைக் கலைத்து, உண்மையான கொடூரமான முகத்தை வெளிப்படுத்தியது.
மாணவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தது. தாக்குதலில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு அடைக்கலம் தந்த மீனவ மக்களை நொறுக்கியது. கண்ணில்பட்ட அனைவரையும், அனைத்தையும் வெறிநாய் போலக் குதற ஆரம்பித்தது. ஆனாலும் அவற்றைத் தாண்டி மீனவ மக்ககள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது போராடியவர்களைக் காத்து நின்றனர்.
இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.
வருவோம் மீண்டும் வருவோம் ! மெரினாவில் மீண்டும் எழுவோம் !
பாடல் வரிகள்
வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் !
எழுந்து நின்றது தமிழகம் – இது
இளமை ஈன்றதோர் புதுயுகம்
எங்கள் பெண்ணின் முகம் முழுதும் ரத்தம்
பணியாமல் நின்றதா குற்றம்
பார் கண்ணைப் பார் அதில் தெரிகிறதா துளி அச்சம்
கணக்கு இருக்கிறது இன்னும் மிச்சம் (வருவோம்)
எரித்தது நீ ! உடைத்தது நீ – தமிழ்ப்
பெண்ணின் கருவினை சிதைத்தது நீ!
எரிகிறது தமிழ் பூமி – சொல்
யாரடா தேசத் துரோகி? (வருவோம்)
எங்கள் உயிர் காக்க உங்களைத் தந்த
மீனவ உறவே வருவோம்
கடலின் விளிம்பிலே தவித்த எங்களைக் – கரை
சேர்த்த சொந்தமே வருவோம் (வருவோம்)
அடித்தாலும் அடங்காது இது வேற தமிழ்நாடு
அலங்கா நல்லூ…ரு இனி இல்லை.. உன்னோடு
நின்றது பார் சென்னை
ஓட விட்டது பார் உன்னை
பத்து பேர் நீங்கள் பத்து பேர் – எங்கள்
ஒற்றை மாணவன் உனக்கு நேர். (வருவோம்)
பார் உன்னைப் பார்
குடிகள் இல்லாத குடியரசு – வெறும்
தடிகளே உனது அணிவகுப்பு
மின்னும் மீண்டும் மின்னும் மெரினாவின்
மின்மினிகள் மின்னும் (வருவோம்)
வருவோம்…மீண்டும் வருவோம்
மெரினாவில் மீண்டும் எழுவோம்! – ம.க.இ.க பாடல்
தொடர்புக்கு : மக்கள் அதிகாரம்
பாடல், இசை, தயாரிப்பு : மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
சமூக விரோதிகளை போலீஸ் மீனவர் குப்பங்களில் பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள். பல உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை பார்த்து உலகமே சிலாகித்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறப்பான சில யோசனைகள் காவல்துறை நண்பர்களுக்காக:
பெயர் பேட்ஜ், தோள் பட்டை நட்சத்திரங்களை ஒளித்து வைத்த சம்யோசிதத்துக்கு பாராட்டுகள். இருந்தும் முகங்கள் தெரிந்து விடுகிறது. ஆதலால், சமூகவிரோதிகளை பிடிக்க செல்லுகையில் முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். நிறைய பாணி முகமூடிகள் இருக்கின்றன. ‘மூடர் கூடம்’ பட குரங்கு குல்லாய் பாணி, மிஷ்கினின் ‘முகமூடி’ பட பாணி, ஆங்கில படம் Dark Knight-ல் வரும் ஜோக்கர் முகமூடி பாணி என! ஆனால், பெயர் பேட்ஜ்கள் ஒளித்து வைப்பவர்கள், காக்கி சட்டை இல்லாமல், வேறு சட்டையில் வந்திருந்தால் எந்த சந்தேகமும் வந்திருக்கிறாதே ! ஏதேனும் சட்ட சிக்கல் இருக்கிறதா என தெரியவில்லை.
சமூக விரோதிகள் வாழும் வீட்டு பெண்களிடம் பேண்ட் ஜிப்பை திறந்து காட்டி இருக்கிறார்கள். அற்புதம். அதற்கு அஞ்சாதவர்கள் எவருமே இருக்க முடியாது. இருப்பினும், தெளிவாக அச்சத்தை உருவாக்க முனையலாம். Pulp Fiction படம் போல் வசனத்திலேயே, அனைத்தையும் பேசி, கூச வைத்து, அதற்கு பிற்பாடு காட்டி ஆண்மையை நிரூபித்தால் இன்னும் dramatic ஆக இருக்கலாம். முக்கியமாக, erectile dysfunction கோளாறு இருக்கிறதா என பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையெனில் American Pie பட காமெடி ஆகிவிடும்.
வெள்ளை பாஸ்பரஸ் உத்தி, கனா கண்டேன் படத்தில் வில்லன் காரை எரிக்க ஸ்ரீகாந்த் பயன்படுத்தும் உத்தி ! சிறப்பு. இந்த மாதிரி out of box thinking-தான் ஸ்காட்லேண்ட் யார்டுக்கு நிகரானோர் என்ற பெருமையை பெற்று தந்திருக்கிறது. க்ளோரின் ட்ரைஃப்ளோரைடு, க்ளோரின் வாயு போன்று இன்னும் பல ரசாயன உத்திகளை கண்டுபிடிக்க பயன்படுத்த முடியும். இப்படியான ஆராய்ச்சிகளுக்கு அரசு தனி இலாகா உருவாக்கலாம். ஹிட்லரே உருவாக்கி இருந்தார். நாம் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம் ?
பேப்பரில் தீயை பற்ற வைத்து ஆட்டோவில் போடுவதும் குடிசையில் போடுவதும் ஓகேதான் எனினும் இன்னும் கொஞ்சம் நவீனம் இருக்கலாம். மலை பிளக்க பயன்படுத்தும் டைனமைட் போன்றவற்றை ஒயர் வழியே பொருத்தி கொளுத்தலாம். குப்பம் வரை சென்று நேரத்தை வீணடிக்க கூட தேவை இல்லை. ஸ்டேஷனில் லேடி கான்ஸ்டபிளிடம் கடலை போட்டபடியே லிவரை அழுத்தினால், குப்பத்தில் மீன் மார்க்கெட்டை துவம்சம் செய்து விடலாம்.
மதுரை போலீஸ், பைப் குண்டு கண்டெடுத்து இருக்கிறார்களாம். கண்டெடுப்பது என முடிவான பிறகு, ஏன் பைப் குண்டு? பிளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் போன்ற நவீன ரகங்களை வைத்து, கண்டெடுக்கலாமே ! ஒரு பசூக்கா, ஷாட் கன், ஸ்னைப்பர் என போர் ஆயுத ரகங்களை கூட கண்டெடுக்கலாம். நம் மக்களை நாமே குறைத்து சொல்லக்கூடாது அல்லவா ?
முக்கியமான விஷயம், பகலில் சமூக விரோதிகளை பிடித்தல் கூடாது. வெளிச்சம், மொபைல் போன் கேமரா என சீக்ரெட் ஆப்பரேஷன் வெளிவந்து விடும். மற்ற சமூக விரோதிகள் உஷாராகி உண்ணாவிரத போராட்டத்துக்கு தயாராகி விடுவர். பதிலாக, சூது கவ்வும் பட என்கவுண்ட்டர் ஸ்பேஷலிஸ்ட், நைட் விஷனை மாட்டி, இருட்டு அறையில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா கூட்டத்தை முரட்டு குத்து குத்துவாரே, அதுபோல் இரவில் சென்று சமூக விரோதிகளை குத்தி கும்மியடிக்கலாம்.
கற்களை எரியும்போது இன்னும் கொஞ்சம் நுணுக்கம் தேவைப்படுகிறது. தூர இருந்து எறிவதால் பேஸ் பவுலிங் வேலைக்கு ஆகாது. ஸ்பின் முயற்சி பண்ணலாம். அதுவும் லெக் ஸ்பின் போடுவது போல், லெக் பக்கத்து க்ரீஸ்ஸில் நுழைந்து, ஆஃப் ஸ்பின் இறக்கினால், பேட்ஸ்மேன் குழம்பிவிடுவார். தலையும் க்ளீன் போல்ட் ஆகும். ஒருவேளை மூளை தெரியும் அளவுக்கு பிளந்து விட்டால் தெர்ட் அம்பையர் டிஸிஷனுக்கு விட்டுவிடலாம். ஜார்ஜும் அமல்ராஜும் பார்த்து கொள்வார்கள்.
கர்ப்பிணிகளை அடிப்பதற்கு முன் ஸ்கேன் ரிசல்ட்ஸ் பார்த்துவிடுவது நல்லது. அப்போதுதான் கர்ப்பத்தின் காலம் தெரிந்து, உயிர் போக வைக்கும் இடத்தை கண்டு சரியாக மிதிக்கலாம். குழந்தையின் உயிர் மட்டும் போவது வீண். தாயின் உயிரையும் சேர்த்து ஒரே மிதியில் போக்குவதுதான் நல்ல போலீஸுக்கு அழகு. ப்ரொமோஷன் சாத்தியங்களை கூட்டும்.
நாம் எதிர்பாராத வகையில் நம் மீதும் கற்கள் எறியப்படலாம். ஆகவே, டாஸ் போடும்போதே பேட்டிங்கா ஃபீல்டிங்கா என சரியாக முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் நம் தலைகள் க்ளீன் போல்ட்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
வாயில் ரத்தம் வந்தால் பற்கள் உடைந்திருக்கலாம். தவடை பெயர்ந்திருக்கலாம். அந்த மாதிரி காயத்தை வைத்து கொண்டு வசன காட்சி ஒளிப்பதிவு செய்ய கூடாது. நம்பகத்தன்மை கெட்டுவிடும். தலை, நெற்றி, கை என வேறு பகுதிகளில் ரத்தம் தடவ வேண்டும். வசனமில்லாமல் வெறும் பெர்ஃபார்மன்ஸ் காட்சி என்றால் வாயில் ரத்தம் வரலாம். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் போல் கையில் கட்டு போட்டுக்கொண்டு ஹார்ட் அட்டாக் என சொல்லக்கூடாது. ‘அவார்டா கொடுக்குறாங்கோ… இப்படி ஆக்ட் பண்றியே’ என கமலை போல் மக்கள் கேட்டுவிடுவார்கள்.
உபரி யோசனை:
சம்பவத்தின்போது ஒரு உளவுத்துறை ‘பி.சி.ஸ்ரீராம்’ அதிகாரி ஹேண்டி கேமுடனேயே ஓடி வந்து கொண்டிருந்தாரே, அவரிடம் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வாங்கி, எடிட் செய்து ஒரு போர்ட்ஃபோலியோ போட்டு கொள்ளலாம். ஆட்சி மாறும்போதோ அல்லது பதவி மாற்றப்படும்போதோ அதை போட்டு நம் பெருமைகளை காட்டி பதவியை தக்க வைத்து கொள்ளலாம்.
இசை தேவைப்பட்டால் ஆதி உதவுவார். ஓண்ணா மண்ணா பழகிட்டு இதை கூட செய்யலேன்னா எப்படி ?
நன்றி :Rajasangeethan John, ஃபேஸ்புக்கில் இருந்து.
***
கடற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கி கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டி கொள்கிறார்கள். அட்டை பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை போட்டு தீ மூட்டுகிறார்கள். இரவு நேர பனியை விரட்டி கொள்கிறார்கள். பல கிலோ மீட்டர்கள் நீண்ட கரையில் பல நூறு பேர் தூங்கி கிடப்பார்கள்.
சேவைசாலைக்கு வந்தால், ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் மைக் பிடித்து பேசி கொண்டிருப்பார். தூக்கம் அப்பினாலும் கூட்டத்தில் இருப்பவர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டிருப்பார்கள். ஆண், பெண், தலைவர், அவர், இவர் என்றெல்லாம் பேதம் இருக்கவில்லை. எவர் வேண்டுமானாலும் மைக் பிடிக்கலாம். பேசியவர்களும் ஜல்லிக்கட்டோடு தங்கள் ஆதங்கத்தை குறுக்கி கொள்ளவில்லை.
காவிரி, கூடங்குளம், நீட் என சமூக ஊடகம்தான் அங்கே மைக்கில் பேசி கொண்டிருந்தது. இந்திய அரசுகளின் தொடர் வஞ்சனை சுட்டி காட்டப்பட்ட போதுதான் கரகோஷம் கொப்பளித்தது. பேசிய எவரும் மேடை பேச்சாளர் இல்லை. அப்படியான பேச்சுகளை பட்டிமன்றங்களிலும் நம் வீட்டு அம்மாக்களிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம். வார்த்தை அலங்காரங்கள் இருக்கவில்லை. உண்மையும் வஞ்சிக்கப்பட்ட கோபமும் மாத்திரம் இருந்தன.
மொத்த நிகழ்வையும் வரலாற்றுடன் பொருத்தி பார்த்து, அரசியல் சாத்தியங்களை அலசும் intellectual brainstorming session-களும் நடந்தன. ஆனால் அவர்களை intellectualகளாக நீங்கள் முன்பு யோசித்திருக்க மாட்டீர்கள்.
நீள முடி வளர்த்து திரியும் ஓர் இளைஞனாகவோ நாடக பட்டறைகளில் நடிக்கும் சமூகத்திலிருந்து துண்டான வேறு தள நபராகவோ பார்த்திருப்பீர்கள். அவர்களும் அங்கேதான் கிடந்தார்கள். நிறைய விவாதித்தார்கள். பேக்குகளை தலைக்கு வைத்து, பெஞ்சுகளில் படுத்து கொண்டார்கள். அங்கு நடக்கும் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து உள்வாங்குவார்கள். சந்தேகமோ முரணோ ஏற்படின் கேள்வி கேட்பார்கள். பல தனி நபர் விவாதங்களை நடந்தன. கருத்துகள் உருவாகின.
கடற்கரைக்கு செல்லும் வழி நெடுக மாணவர்கள், இளைஞர்கள், திருநங்கையர் என பலர் நின்று நெரிசலை கட்டுப்படுத்துவார்கள். அத்தனை நெரிசலிலும் உங்கள் கேள்விகளை செவிமெடுத்து பதிலுரைப்பார்கள். கேள்வி கேட்பவர்களும் எந்தவித கல்மிஷ குறும்பும் இல்லாமல் மதிப்போடுதான் கேள்வி கேட்பார்கள். சம்பந்தமே இல்லாமல் ஒரு குடும்பம் சாலையோரத்தில் நின்றுகொண்டு, வாகனதாரிகளுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி கொண்டிருப்பார்கள். வாகனத்தில் போகிறவரும் தான் குடித்து மிச்ச பாட்டிலை தூக்கி எரியாமல், தண்ணீர் கேட்கும் பக்கத்து வாகன குழந்தைக்கு கொடுப்பார்.
நான்கு முக்கிய குழுக்கள் மைக் பிடித்தன என்றால், இன்னும் பலவை சிறுகூட்டங்களோடு மைக்கில் பேசிக்கொண்டிருந்தன. இன்னும் சிறிய குழுக்கள் பல தங்கள் அளவில் பத்து, பதினைந்து பேராக உட்கார்ந்து கோஷங்கள் எழுப்பி கொண்டிருந்தனர். மாட்டின் மணல் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மனுநீதி சோழனின் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. அரசுகளுக்கு கோரிக்கைகளை கட்டி தொங்கவிடும் மரம் இருந்தது. மைம் ஷோக்கள் நடத்தப்பட்டன. சிலம்பம் ஆடப்பட்டது. ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி கூட்டங்களில் நடனம் நிகழ்ந்தது.
கரையில் எங்கேனும் சென்று புகைபிடிப்போம் என்று நினைத்தவர் கூட அங்கிருந்த கூட்டத்தை கண்டு தயங்கினர். நெரிசலில் நடந்து செல்லும் பல பெண்கள் தெரியாமல் உரசி விட்டாலும் தன்னிச்சையாக ஒதுங்கி வழி விட்டோம். உண்பண்டங்கள் தொடர்ந்து வாகனங்களில் வந்து இறங்கி கொண்டே இருந்தன. சிறுநீர் கழிக்க பொறுமையாய் வரிசைகளில் காத்து நின்றனர். ஒரு குழந்தை தன் தலையில் கொம்புகளை மாட்டி, ‘வேணும் வேணும்.. ஜல்லிக்கட்டு வேணும்’ என முழங்கி கொண்டிருந்தது.
மாவோவின் நெடும்பயணம் படித்திருக்கிறேன். Occupy Wallstreet-ம் கேள்விப்பட்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவை சாத்தியப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் மெரினாவில் சாத்தியப்பட்டிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரங்களும் அரசியல் வரலாற்று வகுப்புகள். பண்பாட்டு நிகழ்வு கொண்டாட்டங்கள். விவாதங்கள். அதிலும் நிலவொளியில் அரசியல் விவாதங்கள் எல்லாம் அத்தனை அழகானவை.
இரவில் திருவிழாக்களுக்கு சென்று, தங்கி, விடிகாலை வேளைகளில் வீட்டுக்கு திரும்பும் ஞாபக மிச்சத்தை மெரினாவில் பிரதியெடுத்து கொண்டிருந்தனர். தங்கள் பணம் தேடும் நுகர்வு வாழ்வுகள், அரசியலிலிருந்தும் சமூகத்திலிருந்தும் என்னதான் அப்புறப்படுத்தியிருந்தாலும், அவற்றை நோக்கி மீண்டும் ஓடிவரும் விழைவு கரையெங்கும் நிரம்பியிருந்தது. நற்சிந்தனையும் ஒழுக்க பண்புகளும் தூக்கி பிடிக்கப்பட்ட இடத்தில் நம் அழுக்கு சிந்தனைகளை ஒதுக்கி நல்லவற்றையே எடுத்து பாவித்தோம். பல தனி விவாதங்களில் நம்மிலிருந்து வேறொரு நம்மை கண்டெடுத்து அடைந்தோம்.
இந்த போராட்டத்துக்கு நமக்கு ஜல்லிக்கட்டு தேவை என்ற கோரிக்கை இருக்க வேண்டியதில்லை. இது ஒரு இயங்குதளம். நீங்களும் நானும் கற்பனையில் விரும்பி யாசிக்கும் ஒரு சமூக தளம். பூம்புகாரின் இந்திரவிழாவை ஒட்டி போராட்டம் நடந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். தவறுகள் நடப்பின் அங்கேயே தட்டி கேட்கப்பட்டன. உணர்த்தப்பட்டன. திட்டம் போட்டு நம்மை வீழ்த்தி, நம் மனங்களுக்குள் இருந்த அறச்சிந்தனையை மழுங்கடித்து, வெற்று மனிதர்களாக மாற்றி போட்ட சமூக போக்குக்கு எதிரான கேவல்தான் இப்போராட்டம்.
தொடங்கப்பட்டபோது கூட இந்த வடிவம் எவருக்கு தோன்றி திட்டமிடப்பட்டிருக்காது. ஆனால், மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிய பின், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வழிகாட்டுதல்களை கொண்டு மட்டுமே இத்தனை நேர்த்தியை, யதேச்சையாக உருவாக்க முடிகிறதெனில், அந்த யதேச்சையை நமக்குள் எங்கோ ஓர் ஓரமாக நாம் பாதுகாத்து வைத்து வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.
அரசை இந்த போராட்டங்கள் அச்சுறுத்தவே செய்யும். வரலாற்றில் இடம்பெறுகிறதோ இல்லையோ ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதோ இல்லையோ நம் அகங்கள் தாங்கி இருக்கும் இனக்குழு வாழ்க்கையின் நினைவை இந்த போராட்டம் மீட்டெடுத்தது. அந்த நினைவை அறிவுதளத்தில் இருந்து விவாதித்து உரிமை பேசினோம். ஒரு போராட்டத்தை அழகிய நினைவாக இப்போது உருவாக்கி கொண்டுவிட்டோம். நினைவு என்பது பல நினைவுகளை தொடர்ந்து உருவாக்க வல்லது.
பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள் அவை!
நன்றி : Rajasangeethan John, ஃபேஸ்புக்கில் இருந்து.
***
காவல்துறை பற்றி சொல்லப்படுவது உண்மை தானா?
ஏதோ ஒன்று உந்தித் தள்ள, இன்று அலுவல் முடிந்ததும் நேராக நடுக்குப்பம் சென்றுவிட்டேன். வெந்து தணிந்த மீன் மார்க்கெட்டை மாநகராட்சியினர் துப்புரவு செய்து கொண்டிருந்தனர். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சிறு குழந்தை கூட சாட்சி கூறுகிறது. போலீசார் தீ வைத்ததை கண்கூடாக பார்த்திருக்கிறார்கள் ரோட்டை ஒட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் பெண்கள். வீட்டுக்கு ஒருவர் தையல் போடுமளவு ரத்த காயத்துடன்.
அன்று நடந்ததை கதை கதையாக சொல்கிறார்கள், அவர்கள். “மெரீனாவில் கூடியிருந்த இளைஞர்களை போலீசார் விரட்டவும், வேறு வழியின்றி நடுக்குப்பம் குடியிருப்பில் தஞ்சம் புகுந்தனர். புரட்சி நடந்த ஒரு வாரமும் எங்களுக்கு எந்த இடையூறும் வராமல், அன்பு காட்டிய அந்த பிள்ளைகள் தலையில் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட அடைக்கலம் கேட்கும் அவர்களை எங்களால் எப்படி வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியும்? அவர்கள் சமூக விரோதிகள் என்றால் திருப்பித் தாக்கியிருக்க மாட்டார்களா? எங்களை நாடி வந்தவர்கள் அனைவரும் ஆறு நாட்களாக அமைதி காத்த இளைஞர்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக எங்களை இழுத்து போட்டு அடித்தார்கள். ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை. அதைக்கூட தாங்கிக் கொண்டோம், கேட்கவே கூசும் வார்த்தைகளால் எங்களை திட்டினார்கள், அது போதாதென்று எங்கள் வாழ்வாதாரத்தையே தீ வைத்து கொளுத்திவிட்டார்களே, இது நியாயமா? ”
எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் மார்க்கெட்
” நாங்கள் அன்றாடம் காய்ச்சிகள். ஊரே கூடி போராட்டம் நடத்தும்போது நாம் எப்படி கடலுக்கு செல்வது என்று போராட்டம் நடந்த ஒரு வாரமும் கடலுக்கு செல்லவில்லை, அதன் பிறகு இன்று வரை எங்கே வெளியில் வந்தால் போலீஸ் பிடித்துவிடுமோ என்று பயந்து வெளியிலேயே வருவதில்லை. யார் வீட்டுக்குள் எப்போது போலீஸ் வருமோ என்று இரவில் கூட பயந்து பயந்து தான் தூங்குகிறோம். எங்கள் பெண்கள் ஒழுங்காக தூங்கி ஒருவாரம் ஆகிறது. ஆண்கள் தூங்காமல் காவல் இருக்கிறார்கள். இப்படியே போனால் எப்படி கடலுக்கு போவது? அடிபட்டு தையல் போடுவதற்கு கையில் இருந்த இரண்டாயிரமும் போய் விட்டது. இனி நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது? ”
” எங்களை விடுங்கள், எங்கள் வீடுகளில் புகுந்து இழுத்துக் கொண்டு போனார்களே, அந்த பிள்ளைகளின் கதி என்ன? இங்கேயே நாயைப் போல அடித்து பாதி உயிராகத் தான் அழைத்துச் சென்றனர். அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது சந்தேகமே. இந்த அடிக்கு பயந்து நிறைய பேர் கடலுக்குள் வேறு இறங்கி விட்டார்கள். தினமும் ஒரு பிணம் கரை ஒதுக்குகிறது. எத்தனை பிள்ளைகள் நீச்சல் தெரியாமல் இறந்து போனார்களோ? ”
” ஒரு பெண் அடைக்கலம் தேடி வீட்டுக் கதவை தட்டினார், அவரது கைகள் நடுங்கிக் கொண்டு இருந்தன. அவர் வெளிநாட்டு நிருபராம். அவருடன் இரண்டு பையன்கள். அம்மா எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா என்று கேட்ட அந்த பெண்ணை எப்படி திருப்பி அனுப்ப முடியும்? அது நம் தமிழர் பண்பாடா? சாப்பாடு கொடுத்ததால் நாங்கள் சமூக விரோதியா? போராடும் பிள்ளைகளை அரவணைத்து பிடித்ததால் நாங்கள் சமூக விரோதியா?”
விடைசொல்ல முடியாத கேள்விகளாக எழுப்பிய அந்த பெண்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட சக்தியற்று விடைபெற்றபோது, ஒரு பெண் சொன்னதைக் கேட்டு அவரைக் கட்டியணைத்துக் கொண்டேன்.
“ஆனால் ஒன்று சொல்கிறோம் கண்ணு, இவ்வளவு நடந்த பிறகும் நாங்கள் சோர்ந்து விட மாட்டோம். அன்று அந்த பிள்ளைகளுக்கு உதவியதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. நம் பண்பாட்டை காப்பாற்ற குரல் கொடுத்த மாணவர்களுக்கு உதவியதை பெருமையாகவே நினைக்கிறோம். இப்போதும் எங்களுக்கு உதவி செய்ய மாணவர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் தான் பிரச்சனை ஏற்படும் என்று அவர்களை திரும்பி போகச் சொல்கிறோம். எங்கள் கையில் உழைப்பு இருக்கும் வரை எந்த குறையும் இல்லை. நாங்கள் சோர்ந்து விட மாட்டோம் ”
அணைப்பிலிருந்து விடுபடும் போது குலுங்கி அழுது கொண்டிருந்தேன் நான், “இந்த கள்ளம் கபடமற்ற மக்களையா சமூக விரோதிகள் என்று தாக்கிக்கொண்டிருக்கிறீர்கள், பாவிகளா…. ”
– என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களும் இளைஞர்களும் பெண்களும் ஜனவரி, 2017 மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். விவசாயிகளை நேரடியாக சந்தித்து தங்கள் முழக்கங்களை அவர்களுடையதாக்கினர். நம்முடைய இன்னல்களுக்கெல்லாம் காரணம் இந்த அரசுதான் என்பதை விளக்கினர்.
டெல்டா மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் பம்பரமாய் சுழன்று 50ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசுரங்களை விநியோகித்தனர். மரத்துப் போயிருந்த பலருக்கும் புரிய வைத்தனர். இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் புதிய ரயில் நிலையம் அருகில், 11-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இதில் பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிரம்மாண்டமான இப்போராட்டம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை டெல்டா பற்றியெறியும் என்பதை அறிவிக்கும் விதமாக இருந்தது.
இந்த அரசின் வஞ்சகத்தால் இந்த அரசாங்கத்தினுடைய புறக்கணிப்பால் மாண்டு போன நம்முடைய விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தர்ணாவிற்கு மக்கள் அதிகாரத்தின் தலைமை தாங்கிய மாநில தலைமைக்குழுத் தோழர் காளியப்பன் தனது உரையில் “இந்தியா முழுவதும் விவசாயிகளின் மரணம் பெருமளவில் நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட தமிழகத்தில் மிக விதிவிலக்காக ஒன்றிரண்டு சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதத்தில் தற்கொலைகள் உள்ளிட்டு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். தமிழகம் ஒரு மாபெரும் விவசாய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தினமும் எத்தனை விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை முதன்மை செய்தியாக தாங்கியே நாளிதழ்கள் வெளிவருகின்றன. காவிரி மட்டும் அல்லாது, தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை, கடலூர் தொடங்கி ஓசூர் வரை உள்ள ஒட்டுமொத்த தமிழகத்தில் அனைத்து விவசாயமும் இன்று மாபெரும் அழிவை சந்தித்து வருகிறது.
டெல்டா மாவட்டத்தில் விவசாயம் மட்டுமல்ல, அதுமட்டுமில்லாமல், தென்னை விவசாயம் பாழ்பட்டு போயுள்ளது. மஞ்சள் விவசாயம் கருகிப்போய் உள்ளது. பருத்தி அழிந்திருக்கிறது. கரும்பு காய்ந்து கிடக்கிறது. சோளம், கம்பு, தமிழ்நாட்டினுடைய மொத்த உற்பத்தியும் தேங்கிப்போய் கிடக்கின்றது. ஆனால் இன்று அதிகாரிகள் தெனாவட்டாகவும் திமிராகவும் அறிக்கைவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் கடலூரை சேர்ந்த அமைச்சர் சம்பத் சொல்கிறார், விவசாயிகளுக்கு வயதானதால் தான் இறந்துள்ளனர் யாரும் பிரச்சனையால் சாகவில்லை என்று கூறுகிறார்.
வெள்ளமண்டி நடராஜன் என்றொரு அமைச்சர் சொல்கிறார் வறட்சியால் இன்றைய விவசாயிகள் சாகவில்லை. செத்தவங்கெல்லாம் குடும்ப பிரச்சனையில் அல்லது வயது முதிர்வு காரணமாக செத்து போயிருக்கிறார்கள் என்று மிக அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இறந்து போயிருக்கும் விவசாயிகளுடைய பின்னணியை பார்த்தால் தெரியும் முப்பது வயது விவசாயியும் செத்திருக்கிறார், எழுபது வயது விவசாயியும் செத்துப்போயிருக்கிறார். ஆக எழுபது வயது தாண்டியதாலேயே அவன் செத்து போக வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த அ.இ.அ.தி.மு.க கும்பல் இருக்கிறேதே அதற்கு உழைப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வாழும் ஒரு ஒட்டுண்ணி கூட்டம்.
தோழர் காளியப்பன்
ஆனால் இன்றைக்கும் கிராமத்தில் போய் பாருங்கள் 75 வயதானாலும் காலையில் எழுந்து வயலுக்கு போகும் விவசாயியை நீங்கள் பார்க்க முடியும். விவசாயி சாகும்வரை உழைப்பாளியாக தான் இருக்கிறான். உழைப்பாளியாக இருந்து இந்த சமூகத்திற்கு பலன் அளிக்கிறானே தவிர, இந்த சமூகத்தை உறிஞ்சி வாழ்கின்ற ஒட்டுண்ணியைப் போல, சம்பத்தைப் போல, வீரமணியைப் போல, வெள்ளமண்டி நடராஜனைப் போல ஒட்டுண்ணி போல வாழ்கின்ற வெட்டி கூட்டமல்ல இது. வயதின் முதிர்வு காரணமாக சாவது இயற்கை அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னால் ஜெயலலிதாவும் 68 வயதில் தான் செத்தார். நம்மூரில் 45, 55 வயதில் நிறைய பேர் இறந்துவிடுகின்றனர். ஆக 68 வயது கூட சாகின்ற வயது தான் எதற்கு 150 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் செலவு செய்யவேண்டும். எதற்கு உள்ளூர் மருத்துவர் பத்தாது என்று டெல்லி மருத்துவரை கூப்பிடனும், லண்டனிலிருந்து மருத்துவரை கூப்பிடனும். இதெல்லாம் போதாது என்று சொல்லி கடவுளையே மிரட்டினார்கள் அம்மாவை காப்பாற்றவில்லை என்று சொன்னால் நடப்பதே வேறு என்று. ஆகவே இவர்கள் கொள்ளையடிப்பதற்கு அந்த கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு ஒருவர் நீண்ட நாள் உயிரோடுயிருக்க வேண்டும். ஆனால் இந்த சமூகத்தின் உணவு தேவையை நிறைவு செய்கின்ற இந்த நாட்டு மக்களுக்கு சோறு போடுகின்ற விவசாயி 60 வயதில் 70 வயதில் இறந்தால் அவன் இயற்கையாக செத்து போயிவிட்டான் என்றும் அதை பற்றி கவலைப்படவில்லை என்று பேசுகின்ற ஒரு அமைச்சர், அந்த அமைச்சர் அங்கம் வகிக்கின்ற ஒரு மந்திரிசபை, அந்த மந்திரிசபைக்கு தலைமை வகிக்கின்ற ஒரு கிரிமினல், பொறுக்கி, திருட்டுக்கூட்டம் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
ஆனால் இந்த விவசாயிக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அமைப்புகள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் பல்வேறு விவசாய சங்கங்கள் தோழர் காவிரி தனபால், தோழர் பி.ஆர்.பாண்டியன் இப்படி ஏராளமான கட்சிகளெல்லாம் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக தான். இந்த அரசாங்கமே தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் வறட்சி இருக்கிறதா இல்லையா? விவசாயம் இருக்கிறதா இல்லையா? எந்தளவிற்கு பாழ்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் வருகிறார்கள். தோழர்கள் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அதிகாரிகள் வந்து எப்படி ஆய்வு செய்வார்கள், எப்படி இவர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியும், வருவான் வயலில் கூட இறங்க மாட்டான், வரப்பில் கூட நிற்க மாட்டான். வசதியான சாலையில் உட்கார்ந்திருப்பார்கள் அதிகாரிகள் படைசூழ, வெயில் பட கூடாது என குடை பிடித்திருப்பான். சகல வசதியுடன் எட்டி நின்று பார்த்துவிட்டு ஏதோ அதிகாரிகள் சொல்கின்ற புள்ளி விவரங்களை வைத்து கொண்டு ஒரு கணக்கை சொல்வார்கள்.
தமிழ்நாட்டில் 24லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருக்க கூடிய இந்த டெல்டாவை மூன்று நாள் இரண்டு நாளில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மந்திரி வந்து பார்த்து விட்டு போய் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் குழுவை அமைத்திருக்கிறோம். அந்த குழுவினுடைய அறிக்கை வந்ததற்கு பிறகு நாங்கள் உரிய நிவாரணத்தை பற்றி அறிவிப்போம் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதை நம்பி தான் பி.ஆர். பாண்டியன் போராட்டத்தை கைவிட்டார். ஆனால் 10-ந்தேதி காலையில் அறிக்கை வருவதற்கு முன்னால் நிவாரணம் அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 17 பேருக்கு 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த மூன்று லட்சம் ரூபாயை எப்படி கணக்கு போடுகிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் 3 லட்சம் என்கிறான். 17 பேருக்கு மட்டும் 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு, மற்ற மரணங்களெல்லாம் விவசாயத்தினுடைய இழப்பால் அழிவால் ஏற்பட்டது அல்ல என்று இந்த அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இந்த அரசாங்க அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.
யானை பசிக்கு சோளப்பொறியாக இருக்கிறது. விவசாயம் தான் இப்போதும் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. முதுகெலும்பு முதுகெலும்பு என்று சொல்கிறார்களே, அது வளைந்திருந்தாலும், நெளிந்திருந்தாலும் வயதானாலும், இன்றைக்கும் இந்த நாட்டினுடைய முதுகெலும்பு உற்பத்தினுடைய ஆதாரம், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை விவசாயம் தான். இன்றைக்கும் 60% பேர்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய வேலை வாய்ப்பை, வாழ்வாதாரத்தை தருகின்ற விவசாயத்திற்கு, அவர்கள் நட்டத்தை 5465 ரூ. இந்த அதிகாரிகள் இந்த கணக்கை எப்படி கொண்டுவந்தார்கள். 40, 50 வருடங்களுக்கு முன்னால் ஒரு சூத்திரம் வைத்துள்ளான். இழப்பீடு என்று சொன்னால் எப்படி கணக்கிடுவது என்று ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்த கணக்கை வைத்து கொண்டு இன்று அறிவிக்கிறார்கள்.
ரூ.5,465 நட்டஈடு கொடுக்கிறீர்கள் என்று சொன்னால் விவசாயிகளை பற்றி இந்த அரசாங்கம் என்ன கருத்து வைத்திருக்கிறது. அவர் எப்படி சாப்பிடுவது, 20கிலோ அரிசி கொடுத்தால் சரியாகிவிட்டதா? கடந்த ஒரு வாரத்தில் நம்முடைய தோழர்கள் திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். நான்கு ஏக்கர், ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் விவசாயின் நிலைமை என்ன தெரியுமா ? கௌரவமாக வாழ்கின்ற ஒரு விவசாய குடும்பத்து பெண்மணி சொல்கிறார், எல்லாம் போச்சு வழியே இல்லை. ஒரே வழி தான் இருக்கிறது பிச்சையெடுப்பது தான் ஒரே வழி. பிச்சையெடுக்க கூட நாங்கள் தயார். போடுவதற்கு யாரும் தயாராக இல்லை. இப்படி ஒரு குரலை டெல்டா மாவட்டத்தில் ஒரு பெண் சொல்கிறார் என்றால் அதை விட இந்த தேசத்திற்கு அவமானம் எதுவும் கிடையாது. இந்த ஆட்சியாளர்கள் நாக்கை பிடிங்கி கொண்டு சாக வேண்டும். விவசாயிகளின் துயரம் இவ்வளவு கொடூரமானது என்று எவனுக்காவது தெரியுமா? விவசாயியை போய் பார்த்தால் தான் தெரியும், அவனிடம் போய் கேட்டால் தான் தெரியும்.
விவசாய குடும்பத்தில் ஒரு பெண் சொல்கிறார், வீட்டில் காசு இல்லை, கணவரிடம் கேட்டால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவேன் என்கிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு விவசாய குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் புருஷனுக்கு சோறு போடணும், வயதான மாமியார் மாமனாருக்கு சோறு போடணும், எல்லா பொறுப்பும் அந்த பெண்ணுக்கு இருக்கு. அந்த பெண்ணுக்கு வருமானம் கிடையாது. கணவனுடைய வருமானம் தான் புருஷனிடம் காசு கேட்டால் நீ என்னிடம் காசு கேட்டால் நான் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்கிறான்.
பதினேழு பேருக்கு மூன்று லட்சம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறாரே, குடும்ப செலவுக்கு பணம் கேட்டால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவேன் என்று மிரட்டும் கணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சாகாமல் ஏன் இருக்கிறார்கள் என்பது தான் பன்னீர்செல்வத்தின் கேள்வி. இப்படி மக்கள் விரோத கேடுக்கெட்ட ஒரு அரசாங்கம் இன்று நமக்கு ஆட்சியாளர்கள் என்ற பெயரால் நம்மை ஏறி மிதித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயி அறுவடை முடியும் வரை அவனுடைய அன்றாட செலவுகளுக்கும் கடன் வாங்குகின்றான். விவசாயத்திற்கு கடன் வாங்கியது போக, சோத்திற்கு கடன் வாங்கி இரண்டிற்கும் சேர்ந்து, இன்னும் 6 மாதத்திற்கு கடன் வாங்கி தான் செலவழிக்க வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் நம் நாட்டில் ஒரு பண்பாடு வளர்க்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் அடித்து விட்டு கையில் காசு கொடுத்தால் சகித்து கொள்வோம். ஆகவே இந்த மக்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப எளிதான வழி, அவர்களுக்கு அப்போதைக்கு அப்போது வாய்க்கரிசி போட்டால், தீனி போட்டால் போதும் அந்த தீனியை ஒரு நாள் மென்றுவிட்டு அடுத்த நாள் துயரத்தை செக்குமாடு போல் சந்தித்து வாழ்க்கையை இழுத்து கொண்டு போய்விடலாம். என்று ஒரு மந்த நிலைக்கு இந்த சமுதாயத்தை இந்த அரசாங்கங்கள் தள்ளுயிருக்கின்றன. சுயமரியாதை உணர்வு சுத்தமாக இல்லாமல் காசு கொடுத்தால் எவ்வளவு ஓட்டு வேண்டுமானாலும் வாங்கலாம். காசு இருக்கிறவன் அவன் கொள்ளையடித்தாலும் சரி ஊர் தாலியை அறுத்தாலும் சரி தமிழ்நாட்டில் கல்வி வள்ளல், ஆன்மிக செம்மல், அரசியல் வழிக்காட்டி எல்லாம் களவாணி பயலாக இருக்கிறான். அவர்கள் பின்னால் ஒரு கும்பல். தமிழ்நாட்டின் கேடுகெட்ட அரசியல் எதை காட்டுகிறது என்று சொன்னால். தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா? என்று ஒரு காலத்தில் பாட்டு பாடினான். இன்று தமிழன் என்று சொல்ல முடியவில்லை. குறிப்பாக அ.தி.மு.க அரசியலை பார்த்து வெளி மாநிலங்களில் நம்மை காரி துப்புகிறார்கள்.
ஜெயலலிதா மரணமடைந்த உடனேயே தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் அவரை புனிதவதியாக மாற்றிவிட்டார்கள். ஒரு மாபெரும் வீராங்கனை போல, துணிச்சலாக மத்திய அரசை எதிர்த்து நிற்றவர் போல, சாதாரண மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதில் ஒரு முன்னோடியை போல புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஒன்றரை கோடி பேர்களை அடிமுட்டாளாக, அடிமைகளாக பொறுக்கி எடுத்து உறுப்பினராக சேர்த்திருக்கிற ஒரே கட்சி அண்ணா தி.மு.க தான். தமிழ்நாட்டிற்கு ஒரு சனியன் தொலைந்தது அவ்வளவுதான். ஒரு பீடை ஒழிந்தது என்று இருக்கும் போது சசிகலா என்னும் இன்னொரு பீடையை கொண்டு வந்து வைக்கிறான். அம்மா நீங்க தான் தலைமை ஏற்கனும். இந்த கழகத்தை காப்பாற்ற அம்மா தான் வரணும். சசிகலாவை தியாகியாக மாற்றுகிறார்கள். ஊர் முழுக்க தியாகி தியாகி என எழுதி வைக்கிறான். யார் தியாகி என்று நமக்கு தெரியவில்லை. நடராஜனா, சசிகலாவா? ஆகவே இரண்டு பேருமே தியாகிகள்தான். சசிகலாவை தியாகம் செய்ததால் நடராஜன் தியாகி, நடராஜனை தியாகம் செய்ததால் சசிகலா தியாகி. இப்படி ஒரு மானங்கெட்ட நாடு உலகில் எங்காவது இருக்குமா?
தமிழ்நாட்டின் சீரழிந்த இந்த பண்பாடு, தமிழ்நாட்டின் உண்மையான பிரச்சனை என்ன, விவசாயிகள் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்களே, இந்த நாட்டின் தொழிற்துறை முடங்கி போயிருக்கிறதே ! அரசு என்பது ஒன்று இல்லாமல் போய் அரசு என்பதே குற்ற கும்பலாக மாறி போயிருக்கிறதே. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை பற்றி சிந்தித்து பார்ப்பதை, பேசுவதை, விவாதிப்பதை விட்டுவிட்டார்கள். என்ன ஆனது இந்த தமிழகத்திற்கு ? ஆகவே நாம் கவலைப்பட வேண்டியது நம் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை எப்படி களைய போகிறோம் என்று யோசிப்பதற்கு முன்னால் நம் நாட்டில் களையப்பட்டிருக்கிற இந்த சுயமரியாதை உணர்வு, அரசியல் அற்ற பிழைப்புவாதம், இந்த பொறுக்கித்தனம் இந்த பண்பாட்டிற்கு எதிராகவும் நாம் போர் தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இந்த பண்பாட்டை ஒழிக்காவிட்டால் எதிர்காலத்தில் இந்த தமிழகமே அடிமைகளின் மாநிலமாக தான் இருக்குமே தவிர, ஒரு சுயமரியாதை மாநிலமாக இருக்காது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பகுத்தறிவு, சுயமரியாதை என்பது கொடிக்கட்டி பறந்தது. ஆனால் பெரியாரின் பெயரை சொல்லியே இன்று சுயமரியாதையை அழிக்கிறார்கள்.
உடனடியாக நீர்நிலைகளை சரிசெய்யவேண்டும். இல்லையென்றால் விவசாயத்தை யாரும் காப்பாற்ற முடியாது. நிதி ஒதுக்கவேண்டும் என்று புதிதாக பேசுகிறான். நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் ஏரி குளங்களை தூர்வாருவதற்கும் கால்வாய்களை தூர்வாருவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இந்த அரசாங்கள் ஒதுக்குகின்றனவே அந்த பணமெல்லாம் எங்கே போயிற்று? இன்று PWD அதிகாரிகள் எல்லா பணத்தையும் 60 வருடங்களாக தின்றுவிட்டு இன்னமும் நிதி ஒதுக்கு என்கிறானே? அப்படி நிதி ஒதுக்கினால் மறுபடியும் வேலை செய்வார்களா? என்பது ஒரு கேள்வி. மீண்டும் இந்த அரசாங்கம் நிதி ஒதுக்கும் அந்த பணமும் மீண்டும் அவர்கள் பையில் தான் போகும் என்பது தான் அவலநிலை. நேற்று வரை இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்தது யார்? ராம் மோகன் ராவ் என்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அவன் தான் தலைமை தாங்குகிறான். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்கிறார் நான் யாரிடம் பயிற்சி எடுத்தேன் என்று சொன்னால் அம்மாவிடம் தான் பயிற்சி எடுத்தேன். ஐ.ஏ.எஸ் பயிற்சி என்பது டெல்லியிலும், மிசெளரியிலும் கொடுக்கிறான் என்று நாமெல்லாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவன் சொல்றான் போயஸ் தோட்டத்தில் தான் பயிற்சி எடுத்து கொண்டேன் என்று. சரி போயஸ் தோட்டத்தில் என்ன பயிற்சியெடுக்க முடியும்? ஒரே ஒரே பயிற்சி தான் எடுக்க முடியும் ஊர் தாலியை எப்படி அறுப்பது? அதை எப்படி உலையில் போடுவது இதை தவிர போயஸ் தோட்டத்தில் எந்த பயிற்சியும் எடுக்க முடியாது. அடாவடி, ரவுடித்தனம், ஊர் சொத்தை சூறையாடுவது என்பது தான் போயஸ் தோட்டத்தில் கற்று கொள்ள முடியும்.
இந்த ராம் மோகன் ராவ் தான் தமிழகத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் உள்ள மணலை கொள்ளையடிப்பதற்கு திட்டம் வகுத்து கொடுத்த மிக பெரிய கிரிமினல். இவர் யார் தமிழகத்தின் தலைமை செயலர். அந்த அதிகாரி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த பொழுது தான் தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் இருக்கின்றன. அந்த ஆறுகளில் உள்ள மணலை எல்லாம் கொள்ளையடித்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அ.இ.அ.தி.மு.கவிற்கு வழிக்காட்டி தான் இந்த கிரிமினல் கும்பல்.
எந்த கிரிமினல் கும்பல் இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்ததோ, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்தோ அந்த கும்பலுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அதிலிருந்து தான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறோம், ஜெயலலிதா கூட இதை தான் பேசினார் எனக்கு குடும்பம் என்பதே கிடையாது. நான் தனி ஆள். தமிழ்நாட்டு மக்கள் தான் என்னுடைய குடும்பம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாய்கிழிய பேசி ஓட்டு வாங்கினார். ஜெயலலிதா செத்து போயாச்சு. ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு தான் சொந்தம். ஆகவே கொடநாடு பங்களா பல கோடி போகும் விற்றுவிட்டு மக்களுக்கு கொடு. போயஸ் தோட்டம் ஒரு 100 கோடி ரூபாய் போகும் விற்றுவிட்டு விவசாயிகளுக்கு நட்டயீடு கொடு. சிறுதாவூர் பங்களா விற்றுவிடு, திராட்சை தோட்டத்தை விற்றுவிடு, வாரிசில்லாத சொத்து தானே. தமிழ்நாட்டு மக்கள் தானே வாரிசு. சொத்தை பறிமுதல் செய்து மக்கள் சொத்தாக மாற்று. ஆகவே நமது கோரிக்கை அரசாங்கம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
ஒரு விவசாயிக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாயாவது தர வேண்டும். ஒரு ஏக்கருக்கு 20000ரூ வீதமும், வாழ்நாள் செலவுக்காக மேலும் 50000 வரை இழப்பீடு தர வேண்டும். 3000, 5000 ரூ என்பது ஒரு ஏமாற்று, மோசடி ஆகவே இதை விவசாயிகள் ஏற்க கூடாது என்று கேட்டு கொள்கிறோம்”
ஜெயா படிப்பாளி எனக் காட்டுவதற்கு ஊடகங்கள் உருவாக்கிய சான்று.
காலனிய அடிமை மனோபாவம் காரணமாக, பட்லர் இங்கிலிஷ் பேசுபவனைக்கூட அறிவாளியாகப் பார்க்கும் மூடத்தனம் நமது நாட்டு நடுத்தர வர்க்கத்தின் பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. இந்த ஒரு பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டே ஜெயாவைப் பெரிய படிப்பாளியாக தமிழக மக்களின் முன் நிறுத்தியிருக்கிறது, தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல்.
மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து, கான்வெண்டில் படிக்கும் பணக்கார குலக்கொழுந்துகள் போலவே ஜெயாவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் கொண்டிருந்தது வியப்பிற்குரிய விசயமல்ல. அது போல, ஒரு நடிகைக்குப் பல மொழிகள் பேசத் தெரிந்திருப்பதும் அதிசயமான விசயமல்ல. எனினும், இந்த உப்புப் பெறாத விசயத்தை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்குக் கைவரப் பெறாத தனித் திறமை ஜெயாவிடம் இருப்பதைப் போலக் காட்டி, அவரை அதிபுத்திசாலியாகவும், புத்திகூர்மை மிக்கவராகவும் புகழந்து தள்ள முடியுமென்றால், ஆங்கிலம் உள்ளிட்டுப் பல மொழிகளைப் பேசக்கூடிய டூரிஸ்டு கைடுகளைக்கூட அறிவாளிகளாக, பன்மொழிப் புலமைமிக்கவர்களாகக் கூறலாம்.
ஜெயாவின் அறிவுத் தரம் என்னவென்பதை அவரது ஆட்சியின் அலங்கோலங்களே எடுத்துக் காட்டுகின்றன. அவரிடம் வெளிப்பட்ட ஆணவ, பொறுக்கிப் பண்பாடோ தமிழகத்தையே கூசிப் போக வைத்தது. கட்சி தொடங்கி சட்டமன்றம் வரையிலான நிறுவனங்களைத் தனது துதி பாடும் பஜனை மடங்களாக மாற்றியதோடு, கட்சி உறுப்பினர் தொடங்கி அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரையிலான ஆட்சியாளர்களையும் காலில் விழ வைத்து ரசித்தார். அம்மா, அன்னலெட்சுமி, புரட்சித் தலைவி, நிரந்தர முதல்வர் என்றெல்லாம் பலவாறாகத் தன்னைப் பற்றி, தனது முகத்துக்கு நேராக எடுபிடிகளும் விசுவசாசிகளும் புகழ்ந்து தள்ளுவதை சிரித்தபடியே ரசிக்கும் வக்கிர மனோபாவத்தைத்தான் சாகும் வரையிலும் வெளிப்படுத்தினார்.
ஜெயாவின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாக உள்ள புத்தக அலமாரிகள்.
தனது எடுபிடிகள் தன்னைப் புகழுவதை மட்டுமல்ல, எதிர்த்தரப்பு குறித்து அக்கும்பல் கொச்சையாக வசைபாடுவதையும் கூட ரசித்து மகிழும் கேவலமான குரூர புத்தியைக் கொண்டிருந்தார். குறிப்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதியை, அவரது சாதியைச் சொல்லிக் கேவலப்படுத்திச் சட்டமன்றத்திலேயே வளர்மதி பேசியதை ரசித்து, ‘‘நயத்தக்க நாகரிகத்தை வெளிப்படுத்திய பண்பாளர்தான்’’ ஜெயா. வளர்மதியே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைக் குடிகாரன் எனச் சட்டமன்றத்திலேயே கேவலப்படுத்திப் பேசியவர்தான் ஜெயா.
போயசு தோட்டத்திலிருந்து சட்டமன்றத்திற்குப் போனாலும், பொதுக்கூட்டங்களுக்குச் சென்றாலும், தனக்காக மக்களின் நடமாட்டத்தை, போக்குவரத்தை நிறுத்தி வைத்து, மக்கள் அனைவரையும் கிள்ளுக்கீரையாக நடத்தினார். செல்லும் வழியெங்கும் தனக்காக வைக்கப்படும் பிரம்மாண்ட கட்−அவுட்டுகளை எண்ணிப் பார்த்து ரசித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது அவர் உரையாற்றிய பொதுக்கூட்டங்களில் மக்கள் வெயிலில் வெந்து, நாவறண்டு செத்தபொழுது, மேடையில் தன்னைச் சுற்றி ஏழெட்டு ஏர்−கூலர்களை வைத்துக்கொண்டு மக்களை ஏளனம் செய்தார்.
பொய்யும் பித்தலாட்டமும் அவரோடு ஒட்டிப் பிறந்தவை. கருணாநிதி அரசு தன்னை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக ஒரு அனுதாப சீனை உருவாக்கினார். கவர்னர் சென்னாரெட்டி தன் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூச்சமின்றி ஒரு அவதூறை அவிழ்த்துவிட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிவிட்டேன் என்றொரு அண்டப்புளுகை, மோசடியைப் பிரச்சாரமே செய்தார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டது என்பதாலும், தான் தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிட்டிருந்த இடத்தில் கருணாநிதி அண்ணா நூலகத்தைக் கட்டிவிட்டார் என்பதாலும், அந்த நூலகத்தைத் திருமண மண்டபமாக மாற்ற முயன்றார், ஜெயா. அவரது அந்தக் காழ்ப்புணர்ச்சி கொண்ட நோக்கத்தை சென்னை உயர்நீதி மன்றம் தடுத்தவுடன், அந்த நூலகத்தை முறையாகப் பராமரிக்காமல் படிப்படியாக அழியும் நிலைக்குத் தள்ளி வருகிறது அ.தி.மு.க. அரசு. தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தைக் குப்பைத் தொட்டியாகவே மாற்றிவிட்டது.
ஜெயாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தை ஒரு சிறுமியின் கையில், அவரது கதறலைப் பொருட்படுத்தாமல் பச்சைக் குத்தும் அராஜகக் கூத்து.
ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம் ஜெயாவிற்கு இருந்திருக்குமானால், யாழ்ப்பாணம் நூலகத்தைச் சிங்கள இன வெறியர்கள் எரித்துச் சாம்பலாக்கியதைப் போல, அண்ணா நூலகத்தைத் தரை மட்டமாக்கவும் தயங்கியிருக்கமாட்டார்.
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துக் குரல் எழுப்பப்பட்டு வரும் சூழலில், ஜெயாவோ, தனது வசதிக்காக, சென்னையில் உள்ள இராணி மேரி பெண்கள் கல்லூரியை இடித்துவிட்டு, அங்கே புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் திட்டமிட்டார். இதனை எதிர்த்து அக்கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினர். அப்போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவிகளின் வீடுகளைத் தேடிப் போன ஜெயா போலீசு, ‘‘போராட்டத்திலிருந்து விலகவில்லை என்றால், உங்கள் மகள் மீது விபச்சார வழக்குப் போடுவோம்’’ என மிரட்டியது. எப்பேர்பட்ட பண்பட்ட ஆட்சி!
உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள், உங்களைப் பற்றிச் சொல்லுகிறோம் என்றொரு பழமொழி உண்டு. ஜெயாவிற்கும் சசிகலாவிற்கும் இடையேயான நெருக்கமான நட்பிற்கு அடித்தளம் போட்டது சினிமா வீடியோக்கள்தானேயொழிய, இலக்கிய ரசனை அல்ல. படிப்பாளி ஜெயா மறைந்துவிட்டார். வீடியோ சப்ளை செய்த வியாபாரி, தோழியாகி, போயசு தோட்டத்தின் நிர்வாகியாகி, அ.தி.மு.க.வின் தலைவியாகி, கோட்டைக்குள்ளும் நுழையக் காத்திருக்கிறார்!
போலீசு ராஜ்ஜியம்…
எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !
ஆர்ப்பாட்டம்
நாள் : 01.02.2017
இடம் : தலைமை தபால் நிலையம், மஞ்சக்குப்பம். கடலூர்
நேரம் : மாலை 4:00 மணி
கடந்த 23-ம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தமிழகமெங்கும் போராடிய மாணவர்களை போலீசு கொடூரமகாத் தாக்கியது. அது மட்டுமில்லாமல் வீடுகளைக் கொளுத்துவது வாகனங்களை நொருக்குவது என வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டது.
வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்து வருகின்ற 01.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !
தலைமை :
தோழர் முராமலிங்கம், மக்கள் அதிகாரம் நகர்குழு உறுப்பினர், கடலூர்
கண்டன உரை :
தோழர் கு.பாலசுப்ரமணியன், மாநிலதலைவர், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம், கடலூர்.
திரு இள. புகழேந்தி, மாநில மாணவரணி செயலாளர் (தி.மு.க), கடலூர்
தோழர் பால்கி, நூல் விமர்சகர், கடலூர்
திரு T. மதிசேகர், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை, கடலூர்
திரு திலகர், B.A.B.L., வழக்கரிஞர், கடலூர்
திரு பண்டரிநாதன், வட்டபொதுச்செயலார்,தனியார்பேருந்து தொழிலாளர் சங்கம், கடலூர்
திரு கிருஷ்ணமூர்த்தி,ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளர் நல சங்கம், கடலூர்
திரு பூங்குண்றன், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பெரியப்பட்டு
திரு இளங்குமார், வர்ம வைத்தியம், கடலூர்
திரு ரவிச்சந்திரன், ராஜகுமார், மாற்றுதிறனாளிகள்நல சங்கம், கடலூர்
திரு ராஜேஷ், கட்டிடதொழிலாளர், கடலூர்
சிறப்புரை :
தோழர் நந்தா, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், குறிஞ்சிப்பாடி வட்டாரம்.
தகவல் : மக்கள் அதிகாரம். கடலூர் வட்டாரம். 81108 15963
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரதிய ஜனதாவுக்கு டெல்லிக்கட்டு நடத்தினார்கள் தமிழக மக்கள். மோடி எதிர்ப்பு முழக்கம் தமிழ் மக்களின் தேசிய முழக்கமானது. ஆத்திரமுற்ற பாஜக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அனுப்பியது. வந்தவரோ அந்த ஆத்திரத்தை பலமடங்கு கூட்டிவிட்டார்.
நிர்மலா சீத்தாராரமனின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்கள் யூ டியூப்பில் வெறுப்புக்களை அள்ளுகின்றன. இங்கே 54 பேர் விரும்புகிறார்கள் என்றால் 445 பேர் வெறுக்கிறார்கள்!
எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது. உடல் மொழியே மிதமிஞ்சிய அலட்சியத்துடன் மிரட்டுகிறது. அதனால் தான் அவர் பேட்டிக்கு YOUTUBE -ல் வெறுப்புக்கள் குவிந்து வருகின்றது.
“நுணலும் அதாவது தவளையும் தன் வாயாலே கெடும். பாஜக-வும் தன் கையாலே புழுதி வாரித் தூற்றிக் கொள்ளும்.”