நீதிபதிகள் மன்னர்களும் அல்ல
வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல
வழக்கறிஞர் சட்டத் திருத்த விதிகளைத் திரும்பப் பெறக் கோரி ஜூலை 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் இடம் பெற்ற பதாகைகள், முழக்கங்கள், முழக்க அட்டைகள்…….
பதாகைகள்
ஊழல் மதிப்பானது எதிர்ப்பது அவமதிப்பா?நீதிபதிகள் மன்னர்களும் அல்ல வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்லவிக்கிரமாதித்தனுக்கு வேதாளத்தின் கேள்வி எந்த நீதிபதியும் லஞ்சம் வாங்காத திருநாட்டில் நீதிபதியின் பெயரைச் சொல்லி எந்த வக்கீலாவது லஞ்சம் வாங்க முடியுமா?
I.D கார்டு கேட்டால் T.T.R -ஐ “செஞ்சிடுவேன்”கிறாரு D.J ஊழலைப் பற்றி கேட்டால் வக்கீலை “செஞ்சிடுவேன்”கிறாரு C.J இதுதான்பா புதுச் சட்டம்!ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது அப்போ உங்க விதிகள் என்ன கிளுகிளுப்பூட்டும் நடவடிக்கையா?BAR டவாலி Council of India
கருத்துரிமைக்காக வக்கீல் வாதடலாம் ஆனால், வக்கீலுக்கு கருத்துரிமை கிடையாது! இது காஷ்மீர் கனவான் கவுலின் நீதி!பார் கவுன்சில் வழக்கறிஞர்களின் பிரிதிநிதியா? நீதிபதிகளின் டவாலியா?புதிய விதிகளின்படி ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்…! ஜால்ரா போட்டால் ORDER சட்டம் பேசினால் DEBAR
வழக்கறிஞர்கள் மீது ஒழுக்கத்தை நிலைநாட்ட பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும் லார்டுகளே! உங்களின் ஒழுக்கம் பற்றி எந்தக் கோயிலில் முறையிடுவது?வழக்கறிஞர்களைத் தகுதி நீக்கம் செய்யத் துடிக்கும் நீதிபதிகளே! கொலீஜியம் முறையில் நியமிக்கப்படும் நீதிபதிகளின் ‘தகுதி’ பற்றிய ரகசியத்தை நாங்கள் வெளியிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பா?”No Precipitative action” என்றால் என்ன? ”டேய் கட்டதுரை, இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரப்படாது, நானும் வரமாட்டேன்… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…!”
காவிரி, முல்லைப் பெரியாறு ஈழப்படுகொலை, மூவர் தூக்கு, இந்தி திணிப்பு, நீதிமன்றத்தில் தமிழ்… ஆல் இண்டியா பார் கவுன்சிலின் ஆத்திரத்துக்கு – இவை அனைத்தும் காரணங்கள்!மக்களுக்கு எதிரான கிரிமினல், சிவில் சட்ட திருத்தங்களை எதிரித்துப் போராடியது தமிழக வழக்கறிஞர்கள் மட்டும்தான்!டில்லி வக்கீலுக்கு ஒரு நீதி, தமிழக வக்கீலுக்கு ஒரு நீதி! இதுதான் மனன்குமார் மிஸ்ராவின் மனு நீதி!
சட்ட மேதை செல்வம் அவர்களே, நீங்கள் ஒரே ஒரு பக்க ஆஃபிடவிட்டை சுயமாக தயாரித்தல் நாங்கள் பார் கவுன்சில் கம்பத்தில் தூக்கில் தொங்கத் தயார்!தமிழனை அவமதிக்கும் C.I.S.F தமிழனை கிள்ளுக்கீரையாக்கும் 34(1) தமிழனை வெறுக்கும் தலைமை நீதிபதி… வெளியேறு! வெளியேறு! இது தமிழகத்தின் சுயமரியாதை முழக்கம்!கை உயர்த்திப் பேசாதே! குரலை உயர்த்தி பேசாதே! ஊழல் பற்றி பேசாதே – என்கிறது 34(1). வக்கீல்கள் பேசுவது தமக்காக அல்ல வாதாடிகளுக்காக! பறிக்கப்படுவது வழக்காடிகளின் உரிமை! இது வக்கீல் – நீதிபதி பிரச்சினை அல்ல!
என்னை எதிர்த்தால் வெட்டுவேன் என்பவன் ரவுடி ஏவுகனை விடுவேன் என்பவர் கற்ற…றிந்த நீதிபதி இவர்கள் கையில்தான் 34(1)உரிமைக்காகப் போராடிய 31 வழக்கறிஞர்கள் மீதான பார் கவுன்சிலின் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே திரும்பப் பெறு!சட்டமேதை டி.செல்வம், B.L.,(ஜால்ரா) சீனியர் கவுன்சல் எஸ்.பிரபாகரன், B.L., (புரோக்கிங்)
ஆங்கில பதாகைகள்
PROFESSIONAL ETHIC TOWARDS JUDICIAL CORRUPTIONLORDS are not GODSPRASHANT BUSHAN Says EIGHT FORMER CJIs WERE CORRUPT! FORMER C.J VERMA SAYS 25% JUDGES ARE CORRUPT! JUSTICE KAPADIA Says NAME THE CORRUPT JUDGE! WE NAMED THEM JUSTICE KAUL DELETES OUR NAMES!
OUT illegitimate Rule OUT Mr.S.K.Kaulcampus is our place of Profession, our place of Association, our place of Agitation we don’t SUBMITNO precipitative action NO more HOODWINKING please – we are lawyers
Don’t precipitate! Withdraw – NOW!OUT Illegitimate Rules! OUT Denigrating CISF! OUT Authoritarian Kaul!
பெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படும் George Bernard Shaw (26 July 1856 – 2 November 1950) ஆங்கில இலக்கிய உலகில் புகழ்பெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். இன்று அவரது பிறந்த நாள். சென்ற இரண்டு நூற்றாண்டுகளிலேயே இன்றைய முதலாளித்துவ ஜனநாயகத்தின் ‘சாதனையை’ புத்தாக்கத்துடன் முன் வைக்கிறது அவரது நாடகத்தின் பகுதி ஒன்று. ஜனநாயகம் என்றால் என்ன, யார் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்பவர்களுக்கும், தரமான சமூக நகைச்சுவையை ரசிப்போருக்கும் இந்த நாடகத்தின் பகுதி பிடிக்கும் என்று நம்புகிறோம். – வினவு
பீரங்கித் தொழிற்சாலையின் முதலாளி அண்டர்ஸாப்டும் அவரது லட்சியம் பேசும் மகன் ஸ்டீபனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திருமதி. அண்டர்ஸாப்ட் உடனிருக் கிறாள்.
தந்தை: நீ பீரங்கித் தொழிலில் ஈடுபட விரும்புவதாக நான் அறிகிறேன்.
மகன்: நான் வியாபாரத்தில் ஈடுபடப் போவதில்லை. நிச்சயமாக இல்லை.
தந்தை: (கண்களை அகலத் திறந்து மனப்பாரம் குறைந்தவராக) அப்படியானால்….
மகன்: வியாபாரியாகவோ முதலாளியாகவோ விருப்பமில்லை. எனக்குத் தொழில் செய்யும் திறமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆர்வமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாக ஆவதற்கே விரும்புகிறேன்.
தந்தை: (எழுந்து) என் அருமை மகனே, உன் விருப்பத்தைக் கேட்கும் போது எனக்கு பெரிய மனப்பாரம் இறங்கியது போலிருக்கிறது. இது நமது நாட்டிற்கும் நல்லதாய் முடியும் என்று நினைக்கிறேன். கட்டாயப்படுத்தி இந்தப் பொறுப்பை உன்மீது திணிக்க முயன்று எங்கே நீ ஒப்புக் கொண்டுவிடப் போகிறாயோ என்று பயந்து கொண்டிருந்தேன். (கைகளைப் பிடித்து குலுக்குவதற்காக அவனை நெருங்குகிறார்)
தாய்: (எழுந்து அவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து) ஸ்டீபன் அவ்வளவு சொத்து முழுவதையும் இப்படி உதறித் தள்ளிவிட நான் உன்னை அனுமதிக்கப் போவதில்லை.
மகன்: (உறுதியாய்) அம்மா நீங்கள் இன்னும் என்னை ஒரு குழந்தை போலவே நடத்திக் கொண்டு வருவதற்கு ஒருமுடிவு கட்ட வேண்டும். (தாய் அவனது குரலில் இருக்கும் கண்டிப்பைக் கண்டு அதிர்ந்துபோகிறாள்.) நேற்று வரை நான் உங்கள் நோக்கங்களைப் பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவைகளை நான் விளையாட்டாக எடுத்துக்கொண்டு விட்டேன். ஆனால் நான் இப்போதுதான் உணர்கிறேன்.
இத்தனை வருஷங்களாக நீங்கள் எனக்கு எவைகளை விளக்கிச் சொல்ல வேண்டுமோ அவைகளைச் சொல்லாமல் இருட்டறையில் வைத்த மாதிரி வைத்து விட்டீர்கள். இப்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இது சம்பந்தமாக மேற்கொண்டு ஏதாவது பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டுமென்றால் அது எனக்கும் அப்பாவுக்கும் இடையில்தான் இருக்க வேண்டும். நானும் அப்பாவும்தான் சம்பந்தப்பட்ட ஆண் பிள்ளைகள்.
தாய்: ஸ்டீபன் (அவள் மீண்டும் இருக்கையில் அமர்கிறாள். அவளுடைய கண்களில் நீர் மல்கிக் கொண்டிருக்கிறது.)
தந்தை: (மிகுந்த அனுதாபத்துடன்) இங்கே பார் அன்பே பெரியவர்கள்தான் குழந்தைகள் போல் நடத்தப்படுகிறார்கள்.
மகன்: வருந்துகிறேன். அம்மா. நீங்கள் என்னைக்கட்டாயப்படுத்தி….
தந்தை: (அவனுடைய பேச்சில் குறுக்கிட்டு) ஆமாம். ஆமாம். அது சரிதான் ஸ்டீபன். இனிமேல் உன் அம்மா உன் விஷயத்தில் தலையிட மாட்டாள். உன்னுடைய சுதந்திரம் நிலை நிறுத்தப்படும். நீ உன்னுடைய சாவியை உன் கையில் வைத்துக்கொள். அதை நழுவ விடாதே. இதற்காக மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை. (இருக்கையில் அமர்கிறார்.)
சரி, தந்தை மகன் என்பது இருக்கட்டும். இப்போது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையில் நடக்கும் பேச்சுபோல கேட்கிறேன். மன்னிக்க வேண்டும் மகனே, இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு இடையே அல்ல, இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையில், நீ உன்னுடைய வருங்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறாய்?
தாய்: நான் நீ சொல்வதை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டேன் ஸ்டீபன். நீ உறுதியாக இருந்தால் உன் எண்ணப்படியே செய்.
(ஸ்டீபன் ஒரு நீதிபதியைப்போல ஒரு தீர்க்கமான முகபாவத்துடன் இருக்கையில் அமர்ந்து கொள்கிறான்.)
பெர்னாட் ஷா மற்றும் லு சுன்
தந்தை: நீ பீரங்கித் தொழிலை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதுதான் முடிவான விஷயமாகி விட்டதே.
மகன்: அது முடிவாகி விட்டது என்றுதான் நானும் நம்புகிறேன்.
தந்தை: இதோ பார் ஸ்டீபன், பேய் பிடித்தவன் மாதிரி முகத்தில் வெறுப்பைக் காட்டிக் கொள்ளாதே, அது சின்னப் பையன்கள் செய்கிற காரியம். உனக்கு தாராளமாக சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நீ என்னையே பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதும் இல்லை. அதற்குப்பதிலாக நீ உன்னுடைய விருப்பம் போல எந்தத் துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்பினாலும் அந்த உரிமையை நான் உனக்கு தாராளமாகக் கொடுக்கிறேன்.
ஆனால் ஒன்று தெரிந்து கொள். நீ உடனே நாட்டின் பிரதம மந்திரியாக ஆகிவிட முடியாது. ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சிபெற வேண்டும். நீயாக ஏதாவது துறையைப் பற்றி கவனம் வைத்திருக்கிறாயா? இசை, இலக்கியம், ஓவியம், நாடகம் இந்த மாதிரி ஏதாவது?
மகன்: என்னிடத்தில் இலக்கியமோ கலையோ சம்பந்தப்பட்ட இயல்பு ஒன்றும் கிடையாது.
தந்தை: தத்துவ ஞானத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்? தத்துவஞானிக்கு நல்ல மதிப்பு உண்டே?
மகன்: தத்துவ ஞானியா? அந்த மாதிரி பாசாங்கு பண்ணும் இயல்பும் என்னிடம் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை.
தந்தை: அப்படியா? சரி. நாட்டின் பாதுகாப்பு சேவை இராணுவம் இருக்கிறது. கப்பற்படை அல்லது விமானப் படை. இதில் ஏதாவதில் சேர விருப்பமா? இல்லையென்றால் தேவாலய திருச்சபை – இதில் மதிப்பும் மரியாதையும் ஏராளமல்லவா? இல்லாவிட்டால் வழக்கறிஞர்- நீதிமன்றம் நல்ல திறமைமிக்க துறைதான். பத்திரிகைகளில் பேர் வரும்.
மகன்: அப்பாநான் சட்டம் படிக்கவில்லை. மேலும் அதற்கெல்லாம் கொஞ்சம் “தூக்கி விட” ஆள் வேண்டும். எனக்கு அப்படித் தூக்கி விடக்கூடிய ஆள் யாரும் இல்லையே வாதத் திறமையின் வெற்றியெல்லாம் வாதிடுபவனுக்கு நீதிபதியிடத்தில் இருக்கிற செல்வாக்கைப் பொறுத்துத்தான். அதனால் தான் வழக்கறிஞர்கள் கொச்சையாக ”தள்ளிவிடும்” சமாச்சாரங்கள் என்கிறார்கள்.
தந்தை: உன்னுடைய சமாச்சாரம் ரொம்ப சிக்கலான சமாச்சாரமப்பா. ஒரு துறை பாக்கியில்லை. எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது பாக்கியுள்ளது திரை உலகம் தான். (ஸ்டீபன் பொறுமை இழந்தவனாய் நகர்ந்து செல்லப் பார்க்கிறான்) சரி. உனக்குத் தெரிந்த அல்லது நீ விருப்பப்படுகிற ஏதாவது துறை இருக்கிறதா? அப்படியானால் அதையாவது சொல்லப்பா.
பிரிட்டிஷ் பாராளுமன்றம்
மகன்: (எழுந்து அப்பாவைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு) எனக்கு நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேற்றுமையை உணரக்கூடிய சக்தி இருக்கிறது அப்பா.
தந்தை: (வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டு) அப்படியா சொல்லுகிறாய்? வியாபாரம் செய்யும் திறமை இல்லை. சட்டத்தைப் பற்றிய படிப்பு இல்லை. தத்துவ ஞானிக்குரிய பாசாங்கும் தெரியாது.
ஆனால் எல்லா தத்துவ ஞானிகளையும் பேதலிக்க வைக்கக் கூடிய, எல்லா வழக்கறிஞர்களையும் நம்பிக்கையிழக்கச் செய்கிற, எல்லா வியாபாரிகளையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிற அந்த இரகசியத்தைப் பற்றி, அதாவது ”நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேற்றுமை” பற்றி நீ தெரிந்து வைத்திருக்கிறாயே – இந்த இருபத்து நான்கு வயதிலேயே நீ நிச்சயமாக ஒரு மேதைதானப்பா! ஞானிகளுக்கெல்லாம் ஞானி குருக்களுக்கெல்லாம் குரு!. ஒரு நவீன பகவான்.
மகன்: (கோபத்தை அடக்கிக் கொண்டு) நீங்கள் எப்போதும் பிறரை நையாண்டி பண்ணுவதிலே இன்பம் காண்பவர். ஒரு நேர்மையான ஆங்கில கனவான் தன்னுடைய பிறப்புரிமை என்று கூறிக் கொள்கிற இந்த உண்மையைத் தவிர நான் அதிகமாக எதையும் தெரிந்த மாதிரி பாசாங்கு செய்யவில்லை. .
தந்தை: ஒவ்வொருவருடைய பிறப்புரிமையும் அதுதான். உதாரணத்துக்கு இரட்சணிய சேனையின் (ஒரு கிறித்தவ மதக்குழு) அந்தப் பெண் ஜென்னி ஹில்லை எடுத்துக் கொள்வோம். நீ அந்தப்பெண்ணிடம் போய் ஜென்னி நீ தெருவில் நின்று கொண்டு போகிறவர் வருகிறவருக்குப் பூகோளம் அல்லது இலக்கணம் அல்லது கணக்குப் பாடம் நாட்டியம் சொல்லிக் கொடுக்கிறாயா என்று கேட்டுப்பார்.
உடனே நீ அவளைக் கேலி செய்கிறாய் என்றுதான் அவள் நினைப்பாள். ஆனால் அதே ஜென்னி நடுத்தெருவில் நின்று கொண்டு கிறித்துவ மதத்தைப்பற்றியும், ஒழுக்க நெறிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ணுவதற்கு அவளுக்கு என்ன தகுதியிருக்கிறது என்று அவள் உணர்ந்து பார்ப்பதில்லை.
ரொம்பவும் நேர்மையானவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் நீங்கள் எல்லோரும் ஜென்னியைப் போலத்தான், இருக்கின்றீர்கள். உங்களால் பத்து அங்குல துப்பாக்கியினுடைய குண்டு பாயும் வேகத்தை அளவிட்டுச் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்ச்சிவசப்படுகிற ஒரு மனிதனுடைய மனோவேகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குச் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை எப்படிக்கையாள வேண்டும் என்று தெரியாது. நீங்கள் நேர்மை, சத்தியம், நீதி இவைகளைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டு அதன் காரணமாக ஒருவரையொருவர் கொன்று தீர்க்கிறீர்கள். ஆஹா என்ன தேசம்! என்ன உலகம்!
தாய்: (சிரமத்துடன்) ஆண்ட்ரூ அவன் எந்தத் தொழிலைச் செய்தால் நல்லது என்று நீர் நினைக்கிறீர்?
தந்தை: ஓ! அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ அதையே செய்யட்டும். அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். இதுதான் ஒரு அரசியல்வாதியின் உண்மையான திறமை. எனவே, அவன் அரசியலை தொழிலாக எடுத்துக் கொள்ளட்டும். அவனை ஒரு வட்டச் செயலாளராக ஆக்கக் கூடிய ஒரு அரசியல் பெரும் புள்ளிக்கு அவன் பிரைவேட் செகரட்டரியாக முதலில் போய்ச்சேரட்டும். பிறகு பாரேன் அவன் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் இடம் பிடித்து விடுகிறானா இல்லையா என்று.
மகன்: (மீண்டும் எழுந்து) ஐயா நான் ரொம்ப வருத்தப்படுகிறேன். நீங்கள் என் தகப்பனார் என்ற அந்த மரியாதையை நான் மறந்துவிடும்படி நிர்ப்பந்தப்படுத்துகிறீர்கள். என்னுடைய தேசத்தின் அரசாங்கம் கிண்டல் செய்யப்படுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கமாட்டேன். (அவன் கைகளைக்கோட்டு பைக்குள் விட்டுக் கொண்டே கோபமாய் வெளியேறுகிறான்).
தந்தை: (புலி போல சீறிக் கொண்டு) உன்னுடைய தேசத்தின் அரசாங்கமா? நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம். நானும் லாசரசும். நீயும் உன்னைப் போன்ற அரை டஜன் கற்றுக்குட்டிகளும் அந்த அரட்டைக்க்ச்சேரி நடைபெறும் பாராளுமன்ற அறைகளில் உட்கார்ந்து கொண்டு அண்டர்ஷாப்டையும் லாசரசையும் ஆள்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறாயா? இல்லை என் நண்பரே இல்லை.
நாங்கள் இலாபம் பெறுவதற்காகத் தான் நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்கள். எங்களுக்குச் செளகரியமான சமயங்களில் தான் நீங்கள் யுத்தம் நடத்துகிறீர்கள். எங்களுக்கு செளகரியம் – இல்லாத போது – அதாவது எங்கள் தளவாடங்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தபொழுது நீங்கள் உலக சமாதானத்தைப் பற்றிப் பேசுவீர்கள். தளவாட வர்த்தகமானாலும் வேறு எந்தவர்த்தகமானாலும் அதன் பரிமாணத்தையும் உற்பத்தித் திறனையும் நாங்கள் சொல்கிறபடி தான் நீங்கள் நிர்ணயம் செய்வீர்கள்.
உன்னுடைய தேசத்தின் அரசாங்கமா? நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம்.
என்னுடைய இலாபத்துக்காக ஏதாவது ஒருபொருள் தேவை என்றால் நீங்கள் அந்தப் பொருள் நாட்டின் நலனுக்காகத் தேவைப்படுகிறது என்று சொல்லிக்கொண்டு எங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து கூட இறக்கும்தி செய்து தருவீர்கள். யாராவது மக்கள் நலம் அது, இது என்று சொல்லிக் கொண்டு எங்களின் இலாபம் குறையும்படியான காரியங்களில் ஈடுபட்டார்களேயானால் நீங்கள் உடனே போலீசையும் இராணுவத்தையும் அழைத்து அவர்களை நசுக்குவீர்கள். உங்கள் சொற்படி கேட்பது போலீசும் இராணுவமும் தான். அதுவும் எங்கள் நன்மைக்காகத் தான்.
உங்களின் இந்த சேவைக்கு கைமாறாக எங்களுடைய பத்திரிகைகளும் வார இதழ்களும் உங்களைத் தீவிரமாக ஆதரிக்கும். உங்களைப் பெரிய அரசியல் விற்பன்னர்கள் என்று கருதும்படி பிரச்சாரம் செய்யும். நீங்களும் அந்தக் கற்பனையில் மகிழ்ந்து போவீர்கள்.
உங்கள் தேசத்தின் அரசா? போ பையா! போ! இடத்தைக் காலி பண்ணு. அங்கே போய் உன்னுடைய அரசியல் குழுக்களோடு மகிழ்ச்சியாய்க் கலந்துரையாடல் பண்ணு. அல்லது ஏதாவது பத்திரிகையை எடுத்து அதில் எழுதப்பட்டிருக்கும் தலையங்கங்கள் அல்லது அரசியல் கட்டுரைகளைப் படி. பற்றி எரியும் பிரச்சினைகள், அல்லது விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள், ஊழல் விவகாரங்கள் பற்றிய காரசாரமான விவாதங்களில் கலந்துகொண்டு அந்த அரசியல் விளையாட்டைப் போய் விளையாடு.
நான் என்னுடைய தொழிற்சாலையின் கணக்கு அறைக்குப் போய் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்து விட்டு அவர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப் போகிறேன்.
மகன்: (உதட்டிலே புன்முறுவலுடன் அப்பாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு அவருடைய தோழமையை விரும்பியவனாய்) என் இனிய அப்பா உள்ளபடியே உங்களிடத்தில் கோபப்படுவது என்பது முடியாத காரியம். உங்களை யாரும் வெல்ல முடியாது. உங்களை எதிர்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
நீங்கள் வெகு கடுமையாக உழைத்துப்பெரும் பணக்காரராகி இருக்கிறீர்கள். அதைப்பற்றி நியாயமாகவே நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இன்றைய தேதியில் இந்தத் தேசத்தில் பெரும் பணக்காரர்களில் ஒரு முக்கிய புள்ளி நீங்கள் என்கிற விஷயம் உங்களுக்கு ஒரு உன்னத கெளரவத்தைக் கொடுத்திருக்கிறது
உண்மை, உங்கள் பணத்தின் உங்களுடைய கொள்கைகளை ஒப்புக் கொள்கிறவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை நான் பழைய முறையில் இயக்கப்படும் பள்ளிக் கூடத்தில் பயின்று நமது பழைய மரபு பல்கலைக்கழகத்திலேயே பட்டம் பெற்று அந்த முறையிலேயே என் கருத்துகளும் சிந்தனைகளும் இருக்கின்றன. ஆகையால் நீங்கள் பணம்தான் இங்கிலாந்தின்ஆட்சியை நடத்துகிறது என்று நினைப்பது இயற்கையே. ஆனால் நான் உங்களைவிட அதிகம் கல்வி கற்றவன் என்று சொல்லிக் கொள்ள என்னை அனுமதிக்கவேண்டும்.
தந்தை: அப்படியானால் இங்கிலாந்து தேசத்து ஆட்சியை நடத்துவது எது என்று சொல்ல முடியுமா?
மகன்: பண்பு அப்பா பண்பு!
தந்தை: யாருடைய பண்பு என்னுடைய பண்பா அல்லது உன்னுடைய பண்பா?
மகன்: உங்களுடைய பண்பும் அல்ல என்னுடைய பண்பும் அல்ல. ஆனால் இங்கிலாந்து நாட்டின் அருமையான தேசியபண்பு.
தந்தை: உனக்கு ஏற்ற தொழிலை நான் கண்டுபிடித்துவிட்டேன். நீ ஒரு பிறவிப் பத்திரிக்கையாளன். ஒரு பெரிய வாரப் பத்திரிக்கையை உனக்காக நான் ஆரம்பித்துத் தருகிறேன். ஆமாம்.
ஜார்ஜ் பெர்னாட்ஷா
பெர்னாட்ஷாவின் மேஜர் பார்பரா எனும் நாடகத்தின் சில பகுதிகள்.
தமிழாக்கம்: பெர்னாட்ஷா தாசன். நன்றி: ’கோடு’ காலாண்டிதழ்
மேற்குலக ‘ஜனநாயக’ நாடுகளின் தேசியப் பண்பை நுட்பமாகவும், எளிமையாகவும், ஒரு அழகான சித்திரமாகவும் உணர்த்துகிறார், பெர்னாட்ஷா. முதலாளித்துவ உலகில் நீதி, அறிவு, ஜனநாயகம், லட்சியம் போன்றவை உண்மையில் எப்படி உலாவருகின்றன என்பதை இப்பாத்திரங்கள் எதார்த்தமாக பேசுகின்றனர். பாராளுமன்ற அரட்டையும், இராணுவப் போரும், தளவாட உற்பத்தியும், உலக அமைதியும், நல்லது – கெட்டதைப் பிரித்தறியும் அறிவுலகமும், விருப்பமான துறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும், தத்துவப் பாசாங்கும், பத்திரிகைப் பம்மாத்தும் – இறுதியில் முதலாளித் தந்தையிடம் சரணடையும் அறிவுஜீவி கலைஞனான மகனது நேர்த்தியான சந்தர்ப்பவாதத்தில் விளக்கம் பெறுகிறது. மீண்டுமொரு முறை படியுங்கள். நாடகம் கேலி செய்யும் “சுதந்திரச் சிந்தனையை” இங்கேயும் நேர்த்தியாக உலாவரும் பல்துறை அறிவுஜீவிக் கனவான்களிடம் சரளமாகக் காணலாம்.
துர்வாசச் சாபம்
அரசன்கொடுத்த அடையாள மோதிரம்
சொர்க்கத்தில் காதலர் மீண்டும் கூடிய காட்சி
அத்தனையும் பொய்கள்
அத்தனையும் மோசடிகள்!
ஒர் அரசனின் காம பலிபீடத்தில்
வெட்டிக் கொல்லப்பட்டாள் ஒருபெண்
அவள் சோகக் கதைக்குக்
கவர்ச்சி தீட்டி
விதிபற்றிக் கதைபரப்பினான்
ஒரு கவியரசன்.
வீட்டில் பெண்ணைத் தவிர யாருமில்லை
வேட்டைக்கு வந்த மன்னன்
பெரிய விளையாட்டில் இறங்கினான்
நகரக் களியாட்டத்தில் களைத்துப்போன அவன்
காவலற்ற ஏழைக் குடிசைக்கு
சதைச் சுகத்துக்காக ஓடி வந்தான்.
அப்பாவிக் காட்டுப் பெண் அவனது ஆசை வார்த்தைகளின்
பொறியில் சிக்கினாள்.
சகுந்தலைக் காவியம் நடக்கிறது
இதோ இன்றைய மேடையில்
எங்கும் நிசப்தம்
உண்மையின் சாட்சியாய்ச் சூரியன்
கவிதை மூட்டத்தைக் கிழித்துப் புறப்பட்டான்
நாடகத்தின் உண்மைப் பொருளைக்
கண்ட மக்கள் திடுக்கிட்டனர் –
காட்டின் இளம்பெண்
காமுகனின் சேட்டைகளுக்குப் பலியானாள்
கற்பமானாள்.
அரசன் விட்டெறியும்
எச்சில் சோற்றில்
உடல் வளர்க்கும் கவியரசன்
காவியம் படைக்கிறான்
ஆனால்
அதோ
மேடை இருளில்
அலறி அழுகிறாள் ஒரு சகுந்தலை.
சரோஜ் தத்தா.
தமிழில்: வீ
_________________________
தோழர் சரோஜ் தத்தா நினைவாக
சரோஜ் தத்தா
சரோஜ் தத்தா – ஓர் புரட்சியாளர், புரட்சிக் கவிஞர். அரசியல், கலை இரண்டிலும் புரட்சிகர உத்வேகத்தோடு செயல்பட்டவர். 1947-போலிச் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அன்றைய கம்யூனிஸ்டு கட்சியில் கலைஞராகச் செயல்பட்டார். முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!’ என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”சில மோசமான அறிவு ஜீவிகளும் இருக்கிறார்கள். அவர்களது உறவு தகாதது என்று கம்யூனிஸ்டுகள் உடனே உணர வேண்டும். அந்த நேரம் வந்துவிட்டது” என்று கூறி மார்க்சிய இலக்கிய விவாதத்தினைக் கூர்மைப்படுத்தினார்.
கலைஞர் என்ற மமதை அவருக்குக் கிடையாது. காரணம் அவரது அரசியல் தெளிவு. புரட்சிக்கலை இலக்கியம் உழைக்கும் மக்களுக்காக ஊழியம் செய்யும் கருவி என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். ஒருபுறம் புரட்சிக் கலைஞராகச் செயல்பட்டபோதே, கூடவே ஓர் புரட்சியாளராக அவர் வளர்ந்தார். திரிபுவாத கம்யூனிஸ்டு கட்சியை உதறி எறிந்து 67-ல் நக்சல்பாரிப் பாதையை ஏற்றார். ஏற்றது மட்டுல்ல, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டு – லெனினிஸ்டு) (சி.பி.ஐ – எம்.எல்) தோற்றத்துக்கு வித்திட்டவரில் அவரும் ஒருவர். வீரமரணமடையும் இறுதி வரை புரட்சிக்கட்சிக்குத் தலைமை கொடுத்தவர் அவர்.
நக்சல்பாரி உழவர் எழுச்சியை நசுக்கும் வகையறியாது திகைத்த போலி கம்யூனிஸ்டு மே. வங்க அரசு புரட்சியாளர்களைப் படுகொலை செய்தது; மே. வங்க கிராமப் புறங்களிலும், நகரங்களிலும் அரச பயங்கரத்தைக் கட்டவிழ்த்து வெறியாட்டம் ஆடியது. தோழர் சரோஜ் தத்தா 1971 ஆகஸ்டு (4 அல்லது 5 தேதிகளில்) போலீசால் கோழைத்தனமான முறையில் கொல்கத்தா மைதானம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். தோழர் சரோஜ்தத்தாவின் வீரநினைவுகள் என்றும் நிலைக்கட்டும்!
மீண்டும் மனுதர்ம ஆட்சி! மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் – பார்ப்பனர்கள் சதித் திட்டத்தை முறியடிப்போம்!
அன்பார்ந்த மாணவர்களே,
’சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி’ – இது ஆரிய-பார்ப்பன இந்துத்துவா சித்தாந்தம். ‘காசு இல்லாதவனுக்கு எதுக்கடா கல்வி ’ – இது தனியார்மய – தாராளமய கொள்கை. ‘கல்வி என்பது ஒரு நுகர்வு பொருள்; சர்வதேச அளவில் விற்கவும் வாங்கப்படவுமான ஒரு பண்டம். கல்வி நிறுவனங்கள் கல்வி எனும் நுகர்வு பொருளை விற்பவர்கள், மாணவர்கள் நுகர்வோர்கள்’ – இதுதான் நாட்டை மறுகாலனியாக்கும் காட்ஸ்-ன் சட்டம். நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் இந்திய அரசு 1994-ல் காட் எனும் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதை நிறைவேற்ற அமைக்கப்பட்டதுதான் உலக வர்த்தகக் கழகம் (WTO) என்ற பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கான அமைப்பு. இந்த அமைப்பின் ஒரு அங்கம்தான் சேவைத்துறைகளை வர்த்தகமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம்.
ஆரிய – பார்ப்பன இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கம் ஆகிய இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகம்தான் புதிய கல்விக் கொள்கை (2016). இந்த புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான கருவிதான் மோடி அரசின் ’திறன்மிகு இந்தியா’(SKILL INDIA).
கல்வியை நுகர்வுபொருளாக்கும் புதிய கல்விக் கொள்கை!
பயிற்றுவித்தல், பாடத் திட்டம், உயர்கல்வி அனைத்திற்கும் பொது நுழைவுத்தேர்வு (NEET, JEE) என்பதன் மூலம் கல்வித்துறை தொடர்பான மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. பல்கலைக்கழக சிண்டிகேட்டுகள், செனட்டுகளின் அதிகாரத்தை ரத்து செய்வது; கல்லூரிகளை பல்கலைக்கழகங்களிலிருந்து பிரித்து அவற்றை திறன் சார்ந்த சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது; நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக் கழக மானியக் குழுவை (U.G.C) கலைப்பது; NET-அல்லாத உதவித் தொகை ரத்து, லிங்டோ கமிட்டி பரிந்துரைப்படி கல்லூரி வளாகங்களில் போலீசு நிலையங்களை அமைப்பது; மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பது; ஐ.ஐ.டி, என்.ஐ.டி கட்டண அதிகரிப்பு, சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வுக் கழகங்களையும், ஐ.ஐ.டிகளையும் சுயநிதி அமைப்புகளாக்குவதன் மூலம் அரசுக் கல்வி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் தாராளமாக்கப்படுதல், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்தியாவில் பட்டங்கள் வழங்க அனுமதி; தொழில்துறை மற்றும் வெளிநாட்டு கல்வித்துறை நிபுணர்களை GIAN அல்லது “இந்தியாவில் கற்பித்தல்” மூலம் இறக்குமதி செய்தல்; இணைய சேமிப்பு கிடங்குகளான MOOC [பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்] போன்றவை மூலம் பாடங்களை உருவாக்குதல்; கல்வியை கணினிமயமாக்கி ‘Digital India” மூலம் கல்வி நிறுவனங்களை இணைத்தல்; ஆன் – லைனில் படிப்பு, தேர்வு என பள்ளி, கல்லூரிகளை ஒழிப்பது, ஆசிரியர்களின் வேலை உரிமையை பறிப்பது என பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் கல்விபெறும் உரிமையை பறித்து கார்ப்பரேட்டுகள் சூறையாட வழிவகுத்துக்கொடுக்கிறது இந்த புதிய கல்விக்கொள்கை.
புதிய கல்விக்கொள்கையில் 5-ம் வகுப்பிற்கு மேல் தொழிற்கல்வி என்பதன் மூலம் சாதித் தீண்டாமையை நிலைநாட்டும் குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயல்கிறது. பெண்களுக்கு டி.டி.எச் மூலம் வீட்டிலேயே கல்வி அளிப்பது என்பது ஆணாதிக்க சமூகக் கொடுமையின் கீழ் பெண்களை வைத்துக்கொள்ளும் சதிதான்.
எல்லாம் சமஸ்கிருதமயம் – வேதமயம் – பார்ப்பனமயம்!
செத்தமொழியான சமஸ்கிருதத்தை ஆரம்பக்கல்வி முதல் ஐ.ஐ.டிக்கள் வரை தனி பாடமாக்க திட்டமிட்டிருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MHRD). இதற்காக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தலைமையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சமஸ்கிருதத்தையும், வேதங்களையும் வளர்ப்பதற்கும், பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் பத்து வருடத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளது. ’’பள்ளி கல்வி, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல் மற்றும் சமூகவியல் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என அனைத்திலும் சமஸ்கிருதத்தை தனி பாடமாக்க வேண்டும்; +2 வரை அனைவருக்கும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்குவது; ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மத்தியப்பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி அமைப்புகளில் சமஸ்கிருதத்திற்கு தனிப் பிரிவுகளை உருவாக்க வேண்டும்; இதன் மூலம் ‘சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப விசயங்களோடு தொடர்புபடுத்தி பார்ப்பது, சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக பயிற்றுவிக்க’ வேண்டும்’’ என்று அறிவியலுக்கு புறம்பான புராண – இதிகாச கட்டுக்கதைகளை, மாணவர்களிடம் புகுத்தி அறிவியல் கண்ணோட்டத்தை அறுத்தெரிய முயல்கிறது ஆரிய – பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
இந்தியா முழுமைக்கும் உள்ள சமஸ்கிருத வேத கல்வியை நிர்வகிக்க, பட்டம் வழங்க Central board of veda and sanskirit secondary education என்ற தனி அமைப்பை உருவாக்குவது; சமஸ்கிருத வேத பள்ளி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது; சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை உருவாக்குவது; இந்த பாடங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நவீன முறைகளில் எளிமையாக்குவது; இணையவழிக் கல்வி மூலம் கற்பித்தல், குருகுல முறையை கடைபிடிப்பது, B.Ed, D.Ed பட்டயப்படிப்புகளை சமஸ்கிருதத்தில் வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கல்வி அமைச்சகம்போல் செயல்படவில்லை. கல்வியை காவிமயமாக்கும் நோக்கம் கொண்ட இந்துத்துவா ராஷ்டிர மேம்பாட்டு அமைச்சகமாகவே செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் பல்தேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை தேசம் என்பதை அதாவது இந்துராஷ்டிரத்தை நிறுவப்பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ் – மோடி கும்பல். கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை சூறையாடுவதற்கெதிராக மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் போராடுவதில் இருந்து திசை திருப்புவதற்காக அவ்வப்போது சாதி-மத கலவரங்களையும் தூண்டிவிடுகின்றது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கூட்டம். அதேசமயம், கல்வியிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும், ஆட்சியிலும் சமஸ்கிருதத்தையும், ஆரிய பார்ப்பன வேத கலாச்சாரத்தையும் புகுத்தி பார்ப்பனிய மனுதர்ம சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டத் துடிக்கிறது மோடி அரசு.
தீர்வு என்ன?
புதிய கல்விக் கொள்கை – 2016
இந்தியா என்பது ஒரு நாடும் அல்ல, இந்து என்பது ஒரு மதமும் அல்ல. ஆங்கிலேய காலனியாட்சியாளர்களால் இந்த நாட்டை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா. அவன் வைத்த பெயர்தான் இந்துமதம். அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு மதங்கள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது. டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் (சேட்டுகளின்) ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்து இந்தி இந்தியா எனும் பூனுலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா. இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள் தான் ’தேசபக்த’ ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி இந்துத்துவாவாதிகள்.
இந்த சேட்டுகள் – ஆரிய பார்ப்பனர்களின் கொடுங்கோன்மையை தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த தேசிய இனத்தின் மொழியே ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, வழிபாட்டுமொழியாக, நீதிமன்ற அலுவல் மொழியாக நிலைநாட்டப்பட வேண்டும். சமத்துவ அடிப்படையில் தேசிய இனங்கள் விருப்பப்பூர்வமாக சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் நாடு – இதுதான் ஒரே தீர்வு.
இந்த தீர்வை சாதிக்க மாணவகள் – இளைஞர்கள் சமூகத்தை ஒன்று திரட்டுவோம்!
நாட்டை அடிமைப்படுத்தும் காட்ஸ் ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!
இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கை (2016) முறியடிப்போம்!
மறுகாலனியாக்கத்திற்கு மரண அடிகொடுப்போம்!
சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனியமயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்!
மோடியின் குஜராத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாகச் சொல்லி தலித் இளைஞர்களை ஊரே வரிசை கட்டி நின்று காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதை சில நாட்களுக்கு முன்பு கண்டு பதைபதைத்தோம். அந்தக் கொடுமை பெரியாரின் தமிழகத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
நத்தம் காலனி எரிப்பு, இளவரசன் உயிர்பறிப்பு, கோகுல்ராஜ் தலையெடுப்பு, உடுமலை சங்கர் படுகொலை என்று அடுத்தடுத்து சாதிவெறித் தாக்குதல்களின் தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டம், புலியூர் வெள்ளாளப்பட்டியில் 18.07.2016 அன்று நடந்த சாதிவெறித்தாக்குதல் நம்மை மேற்கூறிய கேள்விக்கு தள்ளி விடுகிறது.
பள்ளிப் பேருந்தில் வந்த தங்கள் ஊர் மாணவிகளைப் பார்த்து (6, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள்) டாட்டா காட்டியதாகச் சொல்லி 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைத் தாக்கியுள்ளனர், கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறியனர். அம்மாணவர்கள், தாங்கள் எதற்காக தாக்கப்பட்டோம் என்பது கூட தெரியாமல் தங்கள் பெற்றோரிடம் முறையிடவே, அவர்கள் தாக்கியவர்களிடம் சென்று எதற்காக தாக்கினீர்கள் என்று நியாயம் கேட்டுள்ளனர். “சக்கிலிய பசங்க எங்க புள்ளைங்களுக்கு டாட்டா காட்டுவதா” என்று இழிவு படுத்தியுள்ளனர். இதனால் மேலும் கோபமடைந்த ஒரு மாணவனின் தாய், கேட்டவனின் சட்டையைக் கோர்த்துப் பிடித்து தகராறு செய்துள்ளார். தள்ளுமுள்ளு நடந்ததில் அந்த தாயும் தாக்கப்பட்டார். 5 மணிக்கு நடந்த சம்பவம் இத்துடன் முடியவில்லை.
நாம் தமிழர் கட்சியை சார்ந்த இராசேந்திரன்
பள்ளி மாணவர்கள் டாட்டா காட்டியத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத கொங்கு சாதி வெறியர்கள் இதை தங்கள் சாதிக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு உடனடியாக ஃபோன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் சுமார் 50-க்கு மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு கம்பி, கத்தி, உருட்டுக்கட்டையுடன் 7 மணியளவில் அருந்ததியர் தெருவிற்குள் தாக்குதல் தொடுக்க நுழைந்துள்ளனர். கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் இராசேந்திரன் என்பவர், தாக்க வருவதில் தன்னுடன் படித்த நபர்களும் இருக்கவே, “என்ன பிரச்சினை, எதுவாயிருந்தாலும் பேசிக்கொள்ளலாம்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவரை சுற்றி வளைத்து தாக்கி மண்டையைப் பிளந்தது சாதி வெறிக்கூட்டம். நீதான்டா எல்லாத்துக்கும் காரணம். உன்னை கவனிச்சா எல்லாம் சரியாகும் என்று சொல்லி தாக்கினர். இவர் ஊரின் நலனுக்காக தகவல் உரிமைச்சட்டத்தில் மனு போட்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடங்கி கவுன்சிலரிடம் சென்று வாதாடுவது வரை பல விசயங்களில் ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளவர், இவர்.
இவர் மீதான தாக்குதலைத் தடுக்க வந்த இவரது தம்பி இராமலிங்கத்தையும் சுற்றி வளைத்து தாக்கி காலை உடைத்தனர். ஏற்கெனவே அவரது கால் உடைந்து பிளேட் வைக்கப்பட்டு மெல்ல நடக்க ஆரம்பித்த அந்த காலை மீண்டும் உடைத்துள்ளனர். குறிப்பாக, கும்பலில் ஒருவன் இதுதானடா உடைந்த கால், என்று கேட்டே தாக்கி உடைத்துள்ளான். மக்கள் திரளத் தொடங்கவே, இருவரின் இரத்தத்தையும் கண்டு சற்று வெறியடங்கிய கும்பல் திரும்பிச்சென்றது. ஆம்புலன்ஸ் 108-ல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காவல் துறையிடம் புகார் தரப்பட்டது. தாக்குதல் பற்றிய செய்தி சமூக வலைதளத்தில் பரப்பப் பட்டது. மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சாதி வெறியர்களை கண்டித்து சுவரொட்டி போட்டு ஒட்டப்பட்டது. இவற்றின் அழுத்தம் காரணமாக தாக்கிய ஆதிக்க சாதிவெறி கும்பல் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் 19, 20 வயதேயான சாதி வெறியூட்டப்பட்ட விடலைகளாவர்.
மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி
இதனால் மேலும் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் சுவரொட்டியை வாட்ஸ்-அப் மூலம் பரப்பியதுடன் தொலை பேசி மூலம் வசைமாரி பொழிந்து கொலைமிரட்டலும் விடுத்தனர். 12 வயது சிறுமியை கேலி செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் பகுதி பொருப்பாளர் பொன்னரசு ( இவருக்கு +2 படிக்கும் பையன் இருக்கிறான்.) மற்றும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் இருவரையும் உள்ளிட்டு 5 பேர் மீது பொய் வழக்கு தொடுத்து ஒருவரைக் கைது செய்யவும் வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள பிரச்சாரம், மக்கள் அதிகாரம் அமைப்பின் சுவரொட்டி பிரச்சாரம் போன்றவற்றால் இதை சாதி வெறித் தாக்குதாலாக மாற்ற முடியாமல் பம்முகின்றனர். மறுபுறம் தங்கள் சாதி இளைஞர்கள் சிலர் கடும் வழக்கில் சிக்கியுள்ளதால் அவர்களது குடும்ப நிர்ப்பந்தத்தால் நெருக்கடிக்கு ஆளாகி அடக்கி வாசிக்கின்றனர்.
அதே சாதியில் உள்ள ஜனநாயக சக்திகள் சிலர் சின்ன பையன்களின் பிரச்சினையை பெரும் சாதி மோதலாக மாற்ற முயற்சிக்கும் சில சாதி வெறியர்களை கண்டிக்கவும் செய்கின்றனர். தற்போதைய இளைஞர்களிடம் வளர்ந்து வரும் சாதி வெறி பற்றி கவலை தெரிவிக்கின்றனர். மற்ற பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் வளர்ந்து வரும் கொங்கு வெள்ளாள சாதி வெறிப் போக்கைக் கண்டு அச்சமடைந்துள்ளனர்.
இராசேந்திரன் தம்பி இராமலிங்கம் மருத்துவமனையில்
எனினும் பக்கத்து ஊர்களிலிருந்து கொங்கு இளைஞர்களை பெருமளவில் திரட்டி பெரும் தாக்குதலை நடத்த வேண்டும் என்று சிலர் ஊளையிட்டுத் திரியவும் செய்கின்றனர். வட தமிழகத்தில் பா.ம.க வன்னிய சாதிவெறியர்களாலும் தென் தமிழகத்தில் தேவர்சாதி வெறி சங்கங்களாலும் விசிறி விடப்பட்ட சாதி வெறி தற்போது மேற்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாள சாதி வெறியர் சங்கங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது. வட இந்தியாவில் ஜாட், பட்டேல் சாதி வெறியர்களைப் போல இந்து மதவெறியர்களுடன் கைகோர்த்து வரும் இத்தகைய ஆதிக்க சாதி வெறியர்களைத் தடுத்து நிறுத்துவது இன்றைய உடனடி கடமையாகும். தமிழராய் ஒன்றிணைவோம் என்று வெற்று சவடலால் என்ன பயன்? தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும் போது ஆதிக்க சாதிவெறியை கண்டிக்காமல், சட்ட பூர்வமாக தண்டிக்காமல் இவர்கள் சொல்லும் அந்த ஒற்றுமை வரவே வராது.
மேலும், சாதி வெறி என்பது அந்தந்த சாதியில் உள்ள ஆதிக்க சக்திகளுக்கே பலனளிக்கும் என்பதை ஒவ்வொரு ஆதிக்க சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள் உணர்வதுடன் அத்தகைய சாதி வெறியை வளர்க்கும் சக்திகளுக்கெதிராக பிற சாதி உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றிணைந்து சொந்த சாதியின் ஆதிக்கவாதிகளை-வெறியர்களை தனிமைப்படுத்துவது அவசியம் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் பெரியார் பிறந்த மண் என்ற பெருமையை தக்க வைக்க முடியும்.
யுவராஜ் முதலான கொங்கு வேளாள சாதிவெறியர்களின் சலசலப்புக்கு “மக்கள் அதிகாரம்” அஞ்சாது. எல்லா சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களை திரட்டி இந்த அதிக்கசாதி வெறியர்களை வீழ்த்தும் போராட்டத்தை தொடர்வோம். ஆதரியுங்கள்! பத்திரிகை நண்பர்கள் இச்செய்தினை பரவலாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.
புலியூர் வெள்ளாளப்பட்டியில் போலீஸ்
இராசேந்திரன் தம்பி இராமலிங்கத்தின் உடைக்கப்பட்ட கால்
நாம் தமிழர் கட்சியின் இராசேந்திரன்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்:
மக்கள் அதிகாரம், கரூர்.
தொலை பேசி- 9791301097.
———————————————
புலியூர் வெள்ளாளப்பட்டி தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் பத்திரிக்கை செய்தி
அருகதை இழந்தது அரசக்கட்டமைப்பு !
இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம் !!
மக்கள் அதிகாரம்
நெ.29, வ.ஊ.சி. நகர், முதல் தெரு, தாந்தோணிமலை, கரூர் – 5
——————————————————————————–
23.07.2016
இரா.சக்திவேல்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கரூர்
செல்: 97913 01097
கண்டன அறிக்கை
அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு வணக்கம்,
தமிழ்நாட்டில் தற்பொழுது சாதி கலவரங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தருமபுரி, நத்தம் காலனியில் நடைபெற்ற சாதி கலவரம் மாதிரி பல இடங்களில் ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், புலியூர், P.வெள்ளாளப்பட்டியில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் மீது அதே பகுதியைச் சேர்ந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். தலித் இனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மண்டையை உடைத்ததோடு, ராமலிங்கம் என்பவரின் காலை உடைத்து எலும்பு முறிவு ஏற்படுத்தியதால் மேற்படி இருவரையும் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து தற்பொழுது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள 10 கிராமத்தில் உள்ள அவர்கள் சாதியை சேர்ந்தவர்களை கூட்டம் சேர்த்துக்கொண்டு மீண்டும் தெருவில் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் இப்பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடி விசாரணை நடத்த வேண்டும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கி எவ்வித சாதி கலவரமும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த கண்டன அறிக்கையை தங்கள் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு,
(சக்திவேல்) ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம், கரூர்
————————————————————–
கொங்கு வெள்ளாளர் கொலைவெறி தாக்குதலிருந்து எங்கள் பகுதி மக்களை காப்பாற்ற ஊர்மக்கள் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கொடுத்த கடிதம்
அனுப்புதல்
P.ராஜேந்திரன் மற்றும்
ஊர் பொதுமக்கள்,
P.வெள்ளாளப்பட்டி
அhpசன காலனி தெரு,
புலியூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம்.
பெறுநர்
உயர்திரு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்,
தாந்தோணிமலை,
கரூர்.
பொருள்: கொங்கு வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி கலவரம் செய்து மீண்டும் நடத்த உள்ள கொலைவெறி தாக்குதலிருந்து எங்கள் பகுதி மக்களை காப்பாற்ற வேண்டியும், உரிய பாதுபாதுகாப்பு வழங்க வேண்டுதல் – தொடர்பாக.
அம்மா,
நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த 18.07.2016 அன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர்
உருட்டுக்கட்டை, கம்பு, குச்சி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களுடன் எங்கள் தெருவிற்குள் நுழைந்து எங்கள் சாதியை இழிவாக பேசி திட்டி, எங்கள் வீடுகளுக்குள் புகுந்து அப்பாவி இளைஞர்கள் மீது திட்டமிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், எங்கள் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மண்டையை உடைத்ததோடு, ராமலிங்கம் என்பவரின் காலை உடைத்து எலும்பு முறிவு ஏற்படுத்தியதால் மேற்படி இருவரையும் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து தற்பொழுது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சம்மந்தமாக பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள 10 கிராமத்தில் உள்ள அவர்கள் சாதியை சேர்ந்தவர்களை கூட்டம் சேர்த்துக்கொண்டு மீண்டும் எங்கள் தெருவில் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் எங்கள் தெருவில் உள்ள மக்களுக்கும், மேற்படி சிகிச்சை பெற்றுவரும் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே சமூகம் அவர்கள், மேற்கண்ட கொங்கு வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து எங்கள் பகுதி மக்களை காப்பாற்றுவதுடன், எங்கள் பகுதி மக்களுக்கும் மருத்துமனையில் சிகிச்சைபெற்று வரும் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோருக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்கி, கொங்கு வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்களால் நடக்கவிருக்கும் சாதி கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
முப்பாலுக்கு அப்பாலும்
வரும் சிரமம் தவிர்க்க
வழிகாட்டும் உலகப் பொது அறமாம்.
திருக்குறளை
உவக்குமோ வருணா சிரமம்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…”
எனும் ஒரு அடி போதாதா?
“சதுர்வர்ணம் நமா சிருஷ்டம்…” எனும்
பகவத்கீதையின் காவித் தவளைகள்
பல அடி தாவிக் குதிக்க !
“மனத்துக்கண் மாசு இலன் ஆதல்;
அனைத்து அறன் ஆகுல நீர பிற”
இந்த ஈரடி படி இருக்கச் சொன்னால்
சங்கராச்சாரிக்கே ஜன்னி கண்டுவிடுமே!
“மழித்தலும் நீட்டலும் வேண்டா…”
ஒரு குறள் போதாதா?
சாதுக்கள் வாது செய்ய!
திருவள்ளுவரை இந்து சாமியாராக்கி
தீபாராதனைக் காட்டி
கங்கைக் கரையில்
கரைக்க நினைத்தாலும்
தீட்டிய திருக்குறளோ
கருத்துற்றோரின்
இதயக் கரையில்
இதழ்களின் படியில்
தீய வருணாசிரமத்திற்கு
திவசமே கொடுத்து விடுகிறது.
பகையாடிக் கெடுக்க
முடியாத காரணத்தால்
உறவாடிக் கெடுக்க
வள்ளுவர் மேல்
காவிக்கொரு காதல்.
வள்ளலார் மேல்
வந்த காதல் – அவரை
ஜோதியில் கலந்தது.
வள்ளுவர் மேல்
வந்த காதல் – அவரை
வீதியில் எறிந்தது.
நல்ல வேளை
ஜோதிக்கு பதிலாக
தொலைக்காட்சி இருந்ததால்
நம் கண்ணுக்கு தெரிந்தது.
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம் இனி வடக்கே வரும் முதலில் திருவள்ளுவர் சிலை பிறகு பெரியார் சிலை !
கல்விக் கூடத்தில்
சமஸ்கிருதத் திணிப்பு – கோயில்
கருவறையில் தமிழ், தமிழன் தீட்டென்று
பார்ப்பனக் கொழுப்பு
கண்டுகொள்ளாமல்
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பசப்பு!
தெருவில் வந்து என்னடா
திருவள்ளுவர் நடிப்பு!
விவேகானந்தரைப் பிடித்துக் கொண்டு
விளங்காத ஆர்.எஸ்.எஸ்.
திருவள்ளுவரைப் பிடித்துக் கொண்டு
தெருவில் திரியப் பார்க்கிறது,
இந்து வேடம் வந்தாலும் – வேறு
எந்த வேடத்தில் வந்தாலும்
சந்து பொந்திலும் வறுத்தெடுக்க
வள்ளுவர் அதிகாரம் காத்திருக்கிறது !
உள்நோக்கம் மட்டுமல்ல
உள்ள நோக்கமும் எதிர்ப்புக்குரியது.
இல்லாத ராமனுக்கு
மசூதியை இடித்து
கோயில் கட்ட குவிந்த கும்பல்
இருக்கிற திருவள்ளுவருக்கு
பீடம் கட்ட
பீறிடக் காணோமே!
இங்கிருந்து ராமனுக்கு
செங்கல் சுமந்த அனுமார்களுக்கு
உத்தரகாண்ட் ‘கிளைமேட்’
ஒத்து வராதோ !
தெற்கிருந்து ஒரு சிலையின் பாதம் பட்டாலே கங்கையின் புனிதம் தீட்டாகும் என்றால்…
தெற்கிலிருந்து
ஒரு திருவள்ளுவர் சிலை
கங்கை நதித் தீரம்
கால் வைக்க முடியாதெனில்,
வடபுலம் தோன்றிய
ஆரிய சாமிகளுக்கு
காவிரிக் கழிமுகம் வரைக்கும்
கோயில் எதற்கு ?
கோதாட்டும் சிலைகளுக்கு
வேலிக்கணக்கில்
இங்கே விளை நிலம் எதற்கு ?
தெற்கிருந்து
ஒரு சிலையின் பாதம் பட்டாலே
கங்கையின் புனிதம்
தீட்டாகும் என்றால்,
எதற்காக
அதை அஞ்சலில் அனுப்பி
எங்கள் அருமைத் தாய் நிலத்தை
அசிங்கப்படுத்துகிறாய் ?
உண்மையில்,
கங்கையைத் ‘தீட்டாக்குவது’ யார் ?
திருவள்ளுவரா
திருந்தாத அகோரிகளா ?
ஒரு குலத்துக்கு ஒரு நீதி
மனு நீதியை எதிர்த்ததனாலேயே
வான்புகழ் வள்ளுவரை
ஊன்புகழ் ஆரியம் எதிர்க்கிறது.
“வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவர நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி…” என
மணோன்மணியம் சுந்தரனார்
வியந்தோதிய வள்ளுவரை
சாதி சொல்லி
பழி வாங்குது பார்ப்பனியம்.
ஆரிய தேசம்
மாறிடும் வேளை
நாறிடும் கங்கை தெளியும்,
நால்வர்ண வேதம் ஒழியும்.
கரை மீறிடும்
பாட்டாளி வர்க்க அரசியலால்
கங்கையின் அழுக்கும் தொலையும்.
புண்ணிய நீர் வியர்வைக்கு
பூசாரிகள் கூட்டம் பணியும் !
காலனியாதிக்க எதிர்ப்புப் போரிலேயே
முதலில் கால் பதித்த
தெற்கின் திருமுகங்களை
வரலாற்றில் மறைத்த
வடக்கின் ஆளும் வர்க்கமே,
கங்கையின் ராமன்
இங்கே கதை விடும்போது
எங்கள் திருவள்ளுவர் என்ன
ஈ.வெ.ரா.-வுக்கும்
இடமில்லையா என்ன ?
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம்
இனி வடக்கே வரும்
முதலில் திருவள்ளுவர் சிலை
பிறகு பெரியார் சிலை !
ஜூலை 25 முற்றுகைப் போர் வெல்லட்டும்! வழக்குரைஞர் வாய்ப்பூட்டு சட்டம் தகர்த்தெறியப்படட்டும்!
—————————————————————————
நீதிபதிகள் மன்னர்கள் அல்ல!
வழக்குரைஞர்கள் அடிமைகள் அல்ல!
ஜூலை 25, 2016
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……
சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்
அன்பார்ந்த வழக்குரைஞர்களே!
வழக்குரைஞர் சட்டம், 1961 பிரிவு 34(1)-ன் கீழ் சென்னை உயர்நீதிமன்ற அறிவிக்கை செய்துள்ள திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களாக நாம் போராடு கிறோம். நீதிமன்ற புறக்கணிப்பால் அனைத்தையும் இழந்து துவண்ட போதும் மானம் காக்க ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடி வருகிறோம். 41 வழக்குரைஞர்களின் சட்டவிரோத இடைநீக்கத்தினால் நாம் பயந்து பின்வாங்கி விட்டோம் எனும் நிலையினை தகர்த்து அனைத்து வழக்குரைஞர்களும் ஒரணியில் நிற்கின்றோம்.
ஜூன் 6 வழக்குரைஞர்கள் பேரணியினை MHAA அறிவித்த மாத்திரத்திலேயே தலைமை நீதிபதி பேச்சு வார்த்தைக்கு தயார் எனக் கூறினார். பேசப் போனால் நிறுத்தி வைக்கவோ, திரும்பப் பெறவோ முடியாது, சில திருத்தங்களை வேண்டுமென்றால் செய்யலாம் என பதிலளித்தார். தமிழகம் தழுவிய வழக்குரைஞர்களின் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதிகளின் முழு அவை கூடி புதிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனத் தீர்மானம் இயற்றியது, புதிய விதிகளை அரசிதழில் வெளியிட்டு, நடைமுறைக்கு கொண்டு வந்த பின் நீதிபதிகளின் முழு அவை தீர்மானத்திற்கு என்ன சட்ட அங்கீகாரம் உள்ளது. இதனால்தான் MHAA-ன் பொதுக்குழு முடிவின்படி நீதிமன்ற புறக்கணிப்பு, போராட்டங்கள் என உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட போதுதான் திருத்தங்கள் ஆய்வு செய்ய நீதிபதிகளின் ஐவர் குழு அறிவிக்கப்பட்டது. அக்குழுவும் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட திருத்த விதிகளில் மாற்றங்கள்-திருத்தங்கள்தான் செய்யுமாம். வழக்குரைஞர் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமலேயே உச்சநீதிமன்றத் தீர்ப்பினை தங்களது வசதிக்கேற்ப வியக்கியானம் செய்து விதிகளை நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால் இப்போதோ போராட்டத்தை கைவிட்டு வாருங்கள்; கருத்து கூறுங்கள்: தேவைப்பட்டால் திருத்தம் செய்கிறோம் என்று கூறினால் ஏற்க முடியுமா என்ன?
பல இலட்சம் வழக்காடிகளின் வழக்குகள் பாதிப்படைந்துள்ள நிலையிலும், ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்கள் தொழிலற்ற நிலையிலும் தலைமை நீதிபதி தன்னுடைய பிடிவாதத்தினை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றார். வழக்குரைஞர் சங்க பிரதிநிதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியினை கடந்த வாரம் சந்தித்த போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தமிழக நீதிபதிகளிடம் இப்பிரச்சினை சுமூகமாக பேசித் தீர்க்க அறிவுறுத்துவதாகக் கூறியுள்ளார். ஆனால் இன்று வரை பேச்சுவார்த்தைக்கு தலைமை நீதிபதி அழைக்கவேவில்லை. பொது மக்கள் பாதிக்கப்படுவது பற்றியோ, வழக்குரைஞர்கள் அவதிக்குள்ளாவது பற்றியோ அவர்கள் கவலையில்லாமல் இருக்கின்றனர். நம்மால் அப்படி இருக்க முடியுமா என்ன?
நம் போராட்ட பாராம்பரியம் வலிமையானது. பல ஆண்டுகளுக்கு பின் MHAA வழக்குரைஞர்களும், தமிழகத்தின் இதர வழக்குரைஞர்களும் ஒரணியில் அணிவகுத்து உள்ளோம். வழக்குரைஞர்களின் போராட்டத்தால் வாழ்வு பெற்ற MBA தலைமையை தவிர பெரும்பாலான MBA வழக்குரைஞர்கள் நம் பக்கம்தான். இது இறுதிச்சுற்று. உயர்நீதிமன்றத்தினை முடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதிலுமிருந்து வழக்குரைஞர்கள் ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வர இருக்கிறார்கள். அடிமை சாசனத்தினை முறியடிக்க ஆர்ப்பரித்து சென்னை உயர்நீதிமன்றத்தினை முற்றுகையிட உள்ளார்கள்.
——-
• MHAA-வின் போராட்ட பாராம்பரியத்தினை உயர்த்தி பிடித்து உயர்நீதிமன்ற முற்றுகைப் போரில் ஆயிரக்கணக்கில் முன் நிற்போம்!
• முற்றுகைப் போர் வெல்லட்டும்!
• வழக்குரைஞர் வாய்ப்பூட்டு சட்டம் தகர்த்தெறியப்படட்டும்!
———–
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம்
Madras High Court Advocates’ Association(MHAA)
_______________________
புதிய சட்டத் திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறு எனும் உரத்த குரலில் தொடரும் வழக்கறிஞர் போராட்டத்தில் கடந்த 20ந் தேதியன்று பார் கவுன்சில் மற்றும் தலைமை நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் மூத்த வழக்கறிஞர் திருமலைராஜன் பேட்டியளித்திருந்தார்.
இன்று 25.06.2016 காலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குழுமிய வழக்கறிஞர்கள்.
இதற்கிடையில், 22ந் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிபதிகளிடம் சென்னையில் மூத்த வழக்கறிஞர்களுடன் இருநூறு வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய சட்டத் திருத்தம் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தவறு என விவாதித்தனர்.
இன்று அனைத்திந்திய பார் கவுன்சில் போராட்டத்தில் முன்நின்று போராடிய 126 வழக்கறிஞர்களை அராஜகமாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
ஆகையால், திருமலைராஜன் அவர்களுடைய பேட்டியை வெளியிடுகிறோம்.
நாளை நடக்கும் முற்றுகை போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தி, புதிய சட்டத் திருத்தத்தை முறியடிப்போம்.
-PRPC, சென்னை.
————–
20 ஜூலை அன்று சன்நியூஸ் தொலைக்காட்சியில் பார் கவுன்சில் தலைவர் செல்வத்தின் அறிவிப்புக்கு பிறகு வழக்கறிஞர்கள் போராட்ட கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜனிடம் வழக்கறிஞர் போராட்டம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்
(முழு தொகுப்பு)
——-
சன் நியூஸ் கேள்வி 1:
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்வழக்கறிஞர்கள் வருகிற 22 ஆம்தேதிக்குள் போராட்டத்தைகைவிட்டு நீதிமன்றத்திற்குசெல்லவில்லை என்றால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பார் கவுன்சில்தலைவர் செல்வம் இறுதிஎச்சரிக்கை விடுத்து நோட்டீஸ்அனுப்பியுள்ளார். அதை ஒருவேண்டுகோளாக பார்க்கிறீர்களா? அல்லது மிரட்டலாக கருதுகிறீர்களா? மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்
பார் கவுன்சில் தங்கள் அதிகாரம் எது என்று தெரியாமல் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அவர்கள்ஏன் இந்த சட்டத்திற்கு ஒப்புதல்அளித்தார்கள் என இதுவரை விளக்கவும் இல்லை . 34, 35 இந்தஇரண்டு சட்டப்பிரிவுக்கும்வேறுபாடு தெரியாமல்,பார்கவுன்சில் தலைவர்கள் தடுமாறிக் கொண்டிருப்பது தான்உண்மை. இந்த ஜனநாயகவிரோதமான சட்டத்தை தமிழகவழக்கறிஞர்கள் மீது புகுத்துவதைபற்றி பார் கவுன்சில் தலைவர்கள்முதலில் விளக்கம் அளிக்கவேண்டும். பார்கவுன்சில்எங்களுக்கு ஆதரவுதெரிவிக்கிறார்களா? அல்லது சட்டவிரோதமாக செயல்படும் தலைமைநீதிபதிக்கு ஆதரவாகஉள்ளார்களா? என்பதை தெரிவிக்கவேண்டும். அதன் பின்னர்தான்எங்களிடம் சமாதானபேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும். அதை விடுத்துமிரட்டுவது என்பதுவழக்கறிஞர்களிடம் எடுபடாதுஎன்பதைதெரிவித்துக்கொள்கிறோம்.
———
சன் நியூஸ் கேள்வி 2:
40 நாட்களை கடந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பொதுமக்கள் சம்பந்தமான வழக்குகள் பாதிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகூறியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதன் பின்னர் போராட்டம் அவசியம் தானா? மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்திரவாதம் கொடுத்த பின்னர் உயர்நீதிமன்ற தலைமை இதைபற்றி வாயை திறக்கவே மறுக்கின்றார். நாங்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விண்ணப்பம் கொடுத்து ஒன்ரை மாதங்கள் ஆகிறது. இதுவரை எங்களை எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. பேசுவதற்கே பெரிய போராட்டம் நடத்த வேண்டிஉள்ளது. பார்கவுன்சில் தேர்தலில் எங்களிடம் வாக்கு வாங்கி வெற்றிபெற்று தலைவர்கள் ஆனவர்கள்,எப்படி எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பது புரியவில்லை. போராட்டங்களால் வழக்காடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தற்காலிகம் தான். உண்மையில் இந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் வழக்காடிகளுக்கு நன்மை பயக்காது மாறாக நெருக்கடிதான் ஏற்படும், கடுமையான “Hot Atmosphere” போன்ற சூழல் நீதிமன்றத்திற்குள் நிலவும். பார்கவுன்சில் தலைவர்கள் இதைப் புரிந்து கொண்டு தலைமை நீதிபதியிடம் விளக்கமாக கூற வேண்டும்.
————–
சன் நியூஸ் கேள்வி 3:
நீதித்துறை நிர்வாகத்திற்கும், பார் கவுன்சிலுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் , வழக்கிற்காக வரும் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது நியாயம்தானா?
மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
நாங்கள் நியாயம் என சொல்லவில்லை. அநியாயமாக வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கு சட்டதிருத்தத்தை கொண்டு வந்ததற்கு பார்கவுன்சில் தான் காரணம் என நினைக்கிறோம். பார்கவுன்சில் ஒழுங்காக இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என்பது எங்கள் கருத்து. இப்படி ஒரு சட்டம் அமலுக்கு வருகிற போது வழக்கறிஞர்களுக்கே அது தெரியவில்லை, இந்த சட்டத்தை இயற்றுவதற்கு முன் வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்க வேண்டுமா? எங்களிடம் ஓட்டு வாங்கி வந்த பார்கவுன்சில் தலைவர்கள் வழக்காடிகளுக்கும் விரோதமாகும் இந்த சட்டத்திருத்ததிற்கு ஏன் ஒப்புதல் அளித்தார்கள்? என்பதை விளக்கமாக சொல்ல வேண்டும்.
—–
சன் நியூஸ் கேள்வி 4:
இந்த சட்டதிருத்தத்தை ஆய்வு செய்வதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவாக மாற்றப்பட்டிருக்கிறது, அதில் முறையிடலாம். அவர்கள் தங்கள் பணியை தொடங்கி இருக்கிறார்கள். உங்களுடையை கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் ஏன் இப்படி ஒரு போராட்டம் நீடிக்கிறது?
மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
மன்னிக்கவும், அந்த குழுவில் உள்ள ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஏற்கனவே இந்த சட்டதிருத்ததிற்கு ஒப்புதல் வழங்கியவர்கள். அவர்களிடம் போய் பேசினால், எப்படி வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கும்?
——
சன் நியூஸ் கேள்வி 5:
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனபதுதான் வழக்கறிஞர்களின் பிரதான கோரிக்கையா?
மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
இல்லை. அனுமானத்தில் பேச முடியாது, அதற்கான நடவடிக்கை வேண்டும். வழக்கறிஞர்கள் நீதித்துறை காப்பாற்றுவதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதித்துறையை அழிப்பதற்காகவே தயாராகி விட்டார்கள். அவர்கள் யார் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை, நடைமுறையிலேயே தெரிந்து கொள்வீர்கள். ஆனால் நீதித்துறையை காப்பாற்ற வேண்டிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எந்தவொரு முயற்சி எடுக்க வில்லை. இது வருத்ததிற்குரியது.
——
சன் நியூஸ் கேள்வி 6:
அப்படியானால் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா?
மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கிறது. 65000 வழக்குகள் நடக்காமல் தேங்கி உள்ளது. 99 சதவீதம் நீதிமன்றம் இயங்குகிறது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகிறார், இது பார்கவுன்சிலுக்கு தெரியாதா?
இந்த சட்டதிருத்ததின் மூலம் வழக்கறிஞர்களுக்கு என்ன பிரச்சினை? எப்படி வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும் அநீதியாக மாறும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிந்து கொள்ளாமலேயே பல பேர் பார் கவுன்சிலில் உள்ளனர், வழக்கு நடத்துவதற்கு தொடர்பே இல்லாதவர்கள், நீதிமன்றத்திற்கு செல்லாதவர்கள் வழக்கறிஞர்களை மிரட்டுகிறார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கபாலி படத்தின் கதை என்ற வஸ்து கோடம்பாக்கத்து சிற்பிகளால் கொத்தி கைமா போடப்பட்ட பாலிதீன் போன்றோதொரு அயிட்டம் என்பதால் அதை எந்த பழையை பொருள் கடைக்காரரும் பத்துரூபாய்க்கு கூட வாங்க மாட்டார். ஒரு ஊருல ஒரு நல்ல ரவடியாம். ஊருக்கு நல்லது செய்யிற அந்த நல்ல ரவுடியை குடும்பம் குட்டியா வாழ விடாம கெட்ட ரவுடிங்க சேந்து பிரச்சினை பண்றாங்களாம். பிறகு நல்ல ரவுடி கெட்டவுங்களை அழிக்கிறாராம்.
இந்த பாட்டி வடை சுட்ட கதையை மலேசியாவில் எடுத்தால் என்ன, மணிப்பூரில் எடுத்தால் என்ன? கபாலியை பார்ப்பதற்காக பணம் பறிக்கப்படுபவர்கள் தமிழ் என்பால் மலேசியா, தோட்டத் தொழிலாளிகள், குடும்பம், காதல், பாசம், பிரிவு, ஏக்கம் என்று வடபழனி சிக்னலில் கிடைக்கும் இத்துப் போன சினிமா காஸ்ட்யூமால் போர்த்தியிருக்கிறார்கள்.
முதல் காட்சியில் ரஜினி சிறை வாயில் கம்பியில் தொங்கு தண்டால் எடுக்கும் போதே காமரா கவனமாக இடுப்பளவோடு நிற்கிறது. நாமும் நைந்துபோன பாலீதீன் பை ஓட்டைகளைப் பார்த்து கதை இதுதான் என்று 2.30 மணி நேர சித்திரவதைக்கு தயாராகிறோம். படம் முழுக்க ரஜினி முதுகைக் காட்டிக் கொண்டு கோட்டு போடுவது, கையை வெட்டுவது, முகத்தை திருப்புவது, சரித்து பார்ப்பது, கோட்டை விலக்கி விட்டு வெட்டி நடப்பது என்று சுமார் ஒரு எட்டரை ஆக்சன் ஐயிட்டங்களை வைத்து ஓட்டுகிறார். அதையே ஸ்லோமோஷன், ஸ்டெடி மோஷன், மியூசிக் மோஷன், வித்ஃ அவுட் சப்ஜக்ட்ஃபிரீஸ் மோஷன், காமரா வியூ மோஷன் என்று படுத்தி எடுக்கிறார்கள்.
கொஞ்சம் கூர்ந்து பார்த்தீர்களென்றால் சன் டி.வி சீரியல்களில் நான்கைந்து பாத்திரங்களுக்கான நாலைரை செகண்டு கதையை இருபது நிமிடங்களாக இழுப்பதற்கு மாமியார் பேச்சு, மருமகள் ரியாக்ஷன், இடையில் இருக்கும் மண்சட்டி குளோசப், மண்சட்டியில் தெரியும் மாமனார் ரியாக்சன், காற்றிலாடும் சன்னல் திரையாக்சன், பிறகு இசை ரியாக்சன், கடைசியாக எடிட்டர் ரியாக்சன் என்று காட்டுவார்கள் அல்லவா அதே அதே. மொத்தத்தில் செத்துட்டேன் என்றோ சாகப்போகிறேன் என்றோ மாமியார் சொன்னால் இத்தனை பேர்களும் – பொருள்களும் சேர்ந்து சாக வேண்டும்.
சூப்பர் ஸ்டாருக்கு கண்ணுபடப் போகுதய்யா சின்னக்கவுண்டர் பாணி ஓப்பனிங் சாங்கில் பாடும் கலைஞர்கள் மிதுன்சக்கரவர்த்தி கால சேட்டு மைனர் உடைகளை அதுவும் கறைபோன கதியில் உடுத்திக் கொண்டு பாடுகிறார்கள். சண்டைக் காட்சிகளில் அரை இஞ்சி கூட காலை தூக்காமல், ஒரு அடி கூட நடக்காமல், பத்து டிகிரி கூட உடலைத் திருப்பாமல் ரஜினி பின்னி எடுக்கிறார். அடிபட்டவர்களின் ரத்தமும், அந்த ரத்தத்தை வரவழைத்த இசையமைப்பாளரின் சப்தமும் மட்டுமே அதை சண்டைக் காட்சி என்று நம்மை நம்பச் சொல்கின்றன.
25 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு வெளியே வரும்போது திரும்ப ஆரம்பிக்காதீங்க என்று போலீஸ்கார் சொல்லும் போது ரஜினி சொல்லும் “மகிழ்ச்சி”-தான் தீம் பன்ஞ்சாம். அதற்கொரு தீம் மியூசிக்கும் உண்டாம். மற்ற படங்களில் நெகட்டிவ் பொருள் தரும் செஞ்சுருவேன், வெச்சுருவேன், ஒரு தபா நூறு தபா சொன்ன மாறி இல்லாமல் இது பாசிட்டீவ் பஞ்சாம். இதற்கு ரஞ்சித் படை நான்கு மாதங்களாவது டிஸ்கஷன் போட்டிருப்பார்கள்! பாவம் அந்த நொறுக்குத் தீனிகள்.
கெட்ட ரவுடிகள் மனைவியை கொன்றார்களா, விட்டார்களா என்று தெரியாமல் இருக்கும் ரஜினிக்கு முதலில் மகள் கிடைக்கிறாள். அந்த மகளும் வில்லன்களால் ரஜினியைக் கொல்வதற்கு அனுப்பப்படுகிறாள். பின்னர் கபாலிதான் தந்தை என அறிந்து அவரை காப்பாதற்காக பின் தொடர்ந்ததாக சொல்கிறாள். இப்படி எதிர்பாராத இம்சைகளாய் பல திருப்பங்கள் படத்தில். பாவம் ஹிட்ச்காக். அவளும் கேங்க்ஸ்டராக சூழலால் மாற்றப்பட்டவளாம். முதல் காட்சியில் அப்படி தன்ஷிகா உட்காரும் போது அவர் முகத்தில் நாம் எப்படி நோக்கினும் ஒரு ரவுடியைப் பார்க்க முடியவில்லை. அத போல அவரும் காலிங் பெல் கேட்டு நடுங்கும் மெல்லியளாள்தான் என்பதை கபாலியே கையும் களவுமாக பிடிக்கிறார்.
விளம்பர வருமானங்களுக்காக கபாலி காய்ச்சலை உருவாக்கும் ஊடகங்கள்! கொள்ளையில் பங்காளிகள்!
சூப்பர் ஸ்டார் படத்தில் அனைவரும் சூப்பராக நடிக்க வேண்டும் என்று தாணுவும், ரஞ்சித்தும் கண்டிஷனோடு சொல்லி விட்டார்கள் போலும். உண்டி வள்ளல்கள் வயிறாரா சாப்பாடு போடுவது போல இவர்கள் உடலாற நடித்து தள்ளியிருக்கிறார்கள். அட்டக்கத்தி தினேஷ் இதுவரையிலும், இனிமேலும் தான் நடிக்கப்போகும் அத்தனை படங்களின் எனர்ஜியையும் இதில் கொட்டி கொட்டி நடித்திருக்கிறார். இதனால் ஹைப்பர் ஆக்டீவ் பிரச்சினை அவருக்கு வராமல் இருக்க கவுன்சிலிங் கொடுப்பது நல்லது.
மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி சென்னையில் இருக்கிறாள் என்ற சேதி தெரிந்ததும் அரண்மனை வீட்டு புல்வெளியில் முட்டியிட்டவாறு முதுகைக் காண்பித்து ரஜினி அழுவதை பிரமதாமான நடிப்பு என்று உலக சினிமா ஜெங்கிஸ்கான்கள் எழுதுகிறார்கள். இதுநாள் வரை மனித குலத்தின் ஆகச்சிறந்த நடிப்பிற்கான விருது, பாராட்டு, கைதட்டல் அனைத்தையும் முகமே பெற்றிருக்கும் போது இம்முறை அதை ஒரு முதுகு பெற்றிருப்பதைப் பார்த்தால் ஆனந்தக் கண்ணீர்தான் வருகிறது. அதற்காக நாம் முதுகுக் கண்ணீர் விட முடியாது. முதுகு மன்னிக்க வேண்டும். முகம் பொறுக்க வேண்டும்.
பிறகு மலேசியாவிலிருந்து உடனே சென்னைக்கு பறக்க வேண்டும் என்று மகளுக்கு உத்தரவு போடுகிறார் கபாலி. திடீரென்று எப்படி என்கிறாள் மகள். கபாலி மகளா இருந்துட்டு இது கூட தெரியாதா என்று அக்கக்கா சிரிப்பு சிரிக்கிறார் ரஜினி. படத்தில் இந்த அக்கக்கா சிரிப்பு 10 முதல் 15 முறை வரை வருகிறது. ரஜினியே சிரிக்கிறார் என்று மற்ற நடிகர்கள் சிரிக்க திரையே சிரிக்கிறது என்று நாமும் சிரிக்க வேண்டுமாம். உலக நகைச்சுவை வரலாற்றிலேயே இப்படி பார்வையாளர்கள் சிரிப்பதற்கு முன்னுரை, அறிமுகம், வகுப்பு, செய்முறை விளக்கமெல்லாம் கொடுத்து சிரிக்க வைக்க இயக்குநர் எடுத்துக் கொண்ட பாடு படபடக்க வைக்கிறது.
அடுத்த காட்சியிலேயே விமானம் சென்னைக்கு பறக்கிறது. நாமும் முதலில் ஏதோ ஜீ பூம்பா போல சென்னைக்கு போவார் என்றுதான் நினைத்தோம். நல்லவேளை லாஜிக் மீறல் செய்ய இயக்குநர் அனுமதிக்கவில்லை. சென்னை விமான நிலையத்தில் இறங்கி, டாக்சிபிடித்து, நட்சத்திர ஓட்டலில் ரூம் போடுவதற்கு கூட கபாலியால் தனியாக முடியவில்லை, பெரும் படையே தேவைப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் இது பெரிய பட்ஜெட் ரஜினி படம் என்பது நினைவுக்கு வந்தது.
ரஜினியோடு ராதிகா ஆப்தேவைப் பார்க்கும் போது வயது,தோற்றம் குறித்து விமரிசிப்போர் பழையை பஞ்சாங்கம் என்று தூற்றப்பட வாய்ப்பிருப்பதால் தவிர்க்கிறோம். இருப்பினும் தமிழ் மனைவி என்ற பாத்திரத்தில் வெட்கப்படுவதற்காக அவர் பட்ட பாட்டை நினைத்தால் எந்தப்பாட்டும் கண்ணீர் விடும்.
இந்தப் படத்தில் வில்லன் யார் என்றே தெரியவில்லை அதாவது மனதில் பதியவில்லை என்பதால் ஹீரோ யார் என்ற குழப்பம் சாதாரண ரசிகனுக்கு ஏற்படும் என்றார் ஒரு நண்பர். ஒரு வேளை அந்தப் பொறுப்பை ரஜினி, ரஞ்சித், தாணு போன்றோரே எடுத்திருப்பதால் அந்த மலேசியா வில்லனைப் பார்க்கும் போது வாங்க சார் ஒரு பெக் அடிச்சுட்டு போகலாம் என்றே ஒரு ரஜினி ரசிகன் நினைக்க கூடும். இருப்பினும் இன்னொரு வில்லனான கிஷோருக்கு நம்பியார் காலத்து தேர்வடச் செயின், கைவடச் செயின் என்று போட்டிருக்கிறார்கள். நமக்கோ நல்ல காலம் பொறக்கலையோ குடுகுடுப்பைக்காரர் நினைவுக்கு வருகிறார். என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்?
இதற்கு மேல் கோட்டு சூட்டு, அம்பேத்கர், காந்தி போன்ற தத்துவ விளக்கங்களை பொருட்படுத்த வேண்டும் என்று கோருபவர்களுக்கு ஒரு பதில் உண்டு. ஐந்து நட்சத்திர விடுதிகள் நடத்தும் பொங்கல் கொண்டாட்டங்களை ‘வில்லேஜ்’ தீமில் நடத்துவார்கள். குடிசை வீடு, திண்ணை மேசை, வாழை இலை, வேட்டி கட்டிய பரிசாரர், சிறு தானிய விருந்து, கரும்பு – மஞ்சள் குலை அலங்காரம்………………போதுமா?
பிறகென்ன?
உலகமே அழியும் போது ஒளிப்பதிவு என்ன, இசை என்ன, நடனம் என்ன, படத்தொகுப்பு என்ன என்றெல்லாம் பார்ப்பதற்கு நாம் ஒன்றும் உலக சினிமா ஜெங்கிஸ்கான் அல்ல. ஏன் ஜெங்கிஸ்கான்? அவரது படையோடு நடக்கும் படையெடுப்பில் முதலில் ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ என்ற பேரிரைச்சல் வரும். படை போன பிறகு அந்த ஊரில் எதுவுமிருக்காது. இந்த உவமைக்கான விளக்கத்தை கேட்டு கொடுமைப்படுத்த மாட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டு……………..
________________
காலையில் காசி திரையங்கின் முன் நிற்கும் போது ரசிகர்களுக்கு டிக்கெட்டு இல்லை என்றானது. உடனே சில பல ஆயிரம் செலவழித்து பிளக்ஸ், பேனர் கட்டிய ரசிகர்கள் அதைக் கிழித்தனர், கார்ப்பரேட்டு வாடிக்கையாளர்களை மூன்று நாட்களுக்கு மிரட்டி பிடித்திருப்பதால் சாதா ரேட்டு ரசிகர்களுக்கு மதிப்பில்லை. ரோகிணியில் கபாலி பார்த்துவிட்டு வந்த் ரசிகரைச் சந்தித்தோம். ஆழ்நிலை சோகத்தில் இருந்த அவரை தேற்றி சில பல வார்த்தைகள் பேச வைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று.
யாரும் கேட்டுவிடக் கூடாது என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு அவர் கூறினார், “பரவாயில்லை, ஆனா எங்கள மாதிரி ரசிகர்களுக்கு திருப்தியில்லை, பாட்சா – படையப்பா மாதிரியெல்லாம் இனி வராது சார்” என்று காற்றில் கரைந்து மறைந்து விட்டார். மாலை சென்று பார்த்தால் மூன்று நாள் தங்காது என்றார் ஒருவர். நல்ல வேளை 500 ரூபாய் டிக்கெட்டு ஐந்து வாங்கி அதே விலைக்கு விற்றுவிட்டு தப்பித்தேன் என்றார் ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி.
ஆனால் அமெரிக்காவில் பார்த்தவர்களும், ஏர் ஏசியாவில் பறந்தவர்களும், காக்னிசன்டாக பார்த்தவர்களும் தங்களது மாமூல் பணத்தை ஜெயா சசி கும்பலின் “ஜாஸ் சினிமா’வுக்கு எழுதிவிட்டனர். அதிகாரம், கட்சி, ஊடகங்களின் அடிமைத்தனத்தை வைத்து இந்த கும்பல் பெரும் பகற்கொள்ளையே நடத்திருக்கிறது. இதில் தாணு, ரஜினி போன்றோர் பங்காளிகளாக பிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ரஞ்சித் போன்றோர் கதையெழுத மலிவு விலையில் தேவைப்பட்டனர். இருப்பினும் ஒரு பகற்கொள்ளையில் மனதை மயக்கும் ஒரு கலை இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அலங்கோலங்களுக்கு முழு முதற் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பெருமக்கள்தான். யார்தான் லஞ்சம் வாங்கலை.. யார்தான் ஊழல் செய்யலை என்று நமது மக்கள் என்றைக்கு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே இந்த சமூகம் அவலத்தை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது. இன்றைய ‘கபாலி’ வெளியிட்டூு சூழலிலும் அதுதான் நடக்கிறது.
படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமத்தை பெற்றிருப்பது ஜெயா டிவி. தமிழக தியேட்டர் உரிமத்தை பெற்றிருப்பது ஊரை அடித்து உலையில் போடுவதில் கோபாலபுரத்தை மிஞ்சிய சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஜாஸ் நிறுவனம். பிறகென்ன கேட்கவா வேண்டும்..? அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அரசு நிர்வாகங்கள் வளைந்து கொடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றன.
அரசாங்க முத்திரையோடு அமைச்சரின் PA விடமிருந்து 10 கபாலி டிச்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் ஊழியருக்கும் செல்லும் கடிதம்
‘தெறி’ படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் சில தியேட்டர்களில் அதிரடி சோதனை நடத்தி ‘கூடுதல் கட்டணங்களை வசூலித்தால் தியேட்டர் சீல் வைக்கப்படும்’ என்று சில மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்தார்கள்.
‘விடியற்காலை ஷோ ஓட்ட வேண்டும்’ என்று ‘தெறி’ படத்தின்போதுஅனுமதி கேட்ட தியேட்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கேள்வி கேட்டபோது ‘காவல்துறையினரை அவ்வளவு விடியற்காலையில் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க முடியாது’ என்றது அரசு நிர்வாகம்.
ஆனால் இன்றைக்கு அந்த சூழல் அப்படியே நேர்மாறாக இருக்கிறது. தியேட்டரிலேயே டிக்கெட் கட்டணத்தையே குறிப்பிடாமல் நுழைவுச் சீட்டை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது உலகத்திலேயே வேறெங்கும் நடக்காத ஒரு அதிசயம் இது.
எந்த வகையிலும் அரசு அனுமதியில்லாமல் தியேட்டர் கட்டணங்களை உயர்த்துவது நிச்சயம் சட்ட விரோதம்தான். யாரோ காசு கொடுக்கிறான் என்றாலும் அதனை அனுமதிப்பதும் ஊழல்தான்.
ஒட்டு மொத்தமாக 3 நாளைக்கான காட்சிகளை பலம் வாய்ந்த கும்பல்களின் கைகளில் கொடுத்து அவர்களிடமிருந்து டிக்கெட் விலையைவிடவும் 10 மடங்கு தொகையை வசூலித்திருக்கிறார்கள் என்றால் இதைவிட மிகப் பெரிய ஊழல் வேறென்ன இருக்க முடியும்..? கொடுக்கிறவன் இருக்கும்வரையிலும் லஞ்சமும், ஊழலும் இருந்து கொண்டேதான் இருக்கும்.
இப்போது 120 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500 ரூபாய்க்கு தங்களிடமிருக்கும் பணத் திமிரினால் அள்ளி வீசி டிக்கெட்டை வாங்கியிருக்கும் இதே உத்தம நண்பர்கள்தான், ஒரு போலீஸ்காரர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் அதை செல்போனில் போட்டோ எடுத்து முகநூலில் போடுவார்கள்.
இன்றைக்கு அவர்கள் இந்தக் கபாலிக்கு செலவழித்திருக்கும் ஒவ்வொரு ரூபாயும், சக சாமான்ய மக்களு்ககு எதிராக அவர்கள் வீசியிருக்கும் விஷ அம்புகள்தான்..!
யார் இதைக் கேட்பது..? இதைச் செய்ய வைத்திருப்பதே மாநில முதலமைச்சரும், அவருடைய உடன் பிறவா குடும்பத்தினரும்தான். அவரது அனுக்கிரஹம் இல்லாமல் யாரும் இதை செய்திருக்க முடியாது..!
கொடுமை.. கொடுமை என்று கோவிலுக்கு போனால்.. அங்கேயும் ஒரு கொடுமை தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடியது என்பார்களே.. அது இதுதான்..!
தியேட்டர் கட்டணங்களில் இத்தனை ஊழல்களை திரைப்படத் துறையினரே செய்துவிட்டு, ‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்’ என்றும், ‘திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையத்தளங்களை செயல்படவிடக் கூடாது’ என்றும் சொல்வதெல்லாம் தனக்கு வந்தால் மட்டுமே அது ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தால் அது தக்காளி ரசம் என்பதுதான்..!
120 ரூபாய் டிக்கெட்டை கொடுத்துவிட்டு “படம் பார்க்க வா..” என்று சொல்லியும் கேட்காமல், திருட்டு டிவிடியில் படம் பார்த்தால் அது தவறு என்று சொல்வதுகூட ஒரு விதத்தில் நியாயம்.
கனடாவில் விடிய விடிய கபாலி – ஏமாறுவதில் உள்நாடு வெளிநாடு வேறுபாடில்லை.
ஆனால் அநியாயமாக 1000 ரூபாய்க்கு டிக்கெட் விலையை ஏற்றி வைத்துவிட்டு “நீ திருட்டு டிவிடியில் பார்க்காதே…” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்..?
இங்கே யார் நீதி, தர்மம், நியாயமெல்லாம் பேசுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது..!
தயாரிப்பாளர் தாணுவும், ரஜினியும் பிலாத்து மன்னனை போல “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கை கழுவ முடியாது.. இந்தப் பாவத்தில் அவர்களுக்கும் பெரும் பங்குண்டு..
இ்பபோதுவரையிலும் அவர்களிடமிருந்து ஒரு செய்திகூட வரவில்லை. ஒரு தடுப்பாணைகூட வரவில்லை. ஆக.. இந்தக் கோல்மாலில், ஊழலில், முறைகேட்டில் அவர்களுக்கும் மறைமுகமான ஒப்புதல் உண்டு என்பதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நோக்கிய பாதை அல்ல.. அழிவை நோக்கிச் செல்லும் பாதை.. பணம் படைத்தவனும், அதிகாரம் படைத்தவனும் மட்டும்தான் கோடம்பாக்கத்தில் இனிமேல் நீடிக்க முடியும் என்பதை இந்தக் ‘கபாலி’ சுட்டிக் காட்டியிருக்கிறான்..!
இப்படி படத்திற்கு முன்பேயே விமர்சனம் எழுத வைத்தது ஒன்றுதான், இந்தப் படத்தின் மூலம் சாமான்யனுக்கு கிடைத்திருக்கும் லாபம்..!
வெற்றி தியேட்டரில் காலை 4 மணி முதல் கபாலி படம் திரையிட தொடங்கியது டிக்கெட்டில் கட்டணம் இல்லை………………
இந்த கபாலிகர்கள் ஆடும் ஆட்டத்தைக் காண வேண்டுமே ? உச்சகட்ட அருவருப்பு.
அனைத்துக் கார்ப்பரேட் கம்பெனிகள், தகவல் தொழில்நுட்ப எம் என் சிக்கள்……..தங்கள் கைகளில் கபாலி வெளியாகும் மிகத் தரமான தியேட்டர்களின் டிக்கெட்டுகளை கைகளில் வைத்துக் கொண்டு, டிக்கெட் விலையைக் காட்டிலும் பல மடங்கு விலை உயர்த்தி, தம் தொழிலாளர்கள் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது, ஒரு சில தலையில் அடித்துக் கொண்டு விலையில்லாமல், விடுமுறையும் கொடுத்து தங்கள் ஊழியர்களை அப் படத்திற்கு அனுப்பி வைக்க இருக்கிறது.
Cognizant கம்பெனி தங்கள் ஊழியர்கள் வேலை நாளாக இருந்தாலும் கபாலி படம் பார்ப்பது அவசியம் என்பதால் AGS கம்பெனியிடம் 200 டிக்கெட்டுகளை ரூ.500 விலையில் வாங்கியதற்கான ரசீது.
என்ன கொடுமை என்றால், இப் பொழுது வரை தன் தலைவன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத விரக்தியைக் கூட ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு, இதெல்லாம் தலைவனுக்கு பெருமை என அவன் ரசிகன், நொடிக்கு ஒரு ஸ்டேடசாய்ப் போட்டுக் கொண்டு இருக்கிறான் நெருப்புடா என்று. அட வேகாத பருப்பே ?
ஏரோப்ளேனில் கபாலி படத்தை அந்தக் கம்பெனிகாரன் ரஜினி ஃபேன் என்பதற்காகவா வரைந்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? அது ஒரு நூதன விளம்பரம் அய்யா. அதற்கு சில லட்சங்களை அந்த ஃப்ளைட் கம்பெனிக்காரன் தயாரிப்பாளரிடமோ, விநியோகிஸ்தர்களிடமோ பெற்றிருப்பார்.
சரி, நாம அந்த பிரீமியம் டிக்கெட்டுக்குள்ள போய்டுவோம்.
சென்னை நிலவரப்படி எல்லா தியேட்டர் டிக்கெட்களையும் படச் சம்பந்தப்பட்டவர்களே முதல் மூன்று நாட்களுக்கு பல்க்காக பதுக்கி வைத்துவிட்டதாக பரவலான குற்றச் சாட்டு எழுந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
இனி அது கள்ளத்தனமாய் 500 முதல் 2000 வரை, படம் சக்சஸ் என்றால் 5000 வரை கூட விற்கப்படப் போகிறது, ஆனால் அரசுக்கு அதே 30 ரூபாய் மட்டுமே ஒரு டிக்கெட்டுக்கு வரியாக கிட்டும்.
யார் ஏமாளி ? அரசா ? சாமானியர்களான நாமா ?
முதலில் இது ரஜினி படம் அப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுவதை தணியுங்கள். அல்ரெடி வேதாளம் அஜித்துக்கும் இதே நிகழ்ந்து, இனி அஜித் படங்கள் எல்லாவற்றுக்கும் இதே நிகழப் போகிறது. ரஜினியை போலவே அஜித்தும் எப்போதும் தொடர்பு எல்லைகளுக்கு வெளியே இருப்பவர்தான், கேட்க நாதி ஊடகங்களுக்கு கூட இருக்காது 🙁
இப்படி விட்டுக்கொண்டே இருந்தால், அடுத்து விஜய், சிவ கார்த்திகேயன் என்று அந்தக் காட்டேரிகள் தொடர்ந்து நம்மைச் சுரண்டத்தான் செய்யப் போகின்றன.
கபாலியின் கோமாளிகள்
நண்பர் ஒருவர் அழைத்தார். மச்சி, ஈகா தியேட்டர்ல டிக்கெட் இருக்காமாம், ஆனா ஒரு டிக்கெட் 1500 ரூபாயாம். எவ்வளவு லாபம் எனப் பாருங்கள். தியேட்டருக்கு வெளியே ப்ளாக் விற்பவர்கள் டபுள் ரேட் சொன்னாலே அது அநீதி என்று சக ப்ளாக் விற்பவர்களே சண்டை போடுவதைக் கண்டிருக்கிறேன்.
எத்தனை முறை பார்த்தாலும் அவர்களின் தரம் சற்றும் உயர்ந்திருக்காது, அவர்களை அந்த நிலையிலேயே உயராமல் பார்த்துக் கொண்டிருக்கும் அருகாமை காவல் நிலையங்கள்.
இன்று அந்தக் கலாச்சாரம் முற்றிலும் அருகிப் போய்விட்டது, ஆனால் இந்த நவீன கள்ள டிக்கெட் விற்பனையாளர்களுக்கு சிறிதேனும் பிசினஸ் எதிக்ஸ் இருக்கிறதா எனப் பார்த்தீர்களா ?
ஒரு டிக்கெட்டுக்கு 1000 முதல் 1300 வரை லாபம் வேண்டுமாம். இப்படி பத்து டிக்கெட் விற்றால் 10000 – 13000 வரை லாபம் என்றால்………..பல லட்சம் டிக்கெட் விற்றால் எத்தனை சைபர்களை சேர்ப்பது என கற்பனை செய்து பாருங்கள்.
இதுதான் சுரண்டல், அப்பட்டமான கொள்ளை.
கபாலி படத்தின் ரசிகர் ஷோ பார்க்க முடியாமல் போன பூம்புகார் ரஜினி ரசிகர் மன்றம் இப்படத்தை பார்க்க விரும்பவில்லை என அறிவித்துள்ளது
மலை, மணல், ஏரி, காடு, சுகாதாரம், கல்வி என்று கொள்ளையிட்ட கூட்டம் நம் கேளிக்கை மீதும் கை வைத்து விட்டதே ?
முதல் மூன்று கோல்டன் நாட்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளைத் தாண்டி எந்த ஆன்லைன் கொம்பர்களுக்கும் டிக்கெட் கிட்டாது.
ரசிகமன்றத் தலைவர்களுக்கு எலும்புத் துண்டுகளாய் சில ஊரோர பாடாவதி திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை வீசியெறிவார்கள்.
ரஜினிக்காவா இப்படி நடைபெறுகிறது ?
இல்லை ஆகப் பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்ட ரஞ்சித்திற்காகவா ??
ஒருவேளை விளம்பரம் செய்வதில் மன்னரான தயாரிப்பாளர் தாணுதான் இந்த தில்லாலங்கடி செய்கிறாரோ ???
படத்தின் மொத்த விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் நிறுவனம் அம்மாவின் வலதுகரத்தின் இரு கரங்களாக இருப்பதால் இருக்கலாம் !
சென்னை காசி தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் – ஊடகங்களுக்கு காத்திருக்கிறார்கள்.
டிக்கெட் விலை 1000 என்ன 10000 கொடுத்தும் கூட முதல் நாளில் பார்த்தே ஆகிவிட வேண்டும் என்கிற வெறியை உங்களுக்குள் திணிக்க வேண்டிய வேலைகளைப் பார்க்க பலர் உள்ளனர்.
மகிழ்ச்சி.
தலைவர் படம் என்றால் அப்படித்தான் இருப்போம், அப்படித்தான் செலவழிப்போம் என நாம் பொங்கவும் செய்வோம்.
பொங்க வேண்டும், அப்பத்தான் ஏழை கம்பெனி ஜாஸ் சினிமாக்கள் வீட்டில் உலை பொங்கும்.
என்ன…….. விழாக்காலங்களில் ஆம்னி பஸ் டிக்கெட் கொள்ளை, ஸ்வீதா ரயில் டிக்கெட் விலை, ப்ரீமியம் தட்கால்களுக்கும் இதே போல் பொங்குவோம்,
தலையில் இப்படி கொள்ளியை வைத்துச் சொறிந்துக் கொள்ளும் நம்மைப் பார்த்து கபாலி நெருப்புடா என்று அப்போது சரியாகக் கத்துவார்
ரொம்ப நாளா இந்த சினிமா விமர்சனம் எல்லாம் எழுதாம இன்னைக்கு கபாலி முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு எவ்வளவோ எழுதனும்ன்னு நினைச்சுகிட்டு போனேன் அம்புட்டுலயும் மன்னல்லி போட்டுட்டான் இந்த ரஞ்சித் பய…
ஒரு கட்டத்துல உண்மைலேயே நாம படத்துக்கு தான் வந்திருக்கோமான்னு எனக்கே சந்தேகமாகிடுச்சு தியேட்டர்ல அப்படி ஒரு மயான அமைதி,
படத்தை பத்தி சொல்லனும்னா ஜெயில இருந்து வருவாரு கொலை பன்னுவாரு குடும்பத்த கண்டுபுடிப்பாரு கொலை பன்னுவாரு அம்புட்டு தான்..
படம் ஏதோ டான் படம்ன்னு சொல்லி எடுத்து அதுல புரட்சிய தெளிக்கிறேன்னு எதையோ தெளிச்சிருக்காரு ரஞ்சித்து கண்டிப்பா இன்னொரு பிரச்சனைய கிளப்புவானுக…
நீ என்ன ஆண்ட பரம்பரையா நீங்க மட்டும் தான் ஆளணுமான்னு வில்லன் சொல்றதும்
நான் ஆண்ட பரம்பரையில்லைடா ஆளுவேன்டான்னு ரஜினி பதில் சொல்றதும் ஆகா ஆகா என்ன புரட்சி…
ஆனா இந்த வசனம் எதுக்கு அந்த இடத்துல சம்பந்தமே வந்துச்சு? யோசிச்சு யோச்சிச்சு பாக்குறேன் ஒன்னும் புடிபடல…
இப்படி புரட்சி கருத்துகள பேசுனதாலயோ இல்லை படம் ஊத்திக்கும் அம்புட்டு டிஸ்ட்ரிபியுட்டரும் வீட்டு வாசல வந்து உட்க்காந்திருவாங்கன்ற தாலையோ தான் போல தலைவரு அமெரிக்கால போய் உட்காந்துகிட்டாரு…
காமடி இல்லை… பாட்டு ஏற்கனவே நிறைய கேட்டதால புடிச்சிருந்துச்சு… ஒரு நல்ல ஸ்டன்ட் இல்லை… எந்த நடிகருமே ஒழுங்கா நடிச்ச மாதிரி தெரியல… ரஜினுக்கு வயசானது ரொம்ப தெரிஞ்சது… எந்திரன்ல இருந்த ஒரு எனர்ஜி இல்லை…
மொத்ததுல ரஞ்சித்து ரஜினிய வச்சு செஞ்ச்சிருக்கான்… இனி பேஸ்புக் நண்பர்கள் வச்சு செய்யலாம்… மகிழ்ச்சி….
#TamilRockers கபாலியில் ரஜினிக்கு அடுத்து பெரிய ட்ரெண்டாக சில நாட்களாக ஒடிக்கோண்டிருக்கிறது… இதில் ஆச்சர்யம் #WeSupportTamilRockers என்ற ஹேஷ்டேக் முலம் அவர்களுக்கு ஆதரவும் பெருகியிருப்பது…
இதற்கு முக்கிய காரணம் கபாலி டிக்கெட்களுக்கான விலையாகத்தான் இருந்திருக்க வேண்டும்…
கேரளத்து படங்கள் மட்டும் தலைகீழாய் நின்று தண்ணி குடித்தாலும் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு கிடைப்பதில்லை.. அதன் சூட்சமமும் புரியவில்லை
தம்பு கருத்துக்கு 1000likes அப்பால கேரளாவுள்ள எல்லா தியேட்டரிலும் அரசு அனுமதித்த கட்டணம் தான்.. 50, 80 அதிகபட்சம் கொச்சினில் 110 என்று கேள்வி..
இவனுங்கள்ள தியேட்டரில் கவுண்டரில் முறையாக அரசு அனுமதித்த டிக்கெட்ட விற்றக சொல்லு… மாட்டாங்க..
சத்தியம் மற்றும் நகர்புறத் தியேட்டரிகளிளேயே காம்போ விற்க சொல்லி.. வர்புற்தல் வேறயாம்..
அதிகாரபூர்வமற்ற தகவல்கள்…
கபாலி 21 மாலையே சென்னையில் வெளியாக இருக்கிறது. முதல் காட்சிக்கான டிக்கெட் கட்டணம் நான்கு இலக்கங்களில்.. அதனை தொடர்ந்து 22 அதிகாலை 4மணிக்கு அடுத்த காட்சி டிக்கெட் விலையோ குறைந்தது 500 ஒவயாயாம்…. எந்திரனில் ஆரம்பித்துவைத்து கொலை ஜாரி கொள்ளை இதிலும் தொடர்கிறது.. அதிக பணம் கொடுத்து பார்த்துட்டு படம் நல்லா இல்லேன்னா திட்டுன்னா…. என்னமோ போடா மாதவா..
Rajesh Kumar குப்புற படுக்கறதுல கூட குறியீடு ஆராயும் கோஷ்டி எல்லாம் வீக்கெண்ட்லதான் படத்துக்கே போகுது.. அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்..
தியேட்டரில் காத்து கிடக்கும் ஊடகங்கள் மற்றும் ரசிக பட்டாளம். சென்னை காசி தியேட்டரில் ரஜினி ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லை என்பதால் பேனர்களை இறக்கி கிழித்தனர், ரசிகர்கள். அத்தனை டிக்கெட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகையில் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லையாம்! இந்த இடத்தில் என்.டி.டி.வி போன்ற தில்லி சேனல்கள் காத்துக் கிடந்த காட்சியும் காணக்கிடைத்தது.
துக்கக் குறிப்பு: கபாலி ‘அருள்’ பாலித்தால் நமத்துப் போன கபாலி திரைப்படம் குறித்த விமரிசனம் இன்றே வெளியிடப்படும்.
பார்ப்பன இசைக்களவை அம்பலப்படுத்தும் பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இசைக் கருவிகளின் களவு குறித்தும் பல ஆய்வுகள் வந்துள்ளன. யாழ் வீணையாக உருமாறியது குறித்த விவாதம் அவற்றில் மிகப் பிரபலமானது. எனினும் ஆய்வாளர்களால் இதுநாள் வரை தீண்டப்படாமலிருந்த இசைக் கருவி தமிழ் மக்களின் தொன்மையான இசைக் கருவியாகிய பறை. இதற்குக் காரணம் சொல்லாமலேயே விளங்கும்.
டாக்டர் மு.வளர்மதி
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் வளர்மதி, சனவரி, 25, 1997 அன்று, ம.க.இ.க தஞ்சையில் நடத்திய தமிழ் மக்கள் இசை விழாவில் “பறையும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் வழங்கிய ஆய்வுக் கட்டுரையை மேலும் விரிவாக்கி ”பறை, இசைக்கருவி – ஓர் ஆய்வு” எனும் நூலாகத் தயாரித்துள்ளார்.
பறை எனும் இசைக் கருவியின் தோற்றம், அதன் பயன்பாடுகள், பறையைக் குறிக்கும் சொற்கள், பலவகையான பறைகள் ஆகியவற்றை இலக்கிய ஆதாரங்களினூடாக நூலின் முதற்பகுதி விளக்குகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும், உலக நாடுகளிலும் தொல்குடி மக்களின் இசைக் கருவியாக பறை இருந்ததையும், இருந்து வருவதையும் நூலின் அடுத்த பகுதி விவரங்களுடன் விளக்குகிறது.
இந்தியா, இலங்கை தவிர வேறு எந்த நாட்டிலும் பறை எனும் கருவியை இசைத்த மக்கள் தீண்டத்தகாதோர் ஆக்கப்படவில்லை என்பதைக் கூறும் நூலாசிரியர், தமிழர் வரலாற்றில் பறையும் தீண்டாமையும் இணைந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை இலக்கியச் சான்றுகளினூடாக ஆய்வு செய்கிறார்.
பறை என்னும் சொல்லுக்குச் சொல்லுதல், அறிவித்தல் எனப் பல பொருள்கள் உண்டு. பல வகைப்பட்ட தோற் கருவிகளின் பொதுப் பெயராகவும் பறை என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது.
பறை இசைக்கருவி – ஓர் ஆய்வு
பறை தயாரிக்கும் முறை பற்றியும், இசை நயத்தின் தேவைக்கேற்பப் பயன்படுத்த வேண்டிய விலங்குகளின் தோல் குறித்தும், அவற்றைப் பதப்படுத்தும் முறை குறித்தும் சங்க இலக்கியங்களிலிருந்து காட்டப்பட்டுள்ள சான்றுகள் தமிழ் மக்களின் இசையறிவை மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.
வாசிக்கும் முறைகளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பல புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயம்பல் – இயைந்து ஒலித்தல்; கறங்கல் – தகதிமி போன்ற சொற்கட்டினை சுற்றிச் சுற்றி வருமாறு இசைத்தல்; தெளிர்த்தல் – ஒலிக்கூறுகள் சிதறுமாறு அடித்தல்; ஆலித்தல் – அகலமாகி ஒலித்தல்… போன்ற பல சொற்கள் இசை நுட்பத்தை மட்டுமின்றித் தமிழின் மொழி வளத்தையும் காட்டுகின்றன.
தகதிமி, தரிகிட போன்ற தாளக்கட்டுகளால் கொட்டு முறைகள் குறிக்கப்படுகின்ற அதே நேரத்தில், கொட்டு முறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் இத்தனை வகையான சொற்கள் இருந்தும் அவை வழக்கொழிந்து, பறையடித்தல், வாசித்தல் போன்ற ஓரிரு சொற்கள் மட்டுமே இன்று வழங்கி வருவது வருத்தமளிக்கிறது.
ஐவகை நிலப் பாகுபாட்டின் அடிப்படையிலும், ஒலி – உருவம் – பயன்பாடு இவற்றை அடிப்படையாகக் கொண்டும் பறைகள் பெயரிடப் பட்டதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர்.
முதலில் வினைச் சொல்லாகவும், பின்னர் இசைக் கருவியைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகவும் இருந்த பறை, சமூக உறவுகளின் இலக்கண விதி மாறியபோது – தீண்டாமை நுழைந்தபோது – பெயர் உரிச் சொல்லாகவும் மாறியது. இழிவு. அழுக்கு, கருப்பு என்ற பொருள் தரும் சொல்லாகவும் ‘பறை’ மாறியது.
பறை – தமிழர் கலைவரலாற்றின் முகம்
பறைக் கோலம் – இழிவான தோற்றம், பறைத்துணி – அழுக்காடை பறைப் பருந்து – கரும் பருந்து போன்ற பல சொற்கள் தமிழ் இலக்கியங்களில் நுழைந்ததைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.
“துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்நான்கு அல்லது குடியும் இல்லை” – துடிகொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன், வெறியாடுபவன் ஆகிய கலைஞர்களைக் காட்டிலும் சிறந்த குடிகள் இல்லை என்று கூறி அவர்களைப் புகழ்ந்துரைக்கிறார் மாங்குடி கிழார் எனும் புலவர்.
வேறொரு சங்க இலக்கியப் பாடலோ (புறம் – 287) ”துடி எறியும் புலைய, ஏறிகோல் கொள்ளும் இழிசின” என்று பறை கொட்டியவனை இழிபிறப்பாளனாக்குகிறது.
“பழந்தமிழருடைய குடிப் பாகுபாட்டுடன் பார்ப்பனர்களின் வர்ணப் பாகுபாடு கலந்த காலத்தில் தீண்டாமை வேரூன்றத் தொடங்கியுள்ளது” என்று கூறி சங்கப் பாடல்களை ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர். “சங்க காலம் பொற்காலம்” என்று நிறுவ விரும்புவோர்க்கு இது சங்கடத்தைத் தரக்கூடும். ஆனால் இனிமேல்தான் நாம் ஒரு பொற்காலத்தைப் படைக்க வேண்டியுள்ளது என்று அதற்காகப் போராடி வருபவர்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லை.
பறை எனும் இசைக் கருவிக்கும் தீண்டாமைக்கும் என்ன தொடர்பு? ஏற்கனவே குறிப்பிட்ட நால்வகை இசைக்குடிகளுள் பறையர் மட்டுமே தீண்டத்தகாதோராக, பறை மட்டுமே தீண்டத்தகாத கருவியாக ஆனது ஏன்?
பறையைக் காட்டிலும் யாழ் தொழில் நுட்ப ரீதியில் முன்னேறிய இசைக்கருவி என்பதால் இதனை மீட்டிய கலைஞர்கள் சமூகத்தில் ஒப்பீட்டளவில் உயர் தகுதி பெற்றிருக்கக் கூடுமெனினும், பறையர் தீண்டத்தகாதோரானதற்குக் காரணம் பறை அல்ல. அவை சமூகக் காரணங்களாகும்.
பறை என்னும் சொல்லுக்குச் சொல்லுதல், அறிவித்தல் எனப் பல பொருள்கள் உண்டு.
வேளாண் சமூகத்தில் மேட்டுக்குடிகளுக்கு ஏவல் தொழில் செய்த உழைக்கும் மக்கள், ஈமச்சடங்கில் ஏவல் செய்தோர் போன்றவர்கள் புலையர், இழிசினர், உவச்சர், கடைஞர், கடிகையர், பறையர் என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் நீதி நூல்களிலும் புலையர் என்ற சொல் பொய், களவு, இழிவு, ஊன், தீயநெறி போன்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது என வேறு சில ஆய்வுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.
வேளாண் சமூகத்தின் அடிமைத் தொழில்களைச் செய்ததனால் இழிசினர் என்று ஒதுக்கப்பட்டனரெனக் கொண்டாலும், பார்ப்பன நெறிக்கெதிராய் என்ன தீயநெறியை அவர்கள் பின்பற்றினர். ‘ஊன் உண்ணுதல்’ புன்மையானது எப்போது போன்ற கேள்விகளுக்குள் நூலாசிரியர் செல்லவில்லை.
பறை மிக எளிய இசைக் கருவியாயினும், அதன்மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை எனும் சமூகக் கொடுமை மிகவும் சிக்கலான வரலாற்று நிகழ்ச்சிப் போக்கினூடாகத்தான் நிலை நிறுத்தப் பட்டிருக்கிறது.
மற்றெல்லாக் காலங்களைவிடவும் சோழர் காலத்தில்தான் பறையர் இன மக்கள் மிக இழிவாக நடத்தப்பட்டனர் என்பது இரா. பூங்குன்றன் அவர்களின் ஆய்விலிருந்து மேற்கோள்காட்டி விளக்கப்படுகிறது.
திருவாரூரில் சாமிக்கு முன் “யானையேறும் பெரும்பறையன்” யானை மீதேறிக் கவரி வீசிச் செல்வது போன்று சில கோயில்களில் அவர்கள் பெற்றிருக்கும் உரிமைகள், “மேதினி வளரும் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது” ஆட்சி நடத்திய சோழ மன்னர்களுக்கும், பிந்தைய ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் கலகம் செய்து அவர்கள் பெற்றிருக்கக் கூடிய உரிமைகளேயன்றி சாதியச் சமுதாயம் மனமிரங்கி வழங்கிய சலுகைகள் அல்ல.
தொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர்களான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக் கருவி அடிமையின் கைக் கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை. பறையடிப்பதற்கும் அடிமைத் தொழில் செய்வதற்கும் மறுத்ததற்காக ம.க.இ.க.வின் ஆதரவாளர் குருமூர்த்தியின் (குருங்குளம், தஞ்சை) கட்டைவிரல் வெட்டப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து, பறையர் எனும் சொல் சாதி மக்களைக் குறிக்கும் சொல்லாக இருப்பது ஒழிக்கப்பட்டு இசைவாணர்களைக் குறிக்கும் மரியாதைக்குரிய சொல்லாக மாற வேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
பறை எனும் கருவிக்கு மற்ற இசைக் கருவிகளுக்கு இணையான மதிப்பு அளிக்கப்படுவதுடன், இசை நுணுக்கங்களைப் புகுத்தி, வகுப்புகள் நடத்தி முறையான பறை இசைவாணர்களையும் உருவாக்க வேண்டும் என்று தனது ஆலோசனைகளையும் ஆசிரியர் முன்வைத்துள்ளார்.
தொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர்களான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக் கருவி அடிமையின் கைக் கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை.
திரையிசை உள்ளிட்ட புதிய தேவைகளையொட்டிப் பறை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கருவி என்ற முறையில் அது தீண்டத்தகாத கருவியாகவே சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது. எனவே மாட்டுக்கறி தின்பது, தீண்டாமை மறுப்புத் திருமணம் போல பிற சாதியினர் தப்படிப்பதும் ஒரு தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கையாகவே உள்ளது. சாதி ஒழிப்பு குறித்துப் பேசும் அமைப்புகளின் அணிகள் இதைச் செய்ய முன்வர வேண்டும். மணவிழாவுக்கு மங்கல வாத்தியம் (நாதசுரம்) – சாவுக்குப் பறை எனும் பார்ப்பனியப் பண்பாட்டை ஒழித்து பறையை மணவிழாவின், மகிழ்ச்சியின் இசைக் கருவியாக்க வேண்டும். சாப்பறையை நிறுத்த வேண்டும்.
இவை போன்ற பண்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் பறை எனும் கருவிக்கும் பறையர் அல்லாத பிற மக்களுக்கும் இடையிலான உறவை மாற்றியமைக்கும் முயற்சிகள் மட்டுமே. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறர்க்கும் இடையிலான தீண்டாமை அடிப்படையிலான சாதிய உறவை ஒழிப்பதன் வாயிலாகத்தான் தொன்மையான இசைக்கருவிக்குரிய முழு மரியாதையைப் ‘பறை’ பெற முடியும்.
“பைங்கொடிச் சுரை மேற்படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில்” என்று நந்தன் வாழ்ந்த புலைச் சேரியை வருணிக்கிறாரே சேக்கிழார், அந்தச் சுரைக்கொடி படர்ந்த பழங்கூரை பல நூற்றாண்டுகளாகியும் மாறவில்லை – பறையைப் போலவே.
“இழி பிறப்பாளன் கருங்கை சிவப்பத் தன் வலிமையனைத்தையும் செலுத்தி அரசனுக்காகப் போர்ப்பறை முழக்கியதைக் கூறுகிறது புறநானுறு. கருங்கை மட்டுமின்றிக் கண்களும் சிவக்க போர்ப்பறை முழங்க வேண்டும் – அரசுக்கும், ஆண்டைகளுக்கும், சாதிக்கும் எதிராக.
கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.
– மருதையன்
புதிய கலாச்சாரம், ஜனவரி 2000.
_____________________
பறை இசைக்கருவி – ஓர் ஆய்வு’ – முனைவர் மு. வளர்மதி
புதிய கலாச்சாரம் நூல் விமரிசனக் கட்டுரை வெளியான போது இந்தப் புத்தகத்தை திருமகள் நிலையத்தினர் வெளியிட்டிருந்தனர். 2009-இல் அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை – ரூ.90. அம்ருதா பதிப்பகம் – No: 12, 3வது மெயின் ரோடு, 2வது குறுக்குத் தெரு, கோயிந்த் ராயல் நெஸ்ட், கிழக்கு சி.ஐ.டி நகர்,சென்னை – 600 035.
ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலியை ரூ 10,000 ஆக நிர்ணயிப்பதை இந்திய தரகு முதலாளி வர்க்கம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இது பற்றிய செய்தி இந்து ஆங்கில நாளேட்டில் 21-07-2016 அன்று வெளிவந்திருக்கிறது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு முதலாளிகளால் எழுதப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கடிதங்கள் ஒப்பந்தத் தொழிலாளிகளின் குறைந்தபட்ச கூலி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தரகு முதலாளிகளின் கால்களை நத்தி பிழைக்கும் மோடி கும்பல், எஜமானர்களின் கட்டளைக்கு அடிபணிந்து கூலி உயர்வை நிறுத்தியிருக்கிறது. மேலும் உலக முதலாளிகளிடம் கூலி உயர்வு பற்றி ஆலோசனை கேட்டு விட்டு கருத்து சொல்வதாக கூறியிருக்கிறது இந்தியாவின் தொனா நானா அமைச்சகம்!
ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறு வேறாக இருக்கிறதாம். இதை மாற்றி நாடெங்கிலும் கூலி உயர்வு கொடுத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம்.
பிர்லா குழுமத்தின் ஆதித்யா பிர்லா பேசன் மற்றும் ஆதித்யா சில்லறை வணிக நிறுவனம், ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான கூலி உயர்வு, உற்பத்தியாளர்களுக்கு கடும் நிதிச் சுமையை உருவாக்கும்’ என கூறியிருக்கிறது. நாட்டைச் சுரண்டும் நம்பன் ஒன் பகாசுரக் கொள்ளையனுக்கு தொழிலாளிகளின் கூலி, நிதிச் சுமையாம்! ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு பி.எஃப், கிராஜூவட்டியெல்லாம் தரும் பொழுது கூலி உயர்வு என்பது தொழிலாளிகளைச் சுமக்கும் கூடுதல் சுமை’ என்று சலித்துக்கொள்கிறார் பிர்லா.
நினைத்த நேரத்தில் சொடுக்கு போட்டு மோடி கும்பலை வேலை வாங்கும் இந்திய தரகு முதலாளிகள் சங்கமான ஃபிக்கியும் (FICCI-Federation of Indian Chamber of Commerce and Industries) இதில் கருத்து தெரிவித்திருக்கிறது. ஃபிக்கியின் அறிக்கையின் படி, ‘இந்திய ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு கொடுத்தால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளிகளை வைத்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம்’.
அதாவது பங்களாதேஷ், பாகிஸ்தான் என நாட்டு எல்லைகளைக் கடந்து தொழிலாளிகளை ஒட்டச் சுரண்டி கொள்ளை இலாபம் அடிக்கும் பொழுது, இந்திய ஒப்பந்தத் தொழிலாளிக்கு மட்டும் கூலி உயர்வு எதற்கு என்று கேட்கிறது பிக்கி! தங்களுக்கான இலாபத்தை நிர்ணயிப்பது தொழிலாளிகளுக்கான கூலிதான் என பிக்கி ‘மார்க்சியம்’ பேசுகிறது! ஆனால் இந்த அரசியலை மறைத்து, இதே முதலாளிகளிடம் ஐந்தாயிரம் கொடு, ஆறாயிரம் கொடு என்று தொழிலாளிகளை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தவிடுகின்றன ஆளும் வர்க்க தொழிற்சங்கங்கள்! இதை மீறி நிதர்சனத்தைப் பேசினால் சிவப்பு பயங்கரவாதம் என்று தொழிலாளர்களைப் பீதியூட்டுகிறார்கள்!
கூலி உயர்வை மறுக்கும் பிக்கியின் இதே வாதத்தை சிறுதொழிற்சாலைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த முதலாளிகள், இந்தியாவின் மாநிலங்களுக்கு பொருத்துகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறு வேறாக இருக்கிறதாம். இதை மாற்றி நாடெங்கிலும் கூலி உயர்வு கொடுத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம். சரிதான்! உண்மைதான்! ‘பீகார் ஒப்பந்தத் தொழிலாளியை ரூ 3,500-க்குச் சுரண்டலாம். தமிழ்நாட்டு ஒப்பந்தத் தொழிலாளியை ரூ 6,500-க்குச் சுரண்டலாம். இருவருக்கும் குறைந்தபட்சம் ரூ 10,000 என்று நிர்ணயித்தால் இலாபத்தை யார் விட்டுக்கொடுப்பது? இவர்கள் இருவரும் ஒன்றிணைய கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் சீமான்! மும்பையில் சிவசேனா! முக்குக்கு முக்கு ஆர்.எஸ்.எஸ் என்று நிறுத்தி வைத்திருக்கிறோம். இந்த கட்டமைப்பை மீறி கூலி உயர்வு என்று கேட்டால் நாங்கள் சும்மாவிடுவோமா’ என்கிறார்கள் சிறுதொழிற்சாலை முதலாளிமார்கள்.
‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான கூலி உயர்வு, உற்பத்தியாளர்களுக்கு கடும் நிதிச் சுமையை உருவாக்கும்’
இதையெல்லாம் விட ஆடை ஏற்றுமதி முதலாளிகள் கூட்டமைப்பு கூறிய கருத்துதான் முத்தாய்ப்பானதாக இருக்கிறது. ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு அளித்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமே ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்’ என்று கணக்குப்போட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அத்துணை கோடியும் ஒப்பந்தத் தொழிலாளிகளின் உழைப்புச் சுரண்டலிருந்து வந்தது என்று மறைமுகமாகச் சொல்கிறார்கள்.
அற்ப கூலி உயர்வுக்கு ஆடை ஏற்றுமதி துறையில் மட்டுமே 11,000 கோடி இலாபத்தை விட வேண்டுமென்றால் இன்னபிற தொழிற்துறைகளில் இலாபக்கணக்கு என்னவாக இருக்கும்?
இயந்திர தொழிற்துறையான L & T தனியார் நிறுவனத்தின் 75% பணியாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; இந்தியாவின் எரிசக்தி துறையில் 54% பேர்; சிமெண்ட் தொழிற்சாலையில் 52% பேர்; ஆட்டோமொபைல் தொழிலில் 47% பேர்; சேவைத் துறையில் 8.8% பேர் ஒப்பந்தத் தொழிலாளிகள். இரயில்வே, மருத்துவமனை, கல்வித்துறையில் ஒப்பந்தத் தொழிலாளிகளின் கணக்கு குறிப்பிட்டு தெரியவில்லை.
மறுகாலனியாக்கத்தின் தீவிரத்தில் தொழிலாளிகள் பிய்தெறியப்பட்டு உதிரிகளாக்கப்பட்ட சீரழிவை கடந்த முப்பது ஆண்டுகளாக பார்த்துவருகிறோம். சங்கம் அமைக்க உரிமைகள் மறுப்பு, வேலை நேர அதிகரிப்பு, கொடூரமான சுரண்டல், என ஒப்பந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கை எந்தவித ஒப்பந்தமின்றியும் அடிமைகளின் வாழ்வைவிட கீழாக இழிந்த நிலையில் சுரண்டப்பட்டு வருகிறது. இதில் கூலிஉயர்வு என்பதை முதலாளித்துவ வர்க்கம் எத்துணை வெறி கொண்டு தாக்குகிறது பார்த்தீர்களா?
கைக்கூலி மோடி அரசை வைத்துக்கொண்டு, தரகு முதலாளிகள் பாட்டாளிகளை வதைக்கிற இக்கொடுஞ்செயலை படிக்கிற பொழுது தோழர் லெனின் சொன்ன கீழ்க்கண்ட பத்தி நினைவிற்கு வருகிறது.
“வயிராற உண்டவர்கள் பசித்தவர்களை ஒருவரையொருவர் படுகொலை செய்யுமாறு எதற்காக விரட்டுகிறார்கள்? இதைக் காட்டிலும் மதி கெட்ட அறுவருத்தக்க குற்றத்தை உங்களால் சொல்ல முடியுமா? தொழிலாளர்கள் இதற்காக மிகக் கடுமையான விலை செலுத்த வேண்டியிருக்கும். எனினும் முடிவில் தொழிலாளிகள் வெற்றி பெறுவார்கள். இதுவே வரலாற்றின் விருப்பம்.” (தோழர் லெனின், தோழர் மாக்சிம் கார்க்கியிடம் பேசியதிலிருந்து, லெனின் சொற்சித்திரம், கீழைக்காற்று வெளியீடு)
தோழர் லெனின் சொல்வதுபடி வரலாற்றின் விருப்பமான தருணம் எதிர் நோக்கியிருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றிணைந்து தமது உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுடன், தரகு முதலாளிகள் கும்பலை வீழ்த்தி தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தான் இந்த வரலாற்றின் விருப்பமான தருணம் அடங்கியிருக்கிறது!
“அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல்! தலைமுறையை சீரழிக்கும் டாஸ்மாக்! தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக 17.07.2016 அன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது.
அதில் நடந்த உரையாடல்கள் :
தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்
தோழர் தர்மராஜ்
அரசிற்கு என்றுமே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கை கிடையாது. கொள்ளையடிப்பவர்களுக்கு துணைபோவது, கொள்ளையடிப்பது இதுவே அரசின் வேலை. நாம் தள்ளாடினால் தான் ஆட்சியாளர்கள் ஸ்டெடியாக கொள்ளையடிக்க முடியும். இளைஞர்கள் திட்டமிட்டே சீரழிக்கப்படுகிறார்கள். ஆபாச பாடல் பாடிய சிம்புவை கவுரவிக்கும் அரசு தான், மூடு டாஸ்மாக் பாடல் பாடினால் தேசதுரோக வழக்கில் கைது செய்கிறது. இந்த டாஸ்மாக் அரசு போதையில் இருந்து தமிழகத்தை விடுவிக்கப் போவதில்லை. அந்த வகையில் தமிழகத்தை போதையில் இருந்து மீட்கவும், குடிகார சமூக விரோதிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருக்க கூடிய பல்வேறு துறையினரும் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்து கலந்துரையாட அழைப்பு விடுத்து தன் தலைமை உரையில் பேசினார்.
Dr சென்னியப்பன், MD Dh., இதய நோய் சிறப்பு மருத்துவர்
Dr சென்னியப்பன்
மது மனிதர்களின் இதயத்தை மிகக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கினார். அவரது பேச்சு பார்வையாளர்களுக்கும், சக பேச்சாளர்களுக்கும் இதயத்தின் அவசியம் பற்றியும் அதை சீராக இயங்கவிடாமல் மதுவை ஊற்றி கொள்ளும் அரசின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தும் வகையில் இவரது உரை அமைந்தது. அவரது உரையில் இருந்து சில துளிகள்…
மது அருந்தும் பலர் சொல்லும் போது மது அருந்துவதால் இதயத்திற்கு நல்லது. அதனால் குடிக்கிறேன் என்கிறார்கள். ஆனால், உண்மையில் பார்க்கும் போது மது அருந்துபவர்களுக்கு தான் அதிகம் மாரடைப்பு ஏற்படுகிறது. நம் இதயம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முறை துடிக்கிறது. இதயம் என்பது 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும். மது குடிப்பதால் இரத்தக் குழாய் மூலம் போவது தடைபடுகிறது. இதனால் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டவுடன் இரத்தத்தை வெளியில் அனுப்பும் தசைகள் செயலிழந்து விடும். எனவே இதயம் செயலிழந்து விடும். இதை சரிசெய்ய வேண்டுமானால் இதயத்தை மாற்றுவது மட்டுமே தீர்வு ஆகும்.
புகை பிடித்தல், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், மன அமைதி இல்லாமை போன்ற காரணத்தினால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஏனென்றால் மது அருந்தும் போது புகை பிடிப்பார்கள்.
சர்க்கரை நோய் இருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு கட்டாயம் மாரடைப்பு வரும். மது அருந்துபவர்களுக்கு செரிமானம் ஆவது நின்றுவிடும். இரத்தழுத்தம் உள்ளவர்கள் மது அருந்தினால் கெட்ட கொழுப்பு மேலே ஏறும். உடனே மாரடைப்பு ஏற்படும். மேலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கட்டாயம் மாரடைப்பு ஏற்படும். மது அருந்தினால் கொழுப்பு அதிகமாகி வயிறு சாதாரன அளவை விட பெரிதாக இருக்கும். மேலும் மது அருந்துவதால் மனசுமை அதிகமாகும். எனவே மாரடைப்பு ஏற்படும்.
நாடித்துடிப்பு என்பது மது அருந்துபவர்களுக்கு சீராக இருக்காது. இதயத்திற்கான ஒரு கதவு பூட்டப்பட்டுவிடும் பிறகு மரணம் நிச்சயம். இதை தடுக்க மது அருந்துவதை நிறுத்த வேண்டும். காய்கள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மாரடைப்பை தடுக்க உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவையான இதயம் இன்றைய அரசின் இலாப வெறிக்காகவும், தனது கொள்ளைக்காகவும் நாசமாக்கப்படுவதை கண்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் சிந்திக்கவும், மதுவிற்கு எதிராக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற போராட்ட உணர்வை தூண்டும் வகையிலும் மருத்துவரின் உரை அமைந்தது.
ம.ப. சின்னதுரை, தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலர்
ம.ப. சின்னதுரை
மருத்துவர் ஐயா சென்னியப்பன் பேசியதை இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்போதாவது தமிழர்களின் இதயத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறோம் என உணரட்டும் என முத்தாய்ப்பாக தொடங்கினார். காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவது சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் சாராயக்கடை நடத்துபவர்கள் விழிப்புணர்வு பேரணி செல்வதா என்று தான். முதலில் விதி மீறல் கடைகளை மூட வேண்டும். அரசு என்பது மக்களின் நலனில் எதையும் செய்வதில்லை. பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்களை தண்டிக்கிறது. ஆனால் உற்பத்தி செய்பவனை தடுப்பதில்லை. அதே போல் தான் டாஸ்மாக்கிலும்.
என் கடமையை நான் செய்தேன். உரிமையோடு போராடுகிறேன். நீராதாரத்தை காப்பாற்ற கூட எங்கள் ஊரில் பொது நல அமைப்புகளுடன் இணைந்து போராடி வெற்றி பெற்றோம். அதே போல் இதற்கும் போராடுவோம். கட்டாயம் மாணவர்கள் போராட வேண்டும். இளைஞர்களுடன் இணைந்து போராடுவதில் எனக்கு மகிழ்ச்சி என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அவர் பேசியது மட்டுமல்லாமல் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து போராட்டத்திலும், போலீசாரின் அனைத்து நெருக்குதலையும் தாண்டி கலந்து கொண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்.
திரு மதியழகன்
திரு மதியழகன், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலர்
மது அருந்துபவர்களுக்கு மது குடித்தவுடன் 10 பேரை அடிக்கும் அளவிற்கு வீரம் வந்தது போல் திமிருவார்கள். அந்த நேரத்தில் அவன் முழு சுய நினைவை இழந்து பெண்களை பார்த்தாலே காம கொடூரனாக மாறி பாலியல் கொடுமை செய்கிறான். இதை எதிர்த்து கட்டாயம் போராட வேண்டும் என ரத்தின சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார்.
பேராசிரியர் முனைவர் மணிமேகலை, Msc, M.Phil, ph.D
பேராசிரியர் முனைவர் மணிமேகலை
கலந்தாய்வுக் கூட்ட தலைப்பில் 3 காரணம் உள்ளது. அதில் அறிவியல் பூர்வமான காரணம் என்பது தான் டாக்டர் சென்னியப்பன் பேசியது. இப்பொழுது உள்ள மாணவர்களிடம் சமூக சிந்தனை என்பதே இல்லை. அது அற்று போய் முழுக்க சுய நலம் என்பது மட்டுமே தான் உள்ளது. இப்பொழுது உள்ள கல்வி முறையும் சுய ஒழுக்கத்தை கற்றுத் தருவதில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் பொறுப்பாக நடந்து கொள்ளாமல் எதிரி போல் ஆகி விடுகின்றனர். ஏனென்றால் குறைவான சம்பளம், வேலை நிரந்தரம் இல்லாமை, தனியார் பள்ளிகள் போன்ற காரணம். எனவே ஐக்கியம் இல்லாமல் மாணவனே ஆசிரியரை குத்தி கொள்கிறான். ஒரு வகுப்பை 2 வருடம் படிக்கிறான். மேலும் ஆங்கில மோகம் அடிமை புத்தி என்பது தான் உள்ளது. வரலாறு மாணவர்களுக்கு தெரிவதில்லை. வரலாற்றை மறந்தால் அந்த சமூகமே அழிந்துவிடும். நமக்கு அரசு செய்யும் எதுவாக இருந்தாலும் அது நமக்கு எதிரானது தான். இலவசத்தின் பின் ஓடாமல் நாம் நம் உரிமைக்காக போராட வேண்டும். அரசு சாராயம் விற்க, கள்ளச்சாராயம் பெருகும் என்ற பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறது. மிடாஸ் கம்பெனியே அம்மா உடையது தான். நாம் தான் போராட வேண்டும். இதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறினார்.
ஆண்களின் முன் பெண்களின் மீதான வன்முறையை பற்றி பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இந்த கூட்டத்தில் ஆண்கள் அதிகம் உள்ளனர்.
டெல்லியில் நிர்பயா கொலை செய்யப்பட்டபின் எடுத்துக் கொண்டால் அதற்கு பின் இன்னும் அதிகப்படியான பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடந்துள்ளன. நாம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்களிடம், மாணவிகளிடம் பேசினால், தன் அப்பா மீது பயங்கர கோபமாக உள்ளனர். ஏனென்றால் பல பேரின் அப்பாக்கள் குடிகாரர்களாக உள்ளனர். தன் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவது இல்லை. என் அப்பா போல் நான் இருந்துவிடவே கூடாது என்று பல மாணவர்கள் சொல்கிறார்கள்.
இந்தியா முழுவதிலும் 22 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். ஒரு நாளைக்கு 2 பெண்கள் வீதம் இதுவரை 1556 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இந்த சமூகம் முழுக்க முழுக்க ஆணாதிக்க சமூகமாக உள்ளது. இந்த சமூகம் பெண்ணை வெறும் சதை பிண்டமாக மட்டும் தான் பார்க்கிறது. பெண்களைப் பொருத்தவரை அதிக இரக்ககுணம் உடையவர்களாகவே உள்ளனர். எனவே ஒரு ஆண் என்னை நீ விரும்பவில்லை என்றால், நான் இறந்துவிடுவேன் என்ற உடனே பெண்கள் இரக்கப்பட்டு தன்னையே அவனுக்கு கொடுத்து விடுகின்றனர். இதை பயன்படுத்தி ஆண்கள் என்னவேண்டுமானாலும் செய்கிறார்கள். இந்த அளவிற்கு ஒரு சமூதாயமே ஒரு காரணமான போதையையும், இணையதள சீரழிவுகளையும் எதிர்த்து போராடி முறியடிப்பது மட்டுமே தமிழகத்தை போதையில் இருந்தும், பெண்களை சீரழிவுகளில் இருந்தும் மீட்க முடியும் என கூறினார். இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும் கூட அதை பொருட்படுத்தாமல் உரக்க பேசி தனது உரையை நிறைவு செய்தார்.
திரு சீனிவாசன், B.Com. B.L., திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர்
திரு சீனிவாசன்
வழக்கறிஞர்கள் போராட்டத்தில் எங்களுடன் கலந்து கொண்ட மக்கள் அதிகாரம் உள்ளிட்ட தோழர்களுக்கு முதலில் நன்றி.
இன்றைய தலைமுறையே சீரழிந்து விட்டது. அதற்கு காரணம் டாஸ்மாக். மக்கள் அதிகாரம் அமைப்பின் போராட்டத்திற்கு முதல் வெற்றி என்னவென்றால் 500 கடையை மூடுகிறேன் என்று அரசு ஒத்துக் கொண்டது தான். டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாரயம் பெருகும் என்று அரசு சொல்லி சோசியல் டிரிங்க் காக அரசு மதுவை பரிமாறுகிறது. அரசு அனைத்திலுமே மக்களின் நலனை துளியும் பார்க்காமல் அரசின் நலனை மட்டும் தான் அரசு பார்க்கிறது. எங்களுக்கு ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடையை மூடிய பெருமை உள்ளது. பள்ளி வளாகம் அருகில் சூப்பர் மார்கெட் இதற்கு இடையில் டாஸ்மாக் கடை. இதில் குடிகாரர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போகும் பெண்களை கிண்டல் செய்தனர்;. குடித்துவிட்டு வம்பிழுத்தனர். இதை வைத்து வழக்கு போட்டு கடையை எடுத்தோம். அரசு வைத்திருக்கும் விதிமுறை அடிப்படையில் இல்லமால் தான் அரசே டாஸ்மாக் கடை வைத்துள்ளது. அரசும், அரசில்வாதிகளும் சேர்ந்து செய்யும் தொழில் டாஸ்மாக். இதுதான் சமூக சீர்கேடு.
சென்னையில் HAPPY HOURS என்று பாரில் உள்ளது. அங்கு பெண்கள் காலையில் இருந்து மாலை வரை எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாக குடிக்கலாம். குறிப்பாக இது ஜோடியாக வருபவர்களுக்கு மட்டும். எனவே ஆண்கள் சலுகை விலையில் குடிக்க பெண்களை கூட்டிச் சென்று நிறைய பெண்கள் குடிகாரர்களாக மாறியுள்ளனர். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.
திருமணம் செய்த ஆண் தன் குடும்பம் என்று சிந்தித்து தன் குடும்பத்திற்காக உழைப்பது, குடும்பத்தை பராமரிப்பது என்ற திறனே அற்று முழுக் குடிநோயாளியாக மாறியுள்ளான். 500 கடை மூடப்பட்டது என்பது பொய்யானது. இரண்டு கடை இருந்த இடத்தில் ஒரு கடை மூடி உள்ளார்கள் என்றால் அது கடை மூடல் கிடையாது. மது வாங்க இரண்டு வழிகள் இருந்ததில் ஒரு வழியை அடைத்து விட்டு அனைவரும் செல்ல மற்றொரு வழி அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
ஒரு குவாட்டர் விலை ரூ 900. ஏனென்றால் மது ரூ 150. குடித்துவிட்டு சாலையில் வண்டி ஓட்ட போலீசிடம் கொடுக்கும் அபராதம் ரூ 750. மொத்தமாக ரூ 900. தினமும் ஒருவன் குடிக்காக செலவழிக்கிறான்.
மேலும் முக்கியமான ஒரு பிரச்சனை உள்ளது. கொடைக்கானலுக்கு நம் பிள்ளைகளோ அல்லது நாமோ பாதுகாப்பில்லாமல் தனியாக செல்லக் கூடாது. ஏனென்றால் அங்கு போதை காளான் என்று ஒன்று உள்ளது. அதை விற்பனை செய்யவே தனி கூட்டம் உள்ளது. அதை ஆம்லெட்டில் போட்டுக் கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு விட்டால் முழு போதையாகி கொடைக்கானலை விட்டே திரும்பி வரமுடியாது. அதுபோல் நிறைய பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கு அந்த போதை காளான் விற்பனை கும்பல் மீது அரசு போடும் வழக்கு கஞ்சா விற்பனை. இது வேறு போதை அது வேறு போதை. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக மக்கள் அதிகாரம் போராட வேண்டும். கட்டாயமாக நானும் கலந்து கொள்வேன் என்று கூறினார்.
சமூக சிந்தனையாளர் ஜெயராமன், அ.பெ.கா, புதுக்கோட்டை
சமூக சிந்தனையாளர் ஜெயராமன்
நம் சமூகமே முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. 13 வயது மாணவன் கூட இன்று சீரழிக்கப்பட்டு உள்ளான். ஓட்டுக் கட்சிகள் கூட ஆட்சிக்கே வராதவர்கள் கூட என்னை ஆட்சிக்கு கொண்டு வா, நான் டாஸ்மாக் கடையை மூடுகிறேன் என்றார்கள். அவர்கள் நோக்கம் கடையை மூடுவது அல்ல. ஒருவாரம் கடையை மூடினாலும் குடிகாரர்கள் குடிப்பார்கள். ஏனென்றால் உற்பத்தி என்பது நிற்கவில்லை. அரசின் நடவடிக்கை என்பது மிகவும் கேவலமாக உள்ளது. எய்ட்ஸ் என்றால் என்வென்றே தெரியாத 6 வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளை வைத்து விழிப்புணர்வு பேரணி நடத்துகிறார்கள். இவர்களுக்கு தகாத உடலுறவு, சரியான உடலுறவு என்றால் கூட என்னவென்று தெரியாது. ஆனால் இதை கற்றுக் கொடுத்து மாணவனை சீரழிப்பது போல் உள்ளது அரசின் வேலை. அரசின் நோக்கம் என்பது டாஸ்மாக்கை மூடுவது அல்ல. மக்களை சீரழிப்பது. மதுவினால் ஏற்படும் விளைவுகளை நாம் மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். நீதிமன்றத்தினாலே தடுக்க முடியவில்லை என்றால் எதற்கு இந்த சமூகம், இதுவொரு வன்முறை கலாச்சாரமாக உள்ளது. பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரிக்கிறது என்றால் அதை கற்றுக் கொடுப்பதே சினிமா தான் என்று பேசினார்.
தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம் மாநில தலைமைக் குழு உறுப்பினர்
தோழர் காளியப்பன்
63 ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறை தான் அதிகரித்துள்ளது. 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அன்டாக்குள் வெட்டிப் போட்டார்கள். டெல்லியில் நிருபயா வழக்கில் இதுவே இறுதியாக இருக்கட்டும் என்று பேசினார்கள். இன்று சுவாதி பற்றி பேசுகிறார்கள். இன்னும் அடுத்து என்று தான் போகும். ஆனால் தீர்வு என்ன?
ஏகப்பட்ட சட்டங்கள் வந்தும் எதுவும் செயல்படவில்லை. ஒரு பெண்ணை கான்ஸ்டபிள் முதல் ஏடிஜிபி வரை மொத்தம் 25 பேர் மாறி மாறி நாள் கணக்காய் பாலியல் வன்கொமை செய்துள்ளனர். இது நிரூபணமான உண்மை. ஆனால் தண்டனை என்பது 2 காவலர்கள் ஒரு உதவி ஆய்வாளர் மீது மட்டும் தான். மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தண்டனை கிடையாது.
டாஸ்மாக்கை மூட நம் தீர்வு என்ன? அதிகாரத்தை கையில் எடுத்து நாம் மூட வேண்டும் என்பது தான். மக்கள் ஓட்டுக் கட்சிகளை நம்பாமல் போராடியதால் தான் சில கடைகள் கூட மூடப்பட்டது. 500 கடைகள் மூடுவேன் என்று ஜெ அரசு சொன்னது போங்கு என்று கோவன் பாடினார். இன்று அது உண்மையானது. உண்மையிலேயே வெறும் 81 கடை தான் மூடப்பட்டது. மேலும் இரண்டு மணி நேரம் நேர குறைப்பது என்பது இல்லை. நாட்டில் உள்ள நீதிமன்றமே பெண்களுக்கு எதிராக உள்ளது. பெண்களை குற்றவாளியாக்கி, உண்மையான குற்றவாளிகளை விடுவிக்கின்றனர்.
மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசு தான். இதற்கெல்லாம் தீர்வு மக்களே தங்கள் கையில் அதிகாரத்தை எடுத்து போராட வேண்டும். காவல்துறையை ஒழித்தாலே நாட்டில் பல சதவிகித குற்றத்தை குறைக்க முடியும் என கூறி தனது தொகுப்புரையை நிறைவு செய்தார்.
இடையிடையே ம.க.இ.க மையக் கலைக்குழுவினர் பாடிய புரட்சிகர பாடல்கள் அனைவரையும் மேலும் உற்சாகப்படுத்தியது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர் ஓவியா நன்றியுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.
2002 குஜராத் படுகொலையில் எரிக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகள்
நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.
ஃபைனல் சொலுயூசன் – குஜராத் படுகொலை ஆவணப்படம்
உணர்ச்சி வசப்பட வைக்கும் எழுத்துக்களின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவு குறித்த வரையறை எதுவுமில்லைதான். ஆனால், அது நிச்சயமாகக் காட்சி ஊடகத்தின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவை விடக் குறைவுதான்.
சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால், குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் “”ஒரே அழுகுரல், எங்கும் புகை, ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருக்கின்றன, வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணங்களாக மனிதர்கள், அலறி ஓடுகின்ற மக்கள், துரத்தி வரும் இந்து மதவெறியர்கள்….” — இப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் அப்படி ஏதுமில்லை. பிஜேபியின் சித்தாந்தம் பாசிசம்தான் என்பதையும், பிஜேபி, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலெல்லாம் பாசிசக் கூட்டம்தான் என்பதையும், மிகத் தெளிவாக, ரத்த சாட்சியங்களாக நம்முன் வைக்கிறது இந்த ஆவணப்படம், நாம் இனிமேல் குஜராத்தை என்றென்றைக்கும் மறந்து விட முடியாதபடி. இப்படத்தின் பெயர்: ஃபைனல் சொல்யூஷன் இறுதித் தீர்வு. படத்தை எடுத்தவர் ராகேஷ் சர்மா.
இந்து நஞ்சு
ராகேஷ் சர்மா
படத்தின் துவக்கத்திலேயே, படுகொலையினால் பாதிக்கப்பட்ட, படுகொலைகளை நேரில் பார்த்த முசுலீம் குடும்பத்துச் சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. ஒரு நொடியில் நாம் அதை உணர்ந்து விடுவதால் ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது. படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.
பக்தியை, கடவுளை, மதத்தை, மதவெறியை, கலவரம் மூலமாக, படுகொலைகள் மூலமாக, பாலியல் வன்முறை மூலமாக, தேர்தல் வெற்றியாக மாற்ற முடியும் என்பதைப் பாசிஸ்டுகள் நிரூபித்துக் காட்டுகிற விதத்தை தெளிவாக நாம் புரிந்து கொள்ளும்போது, படம் முடியப் போகும் நேரத்தில், மீண்டும் அதே சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதைக் கேளுங்கள். இஜாஜ் படித்துக் கொண்டிருப்பது யூ.கே.ஜி.
இஜாஜ்: 1… 2… 3… எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு… பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.
கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?
இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!
கே: யாரை?
இ: இந்துக்களை!
கே: ஏன்?
இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!
கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக நினைக்கிறாய்?
இ: …..கட்டாயம் அவர்களைக் கொல்வேன்!
2002 குஜராத் படுகொலையில் எரிக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகள்
— குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.
சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால்
இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள், ராமபக்தர்களான இந்துப் பாசிஸ்டுகள். தம்மை இந்துக்கள் என்று நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிபவர்கள் இஜாஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?
அது யாரோ வெறியர்கள் செய்தது என்றால், உங்களின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதால் அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து என்பார்களே, அதை அப்படியே பார்க்க முடிகிறது. அதுவும் இது இந்து நஞ்சு.
பிரச்சாரம் பயம் வெற்றி
பிஜேபியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுடன் படம் துவங்குகிறது. முசுலீம்களை இழிவாகத் திட்டும் சிறுவர்கள். இஜாஜின் நேர் காணல். முசுலீம் முகாம்கள் இடிக்கப்பட்ட வீடுற்ட்கள் — “”போலீசு பஜ்ரங்தளுடன் சேர்ந்து கொண்டனர்” என ஆவேசப்படும் முசுலீம்கள். போலீசு சுடும் காட்சி கலவரத்தை அடக்க போலீசால் சுடப்பட்டுச் செத்த 40 பேர்களில் 36 பேர் முசுலீம்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர் காணல்கள். மோடியின் மதவெறியூட்டும் தேர்தல் பிரச்சாரப் பேச்சு. எல்லா இடங்களிலும் கோத்ரா பற்றியே பேச்சு.
கோத்ரா ரயிலில் இறந்த ஒரு பெண்ணின் இரண்டு புகைப்படப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போய், ஒன்றை விஎச்பி அலுவலகத்தில் கரசேவத் தியாகிகள் என கட்டம் போட்டும், இன்னொன்றை, வில்லோடும் வெறியோடும் சீறும் “ராம்’போவின் படத்துடன் இணைத்து லேமினேட் செய்தும் கொடுத்துள்ளார்கள். “”எங்கம்மா கரசேவகர் இல்லை. விஎச்பிக்காரர்கள் அப்படி மாற்றி விட்டார்கள்” என்று அவரது மகள், ஒரு சிறுமி சொல்கிறார்.
“எங்கம்மா கரசேவகர் இல்லை. விஎச்பிக்காரர்கள் அப்படி மாற்றி விட்டார்கள்” என்று அவரது மகள், ஒரு சிறுமி சொல்கிறார்.
தேர்தல் பிரச்சாரம் ராவணனால் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான் குஜராத்திற்கு வந்திருந்தார் எனப் பிரச்சாரம். நடக்கும் தேர்தல் பிஜேபிக்கும் காங்கிரசிற்குமல்ல; இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பாகிஸ்தானே நமது எதிரி முஸ்ரஃபே எச்சரிக்கை இந்து வன்முறையாளர்கள் என்று சொல்கிறார்கள், இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, இந்துக்கள் வன்முறையில் இறங்கினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இல்லாமல் போகும் — பிரச்சாரம், இந்துமதவெறிப் பாசிசத்தின் உச்சகட்டப் பிரச்சாரம்.
இடையில் இந்துக்களுக்கு ஆதரவாகச் சிலர், ஒரு டாக்ஸி டிரைவர், இளம்பெண், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்… எனப் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது பொய்தான் என்பதையும், உண்மையைச் சொல்ல வரும்போது அவர்கள் தடுமாறுவதையும் பேச்சை நிறுத்திக் கொள்வதையும், அவர்கள் மறைக்க நினைக்கும் இந்துத்துவச் சார்பை, டாக்ஸியில் இருக்கும் கண்ணாடிப் பிள்ளையார், பிரார்த்தனையை வலியுறுத்திப் பேசி, ஊதுபத்தி காட்டி, போலீசுக்குக் கும்பிடு போடும் இளம்பெண்… போன்றவைகளைக் கவனமாகக் காட்சிப்படுத்தியிருப்பதன் மூலமும் சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு அவசியம் இருக்க வேண்டிய “கருத்துக்களின் சார்பை வெளிக் கொணருதலை’ ராகேஷ் சர்மா இதில் முழுமையாகச் செய்திருக்கிறார்.
ஒரு இந்துக் கோயிலில் குண்டைத் தேடியும், தீவிரவாதிகளைச் சுட்டதாகவும் காட்டும் ராணுவ நடவடிக்கைகளைக் காண்பித்து “சான்சூய் டிவி’யின் விளம்பரத்தைக் காண்பித்திருப்பது பொருத்தமான அம்பலப்படுத்துதலோடு கிண்டலாகவும்இருக்கிறது.
படத்திலுள்ள செய்திகள் ஏராளம், ஒரு நூல் எழுதுமளவிற்கு. மந்திரம், வேதம், புனிதம், பக்தி, கடவுள், தியானம், யோகம், ஆன்மீகம், காவி, துறவு, பூஜை, தேசபக்தி, ஸ்ரீராம், காளி, கணபதி… இன்னும் தான் அணிந்திருக்கிற எல்லாவிதமான முகமூடிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, தான் ஒரு பாசிசம்தான் என முழு அம்மணமாய் குஜராத்தில் நின்றிருக்கிறது இந்துத்துவம். அதற்கு ஆதாரம் இப்படம்.
***
சுகானா, அவரது மகள்கள் ரேஷ்மா, சபானா மூன்று பேரும் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். பறிகொடுத்த உறவினரின் நேர் காணலுக்குப் பிறகு, அவர்கள் சீரழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட இடங்களையும், பார்வையிட்ட பிறகு, அத்தொகுதியின் பிஜேபி எம்.பி. பிரபலமான வக்கீல், கோபால்சிங் சோலங்கியிடம் அவரோடு காரில் பயணித்துக் கொண்டே நேர்காணல் துவங்குகிறது:
கே: நீங்கள் வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறீர்கள்.
எம்.பி: ஆம்! நான் முதலில் வக்கீல், அரசியல்வாதி பிறகுதான். அரசியல் என்னோடு கூடவே ஓடிவந்து கொண்டிருக்கிறது.
(கார் வக்கீல் அலுவலகத்திற்கு வந்துவிட்டது. ஏராளமான புகார்தாரர்கள். போலீசும் அமர்ந்திருக்கிறது. கேள்விகளுக்குச் சிலர் பதில் சொல்கிறார்கள்.)
பதில்: ஆம்! அவர் எங்கள் வக்கீல்!
கே: எப்படிப்பட்ட வக்கீல்?
ப: மிகத் திறமைசாலி அவருக்கு எல்லாச் சட்டமும் தெரியும்.
கே: என்ன வழக்கில் நீங்களெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள்?
ப: செக்ஷன் 302, 307 அப்புறம் 376.
கே: எதுக்காக?
ப: 376 ரேப்… 302 கொலை
“ஏன் மோடிக்கு ஓட்டுப் போடுவேன் என்கிறீர்கள்?” இதற்கு ஒரு இளைஞனின் பதில், “அப்பத்தாங்க டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.” டென்ஷன் என்பது பயம்தான்.
இசுலாமியப் பெண்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். வேட்டையாடிய இந்து ஓநாய்களின் வக்கீல் பிஜேபியின் பாராளுமன்ற உறுப்பினர். வக்கீல் த எம்பி த கலவரம் த பாலியல் வன்முறை த படுகொலை த வக்கீலிடம் குற்றவாளிகள் கூட்டம் த சிறந்த வக்கீல் த பாலியல் வன்முறை, படுகொலை வழக்குகள் த வெற்றிகரமான வக்கீல் தொழில் த மிகத் துல்லியமாக இந்த வலைப்பின்னலை அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர்.
ஆவணப்படம் எனும் வடிவத்தில் இச்செய்தியை ராகேஷ் சர்மா வெளிக் கொணரக் கையாண்டிருக்கும் பொருத்தமான தொகுப்பும், உத்தியும், ஆவணப்பட உலகினர் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தப் பொருத்தமும், தொகுப்பும் ராகேஷ் சர்மாவிற்குக் கனகச்சிதமாய் அமைந்ததற்கு, பிரச்சினையின் உண்மையை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதுதான் அடிப்படை.
குற்றங்களைச் செய்வதற்கான குற்றவாளிகளை உருவாக்கிப் பணமும் சம்பாதிப்பதற்கு, பிஜேபிக்கு பயன்பட்டிருக்கிறது வக்கீல் தொழில். மைக்கேல் மூரின் “”பாரன்ஹீட் 9/11”ஐ நினைவூட்டுகிறது இக்காட்சி. பணம் சம்பாதிக்க புஷ் குடும்பம் துவக்கிய ஈராக் போர். அங்கே அமெரிக்க “அப்பன் புஷ்’; இங்கே பிஜேபி எம்.பி சோலங்கி.
இவ்வளவு குரூரமான கலவரத்திற்குப் பிறகும் பிஜேபி தேர்தலில் எவ்வாறு வெற்றியடைந்தது என்பதைப் படம் தெளிவாக விளக்குகிறது.
சங்பரிவாரக் குரங்குகளால் தாக்கப்பட்ட முசுலீம் பகுதியிலுள்ள ஒரு இந்துவின் வீடு. வீட்டைச் சீர் செய்து கொடுத்திருக்கிறது இசுலாமியக் கமிட்டி — இவற்றையெல்லாம் சொல்லும் அந்தப் பெண்ணிடம், “”யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?” எனக் கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்லும் பதில் “”பிஜேபிக்கு.” காரணம்? பயம்.
“ஏன் மோடிக்கு ஓட்டுப் போடுவேன் என்கிறீர்கள்?” இதற்கு ஒரு இளைஞனின் பதில், “அப்பத்தாங்க டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.” டென்ஷன் என்பது பயம்தான்.
பயத்தை விதைத்து தேர்தல் வெற்றியை அவர்கள் அறுவடை செய்திருக்கிறார்கள். முசுலீம்களிடம் மட்டுமல்ல இந்துக்களிடமும் அந்தப் பயம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பயம்தான் பாசிஸ்டுகளுக்குத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.
***
ஹிட்லர் தனது இறுதித் தாக்குதலுக்கு வைத்துக் கொண்ட பெயர் இறுதித் தீர்வு. படத்தின் தலைப்பாக இருக்கும் இந்த வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் அர்த்தமும் இதுதான்.
நாமும் இங்கிருந்தே கற்றுக் கொள்வோம். தேர்தலில் தோல்வியடைய வைப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்குப் பாடம் கற்பிக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற நாமும் அதே “பயம்’ எனும் ஆயுதத்தையே எடுத்துக் கொள்வோம். பயம் என்பதை “”பயப்பட வைத்தல்” என்று மாற்றிக் கொள்வோம். தேர்தலில் அல்ல, தெருவில் திருப்பியடிப்போம். மதவெறிக் குரங்குகளைக் கட்டிவைத்து வாலில் தீ வைப்போம். பயம் அறுப்போம். துணிச்சல். துணிச்சல் ஒன்றுதான் வழி. மதவெறியர்களைப் பயப்பட வைக்கும் நடவடிக்கையில் இறங்கும் துணிச்சல் ஒன்றுதான் பாசிஸ்டுகளை ஒழித்துக் கட்டப் பயன்படும் முதல் ஆயுதம் என்பதை இறுதித் தீர்வு (ஊடிணச்டூ குணிடூதtடிணிண) எனும் இந்த ஆவணப்படம் முகத்தில் அறைந்து சொல்கிறது.
ஹிட்லர் தனது இறுதித் தாக்குதலுக்கு வைத்துக் கொண்ட பெயர் இறுதித் தீர்வு. படத்தின் தலைப்பாக இருக்கும் இந்த வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் அர்த்தமும் இதுதான்.
குஜராத்திற்குப்பின் தமிழகம்தான் என்கிற கனவைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறது காவிக் கும்பல். தேர்தலும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் பாசிஸ்டுகளை ஒழிக்காது. அவை பாதுகாக்கும், வளர்க்கும். குஜராத்தைவிட வேறு எடுத்துக்காட்டு இனித் தேவையே இல்லை.
இவர்களின் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் துணிச்சலும், நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் துணிச்சலும்தான், பாசிஸ்டுகளை ஒழிக்கும், அழிக்கும். அதற்குத் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு என்பதை புரட்சிகர அமைப்புகள் நிரூபித்தே தீரும்.
குருசாமி மயில்வாகனன்
புதிய கலாச்சாரம், ஏப்ரல் 2005.
மாட்டுக்கறிக்கு தடை, பசு புனிதம் என தனது பார்ப்பன இந்துமத பாசிச நடவடிக்கைகளை மக்களிடம் திணித்து வந்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மத வெறி அமைப்புகளுக்கு குஜராத் தலித்துகள் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திவ்ய பாஸ்கர் என்ற குஜராத் பத்திரிக்கையில் வெளியான செய்தி
கடந்த வாரத்தில் குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில் மாட்டுத்தோலை உரித்ததற்காக சிவசேனா மற்றும் பசு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பார்ப்பன இந்துமத வெறி அமைப்பினரால் தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டனர். பின்னர் ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். இளைஞர்கள் மாட்டை கொன்றார்களா இல்லையா என்பதை தான் போலீசாரும் விசாரித்து வந்தனர். இது பற்றிய செய்தியை வினவில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இக்காட்டுமிராண்டிதனத்தை கண்டித்து குஜராத் மாநிலத்தில் தலித்துக்கள் ஆரம்பித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த திங்களன்று சுரேந்தர் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செத்த மாடுகளால் நிரம்பி வழிந்தது. சுமார் 15 லாரிகளில் செத்த மாடுகளை அள்ளிவந்து ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டினர் தலித் மக்கள். இப்போராட்டத்தில் 1500-க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதே போல கோன்டல் துணை ஆட்சியர் அலுவலகம் மாட்டு எலும்புகளால் நிரம்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வண்டிகளில் செத்த மாடுகளை போட்டு செல்கிறார்கள் தலித் மக்கள். மாநிலம் முழுவதும் இதை பின்பற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெருக்களில் செத்த கால்நடைகளை போட்டு போராடும்படி அழைப்பு விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தாங்கள் நடத்தும் போராட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு மாட்டுத் தலையோடும் மக்கள் வருகிறார்கள். செத்த மாட்டின் தலையை தனியே எடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டு வந்திருந்ததை புகைப்படத்தோடு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது திவ்ய பாஸ்கர் என்கிற குஜராத்தி பத்திரிகை. ஆர்.எஸ்.எஸ் சொல்லிவரும் பார்ப்பன இந்து மத ஆச்சாரங்களின் மீது காறி உழிழ்ந்துள்ளார்கள் குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள். ”நாங்கள் இனி செத்த விலங்குகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபடமாட்டோம். அரசு இவ்வேலைக்கு சிவசேனாவின் சிவசைனிக்குகளையும், பசு பாதுகாப்பாளர்களையும் நியமித்து செத்த மாட்டை அப்புறப்படுத்தட்டும்” என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
குஜராத்தில் தலித்துக்கள் அரசு அலுவலகங்களில் செத்த மாடுகளால் நிரப்பினர்
முன்னதாக தலித் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு மறுநாள் உனா பகுதியில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வண்னம் ராஜ்கோட் மாவட்டத்தில் விசமருந்தும் தற்கொலைப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மாட்டின் உயிரைவிட தலித்துகளின் உயிர் கீழானதா என ஆத்திரத்தில் கல்வீச்சு மற்று பேருந்துக்கு தீவைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. 19-ம் தேதி பேசான் பகுதியில் நடந்த விசமருந்தும் போராட்டத்தில் ஹேமந்த் சொலான்கி என்பவர் இறந்தார். அம்ரிலி பகுதியில் நடந்த போராட்டத்தின் போது போலீசுடன் நடந்த மோதலில் போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் போராட்டம் பரவி வருகிறது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கிரி ரத்தோட் என்ற தலித் உரிமை ஆர்வலர் கூறுகையில், “உனா பகுதியில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குஜராத்தில் நிகழ்ந்துவரும் தலித்துக்கள் மீதான எண்ணற்ற தாக்குதலில் ஒரு பகுதிதான். குஜராத்தில் தலித்துக்கள் மிக மோசமான நிலையில் வசிக்கிறார்கள். அரசு அவர்களைக் காப்பாற்ற தவறிவிட்டது” என்கிறார். தலித்துக்கள் மீதான தாக்குதல் வாடிக்கையானது தான் என்றாலும் இந்த சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மற்றொரு ஆர்வலர் பார்மர்.
இந்த போராட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார் மற்றொரு மனித உரிமை செயற்பாட்டாளர் ஜிங்னேஷ் மெவானி. “கடந்த 2004 முதல் தலித்கள் மீதான வன்முறை குஜராத்தில் அதிகமாக வளர்ந்துவருகிறது. இக்குற்றங்களில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோ குறைந்துவருகிறது. ஆக எங்குமே நீதி கிடைக்காத போது ஆத்திரம் அதிமாகத்தான் செய்யும்” என்கிறார் இவர். இந்து மத வெறியர்களால் தாக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் தலித் இளைஞர்கள் நடைபெற்று வரும் போராட்டத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். “எங்களை தாக்கியவர்கள் தண்டிக்கபடவேண்டும்” என்கிறார்கள் அவ்விளைஞர்கள்.
தலித் மக்கள் இந்துமத வெறியர்களை எதிர்த்து போராடிவரும் போது ராம்விலாஸ் பஸ்வான், அதுவாலே, மாஞ்சி போன்ற தலித் பிழைப்புவாத தலைவர்களோ ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பார்ப்பன பாசிச கும்பலிடம் நத்தி பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது தலித்திய அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. தற்போது மக்கள் அரசு, நீதிமன்றம்,கட்சிகள், ஊடகங்கள் யாரையும் நம்பவில்லை. தங்கள் மீது இழைக்கப்பட்ட வன்முறையை ஒழிக்க அவர்களே போராட்ட ஆயுதத்தை ஏந்தியிருக்கிறார்கள். தலித் மக்களின் மீதான வன்முறைக் கொடுமையை இந்த அமைப்புக்குள்ளேயே தீர்த்து விடலாம் என்ற மனப்பால் குடித்த ‘தலித்தியம்’ மற்றும் ஓட்டுக் கட்சி தலித் இயக்கங்களின் தோல்வியையும் இது காட்டுகிறது.
2002- கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஈடுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் தற்போது இஞ்சி தின்ற குரங்காய் முழிக்கின்றன. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தொடர்பாக முஸ்லீம்களும், தலித் மக்களும் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தலித் மக்கள் திருப்பித் தாக்கி வருகின்றனர். அதுவும் இந்துத்துவத்தின் கோட்டையான குஜராத்திலேயே, மோடியை உற்பத்தி செய்து அனுப்பிய காவி வெறி மண்ணிலேயே இந்த போராட்டம் நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. எந்த மாட்டைப் புனிதம் என்று பசப்பினார்களோ அதே மாட்டிறைச்சி இன்று குஜராத் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அலையலையாகக் கொட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த போராட்டம் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டமாக இந்தியா முழுவதும் மாறும் போது இந்து மதவெறியர்களுக்கான கல்லறை நிச்சயம் கட்டப்படும். போராடும் தலித் மக்களுக்கு தோள் கொடுப்போம்! பார்ப்பனியத்தை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் கொட்டுவோம்.
The Gulbarg Society massacre took place on February 28, 2002, during the 2002 Gujarat riots, when a mob attacked the Gulbarg Society, a lower middle-class Muslim neighbourhood in Chamanpura, Ahmedabad. Most of the houses were burnt, and at least 35 victims including a former Congress Member of Parliament Ehsan Jafri, were burnt alive, while 31 others went missing. Most of the ressidents deserted their home and it became a ghost's town overnight *** Local Caption *** The Gulbarg Society massacre took place on February 28, 2002, during the 2002 Gujarat riots, when a mob attacked the Gulbarg Society, a lower middle-class Muslim neighbourhood in Chamanpura, Ahmedabad. Most of the houses were burnt, and at least 35 victims including a former Congress Member of Parliament Ehsan Jafri, were burnt alive, while 31 others went missing. Most of the ressidents deserted their home and it became a ghost's town overnight. Express archive photo
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடந்த முசுலீம் இனப் படுகொலை வழக்குகளில் ஒன்றான குல்பர்க் சொசைட்டி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, நீதி வழங்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தைத்தான் தந்திருக்கிறது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த 66 இந்து மதவெறியர்களுள் 36 பேர் விடுவிக்கப்பட்டு, 24 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த 24 பேரிலும் 11 பேர் மட்டுமே கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மீதி 13 பேர் மீது தீ வைத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாகக் கூடி கலாட்டா செய்தல் – என ஒப்புக்குச் சப்பாணியான, மிகக் குறைவான தண்டனை அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுள் 12 பேருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆள் அரவமற்று, பேய்க் குடியிருப்பாக மாறி நிற்கும் குல்பர்க் சொசைட்டி. (கோப்புப்படம்)
இந்து மதவெறி பாசிச குற்றக் கும்பலுக்கு அதீதமான கருணையைக் காட்டியிருக்கும் இத்தீர்ப்பு, இன்னும் ஒருபடி மேலேபோய் இவ்வழக்கில் குற்றவாளிகள் சதித் திட்டம் தீட்டியதற்கோ, பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்கோ ஆதாரமில்லை என்று கூறி, அக்குற்றச்சாட்டுக்களை முழுமையாக ரத்து செய்துவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், சங்கப் பரிவாரக் கும்பல் குல்பர்க் சொசைட்டியில் குடியிருந்து வந்த முசுலீம்கள் மீது திட்டமிட்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை, ஏதோவொரு சில வன்முறையாளர்களின் திடீர்த் தாக்குதலாகச் சுருக்கிவிட்டது, இத்தீர்ப்பு.
ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார இந்து மதவெறி அமைப்புகளும் நரேந்திர மோடி அரசும் இணைந்து குஜராத்தில் நடத்திய முசுலீம் படுகொலை எத்துணை கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தப்பட்டது என்பதற்கு குல்பர்க் சொசைட்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு வகைமாதிரி. குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில், ஆதிக்க சாதி இந்துக்கள் அதிகமாக வாழும் சமன்புரா பகுதியில் தனித்தீவாக அமைந்திருந்த முசுலீம் குடியிருப்பான குல்பர்க் சொசைட்டி மீதான தாக்குதல், கோத்ரா சம்பவம் நடந்த மறுநாள் – பிப்ரவரி 28, 2002 – காலையில் தொடங்கி மாலைவரை நீடித்தது. இத்தாக்குதலில் அக்குடியிருப்பில் இருந்த 18 வீடுகள் முற்றிலுமாகக் கொளுத்தப்பட்டதோடு, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் இஷான் ஜாஃப்ரி உள்ளிட்டு 35 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். குறிப்பாக, இந்து மதவெறிக் கும்பலை எதிர்த்து நின்ற இஷான் ஜாஃப்ரி, அங்க அங்கமாக வெட்டிச் சிதைக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். இவர்களுக்கு அப்பால் அக்குடியிருப்பைச் சேர்ந்த 31 பேரின் கதி என்னவென்பது இன்றுவரை தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. ஆனாலும், அவர்களின் உயிரற்ற உடல்கள்கூடக் கிடைத்துவிடாதபடி கொல்லப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டனர். கிட்டதட்ட 500 குடும்பங்கள் வசித்து வந்த அக்குடியிருப்பு, இன்று யாருமே வசிக்காத, எரிந்து போன, சிதிலமடைந்த கட்டிடங்கள் மட்டுமே எஞ்சி நிற்கும் பேய்க் குடியிருப்பாக மாறி நிற்கிறது.
தீஸ்தா செதல்வாத்.
இந்தத் தீர்ப்பு, இப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு மட்டுமல்ல; தனது மகனைப் பறிகொடுத்துவிட்டு, அவன் உயிரோடு இருக்கிறனா, இல்லையா என்பதுகூட நிச்சயமாகத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரூபா மோடி குடும்பத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அநீதியாகும். முதல் அநீதியை, இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இழைத்தது.
ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து மதவெறி பயங்கரவாதிகள் குல்பர்க் சொசைட்டியைத் தாக்கத் தொடங்கியவுடனேயே, அக்குடியிருப்பைச் சேர்ந்த முசுலீம்களும், முசுலீம் அல்லாத ரூபா மோடியும் அவரது இரு குழந்தைகளும் அக்குடியிருப்பில் வசித்து வந்த இஷான் ஜாஃப்ரி வீட்டில் தஞ்சமடைந்தனர்.முதல்வர் மோடியின் அலுவலகத்தையும் போலீசு அதிகாரிகளையும் தொலைபேசி வழியாகப் பலமுறை தொடர்பு கொண்டு, தங்களைக் காப்பாற்றுமாறு கோரினார் இஷான் ஜாஃப்ரி. தாக்குதல் நடந்த அன்று காலை தொடங்கி மதியம் வரை இஷான் ஜாஃப்ரி திரும்பத் திரும்ப தொடர்பு கொண்ட பிறகும், முதல்வர் அலுவலக அதிகாரிகளோ, போலீசு அதிகாரிகளோ அவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. இத்துணைக்கும் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்கு அருகாமையில், ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அகமதாபாத் நகர போலீசு கமிசனர் அலுவலகம் இருந்தும், மோடி அரசும் அதிகார வர்க்கமும் தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சியவர்களை இந்து மதவெறிக் கும்பலின் கைகளில் சிக்கி சாகவிட்டனர்.
குஜராத்தில் நடந்த முசுலீம் இனப் படுகொலையில் மோடி அரசுதான் அடிக்கொள்ளியாக இருந்தது என்பது மட்டுமல்ல, அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா பகுதிகளில் நடந்த படுகொலைகளில் அவரது அரசிற்கு நேரடியான பங்கும் இருந்தது. நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மோடி அரசில் அமைச்சராக இருந்த கோத்னானி தளபதியாகச் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டு, அவர் தண்டிக்கப்பட்டார். குல்பர்க் சொசைட்டி படுகொலையில் மோடி அரசின் பங்கை இஷான் ஜாப்ரியின் தொலைபேசி உரையாடல்கள் அம்பலப்படுத்தின. இந்த அடிப்படையில்தான் நரேந்திர மோடியையும், அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரி வழக்கு தொடுத்தார், இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி. அவரது கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டது.
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்கக் கோரிப் போராடிவரும் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் நரேந்திர மோடியிடம் விசாரணை என்ற நாடகத்தை நடத்திவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கக்கூடிய சாட்சியங்கள் எதுவுமில்லை என அறிக்கை அளித்ததோடு மட்டுமின்றி, “இஷான் ஜாப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான், கலவரக் கும்பல் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று போட்டதாக”க் குறிப்பிட்டு, குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்தார்.
விசாரணையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய உச்ச நீதிமன்றமோ, நரேந்திர மோடியைக் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த ராகவனின் அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டிய தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டு, அதனை குஜராத் மாநில கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. குஜராத் பெருநகர குற்றவியல் நடுவர் மன்றம் ராகவனின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, நரேந்திர மோடி மீது ஜாகியா ஜாப்ரி சுமத்திய குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தது.
நரேந்திர மோடி மட்டுமல்ல, அவரது அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரில் ஒருவர்கூட குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படவில்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்த அகமதாபாத் நகர கவுன்சிலர் பிபின் படேல், விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த அதுல் வைத்யா உள்ளிட்ட இரண்டாம் மட்டத் தலைவர்களும், மேகானிநகர் போலீசு நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த கே.ஜி.எர்டா போன்ற அம்புகள் மட்டுமே இப்படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். இவர்களுள் பிபின் படேலையும் கே.ஜி.எர்டாவையும் அப்பாவிகள் என நீதிமன்றம் கூறாததுதான் பாக்கி. அவர்கள் இருவரும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுவிட, அதுல் வைத்யா மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள கைலாஷ் குமார் தோபியை போலீசு இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் தொடர்புடைய மோடியையும், அவரது அதிகாரிகளையும் கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன். (கோப்புப்படம்)
“இருபதுக்கும் மேற்பட்ட பங்களாக்களையும், பத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் 500 குடும்பங்களையும் கொண்ட மிகப்பெரிய காலனியான குல்பர்க் சொசைட்டி மீது நாள் முழுவதும் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை, தீ வைப்பை, படுகொலைகளை வெறும் 24 பேர் மட்டுமே நடத்தியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது விந்தையாக இருக்கிறது” என இத்தீர்ப்பின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் இஷான் ஜாப்ரியின் மகன் தன்வீர் ஜாப்ரி.
குஜராத் இனப் படுகொலை குறித்து இரகசியப் புலனாய்வு செய்து அம்பலப்படுத்திய “தெகல்கா” வார இதழின் முன்னாள் செய்தியாளர் ஆஷிஷ் கேதான், “இஷான் ஜாப்ரியைக் கொலை செய்ததில் தமக்குப் பங்கிருப்பதை என்னிடம் ஒத்துக் கொண்ட மூன்று பேரில் இரண்டு பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பதை”ச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இவ்வழக்கில் சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு முயற்சி செய்யவேயில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார், தீஸ்தா சேதல்வாத். குறிப்பாக, குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடந்த சமயத்தில் போலீசு அதிகாரிகளுக்கு இடையே தொலைபேசி வழியாகவும், வயர்லெஸ் வழியாகவும் நடந்த உரையாடல்கள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அவர்கள் அந்தச் சமயத்தில் எங்கிருந்தார்கள், எங்கே போனார்கள் என்ற விவரங்களையெல்லாம் திரட்டி, சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்வைக்கவேயில்லை. குறிப்பாக, இஷான் ஜாப்ரி மோடியின் முதலமைச்சர் அலுவலகம் தொடங்கி பல்வேறு போலீசு அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களைச் சேகரிக்க முயலாமல், இஷான் ஜாப்ரியின் தொலைபேசி பதிவுகள் அழிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, சிறப்புப் புலனாய்வுக் குழு என அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.
அங்க அங்கமாகச் சிதைத்து, பின் எரித்துக் கொல்லப்பட்ட இஷான் ஜாப்ரி. (கோப்புப்படம்)
குல்பர்க் சொசைட்டிக்கு மிக அருகாமையில், ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நரோடா பாட்டியாவில் நடந்த படுகொலை தாக்குதல் வழக்கில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என நீதிமன்றம் கூறியிருப்பது முரண்பாடு மட்டுமல்ல; முக்கிய குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் உள்நோக்கத்தோடு நீதிமன்றம் நடந்திருப்பதையும் அம்பலப்படுத்துகிறது.
குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது; தண்டிக்கப்படுபவர்களுக்கு மரண தண்டனையைவிடக் குறைவான தண்டனை தரக்கூடிய விதத்தில் மட்டுமே தீர்ப்பு அமைய வேண்டும் என்ற நோக்கில்தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் புலனாய்வும், நீதிமன்றத்தின் விசாரணையும் நடந்துள்ளன என்பதைத்தான் இத்தீர்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ள தண்டனைகளும் எடுத்துக் காட்டுகின்றன.
ஆனால், இப்படிபட்ட “பரந்த மனப்பான்மை”யை முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் வெளிப்படுத்துவதில்லை. அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதபோதும், தேசத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதி மன்றம். மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய அப்பாவி யாகுப் மேமன் தூக்கில் தொடங்கவிடப்பட்டார். இந்தத் தண்டனைகளைக் கொண்டாடிய நகர்ப்புற நடுத்தர வர்க்கம், இந்து மதவெறி பயங்கரவாதிகள் சட்டப்படியே தப்ப வைக்கப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்க மறுக்கிறது.
“நீதிக்கான எனது போராட்டம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்; ஆனால், இத்தீர்ப்பைப் பார்த்தவுடன் எனது போராட்டத்தைத் தொடருவது என முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார், வயதையும் மீறிய போர்க்குணத்துடன் ஜாகியா ஜாப்ரி.
நீதியை வழங்க வேண்டிய அரசே காவிமயமாகி, அநீதிக்கும் துரோகத்திற்குமான இடமாகிப் போய்விட்ட நிலையில், ஜாகியா ஜாப்ரி, தீஸ்தா செதல்வாட் போன்றோரின் துணிவுமிக்க போராட்டங்கள்தான் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளாக விளங்குகின்றன.