Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 553

பி.வி.ஆர் சினிமா – அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்

1
PVR Cinemas

ரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்குறவங்க நாங்க. ஏப்ரல் 14 – அலுவலக் விடுமுறைங்கிறதால ஜங்கிள் புக் (Jungle Book) படம் பார்க்கலாம்னு நாங்க டிக்கெட் முன்பதிவு பண்ணியிருந்தோம்.

வேளச்சேரியில் அமைந்துள்ள PVR Cinemas
வேளச்சேரியில் அமைந்துள்ள PVR Cinemas

காலைல 9.15க்கு காட்சி. நண்பர்கள் எல்லாரும் முன்னாடியே போயிட்டாங்க. நான் எப்பவும் போல கொஞ்சம் லேட். படம் போடறதுக்கு முன்னாடி போகனும்னு வேக வேகமாக தியேட்டருக்குப் போனேன். மணி சரியா 9:20. படம் இன்னும் போடல. ’அப்பாடான்னு’ சீட்ட பாத்து ஒக்காந்து மூச்சு வாங்கினேன்.

பசங்க கிட்ட கேட்டேன் ”ஏன்டா இன்னும் படம் போடல? நான் வேற விழுந்தடிச்சுகிட்டு ஓடி வந்தேன்…கொஞ்சம் மெதுவா வந்திருக்கலாம் போலிருக்கு!”ன்னேன். ”இல்லடா… படம் இப்ப போட்ருவாங்க”னு பசங்க சொன்னாங்க.

அது குழந்தைங்க படம்…அதுவும் லீவு நாள் வேறங்கறதனால தியேட்டர்ல நெறைய குட்டி வாண்டுகளோட கூட்டம். அதுவும் பெரும்பாலனவங்க வேற மாநிலத்த சேர்ந்தவங்க (நம்ம தமிழ் மக்கள்தான்   ’தமிழ் புத்தாண்டு’ கொண்டாட கோவில் வரிசையில நின்னிகிட்டு இருப்பாங்களே!). குழந்தைகளுக்காகதான் அவங்க காலைல எழுந்து எல்லா வீட்டு  வேலையும் முடிச்சிட்டு வந்திருபாங்க போல…சுட்டீஸ் கூட்டம் ஒரே கலை கட்டிச்சு.  குழந்தைங்களோட கண்ணுல உற்சாகம்.

மணி 9:40 ஆயிடுச்சு…இன்னும்  படம் போடல. குழந்தைங்கெல்லாம் துறுதுறுன்னு அங்கயும் இங்கயும் அலஞ்சிகிட்டு இருந்தாங்க. எல்லோரும் போயி தின்பண்டம் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. ”பாப்கார்ன் வாங்கவா, பப்சா, ஐஸ்கிரீமா”ன்னு ஒரே சலசலப்பு.

தி. ஜங்கிள் புக் - திரைப்படம்
தி ஜங்கிள் புக் – திரைப்படம்

நாங்க  முன்கதவுகிட்ட நிக்கிற ஊழியர் ஒருத்தர்கிட்ட போயி ”சார் என்ன பிரச்சனை…ஏன் இன்னும் படம் போடல”ன்னு கேட்டோம். அவரு ”ஒரு சின்ன டெக்னிகல் பிரச்சினை சார்….இன்னும் 5 நிமிஷம் சார்”ன்னு சொன்னாரு. சரின்னு திரும்ப சீட்டுக்கு வந்து உக்காந்தோம்.

மணி பத்தாச்சு, இதுக்கு மேலயும் முடியாதுன்னு திரும்ப அந்த ஊழியர்கிட்ட போயி கேட்டோம். அவருக்கு சரியா பதில் சொல்ல தெரியல. ”யாரயாவது வரச்சொல்லுங்க…படமும் போட மாட்டிங்கிறீங்க….பதிலும் சொல்ல மாட்டிங்கிறீங்க”ன்னு சொன்னோம். அவரு சரின்னு சொல்லிட்டு எங்கேயோ போனாரு…

நாங்க பேசிக்கிட்டு இருக்கறத பாத்துட்டு எங்ககிட்ட வந்து மக்கள் ”என்ன ஆச்சு ஏன் இன்னும் படம் போடல”ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ”கொஞ்ச நேரத்தில படம் போடலியின்னா டிக்கட் காச திருப்பி குடுக்க சொல்லுங்க”ன்னு சில பேரும், ”டிக்கெட் காச மட்டும் திரும்ப கொடுத்தா பத்தாது… வண்டி பார்கிங் காசு ஆன்லைன் புக்கிங் காசு ஸ்நாக்ஸ் காசு  எல்லாத்தையும் திருப்பி தரனும்”னு சில பேரும் சொன்னாங்க. நாங்க ”சரி… நாம எல்லாத்தையும் சேர்த்து கேட்கலாம்”ன்னு சொன்னோம்.

டிக்கெட் காசு ரூ.120/- தவிர; ஆன்லைனில் புக்கிங்குக்கு ரூ.30/-; பார்கிங் ரூ.20/-; ஸ்நாக்ஸ் ரூ.100/-; அப்டின்னு கிட்டத்தட்ட எல்லாருமே ரூ.300/-க்கும் மேல் செலவு செஞ்சிருப்பாங்க…

கொஞ்ச நேரத்துல கருப்பு பேண்ட், வெள்ள சட்ட போட்ட ஒருத்தர் வந்தாரு. மேனேஜர் போலிருக்கு. அவர் வந்து ”சார் டெக்னிகல் பிராப்ளம். ஜங்கிள் புக் போட முடியாது…தெறி படம் போடுறோம் பாருங்கன்னு சொன்னாரு. உடனே தியேட்டர்ல எல்லாரும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க. சத்தம் அதிகமாயிடுச்சு. மேனேஜர் யாராவது ஒருத்தர் பேசுங்கன்னு சொன்னார்.

சரின்னு நான் ஒருத்தன் மட்டும் அவர்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.

நேரம்: 10.30AM

நான்: சார் ஜங்கிள் புக் பார்க்கத்தான் இங்க பல பேரு குடும்பத்தோட குழந்தைங்கள கூட்டிகிட்டு வந்திருக்காங்க. இதுல நெறைய பேரு தமிழ்நாட்ட சேந்தவங்க இல்ல…வேற மாநிலத்த சேந்தவங்க. அவங்களுக்கு தமிழ் வேற தெரியாது…

மேனேஜர்: அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது சார். தெறி தான் போட முடியும்.

நான்: படம் போட முடியலன்னா முன்னமே நீங்களா வந்து சொல்லியிருக்கனும். நாங்க வந்து கேட்டபிறகு 50 நிமிடம் கழிச்சு சொல்றீங்க. இப்ப மணி பத்தரை…கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் லேட். தெறி பார்க்க முடியாதுனு பலரும் சொல்றாங்க.

மேனேஜர்: வேற என்ன பண்ணனும்னு சொல்லுறீங்க.

நான்: (மக்கள்கிட்ட கலந்து பேசிட்டு) இவ்வளவு நேரம் எங்கள காக்க வச்சது உங்க தப்பு. இப்பவும் நாங்களா வந்து கேக்கலன்னா இன்னும் எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வச்சிருப்பீங்களோ. தப்பு உங்க மேலங்கறதுனால, நாங்க கேட்குறது 2 விசயம்:

  1. தமிழ் ரசிகர்களுக்கு: டிக்கெட் கட்டணம் + ஆன்லைன் புக்கிங் கட்டணம் + Snacks பணம் + பார்கிங் பணம் + தெறி படம் (கட்டணம் இல்லாமல்) போடுங்க வேற்று மாநிலத்தவருக்கு மேலே சொன்னபடி பணமும் Jungle Book படம் ஒரு நாள் போடுங்க (கட்டணம் இல்லாமல்).
  1. இல்லேன்னா அனைவருக்கும் பொதுவாக மேல சொன்ன எல்லாக் கட்டணமும் தந்துட்டு இன்னொரு நாள் Jungle Book படம் போடுங்க. நாங்க எல்லாரும் வந்து பாக்குறோம்.

மேனேஜர்: அதெல்லாம் முடியாதுங்க

நான்: அப்படினா இங்க இருக்குற யாரும் வெளிய போகமாட்டாங்க

மேனேஜர்: (கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு…) வெயிட் பண்ணுங்க வந்துடறேன்… (கொஞ்ச நேரத்துல மேனேஜர் போலீச கூட்டிக்கிட்டு உள்ள வர்ராரு; இதப் பாத்ததும் மக்கள் கோபத்துல கத்த ஆரம்பிச்சுட்டாங்க)

நான்: இப்ப எதுக்கு போலிச கூட்டிகிட்டு வந்தீங்க?

மேனேஜர்: என்னோட பாதுகாப்புக்காக (போலீஸ் வந்தவுடனே PVR ஆட்கள்லாம் ரொம்ப திமிரா பேச ஆரம்பிச்சுட்டாங்க. போலீச அவங்க அடியாள் மாறி வச்சிருக்காங்க போல!)

நான்: நாங்க என்ன உங்கள திட்டுனமா? கைய நீட்டுனமா?

மேனேஜர்: இல்லை

நான்: நியாயமா அமைதியான முறையிலதான பேசிட்டு இருக்கோம். அப்புறம் எதுக்கு போலிச கூட்டிகிட்டு வந்தீங்க? அவங்கள போக சொல்லுங்க அப்பத்தான் பேசுவோம் (அப்டின்னு சொல்லிட்டு எல்லோரும் சீட்ல போயி ஒக்காந்துட்டோம்)

போலீஸ்: டேய் நீங்கலாம் ஓவரா போறீங்க உங்கள எப்படி கவனிக்கனும்னு எனக்கு தெரியும் (அப்டின்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாங்க)

கூட்டத்தில் ஒரு முதியவர்: தம்பி நீங்க பேசுறதுதான் சரி. நாங்க இருக்கோம் நீங்க பேசுங்க…

மேனேஜர்: ரூல்ஸ்படி படமும் போட முடியாது, பணமும் தரமுடியாது.

கூட்டத்தில் ஒருவர்: ரூல்ஸ்படி படம் போட முடியாட்டி 20 நிமிடத்தில் சொல்லிருக்கணும் சொன்னீங்களா? 50 நிமிடம் கழிச்சு நாங்க எல்லாம் வந்து கேட்ட பின்னாடி தானே சொன்னீங்க. உங்க ரூல்ஸ்ச நீங்களே மதிக்கல. இது மட்டும் சரியா?

நேரம்: 11:15AM

நான்: 2 மணி நேரமாச்சு குழந்தைங்க எல்லாம் நல்லா தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க சொன்னதுல ரெண்டுல ஒன்னு சொல்லுங்க சார்.

மேனேஜர்: எங்க நிலைமைல இருந்து யோசிங்க சார்.

நான்: ரசிகர்கள் தாமதமா வந்தா படத்த மறுபடியும் மொத இருந்து போடுவீங்களா?

மேனேஜர்: அது எப்படி சார் முடியும்?

நான்: நாங்க இங்க 300 பேருக்கு மேல இருக்கோம் உங்க ஒருத்தர் பத்தி நாங்க எதுக்கு யோசிக்கணும் நீங்கதான் எங்க நிலைமைல இருந்து யோசிக்கணும் நீங்க மட்டும் ரசிகர்கள் நிலைமயில இருந்து யோசிக்க மாட்டிங்க. நாங்க மட்டும் உங்கள பத்தி யோசிக்கணுமா? ஏற்கனவே 2.30 மணி நேரம் ஆச்சு. போலிச கூட்டிகிட்டு வந்து மிரட்டுறீங்க. சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க.

மேனேஜர்: (மொதல்ல ”கண்டிப்பாக முடியாது”ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர் கொஞ்ச நேரம் கழிச்சி) பணம் தர்றோம் ஆனால் படம் போட முடியாது.

மக்கள்: நீங்க எப்படி அடுத்த காட்சி ஒட்டுறீங்கனு பார்க்கறோம் (அப்டின்னு சொல்லிட்டு எல்லாரும் சீட்ல உக்காந்துட்டாங்க. எல்லாரும் ஒரே வாய்ஸ்ல ‘மூவி மூவி மூவீஈஈஈ’ எனக் கத்த ஆரம்பிச்சுட்டாங்க)

இளைஞரும் நண்பர்களும் இருக்குற மக்கள்கிட்ட கலந்து பேசி வேறு ஒரு கோரிக்கை வைத்தனர் மேனேஜரிடம்.

இளைஞர்: சரி சார் மொத்த பணம் + ரூ.50/- அபராதம் ஒரு டிக்கெட்டுக்கு. சரியா?

மேனேஜர்: வெயிட் பண்ணுங்க வர்றேன் (வெளியே போனவரு திரும்பவும் போலீசோடு வர்ராரு).

போலீஸ் SI: (மக்கள் கூட்டத்த பாத்து) ஒழுங்கு மரியாதையா குடுக்குறத வாங்கிகிட்டு வெளியே ஒடீருங்க…இல்லாட்டி வேற மாறி ஆயிடும்.

இளைஞரும் நண்பர்களும்: வேற மாதிரியா, வேற மாதிரினா என்ன சார்? போலீஸ் யாருக்கு வேலை செய்யணும்? மக்கள் பாதுகாப்புக்கு தானே போலீசு, இங்க என்ன PVRக்கு அடியாள் வேலை செய்றீங்க. இங்க என்ன நடந்துச்சுனு தெரியுமா?

கான்ஸ்டபிள்: அதெல்லாம் எதுக்கு கேக்குற. நீதானா, வாடா ஒத்தைக்கு ஒத்த பார்த்துக்கலாம் (அப்டின்னு சொல்லிட்டு காலர் பட்டன கழட்டுறாரு)

நான்: சரி வாங்க பார்த்துக்கலாம்

இதுக்கு நடுவுல என் ஃப்ரண்ட்ஸ், மத்த இளைஞர்கள் ஒரு 6 பேரு (3 ஆண் + 3 பெண்) எல்லா சீட் வரிசையிலும் போயி எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்னு மக்கள் 3௦௦ பேரையும் ஒன்னு திரட்டினாங்க.

போலீஸ் SI: முன்னாடி நிக்கிறவங்கள போட்டோ எடுய்யா. வெளியே வருவானுகல்ல பார்த்துக்கலாம்.

மக்கள்: அவங்கள மட்டும் ஏன் மிரட்டுறீங்க?. நாங்களும் தான் கேட்கிறோம் (மூவி மூவி மூவி என ஒருவர் கத்த….அனைவரும் மூவீஈஈஈஈஈஈஈ என்று கத்த ஆரம்பித்தனர்)

மேனேஜர்: என்ன செய்யறது?

இளைஞர்: கடைசியா கேட்டத ஒத்துக்கங்க இல்லாட்டி அடுத்த ஷோவும் ஓடாது.

மேனேஜர்: சரி தர்றோம் (குண்டர்களும் போலிசும் மொறச்சி பாத்துக்கிட்டே வெளியே போயிட்டாங்க)

PVR Cinemas
PVR Cinemas

எல்லாருக்கும் ரூ.50/- அபராதத்தோட மொத்த பணத்தையும் திரும்ப கொடுத்தாங்க. மக்கள் எல்லார்கிட்டயும் ஏதோ சாதிச்சுட்ட மாதிரி ஒரு சந்தோசம். ஒரு அநியாயத்த எதித்து நின்னு ஜெயிச்சா கிடைக்கிற மகிழ்ச்சின்னு புரிஞ்சது.

மக்கள் சில பேரு எங்கிட்ட வந்து”சூப்பர் சார் இதுபோல 2 முறை படம் போடாம எங்கள ஏமாத்தியிருக்காங்க அப்பல்லாம் கோபமா வரும். திரும்பி போயிருவோம். ஆனா இன்னைக்கு படம் பார்க்காம போனாலும் சந்தோசமா இருக்கு இத மறக்க முடியாது” அப்டின்னு பாராட்டினாங்க. PVR வரலாற்றுலேயே இது ஒரு மறக்கமுடியாத சவுக்கடி சம்பவமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

படம் பார்க்க வந்த ஒரு பெரியவரு PVR ஆட்களப் பாத்து ”உங்க பணத்திமிரையும், ஆணவத்தையும், உண்மை முகத்தையும் கண்டிப்பாக வெளியே சொல்லுவோம்” அப்டின்னு கோபத்தோட சொல்லிட்டுப் போனாரு.

வேற்று மாநிலத்த சேர்ந்தவங்க அந்த மேனேஜர் கிட்ட போய் ”இந்த மாதிரி நாங்க ஒரு நாள் வந்தப்ப படம் போட முடியலன்னு வெறும் டிக்கெட் காசு ரூ.120 மட்டும் குடுத்து வெளிய போங்கனு சொன்னிங்க. இன்னைக்கு நிறைய பேர் சேர்ந்து நின்னு கேட்டவுடன் அபராதம்லாம் தர்றீங்க. ரொம்ப கேவலமா இருக்கு நீங்க பண்றது” அப்டின்னு சொன்னாங்க; மேனேஜர் அவமானத்துடன் பதில் கூற முடியாமல் திருடன் மாதிரி முழிச்சாரு. பாவம் அவரு என்ன பண்ணுவாரு… மொதலாளியோட கையாளு… அவருக்குத்தான் விசுவாசமா இருக்கனும்…இல்லேன்னா அவருக்கு வேலை போயிடும்…

இன்னிக்கு நடந்த சம்பவத்துல பல மாநிலங்கள சேந்தவங்களா இருந்தாலும், பல மொழி பேசுறவங்களா இருந்தாலும், பல மதம் / சாதிய சேந்தவங்களா இருந்தாலும் எல்லாரும் கடைசிவரை ஒத்துமையா இருந்ததனாலத்தான் ஜெயிக்க முடிஞ்சது. ஆனா இந்த எலக்க்ஷன் டைம்ல, பல அரசியல்வாதிங்க ‘தமிழன்’, ’இந்து, ‘சாதிக்காரன்’ அப்டின்னு மக்கள ஓட்டுக்காக பிரிக்க பல முயற்சி செய்யிராங்க. அது எவ்வளவு தப்புன்னு பிராக்டிகலா உணர்ந்தோம்.

படம் பாக்கறப்போ கிடைக்கிற சந்தோசத்தவிட ரொம்ப சந்தோசமா நானும் என் ஃப்ரண்ட்ஸும் தியேட்டர விட்டு வெளிய வந்தோம்.

***

 ”போராட்டமெல்லாம் முடியாது சார். யார் சார் போராட வருவாங்க? நீங்க சொல்லுறதெல்லாம் நடக்குற காரியமா சார்?” இப்படிக் கேட்கிறவர்கள் மேற்சொன்ன சம்பவத்தை அப்படியே அரசியலுக்குப் பொருத்திப் பாருங்கள்.

உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் ஆயத்த ஆடை தொழிலாளிகள் நடத்திய போராட்டம் மொத்த நாட்டின் தொழிலாளிகளுக்கும் சேர்த்துதான் நடந்தது. அந்தப் போராட்டம்தான் தொழிலாளிகளின் PF பணத்தில் நடக்க இருந்த கொள்ளையைத் தள்ளிப் போட்டுள்ளது.

போராடும் மக்கள்
போராடும் மக்கள்

ஆனால் இன்று அதுபோல் சில அடிப்படை பிரச்சினைகளுக்காகப் போராடும் மக்களை கேவலமாக சித்தரிக்கின்றனர் சிலர். ”பாருங்க சார் குழந்தைகளைக் கூட்டிகிட்டு வந்து போராடுறாங்க, டிராபிக் ஜாம் பண்றாங்க, ஆம்புலன்ஸ் நிக்குது, வேலைக்கு லேட் ஆக்குறாங்க, காசு வாங்கிட்டு

போராடுறாங்க, எல்லாம் பப்ளிசிட்டிக்காக பண்றாங்கப்பா இவங்க” என்பன போன்ற பல்வேறு வார்த்தைகளில் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் பெரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ரௌடிகள் தங்களது தலைவியோ, தலைவரோ அடித்த கொள்ளைக்காக தண்டனை தரப்படும்போது செய்யும் ரௌடித்தனங்களையெல்லாம் மௌனமாகக் கடந்து செல்கின்றனர். கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் தார் ரோட்டில் டிராபிக் ஜாம் ஆகி பஸ்ஸிலும், டூ வீலரிலும் மக்கள் புழுங்கித் தவிக்கும் போது ஒரே ஒருவருக்காக, கப்பல் மாதிரி கார்கள் ரோட்டை அடைத்துக் கொண்டு நிற்கும் போதெல்லாம் ஆம்புலன்ஸ் வெயிட் பண்ணுவதைப் பார்த்து மக்கள் கொதிப்பதில்லை. ஆனால், சாதாரண மக்கள் போராடும்போது மட்டும் இந்த நியாவான்களின் நியாய உணர்வு கொதித்தெழுந்து வந்துவிடும். ஆனால், அப்படி அடிப்படைப் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்கள் அப்படி கொச்சைப் படுத்துபவர்களுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள் என்பதை உணருவதில்லை. உதாரணமாக, பெங்களூர் தொழிலாளர்களின் போராட்டம் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துபவர்களின் PF பணத்தையும் சேர்த்துத்தான் பாதுகாத்துள்ளது (தற்காலிகமாகவாவது).

ஆக, போராட்டங்களின் பயன்களை அனுபவிப்பவர்கள்தான் போராட்டங்களையும் போராடும் மக்களையும் இழிவானவர்களாகப் பார்க்கின்றனர். இரண்டே பக்கம் உள்ள ஒரு போராட்ட நோட்டிசைக் கூட வாசிக்க மனமின்றி கசக்கிக் கீழேபோடும் இது போன்றவர்களுக்கு அந்தத் துண்டுப் பிரசுரம் தயாரிக்க செலுத்தப்பட்ட உழைப்பின் அருமை உணருவதில்லை. இப்படியெல்லாம் செய்பவர்கள் பெரும்பாலும் படித்த அறிவுள்ள நடுத்தர உயர்நடுத்தர வர்க்க மக்கள்தான்.

அப்படிப்பட்ட இந்த மக்களுக்கும் போராடுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கும் என்று நம்புவோம்!

போலிசையும், PVR நிர்வாகத்தையும் ஒற்றுமையுடன் இருந்து சிதறடித்த மக்களுக்கும், ”போராட்டமே மகிழ்ச்சி” என உணர வைத்த இளைஞர்களுக்கும், அப்படி உணர வைக்க ஒரு வாய்ப்பை வழங்கிய PVR நிர்வாகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

– ரஞ்சித்

மாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்

3

வாழ்க அம்மா நாமம்,  10-ம் வகுப்பு மாணவி மீது அ.தி.மு.க குண்டர்களின் பாலியல் வக்ரம் வீடுகள் சூறை – தீக்கிரை

டந்த சட்டமன்ற தேர்தலில் போலீஸ் அதிகாரவர்க்க கிரிமினல்கள், பணம் இவற்றின் பக்க பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள அ.தி.மு.க குண்டர்கள் ஆங்காங்கே தங்களின் திருவிளையாடல்களை துவங்கி விட்டனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது தையல் குணாம்பட்டினம் காலனி. இங்கே ஒரு சலவைத் தொழிலாளி குடும்பம் – குடும்பத்தலைவர் ரவி, மனைவி சந்திரா, ஒரே மகள் ஜெயஸ்ரீ, மகள் நித்திஷ் கொண்ட ஒரு சிறிய குடும்பம்.

கடந்த 2016 மே 28 வியாழனன்று 10-ம் வகுப்பு தேர்வில் தான் தேர்ச்சி பெற்றதை சக மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் ஜெயஸ்ரீ.. அப்போது அதே ஊரைச் சேர்ந்த
1. மணிகண்டன் (திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்)
2. செல்வகுமார் (திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ளனர்)
3. வைரமுத்து

ஆகிய மூன்று உள்ளூர் அ.தி.மு.க ரவுடிகள் குடிபோதையில் ஜெயஸ்ரீயிடம் “இன்னாடி சிரிச்சி சிரிச்சி பேசுற”, “ஏங்கிட்ட வந்து பேசுடி” என்றும் இன்னும் சொல்லக் கூசும் ஆபாச வார்த்தைகளால் பேசி வக்கிரமாக நடந்து கொண்டனர்.

இந்த பொறுக்கிகளின் பொறுக்கித் தனத்தைக் கண்டு ஆத்திரம் கொண்டு சீறினார் இளம் மாணவி ஜெயஸ்ரீ. பொது இடத்தில் இவ்வக்கிரத்தை துணிச்சலுடன் தட்டிக் கேட்டதை சற்றும் எதிர்பாராத இம்மூவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நடந்த சம்பவத்தை அன்று இரவே தன் தாய் சந்திராவிடம் கூறியுள்ளார் ஜெயஸ்ரீ. போதையில் விடிய விடிய வெறிகொண்ட இந்த அ.தி.மு.க ரவுடி கும்பல் மறுநாள் காலையில் வெள்ளியன்று 11 மணியளவில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஜெயஸ்ரீ வீட்டை சுற்றி நோட்டமிட்டது. வீட்டில் ஜெயஸ்ரீ மட்டும் இருந்தார், வேறு யாருமில்லை,  தனது கூரை வீட்டிலிருந்து அருகாமையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அம்மா பசுமை வீட்டில் புத்தகத்துடன் படித்துக் கொண்டிருந்தார்.

இதனை பயன்படுத்தி, குடிவெறி தலைக்கேற முதல்நாள் அவமானத்தின் வெறியில் அம்மாவின் படம் வெளியில் சிரித்தபடியே இருக்க, மாணவி ஜெயஸ்ரீயிடம் அ.தி.மு.க குண்டர்கள் பாலியல் வெறி கொடுமைகளை அரங்கேற்றினர். இந்த மூன்று வெறிநாய்களிடம் சிக்கிய கோழிக் குஞ்சு போல மரணபயத்தில் சப்தம் போட்டு அலறினார் ஜெயஸ்ரீ. சப்தம் வெளியில் கேட்காமலிருக்க ஜெயஸ்ரீயின் வாயைப் பொத்தி கழுத்தை இறுக்கினார்கள் ரவுடிகள். மயங்கி சரிந்தார் இளம் சிறுமி ஜெயஸ்ரீ.

அலறல் கேட்டு ஓடி வந்த பொதுமக்களிடம் ஒன்றுமே நடக்காதது போல நாடகமாடினார்கள் அ.தி.மு.க குண்டர்கள். சற்று நேரத்தில் 100 நாட்கள் வேலைக்கு சென்ற பெற்றோர் தகவல் கேட்டு அலறி ஓடி வந்தனர், மகளின் நிலை கண்டு பதறினார்கள்.

உடன் குறிஞ்சிப்பாடி அரசு பொதுமருத்துவமனையில் ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கடலூர் மாவட்ட தலைமை அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கும் நிலைமை சரியில்லாததால் தற்போது புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார் ஜெயஸ்ரீ. நடந்த சம்பவத்திலிருந்து மீளமுடியாமல், சுயநினைவிழந்து, குரல்வளை நெறிக்கப்பட்டு, மூளைக்குச் செல்லும் நரம்பு தடைப்பட்டு போராடி வருகிறார்.

இந்நிலையில் ஜெயஸ்ரீயின் தந்தை ரவி அ.தி.மு.க கிரிமினல்கள் மீது புகார் கொடுக்கச் சென்றபோது அலைக்கழித்து திரும்பி அனுப்பியது குறிஞ்சிப்பாடி போலீஸ். புகாரை வாங்காமல் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முயற்சித்தனர். இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும், ரவியின் உறவினரும், வழக்கறிஞருமான நெய்வேலி மணவாளன் ஆகியோர் போராடி புகார் மனு கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். இதனடிப்படையில் மணிகண்டன் என்பவனை மட்டும் கைது செய்தது போலீஸ். மற்ற இரு கிரிமினல்களையும் கைதுசெய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதி அ.தி.மு.க பிரமுகர் பாஷங்கி நாயுடு மூலம் ரூ 5 லட்சம் வரை பேரம் பேசி பணியவைக்க முயற்சித்தனர். பெற்றோர் உறுதியாக இருந்ததால் தோற்று ஓடிப் போனார்கள்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு 12 மணிக்கு ஜெயஸ்ரீ கூரை வீட்டை தீ வைத்துக் கொளுத்தினார்கள் அ.தி.மு.க குண்டர்கள். வீட்டிலிருந்து துணிமணிகள், பாத்திரம், உணவுப் பொருட்கள், புத்தகம், கட்டில், பீரோ அனைத்தும் தீயில் கருகின. ஆசை ஆசையாய் தனது மகளின் திருமணத்திற்கு எடுத்து வைத்திருந்த 10 பவுன் நகை, பணம் தீயில் எரிந்து சாம்பலாயின. “வீடும் போச்சு, பிள்ளையும் போச்சே, கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தோம் கடவுளே!” என்று ஜெயஸ்ரீ பெற்றோர் கதறி அழுகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதை பெற்றுக் கொண்டு எஃப்.ஐ.ஆர் போட்டுள்ள போலீஸ் வழக்கம் போல குற்றவாளிகளை தேடி வருவதாக புழுகிக் கொண்டு முன் ஜாமீன் எடுத்துக் கொளள வழிகாட்டியுள்ளது.

வியாழனன்று மதியம் பெயருக்காக வி.ஏ.ஓ விசாரணை நடத்திச் சென்றுள்ளார். இதுவரையில் ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி என்று எந்த உயரதிகாரிகளும் விசாரணைக்கு வரவில்லை.

ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ், பல இலட்சம் ராணுவம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் நீதிமன்ற அதிகார பரிவாரங்கள் இருந்தும் ஒரு சாதாரண சிறுமியைக் கூட பாதுகாக்க வக்கற்று தோற்றுப் போயுள்ளது இந்த சட்டமும் நீதியும் அரசும். இனி மாற்றுவழி மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து இக்கொடும் குற்றவாளிகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பளிப்பதே ஒரே வழி.

தகவல்
மக்கள் அதிகாரம், கடலூர்
8110815963

அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்

2

மின்சார துறையில் ரூ. 50,000 கோடி வரையில் நடந்திருக்கும் கொள்ளையை எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.  தேர்தலில் மோடிக்கு செலவழித்தஅதானி, டாடா, எஸ்ஸார், இந்தியா சிமெண்ட்ஸ், ஜிண்டால் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் இதில் சமபந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இம்மோசடி மூன்று முறைகளில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை மிகைப்படுத்தி கணக்கு காண்பிப்பது; மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான கருவிகளை இறக்குமதி செய்வதிலும் மோசடியாக விலையை அதிகப்படுத்தி கணக்கு காட்டுவது, மூன்றாவதாக இழப்பீட்டு தொகை என்ற முறையில் அரசின் இழப்பீடை முறைகேடாக பெறுவது ஆகிய முறைகளில் இவ்வூழல் நடைபெற்றிருக்கிறது.

ஏன் இவர்கள் விலையை அதிகப்படுத்தி கணக்குகாட்ட வேண்டும்? பொதுமக்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் அரசால்gautam_adani_narendra_modi_mukesh_ambani_624x351_epa நிர்ணயிக்கப்படுவதில்லை. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதை தீர்மானிக்க அவர்களே வகுத்துகொண்ட கொள்கையின் அடிப்படையில் கெப்பாசிட்டி கட்டணம் என்று அழைக்கப்படும் நிலைகட்டணம், எனர்ஜி கட்டணம் என்று அழைக்கப்படும் முதன்மை எரிபொருள் கட்டணம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.

முதலாளிகளுக்கு இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று வகுக்கப்பட்டிருக்கும் இக்கொள்கைகளின் அடிப்படையில், முதலாளிகள் தங்கள் முதலீடு மற்றும் செலவினங்களை கூறுவார்கள். அதற்கேற்ப விலையை ஏற்றி மக்களிடமிருந்து வசூலித்து தருகின்றன ஒழுங்குமுறை ஆணையங்கள். ஆக எவ்வளவு அதிகமாக செலவு செய்ததாக நிரூபிக்க முடியுமோ அந்தளவுக்கு லாபம் அதிகமாகும்.

நிலக்கரி இறக்குமதியில் மோசடி

டாடா, அதானி, அம்பானி, எஸ்ஸார் உள்ளிட்ட இம்மோசடி நிறுவனங்கள் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் உள்ளிட வெவ்வேறு நாடுகளில் பெயர்ப் பலகை நிறுவனங்களை பதிவு செய்துகொள்கிறார்கள் அல்லது தங்களது நிறுவனத்தின் கிளை நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் இறக்குமதி செய்யும் நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்குதான் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அதற்குரிய இன்வாய்ஸ் எனப்படும் விலைப்பட்டியல் ஆவணங்களோ பல நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கும் கைமாறி இறுதியாக இந்தியா கொண்டுவரப்படுவதை போன்று போலியாக தயாரிக்கப்படுகிறது.

அதாவது இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரியை துபாயிலிருக்கும் நிறுவனம் வாங்கி அதிக விலைக்கு மலேசியாவிலிருக்கும் நிறுவனத்திற்கு விற்கும் இப்படி கைமாறி இறுதியாக அதானி கைக்கு வரும்.இதனால் அதானியின் நிலக்கரி செலவு அதிகமாகும். சரி இந்த நிறுவனங்கள் யாருடையது என்று பார்த்தால் இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரி சுரங்கம் முதல் அது பயணிக்கும் அனைத்து நிறுவனங்களும் அதானியின் சொந்த நிறுவனங்களே.

இந்திய அதானி நிறுவனம் மிகைப்படுத்தப்பட்ட விலையை வெளிநாட்டிலிருக்கும் அதன் துணை நிறுவனத்திற்கு அனுப்பிவிடும். அத்துணை நிறுவனமோ உண்மையான விலையை மட்டும் இந்தோனேசியாவிற்கு அனுப்பிவிட்டு மற்ற தொகையை கையகபடுத்திக்கொள்ளும். இப்பணம் வரியில்லா சொர்க்க நாடுகளில் கருப்பு பணமாக தங்கும். துணை நிறுவனங்கள் இல்லாமல் பெயர்பலகை நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டால் தொகைக்கு ஏற்ப அந்நிறுவனங்களுக்கு கமிசன் வழங்கப்படுகிறது.

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை எம்முறையில் கணக்கிட்டாலும் மெட்ரிக் டன் ரூ. 3,300-ஐ (50 அமெரிக்க டாலர்) தாண்டுவதில்லை. ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் ரூ. 5,380 -ஆக (80 அமெரிக்க டாலர்) காட்டுகிறது. இடைப்பட்ட ரூ.2000(30 டாலர்) நிறுவனங்களால் அபகரிக்கப்படுகிறது. 2014-2015-ம் ஆண்டுகளில் 212.11 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குறிப்பிட்டுள்ளார். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 27% அதிகம். ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2000 கொள்ளை என்றால் என்றால் 212.11 மில்லியன் டன்னுக்கு? 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக சென்றாலும் மிகக்குறைந்த அளவாக 29,000 கோடி அளவில் உறுதியாக ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறது எக்கனாமிக் அன்ட் பொலிட்டிகள் விக்லி பத்திரிகை.

இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக மனோஜ் குமார் கார்க் என்ற இடைத்தரகரை மத்திய வருவாய் நுண்ணறிவு(Directorate of Revenue Intelligence) பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்றுள்ள ரூ.280 கோடி ஊழல் தொடர்பாக இக்கைது நடந்துள்ளது. இந்த மனோஜ் குமார் துபாயை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் ஜெனரல் டிரேடிங்(Glints Global Trading LLC) நிறுவனத்தையும், ஹாங்காங்கை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் லிமிட்டட்(GlintsGlobalLimited) என்ற நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

இந்த நபர் மீது ஏற்கனவே பேங்க் ஆஃப் பரோடா(BOB) வங்கியில் நடைபெற்ற அந்நிய செலவாணி மோசடி மற்றும் சட்டவிரோத பாசுமதி அரிசி இறக்குமதி ஆகிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதில் பேங்க் ஆஃப் பரோடா வழக்கு உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கபடுகிறது, பாசுமதி விவகாரம் மத்திய உளவுதுறையால் விசாரிக்கபடுகிறது என்பதன் மூலம் இவ்வழக்குகளின் தீவிரங்களை புரிந்துகொள்ள முடியும். இந்த இடைத்தரகரின் நிறுவனம் மூலமாகத்தான் தமிழக மின்வாரியம் நிலக்கரி இறக்குமதி செய்திருக்கிறது; இந்நிறுவனத்திற்கு இத்துறையில் முன்னனுபவம் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழநாடு மின்சார வாரியம் MGB commodities என்ற நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான உரிமையை TNEB_1266168gஅளிக்கிறது. இந்த MGB நிறுவனம் கிலின்ட்ஸ் நிறுவனதின் மூலம் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறது. நிலக்கரி சுரங்கத்திலிருந்து $45 க்கு பெறப்படும் நிலக்கரியின் விலையை $87 என போலியான ஆவணங்கள் மூலம் தெரிவித்து தமிழக மின்வாரியத்திடமிருந்து மிகைப்படுத்தப்பட தொகையை பெற்றுக்கொள்கிறது இந்நிறுவனம். கிலின்ட்ஸ் நிறுவனம் இவ்வூழலின் சூத்திரதாரிகள் தங்களின் முகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு நிறுவனம் தான். ஏன் இந்நிறுவனம் மூலமே தொடர்ச்சியாக நிலக்கரி வாங்கப்பட்டது? இதில் லாபமடைந்தது யாரெல்லாம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை.

இம்முறையில் போலி விலையேற்றத்தின் மூலம் கொள்ளயடிப்பதை தாண்டி தரம் குறைந்த நிலக்கரியை தரமான நிலக்கரி என்று இறக்குமதி செய்து அதன் மூலமும் பல கோடிகள் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியின் தரம் அதன் மொத்த கலோரிபிக் மதிப்பை(Gross Calorific Value- CGV) பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. தரத்தை பொறுத்து அதன் விலையும் அதிகரிக்கும். இந்நிறுவனங்கள் குறைந்தவிலைக்கு தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்துவிட்டு அதிக தரமுள்ள நிலக்கரியை வாங்கியதாக கூறி போலி ஆவணங்களை சமர்ப்பிக்கின்றன.இதனால் அதிக செலவு செய்திருப்பதாககூறி அதற்கேற்ப கட்டணம் பெற்றுக்கொள்கின்றன. இதனால் பொதுமக்களின் பணம் கொள்ளைபடிக்கப்படுவதோடு மின்சார உற்பத்தியும் குறைந்து இருவழிகளில் லாபமீட்டுகிறார்கள் இக்கொள்ளையர்கள்.

உபகரணங்கள் இறக்குமதியில் மோசடி

மேற்கண்ட முறை போலவே உபகரணங்கள் இறக்குமதியிலும் தங்கள் துணை நிறுவனங்களின் வழியாக விலையை Mundra_thermal_power_station
மிகைப்படுத்தியிருக்கிறார்கள் அதானி, எஸ்ஸார் உள்ளிட்ட நிறுவனங்கள். சீனாவிலிருந்ததும், தென் கொரியாவிலிருந்தும் இந்தியாவிற்கு நேரடியாக இறக்குமதி நடந்தாலும் இடையில் பல நிறுவனங்களை நுழைத்து, விலையை அதிகப்படுத்தி திட்டமிட்ட முறையில் இந்த கொள்ளை நடந்துள்ளது.

இம்முறையில் அதானி குழுமம் மட்டுமே சுமார் 6000கோடிகள் மோசடி செய்திருப்பதாக மத்திய வருவாய்துறை நுண்ணறிவு இயக்குநகரகம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போன்று எஸ்ஸார் நிறுவனம் சுமார் 3000 கோடி அளவில் மோசடி செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

அதானி குழுமத்திற்கு வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம் அனுப்பியிருக்கும் சம்மனில் மேற்படி கொள்ளையை சுட்டிகாட்டி “அந்நிய செலவாணியை திட்டமிட்ட முறையில் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல சதி” திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கவுதம் அதானியின் சகோதரர் விநோத் அதானியை குறிப்பிட்டு  இது தொடர்பாக விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வேண்டுமென்றே ஆஜராக மறுத்து விசாணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த சம்மன் அனுப்பபட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அதானி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மோடி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்பதையும் இதனுடன் இணைத்து பார்க்கலாம்.

மின்சார விலையை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக கூறப்படும் நிலைக்கட்டணத்தில் முதலாளிகளின் முதலீட்டுக்கான லாபத்தை உத்திரவாதப்படுத்தும் நோக்கில் உபகரணங்களுக்கான செலவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. இதை பயன்படுத்தி உபகரணங்களின் இறக்குமதி கட்டணத்தை மிகைப்படுத்தி மக்கள் பணத்தை திருடுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள்.

இழப்பீட்டு கட்டணம் என்ற முறையில் கொள்ளை

Tata Power2குஜராத் மாநிலம் முந்திரா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் அதானி மற்றும் டாடா-வின் மின்னுற்பத்தி நிலையங்கள் மூலமாக குஜராத், மஹாராஸ்டிரா, பஞ்சாப், ஹரியானா முதலியா மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை(Power Purchase Agreemnt -PPA). சம்பந்தபட்ட மின்பகிர்மான நிலையங்களோடு டாடாவுன், அதானியும் கையெழுத்திட்டுள்ளன.

இவ்வொப்பந்தப்படி மின் உற்பத்திக்கான எரிபொருளை உத்திரவாதப்படுத்தி தடையின்றி மின்சார விநியோகம் செய்வது டாடா மற்றும் அதானி நிறுவனங்களின் பொறுப்பு. இதற்காக அந்நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இதன்படி அதானி பவர் நிறுவனம் இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் கொண்டிருக்கும் தனது மற்றொரு அதானி என்டர்பிரைஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறது. டாடா பவர் நிறுவனம் தான் 30% பங்கு வைத்திருக்கும் இந்தோகோல் நிறுவனத்துடன் ஒப்பந்த செய்துகொள்கிறது.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு டாடா மற்றும் அதானி நிறுவனங்கள் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் அதற்கு இழப்பீட்டு கட்டணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. நஷ்டத்திற்கு காரணமாக அவர்கள் கூறியது தாங்கள் குறைந்த விலைக்கு நிலக்கரி பெற இந்தோனேசிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருந்ததாகவும் ஆனால் 2010-ம் ஆண்டு இந்தோனேசிய அரசு சந்தைவிலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தவிட்டிருப்பதாகவும் அதனால் இந்தோனேசிய நிலக்கரியின் விலை உயர்ந்து தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறி இழப்பீட்டு கட்டணம் கோரியது.

இதை விசாரித்த மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் “சட்டத்தில் மாற்றம்” என்ற விதி இந்திய சட்டத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு தான் பொருந்துமே தவிர இந்தோனேசிய சட்டத்திற்கு பொருந்தாது என்று கூறியது. அப்படி கூறிக்கொண்டே ஆனால் “மின்சார சட்டம் 2013பிரிவு 79(1)ன் படி நுகர்வோரின் நலனை மட்டும் கணக்கில் கொள்ள கூடாது மின்சார முதலாளிகளின் நலனையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றும் அச்சட்டம் கூறுகிறது. அச்சட்டப்படி இழப்பீடு தொகை வழங்கலாம் என்று தீர்ப்பு கூறியது. இத்தொகைய கணக்கிட எச்.டி.எப்.சி சேர்மேன் பரேக் மற்றும், தற்போதைய எஸ்.பி.ஐ (State Bank of India) தலைவர் அப்போதைய எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிட்டடின்(SBI markets Limited) தலைமை செயல் அதிகாரியான அருந்ததி பட்டாச்சார்யா உள்ளிட்ட அதிகாரவர்க்க முதலாளிகளிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு டாடா மற்றும் அதானிக்கு 10,000 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தது.

இது தொடர்பான மேல்முறையீடு தீர்பாயத்தில் நடந்துவந்தது. இதன் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதில் மின்சார சட்டப்பிரிவு 79(1) -ன் படி மேற்படி இழப்பீடுத்தொகை வழங்கியது தவறு என்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் “சட்டத்தின் மாற்றம்” என்ற பிரிவின் அடிப்படையில் தான் மேற்படி இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் விநோதமான தீர்பளித்துள்ளது. அதாவது எந்த சட்டபிரிவின் அடிப்படையில் இழப்பீட்டுதொகையை அனுமதிப்பது என்பதில் இரு ஆளும் வர்க்க நிறுவனங்களுக்கு(Institution) இடையே நிலவும் வேறுபாட்டை ஏதோ மாபெரும் போராட்டம் போல நடத்துகிறார்கள். தவிர டாடா, அதானி கொள்ளையடிப்பதில் இவை ஒத்தகருத்துடன் செயல்படுகின்றன.

ஆக நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது. இந்த கூட குறைந்தபட்ச கணக்கீடு என்கிறது எக்கனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி. மின்சார விலையேற்றத்தின் மூலம் இக்கொள்ளை பணம் பொதுமக்களிடமிருந்து பிடுங்கபட்டு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ 1.50 முதல் ரூ 2.00 வரை நாம் அதிகமாக செலுத்துகிறோம். மாதம் 1000 யூனிட் பயன்படுத்தும் ஒரு வீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 24,000 ஆயிரம் வரை கொள்ளையடித்திருக்கிறார்கள் இம்முதலாளிகள்.

விலையை மோசடியாக அதிகப்படுத்தினார்கள் என்பது பிரச்சனையில் சிறு பகுதி மட்டுமே. மின்சாரம் வழங்கும் சேவையிலிருந்து அரசு விலகிக்கொண்டு மின் உற்பத்தியில் தனியார் முதலாளிகளை ஊக்குவித்ததன் விளைவே இன்று மின்சாரத்தின் விலையை தனியார் முதலாளிகள் தங்கள் விருப்பம் போல ஏற்றுகிறார்கள். அதை தட்டி கேட்கும் அதிகாரத்தையும் கட்டுமான சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சட்டமன்ற நாடாளுமன்றத்திற்கு இல்லை. ஒழுங்குமுறை ஆணையங்கள் எனப்படும் அதிகாரவர்க்கத்தின் கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. ஆக தனியார் முதலாளிகள் மின்சாரம் தயாரிக்க அனுமதிக்கப்பட்டதே ஒரு கொள்ளைதான்.

தனியார்மயத்தின் மூலமாகத்தான் சிறப்பான சேவையை பெறமுடியும்,போட்டியின் மூலம் விலை குறையும்,ஊழல் குறையும் போன்ற தனியார்மய புரோக்கர்களின் வாதங்கள் எவ்வளவு போலியானது என்பதை இவ்வூழலும் அம்பலப்படுத்துகிறது.

– ரவி

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

41

காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். “நான் ஏன் இந்து அல்ல”, “பின் இந்து இந்தியா”, “அய்யங்காளி” போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

kancha-ilya-threatened-by-brahmin-thugsவிஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

அதன்பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், அதன் கலாச்சாரம் இதுவென்றால், நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை” என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013-ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.

சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன், செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காஞ்சா அய்லய்யாவின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

kancha-ilyaமே 16 அன்று ஹைதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழகத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அய்லய்யாவை சந்திக்க போன போது அவரது அறைக்கு வெளியே இரண்டு தொலைக்காட்சி படப்பிடிப்பு குழுக்களும், மாநில பார்ப்பனர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆவேசமான கூட்டமும் இருந்தன.

கூச்சலும் குழப்பமுமாக இருந்த  அறையில் தொலைபேசி இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. “யார் பேசுவது? நீ ஒரு பயங்கரவாதியா? நீ எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லு” என்று பேராசிரியர் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேள்வி : என்ன நடந்தது?

மே 14 அன்று விஜயவாடாவில் சி.ஐ.டி.யு சார்பில் ஒரு உரை நிகழ்த்தும்படி என்னை அழைத்திருந்தார்கள். உழைப்பின் தோற்றம் பற்றியும், இந்தியாவில் உற்பத்தியின் வரலாறு பற்றியும் நான் பேசினேன். திராவிடர்களுடையதும், பழங்குடி மக்களுடையதுமான முறைப்படுத்தப்பட்ட உழைப்பு சிந்த சமவெளி நாகரீகத்தில் தொடங்கி வளர்ந்தது என்று கூறினேன். அவர்கள் களிமண்ணை செங்கல் ஆக்கினார்கள்; மரத்தைக் கொண்டு வீடுகளும், அறைக்கலன்களும் செய்தார்கள்; நுட்பமான கால்வாய்களையும், வடிகால் அமைப்புகளையும் கட்டியமைத்தார்கள்.

இந்த முன்னேற்றம் ஆரியர் படையெடுப்புக்குப் பிறகு வேத காலம் தொடங்குவதும் வரையிலும் நீடித்தது. படிப்படியாக, வேதங்களின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க உழைப்பின் அங்கீகாரம் பறிக்கப்பட்டது. கடவுளரின் உலகில் உழைப்பை செலுத்துபவர்கள் சண்டாளர்கள், சூத்திரர்கள், கடவுள் மறுப்பாளர்கள் என்று அழைக்கப்பட ஆரம்பித்தனர்.

உழைப்புக்கு எதிரான இந்த ஒட்டுமொத்த கோட்பாடும் பார்ப்பன எழுத்தாளர்களாலும் பின்னர் வேத மதத்தை கட்டமைத்த பூசாரிகளாலும் கட்டி எழுப்பப்பட்டது. இது 6-வது நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அப்போது புத்தர் தோன்றி, “கடும் உழைப்பு ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்” என்ற சிராமண தத்துவத்தை முன் வைத்தார். இந்த சிராமண கலாச்சாரம், இந்தியாவின் பெரும் பகுதிகளில் புத்த மதத்தை அழித்தொழித்த சங்கராச்சாரியாரின் எதிர்ப் புரட்சி வரை தொடர்ந்தது.

இசுலாமிய, பிற்பாடு கிருத்துவ ஆட்சியாளர்கள் காலத்தில் வேத மதம் கட்டுக்குள் இருந்தது.  1947-க்குப் பின் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

வரலாற்றில் பார்ப்பனர்கள் ஒரு போதும் உற்பத்தியில் பங்கேற்றதில்லை என்பதுதான் நான் என் உரையில் பதிய வைத்த முக்கியமான கருத்து.

கேள்வி: 2010-ல் உங்கள் வீடு சூறையாடப்பட்டது. வலதுசாரி குழுக்கள் உங்களை பல ஆண்டுகளாகவே குறி வைத்து வந்திருக்கின்றனர். இப்போது என்ன மாறியிருக்கிறது?

கடந்த காலத்தில், பார்ப்பனர்களால் தலைமை தாங்கப்படும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகளின் தாழ்த்தப்பட்ட சாதி உறுப்பினர்கள்தான் என்னை தாக்கினார்கள். இதுதான் முதல்முறையாக பார்ப்பனர்கள் வெளிப்படையாக என்னை குறி வைப்பது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவு அவர்களுக்கு தைரியம் ஊட்டியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்த பிறகு சந்திரசேகர் ராவும், சந்திரபாபு நாயுடுவும் பார்ப்பனர்களின் நலனுக்காக தலா ரூ 100 கோடி ஒதுக்கினர். பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையில் அந்த சாதிக்காக தனி வாரியங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அவர்கள் தோளில் பெரிய கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனை தங்கள் சின்னமாக பயன்படுத்துகின்றனர். கோடாரியைக் காட்டி யாரையோ மிரட்ட முயற்சிக்கின்றனர். அரசு ஆதரவிலான இந்த குழுக்கள் தலித் பகுஜன்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலானவை.

கேள்வி : இந்த முறை என்ன மாதிரியான மிரட்டல்களை நீங்கள் எதிர் கொண்டீர்கள்?

மே 16 அன்று ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, தான் ஆந்திர பிரேதச முன்னாள் தலைமை செயலர் ஐ.ஒய்.ஆர் கிருஷ்ணராவ் (இப்போது ஆந்திரா பார்ப்பனர் நலச் சங்க தலைவர்) சார்பாக பேசுவதாக கூறினார். அதே நபர் அதற்கு முந்தைய நாள் சி.ஐ.டி.யு கருத்தரங்கில் எனது உரைக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவரது அறிக்கை ஹிஸ்டீரியாவை தூண்டியது, எனது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. ஒருவர் எனது அலுவலக தொலைபேசி எண்ணை பேஸ்புக்கில் போட, வசவு பாடும் அழைப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.

பார்ப்பனர்கள் உற்பத்தியில் என்ன பங்களித்தார்கள் என்று புள்ளிவிபரங்களை தரும்படி அவர்களிடம் கேட்டேன். எத்தனை பேர் செருப்பு தொழிலாளர்களாகவும், பானை செய்பவர்களாகவும், கட்டிட தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் உள்ளனர்? தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அவர்களில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள்?

சேற்றை உணவாக மாற்றும் மக்களை அழுக்கு மனிதர்கள் என்று அழைக்கும், அவர்களை இழிவாக கருதும் ஒரு சமூகத்தில் நான் வாழ்கிறோம் என்று நான் வாதிட்டேன். இப்படி இருந்தால் நமது நாடு எப்படி முன்னேற முடியும்?

செய்தி, புகைப்படம் : நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்

ஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்

0

டிஸா மக்கள் அம்மாநில அரசின் இயற்கை வள அபகரிப்பிற்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசு மற்றும் ருங்டா சுரங்க நிறுவனத்தின் நில அபகரிப்பிற்கு எதிராக ஒடிசாவின் கொய்டா மாவட்டத்தை சேர்ந்த  கமண்டா கிராம பழங்குடி மக்கள்  மார்ச் 23 – ம் தேதி நடந்த கிராம நிர்வாக கூட்டத்தில் தங்களது சொந்த நிலங்களை சுரங்கம் வெட்டுவதற்குக் கொடுக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

odishagramsabha2௦௦9-ல் தீர்மானம் போடுவதற்காக நடந்த கூட்டத்தில் ருங்டா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அஸ்வின் குமாரும் , நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரி பக்பன் சாகுவும், வட்டார வளர்ச்சி அதிகாரி பவானி சங்கர் மிஸ்ராவும் கலந்து கொண்டு இருந்தனர். அந்த கூட்டத்தில் கிராம மக்கள் 30 பேர்கள் மட்டுமே  கலந்து கொண்டதாகவும், ருங்க்டா நிறுவனத்தின் கைப்பாவை போல செயல்பட்ட அரசு அதிகாரிகள் 1௦௦ வெளியாட்களை அழைத்து வந்து அந்த தீர்மானத்தை போட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாயத்தின் மூத்த தலைவரான பினோத் நாயக்.

2009-ல் போட்டத் தீர்மானத்தின் படி ஒடிஸா மேம்பாட்டு கழகம் (IdCo) 75.4 ஹெக்டேர் அளவு (186.34 ஏக்கர்) நிலங்களை அப்பழங்குடி மக்களிடம் இருந்து அபகரித்து ருங்க்டோ நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. அந்நிலத்தில் தான் எஃகு தொழிற்சாலை அமைப்பதாய் திட்டமிட்டு இருந்தனர் ருங்டா நிறுவனத்தினர். அந்த நிலத்திற்கு விலையாக  19.4 கோடி ரூபாய் என மதிப்பிட்டிருந்தனர்.

இதனிடையில் சுற்று சூழல் அமைச்சகம் ஒடிஸா அரசின் (ருங்டா நிறுவனத்திற்காக) நில அபகரிப்புக்கான விண்ணப்பத்தை ஏற்காத நிலையில் ருங்டா நிறுவனத்துக்காக  உச்ச நீதிமன்ற படிக்கட்டு ஏறி இருக்கிறது ஒடிஸா அரசு. உச்ச நீதி மன்றமும் ஒடிஸா அரசின் வழக்கைத தற்காலிகமாக தள்ளுபடி செய்து உள்ளது. ஏற்கனவே, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் கிராம சபைகளின் அனுமதி கிடைக்கும் வரை சுரங்கம் வெட்டக் கூடாது என 2013-ல் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தும் அதை மதியாமல் ஒடிஸா அரசு படியேறி உள்ளது. இருப்பினும் நீதிமன்ற வரலாற்றைப் பார்த்தால் உச்சநீதிமன்றம் பொதுவாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே தீர்ப்பும் பொழிப்புரையும் அளித்து வருகிறது.

சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் மொத்த தொழிற்சாலைக்கான இடம் 154.489 ஹெக்டேர் எனவும் , அதில் 111 ஏக்கர் ஏற்கனவே வாங்கப்பட்டு தொழிற்சாலை அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். 186.34 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையப்படுத்தி இருக்கும் நிலையில் 22.8 ஏக்கர் தான் இன்னும் நிலுவையில் இருப்பதாக அவ்விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

cm-naveen-patnayakஆனால் கிராம சபையோ அந்த 186.34 ஏக்கர் நிலத்தை ருங்டா நிறுவனம் வாங்கி விட்டதாக கூறுவது தவறு என்று அதை மறுக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த 186  ஏக்கர் நிலங்களும் கமாண்டா மற்றும் குஸ்முண்டா என்ற இரு கிராமங்களை சேர்ந்த சுமார் 103 குடும்பங்களுக்கு சொந்தமானவை என்றும் அவற்றில் 23 நில உரிமையாளர்களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளதாகவும் மற்றவர்களுக்கு இன்னும் இழப்பீட்டுத் தொகைக் கிடைக்கவில்லை என்றும் கிராம சபை குற்றம் சாட்டியுள்ளது.

2003-04 ல் ருங்டா நிறுவனம் 111 ஏக்கர் நிலங்களை ஏக்கர் ஒன்றிற்கு 25,000 ருபாய் மட்டுமே கொடுத்து வாங்கியது. பதிலுக்கு நிலத்தை இழந்தவர்களுக்கு வேலை தருவதாக உறுதி கூறி இருந்தது. ஆனால் வெறும் வாக்குறுதியைத் தவிர வேறெதுவும் அம்மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த நில அபகரிப்பிற்கு எதிராய் போராட்டம் மட்டுமல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது கிராம சபை.

பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாரோ இல்லை அரசாங்கமோ வாங்குவது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்கிறார் சுற்றுச்சூழல் அமைப்பொன்றின் உறுப்பினரான மனோஜ் சவுகான்.

186 ஏக்கரில் 117.11 ஏக்கர்கள் பழங்குடி மக்களுக்கானது. எனவே இதை வாங்குவது என்பது, ஒரிசாவின் வரையறுக்கப்பட்ட அசையா சொத்துக்களை இடம் மாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் 1956 க்கும், வருவாய்த் துறை சுற்றறிக்கைக்கும் (Dec,3,2013)  முரணானதாக உள்ளது. இந்த சட்டம் மற்ற எல்லா சட்டங்களையும் கடந்து பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதை பெயர் அளவிற்கேனும் உறுதி செய்கிறது.

landmineஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வாக தீண்டாமை வன்கொடுமை சட்டம், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்குத்  தீர்வாக வரதட்சணைத் தடை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் போன்ற சட்டங்கள் எப்படி அதன் தீர்வை இந்த அமைப்பிற்குள்  செயலாக்காமல் வக்கத்து திணறி நிற்கின்றனவோ அதே போல தான் பழங்குடி மக்களுக்கான பஞ்சாயத்து மற்றும் வன உரிமை சட்டங்களும்.

இந்தியா போலியான விடுதலை அடைந்த பிறகு பழங்குடி மக்களை காத்திட பெயரளவிற்க்காகவாவது இருக்கும் இந்த சட்டங்கள்(FRA,PESA) கூட அம்மக்களை காக்க முடியாமல் இருப்பது அரசு உறுப்புகள் செயல் இழந்து நிற்பதை அப்பட்டமாக காட்டுகிறது. தனியார் நிறுவனங்களுக்காக தமது சொந்த மக்களையே காவு கொடுக்கிறது ஒடிஸா அரசு.

வேதாந்தா நிறுவனத்திற்கான மூலப் பொருளை கொடுப்பதற்காக பாக்ஸைடு சுரங்கம் அமைக்க இந்த நிலங்களை போலியாகக் கையகபப்படுத்தி இருந்தது ஒடிஸா அரசு. வேதாந்ததா அலுமினிய சுத்திகரிப்பு ஆலை நியமகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது.

இங்கே உச்சகட்ட நகைச்சுவை என்னவெனில் காங்கிரசு கட்சி  ஓடிஸா அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பழங்குடி மக்களுக்கு ஆதரவாய் இருக்கிறதாக காட்டிக்  கொண்டு இருக்கிறது. வேதாந்தா போன்ற பெருநிருவனங்களுக்காக காட்டு வேட்டை என்ற பெயரில் இந்தியாவின் இதயத்தின் மீது தாக்குதலை தொடுத்ததே காங்கிரசு ஆட்சியின் போது தான். ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை தான் இது. தற்போது பா.ஜ.க எனும் முதலை கனிம வளத்தை அபகரித்து முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதில் தீவிரமாக இருக்கிறது.

வன உரிமை சட்டப்படி பழங்குடி மக்களின் உரிமைகளுக்குத்  தீர்வு காணப்பட்ட பிறகு, அரசுக்கு நிலம் தேவைப்பட்டால் அதற்காக பழங்குடி மக்களின் அனுமதி பெற வேண்டும் என்று வன உரிமை சட்டம் கூறவில்லை என்று ஒடிஸா அரசு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், பழங்குடி மக்கள் தாம் புனிதமானதாக கருதும் இடத்திற்கு அப்பாலும் உள்ள இடங்களையும் புனித இடமாக கருதுவது எல்லை மீறும் செயலாகும் என்று ஒடிஸா அரசு கபடத்தனமாக குற்றம் சாட்டுகிறது. பழங்குடி மக்களின் நிலத்தை வெறும் புனிதம் என்று சுருக்கிவிட்டு ஏமாற்றும் தந்திரமே அன்றி இதில் வேறு எதுவும் இல்லை. மக்களோ வாழ்வுரிமைக்காக எதிர்க்கிறார்கள், அரசோ அதை பண்பாடு என்று திரிக்கிறது.

வன உரிமை(FRA) சட்டப்படி, பழங்குடி மக்களின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை மதிக்கப்பட வேண்டும். அம்மக்களை தவிர்த்து அரசு தனியார் உள்ளிட்ட யாரும் அவர்களின் கலாச்சார நம்பிக்கைகைளை கேள்வி கேட்க முடியாது. பஞ்சாயத்து சட்டப்படி(PESA) கிராம சபைகளே பழங்குடி மக்களின் கலாச்சார நம்பிக்கைககளை பாதுகாக்கும் மையங்களாக உள்ளன. இயற்கையோடு இயைந்து வாழும் இம்மக்களின் எளிய நம்பிக்கைகளை மதிப்பது என்பது அவர்களின் நிலத்தை பறிக்க கூடாது என்பதோடு மட்டும் தொடர்புடையது.

1997-ல் அளிக்கப்பட சமதா (அரசு சாரா நிறுவனம்) தீர்ப்பில், “எந்த ஒரு மாநில அரசும் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை பழங்குடியல்லாத வேறு யாருக்காவது கொடுப்பதற்கு அனுமதிப்பது என்பது பழங்குடி மக்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்ட மற்றும் அரசியலமைப்பை முழுவதுமாய் Tribal-Indiaஅழிப்பதாகும்”, என்று கூறி இருக்கிறது.

ஆனால் இங்கே பழங்குடி மக்கள், உச்ச நீதி மன்றம் கூறும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஓடிஸா அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் வரலாறு என்னவோ வேறுவிதமாய் இருக்கிறது. இதே சுரங்க நிறுவனங்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் இந்திய அரசு நசுக்கியது. அதை உச்ச நீதிமன்றமும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கான சட்டங்கள் அது பழங்குடி மக்களுக்கானதாக, மாணவர்களுக்கானதாக , தொழிலாளார்களுக்கானதாக மற்றும் விவசாயிகளுக்கானதாக  இருக்கட்டும்  அவை அனைத்தையும் கைக்கழுவி விட்டு ஏட்டில் இன்னும் ஏறாத முதலாளிகளின் ஆணைகளை சிரமேற்றுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றன இந்த அரசுகள். ஆகவே, தான் எழுதிய சட்டங்களின்  படி நடந்து கொள்ளாத இந்த அரசை எதிர்த்து போராடும் நியமகிரி பழங்குடி மக்களை ஆதரிப்போம்.

– சுந்தரம்

தொடர்புடைய பதிவுகள்
Another Village In Odisha Rejects Mining
Odisha says tribals had no power to reject Vedanta bauxite mining
Odisha move on Niyamgiri hills triggers controversy
Mining in tribal Niyamgiri: SC rejects petition against local refusal consensus

வறட்சியின் புரவலர்கள் – கேலிச் சித்திரங்கள்

0
புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி

ஏகாதிபத்தியங்களின் போருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழலியல் அழிவுக்கும் என்ன வேறுபாடு?

ஏகாதிபத்தியங்களின் போருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழியல் அழிவுக்கும் என்ன வேறுபாடு?
ஏகாதிபத்தியங்களின் போருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழியல் அழிவுக்கும் என்ன வேறுபாடு?

(இந்த கேலிச்சித்திரம் வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட புகழ்பெற்ற புகைப்படத்தை அடிப்படையாக கொண்டது.)

நன்றி: Cartoon Movement ஓவியர்: paolo lombardi

——————————————————-

தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா?

தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா?
தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா?

குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் குடிநீரை புட்டியில் அடைத்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நெஸ்லே நிறுவனம் தண்ணீரை விற்பனைக்குரிய பண்டம் என்கிறது.

நன்றி: Cartoon Movement ஓவியர்: Enrico Bertuccioli

——————————————————————-

புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி

புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி
புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி

நன்றி: Cartoon Movement ஓவியர்: Popa Matumula

——————————————————————–

இந்த வறட்சியை உங்களுக்கு வழங்குவது …      முதலாளித்துவம்.

இந்த வறட்சியை உங்களுக்கு வழங்குவது... முதலாளித்துவம்.
இந்த வறட்சியை உங்களுக்கு வழங்குவது…
முதலாளித்துவம்.

நன்றி: Cartoon Movement ஓவியர்: Dario Castillejos

——————————————————————

சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை.

சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை.
சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை.

நன்றி: Cartoon Movement ஓவியர்: Jean Gouders

———————————————————

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம்.

இணையுங்கள்:

தொழிலாளி : வியர்வையின் மணம் – புதிய கலாச்சாரம் ஜுன் 2016 வெளியீடு !

1

wrapper_puka12_april_16

wrapper_puka12_april_16-back

தொழிலாளி : வியர்வையின் மணம்

ரலாறு நெடுக மனித உழைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் உலகம். விண்ணை முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும் அந்த வரலாற்றின் சாட்சியங்கள் !

எங்கோவொரு சுரங்கத்தின் குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை ஓய்வூதியமாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரமே நமது இரவுகளை ஒளிர வைக்கிறது.

தொழிலாளிகள் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் ! நாம் பயணிக்கும் பேருந்து, இரயில், தார்ச்சாலை, தண்டவாளங்கள், எரிபொருள், கட்டிடங்கள், பாலங்கள், இரும்புக் கம்பிகள் …

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விட்டால் ? மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.

இயற்கையிலிருந்து மனிதகுலம் போராடிப் பெற்ற நாகரீகக் கொடை அனைவருக்கும் பொதுவானதே, எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. தனிச்சொத்துடைமையின் உச்சகட்டமான முதலாளித்துவம், இயற்கையினதும் உழைப்பினதும் பலன்களை லாபமாக ஒரே இடத்தில் குவித்துக் கொள்கிறது. செங்குத்தாய் நிற்கும் முக்கோணத்தின் தலைப்பாகமாக வீற்றிருக்கும் முதலாளித்துவம், அதன் கீழ்ப்புறத்தில் தன்னையே தாங்கி நிற்கும் உழைப்பையும் இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிக் கொழுக்கிறது.

ஆம். நமது நாகரீக உலகை உயிரைக் கொடுத்து உருவாக்கி பராமரிக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? அவர்களின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது இந்நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. நோக்கியா : 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி
  2. ஐ.டி. பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை
  3. பிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?
  4. 42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம் !
  5. உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
  6. சென்னையில் சிவப்பு தொழிலாளிகள் !
  7. சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !
  8. உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !
  9. உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம் !
  10. உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள்
  11. இன்னா பண்றது ? சோறு துன்னாவணுமே !
  12. கூலித் தொழிலாள்ர்களைக் கொன்றது சுடுநெருப்பா ? இலாப வெறியா?
  13. ஒரு மெக்கானிக் தொழிலாளி பார்வையில் அரசு பேருந்துகள்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

வேலை கொடுப்பதாக எல்.&.டி இன்ஃபோடெக் மோசடி

0

வேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம்

ல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக ஒன்றரை வருடம் இழுத்தடித்து மோசடி செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்த இந்த மாணவர்களை பல கட்ட தேர்வுகளில் சோதனை செய்த பிறகு வேலை வழங்கும் கடிதத்தை (offer letter)-ஐ கொடுத்தது, எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம். ஆனால், வேலையில் சேர்வதற்கான தேதியை பல முறை ஒத்திப் போட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு இன்னும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவதாக போக்கு காட்டி, (offer letter)-ஐ ரத்து செய்திருக்கிறது.

l&t-infotech-recruitment-scam-posterநாடெங்கிலும் லட்சக்கணக்கான பொறியியல் முடித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் இந்த இளம் பட்டதாரிகளை அநியாயமான (unethical), தொழில் முறையற்ற (unprofessional), மனிதத் தன்மையற்ற (inhuman), பொறுப்பற்ற (irresponsible) முறையில் நடத்தியதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது.

  • எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் தனது தவறான, முறைகேடான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பட்டதாரிகளை உடனடியாக வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பல லட்சம் ரூபாய் செலவில் பொறியியல் படிப்பை முடித்திருக்கும் மாணவர்களின் வளாக நேர்முக வாய்ப்பை பறித்து, ஒன்றரை வருடம் காத்திருக்க வைத்ததற்கான இழப்பீட்டு தொகையை எல்.&.டி நிறுவனம் வழங்க வேண்டும்.

கூடவே, எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

  1. “படிப்பை முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலை” என்று பெரும் செலவில் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்க்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுடன் வளாக நேர்முகத்தில் ஆள் எடுப்பது தொடர்பாக எல்.&.டி நிறுவனம் ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறதா?
  2. வளாக நேர்முகத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பாக, எல்.&.டி இன்ஃபோடெக் மனித வளத்துறை அதிகாரிகளுக்கும், கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலருக்கும் இடையே ஊழல்கள் நடைபெறுகிறதா?
  3. பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களையும், புதிதாக எடுக்கப் போவதாக சொல்லும் ஊழியர்களையும் பட்டியலில் காட்டி தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்தும் எல்&.டி இன்ஃபோடெக் நிறுவனம் தனது ஊழியர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, தேவை தீர்ந்ததும் அல்லது தேவை இல்லா விட்டால் தூக்கி எறிந்து விடும் சரக்காக மட்டுமே பார்க்கிறதா?
  4. புதிய ஊழியர் சேர்க்கையை கூட திறம்பட செய்ய முடியாமல் 1,300 இளைஞர்களின் வாழ்க்கையை குலைத்திருக்கும் எல்.&.டி நிறுவனம் வாடிக்கையாளருக்கும், முதலீட்டாளர்களுக்கும், சமூகத்துக்கும் ஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் கடமைகளிலும் இதே போல், திறனற்ற, திட்டமிடாத, மோசடியான, பொறுப்பற்ற முறையில்தான் செயல்படுகிறதா?

1,300 தொழில்முறை பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி, அவமானம் தொடர்பான தமது கண்டனங்களை ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் எல்.&.டி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் 30 லட்சம் ஐ.டி ஊழியர்களும் தமது படிப்புக்கும், தகுதிக்கும், உழைப்புக்கும் ஏற்ற மதிப்பும் கௌரவமும் மறுக்கப்பட்டு, ஆரோக்கியமற்ற போட்டியின் காரணமாக உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். 40 வயதுக்கு முன்பாகவே ஓய்வுபெறும் முதுமை நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையை இழக்கின்றனர். இந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு தமது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர்கள் பிரிவில் தம்மை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  • 1,300 இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக மோசடி செய்த எல்.&.டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்
  • தனியார் கல்லூரி நிர்வாகங்கள் வேலை தேடிக் கொடுப்பது தொடர்பாக செய்யும் மோசடிகளை தடுத்து நிறுத்தும்படியும்
  • தனியார் கல்லூரியில் படித்து வேலை கிடைக்காத பட்டதாரிகள் கல்விக்காக செலவழித்த தொகையை கல்லூரிகள் திருப்பிக் கொடுக்கும்படி சட்டம் இயற்றும்படியும்

மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
.டி ஊழியர்கள் பிரிவு


Career and Disappointments? Is it our fault?

We all know the anxieties one goes through during the final year studies. Where will I get placement? What kind of package I can expect? Will it provide future career potential? Will I be able to send some money to my parents? So on…..

LT-InfotechFinally, one manages to get a placement in a reputed company or not so reputed company. As in many colleges, once a guy gets the placement he/she will not be allowed to attend further interviews. So, you have to sit back and wait for proving yourself at work place.

But, in the recent past most of the recruiters defer joining date upto six months or even one year. Finally, even after the next batch of freshers come out, you still have not started working. Having no income, still depending on parents, waiting for a call from the campus recruiter. After another 6 months, the campus recruiter asks you to appear for another eligibility test. Then, you are informed that you do not qualify for the job.

Shocking? That is what happened to more than 1000 young graduates at the hands of L&T Infotech. They were recruited by L&T Infotech in 2014 and after 1.5 years of suspense, were stamped unfit and thrown back in the job market. Having lost the campus placement opportunity, these 1000 young graduates are trying to find placement and start their career once again.

Luring private engineering colleges, huge fees, bank loans, financial commitments, 100% placement scams, uncertain economic conditions, uncaring managements, non-intervening government machinery – all these come to mind.

What should they do? Whom should they approach? Can we help them? How? What is the right way to look at this issue?

Let us discuss.

NDLF I.T. Employees Wing
Contact: 9003198576
combatlayoff@gmail.com

முதலாளிகளின் கையில் பூமி ஒரு பந்து – கேலிச்சித்திரங்கள்

0
வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு

வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு

வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு
வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு


நன்றி: Cartoon Movement ஓவியர்: Fiestoforo

——————————————————–
சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை

சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை
சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை

 

நன்றி: Cartoon Movement ஓவியர்: Amr Okasha

——————————————————-

முதலாளித்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி

முதலாளித்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி
முதலாளித்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி

நன்றி: Cartoon Movement ஓவியர்: Gianfranco Uber

—————————————————————–

முதலாளிகள் அடித்து விளையாடும் பந்துதான் பூமி!

முதலாளிகள் அடித்து விளையாடும் பந்துதான் பூமி!
முதலாளிகள் அடித்து விளையாடும் பந்துதான் பூமி!

நன்றி: Cartoon Movement ஓவியர்: Eyad Shtaiwe

———————————————————

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம்.

இணையுங்கள்:

மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி !

3

லாத்தூரின் “தண்ணீர் தூதுவன்” (ஜல்தூத்) குறித்த ஊடக பரபரப்பு அடங்கி விட்டது. மராத்வாடாவின் வறட்சியும், விவசாயிகள் தற்கொலைகளும் ஊடக விவாதங்களிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. ஓரு ஈசலின் ஆயுட் காலத்துக்குள் அடங்கிப் போன மகாராஷ்டிர மாநிலத்தின் வறட்சி குறித்த செய்திகளுக்குப் பின் கோடிக்கணக்கான தொண்டைக்குழிகள் தண்ணீருக்குத் தவித்துக் கிடக்கின்றன.

imagesகடந்தாண்டு பருவ மழை பொய்த்து விட்டதே மக்கள் தண்ணீருக்குக் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படக் காரணம் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள். காங்கிரசை பாரதிய ஜனதாவும், பாரதிய ஜனதாவைக் காங்கிரசும் மாற்றி மாற்றி விரல் நீட்டிக் கொள்கின்றன. சரியான நீர் மேலாண்மை செய்திருந்தால் பிரச்சினையைத் தவிர்த்திருக்கலாம் என்கின்றன என்.ஜி.ஓ மூளைகள். லாத்தூரின் தூர்ந்து போன மஞ்சீரா ஆற்றுப் படுகையை ஆழப்படுத்த மூன்று கோடி ரூபாய்களை வசூலித்து விட்டோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

நேச்சுரல் சுகர் மற்றும் அல்லைட் சுகர் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பெரும் சர்க்கரை ஆலைகளின் நிர்வாக இயக்குனராக இருக்கும் பி.பி. டோம்ப்ரே என்பவரை நிர்வாக டிரஸ்டியாக கொண்டிருக்கும் ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட் என்கிற என்.ஜி.ஓ முன்னெடுத்திருக்கும் மஞ்சீரா ஆற்றுப்படுகையை அகழ்ந்தெடுக்கும் திட்டத்தில் கைகோர்த்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

அவலச்சுவை நிறைந்த கருப்புத் திரைப்படம் போல் விவரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது மராத்வாடா மக்களின் வாழ்க்கை. கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 725 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயக் கடன்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லாடுகின்றனர் மகாராஷ்டிர விவசாயிகள். ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஒவ்வொருவரும்

உண்மையான குற்றவாளிகள் யார்?

முதலில் சில புள்ளிவிவரங்களை பார்த்து விடுவோம் –

2015ம் ஆண்டு ஜூன் துவங்கி செப்டெம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த மழையின் அளவு (இந்திய வானியல் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்)

பொழிவு, மில்லிமீட்டரில் (2015) கொங்கன் –கோவா விதர்பா மத்திய மகா மராத்வாடா
ஜூன் முந்தைய சராசரி 663 161 140 138
இந்தாண்டு 781 254 177 119
ஜூலை முந்தைய சராசரி 1147 318.9 247.8 192.5
இந்தாண்டு 581.5 137.8 111.7 26.8
ஆகஸ்ட் முந்தைய சராசரி 759.6 305.7 289.1 188.2
இந்தாண்டு 388.7 288.9 56 112.2
செப் முந்தைய சராசரி 344.7 169 152.4 164.2
இந்தாண்டு 253.8 167.5 143.4 154
பருவகாலம் முந்தைய சராசரி 2914.3 954.6 729.3 682.9
இந்தாண்டு 2005 848.2 488.1 412.4

புள்ளிவிவரங்களின் படியே சராசரியை விட இந்தாண்டு குறைவான அளவே மழை பெய்துள்ளது. எனினும் அதே ஆண்டில் மகாராஷ்டிரத்தை விட குறைந்த அளவில் (400மிமி) மழை பொழிவைப் பெற்ற ராஜஸ்தான் மாநிலம் தண்ணீருக்காக கையேந்தி நிலையை அடையவில்லை. கடந்தாண்டு தேசிய அளவில் வேறு பல மாநிலங்களிலும் பருவ மழை பொய்த்துள்ளதுள்ளது.

waterசரி, மகாராஷ்டிராவின் நீர் மேலாண்மை எப்படி இருக்கிறது?

மகாராஷ்டிர மாநிலத்தில் தான் நாட்டிலேயே மிக அதிகளவில் பெரும் நீர்த்தேக்க அணைகள் கட்டப்பட்டுள்ளன. 60 மில்லியன் க்யூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட அல்லது பதினைந்து மீட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய அணைகளின் எண்ணிக்கை மட்டும் 1,845 ஆகும். இது தவிர பல்லாயிரக்கணக்கான சிறிய தடுப்பணைகளும் உள்ளன. 2013ம் ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் செலவில் சுமார் 1,420 தடுப்பணைகள் கட்டப்பட்டன. 2014ம் ஆண்டில் சுமார் 8000 சிறிய தடுப்பணைகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதில் பெருமளவு கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2001 – 2011 காலகட்டத்தில் மட்டும் சுமார் 70,000 கோடி ரூபாய்கள் நீர்மேலாண்மைத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கமுடியவில்லை என்பதோடு பாசன நிலத்தின் பரப்பளவு வெறும் 0.1 சதவீதமே அதிகரித்துள்ளது.

எங்கே போனது தண்ணீர்? எங்கே பாய்ந்தது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள்? மக்களின் தண்ணீரைக் கொள்ளையடித்தவர்கள் யார்?

இதைப் புரிந்து கொள்ள மகாராஷ்டிராவின் மிக முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களான கரும்பின் சாகுபடி முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் மொத்தாம் நான்கு வகையான கரும்பு சாகுபடி முறைகள் உள்ளன. அத்சாலி, முன் பருவ முறை, ரத்தூன் மற்றும் சுரூ என்று அழைக்கப்படும் முறைகளில் தண்ணீர் தேவை எப்படி உள்ளது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனை விளக்குகிறது.

Method % share Production(lakh T) Yield(t/ha) No.of std irrigations(7.5 cms) Water requirement’000 m3/ha % recovery rate Yield adjusted for recovery rate t/ha Crop duration, months Yield t/month adjusted for recovery rate
Adsali 10 122.64 120 32.5 24.38 12.30 161.14 17.00 9.48
Pre-seasonal 30 275.94 90 27.5 2063 12.00 117.9 14.50 8.13
Suru 20 143.08 70 22.5 16.88 11.45 87.50 12.00 7.29
Ratoon 40 276.94 65 22.5 16.88 10.50 74.51 11.00 6.77
Total/ weighted average 100 818.60 80.01 25 18.75 11.32 98.79 12.85 7.56

மத்திய விவசாய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விவரங்களின் படி, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 18750 கன மீட்டர் தண்ணீர் செலவாகிறது. இதில் கரும்பு பயிர்கள் குடித்துத் தீர்த்தது போக சராசரியாக 11.32 சதவீத தண்ணீர் மட்டுமே மறுசுழற்சியாகிறது. மீதமுள்ள சுமார் 88 சதவீத நீரை கரும்புப் பயிர்கள் கபளீகரம் செய்கின்றன. மகாராஷ்டிராவின் மொத்தமுள்ள சாகுபடிப் பரப்பில் வெறும் 4 சதவீத நிலத்தில் பயிரிடப்படும் கரும்புப் பயிர்கள் மொத்த பாசன நீரில் 71.5 சதவீதத்தை அபகரித்துக் கொள்கின்றன.

sugarcaneசர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தளவில் மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், உத்திரப்பிரதேசம் முதலாம் இடத்திலும் உள்ளன. உத்திரப்பிரதேசம், தனது பாசனத் தேவைகளுக்காக வற்றாத ஜீவ நதிகளை எதிர்பார்த்தும் மகாராஷ்டிரம் பருவ மழையை எதிர்பார்த்தும் உள்ளன. உத்திரபிரதேசத்தில் பின்பற்றப்படும் கரும்பு சாகுபடி முறைகளின் படி ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1,044 லிட்டர் தண்ணீர் செலவாகும் அதே நேரம், மாராஷ்டிராவிலோ ஒரு கிலோ சர்க்கரை உற்பத்திக்கு 2,068 லிட்டர் தண்ணீர் செலவாகிறது . அணைகள், ஆறுகள் மற்றும் மக்களுக்கான தெற்காசிய வலைப்பின்னல் (South Asia Network on Dams, Rivers and People (SANDRP) என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீரியல் ஆய்வாளர் பர்நீதா தண்டேகர் செய்துள்ள இந்தக் கணக்கீட்டில் ஆலைகளில் கரும்பிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்ய செலவாகும் தண்ணீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, மகாராஷ்டிராவின் பெரும்பான்மையான கரும்பு சாகுபடியானது தற்போது வறட்சியின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் மராத்வாடா பிராந்தியத்திலேயே நடக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 205 கூட்டுறவு ஆலைகளும் 80 தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் சர்க்கரை முதலைகளே. 2012 – 2013 நிதியாண்டில் மராத்வாடாவில் மட்டும் சுமார் 20 தனியார் சர்க்கரை ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் என்று சொல்லப்படுவதிலும், அரசியல் செல்வாக்குள்ள தனியார் முதலைகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

1960 ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஓட்டுக்கட்சிகள், தமது விவசாயக் கொள்கைகளையும், நீர் மேலாண்மைத் திட்டங்களையும், சர்க்கரை முதலைகளின் நலன்களுக்கு உட்பட்டே வகுத்து வந்துள்ளனர். மாநில விவசாயத் துறையே திட்டமிட்டு சர்க்கரை சாகுபடியை முன் தள்ளுகின்றது. பாசனக் கால்வாய்களில் நீர் திறந்து விடுவதும் கூட இந்த அடிப்படையிலேயே நடகின்றது.

ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட்
ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட்

சர்க்கரை சாகுபடியானது மறுசுழற்சியாகும் நீரின் அளவை பெருமளவு குறைத்து விடுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு விழுந்துள்ளது. லாத்தூர் பகுதியில் சாதாரணமாக நிலத்தடி நீரின் மட்டம் 900 அடிகளுக்கு வீழ்ந்துள்ளது. பெய்யும் மழை நீரை மொத்தமாக குடித்துத் தீர்க்கும் கரும்புப் பயிர்கள் அதுவும் போதாமல் மேலும் மேலும் நீரைக் கோருவதால் விவசாயிகள் ஆழ்துளாய்க் கிணறுகளை நாடுகின்றனர். நீர்பாசன நிபுணர் புரந்தரே என்பவரின் கணக்கீட்டின் படி மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த விவசாய சாகுபடி நிலங்களில் 71 சதவீதம் ஆழ்துளாய்க் கிணறுகளின் மூலமாகவே நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது.

மகாராஷ்டிராவின் மொத்த நீர் பயன்பாட்டில் 75 சதவீதம் விவசாயத்திற்கும், 15 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 10 சதவீதம் மக்களின் பயன்பாட்டுக்கும் செலவாகிறது என்கிறது அம்மாநில அரசு. விவசாயத்திற்கான 75 ஒதுக்கீட்டில் பருவ மழை மற்றும் ஆழ்துளாய்க் கிணறுகளை ஆதாரமாக கொண்ட நீரைப் பெரும்பகுதி கரும்புப் பயிர்களே குடித்துத் தீர்க்கின்றன. அகோரப் பசியோடு உறிஞ்சுவதால் ஆழ்துளாய்க் கிணறுகள் வெகு சீக்கிரம் வற்றித் தூர்ந்து விடுகின்றன. மீண்டும் வேறு இடத்தில் ஆழ்துளாய்க் கிணறு அமைக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவாகிறது. அப்படிச் செலவு செய்து துளையிட்டாலும் நீர் இருக்குமா என்பது சந்தேகமே.

கடன்வாங்கி ஆழ்துளாய்க் கிணறுகள் அமைக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது போனால் கடனைத் திருப்பிச் செலுத்த வேறு வழிகளும் இருப்பதில்லை. கந்து வட்டி குண்டர்களும், வங்கிகளின் வசூல் ராஜாக்களும் அளிக்கும் சித்திரவதைகளுக்கு அஞ்சி தற்கொலையை நாடுகின்றனர். இன்னொரு புறம், அரசின் விவசாய திட்டங்கள், விவசாயத் தொழில், பாசனத் திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை கொள்கைகள் அனைத்தும் சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு சார்பாகவே இருக்கின்றன. சர்க்கரையின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவது, சர்க்கரைக்கான ஏற்றுமதி வரியைக் குறைப்பது என்று தொடர்ந்து முதலாளிகளுக்கே சேவையாற்றுகிறது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள்.

drought1இந்திய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் (ISMA) கணக்கீட்டின் படி இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் 53.58 லட்சம் ஹெக்டேர்களில் கரும்பு பயிரடப்பட்டு அதிலிருந்து 280 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் உள்நாட்டுத் தேவையான 250 லட்சம் டன்களைக் கழித்து விட்டால், சுமார் முப்பது டன்கள் சர்க்கரை மிகையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி கையிருப்பில் சுமார் 102 லட்சம் டன் சர்க்கரை தேங்கிக் கிடக்கிறது. ஆக மொத்தம் 132 லட்சம் டன் சர்க்கரை நமது தேவைக்கும் அதிகமாக கையிருப்பில் உள்ளது. 2015-16 நிதியாண்டில் மட்டும் சர்க்கரை ஏற்றுமதிக்கான அளவை 40 லட்சம் டன்களாக உயர்த்தியிருக்கும் மத்திய அரசு, அதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 195 சர்க்கரை ஆலைகளுக்கான அதிகபட்ச அளவை 13 லட்சம் டன்களாக நிர்ணயித்துள்ளது.

சர்வதேச சந்தையில் இந்திய சர்க்கரைக்கான விலை ஒரு டன்னுக்கு 415 டாலர்களாகும். ஆக, 13 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் மட்டுமே சுமார் 3500 கோடி லாபத்தைக் குவிக்கவுள்ளனர் மகாராஷ்டிர சர்க்கரை ஆலை முதலைகள். ஏற்கனவே கையிருப்பில் உள்ள சர்க்கரையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், இந்தாண்டு மட்டுமே சுமார் 97 லட்சம் டன் சர்க்கரையை மகாராஷ்டிரா உற்பத்தி செய்யவுள்ளது. உள்நாட்டுச் சந்தையிலும் சர்க்கரையின் விலை கூடியுள்ள நிலையில் உள்நாட்டிலிருந்து குவிக்கவுள்ள லாபத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படி ஒரு புறம் கொழுத்த லாபத்தைக் குவிக்கும் முதலாளிகள் மறுபுறம் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். உள்நாட்டு சர்க்கரை நுகர்வை கணக்கிலெடுக்கவில்லை என்றாலும், 13 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் சுமார் 269 கோடி லிட்டர் நீர் மறைமுகமாக ஏற்றுமதியாகிறது. நீர் வளத்தைக் கபளீகரம் செய்வதோடு நமது விவசாயிகளின் உழைப்பையும் சுரண்டி அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளும் இந்தத் தரகு முதலாளிகளும் அவர்களுக்கு சேவையாற்றும் ஆளும் வர்க்கமுமே வரட்சிக்கும், விவசாயிகள் தற்கொலைக்கும் பிரதானமான காரணம்.

ஆளும் வர்க்க கைக்கூலிகளான என்.ஜி.ஓக்களோ, பழியை இயற்கையின் மீது போடுகின்றன. ஆர்.எஸ்.எஸ் கும்பலோ நேரடியாக சர்க்கரை ஆலை முதலைகளோடு கைகோர்த்துக் கொண்டு ஆற்றைத் தூர்வாறுவது, பசுமாட்டிற்கு தண்ணீர் காட்டுவது என்று பித்தலாட்டமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. இந்த துரோகிகள் தண்டிக்கப்படாத வரை வறட்சியிலிருந்து மக்களுக்கும் நாட்டிற்கும் விடுதலையில்லை.

– தமிழரசன்.

வினவு ….ன்னு ஒரு கம்யூனிச விபச்சார தளம் !

147

தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG

மேற்கண்ட பாடல் குறித்து ஃபேஸ்புக்கில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழே:

—————————————————————————–

fbRejeesh Kumar
May 14 at 12:39am

 

“வினவு”ன்னு ஒரு கம்யூனிச விபச்சார இணைய தளம், ஜெயாவோட சாராய சாம்ராஜ்யத்தை கிண்டல் செய்து, கரகாட்டகாரன் படத்தில் வரும் மாரியம்மா பாடலுக்கு, தண்ணி போட்டு ஆடுவது போல் ஒரு “பார் சாங்” வெளியிட்டிருக்குறான்.

விருந்தாளிக்கு பொறந்த “வினவு” பொறுக்கிகளே..!
நீங்க மக்கள் மத்தியில் பிரபலமாகணும்னா உங்க வீட்டு பொண்ணுங்கள அம்மணமா ஆட விட்டு, வீடியோ வெளியிடுங்க. இந்து மத கடவுளோடு ஒப்பிட்டு பார் சாங் போட வேண்டிய தேவையில்லை.

வினவு உறுப்பினர்கள் (நெ)ஞ்சுல ஆண்மையுள்ளவன்னா அல்லாவை பற்றிய பாடலுக்கு இதே “சாரய பார் சாங்” போட்டு பாருங்க. முட்டி போட வெச்சு கழுத்தறுத்துடுவானுங்க. இல்லைன்னா கூண்டுல அடைச்சு கொழுத்திடுவானுங்க.

அதற்காக இந்துக்களுக்கு வீரமில்லைன்னு தப்பா கணக்கிடாதே. சற்று விவேகமும் அதிகம்.

Draviakannan Yadav நம்ம பயலுகளுக்கு தைரியம் இல்லைனு தான். ஒத்துகனும் .

Rejeesh Kumar தைரியம் எல்லாம் இருக்கு ஜி. ஒற்றுமை இல்லை.

Draviakannan Yadav அதுவும் சரிதான் சகோ.

Singaraj Raj அந்த வினவு பக்கம் உண்டியல் குரூப்பா?

Rejeesh Kumar கம்யூனிஸ்டுல நக்சல் ஆதரவு பிரிவு.

Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.

Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.

Singaraj Raj அந்த அளவுக்கு சமூகத்தில் கம்யூனிச சிந்தனைகள்
விதைக்க பாடுபடுகிறார்கள். நன்றி ஜீ தகவலுக்கு

Basker Mnk ஏழு பேருக்கு போறந்த அந்த நாய்க தான் தப்பு பண்ணுதுனுபாத்தா
ஹிந்துவெறி புடிச்ச நீங்க மட்டும் அந்த விசயத்தத கணௌடும்
காணாம போய்கிட்டு இருப்பது ஏன்? கோர்ட்ல முறையிட துப்பு
இல்லையா துப்பு கேட்ட கோமாளிக ளா?

Rejeesh Kumar இந்த மாதிரி நாய்களை தட்டி கேட்டு , போலீசு ஸ்டேசன் வரைக்கும் பல தடவை போனவன் நான். இன்னிக்கு கூட எங்க ஊர்ல ஒர் அனுமதியில்லாமல் ஒரு சர்ச் கட்ட ஸ்டே
ஆர்டர் வாங்கி 10 வருசமா நிறுத்தி வெச்சிருக்கோம். மண்டைகாடுன்னு கூகிள்ல தேடி பாருங்க. தமிழ் நாட்டுல சூடு சொரணையுள்ள இந்து அங்க இருந்து தான் முதன் முதலா வெளியே வந்து இந்து அமைப்புகளுக்கே அடித்தளம் இட்டு கொடுத்தான். அது தன் என்னோட ஊரு . இப்படி லூசு மாதிரி கேள்வி கேட்காமல் முதல்ல நீங்க முதல்ல கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே? இங்க
என்னத்த புடுங்கிட்டு இருக்கீங்க. நாங்க பதிலடியும் கொடுத்துட்டோம், தேர்தல்லையும் ஒற்றுமையை பல தடவை நிரூபிச்சிட்டோம். அடுத்தவனை துப்புகெட்டவன், கோமாளின்னு சொல்லுமுன்னாடி உங்க முகத்துல இருக்குற மலத்தை தொடச்சுக்கோங்க. முதல்ல சொந்த முகத்தோடு வந்து பேசுற நபர்ன்னு இல்லை நீங்க. மனசுல வெச்சுக்கோங்க.

Ponsankar M வினவு தளம் ஒரு விபச்சார தளம்

Saravanan Selvam Going to hack that website

Saravanan Selvam Vinavu is a nakshalight supported website …. Full of poison …

Guru Venkatesh B Karuneegapillai Court la case podunga sir avanugala pathi

____________________________________

காவி ரசிகர்களே கம்யூனிசத்தின் பலத்தை ஒத்துக்கொள்கிறார்கள், வேறென்ன?

Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.

Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.

அம்மாவின் தவ வாழ்வு – கேலிச்சித்திரம்

2
பணத்தால் நான் ...! பணத்துக்காகவே நான் ...!
பணத்தால் நான் …!
பணத்துக்காகவே நான் …!

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம்.

இணையுங்கள்:

Breaking News: அதிகாலை டாஸ்மாக் விற்பனை – படங்கள்

11

தவியேற்ற முதல் நாளிலேயே டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்து மதியம் 12 மணிக்குத்தான் விற்பனை ஆரம்பம் என்று ஜெயா அறிவித்தார். மொத்த கடைகளில் 500 கடைகளை குறைத்தும் அவர் உத்தரவிட்டதை ஊடகங்கள் மாபெரும் சாதனையாக வெளியிட்டிருந்தன.

மீனை வெறுப்பதாக பூனை என்னதான் சீனைப் போட்டாலும் கவிச்சியின்றி அம்மா கட்சியினர் வாழ முடியுமா என்ன? ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் உரிய நேரத்தை தாண்டியும், முன்னரும், விடுமுறைகளின் போதும் திருட்டுத்தனமாக அதாவது பார்களில் பகிரங்கமாக சரக்கு விற்பது வாடிக்கையான ஒன்று.

இன்று 24.05.2015 காலை சென்னையில் நடைப் பயிற்சிக்கு போன தோழர் ஒருவர், நகரின் மையப்பகுதி ஒன்றில் டாஸ்மாக் கடையருகே உள்ள பெட்டிக்கடையில் இன்று முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருப்பதால் விற்பனை குறையுமா?” என்று விசாரித்திருக்கிறார். கடைக்காரரோ சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அவரது கடை அருகே உள்ள தேநீர்க்கடையைத் தாண்டி காலியாக நிற்கும் கையேந்தி பவன் வண்டி அருகே சரக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார். அருகே சென்று பார்த்தால் பார் ஆசாமி கை நிறைய காந்தி நோட்டுக்களுடன் நின்று கொண்டிருக்க கீழே தண்ணீர் பாக்கெட் மூட்டை போல இருந்த வெள்ளை பிளாஸ்டிக் சாக்கில் பாட்டில்கள் இருந்தன. இந்த விற்பனை நேரம் காலை 7.00 மணி.

பிறகு விசாரித்தால் தமிழகம் முழுவதும் இன்று முழுவீச்சோடு டாஸ்மாக் விற்பனை அதிகாலையிலிருந்தே அமோகமாக நடைபெறுகிறது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள இரு கடைகளில் ம.க.இ.க தோழர்கள் காலையில் சென்று விசாரித்த போது சரக்கு விற்பனை கன ஜோராக நடைபெறுவதை நேரில் கண்டார்கள். அதன் புகைப்படங்களை இங்கே தந்திருக்கிறோம். இவை எடுக்கப்பட்ட நேரம் காலை 9.30 மணி. உறையூர் பகுதியில் இருக்கும் இரு கடைகளிலும் டாஸ்மாக் விற்பனை சூடு பிடித்துக் கொண்டிருந்தது. ரெகுலர் கடையில் இருக்கும் கூட்டத்திற்கு இணையாக பாரில் நடக்கும் திருட்டு விற்பனையும் இருந்தது.

பொதுவில் காலையில் குடிப்பவர்கள் குடிக்கு அடிமையாக இ ருப்பவர்களும், காலையிலேயே வேலைக்கு குடித்து விட்டு செல்பவர்களும் என்று இரு வகையினர் இருக்கிறார்கள். போதை மீட்பு மையத்தில் இருக்க வேண்டிய இந்த பரிதாபத்திற்குரிய மக்களை இன்று பாசிச ஜெயா அரசு கொல்வதின் சாட்சிதான் இந்த பிளாக் விற்பனை.

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள  டாஸ்மாக் கடை
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பூட்டப்பட்டிருக்கிறது – சும்மா ஒரு எஃபெக்ட்டுக்கு!
WhatsApp-Image-20160524(12)
காலை 9.30க்கு குடிமகன்கள் சரக்கு வாங்க நுழைகிறார்கள்!
WhatsApp-Image-20160524(4)
விற்பனை இரகசியமாக அல்ல, பகிரங்கமாக நடைபெறுகிறது. குடிமகன்கள் பலரும் நம்மை அழைத்து விதவிதமாக போட்டோ எடுக்கச் சொன்னார்கள்.
WhatsApp-Image-20160524(2)
ஆதாரம் வேண்டுமா? பாட்டிலுடன் ஒருவர்!
WhatsApp-Image-20160524(10)
முதல் நாளில் காலையிலேயே சரக்கு கிடைக்கும் என்பதற்கு இது போதுமா இன்னும் வேண்டுமா?

புரட்சித் தலைவியின் அதிரடி அறிவிப்பின் முதல் நாளிலேயே இக்கடை அதிகாலை 7.00 மணிக்கே திறக்கப்பட்டுள்ளது. மெயின் கடை பூட்டப்பட்டிருந்தாலும், பார் மட்டும் திறக்கப்பட்டு கடை விற்பனையை கவனித்துள்ளது. குடிமகன்கள் வழக்கம் போல வந்து குடித்து விட்டுப் போகிறார்கள். கடையில் சுமார் 90 அல்லது 100 ரூபாயிக்கு விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில் இங்கே சுமார் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அம்மா தடை செய்த நேரத்தில் சரக்கு கிடைக்கிறது என்பதால் குடிமகன்களும் இந்த விலை உயர்வை சட்டை செய்வதில்லை.

இதன்படி பார்த்தால் இனி தமிழகமெங்கும் காலை விற்பனை என்பது இப்படித்தான் நடக்கும். பார்களை நடத்தும் அ.தி.மு.க ரௌடிகள் கடை வருமானத்திற்கு நிகரான வருமானத்தை இங்கு பெறுவது உறுதி. இப்படி கட்சிக்காரர்கள் எனும் குண்டர் படை பொறுக்கித் தின்பதற்கே பாசிச ஜெயா இப்படி கடை நேரத்தை குறைப்பதாக நாடகமாடி வருகிறார். இந்த அதிகாலை விற்பனைக்கு ஆதரவு தரும் பொருட்டு போலீசின் மாமூலும் கூட்டி கொடுக்கப்படுமென்று தெரிகிறது.  மதுவிலக்கை முழுமையாக கொண்டு வராத எந்த நாடகமும் இப்படித்தான் கொள்ளையை கூட்டும் என்பதும், ஆண்கள் சாவதையும், பெண்கள் சித்ரவதையில் வாழ்வதையும் இந்த நாடகம் அதிகப்படுத்தும் என்பதும் உறுதி.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போமென்னு ஜெயா அறிவித்த உடனே அவரது ஊடக அடிமைகள் துள்ளிக் குதித்தார்கள். அவர் ஆட்சி அமைத்த பிறகு இவர்கள் செய்திகளால் கட்அவுட் நட்டார்கள்.

அம்மாவின் போங்காட்டம் ஆரம்பித்து விட்டது. அதை முறியடிக்கும்  மக்கள் அதிகாரம் போராட்டமும் ஓயாது!

பின் குறிப்பு: வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவரும் தங்களது ஊரில் நடக்கும் அதிகாலை டாஸ்மாக் விற்பனை குறித்த புகைப்படங்கள், செய்திகளை அனுப்பித் தருமாறு கோருகிறோம்.

திருச்சி உறையூர் பகுதியிலே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடை
திருச்சி உறையூர் பகுதியிலே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடை – அனைவரும் வருக! எந்நேரமும் சரக்கு கிடைக்கும்!

WhatsApp-Image-20160524(15)

WhatsApp-Image-20160524(16)
புரட்சித் தலைவியின் போங்காட்டத்தை காறித்துப்புகிறது இன்று காலையில் வாங்கிய ஒரு பாட்டில்!

WhatsApp-Image-20160524(19)

WhatsApp-Image-20160524(18)

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பு விற்பனை
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பு விற்பனை! மஞ்சள் தொப்பி போட்டவர் வாங்குகிறார். நடுவில் இருப்பவர் பைக்கில் வைத்து சரக்கை ஓட்டுகிறார்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகேயும், சித்ர குப்தன் கோவில் அருகேயும் உள்ள கடையில் இன்று காலை முதல் பாட்டில் விற்பனை ஜரூராக நடக்கிறது.

– செய்தி, படங்கள்: வினவு செய்தியாளர்கள்

நேபாள் : பெண்களை வதைக்கும் உலகின் “ஒரே இந்து நாடு” !

36
பாக்கு குமாரி பிஸ்தா

மாதவிடாய் குடிசைகள் – தீண்டதகாத நேபாள பெண்கள்!

மாதவிடாய் தீண்டத்தகாதது எனவே அது வந்தவர்களுக்கு அவர்களது சொந்த வீட்டிலேயே 5 நாட்களுக்கு அனுமதியில்லை;

சப்ரிதா போகட்டிக்கு இன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்;
சப்ரிதா போகட்டிக்கு இன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்!

சப்ரிதா போகட்டிக்கு அன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்; ஏறக்குறைய தனிமைக்குடித்தனத்திற்கு; குளிரும் பனியுமான அந்த மலைப்பிரதேசத்தில் இனி அவளுக்கு அடைக்கலம் தரப்போவது எது? 4X3 அளவேயுள்ள அறை தான். இது மாதவிடாய் குடிசை என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே ஒரு இந்து நாடு என்று பெயர்பெற்ற நேபாளத்தின் மத்திய மேற்கு மலைப்பகுதியில் உள்ள நிறைய கிராமங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ள ஒரு கொடூர நிகழ்வு.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ளது அச்சாம் மற்றும் தோட்டி மாவட்டங்கள். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 3800 மீட்டர் உயரம் வரை அமைந்துள்ள இந்தப்பகுதிகள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளாகும். இந்தப் பகுதிகளுக்குள் வாகனங்கள் செல்வது அவ்வளவு எளிதல்ல; வாகனங்களுக்கு என்ன நிலையோ அதை விட மோசமான நிலை தான் அறிவியலுக்கும்…என்னது டிஜிட்டல் யுகமாகிக்கொண்டிருக்கும் இந்தப் புவியில் அறிவியல் நுழையாத இடமா? யார் இதற்குப் பொறுப்பு என்று பதற வேண்டாம்…. நமக்கு நன்கு அறிமுகமான அந்த ஒன்று தான் இதற்கும் மூலக்காரணம்.

mapகுடாப்பில் அடைக்கப்பட்ட கோழி போல அமர்ந்திருக்கும் சப்ரிதாவுக்கு அவருடைய உறவினரான சிறுமி ஒருவர் உணவு தருகின்றார். சில சமயங்களில் இங்கே தான் பிரசவமும் நடக்குமாம்; பிரசவிப்பதும் தீட்டாகக் கருதப்படுகிறது; மாதவிடாய் காலத்தில் பெண்கள் பால் மற்றும் மாமிச உணவுகள் உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே ரொட்டி மட்டுமே தரப்படுகிறது. கொடுப்பவர் மிகவும் கவனமாகக் கொடுக்க வேண்டும், தப்பித்தவறி கைபட்டுவிட்டால் அது தீட்டாகிவிடும்.இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த நடைமுறைக்கு எந்தச் சாதியும் விதிவிலக்கல்ல.

இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம். வீட்டிற்கு அருகில் செல்லக்கூடாது, கோவிலுக்குச் செல்லக்கூடாது; பொதுவான தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.; தான் பெற்ற குழந்தைகளை மட்டுமே தொடலாம்; ஆனால் மற்றவர்களைத் தொடக்கூடாது..

இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம்.
இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம்.

ஏன் இந்த அவல நிலை?? இது காலங்காலமாகத் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சாரமாகும். இதை “CHHAUPADI” – “சாவ்பாடி” என்கின்றனர். “சாவ்” என்றால் “தீண்டத்தகாதது”  ‘பாடி” என்றால் “இருத்தல் நிலை” – “BEING” என்று பொருள் படும். பூப்பெய்த பெண்ணிற்கு மாதவிடாய் வரும்போது இவர்களின் மரபுப்படி அவர் ”சாவ்பாடி” ஆகிறார்; அதாவது தீண்டத்தகாதவராக….

2006-ம் ஆண்டில் நேபாள அரசு இந்த மூடப்பழக்க வழக்கத்தை ஒழிக்கும் வண்ணம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும் இந்தப் பழக்கம் இன்னும் இந்தப் பகுதிகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதால் இன்னும் அப்படியே கடைபிடிக்கப்படுகிறது.

இந்த மாதவிடாய் குடிசை பெரும்பாலும் வீட்டிற்கு அருகில் அதாவது வீட்டிற்கு முன்புறம் அல்லது பின்புறம் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் மாட்டுக்கொட்டகை அருகில் அமைகிறது.

மாட்டுகொட்டைகைக்கு அருகில் அமைந்திருக்கும் சப்ரிதாவின் மாதவிடாய் குடிசை
மாட்டுகொட்டைகைக்கு அருகில் அமைந்திருக்கும் சப்ரிதாவின் மாதவிடாய் குடிசை

மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும். இந்தக் குகைக்குள் நுழைந்து காயம் படாமல் வருவது மிக மிக அரிது; கூனிக் குறுகி தான் அமரமுடியும். இதில் கொடுமை என்னவென்றால் சில நேரங்களில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இங்கே தங்கவேண்டியிருக்கும். ஏனென்றால் பலருக்கு இந்த மாதவிடாய் குடிசை கட்டும் அளவுக்கு வசதியில்லை. கடுங்குளிர், கும்மிருட்டு, காற்றோட்டமின்மை இன்னும் சொல்லி மாளாத துன்பங்கள் எத்தனை எத்தனை…மாதவிடாய் காலத்தில் வரும் மன அழுத்தம், சோர்வு, உடல்வலி( நாப்கின் கட்டுரை படிக்கலாம்) இதையெல்லாம் உணர்வதற்குக் கூட இவர்களுக்கு வழியில்லை.

21-ம் நூற்றாண்டிலும் இத்தனை பிற்போக்குத் தனங்களா? என்று வியக்க வேண்டாம்…பேமா லக்ரி என்று பெண்கள் நல ஆர்வலர் கூறுகிறார்… “மக்களுக்கு இங்கே மாதவிடாய் பற்றிய அறிவியல் புரிதல் வரவேண்டும்; மாதவிடாய் என்றால் இங்கே அசிங்கமானது;, அவலமானது என்ற ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முதலில் உடைத்தெறியப்பட்டால் தான் இந்த அவல நிலையை அகற்ற முடியும்.பெரும்பாலான பெண்களிடம் மாதவிடாய் ஏன் வருகிறது என்று கேட்டபோது அவர்களில் ஒருவருக்கு கூட இது குறித்து எதுவும் தெரியவில்லை” என்று கவலைப்படுகிறார்.

பேமா லக்ரி - கடந்த 10 வருடங்களாக தன்னாட்டு மக்களிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை அகற்ற போராடும் சமூக ஆர்வலர்
பேமா லக்ரி – கடந்த 10 வருடங்களாக தன்னாட்டு மக்களிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை அகற்ற போராடும் சமூக ஆர்வலர்

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி என்பவர் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பேச சம்மதித்தார். மற்றவர்களைப் போலவே இவரும் இந்தியாவில் வேலை செய்கிறார். விடுமுறையை முன்னிட்டு வந்திருக்கும் இவர் பேசுகையில் “இனி என்னுடைய குடும்பத்தினர், மாதவிடாய் குடிசைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை; மாறாக வீட்டிற்குள்ளேயே ஒரு மாதவிடாய் குடிசை (பதுங்கு குழி) போன்று ஒன்றை அமைத்துள்ளேன்; ( இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்டதாகும்: படத்தில் காண்க). சில சமயங்களில் 3 முதல்  4பேர் வரை இதில் தங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவரவர் வீட்டிலிருந்து தேவையான துணிமனிகளை எடுத்து வர வேண்டும்”.

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி
தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி

சரி ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று அவரிடம் கேட்டபோது “கடவுளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறோம். மாதவிடாயின் போது இரத்தப் போக்கு இருப்பதால் அது கடவுளுக்கு எதிரானது; எனவே வீட்டிற்குள் அனுமதிப்பது சரியல்ல” என்கிறார்.

இந்து மதத்தில் புரையோடிப்போன விழுமியங்கள் இன்னும் இங்கே நடைமுறையில் இருப்பதைத் தான் நாம் காண்கிறோம். மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராயாமல் அது கடவுள் விடுக்கும் எச்சரிக்கை என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி அதையே காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது இவர்களின் இந்து மதம்.

இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்டதாகும்
இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்ட பகதூர் வடிவமைத்த மாதவிடாய் குடிசை

இந்த ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது எதார்த்தமாக வயல்வெளிகளில் குறுக்கிட்டுச் சென்ற சில மாணவிகளைச் சந்திக்க நேர்ந்தது; அவர்களில் ஒருவர் மட்டுமே தனிப்பாதையில் நடந்து சென்றார். என்னவென்று விசாரித்த போது தான் அவர் நடந்து சென்றது மாதவிடாய் வந்தவர்கள் உபயோகிப்பதற்கான தனிப்பாதை; மற்ற மாணவிகள் நடந்து சென்ற இடம் புனிதமான ஒன்றாகக் கருதப்படுவதால்  இவர்களுக்கென்று மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் பேச மறுத்து விட்ட நிலையில் பாக்கு குமாரி பிஸ்தா என்பவரையும் அவரது தாயையும் சந்திக்க நேர்ந்தது; நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பாக்கு குமாரி பிஸ்தா பெண்கள் நல ஆர்வலர் பேமாவிடம் பேச சம்மதித்தார்; மேலும் அவருடைய மாதவிடாய் குகையையும் காண்பித்தார்.

பாக்கு குமாரி பிஸ்தா
பாக்கு குமாரி பிஸ்தா – பலர் பேச மறுத்தனர், இவர் சிறிது தயங்கிய பின்னர், நம்மிடம் பேச தொடங்கினார். அவருடைய மாதவிடாய் குடிசையை காட்டினார்.

கேள்வி: உங்களின் வயது என்ன?
பதில்: 16

கே: பள்ளிக்குச் செல்கின்றீர்களா?
ப: இல்லை, 6 வயதிலிருந்து நின்றுவிட்டேன்

கே: ஏன் நின்றீர்கள்?
ப: ம்ம்ம்ம்ம்……..வீட்டு வேலை செய்ய வேண்டும்; எனவே நின்றுவிட்டேன்

கே: அம்மாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பள்ளிக்குச் செல்லவில்லையா?
ப: ஆம்

கே: சரி. என்ன வேலையெல்லாம் செய்கின்றீர்கள்
ப: புல் அறுப்பேன்; பாத்திரங்கள் கழுவுவேன், வீட்டைச் சுத்தம் செய்வேன்

கே: ஆக மாதவிடாய் காலங்களில் உன்னால் உன்னுடைய தாய்க்கு உதவ முடியாதில்லையா?
ப: ஆம்

கே: மாதவிடாய் காலங்களில் நீ வேலை செய்ய அனுமதிக்கப்படுவாயா?
ப: ஆம்

பாக்கு குமாரி பிஸ்தாவின் மாதவிடாய் குடிசை
பாக்கு குமாரி பிஸ்தாவின் மாதவிடாய் குடிசை

கே: வீட்டில் நுழைய அனுமதி உண்டா?
ப: இல்லை

கே: இது உன்னுடைய வீடு; அங்கே நுழைய அனுமதி மறுக்கப்படுவது தவறுதானே?
ப: தவறு தான்

கே: பிறகு வீட்டுக்குள்ளே செல்ல வேண்டியது தானே?
ப: நான் உள்ளே சென்றால் கெட்டது நடக்கும்!

கே: என்ன விதமான கெட்டது நடக்கும்?
ப: பாம்பு வரும், மேலும் ஏதாவது ஒரு கெட்ட செயல் நடக்கும்

கே: மற்ற சிறுமிகளும் இதே போலத்தான் இருக்கின்றார்களா?
ப: ஆம்

கே: இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறாயா?
ப: ஆம்

பெரும்பாலான பெண்கள் இந்த மூடப்பழக்கவழக்கத்தை விரும்பவில்லை என்றாலும் இது தங்கள்மேல் திணிக்கப்பட்ட ஒன்று என்பதாலும் இதற்கு மூலக்காரணம் மதம் சம்பந்தப்பட்ட ஒரு வகையான புனிதக் கருத்து என்பதாலும், மேலும் இதை மீறும் பட்சத்தில் குடும்ப உறுப்பினருக்கோ, உடைமைகளுக்கோ, ஊருக்கோ, ஏன் நாட்டுக்கே கூட இழப்புக்கள் கடுமையாக இருக்கும் என்ற பயம் காரணமாகவும் இதை வெளிப்படையாக எதிர்க்கும்  மனநிலையில் இவர்கள் இல்லை.

சமீலா புல் - மாதவிடாய் குடிசையில் மர்மமான முறையில் இறந்த சிறுமி
சமீலா புல் – மாதவிடாய் குடிசையில் மர்மமான முறையில் இறந்த சிறுமி

இந்தப் பயத்திற்கான சாட்சியாக அந்தக் கிராமத்தில் வாழும் யாக்கியராஜ்  புல் என்பவரின் மூத்த மகளான சமீலா புல் என்ற சிறுமியின் மரணம் உள்ளது. அவருடைய தாயார் இதுகுறித்துக் கூறுகையில் “ நாங்கள் மாதவிடாய் சமயங்களில் வீட்டிற்குள்ளேயே உறங்கினோம்; இதனால் என் கணவர் ஊராரால் கடுமையாகத் தூற்றப்பட்டு குடிப்பழக்கத்திற்கு ஆளானார். இதைக் கண்டு பயந்த என் மூத்த மகள் என்னிடம் “ அம்மா! நான் மாதவிடாய் காலங்களில் வெளியிலேயே படுத்துக்கொள்கிறேன்! இல்லாவிட்டால் ஊராரின் பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும்” என்று பிடிவாதமாகக் கூறி மாதவிடாய் குடிசைக்கு ஒரு நாள் இரவு சென்றுவிட்டாள். மறுநாள் காலை நான் அவளை எழுப்பச்சென்ற போது ஒரு கை வயிற்றைப் பிடித்தவண்ணம் குப்புறப் படுத்து கிடந்தாள்; இன்னொரு கையைத் தலைமேல் வைத்திருந்ததைப் பார்த்த போது அமைதியான ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பது போன்று தோன்றியது; ஆனால் நான் நீண்ட நேரம் அழைத்தும் அவள் எழுந்திருக்கவில்லை; எனவே சிறிது பதட்டத்துடன் சென்று அவளைத் நேராகத் திருப்ப முயற்சித்த போதுவாயில் நுரை தள்ளியிருந்தது கண்டு மீள முடியாத அதிர்ச்சியில் நொறுங்கி விட்டேன்.”…

சமீலா புல்லின் மாதவிடாய் குடிசை
சமீலா புல்லின் மாதவிடாய் குடிசை

இதுவரை அவர் எதனால் இறந்தார் என்பது தெரியவில்லை என்றாலும் அவளின் பெற்றோர் கூற்றுப்படி மிகவும் குளிராக இருந்ததால், காற்று புக முடியாமல் அந்த அறையை முழுவதுமாக மூடிவிட்டதால் மூச்சுத்திணறி இறந்திருக்கவேண்டும் என்று நம்புகின்றனர். யாக்கியராஜ் இந்த முறை தெளிவாக உள்ளார். இனிமேல் யாரையும் வீட்டை விட்டு வெளியே தங்க அனுமதிக்கப்போவதில்லை என்கிறார்; ஏனென்றால் அவருக்கு இன்னும் 6 பெண் குழந்தைகள் உள்ளன.

நேபாள தினசரி செய்திகளில் வந்துள்ள தகவல்களின்படி பெரும்பாலானவர்கள் கடுங்குளிரினாலோ அல்லது பாம்புகடித்தோ இறப்பதாகவும், மேலும் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் தெரிகிறது. இதை முன்னிட்டே நேபாள அரசாங்கம் 2006ம் ஆண்டு “சாவ்பாடியை” ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றியது. நிறைய கிராமங்களில் “சாவ்பாடி” முறை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் கூட இன்னும் இந்த அவல நிலை தொடர்கிறது. சில இடங்களில் மாதவிடாய் குடிசை இடித்து நொறுக்கப்பட்ட பிறகும் தொடர்கிறது; இந்த நிலையில் பெண்களின் நிலை இன்னும் மோசமாக மாறுகின்றது; ஏனென்றால் உடைத்தெறியப்பட்ட மாதவிடாய் குடிசை மீண்டும் எழுப்பப்படவேண்டும் இல்லாவிடில் வெட்ட வெளியில் உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சரி! மீண்டும் சப்ரிதா போகட்டியிடம் வருவோம், தீண்டத்தகாதவராக அறியப்பட்டவர்; எப்படி மீண்டும் புனிதப்படுத்தப்படுகிறார்; இருக்கவே இருக்கின்றது இந்து மதத்தின் புனிதப்பசு…ஐந்தாம் நாள் முடிவில் சப்ரிதா குளிக்கவேண்டும்; அதோடன்றி தான் பயன்படுத்திய அத்தனை துணிகளையும் தானே துவைக்க வேண்டும்; பிறகு அவருடைய உறவினரோ அல்லது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்னி கழியாத பெண் ஒருவர் இந்து மதத்தில் புனிதமாக ஒன்றாகக் கருதப்படும் பசுவின் மூத்திரத்தை ஒரு டப்பாவில் பிடித்து அதை சப்ரிதா கைகளில் ஊற்ற, சப்ரிதா அதைப் பருகிவிட்டு தலையில் தெளித்துக் கொள்கிறார். பிறகு அந்தச் சிறுமி அவள் வீட்டையும் அடுத்ததாக சப்ரிதா துவைத்து வைத்த துணிகளின் மீதும் புனித மூத்திரத்தைத் தெளித்து தூய்மைப்படுத்துகிறாள். இனி அவள் புனிதமடைந்து வீட்டிற்குள் அன்று முதல் அனுமதிக்கப்படுகிறாள், அடுத்த மாதவிடாய் வரும் வரை…..

திருமணமாகாத பெண்ணைக்கொண்டு எடுத்துவரப்படும் மாட்டு மூத்திரத்தால் தூய்மைப்படுத்தும் முறை
5 நாட்களுக்கு பிறகு, திருமணமாகாத பெண்ணைக்கொண்டு எடுத்துவரப்படும் மாட்டு மூத்திரத்தை கொண்டு தூய்மைப்படுத்தும் முறை

 

மீண்டும் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்ய மாட்டு மூத்திரத்தை குடிக்க வேண்டும்.
மீண்டும் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்யவதற்கு மாட்டு மூத்திரத்தை குடித்து புனிதமான பின்பே வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

தொகுப்பு, தமிழாக்கம்: வரதன்.

தொடர்புடைய பதிவுகள்:

மதுரவாயல் – மீஞ்சூர் டாஸ்மாக் முற்றுகை – வீடியோ

2

 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் முற்றுகை – போலிஸ் தாக்குதல் வீடியோ:

சென்னை மதுரவாயில் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தில் போலிசின் தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே எட்டு தோழர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள். இந்த வீடியோவில் அந்தப் போராட்டத்தின் முழுமையான காட்சிகள் இடம்பெறுகின்றது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் நடந்த இந்த போராட்டத்தை இவ்வளவு பெரிய தாக்குதலுடன் ஒடுக்கிய போலிசின் நோக்கத்திலிருந்து பாசிச ஜெயா அரசின் டாஸ்மாக் வெறியைப் புரிந்து கொள்ளலாம்.

———————————————————————-

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் – நாப்பாளையம் டாஸ்மாக் முற்றுகை போராட்டம்!

சென்னை மதுரவாயிலைப் போலவே மீஞ்சூரில் நடந்த போராட்டத்தையும் போலிசு கொடூரமாக தாக்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அனைத்து குடும்பங்களும் டாஸ்மாக்கிற்கு ஆண்களை பலி கொடுத்திருக்கின்றன. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குறிப்பாக பெண்கள் தமது அனுபவங்களை யதார்த்தமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களை கலைத்து விட்டு அச்சுறுத்தும் பணியினை உள்ளூர் அ.தி.மு.கவினர் செய்கின்றனர். அப்படி ஒரு அ.தி.மு.க பிரமுகரின் நேர்காணலும் வீடியோவில் உள்ளது. இந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்யச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்களை தடுக்கும் போலிசின் காட்சிகளும் உள்ளன. முக்கியமாக டாஸ்மாக் மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களை போலிசு மிரட்டுகிறது.