Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 738

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

37

டிபிஐ-முற்றுகை-மாணவர்கள்-தோழர்கள் மீது-போலீசு-கொலைவெறி தாக்குதல்காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.

இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.

கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று  சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’  இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.

வரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் ! என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.

இந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் ! என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.

அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

தோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.

துணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.

அடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.

டிபிஐ-முற்றுகை-மாணவர்கள்-தோழர்கள் மீது-போலீசு-கொலைவெறி தாக்குதல்

குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.

துணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.

இந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.

தோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.

திருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ! ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.

தோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.  ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

____________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

படங்கள் உதவி நக்கீரன்

___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம்-2

15

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்!!

தமிழ்த்-தேசியம்“தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி”யைச் சுட்டி புதிய ஜனநாயகம் (ஏப்ரல், 2012) இதழில் எழுதியுள்ள கருத்துக்கள் சரியானவைதாம் என்பதை மணியரசனின் த.தே.த.க. (மே 115, 2012) ஏடு மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது.

மணியரசன் கட்சியினர் நம்பூதிரிபாடின் சீடர்கள்; அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள். நம்பூதிரிபாடு, அவர்களின் பேராசான் என்று பு.ஜ. கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போதும் அவர்கள் வாதம் புரிந்திருகிறார்கள்.

அரசியல்சித்தாந்த நிலைப்பாடு எடுப்பதிலும் சரி, வாதப் பிரதிவாதம் புரிவதிலும் சரி, எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலும் சரி “நம்பூதிரிபாடு பாணி” என்று ஒன்று உள்ளது. இதையும், மணியரசன் கும்பல் அந்தப் பாணியைத்தான் பின்பற்றுகிறது என்றும் முன்பே நாம் விளக்கிச் சொல்லியிருக்கிறோம்.

எந்தவொரு அரசியல்சித்தாந்தப் பிரச்சினையானாலும் அதிலுள்ள எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு, அவ்விரண்டின் குறைகளை விலாவாரியாக அலசி விட்டு, தன்னுடைய நிலை அவ்விரண்டும் அல்லவென்று வாதிடுவது, அதேசமயம் தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்காது அல்லது சந்தர்ப்பவாதமான நிலையெடுத்துக் கொண்டு நழுவிவிடுவது நம்பூதிரிபாடு பாணிகளில் ஒன்று. எடுத்துக்காட்டாக, காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதாவை எடுத்துக் கொண்டு, மதச்சார்பின்மை, புதிய பொருளாதாரக் கொள்கை போன்றவற்றில் இரண்டு கட்சிகளும் தவறான நிலைகொண்டிருக்கின்றன என்பதற்கான வாதங்களை மிகையாகவும், தன் நிலையைப் பற்றிப் பூசிமெழுகுவது; சந்தர்ப்பவாதமாகப் பேசி நடந்துகெள்வது.

மற்றொரு எடுத்துக்காட்டாக, தனது “புரட்சிப் பாதை” ரசியப் பாணியிலானதோ, சீனப் பாணியிலானதோ அல்ல, இந்தியப் பாணியிலானது என்று சொன்னாலும், அது என்ன என்பதைப் பருண்மையாக முன்வைக்காது நழுவிக்கொள்வது; நாடாளுமன்றச் சகதிக்குள் புரண்டுகொண்டே நாடாளுமன்றப் பாதையா, புரட்சிப் பாதையா என்பது குறித்துப் பூசிமெழுகுவது.

வாதப் பிரதிவாதங்களில் எதிர்த் தரப்பின் வாதங்கள்  நிலைகள் என்னவோ, அவற்றை எடுத்து வைத்து மறுப்பு வாதங்கள் புரியாது, அவற்றுக்குத் தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, எதிர்த் தரப்பினரின் வாதங்கள்  நிலைப்பாடுகள் அல்லாதவற்றை இட்டுக் கட்டிக் கற்பித்து  குறை கூறி வாதங்கள் புரிவது நம்பூதிரிபாடு பாணிகளில் மற்றொன்று.

கேட்கப்படும்  எழுப்பப்படும் கேள்விக்கு நேரடியான உரிய பதிலளிக்காமல், தன்னிடம் உள்ள தயார்நிலை பதிலுக்கு ஏற்பக் கேள்வியை மாற்றியமைத்துக் கொண்டு விளக்கமளிப்பது நம்பூதிரிபாடு பாணிகளில் இன்னொன்று.

இவ்வாறான நம்பூதிரிபாடு பாணிகளைப் பின்பற்றி, அதிமேதாவிகளைப் போலக் காட்டிக் கொண்டு தனது திருத்தல்வாதங்களை மணியரசன் கும்பல் நியாயப்படுத்துவதைத்தான் ஏப்ரல், 2012 புதிய ஜனநாயகம் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால், அக்கட்டுரை விமர்சனங்களுக்கு நம்பூதிரிபாடு பாணியிலேயே தமது சொந்த வியாக்கியானங்கள் அடிப்படையில், நம்முடையதல்லாத நிலைப்பாடுகளை  இட்டுக்கட்டி  வாதங்கள் புரிந்து, தமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்தியிருக்கிறது, மணியரசன் கும்பல்.

“நம்பூதிரிபாடின் தொப்புள் கொடி உறவினர்” என்றும் “நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சியில் குப்பை கொட்டியவர்கள்” என்றும் பு.ஜ. (ஏப்ரல் 2012) ஏட்டில் குறிப்பிட்டிருந்ததை, தனியே பிரித்து எடுத்து சொந்த வியாக்கியானம் கொடுத்து,நம்பூதிரிபாணியில் இட்டுக் கட்டி, இவை “பார்ப்பன உளவியல்” காரணமாக எழுதியவை என்று  சாடியிருக்கிறது, என வாதம் புரிகிறது மணியரசன் கும்பல்.

“அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது தர்க்கத்திற்குரிய பொருளோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ளாமல், விமர்சித்தவர்களின் பூர்வோத்தரம் பற்றிப் பேசுவது ம.க.இ.க.வின் வாடிக்கையாகி விட்டது. இது ஒருவகை உளவியலிலிருந்து வருகிறது. அது என்ன உளவியல்? பார்ப்பன உளவியல்! அரசியல் பிறப்பு, மனிதப்பிறப்பு போன்றவற்றை சுட்டிக் காட்டாமல் ம.க.இ.க.வால் விமர்சிக்க முடியாது” மணியரசனின் த.தே.த.க. (மே 115, 2012) ஏடு.

ஆனால், மணியரசன் கும்பல் வாதிடுவதைப்போல அதன் பூர்வேத்திரம் பற்றிப் பேசுவதற்காக “நம்பூதிரிபாடின் சீடர்கள்” என்றும் அவர்களின் “பேராசான் நம்பூதிரிபாடு” என்றும் புதிய ஜனநாயகம் ஏடு குறிப்பிடவில்லை.

“பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்பு வாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு, அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்”  என்றும்,

“நேர்மையிருந்தால், இங்கே நாங்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு உங்கள் பேராசான் நம்பூதிரிபாடு பாணியில் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்”(பு. ஜ., ஏப்ரல் 2012) என்றும் எழுதியிருந்தோம்.

இங்கே நம்பூதிரிபாட்டைக் குறித்து எழுதிய வாசகங்கள் அரசியல்ரீதியிலான கருத்துக்களைக் கொண்டவை தாமே தவிர, மணியரசன் கும்பலின் பூர்வோத்தரம் பற்றியது எதுவும் இல்லை.

இதைப் போலவே, “நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சியில் குப்பை கொட்டியவர்கள்” என்ற சொற்றொடரும் அதன் பூர்வோத்தரம் பற்றியது அல்ல. மேலும், போலி மார்க்சிஸ்டு கட்சியில் இருந்தபோது மணியரசனின் செயல்பாடுகள் பொதுவாக எவ்வாறு இருந்தன என்பதாகவும் பு.ஜ. கட்டுரை எழுதவில்லை. குறிப்பாக, தேசிய இனப் பிரச்சினையில் நக்சல்பாரிப் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது; அதற்கு மாறாக, தேசிய இன விடுதலைக்கு எதிரானதாகப் போலி மார்க்சிஸ்டுக் கட்சியின் நிலைப்பாடு  இருந்தபோதும், அப்போது அக்கட்சியிலிருந்த மணியரசன் கும்பல் அந்தத் திருத்தல்வாத நிலையை எதிர்க்கவில்லை; பின்னர் சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி என்ற முறையில் தெரிந்தெடுத்துக் கொண்ட அடையாள அரசியல்தான் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை என்றுதான் பு.ஜ. கட்டுரை கூறுகிறது.

“நக்சல்பாரிப் புரட்சிக் கட்சியின் தோற்ற காலத்திலிருந்தே இந்திய தேசியத்துக்கு எதிராகத் தேசிய இனங்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. அதனாலேயே தேசிய இனப் பிரச்சினை என்பது இனிமேலும் கிடையாது, முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது கட்சிப் பேராயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சி. அப்போதும் அந்தக் கட்சியில்தான் இன்றைய த.தே.பொ.க. தøலமை குப்பை கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகு வெவ்வேறு அவதாரமெடுத்து, தனது விரைவான சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி  ‘அடையாள அரசியல்’ என்ற முறையில் த.தே.பொ.க. தலைமை தெரிந்தெடுத்துக் கொண்டதுதான், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை. மற்றபடி தமிழ்த் தேசிய இனத்தின் மீது அதற்குள்ள பற்றினால் அல்ல.”

இவ்வாறு குறிப்பிட்ட அரசியல் நோக்கில் சொல்லப்பட்டதை நம்பூதிரி பாணியில் மணியரசனின் “பூர்வோத்தரம்” குறித்துக் கூறப்பட்டதாகத் திரித்துப் புரட்டி, பொதுவாக்கி போலி மார்க்சிஸ்ட் கட்சியில் குப்பை கொட்டிக் கொண்டிருந்ததையே வீரதீரச் சாதனையாகக் காட்டிச் சுயபுராணம் பாடியிருக்கிறது, மணியரசன் கும்பல். திருத்தல்வாதப் போலி மார்க்சிஸ்ட் கட்சியில் மணியரசன் போன்றவர்கள் மட்டும் புரட்சிப் போராளியாக விளங்கியதாகப் படம் காட்டுகிறது. சிங்கூர், நந்திகிராமில்கூட போலி மார்க்சிஸ்ட கட்சிக்காரர்கள் தாக்கப்பட்டார்கள்; ஓட்டுக்கட்சி அரசியல் காரணமாக மமதா கட்சியினரோடு மோதிக் கொல்லப்படுகிறார்கள்; வன்முறையில் ஈடுபடுவது, வன்முறைக்குப் பலியாவது, காயமுறுவது, கொல்லப்படுவது, கைது சிறை இவையெல்லாம் எந்த அரசியலுக்காக என்பதுதான் முக்கியம். திருத்தல்வாத, பிழைப்புவாத அரசியலுக்காகப் போராடி பலியானவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் மீண்டும் ஓட்டுக்கட்சி ஆதாயத்துக்காக அவர்கள் வேண்டுமானால் போற்றிக் கொள்ளலாம்; புரட்சி அரசியல்காரர்கள் அப்படிச் செய்வதில்லை.

தமிழ்த்-தேசியம்

பு.ஜ. கட்டுரை முன்வைக்கும் விமர்சனங்களில் உள்ள அரசியலை மூடிமறைத்து விட்டு, மணியரசன் மீதான விமர்சனங்களை மணியரசனின் “பூர்வோத்தரம்” குறித்துக் கூறப்பட்டதாகவும் தனிப்பட்ட தாக்குதலாகவும் வியாக்கியானம் செய்து, சுயபுராணம் பாடுவதோடு , விமர்சனங்களின் சாரத்தை முன்வைத்து வாதங்கள் புரிவதற்குப் பதில், “ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா?” என்ற பாணியில் ம.க.இ.க.வில் உள்ள இரு தோழர்களின் பிறப்பை அடிப்படையாக வைத்து அடுக்கடுக்கான அவதூறுகளை எழுதுகிறது, மணியரசன் கும்பல். மக்கள் திரள் அமைப்பாகட்டும், கட்சியாகட்டும் போராட்டக் களத்தில் யார் யார் என்ன பாத்திரம் வகிப்பது என்பதைத் தலைமையும் அணிகளும்தான் தீர்மானிக்கிறார்கள்; மணியரசன் கும்பலைப் போன்ற பெயர் பலகை அமைப்புகளில் வேண்டுமானால் தனிநபர் தீர்மானிக்கலாம். மேலும் ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் எதிலும் தனிநபர் அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ தலைமை எதுவுமில்லை. இதை அறிந்திருந்தும் பு.ஜ. கட்டுரையின் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியிலான பதிலளிக்க வக்கற்ற மணியரசன் கும்பல் நம்பூதிரிபாடு பாணியில் சொந்த வியாக்கியானம் செய்து, தனிநபர் தாக்குதலில் இறங்கி, வாதப் பிரதிவாதத்திற்காகத் திசை திருப்ப எத்தணிக்கிறது.

“பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே!” என்றும் “….. அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே” என்றும் பு.ஜ. கட்டுரையில் மணியரசனை விளித்திருப்பதாக மேற்கோள்களைக் “காட்டி” இவை பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வுதாழ்வு கற்பிப்பது; வர்ணாசிரம வழக்கப்படி யாரையும் பிறப்பிலிருந்து ஆராய்வது; பார்ப்பனப் பார்வை, பார்ப்பனக் குணம் என்று வாதங்கள் புரிகிறது, மணியரசன் கும்பல். முதலில் இந்த மேற்கோள்களை என்ன பொருளில் பு.ஜ. கட்டுரை எழுதியுள்ளது என்பதை மூடிமறைத்து, வெட்டிச் சுருக்கிக் காட்டப்பட்டுள்ளன.

“இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளாகவும் திரித்துக் காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்திய தேசிய இடதுசாரிகள்” (த.தே.த.க. மார்ச் 115, 2012) என்ற மணியரசன் கும்பலின் “சண்டப் பிரசண்ட ஆராய்ச்சி முடிவுகளை” எள்ளி நகையாடித்தான் “இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே!” என்று பு.ஜ. கட்டுரை அவரை விளித்துள்ளது.

“இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும்” அலசி ஆராய்ந்து முடிவுகள் கண்டதைப்போல நடிக்கும் மணியரசனுக்குள்ள குறுகிய இனவெறிப் பார்வையை விமர்சித்து விளிக்கும் பு.ஜ.வின் சொற்றொடரில் இருந்து முதல் பகுதியை வெட்டிவிட்டு மேற்கோள் காட்டி, சூத்திர வர்ணத்தில் பிறந்த மணியரசன் சிந்திக்கத் தகுதியற்ற நபர் என்று ஏளனம் செய்வதாகத் திரித்துக் கூப்பாடு போடுகிறது மணியரசன் கும்பல். இதிலிருந்து, “தமிழினம் உலகச் சிந்தனைகளின் ஊற்று என்பது பார்ப்பனத் திரிபுவாதிகளின் அறிவுக்கு எட்டாத ஒன்றுதான்” என்று பிரகடனம் செய்கிறது, மணியரசன் கும்பல். இதன் பொருள் என்ன? மணியரசன் குறித்துச் சொன்ன ஒரு விடயம் ஒட்டுமொத்த தமிழினத்தையே குறித்துச் சொன்னதாக அல்லது மணியரசனே ஒட்டுமொத்த தமிழினமாகவும் உலகச் சிந்தனையின் ஊற்றாகவும் கருதும் ஆணவமும் தற்பெருமையும் தலைக்கனமும் தெரிகிறது. “தமிழினம் உலகச் சிந்தனைகளின் ஊற்று” என்ற மணியரசன் கும்பலின் கூற்று “பார்ப்பனத் திரிபுவாதிகளின் அறிவுக்கு எட்டாத ஒன்றாக” இருக்கட்டும்; ஆனால், பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் தம் வாழ்நாளெல்லாம் எதிர்த்துப் போராடிய பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியாருக்கு ஏற்புடையதுதானா, இல்லை, அவருக்குப் புரியாததனால்தான் அக்கருத்தை ஏற்கவில்லையா? எதிர்த்து நிராகரித்தாரா? பகுத்தறிவுக்கு மாறான, எதிரான இத்தகைய கூற்றுக்களை வைத்து மேதையாகவும் சிந்தனைச் சிற்பியாகவும் வேடம் போடும் காரணத்தால் மணியரசன் சிந்திக்கத் தகுதியற்றவராகிறார்; சூத்திர வர்ணத்தில் பிறந்தவர் என்பதற்காக அல்ல.

“பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே” என்று விளித்து பு.ஜ. கட்டுரையில் எழுதியதும் கூட அவரது பிறப்பு குறித்து எழுதியது அல்ல. அரசியல் ரீதியில் எழுதப்பட்டதுதான் என்பதைப் பின்வரும் அந்தப் பகுதி முழுமை  தெளிவுபடுத்தும்.”

“பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே! ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் வாழும் ஐந்து இலட்சம் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?”

தமிழ்த்-தேசியம்இங்கே மணியரசன் கும்பலை, மராட்டிய சிவசேனா இனவெறியர்களோடும், மேலை நாடுகளின் நிறவெறி பாசிஸ்டுகளோடும் ஒப்பிட்டு எழுதப்பட்டதுதான் “பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே!” என்று விளிக்கும் சொற்றொடர். ஆனால், “பாசிசக் கழிசடை அரசியல்” என்பது அவரது “கடைநிலைக் கழிசடைப் பிறப்பை ”சூத்திர வர்ணத்தைக் குறிக்கும் சொற்றொடர் என்று இட்டுக்கட்டி, திரித்துப் புரட்டி, தந்திரமாக வாதம் புரிகிறது, மணியரசன் கும்பல்.

இவ்வாறான வாதம் ஒன்றும் புதிதில்லை; தம் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் வரும்போதெல்லாம் அவற்றுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல் நழுவிக் கொள்வதற்கு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் கைக்கொள்ளும் தந்திரம் தான். தலித் என்பதால் ராஜாவும், பெண் என்பதால் ஜெயலலிதாவும், சாமானியன் என்பதால் கருணாநிதியும் தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக வாதங்கள் புரிவதில்லையா? அவ்வாறுதான் மணியரசன் கும்பலும் நடந்து கொள்கிறது. இந்த வகை அனுதாப அரசியலில் தஞ்சம் புகுந்து கொண்டு, இதன் மூலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான அவர்களது நிலைப்பாடுகள் மீதும், இவர்களுக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும் மேலைநாடுகளின் நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு என்றும், தேசிய இனப் பிரச்சினை உலக அளவில் முடிவுக்கு வந்துவிட்டதாக போலி மார்க்சிஸ்டு முடிவு செய்தபோது அதை எதிர்க்காது அக்கட்சியில் குப்பை கொட்டிக் கொண்டிருந்ததாகவும் பு.ஜ. கட்டுரை மணியரசன் கும்பலுக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவிக் கொள்கிறது.

அதேசமயம், “அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது தர்க்கத்திற்குரிய பொருளோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ளாமல், விமர்சித்தவர்களின் பூர்வோத்தரம் பற்றிப் பேசுவது ம.க.இ.க.வின் வாடிக்கையாகி விட்டது. இது ஒருவகை உளவியலிலிருந்து வருகிறது. அது என்ன உளவியல்? பார்ப்பன உளவியல்!” என்கிறது, மணியரசன் கும்பல். ஆனால், விமர்சித்தவர்களின் பூர்வோத்தரத்தை தேடும் பார்ப்பன உளவியல், பார்ப்பனக் குணம், பார்ப்பனப் பார்வை மணியரசன் கும்பலிடம் தான் உள்ளது என்பதை அவர்களின்  வாதங்களே காட்டுகின்றன.

பிறப்பால் பிராமண வகுப்பினர் என்று இரு ம.க.இ.க. தோழர்களின் பூர்வோத்தரம் பற்றிப் பேசி,  “இவர்கள் விரும்பியிருந்தால், தங்களின் பார்ப்பனக் குணத்தைக் கைவிட்டிருக்க முடியும். பார்ப்பனியத்தை எதிர்த்துப் பகட்டாகப் பேசி அந்தரங்கத்தில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்தி கொண்டவர்களே மேற்படியாளர்கள்” என்று கூறுகிறது, மணியரசன் கும்பல்.

மேலும், மக்களுக்கான அமைப்பில் பார்ப்பனர்கள் தலைமைப் பொறுப்பிலோ உறுப்பினர்களாகவோ இருப்பதற்கு மணியரசன் கும்பல் பின்வரும் ஒரு நிபந்தனை போடுவதாகக் கூறிக் கொள்கிறது: “பிறப்பின் வழியாகத் தங்களைத் தொடர்ந்து வரும் பார்ப்பனியத்தை நூற்றுக்கு நூறு கைவிட்டு விட்டதாக, அதை நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டவேண்டும்”

இதுவும் நம்பூதிரிபாடு பாணியில் மணியரசன் கும்பல் செய்யும் அரசியல் பித்தலாட்டம்தான். திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், “திருவையாறு தியாக பிரம்ம உற்சவம்” என்ற பெயரிலான தமிழ்த் தீண்டாமையை எதிர்த்த போராட்டம், தில்லையில் தமிழ்த் திருமுறைக்கான போராட்டம், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியின் சீடர்களுடனான மோதல், தஞ்சையில் நடந்த பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, விழுப்புரம் சாதி ஒழிப்பு  தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்று ம.க.இ.க.வின் மக்கள் பெருந்திரள் நடவடிக்கைகள் எல்லாம் வெறுமனே பார்ப்பனியத்தை எதிர்த்துப் பகட்டாகப் பேசியவைகளா? அல்லது அந்தரங்கத்தில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்தி என்று எதையாவது சான்று காட்ட முடியுமா?

இதற்கு மாறாக, மணியரசன் கும்பல் தொடர்ந்து  பார்ப்பனிய இந்துத்துவ நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதற்கு பல சான்றுகளை பு.ஜ.வின் ஏப்ரல் 2012 இதழில் எடுத்துக் காட்டியிருந்தோம். அவை எதையும் மணியரசன் கும்பல் மறுக்கவில்லை. அவை பற்றி வாய் திறக்காது நழுவிக் கொள்வதன் மூலம் பார்ப்பனியத்தை எதிர்த்துப் பகட்டாகப் பேசி அந்தரங்கத்தில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்தி கொண்டவர்கள் மணியரசன் கும்பல்தான் என்பதை ஒப்புக் கொள்கிறதா? அல்லது மணியரசன் கும்பலின் தலைமையில் உள்ள யாரேனும் பிறப்பால் பார்ப்பனராக இருந்து பார்ப்பனியத்தைக் கைவிடவில்லை என்பதாலா? அல்லது பிறப்பால் பார்ப்பனரல்லாதோராக இருந்தும் மணியரசன் போன்றவர்கள் பார்ப்பனியத்தை வரித்துக் கொண்டு பார்ப்பனியமயமாகி விட்டதாலா?

மக்களுக்கான அமைப்புகளில் பங்கேற்கும் பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை நூற்றுக்கு நூறு கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் மணியரசன், உண்மையில் விஜயகாந்தைக் கறுப்பு எம்.ஜி.ஆர். என்கிறார்களே, அதைப்போல இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள கறுப்புப் பார்ப்பனர். பார்ப்பனியத்தைத் தமதாக வரித்துக் கொண்டதோடு, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்டு கட்சியின் திருத்தல்வாதத்தையும் கைவிடாதவர்.

இந்தியாவை வேதங்களின் நாடு என்று கண்டு பிடிப்பு செய்த நம்பூதிரிபாடைத் தமது சித்தாந்த மூலவராகக் கொண்ட போலி மார்க்சிஸ்டு கட்சி ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதை உண்மையான மார்க்சியர்கள்  லெனினியர்கள், பகுத்தறிவாளர்கள் அறிவர். அந்தப் பார்ப்பனியக் கட்சியைத் தமது அரசியல் பிறப்பாகக் கொண்ட மணியரசன் கும்பல், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தவிர அந்தக் கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகள் எதையாவது கைவிட்டுள்ளதா? மார்க்சிசம்  லெனினிசத்தின் உயிராதாரமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிடுவது; சீனா, சோவியத் ஒன்றியம் போன்ற முன்னாள் சோசலிச நாடுகள் பற்றிய மதிப்பீடு, இந்திய சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பு ஆளும் வர்க்கங்களின் பற்றிய கணிப்பு ஆகிய அடிப்படை நிலைப்பாடுகளில் எல்லாம் அக்கட்சியுடன் உடன்பட்டுத் தானே நிற்கிறது!

தமிழ்த்-தேசியம்

இந்துமதம் என்பது உண்மையில் பார்ப்பன வர்ணாசிரம சனாதன மதம்; அதை ஒழிக்காமல் சாதியத்தை ஒழிக்கமுடியாது என்பதுதான் பெரியார், அம்பேத்கரின் நிலை. ஆனால், இந்துமதம் என்பது வெறும் கடவுள் நம்பிக்கை, புரட்சிக்குப் பின்னும் அது நீடிக்கும் என்கிறது மணியரசன் கும்பல். அதாவது தமது தாய்க் கட்சியான போலி மார்க்சிஸ்ட் கட்சியின் மிதவாத இந்துத்துவக் கொள்கையையே மணியரசன் கும்பல் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரே சமயத்தில், இந்துத்துவம் அதன் மூலம் இந்திய தேசியம், கூடவே குறுகிய தேசிய இனவெறி  பாசிசம் இரண்டும் இணைந்த தமிழக சிவசேனாவாக உருவெடுத்துள்ளது, மணியரசன் கும்பல்.

இவ்வாறு தானே பார்ப்பன சனாதன இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள மணியரசன் கும்பல், நாம் பார்ப்பனியத்தைக் கொண்டுள்ளதற்குச் சான்றாக நாம் சமூகநீதியின் உயிர்மூச்சான இடஒதுக்கீட்டையும் மண்டல் குழு அமலாக்கத்தையும் எதிர்ப்பதாக மணியரசன் கும்பல் புளுகுகிறது. சமூகநீதி, இடஒதுக்கீடு பிரச்சினைகளில் நமது நிலைப்பாடுகள் என்ன?

பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனரல்லாதோர் இயக்கம் என்று சொல்லிக் கொண்ட நீதிக் கட்சி காலத்தில் என்ன நடந்தது? இந்தியாவில் பிரித்தானியக் கிழக்கிந்திய ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, பிரித்தானிய அரசியின் நேரடி ஆட்சியில் அது பார்ப்பனருக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதைப் பார்த்த இங்கிருந்த வேளாள, முதலியார், நாயுடு, ரெட்டி, வொக்கிலிகா, கவுடா, நாயர் முதலிய ஆதிக்க சாதியினர் தாமும் வேதங்கள், வடமொழி, பரதம், கர்நாடக இசை கற்பது, பார்ப்பன சடங்கு சாத்திரங்களைப் பின்பற்றுவது என்று பார்ப்பனியமயமானார்கள். சைவ, வைணவ மடங்கள் கூட முழுமையாக பார்ப்பனமயமாகின. மேற்படி ஆதிக்க சாதிகளின் ஜமீன், மிட்டாமிராசு அதிகாரங்கள் “பிடுங்கப்பட்டு” முதலாளிய முறையிலான மையப்படுத்தப்பட்ட பிரித்தானிய காலனிய அரசு அமைப்புகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியர்களுக்கும் அவற்றின் பங்களிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மேற்படி ஆதிக்க சாதிகள் ஒரு தந்திரத்தை மேற்கொண்டார்கள். தாங்கள் சமூகரீதியிலும் கல்வி ரீதியில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சூத்திர வர்ணத்தினர் என்று கூறிக் கொண்டு, உண்மையைப் புரட்டி கல்வியிலும் அரசு வேலைகளிலும் தமக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்பட்ட நீதிக் கட்சியைத் தோற்றுவித்தனர். பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்பதைப் போல, தானே ஒடுக்கும் பிற சாதிகளுக்கும் இடஒதுக்கீடு கோரிக்கையைச் சேர்த்துக் கொண்டனர். நீதிக் கட்சி அமைச்சராக இருந்த முத்துசாமி கொண்டு வந்த “வகுப்புவாரி ஆணை” எனப்பட்ட “சமூக நீதிச் சட்டம்” மேற்படி ஆதிக்க சாதிகளுக்கான இடஒதுக்கீட்டையும் உள்ளடக்கியது. 1950களுக்குப் பிறகுதான் மேற்படி ஆதிக்க சாதிகளில் சில இடஒதுக்கீடு பெறுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டன.

சமூகத்தில், தமிழ்ச் சமூகத்தில்தான் சொல்கிறோம், ஒருபுறம் தாம் ஆண்ட பரம்பரை  சத்திரிய, வைசிய குலத்தவர் என்று உரிமைப் பாராட்டிக் கொண்டு, சாதிசமூக ஆதிக்கம் வகித்துப் பிற சாதியினரை அடக்கி ஒடுக்குவது; மறுபுறம் அரசு பதவிகளில் இடம் பிடிப்பதற்கான இடஒதுக்கீடு என்று வரும்போது தாமும் பின்தங்கிய, அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திர வர்ணத்தினர் என்று கூறிக் கொண்டு இரட்டை வேடம் போடுவது நடக்கின்றது. ஆதிக்க சாதியினர் இந்த இரட்டைவேடத்தை மூடிமறைத்துத் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை மக்களது ஆதரவைத் தம் சொந்த ஆதாயத்துக்குத் திரட்டிக் கொள்வதற்காக பார்ப்பனரல்லாதோர் என்று தம்மையும் உள்ளடக்கிய ஒரு பெரிய வளையத்தைப் போட்டு உள்ளே புகுந்து கொள்கின்றனர். இதற்கான ஆதாரமாக 1944 திராவிடர் கழகப் பிறப்பு மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையைக் காண்க. (டி.எம்.பார்த்தசாரதியின் “தி.மு.க. வரலாறு” நூல்)

மண்டல் கமிசன் அறிக்கைகூட இந்த சாதிகள்தாம் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவை, ஒடுக்கப்பட்டவை என்று எந்த ஆதார அடிப்படையிலும் பரிந்துரை வழங்கவில்லை; ஓட்டுக் கட்சிகள் தமது சமூக அடிப்படையாக, ஓட்டு வங்கியாக உள்ள சாதிகளைப் பரிந்துரை செய்ததை வைத்துத்தான் பல ஆதிக்க சாதிகளையும் உள்ளடக்கிப் பட்டியல் போட்டு இடஒதுக்கீடுக்கு தகுதியானவை என்று கூறுகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் மாற்றங்கள் வேண்டும் என்கிறோம். இது, தற்போதுள்ள இடஒதுக்கீடு ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்களது நிலைப்பாடுகளில் இருந்து மாறானதாக இருக்கிறது. ஆனால், இடஒதுக்கீட்டின் குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் நாம் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்று அவதூறு செய்கிறார்கள்.

தமிழ்த்-தேசியம்மேற்கண்ட நமது கருத்துக்களின் அடிப்படையில் நாட்டியிலேயே வேறு எந்த அமைப்பாலும் தனிநபராலும் முன்வைக்கப்படாத கருத்துக்களைக் கொண்ட ஆவணமாகிய நமது அமைப்பின் இடஒதுக்கீடு குறித்த நூலுக்கு சமூகநீதிப் போராளிகள், சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் யாரும் இன்றுவரை மறுமொழி கூறவே இல்லை. ஆனால், உலக சிந்தனைகளின் ஊற்றாகவுள்ள தமிழின மணியரசன், சமூகநிதியின் உயிர் மூச்சாக உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையை  ம.க.இ.க. எதிர்ப்பதாகத் தொடர்ந்து புளுகி வருகிறார்.

பெரியார் ஈ.வெ.ரா. “யார் சூத்திரன்?” என்ற ஒரு சிறுநூல் வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டுள்ள வரையறைகளின்படி இடஒதுக்கீட்டுத் தகுதியான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள  தற்போதுள்ள  சாதிகள் அனைத்திற்கும் பொருந்துமா? இவற்றில் எந்தெந்த சாதிகள் எப்படி சூத்திர வர்ண வழிவந்த சாதிகள் என்பதற்கான வரலாற்று, நிகழ்கால ஆய்வாதாரங்கள் ஏதாவது பெரியார் உட்பட சமூகபகுத்தறிவு சிந்தனையாளர்களால் எப்போதாவது முன் வைக்கப்பட்டிருக்கின்றனவா? அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாததால் சமூகத்தில் ஆதிக்க சாதிகளாக இருந்து கொண்டு, அரசுப் பதவிகளுக்காகத் தாமும் சூத்திர சாதியினர் என்று இடஒதுக்கீடும் அதிகாரமும் பெற்றுக் கொண்டு இரண்டு வகையிலும் சில சாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதைத்தான், இந்த ஆதிக்க சாதிகளுக்குத்தான் இடஒதுக்கீடு கூடாது; ஆதிக்க சாதி உணர்வோடு, பிற சாதிகளை ஒடுக்கும் செயல்களில் ஈடுபடும் சாதிகளுக்கு இடஒதுக்கீடும் கூடாது என்கிறோமே தவிர, உண்மையில் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்பதல்ல நமது நிலைப்பாடு. இடஒதுக்கீடு பிரச்சினையில் நாம் எழுப்பும் கேள்விகள், பிரச்சினைகளுக்கு நிலைப்பாடுகளுக்குத் தக்க பதிலளிக்கத் திராணியற்ற மணியரசன்களும் வீரமணிகளும் கருணாநிதிகளும் மேற்படி ஆதிக்கசாதிகளுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் வாதாடுகின்றனர். எதிர்த்தரப்பு நிலைப்பாடுகள் எல்லாவற்றுக்கும் பார்ப்பன முத்திரை குத்தியும், சதிசூழ்ச்சி என்று விளக்கமளித்தும் நழுவிக் கொள்ள எத்தணிக்கின்றனர்.

(தொடரும்)

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உருது முஸ்லிம்களின் மொழியா?

53

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 17

”வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத சலுகை உருது மொழிக்குக் கொடுக்கப்படுகிறது. இது கொடுமையிலும் கொடுமை. அப்படி என்ன சிறப்பிருக்கிறது அந்த மொழியில்? உருது மொழியைக் கற்பிக்க அரசு ஆசிரியர்களை நியமிக்கிறது. அதுவும் அந்த ஆசிரியர்கள் முசுலீமாகத்தான் இருக்க வேண்டும் என்பது இன்றைய நிலை. உருது தெரிந்த இந்து ஆசிரியர்களை நியமிப்பதில்லை. ஆகவே அரிய எழுத்து உள்ள உருது மொழிக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

வானொலியில் உருது மொழியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு முசுலீம்களை மட்டும் நியமிக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழி செய்தி வாசிப்பாளர்களிலும் முசுலீம்களுக்கு இடம் கொடுக்கப்படுகிறது… இதனுடைய ஆழத்தையும் அகலத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”

– ‘இந்து மக்களுக்கு உரிமையே கிடையாதா?’ இந்து முன்னணி வெளியீடு, பக்கம் – 21.

வளமான இலக்கண மரபும், செறிவான இலக்கியங்களையும் கொண்டுள்ள உருது மொழி, இந்த மதவெறியர்களின் முசுலீம் எதிர்ப்பு அரசியல் அட்டவணையில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. ஏனைய தேசிய மொழிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச, பெயரளவு சலுகைகள் கூட உருதுவுக்கு வழங்கப்படாததன் காரணமும் அதுவே. நடப்பிலிருக்கும் ஒன்றிரண்டு அற்பச் சலுகைகள் கூட தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. மதம் கடந்து சில கோடி மக்கள் பேசும் உருது மொழியை, முசுலீம்கள் பேசுகின்ற துரோகிகளின் மொழியாகச சித்தரித்து ஒழிக்கப் பாடுபடும் இந்துமத வெறியர்களின் முயற்சி இன்றல்ல, காலனிய ஆட்சி காலந்தொட்டே துவக்கப்பட்டது. இந்தியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதற்காக உருது மொழியை அழிக்கும் சதி அப்படித்தான் துவங்கியது.

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு இன்றைய இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை ஆண்டவர்கள் முகலாய மன்னர்கள். அவர்களின் ஆட்சி மொழியாகத் திகழ்ந்தது பாரசீகமாகும். அதனால்தான் அன்று பல்வேறு சமஸ்கிருத இலக்கியங்கள் பாரசீகத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. ஆள்வோரின் மொழி என்ற தகுதியில் பாரசீகம் மக்களிடையே மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. அப்படித்தான் வட இந்தியாவின் வட்டார வழக்கு மொழியோடு (இந்தியின் மூல வடிவம்) பாரசீகம் இணைந்து உருது மொழி தோன்றியது. மக்களிடையே பரவவும் ஆரம்பித்தது.

பின்னர் தோன்றிய பக்தி இயக்கம் காரணமாக உருது, மதங்கடந்து மக்களிடையே வேர்விட ஆரம்பித்தது. மொகலாயர்களின் இறுதிக் காலத்தில் தெற்கே தக்காணத்தில் ஆட்சி செய்த சுல்தான்களின் அரசவை மொழியாகவும் உயர்ந்தது. அதேபோன்று வட மாநிலங்களின் பல பகுதிகளில் உருதுவும் வட்டார வழக்கு மொழியும் இணைந்த இந்துஸ்தானியும் மிகவும் நெருக்கமான மொழிகளாகும். இன்றைக்கு உருது மொழியை ஒழிப்பதற்கு இந்து மதவெறியர்கள் மேற்கொள்ளும் முயற்சியினை அன்று  சமஸ்கிருதத்தை ஒழிப்பதற்கு முகலாயர்கள் மேற்கொள்ளவிலை. இருப்பினும் தமது சமூக, அரசியல் அந்தஸ்து குறைந்து போனதன் காரணமாக சனாதனிகள் முகலாயர் மேல் வெறுப்புக் கொண்டிருந்தனர். வெள்ளையர்களின் வரவு அவர்களின் வன்மம் நிறைவேற அடி எடுத்துக் கொடுத்தது.

காலனிய எதிர்ப்புப் போராட்டம் என்பது முசுலீம் எதிர்ப்பை உள்ளடக்கிய இந்து தேசியமாக இருந்தது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உகந்ததாக இருந்தது என்பதையும் இந்நூலில் பலமுறை பல பிரச்சினைகளுக்காகப் பார்த்திருக்கிறோம். அத்தகைய இந்து தேசியத்தின் பொது மொழியாக இந்தி வரவேண்டும் என்பதற்காக காங்கிரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். சனாதனிகள் ஆரம்பம் முதலே பாடுபட்டு வந்தனர். இவற்றின்  அடிப்படையில் உருது மற்றும் இந்துஸ்தானி மொழிகளைப் புறந்தள்ளும் வேலையும் தொடங்கியது. வெள்ளையர்களும் இதற்கு ஆதரவளித்தனர்.

1947 அதிகார மாற்றத்திற்குப் பின்னர், ‘தேசிய மொழி’ப் பிரச்சினை வந்தபோது ஆரம்பத்தில் உருது கலந்த இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பதாக நடித்த காங்கிரஸ் கும்பல், பின்னர் தேவநாகரி எழுத்திலமைந்த சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை ஆதரித்தது. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நகல் பற்றிய காங்கிரஸ் கட்சியின் வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாக 78 வாக்குகளும், இந்துஸ்தானிக்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. இப்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் மட்டுமல்ல, ஆரம்பம் முதலே காந்தி, நேரு கும்பலும் உடந்தையாக இருந்தனர்.

மேலும் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தி என்பது வட மாநிலங்களில் நிலவிய மைதிலி, அவதி, போஜ்புரி, கடி(ரி) போலி, மற்றும் இந்துஸ்தானி போன்ற பல்வேறு தனித்தனி மொழிகளை, வழக்குகளை அழித்து செரித்து உருவாக்கப்பட்டதாகும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் உருது கணக்கில் எடுக்கப்படவில்லை. இவ்வளவிற்கும் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். உருதுவுக்கென்று தனி மாநிலம் இல்லாததுபோல், கல்விக்கொள்கையிலும் உருது புறக்கணிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக உருது அறிவிக்கப்பட்டதும் இங்கே துரோகிகளின் மொழியாக அது சித்தரிக்கப்பட்டது.

1947-க்கு பிறகு உருது மொழி நீடிக்க வேண்டுமானால், ”தேவநாகரி வரி வடிவத்தை ஏற்க வேண்டும், உருதுவில் உள்ள பாரசீகச் சொற்கள் களையப்பட வேண்டும், உருதுக்கென உள்ள ஒலி அமைப்பின் கறார்த் தன்மை தளத்தப்பட்டு தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்” என்று இந்து மதவெறியர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். பார்ப்பனியச் சுத்திகரிப்பு நடந்த பிறகு உருது உருதுவாக இருக்க முடியுமா? திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழைத் தவிர ஏனைய மொழிகள் சமஸ்கிருத மயமாக்கப்பட்டது இப்படித்தான் என்ற வரலாறு அக்கேள்விக்கு விடையளிக்கிறது.

மேலும்  பாரசீகக் கலப்பு இல்லாத வட இந்திய மொழிகளே இல்லை என மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிருஜ் பாசா, கடிபோலி, மராத்தி  போன்றவை உருது – பாரசீக இலக்கணத்தை ஏற்றுக்கொண்ட மொழிகள்தான். எனவே பாரசீக கலப்பு என்று கூறி உருதுவைத் தூற்றுவது ஒரு மோசடி. மேலும் உருது ஒரு மதத்தினரின் மொழியாக மட்டும் இருக்கவில்லை. இந்து மதவெறியர்களால்தான் அப்படி ஆக்கப்பட்டு விட்டது. மிகச்சிறந்த உருது இலக்கியவாதிகளான தயாசங்கர், லல்லுலால், ராஜாசிவ சங்கர் பிரசாத், கிஷன்சந்தர் போன்றோர் ‘இந்துக்’ குடும்பத்தில் பிறந்தவர்களே. முன்னர் உருது வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்த ஜகன்னாத் ஆசாத் ஒரு ‘இந்து’தான். பல்வேறு கஜல் பாடகர்கள் உருதுக் கவிதைகளைப் பாடுகிறார்கள். வாஜ்பாயி உள்ளிட்டு பல வட இந்தியப்பேச்சாளர்கள் உருது மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தித் திரைப்படம் – பாடல் இரண்டிலும் உருது தவிர்க்க முடியாத மொழியாகத்தான் இருக்கிறது. உருது பொது மக்களின் மொழி என்பதற்கு இப்படிப் பல சான்றுகள் உண்டு.

இருப்பினும் வாழ்வின் பல தளங்களிலும் ஊடுருவிவிட்ட இந்து மதவெறி உருதுவைப் புறந்தள்ளுவதில் வெற்றி பெற்றவிட்டது. மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தச் சொன்னபோது வட மாநில முதலமைச்சர்கள் உருதுவை ஏற்கவில்லை. எட்டாவது அட்டவணையில் செத்த பாடையான சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட வேண்டும் எனக் குளிப்பாட்டியவர்கள், மக்கள் மொழியான உருதுவைத் தள்ளி வைத்தார்கள். இந்தி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் பல்வேறு தேசிய இன மொழிகளுக்கான உரிமைகளும், தகுதிகளும் மறுக்கப்பட்டன. இதில் முக்கியமான சேதாரம் உருதுவுக்கு நடத்தப்பட்டது. குறிப்பாக உருது தாய்மொழிக் கல்வி அழிக்கப்பட்டது.

‘இந்தி’யை பெரும்பான்மையினரின் மொழியாகக் காட்டுவதற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் மோசடிகள் நடத்தப்பட்டன. உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவரையெல்லாம் ‘இந்தி’ பேசுபவராக மாற்றினாரர்க்ள. 1981 கணக்கெடுப்பில் நடந்த இம்மோசடியை எதிர்த்து பல உருது எழுத்தாளர்கள் வழக்கு தொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றும் அலிகார் முசுலீம் பல்கலைக் கழகத்தைத் தவிர முழுமையான உருதுக் கல்வி எங்கும் கிடையாது. சில மதராஸாக்கள், முசுலீம் தன்னார்வக் குழுக்கள் போன்ற அரசு சாரா நிறுவனங்களின் மூலமே ஓரளவு உருதுக் கல்வி இருந்து வருகிறது.

இந்து மதவெறியரிடம் அடிமேல் அடிபட்டு நொந்திருந்த முசுலீம் மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும், (இங்கே பா.ஜ. கூட்டணியில் இருந்து கொண்டே உருது அகாதமியை கருணாநிதி அறிவித்ததுபோல) என்பதற்காக உ.பி. மாநிலத்தில் உருதுவை இரண்டாம் ஆட்சி மொழியாக காங்கிரஸ் கட்சியினரும், முலாயம் சிங் யாதவும் அறிவித்தனர். அதைச் சாக்கிட்டே இந்து மத வெறியர் பல கலவரங்களை நடத்தி எண்ணிறந்த முசுலீம்களைக் கொன்றனர்.  பெங்களூர் தொலைக்காட்சியில் 10 நிமிடம் உருதுச் செய்தியறிக்கை ஒளிபரப்பியதற்காக, காவிரியை முன்னிட்டு தமிழர்களை எதிர்த்து வந்த கன்னட இனவெறி இந்து வெறியாக மாற்றப்பட்டு கலவரம் நடந்து பல முசுலீம்கள் கொல்லப்பட்டனர்.

இப்படித்தான் வளமையும் பாரம்பரியமும் கொண்ட உருது மொழி ஒரு நூற்றாண்டு காலத்தில் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறது. உருதுவை முசுலீம் மொழியாக்கியது போல இந்து, முசுலீம், சீக்கியர் என அனைத்து பஞ்சாபியராலும் பேசப்பட்ட பஞ்சாபி மொழியை சீக்கிய மொழியாக்கியதும் இந்து மதவெறியர்களே. மக்கள் தொகை கணக்கெடுப்பில் பஞ்சாபி இந்துக்களை ‘இந்திதான் தாய்மொழி’ என அறிவிக்க வைத்தனர்; பஞ்சாபி மொழியின் வரிவடிவமான குர்முகியை நசுக்கி தேவநாகரியைப் புகுத்தினர். இவற்றின் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். அதேபோல காஷ்மீர் இந்துக்களின் தாய்மொழியாக இந்தியை அறிவிக்க வைத்து, காஷ்மீர் மொழி முசுலீம்களுக்கானது என மாற்ற முனைபவர்களும் இவர்கள்தான். காலனிய காலந்தொட்டே இந்தியைத் தேசிய மொழியாக்குவதற்கு இந்து மத வெறியர்கள் செய்த அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை.

எனவே பலகோடி மக்கள் பேசும் உருது மொழிக்கு உரிய தகுதிகள் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சலுகைகள் ஏதும் இல்லாமல் சாகடிக்கப்படும் நிலையில் கூட உருதுவுக்குரிய சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கோருவது கடைந்தெடுத்த கயவாளித்தனமாகும். அதிலும் உருதுமொழி செய்தி வாசிக்க முசுலீம்களுக்கு மட்டும் இடம் கொடுத்து, தமிழ் செய்தி வாசிப்பிலும் முசுலீம்களுக்கு இடம் கொடுக்கலாமா என இந்து முன்னணி கேட்கிறது. அதாவது தமிழர்களில் முசுலீம்கள் கிடையாது என்பதே அதன் சாரம். இந்தி எதிர்ப்பில் வீரம் செறிந்த தமிழ் மக்களின் போராட்டத்தையடுத்து, இங்கே இந்தி பருப்பு வேகாது எனத் தெரிந்து, தமிழ் மொழியே இந்து மொழிதான், தமிழர்கள் இந்துக்கள்தான் என்று காட்டி, முசுலீம்களுக்கு இங்கே இடமில்லை என்று – மொத்தத்தில் பார்ப்பனீயத்தின் இலக்கணத்திற்கு வரலாற்று ரீதியான ஒரு பொழிப்புரை எழுதப்படுகிறது.

பார்ப்பனீயத்தின் முடிவுரையை நாம் எழுதுவது எப்போது?

____________________________________________

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

மதுரவாயல் சிறுவன் பலி! போராடிய மக்கள் மீது தடியடி!

7

சென்னை பேக்கேஜிங் முதலாளியின் லாபத்திற்காக சிறுவன் பலி! போராடிய மக்கள் மீது தடியடி!

போராடிய மக்கள் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் தாக்குதல்!

மதுரவாயல்-பிரவீண்
பலியான சிறுவன் பிரவீண்

துரவாயல் ஏரிக்கரை பகுதி – அது எப்போதும் போலவே இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி. பெற்றோர்களெல்லாம் வேலையை விட்டு வீடுகளை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம் . குழந்தைகளோ இரண்டு நாள் விடுமுறை மகிழ்ச்சியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்படி விளையாட்டு மைதானத்தில் விளையடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரவீண் அருகில் சிறுவர்கள் விளையாடும் தெர்மாகோல் நிறுவனத்திற்கு பக்கத்தில் எப்போதும் போல நண்பனுடன்  விளையாடச் சென்றான். அவர்கள் செல்லும் போதும் அந்த சென்னை பேக்கேஜிங் என்ற  தெர்மாகோல் நிறுவனம் மிகவும் அமைதியாக இருந்தது.

அது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் சின்னம் என்பதோ தன்னுடைய உயிர் இங்குதான் போகப்போகிறது என்பதோ அவன் அறியவில்லை. ஓடிக்கொண்டே இருந்த அவன் கீழே கிடந்த தெர்மாகோல் மீது காலை வைத்தவுடன் “ அய்யோ” என்ற குரல் வீறிட்ட படியே அதனுள் விழுந்தான். அப்போது தான் தெரிந்தது, அது  நான்கு அடிக்கு இருபது அடி அகலம் ஆழமுள்ள அந்த நிறுவனத்தின் கழிவு நீர் தொட்டி; அது சுற்றுச்சுவர் இல்லாமல்  பார்ப்பதற்கு மண்ணோடு மண்ணாகவே எப்போதும் காட்சியளிக்கும் . பிரவீணோடு வந்த சிறுவன் அவர்கள் வீட்டில் போய் சொன்னவுடன் பெற்றோரும் அப்பகுதி மக்களும் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் 8 மணியளவிலே தாமதமாக வந்தார்கள். தீயணைப்புத் துறை ஊழியர்கள் வந்து கூறியபோது தான்  அம்மக்களுக்கே தெரிய வந்தது ” இந்த நிறுவனம் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த்தே அம்மக்களை கொல்வதற்குதான்” என்று. தெர்மாகோல் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் ரசாயனக்கழிவு என்பது அதிகபட்ச வெப்ப நிலையில் உள்ளதாகும். கம்பெனி சட்டப்படி அந்த ரசாயனக்கழிவை கண்டிப்பாக குளிரூட்டித்தான் கழிவு நீர் தொட்டியில் அனுப்ப வேண்டும் என்பதும், அந்த கழிவு நீர் தொட்டிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பதும் விதியாகும்.

தாமதமாக வந்த தீயணைப்புத்துறை கொதிக்கின்ற ரசாயனக்கழிவை கண்டவுடன் பயந்து போனது. முதலில் ரசாயனக்கழிவை வெளியேற்றி பின்னரும் தொடர்ந்து புகையாக வந்த்தால் தீயணைப்பு வீரர்கள் அச்சமடைந்தனர். பின்னர்  நீரை செலுத்தி அந்த இடத்தை குளிரூட்டிய பின்னரே அதில் இறங்கி சிறுவனை உடல் முழுக்க வெந்து போன நிலையில்  பிணமாக வெளிக் கொணர்ந்தனர்.

ஏற்கனவே ஆடுகளும் மாடுகளும் இந்த தொட்டியில் இறந்த போதும் பல முறை சென்னை பேக்கேஜிங் முதலாளி லோகநாதனிடம் முறையிட்ட போதும் அவர்  நிறுவனத்தை சுற்றி சுற்றுச்சுவரோ கழிவு நீர்த்தொட்டிக்கு சுற்றுச்சுவரோ அமைக்கவில்லை. இந்த நிலையில் இந்த சிறுவன் இறந்த பின்னர்  மதுரவாயல் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலாளிக்கு சேவை செய்யும் போலீசை கண்டித்தும் லோகநாதனை உடனே கைது செய்யக் கோரியும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை அப்பகுதி மக்கள் 400க்கும் மேற்பட்டவர்கள்  முற்றுகையிட்டனர்.

காவல்துறையோ “FIR போட்டாச்சு கிளம்புங்க” என்று கூற மக்களோ அந்த தெர்மாகோல் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும், அந்த முதலாளியை கைது செய்யவேண்டும், அதை துணை ஆணையர்  கைப்பட எழுதிக் கொடுக்க வேண்டும், போலீசை நம்ப முடியாது என்றும் அறிவித்தனர். இந்த நிலையில்  பகுதியில் செயல்படும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் சிதறிக்கிடந்த மக்களை ஒன்றுபடுத்தி மறியலை முறைப்படுத்தி ”கைது செய், கைது செய்,  லோகநாதனை கைது செய்” என்று முழக்கமிட்டனர். அந்த முழக்கம் மக்களின் முழக்கமானது.

துணை ஆணையரோ ”ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணியாச்சு, கம்பெனிய இழுத்து மூடுனா   மக்களுக்கு வேலையில்லாம போகும் , எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன் வாங்க” என்றார். மக்கள் அதை ஏற்க மறுத்து உறுதியாய் அந்த முதலாளியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

மதுரவாயல்-பிரவீண்-3

இதற்கிடையில் 23ம் தேதி மதியம்  3 மணிக்கு தொடங்கிய மறியல் 4.30 வரை நீடித்தது. அச்சாலையில் தொடங்கிய நெருக்கடி சென்னை முழுக்க சாலை நெருக்கடியானது.  பிரச்சினையை கேள்விப்பட்டு இணை ஆணையர் பகுதிக்கு வந்தார் “சென்னை முழுக்க டிராபிக் ஜாம், சிஎம்  ரூட்ல கூட டிராபிக், நான் பைபாஸ்ல தான் வந்தேன்” என்ற கூறியபடி உடனே லத்தி சார்ஜ்க்கு ஆணையிட அந்த இடத்தில் இருந்த மக்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்தது காவல்படை. மக்கள் சிதறி ஓடிய போதும் பு.மா.இ.மு தோழர்கள் உறுதி குலையாமல் முழக்கமிட்டபடி மக்களை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தார்கள்.

தோழர்கள் மீது  திட்டமிட்டு வெறித்தாக்குதல் நடத்தி அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்ற காவல்துறை முயன்றது. குண்டாந் தடிகளால் தாக்கிய போதும் யாரையும் வாகனத்தில் ஏற்ற முடியவில்லை,   “எங்களுக்காக வந்தவர்களை ஏய்யா அடிக்குற” என்றகூறிய படி தோழர்களை காத்தார்கள் மக்கள். அவர்கள் மீது இரண்டாவது முறையாக தடியடி தாக்குதல் நடத்தப்பட்டது. தோழர்கள் ஐந்து பேர்களோடு பகுதி மக்கள் நால்வரும்  அடித்து துவம்சம் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள்.

அதுவரை அந்த முதலாளியை கைது செய்யாத போலீசு மக்கள் மீது தடியடி நடத்திய பின்னர், கணக்கு காட்டுவதற்காக அவனை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காவல்துறை அதிகாரிகள் அறையில்  தங்க வைத்து உறங்கவும் வைத்திருந்தது. குழந்தையை இழந்து போராடிய மக்கள் மீதும் அதற்கு ஆதரவாக போராடிய தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய போலீசு கொலைக்கு காரணமான முதலாளியை பத்திரமாக சிறையிலடைக்காமல் வெளியே அனுப்பி பாதுகாத்தது.

காவல் நிலையத்திற்கு வெளியே மக்களும் பகுதி தோழர்களும் கூடியதால்  கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் பின்னர் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தோழர்களை அப்பகுதி இளைஞர்கள் கட்டியணைத்து வாழ்த்தினர். “எங்க பிரச்சினைக்கு நீங்க வந்தீங்க, நாங்களாவது ஓடினோம், நீங்க நின்னு அடி வாங்குனீங்க” என்று அவர்கள் கூறியதற்கு தோழர்களோ “மக்கள் பிரச்சினைக்கு இப்படித்தான் போராட முடியும், போலீசு நீதிமன்றம் எப்பவுமே மக்களுக்காக இருந்ததில்லை”  என்பதை ஆழமாக பதிய வைத்தார்கள்.

மரணமடைந்த அச்சிறுவனின் தாய் “அந்த கம்பெனிக்கு காம்பவுண்ட் போடனும், அந்த முதலாளியை கைது செய்யணும், அப்படி எதுவும் நடக்கலைன்னா அந்த தொட்டியில விழுந்து நான் தற்கொலைதான் பண்ணிக்குவேன். எங்க பையன் மாதிரி யாரும் விழுந்து சாகக்கூடாது ”  என்றூ கதறினார். அந்த சிறுவனின் தந்தையோ  “என் பையன் இந்த சாலையில்தான் ஓடி விளையாடினான், இந்த மக்கள் தான் என் பையனை வளர்த்தாங்க , அவங்கதான் சாலையை மறிச்சாங்க , போலீஸ் அந்த முதலாளியை கைது செய்யாம இருந்ததுதான் எல்லாவற்றுக்கும் காரணம், எங்களுக்காக போராய உங்களுக்கு ரொம்ப நன்றி” என்றபடியே  தழுதழுத்தார்.

மதுரவாயல்-பிரவீண்-2

உடல் முழுவதும் போலீசின் தாக்குதலால் துவண்டு போயிருந்த போதும்  லத்திக்கம்பினால் வீங்கிப்போயிருந்த தன் கால்களை தேய்த்து விட்டபடியே சக தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் ஒரு தோழர் “ போலீசு, நீதிமன்றம் யாருமே மக்களுக்காக இல்லை. எல்லாம் மக்களை சுரண்டுவதற்குத்தான் . இதைத்தான் மக்கள்கிட்ட சொல்லணும். மக்களுக்கு பிரச்சினைன்னா இப்படி உடனடியாக தலையிட வேண்டும். இதைத்தான் இந்த போராட்டம் கத்துக் கொடுக்குது” என்றார்.

இலாப நோக்கம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழும் முதலாளிகள் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. இதை போபால் விஷவாயுப் படுகொலை துவங்கி பலவற்றில் பார்த்திருக்கிறோம். அத்தகைய முதலாளித்துவ பயங்கரவாதம்தான் மதுரவாயிலில் ஒரு சிறுவனை பலிவாங்கியிருக்கிறது. இந்த அநீதியை  மக்கள் தட்டிக் கேட்டதும் போலீசு லத்தியோடு வந்து தடியடி செய்கிறது. எனில் இந்த அரசையும், போலீசையும், நாம் எந்த தருணத்திலும் நம்ப முடியாது.

தனிப்பட்ட முதலாளியின் படுகொலையை எதிர்த்து போராடிய அந்த மக்கள் விரைவிலேயே இத்தகைய முதலாளிகளை பாதுகாக்கும் இந்த அமைப்பு, அரசுகளையும் எதிர்த்து போராடுவார்கள். அன்று நாம் நமது சிறுவர்களை பலி கொடுக்க நேரிடாது.

_________________________________________________________

தகவல்: புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, சென்னை.    
_________________________________________________________________

டாஸ்மாக் கடையை மூடு! பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

9

டாஸ்மாக்

“டாஸ்மார்க் கடையை இழுத்து மூடுவோம்” என கடந்த 09/06/2012 அன்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதலை முன்னணி, சென்னைக் கிளை சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை உரையில் தோழர் சித்ரா பேசும் போது “பகுதிக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்காத இந்த அரசு வீதிக்கு வீதி டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்துள்ளது” என்றார்.

மாவட்ட செயலர் தோழர் உஷா பேசும் போது

“உழைக்கும் மக்கள் வசிக்கின்ற பகுதியிலேயே சாராயக் கடைகளை வைத்துள்ள இந்த அரசு ரேசன் கடைகளை மட்டும் பல கிலோமீட்டர் தள்ளி வைத்துள்ளது.  இரண்டு அரசு நடத்தும் கடைகள் தான். எது மக்களுக்கு நன்மை தரும் என்பதில் அரசு அக்கறை காட்டவில்லை.

அரசியல் அமைப்பு சாசனத்தில் அரசை நெறிப்படுத்தும் கொள்கையில் பிரிவு     47-ல் போதையூட்டும் பொருட்களை அரசு விற்க கூடாது என உள்ளது. ஆனால், அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்துகிறது.  உழைக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் காவல்துறையினரை குவிக்கின்றது.  இந்த அரசே சட்டத்தை மீறுகிறதே என்று அரசு அதிகாரிகளை இந்த காவல்துறை கைது செய்யுமா?  மேலும் அரசு மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற இலவசங்களை கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு மானியங்களை வழங்கி இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க வழி வகுக்கிறது.  இந்நாட்டின் வளங்களும், நம்முடைய வாழ்க்கையும் மறுகாலனியாதிக்க கொள்கைகளால் பறிபோவதை அறியா வண்ணம் மக்களை ஆளும்வர்க்கம் மக்களை போதையின் மயக்கத்தில் அடிமையாக வைத்திருக்கிறது” என பேசினார்.

 டாஸ்மாக்

பகுதி முழுவதும் சுவரொட்டிகள் மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப்பட்டன.  பெண்களும் குழந்தைகளும் 60 பேர் கலந்து கொண்டார்கள்.  ஆர்ப்பாட்டம் நடத்திய இடம், குரோம்பேட்டை ரயில் நிலையம் எதிரே என்பதாலும், பேருந்து நிலையம் அருகில் என்பதாலும் மக்களில் பலர் நின்று முழக்கங்களையும், உரையையும் கவனித்தார்கள். சிலர் இந்த போராட்டம் மிக முக்கியமான போராட்டம் என்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்கள். பகுதியில் சுவரொட்டி பார்த்து மக்களில் சிலர் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் செய்ய காவல்துறை தங்களால் ஆன எல்லா இழுத்தடிப்பு வேலைகளையும் கவனமாக செய்தார்கள். முதலில் அனுமதி கேட்ட போது காவல் நிலையத்தில் வேண்டுமென்றே பல மணிநேரம் உட்கார வைத்து பின்னர் அவரைப்பார், இவரைப்பார் என்று இழுத்தடித்தார்கள். அன்று புதுக்கோட்டை தேர்தலுக்காக ஜெயா அந்த இடத்தை கடந்து செல்கிறார் என்றும் நிறைய போலீஸ் படையை நிறுத்தியிருந்தார்கள்.  ஆர்ப்பாட்டம் நடந்த போதும் அருகில் இருந்த டாஸ்மாக் கடையை பாதுகாக்க காவல்துறை ஒரு பெரும் படையை நிறுத்தியிருந்தது. டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று தோழர்கள் முழக்கமிட்டதும், குவிந்திருந்த போலீஸ் படையை லத்தியை தூக்கிக் கொண்டு தோழர்களை சுற்றி வளைத்து தாக்குவது போல நின்றது. ஆனாலும் மக்கள் பங்கேற்புடனும், ஆதரவுடனும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

டாஸ்மாக்

_______________________________________________________

– பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்தியாவை ஆள்வது யார்?

10

obama-Manmohan-Singh-cartoon

வெளிநாட்டு தலையீடு என்ற பயம்  ஏன் உண்மை?

 “இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது”

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் என்பது உறுதியாகிவிட்டது.  அவருக்கு சாதகமான சூழல் ஏற்படும் வரை, ஒரே கண்ணாமூச்சி ஆட்டம்தான்.  அவர் சிறந்த அரசியல்வாதி என்பதற்காக அல்ல, எப்படியும் அவரை நிதித்துறையிலிருந்து மாற்றியே ஆக வேண்டும் என்பதற்காக இந்திய கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கினார்கள் என்பது பரவலான கருத்து.  ஏனென்றால், கறுப்புப்பண புழக்கத்தை சமாளிக்கும் முயற்சியில், சமீபத்திய நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) முன்தேதியிட்டு வரிவிதிப்பதும், பொது ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை (GAAR – GENERAL AGREEMENT ON ARMS REDUCTION) கட்டுப்படுத்துவதிலும், இவர் மிகவும் கறாராக இருந்தார். (இவரும் அம்பானி முதல் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுகாக செயல்படுபவர்தான். காங்கிரசுக் கட்சியும் இத்தகைய வர்க்கங்களின் பிரதிநிதிதான். ஆகவே இவர் கறாராக இருந்தார் என்று கட்டுரையாளர் சொல்வது பொருத்தமாக இல்லை, அதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் – வினவு).

ஆனால் உண்மையான நிர்ப்பந்தம் வெளிநாட்டிலிருந்து வந்தது என்றால் அதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.  இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது மேல்நாட்டு எசமானர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் மிகவும் விழிப்புடன் அறிந்து கொள்கின்றனர்.  நம் நாட்டு அரசியல் தலைவர்களும் கூட அதேபோல் மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர்.  பிரிட்டனும், நெதர்லாந்தும் வோடபோன் விஷ‌யத்தில் அதிகமான செல்வாக்கை பயன்படுத்தினர்.  நமது அரசியலை இந்த வெளிநாட்டு சக்திகள் எவ்வளவு தீர்மானிக்கிறது பாருங்கள்?

ஆட்சி அமைப்பு முறையில் தலையீடு!

நமது அரசியலமைப்பு முறையில் மிகுந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதற்கு சமீபத்திய சில நிகழ்வுகள் சாட்சியமாக உள்ளது.  சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன் தனது இந்திய பயணத்தின் போது ஈரானுடனான நமது வர்த்தகம் சம்பந்தமாக விதித்த நிபந்தனைகள், சில்லரை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கோரி அழுத்தம் தருவதாக அமைந்தது, தரம் மற்றும் ஏழ்மை அமைப்பு இந்தியாவைப் பற்றிய குறைந்த மதிப்பீடு, ஏர்செல்-மாக்சிஸ் உடனான வர்த்தக உறவு போன்றவற்றிலும் அந்நிய நிர்ப்பந்தம் சான்றாக நிற்கிறது.  மிகவும் வெளிப்படையாக தெரியாத பலவற்றில், இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவது, (பிரிட்டனின் ஈரோ பைட்டரை இந்தியா நிராகரித்ததில் பிரிட்டன் மிகவும் அதிர்ச்சி அடைந்தது) எண்ணை, எரிவாயு, அணுசக்தி போன்றவற்றில் அதிக முதலீடு, புதிய சந்தைகளை திறப்பது போன்றவற்றிலும் அந்நிய ஆதிக்கம் நிறையவே உள்ளது.

1987 லிருந்து போபர்ஸ் ஊழல் தொடர்ந்து இன்றுவரை நமது அரசியல் நிர்வாகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.  போபர்ஸ்-இந்தியா பீரங்கி ஊழலை விசாரித்து வந்த சுவீடனின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்டென் லிண்ட் ஸ்டார்ம், நேரு-காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பரான ஒட்டாவியோ குவாட்ரோச்சி, இந்த பீரங்கி பேரத்தில் கையூட்டு பெற்றவர்களில் ஒருவர் என்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளார்.  கடைசி நேரத்தில் இந்த பேரத்தை மாற்றியதில் அவரது பங்கு தெளிவானது.  கையூட்டு பெற்றதிலோ அல்லது அந்த பீரங்கிகள் நல்லவை என்பதிலோ எந்த அயயமும் இல்லை.  ஆனால் தெளிவுபடாத விபரம் என்னவெனில், யார் அந்த பணத்தை பெற்றது என்பதுதான்.

திரு குவாட்ரோச்சி காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை விட்டு தப்பி செல்ல அனுமதித்ததிலிருந்தே அவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த நண்பர்கள் இங்கு உள்ளார்கள் என்பது தெளிவாகிறது.  மத்திய புலனாய்வு துறை உள்ளிட்ட, பல்வேறு புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டே இந்த விசாரணையை சீரழித்ததால், இது சம்பந்தமாக வழக்கு மலேசியா, பிரிட்டன், அர்ஜென்டினா, நீதிமன்றங்களில் தோல்வியடைந்தது.  அவர் மீது பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு அறிக்கையை நமது காவல்துறை அமுல்படுத்த முடியவில்லை.  ஏனென்றால், அவர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாலும், நமது காவல்துறைக்கு மட்டும் “அகப்படவில்லை”.

மிகப்பெரிய இடத்திலிருந்தே இதை மூடி மறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதை சாட்சியங்கள் கூறுகிறது.  அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த திரு எம்.எஸ்.சோலங்கி ஒரு கூட்டத்தில் தான் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகத்திடம் கொடுத்த ரகசிய குறிப்பிலிருந்ததை வெளியே சொல்வதைக் காட்டிலும், தனது அமைச்சரவை பதவியை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  அந்த நேரத்தில்தான் போபர்ஸ் பேர ஊழலை இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர்.  ஒரு சாதாரண தலைவருக்கு இத்தகைய ஒரு அரசியல் தியாகமா?

ராஜிவ் காந்தி அந்த பணத்தை பெறவில்லை என்றால் வேறு யாருக்காக இந்த புலனாய்வை சீரழிக்க வேண்டும்?  இந்த கேள்விக்கான பதிலை அறிய வேண்டு மென்றால் புலனாய்வு அவசியம்.  இந்த கட்டுரை ஆசிரியர் ஒரு முறை பிரதமர் அலுவலகத்திலுள்ள ஒரு அமைச்சரை கறுப்புப்பணம் பற்றி பேட்டி கண்டபோது, அவர் இந்த போபர்ஸ் சம்பந்தமான கோப்புக்களை அன்றைய பிரதம மந்திரியிடம் கொண்டு சென்றதும், அந்த கோப்பை முடித்து விடாவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியதாக தெரிவித்தார்.  காங்கிரஸ் அல்லாத பிரதம மந்திரிகளும் போபர்ஸ் புலனாய்வை சரியான திசையில் கொண்டு செல்லவில்லை.  காங்கிரசை சார்ந்த பிரதமர்களோ உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

கையூட்டு என்பது உலகளவில் சாதாரணமாகிவிட்டது.  ஸ்வீடன் உலகளவில் மிகக் குறைந்த அளவிலேயே ஊழல் உள்ள நாடாக அறியப்படுகிறது.  ஆனால் அங்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு கையூட்டு கொடுத்து வருவது இந்த போபர்ஸ் விஷ‌யத்தில் வெளிவந்துவிட்டது.  அவர்களது நாட்டின் சட்டங்களின்படி கையூட்டு கொடுப்பது சட்ட விரோதமானது என்றாலும், அமெரிக்காவிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கையூட்டு கொடுப்பதை வழக்கமாக்கிவிட்டனர்.

சமீபத்தில் மெக்சிகோவில் காலூன்ற வால்மார்ட் கையூட்டு கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளது.  இதையறிந்த மேல்மட்ட நிர்வாகமோ, இதை பகிரங்கப்படுத்துவதில், உள்துறை விசாரணைக்கு மூடுவிழா செய்துவிட்டது.  இந்த வால்மார்ட்தான் இப்போது இந்தியாவில் நுழைய முயற்சிக்கிறது.  திருமதி கிளிண்டன் தனது சமீபத்திய இந்திய பயணத்தின் போது சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டுக்கு கதவை திறந்து விட வற்புறுத்தியுள்ளார்.  தனது விஜயத்தின் போது அவர் சந்தித்த ஒரே முதலமைச்சர் மேற்கு வங்காள செல்வி மம்தா பானர்ஜியை மட்டுமே.  ஏனென்றால் ஆளும் ஜனநாயக கூட்டணியில் அவர் ஒருவர் மட்டுமே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருபவர்.  இது 1990களில் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஹென்றி கிளிங்கர் மற்றும் பாதுகாப்பு, எரிபொருள்துறை செயலர்களும் என்ரான் நிறுவனம் இந்தியாவில் காலூன்ற மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டதை நினைவு கூறுகிறது.  இந்திய திட்டம் தீட்டுபவர்களுக்கு “கற்பிக்க” சுமார் 60 மில்லியன் டாலர் வரை செலவு செய்ய வேண்டியதாயிற்று என என்ரான் நிறுவனமே ஒத்துக்கொண்டதை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

இது ஏதோ ஒரு சில (பன்னாட்டு நிறுவனங்கள்) கார்ப்பரேட்டுகள் மட்டுமே இவ்வாறு பல்வேறு வகையில் கையூட்டு கொடுப்பதற்கும், தங்களது அரசுகளை வைத்து கொள்கை முடிவுகள் மீது தங்களது நோக்கத்தை திணிப்பதுமான செயலில் ஈடுபடவில்லை.  பன்னாட்டு வங்கிகள் கூட இந்தியாவிலிருந்து இந்திய மூலதனத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு வகையில் உதவுகின்றன.  அமெரிக்க மக்கள் ரகசிய வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள உதவிய மத்திய ஸ்விட்ஜர்லாந்து வங்கிக்கு அமெரிக்கா சுமார் 750 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால் இதை நன்கறிந்தும் ஸ்விஸ் யுபிஎஸ் வங்கி இந்தியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஒரு வேளை இங்குள்ள மிகவும் முக்கியமானவர்களுக்கு அது உதவியதற்கான பரிசோ என்னவோ?

பன்னாட்டு நிறுவனங்களிலேயே ஓரளவிற்கு நியாயமானது என்றும், இந்தியாவில் முக்கியமானது என்றும் கருதப்பட்ட சீமென்ஸ்-ன் அதிகாரிகளும் அர்ஜென்டினாவில் கையூட்டு கொடுத்ததற்காக அமெரிக்காவில் 2011 டிசம்பரில் தண்டிக்கப்பட்டனர்.  பின்னர் நடந்த புலனாய்வில் இந்த நிறுவனம், 2001 முதல் 2007 வரையிலான காலத்தில் வங்காளத்திலும், சீனா, ரஷ்யா, வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் 1.4 பில்லியன் டாலர் வரையில் சட்ட விரோதமாக கையூட்டு கொடுத்து வந்துள்ளது அம்பலமானது.  இது எப்போதும் தரகர்கள் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிறுவனம் உலகளவில் இவ்வாறு நிகழ்த்திய சட்டவிரோத கையூட்டுகளுக்காக அமெரிக்கா, ஜெர்மனி அரசுகளுக்கு 1.6 மில்லியன் டாலர்களை தண்டமாக மட்டுமே கட்டியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னரே இந்த சீமென்ஸ் மார்ஷ‌ல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கே முழுமையாக போகும் ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்த கையூட்டு யுக்தியை கடைபிடிக்க ஆரம்பித்தது.  இவ்வாறு தண்டிக்கப்பட்ட பின்னரே, இத்தகைய கையூட்டு நிகழ்வுகளை தடுத்திட (கம்ப்ளயன்ஸ் ஆபீசர்கள்) இணக்கமான அதிகாரிகளை நியமித்தது.  ஆனால் உலகில் கையூட்டு பெருமளவில் பெருகிவரும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டுமே நேர்மையாக இருந்திட முடியுமா? ஒப்பந்தத்தை கொடுப்பவர்களே கையூட்டை எதிர்பார்த்திருக்கும் போது கையூட்டின்றி எவ்வாறு ஒப்பந்தங்கள் பெற முடியும்?

ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படையான தன்மையில்லாத நிலையில் போபர்ஸ், 2ஜி அலைக்கற்றை போன்ற ஊழல் விவகாரத்தில் தீர்மானிக்க வெளியிலிருந்து ஊடுறுவல் இருக்கத்தான் செய்யும்.  வோடபோன் விஷ‌யம் முக்கியமானது.  பன்னாட்டு நிறுவனங்கள் (அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு) வரியில்லா சொர்க்கங்களை (நாடுகளை) வைத்து வரிவிதிப்பு கொள்கைகளை பயன்படுத்தி எவ்வாறு இந்தியாவில் வரி செலுத்தாமல் தப்பித்து வருகின்றன.  ஒரு நிறுவனம் யாருடையது என்பதையோ, அல்லது அது யாருக்கு பங்குகளை மாற்றுகிறது என்பதையோ அறிய முடியாத வகையில் புதிய வகை இணைய வலைகளை உண்டாக்கிக் கொண்டுள்ளார்கள்.  1985ல் மக்டோவல் வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு பகிர்ந்தது.  “வரிவிதிப்பு திட்டங்களில் வெவ்வேறான வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாதுஎந்த வகையிலாவது வரியை தவிர்க்க முடியும் என்ற எண்ணத்தை உற்சாகப்படுத்தவோ, அதை வரவேற்கவோ கூடாது“.  ஆனால் இந்த தீர்ப்பை 2003ல் மத்திய அரசு -எதிர்- ஆசாடி பச்சோ அந்தோலன் என்ற வழக்கு மொரிஷியஸ் வழியாக வர்த்தகம் செய்வதன் மூலம் வரியை தவிர்க்கலாம் என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம் முற்றாக திருப்பிப்போட்டது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வோடபோன் இந்தியாவிற்கு சொந்தமான மூலதன சொத்தை வரிவிதிப்பில்லாத மொரிஷியஸ் போன்ற நாட்டிற்கு மாற்றி- அதன் மூலம் இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய மூலதன சொத்தின் மீதான வரிவிதிப்பிற்கு எதிராக வாதாட முடிந்தது.  திருவாளர் முகர்ஜி தற்போது இழந்ததை மீட்க முயற்சிக்கின்றார்.

ஆதிக்க நலன்கள்

1950 களிலான பனிப்போர் காலம் தொட்டே இந்திய கொள்கை முடிவுகள் மீது அந்நிய ஆதிக்கம் இருந்து வருகிறது.  ஆனால் 1980 கள் வரை இத்தகைய போக்கு, இந்தியாவின் “நீண்டகால நலனுக்கு” உகந்தது என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.  ஜாகுவார் விமானங்கள் வாங்கும் போது ஒரு சலசலப்பு ஏற்பட்டது.  ஆனால் அது போபர்ஸ் ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.  1980களுக்குப் பின்னர் 1991 களில் அமுலுக்கு வந்த புதிய பொருளாதார கொள்கையோ, இந்திய-அமெரிக்க அணு கொள்கையோ, ஒரு புதிய பரிமாணத்தில் பகுதி நலன் அல்லது தனி நபர் நலன் அதி முக்கியத்துவம் பெறத் துவங்கியது.  இந்த போக்கு தேசிய அரசியலில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.  நெருக்கடி எதிர் நெருக்கடி என அரசியல் கட்சிகள் மூலமும், அவர்களது தரகர்கள் மூலமும், கார்ப்பரேட் முதலாளிகள் மூலமும், தாக்கம் அதிகமானது.

இதிலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால், இத்தகைய தாக்கங்கள் ஏற்படுத்தும் சேதாரங்களை தேசிய அரசியல் நடவடிக்கைகளால் சரி செய்ய இயலாது என்பதுதான்.  இந்த நிகழ்வுகளைப் பார்த்து பொதுமக்களோ, தற்போதைய  குடியரசுத்தலைவரை (ஜனாதிபதியை) தேர்ந்தெடுக்கும் வழிமுறையைப் பார்த்து அதிர்ச்சியில் விழித்திருப்பதைப் போல் விழித்திருப்பதைத் தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்?

_________________________________________________________________________________

(கட்டுரையாளர் திரு அருண் குமார்  பொருளாதார கல்வி மற்றும் திட்டமிடுதல் மையம்,
சமூக அறிவியல் பயிற்றகம், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்)

நன்றி–   தி ஹிந்து  நாளிதழ்

தமிழில்சித்ரகுப்தன்

_________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கறுப்புப் பணம்:அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! பாகம் -2

5
கறுப்புப்-பணம்-1

கறுப்புப்-பணம்-1

கறுப்புப் பணம் என்பது கட்டுக்கட்டாக சுவிஸ் வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அவற்றை அங்கிருந்து மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்து, ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைப் பிரித்துக் கொடுத்து வறுமையை ஒழித்து விடலாம் என்பது போலவும் ஊடகங்களால் ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது. கறுப்புப் பணம் பற்றி ஓயாமல் பேசப்பட்டு வருகிறது என்ற போதிலும், ஒரே ஒரு ரூபாய் கறுப்புப் பணத்தைக்கூட வெளிநாட்டு வங்கிகள் எதிலிருந்தும் இந்திய அரசு பறிமுதல் செய்ததில்லை.

வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பது யார்? “தெரியும், ஆனால் சொல்ல முடியாது” என்கிறார் பிரணாப் முகர்ஜி. தெரிந்தாலும் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்ய முடியாது என்பதே உண்மை நிலைமை. அந்தப் பணம் இந்தியாவில் சம்பாதிக்கப்பட்டது என்றும், அதற்கு வரி கட்டவில்லை என்றும் அரசாங்கத்தால் ஒருவேளை நிரூபிக்க முடிந்தால், அதற்கான வரித்தொகையை மட்டும் வசூல் செய்யலாம். அவ்வளவுதான்.

கறுப்புப்பணம் என்பது உலக முதலாளி வர்க்கம் கணக்கில் காட்டாமல் கள்ளத்தனமாக மறைத்து வைத்திருக்கும் மூலதனம். இந்தக் கள்ளத்தனத்தைச் சட்டபூர்வமானதாக ஆக்குவதற்காகவும், கறுப்பை வெள்ளையாகக் காட்டுவதற்காகவும், பல சொர்க்கத்தீவுகளை உலக முதலாளி வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. இத்தீவுகளின் அரசுகள்,  உலக முதலாளித்துவ வர்க்கம், தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் முடியரசுகள்.

அத்தீவுகளிலிருந்து நம் நாட்டுக்குள்ளும் இங்கிருந்து அங்கும் தாவியபடி இருக்கும் மூலதனம் அங்கிருக்கும்போது கறுப்பாகச் சித்தரிக்கப்படுகிறது. இங்கே வரும்போது வெள்ளையாகத் தோற்றமளிக்கிறது  என்று இக்கட்டுரையின் முதற்பகுதியை முடித்திருந்தோம்.

வரியில்லா சொர்க்கங்களில் ஒன்றான கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ஹட்ச் டெலிகாம் நிறுவனத்தை வோடாபோன் நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எது கறுப்பு  எது வெள்ளை, எது வரி தவிர்ப்பு  எது வரி ஏய்ப்பு, எது இந்தியா  எது வெளிநாடு என்பன போன்ற  பல ‘தத்துவஞான‘ கேள்விகளுக்கான விடையைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

“ஹட்ச்-எஸ்ஸார் லிமிடெட்” என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின்  67% பங்குகளை சொந்தமாகக் கொண்டிருந்த “ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேசனல்” என்ற பன்னாட்டு நிறுவனம், அவை அனைத்தையும் ரூ.52,300 கோடி ரூபாய்க்கு வோடாபோன் என்ற இன்னொரு பன்னாட்டு நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டில் விற்றது. இந்த விற்பனையின் தொடர்ச்சியாக இந்தியாவில் இயங்கிவந்த ‘ஹட்ச் தொலைபேசி’, வோடாபோன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஹட்ச் நிறுவனத்தின் எல்லா இந்திய சொத்துகள் மீதான கட்டுப்பாடும் வோடாபோன் நிறுவனத்தின் கைக்கு மாறியது.

ஹட்ச் நிறுவனம் இந்தியாவில் இருக்கின்ற தனது சொத்துகளை வோடாபோன் நிறுவனத்திற்கு விற்று இலாபம் பார்த்திருப்பதால், அந்த விற்பனையின் மீது 11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியை (capital gains tax) விதித்தது வருவாய்த்துறை. மேற்கூறிய தொகையைப் பிடித்தம் செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு வோடாபோன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது. வரியைக் கட்ட மறுத்த வோடபோன் நிறுவனம், இந்த சொத்து விற்பனை இந்தியாவுக்கு வெளியில் நடந்தது என்பதால், இதன் மீது வரி விதிக்க இந்திய வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லையென்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.

‘ஹட்சின்சன்எஸ்ஸார் என்ற இந்திய நிறுவனத்தின் 67% பங்குகளுக்கு உரிமையாளர், கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம். அந்த சி.ஜி.பி நிறுவனம், ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேஷனல் (கேமேன்) ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதுவும் கேமேன் தீவுகள் நாட்டைச் சேர்ந்தது. தற்போதைய விற்பனையில் கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. நிறுவனத்தின் சொத்துகளான பங்குகள், வோடாபோனுக்கு விற்கப்பட்டிருக்கின்றன. இந்த பங்கு விற்பனைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதன் மீது வரி விதிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு கிடையாது’ என்று வாதிட்டது வோடபோன் நிறுவனம்.

“பங்குகள் எந்த நாட்டின் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தாலும், இந்தப் பங்கு விற்பனையின் நோக்கம், மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதுதான். இந்த விற்பனை மூலம் கட்டுப்படுத்தப்படும் சொத்துகளும், தொழிலும் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதால், இங்கே வரியைக் கட்டத்தான் வேண்டும்” என்று செப். 2010இல் தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வோடபோன் நிறுவனம். காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் மனு சிங்வி, ஹரிஷ் சால்வே போன்ற கார்ப்பரேட் வழக்குரைஞர்கள், இலண்டனிலிருந்து வந்து இறங்கியிருந்த சர்வதேச சட்ட வல்லுநர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே வோடபோன் நிறுவனத்துக்காக வேலை செய்தனர்.

ஜனவரி 20, 2012 அன்று தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சு,  மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து வோடபோனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஹட்ச் நிறுவனத்துக்கும் வோடாபோனுக்கும் இடையிலான இந்தப் பரிவர்த்தனையின் நோக்கமே, இந்தியாவில் இருக்கும் ஹட்ச் டெலிகாமின் சொத்துகளையும் பங்குகளையும் அந்நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடு முழுவதையும் வோடாபோன் நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும்,  இந்தியாவில் உள்ள சொத்துகள் கைமாறுவதற்கும் கேமேன் தீவுகளில் பங்குகள் கைமாறியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றது உச்ச நீதிமன்றம்.

அது மட்டுமல்ல; கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது ஹோல்டிங் நிறுவனங்களையும், லெட்டர் பேடு நிறுவனங்களையும் டஜன் கணக்கில் உருவாக்குவதன் நோக்கமே வரி ஏய்ப்புதான் என்ற போதிலும், அவ்வாறு லெட்டர் பேடு நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்வதை, வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வ நடவடிக்கைதான் என்றும் கூறியது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

“இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு அந்நிய நேரடி மூலதனம் தவிர்க்கவியலாமல் தேவைப்படுகிறது. இந்தியாவுக்குள் வருகின்ற அந்நிய மூலதனம் என்பது அநேகமாக வரியில்லா சொர்க்கங்களான தீவுகள் வழியாகவும், இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation avoidance treaty) போட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகள் வழியாகவும்தான் வருகிறது. இவை இந்தியாவுக்குள் நுழையும் உலக வர்த்தகத்தின் முக்கியமான வழித்தடங்களாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கின்றன” என்று கூறியிருப்பதுடன், வோடாபோன் மீதான வரி விதிப்பை, ‘மூலதனத்தின் மீதான மரணதண்டனை’ என்றும் கண்டித்திருக்கிறார், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ராதாகிருஷ்ணன்.

கறுப்புப்-பணம்ரூ.11,200 கோடி வரிப்பணத்தை அரசிடமிருந்து பறித்து வோடபோன் நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இத்தீர்ப்பினை மேற்கோள் காட்டி, தாங்கள் ஏற்கெனவே வருமானவரித்துறைக்குக் கட்டியிருக்கும் சுமார் ரூ.40,000 கோடி வரிப்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டிருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். இந்த தீர்ப்பு தோற்றுவித்திருக்கும் உடனடி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, மீளாய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

“இந்த தேசம் சூறையாடப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இதை நாங்களே விசாரிக்கப்போகிறோம்’ என்று கறுப்புப் பணம் தொடர்பான வழக்கில் குமுறி வெடித்தது உச்ச நீதிமன்றம். அரசாங்கமோ “இது எங்க ஏரியா, உள்ளே வராதே!” என்று நீதிமன்றத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தது  அதெல்லாம் போன வருசம்! அவர்கள் வேறு நீதிபதிகள்!

இப்போது, “வரி தவிர்ப்பு என்பது மூலதனத்தின் அடிப்படை உரிமை என்றும், வரிவிதிப்பு என்பது மூலதனத்தின் மீதான மரணதண்டனை”  என்றும் (Capital Punishment on Capital Investment – Justice Radakrishnan)  வியாக்கியானம் செய்து வோடாபோனுக்கு வரிப்பணத்தைப் பிடுங்கிக் கொடுக்கிறது உச்ச நீதிமன்றம். “இந்தியா வரியில்லா சொர்க்கமல்ல, வருமான வரிச் சட்டத்தை முன்தேதியிட்டு திருத்தப்போகிறோம்” என்கிறது மத்திய அரசு  இது இந்த வருசம்! இவர்கள் வேறு நீதிபதிகள்!

ஆனால் அரசாங்கம் என்னவோ, அதே அரசாங்கம்தான். ஹட்ச், வோடாபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமது வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை எப்படி நடத்தி வந்தனர் என்பது பற்றி இதுவரை ஒன்றுமே அறியாமல் இருந்துவிட்டு, இப்போதுதான் கண்டுபிடித்துள்ளதைப் போலப் பேசுகிறது மே 20ஆம் தேதியன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான ‘வெள்ளை அறிக்கை’.

“மொரிசியஸ், கேமேன் தீவுகள், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் இருந்த பல லெட்டர் பேட் கம்பெனிகளைத் (Post Box Companies) தனது கிளை நிறுவனங்களாகக் காட்டி, அவை மூலம் 1992 முதல் 2006 வரை ஹட்சின்சன் குழுமம் இந்தியாவில் முதலீடு செய்தது. பின்னர் கேமேன் தீவுகளில் அந்நிறுவனம் வைத்திருந்த லெட்டர் பேட் கம்பெனி ஒன்றின் மூலமாக தனது இந்தியத் தொழில் முழுவதையும் வோடபோனுக்கு விற்றுவிட்டது” என்று கூறி கார்ப்பரேட் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதைப் போல நாடகமாடுகிறது, பிரணாப் முகர்ஜியின் வெள்ளை அறிக்கை. எதற்காக இந்த நாடகம்?

தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அரசு இழந்திருக்கும் 11,200 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதனாலும், வோடாபோன் வழக்கில் அரசு சந்தித்திருக்கும் இமாலயத் தோல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இந்த அரசு வைத்திருக்கும் கள்ளக் கூட்டை அம்பலப்படுத்திவிடும் என்பதனாலும்தான் இந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதைப் போல நடிக்கிறது அரசு.

“தங்கள் செயல்பாடுகளைக் கறுப்புப் பணத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது தங்கள் நிறுவனத்தையே கேவலப்படுத்துவதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார், வோடாபோன் நிறுவனத்தின் சி.இ.ஓ. விட்டோரியோ கொலாவ். வோடபோன் நிறுவனத்தின் வக்கீலான ஹரிஷ் சால்வே, மன்மோகன் சிங்கை சந்திக்கு இழுத்திருக்கிறார். “தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்து விட்டால், முன் தேதியிட்டு சட்டத்திருத்தம் ஏதும் கொண்டுவருவீர்களா?” என்று மன்மோகன் சிங்கிடம் கேட்டாராம் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன். “நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அரசு அமல்படுத்தும்” என்று அவருக்கு வாக்கு கொடுத்திருந்தாராம் மன்மோகன் சிங். “கேவலம் 11,200 கோடி ரூபாய்க்காக ஒரு பிரதமர் தான் கொடுத்த வாக்கை மீறலாமா? நம்முடைய தேசத்தைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்?” என்று துடிக்கிறார் ‘தேசபக்தர்’ சால்வே.

வோடாபோனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முடக்கும் விதத்தில் முன்தேதியிட்ட  சட்டமொன்றைக் கொண்டு வர முயன்றால், இந்திய அரசின் மீது வழக்கு தொடுத்து சர்வதேச தீர்ப்பாயத்திற்கு இழுப்போம் என்று கூறியிருக்கிறது வோடபோன் நிறுவனம்.

கறுப்புப் பணத்தையும் கார்ப்பரேட் மோசடியையும் நியாயப்படுத்தும் விதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதால், அதனைச் சரி செய்வதற்கு போராடிக் கொண்டிருப்பதைப் போன்றதொரு தோற்றத்தைக் காட்டி வருகிறது அரசு. அவ்வளவே!  வோடாபோன் தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்திப் பேசுவதில் தங்களையே விஞ்சி விட்டது குறித்து அலுவாலியாவும் சிதம்பரமும் மகிழ்ந்திருப்பார்கள் என்பதே உண்மை.

அவ்வப்போது சில நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையைக் கட்டுப்படுத்தும் விதத்திலான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்களெனினும், இந்தக் கொள்ளையை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பைத்தான் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன. வரி ஏய்ப்பு உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகள் அனைத்தையும் படிப்படியாகச் சட்டபூர்வமானவையாக்கி வருகின்றது  தாராளமயக் கொள்கை.

கறுப்புப்-பணம்

பிரணாப் முகர்ஜி வெளியிட்டிருக்கும் கறுப்புப் பணம் குறித்த வெள்ளையறிக்கை 2000 முதல் 2011 வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80% மொரிசியஸிலிருந்தும், 9.17% சிங்கப்பூரிலிருந்தும் வந்திருக்கின்றன என்ற உண்மையை இப்போதுதான் கண்டுபிடித்ததைப் போல குறிப்பிட்டிருப்பதுடன், இது இந்திய முதலாளிகளின் கறுப்புப் பணம், ஞானஸ்நானம் பெற்று வெள்ளைப் பணமாகவும், அந்நிய மூலதனமாகவும் இந்தியாவுக்குள் நுழைவதற்கான ஒரு கொல்லைப்புற வழியாகவும் மாறிவிட்டதாகக் கூறுகிறது.

மொரிசியஸ், கேமேன் தீவுகள்  உள்ளிட்ட பல வரியில்லா சொர்க்கங்களுடன், இந்திய அரசு இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதே, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்வதற்கும், கறுப்பை வெள்ளையாக்குவதற்குமான வாய்ப்பை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்காகத்தான்.

மொரிசியஸின் மக்கட்தொகை வெறும் 12 இலட்சம். இந்த சுண்டைக்காய் நாட்டில் இந்தியத் தரகு முதலாளிகள் முதலீடு செய்வதற்கோ, இலாபம் ஈட்டுவதற்கோ எதுவும் இல்லை. மேலும் அந்த நாடு, முதலீட்டு ஆதாய வரி உள்ளிட்ட வரிகள் ஏதும் இல்லாத வரியில்லா சொர்க்கம் என்பதால், அங்கே வரிவிலக்கு கோருவதற்கான தேவையும் இல்லை. ஆக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு இந்தியாவில் வரிவிலக்கு அளிக்கும் ஒரே நோக்கத்துக்காகத்தான் இந்த ஒப்பந்தமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மொரிசியஸ் தீவின் குடியிருப்போராக சான்றிதழ் பெற்று (Tax Residency Certificate), அதன் பின்னர் அங்கே ஒரு லெட்டர் பேடு கம்பெனியைத் தொடங்கி, அக்கம்பெனியின் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வந்தன பன்னாட்டு நிதி நிறுவனங்கள்.

கறுப்புப்-பணம்இந்த அநீதியைக் காணப் பொறுக்காத சில வருமான வரித்துறை அதிகாரிகள், மூலதன ஆதாய வரியையும், வரி செலுத்த தவறியதற்கான அபராதத்தையும் செலுத்துமாறு, 2000வது ஆண்டில் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்குத் தாக்கீது அனுப்பினர். மறுகணமே மும்பை பங்குச் சந்தை கிடுகிடுக்கத் தொடங்கியது. இந்தியாவிலிருந்து வெளியேறப்போவதாக அந்நிய முதலீட்டாளர்கள் அரசை அச்சுறுத்தினர். உடனே, அன்றைய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, “மொரிஷியஸில் பதிவு செய்த கம்பெனிகள் எவையும் இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை” என்று நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (Central Board of Direct Taxes) சார்பில் சுற்றிக்கை அனுப்பி, வரி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தினார்.

இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து ‘ஆசாதி பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தது. மேற்கூறிய சுற்றறிக்கை, “இந்திய வருமான வரிச்சட்டத்துக்கு எதிரானது என்றும், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது என்ற பெயரில் வரி ஏய்ப்பை ஊக்குவிப்பது” என்றும் கூறி, அதனை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

உடனே, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பா.ஜ.க. அரசு, “அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்க்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகளைக் கொடுத்தே  ஆகவேண்டும்” என்று வாதிட்டது. மேற்கூறிய இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை வரி ஏய்ப்பாகக் கருத முடியாது என்றும், அது வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வமான நடவடிக்கைதான் என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இதுவும் போதாதென்று, மார்ச் 2003 க்குப்பின் வாங்கி விற்கப்படும் பங்குகள், பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வதாக 2003-04 பட்ஜெட்டில் அறிவித்தார் யஷ்வந்த் சின்கா. 2004இல் ஆட்சிக்கு வந்தது காங்கிரசு.  பங்குப் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை முற்றிலுமாகவே ரத்து செய்வதாக அறிவித்தார், ப.சிதம்பரம்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சிறிய சிராய்ப்பு ஏற்படும் வகையில் ஒரு சிறிய நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும், உடுக்கை இழந்தவன் கை போல, விரைந்து சென்று இடுக்கண் களைந்த காங்கிரசும் பா.ஜ.க.வும்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராகச் சண்டமாருதம் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 4,5 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரித்தள்ளுபடிகளை வாரி வழங்கும் இந்த அரசுதான், வரியில்லா சொர்க்கங்களின் வழியாக நடத்தப்படும் மறைமுகமான வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு சட்டமியற்றப் போவதாகவும் கறுப்புப் பணத்தை முடக்கப் போவதாகவும் கூறி வருகின்றது.

(தொடரும்)

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அண்ணா ஹசாரே ஆட்டம் குளோசானது ஏன்?

39

உங்கள் நினைவுகளை ஓராண்டுகளுக்கு முன் இட்டுச் செல்லுங்கள். அன்றைக்கு தேசத்தின் அரசியல் அரங்கில் விவாதப் பொருட்களாக இருந்ததென்ன?  ஊடகங்கள் எதைப் பேசிக் கொண்டிருந்தன? அது ஊழல் ஒழிப்பின் காலமாய் இருந்தது. தேசத்தின் அரசியல் அரங்கில் அப்போது தான் ஒரு அவதாரம் பிறந்திருந்தது. அந்த அவதாரம் தான் நடுத்தர வர்க்கத்தினரின் கனவு நாயகனாய் வலம் வந்தார். அவரது குரலுக்கு தேசமெங்கும் பல்வேறு நகரங்களில் சில நூற்றுக்கணக்கான இளைஞர் பட்டாளம் திரண்டு வந்தது – அதை பல ஆயிரங்கள் என்று சிலர் கள்ளக் கணக்குக் காட்டியது தனிக்கதை. ஆனாலும்,  அவர் உறக்கத்திலிருந்த தேசத்தின் ஆன்மாவைப் பிடித்து உலுக்கி எழுப்பி விட்டதாக ஊடகங்கள் ஆரவாரத்துடன் அறிவித்தன.

அவர் தான் அண்ணா ஹசாரே.

அண்ணா-ஹசாரே

கடந்த ஆண்டு இதே மாதத்தில் அவரது புகழ்பெற்ற ஆகஸ்டு புரட்சிக்கான முன் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் ‘இதோ அடுத்த இரண்டு மாதங்களில் ஊழல் பூதம் புட்டிக்குள் அடைக்கப்பட்டு விடும்’ என்று தீர்க்கதரிசனங்களை உரைத்து வந்தன. இணையத்தின் சமூக வலைத்தளங்களில் ஐ.டி துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இருபத்தோராம் நூற்றாண்டின் காந்தியைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளில் சொக்கிப் போய்க் கிடந்தனர். ‘நானும் அண்ணா தான்’ குல்லாய் எங்கே கிடைக்கும் என்கிற விசாரிப்புகளாலும் பதில்களாலும் மின்னஞ்சல் பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

ஒரு தேவதூதனின் வருகையைப் போல் நிகழ்ந்தது அண்ணாவின் பிரவேசம். ஓரு தீர்க்கதரிசியின் காலடியில் அமர்ந்திருப்பதைப் போல் அவரது வார்த்தைகளுக்காக நடுத்தரவர்க்கத்தின் ஒரு பிரிவினர் காத்துக் கிடந்தனர். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்க கூட்டம் அல்ல என்றாலும், இவர்கள் தேசத்தின் கவனத்தை ஈர்த்தனர். மெழுகுவர்த்தி ஊர்வலங்களால் கடற்கரைகளையும் பூங்காக்களையும் வார இறுதிகளில் இவர்கள் மொய்த்தனர். இந்த வர்க்கத்தின் அபிலாஷைகளை பிரதிபலித்த ஊடகங்கள் – இது தான் மொத்த இந்தியாவின் உள்ளக்கிடக்கை என்று அறிவித்தன.

இதோ, ஒருவருடம் ஓடி விட்டது. இப்போது என்னவானார் அண்ணா ஹசாரே? அவரது கோரிக்கைகள் என்னவானது? அவருக்குக் கூடிய கூட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஊழலுக்கு எதிரான இந்தியா என்னவானது?  அதற்கு முன், அண்ணாவின் திக் விஜயம் நிகழ்ந்த சூழலைப் புரிந்து கொள்வோம்.

அது, உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சியின் வலி பரவிக் கொண்டிருந்த நேரம். பல்வேறு நாடுகளின் அரசுகளும் பொருளாதாரப் புதைகுழியில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தன. மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டுவது, சமூகக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்த மக்களின் சேமிப்பைத் திருடி நிதிச்சந்தையில் இறக்குவது, பொதுத்துறைகள் தனியார்மயமாக்கலின் விளைவாய் வேலையிழப்புகள் என்று வரிசையாக எடுக்கப்பட்ட ‘சீர்திருத்த’ நடவடிக்கைகளின் விளைவாய் மக்களின் ஆத்திரத்தை அரசாங்கங்கள் சம்பாதித்துக் கொண்டன. அதன் விளைவாய் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின.

அமெரிக்காவில் வால் வீதி ஆக்கிரமிப்புப் போராட்டம், லண்டனில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், கிரீஸ் மக்களின் போர்குணமிக்க போராட்டம், மத்திய கிழக்கு நாடுகளில் வண்ணப் புரட்சிகள் என்று உலகமே மக்கள் போராட்டங்களால் கொதிநிலையில் நின்றது. அதே நேரத்தில் தான் இந்தியாவில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் அம்பலமாகத் துவங்கியிருந்தன. 2ஜி அலைக்கற்றை ஊழலின் பிரம்மாண்டம் மக்களைத் திகைக்க வைத்திருந்தது. ஆங்கிலம் அறிந்த நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் புழங்கும் தேசிய ஊடகங்களின் ப்ரைம் டைம் ஸ்லாட்டுகளில் ஊழல் முறைகேடுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் கதைகளே நிறைத்திருந்தன.

பிற நாடுகளில் மக்களின் ஆத்திரம் அமைப்பாக்கப்படாமலும், தெளிவான அரசியல் புரிதல் இல்லாத தலைமைகளாலும் வழிகாட்டப்பட்டு அமைப்பு மாற்றம் என்பதை விடுத்து ஆட்சி மாற்றம் என்பதாக சுருங்கிக் கொண்டது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் இந்த அதிருப்தியுற்ற நிலையை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்பவராக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டவர் தான் அண்ணா ஹசாரே. அண்ணாவின் ‘ஆகஸ்டு புரட்சி’ மக்களை நம்பி நடத்தப்பட்டதோ இல்லையோ ஊடகங்களைப் பெரியளவில் சார்ந்திருந்தது. இப்படி ஒரு ‘இயக்கம்’ ஊடகங்களுக்கும் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்துக்கும் தேவையாய் இருந்தது.

ஊடகங்களைப் பொருத்தளவில், ஏற்கனவே போரடிக்கும் அளவுக்கு ஊழல் கதைகளைப் பேசியாகி விட்ட நிலையில் அதற்கு மேலும் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திச் செல்வதற்கு வெறும் முறைகேட்டுக் கதைகள் மட்டுமே போதுமானதாக இல்லை. திரைக்கதையில் வில்லனைப் பற்றிய இமேஜ் பில்டப் அளவுக்கு அதிகமாகி விட்ட நிலையில், கிளைமேக்ஸில் வில்லனைப் புரட்டியெடுக்கப் போகும் நாயகனை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டத்தில் இருந்தன.

ஆளும் வர்க்கத்துக்கோ, மக்களின் ஆத்திரமும் அதிருப்தியும் ஒட்டுமொத்த கட்டமைப்பையே குலைக்கும் விதமான அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ் செல்வதை விட, இருக்கும் சட்டகத்துக்குள்ளேயே அதற்கு ஒரு வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த இரண்டு தேவையையும் ஒரே நேரத்தில் கச்சிதமாகப் பூர்த்தி செய்தார் அண்ணா ஹசாரே.

அண்ணா முன்வைத்த ஊழல் ஒழிப்பு வழிமுறைகளின் அரைவேக்காட்டுத் தனம் பற்றி வினவில் ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. சுருக்கமாகச் சொன்னால், ஊழல் என்பதன் அடிப்படையைப் பற்றியோ, அதன் ஊற்றுமூலம் என்னவென்பதைப் பற்றியோ பேசாமல் ‘எல்லாத்துக்கும் காரணம் இந்தப் பாழாப் போன அரசியல்வாதிகள் தான்’ என்கிற எளிமையான, அபத்தமான பொதுமைப்படுத்தல்களும், அதற்குத் தீர்வாக கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கும் ஒரு வழிமுறையும் தான் அண்ணா ஹசாரேவிடம் இருந்தது. இதில் லஞ்சத்தையும் ஊழலையும் போட்டுக் குழப்பிக் கொண்டு பிரம்மாண்டமான ஊழல்களையும் சில்லறை லஞ்சத்தையும் ஒரே தராசில் நிறுத்தி பார்த்தார். வேறு வகையில் சொன்னால் ஜன்லோக்பால் என்பது போகாத ஊருக்கான வழி.

அதைக் கூட அரசு ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலை வந்த போது, “ஏதோ கொஞ்சம் மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க பாஸு” என்கிற அளவுக்கு இறங்கி வந்தனர். ஜன்லோக்பாலின் கேந்திரமான கோரிக்கைகள் எனப்பட்டவைகளை மாற்றிக் கொள்ளவும் கூட முன்வந்தனர். கடைசியில் எதையாவது நிறைவேற்றுங்கள் ஆனால், அதற்கு ஜன்லோக்பால் என்று பெயர் வையுங்கள் என்கிற அளவுக்கு இறங்கி வந்தும் அரசு இன்று வரை பிடி கொடுக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, இந்த குத்துப்பிடி சண்டையின் பக்கவிளைவாக நடந்தவைகள் சுவாரசியமானது.

அண்ணா குழுவினர் ஒருபக்கம் அரசை எதிர்த்து சண்டமாருதம் செய்து கொண்டிருக்கும் போதே அவர்கள் செய்த முறைகேடுகளை அரசு அம்பலப்படுத்தத் துவங்கியது. முதலில் மாட்டியவர் கிரண் பேடி.

நாடெங்கும் விமானத்தில் பறந்து கல்லூரி மாணவர்களிடையேயும் ஐ.டி துறை இளைஞர்களிடையேயும் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் மகோன்னதம் பற்றி பல அரங்கக் கூட்டங்களை நடத்தி வந்த கிரண் பேடி அந்தப் பயணங்களுக்காக ஏற்பாட்டாளர்களிடம் எக்ஸ்கியூட்டிவ் வகுப்புக்கான முழுத் தொகையையும் வசூலித்துக் கொண்டு சாதா வகுப்புச் சலுகைக் கட்டணத்தில் பயணித்துள்ளார் என்பது முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் நடத்தும், என்.ஜி.ஓ அமைப்பிற்கு பல்வேறு பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகள் நிதியுதவி செய்திருப்பதும் அம்பலமானது.

கிரண் பேடியைத் தொடர்ந்து, முகமூடியைத் தொலைத்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். அண்ணாவின் அழைப்பைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்குக் குவிந்த நிதியைப் பெருமளவில் தனது சொந்த என்.ஜி.ஓவின் கணக்கில் அரவிந்த் வரவு வைத்தது அம்பலமானது. அதைத் தொடர்ந்து, அவரது என்.ஜி.ஓ சில நிதி முறைகேடுகள் ஈடுபட்டிருக்கும் விவகாரமும் அம்பலமாகத் துவங்கியது. இவைகளின் உச்சகட்டமாக, அண்ணா ஹசாரேவின் மீது முன்பே இருந்த நிதி முறைகேட்டுப் புகார்களெல்லாம் ஆளும் வர்க்கத்தால் செல்ல மிரட்டலுக்காக தோண்டியெடுக்கப்பட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.

என்ன தான் மக்கள் எதிர்ப்புகளுக்கான ஒரு ஆபத்தில்லாத வடிகாலை ஆளும் வர்க்கம் அடையாளம் கண்டிருந்தாலும், இந்த ஆட்டத்திற்கென்றே உள்ள விதிகளையும் எல்லைகளையும் இவர்கள் கடந்து விடக்கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் உஷாராகவே நடந்து கொண்டது.

அண்ணாவின் ஆகஸ்டு போராட்டத்தை அடுத்து அவரது எந்தக் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் “ஆகட்டும் பார்க்கலாம்” பாணியில் அரசு கொடுத்த பதிலையே தமது வெற்றியாக அறிவித்துக் கொள்ளும் அவல நிலைக்கு அண்ணா குழுவினரும் அவர்களை ஊதிப் பெருக்கிக் காட்டிய ஊடகங்களும் தள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து ஜன்லோக்பால் மசோதாவை உலகிலேயே ஆழமான கிணறான இந்திய பாராளுமன்றத்துக்குள் தூக்கிப் போட்டு விட்டதால், வேறு வழியின்றி மீண்டும் ஒரு அறப்போராட்டத்தை டிசம்பர் மாதம் நடத்துவதாக அண்ணா அறிவித்தார். தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த முதல் அறப்போராட்டத்தைக் காட்டிலும் அதிகளவிலான கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் அதற்குப் பொருத்தமாக அண்ணா ஹசாரேவின் சொந்த மாநிலத்தையே போராட்டக் களமாக தேர்ந்தெடுத்தனர்.

சுமார் 50,000 பேரில் இருந்து ஒருலட்சம் பேர் வரை வரப்போகிறார்களென்றும் மும்பை நகரமே குலுங்கப் போவதாகவும் ஏகத்துக்கும் பில்டப் ஏற்றினர். அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்ய அர்விந்த் கேஜ்ரிவாலின் பின்னே இருந்த சகல விதமான என்.ஜி.ஒ வலைப்பின்னலையும் களமிறக்கி விட்டனர். மும்பை உண்ணாவிரதம் துவங்குவதற்கு சுமார் ஒருமாதம் முன்பிருந்தே ஊடகங்களிலும் இந்தத் தலைப்பு விவாதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒருலட்சம் பேர் வரையிலான கூட்டத்தை எதிர்பார்த்து, அத்தனை பேருக்குமான விரிவான மைதான ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டுக் காத்திருந்தனர்.

உடல் நிலை சரியில்லை, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற சிலபல சில்லறை சீன்களைத் தொடர்ந்து கடைசியில் உண்ணாவிரதத்திற்கு அண்ணா வந்தார் – ஆனால், மக்கள் வரவில்லை. வெறும் ஒரு சில நூறு பேர் மட்டுமே வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அதிலும் பெரும்பான்மையாக ரிடையர்டு ஆன சீனியர் சிட்டிசன்கள் தான் இருந்தனர். முகத்தில் அப்பிய கரியைத் துடைத்துக் கொண்டே மும்பை மைதானத்திலிருந்து கூடாரத்தைக் கலைத்தனர் அண்ணாவின் சீடர்கள்.

பாபா-ராம்தேவ்இதற்கிடையே அண்ணாவின் இயக்கத்துக்கு இணையாக சீன் காட்டிக் கொண்டிருந்தார் பாபா ராம்தேவ். ஏழு மலை ஏழு கடல் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஒரு குகைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் கருப்புப் பணத்தை அப்படியே லபக்கென்று கைப்பற்றி வந்து விட்டால் போதும் – நாடே சுபிக்ஷமாகி விடும் என்று அறிவித்து, அதற்கு ஒரு இயக்கமும் எடுத்தார். ஊழல் பிரச்சினையா, கருப்புப் பணம் பிரச்சினையா என்பதே விவாதம் என்று இவர்கள் வெளியே சொல்லிக் கொண்டாலும் ஊடக வெளிச்சத்தைக் கைப்பற்றுவது யார் என்பதே அதன் அடிநாதமாய் இருந்தது.

அண்ணா ஹசாரேவின் பின்னால் இருந்த என்.ஜி.ஓக்கள் அவருக்கு ஒருவிதமான அரசியலற்ற முகமூடியைக் கொடுத்திருந்தது – பாபா ராம்தேவோ வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் டவுசரை மாட்டிக் கொண்டு திரிந்தார். இன்றைய சூழலில் நவீன வலதுசாரி அரசியல் என்பதன் நேரடி வடிவம் அரசியலற்ற வாதமாக இருப்பதாலும், அதுவே நடுத்தர வர்க்கத்தைக் கவர்வதாக இருப்பதாலும் ஊடகங்களின் ஆதரவு பாபா ராம்தேவுக்குக் கிடைக்கவில்லை. இறுதியில் சுடிதார் மாட்டிக் கொண்டு எஸ்கேப்பானவர் அவ்வப்போது பாதுகாப்பான தொலைவில் நின்று கொண்டு குரைக்கும் பங்களா நாயாக மாறிப் போனார்.

இன்றோ முற்றிலும் அம்மணக்கட்டையாக அம்பலப்பட்டுப் போன பாபா ராம்தேவ், கருப்புப் பணத்தைக் இந்தியாவுக்குக் கொண்டு வர சரத்பவாரையும் முலாயம் சிங்கையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் ஜெயலலிதாவைக் கூட சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க அண்ணாவுக்கு திருட்டுக் கனெக்சன் புகழ் ரிலையன்ஸும் பெய்டு நுயூஸ் புகழ் டைம்ஸ் நவ்வும் துணையென்றால் கருப்புப் பணத்தை ஒழிக்க பாபா ராம்தேவுக்கு சரத்பவாரும் புரட்சித் தலைவியும் துணை.

இந்த கேலிக் கூத்துகளுக்கு இடையே அண்ணா ஹசாரே அறிவித்திருந்த நாடு தழுவிய எழுச்சி, நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம், தில்லி ராம்லீலா மைதானத்தில் தர்ணா என்று எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு செல்ப் எடுக்கவில்லை. இறுதியாக கடந்த மாத இறுதியில் தில்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை நடத்திப் பார்த்தார். அதுவும் கூட பெரியளவிலான தாக்கம் எதையும் உண்டாக்கவில்லை. ஏறக்குறைய ஜன்லோக்பால் செத்து பால் ஊற்றி புதைத்த இடத்தில் புல்முளைக்கவும் தொடங்கி விட்டது. இந்த முறை ஊடகங்கள் எழவு விசாரிக்கக் கூட வரவில்லை.

ஏன் இந்த வீழ்ச்சி? ஒரே வருடத்தில் அண்ணா ஹசாரே மலை உச்சியில் இருந்து படுபாதாளத்தில் வந்து விழுந்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கு முன் அண்ணாவின் தமிழக ‘ஜாக்கி’ ஜெயமோகன் என்ன சொல்கிறார்? – “அண்ணா ஹசாரேவை மக்கள் கைவிட்டு விட்டார்கள்” என்று பாதி உண்மையைச் சொல்கிறார். ஆனால், அதற்கு அறம் சார்ந்த போராட்டத்தை மக்கள் ஐயத்துடன் பார்ப்பது என்பதோடு அந்த ஐயத்துக்கு அறிவுஜீவிகளும் ஊடகங்களும் தான் காரணம் என்கிறார். இந்த விளக்கம் மட்டும் அர்னாப் கோஸ்வாமிக்குத் தெரிந்தால் நெஞ்சு வெடித்தே செத்துப் போவார்.

உண்மையில் ஊர் உலகத்துக்கு யார் என்றே தெரியாமல் மஹாராஷ்டிராவின் ஒரு கிராமத்தின் ஆலமரத்தடியில் சிவனேயென்று கிடந்த முகவரியில்லாத ஒரு பெரிசை இந்தளவுக்கு ஊதிப் பெருக்கி விட்டதே ஊடகங்கள் தான். அண்ணா ஹசாரேவின் ‘புகழ்’ உச்சியில் இருந்த போது தொலைக்காட்சி விவாத அரங்குகளில் அண்ணா ஹசாரேவின் மேல் சிறிய சந்தேகத்தையாவது யாராவது எழுப்பினால் அவரை “அப்ப நீயும் திருடன் தானே” என்கிற வகையில் தான் அவர்கள் கையாண்டனர்.

மக்கள் கைவிட்டு விட்டனர் என்பது தான் முழு உண்மை. மக்கள் கைவிட்டதன் பின்னால் அண்ணா விலைபோகாத சரக்கான பின் தான் ஊடகங்கள் கைவிட்டன. ஆனால், மக்கள் ஏன் கைவிட்டனர்? யார் இந்த மக்கள்?

இதில் தான் விஷயம் இருக்கிறது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் அதிகளவில் பங்கேற்றது மேட்டுக்குடி, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினர் தான். குறிப்பாக உலகமயமாக்கலின் விளைவாய் புதிதாக உருவெடுத்திருந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் தான் அண்ணா ஹசாரேவின் போராட்டங்களின் பின்னே அணிவகுத்தனர். ஆரம்ப காலத்தில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரல்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தங்களது இனிமையான வாழ்வின் இடையே வந்து போகும் வார இறுதிக் கொண்டாட்டங்களாகவே அவர்கள் அண்ணாவின் போராட்டங்களை எதிர் கொண்டார்கள். பெரும்பாலான பங்கேற்பாளர்களும், அலுவலக விடுமுறையின் போது மட்டுமே போராட்ட மைதானத்தில் தலைகாட்டினர். சில தனியார் நிறுவனங்களே அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் தங்கள் ஊழியர்கள் கலந்து கொள்ளும் விதமாக அதிகாரப்பூர்வமற்ற விடுமுறைகளை அளித்தன.

அண்ணா ஹசாரேவின் ஆரம்ப கால வெற்றிக்கும் அதைத் தொடர்ந்த தோல்விக்கும் இந்த பிரிவினரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வாழ்க்கையில் எதையுமே இழக்காமல், கொஞ்சமும் வலியை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு மாபெரும் சமூக நடவடிக்கையில் ஈடுபடும் போலி இன்பத்தையும் சுயதிருப்தியையும் வழங்கியதாலேயே அண்ணா ஹசாரே ஆரம்பத்தில் வெற்றியடைந்தார். ஆனால், இவர்களது வேகமான வாழ்க்கை முறையின் விதிப்படி ஆரம்பித்த எதுவும் உடனடியாக முடிந்து விடவேண்டும். அப்படி ஒரு முடிவுக்கு வராமல் ஜவ்வாக இழுத்துச் சென்று கொண்டிருந்தாதாலேயே இன்று அண்ணா ஹசாரே மண்ணைக் கவ்வியிருக்கிறார்.

இதைத் தான் நாங்கள் முன்பே சொன்னோம். அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்பது மேட்டுக்குடியினரின் பேஷன் பெரேடு. ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்குக் காரணமான ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆசீர்வாதத்தோடு நடக்கும் இந்த கேலிக் கூத்துகள் இறுதியில் நகைப்புக்கிடமான முறையில் ஒரு முடிவுக்கு வரும் என்றோம். இன்று அவ்வாறே நடந்தேறியுள்ளது. ஆனால் ஜெயமோகனுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. அகால மரணமடைந்த ஜன்லோக்பாலின் ஆவி சும்மா விடாது என்று பூச்சி காட்டுகிறார். அண்ணாவின் தோல்வி பற்றி குறிப்பிட்ட ஜெயமோகன், அதைத் தொடர்ந்து –

“அண்ணா தோற்றுவிட்டார். ஆனால் ஒரு காந்தியப்போராட்டம் நிகழ்ந்தவரை வெற்றியையே கொடுக்கும். இந்திய சாமானியனின் மனதில் ஊழலுக்கு எதிரான ஒரு எழுச்சியையும் உறுதிப்பாட்டையும் உருவாக்கியவரையில் அது வெற்றியே” என்கிறார்.

ஜெயமோகன் குறிப்பிடும் சாமானியன் வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் இந்திய நடுத்தர வர்க்கம் தான். இந்த வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாத வரை நிகழும் எந்த ‘சமூக நடவடிக்கைக்கும்’ இவர்கள் எப்போதும் தயார் தான். ஆனால், அண்ணா ஹசாரே என்பது இவர்கள் ஏற்கனவே மூன்று நான்கு முறை பார்த்து சலித்து விட்ட பழங்கஞ்சிப் படம். இவர்கள் மனம் கவரும் புத்தம் புதிய மசாலா ரிலீஸ் வரும் வரை காத்திருப்பார்கள்.

மற்றபடி, ஜெயமோகனின் அதே ‘சாமானியன்’ தான் சூதாட்டம் என்று தெரிந்துமே ஐ.பி.எல் போட்டிகளை பீர் வழியும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். மேட்ச் முடிந்த்தும் பேஸ்புக்கில் “Bloody its all fixing dude”  என்று ஸ்டேட்டஸ் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.

எச்சிலூறும் நொறுக்குத் தினியை நேசிக்கும் அளவு இவர்கள் அண்ணா ஹசாரேவையும் நேசிக்கிறார்கள். நொறுக்குத் தினியை முழுங்கிவிட்டு குளிர் பானம் குடித்து வயிறு நிரம்பிய பிறகு இவர்கள் நொறுக்குத் தீனியை மறந்து விடுவார்கள். அடுத்தது ஐஸ் கிரீமாக இருக்கலாம். அதன்படி பார்த்தால் அது அமீர் கானா? தெரியவில்லை. காத்திருப்போம்.

_____________________________________________________

– தமிழரசன்.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________

இணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா?

16

இணையம்-2

இந்த பதிவை எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

— இணைய இணைப்பு, வலை உலாவி (புரவுசர்) உங்கள் பக்கம்

— இணைய வழங்கி (சர்வர்), வேர்ட் பிரஸ் மென்பொருள் வினவு தளம் இயங்குவதற்கு.

— இந்தப் பதிவு பற்றிய விபரத்தை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் அல்லது தமிழ்மணம் திரட்டியில் பார்த்து வந்திருக்கலாம்

— கூகுள் தேடல் மூலமாக வந்து சேர்ந்திருக்கலாம்.

— இன்னும் சிலர் ஆர்எஸ்எஸ் ரீடர் மூலம் வந்து சேர்ந்திருக்கலாம்.

பதிவர் வலைப்பதிவை எழுதி வெளியிட, வாசகர்களுக்கு அது கொண்டு சேர்க்கப்பட, டுவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் எழுதப்படும் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு படிக்கத் தர உலகளாவிய ஒரு கட்டமைப்பு செயல்பட வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் இயக்குவது யார்? ‘முதலாளித்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள்’ என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

1970களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த 5 ஆண்டுகளில் பிரபலமடைந்திருக்கும் சமூக வலைத்தளங்கள் வரை அனைத்தையும் சாத்தியமாக்குவதும் இயக்குவதும் உலகளாவிய பெருந்திரளான மக்கள்தான்.

— இணையம் எந்த ஒரு நிறுவனத்துக்கும், அரசாங்கத்துக்கும் சொந்தமானதில்லை.

— இணையத்தில் தேடுதல் வசதி ஒற்றை நிறுவனத்தின் பணியினால் மட்டும் உருவானது இல்லை.

— சமூக வலைத்தளங்களின் செயல்பாடு அவற்றில் பங்கு பெறும் பயனர்களால்தான் சாத்தியமாகின்றன.

இணையத்தின் தகவல் தொடர்பு முறைமை

இணையம் என்பது கணினி வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். இதில் எந்த ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் மையமானது இல்லை. ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் துண்டித்துக் கொண்டாலும் மீதி இருக்கும் பகுதிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.  இதுதான் இணையத்தின் அடிப்படை வடிவமைப்பு கோட்பாடு. போர்க்காலத்தில் நாட்டின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், மற்ற பகுதிகள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 1970களில் உருவாக்கப்பட்டதுதான் இணையம்.

தொலைபேசி இணைப்புக்கும் இணைய இணைப்புக்கும் என்ன வேறுபாடு?

சென்னையிலிருந்து ஒருவர் நியுயார்க்குக்கு ஐஎஸ்டி இணைப்பில் பேசினால், சென்னையில் இருக்கும் தொலைபேசியிலிருந்து அவரது தொலைபேசி இணைப்பகத்துக்கு கம்பி வழியாக சிக்னல் போகும், தொலைபேசி இணைப்பகத்திலிருந்து ஸ்விட்சுகள் மூலமாக அமெரிக்காவின் தொலைபேசி சேவை வழங்கும் அமைப்புக்கு செயற்கைக் கோள் அல்லது கடல் அடி கம்பி வழியாக இணைப்பு ஏற்படுத்தப்படும், அமெரிக்க தொலைபேசி சேவை நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பகத்திலிருந்து நியூயார்க் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு கம்பி வழியாக இணைப்பு இருக்கும். இப்படி சென்னையில் இருக்கும் வீட்டிலிருந்து நியூயார்க்கில் இருக்கும் வீடு வரை நேரடியான ஒன்றுக்கொன்றான இணைப்பு மூலம்தான் தொலைபேசியில் பேச முடிகிறது. இந்த இணைப்புகளில் ஏதாவது ஒரு இடத்தில் தடை ஏற்பட்டாலும் இணைப்பு உடைபட்டு சேவை செயலிழந்து போய் விடும்.

மாறாக, ஒருவர் சென்னையில் இருக்கும் தனது கணினியின் இணைய இணைப்பு மூலம் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இணைய தளத்துடன் தகவல் பரிமாறிக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சென்னை பயனர், தனது இணைய சேவை நிறுவனத்தின் கணினி வலைப்பின்னலில் ஒரு பகுதியாக இணைந்திருப்பார். அந்த வலைப்பின்னல் உலகளாவிய இணையத்தில் இணைந்திருக்கும். கணினியில் இருந்து, அனுப்பப்படும் தகவல் சிறு சிறு பொதிகளாக (பேக்கட்டுகள்) பிரிக்கப்பட்டு, அனுப்பும் கணினி/பெறும் கணினி விபரங்கள் முகவரியாக இடப்பட்டு, அனுப்பப்படும். இதை Internet Protocol (IP) அல்லது இணைய முறைமை என்று அழைக்கிறார்கள்.

இந்த பொதிகள் அனைத்தும் ஒரே, நேரடி தடத்தில் அமெரிக்கா போய்ச் சேருவது இல்லை. ஒவ்வொரு பொதியும் நெரிசல் குறைவான தடங்களில் வலைப்பின்னல்களின் ஊடே பயணிக்கும். அத்தனை பொதிகளும் அமெரிக்க கணினிக்குப் போய்ச் சேர்ந்த பிறகு அவற்றை ஒன்று சேர்த்து அமெரிக்க கணினி தகவலை புரிந்து கொள்ளும். வழியில் ஏதாவது ஒரு தடம் உடைபட்டாலும் மாற்றுத் தடத்தில் பயணித்து இலக்கை அடைந்து விடுகின்றன பொதிகள்.

உதாரணமாக சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் தகவலின் சில பொதிகள் சிங்கப்பூர் வழி தடத்திலும் அதே தகவலின் இன்னும் சில பொதிகள் மும்பை வழியான தடத்திலும் பயணிப்பது சாத்தியம்தான்.

இணையம்-1

இப்படியாக, உலக கணினி வலையமைப்புகள் அனைத்தும் கை கோர்த்து நிற்பதன் மூலம் உருவாவதுதான் இணையம். யாரும் அதிகார மையத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த போக்குவரத்தை நிர்வகிப்பது இல்லை.

இணைய தளங்கள் செயல்பட்டுக்கான ஒருங்கிணைப்பு

இணையத்தின் தொழில்நுட்பங்கள், தகவல் கொள்கைகள், பயன்பாடு இவற்றை தினசரி நிர்வாகம் செய்யும் உலகளாவிய அமைப்பு எதுவும் கிடையாது. அந்தந்த பகுதி கணினி வலையமைப்புகள் தமக்கான கொள்கைகளையும் தொழில்நுட்ப வரையறைகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்டர்நெட் புரோட்டகால் முகவரி  (ஐபி அட்ரஸ்) மற்றும் இணையதள பெயர் சேவை (டிஎன்எஸ்) இரண்டையும் மட்டும் நெறிப்படுத்த ஐகான் என்ற கூட்டமைப்பும், இன்டர்நெட் புரோட்டகால் (ஐபி) என்பதை தரப்படுத்த ஐஈடிஎப் (இணைய பொறியியல் செயற் குழு) குழுமமும் பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு கூட்டுறவு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இணையதள முகவரி சொல்லும் சேவை

பயனர் ஒருவர் தனது வலை உலாவியில் இணைய தளத்தின் முகவரியை அடித்ததும், இணைய தளத்துக்கான ஐபி முகவரி என்ன என்பதை தெரிவிப்பது அந்த உறவு பற்றிய விபரங்களை சேமித்து வைத்திருக்கும் டிஎன்எஸ் அமைப்பு. இன்ன இணையதளத்துக்கு (உதாரணம் : வினவு.காம்) இன்ன இணைய முகவரி எண் (உதாரணம் : xxx.xxx.xxx.xxx) என்ற உறவு அந்தந்த வகை இணைய தள முகவரிக்கான (.com, .net, .org முதலியன) மூல வழங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.

நாம் இணைய இணைப்பு சேவை பெறும் நிறுவனங்கள் (பிஎஸ்என்எல், ஏர்டெல் போன்றவை) இணைய தள முகவரி<-> இணைய எண் முகவரி உறவுக்கான தரவுத் தளத்தை மூல வழங்கிகளிலிருந்து பெற்று தாமும் சேமித்து வைத்து கொள்ளலாம். இது போன்று டிஎன்எஸ் தரவுத் தளங்களின் ஆயிரக்கணக்கான பிரதிகள் உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. திறமையும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் கூட இலவசமாக சமூக உருவாக்கத்தில் கிடைக்கும் டிஎன்எஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இணையதள முகவரி விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை மூல வழங்கிகளின் சேவை தடைப்பட்டு போனாலும் இணையத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் நகல்களைப் பயன்படுத்தி இணையம் தொடர்ந்து இயங்கும்.

இணையம்-1

இணைய பக்கங்களின் தர வரிசை நிர்ணயம்

வலை தேடுதலை எடுத்துக் கொள்வோம். 1990களின் பிற்பகுதிகளில் ஒரு இணைய பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை வகைப்படுத்தும் தேடு எந்திரங்கள் செயல்பட ஆரம்பித்திருந்தன.

அந்த காலத்தில் இணைய தளங்களை குறிப்பிட்ட வகைகளின் கீழ் அட்டவணைப்படுத்தி வைப்பதுதான் யாஹூவின் அணுகுமுறையாக இருந்தது. இணைய தளம் நடத்தும் ஒருவர் (வினவு) யாஹூவின் தேடல் சேவைக்குப் போய் தனது தளத்தை சமர்ப்பிக்க வேண்டும். தளத்தை எந்த குறிச்சொல்லின் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கலாம். அதை யாஹூ ஊழியர் ஒருவர் பரிசீலித்து, குறிப்பிட்ட தேடுசொல் எத்தனை முறை தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மதிப்பிட்டு வினவு தளம் எந்த வகையின் கீழ் வரும் என்று முடிவு செய்து யாஹூ தரவுத் தளத்தில் சேர்த்து விடுவார்.

பயனர் ஒருவர் தேட வரும் போது, யாஹூவின் வகைப்பாடுகளை கிளிக்கிக் கொண்டே போய் தான் தேடும் வலைத்தளத்தைப் போய் அடையலாம்! ஆனால், இப்படி ஒரு வணிக நிறுவனமும், சில நூறு அல்லது சில ஆயிரம் ஊழியர்களும் சேர்ந்து வெகுவேகமாக வளர்ந்து வரும் வலைப் பக்கங்களை வகைப்படுத்தி தேடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியாது என்பது சீக்கிரமே தெரிய வந்தது. இந்த சிக்கலான உலகளாவிய பணிக்கு உலகளாவிய சமூக உழைப்பை ஈடுபடுத்த வேண்டியிருந்தது.

கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த செர்ஜி ப்ரின், லேரி பேஜ் என்ற ஆராய்ச்சி மாணவர்கள் இணைய பக்கங்களை வரிசைப்படுத்தும் சமூக அடிப்படையிலான முயற்சியை ஆரம்பித்தனர். இணைய பக்கங்களின் வரிசை மதிப்பை அவை மற்ற இணைய பக்கங்களுடன் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையில் தீர்மானிக்கும் உத்தியை அவர்கள் பரிந்துரைத்தனர்.

‘ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமான இணைய பக்கங்களை திரட்டி அவற்றுக்கு தரவரிசை அளித்து அந்த சொல்லைத் தேடுபவர்களுக்கு தரவரிசையின்படி பக்கங்களை காட்டலாம்’ என்ற அடிப்படையில் தரவரிசையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வரையறுத்தார்கள்.

ஒரு இணைய பக்கத்தின் தரவரிசையை யார் நிர்ணயிப்பார்கள்? மற்ற இணைய தளங்களும், தேடும் பயனர்களும்தான்.

1. ‘இணையம்’ என்ற குறிச்சொல் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ‘இணையம்’ என்ற குறிச்சொல்லுக்கு எதிராக அந்த கட்டுரையின் இணைய முகவரி (யுஆர்எல்) சேர்க்கப்பட்டு விடும்.

2. மற்ற இணைய தளங்களிலிருந்து அந்த கட்டுரைக்கு எத்தனை இணைப்புகள் (லிங்குகள்) கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அதன் தரவரிசை நிர்ணயிக்கப்படும். அதாவது, கட்டுரையின் தரவரிசை, அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பொறுத்து மட்டுமின்றி, மற்ற தளங்களிலிருந்து தரப்பட்டுள்ள இணைப்புகளையும் பொறுத்து உள்ளது.

3. அப்படி கொடுக்கப்பட்ட இணைப்புகளில் ‘இணையம்’ என்ற குறிச்சொலுக்கு எதிராக அதிக தரவரிசை மதிப்பீடு உடைய இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகள் அதிக மதிப்புடையனவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இத்தகைய அடிப்படையில் இணையத்தின் கோடிக்கணக்கான பக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டு தரவு தளத்தில் சேமிக்கப்படுகின்றன. ‘இணையம்’ என்ற சொல்லை தேடுபவருக்கு தர வரிசையின்படி பக்கங்கள் காண்பிக்கப்படுகின்றன.

4. ‘இணையம்’ என்ற சொல்லை தேடிய பயனர் குறிப்பிட்ட பக்கத்தை கிளிக் செய்து போனால், அவருடைய தேர்வு அந்த பக்கத்துக்கு கூடுதல் மதிப்பெண்களை ஈட்டித் தரும். இது போன்று ஆயிரக்கணக்கான பயனர்கள் தமது தேர்வுகள் மூலம் பக்க வரிசைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது தேடுதல் முடிவுகளின் பக்க வரிசை,

அ. பிற இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகளாலும்

ஆ. தேடுதல் சேவையை பயன்படுத்தும் பயனர்களாலும்

தீர்மானிக்கப்படுகின்றன.

இணையமும், இணைய தளங்களை தேடி தேவையான விபரங்களை பெறும் முயற்சியும் உலகம் முழுவதும் பரந்திருக்கும் மக்களின் கூட்டு முயற்சியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேடுதல் அமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி, இயக்கி, பராமரிக்கும் தேவையான பணியை வணிக நிறுவனங்கள் செய்கின்றன. ஆனால், பயனர்களும் இணையதள உருவாக்குனர்களும்தான் அது செயல்படுவதை சாத்தியமாக்குகிறார்கள். சமூகத்தின் கட்டமைப்பு முதலாளித்துவ அடிப்படையில் இருப்பதால் மட்டுமே முதலாளித்துவ நிறுவனங்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடுகின்றன.

கூகுளின் படங்கள் தேடும் சேவையை எடுத்துக் கொள்வோம்.

ஒரு புகைப்படம் அல்லது வரைபடத்தை எந்த குறிச்சொல்லுடன் இணைத்து வைப்பது? படத்தை தனது இணைய தளத்தில் இணைத்திருக்கும் நிறுவனம் அல்லது நபர் சில சொற்களை சேர்த்திருக்கலாம். ஆனால் அதை மட்டும் நம்பியிராமல் பரந்து பட்ட மக்களின் கணிப்பின் அடிப்படையில் படத் தேடலை உருவாக்க கூகுள் ‘பட குறிச்சொல்லிடுதல்‘ (இமேஜ் லேப்லர்) என்ற விளையாட்டை உருவாக்கியது. இரண்டு ஆட்டக் காரர்களுக்கு ஒரே படம் (சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் என்று வைத்துக் கொள்வோம்) காண்பிக்கப்படும். அவர்கள் இருவரும் வேறு எந்த வழியிலும் தகவல் பரிமாறிக் கொள்ள முடியாது. ‘அந்தப் படம் எந்தெந்த சொற்களை (சச்சின், டெண்டுல்கர், கிரிக்கெட், இந்தியா) குறிக்கிறது என்று எதிராளி ஊகிப்பார்’ என்று இருவரும் ஊகிக்க வேண்டும். எதிராளி ஊகித்த அதே சொல்லை உள்ளிட்டால் புள்ளிகளை ஈட்டலாம்.

அடுத்த 5 ஆண்டுகளில் பல ஆயிரக் கணக்கானோர் இந்த விளையாட்டை விளையாடியதன் மூலம் இலட்சக்கணக்கான படங்களுக்கு பொருத்தமான தேடுதல் சொற்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில்  மேம்படுத்தப்பட்டதுதான் கூகுளின் இன்றைய படத் தேடல் சேவை.

சமூக வலைத்தளங்களின் பொருளாதார அடிப்படை

பேஸ்புக், டுவிட்டர், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களின் மதிப்பை உருவாக்குவது அவற்றைப் பயன்படுத்தும் பயனர்கள்தான்.

1. கூகுள் நிறுவனம் வழங்கும் இணைய தேடுதல் சேவையின் முடிவுகள் காட்டப்படும் போது விளம்பரங்களும் தனியாக காட்டப்படுகின்றன.  பயனர் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்து விளம்பரதாரரின் தளத்துக்குப் போனால் கூகுள் விளம்பரதாரரிடமிருந்து வருமானம் ஈட்டுகிறது.

2. இந்த விளம்பரதாரர்களை தேடிப் பிடித்து விற்கும் பணியைக் கூட கூகுள் நிறுவன ஊழியர்கள் செய்ய வேண்டியதில்லை.

குறிப்பிட்ட தேடும் சொல்லுக்கு தமது விளம்பரத்தைக் காட்டுவதற்கு ஆயிரக்கணக்கான சிறு-நடுத்தர-பெரிய விளம்பரதாரர்கள் கூகுள் ஆட்வேர்ட்ஸ் மூலம் போட்டி போடுகிறார்கள். உதாரணமாக, ‘சென்னை வீடு வாடகைக்கு’ என்ற பதம் தேடப்படும் போது தனது விளம்பரம் காட்டப்பட ஒரு கிளிக்கிற்கு எவ்வளவு கட்டணம் தரத் தயார் என்று ஒருவர் தனது ஏலத் தொகையை சமர்ப்பிக்க வேண்டும். அதிக தொகை சொல்பவரின் விளம்பரம் முதலில் காட்டப்படும்.

3. இந்த விளம்பரங்களை காட்டுவதற்கான களத்தை விரிவாக்க புதிய புதிய சேவைகளுக்கான தளங்களை உருவாக்குகிறது கூகுள். ‘இலவசமாக’ வலைப்பதிவுகள், வீடியோ சேவை, புகைப்படங்கள் சேவை போன்றவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. ஒரு வலைப்பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்துக்குப் பொருத்தமான விளம்பரங்கள் (எழுப்பட்டிருக்கும் சொற்களின் அடிப்படையில்) அதன் பக்கங்களில் காட்டப்படுதற்கு விளம்பரதாரர்கள் போட்டி போடுவார்கள். அந்த விளம்பரங்களை கிளிக் செய்து போனால் அவர்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள்.

அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வலைப்பதிவர்களுடன், வீடியோ உருவாக்குனர்களுடன் பகிர்ந்து கொள்கிறது கூகுள். இதற்காக ஆட்சென்ஸ் என்ற திட்டத்தை நடத்துகிறது.

4. ‘இலவசமாக’ வழங்கும் மின்னஞ்சல் சேவையில், பயனருக்கு வந்திருக்கும் மின்னஞ்சலை படித்துப் பார்க்கும் கூகுளின் மென்பொருள் மூலம் அதில் இருக்கும் சொற்களுக்குப் பொருத்தமான விளம்பரங்கள் ஆட்வேர்ட்ஸ் மூலம் காண்பிக்கப்படுகின்றன. கிளிக்குகளுக்கு வரும் வருமானம் முழுமையாக கூகுளுக்குப் போய்ச் சேருகிறது.

இணையம்-3

கூகுளின் இந்த வணிக மாதிரியின் இன்னும் விரிவான வெற்றிகரமான செயல்பாடுதான் பேஸ்புக். ‘நெய்க்கு தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா’ என்று தர்க்கம் செய்த மாணவன், ‘பேஸ்புக்குக்கு பயனர்கள் ஆதாரமா, பயனர்களுக்கு பேஸ்புக் ஆதாரமா’ என்று கேட்டிருந்தால் பயனர்கள் இல்லாமல் பேஸ்புக் இல்லை என்று அறுதியாக சொல்லியிருப்பான்.

மைதானத்தில் பெரிய பந்தல் போட்டு, ஊரெங்கும் நோட்டிஸ் ஒட்டி பிரபலமாக்குவதுதான் பேஸ்புக்கின் வேலை. கூட்டம் சேர சேர பந்தலை விரிவுபடுத்துவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது இவைதான் தொடரும் அதன் பணிகள். கூட்டமாக சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். சிறு சிறு குழுக்களாக குழுமிக் கொள்கிறார்கள். ஒரு குழுவில் நடனம் நடக்கிறது, ஒரு குழுவினர் நாடகம் போடுகின்றனர், ஒருவர் பாட்டு பாடுகிறார், ஒருவர் உரையாற்றுகிறார், ஒருவர் சமையல் செய்கிறார், ஒருவர் குடிநீர் வழங்குகிறார். கூட்டத்தை நடத்துவது வந்திருக்கும் மக்கள்தான்.

அப்படி கூடும் மக்களுக்கு பொருட்களை விற்க கடை போட வருமாறு வணிகர்களை வரவழைத்து கட்டணம் வசூலித்து வருமானம் பார்ப்பதும் பேஸ்புக்கின் வேலைகளில் ஒன்று.

பயனர்களின் புகைப்படங்கள், கருத்துரைகள், தொடர்புகள் அனைத்தும் பேஸ்புக்குக்கு பணம் சம்பாதித்துத் தரும் கறவை மாடுகள்தான். பேஸ்புக்கில் சேர்க்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும், அதில் எழுதப்படும் ஒவ்வொரு கருத்துரையும், அதில் தொடங்கப்படும் ஒவ்வொரு விவாதக் குழுவும், அதில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு விளையாட்டும் பேஸ்புக்கின் விளம்பர சந்தையை விரிவாக்கி அதன் வருமானத்தை பெருக்குகின்றன. அந்த வருமானத்தில் ஒரு பகுதியின் மூலம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுபவைதான் அதன் சேவைகள்.

இப்படி தான் பராமரிக்கும் சேவையை பயன்படுத்துகின்ற பயனர்களை பொதிந்து விற்று சம்பாதித்ததுதான் பேஸ்புக்கின் சென்ற ஆண்டு வருமானமான 1 பில்லியன் டாலர் (சுமார் 5,000 கோடி ரூபாய்). அந்த வருமானத்தின் அடிப்படையில் நடக்கும் பங்குச் சந்தை சூதாட்டம்தான் பேஸ்புக் பங்குகளை வெளியிடும்போது தீர்மானிக்கப்பட்ட அதன் மதிப்பான 100 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்).

இணையமும் அதில் கிடைக்கும் ‘இலவச’ சேவைகளும் உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் தமது சமூக உழைப்பால் உருவாக்கும் சாத்தியங்கள்தான். அதே போல நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சேவைகளும் சமூக உழைப்பின் மூலமே நம்மை வந்தடைகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

_________________________________________

– அப்துல்

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!!

68
ஈவ்-டீசிங்

ஈவ்-டீசிங்

சென்னையிலதான் வாழணும்னு ஆனதக்கு பிறகு நிறையவே என்ன மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எங்க பாத்தாலும் அலமோதுர கூட்டத்தப் பாத்து கொஞ்சம் பயமா இருக்கும். ஷேர் ஆட்டோவுல, பஸ்ஸூல, கடையிலன்னு கூட்டம் இல்லாத இடமே இல்ல. ரோட்டுல ஓய்வில்லாம ஓடும் வண்டிங்கள பாத்தும் நிறைய பயந்திருக்கிறேன்.

என்னோட கிராமத்துல நூறடி நடத்தாக் கூட பத்துப்பதினைஞ்சு பேர் விசாரிப்பாங்க, தனியா இருக்கோம்கிற உணர்வே அங்க இல்லை. ஆனா இவ்வளவு கூட்டத்தோட இருந்தும் அது என்னமோ எப்பவும் தனியாக இருக்கிற மாதிரியே தோணுது. ஒரு பெண்ணா இருக்கிறதால இந்த பயம், அதுவே சென்னைங்கிறதுனாலே இன்னும் அதிகமா இருக்கு.

அன்னைக்கு பாத்து கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. அதுல மறைக்கிறதுக்கு என்ன இருக்கு. அந்த சரியில்லாமங்கிறதை பீரியட்ஸ்ன்னு வெளிப்படையா சொல்லுறேன். ஊருல இருக்கும்போது இந்த நாட்கள்ள எங்கேயும் வெளியே போகமாட்டோம். சென்னைக்கு வந்ததும் அதெல்லாம் மாறிப்போச்சு. அவசரமா ஒரு உறவினர் வீட்டுக்குப் போக வேண்டியிருந்துச்சு. சரின்னு கிளம்பினேன்.

கூட்டம் இருக்காதுன்னு நினைச்சு நடுப்பகல்ல பேருந்து ஏறுனேன். ஆனாலும் இப்பல்லாம் சென்னையில்ல கூட்டம் இல்லாத நேரம், இடம்ணு எதுவுமில்ல. பஸ்ஸூல பெண்கள் சைடுல உட்கார இடம் கிடைக்கல. வயிறு வேற வலிச்சிது. அப்ப ஆண்கள் பக்கம் ஒரு சீட்டு காலியாச்சு. என்னோட நிலையை புரிஞ்ச மாதிரி ஒரு தங்கச்சி “வாங்கக்கா அங்க உக்காருங்க”ன்னு அழைச்சாள். அதுக்குள்ள அந்த இடத்துல உக்கார ஒருத்தரு வந்தாரு. நாங்க வரதைப் பாத்த ஒரு பெரியவர் அவரை நிறுத்தி எங்களை உட்கார வைச்சார்.

நன்றியோட அவரைப் பாத்தேன். அவருக்கு ஒரு அறுபது வயசு இருக்கும். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு கையில் ஒரு பையுடன் அமைதியா இருந்தார். ஆளும் நல்ல செவப்பா இருந்தார். அவர் மட்டும் கொஞ்சம் கருப்பா இருந்தா எங்க பெரியப்பா மாதிரிதான்னும் சொல்லலாம். ஊரில் பெரியப்பாதான் என்னை தூக்கி வளத்து சீராட்டுனவர். அவரோட நினைவுகள்ள மூழ்க ஆரம்பிச்சேன். வயித்து வலியும் கொஞ்சம் கொறைஞ்ச மாதிரி தோணிச்சி.

உச்சி வெயில்ல பேருந்து கொஞ்சம் வேகமாக போன மாதிரி இருந்துச்சு. வெக்கை காரணமா உள்ளே ரொம்பவே அமைதியா இருந்துச்சு. தீடீர்னு என்னோட நினைவை நிறுத்தர மாதிரி உக்காந்திருந்த தோள் பக்கம் என்னமோ உரசிச்சு. அது அந்த பெரியவரோட கைன்னு நினைச்சுட்டு மறந்திட்டேன். பிறகு அந்த உரசல் அதிகமாவும், கொஞ்சம் மூர்க்கமாவும் இருந்துச்சு. தீடீர்னு திரும்பி தோள்பக்கம் பார்த்தேன்.

பக்கத்துல நின்னுகிட்டு இருந்த அந்த பெரியவர் வேட்டியை விலக்கிவிட்டு ஆண்குறியோட உரசுறதைப் பாத்தேன். ஜட்டி கூட போடாமல் அவ்வளவாக கூட்டமில்லாத இடத்தில் கூட இப்படி ஒரு கொடுமையான்னு உடைஞ்சு போனேன். ஆத்திரம், அருவெறுப்பு, கோபம் எல்லாம் கலந்து என்னை நிலைகுலைய வைச்சுது.

நான் ஒரு கிராமத்து பெண்ணா மட்டும் இருந்திருந்தா இதை எப்படி எதிர் கொண்டிருப்பேன்னு சொல்லத் தெரியல. ஆனா நானும் இப்ப ஒரு தோழர். இதே பேருந்துகள்ள புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எல்லாம் பேசி வித்திருக்கேன். அப்பயும் சில பொறுக்கிகள் பார்வையாலும், நக்கலாலும் சீண்டுவாங்க. ஆரம்பத்தில பயம் இருந்துச்சு, பின்னாடி நானே அவங்களை எதிர்த்து சண்டை போடுவேன். ஆனா அது ரொம்பக் கம்மிதான். பொதுவா பேருந்து விற்பனையில மக்கள் நம்மள ரொம்ப மரியாதையாத்தான் நடத்துவாங்க. அந்த வேலையே எனக்கு ரொம்ப தன்னம்பிக்கையை கொடுத்துச்சுன்னு சொல்லலாம்.

அந்த அனுவபத்தாலோ என்னமோ நானும் எழுந்து அந்தக் கிழட்டு மிருகத்தை திட்டியவாறு சண்டை போட்டேன். “கம்னாட்டி நாயே, என்னடா பண்ணுற, அப்பா மாதிரி இருந்துட்டு பொறுக்கித்தனம் பண்ணுற, செருப்பால அடிப்பேன்டா நாயே” என்றவாறு ஆத்திரம் தீரும் மட்டும் பேசுனேன்.

அவனோ ஏதும் பேசாம வேட்டியை சரி செஞ்சுட்டு வாசல் பக்கமா போயிட்டான். கூடியிருந்த மக்கள் கிட்ட நியாயத்த கேட்டேன். கூட இருந்த அந்த தங்கச்சி மட்டும் விடுங்கக்கான்னு சமாதானப்படுத்தினாள். ஆனா வேறுயாரும் இதை கண்டுக்கவே இல்ல. நடத்துநர், ஆண்கள், ஏன் பெண்களும் கூட ஏதோ ஒரு சகிப்புத் தன்மையில அமைதியாவே இருந்தாங்க!

இதுக்குள்ள அடுத்த ஸ்டாப்புல அந்த பொறுக்கி இறங்கி போயிட்டான். அதற்கடுத்த ஸ்டாப்புல நானும் இறங்கினேன். அன்றைய பொழுது இப்படி முடிஞ்சிது.

தோழருங்ககிட்ட இத சொன்ன போது சண்டை போட்டதுக்கு வாழ்த்து தெரிவிச்சவங்க, அந்த பொறுக்கியை ஏன் அடிக்கலைன்னு கேட்டாங்க? அவன் வயசும், அதிலயும் என் பெரியப்பா மாதிரி இருந்ததினாலோ என்னவோ எனக்கு கை நீளவில்லை. கூடவே கொஞ்சம் பயமும் இருந்துச்சுங்கிறதும் உண்மைதான்.

தோழருங்க இத எழுதி அனுப்பச் சொன்னபோதும் ஒரு தயக்கம் இருந்துச்சு. எல்லா ஆம்பளங்களும் பொறுக்கி இல்லேன்னாலும், எல்லா பொம்பளங்களும் எதோ ஒரு விதத்துல இந்த பொறுக்கித்தனத்த அனுபவிச்சவங்களாவே இருப்பாங்க. நானே என் வாழ்க்கையில இத வேறு வேறு சந்தர்ப்பங்களில பாத்திருக்கேன். ஆரம்பத்தில இருந்த அதிர்ச்சி பிறகு இதெல்லாம் அவ்வப்போது எதிர் கொள்ளணும்னு உள்ளுக்குள்ள பழகிப் போச்சு. ஆனா இதுக்கு முன்னாடி எப்போதும் நான் சண்டை போட்டதில்ல.

அந்த மிருகம் அப்படி நடந்திச்சுங்கிறதை விட கூடி இருந்த மக்கள் யாரும் எனக்கு ஆதரவா ஏன் வரலைங்கிறதுதான் ஆத்திரமா இருந்துச்சு. பெண்கள் மேல இருக்குற பாலியல் வன்முறைகளை, போகப் போக இதெல்லாம் சகஜம்கிற மனநிலைக்கு சமூகம் வந்திருச்சோ? ஆம்பளங்கள விடுங்க, அந்த பஸ்ஸூல இருந்த ஒரு பொண்ணும் எனக்காக பேசலேங்கிறதுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு!

இனிமே மிருகங்களோட சண்டை போடுறதோட அத வேடிக்கை பாத்து ஒதுங்க நினைக்கிறவங்களோடும் சண்டை போடணும்னு நினைச்சுக்கிட்டேன். சண்டை போட்டதாலயும், அதப்பத்தி நானே பரிசீலிச்சு பாத்ததாலயும், இப்ப உங்க கூட பகிர்ந்துகிட்டதாலயும் அந்தக் கொடுமையை நான் கடந்து வந்துட்டேன். இல்லேன்னா ரொம்ப நாளைக்கு அந்த ஆண்குறி என்னோட கனவுல வந்து அச்சுறுத்திக் கிட்டே இருக்கும்!

என்னோட நிலைமையே இப்புடின்னா சிதம்பரம் பத்மினியெல்லாம் எப்படி கஷ்டப்பட்டு போராடியிருப்பாங்கன்னு நினைச்சு பாக்கிறேன். அப்படி பாத்தா அந்த பஸ்ஸூல அமைதியா இருந்த பெண்கள் கிட்டதான் ரொம்ப சண்டை போட்டிருக்கணும்னு தோணுது!

__________________________________________________

– வேணி.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!

32

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 16

குடும்பக் கட்டுப்பாடு ஹிந்துக்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. முசுலீம்கள் நான்கு மனைவிகளைக் கட்டிக்கொண்டு வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் இந்துக்கள் சிறுபான்மையினராகி இந்தியா ஒரு இசுலாமிய நாடாக மாறும் அபாயம் இருக்கிறது. எனவே குடும்பக் கட்டுப்பாட்டில் ஹிந்துக்களை மட்டுமின்றி மற்ற மதத்தினரையும் முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து முன்னணி மேடைப் பேச்சு.

குடும்பக்கட்டுப்பாடு என்பது சட்டப்படி யாருக்கும் கட்டாயமான ஒன்றல்ல. இந்துக்கள் மட்டும் கட்டாயக் கருத்தடை செய்யுமாறு எந்தச் சட்டமும் கூறவில்லை. இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்டோ, செய்யாமலேயோ அளவாய்ப் பெற்றுக் கொள்வோரும் உண்டு.

முசுலீம் ஆண் ஒவ்வொருவரும் தலா நான்கு மனைவிகள் மணம் செய்ய வேண்டுமெனில் முசுலீம் ஆண், பெண் விதிகம் 1:4 என இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருபால் விகிதம் சமமாகவே உள்ளது. மேலும் 1975-ல் மைய அரசினால் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி பலதார மண விகிதம் முசுலீம்களை விட இந்துக்களிடம்தான் அதிகம் உள்ளது. கிருபானந்த வாரி மற்றும் சங்கராச்சாரியின் ஆன்மீகச் சீடரும், முருகக் கடவுளின் ரசிகருமான ஓட்டல் சரவண பவனின் உரிமையாளர் இராஜகோபாலனின் மனைவிமார் கதைகள் எல்லோரும் அறிந்ததே. கோடீசுவர இந்துக்களில் அநேகம்பேர் இப்படித்தான் பெண்டாளுகின்றனர். 1981 மக்கள் தொகைக் கணக்கின்படி இந்துக்களின் சதவீதம் 82.35, முசுலீம்களின் சதவீதம் 11.73 என உள்ளது. இதன்படி முசுலீம் மக்கள் என்றுமே பெரும்பான்மையாக முடியாது.

அடுத்து குடும்பக் கட்டுப்பாடு எனும் கருத்து கல்வியறிவு, பண்பாட்டு வளர்ச்சி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவற்றினால் நடைமுறைக்கு வருகிறது. கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழைகள்தான் மதவேறுபாடின்றி பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில்  தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதற்கும், வட இந்திய மாநிலங்கள் பின்தங்கி இருப்பதற்கும் இதுதான் காரணம்.

இந்து முன்னணியின் கூற்றுப்படி முசுலீம்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதே ஒரு சதித்திட்டத்திற்காகத்தான் என்றால், இந்த சதியின் விளைவாகப் பிறக்கும் பிள்ளைகளுக்குச் சோறு போடுவது யார்? ஒரு பிள்ளைக்கு 1000 தினார் என்று அராபிய சேக்குகள் மணியார்டர் அனுப்புகிறார்களா என்ன? ஒருவேளை அப்படிப்பட்ட வாய்ப்பு மட்டும் இருந்தால், அந்நியச் செலாவணிக்காக அம்மணமாக நிற்கவும் தயாராக இருக்கும் பா.ஜ.க. அரசு, ”உற்பத்தியைப் பெருக்குங்கள்” என்று முசுலீம்களுக்கு உத்திரவிடவும் வாய்ப்பிருக்கிறது.

அதிருக்கட்டும். இரண்டு மட்டும் பெற்றுக்கொண்டால், உணவு, வீடு, வேலை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தருவோம் என இந்நாட்டின் அரசோ, ஆளும் வர்க்கங்களோ, இந்துமத வெறியர்களோ பொறுப்பேற்கத் தயாரா? அதைத் தர முடியாதவர்கள் இரண்டுக்கும் மேல் பெறாதே என்று யாரிடமும் – இந்துக்கள் உட்படத்தான் – கூற அருகதை இல்லை.

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

திட்டக் கமிஷனின் வெட்டி அலுவாலியாவை அம்பலப்படுத்தும் சாய்நாத்!

15

தி இந்து பத்திரிகையில்“கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை என்ற கட்டுரையை பி.சாய்நாத் எழுதியிருந்தார். அதைப் படிக்காதவர்கள் இணைப்பிலுள்ள கட்டுரையை (தமிழ்) படித்து விடுங்கள். அந்தக் கட்டுரைக்கு திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா மறுப்பு எழுதியிருந்தார். எங்கப்பன் குதிருள்ளுக்குள் இல்லை என்ற இந்த பித்தலாட்டத்தை மறுத்து சாய்நாத் எழுதியிருக்கும் விளக்கமும் இந்து பத்திரிகையில் வெளியாயிருந்தன. அவற்றின் மொழியாக்கத்தை இங்கே வெளியிடுகிறோம்.

அலுவாலியாவின் விளக்கம்

திட்டக் கமிசன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா - படம் www.thehindu.com
திட்டக் கமிசன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா - படம் www.thehindu.com

“கோட்டு சூட்டு கனவனான்களின் எளிய வாழ்க்கை” (தி இந்து மே 21, 2012)கட்டுரையில் இரண்டு விஷயங்கள் வாசகர்கள் தவறாக புரிந்து கொள்ளும்படியாக திரிக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றைக் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நான் உங்கள் செய்தித் தாள் மீது பெரு மதிப்பு கொண்டுள்ளதோடு அரசாங்கத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அந்த உணர்வின் அடிப்படையில் உங்கள் வாசகர்களுக்கு பலனளிக்கும்படியாக என்னுடைய விளக்கங்களை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுரையின் முதல் பிழை, நான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான தினசரிச் செலவை டெண்டுல்கரின் வறுமைக் கோட்டுடன் ஒப்பிட்டது. பேராசிரியர் டெண்டூல்கரின் வறுமைக் கோடு ஒரு குடும்பத்தின் மாத வரவு செலவின் அடிப்படையிலானது, நாள் அடிப்படையிலானது இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மோசமான ஊதாரித்தனத்தை சித்தரிக்கும் நோக்கத்தில் இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

விமானப் பயணமும் முக்கிய தலைநகரங்களின் ஹோட்டல்களில் தங்குவதும் மிகவும் செலவு பிடிப்பவை என்பதில் ஐயமில்லை. விமானப் பயணத்திற்கும் ஹோட்டல்களில் தங்குவதற்கும் எந்த வகுப்பை பயன்படுத்த வேண்டும் என்பது என்னால் தீர்மானிக்கப்படுவதில்லை. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அனைவருக்கும் பொருந்துவதான அரசு விதிகளின் அடிப்படையில் இவை தீர்மானிக்கப்படுகின்றன.

வெளிநாட்டுப் பயணம் செலவு பிடிக்கக் கூடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை, ஆனால், ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அடிக்கடி வெளிநாடுகள் போவது தேவையாகிறது. வெளிநாட்டில் செலவிடும் ஒவ்வொரு நாளிலும் 14 மணி நேரத்துக்கு சந்திப்புகள், விவாதங்களில் கலந்து கொள்கிறோம் என்பதையும் அவை ஒவ்வொன்றும் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் நாட்கள் என்பதையும், அவை விடுமுறை நாட்கள் இல்லை என்பதையும் நான் சுட்டிக் காட்ட வேண்டும்.

செலவுகளை குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ‘போய்ச் சேர்ந்த உடனேயே பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முடிவதையும், ஹோட்டல் அறைகளில் அலுவல் பூர்வமான சந்திப்புகளை நடத்த முடிவதையும் அத்தகைய செலவு குறைப்புகள் எப்படி பாதிக்கும்’ என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செலவுகளையும் அவற்றுக்கான பலாபலன்களையும் கவனமாக எடை போட்ட பிறகுதான், தெளிவான முடிவை நாம் எடுக்க வேண்டும். எப்படி இருந்தாலும் பொருத்தமான அதிகார அமைப்புகள்தான் அந்த முடிவை எடுக்க முடியும்.

கட்டுரையின் இரண்டாவது பிழை ‘எனது பயணங்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமானது, திட்டக் குழு துணைத் தலைவரின் பொறுப்புகளுக்கு அத்தகைய வெளிநாட்டு பயணங்கள் தேவையற்றவை’ என்று சொல்வது ஆகும். துணைத் தலைவர் என்ற பதவிக்கு, அதன் அளவில், பெருவாரியான வெளிநாட்டு பயணங்கள் தேவை இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால், நான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் பெரும்பாலானவை G-20க்கான நிபுணர் என்ற பொறுப்பிலும் பிரதம மந்திரியின் குழு உறுப்பினராகவும் மேற்கொள்ளப்பட்டவை என்பதை கட்டுரை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நான் இந்திய-அமெரிக்க எரிசக்தி உரையாடல் குழுவின் துணைத் தலைவராகவும் இந்திய-சீன பொருளாதார உரையாடல் குழுவின் துணைத் தலைவராகவும் இருக்கிறேன். இவை துணைத்தலைவர் என்ற பதவியுடன் தொடர்பில்லாத தனிச் சிறப்பான பொறுப்புகள்.

இந்த பொறுப்புகளை யார் வகிக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுப்பதில்லை. ஆனால் இந்த பொறுப்புகளை நிறைவேற்ற நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதை ஒரு கௌரவமாக கருதி என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுகிறேன். அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள யாரையும் போலவே எனது ஒவ்வொரு பயணமும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும், பிரதம மந்திரியின் அலுவலகத்திடமும் ஒப்புதல் பெற்றே மேற்கொள்ளப்பட்டன.

2008க்கும் 2010க்கும் இடையே உலகளாவிய நிதி நெருக்கடியின் காரணமாக G-20 சந்திப்புகள் அடிக்கடி நடந்தன என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். உண்மையில், ஒவ்வொரு உச்சிமாநாட்டுக்கும் முன்பும் நிபுணர்களின் தயாரிப்புக் கூட்டங்கள் இரண்டு அல்லது மூன்று முறை நடந்தன. இந்தக் கூட்டங்களில் இந்தியா கலந்து கொண்டிருக்க தேவையில்லை என்று ஒருவர் வாதிடலாம். அது நிச்சயமாக கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தியிருக்கும், ஆனால் கலந்து கொள்ளாமல் இருப்பதன் மூலம் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட்டிருக்குமா என்பதுதான் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இறுதியாக, என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய முழுமையான வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும் முகமாக, நான் அவற்றைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திட்டக் குழுவின் இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் நான் எங்கு போகிறேன், ஏன் போகிறேன் என்று தெரிந்து கொள்ளலாம்.

______________________________________

அலுவாலியாவுக்கு சாய்நாத் பதிலளிக்கிறார்:

உண்மையில் கட்டுரையில் தரப்பட்டுள்ள எந்த ஒரு விபரத்தையும் டாக்டர் அலுவாலியா மறுக்கவில்லை :

(i) 2011 மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே (ஜி-20 பணிகளில் அவர் “பிஸியாக” இருந்த 2010 கால கட்டத்திற்கு வெகு காலம் கழித்து)  மேற்கொண்ட பயணங்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 2.02 லட்சம் செலவு ஆகியிருக்கிறது. இது “மோசமான ஊதாரித்தனம்” இல்லையா?

(ii) 274 நாட்கள் வெளிநாட்டில் செலவிட்டிருக்கிறார். அதாவது ஒன்பது நாட்களில் ஒரு நாள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இந்தியாவிலிருந்து போய் வரும் நாட்களையும் சேர்த்தால் ஏழு நாட்களில் ஒரு நாள் வெளிநாடுகளில் செலவிட்டதாக ஆகிறது.

(iii) மொத்தம் 42 பயணங்களை மேற்கொண்டுள்ளார், அவற்றில் பாதி அமெரிக்காவுக்கு போன பயணங்கள். (பல பயணங்கள் திட்டக் குழு துணைத் தலைவர் என்ற பொறுப்புடன் தொடர்பற்றவை).

அவர் ஆதரிக்கும் (உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்தும்) வறுமைக் கோட்டிற்கான வரையறைக்கும் அவரது சொந்த செலவுகளுக்கும் இடையேயான ஒப்பீடு மிகவும் தேவையானதும் பொருத்தமானதும் ஆகும். வறுமையில் வாடும் மக்கள் மீது ஒரு அணுகுமுறையை சுமத்தி விட்டு, அவர்களது பணத்தில், பொதுப் பணத்தில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு வரையறையை தான் பின்பற்றுவது இரட்டை வேடம் போடுவதாகும். அதுவும் அவர் பங்கு வகிக்கும் அரசாங்கம் கூடுதல் சிக்கன நடவடிக்கைகளுக்கான அழைப்பு விடுத்திருந்த காலத்தில் அப்படி செய்வது நியாயப்படுத்த முடியாத ஒன்று.

திட்டக் குழு உருவாக்கப்பட்ட அடிப்படை கோட்பாடுகளின் மையம் கொடிய வறுமையை ஒழிப்பது. ஆனால், டாக்டர் அலுவாலியாவை போலின்றி, அந்த நோக்கம் ‘வளங்களின் நெருக்கடியில்’ மாட்டிக் கொண்டிருக்கிறது.

“முழுக்க முழுக்கத் தேவையானது” என்று கருதப்படும் சமயங்களைத் தவிர “அரசாங்கம் விமானப் பயணங்களுக்கான, குறிப்பாக வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகளை கறாராக கட்டுப்படுத்த வேண்டும்” டாக்டர் மன்மோகன் சிங் உத்தரவிட்டிருந்த (தி இந்து, ஜூன் 6,2008 – http://www.hindu.com/2008/06/06/stories/2008060660671000.htm) கால கட்டம்தான் டாக்டர் அலுவாலியா அத்தியாவசியமானது என்று குறிப்பிடும் பயணக் காலம் (2008-10).

அந்த சமயத்தில், பல அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து செய்யப்பட்டன, பயணச் செலவுகளில் வெட்டுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டு அமைச்சர்கள் தங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகளை இழந்தார்கள். வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தும் தனது தனி விமானத்தை விட்டுக் கொடுத்தார், மற்றவர்கள் எகானமி வகுப்பில் பயணம் செய்தார்கள்

அப்போதும் அதற்கு பின்னும் அவர் எந்த வகுப்பில் பயணம் செய்தார் என்பது குறித்தும் அவரது செலவுகள் குறித்தும் டாக்டர் அலுவாலியா தொடர்ந்து மௌனம் சாதிக்கிறார்.

திட்டக் குழுவின் துணைத் தலைவர் முன்னுரிமை அளிக்க வேண்டிய இந்தியாவுக்குள்ளான பயணங்கள் எத்தனை அவர் மேற்கொண்டார்? அவற்றைப் பற்றிய விபரங்களையும் திட்டக் குழுவின் இணையதளத்தில் போட முடியுமா?

(தினசரி சராசரி) $ 4,000 செலவு என்பது மிகப் பிரமாண்டமானது. அதற்கு மேல் அந்தந்த ஊர்களின் தூதரகங்களும் தொடர்பு அலுவலகங்களும் அவருக்காக எவ்வளவு செலவழித்தன என்று நமக்கு தெரியாது. ஆனால் செலவுகளின் மீதான கட்டுப்பாடு அலுவாலியாவுக்கு கவலை அளிக்கிறது. “போய்ச் சேர்ந்த உடனேயே பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கான திறனை அது பாதித்து விடுமா, எவ்வளவு பாதிக்கும்” என்று கேள்வி எழுப்புகிறார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இந்திய மக்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் போய்ச் சேர்ந்ததும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டியது பற்றியும் அவர் சிறிதளவு நினைத்துப் பார்ப்பார் என்று நம்புவோம். ஏனென்றால், அவர் இந்த மக்களுக்கான திட்டமிடும் பொறுப்பில் இருக்கிறார் என்பது விவாதங்களுக்கு அப்பாற்பட்ட உண்மை.

2008-10 ல் G-20 கூட்டங்கள் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றன. ஆனால், அவர் அமெரிக்காவுக்குத்தான் பெரும்பகுதி பயணங்களை மேற்கொண்டார். இதற்கு முன்பாகவும் அவரது அமெரிக்க பயணங்கள் கொழித்துக் கொண்டுதான் இருந்தன என்பதை தகவல் அறியும் உரிமை மூலம் பெற்ற தரவுகள் காட்டுகின்றன.

திட்டக் குழுவின் பணிகளுடன் தொடர்பில்லாத, G-20 மற்றும் பிற மன்றங்களில் புரியும் நிபுணர் பணிக்கு அவர் கூறும் முக்கியத்துவத்தை நாம் ஏற்றுக் கொள்வோம்.

அப்படி என்றால் திட்டக் குழுவில் இடம் பெற்று அதன் பொறுப்புகளிலிருந்து அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் செயல்பாட்டை ஏன் முடக்கி போட வேண்டும்?

11வது திட்டத்தின் முதல் நாள் ஏப்ரல் 1, 2007. ஆனால், திட்ட ஆவணம் ஜூன் 25, 2008ல்தான் தயாரானது. இப்படி வீணாக்கப்பட்ட ஒரு முழு ஆண்டு பல முக்கிய திட்டங்களின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. “மத்தியில் கால” மதிப்பீடு ஐந்து ஆண்டு கால திட்டத்தின் நான்காவது ஆண்டில் வெளிவந்தது! இப்போது, நாம் 12வது திட்டத்தின் முதல் ஆண்டில் இருக்கிறோம். ஆனால் திட்ட ஆவணம் தயாராவது இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது.

திட்டக் குழுவின் இணையதளத்தில் அவரது பயண விவரங்கள் வெளியிடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தகவல் அறியும் உரிமை மூலம் பெற்ற தகவல்கள் அவரது செலவுகளைப் பற்றியது. அவற்றையும் அவர் வெளியிடுவாரா? மற்ற திட்டக் குழு உறுப்பினர்களின் செலவுகளும் வெளியிடப்பட்டால் இன்னும் சிறப்பாக, நாம் ஒப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

டாக்டர் அலுவாலியா நடைமுறை உலகத்திலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறார் என்பதன் அளவீடுதான், அவரது செலவுகளை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது. அவரது விளக்கம் அவரைப் பற்றிய மக்களின் கருத்தில் இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

______________________________________________________

– நன்றி: தி இந்து

தமிழாக்கம்: அப்துல்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கருத்துரிமைக் காவலர்களின் சை….லேன்ஸ்..!

127

லீனா-மணிமேகலை-கருத்துரிமைக்-காவலர்களின்-சைலேன்ஸ்

லீனா பேசிவிட்டார்.

“With Tejaswini, I did what I felt and I am proud of it.”

இத்தோடு மேட்டர் முடிந்தது என்று யாரேனும் எண்ணியிருந்தால் அவர்கள் மேடத்தை புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

“இதுதாண்டா லீனா” என்று உலகத்துக்கு அவர் உரைக்க விரும்புகிறார். அதே நேரத்தில், “என் காரெக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே” என்று உருகவும் செய்கிறார்.

“அப்படித்தான் செய்வேன்” என்று அடித்துப் பேச விரும்புகிறார். “இப்படி செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்று முறையிடவும் விரும்புகிறார்.

“ஆம். நான் சந்தர்ப்பவாதிதான்” என்று துணிவுடன் பிரகடனம் செய்கிறார். “தான் தவறேதும் செய்யவில்லை” என்பதைப் பணிவுடன் விளக்கவும் விரும்புகிறார்.

இதைக் கேளுங்கள்:

“தேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது. இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.”

என்று கூறியிருக்கிறார் லீனா.

கஞ்சா வியாபாரத்தில் தொடங்கி சிங்குர் வரையில் டாடா குழுமம், நடந்து வந்த பாதையை நாம் இங்கே விளக்கப் போவதில்லை. “டாடா என்றால் உண்மை, நேர்மை” என்று நம்பிக்கொண்டிருந்த பாமர நடுத்தர வர்க்கத்தினர் கூட சிங்குர், கலிங்க நகர், சல்வா ஜுடும் கதைகளையும் ராடியா டேப்பையும் கேட்டபின் தம் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள். டாடா நிறுவனம் தேஜஸ்வினி போன்ற பித்தலாட்டங்களைக் களம் இறக்குவதற்கான அவசியமும் இந்தப் படத்தின் அவதார ரகசியமும் இதுதான்.

அறிவாளியும் படைப்பாளியுமான போராளியுமான லீனாவுக்கு இது தெரிந்திருக்காதா என்ன, என்று நீங்கள் எண்ணினால், அம்மையார் இப்படி பதில் சொல்கிறார்:

“Yes, I did creatives for Thejaswini Project funded by Tata, Because, I honestly felt, the women’s lives whom I met , need to be shared”

பூ ன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், ஐயிரு சொல்றா மாதிரியும் சொல்லலாம். ஐயிரு சொல்றா மாதிரி சொல்றார் லீனா.

அதாவது படைப்பாளியாகிய லீனா, டாடா என்கிற முதலாளி போடுகிற பிச்சைக்காசினால் உந்தப்பட்டு அந்தப் படத்தை எடுக்கவில்லையாம், அந்த புல்டோசரு, இஞ்சினெல்லாம் ஒட்ற பெண்களுடைய வாழ்க்கையைப் பார்த்தவுடனே, உண்மையிலேயே ரொம்ப ஃபீல் ஆயிட்டாராம்.

இதை எப்டியாவது உலகத்தாரோடு பகிர்ந்து கொள்ளணுமேன்னு ஒரு படைப்பு அவஸ்தையில அம்மா தவிச்சுகிட்டு இருக்கும்போது, தற்செயலா குறுக்கே வந்த டாடா, புடிங்க பணத்த-ன்னு கொடுத்திட்டு போயிருக்கிறார். அதாவது இன்ஸ்பிரேசன் வந்த பொறவுதான் அட்வான்ஸ் வாங்கினேனே கண்டி, அட்வான்ஸ் வாங்கினதால இன்ஸ்பிரேசன் வர்ல. இது ஒண்ணும் புய்பம் இல்ல, புஷ்பம் என்கிறார் லீனா.

ரொம்ம்ப முக்கியம்!

மத்தப்படி கொள்கையில அவரு ஸ்டெடியாத்தான் இருக்கிறாராம். “never did I do content against my political will” என்கிறார் லீனா.

“நம்மூர்ல கூடத்தான் பெண்கள் டிரை சைக்கிள் ஒட்றாங்க, தட்டு வண்டி ஓட்றாங்க, மூட்டை தூக்குறாங்க, பொணவண்டி கூட தள்றாங்க, அவுங்களயெல்லாம் பாத்து அம்மா ஃபீல் ஆகலியா” ன்னு நீங்க கேக்கலாம். ஆயிருப்பாங்க. ஆனா அந்த நேரம் யாரும் குறுக்க வல்லியே.

இந்த ஊத்தை நாயத்துக்கு ஒரு “அறிவார்ந்த” வியாக்கியானம் வேற!

“தாடகையிடம் முலைப்பால் குடித்தே அவளைக் கொல்வது மாதிரி. ஒரு பக்கத்தில் உனக்காக வேலை செய்வதன் மூலம் என்னைத் தக்க வைத்துக் கொண்டு வேறுபக்கத்தில் உன்னை எதிர்ப்பதற்காக நேரமும், சக்தியும் செலவிடுவேன் என்பதே இது.  லீனாவின் அதிகார எதிர்ப்பிற்கான பங்களிப்பு அவரது பிரதிகளேயன்றி அவரது வாழ்க்கையாக இருக்க முடியாது”என்று பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் என்னும் பெருமகனார் அம்மாவின் integrity க்கு ஃபேஸ் புக்கில் பொழிப்புரை போடுகிறார்.

“மூலதனம் அனைத்திலும் யார் யார் எப்படி பங்கு பெறுகிறார்கள், அவ்வாறு பங்கு பெறும் போது குறிப்பட்ட நபர் அதை எப்படி பயன்படுத்துகிறார் என்கிற அறிவார்ந்த பார்வையைக் கைவிட்டுவிட்டு, வெறும் முதலாளித்துவ குற்றத்தினை சுமத்துவத்தின் மூலம், அவரை வர்க்கத்திற்கு காட்டிக் குடுப்பதாக “ஒழுக்க சீலர்கள்” நினைத்துக் கொண்டிருக்கலாம்” என்று பொறிந்து தள்ளுகிறார் லீனா.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த ரெண்டு பீஸையும் படித்தவுடனே வெலவலத்துவிட்டது. நமக்கோ சினிமா மொழியும் தெரியாது, இந்தி மொழியும் தெரியாது. தேஜஸ்வினி படத்தின் இந்தி வசனத்தில் உள்ள அதிகார எதிர்ப்பை புரிந்து கொள்ளுகின்ற அறிவார்ந்த பார்வை இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறோமோ என்று பீதியாகிவிட்டது. உடனே தோழர்களை மொழிபெயர்க்கச் சொன்னோம்.

“இந்த சீருடை அணிந்ததை நீங்கள் பார்க்கிறீர்களே, அது ஒரு வெளித்தோற்றம்,  நான் உள்ளேயும் மாறியிருக்கிறேன்”

“எல்லோரும் சொல்கிறார்கள், பெண்ணாக பிறக்கக் கூடாது என்று. இன்று நான் பெண்ணாகவே பிறக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஒவ்வொருவரும் தேஜஸ்வனி ஆக வேண்டும்.”

“நான் தேஜஸ்வனி புரோக்ராமில் வந்த பிறகு என்னில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முன்னேறுவதற்கான ஸ்கோப் கிடைத்திருக்கிறது”

-இப்படித்தான் பேசுகிறார்கள் அந்தப்படத்தில் வரும் தேஜஸ்வினிகள்.

டெலி ஷாப்பிங் பிட்னெஸ் எக்விப்மென்ட் விளம்பரத்தில் வரும் டப்பிங் வசனம் மாதிரி இருக்கு. இதுக்கா இவ்வளவு பில்டப்பு என்று தோன்றியது. இருந்தாலும், “பிரதி”க்குள்ளே “சப் டெக்ஸ்டாக” ஏதேனும் அதிகார எதிர்ப்பு ஒளிந்திருந்து, நமக்குத்தான் கண்டுபிடிக்கத் தெரியவில்லையோ என்று உள்ளூர ஒரு பயம்.

ஏற்கெனவே லீனாவின் கவிதையை, “கவுஜை” என்று வாசித்து, அதன் விளைவாக கருத்துரிமை ஜென்டார்மேர்களின் (Gendarmerie ) கோபத்துக்கு ஆளான அனுபவம் இருந்ததால், தொழில்முறை கட்டுடைப்பு நிபுணர்கள் சிலரை வைத்து உடைத்தும், முன் பின்னாகப் போட்டு மறுவாசிப்பு செய்தும் பார்த்து விட்டோம்.

எனினும் எத்தனை முறை ரீவைண்டு செய்து போட்டாலும், “தேஜஸ்வினிக்கு மாறினப்புறம்தான் எனக்கு தன்னம்பிக்கை வந்தது  …. அப்போ நீங்க?” என்றுதான் கேட்கிறது லீனாவின் படம்.

“What they did with my material, was out of my control and I am also still not that powerful to stop that “ என்று ஃபேஸ் புக்கில் லீனா குமுறியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். “அடடே படத்திலிருந்த புரட்சிகளையெல்லாம் ஒக்லிவி நிறுவனம் எடிட் செய்திருக்கும் போலும். அவற்றை அம்மாவின் எழுத்திலிருந்தாவது பொறுக்கிவிடலாம் என்று எண்ணி அதைப் படிப்பதற்கு உள்ளே நுழைந்தால், “புரட்சி” நம் மூஞ்சியிலேயே வெடிக்கிறது.

“About CSR, yes, I know Companies do it to save their exploitation. But I also see it as the only way left to make them give back something to the community”

என்று பொளந்து கட்டுகிறார் லீனா. கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடி என்பது தமது சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்ள முதலாளிகள் செய்யும் சதி என்று அவருக்கு தெரியுமாம். ஆனால் அவர்கள் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லையாம். அதாவது தமிழில் சொல்வதென்றால், “ஒன்றே பாதை ஒன்றே பாதை, சி.எஸ்.ஆர் தான் புரட்சிப் பாதை” என்று முழங்குகிறார் லீனா.

ஆனால், உலகப் பெரும் பணக்காரர் வாரன் பஃப்பே வேறுவிதமாகச் சொல்கிறார். “முதலாளிகள் தங்கள் செல்வத்தில் ஒரு சிறு பகுதியையாவது சமூகத்துக்குத் திருப்பிக் கொடுப்பதன் மூலம்தான் புரட்சி போன்ற விபரீதங்களைத் தடுக்க முடியும்” என்று லண்டன் கலகத்தை ஒட்டி அவர் சக அமெரிக்க முதலாளிகளை எச்சரித்தார். உடனே இந்த தத்துவத்தை  Buffett Rule என்று கொண்டாடினார் ஒபாமா. லீனாவின் புரட்சி முழக்கத்தை, இந்தியத் தரகு முதலாளிகளுக்குப் புரியவைப்பதற்குத்தான் புரட்சியாளர் மன்மோகன் சிங்கும் ரெம்ப நாளாக கஷ்டப்பட்டு வருகிறார்.

என்ன செய்வது, முதலாளிகளுக்கு ஆதரவானதும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு எதிரானது என்று முட்டாள் ஜனங்களை ஏமாற்றுவதற்கு உகந்ததும், முதலாளிகள் தம் சொந்தக் கையாலேயே செய்து முடிக்கத்தக்கதுமான ஒரு புரட்சியை முட்டாள் முதலாளிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!

லீனா சொல்லும் சி.எஸ்.ஆர் புரட்சியின் தத்துவம், முதலில் உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள். அதாவது, “புரட்சி ஆஃப் த முதலாளி வர்க்கம், பை த முதலாளி வர்க்கம், ஃபார் த முதலாளி வர்க்கம்”.

இந்த புரட்சி முழக்கம் முன்னரே தெரிந்திருந்தால், டாடாவும் ஒடிசாவில் சுமுகமாக தொழில் தொடங்கியிருப்பார். கலிங்க நகரின் முட்டாள் பழங்குடிகளும் லீனாவின் காமெராவில் தேஜஸ்வினிகளாக மின்னியிருப்பார்கள், பிணங்களாக செத்து விழுந்திருக்க மாட்டார்கள்.

அது அந்த பழங்குடி மக்களின் தலையெழுத்து! நாம் அம்மாவின் திரைக்கதைக்கு வருவோம்.

“சி.எஸ்.ஆர் புரட்சியின் கொள்கைப்படி, நீங்கள் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் ஒரு பங்கை மரியாதையாக சமூகத்துக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்று டாடாவுக்கு உத்தரவிடுகிறார் லீனா. அந்த அறச்சீற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூடத் துணிவில்லாமல், “காசோலையை யாரிடம் கொடுக்கட்டும் அம்மா?” என்று தலை குனிந்தபடியே நடுங்கும் குரலில் லீனாவிடம் கேட்கிறார் ரத்தன் டாடா.

“பணத்தை என்னிடம் கொடு, ரசீதை சமூகத்திடம் வாங்கிக்கொள்!” என்று உருமிவிட்டு, சி.எஸ்.ஆர் புரட்சியை நிறைவேற்ற வேண்டியிருக்கும் ஒரே நோக்கத்தின் பொருட்டு, வேண்டா வெறுப்பாக டாடாவிடம் கை நீட்டுகிறார் லீனா.

எப்படி இருக்கிறது இந்த சீன்? ஆனால் இதையெல்லாம் மெயின் பிக்சரில் நீங்கள் பார்க்க முடியாது. “தி மேக்கிங் ஆஃப் தேஜஸ்வினி” என்பது தனியொரு குறும்படம் – அது காமெராவுக்குப் பின்னால் இருட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

எந்தப் புரட்சிகர அம்சமும் அதன் உள்நாட்டு பயன்மதிப்பைப் பயன்படுத்தித்தான் வளர முடியுமாம். அதற்கான உழைப்பையும், அதற்கான கூலியையும் பெற மார்க்சிய வாரிசுகளுக்கு (அதாவது தனக்கு) உரிமை உண்டாம் – சொல்கிறார் லீனா.

“பயன்மதிப்பு, உபரிமதிப்பு” போன்ற சொற்களை லீனா பயன்படுத்தும்போது பழைய கவுஜை நினைவுகள் நம்மை அச்சுறுத்துகின்றன. வாய்க்குள் எதையாவது பிடுங்கிப் போட்டுவிடப் போகிறாரே என்று வாயை மூடிக் கொள்கிறோம். இருப்பினும் பேசாமலும் இருக்க முடியவில்லை!

வாரிசுரிமையாமே!

டாடாவிடம் லீனா வசூலித்திருப்பது கலிங்க நகர் பழங்குடி மக்களின் தியாகத்துக்கான கூலியா? அல்லது கம்யூனிஸ்டுகளின் கடந்த காலத் தியாகங்களை டாடாவிடம் விலைபேசுவதற்கு “தோழர் தா.பா” ஏதேனும் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறாரா?

♦ ♦

“ச்சீ .. நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அது போன நூற்றாண்டின் நைந்து போன வசனமாயிற்றே! இது இருபத்தோராம் நூற்றாண்டல்லவா?

“Political correctness காக தன் வாழ்க்கையை பணயம் வைப்பது காந்தியோடும், முதல் தலைமுறை கம்யூனிஸ்களோடும், நக்சல்களோடும் முடிந்துவிட்டது”  என்று கூறுகிறார் பொன்ராஜ்.

“தங்களால் நேர்மையாக இருக்க முடியவில்லை” என்று அவர் கூறவில்லை. “நேர்மையாக இருப்பவன் பழமைவாதி அல்லது முட்டாள்” என்கிறார். பாலஸ்தீனத்திலும், இராக்கிலும், ஈழத்திலும், காஷ்மீரிலும் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தவர்களும், வைப்பவர்களும் கடந்த காலத்தின் ஆவிகளாம், பழமை வாதிகளாம்!

நத்திப் பிழைக்கும் இந்த தொண்டைமான் கூட்டம்தான் எதிர்காலத்தின் பிரதிநிதியாம். டாடாவிடமும் அம்பானியிடமும் முலைப்பால் குடிப்பதைத் தவிர்க்க முடியாதாம். மேலும் தீவிரமாக உறிஞ்சிக் குடிப்பதுதான் இந்த நூற்றாண்டின் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டமாம்!.

எறக்கத்துல பிரேக் அடிச்சா மாதிரி என்னா தத்துவம்டா!

அம்மையாரின் apologist கள் இதற்கு மேலும் போகிறார்கள்.  “நான் அயோக்கியனில்லை” என்று கொஞ்சம் தயக்கத்துடன் தங்கள் வாதத்தைத் தொடங்கும் இவர்கள், “இன்றைய சூழ்நிலையில் அயோக்கியனாக இருப்பதை தவிர்க்க முடியவில்லையே” என்று அங்கலாய்க்கிறார்கள்.

பிறகு, “அயோக்கியத்தனம்தான் இந்த காலத்துக்கு உகந்த புரட்சிகர வழி” என்று நமக்கு புரிய வைக்கிறார்கள். இதற்குப் பின்னரும் நீங்கள் புரிந்து கொள்ள’ மறுத்தால், “எந்தக்காலத்திலும் எவனும் யோக்கியனில்லை தெரியுமா?” என்று நக்கல் பண்ணுகிறார்கள்.

“அந்த காலத்து கவிஞர்கள் கொடுங்கோல் மன்னர்களிடம் பணம் வாங்கவில்லையா, தமிழகத்தின் பல கலைஞர்கள் போர்டு பவுண்டேஷனில் பணம் வாங்கவில்லையா, நானும் கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்கித்தான் கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு படம் எடுத்திருக்கிறேன்” என்று கூறி “ஹஹ்ஹஹா” எனச் சிரிக்கிறார் அமுதன் ராமலிங்கம் புஷ்பம்.

அமுதனைப் போல நிர்வாண நிலையை எய்தாத மற்றவர்கள்  “நீ மட்டும் யோக்கியனா?” என்று நம்மைக் கேட்பதன் மூலம், “இது கோவணம் கட்டாத தேசம்தான், எல்லோரும் கோவணம் கட்டாதவர்களே” என்று தமக்குத் தாமே சொல்லி ஆசுவாசம் கொள்கிறார்கள்.

மா.லெ குழுக்கள் பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நிதி பெறுவதில்லையா என்கிறார் கீதா நாராயணன். உலகத்தை சுரண்டும் ஏகாதிபத்திய முதலாளிகளின் எச்சில் எலும்புகள் நிரம்பிய குப்பைத் தொட்டியை வலம் வரும் நாய்களும், அந்த நிறுவனத்தால் சுரண்டப்படும் ஊழியனிடம் நன்கொடை பெறும் மா.லெ குழுக்களும் ஒன்றெனச் சித்தரிக்கும் இந்த “அறியாமையை” எந்த ஆசிட் ஊற்றினாலும் கழுவ முடியுமா?

“இந்த புரட்சியாளர்கள் பயன்படுத்தும் பேஸ் புக்கும் இணையதளங்களும் பாட்டாளி வர்க்கத்தால் வடிவமைக்கப்பட்டவையா?” என்று கேட்கிறார் நிர்மலா கொற்றவை. எனில், பில் கேட்ஸ், நாராயணமூர்த்தி, ஆசிம் பிரேம்ஜி போன்றோர்தான் இவற்றையெல்லாம் வடிவமைத்தவர்களோ? ரத்தன் டாடாவுடைய வியர்வையின் உலர்ந்த வடிவம்தான் டாடா உப்போ? டாடா மேஜிக் ஷேர் ஆட்டோவில் போகும் தோழர்களே கவனம். நிர்மலா கொற்றவையின் கண்ணில் பட்டுவிடாதீர்கள்!

“நான் கட்டிய கல்லூரியில் என்னுடைய மொழியான ஆங்கிலத்தைப் படித்து நான் விட்ட ரயிலில் ஊர் ஊராகப் போய் என்னையே வெளியேறச் சொல்லிப் போராடுகிறாயா?” என்று பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் கூட காந்தியைக் கேட்டதாகத் தெரியவில்லை. நிர்மலா கொற்றவை நம்மைக் கேட்கிறார்.

உலகத்தில் யோக்கியர்கள் என்று யாரும் இல்லை என்பது மட்டுமல்ல, இருக்கவும் முடியாது” என்பதே இவர்களது கருத்து. “மனிதன் எனப்படுபவன் அடிப்படையிலேயே சுயநலவாதி. இது நாய் நாயைத் தின்னும் உலகம்” என்கின்ற சமூக டார்வினியமே இவர்களது கொள்கை.

ஒரு மனிதனுக்கு அறிவு, திறமை ஆகியவற்றுடன் சொத்தும் இருந்தால் அவன் டாடாவாக இருந்து மக்களைச் சுரண்ட வேண்டும்.

அறிவும் திறமையும் மட்டும் இருந்து சொத்து இல்லையென்றால் லீனாக்களைப் போல டாடாவை நத்திப் பிழைக்க வேண்டும்.

இவையே அறிவும் திறமையும் கொண்ட தம்மைப் போன்ற சான்றோர்களின் சிறப்பியல்புகள் என்பது இவர்கள் கொண்டிருக்கும் கருத்து.

மற்றப்படி “நேர்மை, ஒழுக்கம்” என்பதெல்லாம் அறிவு, திறமை, சொத்து என்பன போன்ற சௌபாக்கியங்கள் எதுவும் வாய்க்கப் பெறாத, (அதாவது நத்திப் பிழைப்பதற்கு அவசியமான “தகுதிகள்” இல்லாத) முட்டாள்களுக்குரிய attributes என்பதே இவர்களது மதிப்பீடு. எனவே இவர்களைப் பொருத்தவரை, தரும நியாயத்துக்கு கட்டுப்பட்டு உழைத்து வாழும் ஆகப் பெரும்பான்மையான மக்கள், “வாய்ப்புக் கிடைக்காததால் யோக்கியர்கள்” – அவ்வளவுதான்.

“வழுக்கி விழுவதற்கு” வாய்ப்பிருந்தும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மறுத்து, நீங்களோ, நானோ “அறம்” பேசினால், “நீ மட்டும் டாடா உப்பைத் தின்னவில்லையா? டாடா டீ குடிக்கவில்லையா” என்ற லெவலுக்கு இறங்கி விடுவார்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் வாதப் பிரதிவாதங்களில் பல இந்த ரகத்திலானவையே.

“காலச்சுவடு கண்ணன் மட்டும் பெரிய யோக்கியரா?” என்பதுதான் லீனாவுக்கு ஆதரவாகப் பேசுவோரின் மிக முக்கியமான கேள்வி. எடியூரப்பா, குமாரசாமியைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்டால் “கெக்கெக்கே” என்று சிரித்து, ” எல்லாரும் திருட்டுப்பசங்க” எனக் காறித்துப்பும் இந்த அறிவாளிகள், அதே மொக்கை கேள்வியை தாங்கள் எழுப்பும்போது, தங்களை சாக்ரடீசாக கருதிக் கொள்கிறார்கள்.

எறிவதற்கு எடுத்த கல்லைக் கீழே போட்டுவிடுவதாக ஒரு “அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்டுக்கு” கண்ணன் ஒப்புக்கொண்டால், இவர்கள் கண்ணனின் எல்லா பாவங்களையும் பெருந்தன்மையாக மன்னித்துவிடுவார்கள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

லீனாவுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள், ஃபீஸ் வாங்காமலேயே எட்டு கட்டையில் கூவுவது ஏனென்றால், குற்றவாளிக் கூண்டில் நிற்பது தாங்களும்தான் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. “எம்.பி யெல்லாம் திருட்டுப்பயல்கள்” என்று யாராவது சொல்லிவிட்டால், உடனே கட்சி வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகளை மறந்து, “எம்.பி இனத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற” சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் குதிப்பதைப் போன்ற சமாச்சாரம் இது.

அம்மா கேசை தங்கள் சொந்தக் கேசாக எடுத்துக் கொண்டு இவர்கள் சூடாக வாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதே, “என்னால் கூண்டில் நிற்க முடியவில்லை. கால் வலிக்கிறது. Yes, I am a bitch, Yes I am a prostitute, Yes I am an opportunist, Yes I am a criminal ” என்று கூறுகிறார் லீனா. இது ஒப்புதல் வாக்குமூலமோ, சுயவிமரிசனமோ அல்ல. “Yes, நான் பாப்பாத்திதான்” என்று விதி எண் 110இன் கீழ் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.

“I will apologise in public, if you finally say, my docu ..has helped them save their entire empire ” என்று நமக்கு சவால் விட்டிருக்கிறார் லீனா.

கவிதாயினி அம்மையார் வார்த்தை சாமர்த்தியத்தில் அருண் ஜெட்லியை விஞ்சுவதை கவனியுங்கள். அவர் இயக்கிய படம் டாடாவின் “மொத்த” சாம்ராச்சியத்தையும் காப்பாற்ற உதவியது என்று உங்களால் சொல்ல முடிந்தால், அம்மையார் பப்ளிக்காக மன்னிப்பு கேட்பாராம். பாதி சாம்ராச்சியத்தை காப்பாற்ற உதவியது என்று நிரூபித்தால்?

16 ஆண்டுகளுக்கு முன் போயஸ் தோட்டத்திலிருந்து நல்லமநாயுடு கைப்பற்றிக் கொண்டு வந்த ஒட்டியாணத்தையே புரட்சித்தலைவியுடையது என்று இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. இதையெல்லாம் நாம் நிரூபிக்க முடியுமா?

♦ ♦

ற்போது விவாதத்தில் இருக்கும் பிரச்சினையின் தொடக்கம் ஒரு எளிமையான கேள்விதான்.

“பழங்குடி மக்கள் மீது புல்டோசரை ஏற்றும் கொலைகார டாடா நிறுவனம், தன் குற்றத்தை மறைப்பதற்காக, அதே பழங்குடிப் பெண்களை புல்டோசர் ஓட்ட வைக்கிறது. இதைக் கலையழகு மிளிரும் படமாக மாற்றிக் கொடுத்து அதற்காக கூலி வாங்கிக் கொள்வது குற்றமில்லையா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

ஒரு படைப்பாளி என்ற முறையில் அந்தப் பெண்களைப் பார்த்து ரொம்ப “ஃபீல்” ஆகித்தான் நான் படமெடுத்தேன். காசு இரண்டாம் பட்சம்தான் என்பதுதான் லீனா தரும் விளக்கம்.

தேஜஸ்வினியை எடுப்பதற்கு லீனாவை அமர்த்திக் கொண்டதைப் போலவே, சட்டிஸ்காரில் தம் “படைப்பு” நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக, சில போராளிகளை அமர்த்திக் கொண்டது டாடா நிறுவனம். அவர்கள் “சல்வா ஜுடும்” என்று அழைக்கப்பட்டார்கள்.

அவர்கள் லீனாவைப் போன்ற படைப்பாளிகள் அல்லர். அவர்களுக்கு காசுதான் முதல் பட்சம். சோத்துக்கு வழியில்லாத அந்த ஊரில், மாதம் 1500 சம்பளம் கொடுத்து சோறு போட்டு யூனிபார்ம் மாட்டி விட்டு ஒரு ஏ.கே 47 துப்பாக்கியையும் கொடுத்தார் டாடா.

தங்கள் வயிற்றுப் பசியைத் தவிர வேறு எந்த ஃபீலிங்கின் அடிப்படையிலும்  அந்தப் “போராளிகள்” இந்த புராஜக்டை ஒப்புக் கொள்ளவில்லை. நட்சத்திர விடுதிகளையோ, ஏ.சி பார்களையோ, சர்வதேச விருதுகளையோ, நுனி நாக்கு ஆங்கிலத்தையோ, மார்க்சியத்தையோ அவர்கள் அறிந்ததுமில்லை. மூணு வேளை சோறு, 1500 ரூபாய் என்பதற்கு மேல் வேறு எத்தகைய மேன்மையான படைப்புணர்வாலும் அவர்கள் தூண்டப்படவில்லை.

இருந்த போதிலும், “தான் செய்வது இன்னதென்று அறிந்திராத இந்தப் பாவிகள்”, மனித உரிமை ஆர்வலர்களால் “கூலிப்படை” என்றே குற்றம் சாட்டப்பட்டார்கள். சட்டப்படி அமையாத கூலிப்படை எதையும் அரசியல் சட்டம் அனுமதிப்பதில்லை என்பதால், அந்தக் சல்வா ஜுடுமைக் கலைக்கும்படி உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்து விட்டது.

வயல்வெளிகளை கைப்பற்றித் தருவதற்கு சல்வா ஜுடும். மக்களின் மனவெளியைக் கைப்பற்றித் தருவதற்கு படைப்பாளி – என்றும் நாம் இதை விளங்கிக் கொள்ளலாம். முதல் குற்றத்தை நிரூபிப்பது எளிது. மனித உரிமை ஆர்வலர்கள் நிரூபித்துமிருக்கிறார்கள். இரண்டாவது குற்றத்தை நிரூபிக்க முடியாது. நிரூபித்தாலும், கருத்துரிமை ஜென்டார்மேர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நாம் புரிந்து கொள்வோம். டாடாவுக்கு ஒரு தேஜஸ்வினி என்றால் மோடிக்கு ஒரு சத்பவன யாத்ரா.

பழங்குடிப் பெண்களை டாடா கைதூக்கி விட்டதைப் போல, இஸ்திரிப் பெட்டியும் தையல் மிசினும் கொடுத்து குஜராத் முஸ்லிம் பெண்களை நரேந்திர மோடி கைதூக்கி விடவில்லையா? முஸ்லீம் மதகுருமார்கள் சிலரே மோடியைப் பாராட்டவில்லையா? அந்த “குஜராத் தேஜஸ்வினி”களைப் பற்றியும் லீனா படமெடுப்பாரா?

இப்படிக் கேட்பது விதண்டாவாதம் என்று பலர் இரகசியமாக குமுறலாம். தன்னால் பதிலிருக்க முடியாத வாதங்களை, முத்திரை குத்தி ஒதுக்கத்தான் விதண்டாவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தினான் ஆதிசங்கரன் என்பார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

சங்கரனையே சைடு வாங்கி முந்துகிறார் ஷோபாசக்தி. தேஜஸ்வினி விவகாரம் பற்றி கேட்டதற்கு, “கார்ப்பரேட் நிறுவனங்களை நியாயப்படுத்தும் எந்தச் செயலும் எனக்கு ஏற்புடையதல்ல” என்று தனது கருத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறாராம்.

இராக்கின் மீது அமெரிக்க இராணுவம் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தபோது, “அந்நியத் தலையீடு எந்த வடிவத்தில் எங்கே நடந்தாலும் அதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது” என்று வாஜ்பாயி சொன்னதைப் போலல்லவா இருக்கிறது!

இந்தப் பச்சோந்திகளுக்குப் பெயர் படைப்பாளிகளாம்! கருத்துரிமைப் போராளிகளாம்! இவர்கள்தான் அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்களாம்!

♦ ♦

“நான் உண்மைக்குப் புறம்பான எந்த செய்தியையும் அந்தப்படத்தில் சொல்லவில்லை” என்கிறார் லீனா.

நாங்கள் லீனாவின் கூற்றை நம்புகிறோம்.

கலிங்க நகரில் பழங்குடிகளை டாடா கொன்றதும் உண்மை, தேஜஸ்வினிகளுக்கு வாழ்வளித்ததும் உண்மை. இரண்டாவது உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் லீனா. உலகமே கலிங்கநகர் பற்றிப் பேசினால் என்ன? “மற்றதுபற்றிப் பேசுவதல்லவோ பின் நவீனத்துவம்! அதைத்தானே பேசுகிறார் லீனா- இல்லையா?

“டாடா கொலைகாரனா, கருணாமூர்த்தியா?” என்று கேட்கிறார்கள்.

அதுவா இதுவா என்ற கேள்விக்கு அதுவும் இதுவும்தான் என்பதல்லவோ பின் நவீனத்துவத்தின் பதில். இருமை எதிர்வுகளுக்குள் (binaries) உண்மைகளை அடைக்கும் இந்த மடமை, நிறப்பிரிகையின் ஒளி பரவிய தமிழ் மண்ணில் இன்னுமா மிச்சமிருக்கிறது?

உண்மையின் பன்மைத் தன்மையை நிராகரிக்கும் சாராம்சவாதத்துக்கும், பகுத்தறிவின் பயங்கரவாதத்துக்கும் சவக்குழி தோண்டிய நிறப்பிரிகை குருகுலத்தின் கடப்பாரைகள் எங்கே? அவை அனைத்தின் மீதுமா புல் முளைத்துவிட்டது?

நேர்மை, அறம் என்ற துருப்பிடித்த பெருங்கதையாடல் வாட்களால் குத்திக் கிழிக்கப்படும் இந்தப் போராளியைக் காப்பாற்ற அசடுகளும், அரை வேக்காடுகளும் தவிர ஒரு அறிஞன் கூடவா தமிழகத்தில் மிச்சமில்லை?

சட்டமன்றங்கள், என்.ஜி.ஓக்கள், கார்ப்பரேட்டுகள் போன்ற கலர் கலரான அதிகாரத் தாடகைகளின் மார்பில் முலைப்பால் பருகிக் கொண்டிருக்கும் பின் நவீனத்துவக் கலகக்காரர்கள், “பிழைப்புவாதமே இந்த நூற்றாண்டின் புரட்சி” என்று ஒரே ஒருமுறை முழங்குவதற்காகவாவது, வாய்திறக்க மாட்டார்களா?

தான் எடுத்தது ஒரு ஆவணப்படமென்றும், அந்த வகையில் தானும் ஒரு படைப்பாளிதான் என்றும் ஊருக்கே அறிவித்து விட்டு லீனா ஜீப்பில் ஏறிய பின்னரும், “எலேய் நீ என்ன படைப்பாளியா விளம்பரப் படம்னு சொல்லிட்டுப் போ ” என்று அவரை காப்பாற்றி விடுவதும், அவரது படைப்புக்கு அவரிடமே பொருள் விளக்கம் கோருவதும் அடாவடித்தனமில்லையா? பிரதிக்கு ஆசிரியனைப் பொறுப்பாக்குவது அநீதியில்லையா? 

கொலைகாரன் டாடாவை எப்படி கருணாமூர்த்தியாக சித்தரிக்கலாம் என்று ஒரு படைப்பாளியைக் கேட்பதும், என் கவிதையை நீ ஏன் எழுதவில்லை என்று ஒரு கவுஜாயினியை கேட்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதானே! இது பாசிசமில்லையா?

மெய்நிகர் உலகில் வினவு நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாசிச வெறியாட்டத்திலிருந்தும், “கரசேவை”யிலிருந்தும் கவுஜாயினியின் படைப்புரிமையையும் அதன் வழி கார்ப்பரேட்டுகளின் கருத்துரிமையையும் காப்பாற்றுவதற்கு கருத்துரிமைக்  காவலர் வருவாரா?

லீனா மணிமேகலை பேசிவிட்டார். அவரது நண்பர்கள் எதிரிகள் அனைவரும் அவரவர் கருத்தைப் பேசுகிறார்கள்.

கருத்துரிமையின் காவலர்தான் மவுனம் சாதிக்கிறார். கருத்து சொல்லாமலிருப்பதற்கான உரிமை கூட ஒரு வகையில் கருத்துரிமைதான். நாம் மறுக்கவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 20(3) பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மவுனம் சாதிக்கும் உரிமையை வழங்குகிறது. Right to Silence!

சை..லேன்ஸ்..!

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?

11
தோழர்

வினவில் ஏற்கனவே வெளியிடப்பட்ட புதிய கலாச்சாரத்தின் இந்தக் கட்டுரையை மீண்டும் அவசியம் கருதி வெளியிடுகிறோம். தென் ஆப்பிரிக்காவின் மறைந்த கிரிக்கெட் வீரர் குரோனியே கிரிக்கெட் சூதாட்டத்தில் பிடிபட்ட போது எழுதப்பட்ட கட்டுரை இது. தான் ஊழல் செய்திருந்தாலும் தேசத்திற்கு துரோகம் செய்யவில்லை என்று தனது ‘ஒழுக்க’த்தை நியாயப்படுத்துகிறார் குரோனியே. உலகறிந்த ஒரு விளையாட்டு வீரனே இப்படி என்றால் முற்போக்கு முகாமில் விதவிதமாக வளைய வரும் அறிவாளிகள் எப்படி இருப்பார்கள் என்பதை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது.

போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் எப்படி ஆபத்தானவர்களாக உருவெடுப்பார்கள் என்பதை கட்டுரை கச்சிதமாக எடுத்துரைக்கிறது. இவர்களில் சொந்த வாழ்க்கை சிக்கல்களால் ஒதுங்கியவர்கள் பொதுவில் ஒரு குற்ற உணர்வுடன் நம்மால் புரட்சிக்கான வேலை செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் கொண்டவர்கள். சிலரோ அதே சொந்த வாழ்க்கையை மேன்மைபடுத்துவதற்காக புரட்சியெல்லாம் வேலைக்காகாது என்று பொது வாழ்க்கையை எள்ளி நகையாடுகிறார்கள். அதன்படி புரட்சிக்காக கடமையாற்றும் தோழர்களை விட தான் உயர்ந்தவன் என்று கற்பித்துக் கொண்டு சுய இன்பம் அடைகிறார்கள். அதாவது சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு அறிவியல் பார்வை பெறும் இவர்கள் அதிலிருந்து புரட்சியை நோக்கி பயணித்தவர்கள் பின்பு அதை கைவிட்டதும் தேர்ந்த காரியவாதிகளாக எப்படி உருவெடுக்கிறார்கள் என்பதற்கும் அதற்கு அந்த ‘மார்க்சிய அறிவு’ எப்படி மலிவாக பயன்படுகிறது என்பதும் முக்கியமானது. இது போக ஏதோ ஒரு வகையில் முற்போக்கு பேசும் அறிவாளிகள் கூட தமது பிழைப்புவாதத்திற்காக சமரசம் செய்து கொள்ளும் போது யார் யோக்கியன் என்று சுய திருப்தி அடைகிறார்கள்.

அந்த சுயதிருப்திதான் இறுதியில் தன்னை ஒரு அக்மார்க் காரியவாதியாக மாற்றிக் கொள்கிறது. போலிக் கம்யூனிஸ்டுகளில் பாரம்பரியத்திலிருந்து வந்த லீனா மணிமேகலை அதற்கோர் உதாரணம். எனில் இந்தப்பட்டியலில் இத்தகைய தனிநபர் அறிவாளிகள் பலரையும் பார்க்கலாம். மார்க்சியத்தையும், புரட்சியையும் நேசிக்கும் எவரும் இத்தகைய எதிர்மறைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதும், தனது நேர்மறை குறித்து பரிசீலிப்பதும் அவசியமாகிறது. ஏனெனில் ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை என்பது கம்யூனிசத்திற்கும், கம்யூனிசத்திற்கு எதிரான சித்தாங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான். அந்த போராட்டத்தை உற்சாகத்துடன் நடத்துவதற்கு இத்தகை பரிசீலனை அவசியமாகிறது. பரிசீலியுங்கள்!

________________________________________________________________________________________________

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம்.

________________________________________________________________________________________________

தோழர்நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்” என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. “நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.” அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. “நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.”, “நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.”, “புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்” என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை!

போவோர் வருவோரெல்லாம் குரோனியேவைக் காறித்துப்புகிறார்கள். எப்போதுமே கூட்டத்தோடு கூட்டமாக தரும அடி போடுவது மிகச் சுலபமான காரியம். இப்படித்தான் ஒரு விலை மாதுவுக்கு தரும அடி போட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் ஏசு சொன்னார், “உங்களில் பாவம் செய்யாதவர்கள் அவள் மீது கல் எறியுங்கள்.” உடனே அந்த யோக்கியர்கள் அனைவரும் கல்லைக் கீழே போட்டு விட்டார்கள். தானும் பாவிதான் என்றால், கல்லை தன்மீதே எறிந்து கொள்ளலாமே என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? “அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது” என்றார் மாவோ. நெருப்பு மேலே பட்டால் சுடும் என்பது இரண்டாவது பிரச்சினைதான். அந்த நெருப்பை எடுப்பதற்கே நமக்குக் கை வருவதில்லையே, அதுதான் மூல முதல் பிரச்சினை.

குரோனியே நிறவெறி பிடித்த தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஆட்டக்காரன். விளையாட்டையே ஒரு பணம் கறக்கும் தொழிலாகக் கொண்டவர்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இத்தகைய பேர் வழிகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும் பரிசீலனை செய்வதும் நியாயம்தானா என்று சிலர் கருதக் கூடும். நேர்மை, தியாகம், உழைப்பு போன்ற சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு உன்னதமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கற்பது சரியென்றால், இழிந்த பண்புகளைக் களைந்து கொள்வதற்கு இழிந்தவர்கள் எனப்படுவோர் அந்நிலையை எங்ஙனம் அடைந்தனர் என்று அறிந்து கொள்வதும் சரியானதுதான். எனவே, குரோனியே மீதான விசாரணையின் ஊடாக நம்மை நாமே குறுக்கு விசாரணையும் செய்து பார்த்துக் கொள்வோம்.

ஒரு இளைஞனாக தென் ஆப்பிரிக்க அணியில் சேர்ந்தபோது இப்போது கூறுவதைப்போல தேசத்தை, ஆட்டத்தை, அணியை குரோனியே நேசித்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நேசித்திருப்பார். அன்று ஒருவேளை யாரேனும் ஒரு சூதாட்டத் தரகன் தோற்பதற்காகக் காசு கொடுக்க முன் வந்திருந்தால் அதை அவன் முகத்தில் எறிந்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? எறிந்திருப்பார். இன்றோ, அவருடைய பணத்தாசை கூண்டில் ஏற்றப்பட்டவுடன் அவருக்குத் தனது அன்றைய நாட்டுப் பற்று நினைவுக்கு வருகிறது.

கருணாநிதிக்கு அந்த நாளில் அரைக்கால் சட்டையுடன் திருவாரூரில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய காட்சிகள் நினைவுக்கு வருவதைப் போல. காங்கிரசுக்குத் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் போன்றோருக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் அனுபவித்த போலீசு சித்திரவதைகள் நினைவுக்கு வருவதைப் போல. ஒரு மாதிரியாக ஓய்வு பெற்று உறங்கும் முன்னாள் புரட்சிக்காரர்களுக்குத் தாங்கள் ஓய்வு உறக்கமின்றிப் பாடுபட்ட நாட்கள் கனவில் வருவது போல.

தான் இன்னமும் தேசத்தை நேசிப்பதாகத்தான் கருதுகிறார் குரோனியே. “பணத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி” என்று தன்னைத்தானே அவரால் மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. “சூதாடியிடம் கை நீட்டிய அந்தத் தருணம் என்பது கம்பீரமான வாழ்க்கையில் நேர்ந்த ஒரு எதிர்பாராத சறுக்கல். நீண்ட தெளிந்த நீரோடையில் கலந்த சிறு கசடு” என்று அவர் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார். தவறிழைத்தவர்கள் பலரும், “அது தனக்கே தெரியாமல் தன்னில் நிகழ்ந்த விபத்து” என்றே நிரூபிக்க முயல்கிறார்கள். தன்னுடைய இயல்புக்கே முரணான இந்த இழிசெயலை எப்படிச் செய்தேன் என்று தனக்கே புரியவில்லை என்கிறார்கள். இப்படியொரு பதிலால் திகைத்துத் தடுமாறும் மனைவிமார்கள் “எம் புருசன் சொக்கத் தங்கமாச்சே. அந்தச் சிறுக்கி என்ன மருந்து வைத்து மயக்கினாளோ” என்று மந்திரவாதியிடம் ஓடுகிறார்கள். நாம் மந்திரவாதியிடம் ஓடத் தேவையில்லை. அதைவிட சூதாட்டத் தரகனிடம் கை நீட்டிக் காசு வாங்கும்போது குரோனியே எப்படிச் செயல்பட்டிருப்பார் என ஆய்வது பயன் தரும்.

ஒரு ஊழல் சிந்தனை செயல் வடிவம் பெறும்போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத்துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான். குரோனியே ஒரு தூய கிறித்தவ நல்லொழுக்க சீலர். கிரிக்கெட் அணிக்குள்ளேயே இருந்த பைபிள் குழுவின் தலைவர். எனவே அணியில், தான் மட்டும்தான் சபல புத்திக்காரனா, தனக்கு ‘தோழர்கள்’ இருக்கிறார்களா என்று அவர் அறிய விரும்புகிறார். “இந்த ஆட்டத்தில் தோற்றால் இத்தனை ஆயிரம் டாலர் கிடைக்கும் என்ன சொல்கிறீர்கள்” என்று போகிற போக்கில் ஒரு நகைச்சுவை போல சக வீரர்களிடம் எடுத்து விடுகிறார். இவன் கிண்டல் செய்கிறானா ஆழம் பார்க்கிறானா என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதை சிரித்து ஒதுக்குகிறார்கள், புரிந்தவர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.

இப்போது குரோனியே தனி ஆள் இல்லை. அணிக்குள் ஒரு ஊழல் அணி இருக்கிறது. ஊழல் அமைப்பு ரீதியாகத் திரண்டு விட்டது. இனி அது தன்னுடைய தரும நியாயங்களைப் பேச வேண்டும். “நான் காசு வாங்கியது உண்மை. ஆனால், அதற்காக எந்த ஒரு ஆட்டத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் குரோனியே. அதனால்தான் “தேசத்தை நேசிக்கிறேன் பணத்தையும் நேசிக்கிறேன்” என்று கவிதை சொல்கிறார்.

ஒரு போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு நிர்வாகம் ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறது. ஒரு விசேடச் சலுகையாகத்தான் நிர்வாகம் அதைச் செய்கிறது. ஆனால், அதற்காகத் தொழிலாளர்களின் கோரிக்கை எதையும் அவர் விட்டுக் கொடுத்ததாக நிரூபிக்க முடியாது. விட்டுக் கொடுக்கவில்லை என்றே கொள்வோம். அவ்வாறு விட்டுத் தரவில்லை என்பதே அவர் பெற்ற சலுகையை நியாயமாக்கி விடுமா? மற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்காத அந்தச் சலுகை தனக்கு அளிக்கப்படுவது குறித்து அவர் கூச்சப்படவில்லை; அதைப் பெறுவதற்காக அவர் வெட்கித் தலைகுனியவுமில்லை. தொழிலாளர் கோரிக்கையை விட்டுத் தரவில்லை எனும்போது இந்தச் சலுகையைப் பெறுவதில் தவறென்ன என்று கேட்கிறார். அனைவருக்கும் வேலை என்பதுதானே கட்சியின் முழக்கம், அதில் என் மகன் மட்டும் கிடையாதா என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறார். இப்படிப் பேசுவதற்காக அவர் கடுகளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் அவருடைய தரத்துக்குச் சான்று. ஒரு வரியில் சொன்னால், குரோனியே கூறுவதைப் போல, இவர் சேவையையும் நேசிக்கிறார், சன்மானத்தையும் நேசிக்கிறார். திருவாரூரில் புறப்பட்ட கழகத் தொண்டர் சன் டிவி அதிபரான கதையும் இதுவேதான்.

தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஒரு அடிமட்ட கட்சித் தொண்டனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் தலைவர்களே சுருட்டிக் கொள்கிறார்களென்றும் தன்னைப் போன்ற தொண்டனுக்கு ஆட்சியால் பயனில்லை என்றும் அலுத்துக் கொள்வான். “ஒரு வேலைவாய்ப்பு, ஒரு புறம்போக்கு நிலம், ஒரு காண்டிராக்டு… எதுவுமே இல்லையென்றால் எதற்காகத்தான் பாடுபட்டோம்?” என்று மிக யதார்த்தமாகக் கேட்பான். “தம்பி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதல்லவா உன் லட்சியம்” என்று கேட்டால், “நானும் ஏழைதான்; என்னுடைய சிரிப்பில் இறைவனைப் பார்த்துக் கொள்” என்பான். பதவியை மேல்துண்டு என்றும், கொள்கையை வேட்டியென்றும் உவமானம் சொன்னவர்கள் இன்று ஊரறிய அம்மணமாக நிற்கும்போதும் தங்கள் இடுப்பில் வேட்டி இருப்பதாகத்தான் விளக்கம் சொல்கிறார்கள்.

தெலுங்கானா உழவர் போராட்டத்தைச் சித்தரிக்கும்மாபூமி‘ என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயியின் மகனான கதாநாயகன், விவசாயிகளுக்கு நிலத்தைப் பிரித்து விநியோகம் செய்கிறான். தனக்கும் நிலம் ஒதுக்குமாறு மகனிடம் கெஞ்சுகிறான் தந்தை. ஊருக்கெல்லாம் கொடுத்து முடித்தபின் எஞ்சியிருக்கும் ஒரு துண்டு நிலத்தைத் தந்தைக்குக் காட்டுகிறான் மகன். முதலில் தந்தைக்கு நிலத்தை ஒதுக்கி விட்டு, “நான் தந்தையை நேசிக்கிறேன் மக்களையும் நேசிக்கிறேன்” என்று அவன் கவிதை சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் அந்தக் கவிதை அவனை வில்லனாக்கியிருக்கும். குரோனியேவைப் போல. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குரோனியே பணத்துக்காக நாட்டுக்கும் அணிக்கும் துரோகம் செய்து விட்டதாக இந்தக் கணம் வரை ஒப்புக் கொள்ளவில்லை. அதுவும் இதுவும்தான் என்கிறார்.

காசுக்குப் பாய் விரிப்பவள் காதலி அல்ல, சன்மானத்திற்கு எதிர்பார்த்து செய்யும் வேலை சேவை அல்ல என்று தெரிந்தும் ‘அதுவும் இதுவும்தான்’ என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள். அதுவும் இதுவும் என்ன இன்னும் பலதும் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை. இவற்றில் அதுவா இதுவா என்று தெரிவு செய்ய வேண்டிய தருணங்கள் பல வருகின்றன. பல நேரங்களில் அந்தத் தெரிவு வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது. சிறியதொரு சறுக்கல் என்று நீங்கள் கருதுவது உங்களைத் திரும்ப முடியாத அதல பாதாளத்திலும் கூடத் தள்ளி விடுகிறது. நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.

உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது. ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வின் சோதனைச் சாலை சமூகம். நீங்களோ நோயாளி அல்ல குற்றவாளி.

உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள். ‘அதுவும் இதுவும் தான்’ என்று குரோனியே சொன்னதைப் போல நீங்களும் ஒரு புதிய கவிதை சொல்லக் கூடும்.

_______________________________________
முதல் பதிப்பு அக்டோபர் 30,2010

புதிய கலாச்சாரம், ஜூலை, 2000

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குடிகார ‘பார்களை’ விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

5

ஜனாதிபதி-தேர்தல்குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்கள் யார்? இந்திய பேரரசி சோனியா, வங்கத்து அரசி மம்தா, தமிழகத்து ராணி ஜெயலலிதா மூவரும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் ‘ஆண்கள்’ கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது. அந்த வகையில் இந்தத் தேர்தல் ஏதோ ஒரு வகையில் ‘பெண்ணுரிமை’க்கு இலக்கணம் படைத்திருக்கும் தேர்தல் எனலாம்.

ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்று நீங்கள் கேட்கலாம். மானாவாரியாக முத்திரை குத்துவதுதான் இந்த ஸ்டாம்பின் வேலை என்றாலும், கூட்டணிதான் இனி மத்தியில் எடுபடும் எனுமளவுக்கு, சமூக நீதி காத்த கட்சிகளாக கருதப்படும் சிற்றரசர்கள் ஆங்காங்கே தங்களது படை பரிபாலனங்களுடன் செட்டிலாகிவிட்ட் நிலையில், நாளைக்கே எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் ரப்பர் ஸ்டாம்ப் அப்போது மட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கருத்தைத்தான் சோ ராமசாமியும் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்த இக்கட்டிலும் தமது பார்ப்பனிய மேலாண்மையை செலுத்தும் அளவுக்கு குடியரசுத் தலைவரின் குட்டியூண்டு அதிகாரம் அவருக்கு தேவைப்படுகிறது.

காங்கிரசும், பா.ஜ.கவும் கூட தமது எதிர்கால குதிரைப் பேரங்களுக்கு பிரச்சினையில்லாத ஒரு ஸ்டாம்பையே எதிர்பார்க்கிறார்கள்.  சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பில் தற்போது காங்கிரசுக்குத்தான் கொஞ்சம் பெரும்பான்மை இருக்கிறது என்றாலும் அதுவே நிம்மதியை வழங்கிவிடவில்லை. நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள் என்று தி.மு.கவை வேண்டுமானால் காங்கிரசு கருதிக் கொள்ளலாம். மற்ற ‘அடிமைகள்’ அப்படி இல்லை.

குடும்ப ஆட்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனுமளவுக்கு இந்திய அரசியல் வானம் பல குடும்ப நட்சத்திரங்களை அவ்வப்போது குட்டி போட்டது போன்று தள்ளிவிடுகிறது. உ.பி.யில் முலாயாமின் மகன் அகிலேஷ் யாதவ்தான் ஆட்சிக்கு வந்தாரென்றால் வந்த சூட்டோடு ராஜினாமா செய்த பாராளுமன்றத் தொகுதியில் மனைவி டிம்பிள் யாதவை நிறுத்தி ஏகமனதாகவும் வெல்ல வைத்திருக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் இதர காரணங்களுக்காக இந்த தேர்தலில் வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை என்று காங்கிரசு அறிவித்திருந்தது. ஆனாலும் முலயாம் சிங் யாதவ் தனது தோரணையை சற்று கூட்டிவிட்டார்.

அதுவும் அந்த தோரணை மம்தா பானர்ஜியின் பெருந்தோரணையுடன் அணி சேர்ந்து விட்டது. வங்கத்து ராணி மம்தாவோ கல்கத்தாவில் இருந்து கொண்டு சி.பி.எம்மை வீழ்த்திய பெருமை கொண்டு காங்கிரசை கேட்பார் கேள்வி இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். இந்த சுட்டிக் குழந்தையின் சேட்டைகளை ரசிக்கவும், கண்டிக்கவும் முடியாமல் பேரரசி சோனியா தவிக்கிறார். இவ்வளவிற்கும் மம்தா சீறிய காரணத்தால் ரயில்வே மந்திரியை மாற்றினார்கள், ரயில்வே பட்ஜெட்டை திருத்தினார்கள், மே வங்கத்திற்கு கேட்ட உதவித் தொகையை மீட்டருக்கு மேலே இமயமலை உயரத்தில் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆனாலும் இந்த அரசிகள், பேரரசி, குறுநில மன்னர்கள் பொறுக்கித் தின்னும் ஜனநாயக அரசியலில் கொட்டை போட்டவர்கள் என்பதால் பெருச்சாளிகள் ஒன்றாக சேர்ந்து முடிவெடுக்க திணறுகின்றன. பலரது சுயநலங்களும் பல்வேறு திட்டங்களோடு பொது நன்மை குறித்து பேசிக் கொண்டால் அங்கே வெட்டு குத்து நடக்குமா, இல்லை வேடிக்கை விளையாட்டு நடக்குமா? இரண்டும் நடக்கின்றன என்பதுதான் இந்த ரப்பர் ஸ்டாம்ப் தேர்தலின் சுவராசியம்.

2014 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு கிங் மேக்கராக இருந்து கொஞ்சம் அதிர்ஷடமும்  கூடினால் பிரதமர் எனும் அந்த இலட்சியத்தை வீழ்த்தி விடலாம் என்று கணக்கு பண்ணும் ஜெயலலிதா முந்திக் கொண்டு பி.ஏ.சங்மாவை அரங்கிற்கு கொண்டு வந்தார். கூடவே பிஜூ ஜனதா தளத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கும் அதற்கு பக்க வாத்தியம் வாசித்தார். ஒடுக்கப்பட்டோர் நலன் என்ற பெயரில் தனது பழங்குடி அடையாளத்தை முன்வைத்தும் சங்மா கச்சேரியை துவக்கினார். சங்மாவால் ஒன்றும் ஆகாது என்றாலும் புது தில்லியில் தனது பேரத்திற்கு ஒரு மதிப்பு வேண்டும் என்பதுதான் ஜெயாவின் கணக்கு. இந்த கணக்கில் தான் வெறும் பூஜ்ஜியத்தின் மதிப்பைத்தான் கொண்டிருக்கிறோம் என்பதும் சங்மாவுக்குத் தெரியும். எனினும் சில பல குருட்டு அதிர்ஷங்கள் கூடி வந்தால் ராஷ்டிரபதி பவனில் குடியேற முடியாதா என்பது அவர் கனவு.

ஆனால் இந்தக் கனவை அவரது கட்சித் தலைவர் சரத்பவாரே குப்பையில் எறிந்து விட்டார். மற்றபடி இந்திய அரசின் துணை இராணுவப் படைகள் மத்திய இந்தியாவில் பழங்குடிகளை வேட்டையாடும் நிலையில் அதே பழங்குடி மக்களின் நலன் என்ற பெயரில் சங்மா நடத்தும் ஆபாசத்தை அடையாள அரசியல் பேசும் முற்போக்காளர்கள் எவரும் கண்டிக்க வில்லை. ஏனெனில் அந்த அணுகுமுறையில் அவர்களுக்கும் சங்மாவுக்கும் வேறுபாடில்லை.

ஜெயாவின் ஆளுமை மூட்டைகளில் பெருமளவை வைத்திருக்கும் மம்தா பானர்ஜியும் மத்திய மந்திரியாக இருந்து மாநில முதலமைச்சராக மாறியவர். இரண்டிலும் தனது பிடி இருக்க வேண்டுமென்றால் போட்டியில் ஒரு ஆளாக பேசப்படவேண்டும் என்பதில் கருத்தாகவே இருக்கிறார். சோனியாவைப் பொறுத்த வரை அடுத்த தேர்தலில் தனது சீமந்த புத்திரன் ராகுலை பிரதமராக்க வேண்டுமென்றால் கூட்டணி கணக்குகளில் பிரச்சினை வந்தாலும் நேர் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான பெருச்சாளித்தனம் கலந்த ரப்பர் ஸ்டாம்ப் வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அந்த ஸ்டாம்ப் யார் என்பதைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரசு காரியக் கமிட்டி சோனியாவுக்கு அளித்திருக்கிறதாம். இந்த சர்வாதிகரத்திற்குப் பெயர்தான் ஜனநாயகமாம். இதையே தி.மு.கவிலோ, இல்லை அம்மா தி.மு.கவிலோ செய்தால் அதை இளக்காரமாகப் பார்ப்பார்கள்.

அந்த வகையில் சோனியா தேர்வு செய்த நபர் பிரணாப் முகர்ஜி. வெளிநாட்டிலிருப்பதெல்லாம் கருப்பு பணமில்லை என்று கூறுமளவுக்கு இவர் பெரும் பெருச்சாளிதான் சந்தேகமேயில்லை. மேலும் இவர் வங்கத்தவர் என்பதால் மம்தாவின் ஆதரவையும் சுலபத்தில் பெற்று விடலாம் என்று சோனியா நினைத்திருக்கக் கூடும். ஆனால் மேற்கு வங்கத்தில் காங்கிரசு ஆதரவு இல்லாமலேயே மம்தா உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதால் கல்கத்தாவைப் பொறுத்த வரை காங்கிரசை முகவரி இல்லாமல் செய்ய விரும்புகிறார். ஆனால் தேசிய அளவில் பலன்களை பெறுவதற்கு மட்டும் காங்கிரசு தேவை என்ற அளவில் கூட்டணியில் தொடருகிறார், தொடர்ந்து தொல்லைகளையும் கொடுக்கிறார். ஆதலால் பிரணாப்பின் வங்காளி இமேஜால் இங்கு பருப்பு வேகவில்லை.

நேற்று சோனியாவைச் சந்தித்த மம்தா பானர்ஜி செய்த  முதல் வேலை முகர்ஜியின் பெயரை நீக்கியதுதான். அந்த அதிர்ச்சியிலிருந்து சோனியா மீளுவதற்குள் மம்தா மூன்று பெயர்களை குடியரசு தலைவர் தேர்தலுக்காக முன்வைத்தார். அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோமநாத் சாட்டர்ஜி என்ற அந்த மூவர் பெயரில் மன்மோகன் சிங் பெயரைப் பார்த்து அடுத்த அதிர்ச்சி வந்திருக்கும். பிரதமர் என்ற பதவியில் சும்மா இருப்பதைப் போன்று ஒரு பாவனையில் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கு பரபரப்பாக அடிமை உத்தியோகம் செய்யும் மன்மோகன் சிங்கின் ‘அமைதி’ மம்தாவுக்கு பிடித்திருக்குமோ?

இல்லை இந்த முறையோடு வீட்டுக்கு போய்விடும் அவருக்கு மற்றுமொரு ஐந்து ஆண்டுகள் பவனில் உலா வரலாம் என்ற ஆசையை காண்பிக்கலாம் என்று நினைத்திருப்பாரோ? ஆனாலும் ஒரு பிரதமர் பதவி வகித்திருப்பவரை உடனே குடியரசுத் தலைவர் என்ற ரப்பர் ஸ்டாம்பில் குந்த வைக்க நினைத்ததின் மூலம் மன்மோகனை வரலாறு மறக்க முடியாத அளவுக்கு கேலி செய்திருக்கிறார் மம்தா.

சி.பி.எம்மை சிரிப்பாய் சிரிக்க வைத்த சோமநாத் சட்டர்ஜியின் பெயர் இயல்பாகவே மம்தாவின் லிஸ்ட்டில் இருப்பதற்கு எல்லா நியாயமும் உண்டு. சி.பி.எம்மை போட்டுத்தாக்குவதற்கு இந்த அடிமை நிறைய பயன்படுவார் என்றும் மம்தா நினைத்திருக்கலாம். ஆனாலும் என்ன, பாராளுமன்ற சபநாயகர் என்று பெருமையோடு கூடவே குடியரசுத் தலைவர் என்ற மகா பெருமையும் பலித்து விடுமோ என்று வழக்கத்திற்கு மாறாக ஐந்து ரசகுல்லாக்களை அவர் முழுங்குவதாக கொல்கத்தா செய்திகள் கூறுகின்றன.

தங்கள் ஆளை வைத்து தங்களையே கேலி செய்யும் இந்த துன்பியல் காட்சியின் மேடையில் அவஸ்தைப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னமும் முடிவெடுக்க வில்லையாம். இவர்கள் முடிவு எவரையும் பாதிக்காது, யாரும் சீண்ட மாட்டார்கள் என்ற யதார்த்தம் தெரிந்திருந்தும் நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை. இதில் வலது கம்யூனிஸ்ட் பரதன், ஒரு தலித் பெண் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று அடையாள அரசியலின் அடுத்த பம்பரை போட்டிருக்கிறார். பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இதை விட கேலி செய்ய முடியுமா என்ன?

பரமக்குடி தலித்துக்களை சுட்டுக் கொன்ற பாசிச ஜெயாவை சமீபத்தில் இரண்டு வலதுகள் தா.பாண்டியன், நல்லக்கண்ணு இருவரும் சந்தித்தனராம். அதுவம் மானங்கெட்டு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அவரை ஆதரிப்பது என்று. முத்துராமனின் ஆவி மட்டுமல்ல, உயிரோடு இருக்கும் எவரும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள். இந்த இலட்சணத்தில் இவர்களது தேசியத் தலைமை தலித் பெண் என்ற ஒடுக்கப்பட்டவர்களின் அஸ்திரத்தை எடுத்திருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.கவில் ஒரு தலித் பெண் முதலமைச்சராக வேண்டும் என்று இவர்கள் கோரினால் என்ன நடக்கும்? கைது செய்யப்பட்ட வலதுகளின் சீதபேதியும், வாந்தி பேதியும் தமிழக சிறைகள் முழுக்க மணக்கும்.

மம்தா குறிப்பிட்ட முதல் நபரான அப்துல் கலாம், ஏற்கனவே பாரதிய ஜனதாவால் கொண்டு வரப்பட்டவர். ராஷ்டிரபதி பவனில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி இந்தியா முழுவதும் குழந்தைகளை துன்பப்படுத்தும் ஒன்றைத் தவிர வேறு எதுவும் இவர் செய்ததில்லை. 2002 குஜராத்தில் இவர் மவுனமாக இருக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே இவருக்கு பிடிக்கும். ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்தையே இந்தியா வல்லரசாகும், ஏழைகள் பணக்காரர்களாகலாம் என்று இவர் நடுத்தரவர்க்கத்தின் மூளையில் செல்வாக்குடன் குடியேறியதை வைத்து இவருக்கும் ஒரு இடத்தை ஊடகங்கள் வைத்திருக்கின்றன. எல்லா அரசவைகளிலும் ஒரு கோமாளிக்கு எப்போதும் இடம் உண்டுதானே? ஆனாலும் இந்தக் கோமாளியின் சிரிப்பை உணர்ந்தவர் அதிகமில்லை என்பது நமது நாட்டின் ரசனைக் குறைவைக் காட்டுகிறது.

ஆனாலும் இவர் காங்கிரசு கும்பலால் விரும்பப்படவில்லை. மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் இந்த முசுலீம் பெயரில் இருக்கும் “ஐயரை” மீண்டும் அரியணையில் ஏற்றுவதற்கு பா.ஜ.கவும் விரும்புகிறது. ஆனால் அண்ணலின் சிந்தனையோட்டம் என்ன? கருத்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஏகமனதாக ஏற்கும் பட்சத்தில் பெரிய மனதுடன் ராஷ்டிரபதி பவனில் ஸ்டாம்ப் குத்தும் வேலையை செய்வேன் என கலாம் கருதுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனவாம். அப்துல் கலாமுக்கெல்லாம் நெருங்கிய வட்டாரங்கள் இருக்கின்றன என்றால் பவர் ஸ்டாருக்கு 50 இலட்சம் இரசிகர்கள் ஏன் இருக்கக் கூடாது?

ஆனாலும் அப்துல் கலாமின் இந்த ஏகமனது  பிரச்சினை ஒரு கணக்கு பிரச்சினைதான். அதாவது பாரதிய ஜனதாவுக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடையாது. இடதுசாரிகள், மம்தா, முலாயம், ஜெயா போன்றோரது தயவு இருந்தால் மட்டுமே களத்தில் ஓட முடியும். ஆக பெரும்பான்மை தொகையில் சில எண்கள் குறைகிறது என்பதால்தான் அய்யா கலாம் இப்படி ஒரு நிபந்தனையை போடுகிறார். இந்த நிபந்தனை ஏற்கும் பட்சத்தில் கணக்கும் வந்து விடும், பெயரும் வந்து விடும். என்ன ஒரு தொலை நோக்கு!

ஆனாலும் ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்தும் கதையாக தானைத் தலைவர் கருணாநிதியின் இடம் சரிந்து விட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் சோனியா அடையாளம் காட்டும் நபரின் காலில் விழுந்து ஆதரிப்போம் என்று வலிந்து பலமுறை சொன்னாலும் கூட இவர்களுக்கு புது தில்லியில் மதிப்பில்லை. மம்தாவும், முலாயமும், ஜெயாவும் புழுதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வேளையில் தி.மு.கவால் ஒரு துணுக்கைக் கூட கிளப்ப முடியவில்லை. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் பதவிகளை பெறுவதற்கு வீரம் காண்பித்த மறத் தமிழர்கள் இப்போது மண்ணாங்கட்டி தமிழர்களாக அவதிப்படுகிறார்கள். மறத்தின் மறுபாதிதான் மண்ணோ!

இதற்கு மேல் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பதிவுலகில் அண்ணன் பத்ரிதான் பெருமளவு கவலைப்படுகிறார். ஒரு வேளை எதிர்காலத்தில் பத்ம ஸ்ரீ, பூஷன் முதலான விருதுகளை வாங்குவதற்கு அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற தொலை நோக்கு கணக்கைத் தவிர அவர் இதில் அலட்டிக் கொள்வதற்கு வேறு காரணங்களை யோசித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. கலைமாமணியின் தேசிய அடையாளத்திற்கு கூட இந்த நாட்டில் ரசிகர் கூட்டம் இல்லாமலா போய்விடும்?

குடியரசுத் தலைவர் பதவி கிடைத்து விட்டால் மாளிகை வாசம், வெளிநாடுகளில் சுற்றுலா பயணம், மாலை நேர விழாக்கள், கலைஞர்கள் – விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்குவது, குடியரசு நாளன்று கொடியேற்றுதல் என்று ஒரு நேர்த்தியான வாழ்க்கை இங்கிருக்கிறது.  இதற்கெல்லாம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது என்று பார்த்தால் உலகிலேயே காஸ்டிலியான ரப்பர் ஸ்டாம்ப் இதுதானென்று அடித்துச் சொல்லலாம்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்