ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர் கலைஞரை சந்தித்தார்கள். திரௌபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவைப்போல நவயுக திரௌபதிகளுக்கு வன்கொடுமை சட்டத்தைத்தந்து அருள்பாலித்தார் கருணாநிதி.
சத்துணவு பணியாளர்கள் மாதக்கணக்கில் போராடியும் பார்க்க முடியாத முதல்வருக்கு நடிகர்களுக்கென ஒதுக்க எப்போதும் நேரமிருக்கிறது. அவர்கள் முறையிட்டவுடன் தினமலர் செய்தியாசிரியர் கைது செய்யப்படுகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஷகிலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை.
இதனிடையே நடந்த நடிகர்சங்க கூட்டத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள் நடிகர்கள். அவர்கள் பேசியதைப்பார்த்தால் மறுநாள் தினமலர் பத்திரிக்கையே இருக்காதோ என சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். ஒரு விருதுக்காக ஊரையே எழுதித்தரும் பட்டத்துராஜா ஒருவர் கூப்பிடுதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அப்படிச்செய்ய அவசியமிருக்காது.
ஜூன் மாதம் ஆனந்த விகடனுக்கு தான் அளித்த பேட்டியில் இலங்கைப் பிரச்சினையை பற்றி ‘ஆஃப் த ரெக்கார்ட்’ ஆக தன் கருத்துக்களை கவனமாக பேசிய சத்யராஜ் இந்த முறை அப்படியெல்லாம் பயப்படவில்லை, தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் என் கேள்வி எழுப்பினார். வேசிமகனுகான அடையாளங்களை சுலபமாக கண்டறியும் திறன் கொண்ட திரையுலகம் ஒட்டுமொத்தமாக கை உயர்த்தியது.
தான் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய எந்திரம் செய்யும்படி சொல்லும் காட்சி வைத்ததால்தான் சென்னை மாநகராட்சி அப்படி ஒரு கருவி வாங்கியதாக உளறிய விவேக் எனும் கோமாளி இன்னும் ஒருபடி மேலே போய் பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் கேட்டார். சாதாரணமாகவே நடிகைகளை உள்ளடையுடன் ஆடவிடும் துறையில் இருப்பவரின் புத்தி பத்திரிக்கையாளர்களின் குடும்ப பெண்களுக்கு கிராபிக்ஸில் உள்ளாடை அணிவிக்கும் வகையில் சிந்திப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
நடிகர்கள் உணர்ச்சிவயப்பட்டெல்லாம் அப்படிப்பேசவில்லை, அவர்கள் இயல்பே அப்படிதான் இல்லாவிட்டால் சக நடிகனுக்கு தனது படத்து வசனத்தின் மூலம் சவால் விட மாட்டார்கள். நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். தனது கட் அவுட்டுக்கு தன் செலவில் ( அல்லது தன் அப்பா செலவில்) பாலாபிசேகம் செய்யும் இவர்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கமாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் முதல்வரை சந்தித்து முறையிடுவது.
நடிகையை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக நடிகர்சங்கம் போராடுவதுதான் நமக்கு நெருடலாக இருக்கிறது. தமிழாசிரியர்களை இவர்கள் அவமானப்படுத்திய படங்கள் எத்தனை எத்தனை ?. கேரளப் பெண்களை ஒரு படத்திலேனும் இவர்கள் நாகரீகமாக காட்டியதுண்டா ? நடிகர்களைப்பற்றியோ தயாரிப்பாளர்களைப்பற்றியோ புகார் சொன்ன நடிகைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா என கேட்கும் ஸ்ரீபிரியா, பதின்வயது சிறுமிகளைக்கூட முத்தக்காட்சிகளில் நடிக்கவைக்கும் தன் சக ‘ கலைஞர்களை’ நோக்கி இந்த கேள்வியை எழுப்பியிருப்பாரா?
பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? இவர்கள் எடுக்கும் நெருக்கமான காட்சிகள் ஒன்று நடிகையின் ஒப்புதல் பெற்ற பாலியல் அத்துமீறலாக இருக்கும் அல்லது நடிகையை கட்டாயப்படுத்தி செய்யப்படும் பாலியல் அத்துமீறலாக இருக்கும். இதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் கதைக்கு தேவையான கிளாமர் இருப்பதாக சொல்லும் இந்த மாமா கூட்டம் நடிகைகளின் மான அவமானத்தைப்பற்றி கவலைப்பட தகுதியுடையதுதானா ?. இவர்களுக்கும் புவனேஸ்வரிக்கும் என்ன வேறுபாடு?, இவர்கள் சொல்லும் நியாயத்தை அவரும் சொல்லக்கூடும், ஏனெனில் அவரும் விரும்பி வருவோரைத்தான் தொழிலுக்கு அனுப்புகிறார். அல்லது கஸ்டமர் கேட்பதை தருவதாககூட ஒரு நியாத்தை சொல்லலாம், ரசிகன் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோமென இயக்குனர்கள் சொல்வதைப்போல.
மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தங்களை ஒரு குடும்பம் என கூறிக்கொள்வதை தவறாக புரிந்துகொண்ட கலாநிதி மாறன் தனது தினசரியில் நடிகர்களின் கூட்டத்தை முழுப்பக்க செய்தியாக போடுகிறார், பின்னே அவர் குடும்ப சண்டையில் இப்படித்தானே நடந்துகொண்டார் ???. பொதுவாக பத்திரிக்கைத்துறையையே நடிகர்கள் திட்டியதால் இவர்கள் ஒன்று கூடினார்கள், நடிகர் சங்கம் தினமலரை மட்டும் திட்டியிருந்தால் இந்த ஒற்றுமையும் இருந்திருக்காது, ஜெயா ஆட்சியில் நக்கீரன் கோபாலை கைவிட்டதுபோல இப்போதும் நடந்துகொண்டிருப்பார்கள்.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )
இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.
நடிகைகள் தங்களை விபச்சாரிகள் என சொன்ன பத்திரிக்கைக்கு எதிராக போராடுவது கிடக்கட்டும்.. தங்களை விபச்சாரிகளை விட கேவலமாக நடத்தும் ( அல்லது திரையில் அப்படிக்காட்டும் ) திரையுலகிற்கு எதிராக முதலில் சிந்திக்கட்டும். இல்லவிட்டால் எப்போது இந்த மாதிரி செய்தி வந்தாலும் அது மக்களுக்கு ஒரு நினைவூட்டலாகவே அமையும்.
-நன்றி வில்லவன்
……………………………..
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
……………………………..
தொடர்புடைய பதிவு
குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’
ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !
ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??
இதில் சம்பந்தப்பட்டவர்கள் இதைப்படித்தால் அவர்தம் மன(ல)சாட்சி குத்தும்.
Press reportes also prostitutes when they are not publishing true story about peoples struggle.Example:how many press reporters got money from SL high commission to hide the war atrocities in SL.Actor and Actresses are known for their behaviours and we cannot expect the good from them.Let it be.But the press-you call it supreme profession for the society and you people get the bribe to hide true or publish false news
அருமையான பதிவு வினவு…..
Its Real……..
நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்–உண்மைதான், மிகச்சரியா சொல்லியுள்ளீர்கள். தினமலர் உண்மையத்தான் கூறியது… நாட்டில் பலவிசயங்கள் இருக்க, நடிகைகளின் விலைதானா வெளியிடனும்? அதை நீங்கள் கொஞ்சமாவது சொல்லீருக்கலாம். http://mastanoli.blogspot.com/2009/10/blog-post_11.html பாருங்கள்
நடுநிலையான பதில். நடிகர் நடிகையர்கள் பதிலடி தருகிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டு தரம் தாழ்ந்ததை அந்தந்த நடிகர் நடிகையரே மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை குற்றம்சாட்டி எழுதப்படுகின்ற எந்தப் பதிவிலும் தினமலரின் கேவலமான நடத்தையை பற்றிய விமர்சனம் இல்லை.
தினமலர் தரம் தாழ்ந்து எழுதியது தவறுதான். அதே போல அதற்கு பதிலடியாக நடிகர் சங்கம் தரம் தாழ்ந்ததும் தவறுதான்.
வினவு, எழுதும் இந்த (Text Box) அடுத்த லைனுக்கு போக முடியவில்லை. அதாவது if I press enter key, I cant goes to next line.
மறுமொழி பரிசோதனைக்காக இந்தப் பின்னூட்டம் எழுதப்படுகிறது.
மறுமொழி பரிசோதனைக்காக இந்தப்பின்னூட்டம் எழுதப்படுகிறது
மறுமொழி பரிசோதனைக்காக இந்தப்பின்னூட்டம் எழுதப்படுகிறது.
மஸ்தான் என்டர் கீ அழுத்தி இந்தப் பின்னூட்டம் எழுதியிருக்கிறோம். ஒன்றும் பிரச்சினையில்லையே?
78 எழுத்தக்கள் முடிந்த பின், space bar அழுத்தினாலும் அடுத்த வரிக்கு control சென்று விடுகிறது. அதற்கு முன், enter கி மீது ஏறி நின்றாலும் அடுத்த வரிக்கு போக முடிவதில்லை. இதுதான் நடந்த/நடந்துகொண்டிருக்கிற உண்மை.
நீங்கள் enter key-ஐ அழுத்தியவுடன் உங்களுடைய cursor இரண்டு space விடும். அடுத்த line-க்குப் போகாது. அதைக் கண்டுக்காம நீங்க மேலும் type பண்ணுங்க. கடைசியாக நீங்கள் “மறுமொழிக” button-ஐ அழுத்திய பின் அது சரியாக திரையில் தோன்றும்.
I’m testing it..see how.
என்னால் முடியலை :(( வேறு யாருக்கும்மே இந்த பிரச்சனை இல்லையா? படிக்கிற யாராவது எனக்கு சப்போர்ட்டுக்கு வாங்களேன்…
தோழர் வினவு, ஃபையர்பாஃக்ஸ் மற்றும் கூகிள் குரோம் தவிர மற்ற பிரவுசர்களில் மஸ்தான் குறிப்பிட்டுள்ள பிரச்சனை உள்ளது.
vinavu neengal solvathellam sarithaan.aanaal intha nadikaikalin ulladai thriyum padaththaiyum kisu kisu endra peyaril thaan thondri thanamaaka ezuthum nirubarkalaiyum enna endru solvathu.paththirikkai suthanthiram endra peyaril aduththavar manathai maanaththai kuththi kilikkum intha paththirikkaikalai enna seiyalaam.thangal veettu pengalai patri pesumbothu iththanai kobam varukirathe aduththavarkalin poi seithi avarkalai eppadi kayappaduththi irukkum enbathai unara vendum.
திரைப்படங்களில் நடிகைகளின் ஆபாசத்தை காட்டி வியாபாரம் மற்றும் விளம்பரம் செய்கிறார்கள் என்பது சரி ஆனால் பத்திரிகைகள் மட்டும் முதல் பக்கத்திலும் , நடுப்பக்கத்திலும் நடிகை நடிகையர் படங்களை அதுவும் கவர்ச்சி படங்களை போட்டு வியாபாரம் செய்கிறார்களே அது எந்த வகையில் நியாம்.
நண்பரே,
பத்திரிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குதற்காக இந்த பதிவு எழுதப்படவில்லை, கட்டுரையை முழுமையாக படித்தால் இது புரியும்.
மேலும் ஒரு பிரச்சினையின் சகல அம்சங்களையும் ஒரே கட்டுரையில் நாம் எழுதிவிட முடியாது. விடுபட்டதாக கருதுவதை நீங்கள் எழுதுங்கள், பின்னூட்டம் எனும் பகுதி அதற்குத்தானே இருக்கிறது ?
இதோ உங்கள் கட்டுரையில் விடுபட்டதாக நான் கருதுவது.
ஒவ்வொரு துறையிலும் நல்லது மற்றும் கெட்டது இவை இரண்டுமே கலந்து தான் இருக்கும்.நல்லதை தேர்ந்தெடுப்பவன் அந்த துறையில் முன்னேறவும், கெட்டதை தேர்ந்தெடுப்பவன் அழியவும் நேரிடுகிறது. உதாரணத்திற்கு நம் இணைய தளத்தையே எடுத்துக் கொள்வோம் எந்த அளவிற்கு வாழ்க்கைக்கு பயன்படும் தகவல்களை அளிக்கிறதோ அந்த அளவிற்கு ஆபாசம்,தீவிரவாதம் போன்றவற்றை ஊக்குவிக்கின்ற இணைய தளங்களும் இருக்கின்றன.எனவே திரைத்துறை மற்றும் பத்திரிக்கைத்துறை இரண்டிலுமே மலிவான செய்திகளும்,படங்களும்,பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆகவே முடிந்தவரையில் ஒருதுறையில் இருக்கும் நல்ல செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் இது போன்ற பிரச்சினைகள் வாறது.
நல்ல விஷயங்கள் மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பாடம் அதற்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் முக்கியத்துவம் கொடுக்கலாம்.கெட்ட விஷயங்கள் மற்றவர்களின் வாழ்க்கைக்கு தேவைப்படாத ஒன்று………அதற்கேற்பத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்
//மேலும் ஒரு பிரச்சினையின் சகல அம்சங்களையும் ஒரே கட்டுரையில் நாம் எழுதிவிட முடியாது//
Then why the hell are you writing these articles. A true article should analyse all point of view and provide reasoning. you are just one sided, is it because the editor’s name is ‘Lenin’? You are a Fascist too, if you can write all crap about Hindu Ram, but not condemn Lenin for such a 3rd rate article?
“Wise” guy,
Can you please explain what a “true article” is?
I do not know of any article that has been written that “analyses all points of view” and provides “reasoning”.
Can you kindly point to any?
Nobody us is neutral anywhere. One can at best be true to one’s self, and be honest and objective.
What matters most here is objectivity. If that is lacking, point it out in specific terms.
Does one become a Fascist by criticising “Hindu Ram”? In which case, Tamilnadu can do with more “Fascists” who are fluent in English.
நடிகைகளின் அசிங்கப் படங்களையும், அசிங்க செய்திகளையும் வெளியிட்டு காசு பார்க்கும் மாமாப் பயல்கள் தினமலர் மற்றும் பல செய்திப் பத்திரிக்கைகளின் (என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும்) செயல்கள் மட்டும் நியாயமா என்ன? முதலில் திரைப்படங்கள், அது பற்றிய செய்திகள் மற்றும் விவாதங்களை ஒதுக்குவோம். அதுவே நாம் உருப்பட நல்வழி. நம் காசைக் கொடுத்து நாமே ஏன் அசிங்கத்தை வாங்கி தலையில் பூசிக்கொள்ள வேண்டும்? அப்புறம் நாறுது, அரிக்குது, குத்துது என்று…
அட்டகாசமான கட்டுரை.
இவர்கள் பெண்களை மட்டுமா இழிவு செய்து படம் எடுக்கிறார்கள் … எத்தனை படங்களில் உடல் ஊனமுற்றோரை, மன நலம் குன்றியவரை, கருப்பு தோல் உடையோரை என்று சளைக்காமல் காமடி என்று எடுத்து குறுகிய கேவலமான மனநலம் பாதிக்க பட்ட கூட்டம் தான், இது !!!
புவனேஸ்வரி மட்டுதான் வயிற்றுபிழைப்பு தேவைபடுகிறதா?
பிக்பாக்கெட், வீட்டு கொள்ளை, வழிப்பறி எல்லாம் செய்பவர்கள் என்ன சினமா எடுப்பதர்க்காகவா செய்கிறார்கள் ??
பக்கம் பக்கமாக தமிழர்களுக்கு எதிரான செய்திகளையே தந்து தமிழின விரோத போக்கை கடைப்பிடிக்கும் இந்த தினமலம் இந்து போன்ற செய்தித்தாள்களை வாங்காதீர்கள் என்று மறைமுகமாவது எந்த படத்திலாவது இவர்கள் சொல்லி இருக்கிறார்களா ??
nall vivadam idu makaluku nalla vizhipunarvi eapaduthum. vagail ullathu migaum nandru
Nadikaikalai patri ellorum arivarkal ..nadikain peyaraium pukai padathaim velipadaiyaka pottathal etho thaan mattum thairiyamana pathirikkai endru ullakirukku katti kondirkal ..Aanal unnmailil neenkal appadi pottu laapam parkka vendum enpathe unkal nookam ..muthalil pathirukkaikal ondrai purinthu kolla vendum ..neenkale unkalim yavara nookirka chinema vimarsanam ..nadikaikalin nerkanal ippadi palavatrai eeluthi pakkathai nirappukirirkal ..attai padam vera ..athaium thandi nadu pakkathil kavarchi nadikaikalin arai kurai photo ..ethanai per unkalin nadu pakkathirka unkalin pathippukali vankukirarkal .. ithai unkalal marukka mudiuma ? ithu yar seitha kuttram ..ippadi unkalin laapathirka neenkal seium thanthirankal yethanai? unmaili elthuvarukku ethanaiyo visaiyankal irukkail ..ullakirku katta eduthu solla vendiya kadamaikal ovaru pathirukkaikum irukkail ..atpa puthiyil aen intha vendatha velaikal ..neenkal intha veelai seithathal avarkalukku oru elavasa vilamparamthan ..innum avarkal market rate athikamakum avalvuthan ..
samuthaya porupunarchi illathavarkhal- irandu tharappum
The whole tamil world knows about the holiness of meena,sripriya,radhika,vijayakumara and manjula family,luxmyrai,devayani,etc.The funniest things is all these pros get together and analysing who is a bastard?The world should look back that one journalist luxmykanthan was murdered for writing about a famous actor about his back screen activities 50 years ago.Long live nadigar sangam and in future there will be more actreesses will be caught in prositution and be ready to defend them.
////.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )///////
can you publish that photo, vinavu? or atleast the link?
எல்லாம் புலுபுக்கு தான் , தினமலர் ஒரு ஒன்ன நம்பர் மோசமான பத்திரிகை ,யாருமா உண்மையான செய்தி போட்ருது கெடயாது ,எவளவோ பிரச்சனை நாட்ல இருக்கு இத தான் எவங்க போடனுமா
அதுனோல பிரஸ் எப்படி மத்தவங்கள பத்தி தப்போ போட்ரங்கோல , அத மாதிரி மதவன்கிட்ட திட்டும் வாங்கி தான் ஆகனும் ,இது தான் உண்மை , அத விட்டுட்டு நம்ம வினை மாதிரி கத சொல்ல கொடுத்த ,பிரஸ்க்கு ஒரு ப்ரோப்லேம்னு எப்படி ஒன்னு இருகீங்கோல அத மத்ரிதன் அவங்க்ளோம் , எண்ணோம் அவங்க்ளோம் நம்மள மாதிரி மனிதர்கள் தான், அத எந்த பிரஸ்க்கு தெரியனும்
va
ஊடகங்களின் நம்பகத் தன்மையும் நடுநிலைமையும் இன்றைக்கு வியாபாரத்திற்காக கைவிடப்பட்டுள்ளன.
படங்களில் அரைகுறை ஆடைகளுடனும் இரட்டை அர்த்த வசனங்களுடனும் உலாவரும் நடிகர்கள் தினமலர் செய்திக்குப் பின்னர் கண்ணகிகளாகவும் சீதைகளாகவும் மாறியதுதான் மிகவும் நகைச்சுவையான விடயம்.
சில காலங்களுக்கு முன்னர் கன்னடப் பிரசாத், பல நடிகைகள் நடிகர்கள்(ஆண் விபச்சாரர்கள்) பற்றிய விபரங்களை வெளியிட்டபோது ஆத்திரம் கொள்ளாத சூப்பர் ஸ்டார்களும், சுப்ரீம் ஸ்டார்களும், புரட்சித் தமிழர்களும் கோபப்பட்டதுதான் இப்போது புதுமை.
அதெல்லாம் போகட்டும். இவர்கள் பத்தினிகள் அல்லது உத்தமர்கள் என்றால், இவர்களுக்கு கன்னட பிரசாத்துகள் மீதோ புவனேஷ்வரிக்கள் மீதோ ஏன் கோபம் வரவில்லை?
தலையங்கம்: தரம் தாழ்கிறோமே!
First Published : 10 Oct 2009 (Dinamani)
ஒரு தமிழர் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி எழுதாமல் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன வழி?
நல்ல விஷயம் பற்றி எழுத நாலு நாள் தள்ளிப்போகலாம். ஆனால் தவறுகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும்.
பத்திரிகைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதையும், சமுதாயத்துக்குப் பயனில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வெறும் பரபரப்பை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோலவே பத்திரிகைத் துறையிலும் தரக்குறைவு ஏற்பட்டிருப்பது உண்மை.
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட செய்தி, எந்தவிதத்திலும் சமுதாய வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு. இப்படிச் செய்திகள் பிரசுரிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
திரைப்பட நடிகைகளின் ஒழுக்கத்தைப் பொது விவாதமாக்குவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவோ, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவோ பத்திரிகைகளுக்கு யார் அதிகாரம் அளித்தது? பெரிய, பெரிய வண்ணப்படங்களைப் போட்டு நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இதுபோல வரம்புமீறி விமர்சனம் செய்யும் உரிமை பத்திரிகைகளுக்குக் கிடையாது.
அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.
நடிக, நடிகையர் ஒன்றுகூடி நடிகர் சங்க வளாகத்தில் நடத்திய கூட்டத்தில், பத்திரிகையாளர் பற்றிய விமர்சனங்களும், செவிகூசும் வார்த்தைகளால் சில பிரபல நடிக, நடிகையர் நடத்திய சொல்அபிஷேகங்களும் அவரவர் தரத்தையும் கலையுலகத்தின் தராதரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நா கூசாமல் பேசும் இவர்களுக்கு, நாசூக்கான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்திகூடக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.
பிராந்திக்கும், பிரியாணிக்கும், பணத்துக்கும் விலைபோகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று பொத்தாம்பொதுவாக நடிக, நடிகையர் விமர்சிக்கலாம் தவறில்லை. காரணம், அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். தங்களது செய்திகளும், படங்களும் பிரசுரமாவதற்காக இவர்கள் தயாரிப்பாளர்களின் செலவில் மேலே குறிப்பிட்ட தானதர்மங்களை அல்லது கையூட்டல்களைக் கொடுக்கலாம் தவறில்லை. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். இது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்று யாரும் கருதலாகாது. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்.
கலையுலகம், கலையுலகம் என்று கூக்குரலிடும் இன்றைய கலையுலகத்தின் சமுதாயப் பங்களிப்புதான் என்ன? ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் ஆண்டொன்றுக்குச் செய்யப்படும் மொத்த விற்றுமுதல் (பன்ழ்ய்ர்ஸ்ங்ழ்) எவ்வளவு தெரியுமா? சுமார் நூறோ, இருநூறோ கோடிகள். அதுவும் பெரிய படங்கள் வந்தால் மட்டுமே. திருப்பூரிலும் சிவகாசியிலும் இருக்கும் பல தனியார் நிறுவனங்களின் வருட வருமானம்தான் சினிமாத்துறையின் ஒட்டுமொத்த விற்றுமுதல்!
ஆனால் ஊடகங்களில் கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமோ பல மடங்கு அதிகம். இவர்களது கலைச்சேவையால் மொழி வளர்ச்சி அடைகிறதா? நமது கலாசாரம் மேன்மையடைகிறதா? சமுதாயப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றனவா? நாளைய தலைமுறைக்கு நல்ல பல கருத்துகளை முன்வைத்துக் கடமையாற்றுகிறதா? வரிவிலக்குக்காக தமிழில் பெயரை வைத்துவிட்டு தமிழையும் தமிழனின் கலாசாரத்தையும் சீரழிப்பதைத்தவிர இவர்களது கலைச்சேவைதான் என்ன என்று யாராவது விளக்கினால் நலம்.
அரிதாரம் பூசும் நடிகர்கள், தங்களது துறையில் ஈடுபட்டிருக்கும் கடைநிலை ஊழியர்களுக்காகவும், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் எந்தவிதத்தில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை அவர்களது மனசாட்சியே கூறும். இவர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் தங்களது முகத்தைத் தாங்களே ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நலம். நடிகரானாலும் நடிகையானாலும் இவர்களது சாதனைகளின் அடிப்படை எழுத்தாளர்களின் கற்பனாசக்தியும் பேனா வலிமையும்தான். நல்ல கதை அமையாத திரைப்படங்கள் நடித்தது யாராக இருந்தாலும் ஓடுவதில்லை என்பதுதான் திரையுலக சரித்திரம் கூறும் உண்மை.
பத்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?
பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேதனை!
இந்த கட்டுரைக்கு அகில இந்திய நமீதா நற்பனி மன்றம் சார்பில்
எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம்
எங்க தலைவி எவ்ளோ வாங்கினா என்னா?
எனக்கும் பின்னூட்டம் வரவில்லை
யார் பத்தினி தமிழ்நாட்டில் தேடல்!
என் ஆட்சியில் அப்படி யாரும் இருக்கமுடியாது!! – கருனாநிதி மாமா
தினமலம் தினமும் வெளியிடுவதில் பெரும்பாலும் பொய் செய்திகள்தான். ராஜபக்சே கொடுப்பதை மட்டுமே உண்மை போல வெளியிட்ட இவங்களுக்கும ( ஈழ படுகொலைகளை முழுதும் மூடி மறைத்த மற்ற பத்திரிகைகள், டிவிகளுக்கும் ) இந்த கேவலமாக வசவு தேவைதான். ஒரு பக்கம் செய்த பாவம் இன்னொரு பக்கம் வாங்கி கட்டிக்க வேண்டியிருக்கும்.
Answer my question Plz….Mr.Vinavu……
அருமையான பதிவு
தினமலருடன் எல்லா விஷயத்திலும் வினவு உடன்படுகிறதா என்று தெரியவேண்டும்..
தினமலரில் வரும் போலி வாசகர் கடிதங்களும் கருணா பேட்டிகளும் எந்த உணர்வாளரையும் தினமலரை புறக்கணிக்கச்செய்யும்.
அப்படி இருக்கையில் ஏதோ ஒரு பிரச்சினையில் தினமலருக்கு வக்காலத்து வாங்கி ஒரு கட்டுரை எழுதி கிழித்துவிட்டது வினவு.
இனி காலாகாலத்துக்கும் இந்த பச்சோந்தி வினவு தளத்தை நம்பப்போவதில்லை. நன்றி..
இந்த கட்டுரை தினமலத்துக்கு ஆதரவானது என்ற அறிய கண்டுபிடிப்புக்கான இந்த ஆண்டு நோபல் பரிசை செந்தழல் ரவிக்கு வழங்குகிறேன். ஏற்கனவே ஸ்வீடனில் இருக்கும் அவர் வூட்டான்ட வந்து வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு தங்கள் உண்மையுள்ளஆல்புரெட்டு நோபல்
உங்கள் புரிதலிலோ அல்லது நோக்கத்திலோ தவறு இருக்கிறது ரவி. தினமலருக்கு ஆதரவான கருத்து எதைக்கண்டீர்கள் ?
திரையுலகிற்கும் பத்திரிக்கையுலகிற்கும் எதிராகத்தான் பதிவிடப்பட்டிருக்கிறதேயன்றி யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை.
மற்றபடி, உங்கள் தினமலர் எதிர்ப்புக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து அதில் உறுதியாக இருக்கவும்.
Mr. Vinavu, I have a question. Who has given right to Media to spread news based on assumption?
Of course, I agree that CM should not give priority to film stars to meet him for such issues. But, isnt Media went wrong? Total cinema culture is now a days is ‘exposing’ style. For them its bread & butter. It is not that they are pro**** and strippng off. (atleast not ev1) Instead of blaming stars, why dont you write a blog on what to do? I mean, changing way of current cinema & suggestions to stop this pimpprofession? I would say, they are harmless to society when compared to politiciens and terrorists. (You too getting popular by writing abt actresses isn’t it! Try adding some pics, you will get more hits! And you can defend saying that you are expressing truth and helping society!!)
Unnai pol oru Aan நீ என்ன காரியக் குருடனா? கட்டுரையை முழுசா படிக்கல, அதுக்கு கீழே நிறைய லிங்கு குடுத்திருக்காங்களே அதையாவது நேரம் கிடைக்கும் போது படிப்பா
தினமலருக்கு வக்காலத்தா?
நண்பர்களே
தலைப்பிலேயே மாமாக்கள் மோதல் என்றுதான் வைத்துள்ளோம். இதில் தினமலரும், திரையுலகமும் அடங்கும். உண்மையில் ஆபாசத்தை வைத்து பிழைக்கும் இந்த இருகூட்டமும் தங்களுக்குள் நடத்தும் பங்காளிச் சண்டைதான் இந்த மோதல். இரு தரப்பினருமே ஒருவரை ஒருவர் வைத்து பிழைப்பதுதான் வாடிக்கை.
தினமலர் ஒரு பார்ப்பன பத்திரிகை, ஆளும் வர்க்க கைக்கூலி பத்திரிகை, ஆபாச சீரழிவுகளை வைத்து மோசமான ரசனையை வளர்க்கும் பத்திரிகை என்பதிலும், ஈழம் உள்ளிட்டு எல்லா பிரச்சினைகளிலும் அது மக்கள் விரோத நிலை எடுக்கும் பத்திரிகை என்பதும்தான் வினவின் கருத்து.
இந்தக் கட்டுரையில் தோழர் வில்லவன் முக்கியமாக திரை உலகத்தை அம்பலப்படுத்தி எழுதியிருந்தாலும் கட்டுரையின் முடிவில் ….
//இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.// என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பிறகும் இந்தக் கட்டுரை தினமலருக்கு ஆதரவானது என்று முத்திரை குத்துவது தவறில்லையா?
100% correct. I agree with u vinavu
&&இந்த கட்டுரை தினமலத்துக்கு ஆதரவானது என்ற அறிய கண்டுபிடிப்புக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு^^
வினவு தளத்தில் இது போன்ற ஆபாச, போலி பின்னூட்டங்களை எப்போது மட்டுறுத்தல் செய்கிறார்களோ அப்போது தான் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்கமுடியும்.
தினமும் கொல்லும், கற்பழிக்கும் அமெரிக்க ராணுவத்தின் தலைவரான ஒபாமாவுக்கு கொடுக்கப்பட்ட அந்த விருதை சொல்லி ரொம்ப கேவலப்படுத்திவிட்டீர்கள்.
அதே நேரத்தில், ஆபாச பின்னூட்டம் போடும்போது உங்கள் பெயரிலேயே போடவும்.
ரவி சார், வினவு தினமலருக்கு ஆதரவுன்னு நீங்க எழுதுனா ஆபாசமில்ல, ஆனா உங்கள ஒருத்தரு கின்டல் செஞ்சா ஆபாசமா? இதுதான் நேர்மையான அளவுகோலா? அனுபவசாலி பதிவர் நீங்களே இப்படி டென்சன் ஆனா எப்படி?
செந்தழல் ரவி,
வினவில் இதுவரை சுமாராக 11,000 மறுமொழிகள் வந்திருக்கின்றன. இதில் நாங்கள் தலையிட்டு பதில் சொன்னது ஒரு 5 சதவீதம் கூடக் கிடையாது. வினவு தனது கருத்தை வினவின் பெயரில் மட்டும்தான் சொல்லி வருகிறது. பொதுவில் கெட்டவார்த்தைகள், தரம்தாழ்ந்த வசவுகள் போன்ற பின்னூட்டங்களைத்தான் நாங்கள் காணும் போது நீக்குகிறோம். மற்றபடி பல பெயர்களில் வந்து ஒரே விசயத்தை எழுதினால் அதை வாசகருக்கு தெரிவிக்கிறோம்.
இதைத்தவிர எங்களைத் திட்டி வரும் பின்னூட்டங்களைக்கூட நாங்கள் தடுப்பதில்லை.இதனால்தான் பலரும் வினவில் வந்து விவாதிப்பதாக கருதுகிறோம். நொந்தழல் ரவி என்ற பெயரில் எழுதியவர் விமரிசனத்தைத்தான் எழுதியுள்ளார் எனக் கருதுகிறோம். இதில் ஆபாசம் ஏதும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. பதிவுலகில் சீனியரான உங்களைப் போன்றவர்கள் இதையெலய்லாம் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு நம்மைப்பற்றி மற்றவர் என்ன கருதுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது பயன்படுத்தலாமே?
இதையே ஆபாசம் என்று நீக்க வேண்டுமென்றால் வினவில் பாரிய அளவில் விவாதம் நடக்காது. எந்தப்பின்னூட்டங்களையும் பொதுவில் மட்டறுப்பதில்லை என்ற சுதந்திரமே பலரின் கருத்துக்களை அவை சரியோ, தவறோ அறிய வாய்ப்பு தருகிறது. எனவே இந்தப்பிரச்சினையில் வினவு தலையிட இயலாது என்பதை உங்களுக்கு தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரையின் மையப்பொருள் பற்றி மேலும் விவாதிப்பதற்கு இது போன்ற பின்னூட்டங்களை கருதிக்கொண்டால் பிரச்சினை இல்லை. இதை ஏன் இவ்வ்வளவு சென்சிட்டிவாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்பது தெரியவில்லை.
வினவு மிகச்சிறப்பான கட்டுரை,
உண்மைதான் மாமாக்களின் போட்டிதான் மக்களின் பிரச்சினையாக காட்டப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் உழைக்கும் மக்களை, பெண்களை இழிவு படுத்தும் இந்த விபச்சார கூட்டத்தை பற்றி இன்னொரு மாமாப்பயல் எழுதினால் அது எப்படி பெண்களை இழிவு படுத்துவதாகும். இந்த நாயும் வயலில் வேலை செய்யும், கைத்தறியில் உழலும் பெண்ணும் ஒன்றா என்ன.
உழைக்கும் மக்களை அனுதினமும் சுரண்டி பிழைக்கும் நாய்கள் அவர்களுக்கு ரோசமாம் அது கூட விலை குறைவா சொல்லிவிட்டார்களே என்பதாய் தானிருக்கும். போராடும் மக்களை சந்திக்க குண்டாந்தடி அனுப்பும் கருணாநிதி சகிலா,மும்தாஜ்,பாத்திமாவுடன் போஸ் கொடுக்கிறார் அவர்களின் நியாயத்தினை புரிந்து கொள்கிறாராம்.
வெங்காயம்!!!! ஒரு போணியாகாத கருணா என்ற கிழட்டு விபச்சாரியின் கவலைதான் இன்னொரு மாமாபத்திரிக்கையாளை சிறைக்கு அனுப்பியிருக்கிறது எனலாம்
(ஏனுங்க செந்தழல் ரவி மேட்டரயே தப்பா புரிஞ்சு கிட்டீங்களே,)
கலகம்
kalagam.wordpress.com
தோழர் கலகம், வினவு தளத்தில் உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. உ.போ.ஒ இடுகையின் விவாதங்களில் உங்கள் பங்களிப்பை நான் மிகவும் எதிர்பார்திருக்கிறேன்
நல்ல கட்டுரை, ஆனால் பத்திரிக்கைகளையும் நடிகர்களைப்போலவே டியெயிலாக விமர்சனம் செய்திருக்க வேண்டும் என்பது என் கருத்து
அதுவேதான் என் கருத்தும்கூட. அதனால்தான் பலருக்கும் இந்த கட்டுரையின் நடுநிலை மீது சந்தேகம் வந்திருக்கவேண்டும். சினிமாக்காரர்களின் யோக்கியதை எப்போதும் இருப்பதுதான். ஆனால் இது பெரிதானதிற்கு காரணம் தினமலர்தான். அவர்களைப்பற்றி கட்டுரையாளர் குறைந்தது ஒரு பத்தியாவது எழுதியிருந்தால் சரியாகயிருந்திருக்கும். எனினும் தனிப்பட்டமுறையில் எனக்கு சந்தேகமெதுவுமில்லை.
பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ?
sabaas!!
this is the video http://thatstamil.oneindia.in/videos/watch/13818/sathyaraj-protest-against-media.html
nanbarey ungalukku ondru theriuma? ippadi veerappa pesum antha kedu ketta SATHYA RAAJ disco santhiudan udal vravu konda kaatchiyai iniya thalathin moolamaaga kanden. inthe kedu kettavan pesugiraan thaan oru nermaiyaana manithan thaan yeandru. nadigano nadigayo kaasukkaga than udalaye virppavargal oovvoru nadiganum nadigaiyum thevudiyaakkalukku piranthavargal thaan. intha kedu ketta KALAINJAR oru manilathai aaluginra thalaivaan thhhoooooo .
நடிகைகளை விபசாரிகள் என எழுதும் தினமலர், வன்கொடுமை வழக்கு பதிவுக்கு ஆளான தினமலர் முதலாளி ரமேஷ் ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா? சாரு எனும் மனநோயாளி 15-18 பெண்களுடன் உறவு கொண்டதை எழுதுவதை கண்டித்து சாரு கேவலமான ஆண் விபசாரி என எழுதுமா? பல 100 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்த/வைத்திருக்கும் சின்ன, பெரிய சங்கராச்சாரிகள் இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் என எழுதுமா?
\
என்னங்க தமிழ் குரல் இவ்வளவு வெகுளியா இருக்கீங்களே! நீங்க சொல்றதயெல்லாம் எழுதுனா அது தினமலரே இல்ல….
அருமையான பதிவு வினவு…..
ungaloda intha padivu nadra vullathu…
பத்திரிக்கைக்காரர்களை கிழிக்கும் கட்டுரை:
குவார்ட்டர் + பிரியாணி+ கவர் =பத்திரிகையாளர்!
கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வைன்னானாம்…
இது எங்க ஊரு பழமொழி.
அவனவன் திங்கறதுக்கு சோறு இல்லாம முகாம்ல சாகறான். மலையாள நாதாரிங்க முல்லைப் பெரியாறுல ஆப்பு வைக்குதுங்க. மீன் புடிக்கப் போறவன் கருவாடா திரும்பறான். வன்னி முகாம்ல என் அக்கா தங்கச்சிக சிங்கள பன்னிக் கூட்டத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகுது. தமிழ்நாட்டுல ஒரு கிலோ கத்திரிக்காய் 22 ரூவா விக்குது. அரிசி 42 ரூவா ஆயிடுச்சி. ஒரு ரூவா அரிசிய வாங்கித் தின்னா வேளைக்குப் பத்து ரூவாய்ய்க்கு வயித்து வலி மாத்திரை திங்க வேண்டியிருக்கு.
தினமலர் பரதேசிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே தெரியலையாம். எந்த சினிமா நடிகை ’தொழில்’ நடத்தறாங்கன்னு பட்டியல் போடுது. நடிகர் சங்கம் இதைக் கண்டிச்சு கூட்டம் போடுது. சின்னக் கலைவாணர்னு நம்மள மாதிரி நாலு இளிச்ச வாயங்க நம்பிக்கிட்டிருந்த தேவர் சாதி வெறி பிடிச்ச விவேக் அந்தக் கூட்டத்துல ’பத்திரிகைக்காரன்லாம் குவார்ட்டர் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் அலையறவனுக…பத்திரைகையில எழுதினவனோட அக்கா ஆத்தா போட்டோ குடுங்க…கிராபிக்ஸ் பண்ணி அவளுகளும் தே….ன்னு விளம்பரம் கொடுப்போம்’ ….இப்பிடியெல்லாம் காமெடி பண்ணியிருக்கு.
இப்ப பத்திரிக்கையாளரகள் (என கௌரவமாக தங்களை அழைத்துக்கொள்ளும் சதை புரோக்கர்கள்) ஆஹா…எங்க இனத்துக்குக் கேவலம்னு கிளம்பிட்டாய்ங்க.
நான் தெரியாமத்தான் கேக்கறேன்.
விவேக் சொன்ன, குவார்ட்டர் + பிரியாணி விசயத்துல என்ன தவறு? கருத்து சொல்ற அளவுக்கு விவேக் பெரிய பருப்பா இல்லாம இருக்கலாம். ஆனா…இந்த சதை புரோக்கர்கள் குவார்ட்டர் + பிரியாணி கொடுத்தால் ‘ஐயோ…யார்கிட்ட என்ன கொடுக்கறீங்க…? நாங்கள்லாம் சுத்த நேர்மைக்குப் பொறந்தவங்க’ன்னு மறுக்கிற ஜாதியா?
இப்பல்லாம் ப்ரஸ் மீட் வச்சாலே டாஸ்மாக்குக்கும் தலப்பாக்கட்டு கடைக்கும் மொய் வச்சே தீர வேண்டியிருக்கே. இது போதாதுன்னு நம்ம துரைங்க கிளம்பும்போது சும்மா ஜெண்டிலா ‘ம்ம்ம்…பாத்துக்கலாம்…மேட்டர் வந்துரும்…அப்பறம்…அவ்ளோதானா?’ன்னு காசு புடுங்க பேசுற பேச்சு இருக்கே…யப்பா…அந்த நிமிசத்துலதான் சரஸ்வதி தேவியும் தர்ம தேவனும் நமக்கு தரிசனம் தருவாங்க.
நடிகைங்க உடம்பக் காட்டி காசு பாக்கராங்கதான். யார் இல்லன்னது? ஆனா அதுக்குப் பேரு விபசாரம்னா…அட ங்கொய்யால…நடிகைங்க தொப்புளையும் தொடையையும் கலர் கலரா போட்டு காசு சம்பாதிக்கிறியே…உன் தொழிலுக்கு என்னா பேரு…?
மீடியா…!
ப்ரஸ்…!
நான்காம் தூண்!
– நல்லா வாயில வருது.
இதுல ஒரு பெரிய வித்தியசம் இருக்கு. நடிகைங்க தங்களோட ஒடம்பக் காட்டி…மானம் மரியாதய விட்டுக் காசு சேக்குதுங்க…! இது நியாயம் இல்லதான். ஆனாலும் அவங்க ஒடம்பு அவங்க காட்ட்றாங்கன்னு ஒரு மொக்கையாவாவது நியாம் பேசிக்கலாம்.
ஆனா…இந்த சதை புரோக்கருங்க…அடுத்த பொம்பளைங்க ஒடம்பக் காட்டற படத்த ஓசியில வாங்கிப் போட்டு…பொழைக்குதுங்க. இது எப்படி இருக்கு?
அதாவது…நடிகைங்க விபசாரம் செய்யறாங்கன்னா… பத்திரிகைக்காரதுங்கதான் அந்த நடிகைங்களுக்கு மாமா வேலை பாக்குதுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒடம்ப விக்கற பொம்பளைங்களை விட…அந்த ஒடம்புக்கு புரோக்கர் வேலை பாக்கற மாமாக்கள்தான் கேவலமான பிறவிங்க.
ஆனா…இந்த புரோக்கருங்களுக்குத்தான் சமூகத்துல பெரிய மரியாத. சரக்கடிச்சிட்டு பைக் ஓட்டும்போது போலீஸ் புடிச்சா…’சார் நான் ப்ரஸ் சார்…என்ன என்னையே புடிக்கிறீங்க…?’ன்னு கேக்கறது.
ரயில்ல டிக்கெட் பதிவு செய்யப் போனா…’சார்…நான் மீடியா பர்சன்…’ன்னு பந்தா பண்ணி சீட்டு வாங்கறது.
நாலு நடிகைங்க படங்களை போட்டு…’இவங்கெல்லாம் விபசாரம் பண்றாங்கன்னு’ செய்தி போட்டதுக்காக…தினமலர் பரதேசி மேல நடிகர் சங்கம் புகார் கொடுத்துச்சு. நியாயமா என்ன செஞ்சிருக்கணும்?
அவதூறு பரப்பினதுக்காக தினமலர் பொறுப்பாசிரியர் ரமேக்ஷ்சைத் தூக்கி உள்ளே போட்டிருக்கணும். ஆனா…லெனின்னு ஒரு உதவி ஆசிரியரைக் கைது பண்ணிச்சி நம்ம போலீசு.
போறாளாம் பொன்னாத்தா…எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா…இந்த விசயத்துல இரு உதவி ஆசிரியர் என்ன செய்ய முடியும்?
சட்டப்படியும் நியாயப்படியும் பொறுப்பாசிரியரைத்தானே கைது பண்ணணும்?
ரமேக்ஷ் மேல கை வைக்கக் கருணாநிதிக்கு அவ்ளோ அச்சமா?
சரி…லெனினைக் கைது செஞ்சாச்சு. பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டிருக்கிற பல இதுகள்…கடந்த ரெண்டு நாளா தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்குக.
லெனினைக் கைது செஞ்சது தப்பாம்.
அப்ப…? அவனுக எழுதினது மட்டும் ரைட்டா…?
கேட்டா…இதெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாம்!
அரசின் அடக்குமுறையாம்!
ஆஹா…ஆஹா…இதுகளுக்குத்தான் கருத்துச் சுதந்திரத்து மேல என்னா அக்கறை…?
மரியாத கெட்ட பத்திரிகை உலக மாமாக்களே…
திசைநாயகம்னு ஒரு பத்திரிகையாளர் பேரைக் கேள்விப்பட்டிருக்கீகளா..?
சிங்கள அரசின் போர் வெறிக் கொள்கையைக் கண்டிச்சு எழுதினதுக்காக…ராஜபக்சேவால கைது செய்யப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிங்கம் போல் உள்ளே இருப்பவர்!
அவர் பேசினது கருத்து!
அதுக்கு சுதந்திரம் இல்லங்கறது அடக்குமுறை!
இன்னும் சொல்லப் போனா…அவர் மனுசன்!
நீங்கள்லாம் ஒட்டுண்னிங்க…!
ஆட்சியில இருக்கறவங்க…அதிகாரத்துல இருக்கரவங்க…போலீசுக்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு பீறாய்ஞ்சு…காசு சேத்துக்கிட்டு ஒடம்பு வளர்க்குற ஒட்டுண்ணிங்க!
நீங்க மொதல்ல அரசாங்கத்தை எதிர்க்கத் துப்பு இல்லாதவங்க.
அட…அவ்வளவு ஏன்….?
எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகையாளருங்க ‘ஒண்ணா’ சேர்ந்து சங்கம் வைச்சிருகீங்க?
கட்ட வண்டி இழுக்கறவ தொழிலாளி, ஆட்டோ ஓட்டுறவங்க, மூட்ட தூக்கறவங்க கூட சங்கம் வச்சிதான் போராடறாங்க.
நீங்க பேப்பர் கிழிய குமுறிக் குமுறி எழுதறீங்களே…உங்களுக்குன்னு ஒரு ஆபீசுல கூட சங்கம் வச்சுக்க வக்கில்லையே…ஏன்னு சொல்லவா?
நீங்கல்லாம் கடைஞ்செடுத்த சுயநலமிங்க…எல்லாத்துக்கும் மேல…நீங்கள்லாம் முதுகெலும்பு இல்லாத கோழைங்க! உங்களால பத்துப் பேரோட ஒத்துப் போக முடியாது. உங்களால உங்க முதலாளிங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது!
அட…விபசாரம் பண்ற பொம்பளைங்க கூட ’பாலியல் தொழிலாளிகள்’ பேர் போட்டு சங்கம் வச்சிருக்காங்க…!
ஆனா…நீங்க…ஊர் ஒலகத்துல இருக்கிற உரிமைப் பிரச்சினைங்களையெல்லாம் எழுதுவீங்க. உங்க ஆபீசுல அடிமையா பம்முவீங்க!
இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு ’பத்திரிகையாளர்கள் சங்கம்’னு ஒண்ணை ஆபீசுக்கு வெளில வச்சிருக்கீங்களே. யாரை ஏமாத்த?
ஏன்யா…ஒரு மன்னார் அன் கம்பெனியில வேலை பாக்க்குறவன் மன்னார் அன் கம்பெனி யூனியன்ல இருப்பானா…? இல்ல…தனியாப் போயி ’பல கம்பெனி பரதேசிகள் சங்கம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுல இருப்பானா…?
பதில் சொல்லுங்க ’உரிமைக் காவலர்களே..’
இந்த நாட்டுல,போலீசு, பத்திரிகைக்காரதுக…இந்த ரெண்டு பேருக்கும் சங்கம் வச்சிக்கிற உரிமை இல்ல.
போலீசும் நீங்களும் சம்பாதிக்கிற விதமும் ஒண்ணுதானே!
சங்கத்தைப் பத்தி ஏன் கேக்கறேன்னா…
உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருந்தா…லெனின் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிசமே…தினமலர் ஆபீசுல வேலை நிறுத்தம் செஞ்சி…’பொறுப்பாசிரியர் செஞ்ச தப்புக்கு…உதவி ஆசிரியர் பலியாகணுமா?ன்னு கோசம் போட்டிருக்கலாமே!
அதானே முறை?
அட…எக்ஸ்போர்ட் கம்பெனியில பனியன் நூல் பிரிஞ்சிருக்குன்னு கட்டரை சஸ்பெண்ட் பண்ணினா…தொழிலாளிங்கல்லாம் வாசலுக்குப் போயி…’சூப்பர்வைசர் என்ன புடுங்க்கிட்டா இருந்தான்…அவனை சஸ்பெண்ட் பண்ணுடா’ன்னு இந்நேரம் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க!
ஆனா…உங்களுக்கு அந்த துப்பில்லை! ஏன்னா நீங்கள்லாம் தினமும் வீட்லேருந்து கிளம்பும்போதே மானத்தை கக்கூஸ்லயும் மரியாதைய செருப்பு ஸ்டாண்டிலயும் வச்சுட்டுத்தான் ஆபீஸ் போறீங்க!
ஆக மொத்ததுல…
சினிமா, அரசியல், கட்டப் பஞ்சாயத்து…ன்னு மாமா வேலை பார்த்துப் பொழைக்கற ஜென்மமா வாழற உங்களுக்கு…எந்த நடிகை என்ன ‘தொழில்’ செஞ்சா என்னா…?
இதுதான் கேள்வி.
இதோட சில கொசுறுக் கேள்விங்களும் இருக்கு.
1. எந்தெந்த நடிகருங்க (ஹீரோக்கள்) விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு…இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?
2. எந்தெந்த தலைவருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
3. எந்தெந்த பத்திரிகை ‘அதிபர்கள்’ விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
இந்தக் கேள்விக்கெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்.
கடைசியா… இந்தக் கேள்வியையும் கேட்டுடறேன்.
மரியா மக்தலீனா..ங்கற பொண்ணு விபசாரம் செய்யுதுன்னு ஊரே திரண்டு அடிச்சப்ப…ஏசு சொன்ன வாசகம் இது:
‘உங்களில் எவரொருவர் கள்ளமில்லாதவரோ…அவர் இந்தப் பெண் மீது கல் எறியலாம்!’
இப்ப சொல்லுங்க…
உங்களில் எவர் கள்ளமில்லாதவர்?
நன்றி: http://settaikaaran.blogspot.com/2009/10/blog-post_09.html
summa poonthu oodukatti kalakkitteenga nanbaa….
kalakal lenin!!! bravo! our rage should anhilate these incompetant imbecile invertebrates!!! these journos are like eunuch in harem! they know what is done, the know how to do it – but they cannot do it. ( my profound apologies to the eunuch community)
garibaldi
Very good. really superb lenin
உங்களின் பதிவுகள் அருமை. ஆனால், கலைஞர் / தி.மு.க ஈழ தமிழர் பிரச்சனையில் நடத்தும் நாடகத்தை மட்டும் ஏன் பதியவில்லை?
முள்வேலி முகாம்களில் வாழுகின்ற தமிழர்களை நேரில் பார்வையிட திமுக, காங்கிரஸ், மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர்கள் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான அரசியல் நாடகத்தின் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
bravo Mr.Chandra & lenin
வினவிற்குப் பாராட்டுக்கள்.சிறப்பான பதிவு. தன் பேத்தி வயதுள்ள ஸ்ரேயாவுடன் தொடைஇடுக்குகளிடையே கால்களை நுழைத்துக்கொண்டு குத்தாட்டம் ஆடுகிற ரஜினி ஆபாசம் பத்திப்பேசுகிறான். நடிக்கும் வாய்ப்புகளை இழந்த பெண்களை விபச்சாரம் செய்துதான் பிழைக்கவேண்டும் என்கிற நிலைக்கு வற்புறுத்துகிற தமிழ்ச்சினிமா உலகமும்,பத்திரிக்கைகளும் விபச்சாரர்கள் தான். அந்துமணிக்கு தண்டனை தரவேண்டுமென்பது 100 சதவீத நியாயம்.அதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.ஆனால் அதைத் தரும் யோக்யதை இந்தக் கும்பலுக்கு உண்டா? என்பதுதான் கேள்வி. தனது ரசிகர்களைப் படுமுட்டாள்களாகவும், தங்களையே மிகப்பெரும் அறிவாளிகளாகவும் நினைக்கிற இந்த ஹீரோக்களும் சரி,இவர்களை வைத்துப் படம் செய்வதையே பெரும்சாதனையாக எண்ணிக்கொள்ளும் இயக்குநர்களும் சரி,தமிழ்ச்சமூகத்தின் நோய்க்கிருமிகள் த