முகப்புமுதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!
Array

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

-

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

முற்பிறவியில் செய்த சில தீவினைகள் காரணமாக எனக்கு முதுகுவலியும் சைனஸ் பிரச்சினையும் இருக்கிறது. எல்லா உடல் உபாதைகளுக்கும் யோகாவில் தீர்வு இருப்பதாக சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள், இதற்கும் முற்பிறவியின் தீவினைகள்தான் காரணமா என்பதை உறுதியாக சொல்ல  முடியவில்லை. தானாகவே சாகப்போன அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட சிவபெருமானைப்போல நாம் சிகிச்சைக்கு போகும்போதெல்லாம் குறுக்கிட்டு யோகாலோசனை வழங்குகிறார்கள். நான் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போய்வந்ததை அறிந்த “வாழ்க வளமுடன்” நண்பர், இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க?  நம்ம அறிவுத்திருக்கோயிலுக்கு வாங்க, எல்லா வியாதியையும் ஆசனத்தாலயே சரிபண்ணிடலாம் என்றார். அங்க போனதுக்குபிறகு எனக்கு உடம்புக்கு எதுவுமே வர்றது இல்லை என்றார் மூக்கை உறிஞ்சியபடியே.  கேள்விப்பட்டவரையில் இவர்கள்தான் சகாய விலையில் இந்த சேவையை தருகிறார்கள்,

அங்கு நடந்த உபன்யாசங்கள் நமக்கு அநாவசியமானவை. ஒரு ஆசனம் சொல்லித்தருகிறார்கள், அதுதான் இவர்களின் பிரதான ஆசனமாம். இதை தினமும் செய்தால் லாட்டரியில் பணம் விழுவதைத்தவிர்த்த சகல சௌபாக்கியங்களும் கிடைகும் என்றார்கள். இந்த ஆசனத்தை சுலபமானதா அல்லது கடினமானதா என்று வகைபடுத்த முடியவில்லை, அதாவது ஆசனவாயை ஐந்து முறை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆசனத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது இதைவிட அதிர்ச்சிகரமானது, குதிரைகள் மேற்கூறிய செயலை அடிக்கடி செய்வதால்தான் அவை எப்போதும் துடிப்புடன் இருக்கின்றன என்பதுதான் அந்த கண்டுபிடிப்பு. மகரிஷி குதிரைகள் எனும் அளவில் மட்டும் ஆரய்ச்சியை முடித்துக்கொண்டதை நினைத்து ஆனந்தப்பட்ட வேளையில் பக்கத்திலிருப்பவர் சொன்னார், அடுத்தடுத்த நிலைகளை கற்றால் இந்திரியத்தை முதுகுத்தண்டு வழியே மூளைக்கு பை-பாஸ் சாலையில் அனுப்பும் வித்தையை தெரிந்துகொள்ளலாம் என்று. எனக்கு ஏற்கனவே முதுகுப்பிரச்சனை இருப்பதால், முதுகுக்கு கூடுதல் வேலை கொடுக்க விரும்பவிலை. என்வே இந்த அளவோடு என்னுடைய அமர்வை அங்கே முடித்துக்கொண்டேன்.

அடுத்து வேறொரு நண்பரை சந்தித்தேன், அங்கேயெல்லாம் போகும்போது நம்ம ஈஷாவுக்கு ஒருதரம் வரக்கூடாதா என்றார், “இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம போனா எப்படி?” என்று நம் நண்பர்கள் கேட்பார்கள் இல்லையா அப்படிக்கேட்டார். சரி என்று விசாரித்தால், அவர்கள் அறுநூறு ரூபாய் கேட்கிறார்கள். அதுவும் ஒருவார தொடர் வகுப்பு, இரண்டு நாட்கள் முழுநாள் பயிற்சி வேறு, ஜேம்ஸ் பாண்ட் மாதிரி விதவிதமான ஆடை அணிந்து விதவிதமான கார் பைக்குகளில் போஸ் கொடுப்பதால் ஜக்கி ரொம்பவும் மாடர்ன் சாமியாரோ எனும் எண்ணம் வந்தாலும், அடிக்கடி காட்டுக்குப்போய் பாம்பையும் மிருகங்களையும் பார்ப்பவர் என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது ( வீட்டுப்பிராணி குதிரையை பார்த்த மகரிஷியின் யோகா அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை ). மேலும் அவர் உங்களிடம் உள்ள ‘நான்’ என்கிற ஈகோவை எடுத்துவிடுவார் என்றார்கள் ( நல்லவேளை சிக்மண்ட் பிராய்டு உயிரோடு இல்லை). கடைசியாக ஒரு தகவல் சொன்னார்கள், சாப்பாட்டில் பூண்டு வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று. தப்பிப்பதற்கு இதைவிட ஒரு நல்ல காரணம் தேவையில்லை என்பதால், இத்தோடு விசாரணையை முடித்துக்கொண்டேன்.

ஆலோசனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை, இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ( எத்தனை ஸ்ரீ என்று சரியாக தெரியவில்லை. ஒரு குத்து மதிப்பாக எழுதியிருக்கிறேன் ) ரவிஷங்கர் யோகாவை முயற்சி செய்யலாமே என்றார்கள். ஒரு விளம்பரத்தில் கட்டணம் நாலாயிரத்து சொச்சம் என்று குறிப்பிட்டிருந்தது. அயோடெக்ஸ் ஐம்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது இது கொஞ்சம் அதிகம் என்று விட்டுவிட்டேன்.

இங்குதான் சாமியார், யோகா தொல்லை என்று இணையத்தை திறந்தால், சாருநிவேதிதா என்று ஒருவர் தன் மனைவி ஒரு சாமியாரை வணங்கத்துவங்கிய பிறகு நடக்கப்போவதை முன்கூட்டியே தன் டைரியில் எழுதி வைப்பதாகவும், இரவில் தூங்கும்போது அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதாகவும் எழுதியிருக்கிறார்(இயல்பில் அவருக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு வரவே வராதாம்) . இது தெரியாமல் தெருவுக்கு தெரு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது? இன்னொரு செய்தி இன்னும் பயங்கரமானது, அதாவது ‘பிரேக்ஷா’ எனும் தியானம் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆரய்ச்சியை குஜராத் ஜெயின் பல்கலைக்கழகம் செய்திருக்கிறதாம்.

அடுத்த முறை உங்கள் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், அவசரப்படாதீர்கள். ஒருமுறை உங்கள் ஆசன நண்பர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். யார் கண்டது அதற்கும் அவர்களிடம் யோகா மூலமான ஒரு தீர்வு இருக்கக்கூடும்.

நன்றி: வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

  1. /சாருநிவேதிதா என்று ஒருவர் தன் மனைவி ஒரு சாமியாரை வணங்கத்துவங்கிய பிறகு நடக்கப்போவதை முன்கூட்டியே தன் டைரியில் எழுதி வைப்பதாகவும், இரவில் தூங்கும்போது அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதாகவும் எழுதியிருக்கிறார்(இயல்பில் அவருக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு வரவே வராதாம்).// சாரு அதை பற்றி மட்டுமா சொன்னார், கூடவே பாபாவின் படத்திலிருந்து விபூதி விழுகிறது யென்றும், முன் ஜென்மம் மறு பிறவி பற்றியும் கரடி விடுவது, ஆவியுடன் பேசுவது போன்று கைதேர்ந்த ஜோசியக்காரனை போன்று பீலா விடுவது என்று தன் எழுத்து பணியை பல்வேறு சிரமங்களுக்கிடையே செய்து வருகிறார். இதில் கூடவே கம்யூனிஸ வெறுப்பு பிரச்சாரம் வேறு. ஸ்டாலினை விட்டுவிட்டு இப்போது லெனினை இரக்கமற்றவராக சித்தரிப்பது போன்ற வேலை களையும் பாருக்கு போகின்ற நேரம் தவிர்த்து செவ்வனே செய்து வருகிறார். பாருக்கு போகின்ற நேரம் தவிர்த்து மீத நேரங்களில் இவர் எழுதுவதை நிறுத்திவிட்டு பேசாமல் ஒரு மரத்தடி நிழழாக பார்த்து உட்கார்ந்து கைரேகை பார்க்கலாம். அவருக்கு வருமானமும் வரும், தமிழ் வாசகர்களும் பிழைப்பார்கள்….

  2. யோகா – உடற்பயிற்சி வகையைச் சேர்ந்தது. அதில் உள்ள ஆசனங்கள் பலவித உடல் பிரச்சினைகளை தீர்க்கிறது என்பது உண்மை தான். நான் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

    ஆனால், யோகாவை வைத்துக்கொண்டு, இவர்கள் அதற்குள் வைத்து தருகிற ஆன்மீகம், புதிதாக கண்டுபிடித்து…. அதை ஆசனங்களில் ஒன்றாக சேர்த்துவிடுவது எல்லாம் அபத்தம்.

    இந்தியாவில் யோகாவை சாமியார்கள் எப்படி கைப்பற்றி கொண்டார்கள் என்பதை தனியாக ஆய்வு செய்யவேண்டியது அவசியம்.

    நான் செல்கிற யோகா மையத்தில் இந்து மத சார்பானது தான். ஆனால், இப்படி பிரச்சாரம் செய்வது எல்லாம் கிடையாது. ஆகையால், சண்டை பிடிக்காமல் தொடர்ந்து செல்லமுடிகிறது.

  3. தலையைக் கழட்டிவச்சுட்டுத்தான் இங்கெல்லாம் போகணும்.

    இங்கே எல்லாத்துக்கும் ஒரு மார்கெட் இருக்கு. கூட்டம்தான் அம்முதே……

  4. Why don’t you see the swami Ramdev’s pranayam at aastha channel. You may not beleive all his lecture. But he is really doing seva for our country. First he doesn’t make lecture on religion. And their ayurvedic products are selling at very less margin. Even profit of this product also goes to development of our nation. He is not corporate swamy.He doesn’t speak in English. But you listen for two days. Then write about him.

    • Is that Ramdev an RSS backed person? Is he the person who has been indulged in some forms corruption and that was reported in newspapers? I scarcely remember Brida Karat of CPM led some people and made a bid to storm into his Ashram who were allegedly victimised by Ramdev some two years before. Can Ravi give details about that?

      • As for my concern he is not related with any RSS activity. He is totally against the corporate companies. Because of his opposition against corporate companies CPM and Govt. may be targeted him.He is also one of the person against the black money and corruption government. He insist everybody to purchase our own products(Sudeshi) . May be he is totally against the corporate and he boldly spell out against coke products and particularly Hindustan lever products. He couldn’t reach easily in southern states because he knows only hindi.

    • ராம் தேவின் மருந்துகளின் லாப விகிதம் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அவை மருந்துகளின் பட்டியலில் சேர்க்க முடியாத தரம் கொண்டவை என்பது பல பத்திரிக்கைகளில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது லாபம் தேச மேம்பாட்டுக்கு போகிறது என்கிறீர்கள், சரி. அவரது யோகா வகுப்புக்களுக்கு வசூலிக்கப்படும் தொகை சாதாரண மக்களுக்கு எட்டாதது என்பது உங்களுக்கு தெரியுமா ? மான்கறி வைத்தியர் விஜயகுமாருக்கும் இவருக்கும் உள்ள வேறுபாடு காவியுடையும் தாடியும்தான். அதுதான் அவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் காப்பாற்றுகிறது.

  5. உடல் நோய் எனும் போது ஏதாவது ஒரு மருத்துவம் பார்த்துத்தான் தீர வேண்டியிருக்கிறது அது அலோபதி,ஹோமியோபதி அல்லது யோகாவால் நோய் குணப்படுகிறது என்பது உள்பட.உங்களுக்குத்தான் முதுகு வலி,சைனஸ் உள்ளதே!முதுகு வலி,சைனஸ்க்கான யோகாவை குறிப்பிட்ட காலம் செய்து பார்த்து விட்டு யோகாவால் பலன் இல்லை என்று இடுகையிட்டால் யோகா பற்றிய மாற்றுப் பார்வை அல்லேலுயா சாட்சிகள் மாதிரி புரிந்து கொள்ள இயலும்.எப்ப பயிற்சி ஆரம்பிக்கப் போறீங்க:)

    மற்றபடி உபன்யாசங்கள்,இந்திரியம் மூளைக்கு அனுப்புவது போன்றவை அன்றாட வாழ்வியலுக்கு தேவையற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனக்கு.

  6. யோகா எனும் உடற்பயிறசி‍யை முறறு முழுதாக புறகக்ணிதது எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை முற்றிலும் தவறானதாகவே கருதுகிறேன்.

    எனக்குத் தெரிந்த சித்த மருத்துவர் ஒருவர் அடிக்கடி மூக்கை உறிஞ்சிக்கொண்டுதான் இருப்பார். அதற்காக சித்த மருத்துவ முறையே தவறானது என்றாகுமா? அலோபதி மருத்துவர் ஒருவர், ஒரே தலைவலியாக இருக்கிறது என்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார். ஆதலால், அலோபதி மருத்துவ முறையே தவறானதாகுமா?

    பெரும்பாலும், விஞ்ஞானம், எதார்த்தம் அனைத்தும் ஆன்மீகவாதிகளது கைகளிலேயே சிக்கியுள்ளது. ஆதலால், அதில் உள்ள எதார்த்தத்தை நாம் ஏற்பதில் தவறு ஒன்றும் இல்லை. மாறாக, இக்கட்டுரை தேகப்பயிற்சி, தியானம் போன்றவற்றின்பேரால் ஏமாற்றுகிறார்கள் என்றிருந்தால் நன்றாக இருக்கும்.

  7. ravichandran. “He is not corporate swamy.He doesn’t speak in English. But you listen for two days. Then write about him.”,,,,,,he had recently acquired lots of land in Uk…a non-corporate effort?

    • I am regularly, almost year, lisening him. Yes his trust accquired land in UK for the purpose of yoga and prayanm. Trust reports are clarifying those regards. Even this trust is constructing a big manufacturing (one of world largest)unit for the purpose of ayurvedic produts.And their products are cheap and 100percentage worth.Even he is asking the people to analyse the products in lab to find any adulderation.He is against corporate companies. Every speech he asks the people not to drink coke and products. And he is not RSS person. All releigion people are doing this pranayam.He couldn’t reach southern states because he speaks only hindi. You can watch his yoga in their web divyayoga.com

  8. மார்க்ஸின் ”சுவிசேசத்தில” யோகா பற்றி எதுவும் சொல்லவில்லையா ? உங்க ஸ்பான்ஸர் சைனாவுல இந்திய யோகா கொடிகட்டி பறக்குதாமே ?

    • “உங்க ஸ்பான்ஸர் சைனாவுல”
      மதி கெட்ட இண்டியா,
      இந்திய நக்சல்பரி கட்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதில்லை. அதற்கு ஆதாரமில்லை என உள்துறை அமைச்சர் சிதம்பரமே தெளிவுப்படுத்திவிட்டார். மற்றும் அரசு வட்டாரங்களும் இதை சொல்கின்றன.
      நீ மட்டும் இதை உளறிகிட்டு திரியற!

  9. ஆன்மீக வியாபாரிகளைப்பற்றி பேசவந்த கட்டுரை தன் கிண்டலான நடையின் வீச்சில் யோகாவையும் உள்ளிளுத்துக்கொண்டது. ஆன்மீக புராண தூசிகளை துடைத்துவிட்டால் யோகா நடப்பிலிருக்கும் உடற்பயிற்சி முறைகள் அனைத்தையும்விட சிறந்தது.
    தோழமையுடன்செங்கொடி

  10. ரொம்பத்தேவையான கட்டுரை,

    யோகாவால மனிதர்களுக்கு பயனிருக்குதோ இல்லையே இந்த பார்ப்பன பரிவாரங்கள் இதை ஒரு ஆயுதமாக பயன் படுத்தி வருகின்றன. இவர்கள் கூறும் அமைதி என்பது என்ன ? எதைப்பற்றீயும் கவலைப்படாதே. அமைதி அது தான் தீர்வு. என்னுடைய உழைக்கும் மக்கள் வறுமையால் பட்டினியால் இந்த அரசால் முதலாளித்துவத்தால் கொத்து கொத்தாக கொல்லப்படும் போது நான் கதவை மூடிக்கொண்டு தியானமிருக்க வேண்டுமாம்.

    அமைதி அது சுடுகாட்டிலும் கிடைக்கும்
    மக்களை தின்னும் அமைதி நமக்குத்தேவையில்லை
    வேலையிழந்த தொழிலாளி “கதவைத்திற காற்று வரட்டும்”
    ஒடிந்து போன விவசாயி “வாழ்க வளமுடன்”

    துப்பாக்கியின் மீது பூக்களைவைப்பதால்
    அதன் சூடு தணிந்திடுவதில்லை

    இந்த அமைதி நம்மை நிரந்தரமான
    சூனியத்துக்கு கொண்டு செல்லும்
    அதற்கு முன்
    இந்த அமைதியின் நாயகர்களுக்கு
    நிரந்தர அமைதியை நாம் பரிசாய் தருவோம்

    போராட்டம்தான் , உங்களின் மரணம் தான்
    எங்களுக்கு அமைதியைத்தரும்.

    கலகம்

    • //போராட்டம்தான் , உங்களின் மரணம் தான்
      எங்களுக்கு அமைதியைத்தரும்.//
      உங்களின் மரணம் என்றால்… இந்து வெறி பரிவாரங்களையா! அல்லது முதலாளித்துவத்தையா?
      பின்னூட்டம் இடும் பொழுது, கொஞ்சம் நீளமாய் இருந்தாலும் புரியும் படி எழுதுங்கள். தவறாய் வேறொன்றை புரிந்து கொள்ள வாய்ப்பு தந்துவிடும்.

  11. சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்

    கறுப்பு சட்டைக்குள் காவி மாமா

    http://vitudhalai.wordpress.com/2009/10/21/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%89/

  12. முதுகு வலியை சரி செய்ய எதற்காக ஆன்மீக மடங்களை நோக்கி சென்றீர்கள்
    என்று தெரியவில்லை. அது முதல் அறியாமை!

    யோகாவை பற்றி முழுதும் தெரியாமல் அதைப் பற்றி கிண்டலாக எழுதுவது
    இரண்டாவது அறியாமை,

    உங்கள் கருத்துக்களை படித்ததிலிருந்து உங்களுக்குத் தேவை முதுகு வலி நிவாரணம் என்று அறிகிறேன்.

    உங்களுக்குத் தேவை “YOGA THERAPY”. சென்னையில் Dr. A. S. அசோக் குமார் என்பவர் யோக மருத்துவத்தில் கைதேர்ந்த நிபுணர். முடிந்தால் அவரை தொடர்பு கொள்ளவும்.

      • Well. I have quite a few books on this on this topic written by both Indian and Foreign authors. Basically, it connects how certain Yogas can fit to treat certain rudimentary physical problems. Back pain falls into this category and personally, it has helped me a lot. It is better than taking pain killers and muscle relaxors, which have other side effects. By saying that, is it as scientific as allopathy treatments? Definitely not. Not enough scientific studies to establish the relationship between treatment and cause have been made in Yoga Therapy though. But it may fall under “Natural Therapy” category with absolutely no side effects. But one can definitely give a shot and see how it helps them. It definitely helps for aches and pains that are due to simple causes. Thanks!!

      • யாழினி அத்தன்,
        நீங்கள் Dr.Rudhran மற்றும் வில்லவன் இருவரோடும் பேசும் போது நான் குறுக்கே புகுந்து கருத்து சொல்வதற்கு மன்னிக்கவும். 
        //It is better than taking pain killers and muscle relaxors, which have other side effects.//
        pain killers and muscle relaxors என்பவற்றின் பக்கவிளைவுகள் பற்றி எப்படி நீங்கள் அக்கறை படுகிறீர்களோ அதேபோல் வைத்தியர் ருத்திரனும் வில்லவனும் போலியான யோகா மற்றும் இன்னபிற பணம் பறிக்கும் நிலையங்கள் ஒரு சமூகத்திற்கு/தனிமனிதனுக்கு  ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகளை சுட்டிக்காட்ட விளைகிறார்கள். மற்றப்படி யோகாவை பழிதீர்ப்பது இந்த கட்டுரையின் நோக்கமாக எனக்கு தெரியவில்லை. இது ஒரு மருத்துவ கட்டுரை அல்ல என்பது என் புரிதல். 

      • is there any scientific therapy called psychology? Who gives recognization to scientific activities. Yoga dates back to 3500 b.c., but your scientific research and recognizing organization emerges only few 100 years ago.

  13. வில்லவன்,
    ரொம்பவே சிலாகித்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். இப்படியான சில வியாபார நோக்கோடு கூடிய “கடவுளின் மறுபிறப்புகள், கடவுளின் ஆசி பெற்றவர்கள், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள், யோகாசனம் கற்றுக்கொடுப்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள் etc.” போன்றவர்கள் இந்தியாவிலிருந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களையும், அவர்களின் வலிகளையும் கூட அக்கறையோடும், தகுந்த சன்மானத்தோடும் குணப்படுத்துவதாக நிறையவே விளம்பரங்கள் பார்க்கிறேன். கடவுளின் தூதுவர்கள் சிலருக்கு இங்கே கோவில் கட்டாத குறை தான். அவர்களுடைய பிறந்தநாள், திருமணநாள் என்று கட்டவுட் வைத்தெல்லாம் “பூஜா” கூட செய்கிறார்கள். இதையெல்லாம் நான் விமர்சித்தால் பிறகு அம்மணமாய் திரியும் ஊரில் நான் மட்டும்…….அலைந்தது போலிருக்கும். 
    சரி, சரி ஒன்றும் பாதகமில்லை. என்னை திட்டுறவங்க திட்டிவிட்டு போங்க……

  14. தோழர் வில்லவன்,

    உங்கள் கட்டுரை, உடற்பயிற்சியை வைத்து ஆன்மீக வியாபாரம் செய்பவர்களை சாடுவதற்கு பதிலாக யோகா எனும் உடற்பயிற்சி முறையையே குறைகூறுவது எந்த விதத்திலும் சரியில்லை.

    யோகா உடற்பயிற்சியா, இல்லையா?

    உடற்பயிற்சி செய்யலாமா, கூடாதா?

  15. when yoga is connected to the unproven kundalini and taught by half-baked enthusiasts or vulgar businessmen, it is more harmful and therefore it is better to stay off unless one is sure to use ‘only’ the physical aspects of the regimen without caring for the psudophilosphy and suspect-spirituality.

  16. நீங்கள் ஒரு விஷயத்தை செய்து பார்த்துவிட்டு அதில் குறை கூறுங்கள். ஒட்டுமொத்தமாக யோகாவை குற்றம் சொல்வது நலலதல்ல. இங்கு அமெரிக்காவில் யோகாவினால் பயனடையும் மக்கள் ஏராளம். யோகாவில் விஷயம் இல்லை என்றால் என்றோ தோற்றுப் போயிருக்கும். நன்றி.

  17.   ///அடுத்த முறை உங்கள் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், அவசரப்படாதீர்கள். ஒருமுறை உங்கள் ஆசன நண்பர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். யார் கண்டது அதற்கும் அவர்களிடம் யோகா மூலமான ஒரு தீர்வு இருக்கக்கூடும்///—யோகா என்றால் என்ன என்று அனைவருக்கும் புரியும் வண்ணம் “மிகத்தெளிவாக”(?) கூறுகிறது இந்த பதிவு. 
    யோகா எனும் உடற்பயிற்சி ஆத்திக வாதிகளால் நடத்தப்படுவதால் அந்த உடற்பயிற்சியும் “தீண்டத்தகாதது” (!) என இவர்களால் ஆக்கப்பட்டுவிட்டதால் அதன் பின்னணியில் உள்ள ஆன்மிக வியாபாரத்தை விட யோகா மோசமாகிவிட்டது. இதுவே ம க இ க நடத்தி இருந்தால் யோகா விமர்சனத்திலிருந்து தப்பித்து இருக்கும். இம்மாதிரியான ‘தெளிவான’ (?) பதிவாக இருப்பதாலேயே இது வினவு தளத்தில் பதியப்பட்டு இருக்கிறது.

    இதை நான், துரை போன்ற புதியவர்கள் கேட்கலாம்.(எத்தனை முறை கேட்டாலும் சரியான பதில் வராது).  ருத்ரன், கலகம் போன்றவர்கள் கொள்கைமாராமல் பின்னூட்டம் இடுகிறார்கள்.  ஆனால் செங்கொடி கொள்கை தடம் புரண்டு கேட்டது அதிசயம்!

  18. நண்பர்களே எனக்கு காந்தி(ஜி???) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி

  19. ரதி உங்கள் பின்னூட்டம் அருமை, எனக்கும் உங்கள் கருத்துதான்

  20. குதிரையிடம் இருந்து மேற்படி ஆசனத்தை மகரிசி கண்டுபிடித்தது பற்றி –

    இது ஒரு மாபெரும் டுபாக்கூர். இதற்கு அசுவினி முத்திரை என்று சொல்வார்கள். பழைய ஆசன முறைகளில் இருக்கும் முத்திரை வகைகளில் ஒன்று. எங்க வாத்தியார் இதன் பலன் என்று சொல்வது இது தான் – ‘ இது மலம் கழிவதை சுலபமாக்கும்’ . அவ்வளவு தான். மற்றபடி முன்பு நானும் இந்த மனவளக்கலை வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன்… இதற்கு காயகற்ப பயிற்சி என்று பெயரிட்டு ( அப்போ 100/- வாங்குவாங்க / ஒரு சர்டிபிகேட்டும் தருவாங்க) சொல்லித் தருவார்கள். ஏதோ இந்த பயிற்சி தான் சகல உபாதைகளுக்கும் சர்வரோக நிவாரனி என்பது போல் சொல்வார்கள்..

    வினவு, இந்த மறுமொழிப் பெட்டிக்குள் காப்பி பேஸ்ட் செய்ய முடியவில்லையே. ரைட் க்ளிக் செய்தால் பேஸ்ட் ஆப்ஷன் க்ரேயாக வருகிறது – நான் பயன்படுத்தும் உலாவி பயர்பாக்ஸ்.

  21. இப்பத்தான் நினைவுக்கு வருது. இந்த குதிரை விஷயம்…..

    பாலகுமாரன், புருஷவதம் என்ற நாவலில் காசிக்குப்போகும் கதாநாயகன் கடைப்பிடிக்கவேண்டிய க் குறிப்புகளில் இதைச் சொல்லி இருப்பார்!

  22. இன்று, வழக்கமாக பழம் வாங்கும் பழக்கடையில் ஒரு பழத்தை பார்த்தேன். பச்சை நிறத்தில் சுமார் பத்து கிலோ எடை இருக்கும். அதன் தோல் பார்க்கவே கண்றாவியாக,முள் முள்ளாக இருந்தது. தொட்டுப்பார்த்தேன். அதன் தோல் குத்தியது. சட்டென்று கையை எடுத்துவிட்டேன். நல்ல வேளை நன்றாக கையை அழுத்தவில்லை. அலுத்தியிருந்தால் கையில் ரத்தம் வந்திருக்குமோ என்னவோ? கடைகாரர் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் அவரிடம் விசாரித்தேன்.

    ‘இதுவா சார்? பலாப்பழம் சார். பார்க்குறதுக்குதான் இப்படி கரடுமுரடா இருக்கும். உள்ளே மஞ்சள் கலரில் தேன் மாதிரி தித்திப்பா சுளை இருக்கும். வாங்கிட்டுப் போங்க சார். அம்பது ரூபாதான். நீங்க நம்ம கஸ்டமர்ங்கறதால நாப்பது கொடுங்க சார். உங்கள் வீட்டுலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்கிட்டுப்போங்க சார். ‘ என்றான்.

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் இங்கேதான். வெளியூர் போகவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் படித்த எந்த புத்தகத்திலும் இப்படியான ஒரு பழம் இருப்பதாக படிக்கவில்லை. என் தந்தையும், நண்பர்களும், பக்கத்து வீட்டுகாரர்களும் கூட இப்படி ஒரு பழம் இருப்பதாக எனக்கு சொல்லவில்லை. பிறகெப்படி இது போன்று ஒரு பழம் இருக்க முடியும்? என்னை பார்த்தால் இளிச்சவாயன் மாதிரி இந்த கடைகாரனுக்கு தெரிந்திருக்கும் போலிருக்கிறது. அதுதான் ஏதோ ஒன்றை காட்டி, அதை பழம் என்று வேறு சொல்லி, என் தலையில் கட்ட பார்க்கிறான். சரி விடு. அது அவன் பிழைக்கிற வழி. பழங்களை பற்றி எனக்கு தெரியாதா? பழம் என்றால் நல்ல வாசனையுடன், சொற சொறப்பு இல்லாத தோலுடன், கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும். வாழைப்பழத்தில் கூட ஒரு வகை பச்சை நிறத்தில் உள்ளது. ஆனால் நல்ல வாசனை கொண்டது.

    இத்தனை எண்ணங்களும், என் மனதில் மின்னல் வேகத்தில் ஓடி மறைய, உன்னிடம் ஏமாற வேறு ஆள்தான் நீ பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு, புன்னகையுடன், “வேண்டாம்ப்பா, எனக்கு ரெண்டு பூவன் வாழைப்பழம் கொடு” என்று வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன்.

    பலாப்பழமாம் பலாப்பழம். நான் ஏமாறுவதாக இல்லை.

  23. AAnmiga vuabharigalai patri solliyiruppathu sari. Yogasana patri ondrume theriadha pamarathanam itha katturaiyil ullathu.Ulagukku sidddha maruthuvamum, yogasanamum nam munnor alitha kodai! ungali yaar yoga karka samiyargalidam poga sonargal? athanai swamijikkalum Vedadharigale!Yoga theria vendumanal vilambarabgalai nambathu veliye thedungal, unmaiyanathu kidaikkum.

  24. உங்கள் வலைப்பதிவில் யோகக் கலைகளை என்னவென்று முழுமையாக அறிந்துகொள்ளாமல் மேம்போக்காக அவைகளை பரிகசிக்கும் எண்ணம் மட்டுமே உள்ளது. நாட்டில் நிறைய போலிகள் உள்ளார்கள் என்பதற்காக இந்த அறிய கலைகளை பொய் என்று கூறுவது மூடத்தனம். நம் முன்னோர் அளித்த கொடைகளான இந்தக் கலைகளின் உன்னதத்தை உணர்வதற்கு உங்களுக்கு சிக்மண்ட் பிராய்டு போன்ற வெளிநாட்டு அறிஞர் வேண்டும் என்றால் நீங்கள் இன்னும் ஆங்கில அடிமைத்தனத்தில் இருந்து வெளிவரவில்லை என்று அர்த்தம்.

  25. Hmmmm….Noone tells you not to eat Onion n garlic,…………But I have personally seen ppl benefitting from yoga………

    Even in my house My mom has all problems and even obesity………….

    But BEing lazy SHe’ll talk like the way u have written about yogaaaaaa………Yoga is the union of mind body and spirit….This post is totally absurd.,You can review a thing only when it is tested by yourself…………

    • anu, i was supposedly inititated b;y one dead and one alive guru in yoga.. it has been crap. i am saying this from personal experience. a trained instructor in a gym can do more wonders for the body

      • Rudran,

        Yoga postures are to be done with mind and body in sync. Be in the process and concentrate only on the postures while doing them to get its benefits. I was a critic initially. Later i changed my view after i felt the benefits giving them a try.

        If u r going to practice them with a critic mind judging the process every second,I’m sure this will not work for you. provide urself to the process. Judge it later on. Else better stop criticizing it.

        I accept that it has been a crap in your experience. But that needs not to be true in every others experience. Stop convincing others based on your experience. If it hasnt worked for you it doesnt mean that it will not work for the entire world. After all every human is different and that makes this world more interesting.

        Its good to educate the people to stay away from money makers. But blaming yoga itself with your limited knowledge in that is absolute stupidity.

  26. இங்கே பின்னூட்டமிட்ட சில நன்பர்கள் கட்டுரையாளர் யோகக்கலையின் ‘மகிமை’ தெரியாமல் ஏதோ சொல்லிவிட்டார் – பின்னூட்டமிடும் தோழர்களும்
    யோகக் கலையின் அருமை தெரியாமல்/புரியாமல் ஏதேதோ சொல்கிறார்கள் என்பது போல அங்கலாய்க்கிறார்கள். முதலில் இந்த யோகக் கலையை
    உடைத்து உள்ளே பார்ப்போம்.

    இன்றைக்கு கார்ப்பொரேட் சாமியார்கள் – ஸ்ரீ.ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி, வேதாந்த மகரிஷி மற்றும் இது போல் யோகக் கலையை பேக்கேஜாக கொடுப்பவர்கள்
    கற்றுத் தரும் யோகக் கலை என்பது முற்று முழுதாக ஏமாற்று வேலை தான் – எப்படி என்பதை பின்னர் சொல்கிறேன்.

    பொதுவில் அட்டாங்க யோகத்தில் வரும் “ஆசனம்” மற்றும் “பிரணாயாமம்” தவிர்த்து மற்றவை (யமம், நியமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி) அனைத்தும் கற்பனையாக ( வெறும் கருத்தாக ) மட்டுமே நிலைத்திருக்கக் கூடியது. முந்தையவை இரண்டும் நேரடியான உடற்பயிற்சி. மற்றெல்லா
    உடற்பயிற்சியாலும் எப்படி உடலுக்கு நன்மை ஏற்படுகிறதோ அதே போன்று இதிலும் நன்மை உண்டு ( அதுவும் சரியாக மாற்றாசனங்கள் செய்தால் தான் )

    வேதாத்ரியில் எனக்குத் தெரிந்து முறையான ஆசனப் பயிற்சியோ / பிராணாயாமப் பயிற்சியோ சொல்லித் தருவது கிடையாது ( நானே நேரடியாக அங்கே ஆக்கினை, சாந்தி, துரியம், துரியாதீதம், காயகற்பம், அகத்தாய்வு முதல், இரண்டு நிலைகள் வரை கற்றுள்ளேன் எனும் அனுபவத்திலும், ஒரு முறையான
    ஆசானிடம் நேரடியாக ஆசனங்கள் கற்று இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துமே சொல்கிறேன். )… அங்கே ஆரம்பத்தில் சொல்லித் தரும் வார்ம் அப் பயிற்சிகள் ஆசங்கள் கிடையாது.

    யோகா மனதைக் கூர்மையாக்கும்/ நினைவாற்றலைப் பெருக்கும் என்பது ஒரு பொய்…!!

    எப்படி?

    ஒவ்வொரு உடற்பயிற்சியும் ஒருவிதமான மனநிலையை உண்டாக்கும்.

    மற்ற உடற்பயிற்சிகளும் யோகா( ஆசனம் என்று பொருள் கொள்க)வும் எந்த விதத்தில் வேறுபட்டது? யோகா யாருக்கானது?

    உடல் பருப்பொருள் – மனமும் பருப்பொருள் தான் (மூளை). உடலில் ஏற்படும் வினை, புலன்களின் மூலம் உட்புகும் செய்திகள் தான் மனதின் செயல்பாட்டை
    தீர்மானிக்கும். பாக்ஸிங், கராட்டே, டைக்-வான்-டோ போன்ற தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபடும் ஒருவனின் மனநிலை மெல்ல மெல்ல ஒரு அலெர்டான
    நிலைக்கு தயாராகும். அங்கே மனம் மற்றும் உடல் இரண்டின் கோ-ஆர்டினேஷன் மிக மிக முக்கியம். ஒருவிதமான ரிதமிக் ஆக்ஷன் பழகுவது அவசியம்.
    கட்டா / குமிட்டே பயிற்சிகளிலும் தொடர்ந்து மானவன் இந்த விதமாக ஒரு பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறான். இந்தப் பயிற்சிகளால் அவன் புலன்கள்
    கூர்மையடைகிறது – அவன் செயல்பாடுகளில் ஒரு அலெர்ட்னெஸ் இயல்பாகவே ஏற்படுகிறது

    ஆசனங்கள் துரித கதியில் செய்யப்படுவதல்ல உடலை மிக மெதுவான நடையில் பிழிந்தும், மடக்கியும், நீட்டியும் (stretch) செய்யப்படுவது. மற்ற
    பயிற்சிகளோடு ஒப்பிட்டால், இதற்கு அலெர்ட்னெஸ் அவ்வளவு அவசியமில்லை ( குமிட்டேயின் போது ஒரு Fraction of second கவனம் தவறினால் மூஞ்சி
    கழண்டு விடும்) உடலையும் அதற்குத் தகுந்தவாறு மென்மையாகத் தான் இயக்கும்.. தொடர்ந்து பழகுவதால் ஒரு மொண்ணைத் தன்மை தான் ஏற்படும். ஆசனப் பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது சரிதான் ( மற்ற எல்லா உடற்பயிற்சிகள் போலவே) ஆனால் இது தான் உள்ளதிலேயே மேண்மையானது என்று சொல்வதெல்லாம் ஓவர். எனது கருத்து யோக ஆசனங்கள் ஒருவனின் செயல் வேகத்தை மந்தமாக்கும் என்பது தான். தற்காப்பு
    கலைகள், கபடி, கால்பந்தாட்டம், சிலம்பாட்டம் போன்றவை (அப்படி நேரமிருந்தால்) செய்யலாம்.

    பிரணாயாமத்தில் றனக்கு அப்பீல் இல்லை – அதற்கு இனையாக சொல்லக் கூடிய ஒரு சிஸ்டம் வெகு சிலது தான். அதுவும் (தாய்-ச்சி) இந்தியாவில் எல்லோரும் போலிகள்.. எனவே ஒரு நல்ல மாஸ்டரிடம் பிரணாயாமம் கற்றுக் கொள்வது நல்லதே. ஆனால் இதன் விளைவுகளும் பலன்களும் உடல்ரீதியிலானவை தான். சூட்சுமமானதோ, மர்மமானதோ கிடையாது… சிலர் சொல்வது போல் அ-உ-ம் உச்சரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
    பொதுவாக இரவு நாம் உறங்கும் போது குறுக்கி படுத்திருப்போம், நுரையீரல் அதிகம் விரிவடைந்து இருக்காது – எனவே காலை எழுந்தவுடன் ஆழமாக சில முறை மூச்சை இழுத்து விட்டாலே போதும். மற்றபடி இதற்கு இனையாக டை-குவாண்டோவில் (குறிப்பாக GTF சிஸ்டத்தில் மட்டுமே உள்ளது) உள்ள பவர் வார்ம் அப் முறையை சொல்லலாம்.

    உழைக்கும் மக்களுக்கு யோகத்தால் பெரிதாக பயன் கிடையாது. நீங்கள் கிராமத்துப் பக்கம் பார்த்தால் கபடி / சிலம்பம் போன்ற விளையாட்டுகளே இருக்கும்.. ஏனென்றால் மூலையில் உட்கார்ந்து தேவாங்கு போல மெல்ல மெல்ல அசையும் விளையாட்டு உழைப்பவர்களின் வாழ்க்கை முறைக்கு
    ஏற்றதல்ல.

    இப்போ நம்ம கார்பொரேட் சாமியார்கள்… இவர்கள் ஒரு சில ஆசனங்களையும் (அதுவும் முறையற்று/ மாற்று ஆசனங்கள் சொல்லித்தராமல்) பிராணாயம
    முறை சிலவற்றையும் ( அதுவும் தவறாகவே – ஜக்கியின் சகஜஸ்திதி யோக பயிற்சி முடித்த ஒரு நன்பர் தொடர்ந்து பலமுறை இடைவெளியில்லாமல்
    பஸ்த்ரிகா செய்வதைப் பார்த்து அதிர்ந்து விட்டேன்.. அவனைக் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி.. ‘நெஞ்சு வெடிச்சி செத்துப் போயிடாதடா
    வெண்ணை’ என்று எச்சரித்து வைத்தேன்) பின்னர் இயல்பாகவே அவர்களுக்கு மிஸ்டிக்கலான விஷயங்களின் மேல் இருக்கும் ஒருவித பிரமிப்பின் மேல்
    கட்டப்பட்ட “குண்டலினி சக்கரங்கள்” பற்றிய கட்டுக்கதைகளையும் சரி விகிதத்தில் கலந்து கட்டி விற்கிறார்கள்.

    இந்த கார்பொரேட் சாமியார்களின் செல்வாக்கு நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் உருவானது / நிலைபெற்றது பற்றி முன்பு “புதிய கலாச்சாரத்தில்” ஒரு நல்ல
    கட்டுரை வந்துள்ளது.. அதை எல்லோரும் படிக்க வேண்டும். சாராயத்தை விக்கிறான் – வாங்கிக் குடிக்கிறார்கள்.. இதில் வெளிப்படையான ஒரு விளைவு
    தெரிகிறது.. ஆனா இவன் விற்கும் ‘பொருளின்’ உள்ளடக்கமே கிடையாது என்பது தான் விஷயமே.

    வேதாத்ரி துரியாதீத தியானத்தில், தலைக்கு மேலே ஒரு இன்ச் உயரத்தில் ஒரு ஒளி இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள் என்றும், நீங்கள் இப்போது சந்திர மண்டலத்தில் பிரவேசிக்கிறீர்கள், சூரிய மண்டலத்தில் பிரவேசிக்கிறீர்கள் என்றும் நம்மை நாமே பாவனை செய்து கொள்ளத்தான்
    வைக்கிறார்கள்.. டேய்.. இந்தக் கருமாந்திரம் புடிச்ச கற்பனையையும் கனவையும் தான் நான் வூட்ல இருந்தே செஞ்சுக்குவேனே? நீங்க என்னோட கற்பனைக்கு என்கிட்டேயிருந்தே பணம் வாங்கறீங்களேடான்ன ஒருத்தனும் கேட்கலை.. இந்த அறிவு வந்தபோது நானும் கேட்கும் தொலைவில் இல்லை 🙁

    இப்படி சக்கர தியானத்தின் ஒவ்வொரு சக்கரமும் ஒரு கற்பனையே!

    • தோழர் சங்கு,

      யோகவைப்பற்றி யோக மொழியில் விரிவாக விளக்கியமைக்கு நன்றி. நீங்கள் கூறிய புதிய கலாச்சாரம் கட்டுரையை,” தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக” அடுத்த வாரம் வெளியிடுகிறோம். இந்தக்கட்டுரை சாமியார்கள் குறித்தும், அவர்களது எல்லாப் பிரச்சினைகளை தீர்க்கும் மர்மத்தை அறிவியல் பார்வையுடன் விமரிசிக்கிறது. தோழர் வில்லவன் கட்டுரைக்காக யோகவை சர்வரோக நிவாரணியாக ஆதரிக்கும் நண்பர்கள் அந்த கட்டுரைக்கான விவாதத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

      • தோழர், ஆன்மாவே இல்லைன்னு ஆனதுக்கப்புறம், என்ன இழவுக்குத்தோழர், ஆன்மீகம்??

  27. டாக்டர்

    சூட்டோடு சூடாக ” குருநாதர்கள்’ தொடரை தொடரலாமே? வாசகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  28. (முழு அல்லது பகுதி ) யோகா ஆதரவாளர்களுக்கு,

    யோகா என்பது ஒரு சிகிச்சையா, உடற்பயிற்ச்சியா அல்லது வாழ்வை மேம்படுத்தும் வழிமுறையா என வரையறுப்பதிலேயே யோகாக்காரர்களிடம் பல குழப்பம் நிலவுகிறது. நாற்பதாண்டுகால பாரம்பர்யமுடையது தனது யோகா என்கிறார் ஜக்கி. தானே பல ஆண்டுகாலம் ஆராய்ந்து உருவாக்கியதாக சொல்கிறார் வேதாத்ரி. தெளிவாக இதுதான் யோகா என்ற விளக்கமே இல்லாமல் ஆளாளுக்கு ஒரு ஒரு வழியில் போகிறார்கள்.

    கண்களின் குறைபாட்டை படிபடியாக சரிசெய்யலாம் ( குறிப்பாக கண்ணாடிக்கான பவரை குறைக்கலாம் என்கிறார்), புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் தவிர்த்த சகல நோய்களையும் சரி செய்யலாமென்கிறார் வேதாத்ரி ( அவர் உலக சமுதாய சேவா சங்கத்தின் புத்தகத்தில் ஆசனத்தால் சரியாகும் நோய்கள் என ஒரு நீண்ட பட்டியல் தரப்பட்டிருக்கிறது). ஜக்கி இப்படியெல்லாம் மெனக்கெடவில்லை, யோகாவில் சகலமும் சாத்தியம் என்பதை பூடகமாக தெரிவிகிறார். ( யோகாவால் பேரானந்தத்தை ருசிக்க முடியும். உச்சபட்ச சக்தியை உயிர்பிக்க முடியும், அதன் மூலம் நாம் வியாபாரம், குடும்பம் மற்றும் ஆன்மீகம் என எதை வேண்டுமானாலும் உள்காயம் இல்லாமல் முழுமையாக விளையாடிப்பார்க்க முடியும்- அத்தனைக்கும் ஆசைப்படு நூலில் ).

    எந்த ஜிம் மாஸ்டரும் தண்டால் எடுத்தால் இந்த நோய் குணமாகும் என பட்டியல் தருவதில்லை. எந்த மருத்துவரும் பாராசிட்டமால் பகவான் அருளியது என தெய்வீக சாயம் பூசுவதில்லை. ஆனால் எல்லா யோகா சாமியார்களும் தங்கள் ஆசனங்களை மகா சக்தி வாய்ந்தது என பரப்புரை செய்கிறார்கள். இதை ஏதோ ராஜ ரகசியம் போலவும் பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஆம்வே (amway) முகவர்களைப்போல தங்களை நாடி வருபவர்களை மாற்றுகிறார்கள். இந்த நடவடிக்கைகளில் மூலமே பல கோடிகளை மிகக்குறுகிய காலத்தில் சம்பாதிக்கிறார்கள். மாட்டு மூத்திரத்தை அரசாங்கமே மக்களிடம் விற்பனை செய்யும் தேசம் இது., யோகா சாமியார்களின் முதன்மையான விற்பனை பொருள், அதை விட்டுவிட்டு வெறுமனே சாமியார்களை மட்டும் விமர்சனம் செய்யமுடியாது.

    யோகா பக்தர்கள் முதலில் யோகாவை இந்த சாமியார்களிடம் இருந்து காப்பாற்றுங்கள். அப்போதுதான் ‘ ஒரிஜினல் ‘ யோகா எது என நாங்கள் தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகுதான் இதன் வகையை ( சிகிச்சை, உடற்பயிற்சி.. etc) பற்றிக்கூட நம்மால் விவாதிக்க முடியும்.

    • வில்லவன் கருத்தில் உடன்படுகிறேன். கோடி கோடியாய் பணம் புரள்கிற விசயமாகிவிட்டது யோகாவும், தியானமும். சென்னை போன்ற நகரத்தில் தான், எல்லா சிறப்பு மருத்துவர்களும் குவிந்து கிடக்கிற மாதிரி, எல்லா சாமியார்களும் குவிந்து கிடக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் சாமியார்கள் விளம்பரங்களில் தென்படுகிறார்கள். பத்திரிக்கைகளும் தங்கள் வளர்ச்சிக்கு சாமியார்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

      வினவு நீங்கள் சொன்னபடி தாமதிக்காமல் வாழ்வியலின் சிக்கலுக்கு சாமியார்கள் தரும் தீர்வு பற்றி புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரையை தாமதிக்காமல் வெளியிடும்படி கேட்டுகொள்கிறேன்.

    • மிக துல்லியமான, தெளிவான விளக்கம் வில்லவன். எந்த ஒரு விசயத்தையும் ஆதரிக்கும் போதோ அல்லது விமர்சிக்கும் போதோ அதன் இன்றையை நிலை பற்றிய முழுமையான புரிதல் தேவை… பின்னர் தென்படும் பிரதான பிரச்சனைகளை விமர்சனம் செய்து அம்பலப்படுத்துவதன் மூலமே, எந்த ஒரு புரட்சிகரமான ‘பொருளாக’ இருந்தாலும் அதை காக்க முடியும்.

      யோகாவை ”கலை கலைக்காகவே” கோஷ்டி போல நாம் ஆதரிக்க முடியாது. இன்றைய அதன் சமூக விளைவு என்ன என்பதிலிருந்துதான் அதன் முற்போக்கு பாத்திரம் தீர்மானிக்கப்படும். குறைந்தபட்சம் இந்த புரிதலாவது நமக்கு தேவை, இல்லையெனில் நாளை சினிமா விமர்சனம் கூட செய்ய முடியாது. ஒன்று ஆதரவு இல்லை எதிர்ப்பு என இரண்டு துருவங்களிலிருந்து மட்டும் அணுகுவது தவறு.

      மற்றபடி யோகாவை கண்மூடித்தனமாக ஆதரிப்பவரகளிடம் வில்லவன் கேட்கும் கேள்விதான் என்னுடையதும்…யோகா நம்மை காப்பாற்றுவது இருக்கட்டும்…யோகாவை இந்த சாமியார்களிடமிருந்து யார் காப்பாற்றுவது?

  29. ஆரோக்கியமான மனித வாழ்விற்கு அறியத்தரப்பட்ட அருமருந்தான யோகாசனம் என்ற பயிற்சியை ஆராய்ந்து பயன்பெறாது குரங்கின்கை பூமாலைபோல் வைத்து ஏதேதோ சொல்கிறார்கள்.
    இவர்களைப்போன்ற விதண்டாவாத அறிவுஐீவிகளிடம்தான் ஈழத்தமிழன் போராட்டமும் அகப்பட்டது.

  30. YOGA SAMIYARGAL MATTUM THAN KANNUKKU THERIYUTHA? LATSAKKANAKKIL PAGAL KOLLAI ADIKUM ALLOPATHY MARUTHUVARGALI PATRIYUM EZHUTHUNGAL. yOGASANAM ORU PARPANA KALAIYAGA UNGAL KANNUKKU THERIYUM VARAI, ATHILULLA NANMAIGAL UNGALLU PURIYATHU. YOGA ENBHATHU FLEXIBILITY OF BODY AND MIND. UNGALUKKU IRANDUME ILLAI. ALERTNESS YOGAVUKKU THEVAI ILLAI ENRU ARIVUJEEVI SANGU SOLGIRAR. SEVIDAN KADHIL SANGU OODHA MUDIYUMA? 30 VARUDA VYADIKKU MOONDRU NATKALIL THEEERVU UNGAL MANANOI NIBUNAR THARA MUDIYUM ENDRAL YOGAVALUM MUDIYUM.UNGA SIDMUND FRUED CARL JUNG IVARKALLUKKELAM MUPPATTANAR YOGA. ATHU FAST FOOD ILLAI. INSTANT RESULT THARUVADHARKKU.PATHINORU MANIKU PARATTO THINRU MIDNIGHT MASALA PARTHU VIITU ONBHATHU MANIKKU KAN VIZHIPPAVAKU ILLAI.MORAL AND SOCIAL DISCIPLINE ULLAVRUKKU MATTUME YOGAM. VILLAVAN ARIYAVILLAI! SANGUKKU PURIYAVILLAI!

    • ‘”30 VARUDA VYADIKKU MOONDRU NATKALIL THEEERVU UNGAL MANANOI NIBUNAR THARA MUDIYUM ENDRA””
      if any idiot says this we have to be vary of him also. freud was born after pathanjali..so was einstein! it is not about age and antiquity, it is about scientific abpproach and fraudulent business

    • முப்பது வருட நோய்க்கு மூன்றே நாளில் தீர்வு தருவதாக ஆன்மீக குருக்களும், அவர்களின் வியாபார தந்திரிகளும், தூதுவர்களும் கூறுகிறீர்கள். நல்ல காமடி.

      நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் ஈழப்போராட்டத்தில் நான்கே நாளில் கலைஞர் தீர்வு கண்டதாக திமுக போஸ்டர் அடித்து பெருமை கொள்கிறது.

      தப்பான ஒன்றை பிரச்சாரம் செய்றதுன்னு வந்துட்டா லாஜிக் எல்லாம் பார்க்க மாட்டார்கள் போலும்!

  31. அரும்பெரும் பொக்கிஷங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம் அதனை பயன்படுத்தத் தெரியாது அல்லல்படுவதுதான் பரிதாபம். அமெரிக்கனோ மேலைநாட்டவனோ அவற்றை ஆராய்ந்து வெளியிட்டால் ஆகா ஒகோ இது தமிழனுடையது இது தமிழனுடையது என்று துள்ளிக்குதிப்பதில் குறைவில்லை. இது தமிழனுக்கு வந்த சாபக்கேடு. அமெரிக்கன் யோகாபற்றி என்ன சொல்கிறான் கேளுங்கள் பாருங்கள் அவன் சொன்னால் உங்களுக்கு அது வேதவாக்கு.

  32. Walking, Jogging, Cycling, Physical Exercise, Weights Training – இவற்றுக்கு யாரும் சொந்தம் கொண்டாடுவதுமில்லை. துதி பாடுவதும் இல்லை. யோகாவில் உள்ள ஆசனங்களுக்கு மட்டும் தெய்வீகத்தன்மை உள்ளதாகவும், சகல ரோக நிவாரணி யோகா எனவும் கல்லா கட்டும் சாமியார்கள் கூறுகின்றனர். மேலை நாடுகளில் டாலர்களில் சுருட்டுவது போதாது என்று நம்மூரிலும் தீவிர பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    பற்றற்ற சாமியார்கள் என கூறி கொள்பவர்கள் காட்டிலோ அல்லது நாட்டில் எங்காவது தனியாக பற்றற்று யோகாசனம் செய்து சமாதிநிலை கிடைக்கும் வரை யோகநிலையில் இருப்பது தானே!

  33. தன் படிப்பு, தன் வேலை, தன் குடும்பம் என எல்லா பொறுப்புகளை முடித்து, ஒரு பிரச்சனையும் இல்லாத நடுத்தர வர்க்க தாத்தா பாட்டிகளும், தங்களுக்கு இந்க யோகா சாமியார்கள் ஆன்மீக நிம்மதி அளிப்பதாகவும், உடல் உபாதைகளை போக்கிவிட்டதாகவும் பீற்றுகின்றனர். உண்மையில் அலசி பார்த்தால், அவர்களுடைய உடல் உபாதைக்கு (அல்லோபதி/ஹோமியொபதி/சித்த/ஆயுர்வேத) மருத்துவத்தையும் தொடர்ந்து கொண்டு இருப்பார்கள். ஏதாவது மருத்துவத்தால் குணமடைந்த பின்னர், கிறித்துவ சுவிசேச கூட்டங்களில் சாட்சி சொல்பவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

  34. யோகா எனும் உடற்பயிறசியை முறறு முழுதாக புறகக்ணிதது எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை தவறானதாகவே கருதுகிறேன்.
    யோகாவை சாமியார்கள் எப்படி கைப்பற்றி கொண்டார்கள் என்பதை தனியாக ஆய்வு செய்யவேண்டியது அவசியம்.
    ஆன்மீக புராண தூசிகளை துடைத்துவிட்டால் யோகா நடப்பிலிருக்கும் உடற்பயிற்சி முறைகள் அனைத்தையும்விட சிறந்தது.

  35. soona paana anna, moondru nalil endha vyadhiyum gunamagathu enru than solliirukkiren ,sariyaga padiyungal.Summa jogging , walking enru pinathugireergal. Yoga sievathu oru kuzhanthai thayidam valarvathu mathiri,.unga walking,jogging elllam aayaa mathiri!!!

    Dr sir, I too agree with u on your opinion aganinst corporate gurus. But dont

    invalidate the feelings of yoga practiioners by degrading it. Our yoga is tantamount to psychiatry as pranayama deals with mind. By rhythming the breath, most of the psychosomatic diseases ,which is the root cause of many physical ailments are cured. So why not we call it a panacea for all ailments?

  36. யோவ் உங்களுக்கு புடிக்களன வேற வேலைய பாருங்காய அத வுட்டுட்டு அது குத்தம் இது நொள்ள முருகன் சொன்னது சர்தான் 

  37. unmail kasakkum. Manikandan and Murugan you both are foolish. This article one of the best article. We too experienced. That F*****g guy touch ‘guru’chi’ one of the sisters private part but saying he is teaching. I know all these foolish ‘samyians’.

    satya

  38. நீங்க உருப்படியா எதாவது கத்துக்குனு செஞ்ஜு பார்த்தீங்களா. பண்ணாம எல்லாரையும் கலாய்ச்ச எப்படி.?
    அதுவும் மகரிஷிய போய் கிண்டல் செய்யலாமா.?
    முதல்ல நம்ம தகுதி பத்தி யோசிக்கனும்.
    “காயகல்பம்” – கத்துட்டு வந்தல. அத தினமும் ஒழுங்க செய்.
    சந்தேகம் இருந்த , கத்துக்கன எட்த்துல பொய் கேளுங்க.

  39. //ன் படிப்பு, தன் வேலை, தன் குடும்பம் என எல்லா பொறுப்புகளை முடித்து, ஒரு பிரச்சனையும் இல்லாத நடுத்தர வர்க்க தாத்தா பாட்டிகளும், தங்களுக்கு இந்க யோகா சாமியார்கள் ஆன்மீக நிம்மதி அளிப்பதாகவும், உடல் உபாதைகளை போக்கிவிட்டதாகவும் பீற்றுகின்றனர். உண்மையில் அலசி பார்த்தால், அவர்களுடைய உடல் உபாதைக்கு (அல்லோபதி/ஹோமியொபதி/சித்த/ஆயுர்வேத) மருத்துவத்தையும் தொடர்ந்து கொண்டு இருப்பார்கள். ஏதாவது மருத்துவத்தால் குணமடைந்த பின்னர், கிறித்துவ சுவிசேச கூட்டங்களில் சாட்சி சொல்பவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன வேறுபாடு?//

    ஹி ஹி

    யோகா ஆசனங்கள் இவர்களுக்குத்தான்
    எனவும் இளைஞர்கள் எல்லாரும் இதை செய்ய தேவை இல்லை எனவும் சொல்வது உண்மை

    ஏனெனில் அனைத்து வியாதிகளும் நாற்பது வயதுக்கு மேலதான் ஆரம்பிக்கும்
    அப்போ டாக்டர்கிட்ட போனா தினமும் காலை நடப்பதில்லையா ? நடங்க சார் என்பார்

  40. என்னை பொறுத்த வரையில் இது ஒரு வேஸ்ட் மற்றும் தவறான கட்டுரை… புரிந்து கொள்ளாமல் , அனுபவிக்காமல் எழுதப்பட்டதாக கருதுகின்றேன்…

    கட்டுரையாளருக்கு பிடிக்கவில்லையென்றால் அது பொய்யாகி விடுமா என்ன?

    எனக்கு கூட முட்டி வலி 5 வருசமா இருந்தது, நான் பிராணயாமா தொடர்ச்சியா செய்த பிறகு தான் குணமாகியது.. அப்ப யோகா பொய்யா என்ன??

    அப்ப யோகாவால் பயன் அடைந்தவர்கள் எல்லாம என்ன லூசா?

    இதை படிக்கும் போது கட்டுரையாளர்களின் தரம் புரிகின்றது..

    தயவு செய்து தவறா எழுதாதீங்க… புரியலைன்னா விட்டு விடுங்கள்..

    -சுரேஷ்

  41. ppl like rudran consider themselves as ultimate geniuses. its funny how he declares there is no theraphy called yoga. i guess he has gone to a dubakoor guru and got depressed and convinced that everything is fake. explain this logic, people who experienced the power of yoga and meditataion have reaped the benefits of it and they knew it is a real science. none of you guys have attempted anything of this sort and you claim these are all illusions. according to communists, anyone who is not a communist should be punished because they are not humane. rudran its time you stop bullshitting people with you geeeenius thoughts man. instead do some good to them by persuading them to explore the truth.

  42. When you comment a matter you should atleast know somemthing. all your comments are nonsense and follish. Stop making such fookish comments on good things. You may not be in a position to know about these things because of your innocence and low calibour. But the the centres you mentioned serve lakhs of peoiple. This kind of nuisence comments on goods things are to be cubed. If you cannotg follow plese keep quite don’t make ugly comments on them.

  43. nanbar surulirajan pearan polum 1re. mathirial everod valiyellam theernthuvidum. appadi mudiyatha pothu ethavathu onerai urupadia muyarchi paniparkalam.kurai kuruvathu ealithu muyarchi kadinam.

  44. மற்றவர்கள் நம்மை கவனிக்கவேண்டும், நம் கருத்துக்களை கேட்டு சிரிக்கவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாமா? அரச மரத்தை சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்றவுடன் எவளோ ஒருத்தி அரச மரத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு வயிற்றில் பிள்ளை இருக்கிறதா என்று வயிற்றை தொட்டுப் பார்த்தாளாம். அதை மாதிரி இருக்கிறது அந்த நண்பரின் கட்டுரை. இவர்கள் வருஷ கணக்கில் கஷ்டப்படுவார்களாம். ஆனால் இவர்களுக்கு ஒரே நாளில் ஒரே வைத்தியத்தில் அனைத்தும் குணமாகிவிடவேண்டுமாம். என்ன நியாயம். யோகா மையங்களை வேண்டுமானால் குறை கூறலாம். ஆனால் யோகாவையே குறை கூறலாமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க