privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

-

கொலையான மாணவன் ரஞ்சன் - பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி
கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி

திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பள்ளியின் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். ஆசிரியர்களுக்கே இதுதான் கதியென்றால் நீச்சல் பயிற்சியாளரெல்லாம் உரிய தகுதிகளுடன், அதிக சம்பளத்துடன் நிச்சயம் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

மேலும் சமச்சீர் கல்வி வருவதை எதிர்த்து முழுமூச்சுடன் போராடிய பார்ப்பன- மேட்டுக்குடி கூட்டத்திற்கு இந்த பள்ளியின் தாளாளர்தான் தலைமை தாங்கினார். ஆக கல்வியில் தனியார் மயத்தின் கொள்ளையை தடையின்றி நடத்தும் மற்ற கொள்ளையர்களுக்கு இந்த அம்மையார்தான் முன்னோடி.

சிறுமி சுருதி கொலையில் சியோன் பள்ளியின் தாளாளர் விஜயனை கைது செய்த போலீசு இங்கே திருமதி ஒய்ஜிபியை கைது செய்யவில்லை. வெறுமனே பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்களை மட்டும் பேருக்கு கைது செய்திருக்கிறது. முழுப்பழியையும் இவர்கள் மீது போட்டு ஏதாவது தண்டனை வாங்கி வழக்கை ஊத்தி மூடிவிடுவார்கள். ஆகவே திருமதி ஒய்ஜிபையை கைது செய்து கொலை வழக்கு போடுவதுதான் தனியார் பள்ளிகளில் மாணவர் உயிரிழக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் என்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கணேசன். அவரிடம் நேற்று கலைஞர் டீவி கண்ட நேர்காணலை இந்த வீடியோவில் காணலாம்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • அட்மிஷனின் போது கல்லா கட்டுவதும், மாதாமாதம் பீஸ் வசூல் செய்வது மட்டும் தான் எங்களுக்கு பொறுப்பு: மற்றவற்றிற்கெல்லாம் நாங்கள் பொறுப்பில்லை என்கிறீர்களா?

  1. There is a huge difference between a hole in a bus,construction failing and this incident,

    I know many friends who went to this school,the swimming pool has been there since a longtime and such an incident has never happened before.This incident has to be investigated but saying that Mrs.YGP should be arrested and all is nonsense.

    If it is proven that there was no coach during the swimming coaching,she can be arrested.

    • //There is a huge difference between a hole in a bus,construction failing and this incident,///

      அது என்ன அந்த 6 வித்தியாசங்கள். அருஞ்சொற்பொருளுடன் விளக்கலாமே?

    • என்ன வித்தியாசம் தெளிவாகத்தான் சொல்லுங்களேன்.

      இதற்கும் முன்பும் தான் பள்ளிக் குழந்தைகள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்கள். எந்தக் குழந்தையும் கீழே விழுந்து இறக்கவில்லை. உங்களின் அனுமானப்படியே, ஒருவேளை பஸ்ஸில் இருந்த ஓட்டையை டிரைவர் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது கவனித்திருந்தும் அதை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். அதற்கு பள்ளி நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? எப்படி நிர்வாகியை அரெஸ்ட் செய்யலாம்? மிஸர்ஸ். ஒய்.ஜி.பிக்கு மட்டும் இப்படி சொன்னால் நான்சென்ஸ். மற்றவர்களுக்கு இப்படி சொன்னால் நான்சென்ஸ் இல்லையா?

      நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீச்சல் கற்றுத் தரும் போது கோச் இருந்தால் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் மரிக்கலாம். தப்பில்லை. கோச் இல்லாமல் குழந்தைகள் இறந்தால் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். வழக்குப் போட வேண்டும் என்றல்லவா ஆகிறது.

  2. அவாள் பூணூல் போட்ட மாமி….
    அவாள் மீது வழக்கா?
    அபஷ்ஷாரம்…
    அம்பிகளா…தேசம் ணாசமாகி விடும்…
    சாமி கண்ணை குத்தும்….

  3. What a bogus discussion, they have no clue about what exactly happened.

    They keep on saying,Appadi thaan nadanthirukkum,appadi thaan nadanthirukkum.

    Sun TV is angry at Mrs.YGP for hard balling Samacheer Kalvi and this guy is the bigegst moron on earth.He talks about Namakkal copying scam which was not for all students but only for the son of the correspondent,then he talks about incidents which are not related to this,last he says all private schools are not worth it.

    I am very sorry, the parents know very well which schools are good and why they are good and they put their kids accordingly.Governmetn schools are bad,very bad,govt school teachers are not interested in teaching children,they just earn salary,pension etc and take private tutions and survive.

    Thats the basic fact,howmuchever you try to ignore this fact,it will not matter.

    PSBB KK Nagar is an internationally reputed school,i agree in today’s scenario they are not as good as in the 80s and 90s but it still is a great school.The teachers are good,students are good and the alumni of the school are doing great things.This is not like other schools.

    I would like to know from kalaignar TV that why Dayanidhi Maran,KaniMozhi,Kalandihi Maran and so many people of the Mu.Ka family studied in Don Bosco,DAV,Stella Maris and other private schools and colleges,why didn’t they go to government schools?

    Sariya mokkayanunga oora emathathukku.

    Idhukku naduvula bharathiyar pattu vera, kaali ezhuntha vudan padippu appadinnu ellam.

    • Harikumar,
      கமெண்ட் எல்லாம் கரிக்ட்டு தான் ஆனால் முடியும் போது நமஹா சுவஹா மிஸிங். சரிசெஞ்சு போடுங்க…

    • Don Bosco, DAV, Stella Maris and Axulium are run by Salations of Don Bosco (SDB), which is not a private school. Govt is paying salary to all teachers and staff of those school. Land has been donated by Govt to those schools. The SDBs are taking care of the managerment. We can call it as semi-govt school. Whenever they admit a new teacher or staff, they have to send all certificates to govt to get necessary approvals (selection is in their control but they should have basic qualifications per govt norms). Please check with any staff who is working in these schools. I studied in Don Bosco from 1989 to 1997.

    • தனியார் பள்ளி மாணவர்கள் புத்தக புழுக்கள்…. ஏட்டு சுரைக்காய்கள், பணம் காய்ச்சி மரங்களாக தான் உருவாகின்றனர்…
      அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் அந்த புழுக்கள் விரும்பி உண்ணும் புத்தகங்களை படைப்பவர்களாக இருக்கின்றனர்…

      நாட்டில் மிக குறைவான ஊதியம் பெரும் பட்டதாரிகள் இந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் தான்… எந்த கம்பெனியிலும் பனி பெற இயலாமல் தோல்வியுறும் பட்டதாரி மாணவர்கள் ஆசிரியர்களாக இறுதியில் சென்று சேர்வது இத்தகைய தனியார் கல்வி கம்பெனிகள்… இதுதான் எதார்த்தம்… இங்கு மாணவர்களுக்கு சொல்லி தரப்படுவது ஒன்று தான்… புத்தகங்களை விழுங்க வேண்டும்… கழுதைகளாக ஆக வேண்டும்… தேர்வில் வாந்தி எடுத்து மதிப்பெண் பெற வேண்டும்… அவ்வுளவே…

  4. பெற்றோர்களுக்கு எல்லாம் தெரியும் – செத்த பையனோட அப்பாட்ட இத சொல்லிப் பாருங்க•

  5. அது என்ன ‘திருமதி’? அதுவும் வினவிடமிருந்து…!! பார்ப்பனத்தி என்றால் அவரை ‘திருமதி’ என்றுதான் விளிக்கவேண்டுமா? வேறு மதிப்புக் குறைந்த வார்த்தையை போட்டிருக்கலாம். ‘திருமதி’ எனும் வார்த்தையை உடனடியாக நீக்க கோரிக்கை வைக்கிறேன்.

  6. இங்கே பிறந்த அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி என்று ஒரு அரசு முடிவெடுத்தபோது, எங்க சிலபசுக்கும் அரசு பள்ளிகள் சிலபசுக்கும் இருக்கும் வித்யாசத்தை வைத்து தானே நாங்கள் சம்பாதிக்கிறோம் நாங்க எங்கே போவது என்று வாய் கூசாமல் கூடத்தில் சொன்னவர் இந்த பெண்மணி.இவருக்கு பெயர் இல்லையா?என்ன திருமதி ஒய்ஜிபீ யார் அந்த திருஒய்ஜிபீ?சீயோனுக்கு ஒரு நியாயம் பூணூலுக்கு ஒரு நியாயமா? ஆனால் நிச்சயம் அரெஸ்ட் செய்ய மாட்டார்கள், செய்ய வைத்தால் மக்களின் வெற்றி.போலிஸ் அந்த பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்கள்.

  7. Boss.. Check out news.. Mrs. Y.Gee has been arrested.. And if she wants to move bail she has to wait till Tuesday since Monday is ramzan.. Indha kalvi kollai & education privatization opposition matter’la naanum unga pakkamdhaan vinavu annen.. 🙂

    • ஐயரே, ஒய்.ஜீ.பீ-யை அரெஸ்ட் செய்த யோக்கியதையை பாருங்கள்

      சேலையூரில் பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியானபோது, அந்த பள்ளி நிர்வாகிகள் மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

      ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்விளையாட்டரங்கம் இடிந்து 10 பேர் பலியானபோது, அந்த கல்லூரி நிறுவனர் ஜேப்பியார் மீது 304(2) மற்றும் 338 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகள் ஆகும்.
      ஆனால் மாணவன் ரஞ்சன் பலியான விஷயத்தில் மட்டும் அந்த பள்ளி நிர்வாகிகள் மீது எளிதில் ஜாமீனில் வெளியில் வரும் வகையில் 304(ஏ) என்ற பிரிவில் போலீசார் சாதாரண வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். உயிரிழப்பை ஏற்படுத்திய பத்மசேஷாத்திரி பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும், கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

  8. ஜெயா & இந்த அம்மையார் ஒரெ குலம்.ஒரெ இனம்.அதனால் எந்தநடவடிக்கையும் இருக்காது.இது தான்டா ஜனனாயகம்.

  9. சிறுவனின் மறைவு ஒரு சோகம் தான். ஆனால் கைதுகள் பெற்றோரின் உணர்வுகளின் அடிப்படையில் நடந்தது. case நிற்காது என்பது நிதர்சனம்.
    Bus-ல் ஓட்டை சிறுமி பலி என்பது accident due to negligence. ஓட்டை இருப்பது தெரிந்தே பேருந்து இயக்கப்பட்ட காரணத்தால் ஒரு உயிர் பலியாகி விட்டது. இதில் கைது சரியே. ஆனால் PSBB பள்ளியில் நடந்தது pure accident.
    தண்ணீர் மூச்சு குழாய் அடைத்த காரணத்தினால் சிறுவன் இறந்தான். நன்கு நீச்சல் தெரிந்த ஒருவர் கூட இந்த காரணத்தினால் மரணிக்கலாம். In fact, சிறுவனுக்கு நீச்சல் தெரியும். இங்கே negligence இல்லை. சிறுவன் நீச்சல் முடித்து மேலே ஏறி வரும் போது முடியாமல் தண்ணீரிலேயே விழுந்து விட்டான். அங்கே இருந்த கண்காணிப்பவர் உடனே தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து hospital கொண்டு சென்றனர்.
    Bus ஓட்டை விபத்திற்கு பின் அரசாங்கம் மாணவ/மாணவிகளுக்கு நடக்கும் விபத்துக்களை (மக்களின் உணர்விட்கேட்ப) மிக கடுமையாக பார்கிறது – அதுவே கண்காணிப்பவர் கைது வரை சென்றுள்ளது. இதில் வினவு YGB கைது செய்ய வேண்டும் என்று இந்த கட்டுரை வேறு. இதில் சாதி த்வேஷமே மேலோங்கி தெரிகிறது. sorry boss – கட்டுரையில் நிதானம் இல்லை.
    Bus விபத்துகளுக்கு CM, Train விபத்துகளுக்கு PM கைது சரி என்றால் – YGB கைது சரி எனலாம்.
    PS: இன்னோர் ‘அறிவாளி’ பள்ளிகூடங்களில் நீச்சல் குளம் கூடாது என்று ஒரு case போட்டிருக்கிறார். இந்த case விசாரணைக்கு எடுத்து கொண்டதே ஆச்சரியம்.

    • உங்கள் குழந்தை இப்படி இறந்திருந்தால், நீங்கள் சொன்ன இதே காரணத்தை உங்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

      • சிறுவன் ரஞ்சன் மரணத்தில் உள்ள வருத்தத்தைவிட பார்ப்பணத்தி ஒய்.ஜி.பி கைது செய்யப்படாத (காழ்ப்புணர்ச்சி)வருத்தம்தான் கட்டுரையில் அதிகம் வெளிப்படுகிறது.

        • ராம் கமேஸ்வரனுக்கு சிறுவன் ரஞ்சன் மரணத்தில் உள்ள வருத்தத்தைவிட பார்ப்பணத்தி ஒய்.ஜி.பி கைது செய்யப்பட்டுவிட்டார் (கோபம்)வருத்தம்தான் பின்னுட்டத்தில் அதிகம் வெளிப்படுகிறது.

  10. கெழவிய அரஸ்ட் பண்ணனும்னு சொன்னா சுப்புனி குதியோ குதினு குதிக்கிது…

    avaal paasamna avaal paasantha..

    • கோவைத் தம்பி,

      அவாள் என்பதால்தானே, புமாஇமு நடத்திய எத்தனையோ போராட்டங்களை செய்திகளில் கூட சொல்லாத டிவி கூப்பிட்டு நேர்காணல் நடத்துகிறது.. கேள்விகளால் கொக்கி போட்டு இழுத்து திருமதி.ஒய்ஜிபி யை கொலைவழக்கில் கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது..

      டிரைவரே விழும் அளவுக்கு ஓட்டையுள்ள பேருந்தை துணிந்து இயக்குபவர்களுக்கும், 2 மாதங்கள் நடக்க வேண்டிய கட்டிட வேலையை 20 நாட்களில் முடிக்க அவசரப் பட்டவர்களுக்கும் என்ன தண்டனை கிடைத்ததோ அதுதான் ஒரு பார்ப்பன தாளாளருக்கும் கிடைக்க வேண்டுமென்றும் என்கிறீர்கள்..

      ஒரே நீதி, ஒரே தண்டனை என்பது ஒரே வகைக் குற்றங்களின் அடிப்படையில் தான் இருக்கமுடியும்.. வெவ்வேறு வகையான குற்றங்களுக்கு வழக்குகளும் தண்டனையும் மாறும்.. பார்ப்பனர் என்பதற்காக ஒரே தண்டனையை வலியுறுத்த முடியாது..

      அடைக்கப்படாத பேருந்து ஓட்டை, உறுதியில்லாத கட்டிட வேலைகளால் ஏற்பட்ட மரணங்களுக்கும், நீச்சல் தெரிந்த சிறுவனுக்கு நீச்சல் பயிற்சியில் ஏற்பட்ட விபத்தும் ஒரே வகைக் குற்றங்களா..?!

      நீச்சல் தெரிந்த பையனுக்கும் இப்படி திடீர் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று யோசித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யாத குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதுதானே பார்ப்பன தாளாளராக இருந்தாலும் கிடைக்க வேண்டும்..?!

      ரஞ்சனின் பெற்றோருக்கு நேர்ந்த அவலம் யாருக்கும் இனித் தொடரக்கூடாது.. அரசு இது போன்ற தனியார்ப் பள்ளிகளின் மீது கண்காணிப்பைக் கடுமையாக்க வேண்டும்.. தனியார்ப் பள்ளிகள் பாதுகாப்பு,தரம், கட்டண விதிகளை மீறினால் அரசுடமையாக்கப்படும் என்ற சட்டம் அவசியம்..

      • ரொம்ப தான் யோக்கியமானவனுங்க பாருங்க…..
        கல்வியை ஒரு வியாபாரமா செய்வது எந்த விதத்தில் சரி?

        கல்வியையும் மருத்துவத்தையும் வியாபாரமாய் செய்வது விபச்சாரம் செய்வதற்கு சமம்…..

  11. உங்கள் குழந்தை இப்படி இறந்திருந்தால், நீங்கள் சொன்ன இதே காரணத்தை உங்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
    இறந்த குழந்தையின் உறவினர்களின் கதறலைக் கேளுங்கள்:-

    உயிர் என்பது சாதாரணமானதா. நோயினால் இறந்தாலே நாம் எவ்வளவு கஷ்டப்படுவோம். எங்கள் வயிறு எரிகிறது. பள்ளியில் கட்டணம் கட்டவில்லை என்றால் பாடாய்ப்படுத்துகின்றனர். நீச்சல் குளத்தில் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், டி.சி. தரட்டுமா என்று மிரட்டுவார்கள். இதனால் இது பள்ளியின் கவனக்குறைவால் நடந்தது. அதனால் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று சென்னை பத்மசேஷாத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான மாணவன் ரஞ்சனின் உறவினர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.பள்ளி நிர்வாகமே மாணவனின் உயிர் பறிபோக முக்கியக் காரணம் என்று பெற்றோர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    மாணவன் ரஞ்சனின் உறவினர்கள் கூறுகையில், சம்பவம் நடந்தவுடன் பள்ளிக்குச் சென்றோம். முதலில் கீழே விழுந்து விட்டான். கையில் காயம் என்றனர். ஆனால் மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான் என்பதையே மறைத்து விட்டனர்.

    உயிர் என்பது சாதாரணமானதா. நோயினால் இறந்தாலே நாம் எவ்வளவு கஷ்டப்படுவோம். இயக்குநர் மனோகர், எதற்குமே கலங்காதவர். கஷ்டப்பட்டு சினிமாவில் சாதித்தவர். அவர் கதறி அழுவதை எங்களால் பார்க்க முடியவில்லை. எங்கள் வயிறு எரிகிறது. பள்ளியில் கட்டணம் கட்டவில்லை என்றால் பாடாய்படுத்துகின்றனர். நீச்சல் குளத்தில் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், டி.சி. தரட்டுமா என்று மிரட்டுவார்கள்.

    இது பள்ளியின் கவனக்குறைவால் நடந்தது. அதனால் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள் அவர்கள் கோபத்துடன்.

    • //இது பள்ளியின் கவனக்குறைவால் நடந்தது. அதனால் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள் அவர்கள் கோபத்துடன்.//

      இன்றைக்கு ஹிந்து நாளிதழில் “தற்சமயம் நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை” என்று சிறுவனின் தந்தை சொன்னதாக செய்தி.
      http://www.thehindu.com/news/cities/chennai/article3786111.ece

      Speaking to The Hindu on Friday, after Ranjan’s funeral, his father K.N.R. Manohar said he was unaware of what exactly happened. “I have heard many versions. The school authorities told me he swallowed a lot of water while swimming. But I’m waiting for the post-mortem report. At this point, I’m not blaming anyone,” said the film director who was in tears.

      • கொலைக்காரன் ஒருவன் பணக்காரனாக, அரசியல் தொடர்புகள் கொண்ட ரவுடியாக இருக்கும்பட்சத்தில் அவனை பார்த்து கொலை செய்யபட்டவ்ரின் குடும்பத்தார் பயப்படுவது இந்திய ஞான மரபில் புதிதல்ல..

      • ராம்,நன்கு கவனிக்கவும்.
        \\The school authorities told me he swallowed a lot of water while swimming. //
        நீந்துகின்ற யாரும் தண்ணீரை விழுங்க மாட்டார்கள்.தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்து மூழ்கும் தருவாயில்தான் காற்றுக்கு மாற்றாக தண்ணீரை உள்ளிழுத்து நுரையீரலில் நீர் புகுந்து இறந்து போவார்கள்.ஆகவே சிறுவன் மூழ்கும்போது அருகில் காப்பாற்றக் கூடிய நிலையில் பயிற்சியாளர் இருக்கவில்லை எனபது தெளிவாகிறது.

  12. வினவாரே,
    குற்றம் அதன் காரணம் என்ற முறையில் பார்க்க போவது எப்போ?

    YGP = ஒய் ஜி பீ !!
    JPற் = ஜேப்பியார் !!

  13. தொலைக்காட்சிகளில் பார்த்தீர்களா? ஒரு பள்ளியின் தாளாளரின் மகன் அவர்களின் பள்ளியில் படிக்கும் மாணவனை சகட்டுமேனிக்கு அடித்திருக்கிறான். கல்வி தனியார்மயத்தை எதிர்த்து ஒன்றுபடுவோம்…

    • என்ன அந்த பையனை ரெக்கமென்டேசனில் பணத்தை குறைவாக கொடுத்து சேர்த்திருப்பார்கள். தாளாளரும் வேறு வழியில்லாமல் சேர்த்திருப்பார். தான் எதுவும் நேரடியாக எதுவும் செய்யமுடியாததால் பையனை விட்டு அடிக்க வைத்திருப்பார். இதையெல்லாம் அவனின் பெற்றோர்களே பெரிதாக எடுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். விடுங்க கலாஷ்னிக்கோவ் அனுபவிக்கட்டும். (தனக்குப் பின் ஸ்கூலை வைத்து நடத்துவதற்கு பையனுக்கு டிரெயினிங் வேறு ஸ்கூலிலா கொடுக்க முடியும். அதான் தன் ஸ்கூலிலேயே பிராக்டிகல் வகுப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருப்பார்)

  14. When a bus accident happens (possibly due to negligence of government bus driver),
    1) will you recommend arresting the MD of the company?
    2) Why limit with that? Ask that the chief minister of the state to be arrested.
    3) Why limit with that? Ask that the prime minister of the country to be arrested.

    Enna pochi ippo. If everybody is arrested, the problem is solved and you are happy. What else is required for the betterment of the people except communist’s happiness?

    • மிஸ்டர் மைசெல்ப்!!
      அதிகப்படியான வருமானம் தரக்கூடிய தொழிலான பள்ளிக்கூடத்தை நடத்தும் ஒருவன் / ஒருத்தி என்ன செய்ய வேண்டும்? தெளிவாகத் தான் சொல்லுங்களேன்.

      அரசாங்க பஸ் சர்வீஸ் என்பது ஏதோ ஒன்றிரண்டு பஸ்ஸை வைத்து ஓட்டுவதல்ல. அதனுடைய செட்டப் பற்றி திரு. முதலில் இந்தியன் பிறகே தமிழன், திரு. ஹரிகுமார், திரு. அம்பி போன்றோர்களிடம் கேளுங்கள். மிக மிக விபரமாக எடுத்துச் சொல்வார்கள்.

      என்ன போச்சி இப்போ? ஒரு குழந்தையின் அல்ப உயிரைத் தவிர வேறு ஒன்னும் பெரிதாய் போய்விடவில்லை மிஸ்டர் மைசெல்ப். எதற்கு அரெஸ்ட், வழக்கு, வாய்தா என்றெல்லாம் வெட்டி வேலை பார்த்துக்கொண்டு இருப்பானேன். பேசாமல் இந்தியன் தாத்தா மாதிரி தவறு செய்தவனை போட்டுத் தள்ளி விட்டு நாம் பாட்டுக்கும் போய்க்கொண்டே இருப்போம். என்ன சரிதானே?

  15. //அது என்ன அந்த 6 வித்தியாசங்கள். அருஞ்சொற்பொருளுடன் விளக்கலாமே?//

    எப்படி வித்தியாசம் இல்லை? நீங்கள்தான் விளக்குங்களேன்.

    • மிஸ்டர் என்ன கேள்விக்கு கேள்வி. வித்தியாசம் இருக்கிறது என்று சொன்னவர் வித்தியசத்தை சொல்லட்டும். என்னை பொருத்தவரை ரெண்டுமே லாபவெறிக்கான கொலை.வித்தியாசமில்லை.

    • கையபுடிச்சு இழுத்தியா?

      என்ன கைய புடிச்சு இழுத்தியா?

      கையபுடிச்சு இழுத்தியாடா?

      என்ன கைய புடிச்சு இழுத்தியாடா?

      ஏம்பா நான் ஒழுங்காத்தானே பேசுறேன்.

  16. In any country Government is responsible for Educating its citizens and taking care of the health of its citizens. In India the Government schools and government hospitals are the worst. The Government should close all the private schools and hospitals and try to improve the standard of the Government schools and hospitals to International Standards.

  17. முதலில் இது நாட்டை சீரழித்த சினிமாக்காரன் நடத்தும் கல்வி வியாபார விளம்பர நிறுவனம்…
    இதில் இடம்பிடிக்க பணம் மட்டும் போதாது.. புகழ் இருக்க வேண்டும் பெற்றோருக்கு.. முதலிடம் சினிமா பெற்றோருக்குத்தான்… பிறகு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பெரும் அதிகாரிகள்… கடைசியாக சாமானியர்கள் லிஸ்டில், பாஸ்போர்டில் அமெரிக்க விசா, குழந்தை அமெரிக்க சிடிசன், அமெரிக்காவில் படித்த குழந்தை தமிழே வரமாட்டேன்குது என்ற அல்ப தகுதி இருப்பவர்கள் பல மாதங்கள் வரிசையில் நின்று பற்பல நேர்காணல் போட்டி தேர்வு முடிந்து மீப்பல சிபாரிசுகள் உடன் தகுதி பெரும் லக்கி குழந்தைகளுக்கு மட்டுமே இடம்…

    ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்து ஆறு சினிமா பெற்றோரின் கலைக்குழந்தைகள் இடம்பெறுவர்… அந்த நடிகன் பையன் என் பொண்ணு கிளாஸ் மேட், இந்த நடிகன் பேத்தி என் பையன் கிளாஸ் மேட், அந்த சிரிப்பு நடிகனை அடிக்கடி குழந்தையை ட்ராப் செய்யும்போது பாத்திருக்கேன் என்று சொல்லுவது பணம் மட்டும் உடைய, புகழுக்கு எங்கும் மேட்டுக்குடி மக்களுக்கு ஓர் அற்ப சுகம்….

    பாடம் மட்டும் சொல்லிக்கொடுத்தால் எப்படி? அதுதான் அரசாங்க தர்ம பள்ளி கூடத்தில கூட சொல்லி கொடுக்குரான்களே… நாம டிபரன்ட்டா செய்யணும் அப்பத்தான் மேட்டுக்குடி முட்டாள்களை ஏமாத்தி பணம் புடுங்கலாம்….என்ன பண்ணலாம் என்று யோசித்து யோசித்து பெரிய லிஸ்டா அது வளருது… குளிர்சாதன வகுப்பறைகள், குஷேன் இருக்கைகள், ஓவியம், பாடல், ஆடல், நீச்சல், கிரிக்கெட், கம்புட்டர் கேம்ஸ் etc etc …

    இன்னும் கொஞ்ச நாள் போனால், மசாஜ் கிளாஸ் கூட வந்தாலும் ஆச்சரியமில்லை… நட்சத்திர ஓட்டலுக்கும், பள்ளி கூடத்துக்கும் என்ன வித்தியாசம்?
    நாமெல்லாம் படிக்கும்போது பள்ளி விளையாட்டு வகுப்பு என்றால், மாலையில் கபடி, நீளம் தண்டு, உயரம் தாண்டு, வட்டேரி, கால்பந்து, கோ கோ போன்ற விளையாட்டுக்கள் தானே இருந்தன… ஏன் இந்த YG பாட்டி கூட இதை தானே படித்திருக்க முடியும்…

    ஏரியிலும், குளத்திலும், வட்ட கிணற்றிலும், கடலோர சிறுவர்கள் கடலிலும் விழுந்து நீந்தி நாம் கற்ற நீச்சலுக்கு இந்த பள்ளிகள் கற்று தரும் செயற்கை நீச்சல் ஈடாகுமா? சென்னையில் கூட மெரினாவிலும், புழல், போரூர், செம்பரம்பாக்க ஏரிகளில் நீந்தும் சிறுவர்கள் எந்த பீ எஸ் பீயில் நீந்தி பயிற்சி பெற்றார்கள்…

    இந்த செயற்கை நீச்சல் பயிற்சியால் இவர்களுக்கு என்ன பிரயோஜனம்… சுனாமி வரும்போது காதுக்கு பஞ்சும், கண்ணும் கிளாசும், லைப் ஜாக்கெட்டும் காலில் அட்டையும் போட்டால்தான் நீந்துவேன் என்று அடம் பிடிக்கத்தான் முடியும்…

    இதெல்லாம் வேண்டாம் ஒழுங்கா பாடம் நடத்து போதும் என்று சொல்ல எந்த பெற்றோருக்கும் ஏன் தோன்றவில்லை? அல்லது தைரியம் இல்லை ?

    பணம் மட்டுமே உள்ள புகழுக்கு ஏங்கும் பெற்றோரே… பீ எஸ் பீ மாணவர்களில் பாதி பேருக்கு மேல் ஒரு கட்டத்தில் பெற்றோரின் தொழிலை கவனிக்க போய் விடுவர்… அவர்களுக்கு கல்வி வெறும் பட்டதுக்காகவே… அவர்களோடு படிக்கும் உங்கள் குழந்தைகளின் நிலை என்ன ?

    அரசுப்பள்ளிகளில் படித்து மாவட்ட, மாநில அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களை பார்த்து திருந்துங்கள்.. பணத்தால் கல்வி நிறுவனங்களில் இடம் வாங்கலாம்… ஆனால் கல்வியை வாங்க முடியாது…

    கணேசன் அவர்களின் பேட்டி அருமை.. கலைஞர் டிவி-க்கு நன்றி…

    • மிக சரி நண்பரே! பேட்டி நல்ல பேட்டி ஆனால் கலைஞர் டிவி போன்றவை இதற்க்கு உடந்தை. அவர்கள் குடும்ப பள்ளிகளை பற்றி நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்!

      • “கலைஞர் டிவி-க்கு நன்றி”
        இந்த நன்றி வம்பாக சேர்க்கப்பட்ட நன்றி.. புரட்சி கருத்துகளுக்கு ஒரு சராசரி அரசியல் ஊடகம் (தனக்கு ஆதாயமே எனினும்) களம் அமைத்து கொடுத்தமைக்கு தான் இந்த நன்றி…

    • நமது ”மனிதன்” தானா.அருமையான கருத்துக்கள்.நன்றி.கூடுதலாக ஒரு தகவல்.இந்த ஆண்டு தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள சுமார் 1600 இடங்களில் சரி பாதி இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள்தான் தேர்வாகியுள்ளனர்.தரமான கல்வி அளிப்பதாக காசு பிடுங்கும் தனியார் பள்ளிகளின் யோக்கியதை இதுதான்.

      • நன்றி திப்பு… கல்வி, உணவு, ஆரோக்கியம்(மருத்துவம்),வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளை அதிக விலை வைத்து விற்று சாமானியனுக்கு எட்டாக்கனியாக வைத்திருக்கும் முதலாளிக்கும்பலுக்கு எதிரனான மனிதனின் கருத்து தான் இது…

  18. இந்த குற்றத்துக்கு ஒய்.ஜி.பி அவர்களை விஜயனையும் ஜெப்பியாரையும் compare செய்வது செரியில்லை. இது negligence of duty வகை.

    ஆனாலும், பள்ளிகள் தனியார் மயமாக்கி, காசு பிடுங்குவதில் முன்னோடி இந்த பள்ளி. இதை போன்ற நூற்றுக்கணக்கான பள்ளி இருக்கின்றன. குடுக்கற காசுக்கு நீச்சல் குளத்தில் அமெரிக்க லெவெலுக்கு வசதி செய்ய வேண்டும். திறந்த வெளியில் ஒரு ப்ளைன் pool வெளிநாடுகளில் இல்லை. அப்பள்ளிகளில் lane முறையும் தானே தப்பிபதற்கு பயோ போன்றவைகள் கண்டிப்பாக வேண்டும். அந்த குற்றத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்க வேண்டும். அதற்க்கு எந்த அரசாங்கத்திற்கும் தைரியம் இல்லை. நம்மூரில் எந்த விஷயத்தில் ஒரு 100 % perfection இருக்கிறது?

    நாமெல்லாம் படித்து பக்கத்தில் உள்ள பள்ளிகளில். அங்கு எல்லா சமூகத்திலிருந்தும் எல்லா குணங்களிலும் எல்லா அறிவுத்திறனிலும் ஒரு கலவையாக இருக்கும், உலகத்தை புரிய வைக்கும். இன்று ஆட்டு மந்தை போல் எல்லோரும் எல்லாத்தையும் ஒரே மாதிரி செய்து கொண்டு, அந்த பெற்றோர்கள் சொல்லிகுடுதும், இன்டர்நெட்-இலிருந்து காபி அடித்தும் கல்வி கற்பிக்கபடுகிறது. பத்து நோட் பூக்கிற்கு அய்நூறு ருபாய் வாங்குறாங்க (வெளியில் வாங்க கூடாது). இதற்க்கு என்ன தீர்வு? இதற்க்கு பல தீர்வுகள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து கேட்ட பழக்கத்தையும் அவர்கள் நாட்டுக்கு ஒத்து வரும் நம் நாட்டுக்கு ஒத்து வராத பழக்கங்களையும் காபி அடிக்கும் நாம் அவர்களுடைய நல்ல விஷயங்களை காபி அடிப்பதில்லை. நமக்கு தேவை மொக்கை இன்ஜினியரிங் காலேஜில் போய் விழுவது.

    நம் நாட்டில் ஜாதி ஆதிக்கத்தை ஒழித்தாலும், நமக்கு இல்லாத சமூக ஒழுக்கத்தினால், முன்னேற்றம் ரொம்ப கஷ்டம்.

  19. I studied in Don Bosco. Every beginning of the year, PET teached will record height, weight, chest size and breathing of all the students, based on this the class would be divied into 4 category (sub-junior, junior, inter & senior), all sports and activities are carried based on these categories.

    What did PSBB do? Did they measure student strength? Did they provide/have emergency care? If the student is not good (health), then they shouldn’t allow them to take part of certain activities. Did the school do this?

  20. தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது என்பதை இப்போதும் புரிந்து கொள்ளாத தமிழர்கள் இருந்தென்ன இறந்தென்ன? சேயோன் பள்ளியும்,ஜேப்பியார் கல்லூரியும் பார்ப்பனர்களால் நடத்தப்படவில்லை என்பதால் அவர்களுக்கு சிறை. பாப்பாத்தி ராஜ லட்சுமிக்கு அவ்வையார் விருது போலும்.நல்ல மனுநீதி

  21. பத்மா ஷெஷாதிரி பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான ரஞ்சனின் இறப்புக்கு நீதி கிடைக்காத இந்த வேளையில், அதே பள்ளியின் நீச்சல் குளத்தில் இதற்கு முன்பும் ஒரு மாணவன் இறந்ததாக செய்திகள் கசிகின்றன, உண்மையா?

  22. நான் ஏற்கனவே எழுதியதுதான்.கள்ள சாராயம் காய்சுபவனுக்காவது

    கொஞ்சம் உறுத்தல் இருக்கும்.ஆனால் இந்த கேடு கெட்ட நாய்களுக்கு

    அதுவும் கிடையாது.போதாக்குறைக்கு சமூகத்தில் சிறப்பு அந்தஸ்து

    வேறு.கல்வியும்,மருத்துவமும் விலை பொருளான தேசம் ஒரு போதும்

    விளங்காது.நாசமாய் போகட்டும் இந்த நாடு.

  23. இன்னொரு முகமூடி தேசபக்தி.

    உண்மையான தேசபக்தி எப்போது வரும்? ஒரு தனி மனிதன்

    தான் கவலையின்றி நிம்மதியாய் வாழ்கிறோம் எனும்போது,

    தனக்கு ஏதும் பிரச்னைகள் ஏற்படும்போது தனது அரசு தன்னை

    எப்படியும் பாதுகாக்கும் எனும்போது,நல்ல கல்வி,சுகாதாரம்,

    வாழ்க்கைதரம் பாதுகாக்கப்படும் எனும்போது.ஆனால் இப்போதைய

    இந்திய திருநாட்டில் இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?

  24. அவ்வளவு டவுட்டு இருந்தா இன்னாத்துக்கு இங்க இருக்க

    அப்படீன்னு கேட்டா என் பதில் இதுதான்.

    அத நீ சொல்லாத !

  25. எதுக்கெடுத்தாலும் சிங்கப்பூர உதாரணம் காட்டுறங்க

    இத மொதல்ல தெரிஞ்சிக்கணும்.இங்க சிங்கப்பூருல

    குடிமக்களுக்கு ஸ்கூல் பீஸ் 9 வெள்ளி.வெளிநாட்டுக்காரன்

    புள்ள படிக்கனும்னா 360 வெள்ளி.மேட்டர் என்னான்னா

    சொந்த மக்களுக்கு என்ன மாதிரி சலுகை அப்படீங்கறதுதான்.

    இது மாதிரி நம்ம நாட்டுல வெளிநாட்டுகாரங்க படிக்காம

    இருக்கலாம்.ஆனா சொந்த குடிமக்களுக்கு என்னாத்த

    புடுங்குது இந்த கவர்மெண்டு?

  26. கலைGர் T.V -நீங்கள் சென்றது தவரு.

    if M.K is CM then Kalainger T.V never Call you….

    don’t give any political color….

    now only M.K – T.V known about mkek?

Leave a Reply to கார்த்திக் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க