தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் ! வீடியோ

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பீதியூட்டிய மேட்டுக்குடி கும்பலை மக்கள் அம்பலப்படுத்தினர். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த ஆய்வுக் குழுவினர் 23-09-2018 அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில்  மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ஏன் மூட வேண்டும் என்பதை விளக்கி எழுதப்பட்ட விரிவான கோரிக்கை மனுக்களோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு குடும்பமாக வந்திருந்தனர்.

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுக்க வேதாந்தா செட்டப் செய்த மேட்டுக்குடி கும்பல் ஒன்று திரண்டிருந்த மக்களிடம் வம்பிழுத்தது. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுப்பவர்களை போலீசு போட்டோ எடுத்து பிரச்சினை பண்ணும் என்று பீதியூட்டியது அக்கும்பல். அக்கும்பலைத் துரத்திச் சென்று பதிலடிக் கொடுத்தனர் திரண்டிருந்த மக்கள். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.

சில அப்பாவி கிராம மக்களையும் அக்கும்பல் கூட்டி வந்திருந்தது. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்தவர்களிடம் செட்டப் செய்யப்பட்ட மனுக்கள் இருந்தன. இவற்றையெல்லாம் அந்தக் களத்திலேயே மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பல்வேறு சிறு நிறுவனங்களின் பெயரில் இந்த மனுக்கள் தயாரிக்கப்பட்டு செட்ட செய்த நபர்களிடம் கொடுக்கப்பட்டன. அதையெல்லாம் இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது.

பாருங்கள்… பகிருங்கள்!

வினவு களச் செய்தியாளர்

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க