ஸ்டெர்லைட்டை மூட சென்னை வந்து சாகட்டுமா? காணொளி

சென்னைக்கு வந்து செத்தாலாவது ஸ்டெர்லைட்டை மூடுவீர்களா ? தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராம மக்களின் வாழ்க்கை அவலம். காணொளியை பாருங்கள் பகிருங்கள்.

ஸ்டெர்லைட்டால் பாதிப்பு இல்லை என வாய்க்கூசாமல் புளுகி வருகிறது வேதாந்தா நிர்வாகம். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு அதனை விசாரிக்க கமிஷன் அமைத்து ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கான வேலைக்கு உடன்பட்டுப் போகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் புற்றுநோய், உடல்நலக் குறைபாடு, பிறவி உடல் பாதிப்புகள் உள்ளிட்டு பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

மக்களின் பாதிப்புகளை அங்கு நேரடியாகச் சென்று வினவு செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர். காணொளியைப் பாருங்கள் .. பகிருங்கள்..

தூத்துக்குடி மக்களின் துயரை உலகம் முழுதும் அறியச் செய்யுங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க