மூன்று அதிமுக குண்டர்களின் விடுதலைக்கு என்னவெல்லாம் பொழிப்புரை போடுகிறார்கள்? சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் ஏ1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் மறைந்து போன ஜெயா! அந்தப் பெரும் கொள்ளையில் கொசுறு வழக்குதான் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு. நீதிமன்றத்தால் 2000-ம் ஆண்டில் ஜெயாவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதிமுக காலிகள் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

எரித்துக் கொல்லப்பட்ட 3 மாணவிகள் மற்றும் எரிக்கப்பட்ட பேருந்து

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரியில் அப்பேருந்தை வழிமறித்த அதிமுக காலிகள் தீவைத்தனர். இதில் மூன்று மாணவிகள் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.

இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள்தான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசால் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எடப்பாடி – மோடி அரசுகள் கூட்டாக நடத்திய இந்த கேடுகெட்ட செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் ஏழு பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தும் விடுதலை செய்யப்படாத நிலையில் மேற்கண்ட மூன்று பேர் எப்படி விடுதலை செய்யப்பட்டனர் என்று பலரும் கேள்விகள் எழுப்பினர்.

படிக்க:
♦ செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !
♦ ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

இதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பில் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஆளுநர் விளக்கமளித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 1858 கைதிகளை 161-வது பிரிவின் கீழ் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பிப்ரவரி மாதம் கோப்பு அனுப்பியதாம். அதில் 5 ஆண்டுகளுக்கு பதில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கைதிகளைத்தான் விடுவிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை கூறியதால் மே 3 அன்று புதிய ஆணை தமிழக அரசால் வெளியிடப்பட்டதாம். இதன் பிறகு ஒவ்வொரு கைதிக்கென தனித்தனி கோப்புக்கள் சிறைத்துறை டிஜிபி தலைமை தாங்கிய குழுவால் அனுப்பப்பட்டதாம். அதன்படி ஆளுநரின் ஒப்புதலோடு இதுவரை 1627 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.

மூன்று மாணவிகளை பேருந்தோடு  எரித்த அதிமுக காலிகள்

அதில் மூன்று அ.தி.மு.க கைதிகளின் விவரங்களை பரிசீலித்த ஆளுநர் திருப்பி அனுப்பினாராம். அதே கோப்பை தமிழக அரசு அக்டோபர் மாதம் 25 அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியதாம். பிறகு தமிழக அரசின் தலைமைச் செயலர், தலைமை வழக்கறிஞர், உள்துறை செயலர் ஆகியோர் அக்டோபர் 31 அன்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தனராம். அதிமுக ரவுடிகள் மூன்று பேரும் கும்பல் மனநிலையில் அப்படி செய்துவிட்டதாக சுட்டிக் காட்டினராம். பிறகு ஆளுநர் வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டாராம்.

ஆளுநர் புரோகித்துக்கு தலைமை வழக்கறிஞர் சில முக்கியமான ’லா பாயிண்டு’களை தெளிவாக்கினாராம். “இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட ஐந்து கருத்துக்களாவன: 1. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற கும்பல் மனநிலையில் செய்யப்பட்ட நடவடிக்கையின்போது மரணங்கள் ஏற்பட்டன. 2. அரசியல் தலைவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க அவர்கள் விரும்பினர். 3. கொல்லப்பட்டவர்களை இவர்கள் முன்பின் அறியாதவர்கள் 4. முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லை. 5. எல்லாமே ஒரு கணத்தில் நடந்துவிட்டது.”

அதற்கப்பால் தெளிவான ஆளுநர், ”அரசு வகுத்த விதிமுறைகளுக்குள் இந்த மூவரும் வருவர்” என வழக்கறிஞர் சொல்லியதை ஏற்று விடுவிக்கும் ஆணையை பிறப்பித்தாராம்.

படிக்க:
♦ சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !
♦ மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

இந்திய அரசியல் சட்டம் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் சில நீதித்துறை அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் அளிக்கப்பட்ட தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கவும் அவற்றை நிறுத்தி வைக்கவும், குறைக்கவுமான அதிகாரம் குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு உண்டு.

அரசியல் சட்டப் பிரிவு 72-ன்படி குடியரசுத் தலைவரும், பிரிவு 161-ன்படி மாநில ஆளுநர்களும் அந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மரண தண்டனைக்கும்கூட மன்னிப்பு வழங்க முடியும். ஆளுநர்கள் மரண தண்டனை தவிர்த்த மற்ற தண்டனைகளை மன்னிக்கவும் குறைக்கவும் மட்டுமே அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இவை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இந்த நிர்வாக அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் மூலம்தான் நடைபெறுமே அன்றி குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ தன் விருப்பப்படி செய்ய முடியாத ஒன்று.

இந்திய ரப்பர் ஸ்டாம்ப் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ரப்பர் ஸ்டாம்ப் பன்வாரிலால் புரோஹித்

ரப்பர் ஸ்டாம்ப் எனும் விதி இங்கேயும் செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். அதிகபட்சம் இவர்கள் அமைச்சரவை அனுப்பும் பரிந்துரைகளை திருப்பி அனுப்பலாமே அன்றி அவற்றை மறுக்க முடியாது. அந்தபடிக்கு இந்த மூவர் விடுதலைக்கு ஆளுநர் அளித்திருக்கும் விளக்கத்தை பார்த்தால் அது ஏதோ அவரது தீவிர கருணை மற்றும் சட்ட ஆராய்ச்சியின் படி அளிக்கப்பட்டதைப் போன்ற தோற்றம் தருகிறது. இப்படி விளக்கும் கூறுவதே முதலில் பாரிய தவறு.

ஏனெனில் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரும் அரசின் பரிந்துரைகள் டெக்னிக்கலாக சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆயுள் தண்டணைக் குறைப்பு என்றால் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டும் என்று சில விதிகள் வைத்திருக்கிறார்கள். அவற்றைத்தான் ஆளுநர் சரிபார்க்க வேண்டுமே அன்றி குற்றவாளிகள் யார் அவர்களது குற்றம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை.

அப்படிப் பார்த்தால் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும், இந்துமதவெறியர்களின் செல்வாக்கால் தமிழக அரசாங்கங்கள் கடந்த ஆண்டுகளில் சிறைபிடித்த நூற்றுக்கணக்கான முசுலீம் கைதிகளையும் அல்லவா விடுவித்திருக்க வேண்டும்? அவர்களை என் விடுவிக்கவில்லை?

கேட்டால் அடிமை எடப்பாடி அரசின் டி.வி நிலைய வித்வான்கள் எழுவர் விடுதலைக்கு நாங்கள் பரிந்துரை அனுப்பிவிட்டோம், ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும், அவர் தாமதப்படுத்துவதற்கு காரணம் டில்லிதான் என்று கையைத் தூக்குகிறார்கள். அப்படித் தூக்கும் போது அவர்களது உடைகளும் கீழே கழன்று அம்மணமாக விழுவது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருக்கும் எழுவர்

மக்கள் அதிகாரம் அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விசாரணை அதிகாரிகளின் சுயபரிசீலனை வாக்குமூலங்கள், இராசிவ் காந்தி குடும்பத்தினரின் மன்னிப்பு, உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பு, விடுதலைக்கான தமிழக அரசின் பரிந்துரை… என அ.தி.மு.க. கொலையாளிகளை விட இராசிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்கான காரணிகளே இங்கு அதிகமாக உள்ளன. ஆயினும், இவர்கள் தமிழின உணர்வாளர்கள் என்பதாலேயே, எல்.டி.டி.இ., தீவிரவாதம், பிரிவினைவாதம், தேசப்பாதுகாப்பு போன்ற பூச்சாண்டி வேலைகளைக் காட்டி இவர்களின் விடுதலை திட்டமிட்டவகையில் தள்ளிப்போடப்பட்டு வருகின்றது.” என்று குற்றம்சாட்டியிருக்கிறது.

மேலும், “தமிழர்களின் மீதான வன்மம் காரணமாக இவர்களின் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் போராட்டக் களத்திற்குத் தள்ளுவதாகவே அமையும்” என்று எச்சரித்திருக்கிறது மக்கள் அதிகாரம்.

பிரிவு 161-ன்படி விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசின் கீழ் மட்டுமே வரும். அதற்கு ஆளுநர் எனும் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை போட்டு அங்கீரிக்கத்தான் வேண்டும். அதற்கு தில்லி மோடி அரசு உத்தரவு வேண்டும் என்றால் இவர்கள் என்ன எழவுக்கு கோட்டையில் குந்தியிருக்கிறார்கள்? இப்படி ஒரு வாதம் விளக்கம், மம்தா ஆளும் வங்கத்திலோ, சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திரத்திலோ வருமா என்று பலர் எடப்பாடி அடிமைகளைக் கேட்கின்றனர்.

ஆனால் எடப்பாடி கும்பலோ தனது கட்சி கும்பலை திருப்திப் படுத்துவதற்காக மூவர் விடுதலையை பயன்படுத்துவதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து பொறுக்கித் தின்ன காத்திருப்பதால் தனது அடிமைத்தனம் எனும் அம்மணத்தை வெட்கமின்றி ஏற்கிறது.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன
♦ ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!

இந்த அடிமைகள் பேசத்தவறிய லா பாயிண்டுகளை பாஜக எஜமான்கள் அள்ளி விடுகிறார்கள். எழுவர் விடுதலை என்பது பயங்கரவாத வழக்கு தொடர்புடையதாம். அதில் சிபிஐ, இதர தேசிய முகமைகள் விசாரித்திருப்பதால் மாநில அரசு தலையிட முடியாதாம். இந்த அத்துப் போன வாதங்களையெல்லாம் மறுத்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டதே என்றால், ஏன் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

இவர்களே ஒரு பயங்கரவாதிகள் என்பது ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே எனும் பயங்கரவாதியை அன்றைக்கிருந்த காங்கிரசு கட்சியின் மராட்டிய அரசு பத்தாண்டு முடிந்தது என்று விடுதலை செய்தது. இதற்கு மேல் புருலீயா ஆயுத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கு கூட பிரிவு 302-ன் கீழ் தான் நடந்தது. அது குறித்த ஜெயின் கமிஷன் அறிக்கை மீதான விசாரணை இன்னும் முடியவில்லை. இவர்களது பொய்க் குற்றசாட்டிற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரும் அநீதியல்லவா?

பாஜக பாசிஸ்டுகளின் ராமராஜ்ஜியம்

பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்கும். அதனால் தேர்தலில் தமது ஆதாயம குறையுமென்பதோடு, பாஜக எதிர்ப்பு அரசியல் போராட்டங்களை வளரவிடாமல் தடுப்பதற்கும் இந்த அக்கிரமத்தை செய்கின்றனர்.

மேலும் கும்பல் வன்முறை மனநிலை எனும் இந்த விளக்கத்தின்படி பார்த்தால் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இந்துமதவெறியர்கள் தினசரி பத்து பேர்களைக் கொன்றாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதே அவர்களை முறையாக கைது செய்து வழக்கு போடுவது இல்லை என்பதோடு எதிர்காலத்தில் யாராவது அப்படி போட்டாலும் ஆளுநர்கள் விடுவித்து விடுவார்கள்.

இந்த நாட்டின் அரசமைப்பு சட்டப்படி நடக்கவில்லை என்பதோடு, சட்டத்தை மீறுகின்ற முதல் அமைப்பாகவும் அதுதான் இருக்கிறது. எழுவர் விடுதலைக்காக தமிழகம் வீதிக்கு வந்து போராடாத வரை பாஜக பாசிஸ்டுகள் அடிமை எடப்பாடி மூலம் அதை தடுக்கவே செய்வார்கள்!

30 மறுமொழிகள்

 1. சூப்பர் வினவு … அப்படியே தினகரன் அலுவலக எரிப்பு வழக்குல 3 பெற எரிச்ச தி.மு.க பொறுக்கி நாய்களை பத்தி எப்ப கட்டுரை போடுவா வினவு ..

  • அப்ப எந்த ஆதாரமும் குடுக்க முடியல, படியளக்குற முதலாளிகளுக்கு நல்ல விஸ்வாசமா தான் இருக்கீங்க … சிலர் 200 ரூபாய் வாங்கிட்டு அந்த கட்சிக்காக மீம்ஸ் போடறாங்க, நீங்க லட்ச கணக்குல வாங்கிட்டு தி.மு.காவுக்கு ஜால்ரா அடிக்கிறீங்க. மக்களை ஏமாத்த மக்கள் அதிகாரம், ம.க.இ.க ன்னு மக்கள் திரள் அமைப்பு வேற ???புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம்ன்னு 2 பத்திரிக்கை வேற.. என்ன இருந்தாலும் புத்தி மாறுமா ??? எது எப்படியோ அடுத்தவனை ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன கைகூலின்னு பட்டம் குடுத்த நீங்க தி.மு.க கைகூலிங்கதான்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி..

   • உங்கள் மீதான இந்த விமர்சனத்தினை வைப்பதற்கு மன்னிக்க வேண்டும். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை.. உங்களின் நடவடிக்கைகள் அவ்வாறு தான் இருக்கின்றன

  • மேரி மாமி சொல்றத கொஞ்சம் பாத்து சொல்லப்படாதோ, அக்ரி ஸ்டூடண்ட்ஸ எரிச்ச கேசுல ஏடிஎம்கே குண்டாசை காப்பத்தறதுக்காக நீங்க துட்டு வாங்காமலேயே இவ்ளோ சவுண்டு விட்டா, துட்டு வாங்கிண்டிருந்தா வினவு கூருப்பை என்கவுண்டரே பண்ணிருப்பேள் போங்க! பை தி பை தினகரன் எரிப்பு கேசு இப்பக்கூட மதுரை ஹைகோர்ட்ல சிபிஐதான் நடத்துது. மோடிஜியண்ட சொல்லி சிபிஐ கொஞ்சம் உசுப்பி விட்டு கேசு நடத்தலாம்ணாலும், சிபிஐ உள்ளயே பயங்கரமா சண்டை போடறாள், அதுக்கு மோடிஜி அர்த்த ராத்திரியெல்லாம் உக்காந்து தன்னோட சிஷ்யப் பிள்ளைகளை குஜராத்லேர்ந்து கொண்டு வந்து போடுறாரு. எல்லாரும் காசு வாங்கிண்டு அல்ம்புறான்னு ஒருத்தர ஒருத்தன் சொல்லிண்டு போங்கோ கலிகாலம் முத்திடுத்து, ஒன்னும் சொல்றதுக்கில்லே!

 2. அம்மணி ஏன் டென்ஷனாரேள்? தினகரன் எரிப்பு கேசுல என்ன தண்டனை கொடுத்தாள்? யார் யாரை விடுதலை செஞ்சாள்னு செத்த டெக்னிக்காலா டீடெய்ல் போட்டேள்னா லோகத்துக்கு ஷேமமா இருக்கும். அவாளை பொறுக்கி நாய்னு சொல்லிண்டு அதே வாயால கோபால் கோட்சேவ நாய்னு சொன்னா நம்ம அ.நீ சார்வாள் விசுவாமித்திரரா கொதிச்சிடுவார். நீங்க பேசுறதுக்கு நம்ம மணி கண்ட் சார்வாள் தேவலாம்னு சொல்ல வெச்சுராதேள்!

  • தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு தி.மு.க ஆட்சி காலத்தில் தான் நடந்தது, அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை அப்போதைய கருணாவின் அரசு எடுத்தது என்று கூறமுடியுமா.. இதனை முன்னின்று நடத்திய அப்போதைய மதுரை மேயர் தேன்மொழி, ரவுடி அட்டாக் பாண்டி ஆகியோர் விடுதலை செய்ய பட்டு விட்டனர். இவர்கள் களத்தில் நின்று அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கியதை ஆயிரக்கணக்கான பொது மக்கள் பார்த்தனர்.. அதைவிடுங்கள், அங்கு எரித்து கொல்ல பட்ட மூவரும் பாட்டாளிகள் தான், இந்த விவகாரத்தில் தி.மு.கவை அதன் தலைமையை கடுமையாக தாக்கி வினவு எழுதிய கட்டுரைகள் ஏதாவது இருந்தால் கொஞ்சம் காட்டவும் …

   • மேரியம்மா நம்ம மோடிஜிகிட்ட NSA, CBI ன்னு ரெண்டு துப்பறியும் சாம்பு படையே இருக்கறச்சே இந்த திமுக பார்ட்டியை உண்டு இல்லேன்னு பண்ணிருக்கணுமோ இல்லியோ? திமுக சூத்திரக்கட்சியா இருந்துண்டு அவனே அவ்ளோ அறிவா கேசுல தப்பிக்கிறச்சே நம்மவா சாணக்கிய பரம்பரையில வந்தவா என்ன புல் புடுங்கியிட்டிருக்கான்னு நாலு சூத்திரப் பய கேக்க மாட்டானா? எச்.ராஜா’ஜிய வெச்சு சுப்ரீம் கோர்ட்டுல ஒரு கேசுபோட்டு தினகரன் எரிப்புல எல்லாரையும் அரெஸ்ட் பண்ணாம இருக்காள்னா அந்த தினகரன் எரிப்பு கேசுல நம்ம ராஜா சர்மாவுக்கு பங்கிருக்கோன்னு உங்களுக்கு தோணலையா?

    • அதெல்லாம் இருக்கட்டும் தண்டனை குடுக்கிறதை பத்தி அப்புறம் பேசலாம், நான் கேட்டது இந்த 3 ஊழியர்கள் தி.மு.க ரவுடிகளால் தினகரன் அலுவலகத்தில் எரித்து கொல்லப்பட்ட விஷயத்தில், வினவு குழு ஆற்றிய எதிர்வினை என்னன்னு தான்.. இல்லைனா இவங்களோட பு.ஜ.தொ.மு கொல்ல பட்ட பாட்டாளிகளுக்கு நியாயம் வேண்டி என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் தி.மு.க வை எதிர்த்து செய்தார்கள் .. ஓடி போய் அதுக்கான ஆதாரங்களை தூக்கிட்டு ஓடியாங்க. போங்க ..போங்க…

     • அதெல்லாம் இருக்கட்டும், வினவு ஆத்துன எதிர்வினையை வெச்சு நாம என்ன அஸ்வமேதா யாகமா பண்ணமுடியும். rss – bjp ஆத்துன எதிர்வெனை என்னன்னு செத்த சொல்லுங்கோ மேடம்? அவா ஏன் இதுக்கு கேஸ் போட்டு திமுகவை உள்ள தள்ளல? சின்ன பிள்ளைங்கள எரிச்ச ஏடிஎம்கே கட்சியை நம்ம ஜெயா மாமிதான் வளர்த்தாருன்னு மூவர் விடுதலையை நீங்க மனமார ஆதரீக்கிறீங்கன்னு இத படிக்கிறவா எல்லாம் நம்பிடுவா? அந்த அக்ரி மாணவிங்க பாவம் உங்கள சும்மா விடாது, பாத்து ஷேமமா இருங்க!

 3. அப்பாவி தமிழக மக்களையும் பாரத பிரதமரையும் கொன்ற பயங்கரவாதிகளை விடுவிக்க அனைத்து தேசவிரோத இயக்கங்களும் அரசியல் கட்சிகளை கைக்குள் போட்டுகொண்டு இந்த மாதிரியான கட்டுரைகளை வெளியிடுகின்றன. இதில் பிஜேபி ஏன் விடுவிக்கவில்லை ஏன் காங்கிரஸ் விடுவிக்கவில்லை என்ற கேள்வி வேறு.

  இந்த லட்சணத்தில் இந்த 7 பயங்கரவாதிகளை தமிழன் என்று வேறு அடையாளப்படுத்துகிறார்கள் பாவிகள்.

  உலகத்திலேயே இப்படி ஒரு வெட்கமற்ற மக்கள் விரோத அரசியலை தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

  • மணிகண்டன் ….

   உங்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள், முதலில் ராஜிவ் காந்தி அப்போது பாரத பிரதமர் கிடையாது, முன்னாள் பிரதமர் அவ்வளவே..அமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் என்கிற கூலிப் படையை அனுப்பி, அங்கிருக்கும் அப்பாவி தமிழர்களை கொன்று பெண்களை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்த வரலாறுகள் எல்லாம் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன அதனை பார்க்கவும்.இப்போது மோடி எப்படி மல்லையா, நீரவ் மோடி போன்ற கொள்ளையர்களை தப்பி விட்டாரோ அதே போன்று பல்லாயிரம் இந்தியர்களின் சாவுக்கு காரணமான போபால் விஷவாயு கசிவில் முக்கிய குற்றவாளியான ஆண்டர்சனை அமெரிக்காவிற்கு தப்பிக்க விட்ட துரோகிக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை தான் அது.. இந்த போபால் பேரழிவில் பிஜேபி திருட்டு நாய்களுக்கும் பங்கிருக்கிறது ..இந்த நாட்டின் பொருளாதாரத்தினை சீர்குலைக்கும் மிக பெரிய பயங்கரவாதி மோடி தான். காந்தியை படுகொலை செய்த கோட்ஸேவை தேசபக்தனாக பார்க்கும் உங்களுக்கு 7 தமிழர்கள் பயங்கரவாதிகளாக தெரிவதில் ஆச்சர்யமில்லை..

   • நீங்கள் விடுதலை புலிகளின் பொய் பிரச்சாரங்களால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறீர் என்பது மிக நன்றாகவே தெரிகிறது… நான் எதையும் விவரம் தெரியாமல் பேசுவது இல்லை… எனக்கு நிறைய இலங்கை தமிழர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்… இந்தியா அமைதிப்படை (மெட்ராஸ் ரெஜிமென்ட்) எங்களின் உடன் பிறந்த சகோதரர்களை போல் நடந்து கொண்டார்கள் என்று சொன்னது எனது மிக நெருங்கிய இலங்கை தமிழ் நண்பரின் தந்தை (அவர் தற்போது கனடாவில் இருக்கிறார்)..

    விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும் இலங்கை அதிபர் ஜெயவர்தனேவும் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு தான் இந்தியா ராணுவத்தின் மீது அவதூறுகள் பரப்பப்பட்டது. அதன் தொடக்கம் இந்தியா ராணுவத்தினரை உயிரோடு டயரை மாட்டி கொளுத்தி கொன்றார்கள்… விடுதலை புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த எத்தனையோ தீமைகளில் ஒன்று இந்தியா ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

    ராஜிவ் காந்தி ஒப்பந்தத்தை ஏற்று கொண்டு ஜனநாயக பாதைக்கு பிரபாகரன் திரும்பி இருந்தால் இன்று இத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் மடிந்து இருக்க மாட்டார்கள். அன்று ராஜிவ் காந்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொன்ன இலங்கை தமிழர்கள் இன்று அதே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடி கொண்டு இருக்கிறார்கள்.

    பிரபாகரனின் தனிப்பட்ட சுயநலன் (அதிகார வெறி) தான் ராஜிவ் காந்தி மரணத்திற்கு அடிப்படை காரணம் அதற்கு இந்தியா ராணுவம் தவறு செய்தது அது இது என்று சொன்னது எல்லாம் வெறும் பிரச்சாரம் தான்.

    • அபிஸ்டு மணிகண்டு உங்கிட்ட மெட்ராஸ் ரெஜிமெண்ட்ட பத்தி கனடாவுல சொன்னா, கிரானடாவுல சொன்னான்னு சொன்னா அது காப்பி பேஸ்ட் சரக்குன்னு உங்க கீ போர்டே தெரிஞ்சு வெச்சிருக்குமே! அமைதிப்படை ரேப் பண்ணது, கொலை பண்ணது எல்லாம் ஈழத்தமிழரண்ட வீடியோவே இருக்கறச்சே ஏன்தான் இப்பிடி படுத்திறீங்களோ? பொய் சொல்றத செத்த பாதி உண்மை பாதி போய் மாறி கூட ட்ரெயினிங் கொடுக்கலேன்னா நாம என்னிக்கு இந்து ராஷ்டிரத்தை எழுப்பி, பூஜை போடுறது?

     • உங்கள் குற்றசாட்டு உண்மை என்றால் அதை நிரூபிக்க ஆயிரம் (இந்தியா நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றங்கள்) வழிகள் இருக்கிறது… நீங்களாகவே ஒரு பொய் குற்றசாட்டை சொல்விர்கள், நீங்களாகவே அதற்கு காரணம் ராஜிவ் காந்தி தான் காரணம் என்று தீர்ப்பு சொல்லி அவரையும் அப்பாவி தமிழக மக்களையும் கொலை செய்விர்கள். என்ன நியாயம் இது.

      எந்தவிதமான ஆதாரமும் இன்றி எங்கள் ராணுவத்தின் மீது அவதூறுகளை பரப்பி, எங்கள் நாட்டின் பிரதமரையும் அப்பாவி தமிழக மக்களையும் கொன்று இருக்கிறீர்கள்.

      உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களும் ராணுவத்தினருக்கு எதிராக சொல்லும் பொய்களில் ஒன்று தான் ராணுவம் பெண்களை கற்பழித்தது என்ற குற்றசாட்டு… காரணம் ஒருவனின் கேரக்டரை நாசம் செய்ய வேண்டும் என்றால் அவனை பெண்களோடு தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்தாலே போதும். இது அணைத்து பயங்கரவாத இயக்கங்களும் செய்யும் பொய் பிரச்சாரம்.

      அதனால் இந்த மாதிரியான பொய் பிரச்சாரங்களை நான் நம்புவது இல்லை.

      முதலில் நீங்கள் சொல்லும் குற்றசாட்டை நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச அமைப்பிடமோ நிரூபிக்க வேண்டும், பிறகு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

      நீங்கள் குற்றம் சாட்டிய குற்றவாளிகளை விட்டு விட்டு அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத ராஜிவ் காந்தியையும், அவரோடு சேர்த்து அப்பாவி தமிழக மக்களையும் கொன்று இருக்கிறீர்கள்.

     • ராஜிவ் காந்திக்கு இரண்டு விஷயங்களில் அநியாயம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது ஒன்று போபோர்ஸ் விவகாரத்தில் அவர் மீது அநியாயமாக சேரை வாரி இறைத்து இருக்கிறார்கள். கடைசியில் ராஜிவ் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த பிறகு எந்த மீடியாவும் அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.

      அடுத்தது இலங்கை விவகாரத்தில் பிரபாகரனின் அதிகாரவெறிக்காக ராஜிவ் காந்தி பலியாக்கபட்டு இருக்கிறார் அது தமிழர்கள் ராஜிவ் காந்திக்கு செய்த துரோகம். பிரபாகரனின் அதிகார வெறிக்கு ராஜிவ் காந்தி மீது இன்றுவரையில் சேற்றை வாரி இறைத்து கொண்டு இருக்கிறார்கள்.

      • //ராஜிவ் காந்திக்கு இரண்டு விஷயங்களில் அநியாயம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது ஒன்று போபோர்ஸ் …//

       இதனை உங்கள் சங்கிகளுக்கு முதலில் சென்று சொல்லுங்கள், அவர்கள் தான் ராஜிவ் காந்தி போபோர்ஸ் ஊழல் செய்தார் என்று கதறி கொண்டிருக்கிறார்கள்..பிரபாகரனிடம் அதிகார வெறி இருந்ததது என்று ஒரு சங்கி நீங்கள் சொல்ல கூடாது, அதனை அந்த மக்கள் சொல்லட்டும், போதிய மக்கள் ஆதரவு இல்லாதிருந்திருந்தால் என்றோ விடுதலை புலிகள் இயக்கம் ஒழிந்து போய் இருக்கும்.. அதிருக்கட்டும் மோடியை விடவா அதிகார வெறி பிடித்த ஒருவன் வேண்டும்..அனைத்து மாநில அதிகாரங்களையும் பறித்து தன காலடியில் போட்டு கொள்ள வேண்டும் என்று வெறி நாயே காறி துப்பும் அளவிற்கு கேவலமாக வெறி கொண்ட மோடியை தலைவனாக கொண்டவர்கள் அதனை பேச கூடாது…

       • உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை… பிரபாகரனை மோடியோடு ஒப்பிடுவது தவறு. பிரபாகரனை இடிஅமீன் பொல்பொட் போன்றவர்களோடு தான் ஒப்பிட வேண்டும்.

        மோடி மக்களிடம் வாக்கு கேட்டு மக்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்து இருக்கிறார், ஜனநாயகத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அடிப்படை காரணமே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான். மோடி மக்களின் பிரதிநிதி

        பிரபாகரன் துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டி, தனக்கு போட்டியாக இருந்தவர்களை எல்லாம் கொன்று ஒழித்து, எதிர்த்து கேள்வி கேட்க கூட ஒருவரையும் விட்டு வைக்காமல் அதிகாரத்தை கைப்பற்றினார்… விடுதலை புலிகள் என்றோ மக்களின் ஆதரவை இழந்து விட்டார்கள், அதற்கு ஆதாரம் இறுதிக்கட்ட போரின் போது அனைவரும் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்த பிறகு, மக்கள் இவன் தான் என் மகளை பிடித்து சென்றான், இவன் தான் என் 12 வயது மகனை பிடித்து சென்றான் என்று இலங்கை ராணுவத்திடம் புலிகளை பிடித்து கொடுத்தார்கள்.

        மக்கள் அந்தளவுக்கு புலிகளின் மீது வெறுப்படைந்து இருந்தார்கள், அதனால் தான் விடுதலை புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தங்களோடு சேர்த்து கொள்ளாமல், அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் பிச்சை எடுக்க வைத்தார்கள்.

        அந்தளவுக்கு மக்கள் புலிகளை வெறுத்தார்கள்.

   • நீங்கள் எவ்வுளவு தான் பயங்கரவாத விடுதலை புலிகளை ஆதரித்து சொன்னாலும்… அவர்களின் போராட்டத்திற்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத அப்பாவி தமிழக மக்களை கொன்றது ஏற்க முடியாது. இந்த 7 பேருக்கும் பொது இடத்தில் குண்டு வைத்தால் அப்பாவி மக்கள் சாவார்கள் என்று தெரிந்தே திட்டமிட்டு குண்டு வெடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அதுவும் விபி சிங் கூட்டத்தில் ஒத்திகை எல்லாம் பார்த்து குண்டு வெடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.

    இவர்கள் சட்டத்தின் கருணைக்கு தகுதி இல்லாதவர்கள்… விடுதலை புலிகளின் பண பலத்தால் தூக்கு தண்டனையை தள்ளி வைத்து கடைசியில் தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார்கள், நிச்சயம் இவர்கள் விடுதலை ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள்.

    இவர்கள் செய்த தவறை ஏற்றுக்கொண்டு மன்னியுங்கள் என்று கேட்டது இல்லை, இவர்களின் இயக்கமும் மன்னிப்பு கேட்கவில்லை… இனியும் இந்தியாவிற்கு எதிராக செய்லபட மாட்டோம் என்று இவர்கள் இயக்கம் சொன்னது இல்லை.

    இவர்கள் விடுதலை ஆவதற்கு எந்த நியாயமும் இல்லை.

    • ஈழ மக்கள் விஷயத்தில் இந்தியா யாரு முடிவெடுக்க. 13 வது சட்ட திருத்தத்தை ஏற்க சொல்லி ராஜீவ் காந்தி ஈழ மக்களுக்கு அழுத்தம் கொடுத்தார் என்பது தான் உண்மை. மேலும், இந்திய ராணுவ பொறுக்கிகள் இலங்கையில் போட்ட ஆட்டம் உலகறிந்தது, யாழ்ப்பாணம் மருத்துவமனை தாக்குதல் அன்று உலகம் முழுவதும் கண்டனம் செய்ய பட்ட ஒன்று.

     • இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களை காக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்திலும் நடந்தது இலங்கையிலும் நடந்தது… மேலும் போராளிகள் இந்தியாவின் உதவி தேவை என்று கேட்டார்கள், இப்படி பல தரப்பினரின் வேண்டுகோளுக்காகவே இந்திய ராணுவம் அனுப்பப்பட்டது.

      நீங்கள் விடுதலை புலிகளின் பொய்களால் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள் அதனால் எவ்வுளவு தான் சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை.

      ஐநா மனித உரிமை வலைதளத்தில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் விடுதலை புலிகளின் அய்யோக்கியத்தங்களை பற்றி அறிக்கைகள் வெளியிட்டு இருக்கிறார்கள்… படித்து பார்த்து விட்டு பிறகு பேசுங்கள்.

      • ஐயோ ஐயோ மணி காண்டு சார்வாள் போர்னா ஜனங்க சாவத்தான் செய்வாங்கன்னு நம்ம ஜெயா மாமி மாறி ஸ்ட்ரைட்டா பேசுறத விட்டுட்டு இப்படி ஐநா, ஆறனா ன்னு லிங்கு ஏன் போடறேள்? முள்ளி வாய்க்கால்ல செத்தவெனல்லாம் புலி பயங்கரவாதின்னு ஒரே அடியா அட்ச்சு விட்டீள்னா சரித்திரம் தரித்தரமா முடிஞ்சிருமோயில்லியோ? பட் ஒன் திங், இத சொல்லிண்டு தமிழ்நாட்ல மட்டும் பேரைச் சொல்லிண்டு நடமாடதேள்!

      • அதே இணையத்தில் இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களும் கொட்டி கிடக்கின்றன அதனையும் பாருங்கள்… சர்வதேச பொது மன்னிப்பு சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையினையும் படிக்கவும் …

 4. சார்வாள் இன்னி பேட்டா இன்னும் முடியலியா! நேக்கும் உம்மோட மல்லுக்கட்டமுடியல! பயங்கரவாதிதான் பாரதப்பிரதமர், குஜராத்துல 2000 பாய்கள போட்டார், என்கவுண்ட்ர்ல அப்பாவிய போட்டார், அமைச்சரையே போட்டார், அமித்ஷா அதுக்கு பிரதியோபாகரமா சதாதசிவத்தை கேரள கவர்னாக்கினார்னு ஊரே வேடிக்கை பாக்குறது. இதுல ஏழை பேரை பயங்கரவாதின்னு பகிரங்கமா பேசுனா உம்ம தமிழ்நாட்ல உண்டு இல்லேன்னு பண்ணிடுவா! பேசாம ராஜஸ்தான் போய் ராஷ்ட்ர பாஷா கத்துண்டு ஃபெஹ்லுகான்தான் பயங்கரவாதின்னு ஜெய்ப்பூர்ல பேஷா ட்ரோல அடிக்கலாமில்லையோ? நா வேணா பெங்களூர் ஸ்லீப்பர் ஜிகிட்ட பேசிப் பாக்கவா?

   • அப்பாவி தமிழக மக்களை எல்லாம் திட்டம் போட்டு கொலை செய்த கொலைகாரர்களை விடுவிக்க கூடாது என்று சொல்லும் நாங்கள் பைத்தியக்காரர்கள் ஆனால் எத்தனை பேரை கொலை செய்தாலும் அவர்களை தண்டிக்க கூடாது, விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லும் நீங்கள் எல்லாம் தெளிந்த அறிவு உடையவர்கள்.

    • அசடு, அப்பாவி ஈழத்தமிழனை குடும் சகிதமா கொன்னு போட்டுட்டுண்டு, இப்போ அப்பாவி தமிழக மக்களை திட்டம் பொட்டு கொன்னார்னு பூசணிக்காயை மறைச்சுண்டா நீர் ட்ரோல் பேட்டாவுக்காக கமலாலயத்துல அமர்ந்துண்டு காப்பி குடிச்சுண்டு, காப்பி போடுறது தெரிஞ்சுருமோயில்லையோ?

   • அந்த கொலைகாரனை மட்டும் விடுதலை செய்து விட்டு இந்த கொலைகாரர்களை ஏன் விடுதலை செய்யவில்லை என்று கேட்கும் உங்களை போன்றவர்களும் வினவு போன்றவர்களையும், விடுதலை புலி ஆதரவாளர்களும் பெரும் அயோக்கியர்கள், மனிதவிரோதிகளாகவே நான் பார்க்கிறேன்.

    • அம்பி மணி கண்டா, பரம்பூஜனிய சர்சங்ஜாலக் குருஜி சொன்னத மறந்திட்டியா? யூதரை இனப்படுகொலை செஞ்ச ஹிட்லரத்தான் அவரு தேஷபக்திக்கு இலக்கணமாக சொல்லிருக்கார். ஹிட்லரை கும்பிடற கையால வாழ்த்துற வாயால பயங்கரவாதி, மனித விரோதின்னு சொன்னா ஊரு நம்புமா ஓய்? உமக்கு பௌத்திக் பைடக் கொடுத்த கபோதி யாருன்னு சொல்லும்? என்னா டிரெயினிங் கொடுத்திருக்கேள்னு நாக்க பிடுங்குற மாறி ரெண்டு கேள்வி கேக்குறன்! சங்கத்தோட மாண்பையை இப்புடி சின்னபின்னமாக்கி கெடுக்காறாளே! ஈஸ்வரா ஈஸ்வரா…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க