ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
பத்திரிக்கை செய்தி

நாள்:30.11.2018

ச்சு ஆலை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறோம். எங்களின் கோரிக்கை ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி தூத்துக்குடி சிப்காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்; மக்களுக்கு சுத்தமான காற்று, நீர், சுகாதாரமான வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்பதே. சுகாதாரமான வாழ்வு என்ற அடிப்படை உரிமைக்காக மே,22 – 2018 அன்று 14 போராளிகள் உயிர் துறந்திருக்கிறார்கள். அதன்பின் தமிழக மக்களின் கடும் எதிர்ப்பின் பேரில் ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

படிக்க:
♦ தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
♦ ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !

ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மோசடியானது; நீதிமன்றத்தில் ரத்தாக வாய்ப்புள்ளது என்று மே 28, 2018 அன்றே மக்கள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்தோம். முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்களும் அரசாணை செல்லாது என்றனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.சி.டி.செல்வம், திரு.பசீர் அகமது ஆகியோர் அரசாணையின் சட்டவலிமை குறித்துக் கேள்வி எழுப்பியபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ”கொள்கை முடிவெடுத்துத்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது –அரசாணை சட்டப்படி வலிமையானது” என  நீதிமன்றத்தில் தெரிவித்தார். முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் உச்சநீதிமன்றம் அல்ல, உலகநீதிமன்றம் சென்றாலும் ஸ்டெர்லைட்டைத் திறக்க முடியாது என்றனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு தலைவர்

ஆனால் இன்று நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு, தமிழக அரசின் அரசாணை இயற்கை நீதிக்கு எதிரானது, சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட்டைத் திறக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி அவர்களின் பதில் என்ன? தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட ஆய்வுக்குழு அறிக்கையை வெளியிட மறுப்பதேன்?

நீதிபதி தருண் அகர்வால் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த வரம்புகளை மீறி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள், புற்றுநோய் உயிரிழப்புகள், மக்களின் அச்சம் குறித்து எந்த ஆய்வும் நடத்தாத ஆய்வுக்குழு அரசாணை தவறு எனச் சொல்வது அப்பட்டமான ஒருசார்பு நிலையாகும். அரசாணை குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஆய்வு எனச் சொல்லி சென்னையில் வழக்கறிஞர்கள் வாதங்களைத்தான் கேட்டார் தருண் அகர்வால். எனவே நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயமும், தமிழக அரசும் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். எனினும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டை திறக்கச் சொல்லியே உத்தரவிடும் என எதிர்பார்க்கிறோம். பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிடுவது, உச்சநீதிமன்றம் செல்வது என தமிழக அரசு நாடகமாடுகிறது எனக் குற்றம் சாட்டுகிறோம்.

ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு – முழக்கமிடும் தூத்துக்குடி மக்கள்

கடந்த 3 மாத காலமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காண்ட்ராக்டர்கள் மூலம் சாதி, மத உணர்வுகள் தூண்டப்படுகிறது. கோடிக்கணக்கான பணம் மக்களைப் பிளக்க செலவழிக்கப்படுகிறது. போராட்டத்தில் முன்நின்றவர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. மிரட்டல்கள் விடப்படுகின்றன. மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பதிவிடுவோர் காவல்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். ஸ்டெர்லைட் எப்படியாவது திறக்கப்பட்டுவிடும் என்ற கருத்து தமிழக அரசின் துணையுடன் உருவாக்கப்படுகிறது. இச்செயல்கள் தமிழக அரசின் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை !
♦ ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !

எனவே, உண்மையில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதில் நேர்மையாக உள்ளதென்றால் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

1. சுற்றுச்சூழல் விதிமுறை மீறல், மக்களுக்கான நோய்பாதிப்பு என ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வலிமையான ஆதாரங்களைத்  திரட்டி, ஸ்டெர்லைட் போன்ற பெருவீத தாமிர காப்பர் உருக்கு ஆலைகளுக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது என்று அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து சிறப்புச் சட்டம் இயற்ற தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் உடனே கூட்டப்பட வேண்டும்.

2. தமிழக அரசு வழங்கிய கட்டிடம், தீயணைப்பு, தொழிற்சாலை உரிமங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்தை தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து உடனே வெளியேற்ற வேண்டும்.

3. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த 14 பேர் உயிரிழப்பு, 273 வழக்குகள், 300-க்கும் மேலானோர் கைது, பல கோடி சொத்துக்கள் நாசம், இணைய சேவை முடக்கம், துறைமுகம் மூடல் உள்ளிட்டவை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பொது அமைதி, சட்டம்-  ஒழுங்கு சீர்குலைவை அடிப்படையாகக் கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133-ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூட வேண்டும்.

4. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி, சிப்காட்டை விட்டு வெளியேற்றக் கோரி, மக்கள் கூட்டமைப்பின் சார்பில் துண்டறிக்கைப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் உள்ளிட்ட தொடர் இயக்கம் நடத்தப்படும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது ஸ்டெர்லைட் மீண்டும் இயங்குவதைத் தடுப்போம்.

  1. ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட்டால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல ஜனநாயக முறையில் தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடத்தப்படும். தமிழக மக்கள், மாணவர்கள், உலகத் தமிழர்கள், அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், தூத்துக்குடி மக்களோடு இணைந்து தமிழகம் முழுக்கப் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதென்பது, தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்; தமிழர்களை அவமதிப்பது. உயிர்துறந்த 14 போராளிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது. எனவே, மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட்டுக்கு மறைமுக ஆதரவு தராமல் உடனே கொள்கை முடிவெடுத்து சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் உங்களை அகற்றுவர்.

இவண்:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9865348163, 9443584049, 8608723357,
9791123059, 9629373089, 9444969704

22 மறுமொழிகள்

  1. மக்கள் மீது அக்கறை இல்லாத கிறிஸ்துவ மற்றும் கம்யூனிஸ்ட்களின் மிக மோசமான போராட்டம் இது, இவர்களின் வெறி செயலுக்காக அப்பாவி மக்கள் தான் தூத்துக்குடியில் உயிர் இழந்தார்கள்.

    நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பல தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும், இப்படி சுற்றுசூழலை காரணம் காட்டி தொழிற்சாலையை மூடுவது என்றால் ஒட்டுமொத்தமாக நாட்டில் இருக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டும்… அந்த நேர்மையும் துணிவும் கிறிஸ்துவ (கம்யூனிச) அடிப்படைவாதிகளுக்கு இருக்கிறதா ? தூத்துக்குடியில் எதாவுது ஒரு தொழிற்சாலை சுற்றுசூழலுக்கு மாசு இல்லாமல் செயல்படுகிறது என்று கம்யூனிஸ்ட்கள் சொல்ல முடியும்மா ?

    ஒரு தொழிற்சாலை சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது என்றால் அதை கட்டுப்படுத்த போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும் ஆனால் அதை செய்யாமல் தொழிற்சாலையை மூடு என்று சொல்வது மக்களுக்கு (இளைஞர்களுக்கு) இழைக்கப்படும் மிக பெரிய அநீதி.

    • ஜி, ஸ்டெர்லைட் போஸ்ட்டுன்னா மறக்காம இப்படி போடுற கடமையை விட்றாதேள்! நோக்கு தினசரி கமெண்ட் பேட்டா இன்னியிலிருந்து 500 ரூபான்னு கொடுக்கச்சொல்லி வினாயக்ஜியண்ட கோரிக்கை சொல்லியிருக்கிறேன். வேதாந்தா புண்ணியவான் நம்ம மோடிஜி கட்சிக்கு 15 கோடி டொனேஷன் கொடுத்தன். அவனுக்காக நாம ஆஜராகாம வேற யாரு வரப்போறா? உங்க கர்மத்துக்கு புண்ணியம் டன் கணக்குல சேரத நினைச்சா மனது சந்தோஷத்துல பதர்றது. அப்புறம் 2.0 பாத்தேளா? கார்யாலத்துல 50 டிக்கெட் பாஸ் கொடுத்தாளே கிடைச்சுதா?

  2. இந்த வட இந்திய அகர்வால் கும்பல்களை,செருப்பால் அடித்து தமிழர்கள் விரட்ட வேண்டும்…ஸ்டெர்லைட் ஆலை மூடியது மூடியதுதான், அதனை மீண்டும் திறக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த விஷத்தை பரப்பும் ஆலையை மூடுவதற்காக 18 பேர் தங்களின் உயிரினை தியாகம் செய்திருக்கிறார்கள், அது வீண் போக ஒருநாளும் அனுமதிக்க கூடாது.. தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எரிபொருள் விலை ஏற்றதினால் இப்போது பாரிஸ் இல் என்ன நடக்கிறதோ, அங்கு அரசை மக்கள் என்ன பாடு படுத்திகிறார்களோ அதனை இங்கும் செய்து காட்டுவோம் …

    • உங்கள் கருத்து தவறு, உங்களின் பிரச்னை சுற்றுசூழல் மாசு அல்ல, உங்களின் பிரச்னை வட இந்தியருக்கு எதிரான இனவாதம் (இந்த இனவாதத்தை பல கிறிஸ்துவர்களிடம் பார்க்கிறேன்) மிக முக்கியமாக மோடி லண்டன் சென்ற போது அவரை அகர்வால் வரவேற்றார் என்ற கிறிஸ்துவ பாசிஸ்ட் மனநிலை தான் உங்களிடம் வெளிப்படுகிறது.

      அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தொழிற்சாலை தொடங்கலாம் ஆனால் இந்தியா வம்சாவளி அகர்வால் தொழிற்சாலை நடத்த கூடாதா என்னையா நியாயம் இது.

      இளைஞர்களுக்கு வேலைபாய்ப்பு வேண்டும் என்றால் இன்னும் அதிக தொழிற்சாலைகள் வேண்டும், அந்த தொழிற்சாலைகள் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காமல் செயல்பட வேண்டும். இது தான் சரியான நிலைப்பாடாக இருக்கும்.

      தொழிற்சாலைகளை மூடுவது மக்களின் (இளைஞர்களின்) வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்.

      • சார்வாள் கரெக்டா பேசறேள்! போபால்ல யூனியன் கார்பைடை ஏன் மூடினாள்? ஒரு பத்தாயிரம் பேர் சிவ சிவான்னு பரலோகம் போய்ச்சேந்தாள்னு ஆலையை மூடிதனது தப்பில்லையோ. எத்தனை பேர் அங்க வேலை பாத்தாள்! இங்க தமிழ்நாட்டுல அகர்வால் ஸ்வீட்ஸ் திறக்கறச்சே அகர்வால் ஸ்டெர்லைட் மட்டும் திறக்க்கபடாதுன்னு சொல்றவாள மோடிஜிட்ட சொல்லி உள்ள தள்ளணும்.

  3. வட இந்தியர் என்றில்லை, தாமிரபரணி ஆற்றை கபளீகரம் செய்யும் கோக் கம்பெனியை அப்புற படுத்த வேண்டும் என்பதும் தான் எனது வாதம்.. அநியாயத்தில் உள்நாடு வெளிநாடு என்கிற வேற்றுமை எல்லாம் எனக்கு கிடையாது . அப்புறம் இன்னொரு முறை எம்மை பாசிஸ்ட் என்று சொன்னால் மிகவும் மோசமாக நான் பேச வேண்டியது இருக்கும் என்பதை நான் கூறி கொள்கிறேன் .. மோடியை ஆதரிக்கும் கேடுகெட்ட ஜென்மங்களை விடவா நான் பாசிஸ்ட். வெட்கமே இல்லாமல், கார்ப்பரேட்டுகளுக்கு பாரத மாதாவை கூட்டி கொடுக்கும் பிறவிகளான ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள், கிறிஸ்தவர்களை பார்த்து பாசிஸ்டுகள் என்று பேசுவது தான் நகை முரண். உங்களை போன்ற தரகு புத்தி உடைய ஆட்களால் தான் ஹிந்து மதத்திற்கு அவ பெயர் ஏற்படுகின்றது.

    • கிறிஸ்துவ பாசிஸ்ட் மனநிலை தான் உங்களை இப்படி பேச வைக்கிறது… அதே பாசிஸ்ட் மனநிலை தான் மோடி மீது வெறுப்பை விதைக்கிறது…. பல கிறிஸ்துவர்களிடமும் சமீபகாலமாக இந்த பாசிஸ்ட் மனநிலையை பார்க்கிறேன். ஆனால் உலகம் முழுவதும் கிறிஸ்துவம் இந்த அழிவை தான் கொண்டு வந்து இருக்கிறது, மாற்று மதத்தினரை ஏற்காத இந்த மனநிலையால் தான் பல இனங்கள் கிறிஸ்துவத்தால் அழிக்கப்பட்டு இருக்கிறது.

      இந்தியா இளைஞர்களின் தேசம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை, அதற்கு தொழிற்சாலைகள் இடையூறு இல்லாமல் இயங்க வேண்டியது அவசியம், அப்படிப்பட்ட சூழலை உருவாக்க வேண்டியது ஒரு அரசின் கடமையும் கூட அதனால் மோடி மீதான உங்களின் வெறுப்பை நான் ஏற்கவில்லை… ஒரு அரசு தொழில் செய்வதற்கான சூழலை தான் உருவாக்க முடியும், வேலைக்கு இடையூறு இல்லாமல் தொழிலார்கள் செல்வதற்கான வசதியை தான் அரசு உருவாக்க முடியும் ஆனால் தொழிற்சாலைகளை மூடி தொழில் தொடங்குவதற்கான சூழலை அழிப்பது என்பது தவறு அது நம் தலையில் நாமே மண் அள்ளி போட்டு கொள்வது போன்றது தான்.

      • மோடியை செருப்பால் அடித்தால் அதற்க்கு பேர் பாசிசம் என்றால், அந்த பாசிசம் வரவேற்க வேண்டியதே .. அதெல்லாம் இருக்கட்டும் அதி மேதாவி, முதலில் பாசிசம் என்றால் என்ன? இதற்க்கு பதில் சொல்லவும் …

        • ஜனநாயகத்தை பற்றி துளியும் கவலைப்படாதது
          கிறிஸ்துவ மதத்தை தவிர வேறு மதமே இருக்க கூடாது என்று நினைப்பது
          கிறிஸ்துவர்கள் சொல்லும் தொழிற்சாலைகளை தவிர எந்த தொழிற்சாலையும் செல்லப்பட கூடாது என்று நினைப்பது
          தமிழகத்தில் இனவெறியை தூண்டி விடுவதில் கிறிஸ்துவம் பங்கு வகிக்கிறது, அடுத்தகட்டமாக வடகிழக்கு மாநிலங்களை போல் தமிழகத்திலும் பயங்கரவாதத்தை வளர்ப்பார்கள் என்று சந்தேகப்படுகிறேன் (இது உலகம் முழுவதும் கிறிஸ்துவம் செய்து இருக்கும் செயல்)

          இப்படி பல காரணங்களால் கிறிஸ்துவ பாசிசம் என்று நான் சொல்கிறேன்.

        • சோபியா உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் எல்லாம் இப்படி (மத)வெறி பிடித்து அலைவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை, இதை சமீபகாலமாக பல கிறிஸ்துவர்களிடம் பார்க்கிறேன்…. இந்த மதவெறி தமிழக அமைதிக்கு நல்லது இல்லை, தூத்துக்குடியில் இத்தனை பேர் கிறிஸ்துவ கம்யூனிச பாசிசத்திற்காக பலியானது போல், அடுத்து தமிழகம் முழுவதும் நடக்குமோ என்று அச்சப்படுகிறேன்.

          தமிழக மக்களை அந்த ஆண்டவன் தான் கிறிஸ்துவ மதவெறியர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

          • //சோபியா உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் எல்லாம் இப்படி (மத)வெறி பிடித்து அலைவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை, இதை சமீபகாலமாக பல கிறிஸ்துவர்களிடம் பார்க்கிறேன்…. //

            பாசிசம் என்றால் என்ன வென்று கூட உமக்கு தெரியவில்லை.. இதில் நீர் எங்களை பாசிஸ்ட் என்பது தான் பித்தலாட்டம் . பாசிசம் என்றால், உத்தர பிரதேசத்தை ஆளும் காவி பரதேசி நாய் யோகி ஆதித்யநாத் 3 மாதங்களுக்கு திருமணம் செய்ய கூடாது, யாருக்கும் திருமண மண்டபத்தினை வாடகைக்கு விட கூடாது என்று நேற்று ஒரு அறிக்கை விட்டான் பாருங்கள் அதற்க்கு பெயர் தான் பாசிசம் .. முட்டாளே முதலில் பாசிசம் என்றால் என்ன வென்று தெரிந்து கொண்டு வந்து பேசு.. ஜனநாயகத்தை பற்றி துளியும் கவலை படாது, அணைத்து தேசிய இந கலாச்சாரங்களையும் அழித்து நாடு முழுக்க இந்துத்துவ பார்ப்பனீயம் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களை போன்ற, மோடியை போன்ற லும்பன்களுக்கு பெயர் தான் பாசிஸ்டுகள்.. கிறிஸ்தவ நாடுகள் எல்லாம் பாசிஸ்டுகள் என்றால், இந்நேரம் அங்கே போய் கோவில் கட்டி தட்டேந்தி உங்கள் பார்ப்பனர்கள் பிச்சை எடுத்திருக்க முடியாது ..

            • ஆதித்யநாத் பற்றி நீங்கள் சொல்வதை எந்த ஒரு செய்தி இணையதளத்திலும் இதுவரையில் படிக்கவில்லை அதனால் நீங்கள் வழக்கம் போல் கிறிஸ்துவ மதவெறியர்களின் பொய் பித்தலாட்ட செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்… உங்களை போன்ற கிறிஸ்துவ பாசிஸ்டுகளின் பொய்களை நம்ப கூடாது என்பதை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போதே புரிந்து கொண்டு இருக்கிறேன்.

              • ஏற்கனவே திருமணம் நிச்சயம் செய்த பெற்றோருக்கு கடும் சோகத்தில் ஆழ்ந்துளார்கள் .. மக்களை அழைக்கழிச்சு பாக்றதுல அப்படி என்னங்கடா உங்களுக்கு அதுல ஒரு சந்தோஷம்..(வினவு இதனை ஒரு தனி கட்டுரையாக்கி இவர்கள் முகத்தில் அடிக்கவும்)

                இதற்க்கு பெயர் தான் பாசிசம், மற்றபடி மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஆலையை விரட்டுவதற்கு பெயரல்ல.. இனிமேல் பாசிசம் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் .. அனால் யோகியின் இந்த கேவலமான அட்டூழியத்திற்கும் நியாயம் கற்பித்து நீங்கள் ஒரு பதில் கொடுப்பீர்கள் பாருங்கள் அங்கே தான் உங்களின் பாசிசம் நிற்கிறது..

              • உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா கும்பகோணம் மகாமகம் வருடத்தில் திருமணம் செய்வதை தவிர்ப்பார்கள்… இதற்கு பல காரணங்கள் உள்ளது.

                இந்த செய்தியை பற்றிய உண்மை தன்மையை மற்றும் காரணத்தை முழுதாக தெரிந்து கொண்டு கருத்து சொல்கிறேன்.

                • Manikandan rebecca mary இணைய இணைப்புகளை உங்கள் பதில்களில் தவிர்க்கவும். நன்றி

  4. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படவேண்டும் என்று நினைப்பவன் மனிதனே அல்ல.

    • இது வரையில் ஸ்டெர்லைட் மூட வேண்டும் என்பதற்கான ஏற்க கூடிய சரியான காரணத்தை ஒருவரும் சொல்லவில்லை… கிறிஸ்துவ பாசிஸ்ட்களுக்கு அகர்வால்-மோடி மீதான வெறுப்பால் ஸ்டெர்லைட் அலையை மூட வேண்டும் என்பதற்காக பல பொய் பிரச்சாரங்களை கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து செய்தார்களே ஒழிய உண்மையை பேசவில்லை.

      ஸ்டெர்லைடால் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்றால் அதன் அருகில் இருக்கும் மற்ற தொழிற்சாலைகள் எல்லாம் என்ன மாசு இல்லாமல் செயல்படுகிறதா என்பதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.

      தூத்துக்குடியில் மிக அதிக சுற்றுசூழல் மாசை உருவாக்குவது அங்கே இருக்கும் நிலக்கரியால் செயல்படும் மின் நிலையம்… இதை உங்களால் மறுக்க முடியுமா ?

      ஒரு தொழிற்சாலையின் இயக்கத்தால் மாசு ஏற்படுகிறது என்றால் அதை சரி செய்வதற்கு தான் அக்கறை உள்ள அனைவரும் முயல வேண்டும்… தொழிற்சாலையை மூட வேண்டும் என்று சொல்வது உள்நோக்கம் உள்ள தவறான செயல்.

      இதனால் கம்யூனிஸ்ட்களும் சர்ச்சுகளும் பாதிக்கப்பட போவதில்லை அவர்கள் மிக தெளிவாக இருப்பார்கள், இதனால் பாதிக்கப்பட போவது அப்பாவி மக்கள் தான்.

      • மணிகண்டா, ஸ்டெர்லைட் வேதாந்தா மஹான் நம்ம கட்சிக்கு 30 கோடி டொனேசன் கொடுத்திருக்கார். அதால நீர் நம்ம பரிவாரத்த விட்டுக் கொடுக்காம கூவுறத ஒத்துண்டாலும், அகர்வால்ஜி கம்பெனி ஹெட்கோட்டர்ஸ் இன்னி தேதிக்கு கிரிஸ்டீன் மண்ணான இலண்டன்ல இருக்குறத நினைச்சுப்பாரும் ஓய்! அமித்ஷாவண்ட ஒரு ஃபோனைப் போட்டு வேதாந்த கம்பெனியை இலண்டல் இருந்து நம்ம லக்னோவுக்கு கொண்டு வர்ற வழியப்பாரும். சும்மா கிறிஸ்டீன், பாசிஸ்ட்னு சவுண்டு வுட்டா பத்தாது!

  5. ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகளை பற்றி எப்போதோ அணைத்து ஊடங்கங்களும் புட்டு வைத்து விட்டார்கள், ஏற்க கூடாது என்பது உங்களுடைய முதலாளித்துவ ஆதரவு பாசிச மனநிலை பிறழ்வு அதற்க்கு நாங்கள் என்ன செய்வது, இருந்தாலும் மேலும் ஒரு ஆதாரம் தருகிறேன் ..

    https://www.vikatan.com/news/coverstory/14174.html

  6. மணிகண்ட மாமா,
    உனக்கு பேமண்ட் எப்படி? Comment wiseஆ இல்லை கட்டுரை wiseஆ?
    சும்மா சொல்லுப்பா . . ! எனக்குகூட வினவு பக்கம் பேசி பேசி பைசா பிரயோசனம் இல்லாம இருக்கு . . !
    பொழப்புக்கு வழி சொல்லிக்குடுப்பா . . . !

  7. இந்த விவகாரத்தில் வினவு என் கருத்தை தடை செய்து அவர்களின் நேர்மையின்மையை நிரூபிக்கிறார். நான் அனுப்பிய விடீயோவிற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் அனைவர்க்கும் உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க