ந்தியாவைப் போல் அல்லாமல் புதிய பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்தப்படுவர் என கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

naseeruddin shah and imran khan
இம்ரான்கான், நஸ்ருதீன் ஷா

மத வன்முறைகளுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், ‘புதிய பாகிஸ்தான், முகமது அலி ஜின்னாவின் பாகிஸ்தானாக இருக்கும். இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது போல் அல்லாமல், எங்களுடைய சிறுபான்மையினரை சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்துவோம் என உறுதி கூறுகிறோம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜின்னாவின் பிறந்த நாளை ஒட்டி, ட்விட்டரில் தொடர் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், ஜின்னாவின் ஆரம்ப கால அரசியல் இந்து – முசுலீம் ஒற்றுமையின் தூதராகத்தான் தொடங்கியது என்கிறார்.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முசுலிம்கள் சரியாக நடத்தப்பட மாட்டார்கள் என்பதை உணர்ந்த காரணத்தால், ஜின்னா முசுலிம்களுக்கு தனி நாடு கோரினார் எனவும் இம்ரான் கான் தெரிவிக்கிறார்.

கடந்த வாரம், நடிகர் நஸ்ருதின்-ஷா இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கும்பல் கொலைகள் குறித்து கருத்து தெரிவித்த போது இந்துத்துவ கும்பலால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் நஸ்ருதின் ஷாவுக்கு பாகிஸ்தான் செல்ல ஒருவழி விமான சீட்டை அனுப்பினார்.

படிக்க:
♦ பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்
♦ இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

ஷாவுக்கு நடந்தது குறித்து கரிசனப்பட்ட இம்ரான் கான், ‘நரேந்திர மோடி அரசுக்கு சிறுபான்மையினரை எப்படி நடத்துவது என்பது குறித்து எங்களுடைய அரசு சொல்லித்தரும்’ என ட்விட்டரில் பதிவிட்டார். பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலளித்த ஷா, “நாங்கள் 70 வருட ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். எங்களுடைய பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்குள்ள பணிகளைப் பாருங்கள்” என்றார்.

நஸ்ருதீன்-ஷா பெருந்தன்மையாக தனது நாட்டை அயல்நாட்டுடன் விட்டுக்கொடுக்காமல் பேசலாம். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளில் நிலைமைகள் தலைகீழாக மாறிக் கொண்டிருப்பது என்னவோ உண்மை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற பெயரளவு அடையாளத்தை துறந்து வெளிப்படையான இந்துமதவெறி நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானோ வெளிப்படையான முஸ்லீம்மதவெறி நாடு என்ற அடையாளத்திலிருந்து மாறுவதற்கு முயல்கிறது.

இன்றும் பாகிஸ்தான் ஒரு மதம்சார்ந்த நாடு என்ற போதிலும் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறது. இந்துத்துவர்களில் கைகளில் சிக்கியிருக்கும் இந்தியா தனது ஜனநாயக பாதையிலிருந்து சர்வாதிகாரத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறது.  இந்தியா மத சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க மக்கள் காவி அரசியலை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

– கலைமதி
நன்றி: ஸ்கரால்

 

 

12 மறுமொழிகள்

 1. இதை விட கேவலமான மோசடி கட்டுரை வேறு எதுவும் இருக்க முடியாது…

  ஆசியா பீபீ மீது பொய் குற்றசாட்டு சொல்லி அவரை சிறையில் அடைத்தார்கள். நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்த பிறகும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை காரணம் என்ன என்று சொல்ல முடியும்மா ?

  மோகன் சி லாசுரர்ஸ் என்ற கிறிஸ்துவ மதவெறியன் ஹிந்து கடவுள்கள் மற்றும் கோவில்கள் பற்றி (வெளிப்படையாக) அவதூறு பேசியது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவன் இன்றும் சுதந்திரமாக திரிந்து கொண்டு இருக்கிறான். பாகிஸ்தானை போல் லாஸரஸை கொலை செய்ய வேண்டும் என்று யாராவுது திரிகிறார்களா ? மோகன் சி லசரசு மட்டுமா ஏராகுறைய அனைத்து கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் உங்களை போன்ற அயோக்கிய கம்யூனிஸ்ட்களும் ஹிந்து கடவுளை பற்றி பேசாத அவதூறுகளா ?

  பாக்கிஸ்தான் அரசியல் சட்டத்திலேயே சிறுபான்மை மக்கள் அரசின் உயர் பதவிக்கு வர முடியாது என்று இருக்கிறதே அது மாதிரியா இந்தியாவில் உள்ளது. பிஜேபி ஆட்சியில் தானே அப்துல் கலாமை ஜனநாதிபதியாக ஆக்கினார்கள்.

  இவ்வுளவு பேசும் இம்ரான் கான் ஆசியா பிபியை வெளியே விட சொல்லுங்களேன் பார்ப்போம்.

 2. வினவு போன்ற கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா ? பாக்கிஸ்தான் போன்ற கேவலமான மதவெறி பிடித்த தீவிரவாத நாட்டோடு இந்தியாவை ஒப்பிட எப்படி மனசாட்சி வருகிறது.

  உங்களுக்கு எல்லாம் ஏன் பாகிஸ்தானிகள் பேசும் மோசடி பேச்சுக்கள் எல்லாம் வேதவாக்காக இருக்கிறது என்று தெரியவில்லை.

 3. ஹிந்து மதத்தை பற்றியும் ஹிந்து கடவுள்களை பற்றியும் ஹிந்துக்களை பற்றியும் கண்டபடி அவதூறு பேச வேண்டியது. அவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் மனம் நோக்கும்படி பேச வேண்டியது. எல்லை மீறிய அவதூறு பேச்சுக்களால் ஹிந்துக்களுக்கு கோபம் வந்தால் உடனே பாக்கிஸ்தான் ஜனநாயகத்திற்கு திரும்புகிறது இந்தியா சர்வாதிகாரத்திற்கு திரும்புகிறது என்று போலி கண்ணீர் வடிக்க வேண்டியது.

  இந்தியாவில் மதவாதம் வளர்வதற்கு அடிப்படை காரணம் போலி மதசார்பின்மை பேசும் கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஹிந்து விரோத போக்குகள் தான். இதை பற்றி எந்த பத்திரிகையும் நேர்மையாக விவாதித்தது இல்லை.

  இந்த போலி மதசார்பின்மை பேசும் கம்யூனிஸ்ட் அயோக்கியர்களை பொறுத்த வரையில் எவ்வுளவு தான் ஹிந்து மதத்தை பற்றி அவதூறாக பேசினாலும் ஹிந்துக்கள் அதை கேட்டு அடங்கி போகணும் இல்லை என்றால் மதவாதம் என்று அவதூறு பேசுவார்கள்.

 4. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இன்றும் இந்த தேசத்தில் மதசார்பின்மை பேச முடிகிறது என்பதை மறக்க வேண்டாம்.

 5. இன்று இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியோரில் மிகப் பெரும்பான்மையினர் இந்து மதத்தில் இருக்கும் சாதிய கொடுமையினால் பாதிக்கப்பட்டு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் மற்ற அடித்தட்டு மக்களின் வாரிசுகள். அதனால்தான் அவர்கள் இந்து மதத்தின் கொடுமைகளையும் கடவுளர்களையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்கிறார்கள். இதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களிடம் இருக்கும் இந்த போக்கானது கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கிறது என்பது வேறு விடயம். மணிகண்டன் என்னும் சனி கொண்டான் ரொம்பவும் குதிக்கிறார்.

  • உங்கள் போன்ற கிறிஸ்துவர்களின் மோசடிகள் எல்லாம் யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா ?

   கிறிஸ்துவம் முதலில் Portuguese மூலம் கோவாவில் நுழைந்தது. அங்கே தீவிர மதமாற்றம் நடந்தது… மதம் மாறாத ஹிந்துக்களை கொடுமைப்படுத்தினார்கள், கோவாவில் இருந்த அனைத்து ஹிந்து கோவில்களையும் இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள். … இதோ ஆதாரம்

   Hindus were forbidden from occupying any public office, and only a Christian could hold such an office
   Hindus were forbidden from producing any Christian devotional objects or symbols.
   Hindu children whose father had died were required to be handed over to the Jesuits for conversion to Christianity. This began under a 1559 royal order from Portugal, whereafter Hindu children alleged to be orphan were seized by Society of Jesus and converted to Christianity. This law was enforced on children even if mother was still alive, in some cases even if the father was alive. The parental property was also seized when the Hindu child was seized. In some cases, states Lauren Benton, the Portuguese authorities extorted money for the “return of the orphans”.
   Hindu women who converted to Christianity could inherit all of the property of their parents
   Hindu clerks in all village councils were replaced with Christians
   Christian ganvkars could make village decisions without any Hindu ganvkars present, however Hindu ganvkars could not make any village decisions unless all Christian canvas were present; in Goan villages with Christian majorities, Hindus were forbidden from attending village assemblies.
   Christian members were to sign first on any proceedings, Hindus later.
   In legal proceedings, Hindus were unacceptable as witnesses, only statements from Christian witnesses were admissible.
   Hindu temples were demolished in Portuguese Goa, and Hindus were forbidden from building new temples or repairing old ones. A temple demolition squad of Jesuits was formed which actively demolished pre-16th century temples, with a 1569 royal letter recording that all Hindu temples in Portuguese colonies in India have been demolished and burnt down (desfeitos e queimados)
   Hindu priests were forbidden from entering Portuguese Goa to officiate Hindu weddings.

   கோவாவில் யாரும் ஹிந்து மதத்தை வெறுத்து மதம் மாறவில்லை, வெளிநாட்டு கிறிஸ்துவர்களால் கட்டாயப்படுத்தி மதம் மாற்ற பட்டார்கள்.

   இஸ்லாமும் இதையே தான் தான் இந்தியாவில் செய்தது, அவர்கள் ஆட்சி செய்தது ஆண்டுகள் அதிகம் என்பதால் அவர்களால் ஹிந்து மதத்திற்கு எதிரான அழிவை பெரும் அளவில் செய்ய முடிந்தது.

   உங்களின் ஹிந்து மதத்திற்கு எதிரான கதைகளை எல்லாம் வேறு யாரிடமாவுது சொல்லுங்கள்.

 6. கோவாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப போர்த்துகீசியர் அநியாயம் செய்தது உண்மை. அதுபோல் இஸ்லாமிய மன்னர்களும் மதத்தை பரப்ப அநியாயம் செய்தார்கள். இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இத்தகைய கட்டாய மதமாற்றத்தினால் இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் மதம் மாறினார்கள். மிகப் பெரும்பாலானோர் இந்து மதத்தின் கொடுமைகளால் தான் மதம் மாறினார்கள். கட்டாயப்படுத்தி மதம் மாற்றப்பட்டு இருந்தால் நிச்சயம் சூழ்நிலை மாறியவுடன் இந்து மதத்திற்கு திரும்பியிருப்பார்கள். ஆனால் இப்போது இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏன் திரும்ப இந்து மதத்தை தழுவவில்லை. தங்களுடைய முன்னோர்கள் கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் விரும்பி மதம் மாறினார்கள் என்பதுதான் காரணம்.

  • உலகம் முழுவதும் கிறிஸ்துவமும் இஸ்லாமும் மாற்று மதத்தினரை மிக மோசமாக நடத்தி பெரும் கொலைகளையும் அழிவையும் அந்த நாடுகளில் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

   மாற்று மதம் பற்றிய அவதூறு மற்றும் பொய்களை பரப்பி மதம் மாற்றுவது தான் கிறிஸ்துவர்களின் வேலை.

   இந்தியாவில் இன்றும் அப்பாவி மக்களிடம் பொய்களை சொல்லி பண ஆசை காட்டி மத மாற்றம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அன்று கத்தி முனையில் மதம் மாற்றினார்கள் இன்று பணத்தை காட்டி மதம் மாற்றி கொண்டு இருக்கிறார்கள். இன்றும் கூட ஆதிவாசிகளில் சிலர் மதம் மாறவில்லை என்றால் அடித்தே கொலை செய்கிறீர்கள் (ஒரிசா சம்பவம்)

   கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தலித்திற்கு சம அந்தஸ்து கொடுத்து இருக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை… இன்றும் கூட தலித் கிறிஸ்துவர்கள் வசிக்கும் வீதி வழியாக கிறிஸ்துவ தேர் செல்ல கூடாது என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். தலித் கிறிஸ்துவர்களின் பிணங்களை உங்கள் சுடுகாட்டில் புதைக்க கூடாது என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். தலித் கிறிஸ்துவர்களின் சர்ச்சுக்கு மற்றவர்கள் போக மாட்டார்கள் இப்படி எவ்வுளவோ சொல்லி கொண்டு போகலாம்…

   கிறிஸ்துவ மதத்தில் வேற்றுமைகள் கிடையாது என்று சொல்லி கொண்டு ஆகஸ்ட் 10 தேதியை கருப்பு தினம் என்று போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு எல்லாம் வெட்கமே கிடையாதா ?

 7. இன்றும் பாகிஸ்தான் ஒரு மதம்சார்ந்த நாடு என்ற போதிலும் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறது. *
  பாகிஸ்தானில் உள்ள குறைந்த அளவு மக்கள் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க விரும்புகின்றார்கள் அவ்வளவே

 8. கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்கள் மாற்று மதத்தினரை தான் மோசமாக நடத்துகின்றன. ஆனால் இந்து வைதீக மதம் இந்துக்கள் என்று சொல்லப்படக்கூடிய தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட வரையும் மிக மோசமாக நடத்துகிறது. இதுதான் வேறுபாடு.

  • உங்கள் பைபிளில் சொல்லப்பட்ட வார்த்தைகள் இது, கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் யாராவுது வந்தால் அவரை வரவேற்க கூடாது அவரை உங்கள் வீட்டினுள் சேர்க்க கூடாது, அப்படி அவரை வரவேற்றாள் நீங்களும் பாவிகள் ஆவீர்கள்.

   Anyone who runs ahead without remaining in the teaching of Christ does not have God. Whoever remains in His teaching has both the Father and the Son. If anyone comes to you but does not bring this teaching, do not receive him into your home or even greet him. Whoever greets such a person shares in his evil deeds

   ஹிந்து வேதப்படி யாரும் தீண்ட தகாதவர்கள் இல்லை பிறப்பினால் அனைவரும் ஒன்றே… ஒருவரின் குணம் மற்றும் நடத்தையால் தான் அவரின் வர்ணம் நிர்ணயிக்கபடுகிறது… இதற்கு சிறந்த உதாரணம் இராவணன் மற்றும் விசுவாமித்திரன் இவர்கள் இருவரும் பிறப்பினால் சத்திரியர்கள் ஆனால் கம்பன் ராவணனை அணைத்து வேதங்களையும் கற்று தேர்ந்த பிராமணன் என்று சொல்கிறார்.

   விசுவாமித்திரர் கடும் தவத்தினால் பிரம்மரிஷி என்ற பட்டத்தை பெற்று இருக்கிறார்.

   உங்களின் கட்டுக்கதைகளை எல்லாம் வேறு யாரிடமாவுது சொல்லுங்கள்.

   ஹிந்து மதத்தை பரப்பிக்கிறோம் என்று சொல்லி இந்திய அரசர்கள் யாரும் போர் தொடுத்து பல ஆயிரம் அப்பாவி மக்களை கொன்றது இல்லை (கிறிஸ்துவமும் இஸ்லாமும் இதை இன்று வரையில் செய்து கொண்டு இருக்கிறது)

   போரில் கூட நியாயதர்மத்தை கடைபிடித்தவர்கள் இந்தியர்கள். கிறிஸ்துவர்களை போல் இஸ்லாமியர்களை போல் காட்டுமிராண்டிகளாக இந்தியர்கள் நடந்து கொண்டது இல்லை.

  • உங்கள் கிறிஸ்துவத்தில் தான் தீண்டாமை இல்லையே பிறகு ஏன் ஆகஸ்ட் 10 தேதியை கருப்பு தினம் என்று சொல்லி போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறீர்கள். பதில் சொல்ல முடியுமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க