தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் பாஜக : கும்மிடிப்பூண்டி முற்றுகைப் போராட்டம் | live

அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பு.ஜ.தொ.மு. திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று காலை 10 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறது.

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மோடி கும்பலிடமிருந்து தொழிலாளர் நலச் சட்டங்களைக் காக்க இருநாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

சென்னையில், இன்று காலை 10 மணியளவில் பு.ஜ.தொ.மு. திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறது.

தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை RSS-BJP அரசாங்கம் செல்லாக்காசாக்கி தொழிலாளர்களுக்கு விரோதமான 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுகிறது, இதற்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு பு.ஜ.தொ.மு அறைகூவி அழைக்கிறது.

தொழிலாளி வர்கத்தை காண்டிராக்ட்மயமாக்குதல், கட்டுப்பாடற்ற வேலைபறிப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத – மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க மோடி கும்பலை வீழ்த்துகின்ற வரலாற்றுக் கடமை இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. நமது வர்க்கக் கடமையை நிறைவேற்ற இருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தி முடிப்போம்.

தொழிலாளர் உரிமைகள் மீட்க; பாசிச RSS-BJP கும்பலை வீழ்த்த
2019 ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க