ளும் பாஜக அரசு இந்த ஆண்டும் அதிக நன்கொடைகள் பெற்ற கட்சி என ‘பெயர்’ பெற்றுள்ளது. ஆனால், கருப்பு பணம் – ஊழல் – நேர்மை என்றெல்லாம் வாய்சவடால் விடும் பாஜக-வினர், தாங்கள் பெற்ற 80 சதவீத நன்கொடையை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. ரூ. 553 கோடிக்கு மேல், பெயர் தெரியாத மூலங்களிடமிருந்து பாஜக நன்கொடை பெற்றிருக்கிறது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆளும் பாஜக 2017-2018 ஆண்டில் தனது மொத்த நன்கொடைகளில் 80 சதவீதம், பெயர் தெரியாத மூலங்களிடமிருந்து பெற்றிருக்கிறது. ஐந்து தேசிய கட்சிகளின் பெயர் தெரியாத மொத்த நன்கொடை (ரூ. 136.06 கோடி) மூலங்களை விட இது நான்கு மடங்கு அதிகம் என்கிறது இந்த அறிக்கை.

தேசிய கட்சிகள் வருமான வரி தாக்கல் செய்ததில் ரூ. 20 ஆயிரத்துக்கு கீழே நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை குறிப்பிடவில்லை. தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடை பெறுவது, கூப்பன்கள் விற்பனை, நிவாரண நிதி, இதர வருமானம், தன்னார்வலர்களின் பங்களிப்பு, கூட்டங்கள்/பேரணிகள் மூலம் கிடைக்கும் பங்களிப்பு உள்ளிட்டவை பெயர் தெரியாத மூலங்கள் என கட்சிகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. தன்னார்வலர்களின் பங்களிப்பு என உள்ளதில் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பது குறித்த விவரங்களை கட்சிகள் அளிக்கவில்லை.

படிக்க:
♦ பா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை! நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 !
♦ நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க

“ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழே தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடை அளித்த தனிநபர்கள் அல்லது அமைப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் விவரங்கள் வெளியிடத் தேவையில்லை. விளைவாக, 50 சதவீத நன்கொடையாளர்களின் விவரங்கள் தெரியவில்லை. அவர்கள் ‘பெயர் தெரியாத’ மூலங்களாகவே சுட்டப்படுகிறார்கள்.  தேசிய தகவல் ஆணையம் தேசிய கட்சிகளை 2013 ஜூன் மாதம் முதல் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டுவந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்கிறது தேர்தல் கண்காணிப்பகத்தின் அறிக்கை.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய ஏழு தேசிய கட்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர்த்த மற்ற ஆறு கட்சிகளின் 2017-18-ம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ. 1,293.05 கோடி.

மொத்த வருமானத்தில் ரூ. 467.13 கோடி நன்கொடையாளர்களின் விவரங்களோடு உள்ளது. ரூ. 136. 48 கோடி சொத்துக்களின் விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி, பதிப்பக வருமானம் மற்றும் கட்சி வரியின் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 47 சதவீதம் தெரிந்த வழியிலும் மீதமூள்ள 53% பெயர் தெரியாத மூலத்திலிருந்தும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. தேர்தல் பாண்டுகள் மூலமாக மட்டும் ரூ. 689.44 கோடி நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.

ரூ. 20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை பெற்றதிலும் பாஜக-வே முதல் இடத்தில் உள்ளது. 2017-18-ம் ஆண்டுகளில் ரூ. 437.04 கோடி தனிநபர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் பெற்றுள்ளது பாஜக. தேசிய கட்சிகளின் மொத்த நன்கொடையில் பாஜக மட்டும் 93 சதவீதத்தை பெற்றுள்ளது.  இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸ் ரூ. 20 ஆயிரத்தும் மேற்பட்ட நன்கொடையாக ரூ. 26. 658 கோடியைப் பெற்றுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் (2004-05 முதல் 2017-18வரை) தேசிய கட்சிகள் ரூ. 8721.14 கோடியை பெயர் தெரியாத மூலங்களிலிருந்து பெற்றிருக்கிறது என்கிறது கண்காணிப்பகத்தின் அறிக்கை.

ஆக மொத்தத்தில், கருப்பு பணத்தை ஒழிக்க வந்த மோடி ரூ. 500 கோடி பணத்தை யாரென்றே தெரியாத நபர்களிடம் கிட்டத்தட்ட கருப்பு பணத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளார் என்பதும் கார்ப்பரேட் நலன்களுக்காக ஓடி..ஓடி உழைத்ததில் ரூ. 400 கோடி அளவுக்கு அவர்கள் நன்கொடையாக நன்றிக்கடன் செலுத்தி உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

அதோடு, தேர்தல் நிதி தில்லுமுள்ளுகளில் மோடியின் கூட்டாளிகளாக மற்ற தேசிய கட்சிகளும் இருக்க விரும்புகின்றனர். அதனால்தான் தேசிய கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவருவதில் இவர்கள் முனைப்புக் காட்டவில்லை என்பது தெரியவருகிறது.

கலைமதி
கலைமதி
நன்றி: அவுட் லுக்

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க