கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி

கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் ராஜு ஆற்றிய உரை ! நம் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எப்படி வேரறுக்கப் போகிறோம்? பதிலளிக்கிறார் ராஜு !

க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி, ”அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

இம்மாநாட்டில் தலைமை உரையாற்றிய தோழர் ராஜு பேசுகையில், “ இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் போலீசு இழுத்தடித்தது. மாநாட்டுக்கு பிரச்சாரம் செய்து நோட்டீசு வழங்கிய தோழர்களைக் கைது செய்தது போலீசு. காரணம் கேட்டபோது, அனுமதியின்றி நோட்டீசு கொடுத்தது தவறு என்று கூறியிருக்கிறது. நோட்டீசு கொடுக்க அனுமதி கேட்க வேண்டிய இந்த நிலையைத் தான் பாசிசம் என்கிறோம்.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிறது இந்த கார்ப்பரேட் எடுபிடி அரசு. எதிர்த்துப் போராடுபவர்களைக் கைது செய்கிறது. நமது உரிமைகளைக் காக்க கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரறுக்க மக்கள் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடுவதே தீர்வு.. ” என்றார். முழுமையான உரையைக் காண :

யூ-டியூப்:

முகநூல்:

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க