23.02.2023

உளவாளி ரவியின் திமிர் பேச்சை மக்கள் அதிகாரம்
வன்மையாக கண்டிக்கின்றது!

பத்திரிகை செய்தி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்தியாயா எழுதிய இரண்டு புத்தகங்களின் தமிழாக்கமான சிந்தனை சிதறல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய புத்தகங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு என்பது கண்டத்திற்குரியதாக மாறியுள்ளது.

இறையியல், டார்வினிய கோட்பாடு, கார்ல் மார்க்ஸ் கோட்பாடு மற்றும் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு மேற்கத்திய சித்தாந்தங்கள் என்று பேசியுள்ளார்.

”காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இன்று புறந்தள்ளப்பட்டுள்ளது என்றும் நம் நாட்டில் சிந்தனையாளர்களே இல்லாதது போல பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள்” என்ற அரிய கருத்தை உதிர்த்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார பெருமந்தம் நெருக்கடியின் போது அனைவரும் கார்ஸ் மார்க்ஸின் மூலதனம் படித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆளுநர் அவர்கள் அறியாததது ஏனோ?

ஆர்.எஸ்.எஸ் யின் சனாதன சித்தாந்தம் என்பது தான் தர்மம் என பேசுகிறார். பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! – என்ற கேடுகெட்ட சித்தாந்தம் தான் இவர்களின் சனாதன தர்மம். மனிதர்களை உயர்வானவர்கள் தாழ்வானவர்கள் என்ற கேடுகெட்ட சித்தாந்தம் உங்களுடையது? ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மை மக்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார விடுதலையை சாதிக்கும் சிந்தாந்தம் எங்களுடைய கம்யூனிச சித்தாந்தம். சுவஸ்திக்கும் மார்பில் கை வைத்து வனங்கும் முறை நாஜி ஹிட்லரிடமிருந்து பின் பற்றுவது. ஆர்.எஸ்.எஸ் யின் சாகா முறை என்பதே இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியிடமிருந்து கற்று கொண்டது. ஹிட்லர், முசோலினியின் பாசிச வாரிசுகள் மேற்கத்திய கலாச்சாரம் குறித்து பேசலாமா?


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என்கிறார். யாருடைய இந்தியா? அம்பானி, அதானியின் இந்தியாவா? ஏழை, நடுத்தர பெரும்பான்மை உழைக்கும் மக்களின் இந்தியாவா என்பதே நம்முடைய கேள்வி? அதானிக்கு நாட்டையே விற்று கொண்டிருக்கும் மோடியின் இந்தியாவை நாடே காறி உமிழ்ந்து கொண்டிருக்கும் போது? முன்னேறுகிறது என பிதற்றுகிறார் ஆளுநர். மோடி தான் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லவில்லை? ஆளுநர் சொல்லலாமே.

பெண்களுக்கு சம உரிமை, அனைவருக்கும் வீடு, கல்வி, விஞ்ஞான வளர்ச்சி என ரசியாவிலும், சீனாவிலும் சோசலிச மக்கள் படைத்த சாதனைகள் ஏராளம்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராடும் போது இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் ஆங்கிலேயர்களிடம் காலில் விழுந்து கிடந்தது. ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர் தான் இவர்களின் நிறுவனர் சாவர்க்கர். இப்படிப்பட்ட கேடுக்கெட்ட வரலாற்றை வைத்து கொண்டு ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் ரவி அவர்கள் இந்தியாவின் வரலாறு குறித்து கூசாமல் பேசுவது தான் நமக்கு வியப்பளிக்கிறது.

நீட் தேர்வு ரத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட 21 மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் கிடப்பில் போடுவது என தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கும் ஆர்.எஸ்.எஸ் ரவி, தமிழ்நாடு என்று சொல்ல கூடாது, தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக திமிர்த்தனமாக பேசி வருகிறார்.

ஆளுநர் தன்னை ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் என்று அறிவித்து கொண்டு பேசலாம். தமிழ்நாட்டின் ஆளுநர் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சார வேலை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். இது வன்மையான கண்டனத்திற்குரியது என மக்கள் அதிகாரம் தெரிவித்து கொள்கிறது.

தோழர் அமிர்தா,
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்
9176801656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க