2024 நாடாளுமன்றத் தேர்தல்:
வேண்டாம் BJP, வேண்டும் ஜனநாயகம்!
கோடி மக்களிடம் கொண்டுசெல்வோம்!
தமிழ்நாடு தழுவிய
இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்
“1000 தெருமுனைப் பிரச்சாரங்கள்”
“100 தெருமுனைக் கூட்டங்கள்”
000
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் ஒன்பதரை ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புகிறோம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக்கிவிடும்; ஆகவே மீண்டும் மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதுகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறதென்றாலும், தேர்தல் பிரச்சாரங்கள் – விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.
இந்நிலையில், இந்த விவாதங்களில் “பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடலாம்” என்பதைவிட, “ஏன் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்களோ அவை விவாதப் பொருளாக்கப்பட வேண்டும்” என்று நாங்கள் கருதுகின்றோம்.
இந்த ஒன்பதரை ஆண்டுகளில் பா.ஜ.க. மேற்கொண்டுவந்துள்ள பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்கள், திட்டங்கள், நடவடிக்கைகள் ஆகியவை முறியடிக்கப்பட வேண்டும்; மக்களின் குறைந்தபட்ச ஜனநாயகப்பூர்வமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
“வேண்டாம் பிஜேபி” என்பதற்கான பொருள், தேர்தலில் பிஜேபி வேட்பாளர்களை தோற்கடிப்பது மட்டுமல்ல, கீழே கொடுக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவாதமும்தான். இவை உத்தரவாதப்படுத்தும்போதுதான், பிஜேபியை தோற்கடிப்பதற்கு பொருள் இருக்கும்.
மக்கள் கோரிக்கைகள்
- நீட், கியூட், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்!
- ஜி.எஸ்.டி. வரி முறையை ரத்து செய்!
- சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.ஐ ரத்துசெய்! பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்காதே!
- ஊபா போன்ற கருப்புச் சட்டங்களை ரத்துசெய்! என்.ஐ.ஏ.வை கலைத்திடு! ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்! சமூகசெயல்பாட்டாளர்கள், இசுலாமியர்கள், ஈழத் தமிழ் போராளிகள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்!
- அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!
- இசுலாமியர்கள், கிருத்துவர்கள், தலித்துகள், பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்து!
- ஈழத் தமிழ் அகதிகளை அகதி முகாம்களில் இருந்து விடுதலை செய்! குடியுரிமை வழங்கு!
- சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் மீதான கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தை தடை செய்!
- மீத்தேன், பரந்தூர் விமான நிலையம், எண்ணூர் துறைமுகம், சாகர்மாலா, பாரத்மாலா… கடல் வளத்தையும் இயற்கை வளங்களையும் சூறையாடும், விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை திரும்பப் பெறு!
- ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டம் இயற்று!
- டாஸ்மாக்கை மூடு!
- ஆளுநர் முறையை ரத்துசெய்!
- அமலாக்கத்துறையை கலைத்திடு!
- விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைத் திணிக்காதே! மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடைசெய்! விளைபொருட்களுக்கு விலைநிர்ணயம் செய்யும் அதிகாரம் விவசாயிகளுக்கே!
- தொழிலாளி வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக்கும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்துசெய்!
- தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை, எட்டுமணிநேர வேலைமுறையை நிலைநாட்டு! ஒப்பந்த பணி முறையை ஒழித்துக்கட்டு!
- வங்கிகள், இரயில்வே, எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறைகளில் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்து!
- சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்து!
- இந்தியைத் திணிக்காதே! அனைத்து மொழிகளையும் சமத்துவமாக நடத்து!
- காஷ்மீருக்கான சிறப்புரிமையை அங்கீகரி!
- அனைத்து தேசிய இனங்களும் பிரிந்துசெல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவோம்! தன் விருப்பத்தின் அடிப்படையில் தேசிய இனங்கள் இணைந்த இந்திய நாட்டை கட்டியமைப்போம்!
- அமெரிக்காவுடனான குவாட் இராணுவக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறு! போர் வெறிப் பிடித்த ஆயுதக் குவிப்பை நிறுத்து!
000
- பாசிசப் படையின் கொல்லைப்புற வழிகளான அ.தி.மு.க., கமலஹாசன், குமாரசாமி, மாயாவதி போன்றவர்களை விரட்டியடிப்போம்!
- ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஐந்தாம்படையான சீமான், பா.ம.க., புதிய தமிழகம், ஓவைசி போன்ற சாதிவெறி, இனவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம்!
- ஆர்.எஸ்.எஸ்.யையும் அதன் பரிவாரக் கும்பல்களான பா.ஜ.க, பசுப் பாதுகாப்புப் படை, பஜ்ரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி. போன்ற பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!
- அம்பானி, அதானி, அகர்வால் போன்ற மார்வாடி, குஜராத்தி, பார்ப்பன, பனியா கார்ப்பரேட் கும்பல்களின் சொத்துக்களைப் பறிமுதல்செய்!
000
பா.ஜ.க. மற்ற கட்சிகளைப் போல ஒரு சராசரி அரசியல் கட்சி அல்ல, பார்ப்பன-இந்துமதவெறி பாசிசத்தை சித்தாந்தமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-இன் தேர்தல் கட்சி. நமது நாட்டின் போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊடுருவி கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. என்ற கட்சியை தேர்தல் வீழ்த்தலாம். ஆனால், பாசிசத்தை தேர்தலில் வீழ்த்த முடியாது. ஒரு மாற்று அரசியல் திட்டம்தான் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தை வேரடி மண்ணோடு வீழ்த்தும். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றே அத்தகைய மாற்றாக இருக்க முடியும்.
- பாசிஸ்டுகளுக்கு சுதந்திரம் வழங்குகின்ற அரசியலமைப்பு சட்டம் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியாது!
- மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற, பாசிச சக்திகள் மீண்டெழுவதைத் தடுக்கின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசியலமைப்புக்கான மக்கள் எழுச்சியை கட்டியமைப்போம்!
- தற்போதுள்ள இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சட்டம் இயற்றவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஒருங்கே அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்பை உருவாக்க வேண்டும்! தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பிப் பெறும் உரிமை மக்களுக்கு வேண்டும்!
- இந்துராஷ்டிரத்தைத் தகர்த்து, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதே தீர்வு!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
9791653200, 9444836642, 7397404242, 9962366321