மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் போலியானவை என்றும் அதில் டால்கம் பவுடர் (முகப் பவுடர்), ஸ்டார்ச் போன்றவை கலக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாக்கியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மருந்து ஆய்வாளர் நிதின் பந்தர்கர் அரசு மருத்துவமனை ஒன்றில் வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து உண்மையில் மருந்தேயில்லை என்றும் அது முகப்பவுடர்தான் என்றும் கண்டறிந்த பிறகுதான் மிகப்பெரிய மருத்துவ மோசடியே வெளிச்சத்திற்கு வந்தது.
2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ மாஃபியா கும்பலானது போலி மருந்துகளைத் தயாரித்து அரசு மருத்துவமனைகளில் வழங்கி வந்துள்ளது. பொதுவாக சிப்ரோக்ப்ளோக்சசின், லிவோக்ப்ளோக்சசின், அமோக்ஸசிலின் போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் போலியாகத் தயாரித்துச் செயல்படாத நிறுவனங்களின் பெயரில் வழங்கி வந்துள்ளது.
இப்போலி மருந்துகள் ஹரித்துவாரில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு மாஃபியா கும்பல்களால் ஹவாலா பணப் பரிவர்த்தனை முறையில் விற்பனை செய்து வந்துள்ளது என்பது தற்போது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
மேலும் இந்த கலப்பட மருந்துகள் மூலம் மாஃபியா கும்பல் 15 முதல் 16 கோடி வரை சம்பாதித்துள்ளதாகவும் மகாராஷ்டிராவில் நாக்பூர், தானே,வார்தா, லத்தூர் நாந்தெட் ஆகிய பகுதிகள் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
படிக்க: உ. பி: பள்ளியின் வளர்ச்சிக்காக நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்
கடந்த மாதம் இதேபோன்று போலியான மருந்துகளை விநியோகிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது கலப்பட மருந்துகளை விநியோகம் செய்ததற்காக நாக்பூர் நீதிமன்றத்தில் 1200 பக்க குற்றப்பத்திரிக்கை போலிசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது மிகப்பெரிய மோசடி சங்கிலியாக இருப்பதாகவும் பல்வேறு நகரங்கள் வழியாக ஹவாலா முறையில் பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எடுக்கும் ஹேமந்த் முலே முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் மக்கள் உயிரைப் பாதிக்கும் வகையில் ஆன்டிபயாடிக் மருந்துகளில் கலப்படம் நடந்துள்ளது. சாதாரண அடித்தட்டு ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்துகளையே மருத்துவத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.
மருந்துப்பொருட்களில் கலப்படம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மாஃபியா கும்பல்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இது நடந்திருக்காது.
எனவே ஊழல் செய்யாத கட்சி நாங்கள்தான் என்று பாசிசக் கும்பல் கூறிக்கொள்கிறது. இதைப்போன்ற மிகப்பெரிய மருத்துவ ஊழலில் ஈடுபட்டுள்ளதன் மூலம், பாசிசக் கும்பல்தான் ஊழலில் முதலிடம் என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram