குஜராத்: சாதிய வன்கொடுமையால் எய்ம்ஸ் மாணவர் தற்கொலை!
குஜராத்தின் ராஜ்கோட் எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்துவந்த ரத்தன் குமார் மேக்வால் (26) எனும் தலித் மாணவர் சக மாணவர்களின் சாதிய வன்கொடுமையால் மார்ச் 14 அன்று இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரத்தன் தனது தற்கொலைக் கடிதத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாக ஐந்து சக மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாகச் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாகிவந்த ரத்தன் இதே மாணவர்களின் பெயரை எழுதிவைத்துவிட்டு ஜனவரி 28, 2026 அன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், போலீசும் எய்ம்ஸ் நிர்வாகமும் ரத்தன் மீதான சாதிய வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அவரை நிறுவனப் படுகொலை செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











