ஆதித்யநாத் மீதான புகாரை அம்பலப்படுத்திய 3 பத்திரிகையாளர்கள் கைது !
“இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது”
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
காங்கிரசு மற்றும் பிற மாநிலக் கட்சிகளை ‘குடும்ப கம்பேனிகள்’ எனக் குற்றம் சுமத்தும் பாஜக, தனது வேட்பாளர்களில் ஐந்தில் ஒருவரை அரசியல் வாரிசுகளாக பார்த்துக் களமிறக்கியிருக்கிறது.
போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !
மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவதற்கான முக்கிய தகுதியாக உள்ள போலி சான்றிதழ் சர்ச்சையில் ரமேஷ் பொக்கிரியாலும் சிக்கியிருக்கிறார்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
வன்முறை அல்லது அச்சுறுத்தல் என்கிற ஆயுதமே பெண்களை அதே இடத்தில் இறுத்தி வைக்கின்றன. குடும்பங்களுக்குள் பழக்கப்படுத்தப்பட்ட வன்முறை ஆண்களின் குணமாகவே உள்ளது.
கேரள நடிகர் விநாயகனை சாதியரீதியாக தாக்கும் காவிக் கும்பல் !
மோடியின் படத்தையும், ஆர்.எஸ்.எஸ். சின்னங்களையும் முகப்புப் படமாக வைத்திருக்கும் காவி ட்ரோல்கள். இவர்களுக்கே உரிய பாணியில் நடிகர் விநாயகனின் நிறத்தை வைத்தும், சாதி ரீதியாகவும் தாக்கத் தொடங்கினர்.
இன்றைய ஒரு வரிச் செய்திகள் – 06/06/2019
நீட் தற்கொலைகள் ... பா.ஜ.க.விடம் பிச்சையெடுக்கும் அ.தி.மு.க. அரசு ... பதவி நீட்டிப்பை பெறும் கிரிஜா வைத்தியநாதன்... இன்னும் பல செய்திகளும் பார்வையும் ..
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
கை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.
மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !
நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது
பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !
ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது ‘எளிய மனிதர்’ சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்.
“The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !
ரக்பர் கானின் படுகொலை மூலம் இனி சட்டம் - சமூக ஒழுங்கு அல்லது பரந்துப்பட்ட மக்களின் மனசாட்சி உள்ளிட்டவை, இனிமேலும் முஸ்லீம் மக்களுக்கு அடைக்கலம் அளிக்காது..! என நிரூபிக்கப்பட்டுள்ளது.
100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
“நாம் வங்கிகளிலிருந்து தொடங்க வேண்டும். நூறு நாட்களில் பெரிய விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான தயாரிப்பில் இருக்கிறோம்... " என்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்
கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !
இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !
ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !
இந்த தொழிலை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்

























