அதானிக்கும் செபிக்கும் உள்ள உறவு: நடப்பது அம்பானி-அதானிகளின் கும்பலாட்சி என்பதற்கான நிரூபணம்!
தனியார் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணியாற்றிய மாதபி செபியில் பணியமர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே செபியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அம்பானி-அதானி கும்பலின் நலனுக்காகத்தான்.
மத்தியப் பிரதேசம்: காவிகளின் கலவர நோக்கத்தை மறுத்ததால் போலீசு அதிகாரி பணியிட மாற்றம்
மோச்சிபுரா பகுதிக்குள் ஊர்வலம் சென்ற போது முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை வீசியதாகக் கூறி அப்பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது காவிக் கும்பல்.
புதுடெல்லி: குந்த குடிசை இல்லாதோரின் தலைநகரம்
ஏழை மக்களின் குடிசைப்புறக் குடியிருப்புகள் பலவற்றை கார்ப்பரேட் தேவைகளுக்காக அரசே இடித்துத்தள்ளி அகற்றிவிட்டு அம்மக்களுக்கு மாற்று குடியிருப்புக்கு வழி சொல்லாமல் நிற்கதியாக விரட்டிவிட்டுள்ளது.
லாபத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிய “ஃபோர்டு” நிறுவனத்திற்கு சிவப்பு கம்பள அழைப்பு
ஃபோர்டு நிறுவனம் நட்டம் எனக் கணக்குக்காட்டி, முடிந்த அளவிற்குத் தொழிலாளர்களை மிரட்டி, கட்டற்ற சுரண்டலை மேற்கொண்டதோடு, கடைசியில் நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூடிவிட்டு தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டது.
மணிப்பூர்: வன்முறையைத் தீவிரப்படுத்த ஆயத்தமாகும் காவிக் கும்பல்
மணிப்பூர் போலீசு ஜபல்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையிலிருந்து 7.62 மி.மீ. எம்.எம்.ஜி. (Medium Machine Guns) வாங்கியுள்ளதாகவும் அவற்றைப் பயன்படுத்த 21 நாள் பயிற்சி அளிக்குமாறு இந்திய இராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் போன்ற நாட்டின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்திக் கொண்டு காவிக் குண்டர்கள் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்
"இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். சட்டத்துறை சார்ந்தவர்கள் எங்கள் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் எங்களது நிகழ்ச்சிநிரல்களை சட்டப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய பங்காற்றுகிறது” என்று வி.ஹெச்.பியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பல்லிளிக்கும் பா.ஜ.க-வின் நெருக்கடி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 19 தொகுதிகளை பா.ஜ.க. புறக்கணித்திருப்பதானது அமித்ஷா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அளவிற்குப் பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளதையே காட்டுகிறது.
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் 2 | கோவை
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 22.09.2024 | நேரம் : காலை 10 மணி | இடம் : சேரன் மஹால் (ஈஸ்வரியம்மாள் பேலஸ்) பங்களா மேடு, மேட்டுப்பாளையம், கோவை.
இலங்கை அரசுடனும் தமிழ்நாடு போலீசுடனும் போராடும் மீனவர்கள்
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, இலங்கை கடற்படையால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது.
நமீபியா: மக்களின் பட்டினியைப் போக்க காட்டு விலங்குகளை அரசே கொல்லும் அவலம்!
ஜாம்பியா, ஜிம்பாப்வே, அங்கோலா, லெசாத்தோ, மாலாவி, போட்சுவானா, மொசாம்பிக், தெற்கு சூடான் என்று தெற்கு ஆப்பிரிக்காவில் பூமத்திய ரேகையை ஒட்டியும் அதன் தெற்கிலும் உள்ள பல நாடுகளிலும் நிலைமை இதுவாகத்தான் உள்ளது.
“அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்
விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது. அங்கு போராடும் மக்கள் “அதானியே வெளியேறு” என்று முழக்கங்களை எழுப்பினர்.
காசா: ‘பாதுகாப்பு’ வளையப் பகுதியிலும் கொடூரத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேலின் குண்டு வீச்சால் கிட்டத்தட்ட 50 அடி அகலத்திற்கு பெரும் பள்ளங்கள் உருவாகியிருப்பதும், மக்களின் கூடாரங்கள், உடைமைகள் அழிக்கப்பட்டிருப்பதும் புகைப்படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு. வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி!
சுதேசி பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்நிய மூலதனம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர்.
சங்கம் அமைப்பதைத் தடுக்கும் சாம்சங் இந்தியா: காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் துவக்கிய தொழிலாளர்கள்
தொழிற்சங்கத்தைப் பதிவுக்கு அனுப்பினால், அதில் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளிலும் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.