எண்ணூர்: முருகப்பா – கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட போராடிவரும் மக்களுடன் கரம்கோர்ப்போம்!
மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் திமுக அரசு முருகப்பா-கோரமண்டல் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது.
லடாக் பிராந்தியத்தை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்
மத்திய அரசின் குழு எவ்வளவு தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்த போதிலும், இந்த நான்கு அம்ச கோரிக்கைகளில் போராடும் இயக்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.
ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!
ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார்.
வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!
அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இம்ரான்கானுக்கு சிறைத்தண்டனை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்ததுதான் குற்றமாம்!
தற்போது ஆட்சியில் இருக்கும் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான கும்பலும் அமெரிக்க அடிவருடியாக இருக்கும் வரை தான் ஆட்சியில் நீடிக்க முடியும்.
ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ₹17,000 சம்பளமாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களில் பலர் நன்றாகப் படிக்காதவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அடிக்கடி வருவதில்லை, விடுப்பு எடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் மாதச் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் குறைத்து வழங்குகிறது
ராமர் கோயிலை விமர்சித்தவர்கள் கைது: மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறை!
ஜனவரி 22 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களும் கண்காணிக்கப்படும் என்றும், ராமர் கோவில் குறித்து தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு: அம்பலமான மோடி அரசின் சதி
2015-ஆம் ஆண்டின் பட்ஜெட் இரண்டு நாட்களில் எழுதப்பட்டது என்பதை சுப்பிரமணியம் கூறுகிறார். நிதி ஆணையத்திடம் புறவாசல் பேரம் படியாததால், குறைந்த காலக்கெடுவிற்குள் பட்ஜெட்டை தனக்கு சாதகமாக எழுதியது மோடி கும்பல்.
மத்திய பிரதேசம்: சிலுவையில் காவிக் கொடி ஏற்றிய காவி பயங்கரவாதிகள்
காவிக் கொடியை ஏற்ற அனுமதிக்காவிட்டால் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி பொய் வழக்கு பதிவுசெய்ய வைத்து அரசு சலுகைகள் அனைத்தையும் பறித்து விடுவோம் என்று காவி பயங்கரவாதிகள் பாதிரியார்களை அச்சுறுத்தியுள்ளனர்.
என்னை போன்ற முஸ்லிம்களுக்கு ராமன் கோவில் சொல்லும் செய்தி! | ஸியாவுஸ் சலாம்
சமீப காலமாக, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் முஸ்லிம்களிடையே புதிய பயம் தொற்றியுள்ளது. எங்கும் காவியில் அலையும் ராம பத்கர்களின் முகங்களில் ஆவேசமும் காணக்கிடக்கிறது.
மதவெறியின் உச்சம்: ராமன் கோவில் திறப்புக்காக மூடப்படும் மருத்துவமனைகள்
மருத்துவமனைகள் மூடப்படுவதால் டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் மட்டும் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் 32,000 நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என “தி வயர்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை
1940-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது
ராமன் கோவில் திறப்பு: பாபர் மசூதி இடிப்பை நினைவுகூரும் முஸ்லீம்கள்!
அயோத்தியில் தற்போது வசித்துவரும் முஸ்லிம் மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களின் அனுபவங்கள் வாயிலாகக் காண்போம்.
உழைக்கும் மக்களை அழித்து ராமன் கோயில் திட்டம்!
முஸ்லிம்கள், இந்துக்கள் என பாரப்பட்சமில்லாமல் அனைத்து உழைக்கும் மக்களது வீடுகளும் வாழ்வாதாரமும் ராமன் கோயில் திட்டம் பெயரில் பறிக்கப்பட்டிருக்கிறது.
ராமர் கோவிலும் உ.பி. உழைக்கும் மக்களும்
ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் இதே உத்தரபிரதேச மாநிலத்தின் உழைக்கும் மக்கள், பெண்களின் நிலை என்ன என்பதற்கு சில சான்றுகள்