குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
”சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று கருதி பாஜகவுக்கு ஆதரவாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது. பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்"
வீ – அலைக்கற்றை (V – Band) முறைகேடு !
தொலைத் தொடர்புத்துறை 2015 -ம் ஆண்டு உரிமம் இல்லாமல் அலைக்கற்றை வழங்குதல் தொடர்பாக ஒரு பரிந்துரையை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) கேட்டிருந்தது. அனால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலையே ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருந்தது.
மோடி ஆட்சியில் வளர்ந்த ஒரே துறை தனியார் மருத்துவம் !
இந்தியாவில் உள்நோயாளிக்கான சராசரி செலவு 18,268/- ரூபாய் என்கிறது தே.மா.ஆ அலுவலகத்தின் 2014 -ம் ஆண்டு ஆய்வறிக்கை. ஆயினும் கிராமம் - நகரம் மற்றும் அரசு - தனியார் என்று பகுத்து பார்க்கும் போது அதில் பாரிய வேறுபாட்டை நாம் காணலாம்.
சத்தியபாமா பல்கலை ராகமோனிகா தற்கொலை ! நிர்வாகத்தை எதிர்த்து மாணவர் கலகம் !
ஊரைஅடித்து உலையில் போட்ட கொலைகார கிரிமினர் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்கு ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்தது.
ஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !
காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும் படியும் இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களை வஞ்சித்து வருகிறது.
சிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை !
வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் மேல் இருக்கும் பாசம் மற்றும் நோய்களைக் குறித்து இருக்கும் அறைகுறைப் புரிதலை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்வதையே கார்ப்பரேட் மருத்துவமனைகள் செய்கின்றன.
பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர் ராஜ் வரை – வளர்ச்சி உருவாக்கும் சமூக ஏற்றத்தாழ்வு !
ஒருபுறம் சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வு இன்னொருபுறம் பொருளாதார (வர்க்க) ஏற்றத்தாழ்வு என்ற இரண்டு நுகத்தடிகளை இந்திய உழைக்கும் மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஏர் – இந்தியா : மகாராஜா விற்பனைக்கு !
பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட ஏர் இந்தியாவை விற்பதற்கு எந்தவிதமான சர்வதேச டெண்டரும் கோராமல், தாம்பாளத்தில் வைத்து டாடாவிடம் தூக்கிக் கொடுக்க மோடி அரசு முயலுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
அரசு மருத்துவமனைகள் விற்பனைக்கு… மோடியின் அடுத்த தாக்குதல் !
இந்தியாவெங்கிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மோடி அரசின் முடிவு, ஒட்டகம் கூடாரத்தினுள் மூக்கை நுழைத்த கதையாகவே முடியும்.
நெய்வேலி சுரங்கத்தை விற்றுத் தின்ன காத்திருக்கும் மத்திய அரசு !
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகையில் 73% முதலாளிகளிடமிருந்து வசூலிக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து தரும் இந்த அரசு, என்.எல்.சி. -யின் 15% பங்குகளை வெறும் ரூ.2,500 கோடியை திரட்டுவதற்காக தனியாரிடம் விற்கத் துடித்துக்கொண்டிருக்கிறது.
அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !
குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை, இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளை உளவியல்ரீதியாகக் கொல்லும்.
சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !
மரபீனி மாற்ற உணவுப்பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் அல்லது முறையான ஆய்வுக்குட்படுத்தி லேபிள் ஓட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அருணா ரோட்ரிகஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.
இந்தியாவில் இலவச மருத்துவம் ஒரு ஏமாற்று – ஆதாரங்கள் !
உடல்நலன் தொடர்பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வாடும் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?
படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.
ஜார்கண்ட் : ஆதாரை இணைக்கவில்லை என்றால் மரணம் !
பள்ளியில் கொடுக்கப்படும் ஒரு நேர மதிய உணவு, சிறுமி சந்தோஷிகுமாரியின் பசியை ஆற்றி வந்தது. தசராவை ஒட்டி, பள்ளியும் விடுமுறை விடப்பட்டதால் சுமார் 7 நாட்களுக்கு ஒருவேளை உணவும் கிடைக்காமல் பசியால் சுருண்ட சிறுமி சந்தோஷிகுமாரி, கடந்த செப்டம்பர் 28, 2017 அன்று பட்டினியால் இறந்து போனாள்.