Wednesday, June 17, 2026
இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிகளுக்குத்தான் 'இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும்' என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது.
தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி வரும் ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தவிருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்.
அதிரடியாகவும் முன் அனுமதி பெறாமலும் பெ.வி.மு. தோழர்கள் நடத்திய இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தால், அரசியல் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து அங்குதான் நடத்திக்கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கும் போலீசின் முகம், கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது!
ஈழ இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசை எதிர்த்து ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரிபவனை முற்றுகையிடும் போராட்டம்.
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம்.
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு.
ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி 21.03.2013 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் சாலைமறியல் போராட்டங்களைப் பற்றிய விபரங்கள்.
இராஜபக்சேவை இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இந்திய இராணுவ மையத்தை பீரங்கிக் குண்டுகளாய் துளைத்தெடுத்தன.
அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது.
ஈழப்போரை முன்னின்று நடத்திய, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் கூட்டாளியாக செயல்படுகின்ற காங்கிரசு கட்சிக்கு, மாணவர் போராட்டத்தை விமர்சிக்கவோ எதிர்க்கவோ அருகதையில்லை.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தொடர் நடவடிக்கையாக, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து, 20.03.2013 புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், பரங்கிமலையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளது.

அண்மை பதிவுகள்