Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 239

‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் அளவிற்குச் சுருங்கிப் போன வருடத்தில், புலம் பெயர் தொழிலாளர்கள் தமது கிராமங்களுக்கு மீண்டும் திரும்பக் கூடிய கெடுவாய்ப்பை நாம் எதிர்பார்த்திருக்கும் நிலையில், விவசாயிகள் செவிமடுக்கப்படாமல் டெல்லி வாயிலில் காத்திருக்கும் நிலையில் இந்தியக் கோடீசுவரர்கள் சாதனை படைக்கும் செல்வ வளத்தை அடைந்துள்ளனர்.

– பி.சாய்நாத்

***

ஃபோர்பஸ் இதழ் 2021-இல் வெளியிட்டுள்ள பட்டியலை நம்பினோம் எனில், (கோடீசுவரர்கள் மற்றும் அவர்களது செல்வ வளம் குறித்து அறிய ஃபோர்பஸ் இதழ்தான் அதிக நம்பிக்கைக்கு உரியது) இந்தியக் கோடீசுவரர்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு மாதங்களில் 102-லிருந்து 140-ஆகப் பெருத்திருக்கிறது. அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, கிட்டத்தட்ட இருமடங்காகியிருக்கிறது எனக் கூறுகிறது, அவ்விதழ்.

படிக்க :
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

இதன் பொருள் என்னவெனில், இந்த 140 தனிநபர்களின் அல்லது மக்கள் தொகையில் 0.000014 சதவீதமே உள்ள இவர்களின் திரண்ட (சொத்து) மதிப்பு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூ.2,62,000 கோடி அமெரிக்க டாலர்களில் 22.7 சதவீதத்திற்குச் (அல்லது ஐந்தில் ஒரு பங்கிற்கும் கூடுதலானது) சமமாகும்; வழமையாக அவர்கள் செய்கிறபடி, (இந்த 140 பேர் தவிர) மற்ற அனைவரும் சேர்ந்தது தான் “மொத்த” என்பதாகும். 

பெரிய இந்திய தினசரிகளுள் அநேகமானவை, ஃபோர்பஸின் இந்த அறிவிப்பை, தவறான வழியில் குவிக்கப்பட்ட செல்வம் குறித்துக் குறிசொல்லும் சாமியாடி மிகவும் வெளிப்படையாக, நாணயமாகக் குறிப்பிட்டதையெல்லாம் தவிர்த்து விட்டு, இத்தகைய சாதனைகளை அங்கீகரிப்பதற்கென்றே அவைகள் சேமித்து வைத்திருக்கும் மொழியில் வெளியிட்டுள்ளன.

“இந்தியாவெங்கும் மற்றொரு கோவிட்-19 அலை வீசிக் கொண்டிருப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனாலும், நாட்டின் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொடும் வகையில் இந்த பெருந்தொற்றுப் பீதியை ஒதுக்கித் தள்ளியிருக்கிறது. பங்குச் சந்தைக் குறியீட்டுஎண் கடந்த ஆண்டை விட 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 102-லிருந்து 140-ஆக உயர்ந்திருப்பதோடு, அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது” என இந்த நாடு குறித்த தனது செய்தி அறிக்கையின் முதல் பத்தியிலேயே குறிப்பிட்டிருக்கிறது ஃபோர்பஸ்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் சுருங்கிப் போன அதேவருடத்தில் இந்தச் செல்வாக்குமிக்க 140 பெருந்தனவந்தர்களின் சொத்து மதிப்பு வாயைப் பிளக்கும் அளவிற்கு 90.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தீவிர கவனத்துடன் கணக்கிட வேண்டிய அளவில் பெரும் எண்ணிக்கையிலும், சிதறுண்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை அலை அலையாக நகரங்களிலிருந்து தமது கிராமங்களை நோக்கித் திரும்பத் தொடங்கியிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சாதனைச் செய்தி வெளிவருகிறது.

இதன் விளைவாகத் தோன்றவுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எந்தவொரு நன்மையும் செய்யப் போவதில்லை. ஆயினும் கருணைமிக்க வகையில், நமது கோடீசுவரர்களையும் அதிகம் பாதிக்கப் போவதில்லை. அது குறித்த ஃபோர்பஸின் உறுதிமொழி நம்மிடம் உள்ளது.

மேலும், கோடீசுவரர்களின் செல்வ வளம் கோவிட்-19-னின் தர்க்க நியாயத்திற்குத் தலைகீழ் விகிதத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக (செல்வ வளம்) குவிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எவ்விதமானத் தீவிரப் பரவலின் தாக்கம் குறைகிறது.

“மிக உச்சத்தில் செல்வச் செழிப்பு ஆட்சி செலுத்துகிறது” எனக் கூறுகிறது, ஃபோர்பஸ்.

“மூன்று மிகப் பெரும் இந்தியக் கோடீசுவரர்கள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி அமெரிக்க டாலர்களுக்குச் சற்று அதிகமான சொத்தைத் தமக்குள் சேர்த்துக் கொண்டுள்ளனர்.” அந்த மூன்று கோடீசுவரர்களின் சொத்து மதிப்பானது – ரூ.15,350 கோடி அமெரிக்க டாலர்கள் – 140 கோடீசுவரர்களின் மொத்தச் சொத்து மதிப்பில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

உச்சத்திலுள்ள முதல் இரண்டு பேரின், அம்பானி (ரூ.8,450 கோடி அமெரிக்க டாலர்கள்) மற்றும் அதானி (ரூ.5,050 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகியோரின் சொத்து மதிப்பானது பஞ்சாப் (ரூ.8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) அல்லது அரியானா (ரூ.10,100 கோடி அமெரிக்க டாலர்கள்) மாநிலங்களின் மாநில மொத்த உற்பத்தி மதிப்பைவிட மிக அதிகமாகும்.

இந்தப் பெருந்தொற்று வருடத்தில், அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் ரூ.4,770 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.3,57,000 இலட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது. அதாவது, அவரது சொத்து மதிப்பு ஒவ்வொரு விநாடியும் சராசரியாக ரூ.1,13,000 என அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பு, ஆறு பஞ்சாப் விவசாயக் குடும்பங்களின் (சராசரியாக 5.24 நபர்களைக் கொண்ட குடும்பம்) மொத்த மாத வருவாயை விட (ஒரு குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.18,059) அதிகமாகும்.

அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்பிற்கு ஏறத்தாழ சமமாக உள்ளது. மேலும், இது மூன்று விவசாயச் சீர்த்திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய நிலை. அவை நடைமுறைக்கு வந்தால், இது மேலும் வீங்கவே செய்யும். இதனிடையே, ஒரு பஞ்சாப் விவசாயியின் தனிநபர் ஆண்டு வருமானம் வெறும் ரூ.3,450 தான் (தேசிய மாதிரி ஆய்வின் 70 ஆவது சுற்று) என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநேக தினசரிகளும் பி.டி.ஐ., அறிக்கையைத்தான் அப்படியே (அல்லது சற்று மாற்றி) வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையோ, ஃபோர்பஸ் இதழ் செய்ததைப் போல, எந்தவொரு இடத்திலும் ஒப்புமைப்படுத்தியோ அல்லது தொடர்புபடுத்தியோ தயாரிக்கப்படவில்லை. பி.டி.ஐ. அறிக்கையில் கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் அல்லது பெருந்தொற்று ஆகிய சொற்கள் இடம்பெறவே இல்லை.

இந்த அறிக்கை மட்டுமல்ல, வேறு எந்தவொரு அறிக்கையும், “பத்து இந்தியக் கோடீசுவரர்களுள் இரண்டு பேர் தமது செல்வ வளத்தை மருத்துவத் தொழிலில் இருந்துதான் (உலகெங்கிலும் பெருந்தொற்றைப் பயன்படுத்தி வளர்ச்சியடையும் துறை இதுதான்) பெறுகிறார்கள்” என ஃபோர்பஸ் இதழ் அழுத்திக் குறிப்பிட்டிருப்பதைப் போலக் குறிப்பிடவே இல்லை. 

மருத்துவத் துறை என்ற சொல் பி.டி.ஐ., அறிக்கை அல்லது அநேகமாக வேறெந்த அறிக்கையிலும் இடம் பெறவில்லை. எனினும், 140 இந்தியக் கோடீசுவரர்களுள் 24 பேரை மருத்துவத் துறையில் வைத்துக் குறிப்பிடுகிறது, ஃபோர்பஸ் இதழ்.

ஃபோர்பஸ் இதழ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மருத்துவத் துறை சார்ந்த 24 கோடீசுவரர்களுள், முதல் பத்து பேர் பெருந்தொற்று வருடத்தில் மட்டும் ரூ.2,490 கோடி அமெரிக்க டாலர்களை தமது சொத்தில் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.500 கோடி ரூபாய்) கூடுதலாகச் சேர்த்ததையடுத்து, அவர்களது மொத்தச் சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரித்து ரூ.5,830 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.4,30,000 கோடி) எட்டியது.

கோவிட்-19 பாரபட்சமற்றது எனக் கதைக்கப்பட்டதையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நமது “இந்தியாவில் தயாரிப்போம் – எங்காவது குவித்து வைப்போம்” கோடீசுவரர்கள் (மற்றைய உலகக் கோடீசுவரர்களுக்கு இணையாக) ஃபோர்பஸின் சிகரத்தில் இருக்கிறார்கள், அதன் உச்சியிலிருந்து வெறும் இரண்டு இடங்கள் தள்ளி. 140-க்குப் பின்னும் ஆட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்த இடத்தில் உலகிலேயே அதிகக் கோடீசுவரர்களைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கோடீசுவரர்களின் நாடாகத் தம்மைக் காட்டிக் கொண்ட ஜெர்மனியும், ரசியாவும் இந்தப் பட்டியலில் நம்மைப் பின்னுக்குத் தள்ளியகாலம் ஒன்றிருந்தது. ஆனால், இந்த வருட பட்டியலில் அவைகளின் இடம் எதுவெனக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் சொத்தின் கூட்டு மதிப்பான ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்கள் என்பது ஏறத்தாழ ரூ.44,50,000 கோடிக்குச் சமமாகும். இது 75 ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களின் மதிப்பிற்குச் சற்றுக் கூடுதலாகும். இந்தியாவில் செல்வ வரி கிடையாது. அப்படியான வரி இருந்து, அதிகம் உறுத்தாத வகையில் 10 சதவீத வரி விதித்தோம் எனில், ரூ.4,45,000 கோடி வரி வருமானம் ஈட்ட முடியும்.

இதனைக் கொண்டு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2021-22) மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.73,000 கோடி என்ற அதே அளவில், தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறு நடைமுறைப் படுத்தும் போது, ரூ.1,680 கோடி மனித உழைப்பு நாட்களை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குக் கிராமப்புறங்களில் உருவாக்கவும் முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மாநகரங்களையும் நகர்ப்புறங்களையும் விட்டு வெளியேறும் இரண்டாவது அலை எழுந்துள்ள நிலையில் – அவர்களது இத்துயரம் ஒரு சமூகம் என்ற வகையில் அவர்கள் நம்மை நம்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது – மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்சொன்னதைவிட அதிகப்படியான வேலைநாட்கள் நமக்குத் தேவைப்படுகிறது.

இந்த அதிசயத்தக்க 140 கோடீசுவரர்களும், தமது நண்பர்களிடமிருந்து சிறு சிறு உதவிகளையும் பெற்று வந்தனர். கடந்த இரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கண் மண் தெரியாத வேகத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரம்மாண்ட வரிக் குறைப்பு, ஆகஸ்டு 2019-லிருந்து இன்னும் வேகமெடுக்கும்படி முடுக்கிவிடப்பட்டது.

விவசாய விளைப் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையில் கூடுதலாக ஒரு பைசாகூட விவசாயிகளுக்காகச் சலுகை காட்டப்படவில்லை. தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வைப்பதற்கு வகை செய்யும் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. (சில மாநிலங்களில் இந்தக் கூடுதல் நான்கு மணி நேர உழைப்புக்குக் கூடுதல் கூலி கொடுப்பதும் மறுக்கப்பட்டது.) மேலும், முன்பைவிட அதிகமாக இயற்கை வளங்களும், பொதுச் சொத்தும் கார்ப்பரேட் பெருந்தனவந்தர்களுக்குக் கையளிக்கப்பட்டது – இவை அனைத்துமே பெருந்தொற்றுக் காலத்தில் நடந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பெருந்தொற்றுக் காலத்தில்தான், உணவுப் பொருள் சேமிப்பு ஒரு கட்டத்தில் ரூ.10.4 கோடி டன்னாக உயர்ந்தது. ஆனால், மக்களுக்கு இலவசமாகக் கிடைத்ததோ, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு மட்டுமே – அதுவும் ஆறு மாதங்களுக்கு. இந்த இலவசமும் கூட, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு மட்டும்தான்; அச்சட்டமோ தேவையுள்ள பெரும்பாலோரை ஒதுக்கி வைத்திருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பல பத்து இலட்சக்கணக்கான இந்தியர்கள் பட்டினி கிடக்க நேர்ந்த வருடத்தில்தான் இவையெல்லாம் நடந்தன.

ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு  முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.” இந்த 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலரில் இந்தியப் பெரும் கோடீசுவரர்களின் பங்கு கிட்டத்தட்ட 12 சதவீதமாகும். இது,  நமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஏற்றத் தாழ்வு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, மிகத் துரிதமாக வளர்ந்து வரும் வேளையில் நடந்திருக்கிறது.

வறுமையும் பெருந்துயரமும் அதிகரிக்கும் போதுதான், அதன் மீது சவாரி செய்த படியே செல்வக் குவிப்பும் அதிகரிக்கிறது. மேலும், இது பெருந்தொற்று பற்றிய விடயம் மட்டுமல்ல. பேரிடர்கள் வளமான வியாபாரமாகும். பலரின் துயரத்திலிருந்து பணத்தை ஈட்டுவது எப்பொழுதுமே நடைபெறுகிறது. ஃபோர்பஸ் நம்புவுதைப் போலன்றி, நமது ஆட்கள் பெருந்தொற்றுப் பீதியைக் கண்டு ஒதுங்கிப் போய்விடவில்லை.

அவர்கள் ஓங்கி அடித்த அந்த அலையில் மிகச் சிறப்பாகப் பயணித்துள்ளனர். உலகெங்கும் நிலவி வரும் பெருந்தொற்று பெருக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது மருத்துவத் துறையாகும் என்ற ஃபோர்பஸின் கூற்று சரியானதுதான். எனினும், திடீர் பேரழிவுகளைப் பொருத்து மற்ற துறைகளிலும் இத்தகைய வளர்ச்சியும் குவிப்பும் நிகழக் கூடும்.

டிசம்பர் 2004-இல் சுனாமி பேரழிவு ஏற்பட்ட ஒரே வாரத்திற்குள்ளாக, உலகெங்கிலும், குறிப்பாக, சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் கூட பங்குச் சந்தை வளர்ச்சியைக் காண முடிந்தது. பல இலட்சக்கணக்கான வீடுகளும், படகுகளும், ஏழைகளின் அனைத்து விதமான சொத்துக்களும் அழிக்கப்பட்டிருந்தன.

சுனாமிக்கு இலட்சம் உயிர்களுக்கும் மேலாகப் பலி கொடுத்த இந்தோனேஷியாவில், ஜகர்தா பங்குச் சந்தை குறியீடு, அதனின் முந்தைய சாதனைகளை முறியடித்து, அதுவரையில்லாத உச்சத்தைத் தொட்டது. நமது பங்குச் சந்தைக் குறியீடும் அது போலவே. அச்சமயத்தில், மறுகட்டுமானத்திற்கான டாலர்கள், ரூபாய்கள் குறித்த முன்னுணர்வுதான் கட்டுமானம் மற்றும் அதோடு தொடர்புடைய துறைகளின் பிரம்மாண்ட வளர்ச்சியை இயக்கியது.

இச்சமயத்தில், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் (குறிப்பாக, மென்பொருள் சேவைத் துறை) உள்ளிட்டவைதான் நன்றாகச் செயல்பட்டன. ஃபோர்பஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் பத்து தொழில் நுட்ட ஜாம்பவான்கள், பன்னிரெண்டே மாதங்களில் தமது சொத்து மதிப்பில் கூடுதலாக ரூ.2,280 கோடி அமெரிக்க டாலர்களைச் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.460 கோடி ரூபாய்) சேர்த்துக் கொண்டதையடுத்து, அவர்களது ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு ரூ.5,240 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.3,90,000 கோடி) எட்டியது. இது 77 சதவீத உயர்வாகும்.

மேலும், இணையவழிக் கல்விச் சேவையும் – பெரும்பாலும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கான மாணவர்கள், எவ்விதக் கல்வி வாய்ப்பும் இன்றி ஒதுக்கப்பட்ட நிலையில் –  சிலருக்குப் பலன்களை அளித்தது. பைஜு ரவீந்தரன், தனது சொத்து மதிப்பை 39 சதவீதம் அதிகரித்து, ரூ.250 கோடி அமெரிக்க டாலர் (ரூ.18,700 கோடி) பெறுமான சொத்தை அடைந்தார்.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

நாம் உலகின் பிற நாடுகளுக்கு அவர்களது இடத்தைக் காட்டிவிட்டோம் எனக் கூறுவது நாணயமாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஐ.நா மனித வளர்ச்சி குறியீட்டுப் பட்டியலில் நமது இடமும் காட்டப்பட்டுவிட்டது. 189 நாடுகள் உள்ள பட்டியலில் 131-வது இடம் நம்முடையது. எல் சல்வடார், தாஜிக்கிஸ்தான், குவாதிமாலா, நிகரகுவா, புடான், நமீபியா, கபோ வெர்தே ஆகிய நாடுகள் எல்லாம் நமக்கு முன் உள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நம்மை இடித்துக் கீழே தள்ளிய சர்வதேச சதி குறித்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும் என நான் அனுமானிக்கிறேன். இந்தப் பத்தியைக் கவனித்து வரவும்.


தமிழாக்கம் : ஆர்.ஆர்.டி.
நன்றி : தி வயர் (15.04.2021) மற்றும் People’s Archive of Rural India

கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

0

வினய் ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவானது அபாயகரமான அளவை எட்டியிருந்த நிலையில்,  லக்னோவின் எந்த மருத்துவமனையும் தன்னுடைய தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை என ஏப்ரல் 16 அன்று இரவு 8 மணி அளவில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் கீழே சென்றால் ஆபத்து நிலை என கொள்ளப்படும். ஸ்ரீவத்சவா தன்னுடைய ஆக்சிஜன் அளவு 32 என சொன்னார்.

65 வயதான நிறுவனம் சாரா பத்திரிகையாளரான ஸ்ரீவத்சாவின் பதிவு ட்விட்டரில் வைரலான பின், உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஊடக ஆலோசகர், அடுத்த நாள் மதியம் மேலதிக தகவல் வேண்டும் எனக் கேட்டார். அப்போது ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவு 31-ஆக குறைந்தது.

படிக்க :
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

அதே நாளில் மாலை 4.20 அளவில் அவருடைய மகன் ஹர்ஷித் ஸ்ரீவத்சவா தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என ட்விட்டரில் பதிவு செய்து, ஆம்புலன்சுக்கு காத்திருப்பதாக தெரிவித்தார். “நாங்கள் எதையும் பெறவில்லை. நான் அனைத்து எண்களுக்கும் அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டேன். ஆனால், எவரும் பதிலளிக்கவில்லை” என்கிறார் அவர்.

அவர்களுடைய வீட்டிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனையான சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனை ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைக்காக காத்திருக்கிறது. மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்திக்காக மருத்துவமனைகளிலேயே நிறுவப்பட 8 மாத கால கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு 150 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலை அமைக்க டெண்டர் கோரியிருந்தது. அதில் மேற்கண்ட மருத்துவமனையும் ஒன்று.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் ஆக்சிஜன் ஆலை நிறுவப்படவில்லை. சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால் லக்னோ வாசியான ஸ்ரீவத்சவா போன்றோர் கோவிட்-19னில் இருந்து பிழைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். 3 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரத்தில் தற்போது 44,485 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

“என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம்” என்கிறார் ஹர்சித். அவர் இன்னமும் தனது தந்தையின் கோவிட்-19 அறிக்கைக்காக காத்திருக்கிறார். “இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறு” என்கிறார் அவர்.

1,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத்தின் நவ்சாரியில் மற்றொரு மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் ஆலை நிறுவப்படாதக் காரணத்தால் ஆக்சிஜன் தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளைக் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சேர்க்க மறுத்து வருகிறது.

“இங்கு முழுமையாக ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது” என்கிறார் 175 படுக்கைகள் கொண்ட மாவட்ட பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவினாஷ் துபே.  அரசின் கணக்குப்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஆக உள்ள நிலையில், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 கோவிட் 19 நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் ஆலை மட்டும் சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால், குஜராத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சூரத்திலிருந்தும் கூட நோயாளிகளை அனுமதித்திருக்கலாம். தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகள் துபே-ஐ அழைத்தால் “இங்கே அனுப்ப வேண்டாம்” என சொல்வதாக தெரிவிக்கிறார்.

000

ரூ.200 கோடி மதிப்பிலான டெண்டரை கோர 8 மாதங்கள் !

2020, மார்ச் 20-ஆம் தேதி அன்று இந்தியா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை, பேரழிவு என அறிவித்தது.  பத்து நாட்கள் கழித்து, கோடிக்கணக்கான மக்கள் உலகின் மிக மோசமான பொது முடக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்போது அரசாங்கம், நாட்டின் சுகாதாரத் திறனை விரிவாக்க நேரம் தேவை எனக் கூறிக் கொண்டது.

பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே, வைரசுக்கு எதிரானப் போரில் ஆக்சிஜன் என்பது மிக முக்கியமான பொருள் என தெளிவாகத் தெரிந்தது. ஆனபோதும், நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் அமைப்பதற்கான ஏலத்துக்கு அழைக்க 8 மாதங்கள் தேவைப்பட்டது.

அக்டோபர் 21-ஆம் தேதி அன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான மத்திய மருத்துவ சேவைகள் சொசைட்டி, நாடு முழுவதும் 150 மாவட்ட மருத்துவமனைகளில் பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (Pressure Swing Adsorption – PSA) ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ ஏலதாரர்களுக்கு அழைப்பு விடுத்தது.

PSA தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் உள்ள ஒரு கலவையிலிருந்து வாயுக்களைப் பிரித்து, குழாய் வழியாக செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனை மருத்துவமனைப் படுக்கைகளுக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மற்ற மூலங்களிலிருந்து அழுத்தப்பட்ட திரவ ஆக்சிஜனை மருத்துவமனைகள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த டெண்டர் செயல்முறைத் தொடங்கப்படாததற்கானக் காரணம் நிதிப் பற்றாக்குறை எனத் தெரிகிறது. 162 ஆலைகள் நிறுவ (12 ஆலைகள் பின்னர் சேர்க்கப்பட்டவை) வெறும் ரூ.201.58 கோடி போதுமானது. இந்த பணம் பி.எம்.கேர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது. 2020, மார்ச் 27-ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்ட பி.எம்.கேர் நான்கு நாட்களில் ரூ.3,000 கோடியை நன்கொடையாகப் பெற்றது.

இப்போது, கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், பிஎம்-கேர் நிதியிலிருந்து மேலும் 100 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் என மோடி அரசு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் கூறியது. 2020-ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட 162 ஆக்சிஜன் ஆலைகளின் நிலை குறித்து, அவை அனைத்தும் “100 சதவீதம் முழுமையடைந்த ஆலைகளாக விரைவாக முடிப்பதற்காக உன்னிப்பாகப் பரிசீலிக்கப் படுகின்றன” எனக் கூறியது அந்த அறிக்கை.

ஸ்காரல் இணையதளம் மேற்கொண்ட விசாரணையில், ஏன் தாமதமாகிறது என்பதற்கான விடையாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. 14 மாநிலங்களில் உள்ள 60 மருத்துவமனைகளை அவர்கள் அழைத்துப் பேசிய நிலையில், ஆக்சிஜன் ஆலைகள் வரும் என எதிர் பார்ப்பது தெரிந்தது. நிறுவப்பட்ட 11 யூனிட்டுகளில் 5 மட்டும் செயல்படும் நிலையில் உள்ளன.

162 ஆக்சிஜன் ஆலைகளில் 33 நிறுவப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல், 2021 இறுதிக்குள் 59 நிறுவப்படும் எனவும் மே மாதத்துக்குள் 80 நிறுவப்படும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் அறிவிப்பின்படி பார்த்தால் 172 ஆலைகள் வருகிறது. இந்தக் கணக்கையும் கூட அமைச்சகம் சரியாக தெரிவிக்கவில்லை என்கிறது ஸ்க்ரால் இணையதளம்.

இந்தியாவில் தற்போது இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் அனைத்து தொழில்துறை ஆக்சிஜன் உற்பத்தியையும் மருத்துவ நோக்கங்களுக்காகத் திருப்பி விடுகின்றன. 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்யப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ஆக்சிஜன் ஆலைகள் மாதத்திற்கு 4,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.  தற்போது இரண்டாவது அலையில் காணப்படும் தேவையைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை, ஆனால் ஒவ்வொரு கூடுதல் திறனும் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

“கோவிட்-19  இல்லாவிட்டாலும், ஆக்சிஜன் ஆலைகள் அங்கு இருக்க வேண்டும்”  என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவான தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குனர் டி.சுந்தரராமன் கூறுகிறார்.

அவரைப் போன்ற பொது சுகாதார வல்லுநர்கள், பெருந்தொற்று இந்தியா தனது சுகாதார அமைப்புகளில் வெளிப்படையான இடைவெளிகளை நிரப்புவதற்கான ஒரு வாய்ப்பு என வாதிட்டனர். அவற்றில் ஒன்று லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் மாவட்ட மருத்துவமனைகளில் குழாய் பதிக்கப்பட்ட ஆக்சிஜன் இல்லாதது.

“ஆக்சிஜன் இல்லாததால் துன்பத்துக்கு பின் துன்பம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்கிறார் சுந்தரராமன். ஆக்சிஜன் இல்லாததால் பாம்பு கடித்தல், மூளையழற்சி (encephalitis), சாலை விபத்துக்கள் போன்ற இறப்புகளும் இதில் அடங்கும்.

மருத்துவமனையிலேயே நிறுவப்பட்ட ஆலைகள் மூலம் குழாய் ஆக்சிஜன் கிடைத்திருந்தால் இதுபோன்ற லட்சக்கணக்கான இறப்புகளைத் தவிர்க்க முடியும், இது சமீபத்திய ஏலங்களில் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு சிறிய செலவில் வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெறும் ரூ.200 கோடி மட்டுமே செலவு பிடிக்கும்!

ஆனால், இப்போது கோவிட்-19னும் இந்த மரண பட்டியலில் சேர்க்கிறது.

000

மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் வர்த்தகக் கட்டணங்களால் அதிகரிக்கும் தாமதங்கள்

ஒரு பெருந்தொற்றின் போது உள்கட்டமைப்பு போர்க்காலத்தில் அதிகரிக்கப்படும்போது ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதில் ஏற்படும் தாமதம் சொல்ல வருவது என்ன ?

அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசியபோது, தாமதங்களுக்கு ஒப்பந்தங்களை வென்ற நிறுவனங்களே காரணம் என பெரும்பாலான அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கான டெண்டர் ஆவணத்தில், மருத்துவமனையில் உள்ள மொத்தப் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஆலையின் திறன் ஆகியவற்றுடன் மாவட்ட மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில், 14 மாவட்டங்களில் மாறுபட்ட திறன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான ஆலைகள் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 10 மாவட்டங்களில் மராட்டியத்துக்கு ஆலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லிக்கு நிமிடத்திற்கு 7,700 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எட்டு ஆலைகள் ஒதுக்கப்பட்டன.

உத்தம் ஏர் ப்ராடக்ட்ஸ், ஏரோக்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஆப்ஸ்டெம் டெக்னாலஜிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களிடம் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில், 14 மருத்துவமனைகளில் ஒன்று கூட ஆக்சிஜன் ஆலை செயல்படுவதாக தெரிவிக்கவில்லை.

ஒப்பந்த நிறுவனங்கள், பல காரணங்களைக் காட்டி ஆலைகள் நிறுவதை தாமதித்து வருகின்றன. நிறுவனங்களை கண்காணித்துப் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க அரசாங்க தரப்பில் எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை என்பது ஸ்க்ரால் இணையதளத்தில் விசாரணையில் தெரிய வருகிறது. வெறுமனே கண் துடைப்புக்காக ஏலம் விட்டு, ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன என்பதும் தெரிய வருகிறது.

000

பற்றாக்குறை மரண சுழலுக்கு வழி வகுக்கிறது

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என கூறுகிறார்கள். ஏனெனில், வைரஸின் புதிய வகைகள் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தியதால் அல்ல (இது குறித்து இன்னும் தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை) ஆனால், அதிக அளவு நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் நோயாளிகளுக்கு கடினமாக இருக்கும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் கூட ஆக்சிஜன் இல்லாமல் செல்ல வேண்டியிருக்கும்.

மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அதாவது எந்த நோயாளிக்கு ஆக்சிஜன் தருவது என முடிவெடுக்க வேண்டிய நிலையை அவர்கள் கூறுகிறார்கள்.  அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.

குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள CU ஷா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் ரூபம் குப்தா கூறுகையில், “கடந்த ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆனால், இந்த ஆண்டு அலை திடீரென உயர்ந்துள்ளது, எனவே இந்த நேரத்தில் அப்போதைய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது” என்கிறார்.

இந்த மருத்துவமனையில் 700 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 200 கோவிட்-19 நோயாளிகள் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை என குப்தா கூறினார். 100 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்ட இரண்டு டிராலிகள்தான் இந்த மருத்துவமனையை காத்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் போதாமை ஏற்படும். இவற்றை ஈடுகட்டித்தான் நோயாளிகளை காக்க வேண்டியுள்ளது என்கிறார் மருத்துவர்.

000

வெற்று சிலிண்டர்களில் இயங்கும் மருத்துவமனைகள்

அதிக எண்ணிக்கையிலான சிக்கலான நோயாளிகளைக் கொண்ட பெரிய மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் போதுமானதாக இல்லை என்றாலும், அதிக தேவை உள்ள காலங்களில் அவை ஒரு பயனுள்ள கருவியாக இருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நாடு முழுவதும் வணிக ஆக்சிஜனின் கடுமையானப் பற்றாக்குறை இருக்கும் போது ஆக்சிஜன் ஆலைகளின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகிப்பாளர்களிடம் பேசிய போது, கடந்த ஆண்டு கோவிட்-19 முதல் அலைகளின் போது இருந்ததை விட இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.

பலர் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் தயாரிப்பதை நிறுத்தி விட்டு, மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போதும், தட்டுப்பாடு அதிகமாகவே உள்ளது. அதிக அளவு தேவையும் உள்ளதாக தனியார் ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 15 நாட்களில் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக குஜராத்தின் சூரத் நகரத்தில் உள்ள விநியோகிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் ஆக்சிஜன் நொடிப் பொழுதில் விற்று தீர்ந்து விடுவதாக ஒரு உற்பத்தியாளர் கூறுகிறார். “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நோயாளி இருந்தால், நிலைமை எப்படி இருக்கும்? தேவை அந்த அளவுக்கு உள்ளது” என்கிறார் அவர்.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

எந்தவித தணிக்கைக்கும் உட்படாமல் தனிப்பட்ட வகையில் பெருந்தொற்றின் போது உருவாக்கப்பட்டு இயக்கப்படும் பி.எம்.கேர் நிதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் குவிந்துள்ளது. அதில் ரூ.200 கோடி என்பது வெறும் துளி மட்டுமே. ஓராண்டு காலத்தில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசாக இருந்திருந்தால், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவி மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதி திரட்டுவதில் காட்டியிருந்த ஆர்வத்தில் ஒரு பகுதியைக் காட்டியிருந்தால் கூட குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசத்தில் மரண ஓலங்களின் எண்ணிக்கை குறைத்திருக்க முடியும். ஆனால், மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் இந்துத்துவ பாசிச அரசு பிணங்கள் எரிவதைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருக்கிறது.


கட்டுரை : விஜய்தா லால்வானி & அருணாப் சாய்கா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : அனிதா
நன்றி : Scroll.in

அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

லகிலேயே ஒரே நாள் அதிக எண்ணிக்கையாக 3,14,835 பேர்களுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் இல்லை. வெண்டிலேட்டர் இல்லை. தடுப்பு மருந்து இல்லை.  குவியும் பிணங்களை எரிக்க தலைநகரில் இடமில்லை. மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் கையறு நிலையில் தவிக்கின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் மேலும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தற்போது படுக்கைகளும் இல்லை ஆக்ஸிஜனும் இல்லை மற்றது அனைத்தும் அடுத்தது தான்” என்று அசோகா பல்கலைக்கழகத்தின் நோய் தொற்றியல் நிபுணரும் திரிவேதி ஸ்கூல் ஆஃப் பயோசயின்சஸின் இயக்குநருமான ஷாஹித் ஜமீல் கூருகிறார். ஒட்டுமொத்த கட்டமைப்பும் நொறுங்கி வருகிறது என்கிறார்.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

தலைநகர் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது.  தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும்  தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.

உச்சநீதிமன்றமும் இதனை அவசர நிலையாக கருதுவதாக கூறி ஆக்சிஜன், தடுப்பு மருந்துக்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க நடுவண் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை கடுமையாக தாக்கி வரும் நிலையிலும் ஏப்ரல் மாதம் வரையில் இந்திய அரசு வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் ஏற்றுமதி செய்திருக்கிறது. அதுவும் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் (2019-20) 4,500 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்த நிலையில், 2020-21ல் இரண்டு மடங்காக 9,300 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்திருக்கிறது. இதெல்லாம் மாண்புமிகு உயர் – உச்ச நீதியரசர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும்.

சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரிகள் என்று நரம்புகள் முறுக்கேறி இந்துத்துவவாதிகள் தேசபக்தி பாடம் எடுத்த நிலையில் இன்று இவ்விறு நாடுகளும் இந்தியாவிற்கு பக்க பலமாக இருப்போம் என்றும் விரைவில் இந்தியாவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. #standwithindia என்று டுவிட்டரில் ட்ரெண்டாக்கியிருக்கிறார்கள் பாகிஸ்தான் மக்கள். ஆனால், எஜமானனான அமெரிக்காவோ தனக்கு பின்தான் தானம் என்று இந்தியாவிற்கு பெப்பே காட்டியிருக்கிறது.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல தடுப்பு மருந்திற்கான விலையை தடுப்பு மருந்து நிறுவனங்கள் தாருமாறாக ஏற்றி இளவு வீட்டிலும் இலாபம் பார்க்கின்றன. ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தின் விலையாக மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு  ரூ.1200 என பாரத் பையோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருக்கிறது.  அதுவே, சீரம் நிறுவனம், கோவிசீல்டு மருந்திற்கு மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என விலை நிர்ணயித்திருக்கிறது.

அரசு நிறுவனங்கள் இந்த மருந்துகளை தயாரிப்பதிலிருந்து முட்டுக் கட்டைப் போட்டிருக்கும் மோடி அரசாங்கம், கோரோனாவிற்கான மருந்து தயாரித்துக் கொள்ளையடிக்க இந்த இரு நிறுவனங்களையும் ஏகபோகமாக்கியிருக்கிறது.

முதல் அலையினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பல பாடம் கற்றுக் கொண்டு இரண்டாம் அலையின்போது தத்தமது மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்க, இந்து இராஜ்ஜியத்தின் கனவு அரசரோ கங்கா மாதாவின் அருளினால் கும்பமேளாவில் கொரோனா வராது என்று கூறுகிறார். இது கொரோனாவை விட கொடிதாக இருக்கிறது. மேலும் உ.பி-யில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், எதிராகப் பேசுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் இந்து ராஜ்ஜியத்தின் இளவல் ஆதித்யநாத் எச்சரித்திருக்கிறார். இதுதான் இன்றைய இந்து ராஜ்ஜியத்தின் எதார்த்த நிலைமை.

மும்பையில் கொரோணா தொற்றிருப்பதாக கூறப்படும் நோயாளி ஒருவரை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள்.
மும்பையில் உள்ள கொரோனா நோய்த்தொற்று மீட்பு மையத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்படுவதற்காக காத்திருக்கும் நோயாளியைச் சுற்றி சுகாதார ஊழியர்கள்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த கோவிட் -19 நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் துயரத்திலிருக்கின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட் -19 நோயாளி ஒருவர்.
மும்பையில் உள்ள கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மீட்பு மையத்தில்  உள்ள மருத்துவ விரைவு ஊர்தியில் நோயாளி ஒருவருக்கு சுகாதார ஊழியர்கள் உதவுகிறார்கள்.
புதுதில்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு கிராம கோவிட் -19 பராமரிப்பு மையத்தில் ஆக்ஸிஜன் உருளைகளை இறக்கிச்செல்லும் தொழிலாளர்கள்.
புது தில்லி ஜில்மில்லில் (Jhilmil) உள்ள இ.எஸ்.ஐ.சி (இந்திரா காந்தி) மருத்துவமனையின் கோவிட்-19 நெருக்கடி பராமரிப்பு வார்டு.
புது தில்லியின் இ.எஸ்.ஐ.சி (இந்திரா காந்தி) மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவர் ஆக்ஸிஜன் உருளைகளை வரிசைப்படுத்துகிறார்.
அகமதாபாத் கோவிட்-19 மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கக ​​மருத்துவ விரைவு ஊர்தி ஒன்றில் காத்திருக்கும் நோயாளியின் ஆக்ஸிஜன் அளவை ஆக்சிமீட்டரை கொண்டு சரிபார்க்கும் துணை மருத்துவர்.
அகமதாபாத்தில் கோவிட்-19 மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக மூச்சியக்க சிக்கலுள்ள நோயாளியொருவர் காரில் காத்திருக்கிறார்.
புதுடெல்லிக்கு வெளியே நொய்டாவில் கோவிட்-19 காரணமாக இறந்த ஒருவரின் உடல் எரியூட்ட வைக்கப்பட்டுள்ளது.  பின்னனியில் எரிந்து கொண்டிருக்கும் உடல்கள்.


தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera

 

கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

டாக்டர் ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது. மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றிக் கோரமான கோவிட்-19 இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார்; இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை போட்டு உடைக்கிறார்.

“நம்முடைய சுகாதாரத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது; நாம் நமது சொந்த தேசத்தின் மக்களைக் கைகழுவி விட்டோம்; நம்முடைய மருத்துவ உள்கட்டுமான அமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கும் போது, மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்? படுக்கைகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லாத போது மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?”

படிக்க :
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

நேற்று (ஏப்ரல் 23), இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதுவரை பதிவான மிகப்பெரிய ஒருநாள் தொற்று இதுதான். நேற்று முன்தினத்தின் அளவை நாமே நேற்று முறியடித்திருக்கிறோம் என்பதுதான் கொடுமை.

பெருந்தொற்றுக் காலம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை, 1 கோடியே 60 இலட்சம் பேர் நோய்த் தொற்றை அடைந்திருக்கிறார்கள். 1 இலட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான நாடக இருக்கிறது. அன்றாட தொற்றின் அளவும், மரணங்களின் அளவும் அமெரிக்காவை விஞ்சும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் 2,000 இந்தியர்கள் கொரோனாவால் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது குறைத்து மதிப்பிடப்படுகிற ஒன்று என்றும், இந்தியாவின் ஒருநாள் மரணம் 10,000-த்தை தாண்டிக் கொண்டிருப்பதாகப் பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

எனது வாழ்க்கையில் நான்கு மிக நெருக்கமான மனிதர்களை நான் இழந்திருக்கிறேன்; ஒரு தூரத்து உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர். அவர்கள் இருவருமே 30 முப்பது வயதுகளில் மத்தியில் இருப்பவர்கள்.

இறப்பு மிக சாதாரணமாக நிகழ்கிறது. வெள்ளிக்கிழமை டெல்லியின் கங்காராம் மருத்துவமனை ஒரு அவசர செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே எங்களிடம் இருக்கிறது; ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்கனவே 25 பேர் இறந்து விட்டார்கள் என்று அச்சமூட்டும் அறிவிப்பாக அது இருக்கிறது. தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களைத் திருடும் காணொளிக்  காட்சிகள் மேலும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

BBC-யின் செய்தித் தொகுப்பொன்றில் வரும் காட்சியில் பெண்ணொருவர் இறந்து கொண்டிருக்கும் தனது தம்பியை சுயநினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார், “பாலாஜி, நீ ஏன் விழித்துக் கொள்ளக் கூடாது?” என்று தனது தம்பியைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபடி அழுகிறார்.

மஹாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் குழாய்களில் தடை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 25 பேர் இறந்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தவர்கள். பல்வேறு மருத்துவமனைகள் தங்கள் மாநில உயர்நீதிமன்றங்களில் எங்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று முறையீடு செய்திருக்கின்றன. கடவுளின் கரங்கள் எங்கே என்றால் அவை இந்தியாவின் மருத்துவமனைகளில்தான் இப்போது இருக்கிறது.

இத்தகைய ஒரு கொடிய சூழல் நிலவும் போது, இந்தியாவின் மற்றொரு பக்கம் கொரோனா பெருந்தொற்று குறித்த எந்த அச்சமும் இல்லாமல், விழிப்புணர்வும் இல்லாமல் “மோடியின் தட்டு தட்டி, விளக்கேற்றி கோரானவை விரட்டும்” மூடத்தளைக்குள் சிக்குண்டு சீரழிகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கும்பமேளா என்கிற பெயரில் கங்கை ஆற்றில் மூழ்கித் திளைக்கிறார்கள்.

குறிப்பிட்ட சில நூறு இஸ்லாமிய மனிதர்கள் கடந்த ஆண்டில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தபோது மோடியின் தேசபக்த ஊடகங்களும், அவரைப் பின்பற்றும் மடையர்களும் அவர்களைக் குற்றவாளிகளாக்கி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.

மார்ச் 11-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து குளியல் போட்டு வருகிற இந்த பக்தர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மெல்ல மெல்ல இவர்கள் வீடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூலமாகப் பரவ இருக்கும் இந்தப் பெருந்தொற்று மிகப்பெரிய சோகங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மார்ச் மாதத்தில் ஏறத்தாழ கொரோனாவின் இரண்டாம் அலை துவங்கி இருந்தபோது, உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருந்தார்கள்; கும்பமேளா குளியல் இடம் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள்.

இதைவிடக் கொடுமை மார்ச் 20-ஆம் நாள், உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஒருபடி மேலேசென்று “யாராலும் கோவிட்-19ன் பெயரால் எங்களைத் தடுத்து விட முடியாது. நாங்கள் நம்புகிற கடவுள் கிருமிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவார்” என்று கொக்கரித்தார். ஏப்ரல் மாதத்தின் மத்தியப் பகுதி வரையில் இந்து ராஜ்யத்தின் தலைவரான நரேந்திர மோடி ஒரு துரும்பையும் அசைக்காமல் தேர்தல் நாடகங்களில் மும்முரமாய் இருந்தார்.

பிறகு திடீரென விழித்து பன்னாட்டு சமூகத்துக்கு அஞ்சி “மத விழாக்களில் கலந்துக் கொள்வதை நாம் ஒரு அடையாளமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் பெருந்தொற்றை எதிர்க்க முடியும்” என்று திருவாய் மலர்ந்தார். இப்படி ஒரு பிரதமர் இருக்கும் நாட்டில் கும்பமேளாக்கள் அப்பாவி இந்தியர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு மரணக் குழியாக இருக்கும் என்பதில் என்ன பெரிய வியப்பு இருக்க முடியும்.

மார்ச் 2020 துவங்கி இந்தியாவின் கோவிட்-19 குறித்து நான் தொடர்ந்து கவனித்தும், பேசியும் வருகிறேன். ஆனால், இந்த இரண்டாம் அலையின் தீவிரம் என்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகிறது. சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அங்கே மாடிப்படிகளில் அமர்ந்திருந்த ஒரு செவிலியரைப் பார்த்தேன்.

அவர் தனக்குக் குமட்டிக் கொண்டு வருவதாக என்னிடம் கூறினார். இங்கிருக்கும் கழிவறைகள் மிகுந்த அசுத்தமாக உள்ளது. ஒவ்வொரு 20 கோவிட் நோயாளிகளுக்கும் ஒரு கழிவறைதான் இருக்கிறது. நானே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் குணமடைந்து வருகிறேன். மூன்றுமுறை நான் அளித்த விடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்.

ஆனால், என் குடும்பம் என்னை நம்பி இருக்கிறது. மருத்துவப் பணியாளர்களை நாங்கள் மலர் கொண்டு ஆராதிக்கிறோம் என்று விமானங்களை வைத்து மோடியின் அரசு வித்தை காட்டியது. ஆனால், மருத்துவப் பணியாளர்களின் உண்மையான நிலை இதுதான், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம்.

இரண்டாம் அலையில் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகுந்த துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள். scroll.in என்கிற ஒரு செய்தி நிறுவனம் அதிர்ச்சி தரக்கூடிய உண்மை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அக்டோபர் 2020 வரை, உலகைக் காக்கும் வல்லமை பொருந்திய இந்துக்களைக் காக்கும் மாமன்னர் மோடி அரசு கண்களை மூடிக் கொண்டு ஏகாந்தத்தில் இருந்தது.

பெருந்தொற்று துவங்கி 8 மாதங்கள் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த எந்த சுய உணர்வும் இல்லாமல் வாயால் வடை சுட்டுக் கொண்டே இருந்தார்கள் பாரதீய ஜனதாவின் மக்கள் விரோதத் தலைவர்கள். அக்டோபரில்தான், அதுவும் வெறும் 150 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வேண்டும் என்று 2.7 கோடி டெண்டர் கோரி இருந்தார்கள். ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில்தான் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் யாகம் செய்வது, பசு மூத்திரம் குடிப்பது என்று குரங்காட்டிகளின் தலைவராக யோகி ஆதித்யநாத் போன்ற பாரதீய ஜனதாவின் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலங்களுக்கு இடையே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான சண்டை துவங்கி இருக்கிறது; ஹரியானாவின் அமைச்சர் திரு. அனில் விஜ், டெல்லி அரசு ஆக்சிஜன் கொண்டு வருகிற வாகனங்களைக் கடத்துவதாகவும், ஆகவே ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் Economic Times செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

உத்திரப் பிரதேசத்தில் இடுகாடுகளைப் பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12-வது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையான மரண எண்ணிக்கைகளை மறைக்கும் வேலைகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

குஜராத் உயர்நீதிமன்றம் உண்மையான கோவிட்-19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தருமாறு அரசைக் கேட்டிருக்கிறது. ஏனைய மாநிலங்களில் நடக்கும் போலியான எண்ணிக்கைக் கணக்குகளும் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் ஒருநாளில் எரியூட்டப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 97-ஆக இருக்கிறபோது, அரசு வெறும் 3 என்று கணக்குக் காட்டுகிறது என்று “டைம்ஸ் நௌ” செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

மிகப்பெரிய அவலம் நடந்து கொண்டிருக்கும் போது ஒன்றுமே நிகழாததைப் போல அரசுகள் நாடகமாடுகின்றன. பிரதமர் ஏதுமறியாதவரைப் போல “நாம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவோம், இது புதிய இந்தியா” என்று தேர்தல் மேடைகளில் புளுகிக் கொண்டு திரிகிறார்.

இந்த வாரத்தில் உலகிலேயே மிக அதிகமான கொரானா தோற்று இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் சூழலில், ஆளும் இந்துத்துவ அரசானது ட்விட்டரில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்துறை அமைச்சரும், பிரதமரும் கூடிக்குலாவியபடி தேர்தல் ஊர்வலங்களில் கலந்து கொள்கிறார்கள். உள்துறை அமைச்சர் முறைப்படி அவசர காலமாகக் கருதி தலைநகரில் இருந்தபடி பல்வேறு மாநிலங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அவரோ பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஓரிடத்தில் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகி இருக்கிறார். இறுதியாக மீண்டும் பன்னாட்டு அழுத்தங்களுக்கு அஞ்சி நடுங்கி பிரதமர் கடைசி தேர்தல் கூட்டங்களை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்தார். அடிப்படையான அறிவும் இல்லாத, மக்களைப் பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லாத ஒரு மூடரின் கீழாக இந்த இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.

ஆனால், மூட பக்தர்களோ இன்னும் திருந்திய பாடில்லை, “பாகிஸ்தான் தான் கிருமியைப் பரப்பியது; சீனாதான் கிருமியைப் பரப்பியது” என்று கிளப்பியபடி மோடியை புகழ்ந்து நாடு முழுவதும் ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பாட்டுப் பாடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானும், அதன் மக்களும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மருத்துவ நிபுணர்களும், உலக நாடுகளின் மருத்துவ அமைப்புகளும் பல்வேறு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, இந்தியாவின் பிரதமர் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வதில் மும்முரமாய் இருந்தார். மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத சென் நிலைக்கு அவர் மாறி இருந்தார்.

அவரது சகாக்களும் பக்தர்களும் கோவிட்-19க்கு எதிராக ஒரு சூப்பர் மேனைப் போல அவரை சித்தரித்தார்கள். இந்தியாவில் கொரோனா சோதனைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டது. உழைக்கும் மக்களின் பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்கார அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் கடந்தமுறை தட்டுகளை அடித்தும் உடைத்தும் மோடியின் வைரசுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

விளக்கேற்றி கொரானாவை ஓட்டினார்கள்; “பாக் கொரோனா பாக்” (ஓடு கொரோனா ஓடு) என்று புத்தி பேதலித்தவர்களைப் போல அவர்கள் வீதிகளில் அலைந்தார்கள். ஆனால், ஏழை கூலித் தொழிலாளிகளோ தங்கள் வேலைகளை இழந்து உணவுக்கும் வழியின்றி வாழ்ந்த நகரங்களில் இருந்து வெளியேறி நடந்தார்கள். அதனால் அவரை தங்களிடம் வேலை பார்த்த அந்த கூலித் தொழிலாளிகள் மீது இந்து ராஜ்யத்தின் நீதிமான்கள் யாருக்கும் கருணைப் பிறக்கவில்லை. 12-வது அவதாரமான கடவுள் மோடிக்கும் கூட இந்த ஏழைத் தொழிலாளிகள் மீது சிறிதளவும் கருணை தோன்றவில்லை.

இவர்கள்தான் கடவுள் மோடியை இந்த தேசத்தின் பிரதமராகத் தேர்தெடுக்க வாக்களித்தவர்கள். இப்போதும் அவர்கள் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். அவரது உண்மையான கோர முகத்தை அறியாதவர்களாக!

எல்லாவற்றையும் தாண்டி இந்த தேசத்தின் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு நான் வேலைக்காரன் என்று சுயவிளம்பரம் செய்து கொண்ட மோடி, இந்த அவசர காலத்தை ஒரு தேர்ந்த குற்றவாளியைப் போல கைகழுவி விட்டார். அவருக்கு அம்பானியையும், அதானியையும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னேற வைக்கக் கூடிய மிக முக்கியமானப் பணி இருக்கிறது.

இந்தியாவின் விற்பனையை துரிதப்படுத்தும் நிர்மலா சீதாராமன் கையில் மிக நீண்ட பட்டியலோடு பிரதமரின் கண்ணசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லை. “Make in India” என்று போலிக்குரல் எழுப்பியபடி அலைந்த இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கோரமுகம் கொண்ட நரேந்திர மோடி, இந்திய அரசின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை ஏன் ஊக்குவிக்கவில்லை?

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காப்பு நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை என்கிற இந்தக் கேள்விக்கும் பிரதமரும் பதில் சொல்ல மாட்டார், பக்தர்களும் பதில் சொல்ல மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் பிரதமர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே மாநில பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் “கோவிட் வந்தால் நாம் பசு மூத்திரத்தை குடிக்க வேண்டும்” என்று வெட்கமே இல்லாமல் பேசினார். இதைக் கேட்டுக் கொண்டு மண்டையை மண்டையை ஆட்டினார் பிரதமர். இப்படி ஒரு முட்டாள் பிரதமரை இந்தியா இதுவரை சந்திக்கவே இல்லை.

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !

♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

உலகம் முழுவதும் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திப்பதிலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், ஊடகங்களை சந்தித்து என்ன மாதிரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசும் போது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மோசடியான பிரதமர் இதுவரை ஒருமுறைக் கூட ஊடகங்களை சந்திக்கவில்லை.

உலகெங்கும் நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு நேரடியாகப் பணத்தை நிவாரணமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரூர மனமும், மூடத்தனமும் கொண்ட ஒரு பிரதமர் இதுவரை இந்த தேசத்தின் ஏழை உழைக்கும் மக்களுக்கும் கூட நேரடியான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை.

கட்டுரையாளர் : Rana Ayyub (Time.com)
தமிழில் : கை.அறிவழகன் (முகநூலில் இருந்து)

disclaimer

இந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் இந்து ராஷ்டிரம்

இந்தியா முழுவது கொரோனாவில் சாதாரண உழைக்கும் மக்கள் மருத்துவம் கிடைக்காமல் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, இந்து ராஷ்டிர கனவில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மக்கள் நலனை பற்றி அக்கறை அதுக்கு கிடையாது. முதலாளிகள் பணம் சம்பாதிக்க கொரோனாவையும் பயன்படுத்துகிறது. எனவே, கொரோனா பெரும்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவது என்பது அதன் எண்ணத்தில் துளியும் இருக்க வாய்ப்பு இல்லை.

***

இந்து ராஷ்டிரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையமும் கொரோனா சிகிச்சையும்

கொரோனா வந்து மக்கள் இறப்பதை விட அவர்களுக்கான மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் இறப்பதே அதிகமாக இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகவும் கொடிய தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.


கருத்துப்படம் : மு.துரை

கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்

கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்!

கொரோனா தடுப்பூசிகள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டையும் தனியார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.

இதனால், தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் அடிக்கின்றனர். இந்திய அரசுக்கு தரும் தடுப்பூசியின் கட்டணத்தையும் அதிகரித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டு வெளி சந்தையில் அதிக விலைக்கு மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவர்.

கொரோனா தடுப்பு மருந்தை தனியார் கொள்ளையடிக்க திறந்துவிட்டு இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்


கருத்துப்படம் : மு.துரை

வேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்

வேண்டாம் ஸ்டெர்லைட்

கொரோனா தீவிரமாக பரவிவரும் சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் இறப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே நான் இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்று கூறுகிறது வேந்தாந்த நிறுவனம். தூத்துக்குடியின் சுற்றுச் சூழலை அழித்தது ஸ்டெர்லைட் ஆலை. பல்வேறு மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தியது, விவசாயத்தை அழித்தது, நிலத்தடி நீரை நாசமாக்கியது ஸ்டெர்லைட் ஆலை. 13 உயிர்களை போலீசின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி கொடுத்து கடும் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்த நாசகார ஸ்டெர்லைட் மூடயிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருகிறேன் என்று தன்னை உத்தமர் போல் காட்டிக் கொள்கிறது வேதாந்தா. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு – உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.

ஆக்சிஜன் உற்பத்தியின் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க ஏற்பாடு

கொரோனா வந்தா நாங்கதான் அழிவோம்;
வேதாந்தா வந்தா எங்க தலைமுறையே அழிஞ்சிடும்…!


கருத்துப்படம் : மு.துரை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

சென்னை

சேத்துப்பட்டு வாழ் உழைக்கும் மக்கள் மத்தியில் தோழர்களின் கம்பீரமான முழக்கங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

“ஜாரின் கொடூர ஆட்சியையும், ஏகாதிபத்தியத்தையும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இதர வர்க்கங்களை அணித்திரட்டி புரட்சியை நடத்தி உழைக்கும் மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டியவர்தான் தோழர் லெனின்.

நமது நாட்டில் காவி பாசிச கும்பல், கார்ப்பரேட் நலனுக்காக மக்களின் வளங்களை சூரையாடுகிறார்கள். மக்கள் மீது வரிகளையும் போட்டு ஈவிரக்கமின்றி சுரண்டுகிறார்கள். இலவச தரமான கல்வி இல்லை, மருத்துவம் இல்லை, வேலை இல்லை, சுகாதாரம் இல்லை, வீடு இல்லை, மக்கள் பசி – பட்டினியால் சாகிறார்கள்.  இத்தனை “இல்லை”களையும் தீர்ப்பதற்கான வழியைத்தான் தோழர் லெனின் காட்டுகிறார்.

சொந்த நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா தடுப்பு மருந்தினை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து சொந்த நாட்டு மக்களை சாகடிக்கிறது மோடி அரசு.” மோடி அரசின் இந்த அயோக்கியத்தனத்தையும், பாசிச நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி தோழர்கள் உரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா தலைமை தாங்கி உரையாற்றினார். ஆசான் லெனின் பிறந்த நாளை மக்கள் அதிகாரம் சேத்துப்பட்டு பகுதி தோழர் வாசு வாழ்த்துரை வழங்கினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் “இன்றைய காலக் கட்டத்தில் ஏன் லெனின் தேவை?” என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஆசான் லெனினின் உருவப் படத்திற்கு தோழர்களும் பகுதி மக்களும் மலர்தூவி மறியாதை செய்தனர். சுற்றியிருந்த உழைக்கும் மக்களுக்கும், ஆட்டோ தொழிலாளர்களுக்கும், தோழர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், சென்னை.

***

திருவள்ளூர்

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தோழர் லெனின் சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் ஆலைவாயில் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ச.மகேஷ்குமார் தலைமை வைகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ப.விஜயக்குமார் சங்கத்தின் கொடியேற்றி ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

சிறப்புரையில், ”கொரோனா பெருந்தொற்று முதல் அனைத்து பெருந்தொற்றுக்கும், பேரழிவிற்கும் காரணம் முதலாளித்துவ பெருந்தொற்று. இந்த முதலாளித்துவ பெருந்தொற்றை வீழ்த்தாமல் மக்களுக்கு விடிவில்லை என்பதையும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் காவி – கார்ப்பரேட் பாசிச அரசையும் தோழர் லெனின் வழியில் வீழ்த்தாமல் விடப்போவதில்லை வாருங்கள் தோழர்களே” என்று பேசினார்.

சங்கத்தின் தொழிலாளர்கள் திரளாக கலந்துக் கொண்டு முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் சேதுராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

***

தருமபுரி

ஏப்ரல் 22 : பாட்டாளி வர்க்க தோழர் லெனின் 151-வது பிறந்த நாளில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா உரையாற்றினார். இறுதியாக மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்
செல் : 6384569228.

***

விருதை

பாசிசத்தை வீழுத்துவோம் சோசலிசத்தை படைப்போம் என்பதை விளக்கி கடலூர் மண்டலம் விருத்தாச்சலம் வட்டாரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வட்டார செயலாளர் தோழர் அசோக்குமார் தலைமையில் விஜயமாநகரத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

பாசிசத்தின் அபாயத்தைப் பற்றி மக்களிடையே விளக்கிப் பேசி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்.

***

உளுத்தூர்பேட்டை

மக்கள் விழாவாக லெனின் பிறந்த நாள்! ; காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அறைகூவல்! என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி மக்கள் அதிகாரம் தோழர்களால் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

***

நெல்லை

மக்கள் அதிகாரம் திருநெல்வேலி மாவட்ட தோழர் அன்பு, லெனின் பிறந்த நாளையொட்டி உரை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

***

மதுரை

மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் குருசாமி அவர்கள் ”காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!! தோழர் லெனின் 151 வது பிறந்த நாளில் சூளுரைப்போம்!” என்ற தலைப்பில் உரை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொகுப்பு : வினவு செய்தியாளர்

புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

PP Letter head

பத்திரிக்கைச் செய்தி !

23.04.2021

புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே !
தியாகிகள் நம்மை வழிநடத்தட்டும் !
தூத்துக்குடி மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும் !

ஸ்டெர்லைட் நச்சுக் காற்றினால் தினம் தினம் செத்து மடிவதை தடுப்பதற்காக, “ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று போராடிய துத்துக்குடி மக்களைத் காக்கை, குருவிகள் போல தமிழக அரசால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 பேர் தியாகிகளாகி நம் முன்னே நியாயம் கேட்டு நிற்கிறார்கள். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கெதிராக, மத்திய அரசு, அதிகார வர்க்கத்தின் சதித் திட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

ஆனால், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக மேலாளரைப் போல உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளது, மத்திய அரசு. இது புறவாசல் வழியாக ஆலையைத் திறக்கும் சதித்திட்டமே. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

படிக்க :
♦ உச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு !

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

“ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம்” என்று சொன்ன எடப்பாடி அரசு, “ஸ்டெர்லைட்டை திறக்கலாமா” எனக் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கை என்பது, மோடி அரசின் எடுபிடியாகவே எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும், மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான வேதாந்தாவின் முயற்சிகளுக்கு ஏவலாக, துரோகத்தனமாக எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்தச் சூழலில் இன்று காலை கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்களை அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டியுள்ளது தமிழக அரசு. வழக்கம் போல ஸ்டெர்லைட்டின் குண்டர் படையைக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்மானிக்க திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் கேள்விக் கேட்கத் தொடங்கிய பின்னர், கல்வீச்சு, கலவரங்களில் இறங்கியுள்ளது ஸ்டெர்லைட் ஆதரவு குண்டர் படை. ஸ்டெர்லைட்டின் கூலிப்படை இப்படி கலவரத்தில் ஈடுபட்டதை வேடிக்கைப் பார்த்தது தமிழக அரசின் போலீசு.

தூத்துக்குடி மக்களை கொன்று பலரை முடமாக்கி, சொத்துக்களை சூறையாடி, நூற்றுக்கணக்கானவர்களை சிறையிலடைத்து – சித்தரவதை செய்ததுதான் இந்த எடப்பாடி அரசு. ஸ்டெர்லைட்டை திறக்க மோடி அரசு எடுக்கும் பல்வேறு சதித்தனங்களை மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுதான் இந்த தமிழக அரசு. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்காமல் போராளிகளை உளவு பார்த்து மிரட்டி வருகிறது இந்த கேடுகெட்ட தமிழக அரசு.

இந்த தமிழக அரசிடம் போய் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரியுங்கள் என்று கோரிக்கை வைத்து நச்சுப் பிரச்சாரம் செய்கின்றனர் சிலர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்று ஒருபுறம் பேசிக் கொண்டே, வேதாந்தாவிற்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி அரசின் துரோகத்திற்கும் இந்தக் கோரிக்கைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

கொரோனா நோய்தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக சாகும் இந்த தருணத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதித்தால் என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டைத் திறப்பது ஒன்றுதான் தீர்வா, வேறுவழியே இல்லையா என்ற கேள்வியை நாம் அவர்களிடம் எழுப்ப வேண்டும்.

45 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வாயுவை தமிழக அரசுக்கே தெரியாமல், ஆந்திராவிற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. மிகையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. நமது நாட்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த ஆலைகளை எல்லாம் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து மக்களுக்கு வினியோகம் செய்யலாம்.

மேலும், ஸ்டெர்லைட் என்பது ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமல்ல, தாமிரம் தயாரிக்கும் நச்சு ஆலை. சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எல்லாம் எதிராக நடத்தப்படும் ஆலை. இன்றுவரை, அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத கொலைகார ஆலை. இந்த ஆலையைத் திறந்த பின்னர், ஆக்சிஜன் உற்பத்தி மட்டும்தான் நடக்கும் என்று சொன்னால், தூத்துக்குடியில் இருக்கும் விலங்குகள் கூட நம்பாது.

ஆகையால், கார்ப்பரேட்டுகள் ஆக்சிஜன் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமைக்கு முடிவு கட்டாமல், ஸ்டெர்லைட்டைத் திறக்கப் போவதாக சொல்வது என்பது பட்டவர்த்தனமான துரோகம்.

ஸ்டெர்லைட்டைத் திறந்துதான் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பலர் இறந்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கொரானா முதலாவது அலைக்குப் பின்னர், ஓராண்டில் மத்திய மாநில அரசுகள் கற்றுக்கொண்டது என்ன, நடைமுறைப்படுத்தியது என்ன?

இவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தாமல், ஆக்சிஜன் பற்றாக்குறை, அதனால், வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று கூறுவது என்பது வேதாந்தா கம்பெனிக்காக மக்களை பலி கொடுக்க மத்திய மாநில அரசுகள் தயாராக இருப்பதையே உணர்த்துகின்றன.

ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்படும் நச்சுப் பிரச்சாரங்களைப் புறம்தள்ளி கொரோனா வந்து செத்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் பாதிக்கப்பட்டாலும் சரி, ஸ்டெர்லைட்டின் மூலமாக கிடைக்கும் ஆக்சிஜன் தேவையில்லை என்று தூத்துக்குடி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.

படிக்க :
♦ ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !

♦ தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

“லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !” என்று முழங்கியது மட்டுமின்றி நடைமுறையில் செய்தும் காட்டிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 வயது ஸ்னோலின் வாயில் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படி கொல்லப்பட்டவர்களின் பிணத்தை வைத்துக்கொண்டு மக்களை பணியவைக்கும் வகையில் அரசு பேரம் பேசிய போது கூட, ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடலை வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருந்தார்கள்; நூற்றுக்கணக்கானோர் போலீசால் அடித்து நொறுக்கப்பட்டனர், பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர்; இருப்பினும், உறுதியாக நின்று ஸ்டெர்லைட்டை மூடினார்கள் தூத்துக்குடி மக்கள்.

ஆகையால், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவா! ஸ்டெர்லைட்டைத் திறக்கும் சதித்திட்டங்களைக் கைவிடு! என்று வீதியில் இறங்கிப் போராடுவது இன்றைய அவசர அவசியக் கடமையாகும். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கூடாது என்று போராடி வரும் வீரஞ்செறிந்த தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்!

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

0

முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது! பிளக்கானோவ், காவுத்ஸ்கி உள்ளிட்ட ‘மாபெரும்’ தலைவர்களை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும்பான்மையினர் தங்களது “தந்தையர் நாட்டை” போரில் ஆதரிப்பது என முடிவெடுத்தனர். போர் உருவாக்கியிருந்த பேய்த்தனமான தேசிய வெறியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அது.

முதல் உலகப் போரை, ஏகாதிபத்தியங்கள் காலனிகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய நடத்தும் ஆக்கிரமிப்புப் போர் என்று கூறி, பரந்துபட்ட மக்களுக்கு போர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை முன் வைத்து ஒரு உள்நாட்டுப் போராக இதை உருவாக்கி புரட்சி செய்ய வேண்டும் என்றார் லெனின்.

ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும்போது, மொத்த அகிலத்திலும் லெனின் சிறுபான்மையானவர் தான்.

படிக்க :
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ தோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்

ஆனாலும், “கோட்பாட்டு அடிப்படியிலான ஒரு கொள்கை மட்டுமே சரியானதொரு கொள்கையாக இருக்க முடியும்” என கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து அதற்காக உறுதியாக நின்று போராடினார். இரண்டாம் உலகப் போரை ரசியாவில் உள்நாட்டுப் போராக மாற்றியதில் வெற்றி பெற்றார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.

நிகழ்வுகளை கூர்நோக்கி, அவற்றின் அடிநாதத்தைப் புரிந்து கொண்டு, பொது நீரோட்டம் உருவாக்கும் மாயைகளை எல்லாம் களைந்துவிட்டு, அரசு – ஆளும் வர்க்கம் ஆகியவற்றின் நகர்வுகளை பாட்டாளி வர்க்கப் பார்வை கொண்டு பரிசீலித்ததன் வெளிப்பாடுதான் புரட்சி குறித்த தோழர் லெனினின் பார்வை.

அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை மறந்து காவுத்ஸ்கி, பிளக்கானோவ் போன்ற பிரபலங்கள் தேசிய வெறிக்கு ஆட்பட்ட போது, லெனின் தேசிய வெறியை அம்பலப்படுத்தி புறந்தள்ளினார். அதற்கான அடிப்படை, மார்க்சிய கோட்பாட்டில் அவர் கொண்ட பற்றுறுதியில் வீற்றிருக்கிறது. அதுதான் லெனினை ஒரு சிறந்த சித்தாந்தவாதியாக நிலைநிறுத்தியது.

லெனினின் தீர்க்கமான விசாலமானக் கோட்பாட்டு அறிவு என்பது, அவரிடம் இயல்பிலேயே குடிகொண்டிருந்த தர்க்க ரீதியான கற்றலில் இருந்து கிடைத்ததுதான். லெனின் மார்க்சியத்தை தர்க்க ரீதியில் பயின்றார்.

அப்படிப் பயின்றதால் கிடைக்கப் பெற்ற கோட்பாட்டு உறுதிதான் லெனினை சிறந்த தர்க்க ஆற்றல் கொண்டவராக உருவாக்கியது. லெனினின் விவாதங்கள் குறித்து தோழர் ஸ்டாலின் குறிப்பிடுகையில், “லெனினின் வாதங்கள், எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கும். அவரது தர்க்க ஆற்றல் கேட்பவர்களை இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. அவரது வாதங்கள் கேட்பவர்களைப் பற்றிப் படர்ந்து அவர்களை சுற்றி இறுக வளைத்துக் கொள்ளும். அவருடன் வாதிப்பவர்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று அவர்கள் லெனினிடம் சரணடந்தாக வேண்டும் அல்லது அவர் முன் அப்பட்டமாக தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்”, என்று கூறுகிறார்.

கோட்பாட்டில் அவருக்கு இருக்கும் மேதாவிலாசமும் பற்றுறுதியும், வெற்றி பெறும் போது மமதை கொள்வதில் இருந்தும், தோல்வியடையும் போது புலம்பி அழுவதில் இருந்தும் அவரைக் காத்தது.

விவாதங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவது பெரும்பான்மை ஆதரவு பெறுவதுதான். சரியான கோட்பாடு, எல்லா சமயங்களிலும் பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்றுவிடுவதில்லை. பல சமயங்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகலாம்.

நமது கோட்பாடு சரியாக இருக்கையில், அது பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகும்போது, துவள்வதற்கு அங்கு எதுவும் இல்லை. மாறாக, சரியான கோட்பாட்டை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் நின்று போராடுவதற்கு உத்வேகத்தைத் தான் அந்தத் தோல்வி நமக்குத் தர வேண்டும் என்பார் லெனின்.

தோல்வியைக் கண்டு அஞ்சி புலம்புபவர்களிடம், “தோழர்களே, புலம்பாதீர்கள். நாம் வெற்றி பெற்றே தீருவோம். ஏனெனில், நம்முடைய நிலைப்பாடு சரியானது” என்று கடுமையாகச் சொல்வார் லெனின்.

அதே போல வெற்றியின் மமதையில் பேசும் தோழர்களிடமும் கடுமை காட்டியிருக்கிறார் லெனின்.

வெற்றி மயக்கம் கொண்டு மமதை அடையக் கூடாது என்பது முதல் விசயம். வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது விசயம். எதிரி தோற்கடிக்கப்பட்டுள்ளானே தவிர, எந்தவிதத்திலும் ஒழிந்துவிடவில்லை; எதிரிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பது மூன்றாவது விசயம்” என்று குறிப்பிடுகிறார் லெனின்.

கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா? வாய்ப்பே இல்லை.

படிக்க :
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

லெனின் மக்களின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தார். அவர் ஒருபோதும் மக்களின் புரட்சிகர எழுச்சியையும், கிளர்ச்சியையும் அவை எவ்வளவு பெரிய தோல்விகளைத் தந்திருந்தாலும் சாடியதில்லை.

“ … மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களது செயல்பாடுகளைப் புரிந்தறிய முயலுங்கள், மக்களது போராட்டங்களின் நடைமுறை அனுபவத்தை கவனமாக கற்றாய்வு செய்யுங்கள் என்பதே லெனினுடைய இடையறாத ஆணையாக இருந்தது.

மக்கள் திரளினரின் படைப்பாற்றலில் நம்பிக்கை தன்னெழுச்சியான போராட்டப் போக்கைப் புரிந்து கொள்ளவும், அதன் இயக்கத்தை பாட்டாளி வரக்கப் புரட்சிப் பாதையில் செலுத்தவும் லெனினுக்கு உதவிய அவரது செயற்பாடுகளின் சிறப்பம்சம் இதுவே.” என்று லெனின் மக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறித்து குறிப்பிடுகிறார் தோழர் ஸ்டாலின்.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படவிருக்கும் புரட்சியைத் துவக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சிறிய தவறும் கூட மிகப்பெரிய பேரழிவையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் அபாயம் மிக்கது. மேற்கூறிய தோழர் லெனினின் பண்புகள் தான் அவரை புரட்சியின் தலைவராக உயர்த்தியது. ஒரு புரட்சியைச் சாதிக்கச் செய்தது.

லெனின் ரசியாவில் சாதித்த புரட்சியை, இந்தியாவில் சாதிக்க அணிதிரள்வோம் !

வினவு

உதவிய நூல் 
லெனின் : ஒரு மலைக் கழுகு – தோழர் ஸ்டாலின் உரை

ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF

வந்துவிட்டது, தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல்!

அன்பார்ந்த தொழிலாளத் தோழர்களே,

மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களது  151-வது பிறந்தநாளில் (22, ஏப்ரல் 2021) தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரலாக “புதிய தொழிலாளி” என்கிற  இணையப் பக்கத்தை அறிமுகம் செய்து, துவக்கி வைப்பதில் உற்சாகம் அடைகிறோம்.

செப்.2014 முதல் 2019 வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தனிச் சுற்று இதழாக வெளிவந்த “புதிய தொழிலாளி” மாத இதழ் பல்வேறு காரணங்களால் நின்றுபோனது. பிப்-மார்ச் 2020-ல் கலைப்புவாதிகளால் அமைப்பு சீர்குலைக்கபட்ட காரணத்தினாலும், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இன்று வரை அமலில் இருக்கும் பலகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் இதழை அச்சிட்டு, தொழிலாளர்களிடம் கொண்டு செல்வது சாத்தியம் இல்லாமல்போனது.

காவி – கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்குப் பலியிட்டு வருகின்ற சூழலில் “புதிய தொழிலாளி” தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாக்க மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழு கட்டப்பட்டிருப்பதை 16.4.2021 தேதியிட்ட பத்திரிகை செய்தி மூலமாக அறிவித்திருந்தோம். பு.ஜ.தொ.மு-வின் பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசுவின் பாட்டாளி வர்க்க விரோதப் போக்குகளால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு செப்.2020-ல் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத் தவறியதற்காக அன்றைய ஒட்டுமொத்த மாநிலக் குழுவும் நீக்கப்பட்டு, அடுத்து வருகின்ற 4 ஆண்டுகளுக்கு பு.ஜ.தொ.மு-வின் எந்த மட்டத்திலும் பொறுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், புதிய மாநில நிர்வாகக் குழுவை தேர்வு செய்யும் மாநில மாநாட்டை நடத்தப் பொறுபளிக்கப்பட்ட 3 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவில் இருந்த 2 பேர், திட்டமிட்ட வகையில் மாநிலக் குழுவை தமது தரப்பினர் கைப்பற்றும் வகையில் பல்வேறு தகிடுதத்தங்களை செய்தனர். தேர்தல் குழுவின் பெரும்பான்மை என்கிற பெயரில் எந்த மரபு மீறலையும் செய்யத் துணிந்தனர்.

இனியும் இதை அனுமதிக்கக் கூடாது என்று களமிறங்கிய மாவட்டக் குழுக்கள், முன்னணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது. புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு-வை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய மாநிலத் தலைமை ஒன்றை உருவாக்குவதே ஒருங்கிணைப்புக்குழுவின் முதன்மையான பணி. அதனை மேற்கொள்ளவும், தொழிலாளி வர்க்கத்தை வர்க்க உணர்வூட்டி அமைப்பாக்கவும் இந்த இணையக் குரல் முன்னணி பாத்திரமாற்றும் என நம்புகிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு.
செல்பேசி : 80563 86294
இணைய தளம் : புதிய தொழிலாளி

கொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்

ந்தியாவில் கொரோனா தீவிரம் மிகவும் அதிகமாக உள்ளது. உத்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பிணங்களை எரிக்ககூட நீண்ட வரிசை நிற்கிறது.

தமிழகத்தில் பகலில் திறந்துவிட்டு இரவில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.

மோடி கும்பலின் இந்த கொரோனா ஊரடங்கிற்கு பின்னால் இருக்கும் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்

பாருங்கள் ! பகிருங்கள் !!

இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்

ண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி பட்டப் பகலில் எல்லோரும் பார்த்திருக்க நடுத்தெருவில் வைத்து ஒருவர் மீது ஏறி மிதித்து தாக்குதல் நடத்தினார். அதற்காக, இலங்கை போலீசாரை மிகவும் வன்மையாகக் கண்டித்து பல எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அந்த சூடு ஆறும் முன்பே கொழும்பு, மருதானை போலீசாரால் மற்றுமொருவர் குரூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சுகாதார சேவையின் ஆர்ப்பாட்ட நிகழ்வை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சுயாதீன ஊடகவியலாளரான மலிக அபேகோன் இவ்வாறு போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொழிற்சங்க சேவையாளர்களும், சட்டத்தரணியும்  (வழக்கறிஞர்) மலிகவை சந்திக்க மருதானை போலீசுக்கு சென்ற போதிலும் அவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

படிக்க :
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

♦ இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி

பின்னர் சட்டத்தரணியால் எழுத்து மூலமான விண்ணப்பம் விடுக்கப்பட்டு வெகு நேரத்திற்குப் பின்னரே அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது. அவரைக் கொண்டு செல்லும் போது ஜீப்பினுள் வைத்தும், காவலரணில் வைத்தும், போலீஸ் நிலைய அதிபரின் அறைக்குள் வைத்தும் தொடர்ச்சியாக அவர் மீது பல தடவைகள் போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் (Frontline Socialist Party) செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்திருக்கிறார்.

போலீஸ் தடுத்து வைத்திருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மலிக அபேகோனை கடந்த எட்டாம் தேதி மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக கொண்டு வந்த போலீஸ், அங்கு போலி தகவல்களை உள்ளடக்கிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அவ்வேளையிலும் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்த மலிக நீதிமன்ற வளாகத்தில் விழுந்து விட்டார். அதன் பிறகே அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை மீண்டும் 12-ஆம் தேதிக்கு ஒத்திப் போடப்பட்டது.

“ராஜபக்சே அரசாங்கமானது எப்போதும் கேமராவுக்கும், பேனாவிற்கும், இணையத்துக்கும்  பயப்படும் அரசாங்கம். காரணம், 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த அனைத்து விடயங்களும் இப்போதும் எமக்கு நினைவிருக்கிறது. அமைதியான ஆர்ப்பாட்டமொன்றைத் தடுத்து நிறுத்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்வது அக்காலத்தில் அதற்கு மிகவும் இலகுவானக் காரியமாக இருந்தது.

அவ்வாறே அமைதியான ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின்  போது, அது செய்து வந்த காரியமான குண்டர்களை அனுப்பி மிரட்டுவதை எம்மால் இன்னும் மறந்துவிட முடியாது. குறிப்பாக, சிவில் போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி தம்மை எதிர்ப்பவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது ராஜபக்சே ஆட்சியில் மிகவும் பரவலாக நடைபெற்றது. அது வடக்கு – கிழக்கிலும் கூட நடைபெற்றது.

மலிக அபேகோன்

எமக்கு இந்த நிகழ்வை வைத்துப் பார்க்கும்போது, ஊடகவியலாளர் ஒருவர் கையில் கேமராவை வைத்திருப்பதுவும் கூட அவரை மிகவும் பயங்கரமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நிலைமை மீண்டும் உருவாகியிருப்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இங்கு போலீசை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது. இது, போலீசைப் போலவே இந்த ஆட்சியின் செயற்பாடுகளிலும் உள்ள வன்முறைகளையே எடுத்துக் காட்டுகிறது.

ஆட்சி முறையானது ஜனநாயக எதிர்ப்புடன் செயற்படுமானால் இவ்வாறு மோசமான விடயங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது. ஆட்சியாளர்கள் ‘சட்டம் என்றால் தாம்தான்’ என்று கூறியவாறு மார்தட்டிக் கொண்டு செயற்படுகையில் இந்த மோசமான நிலைமை மேலும் மேலும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிடும்.

இது எமக்குத் தெளிவாகத் தென்படும் இடம் போலீஸ் நிலையம். ஆகவே இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்” என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வாறாயினும், இலங்கை போலீஸ் எனும் போது உடனே நினைவுக்கு வருவது சித்திரவதைதான். இலங்கை போலீஸ் என்றால் சித்திரவதை என்று குறிப்பிட்டால் அது கூட பிழையில்லை. இதை கடந்த பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்தாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ள போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாத நிலைமைதான் இப்போது வரைக்கும் இலங்கை போலீசிடம் காணப்படுகிறது.

அடுத்ததாக, எந்தவொரு பயங்கரமான குற்றச் செயலையும் பகிரங்கமாக செய்பவர் ஒருவர் அரசியலுடனும், அரசியல்வாதிகளுடனும் சம்பந்தப் பட்டிருப்பாரேயானால் அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமை இலங்கைக்குள் காணப்படுகிறது. அவ்வாறே குறிப்பாக, பாதுகாப்புப் பிரிவு, சிறைச்சாலை, போலீஸ் நிலையம் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பாலான குற்றச் செயல்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

படிக்க :
♦ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

♦ இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !

இவ்வாறான நிலைமையில் ‘சட்டத்தைக் காப்பதற்காக இருக்கிறோம்’ என்று தம்மைத்தாமே கூறிக் கொள்ளும் போலீசாரால், இவ்வாறு ஆட்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல் என்பது ‘குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்படாதிருக்கும் கலாச்சாரம்’ எனும் மோசமான நிலைமையின் நீட்சியாகும்.

போலீசை மாத்திரம் சுட்டிக் காட்டி அவர்கள் மீது குற்றம் சாட்டி நிறுத்திக் கொள்வது அல்லாமல், நாட்டை ஆள்பவர்களால் மேற்கொள்ளப்படும் ‘ஜனநாயக எதிர்ப்பு’ செயற்பாட்டுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்களால், ஒருமித்தத் தளத்தில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான செயற்பாடுகளால் மாத்திரமே இந்த மோசமான நிலைமையை மாற்ற முடியும்.

தமிழில் :  எம். ரிஷான் ஷெரீப்

disclaimer

தோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்

தோழர் லெனின் 151-வது பிறந்த தினம்

பாசிசத்தை வீழ்த்துவோம் ! சோசலிசத்தைப் படைப்போம் !

முதலாளித்துவத்தின் அழுகல் நிலைதான் ஏகாதிபத்தியம் என்றார் லெனின். ஏகாதிபத்தியத்தின் புல்லுருவித் தன்மையையும், நிதியாதிக்கக் கும்பல்களின் ஆதிக்கத்தைப் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார் லெனின். நிதியாதிக்கக் கும்பல் தனது கட்டற்ற சூறையாடலால் உலகளாவிய பொருளாதார – கட்டமைப்பு நெருக்கடியை உருவாக்கியது. நெருக்கடி எனும் புதை சேற்றில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள நிதியாதிக்கக் கும்பல் மேற்கொள்ளும் ஆகப் பிற்போக்கான அவதாரமே பாசிசம் !! பாசிசக் கும்பலை வெற்றி கொள்ள தோழர் லெனினின் பிறந்தநாளில் உறுதியேற்போம் !!

கருத்துப்படம் : மு.துரை

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

டை என்பதை நாம் நம் கலாச்சாரத்துடன் இணைத்துப் பார்ப்பது போல் ஆடையை ஒரு நபரின் நடத்தையுடன் பார்ப்பது தவறு. ஆடை மனித பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். தேவை மற்றும் சூழ்நிலைகேற்ப மாறிவரும் தன்மையுடையது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரட் சிங் ராவத் பெண்கள் அணியும் உடை குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

பெண்கள் ஜீன்ஸ் அணிவது அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான வழிகாட்டுதல் என்ற அவரின் ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக ஆன உடனே, “நான் ஜீன்ஸ் அணிவது பற்றி பேசவில்லை. நான் கிழிந்த ஜீன்ஸ் பயன்படுத்தும் பெண்களை தான் குற்றம் சாட்டுகிறேன்” என்றார்.

படிக்க :
♦ ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

♦ சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..!

இதே போன்று ராஜஸ்தானில் பல இடங்களில் பெண்கள் ஜீன்ஸ் போடுவது கலாச்சார கேடு என்பது போன்று ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சமூக நிலையில் பிற்படுத்தப்பட்ட ஆண்கள் ஜீன்ஸ், ‘கூலிங் கிளாஸ்’ போட்டுக் கொண்டு இடைநிலை சாதியில் உள்ள பெண்களைக் கவர்ந்து நாடகக் காதல் செய்கின்றனர் என்று சாதிய தலைவர் ஒருவர் (இராமதாஸ்) பேசியிருக்கிறார். இது போன்று நிறைய தருணங்களில் ஆடையுடன் பெண்களின் நடத்தை ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. இது ஒரு வகையான ஆண் ஆதிக்க மனவோட்டத்தின் வெளிப்பாடு.

சமூகம் நாகரிக வளர்ச்சியை நோக்கி செல்லும்போதே சில நடத்தை விதிமுறைகளின் மூலம் பெண்கள் உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டு, வரலாறு நெடுகிலும் ஆண்களால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தந்தப் பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். இதற்கு அந்த சமூகத்தின் சுழலும் சந்தர்ப்பமும் பொருத்து பெண்களின் சக்தி மற்றும் கட்டுப்பாடு தனிப்பட்ட தேர்வாககிறது. சுய வெளிப்பாடு மற்றும் அடையாளத்தை நிலைநாட்டுவதன்  பின்னணியில் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி பல சர்ச்சையிலிருந்தே ஜீன்ஸின் வரலாறு விரிகிறது.

ஜீன்ஸ் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்களிடமிருந்து துவங்கவில்லை. இதனைக் கடந்து போராளிகள்,  பழமைவாதிகள், நவீனவாதிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் மத்தியிலும் பயணித்த நீண்ட பயணம் அது. உலகளாவிய ஜீன்ஸின் இந்த பயணம் மிகவும் நீண்டது.

இதில் நுகர்வோர், தொழிலாளர்கள், பணம் படைத்த முதலாளிகள் என அனைவரும் அடங்குவர். உற்பத்தி மேலை நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்துள்ளதற்குக் காரணமாக ஒருபுறம் இந்தியாவின் மலிவான உழைப்புச் சந்தையும், தண்ணீர் வளமும் இருக்கையில், மறுபுறத்தில் ஜீன்ஸ் தேவையும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதற்கு மற்றொரு காரணம் சமகால நுகர்வோரின் தேவையே.

ஜீன்லின் வரலாறு

இதன் வரலாற்றை சற்றே புரட்டினோமெனில் அது, மத்திய காலகட்டங்களில் வடக்கு இத்தாலியில் உருவான ஐரோப்பிய பருத்தி ஆடை நிறுவனத்தில் இருந்து துவங்குகிறது. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் பருத்தி ஆடை லுகுரியா பகுதியில் மிகவும் பிரபலமானது. அதன் கனமான மற்றும் கரடுமுரடான ஆடைகளுக்கு இந்தப் பகுதி பெயர்போனது.

தரம் குறைவான பருத்தி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடைகள் டெனிம்கள் எனப்பட்டன. பின் கைத்தறி மற்றும் பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட குறுக்காக (Diagonal pattern) வடிவமைக்கப்பட்ட ஆடை ‘ஜீன்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. ஜெனோவா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதே இந்த ஆடைக்கு “ஜீன்ஸ்” என்ற பெயர் வர காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இது நவீன டெனிமிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். ஆனால், அது முற்றிலும் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட குறுக்கு விட்ட (diagonal) வடிவத்திலான இழைகளால் பிணைக்கப்பட்டது. ஜீன்ஸ் என்ற சொல் ஜெனோவா துறைமுகத்தில் இருந்து வந்ததைப் போல, டெனிம் என்ற சொல் ‘செர்ஜ் டி நைம்ஸ்’ என்பதிலிருந்து வந்தது. இது பிரான்சின் நைம்ஸில் தயாரிக்கப்பட்ட மற்றொரு குறுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடை என்று பொருள்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜீன்ஸ் அதிகளவில் பருத்தியில் இருந்து தயாரிக்கப்பட்டது. பின் தொழில்துறைப் புரட்சியின் போது, ​​லங்காஷயரின் ஆலைகள் ஜீன்ஸ் துணியின் மறுபிரவேசத்தையும் மற்றொரு வகையையும் அறிமுகப்படுத்தியது. அவற்றில் பெரும்பாலானவை இண்டிகோ நீலத்தில் சாயம் பூசப்பட்டன.

தொழில்துறைப் புரட்சி, இந்தியாவுடன் ஆழமானத் தொடர்பைக் கொண்டிருந்தது. சாயமிடுதல், பருத்தி ஆடைத் துறை ஆகியவற்றில் ஆழமான அறிவு, இந்திய கைவினைஞர்களிடம் இருந்து பெறப்பட்டது.

எல்லோராலும் விரும்பும் இந்த ஆடை, கடினமான வேலை செய்பவர்கள் உடுத்தும் ஆடையாக இருந்து வந்துள்ளது.  இது அனைவருக்குமான உடையாக அமெரிக்காவில் தான் உருவெடுத்தது. 1873-ம் ஆண்டு தொழிலதிபரான டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து ஆடையில் சில மாறுதல்களை சேர்ந்து தொழிலாளர் வர்க்கம் பயன்படுத்தக் கூடிய முழுமையான ஆடையாக அறிமுகப் படுத்தினர். டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து அதற்கானக் காப்புரிமைகளைப் பெற்றனர். பின் இருவரும் இணைந்து சான் ப்ரன்சிஸ்கோவில் உற்பத்தி மற்றும் விற்பனைக் கடைகளை துவங்கினர்.

அடுத்த பத்தாண்டுகளில் ஜீன்ஸை, ‘நாகரிக’ மற்றும் உயர்குடி மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பன்னிரெண்டாம் நுற்றாண்டுக்கு பின்னால் டெனிம் ஒரு எதிர்மறையான பயணத்தைத் தொடக்கியது. அமெரிக்க இளைஞர்களுக்குக் கவர்ச்சி, கிளர்ச்சியின் காற்று, புரட்சி ஆகியவற்றுக்கான குறிப்பை உடையில் அளித்தது. டெனிம் கலாச்சாரம் விரைவில் உலக அளவில் பெருவரவேற்பு பெற்றது. மேற்கத்தியக் கலாச்சாரத்தால் இந்தியாவிலும் இந்த அலை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

தொழிலாளர்கள் முதல் நவ நாகரீகம் வரை

தொழிலார்கள் பயன்படுத்தும் நீல நிற ஜீன்ஸ் காலப்போக்கில் நவ நாகரிக ஆடையாக மாறியது. ஆனாலும், அதன் தொடக்கம் என்னவோ அமெரிக்க தொழிலாளர்களிடம் இருந்துதான். தற்போது, ஜீன்ஸ் நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. இதற்குச் சான்றாக, சமீபத்தில் கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப் பயணமாக சென்ற பலரும் ஜீன்ஸ் உடுத்தி இருந்தனர் என்கின்றது ஒரு ஆய்வு.

எப்படியோ ஜீன்ஸ் எல்லோருக்குமான ஆடையாக மாறியது. இப்படி உலகளாவிய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது ஜீன்ஸ். கொரோனா பெரும்தொற்றுக்கு முன்னர் உலகிலேயே அதிகமான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவது இந்தியாவில்தான். இங்கு உற்பத்தி பெருகுவதற்கு, மலிவான விலையில் கிடைக்கும் பருத்தி, குறைவான தொழிலாளர் கூலி, நீர்வளம் என அனைத்தும் காரணமாகும்.

ஜீன்ஸ் இன்று பெருநகர சாலைகளை ஆக்கிரமிப்பதற்குப் பின்னால், தொழிலாளர் சுரண்டல், குறைவான ஊதியம் ஆகியவை இருப்பது பெரும்பாலானோரின் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அதையெல்லாம் கடந்த ஜீன்ஸ் உற்பத்தியில் உண்டாகும் கழிவுகள் சுற்றுச் சுழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க ஆகும் செலவை விட அதிலிருந்து வெளிபடும் கழிவுகள்தான் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.

இந்தியாவில் அதன் தாக்கம்

வேதிப் பொருட்கள் மற்றும் அதிக நீர் எடுக்கும் தன்மை கொண்ட பருத்தி சாகுபடி ஆகியவை டெனிம் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பருத்தி சாகுபடி மிகப்பெரிய பகுதியில் நடக்கிறது. ஆனால், இங்கு உற்பத்தியாகும் பருத்தி வேறு எங்கும் இருப்பதை விட, கிலோ இழைக்கு அதிக தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தன்மையுடன் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டெனிம் உற்பத்தியின் போது, செயற்கை இண்டிகோ மற்றும் சல்பர் சாயங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் உண்டாகும் நச்சுக் கழிவுகள் நீர் நிலைகளில் வெளியேற்றப் படுகின்றன. டெனிம் உற்பத்தியும் மற்ற பருத்தி துணிகளை விட அதிக சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.

ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 11,000 லிட்டர் தண்ணீர் செலவு செய்யபடுகிறது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் தினசரி குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது. இது ஒரு பருத்தி சட்டை  தயாரிக்கப் பயன்படும் நீரை போன்று நான்கு மடங்கு அதிகம். மேலும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்தாத நிலையில், உற்பத்தி மையங்களுக்கு அருகில் வாழும் மக்கள் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

படிக்க :
♦ பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

♦ ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணியின் திருக்கோவில் லூலாயி !

உற்பத்திச் சங்கிலியுடன் இணைந்த, ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், சுரண்டல் மற்றும் கடுமையான நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.  இப்படியான இன்னல்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்படும் ஜீன்ஸ்-ஐ ஆயத்த ஆடை நிறுவனங்களில் தையல் செய்யும் ஆடைத் தொழிலாளி பெரும்பாலும் ஒரு ஏழை இளம் பெண்ணாகவே இருக்கும்.

நாம் தேர்ந்தெடுக்கும் ஆடை அணிவதற்கான நமது சுதந்திரத்தை வலியுறுத்தும், இவ்வேளையில் நம்முடைய ஆடைகளைத் தயாரிப்பவர்களையும் நினைவில் கொள்வோம். ஆடை அவரவர் விருப்பம்.. அவரவர் சுதந்திரம் ! அது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதன் உற்பத்தியின் பின்னிருக்கும் மக்களின் வாழ்வும் இந்த உலகின் சுற்றுச் சூழலும் முக்கியம் !


சிந்துஜா
மூலக் கட்டுரை: நீதா தேஷ்பாண்டே
நன்றி : TheWire