தமிழகம் முழுவதும் காலவரையறையற்ற போராட்டத்தை அரசு ஊழியர் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பானது முன்னெடுத்து நடத்தி வருகிறது.
அதன் நான்காவது நாளான 25.01.2019 அன்று நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அப்போராட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர் – பேராசிரியர்களின் நியாமான கோரிக்கையை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர். அதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் வரவேற்றனர்.
போராட்டத்தில் புகுந்து கலாட்ட செய்ய முயன்று தோற்று ஓடிய ஆர்.எஸ்.எஸ்.காரர்.
இவ்வாறு போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் அறிவியல் மாநாட்டை மோடி அரசு மூடத்தனத்தை பரப்பும் மாநாடாக நடத்தியதை கண்டித்து பு.மா.இ.மு சார்பாக போடப்பட்ட துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். இதைப் பார்த்த ஒரு RSS-காரர் நோட்டிசை பார்த்து காண்டாகி நமது மாணவர் ஒருவரிடம் சண்டைக்கு வந்தார்.
உடனே அங்கிருந்த ஜாக்டோ ஜியோவினர் முழக்கமிட்டு RSS காரரை வெளியேற்றினர். பிறகு மீண்டும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென்று போலீசார் 20 பேர் மாணவர்களை சுற்றிவளைத்து தாக்கி யாருக்கும் தெரியாமல் போராட்டக் களத்திலிருந்து இழுத்து சென்றனர்.
இத்தகவல் அறிந்து பிற தோழர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு விசாரித்தபோது போலீசு, “மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பதற்காகவே இங்கு கொண்டு வந்தோம்…” என்று கூறினர் அதன்பின்னர் வேறு வழியின்றி மாணவர்களை விடுவித்தனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை இழிவுபடுத்துவதும், போராடும் மாணவர்களை மிரட்டுவதுமே RSS – BJP யின் செயல்பாடாக உள்ளது. அதிலும் ஆர்.எஸ்.எஸ். -கும்பல் புராண குப்பைகளை அறிவியல் என்று கூறி மக்கள் தலையில் கட்டும் பித்தலாட்டத்தை பு.மா.இ.மு தோழர்கள் அம்பலப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ்.-க்கு மிளகாய் கடித்தமாதிரி எரிகிறது. அதனால்தான் சவுண்டுவிட்டுப் பார்த்து அங்கிருந்து துரத்தப்பட்டதும், “இஞ்சி தின்ற குரங்காக” வெறியேறி போலீசை நாடியுள்ளது. போலீசும் தனது ‘கடமையை’ செய்து தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் எனக் காட்டிவிட்டது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாகவும், ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வானது நம் அனைவருக்கும் காட்டிவிட்டது.
தகவல் : புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.
4 ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள்: உண்மை நிலை என்ன?
தாங்கள் ஆட்சிக்கு வரும் வரை இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவ மனைகள்தான் இருந்ததாகவும் 2014-ல் ஆட்சிக்கு வந்து 48 மாதங்களில் 13 அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைகளை உருவாக்க ஒப்புதல் அளித்திருப்பதாகவும் மத்திய அரசு சொல்கிறது.
இந்த 13 மருத்துவமனைகளின் நிலை என்ன என்பது குறித்து இந்தியா டுடே இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைப் பெற்று, இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது (21 ஜூன் 2018-ல் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது).
1. ஒப்புதல் அளிக்கப்பட்ட 13 மருத்துவமனைகளில் ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் வரவிருக்கும் 5 மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை.
2. ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழ்நாடு, குஜராத்தில் வரவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் எப்போது துவங்கப்படும் என்பதற்கு எவ்வித கால வரையரையும் வகுக்கப்படவில்லை.
3. 2020 மார்ச்சில் துவங்கப்படவிருப்பதாகக் கூறப்படும் உத்தரப்பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான பணத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் அமையவிருக்கும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மொத்தச் செலவு 1,011 கோடி. ஆனால், இதுவரை 98.34 கோடி மட்டுமே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த மருத்துவமனை அடுத்த ஆண்டு துவங்கப்படாது.
This slideshow requires JavaScript.
5. ஆந்திர மாநிலத்தில் 1,618 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. இதுவரை 233.88 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் இயங்கவேண்டிய மருத்துவமனை இது.
6. மேற்குவங்கத்தின் கல்யாணியில் கட்டப்படும் மருத்துவமனையின் திட்டச் செலவு 1,754 கோடி ரூபாய். இதுவரை 278.42 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் துவங்கப்பட வேண்டிய மருத்துவமனை இது.
7. மகாராஷ்டிராவின் நாக்பூரிலும் 2020 அக்டோபரில் மருத்துவமனை துவங்கப்பட வேண்டும். ஆனால், திட்டச் செலவு 1,577 கோடியில் 231.29 கோடியே விடுவிக்கப்பட்டுள்ளது.
8. அசாமின் காமரூப் மாவட்டத்தில் அமையவிருக்கும் இந்த மருத்துவமனையின் திட்டச் செலவு 1,123 கோடி ரூபாய். இதுவரை 5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
9. பஞ்சாபின் பதிந்தாவில் கட்டப்படும் எய்ம்ஸின் திட்டச் செலவு 925 கோடி ரூபாய். 2020 ஜூனில் துவங்க வேண்டிய மருத்துவமனைக்கு இதுவரை 36.57 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
10. ஜம்முவின் விஜய்பூரிலும் காஷ்மிரின் அவந்திபுராவிலும் எய்ம்ஸிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், 90.84 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.
11. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,350 கோடியில் மருத்துவமனையைச் செயல்படுத்தத் திட்டம். 2017 அக்டோபர் 3ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால், இதுவரை ஒரு பசை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
12. பிஹாரில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க 2015-16 நிதி அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இடமோ, நிதியோ முடிவுசெய்யப்படவில்லை.
13. தமிழ்நாட்டின் தோப்பூரில் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது துவங்குமென்ற அறிவிப்பும் இல்லை.
14. ஜார்க்கண்டின் தேவ்கடில் எய்ம்ஸ் துவங்கப்படுமென அறிவிப்பு. திட்டச் செலவு 1103 கோடி ரூபாய். 9 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2021ல் மருத்துவமனை செயல்படுமாம்.
நீதி மன்றத்தைவிட்டு அவள் வெளியே வந்தாள். அதற்குள் பொழுது இருண்டு போய்விட்டதைக் கண்டு அவள் அதிசயப்பட்டாள். தெருமூலைகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிச் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. நீதி மன்றத்துக்கு வெளியே கும்பல் கும்பலாக ஜனங்கள் கூடி நின்றார்கள். அந்தக் குளிர்ந்த காற்றில் வெண்பனி சரசரத்தது. இளமை நிறைந்த குரல்கள் ஒலித்தன. சாம்பல் நிற நிலையங்கி தரித்த ஒரு மனிதன் சிஸோவின் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு அவசர அவசரமாகக் கேட்டான்:
”என்ன தண்டனை?”
“தேசாந்திர சிட்சை”
“எல்லோருக்குமா?”
”ஆம்.”
அந்த மனிதன் போய்விட்டான்.
”பார்த்தாயா?” என்றான் சிஸோவ், “அவர்களுக்கும் இதில் ஆர்வம்.”
சிறிது நேரத்தில் பல யுவதிகளும் இளைஞர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர்களது பரபரப்பு, சுற்றுச் சூழ நின்ற மற்ற மனிதர்களைக் கவர்ந்திழுக்க தாயும் சிஸோவும் நின்றார்கள். தண்டனையைப் பற்றியும், கைதிகள் எப்படியெப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றியும், யார் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியும் அந்த வாலிபர்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களது கேள்விகளிலெல்லாம் ஒரு ஆர்வம் நிறைந்த குறுகுறுப்பு நிறைந்திருந்தது. அந்த நேர்மையையும் ஆர்வத்தையும் கண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.
“இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய்” என்று யாரோ சொன்னார்கள்; உடனே எல்லோரும் அமைதியானார்கள்.
“நான் உங்கள் கையைப் பிடித்துக் குலுக்கலாமா?”
யாரோ ஒருவனின் பலத்த கை தாயின் விரல்களைப் பற்றிப் பிடித்துக் குலுக்கியது. யாரோ ஒருவனின் உத்வேகமான குரல் ஒலித்தது.
“உங்கள் மகன் எங்கள் அனைவருக்கும் தைரியம் ஊட்டும் சிறந்த உதாரணமாய் விளங்குவான்…”
“ருஷ்யத் தொழிலாளர்கள் நீடூழி வாழ்க” என்று ஒரு உரத்த குரல் ஒலித்தது.
அந்தக் கோஷக்குரல்கள் பற்பலவாகி, இங்குமங்கும் எங்கும் ஒலிக்கத் தொடங்கின. ஜனங்கள் நாலாதிசைகளிலுமிருந்து ஓடிவந்து தாயையும் சிஸோவையும் சூழ்ந்துகொண்டார்கள். போலீஸ்காரர்களின் விசில் சப்தங்கள் கீச்சிட்டு அலறின. எனினும் அந்தச் கீச்சுக் குரலால் இந்தக் கோஷ வெள்ளத்தை அமுங்கடிக்க முடியவில்லை. சிஸோவ் சிரித்தான். தாய்க்கு இதெல்லாம் ஒரு ஆனந்தமயமான கனவு போலிருந்தது. அவள் புன்னகை செய்தவாறே தலை குனிந்தாள். ஜனங்களோடு கை குலுக்கினாள். ஆனந்த பரவசத்தால் எழுந்த கண்ணீரால் அவளது தொண்டையும் அடைபட்டுத் திணறியது. அவளது கால்கள் களைப்பினால் உழன்று தடுமாறின. எனினும் அவள் இதயத்தில் ஏதோ ஒரு பிரகாசமான ஏரியின் பிரதிபலிப்பைப் போல் எண்ணங்கள் பொழிந்து வழிந்தன.
அவளருகிலே நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவன் தெளிவாக உணர்ச்சிவசப்பட்டு நடுநடுங்கும் குரலில் பேசத் தொடங்கினான்.
“தோழர்களே! ருஷ்ய மக்களைக் கொன்று குலைத்துத் தின்று தீர்க்கும் ராட்சச மிருகம் இன்று மீண்டும் தனது பேராசை நிறைந்த பற்களைத் திறந்து மூடியது.”
”அம்மா நாம் போகலாமே” என்றான் சிஸோவ்.
இந்தச் சமயத்தில் சாஷா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்தவுடன் தாயின் கரத்தைப் பற்றிப் பிடித்து அவளைத் தெருவின் அடுத்த பக்கமாக அழைத்துக்கொண்டு போனாள்.
”அவர்கள் ஏதாவது கலாட்டா செய்வதற்கு முன், அல்லது யாரையேனும் கைது செய்யத் தொடங்குமுன் வந்து விடுங்கள்” என்றாள் அவள். “சரி, தேசாந்திர சிட்சையா? சைபீரியாவுக்கா?”
“ஆமாம். ஆமாம்.”
“அவன் எப்படிப் பேசினான்? ஆனால் எனக்குத் தெரியும். அவன்தான் அவர்கள் அனைவரிலும் எளிமை நிறைந்தவன். எல்லோரைக் காட்டிலும் உறுதி வாய்ந்தவன். ஆனால் அவன் ரொம்பக் கண்டிப்பான பேர்வழிதான்; இயற்கையில் அவன் நுண்ணிய உணர்ச்சியுள்ளவன், மென்மையானவன். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள வெட்கப்படுகிறான். அவளது காதல் வார்த்தைகள் ஆர்வங்கலந்து உணர்ச்சி வேகத்தோடு வந்தன. எனவே அந்த வார்த்தைகள் தாயின் மனத்துக்கு அமைதியைத் தந்தன; புதிய பலத்தைத் தந்தன.
”நீங்கள் அவனோடு போய் எப்போது சேரப்போகிறீர்கள்?” என்று சாஷாவின் கரத்தை அன்போடு பற்றிக்கொண்டு கேட்டாள் தாய்.
“என் வேலையை யாராவது ஏற்றுக்கொண்டவுடனேயே!” என்று தன்னம்பிக்கையோடு முன்னோக்கிப் பார்த்தவாறே கூறினாள் சாஷா, “நானும் ஒரு தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறேன். அனேகமாக, அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்படிச் செய்தால், அவனை அனுப்பிய இடத்துக்கே என்னையும் அனுப்பும்படி நான் கேட்டுக்கொள்வேன்.”
“அப்படி நீங்கள் போனால், என் அன்பை அவனிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சிஸோவின் குரல் இடையில் ஒலித்தது, சிஸோவிடமிருந்து வருவதாக மட்டும் சொல்லுங்கள். அதுபோதும். அவனுக்கு என்னைத் தெரியும். பியோதர் மாசினின் மாமன் என்று தெரியும். சாஷா திரும்பினாள். தன் கரத்தை நீட்டினாள்.
“எனக்கு பியோதரைத் தெரியும். என் பெயர் சாஷா”
“உங்கள் தந்தைவழிப் பெயர்?”
அவள் அவனைப் பார்த்தாள். பதில் சொன்னாள்.
“எனக்குத் தந்தை கிடையாது.”
“செத்துப் போனாரா?”
“இல்லை. சாகவில்லை.” அவளது குரலில் ஏதோ ஒரு அழுத்தமும் உறுதியும் குடிபுகுந்தன; அது அவள் முகத்திலேயே பிரதிபலித்தது. “அவர் ஒரு நிலப்பிரபு. இப்போது ஜில்லா அதிகாரி: அவர் விவசாயிகளைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.”
“ஹும்” என்று முனகினான் சிஸோவ். அதற்குப் பின் நிலவிய அமைதியில் அவன் அவள் பக்கமாக நடந்து சென்றான். அவள் பக்கமாக அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான்.
“சரி, அம்மா. நான் வருகிறேன்” என்று கூறினான் அவன்; “நான் இடது பக்கமாகத் திரும்புகிறேன். பெண்ணே! போய் வருகிறேன். அப்பாவிடம் கடுமையாயிருக்கிறீர்கள். இல்லையா? ஆமாம். அது உங்கள் விஷயம்…”
”உங்கள் மகன் நல்லவனாக இல்லாமலிருந்தால், ஜனங்களைக் கொடுமை செய்தால் நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள். இல்லையா?” என்று உணர்ச்சியோடு சொன்னாள் சாஷா.
“ஆமாம். ஒருவேளை” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் சிஸோவ்.
“அதாவது மகனைவிட நீதிதான் உங்களுக்கு அருமை வாய்ந்தது என்று அர்த்தம், இல்லையா? அதுபோலத்தான் எனக்கும், தர்மம்தான் என் தந்தையைவிட அருமையாயிருக்கிறது…”
சிஸோவ் புன்னகை செய்தான். தலையை ஆட்டிக்கொண்டான்.
”சரி. நீங்கள் ஒரு புத்திசாலிப் பெண். நீங்கள் மட்டும் இதைக்கொண்டு செலுத்தினால், கிழவர்களைச் சமாளித்துவிடுவீர்கள். உங்களுக்கு அழுத்தம் அதிகம். உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும். ஜனங்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பாயிருக்கப் பாருங்களேன்! நீலவ்னா, நான் வருகிறேன். பாவெலை நீ பார்த்தால், நான் அவன் பேச்சைக் கேட்டதாக அவனிடம் சொல். அந்தப் பேச்சு பூராவும் புரியவில்லை. சமயத்தில் ஓரளவு பயங்கரமாய்க்கூட இருந்தது. ஆனால் பொதுவாக, அவன் சொன்னதுதான் ரொம்ப சரி.”
அவன் தன் தொப்பியை எடுத்து வணங்கிவிட்டு, தெரு மூலையைக் கடந்து திரும்பினான்.
”இவன் ஒரு நல்ல ஆசாமிதான் போலிருக்கிறது” என்று தன் பெரிய கண்களில் களிப்புக் குமிழிட அவனைப் பார்த்துக்கொண்டே கூறினாள் சாஷா.
இன்று அந்தப் பெண்ணின் முகத்தில் இதுவரையில் இல்லாத மென்மையும் அருமையும் குடியேறியிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.
வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒரு சோபாவின் மீது நெருங்கி உட்கார்ந்து, அமைதியில் ஓய்வு கொண்டிருந்த தாய் பாவெலிடம் சாஷா சொல்லப்போகும் பயணத்தைப் பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். சாஷா தன் புருவங்களை உயர்த்திக் கனவு காணும் அகன்ற கண்களோடு எங்கோ தொலைவில் ஏறிட்டுப் பார்த்தாள். அவளது வெளுத்த முகத்தில் ஏதோ ஒரு அமைதியான சிந்தனையின் சாயை படர்ந்து பிரதிபலித்தது.
“உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தவுடன் நான் வருவேன். வந்து அந்தக் குழந்தைகளுக்கு செவிலித்தாயாக இருப்பேன். இங்கிருப்பதைவிட, நமது வாழ்க்கை அங்கு ஒன்றும் அவ்வளவு மோசமாக இருந்துவிடப் போவதில்லை. பாவெலுக்கும் வேலை வெட்டி கிடைப்பதில் சிரமமிருக்காது. திறமையுள்ள அவனால் எந்த வேலையையும் செய்ய முடியும்.”
சாஷா தாயையே கூர்ந்து நோக்கினாள்.
“நீங்கள் அவனை இப்போது பின் தொடர்ந்து செல்ல விரும்பவில்லையா?’ என்று கேட்டாள்.
”இப்போது என்னால் அவனுக்கு என்ன ஆகப்போகிறது?” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய். “அவன் தப்பிவர எண்ணினால் நான் அவனுக்கு ஒரு தொல்லையாயிருப்பேன். அவனோடு நானும் போவதற்கு அவன் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டான்.”
சாஷா தலையை ஆட்டினாள்.
”நீங்கள் சொல்வது சரிதான். அவன் சம்மதிக்கத்தான் மாட்டான்.”
”மேலும் எனக்கு இங்கு என் வேலையே சரியாயிருக்கிறது” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டாள் தாய்.
”ஆமாம். அதுவும் நல்லதுதான்” என்றாள் சாஷா.
திடீரென அவள் எதையோ விட்டெறியப்போவது போல் துள்ளியெழுந்தாள்; எளிமையோடும் அமைதியோடும் பேசத் தொடங்கினாள்.
“அவள் ஒன்றும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கமாட்டான். எப்படியும் அவன் ஓடிவந்துவிடுவான்……”
”அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் கதி?”
“அதெல்லாம் சமயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அவன் என்னை ஒன்றும் பொருட்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அவனது போக்குக்கு இடையூறாக நான் என்றுமே இருக்கமாட்டேன். அவனைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமம்தான். இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன். அவன் வழியிலே நான் நிற்கவே மாட்டேன்.”
சாஷா சொன்னபடியே செய்வாள் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள். அந்தப் பெண்ணுக்காக அனுதாபப்பட்டாள்.
”உங்களுக்கு ரொம்பச் சிரமமாயிருக்குமே. கண்ணு!” என்று அவளைத் தழுவிக்கொண்டே சொன்னாள் தாய்.
சாஷா மிருதுவாகச் சிரித்தாள்; தாயின் பக்கமாக நெருங்கிக் கொண்டாள்.
இந்தச் சமயத்தில் களைப்போடும் ஆயாசத்தோடும் நிகலாய் இவானவிச் உள்ளே வந்தான். தனது உடுப்புக்களை அவசரமாகக் கழற்றிக்கொண்டே அவன் பேசினான்.
“சாஷா! சந்தர்ப்பம் இருக்கிறபோதே நீங்கள் வெளியே தப்பிப் போய்விடுவது நல்லது. இன்று காலை முதல் இரண்டு உளவாளிகள் என்னைப் பின்தொடர்ந்தே திரிகிறார்கள். என்னைக் கைது செய்யத்தான் இப்படி வருகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நான் நினைத்தது என்றும் தவறியதில்லை. ஏதோ நடந்து போயிருக்கிறது. இதற்குள், இதோ பாவெலின் பேச்சு இருக்கிறது. இதை அச்சிட்டு வழங்குவதெனத் தீர்மானித்து விட்டோம். இதை லுத்மீலாவிடம் கொண்டு போங்கள். இதை வெகு சீக்கிரம் அச்சடித்து முடிக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள். பாவெல் மிகவும் அருமையாகப் பேசினான். நீலவ்னா..! போகிறபோது அந்த உளவாளிகளையும் ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்கள். சாஷா!….”
அவன் பேசிக்கொண்டே குளிர்ந்து விறைத்த தன் கரங்களைத் தேய்த்து விட்டுக்கொண்டான். மேஜையருகே சென்று டிராயரைத் திறந்து ஏதேதோ காகிதங்களை வெளியே எடுத்தான். சிலவற்றைக் கிழித்தெறிந்தான். சிலவற்றை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்தான். அவன் மிகவும் கவலைப்பட்டுக் களைத்து போனவனாகத் தோன்றினான்.
”நான் இந்த டிராயர்களைச் சுத்தம் செய்து அப்படியொன்றும் நாட்களாகிவிடவில்லை. இந்தப் புதிய தாள்களையெல்லாம் எப்படி இங்கு வந்தன என்பது சைத்தானுக்குத்தான் தெரியும். சரி, நீலவ்னா, நீங்கள் இன்றிரவு இங்குத் தங்காமல் வேறெங்காவது போயிருப்பதே நல்லது. என்ன சொல்கிறீர்கள். இங்கே நடக்கப்போகும் களேபரத்தைக் காண உங்களுக்குச் சகிக்காது. மேலும் அவர்கள் உங்களையும் கொண்டு போய்விடக்கூடும். பாவெலின் பேச்சுப் பிரதியை ஊர் ஊராய் விநியோகிப்பதற்கு நீங்கள் அவசியம் தேவை.”
”அவர்கள் என்னை என்ன செய்யப்போகிறார்கள்?”
நிகலாய் தன் கண்களுக்கு முன்னால் கையை உயர்த்தி வீசிக்கொண்டே உறுதியோடு சொன்னான்.
”இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் மோப்பம் பிடித்து உணர எனக்குத் தெரியும். நீங்கள் லுத்மீலாவுக்கும் பேருதவியாய் இருக்க முடியும். நாம் சந்தர்ப்பங்களை இழக்காதிருப்பதே நல்லது…”
தன் மகனது பேச்சை அச்சடிப்பதில் தானும் உதவ முடியும் என்ற எண்ணம் தாய்க்கு மனமகிழ்ச்சியைக் கொடுத்தது.
“அப்படியானால் நான் இதோ போகிறேன்” என்றாள்.
அவள் அத்துடன் வியப்புணர்ச்சி மேலிடப் பேசினாள்.
”நான் எதைக் கண்டும் இனிமேல் பயப்படவே போவதில்லை. எல்லாம் ஆண்டவன் அருள்”
”சபாஷ்!” என்று அவளைப் பார்க்காமலேயே கூறினான் நிகலாய். “சரி, என் டிரங்குப் பெட்டியும் துண்டும் எங்கிருக்கின்றன என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்களோ எல்லாவற்றையும் சூறையாடி விட்டீர்கள்! எனவே என் சொந்தச் சாமான்களைக் கண்டுபிடிப்பதுகூட எனக்குச் சிரமமாய்ப் போய்விட்டது.”
சாஷா ஒன்றுமே பேசாமல் கிழித்துப் போட்ட காகிதங்களை அடுப்பில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலைக் கரியோடு சேர்த்து நிரவிக் கொண்டிருந்தாள்.
“போவதற்கு நேரமாகிவிட்டது. சாஷா” என்று தன் கையை நீட்டிக்கொண்டே சொன்னான் நிகலாய். “போய்வாருங்கள். ஏதாவது சுவாரசியமான புத்தகங்கள் அகப்பட்டால் எனக்கு அனுப்பி வைக்க மறந்துவிடாதீர்கள். போய் வாருங்கள். அருமைத் தோழியே, போய் வருக! ஜாக்கிரதை…”
”உங்களுக்கு என்ன நெடுங்காலச் சிறைவாசம் கிட்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள் சாஷா.
”யாருக்குத் தெரியும்? ஒருவேளை அப்படியே நேரலாம். எனக்கு எதிரான சாட்சியங்கள் பல அவர்களிடம் இருக்கின்றன. நீலவ்னா.
நீங்களும் இவளுடனேயே போகலாமே. இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் பின் தொடர்வதென்பது அவர்களுக்குச் சிரமம். இதனால் இப்போதே போவது நல்லது.”
“சரி.” என்றாள் தாய். “இதோ நான் உடுப்பு மாற்றிக் கொள்கிறேன்.”
அவள் நிகலாயையே கவனத்தோடு பார்த்தாள். ஆனால் அவனது அன்பும் ஆதரவும் நிறைந்த முகத்தில் ஏதோ ஒரு ஆத்திரம் பதைபதைப்புத்தான் லேசாகத் திரையிட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனிடம் எந்தக் கலவரக் கலக்க உணர்ச்சியும் காணோம். மற்றவர்களையெல்லாம் விட, தனக்கு மிகவும் அருமையானவனாய்ப் போய்விட்ட அவனிடம் எந்தவித உத்வேகப் பரபரப்புக் குறிகளும் காணப்படவில்லை. அவன் எப்போதும் யாரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் பழகி வந்தான். எல்லோரிடமும் அன்போடும் நிதான புத்தியோடும், ஒட்டாமலும்தான் பழகி வந்தான். மற்றவர்களது வாழ்க்கைக்கெல்லாம் மேலானதாக விளங்கும் எதோ ஒரு அந்தரங்க வாழ்க்கையை அவன் தனக்குத்தானே வாழ்ந்து வந்தான். இன்றும் அவன் அப்படியேதான் இருந்தான்.
மற்றவர்களிடம் அவன் பழகுவதைவிட, தாயிடமே அவன் மிகவும் ஒட்டுறவோடு நெருங்கிப் பழகினான் என்பதும் தாய்க்குத் தெரியும். அவனை அவள் நேசித்தாள். தன்னைத்தானே நம்ப முடியாத ஒரு பாசத்தால் அவனை நேசித்தாள். இப்போதும் அவள் அவனுக்காகக் கொண்ட அனுதாப உணர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை. ஆனால் அவள் அதை வெளிக் காட்டிக்கொள்ளவும் துணியவில்லை. வெளிக்காட்டிக்கொண்டால் அவன் ஒருவேளை கலக்கமுற்று குழம்பக்கூடும் என அஞ்சினாள். அப்படி அவன் குழம்பினால், அவன் வழக்கம் போலச் சற்று வேடிக்கையானவனாகத் தெரியக்கூடும் என்று அவளுக்குத் தோன்றிது. அவனை அந்தக் கோலத்தில் பார்க்க அவள் விரும்பவில்லை.
அவள் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தபோது நிகலாய் சாஷாவின் கையைப் பற்றிப் பிடித்தவாறு பேசிக்கொண்டிருந்தான்.
”அபாரம்! அவனுக்கும் உங்களுக்கும் அது ஒரு நல்ல காரியம்தான் என்பது எனக்கு நிச்சயம். தனி நபரின் ஒரு சிறு சொந்தச் சுகத்தால், யாருக்கும் எந்தக் கெடுதலும் விளையப் போவதில்லை. தயாராகி விட்டீர்களா நீலவ்னா?”
அவன் அவளருகே வந்தான். புன்னகை புரிந்தவாறே தன் மூக்குக் கண்ணாடியைச் சரியாக்கிக் கொண்டான்.
”நல்லது போய் வாருங்கள். மூன்று அல்லது நாலு மாசம், மிஞ்சிப் போனால் ஆறு மாசம். அதற்கு மேல் போகாது என நம்புகிறேன். ஆறு மாதங்கள் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதிதான் சரி. ஜாக்கிரதையாக இருங்கள். சரி, கடைசி முறையாக நாம் தழுவிக் கொள்வோம்.
ஒல்லியாய் மெலிந்த தனது உறுதி வாய்ந்த கரங்களை அவள்மீது இங்கிதத்தோடு மெதுவாகப் போட்டு அவளது கண்களையே பார்த்தான் அவன்.
“உங்கள் மீது நான் காதல் கொண்டுவிட்டேன் போலிருக்கிறது” என்று கூறிச் சிரித்தான். அதனால்தான் இப்படித் தழுவுகின்றேன்……”
அவள் அவனது நெற்றியையும் கன்னங்களையும் ஒன்றும் பேசாது முத்தமிட்டாள். ஆனால் அவளது கைகள் மட்டும் நடுநடுங்கின. அவன் அதைக் கண்டுவிடக் கூடாது என்பதற்காக அவள் கைகளைச் சட்டென்று விலக்கிக்கொண்டாள்.
”நாளைக்கு ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். காலையிலே ஒரு சிறுவனை அனுப்புங்கள். அந்த மாதிரி சிறுவன் லுதமீலாவிடம் இருக்கிறான். அவன் நான் இருக்கிறேனா போய்விட்டேனா என்று பார்த்துவிட்டு வந்து சொல்வான். சரி, போய் வாருங்கள். தோழர்களே எல்லாம் நல்லபடியாக நடக்கும்.”
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறித் தெருவுக்குள் வந்ததும் சாஷா அமைதியோடு கூறினாள்.
”அவன் சாகப் போவதென்றாலும் கூட, இப்படித்தான். இதே அவசரத்தோடுதான் நடந்து கொள்வான். அவனை மரணமே எதிர்நோக்கி வரும்போது கூட அவன் தன் கண்ணாடியைச் சரி செய்து பார்த்துக்கொண்டே ‘அபாரம்’ என்று கூறிக்கொண்டே சாகத் துணிவான்.”
“நான் அவனை நேசிக்கிறேன்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.
”நான் அவனை நேசிக்கவில்லை. ஆனால் அவனைக் கண்டு வியக்கிறேன். அவனைப் பிரமாதமாக மதிக்கிறேன். அவன் சில சமயங்களில் அன்போடும் ஆதரவோடும் இருக்கத்தான் செய்கிறான். இருந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு வறட்சி காணப்படுகிறது. அவன் போதுமான அளவுக்கு மனிதத் தன்மை பெற்றவனாக இல்லை…. சரி. நம்மைப் பின்தொடர்ந்து ஆட்கள் வருவதாகத் தெரிகிறது. நாம் இருவரும் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து போவதே மேல். யாராவது பின்தொடர்வதாகத் தெரிந்தால், லுத்மீலாவின் இருப்பிடத்துக்குப் போகாதீர்கள்.”
”போவேனா?” என்று அதை ஆமோதித்தாள் தாய். சாஷாவோ தான் கூறியதையே மீண்டும் அழுத்திக் கூறினாள்.
“போகவே போகாதீர்கள். என் இடத்துக்கு வந்துவிடுங்கள். சரி. நாம் தற்போதைக்குப் பிரிந்துவிடலாம்.”
அவள் விருட்டெனத் திரும்பி வந்தவழியே நடக்க ஆரம்பித்தாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொழிப்போர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
*****
சிதம்பரம்
மொழி போர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணமலை பல்கலைக் கழகத்தில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக மொழிப்போர் தியாகி மாணவர் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்தி – சமஸ்கிருதம் மொழியை திணித்து, பல்வேறு மொழி, இன கலாச்சாரத்தை அழித்து இந்து-இந்தி-இந்தியா எனும் அகண்ட பாரதத்தை திணிக்கும் மோடி அரசை கண்டித்தும், நாடு முழுவதும் பரவிவரும் பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சிதம்பரம்.
*****
கடலூர்
ஜனவரி 25 மோழிபோர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பேராசிரியர், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கடலூர் மாவட்டம், தொடர்புக்கு – 97888 08110.
*****
பென்னாகரம்
ஜனவரி-25 மொழிப்போர் தியாகிகள் தினம் !
“மொழி உரிமை, சமூகநீதி ஜனநாயகம் காக்க! பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த ஒன்றுப்படுவோம்!” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 25.10.2019 அன்று பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த தெருமுனை கூட்டத்தில் தருமபுரி மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துகுமார் மொழி போர் தியாகிகளை நினைவு கூறினார்.
பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மொழி காப்பது நமது கடமை என்பதை விளக்கினார். இறுதியாக பு.மா.இ.மு. தோழர் பாலன் நன்றியுரை ஆற்றினார்.
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தர்மபுரி.
கடந்த ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும் இணைந்து ”வீதி விருது வழங்கும் விழா” ஒன்றை நடத்தியது. விழாவின் ஒரு பகுதியாக ஓவியர் முகிலனின் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கிகள் பல பெயர்களின் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தோழர் முகிலனின் அந்த ஓவியங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதுவரை அந்த ஓவியங்களை பார்க்காதவர்களும், அறிந்தவர்களும் முகிலனை ஆதரித்தனர். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். – பாஜக தரப்பு நபர்கள் முகிலனுக்கு மிரட்டல் விடுத்ததோடு அந்த ஓவியங்கள் இந்து மதத்தை – பெண்களை இழிவுபடுத்துவதாக அவதூறு பிரச்சாரத்தையும், வன்மத்தையும் கட்டவிழ்த்து விட்டனர்.
உண்மையில் அந்த கண்காட்சியில் கார்ப்பரேட் சுரண்டல், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் உள்ளிட்டு 34 ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. மோடியை விமர்சிக்க கூடாது என்பதையே பெண்கள் மீதான அவதூறு என சங்கிகள் திசைதிருப்பினர்.
இது தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்தார். தனது பின்னணி, தனது சமூக அரசியல் பார்வை விரிந்த வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் வரைந்த வலி நிறைந்த ஓவியங்கள், அரசியல் போராட்டங்களில் கலைஞனின் பங்கு என விரிந்த அளவில் முகிலன் உணர்ச்சிகரமாக பேசுகிறார். தனது ஓவியங்களில் இருக்கும் ‘மூர்க்கம்’ ஏன் என்பதையும் விளக்குகிறார். சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், உழைக்கும் மக்கள் மீது நடக்கும் மூர்க்கமான தாக்குதலை மென்மையாக எப்படி வரைய முடியும், சாதாரண மக்களிடம் இருக்கும் திரிசூலத்தை இந்துத்துவம் எப்படி அரசியல் ஆயுதமாக பயன்படுத்திகிறது என்பதையும் விளக்குகிறார். தொடர்ந்து தனது தூரிகை மக்களுக்கான ஓவியங்களை படைப்பாகத் தரும் என்கிறார். இந்துத்துவ வெறியர்களின் மிரட்டலுக்கு பணியமாட்டேன் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.
“மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வா? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் ! அனைவரும் ஆதரிப்போம்!”
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை அடக்கி ஒடுக்கி போராடுபவர்களை அச்சுறுத்தும் விதமாக மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை தனிமைப்படுத்தி கைது செய்து சிறையலடைப்பதை, மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜாக்டோ – ஜியோ போராட்டம்
தனியார் பள்ளியில் 15 ஆயிரம் கொடுத்து கசக்கி பிழிவதை எதிர்த்து போராடாமல், அரசு ஊழியர்களை அவ்வாறு வேலை செய்யச் சொல்வது சரியல்ல. அரசு ஊழியர்கள் அநியாயமாக அதிக சம்பளம் கேட்கிறார்கள் என பொய் பிரச்சாரம் செய்து மக்களிடம் எதிர் கருத்தை உருவாக்க முயற்சிக்கும், எடப்பாடி அரசின் சதித்தனத்தை முறியடிக்க வேண்டும். மக்கள் எதற்காக போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வு என்பதுதான் எடப்பாடி அரசின் அணுகுமுறை. கோரிக்கையின் நியாயத்தை பற்றி பேச எடப்பாடி மாஃபியா கும்பலுக்கு எந்த அருகதையும் இல்லை.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் “புரட்சித்தலைவி அம்மா” கொடுத்த வாக்குறுதியை, தமிழக அரசு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிறைவேற்றுகிறோம் என ஒத்துக்கொண்ட கோரிக்கைகளை சொன்னபடி நிறைவேற்று என அரசு ஊழியர்கள் கேட்கிறார்கள். போராடுபவர்களை அழைத்து பேசாமல் அவர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி ஒடுக்க முயல்கிறது எடப்பாடி அரசு.
பல லட்சம் அரசு ஊழியர்களின் போராட்டத்தை எளிதாக அடக்கி ஒடுக்க முயலும் எடப்பாடி அரசுதான் எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்கி வருகிறது. இத்தகைய அரசு ஒடுக்குமுறை என்ற பொது எதிரிக்கு எதிராக ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் போராட்டத்தை அனைவரும் ஆதரித்து பங்கேற்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளை மூடுவது, அங்கன்வாடிகளை மூடுவது, காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, அத்துக்கூலிக்கு கொத்தடிமைகளாக ஆள் சேர்ப்பது, ஓய்வூதிய பணத்தை கொள்ளையடிப்பது போன்ற அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் மட்டுமல்ல. அனைத்து மக்களுக்குமான போராட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
தொடரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் அரசு நிறுவனங்கள், அரசு பள்ளிகள் ஸ்தம்பித்து போய் உள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதற்கு எடப்பாடி அரசின் ஆணவம்தான் காரணம். போராடும் ஊழியர்கள் காரணமல்ல. கோரிக்கையை பற்றி போராடுபவர்களை அழைத்து பேசி பரிசீலிப்பதுதான் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும். குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தால் போக்குவரத்து தடைபட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குற்றவாளி யார் ? குடி நீர் கொடுக்க தவறிய அதிகாரிகளா? பாதிக்கப்பட்டு வெயிலில் போராடும் மக்களா?
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை பிடித்து ஓய்வூதிய பலன்களை தராமல் சுமார் பல ஆயிரம் கோடி களவாடி விட்டார்கள். எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை அநியாயமாக விவசாயிகளிடமிருந்து பறிக்கிறார்கள். டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தி பாலைவனமாக்க துடிக்கிறார்கள். 13 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி செய்கிறார்கள். மேலும் பேச்சுரிமை கருத்து சுதந்திரம் அனைத்தையும் பறிக்கிறார்கள். இவ்வாறு மோடி அரசின் கூலிப்படையாக செயல்படும் எடப்பாடி அரசு. ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் போராட்டத்தின் மீது நடத்திவரும் அடக்குமுறைகளை அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம். 26-1-2019
எடப்பாடி, பாஜக புகழ் பாடும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் 23-24 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் உலக அளவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தொழிற்துறை வளர்ச்சியடையும் என்று தமிழக அரசும், ஊடகங்களும் சொல்கின்றன.
ஏற்கனவே 2015-ல் ஜெயலலிதா முதன் முதலாக இதே போன்றதொரு மாநாட்டினை நடத்தினார். அதில் 2.42 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த முதலீடு எங்கு, எதில் போடப்பட்டது… அதன் மூலம் அடைந்த வளர்ச்சி – வேலைவாய்ப்பு என்ன என்பதெல்லாம் தேவ ரகசியம்.
தொழிற்துறை அமைச்சர் சம்பத் வாழ்த்திய இந்த பேனர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல இடங்களில் முதுகு சொறிந்து கொண்டிருந்தது.
அந்த தேவ ரகசியத்தின் பின்னே உள்ளபடியே ஒன்றுமில்லை. தற்போது நடைபெற்ற இந்த மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “இந்த மாநாட்டின் மூலம் நிர்ணயித்த இலக்கினை விட கூடுதலாக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டமான 2023” வளர்ச்சியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக கூறினார். பாஜக-வின் அடிமை அரசாக நீடிக்கும் எடப்பாடி ஓபிஎஸ் அரசின் ஆட்சியில் ஊழல்களின் பட்டியல்தான் வெகுவேகமாக வளர்ச்சியடைவதை பார்க்கிறோம்.
அதேமாநாட்டில் தொழில்நிறுவனங்களின் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். அதற்கு பெயர் “டிஜிட்டல் கண்காட்சியாம்”. அந்த அரங்கத்திற்குள் நுழைந்து பார்த்தால் இது உலக முதலீட்டாளர்கள் மாநாடா? இல்லை ஊறுகாய் விற்பவர்களின் சந்தையா? என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றமே நடத்தலாம்.
1 of 6
கண்காட்சி என்றால் சும்மாவா….. டில்லி அப்பளம் கோன் ஐஸ், கரும்பு ஜூஸ் இதையே மாற்றி டிஜிட்டலில் உலக முதலீட்டாளர்கள் கண்காட்சியின் கண்கொள்ளா காட்சி. கவின்ஸ், ஆவின், பிரிட்டானியா. சக்தி மசாலா, ஆச்சி மசலா, ஜி.பி.ஆர் என்று இப்படி மணக்க,ருசிக்க முதலீடு தமிழ்நாட்டில் பாயுமாம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்த ஊறுகாய் முதலாளிகளை சந்திக்கத்தான் கடந்த ஆறு மாதங்களாக அரசு செலவில் வெளிநாடுகளில் உல்லாச பயணங்கள் சென்றிருக்கிறார்கள் அமைச்சர்கள். மாநாட்டை கோடிக்கணக்கில் செலவு செய்து சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாக பெருமைப்படுகின்றன தமிழக ஊடகங்கள். உண்மையில் இந்தப் பெருமை விளம்பர வருவாய் என்ற நலனுக்காக அளிக்கப்பட்ட எழுத்து மொய்.
இந்த மாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாரமனும், து.குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் சிறப்பு விருந்தினர்களாம்..! ஜெயலலிதா இறந்து போன நேரத்தில் இருந்து குத்துக்கல்லாக அரசியல் நகர்வுகளை இயக்கியவர் வெங்கையா நாயுடு. அந்த இயக்கம் இந்த மாநாட்டிலும் நீடிக்கிறது. நிர்மலா சீதாராமன் “வானூர்திக் கொள்கை”யை வெளியிட்டார். தமிழகத்தில் இத்துறை தொழில் மண்டலத்தை ஆரம்பிக்கிறார்களாம். சரி போகட்டும் அந்த வானூர்திக் கொள்கையில் ரஃபேல் விமான ஊழல் மாதிரிகள் உண்டா என்று தெரியவில்லை.
கொரியா, சிங்கப்பூர் என்று சில நாடுகளில் இருந்தும், அதிலும் சென்னையில் இருக்கும் வெளிநாட்டு தூதர்களே நிறைந்திருக்க, இந்த ‘முதலீட்டாளர்களை’ மகிழ்விக்க பல கோரி ரூபாயில் ஏற்பாட்டுச் செலவுகள். வெண்தோல் விருந்தினர்களை மகிழ்விக்க ஆட்டம்….பாட்டம்… கொண்டாட்டம் என நடந்து முடிந்திருக்கிறது இந்த மாநாடு. இறுதியாக இந்த மாநாட்டின் மூலம் 3.431 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளாதாகவும், பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் மோசடி என்பது ஊரறிந்த உண்மை. ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் தமது தொழிலில் போட்டுள்ள சிறு எண்ணிக்கையிலான முதலீடு கூட இந்த பட்டியலில் இருப்பது ஒரு சோறு பதம்.
இந்த அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல் உலக மாநாட்டிற்கு பிறகு நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் மட்டுமே. அதிமுக ஆட்சியின் வரலாறு காணாத “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” ஆகியவற்றால் நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று விட்டார்கள்” எனவும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசின் செலவில் நடத்தப்பட்ட அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடு எனவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக சொல்வதெல்லாம் வரைமுறையின்றி அளந்து விட்டிருக்க்கிறார்கள். இது “2019-ம் ஆண்டிற்கான” முதல் பொய் வாக்குறுதி என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த பொய் வாக்குறுதி அரசாங்கத்தை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது இந்த அரசமைப்பின் தரத்தைக் காட்டுகிறது.
எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ வாழ்த்தி பிளக்ஸ் பேனர்கள், ஏராளமான போலீசு அதிகாரிகள், காவலர்கள், துப்புறவு தொழிலாளிகள், சமையற் கலைஞர்கள், வாகன ஓட்டுநர்கள் இவர்கள்தான் மாநாட்டின் ஜனத்தொகையில் 95% இருந்தனர். போலீசு அதிகாரிகள் அன்று சுத்தமான அல்லது புதிதாக தைக்கப்பட்ட சீருடையை அணிந்திருந்தார்கள். துப்புறவு தொழிலாளிகளின் ஃப்ளோரசண்ட் ஜாக்கட் புதிதாக இருந்தது. போலீசு அதிகாரிகள் அனைவரும் எந்த பதட்டமுமின்றி சாப்பிட்டுக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தார்கள். வேலை என ஒன்று இருந்தால் அல்லவா பதட்டம் இருக்கும்.
மொத்தத்தில் மக்கள் பணம் கோடிக்கணக்கில் விரயமானதுதான் இந்த மாநாடு கண்ட பலன்.
அன்று மட்டும் கத்திப்பாரா பாலம் சுத்தபத்தமாக விளங்கியதோடு வராத முதலீடுகளுக்காக விளம்பரங்களையும் தாங்கியிருந்தது.
எடப்பாடி ஒப்பற்ற முதல்வராம், ஓபிஎஸ் ஈடில்லா துணை முதல்வராம் – துதிபாடுதலின் ஆக கடைத்தரமான கவிதை!
திரும்பிய பக்கமெல்லாம் மொபைல் டாய்லட்டுகள், தண்ணீர் டாங்குகள் – என்ன பலன்?
நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் – அலங்கார வண்டி விளம்பரம்! எம்ஜிஆரின் நூற்றாண்டுக்கும் ஜப்பான் முதலீட்டாளருக்கும் என்ன தொடர்பு?
சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி… கல்விக் கடன், விவசாய குறுங்கடன் வாங்கியவர்களை கிரிமினலாக்கி தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள்… பன்னாட்டு முதலாளிகளுக்காக காத்திருக்கிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நாமிருப்பது சென்னையா, இலண்டனா என சினிமா செட்டிங்கில் போட்டி போடும் அலங்கார வாயில்கள், சர்வதே நாடுகளின் கொடிகள், பில்டப்புகள்!
“மற்ற பிரச்சினைகளெல்லாம் காத்திருக்கலாம். ஆனால், விவசாயம் காத்திருக்க முடியாது” என நாடு ’சுதந்திரமடைந்த’ சமயத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினாராம். ஆனால், எழுபத்தொரு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட விவசாயிகள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாடெங்கும் அவர்கள் நடத்திவரும் போராட்டங்களே எடுத்துக் காட்டுகின்றன.
விவசாயிகள் ஆட்சியாளர்களிடம் சொர்க்கத்தையெல்லாம் கோரவில்லை. தங்களின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துமாறுதான் கோருகிறார்கள்.
இப்பிரச்சினையோடு தொடர்புடைய வேறொரு விடயத்துக்கு வருவோம். ஜார்கண்டு மாநிலத்தில் செயல்பட்டு வரும் உணவு உரிமைக்கான இயக்கம், அம்மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்குள்ளாகவே 17 பழங்குடியினர் பட்டினியால் இறந்துபோயிருப்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பழங்குடியினர் இறந்து போனதற்குக் – பட்டினிபோட்டுக் கொல்லப்பட்டதற்கு என்றுகூடச் சொல்லலாம் – காரணம், உணவுப் பொருட்களை வாங்க முடியாத
ஏழ்மை.
ரேஷன் அட்டைகளோடு ஆதார் இணைக்கப்பட்ட பிறகு, ஜார்கண்டு மாநிலத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் நேரடிப் பணப்பட்டுவாடா முறை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகுதான் இவர்கள் இறந்துபோனார்கள்.
இப்பட்டினிச் சாவுகளைத் தடுக்க நேரடிப் பணப்பட்டுவாடா முறையைக் கைவிட்டு, அனைவருக்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் முறைமையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரி வருகிறது, உணவு உரிமைக்கான இயக்கம்.
விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை என்ற விவசாயிகளின் கோரிக்கையும் அனைவருக்கும் உணவு மானியம் என்ற அடித்தட்டு மக்களின் கோரிக்கையும் தனித்தனியான தீவுகளல்ல. விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்க வேண்டும் என்றால், நெல், கோதுமை, பயறு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை உற்பத்திச் செலவுக்கு ஏற்ப இலாபம் தரக்கூடிய வகையில் உயர்த்தி அளிக்க வேண்டும். அவ்விலை சந்தையில் கிடைப்பதற்கு ஏற்ப அரசு தனது கொள்முதல் கொள்கையை, நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
அனைவருக்கும் பொது விநியோக முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், அரிசி, கோதுமை, பாமாயில் மட்டுமின்றி, மற்றைய முக்கிய உணவுப் பொருட்களையும் ரேஷனில் விநியோகிக்கும் வண்ணம் கொள்முதலையும் விநியோக முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளுக்கு மோடி அரசின் எதிர்வினை என்ன என்பதைப் பார்க்கும் முன், மோடி அரசின் எஜமானர்களான ஏகாதிபத்திய முதலீட்டாளர்களும், பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்களும் இந்திய அரசு விவசாயத்திற்கும் ரேஷன் விநியோகத்திற்கும் அளித்துவரும் மானியங்கள் குறித்துக் கருதுவதைப் பார்த்துவிடலாம்.
கடந்த மே மாதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக வர்த்தகக் கழகத்திடம் இந்திய அரசுக்கு எதிரான மனுவொன்றை அளித்திருக்கிறது. அதில், இந்திய அரசு 2011-12 முதல் 2013-14 முடியவுள்ள நிதியாண்டுகளில், நெல்லுக்கும் கோதுமைக்கும் அதிக மானியம் அளித்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பதாகவும், இது உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளுக்கு எதிரானதென்றும் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படி அதிக மானியம் அளித்துவருவதைக் கைவிடாவிட்டால் இந்தியா மீது வழக்குத் தொடுப்போம் என்றும் எச்சரித்திருக்கிறது.
உலக வர்த்தகக் கழகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் (Agreement on Agriculture) உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் விவசாய விளைபொருட்களுக்கு எவ்வளவு மானியம் அளிக்க வேண்டும் என வரையறுக்கிறது. இதன்படி, விவசாயத்திற்கு அளிக்கப்படும் மானியங்கள் மூன்று பிரிவுகளாகப் (நீலம், பச்சை, பழுப்பு மஞ்சள் – Blue box, Green box, Amber box ) பிரிக்கப்பட்டு, அவற்றுள் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் மானியத்திற்கு (பழுப்பு மஞ்சள்) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏகாதிபத்திய – முதலாளித்துவ நாடுகள் 1986-88-ம் ஆண்டுகளில் உற்பத்தி செய்த விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 5 சதவீதம் வரையிலும், இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அதே ஆண்டில் உற்பத்தி செய்த விளைபொருட்களின் மதிப்பில் 10 சதவீதம் வரையிலும் மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
2010-11-ம் ஆண்டு தொடங்கி 2013-14-ம் ஆண்டு முடியவுள்ள நிதியாண்டுகளில் இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் குறித்து உ.வ.க.விற்கு அறிக்கை அளித்துள்ள இந்திய அரசு, அவ்வாண்டுகளில் அரிசிக்கு முறையே 7.22%, 7.44%, 7.68%, 5.45%; கோதுமைக்கு -0.73%, 0.48%, -2.5%, -3.53% என்ற அளவில், 10 சதவீதத்திற்குள்ளாகத்தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
இப்புள்ளிவிவரப்படி 2010-11, 2012-13, 2013-14-ம் ஆண்டுகளில் இந்திய அரசு கோதுமைக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை, அதற்கு முந்தைய ஆண்டுகளைவிடக் குறைவானதாகும்.
ஆனால், அமெரிக்க அரசோ, உ.வ.க.விற்கு அளிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் தவறென்றும், இந்திய அரசு அக்குறிப்பிட்ட ஆண்டுகளில் அரிசிக்கு முறையே 74%, 80.1%, 84.2%, 76.9% என்ற அளவிலும், கோதுமைக்கு முறையே 60.1%, 60.9%, 68.5%, 65.3% என்ற அளவிலும் சந்தை ஆதார விலை அளித்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது.
மலைக்கும் மடுவுக்குமான இவ்வேறுபாடு எப்படிச் சாத்தியமானதென்றால், அமெரிக்க அரசு உ.வ.க.வின் விவசாய மானிய விதிகளைத் தனது கெடுமதி நோக்கத்திற்கேற்ப வளைத்து, இந்திய அரசு விவசாயிகளுக்கு அளித்திருக்கும் நேரடி மானியம் 10 சதவீதத்திற்கு அதிகமானது என மோசடியானதொரு கணக்கை அளித்திருக்கிறது.
அமெரிக்காவின் மோசடிக் கணக்கு
2013-14-ம் ஆண்டில் இந்திய அரசு கோதுமைக்கு நிர்ணயித்திருந்த குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) 1,386 ரூபாய். 1986-88-ம் ஆண்டுகளில் கோதுமையின் சர்வதேச சந்தைவிலை சராசரியாக 354 ரூபாய்.
2013-14-ம் ஆண்டின் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும், 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த கோதுமையின் சர்வதேச விலைக்கும் இடையிலான வித்தியாசம் சராசரியாக 1,032 ரூபாய் எனக் கணக்கிட்டு, ஒரு குவிண்டால் கோதுமைக்கு 1,032 ரூபாய் நேரடி மானியம் அளிக்கப்பட்டிருப்பதாக வாதிடுகிறது, அமெரிக்கா. இதுபோல, அதே ஆண்டில் அரிசிக்கு அளிக்கப்பட்ட மானியம் 1,019 ரூபாய் எனக் குறிப்பிடுகிறது.
இந்திய அரசு தனது விவசாயிகளுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் அளிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசு இரண்டு மோசடிகளை நடத்தியிருக்கிறது. 2010 முதல் 2014 வரை நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையை, 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த சர்வதேச விலையோடு ஒப்பிடுவதே முட்டாள்தனமானது. அப்படியே அச்சர்வதேச விலையை எடுத்துக்கொள்வதென்றால், அவ்விலை 2010-2014 கால பணவீக்கத்தின்படி எவ்வளவு உயர்ந்திருக்கும் எனக் கணக்கிட வேண்டும்.
குறிப்பாக, அமெரிக்க டாலரோடு இந்திய ரூபாயை ஒப்பிட்டால், இந்த ஆண்டுகளில் இந்திய ரூபாய் கிட்டத்தட்ட நான்கு மடங்குக்கு மேல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அமெரிக்கவோ, 1986-88-ம் ஆண்டுகளில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (அன்றைய மதிப்பு ரூ.12.50) எவ்வளவு இருந்ததோ, அதுவே 2010 தொடங்கி 2014 வரை இருந்தது போல எடுத்துக்கொண்டு, அவ்வாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையையும் 1986-88-ம் ஆண்டின் சர்வதேச விலையையும் ஒப்பிடுகிறது.
எடுத்துக்காட்டாக, 2013-14-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் அரிசிக்குத் தரப்பட்ட சராசரி குறைந்தபட்ச ஆதார விலை இந்திய ரூபாயில் சராசரியாக ரூ.1,348. 1986-88-ம் ஒரு குவிண்டால் அரிசிக்குக் கிடைத்த சர்வதேச சந்தை விலை 26.3 அமெரிக்க டாலர்கள். இதனை 2013-14-ம் ஆண்டில் இருந்த பரிமாற்ற மதிப்பின்படி (ஒரு அமெரிக்க டாலரின் அன்றைய மதிப்பு ரூ.60.50) இந்திய ரூபாய்க்கு மாற்றினால், சர்வதேச சந்தை விலை ரூ.1,592. இவையிரண்டுக்குமான வித்தியாசம் ரூ.244 தான்.
ஆனால், அமெரிக்க அரசோ 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த சர்வதேச சந்தை விலையை 2013-14-ம் ஆண்டுகளில் இருந்த பரிமாற்ற மதிப்பின்படி (ரூ.60.50) மாற்றாமல், 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த பரிமாற்ற மதிப்புதான் (ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.12.50) 2013-14-லும் இருப்பதைப் போல அனுமானித்துக்கொண்டு, இந்திய ரூபாய்க்கு மாற்றி (ரூ.329/-), இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு 1,019/- என வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறது.
இரண்டாவது மோசடி என்னவென்றால், இந்திய அரசு பரிசீலனைக்குரிய ஆண்டுகளில் விளைந்த மொத்த நெல்லையும், கோதுமையையும் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் பரிசீலனைக்குரிய ஆண்டுகளில் எவ்வளவு அதிகமாக மானியம் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத்தை உ.வ.க.விடம் அளித்திருக்கிறது.
இந்திய அரசு எந்தவொரு ஆண்டிலும் விளைச்சல் முழுவதையும் கொள்முதல் செய்வது கிடையாது. அப்படிச் செய்வதாகக் கூறுவது அடுக்கமாட்டாத பொய். விளைச்சலில் பாதியளவைகூட இந்திய அரசு கொள்முதல் செய்வதில்லை என்பதே உண்மை.
எடுத்துக்காட்டாக, 2013-14-ம் ஆண்டுகளில் மொத்த நெல் உற்பத்தி 10.66 கோடி டன். அந்த ஆண்டில் இந்திய உணவுக் கழகம் 3.4 கோடி டன் அளவிற்குத்தான் கொள்முதல் செய்தது. இதுபோல 2017-18-ம் ஆண்டில் 9.71 கோடி டன் கோதுமை விளைந்ததில், 3.2 கோடி டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தமது விளைபொருட்களுக்கு அளித்துவரும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தியா மீது அமெரிக்கா கொடுத்திருக்கும் புகார்.
ஏகாதிபத்தியங்களின் நயவஞ்சகம்
நேரடி விவசாய மானியத்தைக் குறைக்குமாறு இந்தியாவிற்குக் கட்டளையிடுவதற்கு அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு நியாய உரிமையும் கிடையாது, தார்மீக உரிமையும் கிடையாது. ஏனென்றால், இந்த நாடுகள் பல இலட்சம் கோடி ரூபாய் மானியங்களைப் பல்வேறு பெயர்களில் அந்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.
ஒரு குறிப்பிட்ட பயிரின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில்கூட அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் விவசாய மானியம் வழங்கப்படுகிறது. உ.வ.க.வில் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் மானியங்களில், பச்சைப் பெட்டியின் கீழ் வரும் மானியங்களைக் குறைக்கத் தேவையில்லை எனக் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு இத்தகைய மானியங்களை ஏகாதிபத்திய நாடுகள் வாரிவழங்கிவருகின்றன. வர்த்தகத்தைப் பாதிக்காத மானியங்கள் என்ற முகாந்திரத்தின் கீழ் இந்த வகை விவசாய மானியங்களை நியாயப்படுத்தியும் வருகின்றன.
எடுத்துக்காட்டாக, அமெரிக்க அரசு 2000-ம் ஆண்டில் தனது விவசாயிகளுக்கு வழங்கிய நேரடி மானியம் (பழுப்பு மஞ்சள் மானியம்) 1,684.30 கோடி அமெரிக்க டாலர்கள். இதனை 2010-ம் ஆண்டில் 411.9 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைத்துவிட்டாலும், பச்சைப் பெட்டியின் கீழ் வரும் மானியங்களை விண்ணைமுட்டும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. அம்மானியம் 2000-ம் ஆண்டில் 9,700 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2010-ம் ஆண்டில் 24,200 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.
2015-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் அந்நாட்டு அரசு அளித்திருக்கும் மொத்த மானியம் 7,860 அமெரிக்க டாலர்கள். ஒரு பிரிட்டிஷ் விவசாயி பெறும் மானியம் 28,300 பவுண்டுகள், ஜப்பானிய விவசாயி பெறுவது 14,136 அமெரிக்க டாலர்கள். இந்தியாவிலோ, நேரடி மற்றும் மறைமுக மானியங்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு விவசாயி பெறுவது 417 அமெரிக்க டாலர்கள்தான்.
உத்சா பட்நாயக்
மேற்குலக ஏகாதிபத்திய-முதலாளித்துவ நாடுகளின் தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு நான்கு சதவீதத்திற்கும் குறைவானது. ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மக்கட்தொகையினர்தான் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுகின்றனர். அமெரிக்காவிலோ இந்த சதவீதம் மற்ற மேற்குலக நாடுகளைவிடக் குறைவு. இதனால், அந்நாடுகளுக்குத் தமது மொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் ஏறத்தாழ 50 சதவீதத்தை மானியமாக வழங்குவது எளிதாக உள்ளது. அந்நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும்போது விவசாய மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை 2 சதவீதத்திற்கும் குறைவானது. வருடாந்திர பட்ஜெட் செலவில் இம்மானியங்களின் பங்கு 8 சதவீதத்திற்கும் குறைவு” எனச் சுட்டிக்காட்டுகிறார், மார்க்சியப் பொருளாதார வல்லுநரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பொருளாதாரப் பேராசிரியருமான உத்சா பட்நாயக்.
விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தை எந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு குறைப்பது, எவ்வளவு குறைப்பது, எந்த மானியத்தைக் குறைப்பது, எதனை அதிகரிப்பது என உ.வ.க.வில் உருவாக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்துமே ஏகாதிபத்திய நாடுகளின் நலனை முன்னிறுத்தியும், அவர்களின் ஆலோசனைகளின்படிதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் வகுத்து வைத்திருக்கும் விதிகளுக்கு ஏற்ப இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை ஆடச் சொல்லுகின்றன.
சுதந்திர வர்த்தகமா, சுருக்குக் கயிறா?
குறைந்தபட்ச ஆதார விலை, உணவு மானியம், ரேஷன் விநியோகம், தனியார் கொள்முதல் மற்றும் ஏற்றுமதி -இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் ஆகிய இவையனைத்தும் சுதந்திரமான வர்த்தகத்துக்குத் தடை போடுவதாக ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ்சுமத்துகின்றன.
இவற்றை ஒவ்வொன்றாக, படிப்படியாக ஒழித்துக்கட்டுவதன் மூலம் இந்திய உணவுச் சந்தையை பன்னாட்டு ஏகபோக உணவுக் கழகங்களும், அவர்களது அடிவருடிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கவ்விக்கொள்ளத் திட்டமிடுகின்றனர்.
இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்கா உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியா மீது புகார் கொடுக்கிறது. அதனது உள்நாட்டு அடிவருடிகளோ உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் ரேஷனில் விநியோகிப்பது மக்களைச் சோம்பேறிகளாக்குகிறது எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
உணவுப் பயிர்களைப் பயிரிட்டு ஏன் கடனாளியாகிறீர்கள், ஏற்றுமதிக்கான பணப் பயிர்களைப் பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார்கள். இந்திய அரசோ, ஒருபுறம் மானியங்களை வெட்டுகிறது, இன்னொருபுறம் ஆதார் இணைப்பு, நேரடி பணப் பட்டுவாடா என்ற போர்வையில் அரசு கொள்முதல், ரேஷன் கடைகளை ஒழித்துக்கட்டத் திட்டமிடுகிறது.
உணவுப் பயிர்களுக்குப் பதிலாக ஏற்றுமதிக்கான பணப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிடத் திட்டமிடுகின்றன. ஒன்று, உணவுப் பொருட்களுக்குத் தம்மை அண்டிப் பிழைக்குமாறு இந்தியாவை மாற்றுவது. மற்றொன்று, தமக்குத் தேவையான பயிர்களைப் பயிரிடுவதற்கு ஏற்ப இந்திய விவசாயத்தை மாற்றியமைப்பது.
”சோவியத் யூனியனின் சிதைவும், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் உணவுப் பொருள் நுகர்வு 1990-களுக்குப் பின் குறைந்து போனதும் பன்னாட்டு ஏகபோக உணவுக் கழகங்களைப் புதிய சந்தையைப் பிடித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளின. இந்த நோக்கில்தான் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்டவுடனேயே, அதில் ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமான விவசாய ஒப்பந்தம் திணிக்கப்பட்டது” எனக் கூறுகிறார், உத்சா பட்நாயக்.
மேலும், “வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைவிட, மேற்குலக நாடுகளில்தான் விவசாய உற்பத்தி அதிக அளவில் நடந்துவருவதைப் போலச் சித்தரிக்கப்பட்டு வருவது ஒரு மாயத் தோற்றம். தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மூலம் மேற்குலக நாடுகள் தமது விவசாய உற்பத்தித் திறனைப் பல மடங்கு அதிகரித்திருக்கலாம்.
ஆனால், அந்நாடுகளில் நிலவும் பருவ நிலை காரணமாக, அந்நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைப் போல பலவிதமான பயிர்களைப் பயிரிடும் வாய்ப்பை இயற்கையாகவே பெற்றிருக்கவில்லை. இந்தியா போன்ற ஏழைநாடுகளின் விவசாயிகள் ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்றுவிதமான பயிர்களைப் பயிரிடும் இயற்கை வாய்ப்புகளைப் பெற்றிருக்கும்போது, குளிர் பிரதேசங்களைச் சேர்ந்த மேற்குலக நாடுகள் ஆண்டு முழுவதும் ஒரே பயிரை மட்டுமே பயிரட முடியும்.”
இதன் காரணமாகவே, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் அவுரி உள்ளிட்ட மூலப்பொருட்களை ஆண்டு முழுவதும் பயிரிடுமாறு இந்திய விவசாயிகளைக் கட்டாயப்படுத்தினர். இப்பொழுது மூலப்பொருட்களுக்குப் பதிலாக, மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மேட்டுக்குடி வர்க்கம் விதவிதமாக நுகர்வதற்கு ஏற்ற உணவுப் பொருட்களை ஏழை நாடுகளில் பயிரிடச் செய்து இறக்குமதி செய்துகொள்ள விழைகின்றன.”
“இப்படியாக ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகள் மீது இரண்டு நுகத்தடிகளைச் சுமத்துகின்றன. ஒன்று, தமது நாடுகளில் அதீதமாகவும் அராஜகமாகவும் உற்பத்தி செய்து குவிக்கப்படும் தானியங்களை விற்பதற்கான சந்தையாகவும், தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் கேந்திரமாகவும் ஏழை நாடுகளை மாற்றியமைக்க முயலுகின்றன. இந்த அடிப்படையில்தான் விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் அற்பமான மானியத்தையும் கைவிடவும், ஏற்றுமதி மதிப்பு கொண்ட பயிர்களைப் பயிரிடுமாறும் ஏழை நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் நிர்பந்திக்கின்றன” என அம்பலப்படுத்துகிறார், உத்சா பட்நாயக்.
இந்திய விவசாயிகள் மத்தியில் கடன் சுமையும் தற்கொலைச் சாவுகளும் அதிகரித்து வரும் வேளையில், ஏறத்தாழ 19 கோடி இந்திய மக்கள் அரைகுறை பட்டினியில் காலந்தள்ளிவரும் வேளையில், மானியங்களைக் குறைக்குமாறு ஏகாதிபத்தியங்கள் நெருக்கடி கொடுத்துவரும் வேளையில், மோடி அரசோ விவசாய மானிய விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. உ.வ.க.வில் ஏகாதிபத்திய நெருக்கடிகளுக்கு எதிராக நிற்பது போலக் காட்டிக்கொண்டு, உள்நாட்டிலோ மானிய வெட்டைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
2011-12-ம் ஆண்டில் மின்சாரம், பாசன வசதிகள், உரம் ஆகியவற்றுக்கு 2,910 கோடி அமெரிக்க டாலர்கள் மானியமாக வழங்கப்பட்டிருந்த நிலையில், 2014-15-ம் ஆண்டில் இதனை 2,280 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைத்துவிட்டது, மோடி அரசு. 2,450 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த பச்சைப் பெட்டி மானியங்கள், 1,830 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைக்கப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் 1.13 இலட்சம் கோடியாக இருந்த உணவு மானியம், 2015-16-ம் ஆண்டில் 1.35 இலட்சம் கோடி உயர்ந்து, 2016-17-ம் ஆண்டுகளில் 1.05 இலட்சம் கோடியாகச் சரிந்துவிட்டது.
இந்நிலையில் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக் கொடுக்கக் கோரி நடந்துவரும் விவசாயிகளின் போராட்டங்கள்தான் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகின்றன. இப்போராட்டங்கள்தான் நகர்ப்புற ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்துக்கும்கூட உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
ரஹீம்
(சி.பி.எம். கட்சியின் அதிகாரப்பூர்வ தத்துவார்த்த இதழான மார்க்சிஸ்டு (ஆங்கிலம்) ஏப்ரல்-ஜூன் 2018 இதழில் மார்க்சியப் பொருளியல் வல்லுநரான உத்சா பட்நாயக், Destroying Public Provisioning of Food in India எனும் தலைப்பில் எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.)
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
வணக்கம், நாம் இப்போது பழங்களைப் பற்றி பேசப் போகிறோம். ஒரு கேள்வியோடு இதை தொடங்குவோம். இப்போது என்னிடம் ஒரு வாழைக்காய் உள்ளது, அதில் இனிப்பு சுவை இருக்காது, அதில் உள்ள சர்க்கரையின் அளவு 25 கிராம் என நான் உங்களிடம் கூறிவிடுகிறேன். பின் நான்கு நாட்கள் கழித்து அது வாழைப்பழம் ஆகிவிடும், இப்போது இந்த பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதே 25 கிராமை ஒத்து இருக்குமா அல்லது கூடியிருக்குமா? சற்று சிந்தியுங்கள்.
இந்த கேள்விக்கு பெரும்பாலான மக்கள், சர்க்கரையின் அளவு கூடியிருக்கும், என்றுதான் கூறுகிறார்கள், முன்பு 25 கிராம் இருந்தது என்றால் இப்போது 50 கிராம் அல்லது 100 கிராம் இருக்கும் என்கிறார்கள். அந்த கூடுதல் அளவு எங்கிருந்து வருகிறது காற்றிலிருந்து வருமா என்றால் வராது.
அப்படியென்றால், முன்பு வாழைக்காயில் இருந்த சர்க்கரையின் அதே அளவுதான் இந்த வாழைப்பழத்திலும் இருக்கும். பழத்தின் சுவை மட்டுமே மாறியிருக்கும். வாழைக்காயிலிருந்த கார்போஹைட்ரேட்டானது இனிப்பு சுவை உடைய இரசாயன மாற்றமடைந்துள்ளது அவ்வளவே. இதன் மூலம் நாம் தெளிய வேண்டியது என்னவென்றால், நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்புக்கும் அதன் சர்க்கரை அளவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதே. இனிப்பு என்பது சுவை, சர்க்கரை என்பது அந்த பொருளின் தன்மை அதாவது கார்போஹைட்ரேட்.
இதே போல் நாம் பல சான்றுகளை கூற முடியும். மாங்காய் என்றால் புளிக்கும், அதே மாங்காய் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கழித்து இனிப்பு சுவை உடையதாக மாறும். ஆனால் இரண்டிலும் சர்க்கரையின் அளவு மாறாமல் ஒரே அளவில் தான் இருக்கும்.
உங்களுக்கு வேடிக்கையான இன்னொரு விஷயத்தை கூறுகிறேன். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் ஒரு பிஸ்கட்டை விரும்பி உண்பார்கள், அந்த பிஸ்கட்டின் பெயர், எம். மில் தொடங்கி இ. என்ற எழுத்தில் முடியும். அந்த பிஸ்கட் நிறுவனம் கூட இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடியதுதான் என விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் பெரும்பான்மையோர் இதை உண்கிறார்கள். காரணம் மற்ற பிஸ்கெட்டில் உள்ளது போல் இதில் இனிப்புச்சுவை இல்லை என்கிறார்கள். ஆனால் அந்த பிஸ்கெட்டிலும் மற்ற பிஸ்கெட்டில் உள்ள அதே அளவு சர்க்கரைதான் உள்ளது.
இப்போது பாகற்காய்க்கு வருவோம், பாகற்காய் ஏன் இவ்வளவு பிரபலமான ஒன்றாக உள்ளது என்றால், அதன் கசப்பு சுவை முக்கிய காரணம். சர்க்கரையின் இனிப்பு சுவையை பாகற்காயின் கசப்பு குறைக்கும் அல்லது சமன்படுத்தும் என்பது நம்புகிறார்கள். இது ஒரு தவறான நம்பிக்கை.
ஒருவர் மிளகாய் சாப்பிடுகிறார், அது அவருக்கு வாய் எரிச்சலை உண்டு செய்கிறது, உடனே அவர் சர்க்கரையை அள்ளி சாப்பிடுகிறார், இது மிளகாயால் ஏற்பட்ட வாய் எரிச்சலை தணிக்கிறது. ஆனால், இதற்கும் உடலின் உட்புறம் சென்ற கலோரிக்கும் எந்த தொடர்புமில்லை. எந்த சுவையானாலும், கழுத்திற்குக் கீழ் அது ஒன்றுமில்லைதான். நீங்கள் எதை உண்டாலும் கழுத்திற்கு கீழ் அது மாவுப்பொருளா, புரதமா, கொழுப்பா என்பதைத்தான் உடல் பார்க்குமேயன்றி அது முதலில் இனித்ததா புளித்ததா என்பதெல்லாம் உடலினுள் ஏற்படும் மாற்றத்திற்கு சம்பந்தமில்லாதது.
அதேபோல் தான் சிலர் வேப்பிலையை உண்பது வேப்பிலை ஊற வைத்த தண்ணீரை குடிப்பது என்பதெல்லாம், சர்க்கரை நோய்க்கு நல்லதென்று கருதுகிறார்கள். ஏன் நம்புகிறார்கள் என்றால் வேப்பிலையின் கசப்புத் தன்மைதான் காரணம்.
நாம் புரிந்துகொள்ள வேண்டியது சுவை வேறு, உடலில் உள்ள சர்க்கரை வேறு. பாகற்காயில் சர்க்கரையை குறைக்கக்கூடிய மூலக்கூறு உள்ளதா என்பது எனக்கு தெரியாது. அப்படி உண்மையிலேயே இருக்குமானால், அதை காலை இரவு என தினமும் உண்டால் தான் அதனால் பயனிருக்கும். அப்படியில்லாமல், நான் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை என சாப்பிட்டுவிட்டு, நானும் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்கிறேன் அதனால் எனது சர்க்கரை நோய் குறையும் என நம்புவது பலனளிக்காது.
எனவே பழங்களை பற்றிய உண்மைகளில் நாம் முதலில் அறிந்து கொண்டது என்னவென்றால், உண்பனவற்றின் சுவைக்கும், அதிலுள்ள சர்க்கரை அளவுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதுதான்.
இரண்டாவதாக இந்த காணொளியை பாருங்கள், இதை பதிவேற்றியவர் பிஸ்வரூஃப் சௌத்திரி என்பவர். இவர் என்ன செய்கிறார் என்றால், ஒருவரது உடம்பிலிருந்து ரத்தத்தை எடுத்து அதிலுள்ள சர்க்கரையின் அளவை எல்லோரிடமும் காண்பிப்பார். பிறகு அதில் ஃபிரக்லோஸ் என்ற இரசாயனப் பொருளை சேர்க்கிறார். ஃபிரக்டோஸ் என்பது பழங்களில் உள்ள ஒருவிதமான சர்க்கரை. இதை சேர்த்தப் பிறகு சர்க்கரையின் அளவு குறைவதை அவர் மீண்டும் காண்பிப்பார். இதன் மூலம் அவர் கூறவருவது பழங்களை சேர்த்தால் சர்க்கரை குறையும் என்பதைத்தான். சமீபகாலமாக வந்த நிறைய வீடியோக்களில் நிறைய பேரை முட்டாளாக்கிய பெருமை இந்த காணொளிக்கு உண்டு.
காரணம், உணவிலிருக்கும் சர்க்கரையை நாம் பார்த்தோமேயானால், அது குளூகோஸ், ஃபிரக்டோஸ், சுக்ரோஸ் என பலதரப்பட்ட மூலக்கூறுகளாக உள்ளது. ஆனால் நம் ரத்தத்திலோ வெறும் குளூகோஸ் மட்டும்தான் உள்ளது. நாம் என்ன உணவு உட்கொண்டாலும் அது கரைந்து நம் ரத்தத்தில் கலக்கும் போது நமது கல்லீரல் வழியாகத்தான் செல்கிறது. உணவை குளூக்கோஸாக மாற்றி ரத்தத்தில் ஏற்றும் வேலையை இந்த கல்லீரல் தான் செய்கிறது.
இப்போது நாம் பழங்களை அதிகமாக உண்கிறோமென்றால், அந்த பழங்களில் உள்ள ஃபிரக்டோஸ் கல்லீரல் மூலம் குளூகோஸாக மாறி ரத்தத்தில் கலக்கும். நம் ரத்தத்தில் ஃபிரக்டோஸ் என்ற மூலப்பொருளே கிடையாது. அவ்வாறு இருக்க, இந்த காணொளியில் ரத்தத்தில் ஃபிரக்டோஸை சேர்த்தால் சர்க்கரை குறையும் என்று காட்டுவது வேடிக்கையான விஷயம். ஆனால் இதை நம்பி ஏமாந்த மக்கள் நிறைய பேர் உள்ளனர். இன்றும் கூட ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த காணொளியும் இன்னும் பரவிக் கொண்டுதானிருக்கிறது. இதை நம்பி நிறைய பேர் பழங்களாக உட்கொண்டு சர்க்கரை கூடியதைத்தான் நான் கண்டிருக்கிறேன். நாம் தெளிவுபெற வேண்டியது இதுதான், பழங்களில் இருக்கும் சர்க்கரையும், ரத்தத்தின் சர்க்கரையளவைக் கூட்டும்.
மூன்றாவதாக, பழங்கள் சர்க்கரையின் அளவைக் கூட்டுகிறது என்றால், சர்க்கரை உள்ளவர்கள் பழங்களை உண்ணலாமா என்றால்? ஆம் உண்ணலாம். பழங்களில் சர்க்கரை உள்ளது என்றாலும் அதிகளவில் கிடையாது.
உதாரணத்திற்கு ஒரு இட்லியை எடுத்துக் கொண்டோமேயானால் அதில் 60-70 கலோரிகள் உள்ளது, ஒரு கப் காப்பி அல்லது தேநீரிலும் 60-70 கலோரிகள் உள்ளது. ஒரு கோப்பை பாலிலும் சராசரியாக 70 கலோரிகள் உள்ளது. ஆனால், நூறு கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதேபோல் 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகள் மட்டுமே உள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 100 கலோரிகள் உள்ளது. இவ்வாறு ஒப்பிடுகையில் பெரும்பாலான பழங்கள் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவை விட கலோரி கம்மியாகத்தானிருக்கும்.
நம் உடலானது கலோரிகளை மட்டும் தான் கணக்கிலெடுக்குமேயன்றி எதன் மூலம் அந்த கலோரி வருகிறது என்று கணக்கில் கொள்ளாது. உதாரணத்திற்கு, மாம்பழம் சர்க்கரை நோய்க்கு எதிரி என்று கூறுவார்கள். இது தவறான தகவல் 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது இது, 100 கிராம் அரிசியை, 100 கிராம் சப்பாத்தி போன்ற உணவுகள் மூலம் பெறும் கலோரிகளை விட குறைவுதான். ஆனால், 100 கிராம், வாழைப்பழத்தில் 100 கிராம் கலோரிகள் உள்ளது. அதற்காக சாப்பிடாமல் இருக்கலாமா என்றால், இல்லை சாப்பிடலாம் ஆனால் அளவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே எந்த ஒரு பழத்தையும் சுவையை வைத்து நாம் தரம் பிரிக்க தேவையில்லை. அனைத்து வகையான பழங்களையும் நாம் உட்கொள்ளலாம். ஏன் பழங்களை மட்டுமே நாம் ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம். காலை உணவாக ஒரு வாழைப்பழம், கொய்யாப்பழம் என நாம் உண்ணலாம் அல்லது இரண்டு மூன்று பழங்களை சேர்த்து நாம் இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பக்கம் பழங்களை உண்டால் சர்க்கரையின் அளவு கூடிவிடும் என சிலர் கருதுகிறார்கள். மறுபக்கம் சிலர் பழங்களை மட்டுமே உண்ணலாம் என கருதுகிறார்கள். நாம் கூறவருவது பழங்களை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான். இன்னொரு விவரம் கிளைசீமிக் இண்டெக்ஸ் (GI) என்ற ஒன்று உள்ளது. இந்த எண்ணை வைத்து மிகவும் அச்சுறுத்துவார்கள். இந்த எண் எதை குறிக்கிறது என்றால், எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது எவ்வளவு வேகமாக நமது ரத்தத்தில் சர்க்கரையை கூட்டுகிறதோ அதை குறிப்பதுதான் இந்த ஜி.ஐ (GI).
இப்போது குளூகோஸை எடுத்து உண்டோமேயானால், அது சர்க்கரையின் அளவை உடனே உயர்த்தி விடும். சாப்பாடு சாப்பிடுகிறோம் என்றால் அது செரிமானமாக சற்று தாமதமாகும் என்பதால், சர்க்கரையின் அளவை மெதுவாக கூட்டும், உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டால் அது இன்னும் மெதுவாக கூட்டும், இதை வைத்து பழங்களை உட்கொண்டால் அது ஜி.ஐ எண்ணை கூட்டிவிடும் என்பார்கள். இது முற்றிலும் தவறானது. அதிகமான பழங்களில் இந்த எண் அரிசியை விட குறைவு என்பதே நிதர்சனம்.
அரிசிக்கு இந்த ஜி.ஐ எண் 60, 65, 50, 55 என மாறுபடும். ஆனால் பெரும்பாலான பழங்களில் குறிப்பாக மாம்பழம், வாழைப்பழம் உட்பட ஜி.ஐ எண் 50 முதல் 55 தான். இதன்மூலம் நாம் தெளியவேண்டியது பழங்களை உட்கொண்டால் சர்க்கரை விரைவாக கூடும் என்பது உண்மைக்கு புறம்பான ஒன்று.
இதுபோல், பழங்களிடம் நாம் தவறான அறிவியலை முன்வைத்ததால்தான் நாம் பெரும்பாலும் அதை ஒதுக்கி வைத்துள்ளோம். பழங்கள் மீது சுமத்தப்படும் மற்றொரு பொய் பழங்களை உட்கொண்டால் சளிப்பிடிக்கும் என்பது. இதுவும் தவறான புரிதலே, சளிக்கும் காரணம் அலர்ஜி அல்லது கிருமிகள் தான். பழத்தை உட்கொண்டால் அந்த கிருமி நம்மைத் தொற்றிக் கொள்ளும் என்பதும் பொய்.
நான் பழச்சாற்றைக் குடிப்பேன் ஆனால் பழங்கள் உண்ண மாட்டேன் என்று சிலர் கூறுகின்றனர். இதுவும் தவறு, பழங்கள் உண்பதற்கே குடிப்பதற்கல்ல.. பழங்களில் நிறைய நல்ல விஷயங்கள் உண்டு. அதில் ஒன்று அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட். நாம் பழத்தை பழச்சாறாக உட்கொள்ளும் போது இது ஆவியாகி வெளியேறி விடுகிறது.
பழச்சாறு சில சமயங்களில் இனிக்காது. ஆதலால் நாம் சர்க்கரையை உடன் சேர்த்துக் கொள்வோம். இதனால் உடலின் சர்க்கரை அளவு கூடும். ஆகவே பழத்தை பழச்சாறாக உட்கொள்ள வேண்டுமென்பது யாருக்கும் பரிந்துரைக்கப்பட்டது அல்ல. பல்லில்லாத குழந்தைகள் முதியவர்களன்றி மற்ற எல்லோரும் பழத்தை கடித்து உண்பதே சிறந்தது.
இவைதான் பழங்களை பற்றிய உண்மை. இதுவரை நாம் பழங்களை பற்றி அறிந்து கொண்டது என்னவென்றால்,
உணவுப்பொருளின் சுவைக்கும், சர்க்கரைக்கும் சம்பந்தம் கிடையாது.
பழங்கள் உட்கொண்டால் சர்க்கரை அளவு குறையும், சர்க்கரை உடம்பில் ஏறாது என்பது உண்மையல்ல. ஆகையால் பழங்களை ஒருவேளை உணவாக சர்க்கரை நோயாளிகள் கூட எடுத்துக் கொள்ளலாம்.
பழங்களை சாறாக குடிக்காமல், மென்றுதான் உண்ண வேண்டும்.
இந்த காணொளியின் மூலம், பழங்கள் பற்றிய தவறான சில நம்பிக்கைகள் மாறியிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தியப் பிரதமர் மோதிக்கு ஃபிலிப் கோட்லர் பிரெசிடென்சியல் விருது வழங்கப்பட்டது இவ்வளவு பெரிய சர்ச்சையை உருவாக்குமென யாரும் நினைத்திருப்பார்களா எனத் தெரியவில்லை. இது தொடர்பாக இந்தியா டுடேவும் தி வயர் இணைய இதழும் பல விரிவான கட்டுரைகளை வெளியிட்டுவிட்டன. அதில் பின்வரும் கட்டுரை பல அதிர்ச்சிகரமான தகவல்களை அளிக்கிறது.
ஃபிலிப் கோட்லர் விருது பெரும் மோடி
1. ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வேர்ல்ட் மார்க்கெட்டிங் சம்மிட் (WMS) விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழாவை நடத்தியது, இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சுஸ்லென்ஸ் ரிசர்ச் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் (Suslence).
2. WMS, Suslence ஆகிய இரண்டுமே சவுதியைச் சேர்ந்த தவுசீஃப் ஜியா சித்திக்கி என்பவரின் முயற்சிகள்போலத் தெரிகிறது. சித்திக்கி, சவூதி அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான SABIC-ல் 2014 ஜனவரி முதல் பணியாற்றுவதாக அவரது லிங்க்ட் – இன் புரொபைல் கூறுகிறது. SABIC இந்திய பெட்ரோலியச் சந்தையில் தனது கரத்தை விரிவுபடுத்த நினைக்கும் நிறுவனம்.
தவுசீஃப் ஜியா சித்திக்கி லிங்க்ட் – இன் புரொபைல்
3. இது தொடர்பாக தி வயர் திங்கட்கிழமை ஒரு கட்டுரையை வெளியிட்டதும் WMS மற்றும் Suslence ஆகியவற்றின் இணையதளங்கள் மூடப்பட்டுவிட்டன.
4. மோதிக்கு விருது வழங்குவதாக பெருமையுடன் அறிவித்த WMS18-ன் ட்விட்டர் கணக்கும் அழிக்கப்பட்டுவிட்டது.
5. சித்திக்கி SABICல் “Sustainability Specialist”ஆக பணியாற்றுவதாகக் கூறுகிறார். சவூதியின் தம்மமில் வசிக்கிறார்.
6. 2017-ல் Suslence Research International Institute-ஐ சித்திக்கி நிறுவுகிறார். இதன் இணைய தளம், WMS 18 விழா நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக ஜூலையில்தான் துவங்கப்படுகிறது. அலிகாரில் சுஸ்லான்சின் தலைமையகம் இருப்பதாக கூறப்பட்டாலும் இதனைக் கண்டறியமுடியவில்லையென ஒரு தொலைக்காட்சி நிறுவனம் கண்டறிந்தது.
7. Suslence-ல் அவரது மனைவி அண்னா கான், ஃபைசல் ஜியாவுதீன் ஆகிய மேலும் இருவர் இருக்கின்றனர். இந்நிறுவனத்தின் மூன்றாவது இயக்குனரின் பெயர் ஜுபைர் அகமது கான்.
8. அன்னாகான் தம்மமில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். பிரதமருக்கு கோட்லர் விருதை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இவரும் காணப்படுகிறது.
9. பிதமருக்கு அளித்த விருது தவிர கோட்லர் மார்க்கெட்டிங் எக்ஸலன்ஸ் பிரைஸ் என்ற விருதுகளையும் இந்த WMS அளித்திருக்கிறது. அதாவது இந்த விழாவுக்கு ஸ்பான்சர் செய்த கெய்ல், பாபா ராம்தேவின் பதஞ்சலி, பிசினஸ் வேர்ல்ட், விட்டிஃபீட் போன்ற நிறுவனங்களுக்கு அவை அளிக்கப்பட்டிருக்கின்றன.
10. தேர்வுக் குழுவில் இருந்ததாக இணைய தளம் குறிப்பிடும் வால்டர் வியெர்ராவை தி வயர் தொடர்புகொண்டு கேட்டபோது, யாரும் விருதுகளைத் தேர்வுசெய்ய அழைக்கவேயில்லை. அவர்களாகவே பார்த்துக்கொண்டார்கள் என்கிறார். சித்திக்கியை அவருக்கு இதற்கு முன்பாகத் தெரியாது.
11. சித்திக்கி தி வயரிடம் பேச மறுத்துவிட்டார். SABICஇடமும் இது குறித்து வயர் தொடர்புகொண்டிருக்கிறது.
மும்பையில் நடைபெற கெம் – 2018 கன்காட்சியில் SABIC நிறுவன தலைவருடன் நிதின்கட்கரி.
12. SABIC 1993-94 ல் இருந்து குஜராத்தில் தனது ஆலைகளை இயக்கிவருகிறது. இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்த இந்நிறுவனம் விரும்புகிறது.
13. இந்திய அரசு நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் கெய்ல் ஆகியவற்றுக்குச் சொந்தமான ONGC Petro Additions Limitedல் 50 சதவீத பங்குகளை, 4.3 பில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க விரும்புகிறது SABIC. கெய்ல் நிறுவனம்தான் WMS18-ன் ஸ்பான்ஸர்களில் ஒன்று.
அதாவது, தி வயர் இணைய தளத்தின் கட்டுரை சுட்டிக்காட்டுவதென்னவென்றால், இந்தியாவின் எரிசக்தித் துறையில் பெரும் முதலீட்டைச் செய்ய விரும்புகிறது SABIC. அதற்கான பரந்த முயற்சிகளில் இந்த விருதும் ஒன்றாக இருக்க முடியாதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன் ஃபேஸ்புக் பதிவிலிருந்து…
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் (வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிக தொழிற்துறையை ஈர்ப்பதால் அப்படியே அழைக்கலாம்) ஜனநாயகத்தின் நடைமுறை எவ்வாறு உள்ளது என்பதை சட்டக்கல்லூரி மாணவர் என்ற அடிப்படையில் நேரடியாக அனுபவைத்ததிலிருந்து பகிர்கிறேன்.
ஜனவரி 22-ம் தேதி ஜாக்டோ – ஜியோ சார்பாக ஆசிரியர்கள் தொடர்போராட்டத்தை அறிவித்தார்கள் மாணவர் அமைப்பின் பிரதிநிதியாக நான் கடந்த ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் உண்மைக்கு புறம்பாக வரலாற்று புனைவுகளை எப்படி அறிவியலுடன் இணைத்து பேசுகிறார்கள் மக்களையும், மாணவர்களையும் எப்படி மூடத்தனத்தில் ஆழ்த்துகிறார்கள் என்றும், அதை குறிப்பாக அறிவியலின்பால் கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் எப்படி உணரவேண்டும் என்ற அடிப்படையில் “மூடத்தனத்தை பரப்பும் அறிவியல் மாநாடு” என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை விநியோகித்தேன்.
வழக்கம் போல் உளவுப்பிரிவினர் வந்து பிரசுரம் பெற்றுச் சென்றபின் சில நிமிடத்தில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வந்து கையில் உள்ள பிரசுரத்தை பறித்துக்கொண்டு வண்டியை வரச்சொல்லுங்க என துணை ஆய்வாளரிடம் கூறினார்.
நானோ ஏன் சார் பிரசுரம் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது என்றதும், பதில் ஏதும் இல்லை. நான் நீங்கள் இப்படி தான் 20 – ஜனவரி 2019 அன்றும் எங்களை உளவுப்பிரிவு போலிசார் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கூறியவுடன் விசாரணை என்ற பெயரில் ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்தீர்கள் ஏன் சார்? எங்களிடம் ஏதும் நீங்கள் சந்தேகப்படும் படியான பொருள் இருந்ததா? என்ற கேள்விக்கும் ஸ்டேஷனுக்கு வாங்க பேசிக்கொள்ளலாம் என கூறி அழைத்துச்சென்றனர்.
காரில் ஏறியதுமே செல்போனைப் பறித்துக்கொண்டனர். ஸ்டேசனில் துணை ஆய்வாளர் இருந்தார். இறங்கியதுமே “என்ன செஞ்ச”? என்ற வினாவுடன் ஆரம்பித்தார். “நோட்டீசு கொடுத்தேன் அதற்கு கூட்டிட்டு வந்தாங்க” என்றேன். என்ன நோட்டீசு என்றார். நான் பிரசுரத்தின் தலைப்பையும் அதனுடைய அவசியத்தையும் கூறும்போதே குறுக்கிட்டு, “நோட்டீசு கொடுப்பதற்கு அனுமதி வாங்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? நீங்க சட்டக்கல்லூரி மாணவர்தானே? இதுகூட தெரியாதா? என்றும் சட்டத்திலேயே அனுமதி பெற்றுதான் நோட்டீசு கொடுக்க வேண்டும் என்று இருக்கு உங்களுக்கு தெரியாதா?” என்றார்.
அதற்கு நானோ நீங்கள் கூறுவது எந்த சட்டத்திலும் அப்படி இல்லை. அடிப்படை உரிமைகளில் (Fundamental Rights Art-19) என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது அதனால் என்னுடைய கருத்தை நான் கூறலாம் என்று பதிலளிக்கும்போதே, சீறுடை அணியாத துணை ஆய்வாளர் “உங்கள் கருத்தை மக்கள் மீது திணிக்ககூடாது தம்பி, மற்றவர்களின் உணர்வு அது, அதில் ஏன் நீங்க தலையிடுறீங்க” என்றார்.
“நோட்டீசு கொடுப்பதில் என்ன கருத்துத் திணிப்பு வரப்போகிறது சார்… பிரச்சாரம் செய்வது, நோட்டீசு கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது இவையெல்லாம் அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் சார்” என்றதும், “அதெல்லாம் கிடையாது நீகொடுக்கக்கூடாது..” என்றார்.
“சரி சார் நான் கொடுக்கக்கூடாது என்றால் அறிவியல் மாநாட்டில் அப்படி புராணப்புரட்டுகளைப் பேசியது மட்டும் கருத்து திணிப்பு இல்லையா..?” என்றதும்
“அதையெல்லாம் நீ பேசாத உள்ள போயி உக்காரு..” என்று மிரட்டும் தொனியில் பேசி அதிரடிப்படைப் போலிசிடம் சொல்லி அழைத்துச்சென்று உட்காரவைத்தார்.
என்னை அழைத்துசென்ற அதிரடிப்படைப் போலிஸ் 15 நிமிடம் கழித்து என்னிடம் வந்து “எந்த அமைப்பு, நீங்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” என்று கேள்வி எழுப்பினார்.
நான் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி என்கிற மாணவர் அமைப்பு எங்களுடையது பதிவு செய்யப்படாத அமைப்புதான் என்று கூறவும்,
“பதிவு செய்தால் தானே தெரியும் என்றும், இல்லையென்றால், மக்களுக்கு எப்படி தெரியும்?” என்றார்.
“நாங்கள் தான் பிரசுரம் கொடுக்கிறோம் இதுபோல் பிரச்சாரம் செய்கிறோம், போஸ்டர் ஒட்டுகிறோம், அனுமதி பெற்று போராட்டம் நடத்துகிறோம், மக்களுக்கு தெரியாதா மேலும் பதிவு செய்வது அரசிடம், மக்களுக்கு எப்படி தெரியும்…” என்றவுடன்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
“அப்படியிருந்தாலும் அரசுக்கு தெரியவேண்டாமா?” மேலே சொல்லும் நடவடிக்கையின் வாயிலாகவே தெரிந்துகொள்ளலாமே சார். “இல்ல தம்பி கண்டிப்பாக பதிவு செய்திருக்கணுமே” என்றார். நானோ அப்படி கிடையாது 7-பேர் சேர்ந்தால் ஒரு சங்கத்தையோ, அமைப்பையோ ஆரம்பிக்கலாம் சட்டமே உரிமை வழங்கியுள்ளது மேலும் சட்டரீதியான தீர்வுகளை நாடும்பட்சத்தில்தான் பதிவு செய்யவேண்டும் இல்லையென்றால் அதுவும் அவசியம் இல்லை, கட்டாயமும் இல்லை என்றதும் சென்றுவிட்டார்.
நோட்டீசை போனில் யாரிடமோ படித்து காண்பித்தார் சீருடை அணிந்த துணை ஆய்வாளர். பிறகு என்னை அழைத்து உளவுப்பிரிவு(IS) ஆய்வாளர் பேசுகிறார் பேசு என்று போனில் பேசச் சொன்னார். அவரோ “தம்பி நீங்கள் செய்வது எல்லாம் சரியான செயல்தான் நல்ல கருத்துக்களைதான் சொல்கிறீர்கள்… ஆனால் ஒரே நாளில் எப்படி நீங்க நினைப்பது போல் நாட்டை மாற்றிவிட முடியாது பல கருத்துள்ள மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மெது மெதுவாகத்தான் செய்ய முடியும்.”
அதற்கு நானோ “நாங்களும் மெதுவாகத்தான் செய்கிறோம் பிரசுரம், போஸ்டர் என்றுதான் செய்கிறோம் இதில் என்ன தவறு உள்ளது ஏன் என்னை ஸ்டேசனுக்கு அழைத்து வரச்சொன்னீர்கள்” என்றவுடன் “அப்படி இல்ல.. தம்பி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசு காவலுக்குத்தான் நின்றது. ஆனால் சிவா என்ற நபர்தான் முதலில் தடுப்பின் மீது ஏறி குதித்தார் பிறகு கூட்டத்தை களைக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அது உனக்கே தெரியும். மேலும் 5 நபர்களுக்கு மேல் கூடினால் பிரச்சனை வரும் என 100 வருடத்திற்கு முன்னாலேயே எழுதியுள்ளான். அப்படி சென்சிட்டிவான இடத்தில் போய் ஏன் வேலை செய்கிறீர்கள் அதனால் தான் அழைத்து வரச்சொன்னேன். சரி உன்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் உன் ஊர் எது உனது தந்தை எங்கு உள்ளார்..” என்று கேள்விகளை அடுக்கினார்.
ஏன் என்றதும் “உனது குடும்பம் திருந்திவிட்டதா, ஊர் திருந்திவிட்டதா? அங்கு போய் வேலை செய்யுங்கள், உங்கள் குடும்பத்தை திருத்துங்கள் பிறகு திருநெல்வேலி வரலாம் என்று கூறி இனி இப்படிப்பட்ட(Sensitive) பதற்றம் நிறைந்த பகுதிகளில் வேலை செய்யாதீர்கள்..” என்று அழைப்பைத் துண்டித்தார்.
சிறிது நேரம் கழித்து எழுதி வாங்கிக்கொண்டு விடுதலை செய்தனர்.
மேலே கூறிய சம்பவம் ஒரு முக்கியமான நடைமுறையை எனக்கு உணர்த்தியது. அது இந்திய அரசியலமைப்புச்சட்டம் நமக்கு வழங்கியதாக சொல்லப்படும் ஷரத்து 19- ன் அடிப்படை உரிமைகளை மறுப்பதை புரிந்துகொள்ளமுடியும்.
ஷரத்து 19(1)a – பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், இச்சட்டம் நமக்கு தெரியாதெனக் கருதி, எதுவும் அனுமதி பெற்றே செய்ய வேண்டுமாம் சட்டத்தில் உள்ளதாகவும் மிரட்டுகிறார்.
ஷரத்து 19(1)b – ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம். இதை மறுத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட சட்டம் சொல்லும் 5 நபர்களுக்கு மேல் கூடினால் பொது அமைதி குலையும் பிரச்சனை வரும் அதனால் நீங்கள் கூடவே முடியாது, நோட்டீசே ஆயுதங்களாகப் பாவிக்கப்படுகிறது.
ஷரத்து 19(1)c – கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம். இந்த சட்டத்தை மறுத்து, அமைப்பு பதிவு செய்யப்பட்டால்தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பது போலவே அதிரடிப்படை காவலரின் கேள்வி.
ஷரத்து 19(1)d – இந்தியா முழுவதும் சென்று வரும் சுதந்திரம், சட்டமே நியாயமான கட்டுப்பாடு என்று பொதுமக்களின் நலன் முன்னிட்டும் ஷரத்து 19(5)1 என்பதன் மூலம் இந்தியா முழுவதும் எங்கும் செல்லலாம் என்று கூறியுள்ளது. இதை மறுத்து உனது ஊரை விட்டு ஏன் இங்கு வந்தாய் அங்கு சென்று வேலையைப்பார் என்று மிரட்டுகிறார். (ஒரே மாவட்டத்துக்குள்ளேயே இந்த நிலைமை)
மேலே விவரிக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டுள்ள உரிமை. ஆனால் போலீசு அரசின் நடவடிக்கையை, அது அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றும் எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் முடிவு செய்வோம், எங்களை கேட்டுதான் எதையும் செய்ய வேண்டும். என்ற நிலையை நிலைநாட்டுகிறார்கள் போலீசு, அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள்.
ஒரு சட்டம் பயின்ற மாணவர் என்ற அடிப்படையில் நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ சட்டவழிமுறைகளுக்கு நேரெதிராக உள்ளது. போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட நிலைநாட்டிட, நாம் புதியப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்ற நிலையே உள்ளது.
அறிவியல் மாநாட்டில் RSS, BJP –யைச் சேர்ந்தவர்கள் அறிவியலுக்கு ஒவ்வாத முரண்பட்ட பிற்போக்குப் புராணப்புரட்டுக்களை அவர்களின் கருத்துக்களாக பரப்பிட சுதந்திர உரிமையுண்டு. அவற்றை அறிவியல் ரீதியாக விமர்சனம் செய்யவோ, மாற்றுக்கருத்தை சொல்லவோ, பிரசுரமாக மற்றவர்களிடம் கொண்டுசெல்லவோ உரிமையில்லை.
மேற்கூறிய நிகழ்வுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக நான் படித்தது, நம்பியது எல்லாம் தவறே என்று உணர்த்துகிறது. மாறாக காவல் நிலைய ஆணையின் படியே நான் இயங்க நிர்பந்திக்கப் படுகிறேன். அதுவே சரி என்ற மனநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன்.
இந்த நிகழ்வு என்னை மட்டுமல்ல, ”சட்டத்தைமக்களின்நலனுக்காகவேபயன்படுத்தவேண்டும்” என்று சிந்தித்து சட்டம் பயிலும் அனைவரிடமும் கேள்வியை எழுப்பும் என்றே எண்ணுகிறேன். நாம் பயின்ற சட்டத்தின் ஆட்சியை எப்படி நடைமுறைப்படுத்துவது, உலகில் பெரிய ஜனநாயக நாட்டின் நிலைமை இதுதான். இதை நாம் எவ்வாறு மாற்றப்போகிறோம் என்ற கேள்விகளுடன் விடைகிடைக்காமல் முடிக்கிறேன்.
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீது புனே காவல்துறை போட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், ஆனந்த் தெல்தும்டேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஜனவரி 22-ம் தேதி நான்கு ஐ.ஐ.டி-களில் மாணவர்கள் போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர்.
ஐஐடி காந்திநகரில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான பொய்வழக்குகளைக் கண்டிக்கும் மாணவர்கள்.
ஐஐடி சென்னையில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டமும், ஐஐடி மும்பையில் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டமும், ஐஐடி கரக்பூரில் அம்பேத்கர் பகத்சிங் படிப்பு வட்டமும் , ஐஐடி காந்திநகரில் மாணவர்களும் இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இப்போராட்ட கூட்டத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். ஐஐடி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, பொறியியல், கார்ப்பரேட்டு நிர்வாகம், சமூகவியல் என பல துறைகளில் பல உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றியவர். ஐஐடி கரக்பூரில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரின் நலனை மையப்படுத்திய அவரது எழுத்துகள் மற்றும் செயல்பாட்டிற்காக மோடி அரசால் ஆனந்த் தெல்தும்ப்டே பழிவாங்கப்படுகிறார்.
இந்நிகழ்வில் மாணவர்களும் பேராசிரியர்களும் பேசுகையில், மோடி அரசு பார்ப்பனிய-கார்ப்பரேட் அடிவருடித்தன அரசியலை எதிர்க்கும் எவரையும் ஒடுக்கவே செய்யும் என்பதையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் நலன் சார்ந்து செயல்படும் அறிவுஜீவிகளை ஒடுக்குவது என்பது மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஜனநாயக வெளி சுருங்கி வருவதை வெளிக்காட்டுகிறது என்பதையும் சுட்டிக் காட்டினர்.
மேலும், தங்களது அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை எதிர்ப்போர் அனைவருக்கும் தேசதுரோகி என பட்டம் வழங்கும் பாஜக அரசு, காலனிய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கருப்புச் சட்டங்களின் தொடர்ச்சிகளைக் கொண்டுதான் இன்று வாழ்வாதாரங்களை இழந்து போராடும் மக்கள் மீதும் ஒடுக்குமுறை செய்கிறது என்பதை வந்திருந்த பேராசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
அரசுக்கு எதிரான கருத்துகளைச் சிந்திப்பதே தவறு எனக் கூறி தன் கருப்புச் சட்டங்களை மக்கள் மீது பாய்ச்சுகிறது இந்த அரசு என்று பேசினார் மற்றொரு பேராசிரியர். மாணவர் ஒருவர் தெல்டும்டே எழுதிய ‘சாதியக் குடியரசு’ (‘Republic of Caste’) என்ற புத்தகத்தில் இருந்து தற்போதைய இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தப்படும்போது அடித்தட்டு மக்கள் மீது நடத்தப்படும் அரச வன்முறை பற்றிய சில பக்கங்களை வாசித்தார்.
ஐஐடி சென்னை அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தினர் ஒருங்கிணைத்த விவாதக் கூட்டம்
ஐஐடி மும்பையைச் சேர்ந்த அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டத்தினர் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம்
1 of 2
ஐஐடி காந்திநகர் மாணவர்கள் ஒருங்கிணைத்த விவாதம் மற்றும் கையெழுத்து பதாகை
1 of 2
ஐஐடி கரக்பூரில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட போராட்டம்
1 of 2
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு ஆதவாக ஐஐடி காரக்பூர் மாணவர்கள்.
# ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, ஐஐடி வாரணாசி, ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி காந்திநகர், IIEST சிவ்பூர் மற்றும் IMS-BHU ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையின் இணைப்பு (ஆங்கிலத்தில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை தன்னகத்தே கொண்ட பஞ்சாயத்துதான் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்காவில் உள்ள கூத்தப்பாடி பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் தாய் கிராமமான கூத்தப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதே ஊரில் வன்னிய சாதியை சேர்ந்த சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆசிரியப் பெருமக்கள் உள்ள கிராமம் இது. காவிரி இந்த பஞ்சாயத்தில்தான் முதலில் நுழைகிறது. ஆனால் இந்த தண்ணீர் இங்குள்ள விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அளவில் பல அடி பள்ளத்தில்தான் காவிரி ஓடுகிறது.
வானம் பார்த்த பூமியாக இப்பகுதி இருப்பதால் வன்னிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோறு போடுவது என்னவோ அண்டை மாநிலமான கர்நாடகத்தின் பெங்களூருதான். பழைய இரும்பு கடை, கோழி வியாபாரம், பாய் வியாபாரம், கட்டிட வேலை, பெயிண்ட் வேலை என்று வாழ்வின் பெரும்பகுதி நாட்களை பெங்களூருவில் கழிக்கும் நிலை.
ஆனால் என்ன? எந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டு விடுகிறது. உண்மையில் ஒரு சில கட்சிகளின் சாதி வெறி பேச்சுக்கள் மூலம் பிரச்சாரத்தின் மூலம் அவர்கள் ஊட்டிய தைரியத்தில் மக்கள் இந்த நிலைக்கு மாறியிருக்கிறார்கள். இவ்வாறு சாதிய வெறியூட்டல்கள், புகைச்சல்கள், முரண்பாடுகள், சண்டைகள் அதிகம் உள்ள தருமபுரி கிராமங்களில் கூத்தப்பாடியும் ஒன்று.
இந்த சாதி வெறிக்கு, மிக அருகில் இருந்து பாதிப்பை சந்தித்து வரும் மக்கள்தான் கூத்தப்பாடி தாழ்த்தப்பட்ட மக்கள். எனவே விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற ஜனநாயக அமைப்பு தொடங்கிய காலத்திலிருந்தே இந்த கிராம தாழ்த்தப்பட்ட மக்கள் இதில் ஆர்வமுடன் இணைந்தனர்.
சாதி வெறியை கருத்து ரீதியாகவும், களத்திலும் போராடி அதற்கு பதிலடி கொடுத்ததன் காரணமாக மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வந்தது, வி.வி.மு. ஆதிக்க சாதி பிரிவில் ஓரளவு ஜனநாயகமாக சிந்திக்க கூடியவர்கள் பலர் சாதிகடந்து ஆதரவு தரும் நபர்களாக மாறினர். ஆனால் யாரும் உறுப்பினராக மாறவில்லை. அந்த அளவு சாதி உணர்வின் தாக்கம் இருப்பதே இதற்கு காரணம்.
ஊரின் நுழைவாயிலில் ஊரை காக்கும் முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பட்டய புறம்போக்கில் உள்ளது. இதை சுற்றி கான்கிரீட் தளம் உள்ளது. இந்த இடமானது, பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கான பேருந்து நிறுத்தும் இடமாகவும், திருமணம் நடைபெற்றதும் மணமக்களை ஊருக்கு சாமி கும்பிட்டு வழி அனுப்பி வைக்கும் இடமாகவும், நிழல் தரும் மரங்கள் இருப்பதால் பொழுது போக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறுதான் கோயில் கட்டப்பட்ட 40 ஆண்டு காலத்திலிருந்து இருந்து வருகிறது.
இந்த கோயிலுக்கு மிக அருகில் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்களை கடந்து சற்று தொலைவில் இருப்பவர்கள் ஆதிக்க சாதியினர். இந்த முனியப்பன் சாமியின் பெயரில்தான் இப்போது ஆதிக்க சாதியினர் பிரச்சினையை கிளப்புகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் இந்த கோயிலை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று அவதூறு செய்து சாதிவெறியை கக்குகின்றனர், சாதி தீயை மூட்டுகின்றனர்.
உண்மையில் அதுவல்ல பிரச்சினை. இதன் பின்னணியில் இருப்பது ஆதிக்க சாதிவெறியும், வரும் நாடாளுமன்ற தேர்தலுமே ஆகும். இதற்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்ப வேண்டும்.
கோயிலை சுற்றி தீண்டாமை வேலியை அமைக்க நீண்ட காலமாக அவர்கள் முயற்சித்து வருவதும், இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக இருந்துவரும் நிலையில் மீண்டும் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.
1 of 3
2017-ம் ஆண்டு ஆதிக்க சாதியினர் கம்பி வலை மூலம் வேலி அமைக்க முயற்சித்த போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் சண்டை வந்தது. அதன்பேரில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அதன் பேரில் தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை 14.06.2017 அன்று நடந்தது. இதில் மேற்படி கோயில் புறம்போக்கு நிலத்தில் இருப்பதால் எந்த ஒரு கம்பி வேலியும் அமைக்க கூடாது என்று முடிவாகி தீர்மானம் (ந.க.01/2017)நிறைவேற்றப்பட்டது. ஆனால், வேலி போடுவதற்காக நடப்பட்ட கான்கிரீட் கம்பிகள் அகற்றப்படாமல் இருந்தன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை வந்தது. வெளிமாநிலத்திற்கு பிழைக்க சென்று பொங்கலை கொண்டாட ஊருக்கு பெரும் எண்ணிக்கையில் வந்த ஆதிக்க சாதிக்காரர்களுக்கு சாதி வெறிதான் பொங்கியது. பொங்கலில் நடந்த சிறு பிரச்சினையை காரணம் காட்டி, ஏற்கெனவே போடப்பட்ட தீர்மானத்தை மீறி, 19.01.2019 அன்று காலை 9 மணிக்கு ஆதிக்க சாதியினர் கம்பி வேலி அமைத்தனர்.
இது குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களிடம் நியாயம் கேட்டபோது, ஆதிக்க சாதிவெறியர்கள் , தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பெயரை குறிப்பிட்டு அசிங்கமாக திட்டியும் கொலை செய்து விடுவதாகவும் சேரியை நத்தம் காலனி போல் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டி அனுப்பினர்.
இது தவறு என்று பேசிய அக்கிராமத்தில் உள்ள தலித் முன்னணி இளைஞர்களிடம், நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்க, நாங்கள் வேலி போட்டது, போட்டதுதான் என்றனர். இது குறித்து டிஎஸ்பி -யிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் முறையிட்டனர். அவர் 4 போலீசை அனுப்பினார். ஆனால் அவர்கள் கம்பி வேலி போடுவதை தடுக்காமல் வேடிக்கைதான் பார்த்தனர். இது குறித்து மீண்டும் டிஎஸ்பி-யிடம் முறையிட்டாலும் அலட்சியமாக இருந்து மணிக்கணக்கில் காலம் தாழ்த்தினார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர், அதிகாரம் என்னிடம் இல்லை. தாசில்தாரை போய் சந்தியுங்கள் என்று கூறிவிட்டார்.
தாசில்தாரிடம் முறையிட்டாலும், அவரும் வேறு வேலை இருப்பதாக கூறி காலம் தாழ்த்தினார். இந்த காலம் தாழ்த்துதலை பயன்படுத்தி கொண்டு ஆதிக்க சாதியினர் கம்பி வேலி அமைத்து முடித்து விட்டனர். கோயிலை சுற்றி மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோருக்கு அரசு கட்டிக் கொடுத்த புதிய காலனி பகுதிகளுக்கு செல்லும் பாதையையும் அடைத்து வேலி அமைத்து விட்டனர்.
அரசு அதிகாரிகளின் பலத்தை விட ஆதிக்கசாதிக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதே நாடு முழுவதும் நடந்துவரும் நிகழ்வுகள் காட்டுகிறது. பிறகு பேச்சு வார்த்தை என்ற பேரில் தலித் மக்களை அழைத்தும் ஆதிக்க சாதியினரை அழைத்தும் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் பேசினர். இதில் அத்துமீறிய ஆதிக்க சாதியினர் கட்டுபடவில்லை.
மறுநாள் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 150 பேர் வரை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்து முறையிட்டனர். பிறகு RDO பேச்சுவார்த்தை என்று தொடர்ந்து இருநாள் நடந்து வருகிறது. அரசு நிலத்தில் கோயில் கட்டியதே தவறு, இதில் தாசில்தார் உத்தரவையும் மீறி வேலி போட நீங்கள் யார் என்று ஆர்டிஓ கேட்கும் கேள்விக்கு ஆத்திரத்தையே பதிலாக கொடுக்கிறார்கள், ஆதிக்க சாதியினர்.
முதல் சுற்றில் திமிராக பேசிய அவர்கள், இரண்டாவது சுற்றில் வேறு வழியின்றி தவறை ஒத்துக் கொண்டாலும் வேலியை அகற்ற முடியாது என்று கூறி வருகின்றனர். ஆனால் ஆர்டிவோ வேலியை அகற்ற உத்தரவு போட்டு விட்டார். அரசு உத்தரவிற்கு கட்டுபட மறுக்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் வெறித்தனமாக தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி வருகின்றனர். நத்தத்தை நினைவு படுத்திக் கொண்டு பேசுங்கள் என்று நரித்தனமாக மிரட்டுகின்றனர்.
உத்தரவு போட்ட மறுநாளே ஊரை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடைகளில் பொருட்கள் கொடுக்க கூடாது என்று கட்டுபாடு போட்டு விட்டனர். தற்போது அங்குள்ள கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. பென்னாகரம் வந்துதான் பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல தாழ்த்தப்பட்ட மக்களும் ஊரில் இறந்த ஒருவருக்கு அடிமை தொழிலான மேளம் அடிப்பதை செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
ஊரில் அதிகாரிகளும், போலிசும், உளவு போலிசும் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர். தற்போது ஆதிக்க சாதிக்காரர்கள், காலனி தெருவிற்கு போகக்கூடிய வழியை மட்டும் விட்டு விடுகிறோம். அதை அடைத்து போட்ட வேலியை மட்டும் அகற்றி விடுகிறோம். மற்றபடி முனியப்பன் கோயிலை சுற்றி போட்ட வேலி அப்படியே இருக்கட்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் நைச்சியமாக பேசி வருகின்றனர். இது தீண்டாமை வேலி. இதை அனுமதித்தால் அடுத்தடுத்து ஆதிக்க சாதிவெறி தாக்குதல்களை நாங்கள் சந்திக்க நேரிடும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் வேலியை அகற்றுவதற்கான போராட்டத்தில் உறுதியாக உள்ளனர்.
ஆதிக்க சாதி வெறியர்கள் மிரட்டுவதை போல், மீண்டும் நாயக்கன் கொட்டாய் சம்பவம் அரங்கேறுமா என்பது அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சாதி வெறியர்களை எப்படி தனிமைப் படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது.
அவள் மகன், அவளுக்குத் தெரியாத எதையும் சொல்லிவிடவில்லை. அவனது சிந்தனைகளெல்லாம் அவளுக்கும் பரிச்சயமானவைதாம். என்றாலும் இங்கே, நீதிமன்றத்தின் முன்னிலையில், அவனது கொள்கையின் மீது அவளுக்கு ஓர் அதிசயக் கவர்ச்சி முதன் முதலாக ஏற்படுவதை அவள் உணர்ந்தாள். பாவெலுடைய அமைதியைக் கண்டு அவள் வியப்படைந்தாள். அவளது கொள்கையிலும் அதன் இறுதி வெற்றியிலும் முழு நம்பிக்கை கொள்ளும் ஒரு நட்சத்திர ஒளியைப் போலவே அவள் அவனது பேச்சைத் தன் இதயத்துக்குள் பத்திரப்படுத்தி வைத்தாள்.
இனிமேல் அந்த நீதிபதிகள் அனைவரும் அவனோடு காரசாரமான விவாதத்தில் இறங்கி, அவன் கூறுவதையெல்லாம் கோபாவேசமாக மறுத்துக்கூறி, தங்களது சொந்த சிந்தனைகளை வலியுறுத்துவார்கள் என்று தாய் எதிர்பார்த்தாள். ஆனால் அந்திரேய் ஆடியசைந்து கொண்டே எழுந்திருந்தான். தனது புருவங்களுக்குக் கீழாக அந்த நீதிபதிகளைக் கவனித்துப் பார்த்தான். பிறகு பேசத் தொடங்கினான்.
”பிரதிவாதிப் பெரியோர்களே…”
”நீங்கள் நீதிபதிகளைப் பார்த்துத்தான் பேச வேண்டும். பிரதிவாதிகளை நோக்கியல்ல!” என்று அந்தச் சீக்காளி நீதிபதி கோபத்தோடு உரக்கக் கத்தினார். அந்திரேயின் முகத்தில் ஒரு குறும்புத்தனமான உணர்ச்சி பிரதிபலித்ததைத் தாய் கண்டுகொண்டாள். அவனது மீசைகள் அசைந்து துடித்தன; கண்களில் ஒரு பூனைக்கண் பிரகாசம் தோன்றியதைத் தாய் கண்டாள். அவன் தனது தலையை மெலிந்த நீண்ட கரத்தால் பரபரவென்று தேய்த்துவிட்டுக்கொண்டான்; பெரு மூச்செறிந்தான்.
”அப்படியா?” என்றான் அவன். ”நான் இதுவரை உங்களை நீதிபதிகளாகக் கருதவில்லை. பிரதிவாதிகளாகவே கருதிவிட்டேன்!”
”விஷயத்தைப் பற்றி மட்டுமே பேசுங்கள்!” என்று அந்தக் கிழ நீதிபதி வறண்ட குரலில் எச்சரித்தார்.
”விஷயத்தையா? ரொம்ப சரி. உங்களை நேர்மையும் கௌரவமும் சுதந்திரமும் கொண்ட உண்மையான நீதிபதிகளாகக் கருதிக் கொள்வதென்று நான் என் மனத்தைப் பலவந்தப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டேன்……..”
”நீதிமன்றத்துக்கு உங்கள் விமர்சனம் எதுவும் தேவையில்லை!”
“ஓஹோ, அப்படியா? ரொம்ப சரி. நான் எப்படியாவது பேசுகிறேன். நீங்கள் எல்லாம் ‘உன்னது’, ‘என்னது’ என்ற வித்தியாசம் பாராத, பாரபட்சமற்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலைமையாளர்கள் என்றே வைத்துக்கொள்வோம். சரி, உங்கள் முன்னால் இரண்டு பேரை இழுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒருவன் சொல்கிறான்: ‘அவன் என்னைக் கொள்ளையடித்ததுமில்லாமல் என்னைக் கூழாய் அடித்து நொறுக்கிவிட்டான்’ என்கிறான். இன்னொருவன் எனக்கு ஜனங்களைக் கொள்ளையடிக்க உரிமை உண்டு; என்னிடம் சொந்தமாக ஒரு துப்பாக்கி இருப்பதால் அவனைக் கூழாக அடித்து நொறுக்கவும் செய்வேன்’ என்கிறான்…….”
“வழக்கைப் பற்றி ஏதும் பேசத் தெரியாதா?” என்று குரலை உயர்த்திக்கொண்டு கேட்டார் அந்தக் கிழ நீதிபதி. அவரது கரம் நடுங்கியது. அவர் கோபப்படுவதைக் கண்டு, தாய்க்குச் சந்தோஷமாயிருந்தது. ஆனால் அந்திரேய் நடந்து கொள்ளும் விதம் தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது பேச்சு தன் மகனுடைய பேச்சோடு இணைந்து செல்வதாகத் தோன்றவில்லை. அவர்களது விவாதமெல்லாம் கண்ணியமும் கண்டிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென அவள் விரும்பினாள்.
அந்த ஹஹோல் தான் பேசத் தொடங்குவதற்கு முன்னால் அந்தக் கிழவரை வாய்பேசாது பார்த்தான்.
”விஷயத்தை மட்டுமா?” என்று நெற்றியைத் தடவிக்கொண்டே சொன்னான். ”நான் ஏன் அதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும்? உங்களுக்கு இப்போது என்னென்ன தெரிய வேண்டுமோ, அதையெல்லாம்தான் என் தோழன் எடுத்துக் கூறிவிட்டானே. மற்ற விஷயங்களை முறை வரும்போது மற்றவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்…”
அந்தக் கிழ நீதிபதி நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு சத்தமிட்டார்.
”நீங்கள் பேசியது போதும்!” அடுத்து – கிரிகோரிய் சமோய்லவ்!
ஹஹோல் கப்பென்று உதடுகளை மூடிக்கொண்டு பெஞ்சின் மீது சாவதானமாக உட்கார்ந்தான். சமோய்லவ் தனது சுருட்டைத் தலையைச் சிலுப்பிவிட்டுக்கொண்டு எழுந்திருந்தான்.
“அரசாங்க வக்கீல் என்னுடைய தோழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், நாகரிகத்தின் எதிரிகள் என்றும் கூறினார்……..”
“உங்கள் விசாரணையைப் பொறுத்த விஷயத்தை மட்டும் பேசுங்கள்.”
“இதுவும் அதைப் பொறுத்த விஷயம்தான். யோக்கியப் பொறுப்புள்ளவர்களைப் பொறுத்த விஷயங்கள்தான் எல்லாம். அவர்கள் சம்பந்தப்படாத எந்த விஷயமும் இல்லை. தயை செய்து நான் பேசுவதில் குறுக்கிட வேண்டாம். உங்கள் நாகரிகம் எது? அதைத்தான் நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
“உங்களோடு விவாதம் பண்ணுவதற்காக இங்கு நாங்கள் வரவில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள்!” என்று பல்லைக் காட்டிக்கொண்டே சொன்னார் அந்தக் கிழவர்.
அந்திரேயின் நடத்தை அந்த நீதிபதிகளிடத்தில் ஒரு மாறுதலை உண்டுபண்ணியிருந்தது. அவனது வார்த்தைகள் அவர்களிடமிருந்து எதையோ உரித்தெடுத்துவிட்டதுபோல் தோன்றியது. அவர்களது சாம்பல் நிற முகங்கள் கறுத்துக் கறைபடிந்தன. கண்களில் உணர்ச்சியற்ற பசிய ஒளி மினுமினுத்தது. பாவெலின் பேச்சினால் அவர்களுக்கு எரிச்சல்தான் உண்டாயிற்று. எனினும் அவர்கள் அவனை மதிக்கும்படியான நிர்ப்பந்தத்தை உண்டாக்கிவிட்டது, அவனது பேச்சு. அதனால் அவர்கள் தங்களது எரிச்சலைக்கூட வெளிக்காட்டாமல் உள்ளடக்கிக்கொண்டு தவித்தார்கள். அந்த ஹஹோலோ அவர்களது இந்தப் பாசாங்குத் திரையைக் கிழித்தெறிந்து, அவர்களது அந்தரங்க உணர்ச்சியை வெளிக் கிளப்பிவிட்டுவிட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் குசுகுசுத்துப் பேசினார்கள்; முகத்தை விகாரமாகக் கோணிக் கொண்டார்கள்; நிலைகொள்ளாமல் துறுதுறுத்தார்கள்.
”நீங்கள் மக்களை உளவாளிகளாகப் பழக்கிவிடுகிறீர்கள், இளம் யுவதிகளையும் பெண்களையும் கெடுக்கிறீர்கள்; மனிதர்களைத் திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாற்றிவிடுகிறீர்கள்; மதுபானத்தால் மக்களை விஷமூட்டிக் கொல்கிறீர்கள். சர்வதேச யுத்தங்கள், பொய் பித்தலாட்டங்கள், விபச்சாரம், காட்டுமிராண்டித்தனம் – இதுதான் உங்கள் நாகரிகம். இந்த மாதிரியான நாகரிகத்துக்கு நாங்கள் எதிரிகள்!”
‘நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்…….” என்று சத்தமிட்டார் அந்தக் கிழவர். ஆனால் சமோய்லவோ முகம் சிவக்க, கண்கள் பிரகாசிக்க எதிர்த்துச் சத்தமிட்டான்.
”நீங்கள் எந்த மக்களைச் சிறையிலே தள்ளி நாசப்படுத்துகிறீர்களோ, பைத்தியம் பிடிக்கச் செய்கிறீர்களோ அந்த மக்கள் குலத்தின் நாகரிகத்தைத்தான் நாங்கள் மதிக்கிறோம்; ஆதரிக்கின்றோம்; கெளரவிக்கிறோம்……”
”நான் – நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் எங்கள்மீது ஏற்கெனவே தீர்ப்புச் செய்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அவன் மூச்சுத் திணறிக்கொண்டே சொன்னான். அவனது கண்களைத் தவிர முகம் முழுவதும் வெளிறிட்டுப்போனதாகத் தோன்றியது. அவன் தன் கையை நீட்டி உயர்த்திக்கொண்டே கத்தினான். “நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நீங்கள் என்னை எங்கெங்கு அனுப்பினாலும் சரி, அங்கிருந்து நான் எப்படியாவது தப்பிவந்து என் சேவையை என்றென்றும். என் வாழ்நாள் பூராவும் தொடர்ந்து நடத்துவேன். இது சத்தியம்!”
சிஸோவ் உரத்து முனகிக்கொண்டே, தன் இருப்பிடத்தைவிட்டு அசைந்து உட்கார்ந்தான். ஜனக்கூட்டத்திடையே ஒரு விசித்திரமான முணுமுணுப்பு எதிரொலித்தது. அது திக்பிரமையுணர்ச்சியில் கலந்து அமிழ்ந்தது. ஒரு பெண் பொருமிக் குமுறியழுதாள். யாரோ திடீரென இருமலுக்கு ஆளாகிப் புகைந்தார்கள். போலீஸ்காரர்கள் கைதிகளை மங்கிய வியப்புணர்ச்சியோடு பார்த்தார்கள்; ஜனங்களைக் கோபத்தோடு பார்த்தார்கள். நீதிபதிகள் முன்னும் பின்னும் அசைந்தாடினார்கள். அந்தக் கிழட்டு நீதிபதி வாய்விட்டுக் கத்தினார்.
“அடுத்தது – இவான் கூஸெவ்!”
”நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!”
”அடுத்தது – வசீலி கூஸெவ்!”
”எனக்கும் ஒன்றும் இல்லை”
”பியோதர் புகின்!”
வெளுத்து நிறமிழந்து போயிருந்த புகின் சிரமத்தோடு எழுந்திருந்து, தன் தலையை உலுக்கிவிட்டுக்கொண்டு பேசினான்.
”நீங்கள் உங்களைப் பார்த்தே நாணித் தலைகுனிய வேண்டும். எனக்குக் கல்வியறிவு இல்லைதான். என்றாலும் எது நியாயம் என்பது எனக்குத் தெரியும்.” அவன் தன் கையைத் தலைக்கு மேலாக உயர்த்தி, மௌனமானான். கண்களைப் பாதி மூடியவாறு தூரத்தொலையிலுள்ள எதையோ கூர்ந்து கவனிப்பது போலப் பார்த்தான்.
“இதென்ன இது?” என்று எரிச்சல் கலந்த வியப்போடு கூறிக்கொண்டே அந்தக் கிழ நீதிபதி நாற்காலியில் சாய்ந்தார்.
“ப்பூ! நீங்கள் நாசமாய்ப் போக!……”
புகின் வெறுப்போடு கீழே உட்கார்ந்தான். அவனது இருண்ட வார்த்தைகளில் ஏதோ ஒரு புதுமையும் ஏதோ ஒரு பெரிய முக்கியத்துவமும், எதையோ பழித்துக் கூறும் துக்க உணர்ச்சியும், அப்பாவித்தனமும் பொதிந்திருந்தான். எல்லோருமே இதை உணர்ந்துகொண்டார்கள். நீதிபதிகள்கூட, அவன் கூறியதைவிடத் தெளிவானதான ஓர் எதிரொலியை எதிர்பார்ப்பது போலத் தம் செவிகளைக் கூர்ந்து சாய்த்தார்கள். அசைவற்ற அமைதி அங்கு நிலவியது. இடையிடையே அழுகைக்குரல் கேட்பதைத் தவிர அந்த மெளனத்துக்கு வேறு இடைஞ்சல் எதுவும் ஏற்படவே இல்லை. கடைசியாக, அரசாங்க வக்கீல் தமது தோள்களைக் குலுக்கிக் கொண்டு லேசாகச் சிரித்தார். பிரபுவம்சத் தலைவர் இருமினார்; மீண்டும் அந்த நீதிமன்றத்தில் ரகசியப் பேச்சுக்களின் கசமுசப்புக்குரல் முணுமுணுக்கத் தொடங்கியது.
”நீதிபதிகள் பேசப்போகிறார்களா?” என சிஸோவைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள் தாய்.
“எல்லாம் முடிந்துவிட்டது – இனிமேல் தீர்ப்பு மட்டும்தான் பாக்கி……”
”இவ்வளவுதானா? வேறொன்றும் இல்லையா?”
”இல்லை.”
அவளால் அதை நம்ப முடியவில்லை.
சமோய்லவின் தாய் தனது இடத்தில் நிலைகொள்ளாமல் தவித்துப் புழுங்கினாள். பெலகேயாவை முழங்கையாலும் தோளாலும் இடித்துத் தள்ளினாள்.
“இதென்ன இது? இப்படியா நடக்கும்?” என்று தன் கணவனை நோக்கிக் கேட்டாள் அவள்.
“நீதான் பார்த்தாயே. இப்படித்தான் நடக்கும்.”
“கிரிகோரியுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்?”
”சும்மா இரு.”
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிளவை, ஏதோ ஒரு முறிவை, ஏதோ ஒரு குழப்பத்தை உணர்ந்திருந்தார்கள். அடிமுடி காண முடியாத ஏதோ ஒரு சொக்கப்பனையின் ஒளியை, அதனுடைய இனம் தெரியாத அர்த்த பாவத்தை, அதனது தடுத்து நிறுத்த முடியாத அசுர சக்தியைக் கவனித்துக்கொண்டிருப்பதுபோல் ஜனங்கள் அனைவரும் ஒன்றுமே புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். திடீரெனத் தங்கள் முன் தோன்றிய மகத்தான விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், தங்களுக்குப் புரிந்த சின்னஞ்சிறு விஷயங்களைப் பற்றி மட்டும் ஏதேதோ உணர்ச்சிகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
”இதைக் கேளு. அவர்கள் ஏன் இவர்களைப் பேசவிடுவதில்லை?” என்று புகினின் மூத்த சகோதரன் சிறிது உரக்கக் கேட்டான். ”அரசாங்க வக்கீலை மட்டும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசவிடுகிறார்களே……..”
பெஞ்சுகளுக்குப் பக்கத்தில் நின்ற ஓர் அதிகாரி ஜனக்கூட்டத்தை நோக்கித் தன் கையை நீட்டி அவர்களைக் கையமர்த்தினான்.
”அமைதி… அமைதி” என்றான் அவன்.
சமோய்லாவின் தந்தை பின்னால் சாய்ந்து கொண்டு மனைவியின் முதுகிற்குப்பின் உடைந்த வார்த்தைகளில் ஏதேதோ முணுமுணுக்கத் தொடங்கினான்.
“ரொம்ப சரி – அவர்கள் குற்றவாளிகளென்றே வைத்துக் கொள்வோம். இருந்தாலும் தங்கள் கட்சியை எடுத்துரைப்பதற்கும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் யாருக்கு எதிராகக் கிளம்புகிறார்கள்? நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் என் இதயத்தில் சில சொந்த அபிப்பிராயங்கள் உண்டு…”
”உஷ்!” என்று சமோய்லவின் தந்தையை நோக்கி விரலை நீட்டி எச்சரிக்கை செய்தான் அதிகாரி.
சிஸோவ் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டான்.
தாய் தனது பார்வையை அந்த நீதிபதிகளின் மீதிருந்து அகற்றவே இல்லை. அவர்கள் வெளிக்குத் தெரியாமல் தமக்குள் பேசிக்கொள்ளும்போது அவர்கள் ஆத்திர உணர்ச்சி அதிகரித்து வருவதையே அவள் கவனித்துக்கொண்டிருந்தாள். அவர்களது உணர்ச்சியற்ற மெலிந்த குரல்கள் தாயின் முகத்தைத் தொட்டன; அவளது கன்னங்களைத் துடிக்கச் செய்தன. அவளது வாயிலே ஏதோ ஓர் அருவருக்கத்தக்க கசப்பு ருசியை உண்டாக்கின. குதுகுதுக்கும் ரத்தமும், ஜீவ சக்தியும் நிறைந்து துடிக்கும் தனது மகனையும் அவனது தோழர்களையும் பற்றி, அவர்களிடம் உடம்புகளைப் பற்றி, அந்த இளைஞர்களின் தசைகளையும் அவயவங்களையும் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாக தாய்க்குத் தோன்றியது. அந்த உடம்புகளைக் காணும் அவர்களது உள்ளத்தில் பிச்சைக்காரர்களின் கேவலமான பகைமை உணர்ச்சியும் நோய்ப்பட்டு நொம்பலமானவர்களின் பேராசையுணர்ச்சியுமே இடம்பெற்று வளர்ந்தன.
இன்பத்தை அறியவும் ஆக்கவும் சக்தி படைத்த, வேலை செய்யவும் செல்வத்தை ஆக்கவும் பெருக்கவும் சக்தி படைத்த, அந்த இளைஞர்களது உடல்களைப் பார்த்துப் பார்த்து வருத்தத்தோடு தங்கள் நாக்குகளைக் சப்புக் கொட்டிக்கொண்டார்கள். ஆனால் இந்த உடல்வளம் பெற்ற இளைஞர்களோ இனி ஒதுக்கப்பட்டுப் போனார்கள். அதாவது இனிமேல் அந்த உடல் வளத்தை யாரும் தங்கள் உடமையாகக் கருத முடியாது. அதைச் சுரண்டி வாழ முடியாது; தின்று வாழ முடியாது. இந்தக் காரணத்தினால்தான் அந்தக் கிழட்டு நீதிபதிகளின் மனத்திலே பழிவாங்கும் சோக எரிச்சல் மூண்டது.
தம் முன்னால் புதிய இரைப்பிராணி வரும்போது அதை எட்டிப்பிடிக்கத் தெம்பும் திராணியும் அற்றுப்போய் மெலிந்து வாடும் காட்டு மிருகத்தைப்போல், பிற மிருகங்களின் பலத்தை அமுங்கடித்து அவற்றைத் தமக்கு இரையாக்கித் தின்பதற்குச் சக்தியற்றுப் போய் அந்த இரைப்பிராணிகள் தம்மிடமிருந்து தப்பி நடமாடுவதைக் கண்டு, அவற்றைப் பிடித்து அடிக்கத் திராணியற்று அவற்றை நோக்கி உறுமுவதோடும் ஊளையிடுவதோடும் திருப்தியடையும் காட்டுமிருகத்தைப் போல் அவர்களும், தங்களது ஆட்சிக்குள் சிக்காது தப்பிக்கும் அந்த இளைஞர்களைப் பார்த்து பழிகொள்ளும் துன்ப உணர்வுடன் கொட்டாவி விட்டுக் குமுறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த மாதிரியான குரூரமான, விபரீதமான எண்ணங்கள் எல்லாம் நீதிபதிகளையே கவனித்துக்கொண்டிருந்த தாயின் மனத்தில் தெள்ளத் தெளிவாக உருப்பெற்றுத் தோன்றிக் கொண்டிருந்தன. தங்களது இந்தப் பேராசை உணர்ச்சியையும், ஒரு காலத்தில் தங்களது மிருகப் பசியைத் தணித்துக் கொள்வதற்கு வழி தெரிந்து வைத்திருந்து, இன்று பலமிழந்துபோன மிருகங்களின் உறுமலைப் போன்ற ஆண்மையற்ற மூர்க்க பாவத்தையும், அவர்கள் அனைவரும் மூடி மறைக்க விரும்பவில்லை என்றே அவளுக்குத் தோன்றியது.
பெண்மை உணர்ச்சியும் தாய்மையுணர்ச்சியும், கலந்து நிறைந்த தாய்க்கோ தனது மகனது சரீரம் என்றென்றும் இனிமை பயப்பதாக, ஆத்மா என்று சொல்லப்படுகிறதே, அதைவிட அருமையானதாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தப் பசிவெறி கொண்ட மங்கிய கண்கள் அவனது முகத்தின் மீதும், மார்பின் மீதும் தோள்களின் மீதும், கைககளின் மீதும் ஊர்ந்து தவழ்ந்து, அவனது உயிர்ப்பு நிறைந்த சதைக் கோளத்தின் உணர்வை நாடி, அவன் உடம்போடு ஒட்டி உராய்ந்து தமது உடம்பிலும், தங்களது தொய்ந்து தொள தொளத்துப் போன தசைக் கோளங்களிலும், வலியிழந்துபோன நரம்புகளிலும் புது வலுவை ஏற்றிக் கொள்ளும் விருப்பத்தோடு பற்றிப் பிடித்துப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே அவளுக்குப் பயங்கரமாய்த் தோன்றியது.
அந்த இளைஞர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கும் தாமே ஆளாகி, அவர்களது உடம்புகளைத் நாம் என்றென்றும் இழப்பதற்கும் தயாராகிவிட்ட அந்த இளைஞர்களை எண்ணியெண்ணி அந்த நீதிபதிகள், ஊறிவரும் பகைமை பேராசை முதலியவற்றின் உறுத்தலால், ஒரு புதிய துடிப்புக்கு ஆளாயினர். அவர்களது இந்த உணர்ச்சியற்ற இனிமையற்ற பார்வையைப் பாவெலும் உணர்ந்து கொண்டது போலவே அவளுக்குத் தோன்றியது. எனவேதான் அவன் அவளை ஒரு நடுக்கத்தோடு பார்ப்பதாக அவள் உணர்ந்தாள்.
பாவெல் அவளை அமைதியோடும் அன்போடும், கண்ணில் களைப்பின் சாயை படர்ந்து பரவப் பார்த்தான். இடையிடையே அவன் அவளை நோக்கித் தலையை அசைத்துப் புன்னகை செய்தான்.
”சீக்கிரமே – விடுதலை!” என்ற வார்த்தைகளே அவனது புன்னகையின் அர்த்த பாவமாகத் தோன்றியது. அந்தப் புன்னகை அவளைத் தொட்டுத் தடவி அமைதியளித்தது.
திடீரென்று அந்த நீதிபதிகள் எழுந்திருந்தார்கள். தாயும் தன்னை அறியாமலே எழுந்து நின்றாள்.
“அதோ அவர்கள் போகப் போகிறார்கள்” என்றான் சிஸோவ்.
”தீர்ப்புச் செய்யவா?” என்று கேட்டாள் தாய்.
“ஆமாம்.”
அவள் கொண்டிருந்த உணர்ச்சிப் பரவசம் திடீரென இற்று முறிந்து, அவளுக்குக் களைப்புணர்ச்சியினால் ஏற்படும் மயக்க உணர்ச்சி மேலோங்கியது. அவளது புருவங்கள் நடுங்கின. நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்துத் துளிர்த்தன. அவளது இதயத்திலே துயரமும் அதிருப்தியும் நிறைந்த மனப்பாரம் ஏறியமர்ந்தது; அந்த மனப்பார உணர்ச்சி திடீரென்று அவள் மனதில் நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கசப்புணர்ச்சியை உண்டாக்கிவிட்டது. தலையை வலிப்பதாக உணர்ந்தாள் அவள். எனவே தன் கையினால் நெற்றியை அழுத்திப் பிடித்துத் தேய்த்தவாறே அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
கைதிக் கூண்டுகளை நெருங்கிச் சென்ற கைதிகளின் உறவினர்களையும் பேச்சுக் குரலின் ரீங்காரம் நிரம்பிய நீதிமன்றத்தையும் அவள் பார்த்தாள். அவளும் பாவெலிடம் சென்றாள். அவன் கையை அழுத்திப் பிடித்தாள். பல்வகையுணர்ச்சிகளின் குழப்ப நிலைக்கு ஆளாகி, அதனால் எழுந்த வேதனையோடும் இன்பத்தோடும் அவள் பொங்கிப் பொங்கி அழுதாள். பாவெல் அவளிடம் அன்போடு பேசினான். ஹஹோலோ சிரித்துக் கேலி பண்ணினான்.
எல்லாப் பெண்களுமே அழுதார்கள். சோகத்தால் அழுவதைவிட, பழக்கத்தின் காரணமாகத்தான் அவர்கள் அழுது தீர்த்தார்கள். எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ வந்து தம்மைத் தாக்கிய சோக வேதனை எதுவும் அவர்களுக்கு இல்லை. தங்களது குழந்தைகளைப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தால்தான் அவர்கள் அழுதார்கள். அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து அந்த வருத்த உணர்ச்சிகூட ஓரளவு சமனப்பட்டுப் போயிருந்தது. தந்தைமார்களும் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைக் குழம்பிப்போன பல்வகை உணர்ச்சியோடு பார்த்தார்கள்.
பெரியவர்களாகிய நாங்கள் அந்த இளைஞர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற வழக்கமான எண்ணத்தோடு, அந்த இளைஞர்களின் காரியங்களில் அவநம்பிக்கை உணர்ச்சியோடுதான் அவர்கள் பார்த்தார்கள். எனினும் அவர்கள் அந்த இளைஞர்களுக்கு ஒருவிதத்தில் மரியாதையும் காட்டினார்கள். புதியதொரு நல்வாழ்வைச் சமைப்பதைப் பற்றிக் கொஞ்சங்கூடப் பயமில்லாமலும் தைரியத்தோடும் அந்த இளைஞர்கள் எடுத்துக்கூறிய விஷயம் அவர்களது மனத்திலோ ஒரு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே அந்த வியப்புணர்ச்சிக்கு ஆளாகி, இனிமேல் தாம் எந்தவிதமாக வாழ வேண்டும் என்ற கவலைக்கு ஆளாகிச் சிந்தித்துச் சிந்தித்துச் சோர்ந்தார்கள் அந்தப் பெற்றோர்கள். உணர்ச்சிகளை உருவாக்கி வெளியிட முடியாத ஏலாத் தன்மையால் அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளேயே அழுந்திப் போயின. எனவே அவர்கள் சர்வ சாதாரணமான விஷயங்களைப் பற்றி, துணிமணி, உடம்பைப் பார்த்துக்கொள்ளுதல் முதலிய விஷயங்களைப் பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டார்கள்.
புகினின் மூத்த சகோதரன் தன் தம்பிக்கு எதையோ விளக்கிச் சொல்வதற்காக, கையை ஆட்டிக்கொண்டிருந்தான்.
“நியாயம் – இதுதான் வேண்டும். வேறொன்றுமில்லை!”
“நமது மைனாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்று பதிலளித்தான் புகின்.
”பார்த்துக் கொள்கிறேன்”
சிஸோவ் தன் மருமகனின் கையைப்பிடித்துச் சொன்னான்:
”நல்லது, பியோதர், அப்படியென்றால் நீ எங்களை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறாயா?….”
பியோதர் தன் மாமனின் பக்கமாகக் குனிந்து அவன் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு, குறும்புத்தனமாகப் புன்னகை செய்தான். அங்கு காவல் நின்ற காவலாளியும் புன்னகை செய்தான். ஆனால் மறுகணமே அவன் தன் முகத்தை வக்கிரமாக வைத்துக் கொண்டு தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டான்.
மற்றப் பெண்கள் பேசியது போலவே தாயும் தன் மகனிடம் துணிமணிகளைப் பற்றியும், அவனது தேக சுகத்தைப் பற்றியுமே பேசினாள். எனினும் அவளது உள்ளத்தில் சாஷாவைப் பற்றியும் தன்னைப் பற்றியும் அவனைப் பற்றியும் ஆயிரமாயிரம் கேள்விகள் நிரம்பிப் புடைத்து விம்மிக்கொண்டிருந்தன. இதற்கெல்லாம் மேலாக, அவள் தன் மகன் மீது கொண்ட பாசவுணர்ச்சியால் ஏதோ ஒரு பாரவுணர்ச்சி நெஞ்சில் குடிபுகுந்தது. அவள் அவனை மகிழ்வித்து, அவனது இதயத்தைத் தன் இதயத்தால் தொட்டுவிட விரும்பினாள்.
ஏதோ நடக்கப்போகிறது என்றிருந்த பய பீதியுணர்ச்சி மறைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக அந்த நீதிபதிகளைப் பற்றிய நினைவு எழும்போது ஒரு நடுக்க உணர்ச்சியும், அவளது மனத்தின் மூலையிலே சில இருண்ட எண்ணங்களுமே தோன்றிக்கொண்டிருந்தன. தன்னுள்ளே ஒரு புதிய பிரகாசம் பொருந்திய இன்ப உணர்ச்சி பிறப்பதை அவள் உணர்ந்தாள். அதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவள் குழம்பித் தவித்தாள். ஹஹோல் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, தான் பாவெலிடம் காட்டும் பாசவுணர்ச்சியைவிட, அவனிடமேதான் அதிகமான பாசம் கொள்ள வேண்டும் என்பதை அவள் உணர்ந்து அவனிடம் திரும்பிப் பேசினாள்.
”உங்கள் விசாரணையை நான் அப்படியொன்றும் பெரிதாக நினைக்கவில்லை!”
”ஏன் அம்மா?” என்று நன்றியுணர்வோடு புன்னகை செய்து கொண்டே கேட்டான் அவன். “பசு கிழடேயானாலும் பாலின் ருசி போகுமோ?….”
“அதைப் பற்றிப் பயப்படுவதற்கே ஒன்றுமில்லை. ஆனால் இந்த விசாரணையால் யார் சொல்வது சரி, யார் சொல்வது தப்பு என்பது வெளிவரவேயில்லை என்று அவள் தயக்கத்தோடு கூறினாள்.
“ஓஹோ, அதுவா? அதைத்தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?” என்று சொன்னான் அந்திரேய். ”அவர்கள் உண்மையைத் தேடிக் காண்பதில் அக்கறை கொண்டவர்கள் என்று நினைத்தீர்களா?”
”இது ரொம்பப் பயங்கரமாயிருக்குமென்று நான் நினைத்தேன்” என்று பெருமூச்சோடும் புன்னகையோடும் சொன்னாள் அவள்.
“அமைதி! ஒழுங்கு!”
எல்லோரும் அவரவர் இடத்துக்கு ஓடிப்போனார்கள்.
பிரதம நீதிபதி தமது கையொன்றை மேஜை மீது ஊன்றிக் குனிந்தவாறு மறு கையால் தமது முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை எடுத்துப் பிடித்தார், மெலிந்து இரையும் குரலில் அதை வாசித்தார்.
”அவர் தீர்ப்பை வாசிக்கிறார்” என்றான் சிஸோவ்.
அந்த அறை முழுவதும் அமைதியாயிருந்தது. ஒவ்வொருவரும் அந்தக் கிழவரையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே எழுந்தார்கள். ஏதோ கண்ணுக்குப் புலனாகாது, கையிலே தாங்கிய அசைவற்ற தடியைப் போல், அவர் தோற்றம் அளித்தார். மற்ற நீதிபதிகளும் எழுந்து நின்றார்கள். அந்த ஜில்லா அதிகாரியும் எழுந்தார். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, கண்களை முகட்டை நோக்கித் திருப்பியவாறே நின்றார். நகர மேயர் தமது மார்பைக் கைகளால் கட்டிக் கொண்டு நின்றார். பிரபுவம்சத் தலைவர் தமது தாடியைத் தடவிக்கொடுத்தார். நோயாளி நீதிபதியும், கொழுத்த முகம் கொண்ட அவரது சகாவும், அரசாங்க வக்கீலும் கைதிகள் நின்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். நீதிபதிகளுக்குப் பின்புறத்தில் தொங்கிய சித்திரத்திலிருந்து, செக்கச் சிவந்த உடையணிந்த ஜாரரசன் தனது வெளுத்த முகத்தில் வெறுப்புத் தொனிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். சித்திரத்திலுள்ள அந்த முகத்தின் மீது ஒரு பூச்சி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
”தேசாந்திர சிட்சை!” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொன்னான் சிஸோவ். “நல்லதாய்ப் போயிற்று. கடவுள் புண்ணியத்தில் இது ஒருவழியாய் முடிந்தது. தேசாந்திரத்தில் கடும் உழைப்பு என்றார்கள். அது எப்படியும் ஒத்துப்போய்விடும். அம்மா, வீணாகக் கவலைப்படாதே.”
”அது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்று சோர்ந்த குரலில் சொன்னாள் தாய்.
“எப்படியும் போகட்டும். நமக்குத்தான் என்னென்ன நடக்கும் என்பது தெரியுமே. அது எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பேசுவானேன்?”
அவன் கைதிகளின் பக்கமாகத் திரும்பினான்; அதற்குள் காவலாளிகள் கைதிகளைக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
”போய் வா, பியோதர்” என்று அவன் கத்தினான். ”எல்லோரும் போய் வாருங்கள். கடவுள் உங்களுக்குக் கருணை புரியட்டும்!”
தாய் தன் மகனையும் மற்றவர்களையும் பார்த்து மெளனமாகத் தலையை ஆட்டினாள். அவள் வாய்விட்டு அழ விரும்பினாள், ஆனால் அழுவதற்கோ வெட்கப்பட்டாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு