Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 471

நூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்

தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்

மிழர் சமயமும் சமஸ்கிருதமும் பற்றித் தொடர்புடைய இருமுறைகளையும் வடமொழி வேதங்கள் – விளக்கங்கள் பற்றிய நூல்களையும் படித்தேன். அதன் விளைவே இந்த நூலும், அடுத்து ‘’திருமுறைகள் உணர்த்தும் மறைபொருள் உண்மைகள்’ என்று நூலுமாகும். இவற்றை எழுதி முடித்த போது, எனக்குப் பல ஐயங்கள் எழுந்தன.

* சங்க காலக் கபிலர், பரணர், பாலைக் கவுதமனார், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார், தாமப்பல் கண்ணனார் போலும் அந்தணப் புலவர்கள் தமிழக நிலச்சூழலறிவு, மக்களின் நடைமுறை வாழ்வு, தமிழ்ப்புலமை ஆகியவற்றில் முழுமையான தமிழர்களாகவே இங்கு | வாழ்ந்துள்ளனர்.

இன்று தமிழை வேறுபட நினைத்து நடக்கின்ற வேண்டாத பழக்கம் எப்படி வந்தது?

* பிராமணரல்லாதார் இயக்கம், ஆங்கிலம் கற்ற சிலரால் சமத்துவம் வேண்டித் தோற்றுவிக்கப்பட்டது. பின்னரே அது திராவிட இயக்கமாக மாறியது. இந்தியை எதிர்த்துத் தமிழை வளர்க்கப் போவதாகப் பறைசாற்றி, ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கம், இன்று தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற வில்லை. ‘தமிழ் வாழ்க’ என்பதே ஒரு நாடகமாகிப் போனது. திராவிட இயக்கத்தவர்கள் தமிழைச் சொல்லித் தங்களையே வளர்த்துக் கொண்டனர். மற்றபடி தமிழ் பற்றிய தொலைநோக்கோ, திட்டமிடலோ, செயல்திட்டம் வரைந்து நாளும் ஓசைப்படாமல் வளர்ப்பதோ திராவிட இயக்கத்தைச் சார்ந்த முடிமுதல் அடி வரை காணப்படவில்லை . இன்றும் அவர்கள் அனைவரும் தாய்த் தமிழைத் தங்கள் சுயநலத்திற்கு, ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

* பார்ப்பன அந்தணர்களுக்கு தமிழை வளர்ப்பது பற்றிய அனைத்துத் திட்ப நுட்ப வழிகளும் தெரியும். அவர்கள் வழிவழியாகக் கல்விக்குரிய குடியினராகப் பல நூற்றாண்டுகள் வளர்ந்ததால், அவர்கள் நினைத்தால் மட்டுமே, நாம் தமிழ்பற்றி இன்று காண்கின்ற கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று தோற்றுகிறது.

* இன்றும் பார்ப்பனக் குடும்பங்களில் வழங்கும் வட்டார வழக்குச் சொற்கள் அவர்களைத் தூய தமிழர்களாக இனம் காட்டுகின்றன. உறவுப் பெயர்களில் அகமுடையான், அகமுடையாள், அத்தையன்பர், அம்மான் சேய், ஓரகத்தி, ஓர் பிடியாள் போல்பவை வியப்பளிக்கும் சொற்களாகும். பிறகு ஏன் தமிழினின்றும் வேறுபட எண்ணுகிறார்கள்? நாம் அவர்களைத் தமிழினின்றும் அயன்மைப்படுத்தி விட்டோமோ அல்லது அவர்களே தங்களை அயன்மைப்படுத்திக் கொள் வேண்டியதாயிற்றா?

* இன்றைய ஆங்கில மோகம் ஆங்கிலரால் விளைந்ததன்று. இன்று எதையும் ஆங்கிலத்தில் எழுதினால், அதில் பெருமையும் சிறப்பும் உண்டு என்பதைத்தான் தமிழர்கள் ஏற்கிறார்கள். ஆங்கிலம் படித்தால்தான் வருமானம் தேடி, வாழ முடியும் என்ற நிலை உளது.

இதே நிலை சங்க காலத்திற்குப் பிறகு – களப்பிர, பல்லவ நாயக்க அரசுகளின் காலத்திலும் அதற்குப் பிறகும் சமஸ்கிருதத்திற்கு இருந்தது. அதனால் தமிழரின் கலைகள், இசை, சமயம் என அனைத்தும் பெயர்கள், கலைச்சொற்கள் உட்பட சமஸ்கிருதமயமாக்கப்பட்டு விட்டன. இன்று கால மாறுதலுக்கேற்ப அவற்றைத் தமிழுக்கு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். இதற்கு நல்ல தமிழறிஞரேயன்றி, வடமொழியறிந்த தமிழ் அந்தணர்களும் ஒத்துழைத்தால்தான் நடக்கும்.

* ஆகவே இந்நூலுள் காணப்படுவன இடைக்காலத்தே ஏற்பட்ட மாற்றங்களை உள்ளவாறு விளக்கி, அவற்றை இன்றைய நிலைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பதாகவே குறிக்கப்படுகின்றன. பழைய வரலாறுகள் மீண்டும் நினைவுபடுத்தப்படுகின்றன. பார்ப்பனப் பகைமையோ, சமஸ்கிருத வெறுப்போ காரணமன்று.

– நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து…

நூல்: தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்
ஆசிரியர்: தமிழண்ணல்

பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம்,
மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை – 625 001.
பேச: 0452 – 2345971; 0452 – 2560517

பக்கங்கள்: 248
விலை: ரூ.150.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 9962390277

வினவு செய்திப் பிரிவு

ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ

1

மது உடல் நல பாதிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் நாம் கடைபிடிக்கும் தவறான பழக்க வழக்கங்களின் காரணமாகவே ஏற்படுகின்றன. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்துத் தெரிந்தும், பெரும்பாலான சமயங்களில் நாம் அவற்றைக் கடைபிடிப்பதில்லை. அல்லது நமது வாழ்க்கைச் சூழல் அத்தகைய ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிக்கவோ, தொடரவோ அனுமதிப்பதில்லை.

இது தவிர்க்கவியலாமல் பல்வேறு நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது. அவற்றிலிருந்து மீண்டு நீண்ட ஆயுள் பெற நாம் கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி.

பாருங்கள் ! பகிருங்கள் !

காவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி !

“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற முழக்கத்தின் கீழ் தருமபுரியில் இரண்டு நாட்கள் இருசக்கர வாகன பிரச்சார பேரணியை நடத்தியது மக்கள் அதிகாரம். பென்னாகரத்தில் மே-15 அன்று தொடங்கிய இப்பேரணியை மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் கோபிநாத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் (தே.தெ.ந.இ.வி) பாப்பாரபட்டி தலைவர் பழனிசாமி, பாப்பாரபட்டி செயலர் பெருமாள் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

தி.மு.க. மாவட்ட சிறுபான்மை அணி செயலர், முகமது அலி.

மக்கள் அதிகாரத்தின் இருசக்கர பேரணி பாப்பாரபட்டி வழியாக பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி, கம்மைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி, கடத்தூர், நல்லம்பள்ளி, வழியாக சென்று இறுதியில் தருமபுரி நகரம் தந்தி அலுவலகம் அருகில் மே-16 அன்று நிறைவுற்றது.

எட்டு தாலூகா மற்றும் மூன்று தேர்வுநிலைப் பேரூராட்சிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் என சற்றேறக்குறைய முன்னூறு கிலோ மீட்டர் தூரம் இப்பேரணி நடைபெற்றது.

 

தோழர்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாக,  பாலக்கோட்டில் தே.தெ.ந.இ.வி சங்க மாவட்டத் தலைவர் பழனிசாமி, நவலை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலர் கோவிந்தராஜ், அரூரில் தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலர் தோழர் முகமது அலி, சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் தோழர் குமரன், நம்மாழ்வர் வழியை பின்பற்றும் விவசாய பெருங்குடி மக்கள் சார்பாக இருளப்பட்டி கிராமத்தினர், இருளப்பட்டி விவசாய சங்க தலைவர் இராமசாமி உள்ளிட்ட மாற்றுக்கட்சி பிரமுகர்கள், ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் என வழி நெடுகிழும் தங்கள் சொந்த முயற்சியில் மக்களை அணிதிரட்டியிருந்தனர்.

தாம் வசிக்கும் பகுதிகளில் தெருமுனைக்கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்ததோடு, அக்கூட்டங்களில் பங்கேற்றும் உரையாற்றினர். மோரும் தேனீரும் உணவும் கொடுத்து இரவு தங்குவதற்கு இடமும் கொடுத்து பேரணி சென்ற தோழர்களை உற்சாகப்படுத்தினர்.

நவலை கிராமத்தில்…

இது காவிரி பிரச்சினை தஞ்சை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை என்று தருமபுரி மாவட்ட உழைக்கும் மக்கள் ஒதுக்கவுமில்லை; மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு நடத்துகிற பேரணி என்று மாற்றுக் கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் ஒதுங்கி நிற்கவுமில்லை; தமிழினத்தின் பிரச்சினை தமது சொந்தப் பிரச்சினை என்ற உணர்வோடு ஆரத்தழுவிக் கொண்டனர் தருமபுரி மாவட்ட மக்கள்.

தருமபுரி மாவட்டத்தின் தெருக்கள்தோறும் செங்கொடி பறக்க, தோழர்கள் எழுப்பிய முழக்கங்களும், பேரணி சென்ற வழிநெடுகிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்றன.

தகவல்:
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 8148573417

மோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் ?

ஒரு இந்து மேலாதிக்கவாதியின் அன்றாட வாழ்க்கை !

பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மோயுக் சாட்டர்ஜி, “எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி” வார இதழில் “இந்து மேலாதிக்க உணர்வின் சாமானிய வாழ்க்கை” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையினை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம்.

ரு இந்து மதவெறியன் என்பவன் யார்? பால் மாடு வாங்கிச் சென்ற ஒரு முஸ்லீம் முதியவரைக் கொல்லும் இரக்கமற்றவர்கள், முஸ்லீம் பெண்களையும் தலித் பெண்களையும் வல்லுறவுக் கொலை செய்பவர்கள், காதலர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள்.

மோயுக் சாட்டர்ஜி
மோயுக் சாட்டர்ஜி

இவர்கள் யார், கலவரங்கள் நடக்காத நாட்களில் இவர்களது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் கட்டுரையாசிரியர் விளக்குகிறார். அகமதாபாத் நகரில் பஜ்ரங்தள் என்ற இந்துவெறிக் குண்டர்படையைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் தொடர்ச்சியாகப் பழகி, அவர்களைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தருகிறார் இக்கட்டுரையாசிரியர்.

ஒரு நகர்ப்புறக் குடிசைப் பகுதியில் சண்டியர்த்தனம் செய்யும் வேலையற்ற இளைஞர் கும்பல், ஒரு ரவுடிக் கும்பல், ஓட்டுக்கட்சிகளின் கீழ்நிலைப் பிழைப்புவாதிகள், போலீசின் ஆள்காட்டிகள், புரோக்கர்கள், சாதிச் சங்கப் பொறுக்கிகள் போன்ற பலரும் எப்படி இந்துவெறி அமைப்புகளின் காலாட்படைகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் புரியவைக்கிறார்.

பா.ஜ.க. வின் ஆட்சி என்பது கீழ்மட்டம் வரை வேரோடுகின்ற பாசிசக் குண்டர்படையின் ஆட்சி. அது சிறுபான்மை மக்கள், தலித் மக்களை மட்டுமல்ல, எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் ஏறி மிதிக்கக் கூடியது என்பதை அனுபவபூர்வமாக விளக்குகிறார் கட்டுரையாசிரியர்.

*****

2010- ஆண்டு பிப்ரவரி மாதத்தின் குளிர்ச்சியானதொரு மாலைப் பொழுதில் வெகுதூரம் காலார நடந்து கொண்டிருந்தோம். இடையே ஒரு மசூதியின் முன்னால் நின்றோம்.

“இப்ப இதைக் கொஞ்சம் பாருங்க. 2002- இல் நானும் பசங்களும் சேர்ந்து இதைக் கொளுத்தினத நீங்க பார்த்திருக்கணும்” என்றான் குனால். இவன் ஒரு பஜ்ரங் தள் உறுப்பினர்.

வெளிறிய பச்சை நிறத்தில் சுற்றிலும் அலங்கார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பெரிய மசூதியை நான் ஏறிட்டுப் பார்த்தேன். எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அழிவின் அடையாளம் எதுவும் தெரியவில்லை.

gujarat 2002 riots“நாங்க அந்த மசூதியோட பூட்டை உடைச்சுக்கிட்டு இருந்தோமா. அப்போ பாத்து போலீசு இன்ஸ்பெக்டரோட ஜீப்பு ஒன்னு அந்த பக்கமா வந்துச்சு. அதைப் பாத்ததும் நாங்க எல்லாரும் ஓட்டம் பிடிச்சிட்டோம். ஆனால், அவரோ மசூதிக்குப் பக்கத்தாப்புல வண்டியை நிப்பாட்டிட்டு, ‘வாங்கடா, ஆரம்பிச்ச வேலைய முடிங்கடா’ என்று எங்களைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.” நினைவுகூர்ந்தான் குனால்.

அவ்வப்போது வருகின்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த செய்திகள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல்கள் ஆகியவற்றின் போது குனால் போன்ற நபர்கள் நம் பார்வைக்கு வந்து பின் மறைந்து விடுகிறார்கள். நாமும் இவர்களையெல்லாம் முக்கியத்துவமற்ற விளிம்புநிலை உதிரிகளாகக் கருதி கடந்து செல்கிறோம்.

ஆனால், கொலை, கொள்ளை, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடும் இந்த நபர்கள், அத்தகைய நடவடிக்கைகள் முடிந்த பின் மற்ற நேரங்களில் என்ன செய்கிறார்கள்? கலவரங்கள் ஓய்ந்த பின், கும்பல் வன்முறைக்குப் பின், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்குப் பின் நாம் சவுகரியமாக எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம்.

மிகையான வன்முறைகள் நிகழும் கணப் பொழுதுகளில்தான் இந்த உதிரிகள் நம் கண்ணில் தென்படுகிறார்கள். ஆனால், இந்த உதிரி என்று நாம் கருதுவது வெறும் உதிரி அல்ல. அதற்குள் இந்து மேலாதிக்கம் என்கிற உலகக் கண்ணோட்டமும் இருக்கிறது.

அது சாமானிய மக்களது அச்சத்தின் எதிரொலிப்பாகவும், இளைஞர்களின் ஆம்பிளைத் திமிருக்கு தீனிபோடுவதாகவும், அரசு அதிகாரத்தைக் கையாள்வதற்கான கருவியாகவும், அண்டை அயலார் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான சுலபமான வழியாகவும் இருக்கிறது.

கட்டை குட்டையான தேகம், உருளை போன்ற மார்பு, முண்டா புரளும் கைகள், சின்னஞ்சிறு காதுகள், தொங்கும் தலைமுடி இதுதான் குனாலின் தோற்றம்.

பெரும்பாலும் மாலை வேளைகளில் அவன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தனது பசங்களுடன் உட்கார்ந்திருப்பான். பசங்க எல்லோரும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள். ராஜ் இரவு ஷிஃப்டில் செக்யூரிட்டி வேலை செய்கிறான்; அஜய் கோர்ட்டுக்கு வெளியே சாமி படங்கள் விற்கிறான்; சஞ்சய் தள்ளு வண்டியில் தின்பண்டங்கள் விற்கிறான். அந்தக் கூட்டத்தில் ஜெய் தான் அதிகம் படித்தவன். அவன் அக்கவுண்டன்சி மாணவன், – வயது 22.

una gujarat attackஅந்தத் தெருவில் யாரும் குனாலின் வீட்டைச் சட்டென்று அடையாளம் காண முடியும். சிவப்பு நிறத்தில் திரிசூலமும், ஜெய் ஸ்ரீராம் என்ற எழுத்தும் இருக்கிற ஒரே வீடு அதுதான். அப்புறம், அழுக்குப்படிந்த ஒரு கட்டில், அதில் தான் அவரது பெற்றோர் நாள் பூராவும் உட்கார்ந்திருப்பார்கள்;

சூரிய வெளிச்சமே இல்லாத இருளடைந்த அவனது ஒற்றை அறைக் குடிசையின் உடைந்த ஜன்னல்கள்; மற்றபடி அண்டை வீட்டுக்காரர்களின் கந்தல் துணிகளும் தொங்குகின்றன. அவன் வீட்டைச் சுற்றிக் குடியிருக்கும் தலித்துகள் மிகவும் கீழ்த்தரமானவர்களாம். அவன் ராஜஸ்தானிலிருந்து வந்திருக்கும் ராஜபுத் சாதிக்காரனாம்.

“அவங்களெல்லாம் கீழ்ச்சாதி. அவங்க வீட்டுக் கல்யாணங்காட்சிக்கு எங்களைக் கூப்பிட்டா நாங்க போகமாட்டோம். அவங்களோட உட்கார்ந்து சாப்பிடுறதா? அவங்க வீட்டில் தண்ணிகூடக் குடிக்க மாட்டோம்” என்கிறான் குனால்.

முஸ்லீம் இளைஞர்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பாற்றுவது, பசுக்களைக் காப்பாற்றுகிறோம் என்று முஸ்லீம் குடியிருப்புகளில் சோதனை போடுவது, சினிமாக்களைக் கண்டித்து திரை அரங்குகளைச் சூறையாடுவது போன்ற காரியங்களுக்காகத் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் குனாலையும் அவன் கூட்டத்தை சேர்ந்த பசங்களையும் 2010-ஆம் ஆண்டு முதற்கொண்டே நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.

மசூதிகளைக் கொளுத்துபவர்கள் பெருந்தலைகள் அல்ல. இது போன்ற சில்லுண்டிகள்தான். இந்தச் சில்லுண்டிகளுக்கு போலீசு தொல்லையில்லாமல் பார்த்துக்கொள்வதுதான் பெருந்தலைகளின் வேலை.

மாலை நேரம். ஓர் இந்துத் தம்பதியர் குனாலை வந்து பார்க்கிறார்கள். தங்களுக்கு எதிராகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் (அவர்களும் இந்துக்கள்தான்) போலீசில் புகார் கொடுத்திருப்பதாக குனாலிடம் சொல்கிறார்கள். ஏதோ மாடிப்படி தொடர்பான சச்சரவு.

குனால் அவர்களுடன் போலீசு நிலையத்திற்குப் போகிறான். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எதிராக ஒரு புகாரைப் பதிவு செய்ய உதவுகிறான். “கவலைப்படாதீங்க, மேற்கொண்டு தொந்தரவு கொடுத்தா, அவங்கள வெளியே இழுத்துப்போட்டு கவனிச்சுடுவோம்” என்று சொல்லி அனுப்புகிறான்.

bombay hindu goons attackஇந்துத்துவ அமைப்புகள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, அதனைத் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது உண்மையே. ஆனால், குனால் போன்ற இளைஞர்களைப் பொருத்தவரை இந்த இந்துத்துவ அமைப்புகள் வேறு பல விதங்களில் அவர்களுக்குப் பயனுள்ளவையாக உள்ளன.

ஒரு நிச்சயமான வேலை அல்லது சமூக, பொருளாதார நிலைமையில் ஏதோ ஒரு முன்னேற்றம் என்று எந்த ஒரு வெளிச்சத்தையும் காணமுடியாத வாழ்க்கை இவர்களுடையது. இத்தகைய பரிதாபகரமான அன்றாட வாழ்க்கைச் சூழலில் கிடந்து உழலும் ஏராளமான இளைஞர்களுக்கு, அவர்களது நிச்சயமற்ற அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மிகப் பெரியதும், பிரம்மாண்டமானதுமான ஒன்றின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்று உணர்வதற்கான வாய்ப்பை இந்த அமைப்புகள் வழங்குகின்றன.

அது அதிகாரம் மிக்க அரசு அலுவலர்கள், காவல் துறை போன்ற அரசு அமைப்புகளில் இவர்களுக்குச் செல்வாக்கைத் தேடித் தருகிறது; பலமும் அதிகாரமும் கொண்ட ஆம்பிளையாக உணர வைக்கிறது. ஏதோ ஒன்றை அழித்து நாசமாக்கவும், இன்னொன்றைக் காப்பாற்றவும் வாய்ப்பளிக்கிறது.

“என்ன வேலை செய்கிறாய்?” என்று ஒரு நாள் நான் குனாலிடம் கேட்டேன். அவன் பேச்சை மாற்ற முயற்சித்தான். பிறகு, “துணி வியாபாரம் செய்கிறேன். மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறேன்” என்றான். ஒருநாள் குனால் இல்லாதபோது அவனுடைய சகோதரன் சொன்னது முற்றிலும் வேறாக இருந்தது.

குனால் பெண்களுக்கான பின்னலாடைகளைத் தலைச்சுமையாக எடுத்துச் சென்று வீடுவீடாக விற்பனை செய்கிறானாம். ஒருநாள் என் செல்போன் எண்ணை குனால் கேட்டான். அதைத் தனது கைபேசியில் சேமித்துக் கொள்ளும் அளவுக்குக் கூடக் கல்வியறிவு அவனுக்கு இல்லை. முறையான கல்வியோ, தொழிற்திறமையோ இல்லாத நிலையில், அலுவலக வேலை அல்லது தொழிற்சாலை வேலை எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை.

muzaffarpur attackஅகமதாபாத்தின் மிகப் பெரிய முறைசாரா உதிரித் தொழிலாளிகள் கூட்டத்தில் ஒருவனாக உழல்கிறான் குனால். அவரது தந்தை ஓமெக்ஸ் மில்லில் வேலை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து குஜராத்துக்குக் குடிபெயர்ந்தவர். ஆனால், அந்த மில்லும் நெடுங்காலத்துக்கு முன்பே இழுத்து மூடப்பட்டுவிட்டது.

உயர்தர ஆடைகள், அதிநவீன கைபேசிகள், கை நிறைய சம்பளம் என அகமதாபாத் வாசிகள் அனுபவித்துக் கொண்டிருக்க, குனாலும் அவனது பசங்களும் மோசமான இந்துக்களிடமிருந்தும், துரோகிகளான முஸ்லீம்களிடமிருந்தும் இந்துத்துவத்தைக் காத்து நிற்கும் பெருமித உணர்வில் மிதக்கிறார்கள்.

“நாங்க வி.எச்.பி. ஆளுங்க, வெறியனுங்கன்னு தெரியாத ஒரு முஸ்லீம் கூட இந்த ஏரியாவுலயே கிடையாது.”

வெறியன் என்று அழைக்கப்படுவது குஜராத்தில் அவமானம் கிடையாது. அது ஒரு கெத்து.

தங்கள் வழியில் குறுக்கிடுபவர்களை மிரட்டிப் பணிய வைத்து இப்படி ஒரு பெயரை அவர்கள் சம்பாதித்திருக்கிறார்கள். தன் வீட்டை ஒட்டிக் கோயில் கட்டுவதை எதிர்த்து போலீசைக் கூப்பிடுவேன் என்று சொல்பவன் ஒரு இந்துவாக இருந்தாலும் சரி, உடனே குனால் தன் பசங்களுடன் அங்கே போய் எதிர்ப்பு தெரிவிப்பவனை அடித்து நொறுக்குவான்.

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒரு சட்டவிரோதக் கோயிலை நகராட்சிக்காரர்கள் இடித்தால், குனால் தன் பசங்களுடன் அங்கே போய் எதிர்ப்பு தெரிவிப்பான். “போலீசு வரும். மறுபடி கோயிலை கட்டிக்கொள். செய்வதை ராத்திரி நேரத்தில் செய்” என்று ஆலோசனை சொல்லும். இவர்கள் இன்னும் பெரிய கோயிலாகக் கட்டுவார்கள்.

சுற்றுவட்டாரத்தில் ஒரு முஸ்லீம் குடும்பம் சொந்த வீடு வாங்கி குடியேறினால், குனாலுக்கு அது ரொம்பவும் அபாயகரமானதாகத் தெரியும். அவர்கள் வீட்டு பால்கனியில் குப்பையைப் போடுமாறு அண்டை வீட்டுக்காரர்களை குனால் தூண்டி விடுவான்.

இப்படித்தான் அவங்க வெளியில காயப்போட்டிருந்த சில துணிகளை பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி கொளுத்திவிட்டாள். அதுக்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு காட்டினார்கள். “நான் உடனே போலீசைக் கூப்பிட்டேன். ஒரு கலவரம் வராம இருக்கணும்னா சீக்கிரமா வாங்கன்னு மிரட்டி விட்டேன்” என்கிறான் குனால்.

குனாலையும் அவனது பசங்களையும் பொருத்தவரை, போலீசை தங்கள் சவுகரியத்துக்கு வளைத்துக் கொள்ள முடியும், தங்களுடைய இந்து மேலாதிக்கத் திட்டத்துக்கு ஏற்ப அவர்களை மறுவார்ப்பு செய்து கொள்ளமுடியும் என்பதே அவர்கள் கருத்து. போலீசை பேசிக் கரைப்பார்கள், சக இந்துவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுப்பார்கள் அல்லது அரசியல் தொடர்புகள் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.

ஜெய் அமைதியான, மூக்குக் கண்ணாடி அணிந்த 22 வயது இளைஞன். அவனைப் பார்த்தால், நள்ளிரவில் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு கேமெராவுடன் திருட்டுத்தனமாக ஒரு இறைச்சிக்கூடத்தில் நுழைந்திருப்பான் என்று கற்பனைகூட செய்ய முடியாது. அந்தப் பையன்கள் அவனது வீரப்பிரதாபங்களை எனக்கு எடுத்துச் சொல்லியபோது, பீடா குதப்பி உப்பிய வாயிலிருந்து சிகப்புச் சாறு வழியச் சிரிக்கிறான் ஜெய்.

பக்ரீத்துக்கு முன்னால் இந்தப் பையன்கள் ஒரு கும்பலாகத் திரண்டு பசுக்கன்றுகளைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அக்கம்பக்கத்து முஸ்லீம் வீடுகளில் பலாத்காரமாக நுழைகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் மட்டும் தனியாகச் செய்வதில்லை.

“இப்படி ரெய்டு பண்ணும்போது நாங்க போலீசு கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டபடி இருப்போம்.”

“ஆனால், இதெல்லாம் ஆபத்தான நடவடிக்கைகள் இல்லையா?”

“ஆமா. ஆனா, எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்குதே. போலீசு எங்களுக்கு முழு சப்போர்ட். நாங்க பஜ்ரங் தள் ஆளுங்க, அதான் இப்படி வேலை செய்யிறோம்னு அவங்களுக்குத் தெரியும்” என்கிறான் குனால்.

gujarat 2002 riotsகுனாலின் மனவெளி அச்சமும் சாகசங்களும் கலந்த ஒரு வித்தியாசமான கலவை. இஸ்லாமியப் பெண்கள் உங்களைக் காதலிக்கும்படிச் செய்து, பின் அவர்களை இந்துவாக மாற்றுங்கள் என்று அந்தப் பெண்களை வளைத்துப்போட தன் பசங்களுக்கு வழி சொல்கிறான் குனால். அதெல்லாம் எப்படி முடியும் என்று நான் கேட்டவுடன், அவன் தங்கள் திட்டத்தை விவரிக்கிறான். மட்டமான ஒரு இந்திப்பட சீன் மாதிரி அது விரிகிறது.

“நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு முஸ்லிம் பெண்ணை பார்க்கிறே. அப்படியே ஒரு லுக்கு வுடணும், அதுல அவ சொக்கிப்போய் லவ் பண்ண ஆரம்பிச்சுடணும். அப்புறம் அவள இந்துவா மாத்திடணும். என்ன புரியுதா?” என்று விளக்குகிறான் குனால்.

குனாலையும் அவனுடைய பசங்களையும் இந்து தேசியவாதம் அல்லது இன்றைய இந்திய அரசியலின் விதிவிலக்குகள் என்று நாம் எண்ணினால் அது தவறு. இந்து மேலாதிக்கம் என்பதைச் சமூகத்தின் மைய நீரோட்டப் போக்காக மாற்றுவதற்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் வலதுசாரி இந்து அமைப்புகளின் வளர்ந்து வரும் வலைப்பின்னலின் அங்கம்தான் இந்த இளைஞர்கள்.

2016- ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் நான் குனாலுடன் அவரது வீட்டுக்கு வெளியே கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது குனாலைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். அவரைக் குனாலுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருக்கு குனாலுடைய உதவி தேவைப்பட்டது. இவரது வீட்டுக்கும் பக்கத்து மசூதிக்கும் இடையே இருவருக்கும் பொதுவான சுவர் இருந்திருக்கிறது. மசூதி நிர்வாகிகள் இவரது சம்மதம் இல்லாமல் அந்த சுவரின் உயரத்தை அதிகரித்திருக்கிறார்கள், அதன் போக்கில் இவரது வீட்டுத் தகரக் கூரையின் ஒரு பகுதியையும் வெட்டியிருக்கிறார்கள்.

என் வீட்டு சுவர், மண் சுவர். இப்புடி பண்ணினா, நான் உள்ளே இருக்கும்போது சுவர் இடிஞ்சு விழுந்துச்சுன்னா என்ன ஆகும்?” என்று பொங்கினார் அந்த மனிதர்.

“இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாம் உடனே தலையிடனும். ஏன்னா, இங்கே முஸ்லீம்களால ஒரு ஏழை இந்து கொடுமைப்படுத்தப்படுகிறார்” என்று சொன்னான் குனால்.

அந்த மனிதர் ஆமோதிக்கும் வகையில் அமைதியாகத் தலையசைத்தார். “நான் அவங்க கிட்ட பேசறேன். அவங்க சரிப்பட்டு வரலைன்னா போலீசுல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துடுவோம்” என்று குனால் சொன்னதைக் கேட்டபடி தனது வீட்டை நோக்கி நடந்தார் அந்த மனிதர்.

அவருடைய வீடு, 2002 குனால் கொளுத்திய அதே மசூதியை ஒட்டிய வீடு.

-புதிய ஜனநாயகம், மே 2018

இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?

உறுப்பு கொடை கோரிக்கைகள் அனைத்தும் பணக்கார வர்க்கத்திற்காகவே.

காராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியான ரிவ்யாணி ரஹங்டேல் 2018, ஏப்ரல், 18-ல் சாலையோர விபத்தொன்றில் சிக்கி மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாக்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். தலையில் பலத்த அடிபட்டதால் அவள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆயினும் அவளது இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தது. கல்லீரலும், சிறுநீரகமும் இயங்கிக் கொண்டிருந்தன.

அத்துயரத்திலும் அவளது உறுப்புக்களைக் கொடையாக கொடுக்க அவளது பெற்றோர்கள் முன்வந்தனர். தன்னுடைய மகள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதும் இயங்கிக் கொண்டிருக்கும் அவளது மற்ற உறுப்புகளை கொடையாக கொடுத்து விடலாம் என்று தனக்குத் தோன்றியதாக சிறுமியின் தந்தை இராதேஷ்யாம் கூறினார். அவர் காவல் துறையில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

ஏப்ரல் 28–ம் தேதி போராடிக் கொண்டிருந்த மற்ற நான்கு உயிர்களையும் அச்சிறுமி காப்பாற்றினாள். இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் என்று அவளது நான்கு உறுப்புகளும் அவரகளுக்கு பயன்பட்டன. ஆனால் துயரத்தின் மையத்திலும் தமது நேசத்திற்குரியவர்களின் உடலுறுப்புகளை கொடையாக கொடுத்தாலும் அதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் அவர்கள் வைப்பதில்லை. மேலும் யாருடைய உயிர்களை அந்த உறுப்பு கொடைகள் காப்பாற்ற போகின்றன என்றும் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை.

போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்தி “பச்சை சாலைகள்” வழியாக குறித்த நேரத்திற்கு உறுப்புகள் எடுத்துச் செல்லப்பட்டு பல உயிர்கள் இன்று காப்பற்றப்படுகின்றன. பால், சாதி, மத அடையாளங்கள் கடந்து இப்படி கொடையாக கொடுக்கப்பட்ட உறுப்புகள் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒற்றுமையின் அடையாளமான இதை நாம் கொண்டாட வேண்டாமா?

கேட்பதற்கே உற்சாகமளிக்கும் இந்த செய்தியில் மோசமான ஒரு விசயமும் அடங்கியுள்ளது. மிகுந்த செலவு பிடிக்கும் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் மிக சொற்பமான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கிறது. 95 விழுக்காட்டிற்கும் அதிகமாக இச்சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. இதற்கு ஆகும் செலவு குறைந்தது 20-25 இலட்சங்கள். ஒப்பீட்டளவில் சிக்கல் குறைந்த சிறுநீரக உறுப்பு மாற்ற சிகிச்சைக்கே குறைந்தது 8-10 இலட்சங்கள் தேவை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான முன்னுரிமைகள் குறித்த சமூக விதிமுறைகள் ஒவ்வொரு மாநிலங்களில் இருப்பினும் இந்திய சமூக அமைப்பின் பாரிய ஏற்றத்தாழ்வு காரணமாக வர்க்க பேதமற்ற இந்த உறுப்பு கொடைகள் முடிவில் பணக்கார வர்க்கத்திற்கே கிடைக்கிறது. இந்நிலையில் வர்க்க பேதமற்று “உறுப்பு தானம் செய்வீர்” என்று அறைகூவல் விடுக்கப்படுவது ஒரு நகைமுரண்.

ஏற்றத்தாழ்வான வாய்ப்புகள்

உயிர்காக்கும் உறுப்பு மாற்று சிகிச்சை இந்தியாவில் ஏனைய துறைகளை போலவே அரிதினும் அரிதாகவே ஏழைகளுக்கு கிடைக்கிறது.

தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் இந்திய மருத்துவத்துறையின் சிக்கலை மிகவும் தீவிரப்படுத்தி விட்டது. ஒரு சில மாநகரங்களில் உள்ள அற்பசொற்பமான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. சான்றாக 1-2 விழுக்காடு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. உலகளாவிய மருத்துவ சேவை கட்டமைப்பின் கீழ் நோயின் தன்மையைப் பொருத்தும் சமூக நீதியின் அடிப்படையிலுமே பெரும்பான்மையான நாடுகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. சமூக நீதியின் அடிப்படையிலேயே உறுப்பு கொடைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்பது உலக சுகாதார மையத்தின் அடிப்படை விதிமுறையாகும்.

சிலப்பத்தாண்டுகளுக்கு முன்போலல்லாமல் உறுப்புக் கொடையாலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாலும் பல இந்தியர்கள் இன்று பயன் பெறுகின்றனர். இந்திய அரசும் உறுப்பு கொடையை ஒரு தேசிய இயக்கமாக பரப்புரை செய்கிறது. பணம் படைத்த சிலருக்கு மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கிடைக்கும் சமூக ஏற்றத்தாழ்வு கோலோச்சும் போது அனைவரையும் உறுப்பு கொடை கொடுக்குமாறு அரசு அறைகூவல் விடுப்பது ஒரு குரூரமான நகைச்சுவை.

நடக்காததை நடக்கும் என்கிறார்கள்

முதலாளித்துவ பொருளாதார மேதைகள் டிரிக்கில்-டவுன் விதி என்று சொல்வது போல பணக்காரர்களுக்கு கிடைத்தது போக மிச்ச சொச்ச உறுப்புகள் மேலிருந்து கீழாக வழிந்து ஏழைகளுக்கு கிடைக்கக்கூடும் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் உறுப்புக்கொடை கொடுப்பவர்களின் எண்ணிக்கையை விட பணக்கரார்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதால் இந்த நம்பிக்கையும் கேலிக்கூத்தாகிவிட்டது.

இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க ஏதேனும் சரியான வழியிருக்கிறதா? உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இதை சரி செய்ய முடியுமா? சரிபாதி உறுப்புகளை அரசு மருத்துவமனைகளுக்கு கொடுக்க வழிவகை செய்யலாம். அல்லது தனியார் மருத்துவமனைகளில் மானியம் கொடுப்பதன் மூலமும் செய்யலாம். ஏனெனில் பொதுமக்களின் நலனிற்காக உறுப்புகளை பிரித்து கொடுக்கும் தார்மீக உரிமையும் கடமையும் இந்த அரசிற்கு இருக்கிறது.

ஆனால் இதற்கு அரசு மருத்துவ கட்டமைப்பை சரி செய்யாமல் வழியில்லை. உண்மையில் முதன்முதலாக செய்யப்பட்ட வெற்றிகரமான உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒவ்வொன்றும் அரசு மருத்துவமனைகளில் தான் செய்யப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சைக்காகும் செலவை தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் போன்ற அரசு காப்பீடு திட்டங்களில் மூலமாக அரசு ஏற்கலாம். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பை (National Organ & Tissue Transplant Organisation) உருவாக்கியதன் மூலம் இந்திய அளவில் உறுப்பு மாற்றுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது செய்து வரும் வெறும் பரப்புரை போலல்லாமல் உறுப்புகளை சமூக நீதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக யாருக்கு உடனடியாக தேவையோ அவர்களுக்கு தான் உறுப்பு கொடையை இந்த அமைப்பு பயன்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் தங்களது அப்பா, அம்மா, குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தவர்களது உறுப்புகளை மக்கள் கொடையாக கொடுக்கிறார்கள்.

ரிவ்யாணி உயிருடன் இருந்திருந்தால் அவளுக்கு இப்பொழுது ஏழு வயதாகியிருக்கும். ரிவானியின் இதயம் தற்போது துடித்துக் கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தையொன்றின் பெற்றோருக்காக, ரிவ்யாணியின் தந்தை ரதேஷ்யாமிடம் ஒரு செய்தி இருந்தது. அந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவது போலவே என்னுடைய மகளின் பிறந்த நாளான மே-5 யையும் கொண்டாட வேண்டும் என்ற செய்தியை அவர்களிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள் என்பது தான் அது. அந்த செய்தி அவர்களிடம் சேர்ந்துவிடும் என்று ஒருவர் நம்பலாம். ஆனால் ரஹாங்டலஸ் போன்றவர்களின் கொடைகளை கொண்டாடும் அதே நேரத்தில் அதே கொடையை அவர்களை போன்ற ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க முயற்சி செய்வோமா?

-வினவுச் செய்திப் பிரிவு
நன்றி: scroll.in. Sanjay Nagral எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

மேலும் படிக்க:
Who gives, who lives? India’s organ transplant system continues to favour the rich

சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !

asifa-protest-kathua

சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !

காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் சிறுமி ஆஷிஃபாவைக் கும்பல் வல்லுறவு செய்து கொன்றிருப்பது ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தி வரும் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலின் ஒரு பகுதியே.

ம்மு மாநிலம் கதுவாவிலும், உ.பி. மாநிலம் உன்னாவிலும் சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றவாளிகளைப் பாதுகாத்தும் ஆதரித்தும் வரும் பா.ஜ.க., சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது.

இச்சட்டத் திருத்தம் அக்கட்சியின் இரட்டை வேடத்தை, கபடத்தனத்தை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. குற்றவாளிகளே நீதிபதிகளாக அதிகாரம் செலுத்தும் இழிவான, அபாயகரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இந்திய மக்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் அம்பலப்படுத்துகிறது.

ஜம்மு மாநிலம் கதுவா மாவட்டம் – ரஸானா கிராமத்தில் வசித்துவந்த ஆஷிஃபா என்ற எட்டே வயதான பால்மணம் மாறாத சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்திவரும் முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரணையும் குற்றப் பத்திரிகையும் அம்பலப்படுத்துகின்றன.

ஆஷிஃபா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடி இனமான பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி. பக்கர்வால் சமூகத்தினர் முசுலீம் மதத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடி இனத்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

asifaஅம்மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 11.9 சதவீதமுள்ள இப்பழங்குடியின முசுலீம்கள், சொல்லிக்கொள்ளும்படியான நிலவுடமையோ, பிற வகையான சொத்துடமைகளோ இல்லாதவர்கள். இன்னமும் மாடுகளையும் குதிரைகளையும் மட்டுமே உடமையாகக் கொண்ட நாடோடி வாழ்க்கையைத்தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அக்கால்நடைகளை மேய்ப்பதும், அவற்றை வயல்வெளிகளில் பட்டி போடுவதும்தான் இவர்களது தொழில்.

குளிர்காலத்தில் ஜம்முவின் காட்டுப் பகுதிகளில் முகாமிட்டுத் தங்கும் இப்பழங்குடியின முசுலீம்கள், கோடை காலம் தொடங்கும் சமயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குக் கால்நடையாகவே இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.

பள்ளத்தாக்கின் புல்வெளிப் பகுதிகளில் குடிசை போட்டுத் தங்கி, கால்நடைகளை மேய்க்கும் இவர்கள், பக்ரீத் பண்டிகை காலத்தில் தாங்கள் வளர்த்துவரும் ஆடு, மாடுகளை இறைச்சிக்காகப் பள்ளத்தாக்கு பகுதி முசுலீம்களுக்கு விற்பதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். சுழற்சி முறையில் பருவ காலங்கள் வந்து போவது போல, இவர்களும் ஜம்முவிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் மாறிமாறித் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த முப்பதாண்டுகளாக காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவரும் தன்னுரிமைக்கான போராட்டத்தை இராணுவரீதியில் வெற்றிகொள்ள முடியாத இந்திய ஆளும் வர்க்கம், அந்த நீதியான போராட்டத்தை இந்து – முசுலீம் மத மோதலாக மடைமாற்றிவிடத் தொடர்ந்து முயன்று வருகிறது.

இத்திட்டத்தின் களமாக ஜம்முவும், முன்னணி சக்திகளாக ஜம்முவில் ‘‘பெரும்பான்மையாக வசித்துவரும் பார்ப்பன பண்டிட்டுகளும், ராஜபுதன (டோக்ரா) சாதியினரும், சீக்கியர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். வாஜ்பாயி ஆட்சியின்போது காஷ்மீரிலிருந்து ஜம்மு பகுதியைப் பிரித்துத் தனி மாநிலமாக்க முயன்று தோற்றுப் போனது இந்து மதவெறிக் கும்பல்.

2011 ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்முவின் மொத்த மக்கட்தொகையில் இந்துக்கள் 62 சதவீதமாகவும், முசுலீம்கள் 36 சதவீதமாகவும் உள்ளனர்.

ஆனால், இந்தியா ‘‘சுதந்திரம்” அடைவதற்கு முன்பு ஜம்முவிலும் முசுலீம்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர். அச்சமயத்தில் ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த டோக்ரா சாதியைச் சேர்ந்த இந்து மன்னன் ஹரி சிங் முசுலீம்களுக்கு எதிராக நடத்திய இன அழித்தொழிப்பு நடவடிக்கையின் விளைவாகவே ஜம்முவில் இந்து பெரும்பான்மை நிறுவப்பட்டது.

kathua hindus support rapistsஅவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையில் இரண்டு இலட்சம் முசுலீம்கள் காணாமல் போயினர். ஐந்து இலட்சம் முசுலீம்கள் அகதிகளாக வெளியேறினர். இவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையை காந்தி, நேரு தொடங்கி ஷேக் அப்துல்லா உள்ளிட்டுப் பலரும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கின்றனர். (Dogra Raj in Kashmir, Frontline, Nov.24, 2017)

அன்று இந்து மன்னன் ஹரி சிங் முசுலீம்களுக்கு எதிராக ஆயுதந்தாங்கி நடத்திய இன அழித்தொழிப்பு நடவடிக்கையை, இன்று ஆர்.எஸ்.எஸ். கும்பல், ‘‘ஜம்மு பகுதியில் குஜ்ஜார், பக்கர்வால் முசுலீம்களுக்குக் குடியுரிமையோ, சொத்துரிமையோ வழங்கக் கூடாது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் பக்கர்வால் முசுலீம்களுக்கு ஜம்மு பகுதியில் உள்ள காடுகளில் நிலங்கள் ஒதுக்கக் கூடாது.

குஜ்ஜார், பக்கர்வால் முசுலீம்களைப் பள்ளத்தாக்கு பகுதிக்குத் துரத்திவிடுவதன் மூலமாகத்தான் ஜம்முவின் இந்து பெரும்பான்மையைத் தக்க வைக்க முடியும்” என்ற வடிவத்தில் நடத்தி வருகிறது.

பக்கர்வால் முசுலீமான ஆஷிஃபா, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். -இன் இந்த முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம்தான் அடிக்கொள்ளியாக இருந்திருக்கிறது.

இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள சஞ்சிராம், ஆர்.எஸ்.எஸ். -இன் இந்த செயல்திட்டத்தை ரஸானா கிராமப்புற பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதில் மும்முரமாகச் செயல்பட்டு வந்திருக்கின்றான்.

ஜம்மு பகுதியில் ஆர்.எஸ்.எஸ். விதைத்துவரும் நஞ்சு, எந்தளவிற்குப் பெரும்பாலான இந்துக்கள் மத்தியில் ஊடுருவி, முசுலீம் எதிர்ப்பு அரசியலை இயல்பான நடைமுறையாக்கிவிட்டது என்பதை சஞ்சிராமும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ரஸானா கிராம இந்துக்கள் அணி திரண்டு நிற்பதும் எடுத்துக்காட்டுகின்றன.

‘‘குளிர்காலத்தில் ஜம்முவின் காட்டுப்பகுதிகளில் முகாமிட்டுத் தங்கியிருக்கும் பக்கர்வால் முசுலீம்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் இனி ஜம்முவில் முகாமிடுவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தித் தங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரி பக்கர்வால் முசுலீம்கள் போராடி வருவதைத் தடுக்க வேண்டும்” என்ற அரசியல் நோக்கிலேயே சிறுமி ஆஷிஃபாவின் மீது இந்தக் கொடூரமான பாலியல் வன்முறை ஏவிவிடப்பட்டிருக்கிறது.

jammu HC Lawyers support asifa killersசிறுமி ஆஷிஃபாவும் தற்செயலாகக் குறிவைக்கப்பட்ட பலிகடா அல்ல. சஞ்சிராமின் மருமகன் சுபம் சங்ராவுக்கு சிறுமி ஆஷிஃபாவுடன் பழக்கம் இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, அவனைக் கொண்டே அச்சிறுமியைக் கடத்தினான், சஞ்சிராம்.

கோவில் யாரும் சந்தேகப்பட முடியாத பொது இடம் என்பதால், கடத்தப்பட்ட சிறுமியைத் தனது கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் அடைத்துவைத்தான். அடைத்துவைக்கப்பட்ட சிறுமி சத்தம்போட்டுத் திட்டத்தைப் பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, அச்சிறுமிக்கு அடுத்தடுத்து மயக்க மருந்தைச் செலுத்தி, அவளை மயங்கிய நிலையிலேயே வைத்திருந்தான்.

அச்சிறுமி மயங்கிய நிலையில் இருந்தபோதே, சுபம் சங்ரா அவளை வல்லுறவு செய்து சிதைத்தான். இந்தச் செய்தியையெல்லாம் உ.பி. மாநிலம் மீரட்டில் படித்துவரும் சஞ்சிராமின் மகன் விஷால் ஜன்கோத்ராவிடம் தெரிவித்து, உனது ஆசையைத் தீர்த்துக் கொள்ள உடனே கிளம்பி வா என அழைத்தான் சுபம் சங்ரா. இதற்காகவே மீரட்டிலிருந்து வந்த விஷால் ஜன்கோத்ரா மயங்கிய நிலையிலேயே ஆஷிஃபாவை வன்புணர்ந்தான்.

ஆஷிஃபாவைக் கொலைசெய்துவிடுவது என ஏற்கெனவே முடிவெடுத்திருந்த சஞ்சிராம், அச்சிறுமி தனது மகனாலும், மருமகனாலும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

உள்ளூர் சிறப்பு போலீசு படையில் பணியாற்றும் தீபக் கஜுரியாவோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு ஆஷிஃபாவைக் கொலை செய்து, அவளது சடலத்தைக் காட்டுக்குள் வீசியெறிந்துவிடுவது என சஞ்சிராம் திட்டமிட்ட நேரத்தில், குற்றுயிராகக் கிடந்த சிறுமியைத் தானும் புணர விரும்புவதாகக் கூறி, தனது மிருகத்தனமான இச்சையைத் தீர்த்துக் கொண்டான் தீபக் கஜுரியா.

ஆஷிஃபா, கடந்த ஜனவரி மாதம் 10 தேதி சஞ்சிராம் கும்பலால் கடத்தப்பட்டாள். ஜனவரி மாதம் 17 தேதி அவளது சடலம் காட்டுப் பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டது. இடைப்பட்ட இந்த ஒரு வார காலமும் அச்சிறுமி மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தாள்.

மயக்கம் தெளிந்த சமயத்தில் எல்லாம் அடித்து உதைக்கப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்கத்திற்குள் தள்ளப்பட்டாள். மயங்கிய நிலையிலேயே மூன்று இந்து மிருகங்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டாள்.

அளவுக்கு அதிகமான மயக்க மருந்து, சித்திரவதை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் ஆஷிஃபா சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சமயத்திலும்கூட, அச்சிறுமியின் மீது இந்து மதவெறி பிடித்த சஞ்சிராம் கும்பல் இரக்கம் காட்டவில்லை.

அச்சிறுமியின் முதுகெலும்பை உடைத்து, தலை மீது ஒருமுறைக்கு இருமுறை பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுச் சிதைத்து, மிகக் கொடூரமான முறையில் அவளைக் கொன்று, சடலத்தைக் காட்டிற்குள் வீசியெறிந்தனர்.BJP Police Rape

ஆஷிஃபா காணாமல் போனவுடனேயே, அவளது உறவினர்கள் போலீசு நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசு அதிகாரிகளோ, ஆஷிஃபா எட்டு வயது சிறுமி என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவள் யாருடனாவது ஓடிப் போயிருப்பாள் என வக்கிரத்தோடு பதில் அளித்துப் புகாரைக் கிடப்பில் போட்டனர்.

இன்னொருபுறம், போலீசு அதிகாரிகள் தீபக் கஜுரியாவும், திலக் ராஜும் ஆஷிஃபாவின் உறவினர்களோடு சேர்ந்துகொண்டு, அவளைத் தேடுவது போல நடித்தனர். சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பிறகு, சஞ்சிராமின் மருமகன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, மற்ற குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து, குற்றத்தின் தீவிரத்தன்மையை நீர்த்துப்போக வைத்தனர்.

ஆஷிஃபாவின் உறவினர்களும், பக்கர்வால் முசுலீம்களும் போராடிய பிறகுதான், விசாரணை உள்ளூர் போலீசிடமிருந்து மாநிலக் குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகுதான் குற்றவாளிகள் யார் யாரென்பதும் குற்றத்தின் பின்னுள்ள நோக்கமும் அம்பலமானது.

சஞ்சிராம், அவரது மகன் விஷால் ஜன்கோத்ரா, அவனது மருமகன் சுபம் சங்ரா, சஞ்சிராம் குடும்ப நண்பன் பிரவேஸ் குமார், போலீசு அதிகாரி தீபக் கஜுரியா ஆகியோர் மட்டுமின்றி, சஞ்சிராமிடமிருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு இக்குற்றத்தையும் சாட்சியங்களையும் அழிக்க முயன்ற போலீசு அதிகாரிகள் ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுக் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ‘‘இந்த எட்டு பேரோடு குற்றவாளிகளின் எண்ணிக்கை முடிந்து போக வாய்ப்பில்லை” எனக் கூறியிருக்கிறார், விசாரணை அதிகாரி ரமேஷ்குமார் ஜல்லா.

அந்த அதிகாரி கூறியிருப்பது நடக்காவிட்டாலும்கூட, அந்த வார்த்தைகளில் அபாயகரமான உண்மை மறைந்து இருக்கத்தான் செய்கிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் எட்டுக் குற்றவாளிகளை வழக்கு, விசாரணை, தண்டனையிலிருந்து பாதுகாத்து, வழக்கைப் பத்தோடு பதினொன்றாக ஊத்தி மூடிவிடும் நோக்கில் இந்து ஏக்தா மஞ்ச் என்றொரு அமைப்பை ஜம்முவின் தெருக்களில் இறக்கிவிட்டிருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

நீதியைக் கொல்லும் நோக்கில் அவ்வமைப்பு நடத்திவரும் போராட்டங்களுக்கு ஜம்முவைச் சேர்ந்த இந்து பெரும்பான்மை தனது ஆதரவை வழங்கி வருகிறது.

ஆஷிஃபாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தி, கொன்ற குற்றத்தில் எட்டு பேரோ, பத்துப் பேரோ முதன்மைக் குற்றவாளிகள் என்றால், அக்குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கியிருக்கும் இந்துக்கள் அனைவரும் குற்றப் பட்டியலில் இரண்டாம், மூன்றாம் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள்.

ஆஷிஃபாவின் சடலத்தை ரஸானா கிராமத்தில் புதைப்பதற்குக்கூட மறுத்து, மனிதத்தன்மையற்ற வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, இந்துக்களின் மனசாட்சி.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த லால் சிங்கும், சந்தர் பிரகாஷ் கங்காவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

விசாரணை அதிகாரி ரமேஷ் குமார் ஜல்லா நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வந்த சமயத்தில், அதனைத் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது ரஸானா நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம். நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிக்குமாறு அறைகூவல் விட்டதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது ஜம்மு உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம்.

ஆஷிஃபா வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிவரும் பெண் வழக்குரைஞர் தீபிகா சிங் ரஜாவத்தை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வைத்து வழக்குரைஞர் சங்கத் தலைவர் புபிந்தர் சிங் சலாதியா மிரட்டியிருக்கிறார். தீபிகா சிங் தனது உயிருக்கும் கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் ‘தேசியக்’ கொடி பறக்கவிடப்பட்டது. ‘‘தேசியக் கொடியை மட்டுமல்ல, தேவையென்றால் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வருவோம்” எனப் பகிரங்கமாக மிரட்டல் விட்டார் ஜம்மு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர், சலாதியா.

ஒரு முசுலீம் சிறுமி இந்து மதவெறி பிடித்த கிரிமினல்களால் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொல்லப்பட்டதைத் தேசபக்த நடவடிக்கையாகச் சித்திரிக்கும் குறியீடுகள் இவை.

இட்லரின் ஜெர்மனியில் மட்டும்தான் நடந்தது என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அநீதி, அநியாயம், அசிங்கத்தை இந்து தேசியத்தின் பெயரால் இந்தியாவில் அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் ஜம்மு பிராந்திய தலைமை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் தேசியத் தலைமையும், மோடி தலைமையில் உள்ள மைய அரசும்கூடக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் அணுசரனையாகவும்தான் நடந்துவருகின்றன.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் கதுவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளான சமயத்தில் பிரதமர் மோடியோ, வேற்றுக் கிரகவாசி போல, தனது முகநூல் மற்றும் சுட்டுரை பக்கங்களில்தான் யோகா செய்யும் படத்தை வெளியிட்டார்.

நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்னின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்திய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ அதிகாரிகளைப் பாராட்டினார்.

கதுவா, உன்னாவ் சம்பவங்கள் இரண்டிலும் சங்கிகள்தான் குற்றவாளிகள் என்ற உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைப் பொத்தாம் பொதுவாகக் கண்டித்துக் காலந்தாழ்த்தி அவர் விடுத்த அறிக்கை, முதலைக் கண்ணீருக்கு ஒப்பானது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் தந்திரம் நிறைந்தது.

கதுவாவில் ஆஷிஃபாவைச் சீரழித்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் பதவி விலகியது தண்டனையல்ல எனக் காட்டுவற்காகவே, பா.ஜ.க.வைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களையும் அமைச்சரவையிலிருந்து விலக வைக்கும் மலிவான தந்திரத்தைக் கையாண்டது.

காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போது டெல்லியில் நடந்த நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கைப் பிடித்துக்கொண்டு வட இந்தியப் பெரு நகரங்கள் அனைத்திலும் மன்மோகன் சிங்கிற்கு எதிராக அரசியல் ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஆர்.எஸ்.எஸ்., ஆஷிஃபா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்திவருகிறது.

இந்த எதிரும்புதிருமான அணுகுமுறையை, அறத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் கணக்குகளைக் கொண்டும் மதிப்பிட வேண்டும்.

Go Back BJPநிர்பயா வழக்கை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., ஆஷிஃபா வழக்கில், அதன் பின்னுள்ள இந்து மதவெறியை மறைத்து, அதனைச் சாதாரண வழக்காகக் காட்டுவதன் மூலம் நீர்த்துப் போக வைக்க முயலுகிறது.

இன்னொருபுறமோ, இந்த வழக்கில் இந்துக்கள் பழிவாங்கப்படுவதாகப் பொய்யான பிரச்சாரத்தை முன்னிறுத்தி, முசுலீம்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக இந்துக்களைத் தூண்டி விடுகிறது.

முசுலீம்களைத் தேச விரோத சக்திகளாகச் சித்தரிக்கத் தயங்காத ஆர்.எஸ்.எஸ்., இப்பொழுது முசுலீம்களுக்கு எதிரான தனது ஒவ்வொரு வன்முறை நடவடிக்கையையும் தேசபக்த நடவடிக்கையாகச் சித்தரித்து வருகிறது.

மோடியால் குஜராத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த அயோக்கியத்தனம், பா.ஜ.க. மைய அரசைக் கைப்பற்றிய பிறகு ‘‘தேசிய”மயமாக்கப்பட்டு வருகிறது.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்கக் கோரி போராடுவதையும் வாதிடுவதையும் குஜராத்திகளின் கௌவரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகச் சித்தரித்தார், மோடி.

அந்த இனப் படுகொலையை நியாயமானதாகவும் இயல்பானதாகவும் ஏற்றுக்கொள்ளும்படியான மனோநிலையை குஜராத் இந்துக்களிடம் ஏற்படுத்துவதில் மோடியும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வெற்றியடைந்தனர்.

மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடனேயே அந்த குஜராத் பரிசோதனை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிய கன்னையா உள்ளிட்ட மாணவர்கள் தேசவிரோத சக்திகளாகச் சித்தரிக்கப்பட்டு, அவர்களின் மீது ராஜதுரோக வழக்கு ஏவப்பட்டது.

அக்லக் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவன் இறந்தபோது, அவனது சடலத்தின் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது. பா.ஜ.க. அமைச்சர் நேரடியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முசாபர்பூர் மாவட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம், இந்துக்கள் தமது பெண் குழந்தைகளின் கௌவரத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட நியாயமான நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டது.

குஜராத் உனாவில் இந்து மதவெறிக் கும்பல் நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியதைக் கைபேசியில் படம் பிடித்து ஒளிபரப்பி, அக்காட்டுமிராண்டித்தனத்தை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் நகரைச் சேர்ந்த ஷாம்புலால் ரேகர், தனது கள்ள உறவைத் தொடரும் நோக்கில் முகம்மது அஃப்ரஸுல் என்ற பெங்காலி முசுலீம் தொழிலாளியை வெட்டிக் கொன்றான். கொலைகாரன் இந்து, கொல்லப்பட்டவன் முசுலீம் கூலித் தொழிலாளி என்பதால், இந்தப் படுகொலையை லவ் ஜிகாத்துக்கு எதிரான நியாயமான நடவடிக்கையாக இந்து மதவெறி அமைப்புகள் சித்தரித்தன.

கொலைகாரனின் கட்-அவுட் படங்கள் ராஜஸ்தான்-ஜோத்பூரில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. அவனது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, இந்து மதவெறிக் கும்பல் அந்நீதிமன்றக் கட்டிடத்தில் இருக்கும் கொடிக்கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றி ஆட்டம் போட்டது.

ஆஷிஃபா கூட்டுப் பாலியல் வன்கொடுமை இப்படி இயல்பானதாக, நியாயமானதாக, தேச பக்த நடவடிக்கையாகக் காட்டும் திசையில் சங்கப் பரிவார அமைப்புகள் எடுத்துச் செல்கின்றன.

ஆஷிஃபா வழக்கில், ஒரு பால்மணம் மாறாத சிறுமி மீது நடத்தப்பட்ட ஆகக் கொடூரமான பாலியல் வன்முறையையும் அதன் பின்னிருக்கும் இந்து மதவெறி அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.

இச்சமயத்திலும்கூட, நகர்ப்புறத்து நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும், பெண்ணியவாதிகளும் இவ்வழக்கை அரசியல் ஆக்காமல், வெறும் பெண்களுக்கு எதிரான குற்றமாக மட்டுமே பார்க்க வேண்டும் எனக் கோரி வருவது, எதிரிகளைப் பாதுகாப்பதற்கே உதவும்.

-செல்வம்

-புதிய ஜனநாயகம், மே 2018

மோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா ? கருத்துப்படம்

0

மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு
– தினமலர் செய்தி

தினமலரே,
Go Back Modi பலூன் பறக்கவிட்ட தமிழக மக்களை பிரிவினைவாதிகள் எனச் சொல்லத் தயாரா ?

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

காவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் !

“காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!” என்கிற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபயணம், பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம் என, தொடர் பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

உடுமலை

உடுமலையில் 14-05-18 அன்று நடைபெறுவதாக இருந்த மக்கள் அதிகாரத்தின் பொதுக்கூட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அதே நாளில், பெரிய கடைவீதி கொங்கு திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமாக நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா தலைமையில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், தமிழ்நாடு திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர் நாகராஜன், கணக்கம்பாளையம் ஆரசு ஊழியர்கள் – ஓய்வூதியர் குடியிருப்போர் நல சங்கத்தின்  திரு விவசாயபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் ரவிக்குமார், திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தோழர் தம்பி பிரபாகரன், தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார், கொங்கு மண்டல ஆய்வு மையத்தின் திரு ரவிக்குமார், மற்றும் ராமி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி திரு நாச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

“மக்கள் மத்தியில் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறீர்கள், சரியான கோணத்தில் பிரச்சனைகளையும், தீர்வையும் முன் வைக்கிறீர்கள், மக்கள் அதிகாரத்தோடு தொடர்ந்து நாங்களும் பயணிப்போம், போராடுவோம்” என்றனர்.

மக்கள் அதிகாரத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜு , தனது உரையில், நீதி மன்றத்தின் வஞ்சக தீர்ப்பு, மத்திய மாநில அரசின் மெத்தன போக்கு, தமிழகத்தின் மீதான வன்மம், டெல்டாவை  சுடுகாடாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகாரத் திட்டங்கள், விவசாயத்தை அழிக்கும் அரசின் தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்திய அவர், எம்மை போன்ற ஒன்றிரண்டு அமைப்புகள் மட்டும் போராடினால் தீர்வு கிடைக்காது, பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் போராட்டங்களாக உருவெடுக்க வேண்டுமென்றார்.

கூட்டத்தின் இடையே ம. க. இ. க.-வின் கலைநிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.

“இந்த அரசு விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யாது என தெரியும். ஆனால் ஏதோ ஒரு ஓரத்தில் நல்லவன் வந்தால் நடக்கும்  என நம்பியிருந்தேன். அது தவறு. போராடாமல் தீர்வு கிடைக்காது என்ற தெளிவை இந்தக்கூட்டம் தமக்கு வழங்கியதாக” தெரிவித்தார் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர்.

இதற்கு முன்னதாக மக்கள் அதிகாரத்தின் தோழர்கள், மக்கள் மத்தியில் காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் தேவையை விளக்கி குடியிருப்பு பகுதிகளிலும், கடைவீதிகளிலும், ரயில், பேருந்து, ஆட்டோ என விரிவான அளவில் பிரச்சாரம் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
உடுமலை. தொடர்புக்கு : 97885 58526

_____________________________________________________________________

தருமபுரி

ருமபுரியில் 08.05.2018 அன்று காலை10:00 மணி அளவில் பி.அக்ரகாரத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தோழர் ராஜா தனது உரையில், “காவிரிப் பிரச்சினையில் மோடி அரசு தமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. தன்னுரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்பதுதான் ஒரே தீர்வு” என பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் வழக்கறிஞர் ஜானகிராமன் , “கிருஷ்ணராஜசாகர் அணையில் துணை இராணுவத்தை அனுப்பி தண்ணீர் கொடுக்க வக்கற்ற மத்திய அரசு டெல்டாவில் துணை இராணுவத்தை இறக்கி போராடும் விவசாயிகளை பயமுறுத்துகிறது.” என மோடி அரசின் ஓரவஞ்சணையையும், திமிர்த்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

இனியும் வேடிக்கை பார்க்காமல், அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 81485 73417

கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?

4

யிலாப்பூர் மாஃபியாவின் டார்க் ஹொரர் காமடியனான எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட பிறகும், ஒன்றுமே நடக்கவில்லை. தனது வீட்டில் பகிரங்கமாக வாழும் எஸ்.வி.சேகர் சென்னையில் நடக்கும் கர்நாடக சங்கீத கச்சேரி முதல், பணக்காரர்களின் கருமாதி வரை பகிரங்கமாக கலந்து கொள்கிறார். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை, ஏன்?

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.)

கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?

  • பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றிய பிராமண சாதி என்பதால்!
  • தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதால்!
  • தமிழக போலீசுக்கு அவரைக் கைது செய்ய பயம்.
  • கைது செய்யுமளவு அவர் குற்றம் செய்யவில்லை.
  • பா.ஜ.க-விற்கு பயப்படும் எடப்பாடி அரசு!

கர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே !

நேற்றைய கர்நாடகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அரசியல்வாதிகளை சீட்டு நுனியில் அமரச் செய்திருந்த அதே அளவிற்கு சமூக வலைத்தள பயனர்களையும் பரபரப்பாக்கியிருந்தது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்து வந்ததில் தொடங்கி, இறுதியில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி குறித்த செய்தி வந்த பின்பும் தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலையையும், பாஜக மேற்கொள்ளவிருக்கும் அதிரடிகளையும் எள்ளி நகையாடியிருக்கின்றனர் ட்விட்டர்வாசிகள்.

அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு …

சுஜேஷ்:

தாயே மின்னணுவாக்கு இயந்திரமே, எல்லாமே உன் கையிலதாம்மா இருக்கு …… #KarnatakaVerdict

தமிழகத்தின் ‘மிக்சர்’ புகழ் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதியம் 1.30 மணியளவிலேயே தென்னிந்தியாவிற்குள் பாஜக காலடி வைத்ததற்கு அமித்ஷா ‘ஜி’ -க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:

இந்த சந்தோசமான தருணத்தில், தென்னிந்தியாவினுள் பாஜகவின் பிரம்மாண்டமான நுழைவிற்கான முன்னோட்டமாக, கர்நாடகத் தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் குறிப்பிடத் தகுந்த வெற்றிக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

மெஹ்பூபா முஃப்தி:

கர்நாடகாவில் நட்சத்திர செயல்திறனைக் காட்டிய பாஜகவிற்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

*****

இவ்வாறு பாஜக ஆதரவு பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு வாழ்த்து மழைகளைப் பொழிந்து கொண்டிருக்கையில், படிப்படியாக பாஜக முன்னணியில் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது. இடையே காங்கிரசு, மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணி ஆட்சிக்கும், குமாரசாமி முதல்வராகவும் ஆதரவு தெரிவித்தது. பாஜக 104 தொகுதிகள் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 113 சீட்டுகள் தேவையான நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய ‘ஜனநாயகத்தின்’ உண்மையான சொரூபம் துகிலுறியப்பட்டு அம்பல மேடையில் ஏற்றப்பட்டது.

சுபாரிமேன்:

அமித்ஷா மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.-களை கூடையில் சேர்த்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

*****

ஜிதேந்தர் சிங்:

அமித்ஷா இப்போது….

*****

சுனில் – தி கிரிகெட்டர்:

தற்போது (வெற்றி) பாஜக-விடமிருந்து தேவகவுடாவிற்கு.. #KarnatakaVerdict

*****

மனோகரன் கார்திக்:

மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.-க்களின் தற்போதைய மனநிலை
#KarnatakaVerdict #KarnatakaElections2018

*****

காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து வெற்றிக் களிப்பில் இருந்த பாஜகவினரை அவர்களது கொண்டாட்டங்களிலிருந்தே வாரியெடுத்தனர் டுவிட்டர்வாசிகள்.

மேக்நாத்:

பாஜகவினரே, கர்நாடக தேர்தல் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக இன்று முடிவடையவில்லை என்றால் வெற்றிக் கொண்டாட்ட்த்திற்காக நீங்கள் வாங்கி வைத்திருந்த லட்டுக்களை வீசிவிடாதீர்கள்.
தயவுசெய்து பசித்தவர்களுக்கு அதைக் கொடுத்து, அவர்களுக்கு ஒரு நன்னாளைக் கொடுங்கள்.

*****

மஹேஷ்:

1 மணிக்கு முன்னால் …….             1 மணிக்குப் பின்னால் ……..

*****

மயுர் எஸ். குல்கர்னி :

இந்த முறை பாஜகவின் நிலை !! … #SayNoToBJP & never say #IamWithModi #KarnatakaVerdict #KarnatakaElections2018 #KarnatakaElectionResults2018 #KarnatakaElection #KarnatakaResults #KarnatakaPollResults

*****

கவுதம் பாஷின்:

அனைத்துக் கட்சிகளும் பட்டாசு வெடித்து, லட்டு  விநியோகித்த நாட்களில் இதுவும் ஒன்று. பாஜக மதிய வேளையில் செய்தது. காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் இப்போது செய்கின்றனர். அருமையான காமடி!

*****

துர்கா சென்குப்தா:

கர்நாடகா தேர்தல் முடிவுகளை வாசிப்பது டென்னிஸ் போட்டியைப் பார்ப்பது போன்று உள்ளது.

*****

ட்விட்டர்வாசிகள் நடைபெறவிருக்கும் குதிரைபேரத்தை கணக்கில் கொண்டு கர்நாடகத் தேர்தலில் இறுதியில் வெல்லப்போகிறவர்கள் சொகுசு விடுதிகளின் உரிமையாளர்களே என ட்விட்டுகளைப் போடத் தொடங்கிவிட்டனர்.

ரமேஷ் ஸ்ரீவத்ஸ்:

சொகுசு விடுதி உரிமையாளர் தான் வெற்றியாளர் போலத் தெரிகிறது

*****

டேனியல் செய்ட்:

இன்று ஏதோ ஒரு சொகுசு விடுதிக்கு பெரிய வியாபாரம் காத்திருக்கிறது.

*****

ஓமர் அப்துல்லா:

இப்போது, பெங்களூரு சுற்று வட்டாரத்தில் நான் ஒரு சொகுசு விடுதிக்கு உரிமையாளராக இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்

*****

நவோமி டட்டா:

”இறுதி நடவடிக்கை” என்ற வார்த்தைக்குப் பொருத்தமான “the last resort” (கடைசி சொகுசு விடுதி) என்ற சொற்றொடரை ஆங்கில மொழிக்கு வழங்கியது கர்நாடக அரசியல்தான்.

*****

ரோஹினிசிங்:

சொகுசு விடுதி உரிமையாளர்களுக்கு நன்னாள் !

பாஜக எப்படியெல்லாம் ஆட்சியைப் பிடிக்க குறுக்குவழிகளைத் தேடிப் பிடிக்கும் என்பதையும் ட்விட்டர்வாசிகள் தங்கள் அனுபவ அறிவிலிருந்து போட ஆரம்பித்தனர்.

ரோஹின் தர்மகுமார்:

1. காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க உரிமை கோரல்
2. கவர்னர் பாஜகவை அழைத்தல்
3. கவர்னர் பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வார கால அவகாசமளித்தல்
4. சொகுசு விடுதிகள் விடுமுறை
5. மதசார்பற்ற ஜனதாதளம் பிரிதல்
6. பதவியேற்றல்.
சரிதானே ?

*****

சாகர்:

கர்நாடகாவில் இரண்டு விசயங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன
1. பாஜக இன்று அரசமைக்கும்
2. பாஜக சில மாதங்களுக்கு பின்னர் அரசமைக்கும்

*****

ராஃப்ல் காந்தி:

அந்த குண்டு மனிதன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் வரை இது முடிவதில்லை

– வினவு செய்திப் பிரிவு

 

உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் !

.பி. மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு நடந்துவந்த குண்டாஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, சட்டம் நிலைநாட்டிவிட்டதாகப் பீற்றி வருகிறார், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழியோடுதான் இந்து மதவெறிக் கும்பலின் இந்த சுயதம்பட்டத்தை ஒப்பிட முடியும். பழைய குண்டர்கள் இடத்தை இப்பொழுது புதிய குண்டர்கள், அதாவது யாதவ் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குண்டர்கள் இடத்தை இப்பொழுது தாக்கூர் குண்டர்கள் பிடித்திருக்கிறார்கள்.

இந்துத்துவ ஆட்சியின் முன்மாதிரியாகக் காட்டப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, தாக்கூர் சாதிக் கிரிமினல்களின் காட்டாட்சியே என்பதை உன்னாவ் பாலியல் வன்முறை நிரூபிக்கிறது.

இந்த உண்மையை உன்னாவ் மாவட்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளம் பெண், தாக்கூர் சாதியைச் சேர்ந்த அத்தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது அடியாள் கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட சம்பவமும், அதற்காக நீதி கேட்டுப் போராடிய அப்பெண்ணின் தந்தையை குல்தீப் சிங்கின் தம்பியும், அவனது அடியாட்களும் அடித்துக் கொன்ற சம்பவமும் அம்பலப்படுத்துகின்றன.

உ.பி. உன்னாவில் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும், காஷ்மீர் முசுலீம் சிறுமிக்கும் நேர்ந்திருக்கும் கொடூரங்களுக்கு இடையே அநேக ஒற்றுமைகள் உள்ளன.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இருவருமே இந்துத்துவக் கும்பலால் வெறுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமி ஆஷிஃபா முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியின் காரணமாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்றால், உ.பி.யில் ஆதிக்க சாதித் திமிரின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டாள்.

சாதி – தீண்டாமையையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பது போலவே, முசுலீம் எதிர்ப்பு இந்துத்துவா அரசியலையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டு சம்பவங்களிலுமே பாதிக்கப்பட்டவர்கள் போராடிய பிறகுதான், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு சம்பவங்களிலுமே குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் முனைப்புக் காட்டி வருகிறது. இரண்டு சம்பவங்களிலுமே வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டது.

கதுவா சம்பவத்தில் உள்ளூர் போலீசு குற்றவாளிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டதென்றால், உ.பி. சம்பவத்திலோ யோக்கியன் ஆதித்யநாத்தின் கீழுள்ள போலீசு துறையே குற்றவாளிகள் செங்கர், அவனது தம்பி அதுல் சிங் ஆகியோரின் எடுபிடியாக நடந்துகொண்டு, அப்பெண்ணின் தந்தையைக் கொல்லுவதற்கும் உடந்தையாக இருந்திருக்கிறது.

கதுவா சம்பவம் விவாதப் பொருளாக இருந்த நேரத்தில், நரேந்திர மோடி அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் சுவிட்சர்லாந்துக்குப் பறந்து போனார். உன்னாவ் சம்பவத்திற்குப் பதில் அளிக்க வேண்டிய ஆதித்யநாத்தோ, அதைப் புறக்கணித்துவிட்டு ம.பி. மாநிலத்திலுள்ள கோவிலுக்குச் சாமி கும்பிடப் போனார்.

உன்னாவ் சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்திருக்கிறது. எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்டால், வேலை வாங்கித் தருவார் எனத் தந்திரமாக குல்தீப் சிங்கின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அத்தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பலவாறு மிரட்டி, குல்தீப் சிங்கும் அவனது அடியாட்களும் பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கின்றனர்.

உள்ளூர் போலீசு ஒப்புக்குச் சப்பாணி பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைதும் செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழித்தது. அவ்விளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிறகுதான், இப்பாலியல் பலாத்கார சம்பவமும், அப்பெண்ணின் தந்தை எம்.எல்.ஏ.வின் தம்பியால் அடித்து உதைக்கப்பட்டு, அவனது தூண்டுதலால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையிலேயே எம்.எல்.ஏ.வின் கைக்கூலி போலீசாரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதும் வெளியுலகிற்குத் தெரியவந்தது.

பா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதை நாறிப் போன பிறகும்கூட, ஆதித்யநாத் அரசு குற்றவாளி குல்தீப் சிங்கைக் கைது செய்யவில்லை. காரணம், முதல்வர் ஆதித்யநாத் மட்டுமல்ல, அவரது அரசே தாக்கூர் சாதியைச் சேர்ந்த அதிகாரிகளால் நிரம்பி வழிகிறது என்பதுதான்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் குல்தீப் சிங்கைக் கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்த பிறகும்கூட, மாநில போலீசு அசையவில்லை. மாறாக, உ.பி. மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், சாதிப் பாசத்தோடு, ‘‘குல்தீப் சிங் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என வக்காலத்து வாங்கியதோடு, அந்தக் காமக் கொடூரனை வார்த்தைக்கு வார்த்தை ‘‘மாண்புமிகு” என மதிப்புக் கொடுத்து அழைத்தார்.

இறுதியாக, ஆதித்யநாத் அரசு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, குல்தீப் சிங்கைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியது. அவனைக் கைது செய்வதற்குள், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடி வந்த சுரேந்தர் சிங், எம்.எல்.ஏ.வின் தம்பியாலும் போலீசாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஏற்பட்ட காயங்களால் இரத்தக் கசிவுக்கு ஆளாகி இறந்து போனார்.

குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு, அவன் மீது சிறுமியைப் பாலியல் வல்லுறவு கொண்டது தொடர்பாக போஸ்கோ வழக்குப் பாய்ச்சப்பட்டிருக்கலாம். ஆனாலும், அவன் பா.ஜ.க.-விலிருந்து இதுவரை நீக்கப்படவில்லை. அவனது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படவில்லை.

எந்தவொரு ஆதிக்கசாதியைச் சேர்ந்த தலைவனும் அவனைத் தண்டிக்கக் கோரவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைக் கொலை செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது, பா.ஜ.க.

அப்பெண்ணை நடத்தை கெட்டவளாகச் சித்தரித்து வருகிறார்கள் குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள். உ.பி. பைரியா மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், ‘‘இரண்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்ணைப் போய் யாராவது வன்புணர்வார்களா?” என ஆணாதிக்கத் திமிரோடு அறிக்கைவிடுத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரும் பார்ப்பன சாதிவெறியனுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகை நிருபர்களைக் கேவலமாகச் சித்திரித்து பதிவிட்டதற்கும், சுரேந்திர சிங்கின் திமிருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

பெண்கள் குறித்த இந்து மதவெறிக் கும்பலின் பார்வை ஆணாதிக்கத் திமிரும், வக்கிரமும், பிற்போக்குத்தனமும் நிரம்பியது என்பதைத்தான் உ.பி. சுரேந்திர சிங்கும், தமிழகத்து எஸ்.வி.சேகர், குருமூர்த்தி, எச்ச ராஜா வகையறாக்களும் நிரூபித்து வருகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக யோக்கியன் ஆதித்யநாத் அரசு, பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுவாமி சின்மயானந்தா மீது நடந்துவந்த பாலியல் வல்லுறவு மற்றும் கடத்தல் வழக்கைத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்து, தனது ஆட்சியில் பெண்களின் கதி இதுதான் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திய ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, ‘‘ராம ராஜ்ஜியம் அமைப்போம் என யாத்திரை நடத்துபவர்கள் கூறுவதில் என்ன தவறு காண முடியும்?” என எதிர்கேள்வி எழுப்பியது இந்து மதவெறிக் கும்பல்.

ராம ராஜ்ஜியம் அமைந்தால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல இந்தியப் பெண்களின் கதியே அதோ கதிதான் என்பதை உன்னாவும், கதுவாவும் முன்கூட்டியே எடுத்துக்காட்டுகின்றன.

– குப்பன்
புதிய ஜனநாயகம், மே 2018

வாத்துக்கறி சாப்பிடலாமா ? படக்கட்டுரை

சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் அந்தக் குடிசைகள் கண்ணில் பட்டன. நாலு குச்சியை நட்டு கந்தலான துணிகளால் மூடப்பட்டிருந்தது அக்குடிசை. குடிசையோரம் நூறு நூற்றைம்பது வாத்துகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஏழெட்டு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்தோம். ஞாயிற்றுக்கிழமையென்பதால், அருகாமை பகுதி மக்கள் பலர் வாத்துக்கறி வாங்குவதற்காக வந்திருந்தார்கள்.

புரதச்சத்து மிகுந்த கறி வகைகள் – ஆட்டுக்கறி  ரூ 600, மாட்டுக்கறி ரூ 300, கோழிக்கறி ரூ 150 என சென்னையில விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு வாத்துக்கறியை உறித்துக் கொடுத்தால் அதன் விலை ரூ. 200. கோழிக்கறியை விட சற்று கடினமாக இருப்பதால் ஆட்டுக்கறி வாங்க முடியாதோரும், ஊரில் வாத்துக்கறி சாப்பிட்டு பழகியோரும் இங்கு வாங்க வருகிறார்கள். எனினும் இதை சாப்பிட்டு பழகாதோர் இதன் கவிச்சி மணம் அதிகம் என்று தயங்கக் கூடும். உண்மையில் அது வாத்துக் கறியின் மணம். பழகிவிட்டால் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

பிராய்லர் கோழிகளை தவிர்க்க நினைப்போருக்கு இந்த வாத்துக்கறி ஒரு வரம். அதே போல வாத்து முட்டைகளையும் கறி விரும்பும் நண்பர்கள் அவசியம் வாங்கி உண்ணலாம். கோழி முட்டையை விட அளவில் பெரியதாக இருக்கும் இம்முட்டைகளை அவித்தும், வறுத்தம், ஆம்லேட் போட்டும் சாப்பிடலாம்.

”அண்ணே, வாங்க எத்தனை வாத்து வேணும்? உரிக்காம எடுத்திங்கன்னா 180 ரூபா, உரிச்சிகொடுத்தா 200 ரூபா” மூச்சிறைக்க நம்மை கூவியழைத்தார் அவர்.

”நமக்கு ரெண்டு உருப்படி கொடுப்பா…” நம்மை முந்திக்கொண்டு தமக்கான ஆர்டரை கொடுத்தார், ஒரு வாடிக்கையாளர். வாத்தின் கழுத்தைத் வினாடியில் திருகி தூக்கி போடுகிறார் ஒருவர். அதை லாவகமாக கேட்ச் செய்த படியே, வாத்தின் வெள்ளைநிற இறகுகளை மட்டும் பூப்போல பிடுங்கி கோணியில் போடுகிறார், மற்றொருவர்.

அண்ணே.. எதுக்காக இந்த வெள்ளை இறகு?
ஷட்டில் கார்க் (இறகு பந்து – பேட்மிட்டன் விளையாட்டில் பயன்படும் பந்து) தயாரிக்க, கல்கத்தா போகுது.

ஒரு இறகுக்கு எவ்வளோ கொடுப்பாங்க?
கிலோவுக்கு ரூ.1500லிருந்து 2000 ஆயிரம் ரூபாய் தருவாங்க.

ஒரு நாளைக்கு எத்தனை கிலோ இறகு எடுப்பீங்க?
அட நீங்க ஒன்னு., கால் கிலோவிலிருந்து அரை கிலோ வரைக்கும் சேக்கறதுக்கே, நந்தம்பாக்கம், சோமங்களம்னு கால்கடுக்க ஊர் பூரா சுத்தணும், என்று சலித்துக்கொண்டார், அந்த வடமாநிலத் தொழிலாளி.

வாத்துப்பண்ணை வைத்திருப்பவர்களைத் தேடிச்சென்று கைக்காசை போட்டு இறகுகளை வாங்கி பின்னர் தரம் பிரித்து பெருவியாபாரிகளிடம் விற்பது இவரது தொழில். இவரையும் இவரது பேச்சையும் வைத்து வடமாநிலத் தொழிலாளி என்றே கணிக்க முடியாத அளவுக்கு, இந்தத் தொழிலோடும் மக்களோடும் ஒன்று கலந்திருக்கிறார் இவர்.

வெள்ளை இறகுகள் பிடுங்கப்பட்ட வாத்துக்கள், அடுத்து கொதிக்கும் நீரில் மூழ்கி எடுக்கப்படுகிறது.

எஞ்சியிருக்கும் இறகுகளை நீக்கியபின்னர், மஞ்சள் தடவி வாட்டியெடுக்கிறார்கள். பின், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அவர்களே சிறு சிறு துண்டுகளாக்கியும் கொடுத்து விடுகிறார்கள்.

மொத்தக் குடும்பமுமே, ஆளுக்கொரு வேலை செய்து கொண்டிருந்தது. குடும்பத் தலைவர் குமாரிடம் பேச்சு கொடுத்தோம்.,

”இதே செம்பரம்பாக்கம்தான் சொந்த ஊரு. ஊருக்குள்ள வீடு இருக்கு. வாத்துங்களுக்காக இங்க குடிசை போட்ருக்கோம். இதுங்களுக்கு காவலா இங்கேயே தங்கியாகனும். ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி 500 வாத்துகளுக்கு மேல நாங்களே வச்சிருந்தோம். அப்போல்லாம், தண்ணி எப்போதும் கெடைக்கும். அறுவடை முடிஞ்ச வயல்ல விட்டோம்னா நெல்லு, நத்த, மீனு, தவளன்னு நல்லா தீனியை சாப்பிட்டு கொழுகொழுன்னு இருக்கும். அதெல்லாம் என் அப்பா, தாத்தாவோட முடிஞ்சுபோச்சு. இப்ப எப்படி நிக்குது பாருங்க, கொழுப்பே இல்லாம, வத்தலும் தொத்தலுமா!” என்று வருத்தத்தோடு வாத்துக் கூட்டத்தைக் காட்டினார் குமார்.

அப்போ, இந்த வாத்துங்களையெல்லாம் நீங்க வளர்க்கிறதில்லையா?

”வாத்த மேய்க்கிறதுக்கு வய வரப்பு எங்க இருக்கு? முன்ன மாதிரி, இப்பல்லாம் வாத்த சொந்தமா வளர்க்க முடியுமா? தீனி போட்டுத்தான் சமாளிக்க முடியுமா? அதெல்லாம் ஒருகாலம். ஏதோ வாத்து விக்கிறத பொறுத்து மாசத்துக்கு ஒன்னு ரெண்டு வாட்டி ஆந்திரா இல்லாட்டி கடலுர் போயி லோடு எடுத்து வருவோம். இங்க கொண்டாந்து அத விக்கிற வரைக்கும் ஒரு பத்து பதினஞ்சி நாளு அதுங்கள பாத்துப்போம்.

தோ… இங்கத் தேங்கிக்கிடக்கிற குட்டையில கொஞ்ச நேரம் நனையவுட்டு பட்டியில அடைச்சிருவோம். ஞாயித்துக்கிழமைன்னா சுத்துபட்டு ஊர்லருந்து கூட்டமா வருவாங்க… மத்த நாள்லலாம் ஏதோ ஒன்னு ரெண்டு வாத்துங்க விக்கும். வாத்து ஏத்தியாந்த வண்டிக்கூலி, வாத்துக்கு தீனி செலவுன்னு போக வாத்துக்கு 30 ரூபா கெடக்கிறதே பெரிய விசயம்.”

‘வாத்துக்கறியில் என்ன ஸ்பெஷல்?” வாத்துக்கறி வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்களை வழிமறித்துக் கேட்டோம். ”அட நீங்க வேற, ஆட்டுக்கறி வெல அதிகமுன்னு மாட்டுக்கறி வாங்கினோம், அதுவும் கட்டுப்படியாகாம ப்ராய்லர் வாங்கினோம். இருநூறு ரூபாய்க்கு வாத்துக்கறி கிடைக்கிது, அதான், இப்ப வாத்துக்கறிய வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். ” என்றார் ஒருவர்.

”ஏற்கெனவே, ப்ராய்லருல ஊசி போடுறான், மருந்து அடிக்கிறான்னு சொல்லி பிராய்லர் கோழிக்கறி சாப்டுறதுக்கு மக்கள் யோசிக்கிறாங்க. இதுல, வாத்துக்கறி சாப்ட்டா உடம்புக்கு நல்லது, இது ஸ்பெஷல்னு நீங்க மீடியாவுல போட்டீங்கனா, அதுக்கு ஒரு கூட்டம் வந்துரும். அப்புறம் இந்த விலைக்கும் வாத்து கிடைக்காம போயிடும்.” என்று புன்னகைத்ததும்ப நம்மை வழியனுப்பி வைத்தார், மற்றொரு வாடிக்கையாளர்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

சகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு ! நூலறிமுகம்

ரலாற்றில் ஒரு சில சந்தர்ப்பங்களில் நாம் அடிப்படை ஆதாரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய காலகட்டங்கள் வரும். அப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இன்றைய காலகட்டத்தில் நம்மால் தவிர்க்க முடியாத ஒரு நூலை எழுதியிருக்கிறார், பேராசிரியர்  டி.என்.ஜா. (D.N.Jha)

”பொதுப்புத்திக்கு எதிராக: அடையாளம், சகிப்பின்மை மற்றும் வரலாறு குறித்த குறிப்புகள்” (Against the Grain: Notes on Identity, Intolerance and History) என்ற தனது நூலில் இந்தியாவின் பண்டைய வரலாற்றை அக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்களின் குறிப்புகள், எழுத்துக்கள் மூலம் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் முலம், இன்றைய பாடபுத்தகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகளை உடைக்கிறார்.  

பரிசுத்தமான சகிப்புத்தன்மை, அகிம்சை மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியே பண்டைய இந்தியா இருந்ததாக பல்வேறு அரசியல் துறையினரும் சித்தாந்த வேறுபாடின்றி கூறிவருகின்றனர். வரலாற்று உண்மைகள் குறித்த அக்கறையற்றவர்களுக்கும் அன்று நிலவிய சாதிய, பாலின மற்றும் வர்க்கரீதியிலான ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளை அலட்சியமாகக் கடந்து செல்பவர்களுக்கும் இவ்வாறு பூசி மொழுகப்பட்ட பண்டைய இந்தியா மிகவும் வசதியானதாக இருக்கிறது. கடந்த கால மற்றும் சமகால வரலாற்றின் கடுமையான யதார்த்தத்தைக் குறித்து அவர்கள் கண்டுகொள்வதில்லை

டி.என்.ஜா அவர்களின் ”பொதுப்புத்திக்கு எதிராக” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல், பல்வேறு வரலாற்று உண்மைகளை எவ்வளவு அபாயகரமான அளவிற்கு நாம் மறந்து வருகிறோம் என்பதை சரியான நேரத்தில் நினைவுபடுத்துகிறது. ’பசுப் புதிர்’, ’பாரதமாதா’, ’பண்டைய இந்தியாவில் பார்ப்பனிய சகிப்பின்மை’ உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பல்வேறு பிரச்சினைக்குரிய விசயங்களை எடுத்துரைப்பதன் மூலம் ஒருகாலத்தில் சங்கபரிவாரத்தால் கட்டியமைக்கப்பட்டு, தற்போது பள்ளிக்கூடங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வெகுவாகப் பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகளை உடைத்திருக்கிறார் நூலாசிரியர்.

வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா

பண்டைய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை மறுகட்டமைப்பு செய்வதற்கான முயற்சியில் மார்க்சிய அறிஞரான டி.என்.ஜா. இறங்கியிருக்கிறார். அதற்காக பண்டைக்கால நூல்களை பல பத்தாண்டுகளாக படித்திருக்கிறார். ஆம், இவ்வுலகம் கடந்து வந்த நீண்ட பாதையின் வரலாற்றை வெளிக் கொணரும் இத்தகைய கடுமையான பணிகளுக்கு குறுக்கு வழிகள் வேறு எதுவும் கிடையாது.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் அறிஞர்கள் பல நூல்களை ஆய்ந்து, அதிலிருந்து பெற்ற கண்டுபிடிப்புகளை தொல்பொருளியல், கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் ஆதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் பல பத்தாண்டுகள் செலவிடுகின்றனர். அத்தகைய அறிவுத்திறனை வரலாற்றுக்கு புறம்பானவை என்றோ, அரசியல் வேட்கையைத் தணிப்பதற்கான சுவாரசியமான முழக்கங்கள் என்றோ வெறுமனே வெட்டிச் சுருக்கிவிட முடியாது.

இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் சாரமானது, கலாச்சார தேசியத்தின் நம்பிக்கையாளர்களின் ’பெரும்பான்மைவாதத்தை’ ஆதரிக்கும் கருத்துக்களுக்கு நேர்மாறானதாக இருக்கிறது. அகிம்சை, மத நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகங்களின் மீதான சகிப்புத்தன்மை என இந்தியாவின் ‘வளமான கலாச்சாரம்’ குறித்து ஓதப்படும் சுயதுதி தம்பட்டங்களுக்கு நேரெதிராக, பண்டைய நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார் டி.என்.ஜா.

சில அறிஞர்கள் பண்டைய இந்தியாவில் பல்வேறு மதப்பிரிவுகளுக்கு மத்தியிலான பரஸ்பர இணக்கம் இருந்ததாகக் காட்டுவதற்கு குறிப்பிடும் சில உதாரணங்களை, தனது நூலில் ”பண்டைய இந்தியாவில் பார்ப்பனிய சகிப்பின்மை” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாயத்தில் உற்று நோக்குகிறார். கிபி ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் வேத எதிர்ப்பு மதமான பௌத்த மதத்தின் நிறுவனரான புத்தர், பல்வேறு புராணங்களிலும் விஷ்ணுவின் அவதாரமாக காட்டப்படுகிறார். 11-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தசாவதார சரித்திரம் மற்றும் 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கீதா கோவிந்தம் போன்ற நூல்களிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதையும் டி.என்.ஜா நோக்குகிறார்.

பண்டைய இந்தியாவைக் குறித்த இத்தகைய ஓர் இனிமையான பிம்பத்தை டி.என்.ஜா மறுக்கிறார். இந்தியா சமயங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்ற கருத்தாக்கத்தை குறுக்கு விசாரணை செய்ய போதுமான எதிர் ஆதாரங்கள் இன்னுமும் இருக்கின்றன என்கிறார். இது குறித்து மேலும் கூறுகையில் ”வெவ்வேறு பார்ப்பனப் பிரிவுகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதற்கு நம்மிடம் எக்கச்சக்கமான ஆதாரங்கள் உள்ளன. அது மட்டுமல்லாது, பண்டைய இந்தியாவில் இருந்த வேறுபட்ட இரு மதங்களான புத்த மதம் மற்றும் சமண மதத்தின்பாலும் அவர்கள் கடுமையான விரோதம் கொண்டிருந்தனர்” என்கிறார்.

ஒவ்வொரு வகுப்புவாத, மதவாத வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகும் அரசியல்வாதிகளால் வழக்கமாக விடப்படும் வாய்ஜாலங்களுக்கு நேர் முரணாக, பண்டைய இந்தியா குறித்த டி.என்.ஜா-வின் மறுகட்டமைப்பு அமைந்துள்ளது. இந்நூல், மதங்களுக்கிடையிலான மோதல் நிலைமைகளும், வன்முறைகளும் பண்டையகாலத்திலிருந்தே இந்திய கலாச்சாரத்தில் ஊடாடி இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியா முழுவதும் முசுலீம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் சமகால கும்பல் வன்முறை கலாச்சாரம் என்பது ஏதோ ஒரு தடப்பிறழ்வு அல்ல. எப்போதுமே காட்சியிலிருக்கும் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளின் பெரும் வடிவம்தான் அது.

கூன் பாண்டியனால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு.

புத்த, சமண மதங்களுக்கு எதிரான வசைகள் அடிக்கடி கடுமையான வன்முறை நடவடிக்கைகளாக மாற்றப்பட்டன என்பதை குறிப்பிடுகிறார் டி.என்.ஜா. ஹுனா ஆட்சியாளனான மிஹிரகுலா என்ற சிவபக்தன், 1600 புத்த ஸ்தூபிகள் மற்றும் மடங்களை அழித்ததோடு ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகளையும் பாமரர்களையும் கொன்றதை, 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த யுவான் சுவாங் எழுதியிருப்பதை உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார்.  ஆனால் இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் கலாச்சாரத்தை, முசுலீம் வருகையின் பண்பாக்குவதையே ஆதிக்க அரசியல் பிரச்சாரம் விரும்பியது. இந்தியக் கலாச்சாரத்தின் உயர்ந்த தன்மையை, அமைதி மற்றும் சகிப்புத் தன்மையின் கலாச்சாரமாக நிறுவ சமூக அறிவியல் நூல்களை மாற்றும் முயற்சிகள் தற்போது விடாப்பிடியாக மேற்கொள்ளப்படுகின்றன. மாறாக, தீவிரத்தன்மையும் சகிப்பின்மையும் இசுலாத்தின் குணமாகக் காட்டப்படுகின்றன.

இந்த தளத்தில்தான் டி.என்.ஜா-வின் ஆய்வு கேள்வி எழுப்புகிறது. ”ஸ்ரமணியத்தைப் பின்பற்றியவர்கள் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுத்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும், பார்ப்பனப் பிரிவினர், பிற மதத்தினர் மீது சகிப்புத்தன்மையோடு இருந்ததாகச் சொல்லப்படுவதால் அவர்கள் வன்முறையற்றவர்கள் என்ற கருத்தே நீடித்து வருகிறது. ஆனால், இதற்கு முரணாக மத்திய காலங்களிலும் அதன் பின்னரும் அவர்கள் மதச் சண்டைகளைத் தூண்டுவதிலும், வகுப்புவாத வன்முறைகளைப் தூண்டுவதிலும் முன்னணி பாத்திரம் வகித்ததாகத் தெரிகிறது” என்கிறார் டி.என்.ஜா.

இந்தியா குறித்து ஆய்வு செய்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக அறிஞர் அல்பெருனி, பார்ப்பன மதத்தினர் குறித்துக் கூறுகையில் அவர்கள், ”இருமாப்புடையவர்களாகவும், முட்டாள்தனமான தற்பெருமையும், கர்வமும் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் மதத்தைப் போன்று வேறு மதம் எதுவும் இல்லை என நினைக்கின்றனர்” என்று எழுதியிருக்கிறார்.

மிஹிரகுலா

விரிவான தளத்தில் பார்க்கையில், அமைதி மற்றும் அகிம்சையை வலியுறுத்தும் மதங்கள் உட்பட அனைத்து மதங்களும் வன்முறையின் கூறுகளைத் தமக்குள் கொண்டுள்ளன என்பதை இந்நூலின் ஒர் பகுதி எடுத்துக் காட்டுகிறது. அகிம்சையினை தழுவிக் கொண்டவர்களான புத்த பிட்சுகளின் வன்முறையை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுவோம். அவர்களின் வன்முறைப் பட்டியலில் உள்ள சமகாலத்திய நாடுகளில் இலங்கையும் பர்மாவும் உண்டு.

பண்டைய இந்தியாவிலும் கூட பௌத்தர்களும் சமணர்களும், பார்ப்பன நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் எதிராக பதிலடி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் “புத்தரும் கூட மூன்று வேதங்களையும், ’முட்டாள்தனமான பேச்சுகள்’ என்றும் ’நீரில்லாத பாலைவனம்’ என்றும் அவர்களது மெய்யறிவை ‘வழியற்ற வனம்’ என்றும் ‘நரகம்’ என்றும் விவரித்தார்” என்று டி.என்.ஜா குறிப்பிடுகிறார் .

மத மேலாதிக்கத்துக்கான உந்துதல் என்பது ஏதேனும் ஒரு மதத்திற்கு  மட்டும் குறிப்பான விசயமல்ல. டி.என்.ஜா-வின் இந்த நூல் அனைத்து மதங்களும் மேலாதிக்கத்துக்கான இந்தப் போரில் ஈடுபட்டிருந்தன என்பதை எடுத்துரைக்கிறது. குறிப்பான வரலாற்றுக் காலகட்டங்களில் குறிப்பான அமைப்புகளால் முன்வைக்கப்படும் சவால்களுக்கு ஒருவர் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் டி.என்.ஜா.

– தி வயர் இணையதளத்தில் அதன் மேலாண்மை ஆசிரியர் மொனொபினா குப்தா எழுதிய நூலறிமுகத்தின் தமிழாக்கம்.

வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876

கர்நாடகம் : விலையா ? கொலையா ? கருத்துப்படம்

கர்நாடகத் தேர்தல் முடிவு ! பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவாரம் கெடு !

கருத்துப்படம் : வேலன்

“பா.ஜ.க.-வுக்குத் தேவைப்படுபவர்கள் வெகு சில எம்.எல்.ஏக்கள்தான் என்பதாலும், “விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை என்பதனாலும் எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது உறுதியாக கூறவியலாது. சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.”

கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …

இணையுங்கள்:

No : 1 அடிமை ஓ.பி.எஸ். ! கருத்துப்படம்

1

தென்னிந்தியாவிற்குள் நுழையும் பா.ஜ.க.-விற்கு வாழ்த்துக்கள்.

-ஓ.பன்னீர்செல்வம்

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்: