Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 582

மதுரவாயல் – மீஞ்சூர் டாஸ்மாக் முற்றுகை – வீடியோ

2

 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் முற்றுகை – போலிஸ் தாக்குதல் வீடியோ:

சென்னை மதுரவாயில் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தில் போலிசின் தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே எட்டு தோழர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள். இந்த வீடியோவில் அந்தப் போராட்டத்தின் முழுமையான காட்சிகள் இடம்பெறுகின்றது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் நடந்த இந்த போராட்டத்தை இவ்வளவு பெரிய தாக்குதலுடன் ஒடுக்கிய போலிசின் நோக்கத்திலிருந்து பாசிச ஜெயா அரசின் டாஸ்மாக் வெறியைப் புரிந்து கொள்ளலாம்.

———————————————————————-

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் – நாப்பாளையம் டாஸ்மாக் முற்றுகை போராட்டம்!

சென்னை மதுரவாயிலைப் போலவே மீஞ்சூரில் நடந்த போராட்டத்தையும் போலிசு கொடூரமாக தாக்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அனைத்து குடும்பங்களும் டாஸ்மாக்கிற்கு ஆண்களை பலி கொடுத்திருக்கின்றன. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குறிப்பாக பெண்கள் தமது அனுபவங்களை யதார்த்தமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களை கலைத்து விட்டு அச்சுறுத்தும் பணியினை உள்ளூர் அ.தி.மு.கவினர் செய்கின்றனர். அப்படி ஒரு அ.தி.மு.க பிரமுகரின் நேர்காணலும் வீடியோவில் உள்ளது. இந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்யச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்களை தடுக்கும் போலிசின் காட்சிகளும் உள்ளன. முக்கியமாக டாஸ்மாக் மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களை போலிசு மிரட்டுகிறது.

கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?

26
டெல்லி போக்குவரத்து நெரிசல்: தானியங்கி வாகனங்களின் ‘வளர்ச்சியால்’ ஏற்பட்ட நெருக்கடி

“மனித மூளை தற்போதுள்ள அளவிற்குப் பெரிதாக வளர்ச்சி அடைவதை நடத்தல், ஓடுதல், உழைப்பு ஆகியவைதான் தூண்டியிருக்கின்றன” என்று கூறினார் பிரடெரிக் எங்கெல்ஸ். பின்னாளில் பரிணாம உயிரியல் விஞ்ஞானி டானியேல் லிபர்மேன் இதனை உறுதி செய்தார். இன்றோ காரில் அமர்ந்திருத்தல் என்பதையே ஒரு செயல்பாடாக ஆக்கியிருக்கிறது முதலாளித்துவம். இது இன்றைய முதலாளித்துவத்தைச் சித்தரிக்கும் பொருத்தமானதொரு உருவகம்.

கார் என்பது முதலாளித்துவத்தின் இதயத்தோடு இணைந்தது. அது மிகப்பெரிய ஒரு தொழில் துறை மட்டுமல்ல, மூலதனத் திரட்சிக்கான மிக முக்கியமானதொரு ஆதாரம். அதே நேரத்தில் நமது வாழ்க்கையையும் சூழலையும் அது முற்று முழுதாகச் சிதைத்திருக்கிறது.

டெல்லி போக்குவரத்து நெரிசல்
டெல்லி போக்குவரத்து நெரிசல்: தானியங்கி வாகனங்களின் ‘வளர்ச்சியால்’ ஏற்பட்ட நெருக்கடி

நமது சமூகத்தின் எளிய ஒரு மனிதன் காரினால், அதன் ஒலியால் அவமானப்படுத்தப்படுகிறான், புகையால் தாக்கப்படுகிறான், நெட்டித்தள்ளி ஒதுக்கப்படுகிறான், ஆதிக்கம் செய்யப்படுகின்றான், கடைசியாகக் கொல்லவும் படுகிறான். சாலை என்பது இன்றைக்கு ஜனநாயகமே இல்லாத ஒரு பிரதேசமாக ஆகியிருக்கிறது.

முதலாளித்துவ கலாச்சாரம் ‘வேகத்தை’ப் போற்றுகிறது. ஃபெராரி மற்றும் ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களின் வேகத்தை கிரிக்கெட் நட்சத்திரங்களான தோனியும் டெண்டுல்கரும் கொண்டாடுகிறார்கள். வேகமாகப் பறக்கும் கார்கள், முன்னேற்றத்தின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சாலையில் வேகத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் யாரும் முன்னேற்றத்தின் தடைக்கற்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இத்தகைய அதிவேகத்தை சமாளிக்கும் ஆற்றலைப் பரிணாம வளர்ச்சியானது மனிதனுக்கு வழங்கவில்லை என்ற அறிவியல் உண்மையை வேக வெறியர்கள் மறந்து விடுகிறார்கள். அதி வேகம் என்பது மனிதக் கண்ணின் பார்க்கும் ஆற்றலை முடக்குகிறது என்ற உண்மையை பிரபல நரம்பியல் விஞ்ஞானி வி.எஸ்.ராமச்சந்திரனும், ஆர்.எல்.கிரெகோரியும் நிறுவியிருக்கிறார்கள்.

வேகமாக கார் ஓட்டுதல் ஒரு வகை ஆதிக்க மனோபாவத்தையும், போட்டி போடும் வெறியையும், சமூக விரோத உணர்வுகளையும் ஓட்டுனருக்குத் தோற்றுவிக்கிறது. “சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் குழந்தைகளையும் சைக்கிளோட்டிகளையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய புழு பூச்சிகளாகக் கருதி வெறுக்கும்படி காரின் அதிவேக எஞ்சின் அதன் ஓட்டுனரைச் சிந்திக்கத் தூண்டவில்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் அறிஞர் அடோனோ.

புதுவகையான நில அபகரிப்பு
பொதுப் பாதை-இடங்களை ஆக்கிரமித்திருக்கும் தனியார் வாகனங்கள்: புதுவகையான நில அபகரிப்பு

கார்களை வைத்து வளர்ச்சியை மதிப்பிடும் பார்வை வலதுசாரி அரசியலுக்கே உரியது. “25 வயதான பின்னரும் ஒரு கார்கூட வாங்க முடியாத இளைஞன் தோற்றுப்போனவன் என்றே நாம் மதிப்பிடவேண்டும்” என்றார் மார்கரெட் தாட்சர். வேகம்- பாசிசம்- கார் ஆகியவற்றுக்கு இடையே ஒரு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கிறது. அமெரிக்க தொழிலதிபர் ஃபோர்டும் ஹிட்லரும் ஒருவரை ஒருவர் பெரிதும் விரும்பினர். ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமையில் பல ஆண்டு காலம் இருந்த மாக்ஸ் மோஸ்லி வெளிப்படையான பாசிச ஆதரவாளர். அவருடைய தந்தை நாடறிந்த பிரிட்டிஷ் பாசிஸ்ட்.

கார்களுக்கான விளம்பரங்கள் ஆண்மை, அதிகாரம், பாலியல் ஆதிக்கம் சார்ந்த பிம்பங்களைத் தொடர்ந்து தோற்றுவிக்கின்றன. கார் முதலாளிகளின் குழுமம், ஏழை எளிய மனிதர்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், முற்போக்கான அரசியல் கருத்துக்களையும் எப்போதுமே வெறுப்புடனும் பகையுணர்ச்சியுடனும்தான் பார்க்கிறது. அமெரிக்காவைப் பற்றிக் கூறும்போது, “அங்கே பாதசாரிகள் நாய்களைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்கிறார் பிரஞ்சு மெய்யறிவாளர் ழான் பொதிலேர்.

ஷாஜி புருஷோத்தமன்
குடித்துவிட்டுப் பேய் வேகத்தில் காரை ஓட்டிச் சென்று, சென்னை-எழும்பூரில் நடைபாதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனைக் கொன்று போட்ட ஷாஜி புருஷோத்தமனைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசு. (கோப்புப் படம்)

எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கா நடத்தும் போர்கள், மதவெறிக் குழுக்களை உருவாக்கும் அதன் நடவடிக்கைகள், இராணுவவாதம், வெறித்தனம் போன்ற உலக மேலாதிக்க நடவடிக்கைகளுக்கும் எஸ்.யு.வி. (ஸ்கார்ப்பியோ போன்ற கார்கள்) எனப்படும் வாகனங்களுக்கும் இடையிலான உளவியல் ரீதியான உறவினை அறிஞர்கள் பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தியச் சாலைகளில் இன்று நடந்து கொண்டிருக்கும் வர்க்கப்போரில், விலை உயர்ந்த கார்களில் குடிபோதையில் வெறித்தனமாக வண்டி ஓட்டும் பணக்கார இளைஞர்கள்தான் கொலைகாரர்கள். இந்தப் போரில் பலியாகிறவர்களோ பெரும்பாலும் ஏழை மக்கள். இப்படிப் பணக்கார இளைஞர்களால் பாதசாரிகளும் நடைபாதைவாசிகளும் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல. சல்மான்கான் வழக்கு, நந்தா வழக்கு, கார்ட்டர் சாலையில் 7 நடைபாதைவாசிகள் கொல்லப்பட்ட வழக்கு – இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டும்தான். கார் என்ற வாகனமும் பணக்காரர்களின் கிரிமினல்தனமும் ஒட்டிப்பிறந்த இரட்டைகள் போலும்!

பிரெஞ்சு இயக்குநர் கோடார்டு, “வீக் எண்ட்” என்ற தனது திரைப்படத்தில், போக்குவரத்து நெரிசலை முதலாளித்தவத்தின் தோல்விக்கான குறியீடாகச் சித்தரிக்கிறார். முதலாளித்துவ நுகர்வியச் சமூகத்தின் அழிவுப் பார்வையை அந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது.

போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக மென்மேலும் அதிகமான சாலைகளை அமைப்பதென்பது தீயை அணைக்க எண்ணெய் வார்ப்பதைப் போன்ற அறிவீனம். இருப்பினும் மேலை நாடுகளின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, இந்தியாவும் சீனாவும் அவர்கள் சென்ற அதே அழிவுப்பாதையில்தான் செல்கின்றன.

உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு நமது நாட்டின் சாலைகளில் ஏழைகள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். பாலியல் குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்று நாம் கூறுகிறோம். ஆனால், அதைப் போல பத்துமடங்கு குழந்தைகள் வெறித்தனமாக விரையும் மோட்டார் வாகனங்களால் கொல்லப்படுகிறார்கள். 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,40,000 பேர் மோட்டார் வாகனங்களுக்குப் பலியாகியிருக்கிறார்கள். உலகிலேயே இதுதான் மிகவும் அதிகம். சாலை விபத்துகள் மேலை நாடுகளில் குறைந்து வருகின்றன. நமது நாட்டிலோ இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ரோஸா பார்க்ஸ்
அமெரிக்காவில் பொதுப் பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட வெள்ளை நிறவெறியை எதிர்த்துக் குரல் கொடுத்து ஒரு பெரும் சமூக மாற்றத்தைத் தொடங்கி வைத்த ரோஸா பார்க்ஸ். (கோப்புப் படம்)

பொதுப் போக்குவரத்துக்கான முதலீடு குறையக்குறைய மக்கள் உயிரற்ற சரக்குகளைப் போலப் பந்தாடப்படுகிறார்கள். 1953-இல் கொல்கத்தாவில் ஒரு போராட்டம் நடந்தது. டிராம் வண்டிகளின் கட்டணம் ஒரு பைசா உயர்த்தப்பட்டதற்கு எதிராக ஒரு மாத காலம் இடதுசாரிக் கட்சிகள் அன்று போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தின. துப்பாக்கிச் சூட்டில் சிலர் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போராட்டத்தின் விளைவாக, டிராம் சேவையை நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனி கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டியதாயிற்று. அன்று இந்தப் போராட்டத்தின் தலைவர்களுள் ஜோதிபாசுவும் ஒருவர். பின்னாளில் அவர்தான் டாடாவின் நானோ கார் திட்டத்தை ஆதரித்தார்.

அறிவுபூர்வமான போக்குவரத்து கொள்கை என்பது நகர்ப்புறத் திட்டமிடலின் ஒரு அங்கமாகும். தொழிலாளர்களின் குடியிருப்புகள் அவர்களது தொழிலகங்களுக்கு அருகாமையில் இருப்பதுதான், நகர்ப்புற நிலங்களைச் சமூகரீதியில் நியாயமான முறையில் பயன்படுத்தும் கொள்கையாகும். இதுதான் தொழிலாளிகள் பயணம் செய்வதற்கான தேவையை இல்லாமல் ஆக்கும்; அல்லது குறைக்கும். ஒரு பயணம் என்பதற்கு சமூகக் கண்ணோட்டத்தில் ஏதேனும் நோக்கம் இருக்க வேண்டும்.

இன்று பணக்காரர்கள்தான் தமது தொழிலகங்களுக்கு அருகில் வசிப்பது போன்ற சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்திய ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டிட ஊழல் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மும்பையின் கஃபே பரேடு என்ற மிக மையமான பகுதியில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருக்கிறது. இதற்கான நிலம், மும்பை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நிலையத்துக்குச் சொந்தமானது. பணக்காரர்களுக்கான ஆடம்பரக் குடியிருப்புக்கு அது தாரை வார்க்கப்பட்டுவிட்டது.

2012-ம் ஆண்டில் டில்லியில் ஒரு தனியார் பேருந்துக்குள் நடந்த வல்லுறவும் கொலையும் (நிர்பயா படுகொலை) வெளிப்படுத்திய மிக முக்கியமான உண்மை என்ன? நகரங்களில் பாதுகாப்பான, எளிதான பொதுப்போக்குவரத்து வசதி இல்லை என்பதுதான் அது. ஆனால், நிர்பயா பிரச்சினை குறித்த விவாதம் முழுவதும் “குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் வேண்டும்” என்ற வரம்புக்குள் நிறுத்தப்பட்டு விட்டது.

டெல்லியின் பரந்த ஆளரவமற்ற குடியிருப்புப் பகுதிகளும், விரிவடைந்து செல்லும் புறநகர்ப் பகுதிகளும், திரும்பிய இடங்களிலெல்லாம் பெருகியிருக்கும் மதுபானக்கடைகளும் மோட்டார் வாகனம் சார்ந்த வன்முறைக்கான களத்தை ஏற்படுத்தி தருகின்றன. வல்லுறவுக் குற்றங்களுக்குத் தேவையான தனிமையையும், தப்பிச் செல்வதற்கான வாய்ப்பையும் குற்றவாளிகளுக்கு வழங்குகின்ற அபாயகரமான களங்களாக கார்கள் மாறி வருகின்றன. உலகிலேயே அதிகமான விபத்துகள் நடக்கின்ற, விபத்துகளின் தலைநகரமாகவும் டெல்லி இருக்கிறது.

சாலைகள், பாலங்கள் போன்ற உள் கட்டுமானங்களை நிறுவுவதற்கான செலவுகள் உள்ளிட்டுப் பல்வேறு வகைகளிலும் கார்களுக்காக தமது வரிப்பணத்தை அளிப்பவர்கள் சாதாரண மக்கள்தான். காரை நிறுத்துவதற்கான இடத்துக்காகக்கூட பணக்காரர்கள் தம் பணத்தை அவிழ்ப்பதில்லை. மக்களின் வரிப்பணத்தை வைத்துத்தான் பல மாடி கார் பார்க்கிங் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. பணக்காரர்கள்தான் நகர்ப்புறச் சாலைகளின் ஓரமாக தங்களது காரை நிறுத்தி, மென்மேலும் அதிகமான இடத்தை ஆக்கிரமிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தப் பணக்காரர்கள்தான் இவர்களைக் காட்டிலும் பன்மடங்கு குறைவான இடத்தைப் பயன்படுத்தும் நடைபாதை வியாபாரிகளையும், குடிசைவாசிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

“மோட்டார் வாகனங்கள் அமெரிக்காவைக் கைப்பற்றியது எப்படி? அதை நாம் திரும்பப் பெறுவது எப்படி?”- இது ஜேன் ஹோல்ட்ஸ் கே என்பவர் எழுதிய அற்புதமான ஒரு நூலின் தலைப்பு. இது இந்தியாவுக்கு அப்படியே பொருந்தும். நம்முடைய நகரங்களையும் நம்முடைய வாழ்க்கையையும் இந்த கார் கலாச்சாரம் விழுங்கி அழிப்பதற்கு முன்னதாக, நாம் நமது சாலைகளையும் வாழ்க்கையையும் மீட்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் ஆட்டோமொபைல் முதலாளிகள் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு அமெரிக்க மக்களைக் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை வாரியிரைத்து ஊடகங்களையும் கல்வியாளர்களையும் விலைக்கு வாங்கி, அவர்களைத் தமது கூலிப்படையாக்கிக் கொண்டார்கள். நமது அன்றாட வாழ்வை அச்சுறுத்தி இடையூறு செய்யும் கார் என்ற வாகனம் நவீனத்தின் அடையாளமாக மாற்றப்பட்டது இப்படித்தான்.

நியூயார்க் நகரில் கார் ஓட்டுனர்கள் காரை நடைபாதையின் மீது ஏற்றினாலும், பாதசாரிகளைக் கொன்றாலும் அந்த மாநகரப் போலீசு ஓட்டுனர்கள் மீது வழக்கு போடுவதில்லை. “வெர்சோ புக்ஸ்” என்ற பிரபல நூல் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜேக்கப் ஸ்டீவன்ஸின் மனைவி 2011-இல் கார் மோதி இறந்தார். இந்த மரணம் குறித்து மிகவும் அலட்சியமான முறையில், ஒப்புக்கு விசாரணை நடத்திய நியூயார்க் மாநகரப் போலீசுக்கு எதிராக ஜேக்கப் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வெகு நீண்ட காலமாக கார் கலாச்சாரத்துக்கு ஆட்பட்டிருந்த முன்னேறிய நாடுகளிலேயே இன்று கார்களுக்கு எதிரான கலாச்சாரம் தோன்றி வருவதைக் காண முடிகிறது. மோட்டார் வாகனங்கள் இன்னமும் அங்கே ஆதிக்கம் செலுத்திய போதிலும், கார்மயமாக்கம் என்ற முட்டாள்தனம் தோற்றுவித்த பிரச்சினைகளின் காரணமாகவும், பொதுக்கருத்தின் வலிமை காரணமாகவும் சைக்கிளோட்டிகளுக்கு சாலையில் உரிய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும், பாதசாரிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயமும் முன்னேறிய நாடுகளிலேயே ஏற்பட்டிருக்கிறது.

பிரேசில் நாட்டிலும் கூட கார்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சாவ் போலோ நகரில் சைக்கிளோட்டி ஒருவரின் மீது மோதிய கார், அவரது கையைப் பிய்த்தெறிந்து விட்டது. இந்தச் சம்பவம் கார்களின் ஆதிக்கத்துக்கு எதிரான பொதுக்கருத்தைப் பெருமளவில் தோற்றுவித்தது. அதன் விளைவாக, அந்த நகர் முழுதும் உள்ள சாலைகளில் சைக்கிள்களுக்கென அற்புதமான தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் நியூயார்க்கிலும் கார்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சைக்கிளோட்டிகள் போர்க்குணமிக்க முறையில் போராடுகிறார்கள். நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் அரசின் ஆதரவின்றி, மக்களே ஒரு சைக்கிள் புரட்சியை தோற்றுவித்திருக்கிறார்கள்.

“வலிமை குன்றிய மக்களின் ஆயுதம்” என்ற நூலின் ஆசிரியரான ஜேம்ஸ் ஸ்காட், எதிர்ப்புகள் இல்லையென்றால் ஆதிக்கம் எப்படி வேர் விட்டு விடுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் கூறுகிறார். எந்த வாகனமும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்ததாம் ஒரு சாலை. இருந்த போதிலும் அந்த சாலையைக் கடக்க விரும்பிய சிலர் பாதசாரிகள் கடப்பதற்கான பச்சை விளக்கு எரிவதற்காக அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆதிக்கத்துக்கு பணிதல் என்பது ஆழ்மனதில் பதிந்து விடுவதை இந்த எடுத்துக்காட்டின் மூலம் விளக்கி, பாதசாரிகள் இத்தகைய ஜனநாயக விரோதமான கட்டுப்பாடுகளை ஆரவாரமின்றி மீறவேண்டும் என்கிறார் ஸ்காட். அப்படிப்பட்ட சின்னச் சின்ன எதிர்ப்புகள் இல்லாமல், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பெரிய போராட்டத்துக்கு நாம் ஒருபோதும் தயாராக மாட்டோம் என்று அவர் கூறுகிறார்.

சாலைகளில் பாதசாரிகளுக்கு கூடுதல் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே வலுத்து வருகிறது. நகரச் சாலைகளில் சரிபாதியாவது பாதசாரிகளுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்கிறார் கொலம்பியத் தலைநகர் பகோடாவின் மேயர் என்ரிக் பெனெலோசா.

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ச்சூழலின் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், தனியார் தானியங்கி வாகனங்களுக்கு எதிராக வர்க்கப் பார்வையிலான ஒரு எதிர்ப்பை நாம் உடனே தொடங்கியாக வேண்டும் என்கிறது கார்களும் முதலாளித்துவமும் என்ற நூல். தானியங்கி வாகனங்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகரிப்பது என்பது முதலாளித்துவத்துடன் பிரிக்க முடியாத வண்ணம் பிணைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள். கார்ப்பரேட் மோசடிகள், அரசியல் சதிகள், இலஞ்சம், ஊடகங்களை விலைபேசுதல், நிறவெறி, கல்வித்துறை ஊழல், ஏழை நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகள், இரகசிய இராணுவங்கள், சுற்றுச்சூழல் பேரழிவு, போர் ஆகிய அனைத்தும் தனியார் தானியங்கி வாகனங்களுடன், குறிப்பாக கார்களுடன் இணைந்திருக்கிறது. எனவே கார்களின் ஆதிக்கத்தை நாம் எதிர்க்கிறோம் என்றால், முதலாளித்துவத்துக்கு நாம் சவால் விடுகிறோம் என்றே பொருள்.

“நடத்தல் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை” என்றான் கவிஞன் வேர்ட்ஸ்வொர்த். உண்மைதான். நடை என்பது அரசியல் எதிர்ப்பின் சிறந்த வடிவமாக அமைய இயலும். 17, 18, 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய புரட்சிகளெல்லாம் இலண்டன், பாரிஸ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களின் வீதிகளில் நடந்தவைதான்.

அதேபோல, பொதுப்போக்குவரத்து என்பதும் எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் நடத்துவதற்கான மிக முக்கியமான களமாகும். கருப்பின மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் பேருந்துகளில் தனித்தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில், ரோஸா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண், “வெள்ளைக்காரனுக்காகத் தனது இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது” என்று எதிர்ப்புக்குரல் எழுப்பினாள். இந்தச் சிறு பொறிதான் நிறவெறிக்கு எதிரான சிவில் உரிமை இயக்கம் எனும் தீயை அமெரிக்காவில் பற்ற வைத்தது.

வீதிகள் வாழத்தக்கவையாக மாற்றப்பட வேண்டும். தோழமைக்கும் கூடிப்பழகுவதற்குமான களமாக வீதிகள் இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக அவை அப்படித்தான் இருந்தன. வீதிகள் நம்முடையவை. அவற்றை நாம் மீட்டெடுத்தாக வேண்டும்.

***

வித்யாதர் ததே, மூத்த பத்திரிகையாளர். பருவநிலை மாற்றத்தின் சகாப்தத்தில் போக்குவரத்து – நடை, சைக்கிள், பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை – என்ற நூலின் ஆசிரியர். ரூபே இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் இவரது கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் இது.
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?

19

ரு வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே தீர்ப்பைக் கூறும் விந்தையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம். தரம், தகுதி என்ற மோசடியான வாதங்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டும், தனியார் கல்வி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை குறித்து முதலைக் கண்ணீர் வடித்தும் “விசாரணைக்கு முன்பே தீர்ப்பு” என்ற இந்த முறைகேடைத் தமது கட்டளையில் புகுத்தியுள்ளனர்,உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

நீதிபதி அனில் ஆர்.தவே
பொது நுழைவுத் தேர்வு குறித்த மறுசீராய்வு மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் முன்பாகவே, அத்தேர்வை உடனடியாக இந்த ஆண்டு தொடங்கியே நடத்துமாறு முறைகேடாக உத்தரவிட்ட அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி அனில் ஆர்.தவே

பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test) நடத்தும் அறிவிக்கையை கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு கூட்டணி அரசு வெளியிட்டது. இதற்கு எதிராகத் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகளும், வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வழக்கு தொடுத்தன. அப்பொழுது இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்; இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இத்தேர்வை நடத்துவதற்கான அதிகாரம் கிடையாது” எனப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்து, மைய அரசின் அறிவிக்கைக்குத் தடைவிதித்தது. நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும், விக்கிரமஜித் சென்னும் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும்; நீதிபதி அனில் ஆர்.தவே இத்தேர்வை ஆதரித்தும் தீர்ப்புக் கூறியிருந்தனர்.

தேர்வைத் தடை செய்த பெரும்பான்மை தீர்ப்புக்கு எதிராக காங்கிரசு கூட்டணி அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை காங்கிரசு கூட்டணி அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பின் வந்த பா.ஜ.க. கூட்டணி அரசும் அம்மனுவைத் திரும்பப் பெறவில்லை. தகுதித் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர்.தவே தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விடம் இச்சீராய்வு மனு பரிசீலனைக்கு வைக்கப்பட, அவ்வமர்வு இம்மனுவை விசாரணைக்கு அனுமதித்த கையோடு, தகுதித் தேர்வுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து, தகுதித் தேர்வை நடத்தும் அனுமதியையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு வழங்கி உத்தரவிட்டது.

உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்
நாடெங்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது மாநில அரசுகள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையைப் பறிப்பதாகும் எனக் குறிப்பிட்டு, தேசிய தகுதி-நுழைவுத் தேர்வுக்குத் தடை விதித்த உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்

இந்த ஆண்டு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தும் வாய்ப்பில்லை எனத் தமிழக ஆட்சியாளர்கள் நொண்டிச் சமாதானம் கூறிக் கொண்டிருந்த வேளையில், சங்கல்பம் என்ற தன்னார்வ அமைப்பு, “நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் மைய அரசு அத்தேர்வை நடத்தாமல் மெத்தனம் காட்டுவதாக”க் கொளுத்திப் போட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவையும், நுழைவுத் தேர்வு உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு, உ.பி., தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரி சங்கமும் தாக்கல் செய்த மனுக்களையும் விசாரித்த உச்சநீதி மன்றம், நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே இரண்டு கட்டங்களாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

எந்த வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அந்த விசாரணையின் முடிவில்தான் தீர்ப்பு வழங்குவது நீதியான, சட்டரீதியான நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கையோடு, நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தவறு, நுழைவுத் தேர்வு தொடர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டு, வழக்கை பிறகு விசாரிக்கிறோம் எனக் கூறியிருப்பது வலிந்து திணிக்கப்பட்டுள்ள முறைகேடு, கயமைத்தனம்.

“தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பு அவசரகதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு” என விமர்சித்துள்ள அரசியல் சாசன அமர்வு, விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே தகுதித் தேர்வை நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கான காரணத்தைக் கூற மறுத்துவிட்டது. காரணமே கூறாமல் ஜெயாவிற்குப் பிணை வழங்கியதைப் போல, காரணமே கூறாமல் தகுதித் தேர்வுக்கு அனுமதி வழங்கி கட்டப் பஞ்சாயத்தைச் செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். ஆதிக்க சாதி, மேல்தட்டு நலன் சார்ந்த வழக்குகளில் உச்சநீதி மன்றம் சட்டரீதியான நடைமுறைகளைக் கடாசிவிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதற்கு இந்த வழக்கு இன்னுமொரு உதாரணம்.

* * *

நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும் விக்கிரமஜித் சென்னும் பொது நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், “சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமையைத் தகுதித் தேர்வு ரத்து செய்துவிடும்” என வாதிட்டபொழுது, “தகுதித் தேர்வு மருத்துவக் கல்விக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் காணப்படும் ஊழலை ஒழிக்கும்” என நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேசியத் தகுதி–நுழைவுத் தேர்வை நடத்த அனுமதித்த உச்சநீதி மன்ற உத்தரவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புதுச்சேரியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

“பொது நுழைவுத் தேர்வு கவர்ச்சிகரமானது என்றாலும், அது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே காணப்படும் பிளவை, தகுதி என்ற பெயரில் மேலும் ஆழப்படுத்தும்” என அல்தாமஸ் கபீர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டபொழுது, “சாதி, மதம், இனம், பாலினம், சமூக ஏற்றத்தாழ்வுகள் என எந்தவொரு சலுகைக்கும் இடம் கொடுக்காமல், தகுதியான மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார், அனில் ஆர்.தவே.

தகுதித் தேர்வு குறித்த முந்தைய வழக்கில் நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்த கருத்துக்களை, அவர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக ஏற்றுக் கொண்டு, தகுதித் தேர்வு நடத்துவதற்கு அனுமதி அளித்துவிட்டு, இச்சீராய்வு மனுவை உச்சநீதி மன்றத்தின் வேறொரு அமர்வு விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் எனக் கூறியிருக்கிறது. இது, “மாப்பிள்ள அவருதான், ஆனா, சட்ட என்னுது” என்ற நகைச்சுவையைத்தான் நினைவுபடுத்துகிறது.

“மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இனி ஏகப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இனி தகுதியும் திறமையும் மட்டும்தான் அளவுகோலாக இருக்கும்” என்ற நியாய வாதங்களை முன்வைத்து இத்தீர்ப்புக்குப் பட்டுக்குஞ்சம் கட்டப்படுகிறது.

இட ஒதுக்கீடு காரணமாகத்தான் தகுதி, திறமை வாய்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டதை ஆதரித்த பார்ப்பன-ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கக் கும்பல், இப்பொழுது கட்டணக் கொள்ளை என்ற தீமையை ஒழிக்கப் பொது நுழைவுத் தேர்வு என்ற இன்னொரு தீமையைச் சமூகத்தின் மேல் திணிக்கிறது. வியாபம் ஊழல் சந்தி சிரித்த பிறகும், பொது நுழைவுத் தேர்வு மருத்துவக் கல்வியில் காணப்படும் ஊழலை, கொள்ளையை ஒழித்துவிடும் எனப் பேசுவபவர்கள் ஒன்று, கற்பனையில் மிதக்கும் கேணையர்களாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், மோசடிப் பேர்வழிகளாகத்தான் இருக்க முடியும்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிப்பதற்குக் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஊழலும் கொள்ளையும் தலைவிரித்தாடுவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில்தான் காரணம் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, இப்பிரச்சினையை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு. சில ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் தேசாய் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது ஊழல் பேர்வழிகளின் கூடாரம் என்பதை அம்பலப்படுத்திக் காட்டியது. இந்நிலையில் தேசிய தகுதி-பொது நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் உச்சநீதி மன்றம் ஒப்படைத்திருப்பது திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுத்திருப்பதற்கு ஒப்பானது.

* * *

மிழகம் உள்ளிட்டு மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் மைய அரசுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடங்கள் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் நடத்திவரும் பொதுநுழைவுத் தேர்வு மூலம் இட ஒதுக்கீடு இன்றி நிரப்பப்படும் நடைமுறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இப்பொழுது உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்களையும் மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும்.

இதனாலும், பொது நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்படுவதாலும் தமிழக மாணவர்களுக்குத் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது இனி குதிரைக் கொம்புதான். தமிழகத்திலுள்ள ரயில்வே உள்ளிட்ட மைய அரசு அலுவலங்களில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் திணிக்கப்படுவதைப் போன்ற நிலை தமிழக மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படும். ரயில்வே ரிசர்வேஷன் கவுண்டர்களில் இந்தி தெரியாத பயணிகள் திண்டாடுவதைப் போல், இந்தி தெரியாத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் திண்டாடும் நிலைமையும் உருவாகக்கூடும்.

இது மட்டுமின்றி, தமிழ் அல்லது தாய்மொழி வழியில் மாநிலப் பாடத் திட்டங்களைப் பயிலும் ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இருந்துவந்த கொஞ்சநெஞ்ச வாய்ப்பும் முற்றிலுமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தனியார் கல்வி மோகத்தில் ஏற்கெனவே சிக்கிக் கொண்டுள்ள பெற்றோர்கள், மாணவர்களிடம் தாய்மொழி வழிக் கல்வி, மாநிலப் பாடத் திட்டம் ஆகியவையெல்லாம் இனி கதைக்கு உதவாது என்ற நஞ்சை உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு இன்னும் ஆழமாகப் பாய்ச்சுகிறது.

neet-politics-5தமிழக அரசின் விதிகளின்படி இளங்கலை பொது மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முற்பட்ட, பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களும்; மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும்; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களையும் பிளஸ் டூ தேர்வில் எடுத்திருக்க வேண்டும். பொது நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வரும்பொழுது இந்த விதி செல்லாக்காசாகிவிடும்.

உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொதுநுழைவுத் தேர்வை எழுதுவதற்கு இக்குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 65 சதவீதம் என்றும்; மற்றவர்களுக்கு 75 சதவீதம் என்றும் அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பெண்கள்கூட பொது நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க மட்டும்தான். மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தர வரிசை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான குறுக்குவழியில் நுழைவுத் தேர்வை முழுமையான தகுதித் தேர்வாக மாற்றிவிட்டது, உச்சநீதி மன்றம்.

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டபொழுது, மாணவர்களைத் தரவரிசைப்படுத்துவதற்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு, பிளஸ் டூவில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. 2007-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, பிளஸ் டூவில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தால் தற்பொழுது நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வில் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.

இந்த நடைமுறையை முற்றாகக் கைகழுவிவிட்டதன் மூலம், பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ படிப்பை இரண்டாம்பட்சமாக மாற்றி, பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்குத் தனியார் பயிற்சிப் பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் வகுப்புகளை முதல் இடத்திற்குக் கொண்டுவந்துவிட்டது, உச்சநீதி மன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கொள்ளையைத் தடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு பொது நுழைவுத் தேர்வைத் திணிக்கும் உச்சநீதி மன்றம், அதன் வழியே தனியார் பயிற்சிப் பள்ளிகளின் கொள்ளையைத் தேசியமயமாக்கியிருக்கிறது.

சமச்சீர் கல்வியால்தான் தமிழகப் பள்ளிக் கல்வியின் தரமே பாழ்பட்டுவிட்டதாக வீண்பழிபோட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு மாறுவதன் மூலம் அல்லது மருத்துவக் கல்வி தகுதித் தேர்வுக்கு ஏற்ப நாங்கள் எக்ஸ்ட்ரா பாடங்களை நடத்துகிறோம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளையை அதிகப்படுத்தத் துணிவார்கள். மருத்துவக் கல்வி மயக்கத்தில் கிடக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கப் பெற்றோர் இந்த வலையில் சிக்க வைக்கப்படுவார்கள். உச்சநீதி மன்றம் அனுமதித்துள்ள தகுதித் தேர்வு இப்படி புதுப்புது வழிகளில் தனியார் பள்ளி முதலாளிகளும், தனியார் பயிற்சிப் பள்ளிகளும் கொள்ளையடிப்பதற்கான வாசல்களைத் திறந்துவிடுமே தவிர, கட்டணக் கொள்ளையை ஒழிப்பதற்குப் பயன்படப் போவதில்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவக் கல்வியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. மேலும், முசுலீம்களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் இட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இச்சமூக உரிமையெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இட ஒதுக்கீடை உடனடியாகக் கைவிட ஆளுங்கும்பல் தயாராக இல்லையென்றாலும், பத்தாயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி ஆங்கில வழிப் பள்ளிகளிலும், தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் படித்தால்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடைப் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் சலுகையாக மாற்றிவிடும்.

தனியார்மயம்-தாராளமயத்திற்குப் பிறகு மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து, அவற்றை முனிசிபாலிட்டி ஆபீசைப் போல மாற்றும் சதித் திட்டத்தைப் படிப்படியாக அரங்கேற்றி வருகிறது, மைய அரசு. மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறித்து, நாடெங்கும் ஒரேமாதிரியான பொது சரக்கு சேவை வரியைக் கொண்டுவருவது, மாநில அரசுகளின் மோட்டார் வாகனச் சட்டம், சாலை வரிச் சட்டங்களைப் பறித்து ஓட்டுநர் உரிமம் வழங்குதை மையப்படுத்துவது என்ற வரிசையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை உரிமையும் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

உயர் கல்வித் திட்டத்திலும், மாணவர் சேர்க்கையிலும் மூக்கை நுழைப்பதன் பின்னே, இட ஒதுக்கீடு, மாநில அரசுகளின் பாடத் திட்டங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கமும் மறைந்திருக்கிறது. எம்.பி.,பி.எஸ்., மாணவர் சேர்க்கையில் இதுகாறும் நடைமுறையில் இருந்து வந்த அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகள், சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு ஒழித்துக் கட்டப்பட்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமை பறிப்பு, மாநில பாடத் திட்டங்கள் ஒழிப்பு, இட ஒதுக்கீடு ஒழிப்பு இவற்றின் வழியாக “ஏக இந்தியா” என்ற தனது பார்ப்பன-பாசிச நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முனைகிறது, காங்கிரசு, பா.ஜ.க. பின்னுள்ள ஆளுங்கும்பல். தரம், தகுதி, கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என்ற மயக்கு வார்த்தைகளைக் காட்டி அறிமுகப்படுத்தப்படும் தேசிய தகுதி-நுழைவுத் தேர்வின் பின்னே மறைந்துள்ள தீய நோக்கங்கள் இவைதான்.

– திப்பு
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

தந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி !

13

pandey

தேர்தல் முடிவில் பாசிச ஜெயாவின் கன்டெய்னர் வெற்றி குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இங்கே அந்த வெற்றியை தந்தி டி.வி பாண்டே கொண்டாடுவதில் உள்ள அழுகுணி ஆட்டத்தை மட்டும் பார்ப்போம்.

சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். அநேர்மைக்கு புகழ்பெற்ற பாண்டே இந்த கணிப்பு நேர்மையாகவும், நடுநிலைமையுடனும் எடுக்கப்பட்டதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

சில நாட்களுக்கு முன்பாக நாளொன்றுக்கு பத்து தொகுதி வீதமும் பின்பு ஐ.பி.எல் ஃபைனல் நெருங்க நெருங்க இருபது முப்பது என்று விறு விறுப்பை கூட்டியது தந்தி டி.வி. அந்த நாட்களில் என்.ஜி.வோ கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு தொகுதியிலும் கடந்த கால வரலாறு, வாக்களிக்கும் பாணி, நிரந்தர பிரச்சினைகள், கட்சி சார்பு, சாதி, மதம் போன்ற சமூக பிரிவுகள், ஆளும் கட்சி குறித்த பார்வை, அந்தந்த வட்டார பிரச்சினைகள் என்று யோகேந்திர யாதவ் போலவே பொளந்து கட்டினார்.

இங்கே ஒரு உண்மையை பதிவு செய்வோம். தம்பி அருண் கிருஷ்ணமூர்த்தி, தந்தி பாண்டே போல முட்டாள்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மடக்கும் புத்திசாலியான முட்டாளோ, உளறுவாயரோ, கத்துபவரோ இல்லை. கண்டிப்பாக தான் சொல்வது முழு உண்மைதான் என்று நம்பவைக்ககூடிய ‘புத்திசாலி’தான். ஒரு முதலாளித்துவக் கல்வியின் அதிகபட்ச சாத்தியங்களோடு கொட்டிக் கிடக்கும் விவரங்களை பல்வேறு காம்பினேஷ்ன்களில் கூட்டிக் கழித்து வகுத்து பெருக்கி குறைந்த பட்சமாக கூட மக்களின் வாக்களிக்கும் திசையை யூகித்து சொல்லமுடியும் என்பதற்கேற்ப அவர் முயற்சி செய்கிறார். எனினும் இதை ஏதோ கணித சூத்திரம் போல மக்களின் மனங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டும் என்பதல்ல. அதனால்தான் இதை குறைந்த பட்சம் என்கிறோம்.

அநீதிகளை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய ‘நீதியாக’ முன்வைப்பது பாண்டேயின் உத்தி என்றால் அதே ‘நீதியை’ சமூகப் பொருளாதார விவரங்களாக மாற்றுவது அருண் கிருஷ்ணமூர்த்தியின் உத்தி.

இதில் அருண் கிருஷ்ணமூர்த்தி தொகுதி வாரியாக விளக்கமளிக்கும் போது குறிப்பிட்ட தொகுதியின் வெற்றி தோல்வி குறித்த பாண்டேவின் குறுக்கீடு அ.தி.மு.கவின் சாணக்கியத்தனமாகவோ இல்லை தி.மு.கவின் பரிதாபமான நிலையாகவோ புரிந்து கொள்ளலாமா என்று இருக்கும். ஆனால் அருண் கிருஷ்ணமூர்த்தி அப்படி விளக்குவதில்லை. அதே நேரம் முதலாளியான பாண்டேவின் மனம் புண்படக்கூடாது என்பதால் தலையாட்டிக் கொண்டு அமைதியாகி விடுகிறார். மேலும் இதில் அவர் சமரசமாக நடந்து கொள்வதில்லை பாண்டே போலவே நடந்து கொள்கிறார் என்பதை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. இதுதான் வேறுபாடு.

தந்தி டி.வி-யின் கருத்துக் கணிப்பு துல்லியமாக வெற்றி பெற்றிருப்பதாக இலையடிமை புதிய தலைமுறை மாலன் பாண்டேவுக்கு பாராட்டு மழை பொழிகிறார். ஆங்கில ஊடகங்கள் அஞ்சிய தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பை தைரியமாக ஏற்றுக் கொண்டு சரியாக கணித்திருப்பதாக தந்தி டி.வி பாண்டே மற்றும் அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களின் குழுவினருக்கு மாலன் பாராட்டுவது ஒரு அறிவுத் துறை சாதனையை பார்த்து வியந்து அல்ல. சாமர்த்தியமாக அ.தி.மு.க வெற்றியை கணித்திருக்கும் அந்த ‘திறமை’ மாலனது சொந்த மகிழ்ச்சிக்குரியது.

இனி இந்த கருத்துக் கணிப்பின் மோசடிக்கு வருவோம்.

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் என இருமுனைப் போட்டிதான் பிரதானம் என்பதை அறிவதற்கு பெரிய அறிவு தேவையில்லை. மூன்றாவது அணி அ.தி.மு.கவின் பி டீம் என்பதாலாயே தந்தி புதிய தலைமுறை, குமுதம், தினமணி, தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் புரட்சி அண்ணிக்கு பெரிய கவரேஜ் கொடுத்தன. அடுத்து ஆளும் கட்சியை எதிர்த்து இங்கே எதிர்க்கட்சிகளோ இல்லை எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை வைத்து  ஆளும் கட்சியோ கூட்டணி அமைக்கவில்லை என்பதாலும் இங்கே அ.தி.மு.கவுக்கு ஆதாயம் என்பதை அறிவதற்கு பெரிய அல்லது சிறிய அறிவு தேவையில்லை.

விஜயகாந்தின் முடிவுக்கு தி.மு.க காத்திருந்ததைப் போலவே ஜெயலலிதாவும் காத்திருந்தார். தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டணிக்கு போனதால் தி.மு.கவுக்கு கிடைத்த பாதகத்தை விட அ.தி.மு.கிற்கு கிடைத்த சாதகம் அதிகம். இந்நிலையில் தொகுதிகளுக்கு போகிறார் அருண் கிருஷ்ணமூர்த்தி.

போனவர் மேற்கண்டவாறு அந்தந்த தொகுதிகளின் சமூக, பொருளாதார நிலைமைகளை அலசி ஆராய்கிறார். அந்த அலசலை தொகுத்து யாருக்கு வெற்றி, தோல்வி, இழுபறியா என்று முன்வைக்கிறார். இதுதான் நிரூபணமாயிருக்கிறது என்று பாண்டேவும், அருணும் குதுகலிக்கிறார்கள். எனினும் அ.தி.மு.கதான் அசுரப் பெரும்பான்மை பெறும் என்று அவர்கள் சொல்லவில்லை. அ.தி.மு.கவிற்கு  மார்ஜின் பெரும்பான்மை  எனுமளவுக்கு இடங்கள், தி.மு.கவிற்கு பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்கள், மீதி இழுபறி என்று நின்றார்கள்.

இதுவரை பார்த்த விசயங்கள் ஜெயலலிதாவுக்கும் தெரியும். இதற்கு மேல் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான விசயம் – அதன் அளவை ஜெயலலிதா மட்டும்தான் முடிவு செய்தார். அது பணம். எந்தெந்த தொகுதி பலவீனம், அவைகளுக்கு எவ்வளவு பணம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு எவ்வளவு பணம், இது போக அந்தந்த தொகுதிகளின் அமைச்சர் வேட்பாளர்கள் அள்ளி விடும் பணம் – இவை குறித்து நமது மேதகு அருண் கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவே இல்லை. இவையெல்லாம் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தாதா யுவர் ஆனார்?

தேர்தல் அரசியல் தமது வாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதைப் போலவே தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற கண நேர வேலைக்கு பணத்தை வைத்து முடிவு செய்வதும் மக்களிடையே நிலைபெற்றுவிட்டது. அ.தி.மு.க அளவு இல்லாவிட்டாலும் தி.மு.கவிலும் வேட்பாளர்களைப் பொறுத்து பணம் வினியோகித்ததாக நக்கீரன் இதழே தெரிவிக்கிறது. அ.தி.மு.க மையப்படுத்தப்பட்ட அளவின் பண வினியோகத்தை செய்திருக்கிறது. தி.மு.க அப்படி செய்யவில்லை என்றாலும் அந்தந்த வேட்பாளர்கள் அவர்களது வசதிகளுக்கேற்ப அதை ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

இதனால் தமிழக மக்கள் அனைவரும் பணத்திற்கு சோரம் போனார்கள் என்பதல்ல. 78% வாக்குகளில் முப்பது முதல் முப்பந்தைந்து சதவீதம் வரை வெற்றிக்கு போதுமானது. அதிலும் மும்முனை நாற்முனைப் போட்டி என்றால் வெற்றி சதவீதம் இன்னும் குறையும். இந்நிலையில் வெற்றி தோல்வியின் இடைவெளி என்பது 1 முதல் ஐந்து சதவீதம் என்றால் மொத்த தொகுதி மக்களில் அதாவது வாக்களிப்போரில் அதிகபட்சம் 20 சதவீதம் பேருக்கு பணம் கொடுத்தால் போதுமானது. அடுத்து இந்த பணத்தை அந்தந்த தொகுதிகளில் எந்தந்த பொருளாதார பிரிவினர், சாதியினர், ஆண், பெண் என்று முடிவு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரங்களின் படி அ.தி.மு.க மற்றும் தி.மு.கவின் வாக்கு வித்தியாசம் மூன்றிலிருந்து நான்கு சதவீதங்களுக்குள் இருக்கிறது.

தி.மு.க-விற்கு 38 என்ற அளவிலும், அ.தி.மு.க-விற்கு 42 என்ற அளவிலும் வாக்கு சதவீதம்  இருப்பதால் மீதம் இருபது சதவீதம் மற்ற கட்சிகளுக்கு போய்விட்ட படியால் வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த நான்கு சதவீத வாக்குகளையும் உள்ளடக்கி இருபது சதவீத வாக்குகளுக்கு குறி வைத்தால் போதும். அ.தி.மு.கவைப் பொறுத்த வரை இது முப்பதாகவும் இருக்கும். இத்தகைய நாற்முனைப் போட்டியில் சிதறும் வாக்குகளால் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு குறைந்தால் அது வெற்றியைக் குறிவைத்து வீசப்படும் பணத்தின் இலக்கை கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாகவே இருக்கும். ஆகவே பணம்தான் இந்த வெற்றியின் அடிப்படை என்பது வெள்ளிடை மலை.

அடுத்து அம்மா ஆட்சி நடைபெறும் காலத்தில், அம்மாவின் தேர்தல் ஆணையமே நீதிபதியாக இருக்கும் நேரத்தில் அ.தி.மு.கவினர் இதை திட்டமிட்டும், வெளிப்படையாகவும் செய்திருக்கிறார்கள். தி.மு.கவினரோ கொஞ்சம் பயந்து பயந்து செய்திருக்கிறார்கள். இது போக பல கிராமங்களில் மக்களே முடிவு செய்து ஊர் பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் மொத்தமாக வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் தடுக்க நினைத்த தி.மு.கவினரை விரட்டியும் இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இந்த உண்மைகளை நேரடி அறிக்கையாக தருகிறோம்.

இப்போது அருண் கிருஷ்ணமூர்த்தி தனது ஆய்வுகளில் இந்த அம்சத்தை புறக்கணித்திருப்பார் என்றா கருதுகிறீர்கள்? நிச்சயம் இல்லை. இல்லை பாண்டேவுக்கு இது தெரியாதா என்ன? இன்னும் சொல்லப் போனால் தந்தி நிர்வாகம் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதால் மன்னிக்கவும் அடிமையாக இருப்பதால் இந்த பண வினியோகம் எவ்வளவு இருக்கும், எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புள்ளிவிவரங்களாகவே வந்து கொட்டியிருக்கவும் கூடும்.

ஆக மேற்கண்ட சமூக நிலைமைகளை ஆய்வும் செய்யும் அறிஞர் அருண் கிருஷ்ணமூர்த்தி இந்த வைட்டமின் ப குறித்தும் நிச்சயம் ஆய்வு செய்திருப்பார். ஒரு வேளை இந்த வைட்டமின் ஊழலுக்கு மக்கள் எவ்வளவு பலியாகியிருப்பார்கள் அல்லது மாட்டார்கள் என்று ஒரு குழப்பம் வரலாம். நல்லது, நேரடி விசாரிப்பில் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர்களிடம் இது குறித்து கேட்டால் முடிந்தது விசயம். இது போக பொதுவான அரசியல் சூழலிலேய ஊடகங்கள், நீதிமன்றம், போலீசு என அனைத்தும் ஊழல்மயமாக மாறியிருக்கும் போது மக்களில் கணிசமான பேரும் பணத்தை வைத்து ஓட்டுப் போடமாட்டார்கள் என்று முடிவு செய்யும் நிலைமை தமிழகத்தில் இல்லை. பாம்பின் கால் பாம்பறியும் போது பாண்டேவுக்கு மட்டும் தெரியாதா என்ன?

தற்போதைய நிலவரப்படி தி.மு.க நூறையும், அ.தி.மு.க நூற்றி முப்பதையும் எட்டி விட்டிருக்கிறது. இதன்படி அ.தி.மு.க பணத்தை அள்ளி வீசிய அளவிற்கு வெற்றி கிடைக்க வில்லை என்பதும் நிச்சயம். இதனால்தான் பாண்டே அருண் குழுவினர் கருத்துக் கணிப்பின் போது கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கிரிமினாலாஜியில் தோய்ந்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள்! அதே நேரம் பணம் வாங்காத மக்களும் அரசியல் ஆய்வுகளோடு வாக்களிக்கிறார்கள் என்றால் அதுவும் அப்படி முழுமையாக நடப்பதில்லை.

சென்னையில் ஐ.டி நண்பர்களிடம் விசாரித்த போது படித்தவர்கள் வாக்களிக்கும் கதையைக் கேட்டால் மயக்கமே வரும். ஒரு நண்பர் குழு சீமானுக்கு வாக்களிப்பாதாக கூறினார்கள். சீமானின் கொள்கை என்ன என்று கேட்டால் தெரியவில்லை ஆனார் புதியவர் என்றார்கள். இறுதியில் தேர்தல் அன்று ஒரு நண்பரின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் வாக்களிக்க இயலாது என்றார்கள். தரைத்தள வீடும் பொருட்களும் முழுகியவர் ஒருவர் இரட்டை இலைக்கு வாக்களித்தார். ஏனென்றால் எல்லாத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு வாக்களித்துத்தான் பழக்கம் என்றார். தி.மு.கவிற்கு வாக்களித்தாக சொன்னவர் சிலரும் இதையே கூறினார்கள். அதாவது இவையெல்லாம் ஒரு பழக்கம். இவை விடுத்து கொள்கை அடிப்படையில் வாக்களிப்போரின் சதவீதம் ஐந்து முதல் பத்திற்குள் இருந்தால் மிக அதிகம்.

சாரமாகப் பார்த்தால் நமது மக்கள், தேர்தலை கொள்கை, அரசியல், மாற்றம், பொருளாதாரம், உரிமை, ஜனநாயகம் போன்றவற்றில் இருந்து பார்த்து அலசி வாக்களிப்பதில்லை. கற்பனையாக அப்படி ஒரு நிலை வந்தால் கருத்துக் கணிப்புகள் இப்போது போல சுலபமாக நடத்த முடியாது. எனவே ஏழைகளாகவும், அரசியல் தற்குறிகளாவும், அடிமைகளாவும் வாழும் தமிழக மக்களிடம் பணம் எனும் காரணம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதறிய நாசா விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை.

தந்தி டி.விக்காக கருத்துக் கணிப்பு எடுத்த அருண் கிருஷ்ணமூர்த்தி தமிழக மக்களிடம் பணம் குறிப்பாக அ.தி.மு.க பணம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துவிட்டு அதிலிருந்து முடிவுகள் எடுத்துக் கொண்டே தனது மதிப்பீட்டை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் விளக்கமளிக்கும் போது வைட்டமின் ப வை பேசாமல் வேட்பாளர் பலம், சாதி, மதம், பொருளாதாரம் போன்ற டீசன்டான விசயங்களை முன்வைத்தார். கள்ளச்சிரிப்புடன் அதை ஆமோதிக்கும் பாண்டேவுக்கும் தெரியும் – பணம்தான் ரிசல்ட் என்று!

பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!

2

னாமா நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற தரகு நிறுவனத்தின் ஆவணங்கள் மூலம் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய கருப்புப்பணப் பட்டியல் வெளியாகி உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஹெச்.எஸ்.பி.சி. ஜெனிவா வங்கியில் 1,100 இந்தியர்கள் குவித்துள்ள கருப்புப்பண விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. அப்போது அது “ஜெனிவா லீக்ஸ்” எனப்பட்டது. இப்போது “பனாமா லீக்ஸ்” வெளிவந்துள்ளது.

panama-leaks-2இந்த தகவல்களில் உலகின் 140 அரசியல் தலைவர்கள், கணக்கற்ற பெருமுதலாளிகள், வர்த்தகச் சூதாடிகள், சினிமா- விளையாட்டு பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த 500 கருப்புப்பணப் பேர்வழிகள் இப்பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ள போதிலும், நடிகர் அமிதாப்பச்சன், அவரது மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எஃப். நிறுவனத்தின் அதிபர் கே.பி.சிங், அதானி நிறுவனத்தின் அதிபர் வினோத் அதானி ஆகிய நான்கு பேரின் பெயர்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.

இது மட்டுமல்ல, தேசபக்தியின் அடையாளமாகச் சித்தரிக்கப்படும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் இத்தகைய கருப்புபணப் பேர்வழிகள்தான் என்பதும் பனாமா லீக்ஸ் வழியாகக் கசிந்துள்ளது. டெல்லியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட அந்நிய ஆயுத விற்பனை நிறுவனங்களின் கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த கம்பெனிகள் பனாமாவிலுள்ள இடைத்தரகு நிறுவனங்களின் மூலமாகவே ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான தரகு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய இராணுவத்துக்கு 1996-இல் ராடார் கருவி, லேசர் கதிர்களை முன்னறிவிக்கும் கருவி மற்றும் ஏவுகணை எச்சரிக்கை கருவி முதலானவற்றை விற்றுள்ள இத்தாலியைச் சேர்ந்த “எலக்ட்ரானிக்கா எஸ்.பி.ஏ.” என்ற நிறுவனம், இந்திய இராணுவத்தின் மின்னணு உளவுக் கருவிகள் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றது. இதற்காக பனாமாவில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களான “இன்டர் டிரேட் எண்டர்பிரைசஸ்”, “இன்டர் டிரேட் ப்ராஜக்ட் கன்சல்டண்ட் லிமிடெட்” ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு – 2002 முதல் 2004 வரையிலான ஆண்டுகளில் – காங்கிரசு மற்றும் பா.ஜ.க. ஆட்சிக் காலங்களில் 17 சதவீதம் வரை கமிசன் கொடுத்துள்ள விவகாரம் பனாமா லீக்ஸ் வழியாகக் கசிந்துள்ளது.

முன்பு ஜெனிவா லீக்ஸ் விவகாரம் அம்பலமானபோது, வெளிநாடுகளில் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க வக்கற்ற ஆட்சி என்று அப்போதைய மன்மோகன் ஆட்சியை இந்துவெறி பா.ஜ.க. வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்” என்று சவடால் அடித்தார் பா.ஜ.க.வின் ராஜ்நாத் சிங். “அப்படிக் கொண்டுவரப்படும் கருப்புப் பணத்திலிருந்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் பணத்தைப் போடுவோம்” என்று தேர்தல் வாக்குறுதியும் அளித்தது பா.ஜ.க.

panama-leaks-5ஊழலோடு, கருப்புப்பண விவகாரத்தையும் தேர்தலில் முக்கியத் துருப்புச் சீட்டாக வைத்து ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல் இன்றுவரை வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசைக்கூட மீட்டுவரவில்லை. அது மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரித் தடுப்பு முறை காரணமாக வெளிநாடுகளில் கருப்புப்பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; கருப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால், சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் முதலீட்டு மதிப்பைக் குறைத்துவிடும் என்று உச்சநீதி மன்றத்தில் மோடி அரசு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்து அந்தர் பல்டியடித்தது.

அதன் பிறகு, “கருப்புப்பணத்தை மீட்பதற்கு ஏற்ப சட்டத் திருத்தங்களை மேற்கொள்வோம்” என்று நாடாளுமன்றத்தில் சவடால் அடித்த மோடி கும்பல், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தைக் (பி.எம்.எல்.ஏ.) கொண்டு வந்தது. இச்சட்டப்படி, கருப்புப்பணப் பேர்வழிகள் தாமாக முன்வந்து ஒப்புதல் அளிக்க 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், 638 பேர் மட்டுமே தம்மிடம் ரூ. 3,330 கோடி உள்ளதாக ஒப்புக் கொண்டனர். அவர்களின் பெயர்களைக்கூட வெளியிட மறுத்த மோடி அரசு, அந்தத் தொகைக்கு 30 சதவீத வரி, 30 சதவீத அபராதம் செலுத்த டிசம்பர் 31, 2015 வரை அவகாசம் அளித்தது. ஆனாலும் இந்தச் சட்டமும் திட்டமும் ஆமை வேகத்தில் கூட நகரவில்லை. கருப்புப்பண மீட்பு நாடகமாடிய இந்தப் பச்சையான அயோக்கியப் பேர்வழிகள்தான், இப்போது பனாமா லீக்ஸ் வெளியானதும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம் என்று மீண்டும் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

***

மெரிக்காவின் வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேசக் கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalists) என்ற அமைப்பானது, பனாமா நாட்டில் இயங்கிவரும் சட்ட மற்றும் தரகு வேலைக்கான மொசாக் பொன்சேகா என்ற ஒரு லெட்டர் பேட் நிறுவனம் 1977 முதல் 2015 டிசம்பர் வரை செய்துள்ள தரகு வேலைகள் பற்றிய தகவல்களை – கணினி மொழியில் 2.6 டெரா பைட்டுகள் அளவுக்கு 11.5 மில்லியன் தகவல்களை இரகசியமாகத் திரட்டி, ஜெர்மானிய ஊடகத்துக்கு அனுப்பி, பின்னர் உலகின் பார்வைக்குக் கசியவிட்டுள்ளது. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் இந்த இதழியலாளர்கள் கூட்டியக்கத்தில் இணைந்துள்ளது. ஒரேயொரு மொசாக் பொன்சேகா என்ற லெட்டர்பேடு நிறுவனத்தில் மட்டும் இத்தனை திருடர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்றால், இன்னும் இதுபோல உலகிலுள்ள 90-க்கும் மேற்பட்ட வரி ஏய்ப்புச் சொர்க்கங்களில் எத்தனை கோடி திருடர்கள் ஒளிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

panama-leaks-3மொசாக் பொன்சேகா நிறுவனத்திடமிருந்து தகவல்களைத் திரட்டியுள்ள இதழியலாளர்கள் கூட்டியக்கத்தை உருவாக்கி, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்காவிலுள்ள “பொதுத்துறை நேர்மைக்கான நிலையம்” என்றழைக்கப்படும் தன்னார்வ நிறுவனமாகும். இந்த நிறுவனம், அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுத்து முரண்படும் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், சிரிய அதிபர் அல் அசாத் ஆகியோரைக் குறிவைத்தே பனாமா லீக்ஸ் விவகாரத்தைக் கசியவிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய உலகின் அரசியல் தலைவர்களையும் கருப்புப்பணப் பேர்வழிகளையும் திட்டமிட்டே மூடிமறைத்துள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற நாடுகளின் கருப்புப்பணப் பேர்வழிகளைப் பற்றிய ஒருசில தகவல்களும் இதனூடாகத்தான் கசிந்துள்ளன.

வரி ஏய்ப்பு சொர்க்கம் என்றழைக்கப்படும் பனாமா நாடு, வட மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கும் வால் போன்ற பகுதியிலுள்ள சின்னஞ்சிறிய நாடு. கருப்புப்பண முதலாளிகளுக்குச் சேவை செய்துவரும் பனாமாவிலுள்ள மொசாக் பொன்சேகா நிறுவனம், பனாமாவில் ஒரு பெயர்ப்பலகை நிறுவனத்தைத் தொடங்கிக் கொடுக்கும். இந்த நிறுவனத்தின் மூலம் கருப்புப்பணப் பேர்வழிகள் தமது பணப் பரிவர்த்தனைகளை, வர்த்தக நடவடிக்கைகளைத் திரைமறைவாகச் செய்து கொள்ள முடியும். பல்வேறு வளரும் நாடுகளின் அரசுத்துறை ஒப்பந்தங்களைக் கைப்பற்றுவதற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட போலி கம்பெனிகளின் வழியாகத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இலஞ்சப் பணத்தைக் கைமாற்றுகின்றன. இதுபோல ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களை வைத்துக் கொண்டு பொன்சேகா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்ட கருப்புப்பண சேவை நிறுவனங்கள் பனாமாவில் இயங்கி வருகின்றன.

இந்தக் கருப்புப்பணம் கண்ணிமைக்கும் நேரத்தில் உலகின் பல நாடுகளுக்கும் முதலீடுகளாக வெள்ளமெனப் பாய்கிறது. அது மட்டுமின்றி, ஏகாதிபத்தியங்களின் பதிலிப் போர்களுக்கும், நிறவெறி -இனவெறித் தாக்குதல்களுக்கும், பாசிச கும்பல்களுக்கும் போதை மருந்து கடத்தலுக்கும் ஆயுத விற்பனைக்கும் இந்தக் கருப்புப்பணம் பயன்படுத்தப்படுகின்றன. 2015-ஆம் ஆண்டின் கணக்குப்படி, உலகப் பெருமுதலாளிகளின் செல்வத்தில் மூன்றிலொரு பங்குத் தொகையானது – ஏறத்தாழ 7.6 லட்சம் கோடி டாலர் பெறுமதியான நிதிச் செல்வமானது இத்தகைய வரிஏய்ப்பு சொர்க்க நாடுகளில் குவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் கருப்புணம் திரைமறைவாக ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், தனியார்மயம் – தாராளமயம் என்னும் திறந்த பொருளாதாரம் திணிக்கப்பட்ட பிறகு வரிஏய்ப்பும் கருப்புப்பணமும் மெல்ல மெல்ல சட்ட பூர்வமானதாகி வருகின்றன. தாராளமய – உலகமயமாக்கலுக்குப் பிறகு உலக முதலாளித்துவத்தின் விதிகளுக்கு ஏற்பவும், நிதிநிறுவனங்களின் கட்டளைக்கு ஏற்பவும் இந்தியாவில் அந்நிய முதலீட்டுக்கு ஏற்ப பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அந்நியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பங்கேற்புப் பத்திரம் (Participatory Note) என்ற வழிமுறையின் மூலம் இந்தியாவில் பங்குச்சந்தை முறைப்படுத்தல் நிறுவனமான செபி (குஉஆஐ)யில் தங்களுடைய அடையாளத்தை வெளியிடாமலேயே, பங்குச் சந்தையில் அந்நிய நிதி நிறுவன முதலீடு என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளான கருப்புப்பணப் பேர்வழிகள் முதலீடு செய்ய முடியும். பங்குச் சந்தையில் சூதாடி வருவாய் ஈட்ட முடியும்.

இத்தகைய வழிமுறைகளில் அந்நிய முதலீடு என்ற பெயரில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கருப்புப் பணம் இந்தியாவில் குவிகிறது. இந்த முதலீடானது சட்டபூர்வமானதாக ஏற்கப்படுவதால், கருப்புப் பணம் வெள்ளையாகிறது. இந்தியப் பங்குச் சந்தையை ஆக்கிரமித்திருக்கும் நிதி மூலதனத்தில் ஏறத்தாழ 50 சதவீதத்துக்கும் மேலானவை இத்தகைய வழிகளில் வந்தவைதாம்.

இந்தியப் பொருளாதாரமே இத்தகைய கருப்புப் பணத்தின் வழியாகத்தான் ‘வளர்ந்து’ கொண்டிருக்கிறது. பனாமா போன்ற நாடுகளிலுள்ள போலி நிறுவனங்கள் வழியாக உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளுக்குள் நுழைந்து வெளியேறும் நிதிமூலதனத்தின் அளவைக் காட்டி, இதுதான் ‘வளர்ச்சியின் அறிகுறி’ என்று முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். இத்தகைய கருப்புப் பண முதலீடுகளை வரவேற்கும் ஆட்சியாளர்கள் அதற்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். அதாவது, சட்டபூர்வ வணிக பரிவர்த்தனைக்குள்தான் கருப்புப் பணத்தின் பெரும்பகுதி ஒளிந்து கொண்டிருக்கிறது. எது முறைகேடானதாகக் கருதப்பட்டதோ, அதுவே இன்று சட்டபூர்வ கொள்கையாக மாறிவிட்டது.

இன்று உலகளாவிய அளவில் கருப்புப்பணம் வெள்ளையாக அங்கீகரிக்கப்பட்டு, கருப்புப்பணம்தான் உலகப் பொருளாதாரத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரமே கருப்புப் பணத்தை அச்சாணியாகக் கொண்டு இயங்கி வருவதால், கருப்புப் பணத்தை மீட்பது என்பதே கேலிக்குரியதாகிவிட்டது. இந்தியாவின் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் மட்டுமல்ல; ரஜினி, கமல், ஷாருக்கான், அதானி, அம்பானி, டாடா, பிர்லா, டெண்டுல்கர், தோனி – என எல்லா வகையான பிரபலங்களையும் கீறிப் பார்த்தால், அவர்களுக்குள் கருப்புப் பணப் பேர்வழிகள் இருக்கும் உண்மை புலப்படும்.

இந்த லட்சணத்தில்தான் கார்ப்பரேட் முதலாளிகளின் ரூ. 10,000 கோடி கருப்புப் பணத்தால் பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள மோடி கும்பல், கருப்புப் பணத்துக்கு எதிராக சினிமா பாணி பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரசை விஞ்சிய கடைந்தெடுத்த கயவாளிகள் கூட்டம்தான் மோடி கும்பல் என்பதை அதன் வெற்றுச் சவடால்களும் அந்தர் பல்டிகளும் நிரூபித்துக் காட்டவில்லையா?

– பாலன்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி !

3

குஜராத்திலுள்ள மிர்ஸாபூர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கரையான் தின்ன விடப்பட்டிருக்கும் இஷ்ரத் ஜஹான் போலி மோதல்கொலை வழக்கை ஒரேயடியாக ஊத்தி மூடும் சதித்தனத்தில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. இதற்காக, மும்பய்த் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி, மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, அத்துறையின் முன்னாள் கீழ்நிலைச் செயலர் மணி, இப்போலி மோதல்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மைய அரசின் உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் ஆகியோரைத் துருப்புச் சீட்டுக்களாக இறக்கிவிட்டிருக்கிறது, அவரது அரசு.

டேவிட் ஹெட்லி
இந்து மதவெறி மோடி அரசால் பொய்சாட்சியாக நிறுத்தப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி. (கோப்புப் படம்)

அமெரிக்கச் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக உள்ள டேவிட் ஹெட்லி மும்பய்த் தாக்குதல் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குமூலத்தில், “இஷ்ரத் ஜஹான் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்காக வேலை செய்தவர்” எனக் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

இன்னொருபுறத்தில் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, “இந்த வழக்கில் குஜராத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பிரமாணப் பத்திரத்தில், இஷ்ரத் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டிருந்தது. அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அதனை அரசியல் காரணங்களுக்காக மாற்றி, இரண்டாவது பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அந்த இரண்டாவது பிரமாணப் பத்திரம் தனது ஒப்புதல் இல்லாமலேயே தாக்கல் செய்யப்பட்டது” என்று பத்திரிகைகளின் ஊடாகத் திரியைக் கொளுத்திப் போட்டார்.

உள்துறை அமைச்சகத்தில் கீழ்நிலை செயலராக இருந்த ஆர்.வி.எஸ்.மணி என்ற அதிகாரி, “இரண்டாவது பிரமாண பத்திரத்தில் கையெழுத்திடுமாறு தன்னைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் சதீஷ் வர்மா நிர்பந்தித்ததோடு, எரியும் சிகரெட் முனையால் தன்னைச் சுட்டுச் சித்திரவதை செய்தார்” என்று டைம்ஸ் நௌ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

இஷ்ரத் ஜஹான் போலி மோதல்
குஜராத் போலீசும் மைய அரசின் உளவுத்துறையும் கூட்டுச் சேர்ந்து நடத்திய போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் (உள்படம்) இஷ்ரத் ஜஹான். (கோப்புப் படங்கள்)

இஷ்ரத் கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார், “இவ்வழக்கில் நரேந்திர மோடியைக் கோர்த்துவிடுவதற்குத் தனக்குப் பல்வேறு ஆசைகள் காட்டப்பட்டதாக”க் கூறினார்.

ஹெட்லியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம், ஜி.கே.பிள்ளை, மணி, ராஜேந்தர் குமார் ஆகியோரின் தாமதமாக விழித்துக்கொண்ட மனசாட்சிகள் – இவற்றைக் கையில் எடுத்துக்கொண்ட இந்து மதவெறிக் கும்பலும், அதற்கு ஆதரவான ஊடகங்களும், அறிவுத் துறையினரும், “இஷ்ரத் போலி மோதலில் கொல்லப்படவில்லை என்றும்; அவர் கொல்லப்பட்டது நியாயமான, தேசத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்றும்; “மோடியையும் அமித் ஷாவையும் பழிவாங்கும் நோக்கில்தான் இந்த வழக்கை காங்கிரசு கட்சி கையாண்டது என்றும்” வன்மத்தோடு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும், “உண்மைகளை மறைத்து இரண்டாவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ததன் மூலம் ப.சிதம்பரம் நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி இந்து மதவெறிக் கும்பலால் உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது.

* * *

முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை
இந்து மதவெறி கும்பலின் புதிய விசுவாசக் கூட்டம்: முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை

டந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இஷ்ரத் ஜஹான் கொலை தொடர்பாக மூன்று விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அகமதாபாத் பெருநகரக் கூடுதல் குற்றவியல் நடுவர் எஸ்.பி.தாமங் நடத்திய விசாரணை, குஜராத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, குஜராத் உயர்நீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்டு நடத்தப்பட்ட சி.பி.ஐ. விசாரணை என்ற இந்த மூன்று விசாரணைகளும் இஷ்ரத் ஜஹானும் மற்ற மூவரும் கடத்தப்பட்டு, சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதை எவ்விதச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளன.

உள்துறையின் முன்னாள் கீழ்நிலை செயலர் ஆர்.வி.எஸ். மணி
இந்து மதவெறி கும்பலின் புதிய விசுவாசக் கூட்டம்: உள்துறையின் முன்னாள் கீழ்நிலை செயலர் ஆர்.வி.எஸ். மணி

கூடுதல் குற்றவியல் நடுவர் தாமங், “பதவி உயர்வுக்காகவே இக்கொலைகள் நடத்தப்பட்டிருப்பதோடு, இஷ்ரத் ஜஹானை லஷ்கர் தீவிரவாதி என முத்திரை குத்துவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையிலும், சி.பி.ஐ. பதிவு செய்துள்ள குற்றப் பத்திரிகையிலும் இஷ்ரத் ஜஹானைத் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புபடுத்துவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நடந்தது போலிமோதல் படுகொலை, இஷ்ரத் ஜஹான் ஏழை முசுலீம் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவி இளம் பெண் என்ற உண்மைகளையெல்லாம் ஒரு கிரிமினல் குற்றவாளியின் வெற்று வாக்குமூலத்தைக் கொண்டு குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, இந்து மதவெறிக் கும்பல். மேலும், இஷ்ரத்தை லஷ்கர் அமைப்போடு தொடர்புபடுத்தும் ஹெட்லியின் வாக்குமூலம், அவன் வாயிலிருந்து தானாக வரவில்லை. இந்திய உளவுத்துறையால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்ட வாக்குமூலம் அது. இன்னும் பச்சையாகச் சொன்னால், போலீசாரால் தயார்படுத்தப்பட்டு நிறுத்தப்படும் பொய்சாட்சி போன்றதுதான் ஹெட்லியின் வாக்குமூலம். கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆசை காட்டி, அவர்களைப் பொய்சாட்சிகளாக போலீசு தயாரிப்பதைப் போல, ஹெட்லிக்கு மரண தண்டனை விதிப்பதிலிருந்து விலக்கு அளிப்பதாகத் தூண்டில் போட்டு, அவனை அப்ரூவராக மாற்றியிருக்கிறது, இந்திய அரசு.

ishrat-hindutva-servants-3
இந்து மதவெறி கும்பலின் புதிய விசுவாசக் கூட்டம்: மைய அரசு உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார்

டேவிட் ஹெட்லி, இஷ்ரத்தை லஷ்கர் அமைப்போடு தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிப்பது புதிய விசயமும் கிடையாது. கடந்த காங்கிரசு ஆட்சியின்பொழுதே, தேசியப் புலனாய்வு முகமை இவ்வாறான வாக்குமூலத்தை டேவிட் ஹெட்லியிடமிருந்து கறந்து, பத்திரிகைகளில் கசியவிட்டது. எனினும், அவ்வமைப்பு நீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையில் இந்த வாக்குமூலம் பற்றித் தெரிவிக்கவில்லை. “இஷ்ரத் குறித்த ஹெட்லியின் வாக்குமூலம் அவன் கேள்விப்பட்ட ஒன்றுதானே தவிர, அவ்வாக்குமூலத்திற்கு எவ்வித சாட்சியமும் இல்லை” என நீதிமன்றத்தில் தெரிவித்தது, தேசியப் புலனாய்வு முகமை.

ஹெட்-லி-யின் வாக்-கு-மூ-லம் என்-பது ஏற்கெனவே செத்துப் போன பாம்பு. இந்து மதவெறிக் கும்பலும், மோடி அரசும் அதற்கு மீண்டும் உயிர் கொ-டுத்-துப் பயமுறுத்தப் பார்க்கின்றன என்பதுதான் உண்மை.

இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமிமா
இஷ்ரத் ஜஹானின் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடி வரும் அவரது தாயார் ஷமிமா

மும்பய்த் தாக்குதல் தொடர்பாக “வீடியோ கான்ஃபரசிங்” முறையில் அமெரிக்கச் சிறைச்சாலையில் உள்ள டேவிட் ஹெட்லியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இஷ்ரத் ஜஹானைப் பற்றிக் கேட்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஆனாலும், இஷ்ரத் ஜஹானை லஷ்கர் நடவடிக்கைகளோடு சம்மந்தப்படுத்தும் விதத்தில் கேள்விகளை வலிந்து கேட்டுப் பதில் வாங்கியிருக்கிறார், அரசு வழக்குரைஞர் உஜ்வல் நிகாம்.

லஷ்கர்-இ-தொய்பா மும்பய்த் தாக்குதலை தனது கப்பற்படை பிரிவைப் பயன்படுத்தி நடத்தியதாகத் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட டேவிட் ஹெட்லியிடம், அது குறித்த கேள்விகளை எழுப்பாமல், லஷ்கர் அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைமை பற்றிக் கேள்வி கேட்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, லஷ்கர் அமைப்பின் தோல்வியடைந்த நடவடிக்கைகள் குறித்தும், அதில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும் கேட்கப்படுகிறது. இது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனப் பதில் அளித்த ஹெட்லியிடம், “அந்த இடம் குஜராத் என்பதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என ஹெட்லிக்கு எடுத்துக் கொடுக்கப்பட்டு, அவரிடமிருந்து ஆம் என்ற பதில் பெறப்படுகிறது.

வழக்குரைஞர் பிருந்தா குரோவர்
இஷ்ரத் ஜஹானின் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடி வரும் அவரது வழக்குரைஞர் பிருந்தா குரோவர்

லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த முசாமில் பட் என்ற படைத் தளபதி வழியாக ஒரு பெண் போராளி சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டதாகக் கூறும் ஹெட்லியிடம், “நூர்ஜஹான், இஷ்ரத் ஜஹான், மும்தாஜ்” என மூன்று பெண்களின் பெயர்களைக் கூறி, இவர்களுள் சுட்டுக் கொல்லப்பட்டவர் யார் என அரசு வழக்குரைஞர் கேட்க, இரண்டாவதாக உள்ள பெண்ணின் பெயர் என ஹெட்லி பதில் அளிக்கிறார்.

தொலைக்காட்சிகளில் வரும் வினாடி வினா நிகழ்ச்சி போல விசாரணையை நடத்திதான் ஹெட்லியிடமிருந்து தான் விரும்பிய வாக்குமூலத்தைப் பெற்றிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல். இப்படி வாக்குமூலம் பெறுவது சட்டவிரோதமானது, நீதிமன்றம் இதை அனுமதித்திருக்கக் கூடாது என்கிறார், இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் அவரது தாயின் சார்பில் ஆஜராகிவரும் வழக்குரைஞர் பிருந்தா குரோவர்.

மும்பய் போலீசு கட்டளைப்படிதான் ஹெட்லியிடமிருந்து வாக்குமூலம் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார், அரசு வழக்குரைஞர் உஜ்வல் நிகாம். மும்பய் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த இளம் வயதுக் குற்றவாளியான அப்துல் கசாப் மீது அனுதாபம் பிறந்துவிடக் கூடாது என்பதற்காகவே, “கசாப் மட்டன் பிரியாணி கேட்டதாகவும், அவன் விரும்பியபடி தாங்கள் வாங்கிக் கொடுத்ததாகவும்” ஒரு கட்டுக்கதையைப் பரப்பி, அதனை ஊடகங்களில் விவாதப் பொருளாக்கியவர்தான் உஜ்வல் நிகாம். அவரது வழக்குரைஞர் மூளை ஆர்.எஸ்.எஸ். போலவே சிந்திக்கக்கூடியது. அதனால்தான் மோடி அரசால் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இப்படிபட்ட நபர் போலீசின் எடுபிடியாக நடந்துகொள்வது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.

மண்டபத்தில் எழுதி வாங்கப்பட்டதற்கு ஒப்பான இந்த வாக்குமூலம் பிப்ரவரியில் ஊடகங்கள் மூலம் கசியவிடப்பட்டு, இஷ்ரத் போலி மோதல்கொலை வழக்கு மீண்டும் விவாதப் பொருளாக்கப்படுகிறது. இந்த வாக்குமூலத்தை வைத்து நரேந்திர மோடி-வன்சாரா குற்றக்கும்பலுக்கு ஆதரவாக இந்து மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ். முயன்று கொண்டிருந்த வேளையில், ஹெட்லியிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை அதன் முகத்தில் கரியைப் பூசுவதாக அமைந்தது.

அக்குறுக்கு விசாரணையை நடத்திய எதிர்த்தரப்பு வழக்குரைஞர் அப்துல் வாகப் கானிடம், “இஷ்ரத் ஜஹான் பற்றித் தான் கேள்விப்பட்டதெல்லாம் செவிவழிச் செய்திகள்தான். அவரைப் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டனே தவிர, அவரைப் பற்றிய பூர்வாங்கத் தகவல்கள் எதுவும் எனக்குத் தெரியாது. லஷ்கர் அமைப்பின் தலைவர் லக்வி அளித்த தகவலின்படிதான் இஷ்ரத் ஜஹான் பற்றி எனக்குத் தெரிய வந்தது என்று தேசியப் புலனாய்வு முகமையிடம் நான் கூறவில்லை. லஷ்கர் அமைப்பில் உள்ள பெண்கள் அமைப்பு முசுலீம் சமூகத்தினருக்கு உதவிகள் செய்யும் நோக்கில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதேயொழிய, அவ்வமைப்பு தற்கொலைப் படையாகச் செயல்படுவதில்லை” எனத் தெரிவித்திருக்கிறான் ஹெட்லி.

இஷ்ரத் ஜஹானை லஷ்கர் தீவிரவாதியாகச் சித்தரித்துப் பெறப்பட்ட முதல் வாக்குமூலம், ஒரு கிசுகிசு அல்லது வதந்திக்கு அப்பாற்பட்டு எந்தத் தகுதியும் கொண்டதல்ல என்பதை ஹெட்லி அளித்துள்ள இரண்டாவது வாக்குமூலம் நிறுவுகிறது.

* * *

ஷ்ரத் ஜஹான் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென கோரி இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும்; அப்போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரானேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளையும் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இம்மோதல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தத் தேவையில்லை என 06-08-2009 அன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மைய அரசு, அதில் இஷ்ரத் ஜஹானை லஷ்கர் தீவிரவாதி எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக, லாகூரிலிருந்து வெளிவரும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த பத்திரிகையான கஸ்வா டைம்ஸ், “இஷ்ரத் ஜஹான் என்ற லஷ்கர் போராளியின் முகத்திரை அகற்றப்பட்டு, அவர் மற்றவர்களுடன் தரையில் கிடத்தப்பட்டிருந்தார்” என்ற செய்தியை வெளியிட்டிருந்ததையும், அதனை தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்தியப் பத்திரிகைகளும் 15-07-2004 அன்று மறுபதிப்பு செய்திருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தது.

ishrat-protests
இஷ்ரத் ஜஹான் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் கழிந்த பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதைக் கண்டித்து பெங்களூருவில் மாணவர் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

இப்பிரமாணப் பத்திரத்திலேயே லஷ்கர் அமைப்பை நடத்தி வரும் ஜமாத் உத் தாவா, இஷ்ரத்தை லஷ்கர் தீவிரவாதியாகக் கூறியதற்கு 2007-ஆம் ஆண்டில் மன்னிப்புக் கேட்டிருந்ததை மைய அரசு குறிப்பிட்டிருந்தாலும், அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான் இஷ்ரத்தை லஷ்கர் தீவிரவாதியாகச் சித்தரித்தது.

இம்முதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, அகமதாபாத் பெருநகர கூடுதல் குற்றவியல் நடுவர் எஸ்.பி. தாமங் 07-09-2009 அன்று குஜராத் அரசிடம் சமர்ப்பித்த தனது விசாரணை அறிக்கையில், “இஷ்ரத் உள்ளிட்ட நால்வரும் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதையும், இஷ்ரத்தைத் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புபடுத்துவதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்பதையும்” உறுதி செய்திருந்தார். இதனால்தான் மைய அரசு அடுத்த சில நாட்களிலேயே இரண்டாவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதில், “மைய அரசின் உளவுப் பிரிவு தரும் தகவல்களைச் சான்றுகளாக எடுத்துக் கொள்ள முடியாது. அவற்றின் உதவிகொண்டு மாநில அரசு செயல்படலாம். எனினும், மாநில அரசின் வரம்பு மீறல்களுக்கு மைய அரசு ஒப்புதல் தராது.

“முதல் பிரமாணப் பத்திரத்தில் இஷ்ரத் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது பத்திரிகை தகவல்தானே தவிர, உளவுத்துறையின் தகவல் அல்ல” என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

கஸ்வா டைம்ஸ் பத்திரிகை தகவல் அளிப்படையில்தான் – அந்தத் தகவலும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது – இஷ்ரத் லஷ்கர் தீவிரவாதி எனக் குறிப்பிடப்பட்டார் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதைத் தாண்டி, இரண்டாவது பிரமாண பத்திரம் முதல் பிரமாண பத்திரத்திலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. ப.சிதம்பரம் இரண்டாவது பிரமாண பத்திரத்தின் வழியாக இந்த உண்மையை ஒத்துக் கொண்டதற்காகவும், போலிமோதல் கொலையை நடத்திய குஜராத் அரசைக் கைவிட்டுவிட்டதற்காகவும்தான் இந்து மதவெறிக் கும்பல் அவர் மீது பாய்ந்திருக்கிறது. உண்மையைப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ப.சிதம்பரத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கும் இந்து மதவெறிக் கும்பல், அதுவே சாமானியர்களாக இருந்தால், கல்புர்கி போல, பன்சாரே போல சுட்டுக் கொல்லவும் தயங்கியிருக்காது.

சிறப்புப் புலனாய்வுக் குழு இஷ்ரத் உள்ளிட்ட நால்வரும் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்தபொழுது, அதனை மறுத்துப் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஜி.கே.பிள்ளை, தான் ஓய்வுபெற்றுவிட்ட நிலையிலும்கூட வன்மத்தோடு, “இஷ்ரத்தை நடத்தைக் கெட்ட பெண்ணாகச் சித்தரிக்க முயன்று” தனது கயமைத்தனத்தைக் காட்டிக் கொண்டார். ப.சிதம்பரம் இரண்டாவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தபொழுது வாயை மூடிக் கொண்டிருந்த இந்த யோக்கிய சிகாமணி இப்பொழுது வேறு மாதிரி குரைப்பதற்குக் காரணம் இருக்கிறது. ஜி.கே.பிள்ளை இப்பொழுது மோடிக்கு மிகவும் நெருக்கமான அதானி குழும நிறுவனமான அதானி போர்ட்ஸின் இயக்குநர்களுள் ஒருவர். அதனால்தான் குரைப்பதும், வாலாட்டுவதும் மிகவும் பலமாக இருக்கிறது.

மத்திய உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமாருக்கு இஷ்ரத் போலி மோதல்கொலையில் எவ்விதப் பங்குமில்லை எனக் கடந்த பிப்ரவரியில்தான் மோடி அரசு அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியது. அதற்காகவே இப்பொழுது முந்தைய காங்கிரசு அரசு மீது பழிபோட்டு மோடிக்குத் தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார், அவர்.

* * *

ரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவி வகித்த பன்னிரெண்டு ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டுகளில் மட்டும் 21 ‘மோதல்’ கொலைகள் அம்மாநிலத்தில் நடந்தன. இம்மோதல் கொலைகளுள் சோராபுதீன் ஷேக், பிரஜாபதி, இஷ்ரத் ஜஹான், ஜமால் மாலிக் ஆகிய நான்கும் போலிமோதல் கொலைகள்தான் என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்டது. இஷ்ரத் ஜஹான் கொலை தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த எட்டு உயர் போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்ற மூன்று கொலைகளையும் சேர்த்தால், 14 உயர் போலீசு அதிகாரிகள் மீது கொலை மற்றும் சதி வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த நான்கு கொலைகளுக்கு அப்பால், பிற ‘மோதல்’ கொலைகள் குறித்து உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஹரேன் பாண்டியா கொலை வழக்கிலும், அக்சர்தாம் கோவில் தாக்குதல் வழக்கிலும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் அப்பாவிகள் என நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர்.

இவை அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சி ஒரு கேடுகெட்ட கிரிமினல் ஆட்சி என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்திவிட்டன. ஆனால், அந்த கிரிமினலோ மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வழக்குகள் ஒவ்வொன்றையும் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறார்.

சோராபுதீன் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அமித் ஷாவை அவ்வழக்கிலிருந்து விடுவித்தார், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம். இதற்குப் பரிசாக, அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கேரள கவர்னர் பதவி தரப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கைத் தொடுத்த சோராபுதீனின் தம்பி ருபாபுதீன் வழக்கைக் கைவிடும் முடிவை எடுத்திருப்பதாக அறிவித்துவிட்டார்.

இஷ்ரத் ஜஹான் போலி மோதல்கொலை வழக்கில் ஜூலை 2013-இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அவ்வழக்கில் பேருக்குக்கூட நீதிமன்ற விசாரணை நடைபெறவில்லை. இதனிடையே அவ்வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீசு அதிகாரி டி.ஜி.வன்சாரா கௌரவமாக ஓய்வு பெற்றுப் போய்விட்டார். பி.பி. பாண்டே, என்.கே.அமின், ஜி.எல். சிங்கால் ஆகிய போலீசு அதிகாரிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு, பதவி உயர்வும் பெற்றுவிட்டனர்.

இவ்வழக்கில் மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சத்யபால் சிங், விருப்ப ஓய்வு பெற்ற பின், பா.ஜ.க.வில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார். மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரியான கர்னல் சிங் பொருளாதாரக் குற்றப்பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தன் மகள் களங்கமற்றவள் என்பதை நிரூபிப்பதற்கும், அவளை இரக்கமற்ற முறையில் கொன்ற கொலைகாரர்களைத் தண்டிப்பதற்கும் சட்டப்படி போராடிக் கொண்டிருக்கிறார், இஷ்ரத்தின் தாய். மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சட்டப்படியே அவ்வழக்கை ஊத்தி மூடிவிட முயலுகிறார், மோடி. இதில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பது மட்டுமல்ல, சட்டம், போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட இந்த நீதிபரிபாலண கட்டமைப்பு இந்து மதவெறி கிரிமினல்களுக்கும் அரசு பயங்கரவாதிகளுக்கும் சாதகமாகச் செயல்படும் அளவிற்குத் துருப்பிடித்து நிற்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

– செல்வம்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?

1

வர்கள் செய்யும் பரப்புரைகளுக்காக எந்த வாக்கும் விழப்போவதில்லை. தேர்தல் களத்தில் வேட்பாளர்களாகவும் இல்லை. கட்சி-சாதி-பணம் இவற்றின் அடிப்படையிலான தேர்தல் முறைகளையும் அவர்கள் ஏற்பதில்லை. ஆனால், அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் பயந்து நடுங்கும் ஜெ அரசுக்கு எதிராக துணிச்சலான பிரச்சாரத்தை மேற் கொண்டவர்கள் அவர்கள்தான்.

shutdown-tasmac-may5-pressmeet-1அவர்கள்… “மக்கள் அதிகாரம்’ அமைப்பின் தோழர்கள். ஆண்-பெண் பேதமின்றி இந்த அமைப்பில் உள்ள எல்லோருமே தோழர்களெனவே அழைக்கப்படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்குமான தேர்தலும் ஜனநாயகமும் உண்மையானதல்ல, அது உழைக்கும் மக்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் பலன் தரவேண்டும் என்ற சிவப்பு சிந்தனையுடன் உருவான மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணிகள், விவசாய அமைப்பு இவற்றின் தொடர்ச்சியாக உருவானதுதான் மக்கள் அதிகாரம்.

தமிழக அரசியலில் போராளிகளாக தங்களைக் காட்டிக் கொண்டவர்களெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் ஐ.நா.சபைக்கு எதிராகவும், அமெரிக்க அரசை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு சவால்விட்டும், ஆந்திர- கர்நாடக மாநிலங்களை எதிர்த்தும் கூவினார்களே தவிர, தமிழகத்தில் உள்ள ஜெயலலிதா அரசை எதிர்த்து வாய்திறக்கவே நடுங்கினார்கள். ஆனால், சர்வாதிகாரமும் உயர்சாதித்தன்மையும் கொண்ட ஜெயலலிதா அரசுக்கு எதிராகத் தோழர்களின் போராட்டம் 5 ஆண்டுகளும் தொடர்ந்தது.

ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் நேரடியாக களமிறங்கி கடத்தல்காரர்களையும் அவர்களுக்கு உதவிய அதிகாரிகளையும் முற்றுகையிட்டார்கள். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார்கள். ரேஷன் கடை முறைகேடுகள் உள்பட தமிழக மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காக களத்தில் நின்றார்கள். அதன் உச்சகட்டம்தான், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள்.

kovan-2மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும் ஜெயலலிதா அரசு கேட்காததால், கடைகளை நொறுக்கி, மது பாட்டில்களை ரோட்டில் வீசி முதல் போராட்டம் நடத்தியது இந்தத் தோழர்கள்தான்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன் பாடிய “ஊருக்கு ஊரு சாராயம்… தள்ளாடுது தமிழகம்’’என்ற பாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, கோவன் உள்ளிட்ட தோழர்கள்மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. நள்ளிரவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டு பாடிய சிறுவர்களையும்கூட விட்டுவைக்காமல் வழக்கு போட்டது. ஆனாலும் கோவன் தரப்பிலிருந்து, “”ஊரெங்கும் மழை வெள்ளம்’’ பாட்டும், “போங்கு.. அம்மா போங்கு’’’ என்ற பாட்டும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின.

பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடிய இந்த அமைப்பின் மாணவர்கள் பலரும் போலீசின் கொடுமையான தாக்குதலுக்குள்ளாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு அங்கும் வன்முறைகளை சந்தித்தனர். தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் இருந்த நிலையிலும், டாஸ்மாக்கை மூடக்கோரி இரண்டு முறை வலிமையான போராட்டங்களை மக்கள் அமைப்பின் ஆண்களும்-பெண்களும் தமிழகம் முழுவதும் நடத்தினர். பெண்களின் ஆடைகளைக் கலைத்தும், கண்மூடித்தனமாக தாக்கியும் போலீசின் கொடூரம் தொடர்ந்தபோதும் போராட்டத்தின் வீரியம் குறையவில்லை.

tas_2496702fமக்கள் அதிகாரத்தின் போராட்டம் என்றால் ஜெயலலிதா அரசும் காவல்துறையும் மிரண்டு போவது வழக்கம். விழுப்புரத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தப்போவதாக உளவுத்துறை சொன்ன தகவலை நம்பி, வழக்கறிஞர் ராஜு உள்ளிட்ட தோழர்களை வீட்டுக்காவலில் வைத்தது காவல்துறை.

இந்தத் தோழர்கள், திடீர் குபீர் போராட்டங்களை நடத்துவதில்லை. முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டுத் தான் மக்கள் திரளுடன் களமிறங்கிப் போராடுகிறார்கள். காவல்துறையின் தடியடி, சிறைவாசம் எதற்கும் அஞ்சுவதில்லை. பாசிசத்தனத்துடன் 5 ஆண்டுகாலமாக செயல்பட்ட ஜெயலலிதா அரசை எழுத்து-பேச்சு- கலை-போராட்டம் என அனைத்து வழிமுறைகளிலும் எதிர்த்து நின்ற நிஜப் போராளிகளே, மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

20160505_111526_13665மக்கள் உள்பட யாரையும் விலைபேசிவிட முடியும் என நினைக்கும் ஜெ.வின் ஆட்சியில் நிர்வாகம், சட்டம், ஊடகம் உள்பட அனைத்து துறைகளும் ஊழல் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியது மக்கள் அதிகாரம். ஜனநாயகத்திற்கு புற்றுநோயாக அமைந்துள்ள இந்த அரசை வீழ்த்தவேண்டும் என்ற இலக்குடன் அண்மையில், அம்மா பார் சாங் என்ற பாடலையும் வெளியிட்டு, மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஜெ.வையும் அவரது அமைச்சர்களையும், அடிமைத்தனமாக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளையும் அதன் மூலம் அம்பலப்படுத்தியது.

ஓட்டு கேட்காத மக்கள் அதிகாரம்தான் இந்தத் தேர்தல் களத்தில் ஜெயலலிதா அரசை முழுமை யாகவும் துணிவாகவும் எதிர்த்து நின்று, சரியான ஆயுதத்தைக் கையில் எடுத்த அமைப்பாகும்.

– நன்றி: நக்கீரன் (மே 17-19, 2016 இதழில் வெளியான கட்டுரை)

ஐ.டி ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டு – நீதிமன்றம்

1

“எச்.சி.எல் நிறுவனம் ரமேஷா என்ற ஐ.டி துறை ஊழியரை வேலை நீக்கம் செய்தது சட்ட விரோதமானது” என்று சென்னை தொழிலாளர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு வரவேற்கிறது. ஐ.டி துறை ஊழியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும், இந்திய அரசியல் சட்டமும் தொழிலாளர் சட்டங்களும் வழங்கும், அடிப்படை உரிமைகள் இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பு, ஐ.டி ஊழியர்கள் ‘எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கி எறியப்படலாம்’ என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான சட்ட அடிப்படையை வழங்கியுள்ளது.

எச்.சி.எல்
இந்தத் தீர்ப்பு, ஐ.டி ஊழியர்கள் ‘எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கி எறியப்படலாம்’ என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான சட்ட அடிப்படையை வழங்கியுள்ளது.

திரு ரமேஷா ஆகஸ்ட் 20, 2009 என முன்தேதியிட்டு 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி எச்.சி.எல் நிறுவனத்தில் பணி நியமனம் பெற்றார். அதாவது, அவரை வேலைக்கு அமர்த்தி, அவரது பணியை பரிசீலித்து பின்னரே வேலை நியமனம் வழங்கியிருக்கிறது எச்.சி.எல். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சிறப்பான பணிக்கான பாராட்டையும்,ஊதிய உயர்வையும் ரமேஷா ஈட்டினார்.

ஆனால், ஜனவரி 22, 2013 அன்று எச்.சி.எல் ரமேஷாவை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்தது, எச்.சி.எல்.ஆயிரக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் எதிர் கொள்வதைப் போல அவர் மீது என்ன குறைபாடு என்பதை எழுத்து மூலமாக தெரிவிக்கவோ, அது தொடர்பாக முறையான விசாரணை நடத்தவோ செய்யாமல் ரமேஷாவுக்கு வேலை நீக்க உத்தரவை வழங்கியிருக்கிறது எச்.சி.எல்.இந்த சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார், ரமேஷா.

தமக்கு இழைக்கப்படும் அநீதியை சகித்துக் கொண்டு, சட்ட விரோத வேலை நீக்கத்தை மவுனமாக ஏற்றுக் கொண்டு, வேறு வாய்ப்புகளை தேடத் தொடங்காமல் சட்டபூர்வமான தனது உரிமைகளையும்,தனது தொழில்முறை கவுரவத்தையும் போராடி வென்றிருக்கிறார்,  ரமேஷா.  இது போன்ற நிலையை எதிர்கொள்ளும் ஐ.டி ஊழியர்கள் ரமேஷா ஏற்படுத்தித் தந்துள்ள முன் உதாரணத்தை பயன்படுத்தி வேலை நீக்கம், அப்ரைசல் மோசடிகள், தாங்க முடியாத வேலைப்பளு என தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராட முன் வர வேண்டும். இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி எச்.சி.எல் நிறுவனம் ரமேஷாவை மீண்டும் பணியில் அமர்த்துவதோடு 2013-ல் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டது முதல் இன்று வரையிலான முழுச் சம்பளத்தையும், பணித் தொடர்ச்சியையும் அவருக்கு வழங்க வேண்டும்.

டி.சி.எஸ் வேலை நீக்கம்
ஐ.டி ஊழியர்கள் ரமேஷா ஏற்படுத்தித் தந்துள்ள முன் உதாரணத்தை பயன்படுத்தி வேலை நீக்கம், அப்ரைசல் மோசடிகள், தாங்க முடியாத வேலைப்பளு என தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராட முன் வர வேண்டும்.

1947 தொழில்தகராறு சட்டத்தின்படி “எந்த ஒரு துறையிலும் சம்பளத்துக்காக அல்லது வேறு வகை வெகுமதிக்காக உடல் உழைப்பு அல்லது திறன் உழைப்பு, அல்லது திறன் இல்லாத உழைப்பு அல்லது செயல்பாட்டு உழைப்பு, அல்லது எழுத்து வேலை, அல்லது மேற்பார்வை வேலை செய்யும் யாரும்”தொழிலாளர்” ஆவார். மென்பொருள் ஊழியரின் பணி, திறமைகளையும், நுட்ப அறிவையும் கோருகிறது. எனவே, ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒருவர் தொழில்தகராறு சட்டத்தின்படி”தொழிலாளர்” என்று வரையறுக்கப்பட வேண்டும்” என்று இந்தத் தீர்ப்பை வழங்கிய கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி எஸ் நம்பிராஜன் உறுதி செய்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு உற்பத்தித் துறை தொழிலாளர்கள் மட்டுமின்றி வங்கி,காப்பீடு, ஆசிரியர் போன்ற படித்த பிரிவினருக்கு கிடைத்து வரும் யூனியன் அமைக்கும் உரிமை, சட்ட விரோதமான பணி நீக்கலுக்கு எதிரான பாதுகாப்பு, கூட்டு பேச்சுவார்த்தை உரிமை ஆகியவை ஐ.டி துறை ஊழியர்களுக்கும் உள்ளன என்பதை உறுதி செய்கிறது.

layoff-pushedout
ரமேஷாவும் நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப பணி நியமனம், ஊதிய உயர்வு, தேவை தீர்ந்ததும் கழிப்பறை காகிதம் போல தூக்கி எறியப்படுவது என்று அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஐ.டி துறையில், ‘ஊழியர்கள் அனைவரும்”சூப்பர் வைசர்கள்”, “உயர் ஊதியம் பெறுபவர்கள்” எனவே சம்பளம் பெறும் ஊழியர்களாக இருந்தாலும் பிற துறை ஊழியர்கள் சட்டபூர்வமாக அனுபவிக்கும் உரிமைகள் அவர்களுக்கு கிடையாது’ என்று முதலாளிகள் பிரச்சாரம் செய்து அதற்கேற்ப தாமே, தமது விருப்பப்படி சில விதிமுறைகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். பணி நியமன உத்தரவில் தமக்கு சாதகமான பல நிபந்தனைகளை சேர்ப்பது, ஊதிய உயர்வு, பணி உயர்வு, பணியை மதிப்பிடுவது ஆகியவற்றில் ஊழியர்களை தனித்தனியாக பிரித்து அவர்களுக்கிடையே ஆரோக்கியமற்ற போட்டியை ஊக்குவிப்பது என்று ஐ.டி ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து வந்தனர்.

அது போலவே, ரமேஷாவும் நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப பணி நியமனம், ஊதிய உயர்வு, தேவை தீர்ந்ததும் கழிப்பறை காகிதம் போல தூக்கி எறியப்படுவது என்று அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.தொழிலாளர் சட்டங்களின் படியான நிலை ஆணை (standing order) முறையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. நிறுவனம் கூறுவது போல ‘திறமையை தொடர்ந்து மேம்படுத்தத் தவறினால் வேலை நீக்கம் செய்யப்படுவார்’ என்ற நிறுவனத்தின் சட்ட விரோதமான நடைமுறை கூட அவருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

layoff-microsoft
அனைத்து ஐ.டி ஊழியர்களும் பு.ஜ.தொ.மு -ஐ.டி ஊழியர் பிரிவில் இணைந்து தம்மையும் நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்த அழைக்கிறோம்.

ரமேஷாவின் விடாப்பிடியான துணிச்சலான போராட்டத்தின் மூலம் தமது ஊழியர்களது திறமைகளையும்,  அனுபவத்தையும் துளிக்கூட மதிக்காமல், அவர்களது குடும்பப் பொறுப்புகளையும், வாழ்க்கை தேவைகளையும் கணக்கில் கொள்ளாமல் வேலையை விட்டு சட்ட விரோதமாக தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு எதிராக ஐ.டி ஊழியர்கள் அனைவரும் அமைப்பாக இணைய வேண்டியதன் அவசியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எச்.சி.எல் மட்டுமின்றி, ஐ.டி துறையின் பிற பெரு நிறுவனங்களும் எச்.சி.எல் உடன் திரைமறைவில் இணைந்து, மேல் முறையீடு செய்வது உறுதி. ஊழியர்களை பிளாஸ்டிக் கப் போல பயன்படுத்தி தூக்கி எறிவதை மீண்டும் நிலைநாட்ட பல கோடி ரூபாய் செலவழித்து இந்தத் தீர்ப்பை ரத்து செய்யவும், ஊழியர்களின் உரிமைகளை மறுப்பதற்கு ஏற்றவகையில் நிறுவன நடைமுறைகளை மாற்றிக் கொள்ளவும், தேவைப்பட்டால் சட்டத்தையே திருத்தவும் முதலாளிகள் கடும் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதற்காக நாஸ்காம் என்ற அவர்களது கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.

அவர்களது பண பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் எதிர்த்து ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து ஐ.டி ஊழியர்களும் அமைப்பாக இணைவதே ஒரே வழி. உயர் தொழில்நுட்ப கல்வி, முன்னேறிய தகவல் தொழில் நுட்ப அறிவு, சிறப்புத் திறமைகள் உடைய ஐ.டி ஊழியர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்துடன் சம உரிமையுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், நிறுவனம் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கவும் தமக்கு இருக்கும் உரிமைகளை உறுதி செய்து தமது சுயமரியாதையும், பணி கவுரவத்தையும் நிலைநாட்ட தொடர்ந்து போராட வேண்டும். ஐ.டி ஊழியர்கள் அனைவரும் பு.ஜ.தொ.மு -ஐ.டி ஊழியர்கள் பிரிவில் (NDLF – IT Employees Wing) தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பல பத்தாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தொழில் தகராறு சட்டத்தின் காலாவதியாகிப் போன நிபந்தனைகளை (ஊதிய வரம்பு,மேற்பார்வை பணி) திருத்துவதும் இதன் மூலமாகவே சாத்தியமாகும்.

layoff-management-3
பண பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் எதிர்த்து ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து ஐ.டி ஊழியர்களும் அமைப்பாக இணைவதே ஒரே வழி.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு டி.சி.எஸ்,வெஸ்டாஸ், சின்டெல் போன்ற நிறுவனங்களில் சட்ட விரோத லே-ஆஃப்களை தடுத்து நிறுத்த நீதிமன்ற போராட்டங்கள், ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம், ஊடகங்களில் பரப்புரை என்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், ஐ.டி ஊழியர்களின் தொழில் நலன்களுக்காக மட்டுமின்றி, அவர்களையும், ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் கல்வி உரிமை, மருத்துவ உரிமை, நாட்டு வளங்களை பாதுகாப்பது, பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம்,சாதி/மத அடக்குமுறைகளை எதிர்கொள்வது என்று சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் போராடி வருகிறது.

அனைத்து ஐ.டி ஊழியர்களும் பு.ஜ.தொ.மு -ஐ.டி ஊழியர் பிரிவில் இணைந்து தம்மையும் நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்த அழைக்கிறோம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு

தேர்தல் ஆணையம் ஆசியுடன் டி.வி.எஸ் முதலாளி தேர்தல் ‘புறக்கணிப்பு’ !

3

மிழகத்தின் 15-வது சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதும் அரசு நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் எடுத்து கொண்டது. பறக்கும் படையினரின் விடிய, விடிய சோதனை, நாள்தோறும் ஓர் அறிவிப்பு. கண்டிப்புக்கும், கடமைக்கும் நாங்கள்தான் இலக்கணம் என தலைக்கனத்தோடு செயல்பட்ட அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகளின் பணப் பட்டுவாடாவைத் தடுக்கவில்லை, யாரையும் தண்டிக்கவில்லை. இந்த தேர்தல் முதலாளிகளுக்காக நடத்தப்படும் நாடகம் என்பதை நிரூபித்த உண்மை சம்பவம் இதோ!

election-boycott-ndlf-puduchery-poster-11மே-16 தேர்தல் நாளன்று, அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான புகார்களுக்கு தொழிலாளர் துறை ஆணையரிடம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பினை மயிருக்கு சமமாக கருதிய முதலாளிகள், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, ஆலைகளை இயக்கினர். அதில் ஒன்றுதான், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்திலுள்ள டி.வி.எஸ் குழுமத்திற்கு சொந்தமான ஆக்ஸில்ஸ் இந்தியா நிறுவனம் தொழிலாளர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பணிக்கு அழைத்து, ஆலையை இயக்கியது.

இது தொடர்பான தகவலை துறைசார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதில் அதிகாரிகள் நடந்து கொண்டவிதம் இது போலி ஜனநாயகம் தான் என்பதை ஐயமுற நிரூபித்துவிட்டது.

முதலில், பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, திருவண்ணாமலை ஏ.சி.எல் அவர்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினார். திருவண்ணாமலை ஏ.சி.எல் அவர்களுக்கு தொடர்பு கொண்டால், டி.சி.ஐ.எஃப் அவர்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

டி.சி.ஐ.எஃப்-க்கு தொடர்புகொண்டால் “நான் குடியாத்தத்தில் இருக்கிறேன். உடனடியாக நான் அங்கு வரமுடியாது” என்றார்.

“உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுங்கள்” என இடித்துரைக்கப்பட்டது.

election-boycott-ndlf-puduchery-poster-05சிறிது நேரம் கழித்து லைனில் வந்த டி.சி.ஐ.எஃப்  அதிகாரி, எச்.ஆர் அதிகாரி சீனிவாசனிடம் பேசியதாகவும், ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் நம்மிடம் கூறினார்.

“எந்தக் காலத்தில் எச்.ஆர் அதிகாரிகள் உண்மையைப் பேசியிருக்கிறார்கள். காலையில் முதல் ஷிஃப்டு முடித்து மாலை 4 மணியிலிருந்து இரண்டாவது ஷிஃப்டில் ஆலை இயங்கிக்கொண்டிருக்கிறது. டி.வி.எஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்” எனக் கேட்டோம்.

“இந்தக் கம்பெனியை என்னுடைய மேலதிகாரிதான் பார்க்கிறார். அவருக்குத் தகவல் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

அவருடைய தொடர்பு எண்ணை நாம் பெற்றுக்கொண்டு இணை ஆணையரான பெரியசாமியிடம் தொடர்பு கொண்டபோது, தான் சென்னையிலிருப்பதாகக் கூறினார். நிர்வாகம் சட்டவிரோதமாக நடந்துகொள்வதையும், தொழிலாளர்கள் மிரட்டப்பட்டு பணிக்கு அழைத்துவரப்பட்டுள்ளதையும் சொல்லிய பிறகே நடவடிக்கை எடுப்பதாகவும், அங்கு செல்வதாகவும் கூறினார்.

அதிகார வர்க்கத்திற்கே உரிய கடமைக்கு வேலை செய்வது என்பதை அச்சுப் பிசகாமல் நடைமுறைப் படுத்தினார் இணை ஆணையர் பெரியசாமி. ஆக்சில்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கிருந்தபடியே மாவட்டச் செயலருக்குத் தொடர்புகொண்டு ”சார், 5 பேர்தான் வேலை செய்கின்றனர். மெயிண்டெனன்ஸ் ஒர்க்கர்தான். வேறு யாரும் இல்லை” என்றார்.

holy-election-2“இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். அதற்கு எதிராக நிறுவனம் நடந்துகொண்டிருக்கிறது. 4 பேரை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம் என லக்கானி அனுமதி அளித்துள்ளாரா?” எனக் கேட்டோம்.

“இல்லை சார்..” என்றவரிடம் மாவ. செயலர். “ஆக்ஸில்ஸ் இந்தியா நிர்வாகம் சட்டவிரோதமாக செயல்பட்டு, கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். பெரியசாமி முதலாளிகளுக்கான சாமியாகிவிட்டார்.

டி.சி.ஐ.எஃப் வேல் முருகனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, எனக்கு மேல் அதிகாரிதான் ஆக்ஸில்ஸ் இந்தியா நிறுவனத்தை பார்க்கின்றார் என்றார். ஆனால் அவர் எதற்காக HR சீனிவாசனிடம் பேசவேண்டும்?

உண்மையில், பு.ஜ.தொ.மு தலையிட்டு ஒவ்வொரு அதிகாரியாகத் தொடர்புகொண்டு, சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் பேசுவதற்குள், நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 16-05-2016 அன்று இரண்டாவது ஷிஃப்டுக்கு வந்த 25 தொழிலாளர்களை மாலை 5 மணிக்கு வெளியேற்றி இருக்கின்றது, நிர்வாகம். இரவு 7 மணிக்கு சென்ற இணை ஆணையரான பெரியசாமி வெறும் 5 பேர் தான், வேறு யாரும் இல்லையெனகூறி நம்மை சமாதானம் பேசி, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கறாராக பேசிய பிறகே, இரவு ஷிஃப்ட்டுக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்ப்பட்டோரை இன்று வேலையில்லையென செக்யூரிட்டி மூலம் கூறி திருப்பி அனுப்பியுள்ளது நிர்வாகம்.

ஆக, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம், அதற்காக நடத்தக்கூடிய தேர்தல், இதற்கான அதிகார வர்க்கம். இவர்கள் அறிவிக்கின்ற நியாயங்கள், சட்டங்களை, இவர்களே மதிப்பதில்லை. கையும், களவுமாக பிடிப்பட்ட பிறகும், தவறின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கத்தை பாதுகாப்பதின் ஒர் அங்கமாகதான், தேர்தல் ஆணையமும், துறைசார்ந்த அதிகாரிகளும், டி.வி.எஸ் ஆக்ஸில்ஸ் முதலாளியை போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றினார்கள்.

சட்டத்தை மீறுவது, கிரிமினல் தனங்களில் ஈடுபடுவது, உரிமைக்காக போராடும் தொழிலாளர்களின் வேலையை பறிப்பது, பொதுச் சொத்தை சூறையாடுவது, இப்படிப்பட்ட முதலாளிகளை பாதுகாப்பதுதான், இந்த ஜனநாயக அமைப்பு. அவர்களுக்கான எடுபிடிகள்தான் இந்த அதிகார வர்க்கம் என்பதை நிரூபித்துள்ளது, இந்நிகழ்வு. இப்படிப்பட்ட அரசமைப்பிற்குள் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியுமா…?

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொடர்புக்கு – 88075 32859

மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!

3
ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்
வங்கிகளின் கெடுபிடி, அவமானப்படுத்தல்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்

ங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபடுவோர் யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி சவடால் அடித்துக் கொண்டிருக்கும்போதுதான், வங்கிகளில் 9 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்ட தரகுப் பெருமுதலாளி விஜய் மல்லையா வெளிநாட்டில் பதுங்கியிருந்துகொண்டு இந்திய அரசுக்கு பெப்பே காட்டிக் கொண்டிருக்கிறார்.

விஜய் மல்லையாவுக்கு ரூ. 7,500 கோடிகளை அள்ளிக் கொடுத்து, அக்கடனுக்கான வட்டியுடன் சேர்த்து இன்று 9 ஆயிரம் கோடியாகிவிட்ட நிலையில், இவ்வளவு பிரம்மாண்டமான தொகையை கடந்த 2012லிருந்தே அவர் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு ஓடிவிடாமல் இருக்க உத்தரவிட வேண்டுமென்று 17 பொதுத்துறை வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனால், அதற்கு முன்பே அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, பிணையில் வெளிவர முடியாத பிடியாணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, அவரை இந்தியாவிற்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசு காட்டிக் கொள்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள், பங்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வங்கிகளிடம் மல்லையா ஒப்படைக்க வேண்டும்; பெங்களூரிலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் இதனைப் பரிசீலித்து 2 மாதத்தில் முடுவெடுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் இறுதியில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி எம்.சுப்பிரமணியன்
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி எம்.சுப்பிரமணியன்

மல்லையாவின் மோசடி அம்பலமான அதேநேரத்தில்தான், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி, டிராக்டர் வாங்கிய கடனுக்கான தவணையைச் செலுத்தாத குற்றத்துக்காக வங்கியின் அடியாட்களாலும் போலீசாராலும் தாக்கப்பட்டார். வங்கிகளின் கெடுபிடிகளாலும் அவமானப்படுத்தல்களாலும் அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர், உசிலம்பட்டி பால்ராஜ், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த தனசேகர், மேட்டுப்பாளையம் அருகே தேவாங்குபுரத்தைச் சேர்ந்த ராமசாமி ஆகிய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விவசாயிகள் மட்டுமின்றி, சிறுதொழில் தொடங்கக் கடன் வாங்கிவிட்டு அதனைக் கட்டத் தவறுபவர்கள், கல்விக் கடன் கட்டாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் பிளக்ஸ் பேனரில் கட்டி பொதுத்துறை வங்கிகள் அவமானப்படுத்துகின்றன. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் வங்கி ஊழியர் வேலைக்கான ஆள்சேர்ப்பு தேர்வைக்கூட எழுத முடியாதபடி தடை விதித்து, அவர்களது எதிர்காலத்தையே முடமாக்குகின்றன.

ஒரு ஆடம்பரக் கார் வாங்க 8%வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள், ஒரு விவசாயி டிராக்டர் வாங்க 14% வட்டி வசூலிக்கின்றன. வங்கியில் கடன் கிடைக்காமல் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி பல சிறு முதலாளிகள் தொழில் நடத்திக் கொண்டிருக்கும்போது, பொதுத்துறை வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 5% வட்டிக்குத் தாராளமாகக் கடன் கொடுக்கின்றன.

விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கிகளின் அடாவடித்தனத்தை எதிர்த்து
கெடுபிடி அவமானப்படுத்தல்களால் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கிகளின் அடாவடித்தனத்தை எதிர்த்து திருவெண்ணெய்நல்லூர் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி 19-03-2016 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தத் தாராளமயம்தான் வாராக்கடன்களும் மோசடிகளும் பெருகிக் கொண்டே போவதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது. மல்லையா ரூ. 9,000 கோடி கடனை ஏப்பம் விட்டிருப்பது போதாதென்று, இவரைப் போல இன்னும் நூற்றுக்கணக்கான தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கிவிட்டு, இன்னமும் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 94,666 கோடி அதிகரித்து மொத்தத்தில் ரூ. 3.61 லட்சம் கோடியாகிவிட்டது. மக்களின் சேமிப்பாகவும் முதலீடாகவும் வங்கிகளில் திரண்டுள்ள செல்வத்தை முதலாளிகள் ஏப்பம் விடுவதோடு, இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்துக் கொண்டே செல்வதைக் காட்டி, அவற்றைத் தனியார்மயப்படுத்தும் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறது அரசு.

வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளிகளோ தங்களது மோசடியை மூடிமறைக்க, பொருளாதார நெருக்கடி, சந்தையில் மந்தம், தொழிலில் நட்டம் என்று பிலாக்கணம் பாடுகிறார்கள். ஆனால் இப்படி நட்டமடைந்துவிட்ட எந்த முதலாளியும் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டு அலையவில்லை. மானத்துக்கு அஞ்சி விவசாயிகளைப் போல தற்கொலை செய்து கொள்வதுமில்லை.

வங்கிகளின் அடாவடித்தனம்
கல்விக்கடனைச் செலுத்தத் தவறிய மாணவர்களின் படங்களை பிளக்ஸ் பேனர் கட்டி அவமானப்படுத்தும் வங்கிகளின் அடாவடித்தனம்

“முன்பு பெட்ரோல் விலை உயர்ந்திருந்ததால் எனது நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்தது. இப்போது சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்துவிட்டதால் பங்குகளின் மதிப்பும் குறைந்து நட்டமாகிவிட்டது. இதற்கு நான் காரணமல்ல” என்று நியாயவாதம் பேசுகிறார் விஜய் மல்லையா. “இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் மல்லையாவின் கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டிருந்தால் லாபத்தை ஈட்டியிருக்க முடியும். ஆனால், முன்பு விலை அதிகமாக இருந்த சூழலில் எப்படி லாபம் கிடைக்கும்? இதனால் அவரது தொழில் நட்டமாகியது. இது மல்லையா செய்த தவறு என்று கூற முடியுமா?” என்று எண்ணெய் விலை சரிவின் மீது சில முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் பழி போடுகிறார்கள்.

“ மல்லையாவின் கிங் பிஷர் போலவே, ஏர் இந்தியா எனும் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமும் நட்டமடைந்துள்ளது. நட்டமடைந்த மல்லையா வங்கிப் பணத்தைச் சுருட்டிவிட்டார் என்று குற்றம் சாட்டுவது சரியென்றால், நட்டமடைந்த ஏர் இந்தியா மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டி விட்டது என்று கூறுவதும் நியாயம்தான்” என்று சிலர் எதிர்வாதம் செய்கிறார்கள்.

ஒரு முதலாளி நட்டமடைந்து வாங்கி கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவரை மோசடிப் பேர்வழி என்று குற்றம் சாட்டி, நெருக்கடி கொடுப்பது தவறான உத்தி என்கிறார் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய். வங்கிக் கடனை வசுலிக்க இது போன்று நெருக்கடி கொடுத்தால், அது இந்தியப் பொருளாதாரத்துக்கே நெருக்கடியாகிவிடும் எனப் பயமுறுத்துகிறார்கள் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள்.

mallya-bank-money-7நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, இன்று 5 தொழில் துறைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் இதனால் வாராக்கடன் பிரச்சினையை நெளிவுசுழிவாகத்தான் கையாள வேண்டுமென்கிறார். ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டால், பொருளாதாரத்தில் நிலைகுலைவு ஏற்படும் என்று எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி.

இவர்கள்தான் “அரசாங்கத்திடம் தொழில் நடத்துவற்கான திறமை கிடையாது, தனியார் முதலாளிகளிடம்தான் தொழில் முனைப்பும் திறமையும் அனுபவமும் இருக்கிறது” என்று வாதிட்டு, ஆட்சியாளர்களின் தனியார்மய நடவடிக்கைகளை ஆதரித்தனர். இப்போது தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட பிறகு, தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்கிகள் கடனைத் திருப்பிக் கேட்கக் கூடாது என்கிறார்கள். கடனைச் செலுத்துமாறு நெருக்குதல் கொடுத்தால் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள். மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் நடத்தும் சிறு தொழில் முதலாளிகள் இப்படி பேச முடியுமா?

தொழிலதிபர் விஜய் மல்லையா
பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ரூ. 9,000 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட சீமைச்சாராயத் தொழிலதிபர் விஜய் மல்லையா

சாராய முதலாளியான விஜய் மல்லையா நடத்திவந்த கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு ரூ. 7,500 கோடி கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள், அந்த நிறுவனம் தள்ளாடத் தொடங்கியதும், அந்நிறுவனம் உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ. 1,600 கோடியை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளாமல், அந்நிறுவனத்தின் பங்குகளாகப் பெற்றுக் கொண்டன. அதுவும் அப்பங்குகளின் சந்தை விலையைவிட கூடுதலான விலைக்கு வாங்கிக் கொண்டன. இது மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் கடனும் ‘மறு ஒழுங்கமைப்பு’ செய்யப்பட்டது. இப்போது விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் திவாலாகிவிட்டது. கடன் கொடுத்த வங்கிகளோ, தாங்கள் கொடுத்த கடனுக்கு ஈடாக திவாலாகிப் போன கிங் பிஷர் நிறுவனத்தின் காகிதப் பங்குகளை வைத்துக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. அந்நிறுவனத்தின் இதர சொத்துக்களும் ஏலத்தில் விலை போகாததால் நட்டமடைந்து நிற்கின்றன.

அரசு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனைக் கொடுக்கும்; அரசு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, இலாப உத்திரவாதத்தையும் செய்து கொடுக்கும். இதன் பிற்பாடு தொழிலில் இலாபம் பார்த்து முன்னேற்றத்தைச் சாதித்துவிட்டதாக கார்ப்பரேட் முதலாளிகள் காட்டிக் கொள்வதும், நட்டம் வந்தால் அதை அரசாங்கம்தான் ஏற்க வேண்டுமென்று கையை முறுக்கிக் காரியம் சாதித்துக் கொள்வதும்தான் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் பெருமையாகச் சித்தரிக்கப்படும் முதலாளித்துவத்தின் பராக்கிரமம்.

இதேபோல, தனது அனல் மின் நிலையத்தின் மூலம் மாநில அரசுக்கு மின்சாரத்தை விற்று வந்த டாடா பவர் நிறுவனம், தற்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தனது மின்சாரத்துக்குக் கூடுதல் விலை தரவேண்டுமெனக் கோரியது. “மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால், மின் நிலையத்தை மூடிவிடுவோம்; இதனால் மாநில மின்வாரியத்துக்கு மின்சாரம் கிடைக்காமல் போகும்; அது மட்டுமின்றி, எங்களுக்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளும் திவாலாகிப் போகும்” என்று மிரட்டியது. இதனால் டாடா போன்ற தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ள பொதுத்துறை வங்கிகள், தாங்கள் திவாலாகாமல் இருக்க வேண்டுமானால், மின் கட்டணத்தை உயர்த்துமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிடுகின்றன.

இதுதான் தனியார்மயத்தின் மகிமை. ஊழல், கொள்ளை, மோசடிகளின் ஊற்றுமூலமே தனியார்மயம்- தாரளமயம்தான். இந்த உண்மையை மக்கள் புரிந்து கொண்டு போராடும்போதுதான் மல்லையா போன்ற மோசடி முதலாளிகளையும் அதற்கு துணை நின்ற ஆட்சியாளர்களையும் தண்டிக்க முடியும். காரப்பரேட் முதலாளித்துவக் கொள்ளையை முறியடிக்கவும் முடியும்.

– மனோகரன்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

வீட்டு வேலையும் வேலையே – பெண்களின் மே தின பேரணி – படங்கள்

0
” உழைக்கும் மக்களின் போராட்டம் நீடுழி வாழ்க ” – என்ற பதாகையை தன் கையில் ஏந்தியப்படி நிற்கும் தொழிலாளி.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் மே 2016 தொழிலாளர் தினத்தையொட்டி வெளி நாட்டு தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறையை கண்டித்து ஊர்வலம் நடத்தினர். சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட C189 அமுல்படுத்து என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி, அதாவது வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மற்றும் குறைந்தப்பட்ச ஊதியம் என்பது எங்களின் உரிமை என்ற முழக்கங்களொடு பேரணி நடத்தினர்.

லெபனானில் இரண்டு இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் பலர் வீட்டு வேலை செய்யும் தொழிலாளிகளாக பணிப்புரிகின்றனர் இவர்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாள் போன்ற நாடுகளை சார்ந்தவர்கள். தங்களுடைய முதலாளிகளின் வெளிப்படையான கடிதமின்றி இவர்கள் எந்த காரணத்திற்காகவும் நாட்டை விட்டு வேளியேற முடியாது, இந்நிலை அவர்களை மேலும் மேலும் அதிக சுரண்டலுக்கு ஆளாக்குகிறது.

லெபனானில் இவர்கள் மீது அப்பட்டமான அத்துமீறல் நடைபெறுகிறது. குறிப்பாக வேலை நேரத்தை அதிகரிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது, அடிப்பது, துன்புறுத்துவது, பாலியல் ரீதியில் சித்ரவதை, எங்கும் செல்ல முடியாமல் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்வது என தொடர்கிறது. லெபனான் தொழிலாளர் சட்டம் இவர்களுக்கு பாதுக்காப்பு வழங்க மறுக்கிறது. கடந்த வருடம் தங்களின் நிலைமைக்காக போராட, இந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்காக ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி போராடி வருகின்றனர்.

இந்த வருட மே தினத்தில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பேரணி நடத்தினர்.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
KAFA என்ற மனித உரிமைகள் குழுவின் அறிக்கையில் இங்கு 62 சதவிகித புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்கள் இடைவேளையின்றி 16 லிருந்து 20 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
KAFA என்ற மனித உரிமைகள் குழுவின் அறிக்கையின் படி இங்கு 62 சதவிகித புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்கள் இடைவேளையின்றி 16 லிருந்து 20 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பல தொழிலாளிகள் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து வீட்டு காவலில் அடைத்து சித்ரவதை செய்யப்படுகின்றனர்.
இங்கு வேலைப்பார்க்கும் பல தொழிலாளிகளின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து வீட்டு காவலில் அடைத்து சித்ரவதை செய்யப்படுகின்றனர்.
” உழைக்கும் மக்களின் போராட்டம் நீடுழி வாழ்க ” – என்ற பதாகையை தன் கையில் ஏந்தியப்படி நிற்கும் தொழிலாளி.
” உழைக்கும் மக்களின் போராட்டம் நீடுழி வாழ்க ” – என்ற பதாகையை தன் கையில் ஏந்தியப்படி நிற்கும் தொழிலாளி.
எத்தியோப்பியாவை சேர்ந்த ஒரு ஆண் தொழிலாளி “ எங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், இங்கு நிறைய பேர் பல்வேறு பிரச்சினை கொண்டுள்ளார்கள், எனக்கு தெரிந்து பல பெண்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எங்களின் உரிமைக்கான குரல் இது ”
எத்தியோப்பியாவை சேர்ந்த ஒரு ஆண் தொழிலாளி கூறுகையில் “ எங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், இங்கு நிறைய பேர் பல்வேறு பிரச்சினை எதிர் கொள்கிறார்கள், எனக்கு தெரிந்து பல பெண்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எங்களின் உரிமைக்கான குரல் இது ”
அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என முழக்கமிட்டனர்
அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் கொண்டுவர
வேண்டும் என பேரணியில் முழக்கமிட்டனர்
மாலியிருந்து வேலைக்காக இங்கு வந்த பிண்டா ”என்னுடைய சம்பளம் மிக குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் நான் வேலை பார்க்கிறேன். 2 வாரங்களுக்கு ஒரு ஞாயிறு மட்டும் தான் விடுப்பு அளிக்கபடுகிறது இருப்பினும் ஒரு மாதத்திற்கு 200 டாலர்கள் தான் எனக்கு கொடுக்கிறாங்க அதனாலதான் நான் இங்க இருக்கிறேன்”
மாலியிருந்து வேலைக்காக வந்த பிண்டா ”என்னுடைய சம்பளம் மிக மிக குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் வேலை பார்க்கிறேன். 2 வாரங்களுக்கு ஒரு ஞாயிறு மட்டுமே விடுப்பு அளிக்கபடுகிறது இருப்பினும் ஒரு மாதத்திற்கு 200
டாலர்கள் தான் கொடுக்கிறாங்க அதனாலதான் நான் இங்க(பேரணியில்) இருக்கிறேன்”
மொரிசியஸை சார்ந்த மெலிண்டா என்பவர் கூறுகையில் ”எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிர்த்து போராடுவது எனக்கு நன்றாக இருக்கிறது. எங்களுக்கு நல்ல ஊதியமும் விடுப்பும் வேண்டும். லெபனானலில் இனவாதம் அதிகமாக உள்ளது ”
மொரிசியஸை சார்ந்த மெலிண்டா என்பவர் கூறுகையில் ”எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிர்த்து போராடுவது எனக்கு
பிடித்திருக்கிறது. எங்களுக்கு நல்ல ஊதியமும் விடுப்பும் வேண்டும். லெபனானலில் இனவாதம் அதிகமாக உள்ளது ”
KAFA அறிக்கையின் படி இங்கு 82 சத்விகித பெண்கள் வலுக்கட்டாயமாக உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
KAFA அறிக்கையின் படி இங்கு 82 சத்விகித பெண்கள் வலுக்கட்டாயமாக கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
அரபு நாட்டில் முதல் முறையாக புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்கள் கடந்த வருடம் தொழிற்சங்கத்தை நிறுவினர். இன்னும் இச்சங்கம் லெபனான் அரசால் அங்கிகரிக்கப்படவில்லை.
அரபு நாட்டில் முதல் முறையாக புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்களால் கடந்த வருடம் நிறுவப்பட்ட இத்தொழிற்சங்கம் இன்னும் லெபனான் அரசால் அங்கிகரிக்கப்படவில்லை.
மொரிசியஸை சார்ந்த ஜாக்கி என்பவர் கூறுகையில் ” கடந்த 20 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். என்னுடைய பாஸ்போர்ட் முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல எனக்கு நீதி வேண்டும்”
மொரிசியஸை சார்ந்த ஜாக்கி என்பவர் கூறுகையில் ” கடந்த 20 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். என்னுடைய பாஸ்போர்ட்
முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல. எனக்கு நீதி வேண்டும்”
போராட்டக்காரர்கள் முதலாளிக்கு ஆதரவாக இருக்கும் கபால அமைப்பு நீக்க வேண்டும் கோரினர்
போராட்டக்காரர்கள் முதலாளிகளின் சுரண்டலை ஏவிவிடும் கபால அமைப்பை நீக்க வேண்டும் கோரினர்
இறுதியாக ஆடல் பாடலுடன் பேரணி நிறைவுற்றது
இறுதியாக ஆடல் பாடலுடன் பேரணி நிறைவுற்றது

தொகுப்பு: கலா

நன்றி: அல் ஜசீரா

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்

0

விஜய் மல்லையாவின் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் இந்த அரசை அம்பலப்படுத்தும் வகையில் அற்புதமானதொரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார், மும்பை நகரைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலி என்ற பெண்.

பிரேமலதா பன்சாலி மார்ச் 22-ம் தேதியன்று மும்பை புறநகர் ரயிலில் வேண்டுமென்றே பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தார். பயணச்சீட்டு ஆய்வாளர் 260 ரூபாய் அபராதம் விதிக்க, அதனைக் கட்ட முடியாது என்று கூறிய பன்சாலி, “மல்லையாவிடம் 9,000 கோடி ரூபாயை வசூல் செய்யத் துப்பில்லாத அரசுக்கு என்னிடம் அபராதம் கேட்க என்ன அருகதை இருக்கிறது?” எனத் திருப்பி அடித்தார். நிலைய அதிகாரி முதல் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் வரை அனைவரும் அவரிடம் பேசிப் பார்த்தனர்; பன்சாலியின் கணவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து சமாதானம் பேச முயன்றனர். எதற்கும் பன்சாலி மசியவில்லை.

பிரேமலதா பன்சாலி
பிரேமலதா பன்சாலி

“இக்குற்றத்துக்கு 1,500 ரூபாய் அபராதம் போட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் 460 ரூபாயாகக் குறைக்கிறேன். கட்டாவிடில், ஒரு வாரம் சிறைத் தண்டனை” என நைச்சியமாக மிரட்டிப் பார்த்த நீதிபதியிடம், “ஆறு மாதமோ, ஒரு வருடமோ சிறைக்கு அனுப்புங்கள். நான் பணம் கட்ட மாட்டேன். மல்லையாவிடம் பணத்தை வசூல் செய்யுங்கள் பார்ப்போம். ஏழைகள் என்றால் உங்களுக்கெல்லாம் கிள்ளுக்கீரையா?” என்று கேள்வி எழுப்பி சிறை வாசத்தை அனுபவித்திருக்கிறார் பன்சாலி. இந்தச் செய்தி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்து, அதிகார வர்க்கத்தையும் ஆளும் வர்க்கத்தையும் நெளியச் செய்திருக்கிறது.

பன்சாலி, ஒரு மேல்தட்டு நடுத்தர வர்க்கப் பெண். இரண்டு குழந்தைகளின் தாய். தன்னைச் சுற்றி நடக்கும் நாட்டு நடப்புகளைப் பார்த்துக் கொதிப்படைந்து, தனக்குப் புரிந்த நியாயத்தை எல்லோருக்கும் புரிய வைக்க முயன்றிருக்கிறார். “இந்த நாட்டில் பணக்காரனைக் கட்டுப்படுத்த எந்தச் சட்டமும் கிடையாது. எல்லா சட்டமும் ஏழைக்குத்தான். அவன் மதிக்காத சட்டத்தை நான் ஏன் மதிக்க வேண்டும்” என்பதுதான் பன்சாலி எழுப்பியிருக்கும் கேள்வி. அந்தக் கேள்வியின் நியாயம்தான் ரயில்வே அதிகாரிகள் முதல் நீதிமன்றம் வரையில் அனைவரையும் தடுமாற வைத்திருக்கிறது. இவர்களுடைய சட்டத்தில் நியாயம் இல்லை என்பதை அம்பலமாக்கியிருக்கிறது.

ஒரத்தநாடு விவசாயி போலீசால் தாக்கப்பட்ட சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். இச்சம்பவத்தை மல்லையா விவகாரத்துடன் ஒப்பிட்டுப் பலரும் எழுதினர். கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. விசயம் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அம்பலமாகவே, வங்கி பின்வாங்கியது. ஆனால், அந்தப் பிரச்சினை விவசாயிகள் என்ற வர்க்கத்தின் பிரச்சினையாக எழும்புவதற்குப் பதிலாக, ஒரு தனிப்பட்ட விவசாயி விசயத்தில், தனிப்பட்ட ஒரு வங்கிக்காக, தனிப்பட்ட ஒரு போலீசு அதிகாரி நடத்திய அத்துமீறலாக முடிந்து விட்டது.

ஒரத்தநாடு விவசாயி தாக்கப்பட்ட விவகாரமாகட்டும், மல்லையா தப்பியோடிய விவகாரமாகட்டும், முத்துக்குமாரசாமி, விஷ்ணுப்பிரியா தற்கொலைகளாகட்டும், எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் மர்ம மரணமாகட்டும் – இவையனைத்தும், இந்த அரசமைப்பின் தோல்வியை வெவ்வேறு விதங்களில் பறைசாற்றுகின்றன. குடிநீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக அதிகரித்துவரும் போராட்டங்களை அதிகார வர்க்கம் கண்டு கொள்வதில்லை. புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள் போராட்டத்துக்காக ஒதுக்கப்படுகின்றன.

பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்
2. தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைத் திரும்ப்ப் பெறுவதில் செய்யப்பட்ட மாறுதல்களை எதிர்த்து, அரசை நிலைகுலையச் செய்யும் வண்ணம் நடந்த பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்

இந்தப் புறக்கணிப்பை மீறித் தங்களது கோரிக்கையின்பால் அரசின் கவனத்தையும் ஊடகங்களின் கவனத்தையும் ‘ஈர்க்க வேண்டும்’ என்பதற்காக மொட்டை போடுதல், கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், ஒப்பாரி உள்ளிட்ட சுயமரியாதைக் கேடான வடிவங்களில் ‘போராட்டங்கள்’ நடத்தப்படுகின்றன. இத்தகைய ‘வித்தியாசமான’ போராட்டங்களும் நாளடைவில் ஊடகங்களின் பார்வையிலேயே வித்தியாசமற்றவை ஆகிவிடுவதால், ஊடகங்களும் இவற்றைப் புறக்கணிக்கின்றன. புறக்கணிப்பால் மனம் நொந்து போகின்ற சசி பெருமாள் போன்றவர்கள் அலைபேசிக் கோபுரத்தில் ஏறுகிறார்கள். எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். பலர் தீக்குளிக்கிறார்கள்.
அரசின் கவனத்தை “ஈர்ப்பதற்குத்தான்” போராட்டங்கள் என்று கருதிக் கொண்டிருப்போர் சிந்திக்க வேண்டும். எஸ்.வி.எஸ். கல்லூரிக் கொள்ளை, டாஸ்மாக், முத்துக்குமாரசாமியை சாவுக்குத் தள்ளிய இலஞ்சம் ஆகிய அனைத்தும் அரசாலும் ஆட்சியாளர்களாலும் தெரிந்தே இழைக்கப்படும் குற்றங்களல்லவா? குற்றவாளியான இந்த அரசின் கவனத்தை ஈர்த்து என்ன பயன்? இந்த அரசையும் அரசுக் கட்டமைவையும் அம்பலப்படுத்தும் வகையிலான போராட்டங்களை, அதன் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான போராட்ட வடிவங்களை நாம் கண்டறிய வேண்டும். பிரேமலதா பன்சாலியின் போராட்டம் அந்த வகையில் நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்
2. தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைத் திரும்ப்ப் பெறுவதில் செய்யப்பட்ட மாறுதல்களை எதிர்த்து, அரசை நிலைகுலையச் செய்யும் வண்ணம் நடந்த பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்

ஏப்ரல் 18, 19 தேதிகளில் நடைபெற்ற பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான போர்க்குணத்துக்கு ஒரு சான்று. “பத்து ஆண்டுகள் பணியாற்றிய பின் ஆட்குறைப்பினால் வெளியேற்றப்பட்ட ஒரு தொழிலாளி, அவருக்கு 58 வயது ஆகும் வரை அந்தப் பத்து ஆண்டுகளில் தனது வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்திருக்கும் தொகையை எடுக்க முடியாது” என்றொரு விதியை மோடி அரசு அறிமுகப்படுத்தியது.

தொழிலாளிகள் தங்களது சேமிப்பை எடுத்து செலவு செய்து விட்டு கடைசி காலத்தில் வறுமையில் வாடுவதால், அவர்களது வருங்கால நலனைக் கணக்கில் கொண்டுதான் இத்திருத்தத்தை கொண்டு வந்ததாகக் கூறியது மோடி அரசு. இந்த திருத்தத்தின்படி, ஒரு தொழிலாளி எத்தனை கம்பெனி மாறினாலும் அவரது வைப்பு நிதிக் கணக்கு 58 வயது வரை மாறாது. 40 வயதுக்கு மேல் வேலையே கிடைக்காமல் போனாலும் 58 வயது வரை தன்னுடைய சேமிப்பை அவர் எடுக்க முடியாது என்பதுதான் இந்த விதி.

ஏற்கெனவே தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியில் தம் பங்கை செலுத்தாத முதலாளிகளுக்கு சலுகை செய்யவும், தொழிலாளிகளின் சேமிப்புப் பணத்தை தன் கையிருப்பாக வைத்துக் கொண்டு திவாலாகிக் கொண்டிருக்கும் அரசு கஜானாவைக் காப்பாற்றிக் கொள்ளவும் போடப்பட்டிருக்கும் இந்த அயோக்கியத்தனமான திட்டத்தை எதிர்த்துத்தான் பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளிகள் கிளர்ந்தெழுந்தார்கள்.

சுமார் 8 இலட்சம் ஆயத்த ஆடை தொழிலாளிகளைக் கொண்ட பெங்களூரு நகரில், ஒசூர் சாலை, எலக்ட்ரானிக் சிட்டி, மைசூரு சாலை உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் தொழிலாளர்களால் நிரம்பின. தொழிலகங்கள் நொறுங்கின. பேருந்துகள் எரிந்தன, போலீசு நிலையமும் எரிந்தது. துப்பாக்கிச் சூடு நடந்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த விதியை அமல்படுத்துவதை உடனே தள்ளி வைப்பதாக மறுநாளே மோடி அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று. காரணம், போராட்டத் தீ நாடெங்கும் பரவி விடுமோ என்ற அச்சம். “தொழிலாளிக்கு ஒரு வேலையும், பணிப் பாதுகாப்பும், நியாயமான ஊதியமும் தர வக்கில்லாத அரசுக்கு, என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?” என்ற ஒரு கேள்வியில் தங்களது போராட்டத்தின் நியாயத்தைக் கூறினார் ஒரு தொழிலாளி. மல்லையாவிடம் வசூலிக்கத் துப்பில்லாத அரசுக்கு என்னிடம் அபராதம் கேட்க என்ன அருகதை உள்ளது என்று கேட்டார் பன்சாலி.

பெங்களூரு தொழிலாளியும், மும்பை பன்சாலியும் எழுப்பும் கேள்விகளைத்தான் போராடும் மக்கள் கவனிக்கவேண்டும். இவைதான் நம் போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்க வேண்டும்.

– அஜீத்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

அரவக்குறிச்சி மட்டும் என்ன பாவம் செய்தது ?

3

“….தேர்தல் முறையில் உடனடியாக எதையாவது செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் இல்லையேல் இது ஜனநாயகத்துக்கே ஆபத்தாக வந்துவிடும்”. – அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்படதை தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிட்டார் பா.ஜ.க-வின் தமிழிசை சவுந்தர்ராஜன்.

“கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கவலையுடன் சொல்கிறது” என்கிறார் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தியாகச் செம்மல். இப்படியாக விதியின் மேலும், கடவுளின் மேலும் பாரத்தை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் ஜனநாயகக் காவலர்கள்.

எதையாவது செய்யவேண்டும் என்று கூறுபவர்களுக்கும், கூறப்படுபவர்களுக்கும்என்ன செய்வது என்று தெரியவில்லை. எதை செய்தாலும் அது முட்டுச்சந்தில் போய் நிற்கிறது. அதில் ஒன்று தான் அரவக்குறிச்சியில் தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் ஒரு அறிவிப்பு.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 144 தடையுத்தரவு பிறப்பித்து பணப்பட்டுவாடா செய்ய துணை நின்ற தேர்தல் ஆணையத்திற்கு திடீரென்று என்னவாயிற்று? நியாயவானாக மாறிவிட்டதா? இல்லை என்பதை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பே சொல்கிறது.

EC_1
அன்புநாதன் வீட்டில் நடந்த சோதணை

இந்த தள்ளிவைப்புக்கு காரணமாக தேர்தல் ஆணையம் கூறுவது இத்தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடப்பதாகவும் அ.தி.மு.க அமைச்சர்களின் பினாமி அன்புநாதன் இடங்களிலும், தி.மு.க-வின் கே.சி.பழனிச்சாமி வீட்டிலும் நடந்த சோதனைகளையும் குறிப்பிட்டுள்ளது. ஏப்.22 அன்றுஅன்புநாதன் இடத்தில் சோதனை நடந்து மையப்படுத்தப்பட்ட முறையில் தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ்களில் பணம் கடத்தப்பட்டது தெரியவந்தது. அப்பொழுதும் தேர்தலை தள்ளிவைக்கவோ, அன்புநாதன் உள்ளிட்ட அதிமுக பினாமிகளையும், அதன் தலைமையையும் கைதுசெய்யவோ தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தி.மு.க-வின் கே.சி.பழனிச்சாமியும் அ.தி.மு.க-விற்கு இணையாக பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவல் ஜெயலலிதாவை மட்டுமல்ல தேர்தல் ஆணையத்தையும் பதைபதைக்க வைத்திருக்கவேண்டும். இந்த பின்னணியில் தான் அம்மா தேர்தல் ஆணையம் களத்தில் குதித்திருப்பதாக கருதவேண்டியிருக்கிறது.

தமிழகம் முழுக்க ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வார்டிலும் எந்த கட்சி எவ்வளவு பணப்பட்டுவாடா செய்கிறது என்பதை கடைக்கோடி தமிழனும் அறிந்திருக்கும் போது, கோட்டை கொத்தள, படை, பரிவாரங்களோடு இருக்கும் தேர்தல் ஆணையத்துக்கோ அரவக்குறிச்சி மட்டும் தான் தெரிகிறது; இல்லை அது மட்டும் தான் என நம்மை நம்பச் சொல்கிறது. ஒரு தொகுதியை மட்டும் குறிப்பிட்டு காட்டுவதன் மூலம் மற்ற தொகுதிகளில் பணபட்டுவாடா இல்லாதது போன்ற தோற்றத்தை உண்டாக்க முயற்ச்சிக்கிறது. அவர்களின் நியாயப்படியே பணபட்டுவாடாவை தடுக்கப்பட வேண்டுமானால் எல்லா தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும்.

கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சில வார்டுகளில் மொத்த வாக்காளர்களைவிட அதிக ஓட்டு பதிவாகி அம்பலமானது முதல் தேர்தல் அதிகாரிகளின் வண்டிகளிலேயே பணப்பட்டுவாடா செய்யப்படும் விவரங்கள் ஊடகங்களில் வெளியாவதால் தனது நம்பகத்தன்மை குறைவதை தேர்தல் ஆணையம் உணர்ந்தே இருக்கிறது. அதை சரிக்கட்டவும் நடுத்தரவர்க்கத்திற்கு தேர்தல் மீதிருக்கும் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் தடாலடியாக எதையாவது செய்யவேண்டிய தேவையில் இருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த தடாலடியில் குற்றத்தை கண்டித்து ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே நேரம் குற்றவாளி தப்பிக்கவும் வேண்டும்.
22jan2013-money-in-electionsஇங்கு ஒரு கேள்வி எழுகிறது தேர்தலை தள்ளிவைப்பதினால் அ.தி.மு.க தலைமையும் பழனிச்சாமியும் பணப்பட்டுவாடாவை நிறுத்திவிடப் போகிறார்களா? இல்லை என்பது தேர்தல் ஆணையத்திற்கு நன்றாகவே தெரியும். இந்நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட தேர்தலுக்கு பணப்பட்டுவாடா ஆரம்பிக்கப்பட்டிருக்கும். எனில் தள்ளிவைக்கப்பட்டதினால் என்ன பலன்?

வீட்டில் அடிவாங்கும் கவுண்டமணி தான் அடிகொடுப்பது போல சத்தமிட்டு ஊராரை நம்பவைப்பார். அதை நினைவுபடுத்துகிறது தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கை. ஊடகங்களோ கைப்புள்ளையின் வீரத்தை சிலாகிக்கின்றன. இதை மாபெரும் நடவடிக்கையாக காட்டுகின்றன. “இந்த நடவடிக்கை மற்ற தொகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக இருக்கும் என்கிறார் பாண்டே. இதன் மூலம் நியாயமான தேர்தல் சாத்தியம் என்று மக்களை நம்ப சொல்கிறார். இப்படி மக்களை ஏமாற்றி தேர்தல் கமிசன் கறாரானவர்கள் என்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க இத்தகைய ஊடக மாமாக்கள் பாடுபடுகிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் தேர்தல் முறை ஆரம்பித்த காலத்தில் இருந்த தேர்தல் முறைகேடுகள் தற்போது ஒரு உச்சத்தை எட்டியிருக்கிறது. 1952 தேர்தலிலேயே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் இருந்ததை பலரும் எழுதியுள்ளார்கள். தன் தந்தையே அப்படி பணம் கொடுத்ததாக பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் இந்து இதழில் எழுதியிருக்கிறார். பதவிக்காக கட்சி மாறுவது, மாற்று அணிக்கு வாக்களிப்பது எல்லாம் ராஜாஜியின் சுயராஜ்ய கட்சி காலத்திலேயே இங்கு நிலைபெற்றுவிட்டது. அதன் வளர்ச்சி போக்கில் சாராயம், கள்ள ஓட்டு என்று பரிணமித்து இன்று மக்களும் பங்குபெற்று ஓட்டுக்கு எவ்வளவு என்று கேட்டு வாங்கும் நிலை வந்திருக்கிறது. உள்ளாட்சிகளின் நிலையோ இன்னும் பரிதாபம். ஐ.பி.எல்-க்கு முன்னதாகவே அங்கு பதவிகளை ஏலமிடும் முறை அமல்படுத்தப்பட்டுவிட்டது. தேர்தல் முறையில் இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது புதியதாக தோன்றியதல்ல. இதை திராவிட இயக்கம் மட்டுமே உருவாக்கிய ஊழல் என்று கூறுவது முழுப் பொய்.

அனைவரும் பங்கு பெறும் தேர்தல்; அனைவருக்குமான அரசு என்ற போர்வையில் தனது அதிகாரத்தை செலுத்திவருகிறது ஆளும் வர்க்கம். அதனால் தேர்தல் கட்டுமான சீரழிவு என்பது ஒட்டு மொத்த அமைப்பிற்கு நல்லதல்ல என்ற அடிப்படையில் சில சில்லறை சீர்திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக சீன் போடுகிறார்கள். உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தேர்தல் கமிஷன் தன்னைத்தானே தூக்கில் போட்டுக் கொள்ளவேண்டும்.

தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்க வேட்பாளர் இவ்வளவு தான் செலவு செய்யவேண்டும் என்று வரம்பை நிர்ணய் செய்தார்கள். 1461419117-2979ஆனால் ரிசர்வ வங்கி கவர்னரே தேர்தல் நேரத்தில் 50,000 கோடி ரூபாய் அளவிற்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்கிறார். வேட்பாளர்கள் சொத்து கணக்கை காட்டவேண்டும் என்றது தேர்தல் ஆணையம். தனக்கு வீடே இல்லை, வண்டியில்லை என ஊர்களையும், இயற்கை வளங்களையும் முழுங்கிய மகாதேவன்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்கிறார்கள்.
இத்தனைக்கு பிறகும் 234 தொகுதிகளில் 553 பேர் கோடீஸரரர்கள், 283 பேர் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள்.

தேர்தலில் பணப்புழக்கத்தை தடுப்பதாக கூறி பறக்கும் படை அமைத்தார்கள். ஆனால் தேர்தல் அதிகாரிகளின் வண்டிகளில் தான் கடத்தப்படுவதாக பத்திரிகைகள் அம்பலப்படுத்துகின்றன. தானே பணப்பட்டுவாடா செய்வதற்கு உதவியும் செய்துவிட்டு மறுபுறம் நியாயமாக வாக்களிப்பதை விளம்பரப்படுத்த பல கோடிகளை செலவிடுகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் அலுவலரை கொண்டு பணம் வாங்காமல் வாக்களிப்பேன் என மக்களை உறுதிமொழி ஏற்க வைக்கிறார்கள்.நேற்று வரை ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு என்று லஞ்சம் வாங்கிய அதிகாரி ஓட்டுக்கு பணம் பெறுவது பாவம் என்று பிரச்சாரம் செய்வதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள். லஞ்சத்தில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் போலீஸ், வருவாய்துறையுடன் இணைந்து ஓட்டுக்கு பணம் பெறும் லஞ்சத்தை ஒழிக்க போகிறதாம் தேர்தல் ஆணையம்.

எவ்வளவு முக்கினாலும் தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் பூமராங்காக திரும்புகிறது.

தேர்தலின் மீதான் மக்களின் மாயைகள் தகர்ந்து வருவதற்கேற்ப ஓட்டை பணத்திற்கு விற்பதும் அதிகரித்து வருகிறது. நேர்மறையில் இந்த அமைப்பின் தோல்வியை உணர்ந்து அதற்கான மாற்று என்ன என்பது குறித்து மக்கள் சிந்திக்காமல் இருக்கிறார்கள். ஆனால் எதிர்மறையில் இந்த அமைப்பினால் தங்களுக்கு எதுவும் நடக்கபோவதில்லை என்பதை தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்கள். ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் நம்ப சொல்வது போல விரல் நுனியில் அதிகாரம் இருக்கிறது என்றோ, தேர்தல் தான் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்க போகிறது என்றோ மக்கள் நம்பத் தயாரில்லை. வந்த வரை லாபம் என்ற வகையில் பணம் வாங்குகிறார்கள். இப்படியாக வெளிப்படையாக ஓட்டுப் பொறுக்கிகளின் ஊழலுக்கு கணிசமான மக்களும் பலியாகியிருக்கிறார்கள்.

தங்கள் உறவினர்களிடம் பேசி அவர்கள் ஊரில் ஒரு ஓட்டிற்கு எவ்வளவு தருகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு தன் ஊரில் தருவதை சரிபார்த்துகொள்கிறார்கள். குறைந்தால் அது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி என்பது ஒட்டு மொத்த சமூக கட்டமைப்பின் நெருக்கடியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

cashfrvote_sanjeevகுடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து கல்வி மருத்துவம் என அனைத்தும் விற்பனை பொருளாகிவிட்ட ஒரு நாட்டில் தற்போது ஓட்டும் விற்பனை பொருளாகியிருக்கிறது. இது இந்த அமைப்பு முறை சீரழிவின் இயல்பான நீட்சி. முன்னதை சிலாகிக்கும் ஆளும்வர்க்கத்தினால் பின்னதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நியாமான தேர்தல் என்பதில் தான் அவர்களது சர்வாதிகாரம் மறைந்திருக்கிறது.

அரசு அதன் கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் சந்தை தான் தீர்மானிக்கும் என்பது உலகமயத்தை அமல்படுத்திய முதலாளித்துவத்தின் கொள்கை. இதை ஆதரிக்கும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகளோ மக்கள் மட்டும் தங்கள் ‘ஜனநாயக’ கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பங்குச் சந்தையின் விதி ஓட்டுக்கு மட்டும் பொருந்தாமல் போய்விடுமா என்ன?அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த வாக்கெடுப்பில் எம்.பி.களின் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது

கருப்பு பண சினிமா நடிகர்கள் முதல் ஊழல் ஐ.பி.எல்-ல் சம்பாதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரையும் அழைத்து வந்து ஜனநாயகத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார்கள். வேட்டி முதலாளி முதல் ரியல் எஸ்டேட் சமூக விரோதிகள் வரை தேர்தல் விளம்பரங்களை சமூக நலன் கருதி வெளியிடுகிறார்கள். எஃப். எம் மொக்கை காம்பியர்கள் முதல் முட்டாள் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் வைத்து அறிவுரை மழை பொழியச் செய்தாயிற்று. பீப் சிம்பு தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறாராம்; காலக்கொடுமை. இப்படி சொல்லிவைத்தாற் போல எல்லா சமூக விரோதிகளும் போலி ஜனநாயாகத்தின் மீதான தங்களின் தீராக் காதலை வெளிப்படுத்தி தேர்தல் கமிசனுக்கு துணை நிற்கிறார்கள். ஓட்டு போடவில்லை என்றால் தெய்வ குற்றம் என்ற அளவுக்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இறுதியில் இவர்களே கொன்றுவிட்ட பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு உயிர் இருப்பதாகவும், அதை நம்புவது கடமை என்பதாகவம் இன்னும் எத்தனை நாளைக்கு கூவுவார்கள்?

– ரவி.

பிற்சேர்க்கை:

சரக்கடிக்கும் உரிமையே ஜனநாயக உரிமை !

prohibtion election commissionதேர்தலை ஒட்டி மே 14,15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களும் வாக்கு எண்ணிக்கை நாளான 19-ம் தேதியும் சாராயக்கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்ற சகல ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் தொண்டர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

நான்கு நாட்கள் சிறைப்பட்ட ஜனநாயகத்தால் குடிமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் இப்போதே சரக்கை வாங்கி குவித்து வருவதால் டாஸ்மாக் விற்பனை 37 சதவீத அளவுக்கு தாறுமாறாக எகிறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் மல்லி நகர் ஹவுசிங் பகுதி பா.ம.க பிரமுகர் பிரகாஷ், சுமார் 396 குவாட்டர் ஜனநாயகத்தை தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். மதுவிலக்கு கொள்கையின் ஏகபோக உரிமையாளர்களான பா.ம.க பத்தடி பாய்வதைப் பார்த்துக் கொண்டு அ.தி.மு.க சும்மா இருக்குமா? திருவண்ணாமலை ஆரணி தொகுதிக்கு உட்பட்ட தேவிகாபுரம் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவரான ராதா ஜெயபாலனின் மகனான வெங்கடேசன் 1,512 பாட்டில்களைப் பதுக்கி வைத்துள்ளார்.

கற்றோருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதைப் போல் ஜெயலலிதா செல்லுமிடமெல்லாம் ஜனநாயகம் செழித்து ஓங்குகிறது. அவர் பிரச்சாரம் செய்யும் ஊர்களில் எல்லாம் டாஸ்மாக் விற்பனை பல மடங்கு அதிகரித்து ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது. தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்யும் ஊர்களிலெல்லாம் டாஸ்மாக் விற்பனை எக்குத்தப்பாக எகிறியுள்ளதை பாலிமர் செய்தித் தொலைக்காட்சி அறிவிக்கிறது. தே.மு.தி.க-வைப் பற்றி புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இவர்களே மதுவிலக்கு அமல்படுத்தப் போவதாக சொல்வது ஒரு புறம் இருக்க, டாஸ்மாக் விடுமுறையால் மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் ஐந்து பாட்டில்கள் வரை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அக்கறையோடு அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

சரக்கடித்து மட்டையாகும் ஜனநாயக உரிமையை நிலைநாட்டி உள்ளதால் இனிமேல் தேர்தல் கமிசனுக்கு சரக்கை மீட்ட ஜனநாயகப் போராளி என்று பட்டம் கொடுக்கலாம்.

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்தி

இணையுங்கள்:

ராஜேஷ் லகானியிடம் கேள்வி கேட்கும் ஒரு ஐ.டி ஊழியர்

6

ஐ.டி ஊழியர் ஒருவர் தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி ராஜேஷ் லகானிக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தின் தமிழ் வடிவம்

மதிப்புக்குரிய ராஜேஷ் லகானி சார்,

நான் சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறேன். “தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம்” என்று தமிழ்நாடு எங்கும் 1.7 கோடி பேரை நீங்கள் உறுதி மொழி எடுக்க வைத்ததாக செய்தியில் பார்த்தேன். நல்ல விஷயம்.

ராஜேஷ் லகானி
சார், இன்னும் சில விஷயங்களிலும் சில நபர்களை உறுதிமொழி எடுக்க வைக்க நீங்கள் ஏற்பாடு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சார், இன்னும் சில விஷயங்களிலும் சில நபர்களை உறுதிமொழி எடுக்க வைக்க நீங்கள் ஏற்பாடு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் வேலை செய்யும் கம்பெனியிலும் சரி,எனது நண்பர்கள் வேலை செய்யும் இன்னும் பல கம்பெனிகளிலும் சரி, எப்போது வேலையை விட்டு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தோடேயே இருக்கிறோம். என்னுடைய அண்ணன் வேலை செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு யூனியன் இருக்கிறது, ஆனால், அது போன்று எங்களுக்காக ஒரு யூனியன் அமைத்துக் கொள்வதற்கு ஐ.டி கம்பெனிகள் தடை போடுகின்றன. எங்களை திடீரென்று வேலையை விட்டு தூக்க மாட்டோம் என்றும், யூனியன் வைப்பதற்கான எங்களது ஜனநாயக உரிமையில் தலையிட மாட்டோம் என்று ஐ.டி கம்பெனி முதலாளிகளை உறுதி மொழி எடுக்க வைக்க உங்களால் முடியுமா,சார்?

அடுத்ததாக, ஏரி, குளம், ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருக்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்,அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள்,தனியார் எஞ்சினியரிங் காலேஜ்கள் ஆகியோரை அவற்றை காலி செய்து கொடுத்து விடுவதாக உறுதி மொழி எடுக்க வைப்பீங்களா? சென்ற டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் என்னுடைய பைக் முழுகிப் போய் ரிப்பேர் ஆகி விட்டது. 12,000ரூபாய் செலவழித்த பிறகும் இன்னும் சரியாகவில்லை. மழை வெள்ளம் சூழ்ந்த 3-4நாட்களில் கரண்ட், சரியான சாப்பாடு,மொபைல் கனெக்சன் கூட இல்லாமல் அவதிப்பட்டோம். இன்னொரு முறை இது போல கனமழை பெய்தால் என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது. தேர்தலில் 100% வாக்களித்தால் இந்த நிலைமை மாறி விடும் என்று நீங்க உத்தரவாதம் கொடுக்க முடியுமா, சார்?

தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விட்டன என்று படித்தேன். மேலும், 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடனை திருப்பிக் கட்டாத மல்லையா நாட்டை விட்டே ஓடிப் போய் விட்டார். அதை அரசாங்கமோ, சி.பி.ஐ-யோ,உச்சநீதிமன்றமோ கூட தடுக்க முடியவில்லை. ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் பொய்யான கணக்கு ஒன்றை காட்டி உயர்நீதிமன்றத்தில் அவரை விடுவித்து விட்டார்கள். நான் உங்களிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், எல்லா நீதிபதிகளும், கலெக்டர்களும், மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், போலீசும் ஊழலை செய்வதை நிறுத்தி விட்டு, ஊழல் செய்பவர்களை தண்டிப்போம் என்று உறுதி எடுக்க வைப்பீர்களா? அப்படி எதுவும் நடக்காத போது நாங்கள் ஓட்டு போட்டு என்ன ஆகி விடப் போகிறது?

தேர்தல் பணக் கைப்பற்றல்
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும்,வேட்பாளர்களும் நூற்றக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறார்கள்.

நான் 4 வருடங்களுக்கும் மேலாக ஐ.டி துறையில் வேலை செய்கிறேன். சமூகத்தில் 90% மக்களை விட எனக்கு அதிக வருமானம் வருகிறது. இருந்தும், நான் 1 கோடி ரூபாயை கண்ணால் கூட பார்த்ததில்லை. ஆனால்,தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும்,வேட்பாளர்களும் நூற்றக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? அவர்களிடம் அது பற்றி விசாரிப்பதற்கு பதிலாக, ஓட்டுப் போட பணம் வாங்காதீர்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்வதில் என்ன பலன்?

அரசியல் கட்சிகளின் தலைவர்களில் ஆரம்பித்து எல்லா அரசியல் வாதிகளையும் ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வையுங்கள். மேலும், அவர்களை கைது செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்து சிறையில் அடையுங்கள். ஆனால், இந்தத் தலைவர்களை பிடிப்பதற்கு யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, உங்கள் தலைமையிலான தேர்தல் கமிஷன் அவர்களில் ஒருவருக்கே வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும்படி பல நூறு கோடி ரூபாய் செலவில் பிரச்சாரம் செய்து வருகிறது. நான் உண்மையிலேயே குழம்பித்தான் போயிருக்கிறேன்.

இன்னும், எதிர்காலத்தை நினைத்தால் கலக்கமாக உள்ளது. நான் சொன்ன விஷயங்கள் குறித்து உங்களிடமிருந்து ஒரு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

உங்கள் நேர்மையுள்ள,

ஒரு சராசரி ஐ.டி துறை ஊழியன்

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொடர்புக்கு : 90031 98576

An Open Letter to Tamil Nadu Chief Election Officer Rajesh Lakhoni from an IT employee

Respected Rajesh Lakhoni Sir,

rajesh-lakhoniI am working in an IT company in Chennai. I saw in news that you made 1.7 crore people to promise not to take money for voting. I was impressed.

Sir, I want some more promises like this from some other people. Will you arrange for them also.

In our company and many other IT companies where my friends work, we are all always scared of losing our jobs. In the factory of my brother, they have a Union, but in IT we are stopped from forming Union by the companies. Will you make all IT companies owners to promise that they will not send us out suddenly and allow employee unions, which is our democratic right?

Secondly, will you arrange all real estate people, politicians, companies and colleges to vacate the lakes, ponds and rivers they have occupied. In December rain water flooding, my bike was completely damaged and even after spending 12,000 rupees it is not in good condition. For those 3-4 days, we faced many difficulties without current, proper food or even mobile connection. I am afraid what will happen in the future when another heavy rain falls. Can you guarantee that 100% voting in the election will change this situation, sir?

I read in a news website that cases in mineral sand scam, granite scam etc got dismissed in courts. Vijay Malya ran away from the country after taking 9,000 crore rupees bank money; the government, CBI or even the supreme court did not stop that. In Jayalalithaa’s corruption case, the high court made some bogus calculations and let her free. Now, my request to you is : Will you arrange all judges, collectors, other IAS officers and police to stop being corrupt and punish the corrupt? Without that, what is the point of us voting?

I am working now for more than 4 years in IT industry and get more money than 90% of my fellow citizens. Even I have not seen 1 crore rupees in cash or had similar amount credited to my bank account. So, how come these parties spend many crores to make people vote? Where do they earn that money? Instead of asking this, what is the point of making people promise that they will not take money for voting?

Either you get all politicians, starting from leaders of political parties, to take a pledge that they will not indulge in corrupt practices, Or catch hold them, take away their money and lock them in jail. But nobody is taking any action to catch hold of these leaders. Instead, election commission headed by you spending hundreds of crores of rupees to get people to vote to the same people. I am really confused.

I am also depressed about the future. I expect a honest reply from you on the issues pointed out by me.

Your faithfully,

An confused and angry IT Employee

Sent By
New Democracy Labour Front – IT Employees Wing
Call : 90031 98576

புதிய ஜனநாயகம் – மே 2016 மின்னிதழ் : பிரியாணி ஜனநாயகம்

0

 

puthiya-jananayagam-may-2016

புதிய ஜனநாயகம் மே 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. “டாஸ்மாக்கை இன்றே மூடுவோம்””

2. பிரியாணி ஜனநாயகம்

3. அம்மா குடிநீர், அம்மா உப்பு அம்மா உணவகம்… அம்மா ஆணையம்
வாக்காளர்களுக்கு பிரியாணி பொட்டலம், இருநூறு ரூபாய்; தேர்தல் ஆணையத்திற்கு…?

4. ஜனநாயகம்: இலட்சியமா, வழிமுறையா?
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மாற்று இல்லை என்று சவால்விடும் ஆளும் வர்க்கத்தின் ஆணவத்திற்கும், வேறென்ன மாற்று என்று ஏக்கத்துடன் கேட்கும் மக்களின் அவலத்திற்கும் இடையே சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது இந்தியாவின் தேர்தல் ஜனநாயகம்.

5. அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்
மும்பையைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலியும், பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொள்வோம்.

6. தேசிய தகுதி-பொது நுழைவுத் தேர்வு: ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு?
ஒரு முறைகேடான கட்டளையின் வழியாக மாநில அரசுகளின் உரிமை, மாநில பாடத்திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றுக்குக் குழிதோண்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.

7. பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு! கசியாதது மலையளவு!!
கருப்புப் பணம்தான் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும்பொழுது, அதன் மீது கைவைக்கப் போவதாக வரும் அறிவிப்புகளெல்லாம் வெற்றுச் சவடால்கள்தான்!

8. மக்களின் பணம்! மல்லையாவின் அரசு!!
கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கி நிர்வாகமும், அரசும் விஜய் மல்லையாக்களைக் கைதுகூட செய்யாமல் தப்ப வைக்கின்றன.

9. கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா? முதலாளித்துவ அழிவின் குறியா?
கார்ப்பரேட் மோசடிகள், இலஞ்சம், நிறவெறி, ஏழை நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகள், இரகசிய இராணுவங்கள், சுற்றுச்சூழல் பேரழிவு, போர் ஆகிய அனைத்தும் தனியார் தானியங்கி வாகனங்களுடன், குறிப்பாக கார்களுடன் இணைந்திருக்கின்றன.

10. முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி!
மாட்டுக்கறி, தேசபக்திஇ என்ற வரிசையில் இஷ்ரம் ஜஹான் படுகொலையை நியாயப்படுத்தும் விவாதங்களைத் தூண்டிவிட்டு, தனது அரசின் தோல்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறது, மோடி கும்பல்.

புதிய ஜனநாயகம் மே 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 1.6 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.