உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் சூரியஒளி மின்தகடுகளை இந்தியா பயன்படுத்துவதை விரும்பாத அமெரிக்கா, காட் (GATT-General Agreement of Trade and Tariff) ஒப்பந்தத்தைக் காட்டி தடுத்து நிறுத்தியிருக்கிறது. இது குறித்த உலக வர்த்தக கழகத்தின் (WTO) தீர்ப்பு 25-02-2016 அன்று வெளிவந்திருக்கிறது.
உள் நாட்டில் தயாராகும் சூரிய ஒளி தகடுகளை பயன்படுத்தும் பொழுது தேசிய சந்தை, வேலைவாய்ப்பிற்கான அபிவிருத்திகள், வெளிநாட்டுக் கடன்களை குறைக்க முயல்வது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என தேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்கும் இறையாண்மை அம்சம் அடங்கியிருப்பதை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தியா இப்படி உள்நாட்டிலேயே தயாரிப்பதால், தனது நாட்டில் 90% சூரிய ஒளி மின்தகடு ஏற்றுமதியாளர்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என உலகவர்த்தகக் கழக தீர்ப்பாயத்தில் பஞ்சாயத்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா. சொந்த உழைப்பில் பொங்கி சாப்பிடுவதற்காக நாம் ஏன் உலகவர்த்தகக் கழகத்தின் முன் ஆஜராகவேண்டும்? இந்தக் கேள்வி எந்த ஒரு தேசபக்தருக்கும் எழவில்லை என்றால் எதுதான் தேசபக்தி?
இந்தியா உலகவர்த்தகக் கழகத்தின் முன் ஆஜராவதற்கு காரணம் 1994-ம் ஆண்டு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால்தான். இந்த காட் ஒப்பந்தம் தனியார்மயம், தராளமயம், உலகமயம் என்பதன் பெயரில் கொண்டு வந்திருக்கும் அழிவுகள் பிரளயமானவை. நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டும் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்ட காலம் போய் தற்பொழுது காட் ஒப்பந்ததைக்காட்டி ‘உன் காலில் நிற்க முயன்றால் உன்னை வெட்டுவேன்’ என்று அமெரிக்கா நேரிடையாக மிரட்டுகிறது.
தனியார்மயம் வளர்ச்சி, அந்நிய முதலீடு வளர்ச்சி என்று “காட்” ஒப்பந்தத்திற்கு கொடி பிடித்தவர்கள்தான் அனைத்துக் ஓட்டுக் கட்சிகளும். ஆட்சியில் மாறி மாறி இருந்த காங்கிரசும், பா.ஜ.கவுல் இந்த அடிமைச் சாசனத்தை நிறைவேற்றவதில் போட்டி போட்டன.
அதிலும் ‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘வந்தே மாதரம்’ கோசம் போட்டு தேசபக்தியில் ஒரு பிடி ஜாஸ்தி என்று வேடம் போடுவதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலை யாரும் விஞ்ச முடியாது. ஆனால் பாரதமாதாவை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொடுத்தவர்கள் இந்தக் காவிக் கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தியாவிற்கு எதிரான உலகவர்த்தகக் கழகத்தின் தற்போதைய தீர்ப்பு.
தீர்ப்பு வெளியானவுடன் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி மைக்கேல் புரோமேன், இந்தியா நாட்டின் இறையாண்மையை மட்டுமல்ல காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லா நாடுகளையும் எப்படி மிரட்டுகிறார் என்று பாருங்கள்.
“உலகவர்த்தக் கழகத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்று. இது இந்த (இந்தியாவிற்கு எதிரான) வழக்கிற்கு மட்டும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல. மாறாக எந்தெந்த நாடுகள் எல்லாம் பாகுபாடான உள்நாட்டுக் கொள்கைகளை கடைபிடிக்கிறதோ அவைகளுக்கு மிகத் தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது” என்கிறார் புரோமேன்.
இந்தியாவிற்கு எதிராக பேசினார்கள் என்று மாணவியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பா.ஜ.க-வின் தமிழக ரவுடியான ஹெச்.ராஜா பேட்டி கொடுத்தது; வக்கீல் சவுகானின் ஆர்.எஸ்.எஸ் கூலிப்படை கோர்ட் வளாகத்தில் மாணவர்கள், பத்திரிக்கையாளர்களை தேசபக்தி வேடத்தில் தாக்குதல் நடத்தியது, பி.ஜே.பி எம்.எல்.ஏ ஓபி சர்மா தேசத்தைக் காக்க ரவுடியாக அவதாரம் எடுத்தது என்று தேசபக்தியின் பெயரில் ஆட்டம் போட்ட காவிக் கும்பல், புரோமேன் இந்திய இறையாண்மை மீது உச்சா போகிற பொழுது கள்ள மவுனமாக இருக்கிறதே ஏன்?
ஏன் என்பதை புரோமேனே மேற்கொண்டு சொல்கிறார் இப்படி
“மிகச் சமீபத்திய இந்த கட்டாய வர்த்தக உடன்படிக்கையின் மீதான வெற்றி அதிபர் ஒபாமா வர்த்தக-எளிமையாக்கல் மற்றும் அமலாக்கம் சட்டம் 2015-ல் (Trade Facilation and Trade Enforcement Act TFTEA 2015) கையெழுத்திடும் இதே நாளில் தான் வந்திருக்கிறது. இச்சட்டம் இருதரப்புகளுக்கிடையேயான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தின் அமல்படுத்தும் திறமையை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இதன்படி அமெரிக்கா, உலக பொருளாதாரத்தில் தன் நாட்டு வணிகர்கள் விவசாயிகள் தொழிலாளிகளின் வர்த்தக உரிமையை உறுதியாக நிலைநாட்டிக்கொள்ளும் வரலாற்றை கட்டியமைக்க முடியும்” என்கிறார்.
புரோமேன் கூறும் வாக்கியத்தின் பொருள் இந்தியாவில் வியாபாரம் செய்யும் அமெரிக்க முதலாளியின் இலாபத்திற்கு இடையூறாக தேசிய பொருளாதாரக் கொள்கை இருந்தால் அமெரிக்கா இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் என்பதாகும்.
இப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாகத்தான் கடந்த டிசம்பர் மாதம் தோகாவில் நடைபெற்ற உலகவர்த்தக கழக மாநாட்டில் மோடி கும்பல் கையெழுத்திட்டது. Level Playing Field என்ற காட்ஸ் ஒப்பந்தத்தின் விதி இந்தியா தேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்கும் திட்டங்களுக்கு நிகராக அமெரிக்க முதலாளிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், உயர்கல்வித் துறையில் இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இணையாக வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கும் அனுமதி அளித்து நாட்டுக்குள் விட வேண்டும் என்று சொல்கிறது. இதன்படி நீங்கள் சோறு சாப்பிட்டால் அமெரிக்கா காரனுக்கும் சேர்த்து ஊட்ட வேண்டும். அவன் வயிறு நிறையாவிட்டால் காட்ஸ் ஒப்பந்தத்தின் படி குற்றமாகும். இந்தவிதியில் கடந்த டிசம்பரில் கையெழுத்திட்டது மோடி கும்பல் தான்.
இதை எதிர்த்து கடந்த டிசம்பரில் நாடெங்கிலும் மாணவர்கள் இந்தியாவின் கல்வித்துறை சூறையாடப்படும் என்றும் விவசாயிகள் விவசாயம் அழியுமென்றும் தொழிலாளர்கள் தாங்கள் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவோம் என்று “மோடியே காட்ஸிலிருந்து வெளியேறு” “ஏகாதிபத்தியத்தின் காலை நக்காதே” என்று போராடினர். உண்மையான தேசத் துரோகிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினர். ஆனால் அப்பொழுது அர்னாப் கோஸ்வாமி போன்ற ஊடக விபச்சாரிகளால் நாட்டு மக்களின் தேசபக்தி கண்டு கொள்ளப்படவில்லை.
தேசத்தைக் காக்கும் உழைக்கும் மக்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத இந்தக் கூட்டம் தான் ஜே.என்.யு மாணவர்கள் தேசவிரோதிகள் என்று திட்டமிட்டு பாசிசத்தைக் கட்டவிழ்த்தனர். மாணவர் உமர் காலித், “மோடி அரசின் கார்ப்பரேட் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்ளைக்கு இந்தியாவை அடகு வைக்கும் சதித்தனத்தை அம்பலப்படுத்திய காரணத்திற்காகத்தான் நாங்கள் வெறிகொண்டு தாக்கப்படுகிறோமேயன்றி இந்தியாவிற்கு எதிரான கோசம் என்பதெல்லாம் வெறும் நாடகம்” என்று காவிக்கும்பலின் களவாணித்தனத்தை நயமாக தோலுரித்தார்.
“ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் கட்டமைக்க விரும்புகிற தேசியம் இந்துதேசியமன்றி காலனிகளை எதிர்க்கும் நாட்டு விடுதலை தேசியம் அல்ல” என்று வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர் காவிகும்பலின் அரசியலை பிளந்துகாட்டினார்.
இதற்கு ஆதாரமாக ‘உன் நாடு என் காலனி’ என்று அமெரிக்கா இப்பொழுது நேரிடையாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. இனி நாம் செய்ய வேண்டியது நாட்டைக்காக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைப்பதுதான். அதற்கான முதற்படியே அமெரிக்காவிற்கு கால் கழுவும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் இந்து தேசிய பாசிசத்தை முறியடிப்பதில் இருந்தே தொடங்க இயலும் என்பதை உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பு நிரூபிக்கிறது அல்லவா?
கும்பகோணத்து புராணம்… பாடல் பெற்ற தலங்களும் பாவப்பட்ட சனங்களும்!
ஒரே நாளில் 10 லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடி, பாவத்தின் ஓவர் லோடில் மகாமக் குளமே காவியாகி விட்டது. கடந்த பத்து நாட்களாக 45 லட்சம் பக்தர்கள், ‘பரம’ சாதுக்கள், நவீன செல்போன் அசரீரியுடன் ஆசி வழங்கிய அகோரிகள், நெய்யால் தொந்தி வளர்த்து பொய்யால் சமயம் வளர்த்து, ஊரான் வீட்டு கையால் கோயில் நிலத்தில் பக்தி வளர்த்து குலநாசம் செய்து சிவன் சொத்து சேர்த்த தகத்தாய மடாதிபதிகள், முற்றும் துறந்த சங்கராச்சாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அடியார்க்கும் அடியார்கள் என கும்பகோணமே குலுங்கிவிட்டதாக பூரிக்கின்றன ஊடகங்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஒன்பது நதிகளும் பரமசிவனிடத்தில் போய், “மக்கள் கொடிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் மூழ்கி, பாவங்களை இறக்கிவிட்டு போய்விடுகிறார்கள், இதைப் போக்கிக் கொள்ள நாங்கள் என்ன செய்வது?” என்று முறையிட, பரிகாரமாக சிவன், “கும்பகோணத்தில் தென்கிழக்கு தீர்த்தமான மகாமக குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மாத மகாமக நாளன்று குளித்தீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்!’’ என்று கூறியதாகவும் எனவே அந்நாளில் போய்க் குளித்தால் சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி புண்ணியம் கிடைக்கும் என்று புராணம் எழுதி வைத்திருக்கிறது. பார்ப்பனீய கட்டுக் கதை இலாகா கம்பெனி.
“ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் குளத்தில் இறங்கி அழுக்கையும், சேறையும் கலக்கி அடக்க முடியாமல் அங்கே சிறுநீரையும் கழித்தால் புண்ணியம் வருமா? காலரா, மலேரியா வருமா?” என்று பெரியார் கேட்டால், நாத்திகர் புண்ணிய தீர்த்தத்தை இழிவுபடுத்துகிறார் என்பவர்கள் அந்த காலத்து மகாமக குளத்து யோக்கியதையை எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு தனது “பசித்த மானிடம்’’ என்ற நாவலில் கணேசன் என்ற கதாபாத்திரத்தின் நனவோடையாக இப்படி காட்டியிருப்பார். “இவன் நாற்பது வருசங்களுக்கு முன் பார்த்த குளம் இல்லை அது. பச்சைப் பசேலென்று பாசி பிடித்துக் கிடக்கும் முன்பெல்லாம். படிகளெல்லாம் வழுக்கும். காற்றில் பாசியும் அழுக்கும் ஒரு புறமாய் ஒதுங்கி அந்த மூலையிலிருந்து குடலைக் குழப்பும். நாற்றம் வீசும். படித்துறைகளில் எல்லாம் சாயம் தோய்த்த நூல் கத்தைகளைக் கயிறுகள் கட்டிக் காய வைத்திருப்பார்கள். அந்த நாற்றமும் வீசும். குளக்கரைகளை ஒட்டிப் பாவுகளைப் பெரிய பெரிய கடப்பாரைகளை நட்டு இழுத்துக் கட்டி நூல்களாய் இழையைப் பிரித்துவிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தத் தொழிலாளர்களில் யானைக்கால் இல்லாத ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது. அந்த பாவுகளையும் காணவில்லை. தெருவும் சுத்தமாயிருந்தது.’’ பெரியார் பார்வையில் மக்களை பழிபாவத்திற்கு ஆளாக்கிய பார்ப்பனியத்தின் மீதான வெறுப்பு வெளிப்படுகிறது. கரிச்சான் குஞ்சு பார்வையில் குளக்கரையைப் பயன்படுத்தும் வர்க்கத்தின் மீதான குமட்டலாக முடிந்து விடுகிறது. உண்மையில் உள்ளூர் வழக்கிலான மாமாங்குளத்தின் ‘கீர்த்தி’ தெரிந்து தீர்த்தமாடாத பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருவன் என்ற முறையில் குளத்தை பெரிதும் அசுத்தப்படுத்த வாய்ப்புள்ளவர்கள் குளக்கரையைச் சுற்றியுள்ள கரிச்சான் குஞ்சுவின் கணேசர்களே என்பதைப் பார்த்திருக்கிறேன். நாலுகட்டு, அஞ்சு கட்டு வீட்டுக்குள் இருந்து கொண்டு நாள் கிழமை என்று கட்டுகட்டாக தலைவாழைகளை கட்டிவிட்டு குளக்கரையில் வீசி எறிவதும், அதில் கும்பகோணத்து பன்றிகள் பாய்ந்து ஏமாறுவதும் குளக்கரையில் சிரார்த்தம், தர்ப்பணம் என்று பிண்டம் வைத்து குப்பை போடுவதுமாக நீர்நிலையை மாசுபடுத்திய போது எச்சிலையைப் போட்டு மாமாங்குளத்தை அசுத்தப்படுத்தாதே என்று நீர் நிலைக்கு குரல் கொடுத்தவர்கள் அந்தக் கால திராவிடர் கழகத்தினர்.
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்துதான் அரசியலே நாசமாப் போச்சு என்ற பார்ப்பன வன்மத்தின் உளவியல்தான், இவாள்’ அசுத்தப்படுத்திய வரைக்கும் புனிதம் பேசியவர்கள் “கண்டவர்களும் வந்து மாமாங்குளத்து லட்சணமே போச்சு’’ என்று மக்களின் பயன்பாட்டில் மாசுப்பட்டபோது கருவினர். எனக்கு நினைவு தெரிந்து எண்பதுகள், எண்பத்தைந்து வரைக்கும் கூட மாமாங்குளம் மக்கள் பயன்பாட்டுக்காக தடையின்றி தான் இருந்தது. தேங்கிய நீரை வெளியேற்றுவது துப்புரவு செய்வது குளக்களை கால்வாய் சீரமைப்பு என்று எந்த பராமரிப்பையும் நகராட்சி நிர்வாகம் சீராக செய்யாதபோது பயன்படுத்துபவர்களால் பாதிப்பு என ஆகி பார்ப்பன புனிதம் மெல்ல மெல்ல வேலிகட்ட வைத்து வெறும் பாவம் கழுவும் குளமாகி விட்டது. மகாமகக் குளத்தைவிட மக்களின் பயன்பாட்டுக்கு நெருக்கமாக பல குளங்கள் கும்பகோணத்தில் உண்டு. நால்ரோடு குளம், அன்னம்மா ஆஸ்பெட்டல் பக்கம் இருந்த குளம், செல்வம் தியேட்டர் பக்கமிருந்த குளம், ஆயி குளம், அம்மா சத்திரம் குளம், வளையப் பேட்டை குளம், தாராசுரம் சத்திரத்துக் குளம், ரயிலடி குளம், பேட்டை நாணயக்காரத் தெரு குளம், தாலுகா போலீஸ் ஸ்டேசன் குளம்… போன்றவைகள் எல்லாம் மக்கள் சரளமாக புழங்கிய குளங்கள். ஏழை உழைக்கும் மக்களுக்கு பசியாற கொட்டிக் கிழங்கும், குரவை மீனும் தந்த பல குளங்களுக்கு ஈடாகாது இந்த மகாமகக் குளம். ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோருக்கு அடைக்கலமாக இருந்த மாமாங்குளங்கரையை மதத்தின் பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டதைப் பார்க்கையில் உண்மையிலேயே அது பாவக்குளம்தான். தாராசுரத்திலிருந்து பட்டீஸ்வரம் போகும் சாலையில் ஒரு அய்யர் பண்ணை வீட்டில் குளம் வெட்டி, மீன் வளர்த்து வியாபாரம் செய்ததும் ஏனோ நினைவுக்கு வருகிறது. அது சரி குலத்துக்குதான் கோத்திரம், குளத்துக்கு இல்லை போலும்!
“செஞ்ச பாவத்த எல்லாம் குளத்துல தீர்த்திடலாம்னா எவனுக்காவது ஒழுக்கம் வருமா? பாவ காரியங்களைச் செய்யத் தயங்குவானா? தவறுவானா? மத்த நதிகளின் பாவம் மகாமக குளத்துல போகும்னா, மகாமக குளத்து பாவம் எங்க போய் போகும். அது எந்த தண்ணியில பாவத்த கழுவும்…’’ என்று பெரியார் தர்க்கவியலாக எழுப்பிய கேள்விகள் மூட நம்பிக்கை ஒழிப்பைத் தாண்டி மக்களின் பண்பாட்டு அக்கறை பற்றியது. கும்பகோணத்தை கோவில் நகரமாகவும், புண்ணிய ஷேத்திரமாகவும் மட்டும் அடையாளப்படுத்தும் பாவத்தை முதலில் கழுவ வேண்டும். எந்த மக்களின் பார்வையில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ஊரின் முகம் மாறுபடுகிறது. ஆதிக்க சாதிகளின் பார்வையில் ஊர் இனிய முகமாக இருக்கலாம். அங்கே அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்டவர்களின் பார்வையில் அது பயம், கொடூரம்!
பக்தி மார்க்கமாக இருந்தாலும் கூட அதையும் ஆரியப் பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் அடையாளத்தின் குறியீடாகத்தான் ’கும்பகோணம்’ என்ற பெயரே உள்ளது. பிரளய காலத்தில் அமிர்த கும்பம் மிதந்து வந்தபோது சிவபெருமான் அதை விழச் செய்த இடமாதலால் இது கும்பகோணம். தமிழில் குடமூக்கு என்று தலபுராணம் கதை அளக்கிறது. அவாளின் மணிக்கொடி மாமாக்களே கும்பகோணம் என்றவுடன் அமிழ்தம் ஓடியதாக மறந்தும் பேசுவதில்லை. தி. ஜானகிராமன் தனது ஆஸ்திரேலிய பயண அனுபவக் கட்டுரையில் “பொதுவாக வெள்ளை நாடுகளைப் பார்த்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஜனங்கள் வாழ்கிற இடத்தில் ஒரு துப்புரவு, நறுவிசு பளிச்சென்ற தோற்றம் கும்பகோணம் போன்ற ஊர்களின் சாக்கடைகள் ஞாபகத்திற்கு வராமல் என்ன செய்யும்.’’ (அடுத்தவீடு ஐம்பது மைல் நூலில் தி.ஜா.ரா) “நவராத்திரிக் கூட்டம் நடமாடத் தொடங்கிவிட்டது. புசு புசுக்கும் புதுப்புடவைகளும், பாவாடைகளும், நடந்த வண்ணம் இருந்தன. கடந்து போகும் ஒவ்வொரு கும்பலும் கதம்ப மனத்தை வீசி வீசிப் போயிற்று. நவராத்திரி முடிவு நெருங்க நெருங்க, வீதியில் கூட்டமும் புதுமையும் பெருகிக் கொண்டிருந்தன. நாளை ஒன்பதாவது நாள். சரஸ்வதி பூசை கட்டுக்கடங்கா பூரிப்பாக ஊர் மலர்ந்து கொண்டிருக்கும். பாபநாசத்தில் என்ன இருக்கப் போகிறது? எப்போதும் போல் மங்கலும் இருளுமாக அழுது வடிந்து கொண்டிருக்கும் இந்தக் கோலாகலத்தில் கும்பகோணத்தை விட்டுப் போவதென்றால் மனசு வரவில்லை. என்ன செய்வது?’’ என்று மோகமுள் நாவலில் அக்கிரகாரத்து கும்பகோணத்தில் மகிழ்ந்த மனம் ஆஸ்திரேலியாவுக்கு போனவுடன் சாக்கடை கும்பகோணத்தை வெறுக்கிறது. சாக்கடையின் தயாரிப்பாளர்களே சாக்கடைக்கு முகம் சுழித்தால், அதை சுத்தம் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட சாதியினர்க்கு அந்த ஊர் எப்படி இருக்கும்?
ஒட்டச் சுரண்டி ஊரைப் பழித்தவுடன் இது ஊரா நியூயார்க் போல வருமா, நியூ ஜெர்சி போல வருமா என வளர்ச்சிக்குத் தாவி லௌகீக உபாசகர்கள் அடுத்தவர் மண்ணை ஆட்டையைப் போடுவதுடன், அதற்கு தன் நோக்கில் கதை கட்டுவது புராணம் எழுதுவது, என்பதுடன் பொருத்தமாக ஊர் பெயரையே வேர் மண் சொல்லையே வெட்டி எறிந்து ஆரியப் பெயராக்குவதையும் செய்வதுண்டு. அதன் வழியில் தான் கும்பகோணத்து தலபுராணமும், குடந்தை என்ற பெயரையே கும்பகோணமாக்கியதும். மயிலாடுதுறையை ‘மாயவரம்’ என்றும் திருமுதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்றும் திருகு வேலை செய்தது போல பெயரிலேயே புகுந்து கலக்கும்போது குளத்தை கலக்க எம்மாத்திரம்? கும்பகோணம் விசுவநாத கோவில் தேவாரப்பதிகத்தில் கூட “குடந்தை’’ என்றே வந்துள்ளது. திருமழிசையாழ்வார் பாசுரத்திலும் “கடந்த கால் பரவி காவிரிக்கரை குடந்தையும் கிடந்தவாறே எழுந்திருந்து பேசு வாழி கேசனே! என்று வருகிறது. பக்தியே ஆனாலும் சரி, சரக்கு என்னதாய் இருந்தாலும், படத்துக்கு தமிழில் பெயர் வச்சாலாவது போதும்! என்ற கோடம்பாக்கத்து சுதந்திரம் கூட ஆரியக் கற்பனையில் இல்லை.
அவிழ்த்து விடப்படும் பெயர்களுக்கு மட்டுமல்ல, ஊரை பார்ப்பன அடையாளமாக்கும் கட்டுக் கதைகளுக்கும் சைவ வெள்ளாக் கூட்டணியே சாதிக் களத்தில் நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ன் தருண் விஜய்க்கு தமிழ் அடையாளம் கொடுக்கும் தமிழ் ஆழ்வார்கள் இப்போதும் இருக்கிறார்கள். பார்ப்பனர்களால் மட்டும் பார்ப்பனியம் உயிர் வாழ்வதில்லை என்பதற்கு கும்பகோண புராணமும் சான்றாக இருக்கிறது. வடமொழியில் புனைந்து விட்ட புராணத்தை தமிழ் மக்களுக்கு அடையாளமாக்க சைவ வெள்ளாளக் கூட்டணியின் கைங்கர்யத்தை புரிந்து கொள்ள “மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உ.வே.சா எழுதியிருக்கும் இந்த நிகழ்வுகளைப் பாருங்கள்,’’ அக்காலத்தில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை என்பவரும், பல சைவப் பிரபுக்களும் கும்பகோண புராணத்தை இக்கவிஞர் தலைவரைக் கொண்டு தமிழ்ச் செய்யுளாக இயற்றுவிக்க வேண்டுமென்று எண்ணினார்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படி குரோதன வருஷம் (1865) இவர் திருவாவடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்று பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தை தம்முடைய இருப்பிடமாகக் கொண்டு பரிவாரங்களுடன் இருந்தார். கும்பகோண புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழில் வசனமாக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழிபெயர்த்ததற்கு உதவியாயிருந்தவர்கள் ஸ்ரீ சங்கராச்சாரியர் மடத்து வித்வானாகிய மண்டபம் நாராயண சாஸ்திரிகள் முதலியவர்கள். பின்பு புராணத்தை இவர் செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார்… (பக்: 259, 5-ஆம் பதிப்பு 2014, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம்) இப்படி பார்ப்பன வெள்ளாள கூட்டுக் கலவையுடன் கும்பகோணத்து புராணம் ரீ மேக் ஆனது. இதுவும் அவாளின் மேக் இன் இந்தியா தான்! எனவே கும்பகோணத்து தீர்த்தக் குளங்கள் சாதாரண தீர்த்தக் குளங்கள் அல்ல. வரலாற்றையும், மக்களையுமே ‘தீர்த்த குளங்கள்’.
என்னைக்கோ கும்பகோணத்தின் காபி ருசியிலேயே வளர்ந்த ஜீவராசிகளின் நாக்கு நீளத்தை நம்பி இன்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ‘கும்பகோணம் டிகிரி காபி’ என்று பெயரை வைத்தே ஏமாற்ற முடியுமென்றால், ‘கும்பகோணம்’ என்பதையே பிராண்ட் வேல்யூவாக ஆக்கியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தின் வெற்றிக்கு காரணம் பார்ப்பன ருசி, சூத்திர நாக்கு என்றால் மிகையில்லை. மடாதிபதிகளின் மகா சன்னிதானங்களின் கைங்கர்யம் மட்டுமல்ல, இலக்கிய சன்னிதானங்களும் கும்பகோணத்து காபி கடைகளையும், கோயில் தீர்த்தங்களையும், இசை, நாட்டியங்களையும் எழுதி உசுப்பேற்றினர். கும்பகோணத்து சீவல், திருவையாறு தாம்பூலம், தஞ்சாவூர் அசோகா என டிகிரி காபியில் மூழ்கி, தலைவாழை மேய்ந்து இலக்கிய எச்சில் ஒழுகினர். ஏதோ கும்பகோணம் என்றாலே கொண்டாட்டம், மகிழ்ச்சி, அழகு என்று இவர்கள் ஏற்றிவிட்ட பாவத்தை எந்த மாமாங்குளமும் தாங்காது!
கும்பகோணம் மட்டுமல்ல, தஞ்சை மாவட்டம் முழுக்கவும், தலம், மூர்த்தி, தீர்த்தம், மடம், ஆதினம் என்று சூழ்ந்திருந்த இடமெங்கும் பண்டைய சோழ மன்னர்களின் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பிரம்ம தேயங்கள், மடம், கோவிலுக்கு வழங்கப்பட்ட இறையிலிகள் என்ற நிலங்களில் கொடூரமாக சுரண்டப்பட்ட கூலி விவசாயிகளின் மரண ஓலம்தான், கோவில் மணிகளைத் தாண்டி காதில் ஒலிக்கிறது. பிற்காலத்தில் தேசிகர், மூப்பனார், வாண்டையார், நாயுடுக்கள், வெள்ளாளர் என பண்ணையார்களின் கீழே கடுமையாக வேலை வாங்கி வாரம், குத்தகை என அளந்து கொடுத்துவிட்டு வற்றிய வயிரோடு, எதிர்த்துக் கேட்டால் சவுக்கடி வலிக்க, சாணிப்பால் ஊற்றி பட்டபாட்டை நினைத்தால் உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கு இவைகள் கோவில் நகரமாக இல்லை, ஆயுள் சிறையாக இருந்தது. தஞ்சை மாவட்டத்திலேயே இவர்களின் உழைப்பை உண்டு கொழுத்த இலக்கியவாதிகள், வேத வியாசகர்கள், தத்துவ போஷினிகள் யாராவது இந்த கொடூர பக்கங்களை கும்பகோணத்து பாவங்களாக காட்டியிருக்கிறார்களா? குறைந்தபட்சம் பட்டுநூல் நெசவாளர்களின் நடுத்தர வர்க்க இருப்பை பேசும் எம்.வி. வெங்கட்ராமை விட அக்கிரகாரத்து பாலியல் நெளிவு சுளிவுகளை அனுபவமாக்கித் தரும் தி.ஜா.ரா. வை அல்லவா திகட்டாத தெள்ளமுதாய் படையல் போடுகிறார்கள். இத்தகைய இலக்கிய பாவங்களும் சேர்ந்த கும்பகோணத்தின் உண்மை முகத்தை துல்லியமாக படம் பிடித்து காட்டுவார் தந்தை பெரியார். “சாதாரணமாக கும்பகோணம் ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ வேறு ஏதாவது வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத்தகுந்த விசேசம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது… அதில் வசிக்கும் மக்களோ பெரும்பாலோர் பார்ப்பனர்களும், மேல்சாதி மிராசுதாரர்களுமாகும்.’’
“பார்ப்பனர்கள், மிராசுதாரர்கள் இரண்டு கூட்டமும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல் ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலையே வாழ்த்து வருகிறார்கள். இதைத் தவிர மற்றபடி இந்த ஜில்லாவுக்கும் கும்பகோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது…’’ (குடியரசு தலையங்கம் 12.2.1933) என்ன ஒரு துல்லியம் உழைக்கும் மக்களின் பார்வையில் உண்மையை போட்டுடைக்கிறார் பெரியார்.
மக்களாட்சி என்று சொல்லக்கூடிய காலத்திலேயே இதுதான் நிலைமை என்றால் மன்னராட்சியில் ஊர்களின் யோக்யதை எப்படி இருந்திருக்கும்? ‘இவர்களுடைய வடமொழிப் புலமையையும், சீலத்தையும் கண்டு மகிழ்வெய்திய பொதுமக்கள் அன்னோரின் நல்வாழ்வின் பொருட்டு ஊர்ப்பொது நிலங்களுள் சிலவற்றை வேதவிருத்தி, பட்டவிருத்தி, பாரத விருத்தி, புராண விருத்தி என்ற பெயர்களோடு இறையிலி நிலங்களாக அவர்கட்கு வழங்கிப் பெரிதும் ஆதரித்து வந்தனர் என்பது பல கல்வெட்டுகளால் நன்குணரக் கிடக்கின்றது. அன்றியும் திருக்கோயில்களில் நாள்தோறும் உச்சியம் போதில் பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் பிற செல்வர்களும் நிவந்தங்கள் வழங்கியுள்ளமை அறியத்தக்கதாகும்’ என்று அறியத் தருகிறார். சி.வை. சதாசிவபண்டாரத்தார். (நூல்: பிற்கால சோழர் வரலாறு).
பொதுமக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஒரு படி நெல் கூலி உயர்வாகக் கேட்டால் ஆளையே கொளுத்தும் ஆதிக்க கும்பல் தான் மக்களின் சொத்தை கோவிலின் பெயரால் பார்ப்பனர்களுக்கு தானம் செய்துள்ளது. நாகர்கோவில் அருகே உழைக்குடி விளை எனும் குடியானவர் கிராமம் உள்ளூர் அரசனால் கையகப்படுத்தப்பட்டு பார்வதிபுரம் என்று பெயரிடப்பட்டு பிராமண மையமாக மாற்றப்பட்டது. செலவுக்கு வளமானதும், பாரியதுமான நிலம் ஒதுக்கப்பட்டது என்கிறது கி.பி. 866-ன் பார்வதிபுரம் சாசனமும் கி.பி. 1125-ன் திருவல்லம் கோயில் சாசனமும். (தமிழ்நாட்டு வரலாறு, கே. ராஜய்யன்).
பார்ப்பன மேலாண்மைக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த மன்னர்கள் மக்களின் மீதோ, தலைவரி, கால்வரி, முலைவரி, முடிவரி, மீசைவரி, சாணார் வரி, வாள் வரி, தாலிவரி, தலைப்பாகை வரி, வெல்ல வரி, ஈழம் பச்சை, தென்னல் திருகு வரி, கூடை வரி, தகன வரி, மரண வரி என பிடுங்கி பெற்றுள்ளனர். (The Dravidian languages – A Social Historical Study, M. Imanuvel, Nagarcoil, 2002). இதுமட்டுமல்ல, திருவாலங்காட்டு வேதாரணி ஈசுவரர் கோவிலுள்ள மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு மடமொன்றின் நிலங்களில் பயிர் செய்ய ஆண், பெண் அடிமைகள் விற்கப்பட்டதை குறிப்பிடுகிறது. மக்களையே கோயிலுக்கும், பார்ப்பனர்களுக்கும் மடத்திற்கும் அடிமையாக்கியிருக்கிறது சோழப் பேரரசுகள்.
பழைய பாணியில் குலத்தையே ‘இசைவுத்திட்டாக’ எழுதி வாங்க முடியாததால் குளத்திலாவது போட்டு அமுக்குவோம் என்பதுதான் மகாமகத்தின் நீட்சி. அந்த காலம் மாதிரி ஓசியில் உழைப்பை வாங்க முடியாது பாவ புண்ணிய பயமுறுத்தல் காட்டி கையிலிருக்கும் காசையாவது உண்டியலில் சேர்க்கலாம், தட்டில் வாங்கலாம் என்று சந்தைப் பொருளாதாரத்திற்கேற்ற பார்ப்பன இறையிலிகள் தான் கோவில் திருவிழாக்கள்! மகாமங்கள்! தமிழ் மன்னர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு கோயிலைக் கட்டிய உழைக்கும் மக்களையே உள்ளே விடாமல் தூரத்தில் நின்று கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள் என்று உயரமான கோபுரங்களை கட்டுவித்து ‘கோபுர தரிசனம் பாவவிமோசனம்’ என்று பார்ப்பனர்களுக்கு செங்கோல் பிடித்து சுரண்டலின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துபவர்கள்தான் சோழ மன்னர்கள், உத்திராட்சயை உருட்டிய மடாதிபதிகளும், சூத்திர ஆதிக்கசாதி பண்ணைகளும், கோவில் நகரங்களின் கொடூர முகங்கள் இப்படிப்பட்ட இதை கோவிலின் பெயரால் அடையாளப்படுத்தி உயர்த்திப் பிடிப்பது நவீன ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் கட்டுப்படுத்தும் கலாச்சார உளவியலாகும்.
வரலாற்றில், அரசன், பார்ப்பனர், வெள்ளாளக் கூட்டணியின் அதிகாரம் மீது, கொடிய அடக்குமுறை மீது குகையிடிக்கலகம் செய்த இடங்கை, வலங்கை சண்டை வராதிருக்கத்தான் கோயில், சத்திரமும் கும்பகோணத்தில் பெருகின. அதுமட்டுமில்லாமல் தஞ்சை மாவட்டத்து விவசாயிகள் உழைத்து உருவாக்கும் உபரியை சுருட்டிக் கொள்ளவும் பாடல் பெற்ற தலங்கள் தேவைப்பட்டன. மக்களின் உழைப்பையும், உடமைகளையும் தட்டிப் பறித்து ஒட்ட உறிஞ்சிய வலி தெரியாமலிருக்க மடத்துல தின்னுக்க, சத்திரத்துல படுத்துக்க என வழிகாட்டப்பட்டது. அதிலும் சாதிக்கேற்ற நீதி நிலவியது. “மகாமகக் குள கீழக்கரை சிவன் கோவிலில் துவாதசிகளில் பலருக்கு சோறு போடுவார்கள். வெற்றிலைச் சீவலும், காலனா தட்சினையும் கொடுப்பார்கள். சத்திரா போஜனா மடா நித்திரா என்ற வசனமும் உண்டு… இரவில் கம்மென்று மோர் சாதமும் ஊறுகாயும், தினம் அம்மாமிக்கும் பாட்டிக்கும் பலகாரத்திற்காகச் செய்த இட்லி, தோசை, உப்புமா, பிடி கொழுக்கட்டை, அடை போடுவார்கள் வயிறு நிரம்பியது. வேறு கவலைகளும் தெரியவில்லை” என்று கரிச்சான் குஞ்சின் ‘பசித்த மானிடம்’ நாயகன் கணேசன் காட்டும் கும்பகோணம் வேறு, இது உறிஞ்சி வாழும் கும்பகோணம். உழைத்து வாழும் தஞ்சை மாவட்ட மக்கள் நிலையோ வேறு. 1947-இல் கம்யூனிச விவசாய சங்க தலைவர் தோழர் சீனிவாச ராவ் காட்டும் காட்சி இது.’’
தோழர் பி.சீனிவாசராவ்
பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே, இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால், 1/2 மரக்கால் நெல்தான். அதாவது பட்டணம் படியில் ஒருபடி நெல்தான் அளந்து கொடுப்பார் மிராசுதார். சமீபத்தில் தான், இவர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு பண்ணையாளர் குடும்பம் முழுவதற்கும் வருசத்தில் மொத்த வரும்படி 160 முதல் 170 ரூபாய் வரை கிடைக்கிறது. இது குடும்பத்தின் மொத்த வருமானம் என்பதை மறந்து விடாதீர்கள்…) பண்ணையாட்களும் அவர்களுடைய மனைவி மக்களும் நிலத்துடன் பிணைக்கப்பட்டு பிறப்பிலேயே அடிமைகளாக இருக்க வேண்டியுள்ளது. பண்ணையாட்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் தினம் ஒரு வேலைதான் சுடுசோறு கிடைக்கும். சுடுசோறு என்று சொல்லுவதை விட சுடுகஞ்சி என்று சொல்லுவதே பொருத்தம். பருப்பு இல்லாமல் சொத்தைக் கத்தரிக்காயைப் போட்டு, கழுநீர் தண்ணீர் போல தயாரித்திருப்பார்கள். அதற்கு சாம்பார் என்று பெயரிடப்பட்டிருக்கும். மற்ற இரண்டு வேலைகளிலும் பழைய கஞ்சியும், உப்பு போட்ட நீராகாரமும் தான், இறைச்சி வாங்க அவர்களுக்கு சக்தியில்லை. ஏன், மாதத்திற்கு ஒரு தடவை கருவாடு வாங்கக் கூட சக்தியில்லை. அப்படியிருக்க மாமிசத்தைப் பற்றி பேசுவானேன்! வருசத்தில் ஓரிரு தடவை தீபாவளியன்றாவது இறைச்சி சாப்பிட்டு விட்டால், அது அவர்களுக்கு ஆடம்பரமிக்க ஆர்ப்பாட்ட விருந்தாகும். மிராசுதார்கள் எங்களை சைவர்களாக்கி விட்டார்கள் என்று பண்ணையாட்கள் தமாஷாகச் சொல்வதுண்டு. ஆனால் இந்த தமாஷிற்குள்ளே எத்தகைய சோகத்தை உள்ளடங்கிக் கிடக்கிறதென்பதை நாமறிவோம்… (நூல்: தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? ப. சீனிவாசராவ்) ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளையும், குத்தகை விவசாயிகளையும் இப்படி சோகத்தில் தள்ளிதான் கோயில்கள் நடந்திருக்கின்றன. மடங்கள் சைவத்தை நெய்யால் உருக்குகின்றன. உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் வியர்வை சிந்துவதை நிறுத்தியிருந்தால் கும்பகோணத்தின் அமிர்த கலசத்தோடு கோயில் பார்ப்பன, சைவ மடங்களின் கும்பியும் சேர்ந்து நாறிப் போயிருக்கும்.
கும்பகோணத்தைப் பொறுத்தவரை கோயில்கள் மட்டும் நிறைய அல்ல. கொசுக்களும் நிறைய. கொசுக்களின் நகரம் என்றும் சொல்லலாம். எண்பதுகளில் கூட யானைக்கால் நோயும், தொழுநோயும் கூட கோயில் நகரத்தின் திவ்ய தேச விசேசங்கள்! பாடல் பெற்ற தலங்களின் பகவான்களால் தீர்க்க முடியாத பெருவியாதியை தொழுநோயை முத்துபிள்ளை மண்டபத்தின் கிறித்துவ ஆஸ்பத்திரிதான். தடுத்தாட் கொண்டது. உலகின் பாவத்தை ஒழிக்கப் போவதாய் கனைக்கும் ஜகத்குரு என்ற சங்கரமடத்தால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியவில்லை. கொசு மருந்தடிக்கும் துப்புரவு தொழிலாளிகளைத்தான் மக்கள் தெய்வமாய்த் தேடினர்.
கோபுரங்களின் மறைப்பை விலக்கிப் பார்த்தால் தான் ஊரின் உண்மை வரலாறு தெரியவரும். ‘‘வருக தெள்ளமுதே, வருக செங்கரும்பே, வருக செந்தாமை மகளே, வருக பொற்கொம்பே..’’ என சாரங்கபாணி கோமளவல்லித் தாயாருக்கு கோட்டையின் கோமளவல்லி ரேஞ்சுக்கு தலபுராணத்தில் கட் அவுட் வைத்த பார்ப்பன சைவ பரிவாரம் ஊரை வாழவைக்கும் உழைக்கும் மக்களைப் பாடாதது வியப்பில்லை. கோபுரங்கள் மறைத்த உண்மைகள் அவைகள்.
இப்போது நினைத்தாலும் குடந்தையின் அதன் சுற்றுப்புறங்களின் கள வரலாறு உண்மையான தல வரலாற்றை என்னுள் அலைஅலையாக எழுப்புகிறது. கும்பகோணத்தைப் பற்றிப் பேசினால் அந்தகால ‘சூத்திர நாக்கு: பார்ப்பன ருசிகளுக்கு’ பஞ்சமி அய்யர் காபி கிளப்பும் பொற்றாமரைப் பகுதி கொழுந்து வெற்றிலையும் நினைவுக்கு வருகிறது. ஆனால் பஞ்சமி அய்யர் காபி கிளப்புகள் போல பல கடைகளுக்கு பால் கொண்டுவர சூரியன் விழிக்கும் முன்னே கண் விழித்து 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் சுற்றளவில் பம்பப்படையூர், பட்டீசுவரம், முளையூர், கொள்கை, கோவிந்தகுடி போன்ற ஊர்களிலிருந்து சைக்கிளில் பால்கேனைக் கட்டிக் கொண்டு விலா எலும்பு வியர்த்து வடிய தடதடவென்று குலுங்கும் சாலைகளில் வைக்கோல் பிரியால் பால்கேனை மூடி சட்டையின் மேல் பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெஞ்சுக் காற்று சூடேறி விரையும் பால் வியாபாரிகளின் சைக்கிள் மணி காதுகளில் ஒலிக்கிறது. இந்த சைக்கிள் மணி இல்லையேது ஏது கோயில் மணி! அபிசேகம்!
வாழை மட்டையில் வாகாக மடித்து காம்புகள் கணக்கு வெளியே தெரியும்படி கிழியாமல் மடித்து வெற்றிலைகளை அடுக்கி, தன்முகம் வியர்வையால் கழுவி வெற்றிலையில் தண்ணீர் தெளித்து வெற்றிலை நரம்புகளுக்கு விரல் நரம்பால் உயிரோட்டம் பாய்ச்சும் பெரும்பகுதியான அந்த இசுலாமியத் தொழிலாளர்கள் இல்லையென்றால் கும்பகோணத்து வெற்றிலைக்கு உயிர் ஏது?
சக்கரைப் படித்துறையும், காவிரித் தீர்த்தமும் புனிதம் என்று கை நனைப்பவர்களைப் பார்த்து காவிரியே நகைக்கும். அதே காவிரி பாலக்கரையில் ஊர் உறங்கும் நேரத்திலும், முட்டைக்கோசு, பீட்ரூட், வெங்காய மூட்டைகளை இறக்கி, முழு நிலாவையும் ஒரு மூட்டையாக காவிரியில் இறக்கியது போல நீரில் நிலா களைந்து வியர்த்த உடலை நினைக்கிறானே, அந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் கை பட்டே காவிரி புனிதமடையும்.
எம்.வி.வெங்கட்ராம்
தலைச்சுமை வியாபாரிகள் தயாராகி தேனீர் கடையில் நிற்கையில், அத்தனைப் பேர் கணக்கையும், தலையாட்டி மனதில் வாங்கி, ‘தர்’ என்ற ஓசையோடு கீழிருக்கும் தகரக் குவளையில் தலைக்கு மேலே தூக்கிய தகரக் குவளையில் வளைத்து ஊற்றும்போது, திடீரென ஒரு நிமிடம் தேநீர் செடி அசைவது போல தெரியும். உழைப்பின் உன்னதத்தை விடியல் சூரியனும் வேடிக்கைப் பார்க்கும். தாராசுரத்திலிருந்து நான் கல்லூரிக்கு நடந்து போகையில் போகிற வழியெங்கும் எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளிகள் குடம், அடிக்கும் ஓசை உழைப்பின் ஓசையாய் என்னுள் இறங்கும். அந்த நேரம் நாம் என்ன வாக்கியம் நினைக்கிறோமோ அதையே அடிக்கணக்கில் திரும்பச் சொல்வது போல அது ஒரு உணர்வைத் தருவதுண்டு. அதை உழைப்பின் ரிதம் என்பதா? எந்த இலக்கியங்களும் சொல்லித் தராத வர்க்கத்தின் பாடலை அது என்னுள் விதைத்தது. பாத்திரம் தயாரிக்கும் அந்த உழைப்பாளிகளின் மூச்சோடு வெளிவரும் வெப்பக் காற்றும், பல பேர் சேர்ந்து ஒரே இடத்தில் தகடுகளைத் தட்டும் ஓசையும் தான் ஊரின் உயிர் துடிப்பு. கரி படிந்த முகத்தோடு அன்றாடம் வேலை முடிந்து வருகையில், பக்கத்து குடியிருப்பில் இருந்த எனக்கு கடலை பக்கோடா வாங்கி வரும் அவரை கரி ‘மாமா’ என்றே அழைத்திருக்கிறேன். சிறு தொழில்களை வாழவைத்த இந்தத் தொழிலாளர்களின் கைகள்தான் குடந்தையை உருவாக்கியவை!
பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சையின் போதெல்லாம் எங்கள் ஊரான தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலுக்கு அமைதியாக இருக்கும் என்று படிக்கப் போனதுண்டு. ஆனால் மண்டபங்களின் வவ்வால் வாடையும் சோழப் பேரரசின் அந்தப் பிரம்மாண்ட தனிமையின் மர்மமும், பேசத் துடிக்கும் சில கற்சிலைகளின் துயரமும் என்னை அங்கே இருக்க விட்டதில்லை. பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும். தம்பி போய் படிப்பா! என்று அவர்களின் அக்கறையைத் தாண்டி அவர்கள் குடும்பம் குடும்பமாக ஈடுபடும் வேலை கவனிக்க வைக்கும். சோழப் பேரரசின் ஐராதீஸ்வரர் கோயிலைச் சுற்றி அந்த ஏழைப் பேரரசுக் குடும்பங்கள் நாள் முழுக்க முகுது தண்டு முறிய உழைக்கும் காட்சிகள் புளிய மரங்களின் நிழல் எங்கும் விரியும். தொலைவிலிருந்து பார்த்தால் அவர்களின் ரத்த நாளங்களையே எடுத்து உலர வைத்தது போல இருக்கும். கும்பகோணம், தாராசுரம், திருபுவனம், அம்மாசத்திரம் என்று சுற்றுப்புறங்களில் உடம்பும் ஒரு நூலாக வெளியும் இவர்களின் அன்றைய அலுப்புக்கு மருந்து ஆனை மார்க் சுருட்டும், எம்.ஜி.ஆர். சினிமாவும்தான். “இந்தக் கஷ்டத்திலும் எத்தன புள்ள பாரு” என்று அவர்களைப் பார்த்து சிலர் கருவுவது உண்டு. உழைப்பிற்கு எண்ணற்ற கைகள் தேவைப்படும் அவர்களின் வாழ்க்கைச் சூழலை அறியாத திண்ணைப் பேச்சு கும்பகோணங்கள் அது! நூல் விரிக்கும் அளவுக்குக் கூட வீடு இல்லாததால் வெளியே நூல், சாயம் பார்ப்பதும் வீடுகளுக்குள் பெருங்குடும்பமாக அவர்கள் மடித்துப் படுத்துக் கொள்வதுமான அந்தத் தொழிலாளிகள் இல்லாவிடில் சாமிகளுக்கு ஏது சரிகைப் பட்டு! மாமிகளுக்கு ஏது மடிசார் கட்டு!
தாராசுரத்தில் எம்.எஸ். ஸ்டாலின் என்ற R.I.M.P ஒரு டாக்டர் இருந்தார். அனுபவ வைத்தியர். அவர் தி.க.காரர் பெரியார் படம், புத்தகங்களை வருபவர்கள் பார்வையில் படும்படி வைத்திருப்பார். பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்களைத் தாண்டி மக்களின் கண்களுக்கு புத்தகங்களைக் காட்டியது அந்தப் பகுதியில் அவர்தான். பார்ப்பனியம் பூஜைகளையும், விபூதியையும் காட்டி புத்தகங்களை மறைத்த காலத்தில் ஊரில் அவர் மட்டுமின்றி பல முடிதிருத்தும் கடைகளில் பெரியார் நூல்கள் மூளையைத் திருத்தும். இவர்களின் பங்களிப்பு விளம்பரமில்லாத சமூகத் தொண்டு. பார்ப்பனர்களும், மடாதிபதிகளும் தீபாராதனைகளைக் காட்டி கண்ணைக் கட்டும் காலத்தில் கண்களைத் திறந்த இவர்கள் அல்லவா கும்பகோணத்தின் குரு பரம்பரைகள்! அதுவும் மண்ணில் விளையாண்டு, சொறி சிரங்கு வந்தபோது ஸ்டாலினிடம் போக அவர் புண்ணைத் துடைக்கையில் அலறினேன். “ஏண்டா பல ஆண்டுகளாய் நம்ம மேல இருக்குற பார்ப்பன சிரங்கையே பொறுத்துகிட்டுருக்கோம், இந்த சொறிசிரங்கு எரியூதாடா? இத விட பெரிய எரிச்சல் அது, அதையே பொறுத்துக்கிட்டு இருக்கோம்! இது போயிடும், அத என்ன செய்ய போறோம்… ஹூம் சொல்லுடா?’’ என்று பேசிக் கொண்டே மருந்து போட்டு, மாத்திரை கொடுத்தது நினைவுக்கு வந்து போகிறது. அது மட்டுமல்ல ஊசி போடும்போது ஆ… என்று சிலர் கத்தும்போது, ஏண்டா! அத்தன ஊசியக் குத்திக்கிட்டு காவடி போட்டுக்கிட்டுப் போற இப்ப கத்துற? என்று இடித்துரைப்பார்! இதில் வியப்பு என்னவென்றால் அவர் தி.க. நாத்திகர், பகுத்தறிவுவாதி, பகுதி மக்களுக்கோ அவர் கைராசி டாக்டர்.
மகாமகத்தில் ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்
குருஸ்தலம், ராகுஸ்தலம், கேதுஸ்தலம் இப்படி கும்பகோணத்தை சுற்றி இருக்கும் பல ஊர்களும் விவசாயிகளின் வேலைக்களம்தான். இந்த விவசாயிகள், சிறு தொழிலாளிகள், வாகன ஓட்டுநர்கள், தெருவுக்கு கீரை கட்டு சுமக்கும் பெண்கள், பொற்றாமரைக்கும், மாமாங்குளத்திற்கும் காலரா வராமல் தடுக்கும் நகர சுத்தி தொழிலாளர்கள் இவர்கள்தான் உழைக்கும் கும்பகோணத்தின் தலைகள்! இவர்கள் இல்லாமல் இவர்களைப் பற்றி பேசாமல் என்னடா தலபுராணம்! இவர்களை அடிமைப்படுத்தும், சுரண்டும் சூழலை எதிர்க்காமல் ஊர் உருப்படுமா? எத்தனை மகாமகம் குளித்தாலும் பாவம் போகுமா? “சாமி கும்பிடுவதற்காக ஏன்? பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா?’’ என்று பெரியார் கேட்ட கேள்வியில் எவ்வளவு நியாயமும், உண்மையும் இருக்கிறது. பெரியாராவது பகுத்தறிவுவாதி. பார்ப்பனர் காளமேகப் புலவரே, “தோளை முறித்ததுமன்றி, நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய்; நாளை இனியார் சுமப்பார். எந்நாளும் உன் கோயில் நாசந்தானே!’’ என கோயில் நாசமாய் போகட்டும் என்று குருக்களையும் பல்லக்கில் சுமந்ததை நொந்து பாடியுள்ளார்.
பார்ப்பன இந்துவெறியை பல்லக்கில் ஏற்றி நம் தோள்களை முறிக்கும் தொலைநோக்குத் திட்டத்தில் ஒன்றுதான் மகாமகத்துக்கு வடக்கிலிருந்து அகோரிகளை அழைத்துவருவது, துறவியர் மாநாடு நடத்துவதெல்லாம், மெல்ல மெல்ல வடக்கே கும்பமேளா போல திருவிழாக்களை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆரிய பரிவாரத்தின் கைக்கருவிகளாக தீட்டிக் கொண்டு மக்களை இந்து மதவெறிக்குள் திரட்டுவது என்பதுதான் அவர்களின் திட்டம். சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கையை மெல்ல மெல்ல இந்துமதவெறி நம்பிக்கையாக மாற்றும் காவியுலக பாவிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற உழைக்கும் வர்க்கத்தின் விசுவரூப எழுந்தருளை வேண்டி நிற்கிறது உலகம்!
நேற்று கேரள கவர்னராக சதாசிவம்! இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!
தத்துவும் சதாசிவமும்
பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது “நீதிபதிகளும் தலைமை நீதிபதிகளும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு என கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிடவேண்டும் என அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகை. சட்டங்களை நன்றாக தெரிந்துவைத்திருப்பவர்கள். இன்னொரு வகை சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என கிண்டலடித்தார். ஜெட்லி சொன்னது இன்று நடைமுறை உண்மையாகி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது ஜெட்லியின் கட்சிதான் அப்படி நீதிபதிகளை ‘வளைத்து’ வருகிறது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம், துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் பா.ஜ.கவின் தேசிய செயலராக இப்பொழுது இருக்கும் அமித்ஷாவை விடுவித்தார். அதற்கு பலனாக தான் அவருக்கு கேரள கவர்னர் பதவி கிடைத்தது என சர்ச்சையானது . மற்றொரு சர்ச்சை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என சதாசிவம் லாபி செய்தார் என பரவலாக பேசப்பட்டது!
”இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரமுகர் சதாசிவம்தான். கடந்த செப்டம்பரில் (2014-ல்) அவருடைய நியமனம் நடைபெற்றபோது 2 முன்னாள் தலைமை நீதிபதிகள் அதை விமர்சித்தனர். அரசியல் நெருக்கடிக்கு ஆளாகாமல் நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதால், இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல என்றே கருதப்பட்டது.”என எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவும் குறிப்பிடுகிறார்.
கேரள கவர்னராக நியமனம் குறித்து தனது அதிருப்தியை முன்னாள் கூடுதல் சாலிசிடர் ஜெனரல் கே.வி. விஸ்வநாதன் திறந்த கடிதம் மூலம் சதாசிவத்திற்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களின் கரங்களுக்கிடையே இடைவெளி என்பது ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்து இருக்க வேண்டும். மாறாக கரங்கள் இடைவெளியை குறைத்து ஆரத்தழுவினால், அது பயங்கர ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நீதிபதிகளான வி.என். கரே மற்றும் கே.டி. தாமஸ், சட்ட ஆனையத்தின் தலைவர் ஏ.பி. ஷா, மூத்த வழக்குரைஞர்கள் ராஜீவ் தவான் மற்றும் பாலி.எஸ்.நாரிமன் போன்றோர் சதாசிவத்தின் நியமனத்தை விமர்சித்து இருந்தனர். அனைத்திந்திய பார் அசோசியஷேனும் மற்றும் கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் நியமனத்தை கண்டித்திருந்தது.
அமித் ஷாவுடன் சதாசிவம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதோ ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்!
குஜராத் படுகொலைகள் வழக்கில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய சஞ்சீவ்பட் மனுவை தள்ளுபடி செய்தார்
மாயா கோத்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைப்பு மற்றும் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதி தத்து, மாயா கோத்னானிக்கு ஜாமீன் கிடைத்தே தீர வேண்டும் என்பது போல செயல்பட்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வருடம் ஜனவரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோடியை சிறந்த தலைவர், நல்ல மனிதர் மற்றும் தொலைநோக்கு பார்வை உடையவர் என்று மோடியை புகழ்ந்தார்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்து மற்றும் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க ‘கால்குலேட்டர்’ புகழ் குமாரசாமியை பயன்படுத்தியவர்
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தத்துவிடம் புகார் அளித்தார்கள். அதற்கு, ’யாராவது ஒருவர் நான் 1000 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்கினேன் என்று கூறுவார்கள். கவலைபடாதீர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு தடித்த தோல் இருக்கிறது’ என தேர்ந்த பிழைப்புவாதி போல் பதில் அளித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் தத்து எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை. அவர் அளித்த உத்தரவு முறைகேடனாது மற்றும் சந்தேகத்திற்கு உரியது அதனால் இந்த வழக்கை மேலும் அவரே விசாரிக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் 1000 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட மனுவை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர்.
எச்.எல் தத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்களுக்கு அனுப்பி இருந்தார். அதை ஊடகங்கள் வெளியிடாததை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்
மதுரையில் வழக்குரைஞர்கள் ரமணா படம் போல டாப் 5 ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டபொழுது மிகவும் துடித்துப்போனவர் தத்து. நீதிபதி கர்ணன் குறித்த ஒரு வழக்கில், சம்பந்தமேயில்லாமல் வழக்குரைஞர்களால் நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்று அலறினார்
இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது தான், தேசிய மனித உரிமை ஆணையர் பதவி கிடைத்திருக்கிறது.
மோடியுடன் தத்து
நீதிபதிகள் இவ்வாறு பதவிகளை தேடி ஓடுவது என்பது நீதித்துறையின் சுதந்திரதன்மைக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கான மோசமான அடையாளங்கள் சதாசிவம் நியமனமும் அதன் பின் தொடரும் தத்துவின் நியமனமும்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்மையாக தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் “ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் என்பது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.” என குறிப்பிட்டார்.
குன்ஹாவின் வரையறைப்படி, பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய முரண் இது!
நிலவுகிற மோடி அரசு அறிவிக்கப்படாத நெருக்கடியை நிலையை நாடெங்கும் அமுல்படுத்திவருகிறது. தனது வானர கொலைகாரப் படைகளை காக்க காவி சிந்தனையுள்ள நீதிபதிகளை நீதித்துறைக்குள் நியமிக்க எல்லாவகையிலும் முயன்றுவருகிறது. அவர்கள் எதற்கு? நாங்களே நீங்கள் நினைப்பதை நிறைவேற்றி தருகிறோம் என்பதை தான் கவர்னர் பதவியும், மனித உரிமை ஆணையர் தலைவர் பதவியும் நிரூபிக்கின்றன.
இறுதிச்சுற்று படத்தில் ஒரு வசனம் வரும். ”ஊழல்வாதிகள் உங்களை நான் விசாரிக்கனும், ஆனால், நீங்க விசாரிக்கிற இடத்துல உட்கார்ந்து இருக்கீங்க!” நேர்மையான வழக்குரைஞர்கள் நாம் இப்பொழுது கூண்டில் நிற்கிறோம். அவர்கள் நம்மை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒன்றிணைந்து நீதித்துறையில் ஊழல்வாதிகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும் பொழுது மட்டும் தான் அவர்கள் பலம் இழப்பார்கள். இல்லையெனில், நம் அமைதியே அவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது!
விருத்தாச்சலம் பாலக்கரை பகுதியில் 25-02-2016 அன்று மாலை 4.30 மணியளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் அணியின் விருத்தாச்சலம் இணைச்செயலர் தோழர் மணிவாசகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவர் தோழர் சுரேஷ், வழக்கறிஞர் தாழை மு.க.கருணாநிதி மற்றும் பு.மா.இ.மு செயலர் தோழர் கதிர்வேல் கண்டன உரையாற்றினர்.
டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மோடி அரசு. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்நிலை பல்கலைக் கழகங்களில் இந்து மனு தர்மத்தைத் திணிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி, பா.ஜ.க கும்பல் செய்யும் முதல் முயற்சி அல்ல இந்தக் கைது.
சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர்-பெரியார் படித்து வட்டத்திற்குத் தடை, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தலித் ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை, பனாரஸ் இந்து பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி கிரீஷ் சந்திர திரிபாதியால் பல்கலைக் கழகத்தை காவிமயமாக்க இடையூறாக இருந்த பேராசிரியர் சந்தீப் பாண்டே நீக்கம், புனே திரைப்பக் கல்லூரி இயக்குனராக ஆர்.எஸ்.எஸ் வெறியன், செக்ஸ் பட நடிகன் கஜேந்திர சவுகான் நியமனத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி தாக்குதல் இப்படி கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கொலை, மூட நம்பிக்கையை எதிர்த்து எழுதிய எழுத்தாளர்க்ள மீது தாக்குதல், நீதித்துறையை காவிமயமாக்குவதை எதிர்த்த வழக்கறிஞர்கள் வழக்காட தடை என்று நாடு முழுவதிலும் சாத, மதக் கலவரங்களைத் தூண்டி விடும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி பயங்கரவாத காவி கும்பலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்.
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாச்சலம்
தருமபுரி
சென்னை ஐ.ஐடி, ஹைதராபாத்தைத் தொடர்ந்து டெல்லி ஜே.என்.யு-வை ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்!
என்ற தலைப்பின் கீழ்
கைது செய்யப்பட்ட ஜே.என்.யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா குமாரை உடனே விடுதலை செய்!
பேராசிரியர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க, ஏ.பி.வி.பி குண்டர்களை கைது செய்!
ஏறிவந்து தாக்கும் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு பதிலடி கொடுப்போம்!
என்ற முழக்கங்களுடன்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் தருமபுரி தந்தி அலுவலகம் முன்ம்பு 27-02-2016 அன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.மா.இ.மு தோழர் அன்பு தனது தலைமையுரையில் பார்ப்பன பாசிசம் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி மூலம் தாக்குதல் நடத்துவதையும் மாணவர் மத்தியில் சாதி மதக் கலவரங்களை தூண்டும் சதித்தனத்தை அம்பலப்படுத்தியும், மாணவர்கள் வர்க்க ஒற்றுமையை நிலைநிறுத்தி காவி இருளை திரை கிழிக்க வேண்டும், புதிய ஜனநாயக சமூகத்தை படைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்து பேசினார்.
அடுத்ததாக கண்டன உரையாற்றிய பு.மா.இ.மு தோழர் வனிதா கல்வித்துறையில் நிலவுகின்ற பார்ப்பன பாசிசம் குறித்தும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வி காட்ஸ்-க்கு அடகு வைக்கப்படுவதையும் பற்றியும் பேசினார்.
வி.வி.மு பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், “ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவர் கண்ணையாகுமாரை கைது செய்து தேசவிரோத வழக்கு போட்டுள்ள மத்திய அரசின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. நீதிமன்றம் மக்களுக்கானது இல்லை, எனவே இந்த அரசுக் கட்டமைப்புக்குள் இதற்கு தீர்வு காண முடியாது” என்று விளக்கி பேசினார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் பேசுகையில், “எது தேசவிரோதம்? எது தேசப்பற்று என்று கேள்வி எழுப்பி, விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் துரோகம், இன்று மோடியின் மத்திய அரசு நாட்டை அன்னிய ஏகாதிபத்திய நலன்களுக்கு விற்பது இவற்றை தோலுரித்து பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக பு.மா.இ.மு தோழர் ஸ்டாலின் நன்றியுரையாற்றினார்.
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தருமபுரி மாவட்டம்
தொடர்புக்கு 8148055539
எஸ்தர் அக்கா அலங்கரிக்கப்பட்டிருந்தாள். முகத்தின் சுருக்கங்கள் அறியாதபடிக்கு ஏதோ களிம்பைப் பூசியிருந்தார்கள். பட்டுப்புடவை ஒன்றை அவள் மேனியின் மேல் சுற்றி வைத்திருந்தனர். தலையை அழகான வெள்ளை நிற ரீத் அலங்கரித்தது. முன்பென்றால் இத்தனை அலங்காரத்திற்கும் கழுத்தெல்லாம் நகையாக போட்டு நிறைத்திருப்பாள்… ஆனால், சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதை அவளே கூட விரும்பியிருக்க மாட்டாள்.
“எல்லாம் வல்ல எங்கள் பிதாவே.. எங்கள் சகோதரி எஸ்தரை உமது சமூகத்தில் ஒப்புக் கொடுக்க வந்துள்ளோம் அய்யா…”
வெட்டி வைக்கப்பட்ட குழியின் வலது பக்கமாக அச் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது – சுற்றிலும் உறவினர்கள் அடைத்துக் கொண்டு நின்றனர். பெட்டியின் அருகே கோயில்குட்டியார் நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
தலைமாட்டில் சாமுவேல் மாமா.. பக்கத்திலேயே டானியல் சித்தப்பா.. குழியின் இடது பக்கமாக நீண்ட அங்கியுடன், நடுங்கும் கைகளில் பைபிளைப் பிடித்து வியர்த்த முகத்தோடு ஜெபத்தை சொல்லிக் கொண்டிருந்தான் ஜோன்ஸ். உடன்படித்த நண்பன். அய்யருக்கான படிப்பு முடித்து விட்டு பல ஆண்டுகாலமாக வேறு வேறு ஊர்களில் உபதேசியாராக பணிபுரிந்து விட்டு இப்போது தான் எங்கள் சர்ச்சுக்கே அய்யராக வந்துள்ளான். அவனுக்கு இது முதல் சவ அடக்கம்.
“தேவ சமூகத்திலே எங்கள் சகோதரியைக் கண்ணீரோடு விதைக்கிறோமய்யா….”
அதற்கு மேல் அங்கே நிற்கப் பொறுக்கவில்லை. கையில் இறுக்கிப் பிடித்த வேத புத்தகத்தோடு மெல்ல விலகினேன். “தம்பிகாரன் மண்ணள்ளிப் போடாம எங்கே போகான்..?” யாரோ கிசுகிசுத்ததை பொருட்படுத்தாமல் கூட்டத்திலிருந்து விலகி வந்தேன். வார்த்தைகள் காதில் விழாத இடமாகச் சென்று ஏதோவொரு பளிங்குக் கல்லறையின் மேலமர்ந்தேன். காதுகளில் அந்த வார்த்தைகள் மீண்டும் ஒலித்தது.. “கண்ணீரோடு விதைக்கிறோம்…” அக்காவின் குழைந்த குரலில் இந்த வார்த்தைகளை ஆயிரம் முறைகளாவது கேட்டிருப்பேன்..
“இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை..
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை
“கசந்த மரா.. மதுரமாகும்… வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்..
கண்ணீரோடு நீ விதைத்தால்… கெம்பீரமாய் அறுத்திடுவாய்…”
ஐந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் கசந்த மரா நதி அதன் பின் என்றைக்குமே மதுரமாகவில்லை. அது ஈஸ்டர் தினம். கோவிலில் முதல் சர்வீசு முடிந்ததும் கம்யூனியன் கூட எடுக்காமல் அக்காவும் மாமாவும் அவசரமாக கிளம்பினார்கள்.
”எங்கே மாமா?”
“திருநவேலிக்கு மருமானே.. ஒன் அக்காவுக்கு மேலுக்கு சொவமில்ல.. ஏதோ கட்டி வந்திருக்காம்.. ஆக்னஸ் டாக்டரம்மாட்ட காட்டிட்டு சாயந்திரம் வாறோம்” ஆனால் அவர்கள் மறு நாள் தான் வந்தார்கள். வந்ததும் மாற்று உடைகள் எடுத்துக் கொண்டு மேலும் விவரங்கள் ஏதும் சொல்லாமல் மதுரை அப்பல்லோவுக்கு கிளம்பினார்கள். அக்காவின் முகம் இருண்டு போய்க் கிடந்தது.
அந்த ஈஸ்டரோடு எங்கள் சந்தோஷம் மொத்தமும் ஆவியாய்க் கரைந்து போனது.
புற்றுநோய் என்பது பணக்காரர்களின் வியாதி என்று தான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். அக்காவுக்கு மார்பக புற்றுநோய் என்பதை எங்களால் முதலில் நம்ப முடியவில்லை. உண்மை உறைக்கத் துவங்கிய போது பண்டிகைகளுக்கு மட்டுமே சர்ச் வாசலை மிதிக்கும் வழக்கமுள்ள எங்கள் குடும்பம் அடியோடு மாறிப் போயிருந்தது. சுவிசேஷ தொலைக்காட்சிகளின் பிரசங்க ஓலங்கள் தவிர்த்த சப்தங்கள் மொத்தமாய் அடங்கிப் போனது.
அக்கம் பக்கத்து வீட்டினரிடம் பேசுவது கூட மெல்ல மெல்லக் குறைந்து போனது. எப்போதுமில்லாத வழக்கமாய் வீட்டுக்குள் சுவிசேஷ ஊழியர்களின் நடமாட்டம் அதிகரித்த போது முதலில் தாத்தா தான் எச்சரித்தார். பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்த தேவ ஊழியர் ஒருவர் கான்சர் கட்டியை ஜெபத்தாலேயே அகற்றும் வல்லமை கொண்டவர் என்று கேள்விப்பட்டு அவரை வீட்டுக்கு அழைத்து வந்து சிறப்பு ஜெபத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளன்று படுக்கையில் இருந்து கத்தினார் தாத்தா…
”என் பேத்திய கொண்ணு புடாதியடே.. ஆசுபத்திரிக்கி கொண்டு போய் காட்டுங்க.. ஆசுபத்திரிக்கி கொண்டு போய் காட்ட கூடாதுன்னு ஆண்டவர் பைபிள்ள எங்கயும் சொல்லியா வச்சிருக்காரு..”
ஊழியரின் முகம் இருண்டு போனது… இருண்ட முகத்தோடே ஜெபத்தைத் துவங்கினார்.
“யேசப்பா… பொல்லாத சாத்தானின் பிடியில் இருந்து இந்த குடும்பத்தைக் காத்தருளும் அய்யா.. யெல்லாஷா ரப்பா ஷாய்யார்ரா.. இந்த நொடியில் சாத்தான் விலகட்டும்.. சகோதரி எஸ்தரின் கட்டியை இந்த நொடியில் தூக்கிப் போடும் அய்யா…” தன்னை சாத்தான் என்று மறைமுகமாக விளித்ததில் தாத்தா ரவுத்திரமாகிவிட்டார். ஜெபம் நடந்து கொண்டிருக்கும் போதே உள்ளே புகுந்து பெரும் கலவரத்தை உண்டாக்கி விட்டார்.
”அட ஆக்கங்கெட்ட மூதியளா.. இனிமெ இந்த வீட்டுப்பக்கம் வந்தியள்னா கொண்டைய அறுத்துப் போடுவேன்.. என் பேத்திய ஆசுபத்திரிக்கி அனுப்பவுடாம கொல்லப் பாக்கியளா?” அதற்கு மேல் அத்தனையும் கெட்ட வார்த்தைகள் தான்.
அதிலிருந்து அக்காவும் மாமாவும் தங்கள் நடவடிக்கைகளை மேலும் ரகசியமாக்கிக் கொண்டார்கள். ஒரே வாரத்தில் அக்காவை பக்கத்து ஊரில் இருக்கும் தனது வீட்டுக்கே அழைத்துப் போய் விட்டார் மாமா. எங்கள் வீட்டுக்கு வருவதையும் நிறுத்தி விட்டனர். நாங்கள் பார்க்கச் சென்ற போதும் கூட வீடு பூட்டியே கிடந்தது.
அதன் பின் சில வாரங்கள் கழித்து வள்ளியூர் பேருந்து நிலையத்தில் வைத்து மாமாவைப் பார்த்தேன்.. நிறைய மாறியிருந்தார். இப்போதெல்லாம் அக்காவுக்கு அடிக்கடி தேவப் பிரஸன்னம் நடக்கிறது என்றும் ஆண்டவர் அக்காவோடு அடிக்கடி பேசுகிறார் என்றும் கான்சர் கட்டிகளை அவர் விரைவில் அகற்றுவார் என்றும் சொன்னார்.
மேலும் தங்கள் குடும்பத்தில் நிகழும் அற்புதங்களை சாட்சியாக அறிவிக்க ஆண்டவர் அழைத்துள்ளார் என்றும் அதனால் தனது வேலையை விட்டு விட்டு இருவருமாக ஊழியத்தில் சேர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார். மூன்றாம் மனிதர் ஒருவரிடம் பேசுவதைப் போல் பேசியவரின் முகத்தில் ஏதோவொன்று குறைவதாகப் பட்டது. பேச்சில் ஒருவிதமான செயற்கைத்தனம் ஏறியிருந்தது. பேசுவதே பிரசங்கம் செய்வது போலிருந்தது.. இடையிடையே அந்நிய பாஷையில் ஏதோ உளறினார்.. திடீரென அத்தனை ஜனங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க லஜ்ஜையின்றிப் பாடத் துவங்கினார்..
”தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே”
”மாமா கொஞ்சம் நிப்பாட்டுங்க.. எல்லாரும் நம்மையே பாக்காங்க”
“பாக்கட்டுமே.. ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் கிருபையை இந்த உலகத்துக்கு அறிவிக்க வேண்டியது நம்மோட கடமை தானே?”
அதன் பின் சில மாதங்கள் கழித்து மாமாவும் அக்காவும் பிள்ளையை இங்கே யாரோ ஒருவரின் பொறுப்பில் விட்டு விட்டு ஒரிசா மாநிலத்தில் பழங்குடி மக்களிடையே சுவிசேஷத்தை அறிவிக்க கிளம்பி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இடையில் அக்காவுக்கு நோயின் தீவிரம் குறைந்து விட்டதாகவும் கான்சரின் வீரியம் மறைந்து விட்டதாகவும் சொன்னார்கள். மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் விசுவாசத்தின் மூலமே நிகழ்ந்த இந்த அற்புதத்தை உலகுக்கு அறிவிக்கும் ஜீவ சாட்சிகளாக தங்களை அவர்கள் ஒப்புக் கொடுத்து விட்டதாக பொதுவானவர்கள் மூலம் கேள்விப்பட்டோம்.
இடையில் சில ஆண்டுகள் அக்காவைப் பற்றிய தகவலே இல்லை. அவர்களை ஒரிசாவுக்கு அனுப்பி வைத்த ஊழியக்காரர்களைக் கண்டுபிடித்து அக்காவைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் சொன்னதெல்லாம் ஆச்சர்யமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அக்காவுக்கு அந்நிய பாஷையும் தரிசனமும் வரமாக கிடைத்துள்ளதாம். அக்காவின் கான்சர் கட்டிகளை ஆண்டவர் முற்றிலுமாக அகற்றி விட்டாராம். தினசரி அக்காவுக்கு பரிசுத்த ஆவியின் தரிசனம் கிடைக்கிறதாம். வெளிப்படுத்தின சுவிசேஷ புத்தகத்தில் ஆண்டவரின் மறுவருகை குறித்து சொல்லப்பட்டிக்கும் தீர்க்க தரிசனங்கள் பலவற்றை அக்கா முன்னறிந்து சொல்லும் வல்லமையை அடைந்து விட்டாராம். ஆண்டவரின் வருகை சமீபத்தில் உள்ளது என்றார்கள்.
நவீன மருத்துவத்தின் துணையின்றியே ஒரு பொல்லாத நோயிலிருந்து ஆண்டவர் அக்காவுக்கு விடுதலை அளித்ததை இப்போது அவர் சாட்சியாக மக்களிடம் தெரிவித்து வருகிறார் என்றார்கள். ஒரிசாவின் பழங்குடிப் பகுதி ஏதோவொன்றில் ஊழியம் செய்து வருகிறார் என்றும் தமிழ் நாட்டுக்கு வரும் போது அவர் எந்த சபையில் பிரசங்கம் செய்வார் என்கிற தகவலை எங்களுக்குத் தெரிவிப்பதாகவும் சொன்னார்கள்.
ஆண்டவரின் வல்லமையை எங்கள் குடும்பம் இன்னும் ஏற்காமல் இருப்பதற்கு சாத்தானின் பிடியில் நாங்கள் இருப்பது தான் காரணமென்றார்கள். ஒரு குடும்ப ஜெபத்தை ஏற்பாடு செய்து அதில் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்தால் தேர்ந்த தேவசெய்தியாளர் ஒருவர் வந்து ஜெபித்து சாத்தானின் ஆதிக்கத்தை முறியடித்து விடுவார் என்றார்கள். சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு உள்ளேயே சாத்தானின் பிடி இறுகி வருவதாகவும், அதனால் தான் அதற்குள் அரசியல் பிரச்சினைகள் ஏறபடுவதாகவும் சொன்னார்கள். உடனடியாக சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு செல்வதை நிறுத்தி விட்டு தங்கள் சபையில் சேர்ந்து முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் மறுமையில் ஆண்டவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் சொன்னார்கள்.
அவர்களிடம் பேசி வந்த பின் உள்ளூர பயம் ஏற்பட்டது. அப்போது ஜோன்ஸ் நாங்குநேரி சி.எஸ்.ஐ சர்ச்சில் உபதேசியாராக பணிபுரிந்து வந்தான். வீட்டாரிடம் இந்த விசயங்கள் எதையும் சொல்லாமல் நேரே ஜோன்ஸைப் போய் சந்தித்தேன்.
என்னதான் நண்பன் என்றாலும் அய்யரின் வெள்ளை அங்கியோடு அவன் இப்படிப் பேசியது சரியாகப் படவில்லை. பெந்தெகொஸ்தே ஊழியர் சொன்னது சரிதான் போலிருக்கிறது. உள்ளூர பயம் வேர் விடத் துவங்கியிருந்தது.
அதோடு சி.எஸ்.ஐ கோவிலுக்குச் செல்வதை நிறுத்தி விட்டு சுவிசேஷ தொலைக்காட்சிகளைப் பார்க்கத் துவங்கினேன். தினமும் பலமணி நேரம் முழங்காலிட்டு ஜெபம் செய்யத் துவங்கியிருந்தேன். ஆனாலும் அச்சம் குறைந்தபாடில்லை. எதற்கு அஞ்சுகிறேன் என்றே தெரியாமல் அஞ்சினேன். ஏதோவொன்று கெட்டதாக நடக்கப் போகிறது என்று எந்நேரமும் உள்ளேயிருந்து ஒரு குரல் சொல்லத் துவங்கியது. காதுகளுக்குள் எந்த நேரமும் ஏதேதோ குரல்களும் ஒரு எக்காளச் சப்தமும் கேட்கத் துவங்கியது. அது ஆண்டவரின் வருகையை அறிவிக்கும் எக்காளச் சத்தம் என்று சாது சுந்தர் செல்வராஜ் ஏஞ்சல் டி.வியில் யாருக்கோ விளக்கமளித்தது மேலும் அச்சத்தைக் கூட்டியது. மெல்ல மெல்ல உடல் எடை குறையத் துவங்கினேன்.
ஆண்டவரின் வல்லமையை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேனோ? நித்திய நரகத்தில் நான் உழலப் போகிறேனா?
ஏறக்குறைய வீட்டுக்குத் தெரியாமல் பெந்தெகொஸ்தே சபையில் சரணடைந்து முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து மறுமை வாழ்க்கையைக் காப்பாற்றி விடலாம் என்று நான் தீர்மானித்திருந்த சமயத்தில் தான் அக்கா ஒரிசாவில் இருந்து திரும்பி வந்து விட்டாள் என்கிற தகவல் கிடைத்தது.
ஆறு மாதங்களுக்கு முன் நடந்தது அது. எப்படி வண்டியில் ஏறினேன், எப்படி அதை ஓட்டினேன் என்று எதுவும் நினைவில் இல்லை. கிட்டத்தட்ட ஜோம்பியைப் போலத் தான் அந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மாமாவின் வீட்டை அடைந்தேன்.
தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு ஏஞ்சலை சந்திக்கப் போகும் ஆர்வம். நடு மார்பில் ஏதோவொன்று உருளத் துவங்கியது. படிக்கும் காலத்தில் நான் குடித்திருக்கிறேன். புகைத்திருக்கிறேன். சைட் அடித்திருக்கிறேன். ஆண்டவரின் இரட்சிப்பை நேரடியாக பெற்ற இந்த ஏஞ்சல் என்னைப் பார்த்த மாத்திரத்தில் இந்தப் பாவங்களை அறிந்து கொள்வாரோ என்கிற பயம் கவ்வியது. மாமா வீட்டுக் கதவைத் தட்டி விட்டு திறப்பதற்காக உள்ளங்கை வியர்க்க காத்திருந்த அந்த 45 நொடிகளை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன்.
கதவு திறந்த போது எனது உணர்வுகள் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குத் தாவியது. அக்காவின் சாயலில் ஒருவர் நின்றிருந்தார். சதையே இல்லாத உடல். உடல் என்று கூட சொல்ல முடியாது.. எலும்புக் கூட்டை தோல் மூடியிருந்தது. கண்கள் பிதுங்கி வெளியே விழுந்து விடத் தயாராக நின்றது. பற்கள் துருத்திக் கொண்டு தெரிந்தது. தலையில் அனேக மயிர்கள் உதிர்ந்து மண்டைத் தொலி மின்னியது.
“வாடா வின்செண்டு” அது அக்கா தான். முடிவில்லாத கிணறு ஒன்றினுள் என்னைத் தூக்கி வீசியதைப் போல் உணர்ந்தேன்.
மாமாவும் ஏறத்தாழ அக்காவின் நிலையில் தான் இருந்தார். விசாரித்த போது தான் பல விசயங்கள் தெளிவாகின. அக்காவுக்கு கான்சர் உண்மையில் குணமாகவே இல்லை. அதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. கான்சர் என்பதை அறிந்து உளவியல் ரீதியில் நொறுங்கிப் போனவர்கள் மிக எளிதாக சுவிசேஷ மாயையில் வீழ்ந்துள்ளனர். தொடர்ந்து உபவாச ஜெபமிருந்து வந்த நிலையில் கான்சரின் அறிகுறிகள் மேலெழுந்து வருவதும், மறைந்து போவதுமாக இருந்துள்ளது. அதையே அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற்று விட்டதாக நம்பியுள்ளனர். கான்சரின் அறிகுறிகள் மேலே எழுந்து வரும் சந்தர்பங்களில் தங்கள் விசுவாசத்தில் ஏதோ குறையிருப்பதாக கருதி மேலும் மேலும் ஜெபத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எங்கள் வீட்டாருக்கு விசயம் தெரிந்த போது ஒரு பிரளயமே நடந்து விட்டது. பெந்தெகொஸ்தே ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அக்காவை அவர்களோடு சண்டை போட்டு மீட்டு எங்கள் வீட்டுக்கு கொண்டு வர மேலும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகி விட்டது. பின் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது கான்சர் மார்பகத்திலிருந்து நுரையீரலுக்கும் பிற உடல் பகுதிகளுக்கும் பரவி விட்டதாகச் சொன்னார்கள். மூன்றாம் நிலையின் இறுதியில் சாவின் எல்லைக் கோட்டுக்கு மிக அருகில் அக்கா இருந்தாள்.
இத்தனைக்கு இடையிலும் அவளது விசுவாசம் குறையவே இல்லை. இறுதி நாளிலாவது ஆண்டவரின் கிருபை தனக்கு எப்படியும் கிட்டும் என்று உளமாற நம்பினாள். இந்த உலகத்திற்கு தனது வல்லமையை நிரூபிக்க தனது உடலையே ஆண்டவர் களமாகத் தெரிவு செய்துள்ளார் என்று புலம்பினாள். எங்கள் வீட்டிலிருந்த கடந்த மூன்று மாதங்களில் அவள் உறங்கிப் பார்த்ததேயில்லை – விழித்திருந்தும் பார்த்ததில்லை. எப்போதும் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் ஏதோவொரு நிலையிலேயே இருந்தாள். ”ஆண்டவரே கிருபை தாரும்” என்று அவளது வாய் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.
மாமாவோ பித்துப் பிடித்த நிலையில் இருந்தார். ஆண்டவரின் இரட்சிப்பு கண் முன்னே தோற்றுப் போகும் என்று அவர் நம்பவில்லை. நள்ளிரவின் அமைதியில் திடீரென்று பெருங்குரலெடுத்து பாடத் துவங்குவார். அவர் உடலில் இருந்த நீரெல்லாம் கண்கள் வழியே வழிந்து தீர்த்தது.
கடந்து போன இந்த மூன்று மாதங்களின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்தது. அக்காவுக்கு நோயின் தீவிரம் கூடிக் கொண்டே போனது. அக்காவின் பிள்ளையே அவளைக் கண்டு அருகே செல்ல அஞ்சினாள். கான்சரின் வலி அதிகரித்த சமயங்களில் அவளது உடல் அவளின் கட்டுப்பாடின்றி எழுந்து நடக்கும். இலக்கின்றி தனது அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தாள்.. பொருட்களின் மேல் தட்டுத் தடுமாறி விழுந்தாள். உடல் கூட்டை விட்டு வெளியேற உயிர் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அதன் பயங்கரங்களையும் எங்கள் குடும்பம் மிக அருகிலிருந்து கண்டது.
முன்கோபியான தாத்தா தனது பேத்தியை பெந்தெகொஸ்தே ஊழியர்கள் தான் கொன்று விட்டார்கள் என்று கருதினார். வீட்டுக்குள் யாராவது பெந்தெகொஸ்தே ஊழியர் வந்தால் வெட்டிப் போடுவதற்காக கருக்கறிவாளை தலை மாட்டுக்குக் கீழ் வைத்துக் கொண்டே காத்திருந்தார்.
”அய்யா ஆண்டவரே.. தாயும் தகப்பனும் இல்லாத இந்த பிள்ளையள பொன்னு போல பொத்தி வளத்தனே.. இப்படி பாதில தூக்கிட்டு போகப் பாக்கீரே உமக்கு மனசாச்சி இல்லையா…” தாத்தா தனிப்பட்ட முறையில் ஏசப்பாவை ஒருமையில் பேசத் துவங்கி ஒருகட்டத்தில் வீட்டிலிருந்த பைபிள்கள் பாமாலை புத்தகங்கள் என்று அனைத்தையும் கிணற்றில் தூக்கி வீசுமளவிற்கு போனார்.
அக்காவின் ஜெபங்களோ, மாமாவின் அரற்றல்களோ, தாத்தாவின் மிரட்டல்களோ எதுவும் வேலைக்காகவில்லை. கடைசி வரை ஆண்டவர் தனது கிருபையின் ஆட்சியை நிரூபிக்காமலே மௌனம் சாதித்து விட்டார். அக்கா செத்துப் போனாள். இறப்பதற்கு கொஞ்சம் முன்பாக என்னை அழைத்தாள்.
“என்னிய தூக்கி அந்த படுக்கைல கிடத்துலெ.. வின்செண்டு இனிமே நான் பிழைச்சிகிட மாட்டேன் போல தெரியுது. பாப்பாவை நீ தான் நல்லா பாத்துக்கிடனும். செய்வியாடே?”
பதில் சொல்லும் முன் பட்டென்று உயிர் போனது. உடலைத் தூக்கி படுக்கையில் கிடத்தி விட்டு மற்றவர்களுக்குச் சொல்ல கீழிறங்கினேன். கண்களில் கொஞ்சமும் நீர் வழியவில்லை.
“நீயும் வந்து கடேசியா மண்ணள்ளிப் போடுலே” யாரோ கையைப் பிடித்து எழுப்பினார்கள்.
“அவிய அப்பா கல்லறை மேலயே கால் போட்டு உக்காந்திருக்கான் பாரேன்” யாரோ குற்றம் சாட்டினார்கள்.
எழுந்து சென்றேன். கல்லறைக் குழிக்குள் பெட்டி இறக்கப்பட்டு ஏற்கனவே சில பிடி மண் போடப்பட்டிருந்தது. எனது இடது கையில் வேதாகமம் இருந்தது. கீழே குனிந்து வலது கையில் ஒரு பிடி மண்ணை அள்ளி வேதாகமத்தோடு சேர்த்து குழியில் போட்டேன். திரும்பிப் பாராமல் நடந்தேன்.
பக்கிங்காம் தீர்ப்பு வந்த அதே ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஏரிகளை ஒழித்துக் கட்டுவதற்காகவே, இன்னொரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதையும் தமக்குச் சாதகமாக இந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டியிருந்தார்கள் (பாரா 22). அந்த தீர்ப்பின் சாராம்சம்என்னவென்றால். “இயற்கையாக அமைந்த குளங்களைப் பாதுகாப்பது சட்டப்படி மிக அவசியமாகிறது, ஆனால் செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்கள் அப்படிப்பட்ட சட்டப்பூர்வ பாதுக்காப்பு பெறத் தகுதியானவை இல்லை”.
இந்திய விவசாயத்திற்கு ஏரிகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, நீரே அமிழ்தம் என்ற ஆங்கிலக் கட்டுரையை எழுதிய இயற்பியல் அறிஞர் சி.வி.ராமன்
இப்படியொரு நுணுக்கமான கருத்தை சட்ட அறிஞர்களோ, அறிவியலாளர்களோ கனவிலும் எண்ணி இருக்க மாட்டார்கள். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயனில் இருந்து வந்த குளங்களை, செயற்கை என்ற ஒரே காரணத்திற்காக அடியோடு அழிக்கலாம் என்ற இந்தக் கோட்பாட்டை என்னவென்று சொல்ல? உண்மையில், தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்த குளங்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே இல்லை என்ற உண்மையை உச்ச நீதிமன்ற நீதிமான்கள் அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை.
ஒரு அறிவியல் சார்ந்த சட்டக் கேள்வியைத் தீர்மானிக்கும் முன்பு எந்த அளவுக்கு இந்திய நீதிபதிகள் தங்கள் சுய அறிவையோ அல்லது அறிவியல் அறிஞர்களின் கருத்துகளையோ முற்றிலும் தெளிவாகக் கேட்டு சீர்தூக்கி முடிவுக்கு வருகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒருவகையில், இன்றைய இந்திய நீதிபதிகளைவிட காலனிய கால நீதிபதிகள் தாங்கள் செய்யும் தொழிலின் பேரிலான மரியாதையும் (Professional honour) அறிவு நேர்மையும் (Intellectual honesty) நமக்கு வியப்பூட்டுகிறது.
உதாரணமாக, மதுரை மாவட்டக் கையேட்டை எழுதிய ஒ.ஏ. நெல்சன் அக்கால மக்கள் எப்படி ஊரெங்கும் ஏரிகளையும் குளங்களையும் வாய்க்கால்களையும் வெட்டி சிறப்பான நெறிமுறைகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர் என்று விரிவாக எழுதியிருக்கிறார். நெல்சன், முறையாகச் சட்டம் பயின்றவர், சென்னை மாகாணத்தில் வருவாய் அதிகாரியாகவும், நீதிபதியாகவும் பல காலம் பணி செய்தவர். இந்தியா முழுமைக்கும் இந்துச் சட்டம் என்பது ஒன்றேதான் என்று வட இந்தியப் பார்ப்பனர்கள் புளுகிக் கொண்டிருந்ததை மறுத்து, இந்துக்களின் வழமைகளும் முறைமைகளும் இந்தியா முழுதும் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதை ஆதாரங்களுடன் முதன் முதலாக புத்தகமாக எழுதி வெளியிட்டு, இந்துக்கள் சட்டம் பற்றிப் புனையப்பட்ட பொய்களை மறுத்தவர்.
இதோ 1868 ம் ஆண்டு வெளியான மதுரை மாவட்டக் கையேட்டில் குளங்களைப் பற்றி நெல்சன் கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார்:
இயற்கைசார் சுற்றுலா (எகோ டூரிஸம்) என்ற பெயரில் ரெட்டேரியைத் தனியார்மயம் விழுங்குவதற்குத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது, தமிழக அரசு.
“மதுரை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் இயற்கையாய் அமைந்த குளங்களோ குட்டைகளோ எதுவுமே இல்லை. தண்ணீரை ஒருவர் எங்காவது கண்டார் என்றால் அது நிச்சயம் செயற்கையாக தேக்கி வைத்ததுதான். பழனி மலைகள் தொடங்கி கடற்கரைவரை செல்லும் பயணி ஒருவர் எந்தவொரு இயற்கையான நீர்நிலையையும் ஒருபோதும் காணவே முடியாது. (பக். 2, பாகம்-1)”
நீதிமன்றங்கள், நீதிபதிகளின் பயன்பாட்டுக்காகவென்றே இத்தகைய நூல்கள் அந்தக் காலத்தில் எழுதி வெளியிடப்பட்டன. மேற்கண்ட கூற்று மதுரை மாவட்டத்திற்கு மட்டும் அல்ல, சென்னைக்கும் பொருந்தும். நீர்நிலைகள் அனைத்தும் செயற்கையான மனித முயற்சிகள் என்பதை அறிந்து அவர்கள் மதிப்பளித்து வந்தனர்.
அன்றைய ஆங்கிலேய அரசியல்வாதிகள் கூட இந்த நாட்டின் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர். எடுத்துக் காட்டாக, ஆங்கிலேய நாடாளுமன்றவாதியும், சட்டம், தத்துவம், அரசியல் அறிவில் தேர்ந்த அறிஞனுமான, எட்மண்ட் பர்கி (Edmund Burke) தென்னாட்டின் ஏரிகளை ‘ஒரு வங்கிக்கு ஒப்பிட்டு’ அவற்றின் நலத்தை நாட்டின் நலத்துக்கு ஒப்பாகவும், அதை உருவாக்கிய மூதாதையரைப் பலவாறாகப் போற்றியும் எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில், பாழாகிக் கிடந்த ஏரிகளை செப்பனிடாத ஊழல் மலிந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளைப் பலவாறாகச் சாடி வசைமாறி பொழிந்திருக்கிறார். அவர் ஏரிகளைக் குறித்து எழுதியவற்றைப் படிக்கும் எவருக்கும் வியப்பு வரும். 1785-ஆம் ஆண்டு நடைபெற்ற எட்மன்ட் பர்கியின் மிகப் பிரபலமான சொற்பொழிவு ஒன்றில் அவர் ஏரிகளை பற்றியும் அதனை உருவாக்கிய நல்லோர்களைப் பற்றியும்இவ்வாறு பேசினார்:
“ஏரிகளே மன்னர்களின் உண்மையான நினைவுச் சின்னங்கள், இந்த மன்னர்கள் தமது மண்ணின் மைந்தர்களுக்கு உண்மையான தந்தையராக இருந்தவர்கள்; இவையே எதிர்வரும் சந்ததிகளுக்காக அவர்கள் விரும்பி விட்டுச் சென்ற உண்மையான விருப்ப ஆவணங்கள். இவை, ஒரு மாபெரும் நோக்கத்திற்காக அவர்கள் எழுப்பிய பேராலயங்கள்; அவர்களது நோக்கம் வற்றாத நல்லன்பை உடையது, இந்தப் பேரன்பு ஒரு மனிதனின் குறுகிய வாழ்நாட்களுக்குள் அடைபடும் அன்பு அல்ல, கட்டுக்குள் அடங்காத மனித மனத்தின் பேராசைகளையும் மிஞ்சுபவை; இயற்கையின் வரம்பை மிஞ்சிய பெரும் வளத்தைக் காலந்தோறும் அள்ளித்தர வல்லவை, இவை தலைமுறைகள் தாண்டி என்றென்றும் நின்று நிலைக்கத்தக்க வகையில் மனித குலத்திற்கு ஊட்டமளித்து வளப்படுத்தும் காவலர்கள்.”
ஏரிகளின் முக்கியத்துவம் குறித்து பல அறிவியல் அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிறந்த நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சி.வி.ராமன் கூட தமிழ்நாட்டின் ஏரிகளைப் பற்றி எழுதி இருக்கிறார். வள்ளுவன் சொன்ன வார்த்தையையே தலைப்பாக்கி “நீரே அமிழ்தம் (Elixir of Life)” என்று ராமன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை பள்ளி மாணவர்கள் பலர் படித்திருப்பார்கள். இயற்பியல் மேதையான அவர், ஏரி நீரின் நிறம் இடத்திற்கு இடம் ஏன் மாறுபடுகிறது என்று இயற்பியல் விளக்கத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இந்திய விவசாயத்திற்கு ஏரிகளின் முக்கியத்துவம் என்ன என்று விளக்குவதுடன், ஏரிகளின் அழகையும் வியந்து எழுதியிருக்கிறார். குடியிருப்புகளுக்கு இடையே அமைந்த ஏரிகளின் காட்சி எவ்வளவு அழகாயிருக்கின்றது என்று வியப்புறுகிறார். ஏரி நீரில் காலைக் கதிரவன் எழும் காட்சியும், மாலைக் கதிரவன் மறையும் காட்சியும் உள்ளத்திற்கு எத்தகைய கிளர்ச்சியைத் தருகின்றன என்று விவரிக்கிறார். “மனித முகத்திற்கு கண்கள் தரும் அழகைப் போன்று, தான் அமைந்திருக்கும் நிலப்பரப்பிற்கு ஏரிகள் அழகைச் சேர்க்கின்றன” என்பது அவர் கருத்து.
இயற்பியல் என்றால் ஏதோ ஒரு வறண்ட அறிவியல் என்று கருதும் பலர் இருக்க, இந்த இயற்பியல் அறிஞரின் கண்களில்கூட அவை பராமரிப்பின்றி சீரழிந்து வருவதும் தெரிந்திருக்கிறது, அதையும் எண்ணி வருந்தியிருக்கிறார். எனவே, ஏரிகளின் முக்கியத்துவம் என்ன என்பது நீதிபதிகள் அறிந்து கொள்ள முடியாத ஒரு விசயம் அல்ல.
ஆனால், அதிமேதாவிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் இக்கால நீதிபதிகள் ஒரு பராமரிப்பில்லாத ஏரியை நிரந்தரமாக மூடச் சொல்லி தீர்ப்பளித்த போதுதான், ‘முக்கியத்துவத்தில் இயற்கைஎன்றும் செயற்கை என்றும்’ யாரும் அறிந்திராத ஒரு பாகுபாட்டைக் கண்டுபிடித்து அதையே சட்ட விதியாக்கி தீர்ப்பளித்தனர். தாங்கள் ஏன் அப்படிப்பட்ட ஒரு சட்டம் அல்லது அறிவியல் நிலைபாட்டை கண்டடைந்தனர் என்று அந்தத் தீர்ப்பில் எங்குமே குறிப்பிடவில்லை. ஏனெனில், இந்திய அறிவியலாளர்களோ அல்லது சர்வதேச அறிவியலாளர்களோ அப்படியொரு வேறுபாட்டை இதுவரை கண்டு பிடிக்கவுமில்லை. இட நெருக்கடி மிகுந்த இன்றைய ஐரோப்பிய நகரங்களில் உயர்ந்தோங்கிய கட்டிடங்களின் மத்தியிலும் உச்சியிலும் நீர் நிலைகளை அமைக்க முடியுமா? என்ற அறிவியல் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நமது முன்னோர் ஊர் நடுவே கட்டி வைத்த நீர்நிலைகளை அழிக்கும் உத்தரவைப் பிறப்பித்த இந்த நீதிபதிகளை என்னவென்று சொல்ல!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குள் கழிவு நீரைக் கொட்டும் அக்கிரமம்.
உலகமெங்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எதிர்கால உலகத்திற்காக நீர் நிலைகளைக் காப்பாற்றும் முயற்சியில் சட்ட வல்லுனர்களும் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர். நீர்நிலைகளுக்கான சட்டம் சார்ந்த அறிவியல் நடைமுறைகளை ராம்சர் உடன்படிக்கை (Ramsar Convention) என்று அழைக்கப்படும் 1971-ஆம் ஆண்டைய “சர்வதேச முக்கியத்துவம் மிக்க நீர்நிலைகள் குறித்த எழுதாச் சட்டம் (Convention on Wetands of International Importance) வெளியிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான சர்வதேச உடன்படிக்கையில் இந்திய அரசும் கையெழுத்திட்டு அதைச் சீரிய முறையில் செயல்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளது. அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டப் பொறுப்பு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் துறைக்கு உண்டு. குறைந்தபட்ச சட்ட அறிவு உள்ள எவரும் இந்த உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய உச்ச நீதிமன்றம் கண்டு பிடித்த “செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்கள் சட்டப்பூர்வ பாதுக்காப்பு பெறத் தகுதியற்றவை” என்ற வகையினம், ராம்சார் உடன்படிக்கையில் இல்லை. ஏன், நாம் அறிந்தவரையில் எந்த இந்தியச் சட்டங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவைப் பற்றிய மிகச் சிறிய அறிவுடைய எவரும் அப்படியொரு சட்ட நிலைப்பாட்டை அடையவே முடியாது. ஏனென்றால். உள்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் பெரும்பகுதியானவை செயற்கையாக உருவாக்கப்பட்டவையேயன்றி இயற்கையாக அமைந்தவை அல்ல.அப்படிப்பட்ட கட்டமைப்புகளை சேதப் படுத்தவோ, அழிக்கவோ அனுமதித்தால் அது நாட்டின் பொருளாதார அழிவை அனுமதிப்பதற்கு ஒப்பாகும். மத்திய அரசு பராமரித்துவரும் சிறு பாசனக் குளங்களின் 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் இங்கு வாழ்ந்த மக்கள் செயற்கையாக உருவாக்கியதே தவிர, இயற்கையில் அமைந்தவை அன்று. எனவே, இக்குளங்கள் அனைத்தும் நாட்டின் கட்டமைப்புகள் என்றே கொள்ள வேண்டும்.
ஆனாலும் ஏரிகளைப் பற்றியோ அது சார்ந்த சட்டம் பற்றியோ, தென்னிந்திய வரலாறு பற்றியோ எதையும் முறையாகக் கற்று அறிந்திராத உச்ச நீதிமன்ற நீதிபதிகள், செப்பனிடப்படாத குளங்களை தூரத்துவிட்டு அந்த இடத்தில் கடைகள் கட்டிவைக்கலாம் என்று தீர்ப்பினை வழங்கினர். பக்கிங்காம் கால்வாயை தூர்க்கும்படி தீர்ப்பு எழுதியவர்கள், இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டியதில் நமக்கு வியப்பு ஒன்றும் இல்லை.
அந்த வழக்கை விரிவாகப் பார்ப்போம்.
துரைப்பாக்கம் ரெட்டேரி வழக்கு
சென்னை மழைவெள்ளம் – மீட்புப்பணி (கோப்புப் படம்)
1996-ஆம் ஆண்டு, சென்னையின் வெள்ளச் சேதத்திற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட பக்கிங்காம் கால்வாய்க் குடிசைவாசிகளை வெளியேற்றி மீள் குடியேற்றம் செய்ய, தமிழக அரசு தேர்வு செய்த இடம் ஏரிகள் அதிகமாக இருந்த ஒக்கியம் துரைப்பாக்கம் கிராமம். இங்கே ஏரிகள் மட்டுமில்லாது பலவிதமான நீர் மற்றும் கடல் சார்ந்த நீர் நிலைகளும் (Inland and Coastal Wetlands) இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமத்தில் இருந்த ரெட்டேரி என்ற ஒரு குளத்தை தூர்த்துவிட்டு அந்த இடத்தில் கடைகள் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. உள்ளூராட்சிக் கவுன்சிலராக இருந்த சுசேதா என்பவர் இதை எதிர்த்து ஒரு வழக்குத் தொடர்ந்தார். சுருக்கமாகச் சொன்னால், ஏரிப் புறம்போக்கைக் சீர்குலைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது தான் அவரது வாதம். சட்டப்படி அவரது வாதம் மறுக்க முடியாதது. அதோடு கூடவே, பல சான்று ஆவணங்கள், இதற்கு முன்பு வந்திருந்த சுற்றுச்சூழல் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் குறிப்பிட்டு தமிழக அரசின் முடிவு சட்ட விரோதமானது என்று அவர் வாதிட்டார்.
சீரழிந்த அந்த ஏரியை தூர்த்தால் என்ன கேடு வந்துவிடும் என்று ஆய்ந்து சொல்ல அண்ணா பல்கலை கழகத்தின் நீர்வள ஆய்வு மையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அவர்கள் இந்தக் குளம் குறித்த நிலவரத்தை அறிக்கையாகச் சொல்லியிருந்தார்கள். அதில், இந்தக் குளம் ஒரு சிறிய கோயில் குளம் என்றும், தற்போது அது சிதிலமடைந்து இருப்பதாகவும், இப்போதைய நிலையில் இதனைத் தூர்த்து விடுவதால் ஏற்படும் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் ஒரு அறிக்கையைக் கொடுத்தார்கள். வழக்கு நடந்து கொண்டிருந்தபோது “இந்து” நாளேடு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு வந்திருந்தது:
“ஊராட்சி மன்றக் கவுன்சிலர் சுசேதா தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் ஒக்கியம் துரைப்பாக்கம் கிராமத்தில் முன்பு இருபது குளங்கள் இருந்ததாகவும், தற்போது ஐந்து மட்டுமே இருப்பதாகவும், அதுவும் சிதிலமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். …அதே மனுவில், தற்போது சீரழிந்த நிலையில் இருக்கும் இந்த ஐந்து குளங்களையாவது சீர் செய்தால் ஊருக்குள் குடியிருப்புகளை மூழ்கடிக்கும் வெள்ளத்தையும் தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்”. (தி இந்து, பிப். 4, 2006)
ஆக, ஏரிகள் தண்ணீர் தருவது மட்டுமில்லாமல் வெள்ளத்தையும் தடுக்கும் என்ற விவரத்தையும் தெரிவித்திருந்தார். ஆனால், இதுபற்றி நீதிமன்றம் எதுவும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குளத்தை சீர் செய்தால் அது தரும் பலன் என்ன என்பது பற்றியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, இந்தக் குளத்தை தூர்த்து கடைகள் கட்டிக் கொள்வது சரியே என்று தீர்ப்பளித்ததுள்ளனர். சுசேதாவின் சட்டப்பூர்வ வாதங்களோ, அந்தக் குளத்தை சீர்செய்யும் கிராம சபையின் தீர்மானத்தையோ, குளம் வெள்ளப் பெருக்கை தடுக்கும் என்ற அறிவியல் கருத்தையோ உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. “இடிந்த குளத்தில் கடையைக் கட்டு” என்பதே இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.
சென்னை உயர்நீதிமனறத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுசேதா உச்ச நீதிமன்றம் சென்றார். விசாரித்து முடித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் இப்படிச் சொன்னது:
“வழக்கில் குறிப்பிடப்பட்ட இந்தக் குளம் இயற்கையான குளம் அன்று. வெறும் மழை நீரை மட்டுமே இதில் தேக்கி வைக்க முடியும். இது பல காலமாகக் குப்பை மேடாக இருந்து வருகிறது. இது எப்போது இந்தச் சீரழிவிற்கு வந்தது என்று ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும்,பல காலமாகச் சீரழிந்த நிலையில்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. கூடவே, இது ஒரு குப்பை மேடாகவும் சாக்கடை தேங்கும் இடமாகவும் இருந்து வருகிறது. எனவே, எங்களது கருத்தில், இது ஒன்றும் உயிர்ப்பிக்கப்பட வேண்டிய குளம் என்று ஆணையிடத் தகுந்த வழக்கு அல்ல.”
சென்னை மழை வெள்ளம் – மீட்புப்பணி (கோப்புப் படம்)
ஆதாரங்களே இல்லையென்றாலும், இது பல காலமாக சீரழிந்து கிடக்கிற குளம் என்று முடிவு செய்தவர்கள் சீரழிவைத் தடுக்க வேண்டும் என்று ஆணையிடவில்லை. மாறாக, தூர்த்துவிடும்படி ஆணையிடுகிறார்கள். இப்படிச் சொல்லிவிட்டு, இந்தக் கிராமத்தில் உள்ள ரெட்டேரியைவிட அளவில் சிறிய ஐந்து குளங்களை முறையாகப் பராமரித்து கிராமத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டையும், சுற்றுப்புறச் சூழ்நிலையையும் காப்பாற்றும்படி அரசுக்கு அறிவுரை விடுத்தார்கள்.
மேற்படித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வாயில் இருந்து வந்துவிட்டபடியால் இனிவரும் காலத்திற்கு இதுவே சட்டமாகும். இதைத்தான் பக்கிங்காம் கால்வாய் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்மாதிரியாகக் காட்டியது. இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேலும் சில ஏரிகள் தூர்க்கப்பட்டுவிட்டன. மருத்துவமனைகள், கல்லூரிகள் என்று பல விதமான கட்டங்களை ஏரிகளைத் தூர்த்த இடங்களில் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிமன்றங்கள் அனுமதித்திருக்கின்றன.
கடந்த நவம்பர் – டிசம்பர் வெள்ளத்தில் சுசேதா சொல்லியிருந்தபடி துரைப்பாக்கத் திற்கும் வெள்ளம் வந்தது.
ஒக்கியம் துரைப்பாக்கம் ஏரி மேடு வழக்கு
ரெட்டேரியை தூர்த்துவிட்டு கடைகள் கட்டிய இதே துரைப்பாக்கம் கிராமத்தில் இருந்த இன்னொரு நீர் சார்ந்த நிலம் பற்றிய வழக்கு இது. வருவாய் துறைக் கணக்குகளில் இந்த நிலம் தீர்வை விதிக்கப்பட்ட நஞ்சைத் தரிசு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது (assessed waste wetland). சுருக்கமாக சொன்னால், இந்த நிலம் முன்பு ஒரு ஏரியின் உள்வாயாக இருந்திருக்கக் கூடும் அல்லது ஏதோ ஒரு நீர் சார்ந்த நிலமாக இருந்திருக்கும். இதே நிலம், கடந்த நூற்றாண்டின் கிராமக் கணக்குகளில் கடல் சார்ந்த கழிநிலம் (Back waters) என்று குறிக்கப்பட்டிருந்தது. கடலோரத்தில் இருக்கும் நஞ்சை விவசாயம் நடக்கும் கிராமப் பகுதிகளில் இத்தகைய நிலங்கள் இருக்கவே செய்கின்றன.
கிராமக் கணக்கு விபரங்களில் நீர் சார்ந்த நிலங்களில் மட்டுமே 133 வகைகள் இருக்கின்றன. அவ்விடத்தைக் காலி செய்து சுமார் மூவாயிரம் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கென்று தமிழக அரசு தீர்மானித்தது. இதை எதிர்த்து சுசேதா மீண்டும் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார். தமிழக அரசு அந்த நிலத்தின் தன்மையை வீடுகள் கட்டுவதற்கான இடமாக மாற்றியது செல்லாது என்பது அவரது சட்டப்பூர்வ வாதம். நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி ஒரு நீர்சார்ந்த நிலத்தை (wetland) தூர்த்து விட முடியாது என்பதால் அரசின் இந்த முடிவு செல்லாது என்று அவர் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் அரசின் கட்டுமான வேலைகளுக்கு முழுமையான தடை ஏதும் விதிக்காமல் இந்த வழக்கினை விசாரிக்க மட்டும் முடிவு செய்தது. கடும் எதிர்ப்புக்கு இடையில் அரசு ஒரு ஆணையர் குழுவையும் அமர்த்தியது. இந்த குழுவில் பேர்பெற்ற சுற்றுச் சூழல் வல்லுநர் ஒருவர், நீர் இயல் வல்லுநர் ஒருவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர். அரசும், உள்ளூர் சல்லிப்பேர் வழிகளும் கொடுத்த பல இடைஞ்சல்களுக்கிடையே, இந்த வல்லுநர் குழு ஒரு அறிக்கையை வழங்கியது. இந்த அறிக்கையின்படி, குறிப்பிடப்பட்ட அந்த நிலம் மிகவும் அத்தியாவசியமான நீர் சார்ந்த நிலம் என்றும் இத்தகைய நிலங்களை மாற்றி அதில் வீடுகள் கட்டுவது பெரும் வெள்ளம் போன்ற துயரச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் வெள்ள அபாயத்தைத் தவிர்க்க வேண்டுமானால் இத்ததகைய நிலங்களை விட்டு வைக்க வேண்டும் என்பதையே தன் முடிவாகச் சொல்லியிருந்தது.
வந்ததே கோபம், நீதிபதிகளுக்கு! கேட்காத கேள்விக்கு எப்படியடா பதில் சொன்னீர்கள்? என்று எரிச்சல் பொங்கி வழிய அந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு பள்ளிக்கூட அகராதியில் இந்த இடத்திற்கான விளக்கத்தைத் தேடினார்கள். அவர்களுக்குக் கிடைத்த புரிதலின் படி, அரசு இந்த இடத்தை குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்குத் தேர்வு செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தனர். அறிக்கை எழுதிய அறிவியலாளர்களையும், அதிகாரியையும் அவமரியாதை செய்யும் அளவுக்கு தமது சொற்களைப் பயன்படுத்தியிருந்தனர். இதோ அவர்கள் “வேதனை”கொப்பளிக்க எழுதிய வார்த்தைகளைப் பாருங்கள்:
“கேட்டிருந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டிய வல்லுநர் குழு அவர்கள் வரம்பை மீறி, ஓரடி மேலே சென்று பல விசயங்களைப் பற்றி தேவையில்லாமல் எழுதியிருப்பது எங்களை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது என்பதை நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். (பாரா 53)”
வல்லுநர் குழு எழுதியிருந்தது அனைத்தும் அறிவியல் உண்மை. சென்னையின் ஒட்டுமொத்த வெள்ளம் வடிய இருக்கும் ஒரு வடிநிலத்தை ஆய்வு செய்யும் பொழுது நகரின் ஒட்டுமொத்த பிரச்னையை ஆய்வு செய்யாமல் எப்படி எழுத முடியும்? அதனால்தான் வல்லுனர்கள் நீண்ட விளக்கம் கூறி எழுத வேண்டியிருந்தது. அதைக்கூட புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச பொறுமையோ அறிவோ இந்த நீதிபதிகளுக்கு இல்லை.
இப்பேர்பட்ட நிலங்களைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலத்தில் சென்னையில் பெரும் வெள்ளம் அடிக்கடி வரக்கூடும் என்று வல்லுநர்கள் சொன்னது உண்மையே. வெள்ளம் குறித்து ஒரு ஆழமான திட்டம் தயாரித்து இத்தகைய நிலங்களை பராமரித்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எழுதியது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையே. ஆனால் நீதிபதிகள் செய்து கொண்ட முன்முடிவுக்கு இந்த அறிக்கை ஒப்பவில்லை போலும். வல்லுனர்கள் சொன்னபடி இந்த ஆண்டின் வெள்ளம் இந்தப் பகுதி முழுமையையும் சுற்ச் சூழ்ந்தது. தீர்ப்பு சொன்ன நீதிமான்கள் – எலிப்பி தர்மாராவும், கே.கே. சசிதரனும் இப்போது என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
முடிவாக,
சென்னையின் வெள்ளத்திற்கு அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் முதலைகளும், கார்ப்பரேட் கம்பெனிகளும், ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் தொழில் செய்யும் கல்விமான்கள், மருத்துவ தர்மவான்கள் மட்டுமே காரணமல்ல. பொறுப்பற்ற அரசைக் கேள்வி கேட்க விரும்பாத நீதிமன்றங்களும் ஒரு காரணமே. சட்டத்தைப் பற்றிச் சிறிதும் கண்டு கொள்ளாததுடன் நாட்டின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இவர்களை நாம் கேள்வி கேட்டுக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய நேரம் இது.
பின் குறிப்பு:
1. நமது நாடு ஒருவேளை பிரிட்டனைப் போன்றதொரு உண்மையான முதலாளித்துவ ஜனநாயகமாக இருந்திருந்தால், லண்டன் மிர்ரர் பத்திரிக்கை செய்தது போல “அட முட்டாள்களே” என்று கூவி அழைத்து இந்த நீதிபதிகளை ஒரு பொது விவாதத்திற்கு உட்படுத்தலாம். இது இந்தியா என்பதால் நீதிபதிகள் தாம் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறக்கூடும்.
2. சுசேதா வழக்கின் போது நீதிபதிகள் நடந்து கொண்ட விதம், சுசேதாவையும், வல்லுனர்களையும் நடத்திய விதம், அவர்களைப் பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட விதம் ஏறக்குறைய நாஜி ஜெர்மனியில் இட்லரின் ஆட்சியின் போது பாசிஸ்டுகளின் கைத்தடியாக இருந்த நீதிபதி பிரீஸ்லரின் செயல்களுக்கு ஒப்பாக இருந்ததுஎன்றால் அது மிகையில்லை. பிரீஸ்லருக்குப் எப்போதுமே பிடித்த கேள்வி “அடேய், கேட்டதற்கு மட்டும் பதில் சொல்! அதுவும் ஆம் என்று சொல், அல்லது இல்லை என்று சொல்!” நியாயமான ஜெர்மன் அதிகாரிகளை, ஜனநாயகவாதிகளை, அறிவாளிகளை, மாணவர்களை இப்படியே கேள்வி கேட்டு ஒப்புக்கு விசாரணை செய்து தூக்கிலிட்டவர் இந்த நீதிபதி. அவமானச் சின்னமான இவரது தீர்ப்புகளைப் போருக்குப் பிந்திய ஜெர்மனியில் தேடித்தேடி திருத்தினார்கள்.
– கிருஷ்ணராஜ்
(சென்ற இதழின் தொடர்ச்சி…)
_______________________________ புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________
தொழிலாளி வர்க்கத்தின் மீதான பகைமையையும் வெறுப்பையும் அப்பட்டமாகப் பறைசாற்றும் வகையில், பிரிக்கால் நிறுவனத்தின் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை அமர்வு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருக்கிறது.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றத்தால் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுள்ள பிரிக்கால் தொழிலாளிகள்: (இடமிருந்து) குணபாலன், மணிவண்ணன், ராஜேந்திரன், ராமமூர்த்தி, சம்பத்குமார், சரவணகுமார், சிவகுமார், வேல்முருகன்.
கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதியன்று கோவையிலுள்ள பிரிக்கால் நிறுவனத்தின் மனித வளத்துறை துணை அதிகாரியான ராய் ஜார்ஜ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 22-ஆம் தேதியன்று மாண்டு போனார். அதைத் தொடர்ந்து பிரிக்காலில் இயங்கி வந்த ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் அனைத்திந்தியத் தலைவர் குமாரசாமி, மாநில நிர்வாகிகள் மற்றும் பிரிக்கால் நிறுவனத்தின் நான்கு பெண் தொழிலாளிகள் உள்ளிட்டு 27 பேர் மீது, சதியில் ஈடுபட்டது மற்றும் கொலை செய்தது – என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரிக்கால் நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஏ.ஐ.சி.சி.டி.யு.தொழிற்சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் போராடி வந்த நேரத்தில்தான், ராய் ஜார்ஜை தொழிலாளர்கள் இரும்புத் தடியால் தாக்கிக் கொன்றதாக இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவையிலுள்ள பிரிக்கால் ஆலையைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனமாக விரிவாக்கி வளர்க்கும் நோக்கத்துடன், அதீத உற்பத்தி இலக்கு வைத்து அற்பக்கூலிக்குத் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். உற்பத்தியைப் பெருக்க பெண் தொழிலாளர்களைக் கட்டாயமாக ஓவர்டைம் செய்ய வைப்பது, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் பல்லாண்டுகளாகத் தினக்கூலிகளாக வைத்துச் சுரண்டுவது எனக் கணக்கற்ற அட்டூழியங்களைச் செய்துவந்தது, பிரிக்கால் நிறுவனம்.
இதற்கெதிராக, கடந்த 2007-இல் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து புதிய தொழிற்சங்கத்தை ஏ.ஐ.சி.சி.டி.யு. தலைமையில் நிறுவி உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கியதும், கொத்துக்கொத்தாக வேலை நீக்கம், தொழிற்சங்க முன்னோடிகள் பணியிட மாற்றம் – எனத் தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சம்பள வெட்டு, பிரேக் இன் சர்வீஸ், ஊதிய உயர்வு முடக்கம், இன்சென்டிவ் பிடித்தம் – எனப் பலவகையிலும் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை நிர்வாகம் பறித்தது. தொழிலாளர்கள் மீது பொய்வழக்குகள் சோடித்து, பெண் தொழிலாளிகள் உள்ளிட்டு 50-க்கும் மேற்பட்டோரைச் சிறையிலடைத்து தண்டித்தது. தொழிலாளர்களின் சட்டரீதியான உரிமைகளை நிலைநாட்டுமாறு தொழிலாளர் ஆணையமும் உயர்நீதி மன்றமும் போட்ட அனைத்து உத்தரவுகளையும் ஆலை நிர்வாகம் குப்பைக் கூடையில் வீசியது. இதன் உச்சகட்டமாக, கடந்த 2009 செப். 19 அன்று மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜார்ஜினால், தொழிற்சங்க முன்னணியாளர்களான 42 தொழிலாளர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இத்தொழிலாளர்கள், ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்கத் தலைவர்களுடன் இணைந்து கொலைச்சதியில் ஈடுபட்டதாகவும், வேலை நீக்கம் செய்த உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கூச்சலிட்டபடியே ராய் ஜார்ஜை இரும்புத் தடியால் தாக்கியதாகவும், அதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாண்டதாகவும் ஆலை நிர்வாகத்தாலும் அரசு தரப்பிலும் வழக்கு சோடிக்கப்பட்டது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே, போலீசாரின் அச்சுறுத்தலுக்கும் சித்திரவதைகளுக்கும் அஞ்சி மணிகண்டன் என்ற தொழிலாளியும், சம்பத் குமார் என்ற தொழிலாளியின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.
ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்கத்தை கோவை வட்டாரத்தில் தலைதூக்க விடாமல், முளையிலேயே கிள்ளியெறியும் நோக்கத்துடன்தான் பிரிக்கால் தொழிலாளர்கள் மட்டுமின்றி, மைய சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் இப்பொய் வழக்கில் சேர்க்கப்பட்டனர். தொழிற்சங்க முன்னோடியாகச் செயல்பட்ட காரணத்தால், 2007-இல் பிரிக்கால் நிறுவனத்தின் உத்தராஞ்சல் மாநிலக் கிளைக்கு மாற்றப்பட்ட ஒரு தொழிலாளியின் பெயரையும் சம்பந்தமே இல்லாமல் இந்தப் பொய்வழக்கில் போலீசும் நிர்வாகமும் சேர்த்தது.
இந்த மோசடியை நியாயப்படுத்த முடியாத நிலையில், அத்தொழிலாளி உள்ளிட்டு, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளிகள் 19 பேர் மீதான கொலைச்சதி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம், அதேசமயம் நிரூபிக்கப்படாத கொலைக் குற்றத்தின் அடிப்படையில், மணிவண்ணன், சரவணக்குமார், சிவகுமார், வேல்முருகன், ராஜேந்திரன், சம்பத்குமார், ராமமூர்த்தி, குணபாலன் ஆகிய 8 தொழிலாளர்களுக்கு அநியாயமாக இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், நீதிமன்றத்தால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த 8 தொழிலாளர்கள் எவருமே செப்.19,2009 அன்று வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல. அந்த 8 தொழிலாளர்களும் ராய் ஜார்ஜின் மரணத்துக்குப் பின்னர்தான் நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த 8 பேரும் மனித வள அதிகாரியின் அலுவலகம் உள்ள யூனிட்டில் வேலை செய்தவர்கள் அல்ல. அவர்கள் மலுமிச்சம்பட்டியிலுள்ள மற்றொரு யூனிட்டில் வேலை செய்தவர்கள். இந்த 8 தொழிலாளர்களும் தொழிற்சங்க முன்னோடிகள் என்பதாலேயே இவர்கள் மீது கொலைவழக்கு சோடிக்கப்பட்டு அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இரட்டை ஆயுள் தண்டனை என்பது காமவெறி சாமியார் பிரேமானந்தா போன்ற மிகக் கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரிதினும் அரிதாகத்தான் வழங்கப்படுகிறது. இனி எந்த வழியிலும் தொழிற்சங்கம் தலைதூக்க முடியாதபடி ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன்தான், அத்தகையதொரு கொடிய தண்டனையை 8 தொழிலாளர்களுக்கு விதித்து, தனது முதலாளித்துவ கைக்கூலித்தனத்தை நீதிமன்றம் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.
ஒரு வாதத்துக்கு இப்படியொரு தாக்குதல் நடந்ததாக வைத்துக் கொண்டாலும்கூட, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் அந்த ஆலையில், எவருமே இதுபற்றி 10 நிமிட நடை தூரத்திலுள்ள போலீசு நிலையத்தில் புகார் கூட செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கையில் காலை 11.40 மணியளவில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆலை வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப் படை போலீசாருக்கு கூச்சலோ, அலறலோ கேட்கவில்லை. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த போலீசு ஆய்வாளரோ, சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் பகல் 11.41 முதல் 11.46 வரையிலான நேரத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை நீதிமன்றத்திலேயே கூறியிருக்கிறார்.
சம்பவம் அனைத்தும் ஆலையிலுள்ள கண்காணிப்பு காமெராவில் (சிசிடிவி) பதிவாகியுள்ளதாகவும், இது மிக முக்கியமான சாட்சி என்றும் அரசு தரப்பு கூறியிருந்தது. ஆனால், அன்று கண்காணிப்புக் காமெரா பழுதடைந்ததால் இச்சம்பவம் பதிவாகவில்லை என்று ஒரேயொரு சாட்சி கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து அரசு தரப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த மறுத்து, பொய்சாட்சி புனைந்த போலீசைக் காப்பாற்றியது. ராய் ஜார்ஜ் மரணமடைந்த பிறகு அவரைச் சோதித்த மருத்துவர், தலையில் ஒரு காயம் இருந்துள்ளது என்று பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 3 காயங்கள் இருந்ததாகவும், 8 பேரால் 8 இரும்புத் தடிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீசும் ஆலை நிர்வாகமும் கொண்டுவந்து நிறுத்திய சாட்சிகள் அனைத்தும் பொய்சாட்சிகள் என்பது நீதிமன்ற விசாரணையின்போது அம்பலமானது. இருப்பினும், தொழிற்சங்கமே கூடாது என்ற ஒத்த கருத்தைக் கொண்டுள்ள போலீசு, முதலாளிகள், அரசு ஆகிய அனைத்தும் கூட்டுச் சேர்ந்து அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி புனைந்துள்ள இந்தப் பொய் வழக்கில் முதலாளிகளின் நோக்கத்துக்கு ஏற்பவே நீதிமன்றம் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.
கொலைக்குற்றம் சாட்டி பொய்வழக்கில் சிறையிடப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி, அரியானா முதல்வர் வீட்டை குடும்பத்தோடு முற்றுகையிட்ட குர்கான் வட்டாரத் தொழிலாளர்கள். (கோப்புப்படம்)
இப்படித்தான் மாருதி மற்றும் ஹோண்டா தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. 2005-இல் சட்டபூர்வ வழியில் தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடிய ஹோண்டா தொழிலாளர்களைக் குருதி வெள்ளத்தில் மிதக்கவிட்டது அரியானா போலீசு. கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நிறுவனத்தின் 63 தொழிலாளர்கள் இன்னமும் நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். இத்தாக்குதல் தொடர்பாக ஒரு போலீசுக்காரன் மீதோ, ஒரு தலைமை நிர்வாகி மீதோ, முதலாளி மீதோ எந்த வழக்கும் இல்லை.
கடந்த 2012 ஜூலை 18 அன்று குர்கானிலுள்ள மாருதி நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர்க்குணத்துடன் போராடிய 546 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டனர். தொழிற்சங்கம் அமைப்பதற்கு தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரியான அவனிஷ் தேவ் என்பவரை நிர்வாகமே சதி செய்து கொன்றுவிட்டு, கொலைப்பழியைத் தொழிலாளர்கள் மீது சுமத்தியது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 36 மாருதி தொழிலாளர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்றனர். ஆனாலும், இன்றுவரை அவர்களுக்குப் பிணை கூட வழங்கப்படவில்லை. அப்பட்டமாக மாருதியின் அடியாளாகவே அரசும் போலீசும் நீதித்துறையும் இயங்கி வருகின்றன.
இப்படித்தான் 1944-ஆம் ஆண்டில் கோவை – சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த தொழிற்சங்க முன்னோடிகளான ராமைய்யன், வெங்கடாச்சலம், ரங்கைய்யன், சின்னைய்யன் ஆகிய 4 மில் தொழிலாளர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பொய்வழக்கில் சிறையிடப்பட்டனர். அந்நால்வரும் ஜனவரி 8, 1946 அன்று தூக்கிலிடப்பட்டு தியாகிகளாயினர். அது காலனியாதிக்கக் காலம். இன்று பிரிக்கால் நிறுவனத்தின் 8 தொழிலாளர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு பொய்வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது மறுகாலனியாதிக்கக் காலம்.
இன்றைய ஆட்சியாளர்களும் நீதிபதிகளும் முதலாளிகளின் தரகர்களாக மாறி, முதலாளிகளது நிகழ்ச்சி நிரலின்படியே செயல்படுகின்றனர். தொழிலாளர்கள் உரிமைக்கான சட்டங்களைக் கட்டிக்காத்து செயல்படுத்த வேண்டிய அரசு, நீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் தாங்களே வகுத்துக் கொண்டுள்ள சட்டங்கள், விதிகள், கடமைகள், பணிகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அப்பட்டமாக தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக நிற்கின்றன.
கோவை பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து சென்னை-ஆவடியில் பு.ஜ.தொ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம்.
வேலைக்கு அமர்த்து, துரத்து (Hire and Fire) என்பதற்கு மேல், தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் தரவேண்டும் என்ற சட்டமோ, நிபந்தனையோ எதுவும் கூடாது; அப்போதுதான் முதலாளிகளின் மனம் குளிர்ந்து, மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறும் என்கிறது மோடி அரசு. இதற்கேற்ப தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு, தொழிலாளர் சட்டம் என்பதே கிரிமினல் சட்டமாக மாற்றப்பட்டு வருகிறது.
நடப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான பலமுனைத் தாக்குதல். மறுகாலனியாதிக்கத்தின்கீழ் உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கத்தை மாற்றுவதற்கான பயங்கரவாதத் தாக்குதல். உள்நாட்டு, வெளிநாட்டு தரகுப் பெருமுதலாளிகளின் அடியாள்தான் இன்றைய அரசமைப்பு என்ற உண்மையை நிரூபிக்கும் தாக்குதல்.
தங்களது அடிப்படை உரிமைகளை நசுக்கி இலாப வெறிக்காக தங்களின் மீது போர் தொடுக்கும் முதலாளி வர்க்கத்தையும், அதன் அடியாளாகச் செயல்படும் இன்றைய அரசமைப்பையும் பிரிக்கால் மற்றும் மாருதி தொழிலாளர்கள் எதிர்கொண்டு நிற்கிறார்கள். அவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து, சிறையிடப்பட்டுள்ள பிரிக்கால் மற்றும் மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது, போராட்ட மரபில் வந்த கோவை தொழிலாளி வர்க்கத்தின் – இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய அவசர, அவசியக் கடமையாகும்.
திருநாள் கொண்ட சேரி. 03-01-2016 அன்று இறந்துபோன தாழ்த்தப்பட்ட முதியவர் செல்லமுத்துவின் உடலை ஊரின் பொதுப்பாதை வழியே எடுத்துச் செல்லக்கூடாது என்று அந்த ஊரின் வன்னியர்கள் கட்டளையிட, அதற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர் அவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்கள். பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச் செல்வதை மாவட்ட நிர்வாகம் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், சாதிவெறியர்களின் உத்தரவுதான் அமலானது. அவர்கள் உத்தரவுப்படி பிணத்தை வயல்காட்டின் வழி போலீசே சுமந்து சென்றது. எதிர்ப்பு தெரிவித்த தாழ்த்தப்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர். நாடே கண்ட இந்தக் காட்சியை மாட்சிமை தங்கிய நீதிபதிகள் காணாமலிருக்க வாய்ப்பில்லை.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதியவர் செல்லமுத்துவின் உடலைப் பொதுப்பாதையில் எடுத்துச் செல்லாமல், ஆதிக்க சாதிவெறியர்களின் கட்டளைப்படி மாற்றுப் பாதையில் தூக்கிச் செல்லும் போலீசு
வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை மத்தியப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவர்களான நீதியரசர்கள், திருநாள் கொண்ட சேரியை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்களென்றோ, போலீசு அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிடுவார்கள் என்றோ, ஆதிக்கசாதி வெறியர்களை தீண்டாமைக் குற்றத்துக்காக உள்ளே தள்ளுவார்களென்றோ யாரேனும் எதிர்பார்த்தால் அவர்கள் சட்டம், தமிழக அரசு, நீதிமன்றம் உள்ளிட்ட எதைப் பற்றியும் எதுவும் தெரியாத அறிவிலிகள் என்று மட்டும் சொல்லலாம். ‘சட்டத்தின் ஆட்சி’க்கு மாவட்ட நிர்வாகம் சங்கு ஊத, நீதித்துறை சேகண்டி அடிக்க, சட்டம் ஒழுங்கின் ‘காவலர்கள்’ பிணம் தூக்கியிருக்கிறார்கள். சகாயம் சுடுகாட்டில் துயின்ற காதைக்குப் பின்னர், இந்த அரசமைப்பின் தோல்வி பொருத்தமான வடிவத்தில் இன்னொருமுறை இங்கே அம்பலமாகியிருக்கிறது. சாதி வெறியர்களைப் பொருத்தவரை இதனைத் தமது வெற்றி என்று மட்டுமின்றி, சத்திரிய வீரம் என்றும் அவர்கள் கொண்டாடிக் கொள்வார்கள்.
எனினும், இந்த மாபெரும் சத்திரிய வீரம், ‘தமிழ் வீரத்தால்’ மறைக்கப்பட்டதுதான் வரலாற்றுச் சோகம். இந்த ‘வீரத்தை’ உலகின் கண்களிலிருந்து மறைக்கும் வண்ணம், வேறொரு கூத்து தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடத்தவில்லையெனில் தமிழகத்தைக் கடல் கொண்டுவிடும் எனுமாப்போலே தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்ததாக ஊடகங்கள் சித்தரித்தன.
“சல்லிக்கட்டு தடைக்கு யார் பொறுப்பு” என்று தி.மு.க., அ.தி.மு.க., காங். உள்ளிட்ட கட்சிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, கோட்டையைப் பிடித்தே தீருவது என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாரதிய ஜனதா, சல்லிக்கட்டை நடத்துவதற்கான அறிவிக்கை என்ற பெயரில் தமிழக மக்களின் தலையில் ஒரு உருண்டை வெண்ணெயை வைத்தது. உடனே கருப்புக் கொடிகள் வண்ணத் தோரணங்களாயின.
பத்திரிகையாளர் கூட்டத்துக்கும் மைதானத்துக்கும் இடையிலான வேறுபாடு புரியாத ஒரு ஏறு அவசரப்பட்டு பொன்னாரைத் தழுவ, அவர் போட்டி துவங்குமுன்னரே குத்துப்பட்டு ரத்தம் சிந்திய தமிழ் (இந்து) வீரரானார். பொறாமையை மறைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தமிழர்கள் சூட்டிய புகழாரங்களை, தனது கழுத்திலிருந்து கழற்றி ஆணியில் மாட்டி முடிப்பதற்குள் மோடி அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. தமிழகத்தின் தலையில் மோடி அரசு வைத்த வெண்ணெய் உருகத் தொடங்கு முன்னரே ஆவியாகிவிட்டது. மோடி பொங்கல், மோசடிப் பொங்கலாயிற்று.
000
சல்லிக் கட்டு தொடர்பாக நடைபெற்ற விவாதங்களில் சிந்துவெளித் தொல்லியல் சான்றுகள், சங்க இலக்கியம் ஆகியவற்றில் தொடங்கி எட்கர் தர்ஸ்டனின் ஆய்வுகள் வரையிலான அனைத்தும் சான்று காட்டப்பட்டு விட்டன. “இது ஐரோப்பிய-கிறித்தவ சதி, பக்ரீத்துக்கு விலங்குகளைக் கொல்லும் முஸ்லிம்களின் மத உரிமைக்கு அனுமதி, இந்துக்களின் சல்லிக்கட்டுக்குத் தடையா“ என்று இந்து வெறியும் கிளப்பப்பட்டது. பெடா (கஉகூஅ) அமைப்பின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.
இவையன்றி, சல்லிக்கட்டு தடை என்பது இந்த மண்ணுக்குரிய மாட்டு இனங்களை அழிப்பதற்கான பன்னாட்டு நிறுவனங்களின் சதி என்றும், காங்கேயம், உம்பளச்சேரி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வகை காளையினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சில ஆர்வலர்கள் எச்சரித்தனர். சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு விட்டதால் இனப் பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் இக்காளைகள் அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன என்றும், சல்லிக்கட்டை நடத்துவதொன்றுதான் இந்தக் காளையினங்களைக் காப்பதற்கு வழி என்றும் இவர்கள் வாதிட்டனர்.
பாரதிய ஜனதாவின் கூற்றை மட்டும் குப்பை என்று தள்ளி விடுவோம். எஞ்சியிருப்பனவற்றில் பல, அரை உண்மைகள். ஆனால் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடுபவர்கள், இந்த தடையின் காரணமாகத்தான் நாட்டு மாடுகள் அழியத் தொடங்கின என்று தொடங்கி, அப்படியே அதை விவசாயத்தின் அழிவு வரை நீட்டித்துச் செல்வது, “சீப்பை ஒளித்ததால்தான் கல்யாணம் நின்றுவிட்டது” என்பதற்குச் சமமான நகைச்சுவை.
“வளமான விவசாயம் – மேய்ச்சல் நிலங்கள் – கால்நடைகள் – விவசாயிகளின் மகிழ்ச்சி – பொங்கல் – மாட்டுப் பொங்கல்” என்பதைத் தலைகீழாகத் திருப்பி, “தமிழினப் பெருமிதம் – சல்லிக்கட்டு – கால்நடைப் பெருக்கம் – வளமான விவசாயம் – விவசாயிகளின் மகிழ்ச்சி” என்று சல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை ‘அறிவியல் பூர்வமாக’ நிறுவ முயல்கிறார்கள் அதன் ஆர்வலர்கள்.
விவசாயத்தில் நவீனக்கருவிகள் நுழைந்ததன் விளைவாக, கால்நடைகளின் பயன்பாடு குறைந்திருப்பது நம் கண் முன் தெரியும் உண்மை. பசுமைப் புரட்சியின் தீய விளைவுகள், விதை நெல் முதல் கால்நடைகள், தாவரங்கள் வரையிலான அனைத்திலும் பன்மைத்துவத்தை அழித்து தமது ஏகபோகத்தை நிலைநாட்டவும், விதை முதல் விலங்கினங்கள் வரை அனைத்திலும் பாரம்பரிய மரபினங்களைத் திருடவும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் முயற்சிகள் ஆகியவை அம்பலமாகத் தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த அழிவுகளில் தொடங்கி, நீர்நிலைகளின் அழிவு வரையிலான அனைத்துக்கும் யார் காரணமோ, அவர்கள்தான் தமிழ்ப் பண்பாடு, மரபு ஆகியவற்றின் பெயரால் இன்று சல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கிறார்கள்.
விவசாயத்தின் அழிவு காரணமாக தமிழகத்தின் கிராமங்களில் இன்று வேலை இல்லை. மக்கள் பிழைப்பு தேடி நகரத்துக்குத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் விவசாயிகளோ வேலைக்கு ஆள் கிடைக்காமல், நடவுக்கும் அறுப்புக்கும் எந்திரங்களைத் தேடி ஓடுகிறார்கள். கிராமங்களில் உழவுக் காளைகளும் இல்லை, காளையரும் இல்லை. பல கிராமங்களில் ஏழை விவசாயக் குடும்பங்களில் எஞ்சியிருப்பவர்கள் முதியவர்கள் மட்டும்தான். மனிதர்களே பிழைக்க முடியாத கிராமங்களில் மாடுகள் மட்டும் எப்படி எஞ்சியிருக்க இயலும்?
பசுக்களின்பால் பெரும் காதல் கொண்ட பா.ஜ.க., சமீபத்தில் மகாராட்டிரத்தில் மாட்டுக்கறி விற்பனையைத் தடை செய்தது. வழக்கமாக, உழவுக்கோ கறவைக்கோ பயனற்ற மாடுகளை விற்றுவிட்டு புதிய மாடுகளை வாங்கும் விவசாயிகள், இந்தத் தடைச் சட்டத்தின் விளைவாக அவற்றை விற்க முடியாமல் மாடு வளர்ப்பையே கைவிட்டு வருகின்றனர்.
“விவசாயத்தால் என்னுடைய குடும்பத்துக்கே சோறு போடமுடியவில்லை. இந்த லட்சணத்தில் மாட்டைப் பராமரிக்க மாதம் 5,000 ரூபாய்க்கு நான் எங்கே போவது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஒரு விதர்பா விவசாயி. விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பதற்கு இணையாக மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதைத் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் சாய்நாத்.
ஜல்லிக்கட்டிற்குத் தடைவிதித்த உச்சநீதி மன்றத்தின் ஆணையை எதிர்த்து மொட்டை போட்டுக் கொள்ளும் தமிழ் மறவர்கள்
விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் பசுப் பாதுகாப்பு பற்றிப் பேசுவது பார்ப்பன வக்கிரம் என்பது போதுமான அளவுக்கு அம்பலமாகிவிட்டது. இலவச அரிசியிலும் நூறு நாள் வேலையிலும் உயிர் தரித்திருக்கும் தமிழக கிராமங்களில், ஒரு இலட்சம் – இரண்டு லட்சம் கொடுத்து சல்லிக்கட்டுக் காளை வாங்கி, அதனைப் பராமரித்து, தமிழரின் பண்பாட்டு மரபு விட்டுப் போகாமல் சல்லிக்கட்டு நடத்துவது மட்டும் எப்படி வீரமாகிவிடும்?
அதுமட்டுமல்ல, வலியோனிடம் அஞ்சி நடுங்கிக் காலை நக்கினாலும், எளியோரை ஏறி மிதிக்க முடியுமாயின் அதுவே வீரமாகி விடுகிறது. மணல் கொள்ளையைத் தடுக்க முடியாத, டாஸ்மாக் கடையை மூட முடியாத ‘தமிழ் வீரம்’, மாட்டின் திமிலைப் பிடித்துத் தொங்கிவிட்டு மீசையை முறுக்குகிறது. ஜெயலலிதாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கிடக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு மீசை இல்லை என்றா நினைக்கிறீர்கள்? எழுந்த பிறகு பாருங்கள் எண்ணெய் போட்ட மீசைகளை!
சல்லிக்கட்டுக்குப் பெயர்போன தென் மாவட்டங்கள்தான் கிடா வெட்டுக்கும் பெயர் போனவை. பாண்டி கோயிலிலும், சுடலை மாடசாமி கோயில்களிலும் ஆண்டுதோறும் வெட்டப்படும் கிடாக்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும். 2003-இல் ஜெயலலிதா கிடா வெட்டுத் தடைச் சட்டம் போட்டபோது, தென்தமிழகம் ரத்தக் களறியாகும் என்றுதான் பலரும் எண்ணினார்கள். ஒரு கோழி அறுக்கும் சத்தம்கூட எந்தக் கோயிலிலிருந்தும் கேட்கவில்லை. இந்த வெட்கக்கேட்டுக்குப் பின்னர்தான் ம.க.இ.க. கிடா வெட்டும் போராட்டத்தை திருச்சியில் நடத்தியது. சட்டத்தை மீறி கிடா வெட்டி சாமி கும்பிடும் துணிவற்ற வீர மறவர்கள்தான், மேலவளவு முருகேசனை வெட்டிப் போட்டனர் என்பதை நாம் மறுக்க முடியாது.
சல்லிக்கட்டுக்காக ஊடகங்களில் குமுறிக் கொந்தளித்து வெடித்தவர்களைப் பார்த்தபோது, பத்து இடங்களிலாவது ரத்தக்களறி உறுதி என்றுதான் தோன்றியது. ஆனால் ஒரு இடத்தில்கூட சண்டை நடக்கவில்லை, சட்டையும் கிழியவில்லை. மறத்தமிழர்களின் குமுறல் கொந்தளிப்பெல்லாம் வெறும் சலாம் வரிசை என்பது, தடை விதித்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் கண்ணீருடன் குனிந்து கும்பிட்டவுடன் அம்பலமாகிவிட்டது.
“மொட்டை, ஒப்பாரி, கண்ணீர், கருப்புக்கொடி” – இவைதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ் வீரம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட வடிவங்கள். “காளைகளுக்குச் சிரிக்கத் தெரியாது” என்பது தமிழகம் செய்த பேறு. மீறி அவை சிரிக்க முயன்றிருந்தால், ‘தமிழ் மரபை மீறிய’ அவற்றின் செயலைக் கட்டுப்படுத்தி ‘ஒழுங்கை’ நிலைநாட்டும் பொருட்டு, மூக்கணாங்கயிறு கொண்டு போலீசு அதிகாரிகளே காளைகளின் வாயைக் கட்டியிருப்பர்.
திருநாள் கொண்ட சேரியில் ‘சத்திரிய/இந்து/தமிழ்’ வீரத்தைக் காப்பாற்றும் பொருட்டு பிணம் தூக்கிய போலீசார், தமிழ் வீரத்தைக் காக்கும் பொருட்டு இதைக்கூடச் செய்ய மாட்டார்களா என்ன?
000
குறிப்பு: பெரியவர் செல்லமுத்துவின் உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிய திருநாள் கொண்டசேரி தாழ்த்தப்படட மக்கள், “மொட்டை போடுதல், ஒப்பாரி வைத்தல், கருப்புக்கொடி ஏற்றுதல்” போன்ற இழவு வீட்டுக்குப் பொருத்தமான வடிவங்களில் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும். அவர்களோ காளைகளை மறிக்கும் காளையரைப் போல, போலீசை வழிமறித்து மோதி தடியடி பட்டனர். பலருக்கு எலும்பு முறிந்தது. பெண்கள் உள்ளிட்டு 60-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், இந்நடவடிக்கை ஏறு தழுவுதலையொத்த ‘தமிழ் வீரம்’ என்ற வகையினத்தில் சேருமா, அதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா என்பது குறித்து கட்டுரையாசிரியருக்குத் தெளிவில்லையாதலால், அதனை அறிஞர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறார்.
பொய்ப்பிரச்சாரம், தேசத்துரோக குற்றச்சாட்டு, தாக்குதல் என ஜே.என்.யு வை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் வெறியாட்டம் போட்டு வருகிறது. இவற்றை எல்லாம் கண்டு மாணவர்கள் அஞ்சவில்லை. கடந்த 18 ந்தேதி 20,000 மாணவர்கள் திரண்டு நடத்திய ஊர்வலம் டெல்லியை உலுக்கியெடுத்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்கள். பி.சாய்நாத் உள்ளிட்ட அறிவுத்துறையினரும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற நோம் சோம்ஸ்கியும், நோபல் பரிசு வென்ற பல அறிஞர்களும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உலகம் சுற்றும் வாலிபனான மோடியை ஆதரிக்க உலகத்தில் ஒரு ஆள் இல்லை. உள்ளூரிலும் ஒரு கட்சி இல்லை.
உலகப் புகழ்பெற்ற 100 பல்கலைக் கழகங்களில் ஒன்று ஜே.என்.யு. அனைத்து மாநில மாணவர்களும் இங்கு படிக்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர், மாணவர் மூன்று தரப்பும் சேர்ந்து நிர்வாகம் செய்யும் ஜனநாயகப்பூர்வமான முறை ஜே.என்.யு வைத்தவிர நாட்டில் வேரெங்கும் இல்லை. பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகள் குறித்து நடக்கும் விவாதங்களும், அதையொட்டிய போராட்டங்களும் அங்குள்ள ஜனநாயகத்தை பறைசாற்றும். 1975-ல் அவசர நிலை அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடினார்கள். தற்போது மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைதுத்தரப்பு மக்களின் உரிமைகளை நசுக்கிவரும் மோடி ஆட்சியின் அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்த்து துணிவுடன் போராடி வருகிறார்கள் ஜே.என்.யூ மாணவர்கள். பிரதமராக மோடி அதிகாரத்திலிருந்தாலும் ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபிக்கு டெபாசிட்கூட கிடைக்கவில்லை. இவைகளால்தான் பார்ப்பன பாசிச கும்பல் ஜே.என்.யு தேசவிரோதிகளின் கூடாரம் என்று வெறிகூச்சல் போடுகிறது.
இது முதல்தடவையல்ல, உயர்க் கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க அவர்கள் செய்யும் நான்காவது முயற்சி இது. சென்னைஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் போர்க்குணத்துடன் போராடியதும், நாடெங்கும், உலகம் முழுவதும் ஆதரவுப் போராட்டங்கள் பெருகியதாலும் பின்வாங்கினார்கள். பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிச கும்பலுக்கு விழுந்தது முதல் மரண அடி.
சென்னை ஐஐடி யில் தேச விரோதிகள் செயல்படுகிறார்கள் என்று பார்ப்பன ஆசிரியர்கள் மொட்டைக் கடிதம் போட்டார்கள். உடனே அ.பெ.ப.வ க்கு தடை. ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தேசத்துரோகிகள் உலவுகிறார்கள் என்று பி.ஜே.பி அமைச்சர் பண்டாரு கடிதம் எழுதினார். உடனே அம்பேத்கர் மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை. வெமுலா ’தூக்கிலேற்றப்பட்டார்’. இப்போது ஜே.என்.யு விலும் அதே தேசவிரோத பாட்டை பாடினார்கள். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவின் பேரில் தேசதுரோக வழக்கு, மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா கைது. மாணவர்கள் மீது அடக்குமுறை.
அப்சல் தூக்கை எதிர்த்தார்கள் என்பதுதானே குற்றச்சாட்டு. தமிழகத்தில் நாம் மூவர் தூக்கை எதிர்க்கவில்லையா? அப்சல் தூக்கு அநீதி என்று பேசாதவர்கள் யார்? ஆதாரம் இல்லை; ’’தேசத்தின் மனசாட்சிப்படி தண்டனை ’’ என்பதுதானே தீர்ப்பு. இப்போது ப.சிதம்பரமே அதை கூறவில்லையா?
கண்ணையா குமார், “மனுவாதிகளிடமிருந்து விடுதலை” “வறுமையில் இருந்து விடுதலை” “புதிய பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து விடுதலை” “பார்ப்பனியத்திடமிருந்து விடுதலை”, “ஆர்.எஸ்.எஸ் இடமிருந்து விடுதலை” என்று உணர்வு பொங்க ஆற்றிய உரையாற்றினார். இந்த பேச்சை போர்ஜரி வேலை செய்து 9ம் தேதி கூட்டத்தில் ஏ.பி.வி.பி ரவுடிகள் எழுப்பிய கூச்சல்களில் இருந்து “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” “காஷ்மீர் விடுதலை” போன்ற முழக்கங்களை வெட்டி ஒட்டி வீடியோவை தயாரித்திருக்கிறது. அதைத்தான் ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பி “தேசதுரோக” குற்றச்சாட்டுகளுக்கு மேலும் போலியான ஏவுதளம் அமைக்கப்பட்டது.
வீடியோ பொய்; பாகிஸ்தான் வாழ்க என்று மாணவர்கள் முழக்கம் போட்டதாக சொன்னது பொய்; அப்படி முழக்கம் போட்டவர்கள் முகமூடி அணிந்த ஏபிவிபி காலிகள் என்பதே மெய். மாணவர் உமர் முஸ்லிம் தீவிரவாதி என்றார்கள். அவர் நாத்திகர், கம்யூனிஸ்டு என்று அவர் குடும்பம் சொல்கிறது, சக மாணவர்கள் கூறுகிறார்கள். உமர் பாகிஸ்தான் சென்றவர் என்றார்கள். எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை என்று உமரே சொல்கிறார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்து கன்னையாவை வக்கீல் போர்வையில் பி.ஜே.பி எம்.எல்.ஏ தாக்கினான். அது யாரோ ஒரு ரவுடி என்பது போல சித்தரிக்க முயற்சித்தார்கள். ஆனால், நான் தான் அடித்தேன் என்று அந்த எம்.எல்.ஏ பெருமையாக பேசினான். இதையெல்லாம்விட பாராளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி துர்க்கையை விபச்சாரி என்று மாணவர்கள் திட்டினார்கள் என்று மற்றொரு பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார். (இவர் சொல்லும் துர்க்கையின் யோக்கியதை அம்பேத்கர் தோலுரித்திருக்கிறார்.) மாணவர்களுக்கு எதிராக பி.ஜே.பி சொன்னது ஒவ்வொன்றும் பொய் என்று அம்பலமாகி நாறுகிறது.
இவர்கள் நோக்கம் என்ன? ஏ.பி.வி.பி தவிர யாரும் கல்வி நிறுவனங்களில் இருகக் கூடாது என்பதுதான். பெரியார், அம்பேத்கர், இடதுசாரி கூடாது. அறிவு, அறிவியல் எதுவுமே கூடாது. ஹிட்லரின் வாரிசுகள்தானே இவர்கள். இந்துமதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்திய தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கியை கொலை செய்த பயங்காரவாதிகள்தான் இவர்கள்.
மாட்டுக்கறி வைத்திருந்தார் என தாத்ரியில் அக்லக் எனும் முஸ்லீமை கொன்றார்கள். சாதி மதம் மாறி காதலிக்க கூடாது; ஏன் காதலே கூடாது; லவ் ஜிகாத்தை அறிவித்து காதலர்களை தாக்கினார்கள். இட ஒதுக்கீடு கூடாது; அரசுக் கல்லூரி கூடாது; பன்னாட்டு கல்வி – பணக்காரன் – ஆதிக்க சாதி மட்டுமே படிக்க வேண்டும் என்கிறார்கள். சிபிஎஸ்இ எனும் மத்திய பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக திணிப்பு, வரலாற்றை திரிப்பது. நாட்டிலுள்ள பல்தேசிய இனங்களின் மொழி, கலாச்சரம், மதம் ஆகியவர்றை அழித்துவிட்டு, நாட்டை பார்ப்பனியமயமாக்க இந்து – இந்தி – இந்தியா எனும் தங்கள் நீண்டகால திட்டத்தை அரங்கேற்றுவது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் உண்மையான நோக்கம். இதை மறைக்கத்தான் தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி, பிரிவினைவாதம், தீவிரவாதி என்றெல்லாம் பீலா விடுகிறார்கள்.
ஆங்கிலேய காலனியாட்சியாளர்களால் இந்த நாட்டை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா. அவன் உருவாக்கியதுதான் இந்துமதம். அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு மதங்கள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த நாடு இருந்தது. டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் – சேட்டுகளுக்களின் ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்து இந்தி இந்தியா எனும் பூனுலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா. இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்க உட்பட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள் தான் ’தேசபக்த’ ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி இந்துத்துவாவாதிகள்.
தேசவிரோத முத்திரைக்குத்தி வெமுலாவை பட்டினி போட்டு, தெருவுக்கு துரத்தி கொன்றார்கள். இன்று ஜே.என்.யு மாணவர்கள் மீது தேசதுரோக வழக்குப் போட்டு கைது, 8 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏழை தலித், பழங்குடியினர். உமர் வசதியற்ற முஸ்லிம் குடும்ப மாணவர். இத்தகைய உழைக்கும் வர்க்க பின்னனியில் வந்து ஜனநாயக, முற்போக்கு வழியில் போராடும் மாணவர்களை மட்டும் துரத்தவில்லை. ஜே.என்.யு வையே மூடு என்கிறார்கள்.
இந்த அரசு மாணவர்களின் எதிரி. இது டெல்லி பிரச்சினை அல்ல, நம்முடைய ஒட்டுமொத்த மாணவ சமூகத்தின் பிரச்சினை. எங்கேயோ உ.பி யில் பாபர் மசூதியை இடித்து ராமன் கோயில் கட்டு என்று நாட்டையே கொளுத்தினார்கள். அப்பாவிகளை கொன்றார்கள், அப்படி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த பிஜேபி கட்சி. பாபர் மசூதியை இடி என்றதும் ஜே.என்.யு வை மூடு என்பதும் வேறு வேறல்ல. அன்று மக்கள் ஏமாந்ததால் இடித்து விட்டார்கள். இன்று அவர்களை நம்ப யாரும் தயாராக இல்லை. ஒரு ஆள் கூட ஆதரிக்கவில்லை.
இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது தமிழகத்தின் மாணவர் போராட்டம். இந்தி – இந்து – இந்தியா என்ற பார்ப்பன பாசிஸ்டு கும்பலின் சதியையும் தமிழக மாணவர்களாகிய நாம் தடுத்து நிறுத்திக் காட்டுவோம்!
முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், செய்தித் தாள்கள், வலைப்பூக்கள், அதில் வரும் பின்னூட்டங்களை முதற்கொண்டு கண்காணிக்க தனிச்சிறப்பான ஒரு கண்காணிப்பு அமைப்பை இந்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய ஊடக பகுப்பாய்வு மையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மையம் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய கண்காணிப்பு அமைப்பாக செயல்படும். பத்திரிகைகளின் தகவல்களின் படி இது பழைய அச்சு ஊடகங்கள் முதல் நவீன டிஜிட்டல் மீடியா வரை அனைத்தையும் கண்காணிக்கும் அமைப்பாக இருக்கும்.
ஏற்கனவே இது போன்ற இரண்டு காண்காணிப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மின்னனு ஊடக கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு 24X7 முறையில் 600க்கும் மேற்பட்ட காட்சி ஊடகங்களை (தொலைக்காட்சி சானல்கள்) கண்காணித்து வருகிறது. இந்த மின்னணு மையத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் பணி என்னவென்றால் சானல்களை கண்காணித்துக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை அளிப்பதாகும். இணையம் சமூக வலைதளங்களை கண்காணிக்க மற்றொரு ஊடக பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் Big Data and Analytics(பெரும் தரவு மற்றும் பகுப்பாய்வு) என்ற துறை வேகமாக முன்னேறி வரும் ஒன்றாகும். இந்த துறையின் பணி என்ன? இணையத்தில் கொட்டி கிடக்கும் ஏராளமான தரவுகளை பகுப்பாய்வு செய்து அதிலிருந்து தகவல்களை திரட்டுவது. வங்கி முதல் பீசா கடை முதலான அனைத்து நிறுவனங்களும் இதில் தற்போது கவனம் செலுத்திவருகின்றன.
இந்த தொழில்நுட்பம் மிகப் பிரம்மாண்டமான அளவில் பகுப்பாய்வுகளை சாத்தியப்படுத்தியுள்ளது. ஒரு அரசு இதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது அதன் பயன்பாடுகளை அளவிடவே முடியாது. ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்கள் நுகர்வோர் என்ற அளவிலும், அரசுகள் குடிமக்கள் என்ற அளவிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
மோடி அரசால் உருவாக்கப்படவிருக்கும் இந்த மையத்தில் டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டடியூட் ஆஃ டெக்லாலனிஜியின் துணை பேராசிரியர் பொன்னுரங்கம் குமரகுரு என்பவர் வடிவமைத்திருக்கும் மென்பொருள் பயன்படுத்தப்படவிருக்கிறது.
இந்த மென்பொருள் நமது பதிவுகளை எண்ணிறந்த முறையில்வகைப்படுத்தும். உதாரணமாக அரசுக்கு ஆதரவு எதிர்ப்பு, கெயில் திட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்புமோடி ஆதரவு, மோடி எதிர்ப்பு, மோடி பக்தர் என இன்னும் ஏராளமான முறைகளில் வகைப்படுத்தலாம். கருத்துக்களை வைத்து மட்டுமல்ல யாரெல்லாம் என்ன அரசியல் சார்பு கொண்டிருக்கிறார்கள், சான்றாக தோழர் என்று பயன்படுத்துவது யார், புரட்சி என்று பேசுவது யார், பாசிஸ்டுகள் என்று அழைப்பது யார்….என்றெல்லாம் வகை பிரிக்கலாம். இவற்றை ஆள் போட்டு செய்ய வேண்டிய தேவை இல்லாமல் ஒரு மென்பொருளே சடுதியில் இலட்சக்கணக்கான நபர்களை பிரித்து சேமித்து வைத்து விடும்.
எதிர்மறையாக எழுதுபவர்களின் பழைய வரலாறாகளை கிளறி தொடர்ந்து அரசை எதிர்த்து வருகிறாரா இல்லை குறிப்பிட்ட பிரச்சனையில் எதிர்க்கிறாரா என அரசு தெரிந்து கொள்ளும் வகையிலும் இதை பயன்படுத்தலாம். மேலும் குறிப்பிட்ட நபரின் பின்னணி, விருப்பங்கள் முதலியவற்றையும் தொகுத்து தரும் வகையில் இந்த மென்பொருள் வடிமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் அரசை தீவிரமாக எதிர்க்கிறாரா, மென்மையாக எதர்க்கிறாரா, நடுநிலைமையா, ஆதரவா, தீவிர ஆதரவா, குறிப்பிட்ட பிரச்சினையில் மட்டும் நிலைப்பாடா, அனைத்திலுமா என்றெல்லாம் பிரிக்க முடியும் என்று செய்திகள் கூறுகின்றன.
பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை மோடியின் தேர்தல் வெற்றி முதல், வெளிநாட்டு பயணங்கள் கூட்டங்கள் வரை அனைத்தும் மென்பொருட்களின் துணையோடு பல கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டன. தற்போது மோடி அரசை எதிர்த்து வரும் கருத்துக்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய அவதூறுகளை அவிழ்த்து விடுவதற்கு இந்த புதிய கண்காணிப்பு மையம் பயன்படும். மேலும் இந்த ஊடக கண்காணிப்பு மையம் தன் தகவல்களை வைத்து மைய அரசின் புலனாய்வு, போலீஸ் அமைப்புகளோடு சேர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு பயன்படும் வகையில் அமைத்திருக்கிறார்கள். நாளை காங்கிரசு அரசு வெற்றி பெற்றாலும் அரசு என்ற முறையில் அவர்களும் இந்த மையத்தை இப்படித்தான் பயன்படுத்துவார்கள்.
பிற்காலத்தில் இதை ஆதார் திட்டத்துடன் இணைக்கப்பட்டால் அந்த நபரைப்பற்றிய அனைத்தும் அரசின் கைகளில் சில வினாடிகளில் கிடைத்து விடும்.இந்த தகவல்களை போலீஸ் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு துறையிருக்கு வழங்கும் வகையில் தேசிய ஊடக மற்று பகுப்பாய்வு மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்துத்துவ பாசிஸ்ட் பால்தாக்ரேவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக இரு பெண்களை போலீசார் கைது செய்தது, ஜெயலலிதாவிற்கு எதிராக பாடல் வெளியிட்டதற்காக கோவன் கைது, வினவு பொறுப்பாளர் காளியப்பன் மீது அடக்குமுறை ஏவப்பட்டது நினைவிருக்கலாம். அரசின் அடக்குமுறைகள் ஏற்கனவே அதிகமா இருக்கும் நிலையில் இந்த புதிய கண்காணிப்பு மையம் அரசின் அடக்குமுறைகளை தீவிரப்படுத்தும். சமூக வலைத்தளங்கள ஓரளவுக்கேனும் அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் வாய்ப்பு பெற்றிருக்கும் நிலையில் மக்களை சொந்தமாகவே தணிக்கை செய்து பேசவைக்கும் நிலைக்கு ஆளாக்குவது தான் அரசின் விருப்பம். அரசு விரும்பாத பதிவுகளை முகநூல் உள்ளிட்ட நிறுவனங்களே நீக்கிவருகின்றன என்றாலும் அந்த அளவுக்கு கூட பொறுத்திருக்க அரசு விரும்பவில்லை என்பதை தான் இது காட்டுகிறது.
சகிப்பின்மை குறித்த விவாதங்கள், மோடி அரசின் அமைச்சர்கள் பற்றிய ஊழல் விவகாரங்கள், தற்போது ஜே.என்.யு என தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், பொருளாதார துறையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் போன்றவைகளை மோடி அரசின் மீதான மாயைகளை அகற்றி வருகிறது. மக்கள் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. குர்கானில் தொடங்கி, தண்டகாரண்யா, கெயில், போஸ்கோ என மக்கள் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. மெய்நிகர் உலகம் இதை ஓரளவு பிரதிபலிக்கவும் செய்கிறது.
இந்த அமைப்பின் நோக்கமாக அரசும் நாம் கூறுவதை தான் சொல்கிறது. “அரசுக்கு எதிரான தனிநபர்களின் கருத்துக்கள் பொதுமக்களின் போராட்டங்களாகவோ இல்லை சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ மாறிவிடாமல் இருக்கும் பொருட்டு “உடனடி எதிர்ப்பு” தெரிவிப்பது” என்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கபடுகிறது.
பாசிஸ்டுகள் தங்களை நிழலை பார்த்துக்கூட மட்டுமல்ல முகநூல் பதிவைபார்த்துக் கூட பயப்படுவார்கள் என்பதை மீண்டும் மெய்ப்பிக்கிறது இந்த கண்காணிப்பு.
இந்த கண்காணிப்புகளுக்கு அஞ்சாமல் அரசுகளை எதிர்த்து கண்டிப்பதும் குரல் கொடுப்பதும் நமது கடமையாகும்.
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலையைவிட, ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருக்கும் அதிசயத்தக்கதொரு சூழலில் இன்று உலகம் நிற்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பன்னாட்டு சந்தையில் 106.85 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் (159 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை தற்பொழுது கிட்டதட்ட 30 அமெரிக்க டாலர்களாகக் குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, உலகப் பொருளாதார மந்த நிலை என்ற எதிரும் புதிருமான நிலைமைகள் மற்றும் அமெரிக்காவின் அரசியல் கணக்குகள் ஆகியவை காரணமாகப் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30 டாலருக்குக் கீழாகவும் சரியும் என்று ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும், அவற்றைச் சேர்ந்த நிபுணர்களும் கருத்துக் கூறி வருகின்றனர்.
வரிக் கொள்ளையர்கள்: நரேந்திர மோடி மற்றும் அருண்ஜெட்லி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 106.85 டாலராக இருந்தபொழுது, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71.41, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.56.71 என இருந்தன. அச்சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க., இந்த விலையை “மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பெரும் சுமை” என சவுண்டுவிட்டு, அப்பொழுது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங்கைக் கண்டித்து வந்தது. இப்பொழுது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நான்கில் ஒரு பங்காகச் சரிந்துவிட்டது. ஆனால், பா.ஜ.க.வின் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நான்கில் ஒரு பங்குகூட வேண்டாம், நான்கில் இரண்டு பங்காகக்கூடக் குறையவில்லை.
கச்சா எண்ணெய் விலை 30 டாலராகச் சரிந்துவிட்டதையடுத்து, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.19.95 ஆகக் குறைந்துவிட்டது. ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை அதனைவிடக் குறைவாக (ரூ.15.04) உள்ளது. ஆனால், இந்தியச் சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோலும் டீசலும் அவற்றின் அடக்க விலையைவிட மூன்று மடங்கு அதிகமாக அறுபது ரூபாய்க்கும், ரூ.44-க்கும் விற்கப்படுகின்றன.
உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டளைக்கு அடிபணிந்தும், இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக முதலைக் கண்ணீர் வடித்தும் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிப்பதில் அரசுக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளைக் கைகழுவி, பெட்ரோல், டீசலுக்கு வழங்கி வந்த ‘மானியங்களை’ முற்றிலுமாக நிறுத்திக் கொண்டுவிட்டது இந்திய அரசு. ‘மானிய’ விலையில் மண்ணெண்ணெயும், சமையல் எரிவாயுவும் விநியோகிப்பதில் வரம்புகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பன்னாட்டு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளைப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றி (ஏற்றி) அமைக்கும் சீர்திருத்தம் புகுத்தப்பட்டிருக்கிறது. இத்தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயரத் தொடங்கின.
பெட்ரோல் விலையேற்றத்தால் கொள்ளை இலாபமடையும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி…
புண்ணுக்குப் புனுகு தடவும் தந்திரத்தைப் போல, “பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கூடினால்தான் பெட்ரோல், டீசல் விலைகள் கூடும். அங்கு இறங்கினால், அதன் முழுப் பயனும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்” எனக் கூறி, இத்தனியார்மயத் தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது, இந்திய அரசு. இதோ, 106 டாலருக்கு மேல் விற்கப்பட்ட கச்சா எண்ணெய் 30 டாலராகச் சரிந்துவிட்டது. இந்த சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகள் ஏன் குறையவில்லை என்ற கேள்விக்கு அதிகார வர்க்கமும், மோடி அரசும் மட்டுமல்ல, தனியார்மயத்தை ஆதரித்துப் பேசிவரும் கனவான்களும் பதில் அளிக்க மறுக்கிறார்கள். தனியார்மயத்தின் கீழ் அனைத்துவிதமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை, கட்டணத்தை சந்தைதான் தீர்மானிக்கும் எனத் தனியார்மய தாசர்கள் சாமியாடுவதெல்லாம் முழுப் பொய், பித்தலாட்டம் என்பதை அறுபது ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் அம்பலப்படுத்துகிறது.
2014 ஏப்ரலில் 106 டாலர்களாக இருந்து கச்சா எண்ணெய், 2015 ஜனவரியில் 46 டாலர், நவம்பரில் 42 டாலர்கள், இப்பொழுது 29.85 டாலர்கள் எனக் கடந்த ஓராண்டாக கடகடவெனச் சரிந்து விழுந்து வருவதன் பலனையும்; இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலைகள் செயற்கையாகத் தூக்கி நிறுத்தப்பட்டிருப்பதால் கிடைக்கும் இலாபத்தையும் இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அனுபவிக்கவில்லை. கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிலில் இறங்கியிருக்கும் ரிலையன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன் இந்தியா, பிரிட்டிஷ் பெட்ரோலியம், சென்னை பெட்ரோலியம், அபான் ஆஃப் ஷோர், இந்திரபிரஸ்தா கேஸ், ஷெல் உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், பன்னாட்டு ஏகபோக எண்ணெய் நிறுவனங்களும் இந்தப் பகற்கொள்ளையில் பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனங்களுக்கு அப்பால், பெட்ரோலியப் பொருட்களை நம்பி தொழில் செய்யும் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளையும் வீங்க வைத்திருக்கிறது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி. பெட்ரோல், டீசலை நேரடியாகச் சார்ந்து நிற்கும் மாருதி சுசுகி, ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள்; பெட்ரோலியப் பொருட்களை மூலப் பொருட்களாகப் பயன்படுத்தும் அப்போலா டயர்ஸ், டி.வி.எஸ்.சக்ரா, எம்.ஆர்.எஃப். உள்ளிட்ட வாகன டயர் தொழில் நிறுவனங்கள்; பெயிண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், பெர்கர் பெயிண்ட்ஸ்; விமான போக்குவரத்து நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்; நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பாட்டா, இமாமி, இந்துஸ்தான் லீவர், டாபர் இந்தியா உள்ளிட்ட பெரும் தரகு முதலாளித்து நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை சரிவால் 66,000 கோடி ரூபாய் அளவிற்கு இலாபம் அடைந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்திய அரசு மற்றும் இந்த சிறு கார்ப்பரேட் கும்பலைத் தாண்டி கச்சா எண்ணெய் விலை சரிவினால் பொதுஜனம் அடைந்திருக்கும் பலனைப் பூதக் கண்ணாடி கொண்டுதான் தேட வேண்டியிருக்கிறது.
…மற்றும் எஸ்ஸார் நிறுவனத் தலைவர் சசி ரூயா.
கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி ஜனவரி வரையுள்ள ஆறு மாதங்களில் பன்னாட்டு சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை பத்து முறையும், டீசல் விலை ஆறு முறையும் குறைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டுகிறது, மோடி அரசு. ஆனால், இந்த விலைகுறைப்பு கடைந்தெடுக்கப்பட்ட மோசடி, நாடகம் என்பதே உண்மை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எழுபது சதவீதத்திற்கு மேலாகக் குறைந்துள்ள நிலையில் வெறும் 20 சதவீதம் அளவிற்கு மட்டுமே பெட்ரோல், டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்னொருபுறமோ இந்த அற்பமான விலை குறைப்பைக் காட்டிலும் அதிகமாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரியை உயர்த்தி வருகிறது மோடி அரசு.
குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐம்பது பைசா, ஒரு லிட்டர் டீசலுக்கு 46 பைசா என 96 காசுகள் அளவிற்கு விலையைக் குறைத்த கையோடு, அவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரி ரூ.1.47 ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32 பைசா, ஒரு லிட்டர் டீசலுக்கு 85 பைசா என ரூ.1.17-ஐ குறைத்த கையோடு, அவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரி ரூ.2.58 ஆக அதிகரிக்கப்பட்டது.
கடந்த 13 மாதங்களில் (ஜன.2015 முதல் ஜன.2016 முடிய) ஐந்து தவணைகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.6.65-ம், ஒரு லிட்டர் டீசல் மீதான கலால் வரி ரூ.7.40 அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரிக்குள் மிகவும் குறுகிய கால இடைவெளியில் (நவ.7, டிச.16, ஜனவரி 15) பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அடுத்தடுத்து மூன்று தவணைகளில் ஆறு ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.48 ஆகவும் ஒரு லிட்டர் டீசலின் மீதான கலால் வரி ரூ.3.56 ஆகவும் இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த கலால் வரி படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று அது பெட்ரோலுக்கு ரூ.19.37, டீசலுக்கு ரூ.13.83 என விண்ணைமுட்டும் அளவிற்குச் சென்றுவிட்டது. கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதெல்லாம் கலால் வரியை உயர்த்தி, அதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளைச் செயற்கையாகத் தூக்கி நிறுத்தியிருக்கிறது, மோடி அரசு. இத்தகைய கயமைத்தனமான வரிச்சுமை மக்கள் மீது திணிக்கப்படாதிருந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை தற்போது இருப்பதைவிட பத்து ரூபாய் குறைவாக இருந்திருக்கும். மாறாக, இந்த செயற்கையான விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் மற்றும் கலால் வரி உயர்வின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம் – என இரண்டு விதமாகக் மக்களைக் கொள்ளையடித்து வருகிறது, மோடி அரசு.
கச்சா எண்ணெய் விலை சரிவால் கடந்த ஏப்ரல் 2015 முதல் நவம்பர் 2015 முடியவுள்ள எட்டே மாதங்களில் 2.2 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதன் கொள்முதல் செலவீனம் குறைந்து, அத்தொகை மைய அரசிற்கு சேமிப்பாகக் கிடைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். இதுவொருபுறமிருக்க, பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை முழுமையாக வெட்டியது, மானிய விலையில் மண்ணெண்ணெயும் சமையல் எரிவாயுவும் வழங்குவதில் வரம்புகள் விதித்தது, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் ஆகிய ‘சீர்திருத்தங்கள்’ மூலம் ஏறத்தாழ 80,000 கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய மானியத்தை மைய அரசு சுருட்டிக் கொண்டுள்ளது. இப்படி மூன்று இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலான தொகையை மக்களிடமிருந்து தட்டிப் பறித்துள்ள மோடி அரசு, இதுவும் போதாதென்று கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரி விதிப்பின் மூலம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டின் (2014) கடைசி இரு மாதங்களில் கலால் வரியை உயர்த்தியன் மூலம் மட்டும் 10,000 கோடி ரூபாயை மக்களிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது.
“வாகனங்கள் ஓடுவதற்குத் தரமான சாலைகள் வேண்டுமென்றால், இந்தக் கூடுதல் வரியை மக்கள் சுமந்துதான் தீர வேண்டும்” எனத் தெனாவட்டாகக் கூறி இந்தக் கொள்ளையை நியாயப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. இதுவொருபுறமிருக்க, தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி திரட்டுவது என்ற பெயரில் கடந்த நவம்பர் மாதத்தில் சேவை வரி 14 சதவீதத்திலிருந்து 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இச்சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஆறே மாதத்தில் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் கக்கூஸ்களைக் கட்டிக் கொடுப்பது போன்ற நல்ல நோக்கங்களுக்காகத்தான் கூடுதல் வரிகள் (செஸ்) விதிக்கப்படுவதாக மோடி அரசு நியாயப்படுத்துவது கீழ்த்தரமான ஏமாற்று உத்தி. ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, சாலை மேம்பாடு, கட்டிட மற்றும் பீடித் தொழிலாளர் நலனைப் பேணுவது எனப் பல பெயர்களில் வசூலிக்கப்பட்ட கூடுதல் வரி (செஸ்) 1.4 இலட்சம் கோடி ரூபாய் அந்த நோக்கங்களுக்காகச் செலவழிக்கப்படவேயில்லை.
குறிப்பாக, இடைநிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு உதவுவது என்ற பெயரில் 2006 முதல் 2015 முடிய 64,000 கோடி ரூபாய் கூடுதல் வரியாக வசூலிக்கப்பட்டது. இதில் ஒரு பைசாகூட அந்த மாணவர்களின் நலனுக்குச் செலவழிக்கப்படாத அதே சமயத்தில், தேசிய திறனறிவுத் தேர்வை எழுதாமல் ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்திவிடப் போவதாக அறிவித்திருக்கிறது, மோடி அரசு. ஏழை மாணவர்களின் பெயரில் வரியை வசூலித்துவிட்டு, அவர்களை உயர் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நேர் எதிரான வேலையைச் செய்து வருகிறது, பா.ஜ.க. கும்பல்.
பொது மக்களின் மீது விதிக்கப்படும் சேவை வரி, கலால் வரி, கூடுதல் வரி (செஸ்) உள்ளிட்ட மறைமுக வரிகளை உயர்த்திக் கொண்டே செல்லும் பா.ஜ.க. கூட்டணி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என்ற பெயரில் வளையவரும் பங்குச் சந்தை சூதாடிகள் மீது விதிக்கப்படும் கார்ப்பரேட் வருமான வரி, இலாப ஈவு வரி உள்ளிட்ட நேரடி வரிகளைப் பெருமளவு குறைக்கவும், முடிந்தால் அந்நேரடி வரிகளுள் பலவற்றை அடியோடு ரத்து செய்யவும் முயலுகிறது. மோடியும் அருண் ஜெட்லியும் மூச்சுக்கு முன்னூறு தடவை கூறும் வரிச் சீர்திருத்தத்தின் வர்க்க உள்ளடக்கம் இதுதான் -முதலாளிகளுக்கு வெண்ணெய்; மக்களுக்குச் சுண்ணாம்பு!
அரசின் செலவு குறைந்து கிடைத்த சேமிப்பு 2.2 இலட்சம் கோடி ரூபாய் என்பது மேலே 2.2 கோடி ரூபாய் என்று தவறாக இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கப்படும் பல்வேறு விதமான வரிச் சலுகைகளால்தான் மைய, மாநில அரசுகளின் பற்றாக்குறையும், கடன் சுமையும் எகிறிக்கொண்டே போகின்றன. இதனை ஈடுகட்டுவதற்கு மக்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளை உயர்த்திக் கொண்டே போவது என்ற பகற்கொள்ளை இன்று அரசின் கொள்கையாகவும், சட்டமாகவும் மாறிவிட்டது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கலால் வரி, கூடுதல் வரிகள் மூலம் மட்டும் ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி ரூபாயை சுருட்டிக் கொண்ட மைய அரசு, இந்த ஆண்டில் அந்த வரிகளை அடுத்தடுத்து உயர்த்தியிருப்பதன் மூலம் 1,20,000 கோடி ரூபாய்க்கும் மேலாக ஈட்டத் திட்டமிட்டிருக்கிறது. மக்களின் பாதுகாவலனாக, சேவகனாக அரசு இருக்க வேண்டும் எனக் கூறப்பட்ட தாத்பரியங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, இன்று அரசு அதற்கு நேர்எதிராக கருணையே அற்ற ஈட்டிக்காரனாக மாறிநிற்கும் பேரபாயத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
எஸ்.வி.எஸ். கல்லூரி நிர்வாகத்தின் அடாவடித்தனங்களால் படிப்பை இடைநிறுத்திய மாணவர் கண்ணதாசன் இந்தக் கல்லூரியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நகரமைப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்று, அந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கல்லூரி குறித்து மைய, மாநில அரசுகளைச் சேர்ந்த 45 துறைகளுக்குப் புகார் மனு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரினார். மேலும், தன்னைப் போலவே பாதிக்கப்பட்டு படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை அமைப்பாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தமிழரசியின் தந்தை மணிவண்ணனும் பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி விழுப்புரம் போலீசு கண்காணிப்பாளர் முடிய பல துறைகளுக்கும் கல்லூரி குறித்து புகார் கொடுத்திருந்தார். இவையெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கவே, அம்மாணவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆர்ப்பாட்டம், தீக்குளிக்கும் போராட்டம், விஷம் அருந்தும் போராட்டங்களை அடுத்தடுத்து நடத்தினர். குறிப்பாக, ஆறு மாணவர்கள் உண்மையிலேயே விஷம் அருந்தி, விழுப்பும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தனர்.
கல்லூரிக்கு சீல் – திடீர் யோக்கியனாக மாறிய தமிழக அரசு
எஸ்.வி.எஸ். கல்லூரியில் நடைபெறும் கட்டணக் கொள்ளை, விதிமீறல்கள் உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் தொகுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு 140 பக்க புகார் மனுவைப் படிப்பை இடைநிறுத்திய மாணவர்கள் அனுப்பியிருந்தனர். குறிப்பாக, அப்புகாரில் நஞ்சை நிலத்தைப் புஞ்சை நிலமாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படிபட்ட அனுமதியைப் பெறாமலேயே கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார், கண்ணதாசன். இப்புகாருக்கு, “உன்னை யார் கல்லூரியைப் பார்க்காம சேரச் சொன்னா?” எனத் திமிராகவும், தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தும் பதில் அளித்திருக்கிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்.
விஷம் அருந்தி உயிர் பிழைத்த ஐயப்பன், கோமளா உள்ளிட்ட மாணவர்களைப் பல மணி நேரம் காக்க வைத்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர் லெட்சுமி, “சீரியலையும் சினிமாவையும் பார்த்து டயலாக் விடுறீங்களா? சீன் கிரியேட் பண்றீங்களா? நடிக்கிறீங்களா? ஸ்கோப்பே இல்லாத படிப்பை ஏன் படிக்கிறாய்?” எனக் கொஞ்சம்கூட ஈரமின்றி மாணவர்களை அவமானப்படுத்தி, கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறார். அம்மாணவர்கள் நடத்திய தீக்குளிப்பு போராட்டத்தின் பின் அக்கல்லூரியை ஆய்வு செய்த வட்டாட்சியர், “அக்கல்லூரி சிறை போல நடத்தப்படுவதாக”க் குறிப்பிட்டு அறிக்கை அளித்திருப்பதைக்கூட மாவட்ட நிர்வாகம் பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
ஸ்.வி.எஸ்.கல்லூரியின் அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் நடந்துகொண்ட விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் சம்பத்…
வட்டாட்சியரின் அறிக்கையை மாணவர்களின் கண்ணில் காட்டக்கூட மறுத்துவிட்டார் உதவி ஆட்சியர் ஜெயசீலன். கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் (ஆர்.டி.ஓ.), “ஒழுங்கா படிக்கப் போ, இல்லைன்னா ஜெயில்ல தள்ளிருவேன்” எனப் புகார் அளித்த ஐயப்பனை மிரட்டித் துரத்தியடித்தார். மாணவர்கள் விஷம் அருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், தலைமைக் காவலராகப் பணியாற்றும் மணிவண்ணன் அக்கல்லூரியின் முறைகேடுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என விழுப்புரம் நகர போலீசு ஆய்வாளரிடம் கேட்டதற்கு, அந்த போலீசு அதிகாரி, தனது துறையில் வேலைசெய்யும் சக ஊழியர் என்றுகூடப் பார்க்காமல், மணிவண்ணனைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி யிருக்கிறார்.
* * *
விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தைக் காட்டிலும் மருத்துவப் பல்கலைக்கழக அதிகாரிகளும், கல்லூரியை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய மருத்துவத்திற்கான இயக்குநரகத்தின் அதிகாரிகளும்தான் வாசுகிக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொண்டுள்ளனர். கல்லூரியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகச் சென்று ஐயப்பன் புகார் மனுவைக் கொடுத்த மறுநிமிடமே, அது குறித்த விவரங்கள் கல்லூரி தாளாளர் வாசுகிக்குத் தெரியப்படுத்தப்பட, அவர் ஐயப்பனைத் தொலைபேசி வழியாக மிரட்டியிருக்கிறார். கல்லூரி குறித்து புகார் அளித்த மணிவண்ணனிடம், “இனியும் இது போன்று புகார் அளித்தால், உங்கள் மகள் தமிழரசி அக்கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்” எனப் பதிவாளர் ஜான்சி சார்லஸே மிரட்டி அனுப்பியிருக்கிறார். பல்கலைக்கழகத்திற்கு எதிராக உள்ள ஹோட்டலில் வைத்துதான் அதிகாரிகளுக்குப் பட்டுப் புடவையும் பணமும் இலஞ்சமாக வாசுகி அளிப்பார் எனத் தொலைக்காட்சி விவாதத்தில் பதிவு செய்கிறார் வாணிஸ்ரீ என்ற மாணவி.
…தற்போதைய ஆட்சியர் லெட்சுமி
கல்லூரியின் அடிப்படைக் கட்டுமானங்கள் குறித்து ஆண்டுதோறும் இந்திய மருத்துவத்திற்கான இயக்குநரகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு மிகப்பெரும் மோசடி, கேலிக்கூத்து என்கிறார்கள் மாணவர்கள். “ஆய்வு நடைபெறவுள்ள தேதிக்குப் பத்து நாட்களுக்கு முன்புதான், கல்லூரி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது போல போலியான கேஸ் ஷீட்டுகள் தயாரிக்கப்படும்; மாணவர்களின் உறவினர்கள், தெரிந்தவர்கள் பெயர், முகவரியெல்லாம் இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்படும்” என்கிறார், ஐயப்பன். ஆய்வின்பொழுது மாணவர்களின் பெற்றோர்கள்தான் நோயாளிகளாகப் படுக்க வைக்கப்பட்டிருப்பார்கள்; மேல்தளத்தில் நோயாளியாக நடித்த மாணவரே, கீழ்தளத்தில் வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டு டாக்டராக வலம் வருவார். ஆய்வுக்கு வரும் அதிகாரி மணவாளனுக்கு இந்த மோசடியெல்லாம் தெரிந்திருந்தும், அவர் நடிக்கும் எங்களைப் பார்த்து, “டாக்டர், டாக்டர்” எனக் கூசாமல் அழைத்து திகைக்க வைத்துவிடுவார் என்கிறார், அம்மாணவர்.
2014-இல் நடைபெற்ற மோசடியான ஆய்வு குறித்து மாணவர்கள் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் புகார் அளித்தனர். திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுத்த கதையாக, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு பல்கலைக்கழகப் பதிவாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு, “2013-14 ஆம் ஆண்டுக்கான ஆய்வு ஏற்கெனவே நடைபெற்று, நீங்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்துவிட்டோம்” என நிர்வாகம் அளித்த பதிலை அப்படியே ஏற்றுக்கொண்டு, மாணவர்களின் புகாரைத் தள்ளுபடி செய்துவிட்டது. 2015-இல் மாணவர்கள் மீண்டும் புகார் அளிக்க, அதற்கு, “உங்கள் புகார் குறித்து ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்துவிட்டதாக”ப் பதில் அளித்திருக்கிறது, பல்கலைக்கழகம்.
* * *
எஸ்.வி.எஸ். கல்லூரியில் நடந்த அத்துணை முறைகேடுகளுக்கும் அடிக்கொள்ளியாக இருந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாந்தாராம்…
இக்கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள், விதிமீறல்கள் குறித்து 2015 ஜூனில் மாணவர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், “அக்கல்லூரி குறித்து முறையாக விசாரித்துதான் அனுமதி அளித்ததாக” பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பல்கலைக்கழகம், 2015-16 ஆம் ஆண்டுக்கான ஆய்வை இனிதான் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தது. இதன் அடிப்படையில் 2015 ஜூனில் பல்கலைக்கழகத்தால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மருத்துவர்கள் குழு, “அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை” என அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், இந்த அறிக்கையை அப்பொழுது பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சாந்தாராமின் சம்மதத்தோடு முடக்கிப் போட்ட பதிவாளர் ஜான்சி சார்லஸ், அப்பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகப் பணியாற்றும் பட்டுசெல்வத்தைக் கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தி, “எஸ்.வி.எஸ். கல்லூரி நன்றாக இருப்பதாக” அறிக்கை தயார் செய்து அளித்திருக்கிறார் (நக்கீரன் பிப்.01-03). இதனை அப்படியே ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம், “அனைத்தும் முறையாக இருப்பதாக”த் தெரிவித்து, மாணவர்களின் வழக்கை முடித்து வைத்தது.
இதன் பிறகும் மாணவர்கள் துவண்டு விடாமல் சாகத் துணியுமளவிற்குப் போராடத் துணிந்ததால், டிசம்பர் இறுதியில் பல்கலைக்கழகம் மீண்டும் ஆய்வுக் குழுவை அனுப்பி வைத்தது. அக்குழுவின் அறிக்கை மூன்று மாணவிகள் இறந்தபிறகும்கூட தயாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாகவே 2015 நவம்பரில் நடந்த கலந்தாய்வு மூலம் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியிலும், ஹோமியோபதி கல்லூரியிலும் 60 மாணவர்கள் சேருவதற்கு பல்கலைக்கழகம் அனுமதித்திருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, மூன்று மாணவிகள் இறந்துபோனதையடுத்துத் தங்களை யோக்கியவானாகக் காட்டிக் கொள்ள, “எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை” என பித்தலாட்டத்தனமான அறிக்கையை அளித்திருக்கிறார், துணைவேந்தர் கீதாலெட்சுமி.
எஸ்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் எலக்ட்ரோபதி, இயற்கை மற்றும் யோகா, ஹோமியோபதி என மூன்று மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வந்திருக்கின்றன. இவற்றுள் எலக்ட்ரோபதி மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர விரும்பவில்லை என்பதால், அக்கல்லூரியை நிர்வாகமே மூடிவிட்டது. இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரிக்கு 2008-ஆம் ஆண்டே தமிழக அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கிவிட்டது. தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதி அ.தி.மு.க. ஆட்சியிலும் ரத்து செய்யப்படவில்லை. மருத்துவப் பல்கலைக்கழகம் இந்தக் கல்வியாண்டு வரை அக்கல்லூரிக்கு வழங்கப்பட்டிருந்த இணைப்புச் சான்றிதழைப் புதுப்பித்து வந்திருக்கிறது.
… தற்போதைய துணைவேந்தர் கீதாலெட்சுமி.
2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹோமியோபதி கல்லூரிக்குத் தமிழக அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்கிவிட்டாலும், மைய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் “ஆயுஷ்” அக்கல்லூரியை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதி மன்றம் 2013-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் ஆயுஷ் அங்கீகாரம் அளிக்க மறுத்ததைத் தள்ளுபடி செய்தது. நவம்பர் 2014-இல் மீண்டும் எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு ஆதரவாக, அக்கல்லூரியை ஒற்றைச் சாளர கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்திருக்கிறது. எஸ்.வி.எஸ். ஹோமியோபதி கல்லூரியை மீண்டும் ஆய்வு செய்யுமாறு ஆயுஷுக்கு உத்தரவிட்டு, ஜூலை 2015-இல் மீண்டும் கல்லூரிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததோடு, அக்கல்லூரி பல்கலைக்கழகத் தேர்வுகளில் கலந்து கொள்ளுவதற்கும் அனுமதி அளித்தது.
* * *
கடந்த எட்டு ஆண்டுகளாக எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரி இயங்குவதற்கும், அந்நிர்வாகம் மாணவர்களைக் கொள்ளையடிப்பதற்கும் தமிழக அரசும், பல்கலைக்கழகமும், நீதிமன்றமும்தான் அடிக்கொள்ளியாக இருந்துள்ளன. ஆனால், கல்லூரி சம்மந்தப்பட்டவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டு, கூட்டுக் களவாணியாகச் செயல்பட்ட அதிகார வர்க்கம் தப்ப வைக்கப்பட்டிருக்கிறது. இறந்த மாணவிகளுக்கு ஒரு இலட்ச ரூபாய் நட்ட ஈட்டை வாய்க்கரிசி போல போட்டுவிட்டு, இயற்கை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை அரசு கல்லூரிக்கு மாற்றிவிட்டு, தன்னை யோக்கிய சிகாமணி போலக் காட்டிக் கொள்ள முயலுகிறார், ஜெயா. இந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பது மூன்று மாணவிகளின் தியாகத்திற்கும், தன்னலம் பாராது போராடும் மாணவர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள துரோகமாகும்.
அதிகார வர்க்கத்தில் புரையோடிப் போயிருக்கும் இலஞ்ச-லாவண்யத்தை மட்டும் எஸ்.வி.எஸ். கல்லூரி விவகாரம் அம்பலப்படுத்தி காட்டவில்லை. தானே வகுத்துக் கொண்ட சட்ட திட்டங்களைக்கூட அமல்படுத்த மறுக்கும் அதிகார வர்க்கத்தின் பொறுப்பற்ற தன்மையை, எத்துணை கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கினாலும், அவை அனைத்தும் தனியாரின் கொள்ளைக்கும் அத்துமீறலுக்கும் சாதகமாக நடந்துகொள்ளும் அரசின் தோல்வியையும் எடுத்துக் காட்டிவிட்டது. இந்த அரசின் ஒவ்வொரு அங்கமும் அழுகிப் போய், ஆளத் தகுதியற்று இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
“இது எஸ்.வி.எஸ். கல்லூரியோடு முடிந்துபோகும் விவகாரமல்ல; தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் இது போல் நடக்கும் அடாவடித்தனங்கள் விரைவில் அம்பலத்துக்கு வரும்” என எச்சரிக்கும் முன்னாள் துணை வேந்தர் கலாநிதியும், கல்வியாளர் நெடுஞ்செழியனும், “அரசு நிறுவனங்கள் அனைத்தும் தோற்றுப்போய் விட்டதன் வெளிப்பாடு இது” எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராகப் போராடும் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அமைப்புக்குள் நீதி கேட்டுப் போராடுவதோடு மட்டும் தம்மை, தமது போராட்டங்களைச் சுருக்கிக் கொண்டுவிட முடியாது. தோற்றுப் போய்விட்ட இந்த அரசுக் கட்டமைவை வீழ்த்துவதை நோக்கியும் அப்போராட்டங்களை விரித்துச் செல்ல வேண்டும். – ரஹீம்
_______________________________ புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________
“நான் அந்தக் கல்லூரியில் ஒருநாளும் மருத்துவ மாணவனாக இருந்தது இல்லை; கொத்தனராக, சித்தாளாகத்தான் இருந்தேன்.”
– எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கண்ணதாசன்
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்திற்கு அருகிலுள்ள பங்காரம் கிராமத்தில் 2008-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டதை உலுக்கும் விதத்தில் எடுத்துச் சொல்லும் வாக்குமூலம் இது. கண்ணதாசனுக்கு மட்டுமல்ல, மோனிஷாவிற்கும், சரண்யாவிற்கும், பிரியங்காவிற்கும் மருத்துவராவதுதான் கனவாக, இலட்சியமாக இருந்தது. கண்ணதாசன் தனது கனவைச் சிதைத்த கல்லூரி நிர்வாகத்தை, அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார். மோனிஷாவும், சரண்யாவும், பிரியங்காவும் அப்போராட்டத்தின் களப்பலியாகிவிட்டார்கள்.
அந்தக் கல்லூரி மாணவர்களின் குறைகளை அரசு நிர்வாகம் காது கொடுத்துக் கேட்டிருந்தால், கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கும் அரசின் கண்காணிப்பு உறுப்புகள் சரியாகச் செயல்பட்டிருந்தால் எனப் பல “இருந்தால்”களை அடுக்கிய பிறகு, அந்த மூன்று மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்காது என்று ஊடகங்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் அப்படிபட்டதொரு கருத்து தொக்கி நிற்கிறது. இக்கல்லூரி விவகாரத்தில் அதிகார வர்க்கம், குறிப்பாக, இந்திய மருத்துவத்திற்கான இயக்குநரகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை உயர்நீதி மன்றம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளாமல் அலட்சியமாகவும், சிவப்பு நாடாத்தனத்துடனும் நடந்து கொண்டுவிட்டதாகக் கருதிக் கொள்வது, நடந்த குற்றத்தில் அவர்களுக்குள்ள பங்கை, குறிப்பாக அக்கல்லூரியை நடத்திவந்த குற்றக்கும்பலின் கூட்டுக் களவாணியாக அதிகார வர்க்கம் இருந்திருப்பதை இருட்டடிப்பு செய்வதாகும்.
எஸ்.வி.எஸ் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகள், அடாவடித்தனங்களை எதிர்த்து துணிந்து போராடிவரும் மாணவர்கள்
ஐயப்பன்
கண்ணதாசன்
கோமளா
“நீ காசு கொடுக்குற, நான் பல்கலைக்கழகத்திடமிருந்து சர்டிபிகேட் வாங்கித் தருகிறேன்” என மாணவர்களிடம் கூறி வந்திருக்கிறார் அக்கல்லூரியின் தாளாளர்களுள் ஒருவரான சுப்பிரமணியன். இது, கல்லூரி என்ற போர்டுக்குப் பின்னே மறைந்துகொண்டு மாணவர்களை வேட்டையாடிய கும்பலின் ஆணவத்தையும் கிரிமினல்தனத்தையும் மட்டும் எடுத்துக்காட்டவில்லை. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் அக்கல்லூரியின் நிர்வாகிகளுக்கும் இடையே இருந்துவந்த கூட்டுக் களவாணித்தனத்தையும் புட்டு வைக்கிறது. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஜான்சி சார்லஸ், சென்னையிலுள்ள அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் மணவாளன், மாலதி என எஸ்.வி.எஸ். கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியத்தோடு மிக நெருக்கமாக இருந்த அதிகாரிகளை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அடையாளம் காட்டுகிறார்கள். இந்த நெருக்கம்தான் சுப்பிரமணியத்திற்கும் அவரது மனைவி வாசுகி சுப்பிரமணியத்திற்கும் கல்லூரி என்ற பெயரில் ஒரு கொத்தடிமைக் கூடத்தை நடத்தும், மாணவர்களை ஏ.டி.எம். மெஷின் போலப் பாவிக்கும் துணிவைத் தந்திருக்கிறது.
“வகுப்பறை, நூலகம், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகள் இல்லாமல் இருப்பது; உரிய தகுதிகொண்ட ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது; அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிப்பது; அரசால் தடை செய்யப்பட்டுள்ள நன்கொடைகளை வசூலிப்பது; இவற்றுக்கு உரிய ரசீது வழங்காமல் இருப்பது; ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொத்தடிமைகளாக நடத்துவது” எனத் தனியார் கல்லூரிகளில் நடக்கும் சட்டவிரோதமான முறைகேடுகளும் கிரிமினல்தனங்களும் அம்பலமாவது புதியதல்ல. ஆனால், நாம் கேள்விப்பட்டவற்றுக்கும் அப்பாற்பட்டு, நினைத்தும் பார்க்கமுடியாத வக்கிரத்தோடு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை ஆட்டிப் படைப்பதையும்; இதற்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் அதிகார வர்க்கம் நடந்து வருவதையும் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் நடந்திருக்கும் சம்பவங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.
* * *
வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்க காடுகளுள் புகுந்து கருப்பின மக்களை வலைவீசிப் பிடித்து அடிமையாக்கியதைப் போல, எஸ்.வி.எஸ். கல்லூரி தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் கலந்தாய்வு நடக்கும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே அப்பாவி மாணவர்களை அமுக்கிப் பிடித்திருக்கிறார். இந்த அப்பாவிகளுள் பெரும்பாலோர் கிராமப்புற தாழ்த்தப்பட்ட மாணவர்கள். இக்கல்லூரியில் சேர்ந்த மூன்றாவது மாதத்திலேயே வெளியேறிவிட்ட சென்னை-வேளச்சேரியைச் சேர்ந்த விநோதினி, “கலந்தாய்வு நடந்த இடத்திலேயே தனது மூலச் சான்றிதழ்களை வாசுகி சுப்பிரமணியன் வாங்கிக் கொண்டதாக”க் கூறுகிறார். இந்த முறைகேடுகள் கலந்தாய்வு நடத்திய அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.
இயற்கை மற்றும் யோகா மருத்துவ படிப்பிற்கான முதலாண்டு-முதல் பருவத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.25,000. எஸ்.வி.எஸ். கல்லூரியைப் பொருத்தவரை வாசுகியின் வாயிலிருந்து வருவதுதான் கட்டணம். விநோதினி மூன்று மாதத்திற்குள்ளாகவே எண்பதாயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருப்பதாகக் கூறுகிறார். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறிவிட்ட கண்ணதாசன் முதலாண்டு முதல் பருவத்திற்கு 1,49,500 ரூபாய் கட்டியிருக்கிறார். விழுப்புரம்-அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பனிடமிருந்து ரூ.1,75,000 பிடுங்கப்பட்டிருக்கிறது. முதல் பருவக் கட்டணமாக ஒவ்வொரு மாணவனிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒரு இலட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
மூன்று மாணவிகளின் மர்மச்சாவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ள தாளாளர் வாசுகி, கல்லூரி முதல்வர் கலாநிதி மற்றும் வாசுகியின் மகள் சுவாகத் வர்மா
முதலாண்டு இரண்டாம் பருவத்திற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், அரசின் இந்த உத்தரவெல்லாம் வாசுகியின் ராஜ்ஜியத்தில் செல்லாக் காசு. இது மட்டுமின்றி, முதலாண்டு படிக்கும்பொழுதே இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணங்களை விருப்பம் போல நிர்ணயித்து வசூலிக்கும் வேட்டையும் நடந்திருக்கிறது. அக்கல்லூரி மூடப்படும் நேரத்தில் மூன்றாமாண்டு படித்து வந்த கார்த்திகேயன் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், அரியர்ஸ் கட்டணம் எல்லாம் சேர்த்து இதுவரை 11 இலட்சம் ரூபாயைக் கட்டி அழுதிருப்பதாகக் கூறுகிறார். இக்கல்லூரியிலிருந்து வெளியேறி விட்ட சென்னையைச் சேர்ந்த தமிழரசி என்ற மாணவியின் தந்தை மணிவண்ணன், தன்னிடமிருந்து மூன்றரை இலட்ச ரூபாய் பிடுங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
ஒரு மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான ஆய்வகம், நூலகம் மட்டுமல்ல, மாணவ-மாணவியருக்கான விடுதி, சாப்பாடு கூடம் என எதுவுமே எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரியில் இருந்ததில்லை. ஆனால், இவையெல்லாம் இருப்பது போல தனித்தனியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரி தற்பொழுது மூன்று மாடிகளைக் கொண்டதாக எழுந்து நிற்கிறது. இது முழுக்க முழுக்க மாணவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் மாடு போல வேலை வாங்கப்பட்ட மாணவர்களது உழைப்பால் உருவானதாகும்.
. கட்டிடத்தின் காங்கிரீட்டுக்குத் தண்ணீர் ஊற்றுவது, செங்கல், மணல் மூட்டைகளை மேல்மாடிக்கு ஏற்றுவது, கலவை போடுவது, இரும்புக் கம்பிகளை இறக்குவது, டாய்லெட் சுத்தம் செய்வது, கள்ளக்குறிச்சிக்குப் போய் வாசுகி குடும்பத்திற்கு டிஃபனும், பாலும், காய்கறிகளும் வாங்கி வருவது, கல்லூரி வளாகத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது – மருத்துவம் படிக்கும் கனவோடு அக்கல்லூரிக்குச் சென்ற ஒவ்வொரு மாணவனும், மாணவியும் கொத்தனராக, சித்தாளாக, எடுபிடியாக மாற்றப்பட்ட துயரக் கதை இது.
மாணவர்களின் நிலையைவிட மாணவிகளின் நிலை இன்னும் பரிதாபகரமாக இருந்திருக்கிறது. வாசுகியின் காலைப் பிடித்துவிடுவது, அவரது புடவை, ஜாக்கெட்டைத் துவைத்துப் போடுவது, அவர் பல் துலக்குவதற்கு பேஸ்ட் எடுத்துக் கொடுப்பது, குளிப்பதற்குத் துண்டு எடுத்துக் கொடுப்பது, பாத்ரூமைச் சுத்தம் செய்வது என அடிமைகளைப் போல கேவலமாக நடத்தப்பட்டுள்ளனர்.
இவையெல்லாம் “கர்ம யோகா” எனக் கூறி, மாணவர்களின் தலையில் சுமத்தியிருக்கிறார், வாசுகி. தங்கள் குழந்தைகள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பெற்றோர்களிடம், “இது குருகுலம்; அப்படித்தான் இருக்கும்” என நியாயப்படுத்தியிருக்கிறார். மாணவர்களின் பணத்தில், மாணவர்களின் உழைப்பில் மகாராணியைப் போல வாழ்க்கை நடத்திய வாசுகி, அம்மாணவர்களைப் பட்டினி போடவும் தயங்கியதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு சாப்பாட்டை ஐந்து பேர் பகிர்ந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இருந்தோம் என்கிறார்கள் மாணவர்கள். “பெண்கள் பட்டினி கிடந்தால் தப்பில்லை” என்று இந்த அநியாயத்திற்கு பண்பாட்டு வியாக்கியானம் தந்திருக்கிறார், வாசுகி.
* * *
“ஒவ்வொரு நாளும் வெள்ளை கோட்டைப் போட்டுக் கொண்டு வகுப்பறையில் படுத்துத் தூங்கினோம்” என்கிறார், கண்ணதாசன். சில நாட்கள் வகுப்பு என்ற அதிசயம் நடந்திருக்கிறது. அப்பொழுது சீனியர் மாணவர்கள்தான் ஆசிரியர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். தேர்வு நெருங்கும் சமயத்தில், எம்.டி. எலெக்ட்ரோபதி மருத்துவம் படித்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் வாசுகி மாணவர்களைக் கூட்டி உட்கார வைத்துப் பாடம் நடத்துவாராம். தேர்வில் என்னென்ன கேள்விகள் வரும், அதைப் பாடப்புத்தகத்தைப் பார்த்து காப்பியடிப்பது எப்படி என்பதுதான் அவர் எடுக்கும் வகுப்பு.
“சேர்ந்துவிட்டோம், லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டிவிட்டோம், பெற்றோர்கள் மனமுடைந்து போவார்கள்” என்பதையெல்லாம் யோசித்து, கல்லூரி நிர்வாகம் இழைத்த கொடுமைகளையெல்லாம் தமது பெற்றோர்களிடம் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் மருகிமருகித் தமக்குள்ளேயே புழுங்கித் தவித்திருக்கிறார்கள், மாணவர்கள். விசயத்தைக் கேள்விப்பட்டு விசாரிக்க வந்த தமிழரசி என்ற மாணவியின் தந்தை மணிவண்ணனைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டவும் தயங்கவில்லை வாசுகி. போலீசு துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் அவருக்கே இந்த நிலை என்றால், கிராமத்துப் பெற்றோர்ளை வாசுகி எப்படியெல்லாம் அச்சுறுத்தியிருப்பார்? மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு கல்லூரிக்கு மாறிவிடலாம் என்று முயன்றால், மீதி இருக்கும் வருடங்களுக்கும் பணத்தைக் கட்டினால்தான் டி.சி.யைத் தருவேன் என்பதுதான் வாசுகியின் பதில்.
இக்கல்லூரி தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு தொடங்கியே கல்லூரியில் நடைபெறும் கட்டணக் கொள்ளை, அடாவடித்தனங்கள் குறித்து அரசிடம் மாணவர்கள் புகார் அளித்து வந்துள்ளனர். பல மாணவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தட்டிக் கேட்டு, வாசுகியோடு நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் தட்டிக் கேட்கத் துணிந்தவர்களை ஒழுக்கங்கெட்டவர்களாக, காமுகர்களாக, கிரிமினல்களாக அவதூறு செய்திருக்கிறார், வாசுகி. “நீ புகார் கொடுத்தா, நான் கவர் கொடுப்பேன்” எனப் பச்சையாகக் கூறி, அம்மாணவர்களைத் திகைத்துப் போக வைத்திருக்கிறார்.
எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆள் பிடிப்பதற்காக கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ஊர்வலம்
தன்னைத் தட்டிக் கேட்ட கண்ணதாசனிடம், “நீ என் கைய புடிச்ச இழுத்ததா போலீசில் புகார் கொடுப்பேன். அதற்கு என் புருசனே சாட்சி சொல்வார்” என பஜாரி போலக் கூறி, அவரை மிரட்டியிருக்கிறார். கட்டிய பணத்திற்கு ரசீது கேட்டுத் தொடர்ந்து போராடி வாங்கிக் கொண்டதற்காக, ஐயப்பன் என்ற மாணவர் மீது தனது கல்லூரியின் பெயரில் போலி ரசீது புத்தகங்களை அச்சடித்து வைத்திருப்பதாக சின்ன சேலம் போலீசில் பொய்புகார் அளித்தார் வாசுகி. பிறகு, இந்தப் புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென்றால், மீதியுள்ள கல்வியாண்டுகளுக்கான கட்டணத்தைக் கட்ட வேண்டும் என அவரது விதவைத் தாயை மிரட்டிப் பணத்தைக் கறந்திருக்கிறார்.
இதைவிடக் கேவலமாக, தன்னை எதிர்க்கும் மாணவர்களை நிர்பந்தப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக அல்லது ஆய்வகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக ஒரு மன்னிப்பு கடிதத்தை அவர்கள் கைப்பட எழுதி வாங்கி வைத்துக்கொண்டு, அதனைக் காட்டியே மாணவர்களை அடக்கியிருக்கிறார். இதற்கு ஒத்துழைக்காத மாணவர்களை போலீசைக் காட்டியும், டி.சி.யில் கைவைத்து விடுவேன் என்று மிரட்டியும்; மாணவிகளிடம், உனது நடத்தையை அசிங்கப்படுத்திவிடுவேன் எனப் பயமுறுத்தியும் மாணவர்களின் எதிர்ப்பை மழுங்கடித்திருக்கிறார். இதனால்தான் இறந்துபோன மாணவிகள் தங்களது ‘தற்கொலை’ கடிதத்தில், “எங்களை கேரக்டர் லெஸ் என்று மேடம் சொன்னால் நம்பாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கும் மேலாக, தன்னை எதிர்க்கும் மாணவர்களை அடக்கி வைக்க தனது கணவரின் தாழ்த்தப்பட்ட சாதி பின்புலத்தையும், ரவுடிகளையும் பயன்படுத்தியிருக்கிறார், வாசுகி. “தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கல்லூரியை அழிக்கப் பார்க்கிறார்கள்” எனச் சாதியை முன்னிறுத்தி, தனது குற்றங்களை மறைக்க முயன்றிருக்கிறார். ஆதிதிராவிடர் புரட்சிக் கழகம் என்ற பெயர்ப்பலகை தலித் அமைப்பைச் சேர்ந்த பெரு.வெங்கடேசன், தலித் ரகு உள்ளிட்ட கிரிமினல்களைக் கொண்டு மாணவர்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டதற்கு ஐயப்பனும், கண்ணதாசனும் சாட்சியங்களாக உள்ளனர். தலித் சாதி பின்புலத்தை வைத்துக்கொண்டு வாசுகியும் சுப்பிரமணியும் இழைத்த அநீதிகளை எந்தவொரு தலித் இயக்கமும் ஒருமுறைகூடத் தட்டிக் கேட்கவில்லை என்பது விசாரணைக்குரிய ஒன்று.
இக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுள் ஆகப் பெரும்பாலோர் மிகமிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணதாசன் ஆடு,மாடுகளை விற்றுத்தான் கட்டணம் கட்டியதாகக் கூறுகிறார். ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஐயப்பன் கடன் வாங்கி கட்டணங்களைக் கட்டியிருக்கிறார். இறந்துபோன பிரியங்காவின் விதவைத் தாய் ஜெயந்தி கூலி விவசாயி; மோனிஷாவின் தந்தை மின்சார வாரியத்தில் ஒப்பந்தக் கூலியாகப் பணியாற்றும் லைன்மேன்; சரண்யாவின் தந்தை விவசாயி. அதிகார வர்க்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டு வந்த வாசுகியைத் தனியாளாக எதிர்த்து நிற்க முடியாத நிலையில், வகுப்புகளே நடக்காத கல்லூரியில் பெயருக்குப் படிப்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையில் பல மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் சென்றுவிட்டனர்.
“உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சினை. படிக்காமல், விசயம் தெரியாமல் மருத்துவம் பார்ப்பது தவறானது” என்ற அறவுணர்வின் அடிப்படையில் படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறியதாகக் கூறும் கண்ணதாசன், “ 2008 முதல் 2012 வரை இந்தக் கல்லூரியில் சேர்ந்த 82 மாணவர்களுள் 76 மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தி வெளியேறி விட்டதாக”க் கூறுகிறார். 2008-இல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இருந்து இதுவரை ஒருவர்கூட பதிவுபெற்ற இயற்கை மருத்துவராக வெளிவந்தது இல்லை. இந்த இழிநிலையை மருத்துவப் பல்கலைக்கழகமும், இந்திய மருத்துவ இயக்குநரகமும் கண்டு கொள்ளவுமில்லை.
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கட்டவிழ்த்துவிட்ட தேசத்துரோக நாடகம் அம்பலப்பட்டு சந்தி சிரித்திருக்கிறது. இவர்களை மேலும் தனிமைப்படுத்தும் விதத்தில் நாடெங்கிலும் ஜனநாயக சக்திகள், அறிவுத்துறையினர், பேராசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை விடுதலை செய்யக்கோரியும் 22-02-2016 அன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.
அதற்காக அனுமதி கோரி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு கடிதம் அளித்தனர். ஆனால் ஐ.ஐ.டி டீன் கடைசி நேரம் வரை அ.பெ.ப.வ அமைப்பினரை போராட அனுமதிக்காமல் இழுத்தடித்தார்.
மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் போராட்டத்தை நடத்த அனுமதிக்க இயலாது என்றுமுதலில் சொல்லப்பட்டது. ஆனால் ஒழுங்குவிதிகளை மாணவர்களின் மீது திணிப்பதற்காக இதே தேர்வு காலத்தில் ஐ.ஐ.டி நிர்வாகம் கடந்த வாரங்களில் மட்டும் இரு கூட்டங்களை நடத்தியிருக்கிறது என்பதை மாணவர்களே எடுத்துக்காட்டி ஐ.ஐ.டி நிர்வாகத்தின் நரித்தனத்தை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர்.
சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் தற்பொழுது நாட்டில் தொடுத்துவரும் பாசிசபயங்கரவாதம் தான் தங்களது தேர்வுக்கும் வாழ்வுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மாணவர்கள் டீன் பயன்படுத்திய அதே அஸ்திரத்தை அப்படியே ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக திருப்பிவிடும் பொருட்டு அ.பெ.ப.வ நடத்தவிருந்த போராட்டத்தில் திரளாக கலந்துகொண்டனர்.
ஆனால் எப்படியாவது போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்பதில் குறியாய் இருந்த ஐ.ஐ.டி டீன், போராட்ட நாளை தள்ளிவைத்து போராட்ட நிபந்தனைகள் என்பதன் பெயரில் மோடி கும்பலின் அடக்குமுறை அட்டூழியங்களை மாணவர் மீது திணித்தார்.
இதன்படி துண்டுபிரசுரம் கொடுக்கக் கூடாது, முழக்கமிடக் கூடாது, பதாகை ஏந்தக் கூடாது, பேசி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது, பத்திரிக்கையாளர்களை அழைக்கக் கூடாது, என தான் ஒரு மோடியின் கைதேர்ந்த அடியாள் என்பதை வெளிக்காட்டிக்கொண்டார்.
இதனிடையே அ.பெ.ப.வ போராட்டம் நடத்தினால், கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் காலிகள் இணையத்தில் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். மிரட்டியபடியே 30-க்கும் மேற்பட்ட இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடைபெறும் ஐ.ஐ.டி விடுதி வளாக புல்வெளியில் சூழ்ந்திருந்தனர். இவர்கள் மாணவர் அமைப்பு சார்பாக டீனிடம் எந்தவித முன் அனுமதியோ, கடிதமோ எதுவும் பெறவில்லை. டில்லியில் வக்கீல்களின் போர்வையில் மூன்று மணிநேரம் கண்ணையா குமாரைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்அனுமதிக்கடிதமா பெற்றிருந்தது?
காவிக்கும்பல் பாரத் மாதா கி ஜே! வந்தே மாதரம்! என்று அனுமதியின்றி கூட்டம் நடத்தியது, கோசம் போட்டது மட்டுமில்லாமல் போராட வந்த மாணவர்களை தாக்குவதாக கூட்டத்திற்குள்ளேயே பேசியது. அ.பெ.ப.வ அமைப்பினர் பகத்சிங் பாடலை பாடமுயன்ற பொழுது, காவல் துறை, ஐ.ஐ.டி செக்க்யூரிட்டி போலீசு, ஐ.ஐ.டி நிர்வாகம் அனுப்பி வைத்த பேராசிரியர் அனைவரும் பாடலை பாடவிடாமல் தடுத்தனர். ஆனால் மறுபுறத்திலோ வந்தேமாதரம் கூச்சலை அனுமதித்து எந்த கேள்வியும் எழுப்பாமல் இருந்தது ஐ.ஐ.டி நிர்வாகம். இந்தக் கூச்சல் மட்டும் தேர்வு எழுதும் மாணவர்களை இடையூறு செய்யாதா? இல்லை பகத்சிங் பாடல் மட்டும் மாணவர்களை இடையூறு செய்யுமா?
போராட்டத்திற்கு வந்திருந்த மாணவர்கள் அந்த இடத்திலேயே உன் ஒழுங்குமுறை விதிகளின் யோக்கியம் ஏன் காவிக்கும்பலுக்கு மட்டும் பொருந்தாது என கேள்வி எழுப்பினர். மடி அறுத்து பால் குடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் கேள்வி முறைகளுக்கெல்லாம் உடன்பட்டவர்களா என்ன?
சான்றாக ஜே.என்.யு விவகாரத்தில் ஐ.ஐ.டியின் நிலைப்பாடு என்னவென்று ஐ.ஐ.டி இயக்குநரிடம் இந்து, எக்ஸ்பிரஸ் கேள்வியை முன்வைத்த பொழுதே அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் கருத்து கூற முடியாதென்றும் பதிலளித்த இதே இயக்குநர் தான் ஒவ்வொரு வருடமும் ஆர்.எஸ்.எஸ்ஸின் விவேகானந்தர் படிப்பு வட்டத்தில் தொடக்கவுரை ஆற்றுகிறார் என்பது உலகறிந்த உண்மை.
மோடியின் கொள்கைகளையும் இந்துத்துவத்தையும் விமர்சித்ததற்காகத்தான் அ.பெ.ப.வ சென்றவருடம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தேசத்துரோகியாக முத்திரை குத்தப்பட்டு ஐ.ஐ.டி அவாள் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டது. அப்பொழுது பிஜேபி ஹெச்.ராஜாவின் தலையீடு இருந்ததும் விவேகானந்தா வாசகர் வட்டம் மாணவர் அமைப்பாக காட்டும் விதத்தில் லோகோ மாற்றப்பட்டதும் அம்பலமானது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா முசாபர் நகர் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்தை அம்பலப்படுத்தியதற்காக ஏ.பி.பி.வி குண்டாந்தடிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கினார். சென்ற மாதம் அ.பெ.ப.வ அமைப்பினர் ரோகித்தின் விசயத்தில் இந்துத்துவ பாசிசத்தின் நேரடி தலையீட்டை வெளிக்கொண்டு வரும் விதத்தில் ஐ.ஐ.டிக்குள் வீச்சான போராட்டத்தை நடத்தினர். அப்பொழுதும் ஹெச்.ராஜா போன்ற பி.ஜே.பி கும்பல்கள் நேரடியாக தலையீட்டு அ.பெ.ப.வ அமைப்பினர் ரவுடிக் கும்பல்கள் என்று திட்டமிட்டு பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தனர். ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களும் வெண்முரசு எழுதும் வேலையையும் ஒதுக்கிவைத்துவிட்டு அம்பேத்கர் பெரியார் ஒன்றாக இருக்க முடியாது என்று ஹெச். ராஜாவின் கருத்தையே வலியுறுத்தியிருந்தார். ஐ.ஐ.டிக்குள்ளேயே காவிக்கும்பலும், ரோகித் வெமுலாவிற்கான போராட்டத்தில் அ.பெ.ப.வ பார்ப்பன பாசிசம் பற்றி பேசுகின்றனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர். இதற்கெல்லாம் ஒழுங்கு விதிமுறை என்று அடாவடி செய்த ஐ.ஐ.டி நிர்வாகம் இப்பொழுதும் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக போராடுவதற்கும் அ.பெ.ப.வ மாணவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு மறுபுறத்தில் காவிக்கும்பலை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தவகையில் 22-02-2016 அன்று அ.பெ.ப.வ அமைப்பினர் மீது தாக்குதலை நடத்துவோம் என்று அனுமதியின்றி கூட்டம் நடத்திய காவிக்கும்பலின் மீது ஐ.ஐ.டி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் ஒழுங்குமுறை விதிகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தளர்த்தி, கண்டும் காணாமல் இருப்பதையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
பாட்டியாலா நீதிமன்றத்தில் சவுகான் தலைமையில் கண்ணையா குமார் தாக்கப்பட்ட சம்பவமும் 22-02-2016 அன்று ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு தெரிந்தே அ.பெ.ப.வ போராட்டத்திற்கு எதிராக காவிக்கும்பல் நடத்திய ரவுடித்தனமும் ஒன்றே என்பதையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த வகையில் ஒட்டுமொத்த எபிசோடில் ஐ.ஐ.டி நிர்வாகம், காவிக்கும்பல், பி.ஜே.பி ஹெச். ராஜா ஆகியோரில் யார் ரவுடி என்பதை எவர் ஒருவரும் எளிதில் இனம் காணமுடியும்.
பாசிச சக்திகள் தனிமைப்பட்டு அம்பலப்பட்டு நிற்கும் நேரத்தில், இனி வெறும் அவதூறுகளும் போலி மோதல்களும் என்கவுண்டர்களும் நடைபெற்றால் ரவுடிகள் எங்கு எப்படி உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு பாசிசத்தை வேரறுக்க முன்வரவேண்டும்.
2. கரூர்
தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் திரு கண்ணையா குமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும், பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திலேயே மாணவர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்யக் கோரியும் 19-02-2015 அன்று காலை 10 மணி அளவில் கரூர் தந்தி அலுவலகம் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் தோழர் இரா.பாக்கியராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள் இரவு காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால், காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று காவல்துறையிலிருந்து தகவல் சொல்லப்பட்டது. அரசு ஊழியர் போராட்டம் நடத்த இருப்பதால் காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளது, அதனால் 4 நாட்கள் கழித்து நடத்திக் கொள்ளுங்கள் என்று காரணம் சொன்னார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்] ஆனால், ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்பு ஆர்ப்பாட்ட இடத்தில் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. தோழர்கள் திரண்டு முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் முழக்கமிட்டவாறு கைதாகினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்
3. திண்டிவனம்
4. கோவில்பட்டி
JNU மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையா குமாரை விடுதலைசெய்!
மாணவர்கள் , வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய BJP, ABVP குண்டர்களை கைதுசெய்!
23-02-2016 அன்று காலை 10.30 மணியளவில அரசு அலுவலக வளாகம் அருகில் கோவில்பட்டி பு.மா.இ.மு தோழர்கள் ஆர்ப்பாட்டம்
ரோஹித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தள்ளிய பின், இப்போது கண்ணையா குமாரை பொய்க்குற்றச்சாட்டின் கீழ் தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்து சிறையில் தள்ளியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. முற்போக்கு, ஜனநாயக சிந்தனையுள்ளவர்களாக மாணவர்கள் இருக்கக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளின் நோக்கமாக உள்ளது.
நாடு முழுக்க, உலகம் முழுக்க ஜனநாயகவாதிகளும், மாணவர்களும் கண்ணையா குமாரின் கைதைக் கண்டித்தும், JNU மீதான மத்திய பி.ஜே.பி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாகத்தான் கோவில்பட்டி பு.மா.இ.மு. தோழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி கொடுத்த போலீசு, பின்னர் அன்று இரவே அனுமதியை ரத்து செய்து ஒரு கடிதம் அனுப்பியது. கடிதத்தில், கண்ணையா குமாரின் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று மிகவும் ‘அறிவுபூர்வமாக’ விளக்கம் அளித்திருந்தது.
அனுமதி இல்லாவிட்டாலும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது, நமது கருத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்வது என்று முடிவெடுத்து, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்போடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் போலீசு கைது செய்யும் என்ற நிலைமையிலும் அச்சமின்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக முழக்கங்களை எழுப்பினர். சுற்றியிருந்த மக்களிடம் நூற்றுக்கணக்கான பிரசுரங்களை கொடுத்து செயலாற்றினர்.
முதலில் ஆர்ப்பாட்டத்தை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று ஆணையிட்ட போலீசு, தோழர்கள் ‘கைது செய்தால் கைது செய்யுங்கள், முழக்கமிட்டு, பேட்டியளித்த பின்தான் ஆர்ப்பாட்டத்தை முடிப்போம் என்று கூறிய பிறகு, வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்த்தது.
பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள், தட்டிகள், என நூற்றுக்கணக்கான மக்களிடத்தில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிச கும்பலின் உண்மை முகத்தை வெளிக்கொணர்வதாக ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவில்பட்டி
5. விழுப்புரம்
சென்னை IIT, ஐதராபாத் பல்கலை கழகத்தை தொடர்ந்து டெல்லி JNU வை ஆக்கிரமிக்க துடிக்கும் RSS ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்
கடந்த 12-ம் தேதி ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமார் தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் பார்ப்பன மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய கைதை கண்டித்து உலகம் முழுவதும் 400 பல்கலை கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 166 க்கும் மேற்பட்ட பல்கலை கழக பேராசிரியர்கள் , முற்போக்கு சிந்தனையாளர்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து கண்ணையா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 22-02-2016 திங்கள் அன்று மாலை 4.00 மணிக்கு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் மணிமேகலை
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மணிமேகலை தலைமை தாங்கி, “JNU மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது என்பது மாணவர்களை அச்சுறுத்துவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான். குறிப்பாக பார்ப்பன மோடி அரசை விமர்சித்து தொடர்ந்து JNU மாணவர்கள் போராடி வருகிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பன கும்பல் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் திட்டமிட்டு ABVP காலிகள் கலவரம் செய்துள்ளனர். கண்ணையா குமார் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றபோதும் கூட கண்ணையா குமாரை விடுதலை செய்ய மறுக்கிறது என்றால் இது மாணவர்களை அச்சுறுத்துவதற்க்கான நடவடிக்கை தான்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
தோழர் திலீபன்
அடுத்ததாக கண்டன உரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் திலீபன், “சமூக அக்கறையோடு போராடிய JNU மாணவர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மாபெரும் தாக்குதல். மார்டின் லூதர் கிங் கூறியது போல “ எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விட , நல்லவர்களின் மவுனம் தான் மரணத்தை ஏற்படுத்துகிறது.அதுபோல் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியாக, மத ரீதியாக பிளவை ஏற்படுத்தி அவர்களின் கனவான இந்து ராஷ்டிரத்தை நிறுவிக்கொள்ள துடிக்கிறார்கள். இந்த அபாயத்தை எதிர்த்து போராடாமல் இருப்பது தான் நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதித்தனர். ஐதராபாத் பல்கலை கழக மாணவர் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளினர்.தற்பொழுது டெல்லி ஜே.என்.யு மாணவர்களை ஒடுக்குகிறது. இந்த பார்ப்பன பாசிச கும்பலை விரட்டியடிக்காமல் உழைக்கும் மக்களிடம் ஒற்றுமையை நிலைநாட்ட முடியாது” என்பதை உணர்த்தி பேசினார்.
தோழர் ஞானவேல்
இறுதியாக கண்டன உரையாற்றிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு செயலர் தோழர் ஞானவேல், ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்வமாக வந்து கலந்து கொண்ட பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி கலைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சந்துருவை பாப்பானின் ஏவல் படை என்பதை அம்பலப்படுத்தி பேசிய பின்பு, “டெல்லி ஜே.என்.யு என்பது மற்ற பல்கலை கழகங்களை போல் பட்டம் தயாரித்து வழங்கும் தொழிற்சாலை அல்ல. முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவுத்துறையினரின் பிறப்பிடம். இந்த கேடுகெட்ட அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடுபவர்கள் தான் ஜே.என்.யு மாணவர்கள். அங்கு பணியாற்றக்கூடிய பேராசிரியர்களும் தொடர்ச்சியாக உழைக்கும் மக்களுக்காக போராடக்கூடியவர்கள் தான். ஆகவே தான் ஜே.என்.யு மற்ற எல்லா பல்கலை கழகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. இதனை சகித்துக்கொள்ள முடியாத பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு நிகழ்த்தியது தான் கண்ணையா குமார் கைது. மேலும் ஐதராபாத் பல்கலை கழக மாணவர் ரோஹித் வேமுலாவின் தற்கொலை, சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பார்ப்பன கும்பலின் சத்திதனங்களை அம்பலப்படுத்தினார். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் RSS பார்ப்பன கும்பலை நியமித்து வருகிறது மோடி அரசு. கல்வி நிலையங்களை காவிக்கூடாரமாக்க துடிக்கிறது. அதனால் தான் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகிறது RSS பார்ப்பன கும்பல். நெருங்கி வரும் இந்த மாபெரும் அபாயத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அதற்கு ஓட்டுக்கட்சிகளை நம்பி பயனில்லை. மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வதே தீர்வு” என்பதை விளக்கி தனது உரையை முடித்துக்கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிராக, இச்சட்டபூர்வ ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையில் அரியானா அரசு கொண்டுவந்துள்ள பஞ்சாயத்துத் தேர்தல் சட்டத் திருத்தத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் அங்கீகரித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இப்புதிய சட்டத் திருத்தத்தின்படி, பொதுத் தொகுதிகளில் கிராமப் பஞ்சாயத்துகளின் தலைவர், துணைத் தலைவர் அல்லது உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தனித் தொகுதி எனில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 8ஆம் வகுப்பு வரை ஆணும் பெண்ணும் படித்திருக்க வேண்டும். பஞ்சாயத்து உறுப்பினர் தகுதிக்கு, பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்டவராக இருந்தால் 5ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இத்தகைய தகுதி இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது.
இது தவிர, விவசாயக் கூட்டுறவு சங்கம், ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் கடன் பாக்கி செலுத்தாதவர்கள், மின்சாரக் கட்டணம் கட்டாமல் பாக்கி வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிடும் அனைவரும் தங்களது வீடுகளில் செயல்படும் கழிப்பறையைக் கட்டியிருக்க வேண்டும். இல்லையேல், தேர்தலில் நிற்கும் தகுதியை அவர்கள் இழக்க நேரிடும்.
1. “இந்தப் பொதுக் கழிப்பறையைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம், எனது வீட்டில் கழிப்பறை இல்லாத்தால், பஞ்சாயத்துத் தேர்தலில் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று வேதனையுடன் கூறும் அரியானாவின் லாஹ்லி கிராமத்தைச் சேர்ந்த கம்லீஷ் என்ற கூலித் தொழிலாளி.
அரியானாவின் 2.53கோடி மக்கள் தொலையில் 58 சதவீதம் பேர் (ஏறத்தாழ ஒன்றரை கோடி பேர்) வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இவர்களில் 57 சத வீதம் பேர்தான் (ஏறத்தாழ 84லட்சம் பேர்) இப்புதிய சட்டப்படி தேர்தலில் நிற்கத் தகுதியுடைய குறைந்தபட்சக் கல்வி பெற்றவர்கள். எஞ்சிய 66 லட்சம் பேர் தேர்தலில் போட்டியிட முடியாது. தாழ்த்தப்பட்டோரில் 68 சதவீத பெண்களும் 41 சதவீத ஆண்களும்தேர்தலில் நிற்க முடியாது. மேலும், அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த பெண்களில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட முடியாது.
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள தால், பஞ்சாயத்து தேர்தல்கள் என்பது வேர்மட்ட ஜனநாயகம் என்று ஆட்சியாளர்களாலும் ஊடகங்களாலும் பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்புதிய சட்டத் திருத்தத்தின் விளைவாக, பெரும்பான்மையான பெண்களும் ஏழை களும் தாழ்த்தப்பட்டோரும் பஞ்சாயத்துத் தேர்தலில்போட்டியிடவே முடியாதபடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ பாதிக்கும் மேலான இந்தியாவின் கிராமப்புற மக்கள் கல்வியறிவற்றவர்களாக அல்லது அரைகுறை கல்வியறிவு கொண்டவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் குடிசைகளில் வாழும் நிலமற்ற கூலி ஏழைகளாக உள்ளனர். ஊரக மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன் பாக்கி இல்லாதவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற உத்தரவின் மூலம், இந்த ஏழை, நடுத்தர விவசாயிகளின் ஜனநாயக உரிமையை ஒரேயொரு வீச்சில் தட்டிப் பறிக்கத் துணிகிறது, உச்சநீதிமன்றம்.
நல்லது கெட்டது, சரி தவறுகளைப் புரிந்து கொள்ள கல்வியறிவு அவசியம் என்ற மேட்டுக்குடி வாதத்தை முன்வைக்கிறார்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள். கல்வி யறிவற்றவர்கள் பணத்துக்கு விலை போகிறார்கள், எவ்வித அறநெறியுமின்றி ஊழல் மோசடி, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்; படிப்பறிவில்லாத இந்த ஏழைகளால்தான் ஜனநாயகம் சீரழிகிறது; கழிப்பறைகூடக் கட்டிக் கொள்ளாத நாகரிகமில்லாத இவர்கள்தான் நாட்டை அசிங்கப்படுத்துகிறார்கள் என்ற ஆதிக்க சாதி ஆளும் வர்க்கத் திமிருடன் தீர்ப்பளிக்கின்றனர்.
“கல்வியறிவு இல்லாத ஏழைகளாகிய நாங்கள் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாத போது, எங்களிடம் ஏன் ஓட்டுக்களை மட்டும் கேட்கிறார்கள்” என்று சாடும் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஹூசைனி.
ஆனால், உண்மையோ இதற்கு மாறானதாக இருக்கிறது. மெத்தப் படித்த பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் பெருமளவில் ஊழல், மோசடி முதலான கிரி மினல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பதை நாளும் அரங்கேறிவரும் ஊழல் கொள்ளைகள் நிரூபித்துக் காட்டுகின்றன. யோக்கிய சிகாமணிகளாக உபதேசம் செய்யும் நீதிபதிகளில் பலர் இலஞ்சத்தில் மூழ்கிக் குளிக்கும் பேர்வழிகள் என்பது ஊரறிந்த உண்மை.
ஆனால், பஞ்சாயத்து உறுப்பினராக உள்ள படிப்பறிவில்லாத ஏழைகள்தான், கிராமப்புற விளைநிலங்களைப் பறிக்கும் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து தங்கள் பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றி மக்களைத் திரட்டிப் போராடுகின்றனர். கடந்த 2005இல் பெண்களுக்கான தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்ட பெரோஸ்பூர் ஜிர்கா வட்டத்திலுள்ள நிம்கேடா கிராமப் பஞ்சாயத்தில் 7 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் சூதாட்டம், சாராயம், பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொல்லுதல் முதலான சமூகக் கொடுமைகளை இக்கிராமத்தில் ஒழித்து முன்னுதாரமிக்க பஞ்சாயத்தாக மாற்றிக் காட்டினர். ஆனால், அந்த 7 பெண்களும் படிப்பறிவற்றவர்கள்.
இப்புதிய சட்டத்தின் விளைவாக, பெண்களுக்கான தனித்தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ள பல கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தலில் நிறுத்த தகுதியான பெண்கள் யாருமே இல்லை. அரியானாவின் பல கிராமப் பஞ்சாயத்துகளில் தொடக்கப்பள்ளிகூட இல்லாத நிலையில், படிப்பறிவுக்கு எங்கே போவது? லாரி மூலம் காசு கொடுத்து குடிநீரைப் பெற வேண்டிய அவலத்தில் உள்ள கிராம மக்கள்,செப்டிக் டேங்க் கொண்ட கழிப்பறை கட்டுவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் தண்ணீருக்கு எங்கே போவது?
இன்றைய அரசியலமைப்பு முறை தோல்வியடைந்து விட்டதையே நாட்டு மக்களின் தீராத வறுமையும், கல்வியறிவின்மையும், வீடுகளில் கழிப்பறை இல்லாமையும் மெய்ப்பித்துக் காட்டுகிறது. ஆனால், ஏழையாகவும், படிப்பறிவற்ற வராகவும், கடனாளியாக இருப்பதற்கும் காரணம் நீதான் என்று பழிபோட்டு, ஏழைகளைக் குற்றவாளியாக்கித் தண்டிக்கும் புதிய மனுநீதியைத்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ஒலிபெருக்கி கூடாது, சுவரொட்டிசுவரெழுத்து கூடாது, ஊர்வலம் கூடாது என்று மக்களுக்கு நெருக்கமான, சாதாரண தேர்தல் பிரச்சார வடிங்களுக்குக்கூடத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து, மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றி வருகிறது. இதன் மூலம் தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுக்குமளவிற்குப் பணம் வைத்திருக்கும் கட்சியும், கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளி, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தைப் பணநாயக மாக்கிவிட்டது. இதன் வழியாக, ஊரை அடித்து உலையில் போட்டவனும், ஊழல், கிரிமினல் பேர் வழிகளும் தேர்தலில் நிற்பதற்கும், அமைச்சர்களாவதற்கும் வாசலைத் திறந்துவைத்து விட்டு, வீட்டில் கக்கூசு கட்ட முடியாத ஏழைகள் தேர்தலில் நிற்க தடை விதிப்பதன் மூலம் இப்பணநாயகத்தைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறது, உச்சநீதிமன்றம். அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள 18 வயதான அனைத்து குடிமக்களும் வாக்களிக்கவும், தேர்தலில் நிற்கவுமான சட்டபூர்வ, சமத்துவ உரிமையை மயிரளவுக்குக்கூட மதிக்காமலும், அதனை ரத்து செய்யும் விதத்திலும் அளிக்கப்பட்டிருக்கும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு, சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அரசியல் சாசனத்தைக் காப்பதாக உறுதியேற்றுப் பதவியில் அமர்ந்துள்ள நீதிபதிகள், அதற்கு நேர்எதிராகச் செயல்பட்டுள்ளனர்.
இன்றைய அரசமைப்பு சட்டரீதியாகவே மேட்டுக்குடிமேல் சாதியினருக்கான நாயகமாக, பணநாயகமாக மாறி நிற்பதையே இச்சட்டத் திருத்தமும் உச்சநீதி மன்றத் தீர்ப்பும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.