ஐ.ஐ.டி நிர்வாகம் தனது ஆளும் வர்க்க நரித்தந்திரத்தை பயன்படுத்தி, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததில் தனது குற்றத்தை மறைக்க முயற்சிக்கிறது. அது தொடர்பாக APSC தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலைத்தகவலை தமிழில் மொழிபெயர்த்து தருகிறோம்.
– வினவு
ஐ.ஐ.டி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, 02-06-2015 கண்டன போராட்டத்துக்குப் பிறகு APSC உறுப்பினர்கள் பொறுப்பு இயக்குனரை சந்தித்தனர்.
ஐ.ஐ.டி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நேற்று (02-06-2015) கண்டன போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் பொறுப்பு இயக்குனரை சந்தித்தோம். பொறுப்பு இயக்குனர், தனது அதிகார வரம்புக்குள் வராத “மனித வளத்துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்ற கோரிக்கையைத் தவிர எங்களது பிற கோரிக்கைகளை வாய் வார்த்தையாக ஏற்றுக் கொண்டார். ஆனால், “இந்த விவகாரத்தை அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்தான் மாணவர்கள் அவையின் முன்பு எடுத்துச் செல்ல வேண்டும், நிர்வாகம் அதைச் செய்யாது” என்று கூறினார். இந்த நிபந்தனையை நாங்கள் நிராகரிக்கிறோம். இது தொடர்பாக பொறுப்பு இயக்குனருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எங்களது நிலைப்பாடு விளக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை கீழே தருகிறோம்.
————————————————————————–
அனுப்புநர்
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – மெட்ராஸ்,
சென்னை – 600 036
பெறுநர்
இயக்குனர் (பொறுப்பு)
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – மெட்ராஸ்,
சென்னை – 600 036
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : நமது சந்திப்பின் முடிவு குறித்து APSC-ன் நிலைப்பாடு.
உங்கள் கோரிக்கைக்கிணங்க, 02-06-2015 பிற்பகல், எங்கள் குழுவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் உங்களை உங்கள் அலுவலகத்தில் சந்தித்தோம்; எங்களது கோரிக்கை பட்டியலை உங்களிடம் அளித்தோம். அந்த சந்திப்பின் போது, மனித வளத்துறை அமைச்சகம் உங்கள் அதிகார வரம்புக்குள் வருவதில்லை என்பதால் அது தொடர்பான கோரிக்கையைத் தவிர எங்களது மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக கூறினீர்கள்.
ஆனால், இதை ஒரு கடிதமாக எழுதித் தருவதற்கு பதிலாக, ‘எங்களது கோரிக்கைகளை நாங்கள் மாணவர்கள் அவையின் முன்பு முன்வைத்த பிறகுதான் அவற்றை ஏற்றுக் கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று கூறினீர்கள். APSC இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக எழுதித் தரப்பட வேண்டும்.
இது தொடர்பாக APSC குழு விவாதித்து செய்த முடிவு என்னவென்றால், நிர்வாகம்தான் மாணவர்கள் அவையின் முன்பு தேவையான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். APSC மாணவர்கள் அவையின் முன் வாதிடுவது பொருத்தமற்றதும், தொடர்பற்றதுமாகும் என்று கருதுகிறோம்.
கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது குறித்து APSC-ம் மாணவர் அவையும் இணைந்து முடிவெடுக்கும் என்று கூறுவது ஐ.ஐ.டி-மெட்ராஸ் நிர்வாகம் இந்த பிரச்சனையில் தனது பொறுப்பை கைகழுவுவதாகும். அங்கீகார ரத்து விவகாரம் மாணவர் அவைக்கும் APSC-க்கும் இடையிலானது இல்லை, மாணவர்கள் விவகாரங்களுக்கான முதல்வர் (ஐ.ஐ.டி-எம் நிர்வாகம்)-க்கும் APSC-க்கும் இடையேயானதுதான் என்பதால் நாங்கள் மாணவர் அவையை சந்திக்க மறுக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறோம்.
இந்த விவகாரம் பேசித் தீர்க்கப் படாத நிலையில், மாணவர் விவகாரங்களுக்கான குழு (SAC) 31-05-2015 அன்று மாணவர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்த ஆரம்பித்தது. அதில் “மாணவர் அவை கூடுவதற்கு முன்பாகவே APSC அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டுமா” என்பன போன்ற கேளவிகள் இடம் பெற்றிருந்தன.
மாணவர் விவகாரங்களுக்கான குழுவின் இந்தச் செயல் பிரச்சனை என்ற பனிமலையின் ஒரு சிறு விளிம்பை காட்டுகிறது. அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை என்று மாணவர் அமைப்புகளை பிரிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், நன்னடத்தை விதிகள் என்று ஐ.ஐ.டி-எம் நிர்வாகமும் மாணவர் விவாகரக் குழுவும் முன்வைக்கும், இப்போது நடைமுறையில் இருக்கும் மாணவர் அமைப்புகளை வகை பிரித்தல், வர்ணாசிரம கட்டமைப்பின் நவீன பதிப்புதான். சுதந்திரமான மாணவர் அமைப்புகளை இன்ஸ்டிட்யூட்டால் அங்கீகரிக்கப்பட்டது, அங்கீகரிக்கப்படாதது என்று வகை பிரிப்பது, பொது நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் நிற்கும் மாணவர் அமைப்புகளுக்கு வசதிகளையும் (அரங்கு, செயல்படுவதற்கான இடம், இணைய வசதி, நிதி முதலியன) உரிமைகளையும் மறுப்பதற்கான ஒரு வழி ஆகும். இதன் மூலம், “அங்கீகரிக்கப்படாத” மாணவர் அமைப்பை நீங்கள் “சூத்திரர்”களின் நிலைக்கு தாழ்த்துகிறீர்கள்.
மேலும், நாங்கள் புதிதாக எதையும் கோரவில்லை. “பிரிவு 19a-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதிகளை ரத்து செய்”, என்ற கோரிக்கையையும், “அனைத்து சுதந்திரமான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி” (அதாவது, மாணவர் அமைப்புகளில் “அங்கீகரிக்கப்படாதவை”, “அங்கீகரிக்கப்பட்டவை” என்ற எந்த வகை பிரித்தலும் இருக்கக் கூடாது) என்ற கோரிக்கையையும் தவிர, பிற கோரிக்கைகளுக்கும் மாணவர் அவைக்கும் எந்த தொடர்பும் இல்லை. “அனைத்து படிப்பு வட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வசதிகள்” என்ற கோரிக்கையும் புதிதானதல்ல, ஏனெனில் விவேகானந்தா படிப்பு வட்டம் நாங்கள் கோரும் வசதிகளை ஏற்கனவே அனுபவித்து வருகிறது.
APSC-க்கும், ஊடகங்களுக்கும் நிர்வாகம் கொடுத்த திரிக்கப்பட்ட அறிக்கைகள், மாணவர் விவகாரங்களுக்கான குழுவின் சட்டவிரோத நடத்தை இவற்றின் காரணமாக உங்கள் வாய்வழி உறுதிமொழிகளின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். எனவே, APSC அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெறுவது தொடர்பாகவும், “பிரிவு 19a-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதியை ரத்து செய்தல்” “அனைத்து சுதந்திரமான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி” (அதாவது, மாணவர் அமைப்புகளில் “அங்கீகரிக்கப்படாதவை”, “அங்கீகரிக்கப்பட்டவை” என்ற எந்த வகை பிரித்தலும் இருக்கக் கூடாது) ஆகிய கோரிக்கைகளை மாணவர் அவையில் நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஐ.ஐ.டி.எம்-ன் எழுத்து பூர்வமான அதிகார பூர்வ அறிக்கையை நாங்கள் கோருகிறோம்.
வணக்கத்துடன்,
APSC குழு
APSC-க்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முழக்கங்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
போராடிய தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவி கொலைவெறியாட்டம் நடத்திய EMPKEE ஆலை முதலாளி ஓ.எம்பெரியசாமி
அம்பத்தூர் அருகே வானகரத்தில் அமைந்துள்ளது EMPKEE ஆலை. காற்றாலைக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் இவ்வாலையில் 48 நிரந்தரத் தொழிலாளர்களும் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். 4 யூனிட்களில், பல ஆண்டுகளாக உழைத்துக் கொடுக்கும் தொழிலாளிகள் பணிநிரந்தப்படுத்தாமல், கட்டற்ற சுரண்டலையும், உரிமை பறிப்பையும் நிரந்தரமாக செய்து வந்தார் ஓ.எம் பெரியசாமி. வெறும் ரூ 7,000-9,000 ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடுமையை அனுபவித்து வந்த தொழிலாளர்கள், இனியும் பொறுக்க முடியாதென புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
‘தொழிற்சங்க ஜாம்பவான்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்களிடம், தொழிலாளர்கள் சென்று தஞ்சமடைந்திருந்தால் கிஞ்சித்தும் அச்சமடைந்திருக்க மாட்டார் திருவாளர் பெரியசாமி. சேர்ந்த இடம் நக்சல்பாரி சங்கம் என்பதால் கதி கலங்கி நின்றார் பெரியசாமி. உள்ளுக்குள் வயிறு கலங்கினாலும், “உட்றா, உட்றா சூனா பானா, உட்றா” என்று ஒன்றுமே நடக்காததைப் போல பாவனை செய்தார்.
15 வருடமாக உழைத்துக் கொடுத்த தொழிலாளிகளுக்கும் கூட ESI, PF போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்ததை எதிர்த்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது பு.ஜ.தொ.மு. தினந்தினம் ஏறி வரும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், குறைந்தபட்ச ஊதியம் இல்லாது குடும்பம் நடத்த இயலாது. உயிர் வாழவே ஊதிய உயர்வு தேவை என்றாகிவிட்ட நிலையில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் உதவி ஆணையரிடம் கடந்த நவம்பர் மாதம் தொழிற்தாவா எழுப்பப்பட்டது.
தொழிலாளர் துறையை மயிரளவுக்கும் மதிக்காத எல்லா முதலாளிகளையும் போலவே பெரியசாமியும் மதிக்கவில்லை. “என் பொண்டாட்டி புள்ளலாம் சோத்துக்கே வழியில்லாம நடுத்தெருவுல நிக்குது சார்” என்ற வார்த்தையை மட்டும் சொல்லாமல் மற்ற எல்லா வகையிலும் ஆலை நட்டத்தில் இயங்குகிறது என்பதற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்து விட்டார் பெரியசாமி. ஆனால் உண்மையில் மூன்று ஷிஃப்ட்களிலும் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு பல கோடி ரூபாயை சுருட்டி வருகிறார் பெரியசாமி. தொழிற்தாவாவில் சமரச முறிவறிக்கை கொடுத்து தனது கடமையை நிறைவு செய்து கொண்டார் உதவி ஆணையர்.
தொழிலாளியை வேலைக்கு அனுமதிக்காததாலும், மின்சாரத்தை துண்டித்து அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உள்ளிருப்புப் போராட்டத்தினை துவங்கினர் தொழிலாளர்கள்.
இந்நிலையில் கடந்த மே மாதம் ESI உரிமை மறுக்கப்பட்ட நிலையில், கார்த்திக் என்கிற சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு முடிந்து வேலைக்கு வந்த தொழிலாளியை ஒரு வாரம் கழித்து வருமாறும், மீண்டும் 10 நாட்கள் கழித்து வருமாறும் கூறி அலைக்கழித்துள்ளனர். கடைசியில் 25-ம் தேதியன்று வாய்மொழி உத்தரவாக வேலைக்கு அனுமதித்துள்ளனர்.
இதை ஏற்காத தொழிலாளர்கள் நேராக சென்று மேனேஜரை சந்தித்துள்ளனர். என்ன பிரச்சனை என்றே கேட்காமல் தொழிலாளர்களை மிரட்டி, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார் மேனேஜர். சுயமரியாதை உள்ள எவருமே செய்வதைப் போல, மேனேஜரை சிறைபிடித்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லியுள்ளனர் தொழிலாளர்கள். முதலாளிகளின் கொழுப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட மேனேஜர், வழக்கம் போல எதுவும் உறைக்காமல் ஜந்துவைப் போலவே அமைதியாக நின்றுள்ளார். தொழிலாளியை வேலைக்கு அனுமதிக்காததாலும், மின்சாரத்தை துண்டித்து அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உள்ளிருப்புப் போராட்டத்தினை துவங்கினர் தொழிலாளர்கள்.
நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கையையும், தொழிலாளர் விரோதப் போக்கையும் கண்டித்து தொழிலாளர் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சுமூகமான சூழலை உண்டாக்கும் பொருட்டு, தொழிலாளர் உதவி ஆணையர் 01-06-2015 அன்று பேச்சு வார்த்தைக்கு உத்தரவிட்டார்.
பேச்சுவார்த்தை தேதியை நோக்கி காத்திருந்த நேரத்தில் கடந்த 31-ம் தேதி இரவு 40 ரவுடிகள் ஆலையினுள்ளே புகுந்து தொழிலாளிகளை தாக்கியுள்ளனர். வானகரத்தில் பாண்டியன் ஹோட்டல் நடத்தி வரும் பெரியசாமியின் தம்பி முத்து, அ.தி.மு.க கவுன்சிலர் ஜி.எஸ். மணி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட கூலிப்படை ரவுடிகள் ஆலையில் நுழைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் குட்டி என்ற வெங்கடேசன் தொழிலாளிகளின் போராட்டங்களை நசுக்க ரவுடிகளை ஏவுவதும், மிரட்டுவதும் செய்துவந்தார். இண்டெக்ரா என்கிற நமது சங்கத்தில் நடந்த உள்ளிருப்புப் போராட்டத்திலும் இதையே கையாள முயற்சி செய்து தோற்றுப் போய் அம்பலப்பட்டு, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் தகுதியே பறிக்கப்பட்டு இன்று பரிதாபகரமான நிலையில் உள்ளார். இதை அறியாமல் எப்படியும் ‘கெத்து’ காட்டி வட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிடலாம் என்ற போதையில் ரவுடிகள் போதையேற்றி அனுப்பியுள்ளார்.
ரவுடிகள் சுவரேறி குதித்து ஆலையினுள்ளே நுழைவதைக் கண்டதும் யுனிட் 1 -ல் இருந்த தொழிலாளிகள் சுதாரித்துக் கொண்டு 100-க்கு அழைத்து போலிசுக்கு தகவல் சொல்லியுள்ளனர். போலிசு வருவதை பார்த்த ரவுடிகள் அங்கிருந்த முன்னாள் செக்யூரிட்டியின் உதவியோடு, யூனிட் -4 க்கு சென்று தொழிலாளிகள் மீது கொலைவெறியாட்டம் நடத்தியுள்ளனர். போலிசிடம் இந்தத் தகவலை சொன்ன போதும், “யுனிட் -1 ல் பிரச்சனைனு தான் சொன்னாங்க இங்கதான் இருப்போம், நீ சொல்றதலாம் கேக்க முடியாது” என ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று எழுதப்பட்ட வேனின் அருகில் நின்று சொன்னார் உதவி ஆய்வாளர் கோபிநாத்.
தகவல் அறிந்ததும் பு.ஜ.தொ.மு மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமாரும் ஆலைக்கு விரைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்களை சென்னை KMC-யில் அனுமதித்துவிட்டு, சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
உதவி ஆய்வாளர் கோபிநாத்திடம் சம்பவத்தை கூறிக்கொண்டிருக்கும் போதே, “நீங்களெல்லாம் ரவுடிகளா” என்று தோழர்களைப் பார்த்து கேட்டதோடு, மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
“நீங்கள் தவறாக அணுகுகிறீர்கள்” என்று சுட்டிக்காட்டியபோதும் கேட்கவில்லை.
அப்போதே, வட்டச் செயலர் கனவில் வலம் வரும் கவுன்சிலர் ஜி.எஸ். மணியும், ரவுடிகளுக்கு வழிகாட்டிய முன்னாள் செக்யூரிட்டியும் வந்தனர். தொழிலாளிகள் இவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியும், எஸ்.ஐ கோபிநாத் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் “எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்றார். இதனால் எஸ்.ஐ கோபிநாத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. முதலாளி பெரியசாமி எஸ்.ஐ கோபிநாத்துக்கு படியளக்கும் ’பெரிய சாமியாக’ இருப்பாரோ என்று நாம் நினைப்பதற்குள், “ஆமாம், நான் முதலாளியோட கைக்கூலிதான்” என தன்னை அம்பலப்படுத்திக்கொண்டார் கோபிநாத்.
“இந்த சங்க செயலாளர் பேரு ரஜினிகாந்த் தானே? வேணும் அந்தாளுக்கு இப்படிதான் நடக்கும்” என்றார் கோபிநாத். நாம் இன்னும் புகார் கொடுக்காத நிலையில் சங்கச் செயலாளர் பெயரைச் சொல்லி, அவர் ரவுடிகளால் அடிபட வேண்டுமென எஸ்.ஐ கோபிநாத் விரும்புகிறார். பெரியசாமியின் விருப்பமும் அதுவே. ஆகவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் என தெளிவானது.
பு.ஜ.தொ.மு-வின் சட்ட ஆலோசகர் தோழர் பார்த்தசாரதி உடனடியாக காவல் உதவி ஆணையருக்கு தகவல் சொன்னதன் பேரில் அவர் வந்த விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், ஜி.எஸ் மணி மீதும், முதலாளியின் பெரியசாமியின் தம்பி முத்துவின் மீதும் புகார் பெறப்பட்டது.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும், உரிமைகளும் முதலாளிகளால் மறுக்கப்படுகிறது. தொழிற்தாவா எழுப்பினால் முதலாளிகள் தொழிலாளர் நலத்துறையை மதிப்பதில்லை. உரிமைகளை மறுப்பதோடு அதைக் கேட்கும் தொழிலாளர்களை பணியிடைநீக்கம், பணிநீக்கம், ரவுடிகளை வைத்து மிரட்டுவது என தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசப்படுத்துகின்றனர்.
மறுபுறம், தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தால் தானே அங்கே போவீர்கள் என்று, தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாக திருத்தச் சொல்கிறார்கள் முதலாளிகள். அரசோ அதையே முதல் வேலையாக செய்கிறது. 700 கோடி ரூபாய் நமது பணத்தில் 18 நாடுகளுக்குச் சென்று முதலாளிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் மோடி.
தொழிலாளர்களின் வாழ்க்கையோ படுபாதாள நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. வேலையை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது போய் இன்று உயிரை காத்துக் கொள்ளவே போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தொழிலாளர்கள். முன்பு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை என்று பெயரெடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இன்று நியாயமான உரிமைக்காக போராடினால் கூட வேலைநீக்கம், ரவுடிகளை வைத்துத் தாக்குவது என்ற அவல நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் துவங்கிய இந்த ‘ரவுடிக் கலாச்சாரம்’ மெல்ல மெல்ல எல்லா முதலாளிகளாலும் கையாளப்படுகிறது. இதனாலெல்லாம் துவண்டு விடுமா தொழிலாளி வர்க்கம்?
நாட்டையே இயங்க வைத்துக்கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கம் அதன் பலத்தை உணரவில்லை. அதன் பலத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தும் வேலையைத்தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செய்து வருகிறது.
தோற்க பிறந்ததல்ல தொழிலாளி வர்க்கம், ஆளத் தகுதி வாய்ந்தது.
பலமான அமைப்பாக திரண்டு அடிமை விலங்கொடித்து உலகை ஆளும். அப்போது, பெரியசாமி உள்ளிட்ட அனைத்து சாமிகளும் துடைத்தெறியப்படுவார்கள்.
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர்
பா.ஜ.க பாசிச இந்துத்துவக் கும்பல், அங்கன்வாடிகளிலும், மதிய உணவுதிட்டத்தின் கீழும் முட்டை வழங்குவதை தடை செய்திருக்கிறது.
மத்திய பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க பாசிச இந்துத்துவக் கும்பல், அங்கன்வாடிகளிலும், மதிய உணவுதிட்டத்தின் கீழும் முட்டை வழங்குவதை தடை செய்திருக்கிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Integrated Children Development Schemes, ICDS-1975) சமூக மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகம், பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் பொருட்டு மிக சமீபத்தில் உணவு பட்டியலில் அவித்த முட்டையை சேர்த்திருந்தது.
ஏழை எளிய மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் ஆகச் சிறந்த மலிவான புரதப்பொருள் முட்டை. மூன்று முதல் ஆறு வயது குழந்தைகளின் மிகத் தீவிரமான ஊட்டச் சத்துக் குறைபாட்டை போக்குவதற்கு முட்டை அவசியம். ம.பியில் பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டங்களான மாண்ட்லா, அலிராஜ்பூர், கோசாங்கபாத் ஆகிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்துத்துவக் காலிகளுக்கு இதெல்லாம் தேவையில்லை. “நான் முதலமைச்சராக நீடிக்கும் வரை, முட்டையை அனுமதிக்கமாட்டேன்” எனக் கொக்கரித்திருக்கிறார் அம்மாநிலத்தின் முதலமைச்சரும் ஆர்.எஸ்.எஸ் வெறியருமான சிவராஜ் சிங் சவுகான். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீடியோ பேச்சுக்களுக்கு இணையான பயங்கரவாதம் இது.
இந்துத்துவக் கும்பல், பசுச் சாணியை உடம்பில் பூசிக்கொள்வதால் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து தப்பிக்கலாம் எனவும் பசு மூத்திரத்தின் மகிமையையும் பரப்பிக்கொண்டிருக்கிறது. (ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்)
“அங்கன்வாடி மையங்களில் முட்டையின் தேவை என்ன?” என்று திமிராகக் கேட்கும் இந்த இந்துத்துவக் கும்பல், பசுச் சாணியை உடம்பில் பூசிக்கொள்வதால் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து தப்பிக்கலாம் என மாநிலம் முழுவதும் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு முட்டாள்தனமாக பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது.
இந்தியாவிலேயே மத்தியப்பிரதேசத்தில் தான் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்கு முட்டையை தடை செய்ததன் பின்னணியில் வைர வியாபாரம் செய்யும் மார்வாடி, பார்ப்பன, ஜெயின் கும்பல்களும், ஆர்.எஸ்.எஸ் காலிகளும் உள்ளனர். இவர்கள் அடிப்படையில் பொருளாதாரத்தில் செல்வச் செழிப்பானவர்கள். அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மார்வாடி ஜெயின் வீட்டு பிள்ளைகள் சத்துவணவு சாப்பிடும் தேவை கிடையாது. சப்பாத்திக்கு நெய்யும், அமுல் வெண்ணெய்யும் திகட்டத் திகட்ட வெண்பொங்கலும், பருப்புச் சோறும், அதில் பிடிக்கொன்றாய் போடப்பட்ட முந்திரியும் இவர்களுக்கு எளிது!
ஆனால் மறுபுறமோ பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கொடிய வறுமைஅளித்திருக்கும் ஆரோக்கியமின்மைக்கு முட்டை அவசியம். இச்சமூகத்து குழந்தைகள் சவலைகளாக சதையும் இரத்தமுமின்றி வாடும் போது முட்டையை தடைசெய்த பாசிச இந்துத்துவம் தனது கோரப்பற்களில் இளம்பிஞ்சுகளின் இரத்தத்தைச் சுவைத்தவாறு காட்சியளிக்கிறது.
தற்போதைய கணக்கின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட 19.46 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருக்கின்றனர்.
இந்து பார்ப்பனியத்தின் மனித்தன்மையற்ற செயலுக்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமா?
தற்போதைய கணக்கின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட 19.46 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருக்கின்றனர். உலகில் நான்கில் ஒரு ஊட்டச் சத்துக்குறைவான குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என்கின்றன தரவுகள். மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 13 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் இறக்கின்றனர். அதாவது பார்ப்பன இந்துத்துவத்தால் அப்பட்டமாக கொலை செய்யப்படுகின்றனர்!
இளம்பிஞ்சுகளைப் பொறுத்தவரை இந்தியாவின் வரலாறு இதுதான் என்ற நிலையில் ம.பி முதலமைச்சரின் நடவடிக்கையை, தான் வரவேற்பதாகவும் அவருக்கு விழா எடுக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது பாசிச மதவெறிக்கும்பலான திகம்பர் ஜெயின் மகாசமிதி.
இக்கும்பலின் தலைவன் அனில்பக்துல் கூறும் பொழுது “முட்டை என்ன மரத்திலா காய்க்கிறது?” என எகத்தாளத்தோடு ஆளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நடவடிக்கையை வரவேற்றிருக்கிறான்.
ஆனால், மறுபுறமோ பழங்குடிக் சமூகத்து குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாடு தலையாய பிரச்சனையாக இருக்கிறது. இந்தியாவில் சாதிவாரியாக கணக்கெடுக்கிற பொழுது, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதாச்சாரம், தாழ்த்தப்பட்டவர்களில் 53.2%ஆகவும், பழங்குடியினரில் 56.2% ஆகவும் பிற சாதிகளில் 44.1% ஆகவும் இருக்கிறது.
மறுகாலனியாக்கக் கொள்கைகள் புகுத்தப்பட்ட 90-களுக்கு பிறகு மத்திய அரசு தனது பொறுப்பை கழற்றிக்கொண்டு 50%-50% என சமன்பாட்டை மாற்றியது. (அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் ஜெய்ப்பூரில் சத்துணவு பரிமாறும் நாடகம்)
அதே சமயம் தீவிர குறை எடை (Severe Under Weight Prevalence) கொண்ட குழந்தைகளின் விகிதாச்சாரம் தாழ்த்தப்பட்டவர்களில் 21.3% ஆகவும் பழங்குடியினரில் 26.3%ஆகவும் பிற சாதிகளில் 15.7% ஆகவும் இருக்கிறது.
இதில் 1990-லிருந்து 2015 முடிய, குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாட்டை போக்குவதற்கும் உலகெங்கிலும் பல்வேறு நாடுகள் முயற்சியை எடுத்துவருகின்றன. பொலிவியா, சீனா என்று மட்டுமில்லை, இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேசும், நேபாளும் கூட, குழந்தைகளின் விசயத்தில் அக்கறை காட்டுவதாக தெரிவித்திருக்கின்றது உலக உணவுப் பேரவையின் அறிக்கை. ஆனால் இந்தியாவோ, குழந்தைகள் விசயத்தில் தான் அடைய வேண்டிய இலக்கை தவறவிட்டிருக்கிறது.
எந்தளவிற்கு தவறவிட்டிருக்கிறது என்றால் ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் என்ற அளவிற்கு. இதற்கு முழுக்கவும் காரணம் இந்த நாட்டின் மானக்கேடான இந்துத்துவ அரசியலும் அதற்கு தூபம் போடும் மறுகாலனியாக்கக் கொள்கைகளும் ஆகும்.
மறுகாலனியாக்கக் கொள்கைகள் புகுத்தப்படுவதற்கு முன்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை, ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்த மத்திய அரசே பொறுப்பேற்றிருந்தது. மாநில அரசுகள் துணைச் செலவுகளை மட்டுமே நிர்வகித்து வந்தன. ஆனால், 90-களுக்கு பிறகு மத்திய அரசு தனது பொறுப்பை கழற்றிக்கொண்டு 50%-50% என சமன்பாட்டை மாற்றியது. இதிலும் இன்னும் முனைப்பாக இன்றைய மோடி அரசோ இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை ரூ 16,316 கோடியில் இருந்து ரூ 8,000 கோடியாக ஈவு இரக்கமின்றி வெட்டி எறிந்திருக்கிறது. இது உலகமயமாக்கல் நமது குழந்தைகளின் இரத்தத்தில் கைநனைத்த பரிமாணத்தின் ஒரு பக்கம்.
இந்துத்துவம் எங்கெல்லாம் கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் கொல்லப்படுகின்றனர்.
மறுபுறத்தில் மோடி பதவியேற்ற இந்த ஓராண்டு காலத்தில், பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அங்கன்வாடிகளில் முட்டை தடைசெய்யப்பட்டிருக்கிறது.
சான்றாக, ராஜஸ்தானில் முட்டை, மாட்டுக்கறி, ஒட்டகக்கறிக்கு தடை. குறிப்பாக பேரான் மாவட்டத்தில் சகாரியா பிரிவினரின் குழந்தைகள் கொத்துக்கொத்தாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஆரம்பத்தில் இறந்தனர்.
வசுந்தரா தனது ஆட்சியில், இந்து பார்ப்பனியத்தைக் காரணம் காட்டி, குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதை தடை செய்தார். குறிப்பாக, அம்மாநிலத்தில் வழங்கப்படும் தாலியா எனப்படும் கஞ்சியும் கிச்சடியும் மிகத்தீவிர ஊட்டச்சத்துக்குறைபாட்டை (Acute Malnutrition) போக்குவதற்கு எந்த விதத்திலும் சரியான மாற்று அல்ல என்று அன்றைக்கு சத்துணவு பணியாளர்களே எதிர்க்குரல் எழுப்பினர். இறந்த குழந்தைகளோ முட்டை உண்பதில் பிரச்சனை இல்லாத பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பது கொடூரத்தின் உச்சம்.
ஒரு குழந்தை எங்கெல்லாம் முட்டை சாப்பிடலாம் (மத்திய இந்தியாவில் முடியாது)
பிற மாநிலங்களைக் கணக்கில் கொள்கிற பொழுது குஜராத்தின் மூலை முடுக்கெங்கும் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை என்பது கிடையாது. ஏனெனில் அது மோடியின் கோட்டை. மோதிஜி மோதிஜி என்று மிகவும் அருவெறுப்பாக தமிழ்நாட்டு ஊடகம் முதற்கொண்டு கருத்து விபச்சாரம் செய்துகொண்டிருந்த மொத்த எபிசோட்டிலும் குஜராத்தின் பெண்களும் குழந்தைகளும் ஊட்டச் சத்துக் குறைபாடு கொண்டவர்கள் என்கிற உண்மை ஆழமாக புதைக்கப்பட்டது. சாய்நாத்தின் கட்டுரையும் புரட்சிகர இயக்கங்களின் அம்பலப்படுத்தல்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காவி கும்பலின் மோசடி பிரச்சாரத்திற்கு முன் அமுங்கிப்போனது. இத்தகைய இலட்சணத்தில் தி இந்துவின் சமஸ் போன்ற அடிவருடிகள் மோடியின் சாதனை குறித்து கூச்சமே இல்லாமல் நடுப்பக்க கட்டுரைகளை தீட்டி சுய இன்பம் அடைகிறார்கள்.
ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், சட்டீஸ்கரிலும் குழந்தைகளின் மதிய உணவுத்திட்டத்தில் முட்டை தடை செய்யப்பட்ட ஒன்று.
பஞ்சாப்பின் ஆறு அரசு உறைவிடப் பள்ளிகளைத் தவிர, முட்டை குழந்தைகளின் சத்துணவில் தரப்படுவதில்லை.
கர்நாடகாவில் பா.ஜ.க அரசு ஆட்சியில் இருந்த பொழுது, 2007-ல் இந்துத்துவக் கும்பல், குழந்தைகளின் சத்துணவுத் திட்டத்தில் முட்டையை தடை செய்திருந்தது.
பீகாரிலும் மேற்குவங்கத்திலும் முட்டை மாநில அரசால் வழங்கப்பட முடியாத மிகவும் ஆடம்பரமான பொருள்!
தாழ்த்தப்பட்டவர்களும், இசுலாமியர்களும் கொடூர அடக்குமுறையைச் சந்தித்துவரும் உத்தர பிரதேசத்தில் முட்டை இந்துத்துவப் பார்ப்பனியத்தைக் காரணம் காட்டியே பல இடங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு மத்தியப்பிரதேசத்தின் அங்கன் வாடியிலும், பள்ளியிலும் மட்டுமல்ல, பொதுஇடங்களான பவித்ரா நகராட்ஸ் என்ற அழைக்கப்படும் இடங்களிலும் முட்டை தடை செய்யப்பட்ட ஒன்று!
தமிழ் நாட்டில் குழந்தைகள் முட்டை தின்கிறார்கள், அது காவிமயமாக்கப்பட்ட வட இந்தியாவில் இல்லை.
இதுதவிர, பார்ப்பனியத்திற்கு எங்கெல்லாம் மரண அடிதரப்பட்டதோ, எங்கெல்லாம் சுயமரியாதை முற்போக்கு பொதுவுடமை இயக்கங்கள் கிளர்ந்து எழுந்தனவோ அங்கெல்லாம் குழந்தைகள் ஓரளவு காப்பற்றப்பட்டிருக்கின்றனர்.
இன்றைக்கு தமிழ் நாட்டில் குழந்தைகள் முட்டை தின்கிறார்கள் என்பதற்கும், அது காவிமயமாக்கப்பட்ட வட இந்தியாவில் இல்லை என்பதும் முற்போக்கு இயக்கங்களின் போதாமையால் மக்கள் அங்கே எந்த அளவிற்கு சுரண்டப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற பொழுது நமக்கு ஆத்திரம் வருகிறது.
பிள்ளைக்கறி தின்னும் பிணந்தின்னி பார்ப்பனியம் இந்தியாவின் அவமானமாக தொடர்வதும் இந்துத்துவ பாசிசம் கோலோச்ச அனுமதிப்பதும் விசயமறிந்தும் போராடத் தயங்குகிற நமது கையலாகாத்தனத்தின் வெளிப்பாடின்றி வேறென்னவாக இருக்க முடியும்?
இன்றைக்கு தமிழ்நாட்டிலே கருத்துரிமையை நிலைநாட்டும் பொருட்டு பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபும் பொதுவுடமை இயக்கங்களின் மக்கள் திரள் போராட்டங்களும் நமது குழந்தைகளையும் போராட்டத்தில் பங்கேற்கச் செய்கிறது.
ஆனால் அங்கோ இந்துத்துவக் காலிகள் நோஞ்சான் குழந்தைகளின் குரல்வளையில் ஏறி நின்று கொண்டிருக்கின்றனர்.
பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் அவர்களின் குழந்தைகள் வாழவழியில்லை என்பதை நாம் எப்படியாவது அவர்களுக்கு சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பாசிச ஆர் எஸ் எஸ் இந்துத்துவக்கும்பல், இந்தியாவை குழந்தைகளின் எலும்புகளால் நிரப்பிவிடுவர்.
இந்திய நீதித்துறையின் கற்பை” காணாமல் போகச் செய்த சாதனை.
ஜெயா தன்னையறியாமல் செய்த மிகச்சில நன்மைகளில் ஒன்றுதான் “லவலேசான சேதாரம்கூட இல்லாமல் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த இந்திய நீதித்துறையின் கற்பை” காணாமல் போகச் செய்த செயல்.
நேர்மையே வெல்லும் என உறுதியாக நம்பும் சகாயம் வகையறா, சட்டங்கள் மூலம் ஊழலை ஒழிக்கலாம் என நம்பும் மிடில்கிளாஸ் வகையறா, நீதித்துறை இந்தியாவின் சகல பாவங்களையும் கழுவி பரிசுத்தமாக்கிவிடும் என நாள் தவறாது பிரச்சாரம் செய்துவந்த அறிவுஜீவி வகையறா என மூன்று தரப்பையும் மூத்திர சந்துக்குள் வைத்து வெளுத்தது குமாரசாமியின் தீர்ப்பு.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்ளாவது, வகைதொகை இல்லாமல் ஒரு நீதிபதி கண்டனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதும் ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்போதுதான் நடந்தது. ஆனாலும் இந்த நீதித்துறை பக்தாளின் அகண்ட நித்திய பஜனை கோஷ்டியிலிருந்து ஒரு முனகல் ஒலிகூட எழவில்லை.
ஆயிரம் பிரச்சாரக் கூட்டங்களும், நூறு ஸ்டிங் ஆபரேசன்களும்கூட இந்த அளவுக்கு ஒரு துறையின் மரியாதையை காலி செய்ய முடியாது. ஆனால், ஒற்றையாளாக இதனை செய்து முடித்தார் ஜெயா. அவருக்கு எப்போதும் நீதித்துறையின் மீது மரியாதை இருந்தது இல்லை. ஒரு நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடுவதும், அவர் வீட்டுக்கு குடிநீர் இணைப்பை துண்டிப்பதும் தெலுங்கு படங்களில் கூட நடந்ததில்லை, ஆனால் அவை ஜெயாவின் பொற்கால ஆட்சியில் நடந்திருக்கின்றன. அந்த வரலாற்றையும் மறந்து நீதிபதிகள் மம்மி மீது பரிவு காட்டுவதன் காரணம் மேற்சொன்ன நிர்வாகத் திறமைதான். மற்ற கட்சிகளில் வக்கீல்கள் அணி என்றொன்று இருக்கிறது, அதிமுகவில் மட்டும்தான் நீதிபதிகள் அணி என்றொன்று இருக்கிறது என நீங்கள் புலம்புவதில் எந்த முகாந்திரமும் இல்லை.
எதிர்தரப்பும் ஒழுங்காக வாதிடாமல், அரசுத்தரப்பு வாதமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றமே தானாக முன்வந்து தரப்பட்ட ஒரே தீர்ப்பு ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புதான்.
கீழமை நீதிமன்றம் ஒரு வழக்கை பரிசீலித்து ஆதாரங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குகிறது. அதில் 20 சதவிகிதத்தைக்கூட உங்களால் ஆதாரபூர்வமாக மறுக்க முடியவில்லை என நீதிபதி குமாரசாமி விசாரணையின்போது பதிவு செய்கிறார். அதன்பிறகுகூட குற்றவாளி தரப்பு எதையும் செய்யவில்லை. ஆயினும் குற்றவாளியின் நியாயம் என ஒரு வண்டி நிறைய ஆதாரத்தை நீதிபதி தருகிறார். இதுவரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பல வழக்குகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்தரப்பும் ஒழுங்காக வாதிடாமல், அரசுத்தரப்பு வாதமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றமே தானாக முன்வந்து தரப்பட்ட ஒரே தீர்ப்பு ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புதான். சூமோட்டோவாக வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்வது ஒரு புரட்சி என்றால் அதே வழியில் தீர்ப்பு சொல்வதும் ஒரு புரட்சிதானே? இந்தப் புரட்சிக்கு வித்திட்டவர் புரட்சித்தலைவிதானே? அதனால்தான் அவர் புரட்சித்தலைவி என அழைக்கப்படுகிறார்.
பத்திரிகை ஆரம்பித்து சந்தா வசூலித்து அதனை சொத்தாக்கலாம், அரசு ஊழியராக இருந்துகொண்டு பரிசுகளை வாங்கிக்கொண்டு அதனையும் சொத்தாக்கலாம், கடன் வாங்கி அதனையும் சொத்தாக்கலாம், திராட்சைத் தோட்டம் போட்டு அதில் ஏக்கருக்கு ஒருகோடிகூட சம்பாதிக்கலாம், வியாபாரமே செய்யாத கம்பெனிகளை மானாவாரியாக ஆரம்பித்து அதிலேயும் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கலாம், விற்பவர் அல்லது வாங்குபவரின் பெயர்கூட இல்லாமல் சொத்தை பதிவு செய்யலாம் என சம்பாதிப்பதற்கான வழிகளையெல்லாம் பட்டியலிட்டு விளக்கி அதற்கு சட்ட அங்கீகாரமும் வாங்கித் தந்திருக்கிறார் ஜெயலலிதா.
குமாரசாமி எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை, கொடுக்க அவசியமும் இல்லை எனும் நிலைதான் இருக்கிறது
ஓய்வு விரும்பியான ஜெயா தன் வாழ்நாளில் இதற்காக 24 ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார் (டெமான்ஸ்ட்ரேஷன் பீரியட் 5 ஆண்டுகளையும் (91 -96) சேர்த்து). அவரை அம்மா என்றும் தாய் என்றும் தொண்டரடிப் பொடிகளும் கற்றாய்ந்த அறிஞர் பெருமக்களும் அதிகாரிகளும் சொல்வதும் வெறும் வார்த்தையல்ல, தன்னலம் கருதாது தனக்குப் பின்னால் வரும் ஊழல்வாதிகளுக்காகவும் அவர் சிந்திக்கிறார் இல்லையா, அந்தத் தாயுள்ளம் காரணமாகவே அவர் அம்மா என அன்போடு அழைக்கப்படுகிறார்.
தீர்ப்பையே காலாவதியாக்கும் அளவுக்கு கணக்குப்பிழைகள் இருக்கிறது, கீழ் நீதிமன்றத்தின் தரவுகளை அலட்சியமாக புறந்தள்ளி குற்றவாளியின் வாதம் அப்படியே ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து குமாரசாமி எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை, கொடுக்க அவசியமும் இல்லை எனும் நிலைதான் இருக்கிறது. எல்லா துறையிலும் நிகழும் தவறுகளுக்கு அதனை செய்தவர்கள் பொறுப்பேற்றாக வேண்டும்.
ஆனால் எல்லா துறைகளின் தவறுகளையும் தண்டிக்கும் நீதித்துறை தன் தவறுகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ எந்த வாய்ப்பையும் வைத்திருக்கவில்லை. ஒரு தீர்ப்பில் எத்தகைய வெளிப்படையான தவறுகள் இருந்தாலும் அதற்கு நீதிபதி பொறுப்பில்லை எனும் யதார்த்தத்தையும் நீதிபதிகளின் வானளாவிய அதிகாரத்தையும் தேசம் முழுக்க தெரியவைக்கும் வல்லமை ஜெயாவைத்தவிர வேறு யாருக்கேனும் இருக்கிறதா? அதனால்தான் அவரை தர்ம தேவதை என அழைக்கிறார்கள்.
ஜெயா வழக்கில் குன்ஹா தீர்ப்பு சொன்னபோது தமிழகத்தில் நடந்த களேபரங்களும் அதற்கு தமிழக மக்களின் அமைதியான எதிர்வினைகளையும் கண்டவர்கள் இங்கே மான உணர்வு செத்துவிட்டது என எக்காள தொனி ஆராதனை நடத்தினார்கள். குமாரசாமியின் தீர்ப்பு வந்தபோது காட்சிகள் தலைகீழாக மாறின. இதுவரை தீவிர கம்யூனிஸ்டுகள் மட்டும் நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சித்த நிலை மாறி தீர்ப்பை கேள்விப்பட்டவனெல்லாம் காறித்துப்ப ஆரம்பித்தான்.
நீதி வென்றது என ஸ்டேட்டஸ் போட்டு கொண்டாடத் தயாரான அதிமுக ஆட்களே சிக் லீவ் எடுத்துக்கொண்டு இணைய வெளியில் தலைமறைவானார்கள். தீர்ப்பை விமர்சித்துப் பழக்கமே இல்லாத ஊடக நெறியாளர்கள்கூட மக்களைப் பார்த்து தைரியத்தை கற்றுக்கொண்டு, விமர்சித்தால் என்ன தவறு என தற்காலிக வீரர்களாக உருவெடுத்தார்கள். ஆண்டவன் இருக்கான் கொமாரு பாணியில் மனசாட்சிக்கு ஜெயா பயப்பட்டால் போதும் என சமரசமான கருணாநிதியே மறுநாள் தீர்ப்பில் ஓட்டை என்று சொல்லும் துணிச்சலைப் பெற்றார்.
வீட்டில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டே ஒற்றையாளாக ஒரு இனம் முழுமைக்கும் தைரியத்தை ஊட்டும் வல்லமை வேறு யாருக்கு உண்டு?
இலட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட அரசாங்கத்தால்கூட ஒரே நாளில் எல்லா குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போட முடியாத சூழலில், வீட்டில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டே ஒற்றையாளாக ஒரு இனம் முழுமைக்கும் தைரியத்தை ஊட்டும் வல்லமை வேறு யாருக்கு உண்டு? அதனால்தான் அவரை தைரிய லட்சுமி என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்தார். வீட்டுக்கு போகும் பாதையில் இடைஞ்சல் உண்டானதால் தமிழகத்தில் வெடிகுண்டு கல்ச்சர் வந்துவிட்டது என ஆவேசம் காட்டியவர் இதே ரஜினிதான். ஆக சூப்பர் சுருளிக்கே தைரியத்தை கற்றுக்கொடுத்தவர்தான் நம் தைரியத்தாய். அம்மாவின் பதவியேற்புக்கு ரஜினி முதல் ஆளாக வந்தது அந்த விசுவாசத்தினால்தான்.
நாடு இருக்கும் நிலையில் நேர்மையானவர்கள் உருவாவது அவர்களுக்கு எத்தனை ஆபத்தானது? தபோல்கர் மாதிரி ஆட்கள் கொல்லப்படுகிறார்கள், முத்துக்குமாரசாமிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள், உமாசங்கர் சித்தம் கலங்கி பரிசுத்த ஆவியானவரிடம் அடைக்கலமாகி அல்லேலூயா பாடுகிறார், இப்போதெல்லாம் நேர்மையான மகனைக் கண்டு பெற்றோர்கள் பதறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டாமா?
நாம் நேர்மையாக தீர்ப்பு சொன்னாலும் அது அப்பீலில் நிராகரிக்கப்படும் எனும் ஞானம் வந்தால்தான் குன்ஹா மாதிரி ஆட்கள் யதார்த்த வாழ்வுக்கு திரும்புவார்கள்.
நாம் நேர்மையாக தீர்ப்பு சொன்னாலும் அது அப்பீலில் நிராகரிக்கப்படும் எனும் ஞானம் வந்தால்தான் குன்ஹா மாதிரி ஆட்கள் யதார்த்த வாழ்வுக்கு திரும்புவார்கள். அதன்மூலம் பல தற்கொலைகளும் இதர அபாயங்களும் நீங்கும் அல்லவா? மம்மியை தற்கொலைக்கு 3 லட்சம் கொடுப்பவர் என்று மட்டும் நீங்கள் கருதிக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவர் தன் தளராத உழைப்பின் மூலம் இனி நிகழவிருந்த எண்ணற்ற தற்கொலைகளைத் தடுத்தவர். அந்த வகையில் அவர் வெறும் தாயல்ல, தற்கொலை தடுத்த தாயாகிறார்.
அவர் மனித ஜென்மங்களுக்கு மட்டும் படியளந்தவர் அல்ல. அம்மா வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி அதிமுகவினர் வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்கள். எல்லா வகையான வேண்டுதல்களும் குறைவின்றி செய்யப்பட்டன. ஒருவேளை தீர்ப்பு அம்மாவுக்கு பாதகமாக வந்தால் பக்திக்கும் வேண்டுதலுக்கு பலனே இல்லையோ எனும் சந்தேகம் எல்லா பக்தனுக்கும் வந்திருக்கும். இப்போது கடவுளுக்கு ஒரு பெரும் நெருக்கடி, நீதி வென்றால் நாத்திகர்கள் பக்திக்கு பலன் இல்லை என எள்ளி நகையாடுவார்கள். கடவுளே கையைப் பிசைந்துகொண்டு நின்ற வேளையில் தன் மேல்முறையீட்டில் வென்று கடவுளையும் காப்பாற்றி நாத்திகர்கள் முகத்தில் கரியைப் பூசினார் ஜெயலலிதா. கடவுள் நீதியை காப்பாற்றவேண்டும் என்பது வாஸ்தவம்தான், அதற்கு கடவுள் உயிரோடு இருக்க வேண்டுமே? அந்தக் கடவுளையே காப்பாற்றியது நம் நீதி தேவதை ஜெயலலிதா இல்லையா?
உயர்குலத்தோரின் கவலையை போக்க வந்தவர்தான் ஜெயலலிதா. அதனால்தான் மோடி உள்ளிட்ட காவி கூடாரத்தோர் அவரது வெற்றியை பாராட்டுகிறார்கள்.
பக்தியை பகடி செய்த பெரியார் குழுவினரை எதிர்க்க தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாகவில்லை எனும் உயர்குலத்தோரின் கவலையை போக்க வந்தவர்தான் ஜெயலலிதா. அதனால்தான் மோடி உள்ளிட்ட காவி கூடாரத்தோர் அவரது வெற்றியை பாராட்டுகிறார்கள்.
“2-ஜியில் ஊழல் செய்தால் அந்த ஊழல் பணம் இருக்கவேண்டும் இல்லையா, என்னிடமிருந்து அப்படி பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டதா” எனக் கேட்டு தன் சட்ட ஞானத்தைக் காட்டினார் ஆ.ராசா. எதிர்க்கட்சிகளும் சி.பி.ஐயும் செய்வதறியாது நின்றன.
“என்னிடம் சொத்து மட்டும்தானே இருக்கிறது. ஊழல் செய்தத்ற்கு ஆதாரம் இருக்கிறதா” எனக் கேட்டு அந்தச் சொத்துக்கு சட்ட அங்கீகாரமும் வாங்கிவிட்டார் ஜெயலலிதா. இப்போது சொல்லுங்கள் இந்தியாவின் ஆற்றல்மிக்க தலைவர் ஜெயலலிதாதான் என பிராமணர்கள் சொல்வது உண்மையா இல்லையா?
நீதித்துறையின் மூலம் ஊழலை ஒழித்துவிடலாம் என தப்புக்கணக்கு போட்டவர்களை ஒரு தப்புக் கணக்கின் மூலம் வென்றவர் ஜெயலலிதா..
அவர் ஒரு தர்மத்தாய், ஏராளமான வக்கீல்களுக்கு அவர் அவ்வளவு தர்மம் செய்திருக்கிறார்.
இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் காப்பாற்றப்பட்டு வந்த மனுதர்மத்தை ஹைக்கோர்ட்டிலேயே காப்பாற்றிய வகையில் அவர் ஒரு நீதித்தாய்.
அவர் காவிரித்தாய், நமக்கில்லாவிட்டாலும் கர்நாடகாவுக்கு அவர் காவிரித்தாய்தான். 12 டி.எம்.சி கர்நாடக சாக்கடை நீர் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டும் அமைதியாக இருக்கிறார் இல்லையா?
ஒரே நேரத்தில் இந்துத்துவா பேசும் ஆர்.எஸ்.எஸ்காரர்களாலும், ‘இசுலாமியர்கள் எப்படி இசுலாமிய முறைப்படி கைகழுவவேண்டும்’ எனுமளவுக்கு பாடம் எடுக்கும் தவ்ஹீத் ஜமாத்காரர்களாலும் போற்றப்படும் ஒரே தலைவர் அவர்தான்.
தமிழை வெறுக்கும் பிராமண சாதியினரும், தமிழ் தேசியம் அமைப்போம் என சொல்லும் தமிழ் சாதியினரும் ஆதரிக்கும் ஒரே தலைவரும் அவர்தான். ஆகவே அவர் ஒரு நிர்வாகத்திறனின் தாய்.
மனம்விட்டு சிரிக்க வைக்கும் கதையை சொன்ன மறுநாளே விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவி கொடுத்த காரணத்தால் அவர் ஒரு கலைத்தாய்.
எல்.ஐ.சியே தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை, ஆனால் அம்மாவோ தற்கொலை செய்துகொள்வோருக்கென்றே மூன்று லட்சம் காப்பீட்டை செயல்படுத்தியிருக்கிறார்.
அவரிடம் தேர்தல் கமிஷன் தலைவணங்குகிறது, அவருக்காக ஐ.பி.சி வளைகிறது, தேசிய கீதம் சுருங்குகிறது. அவர் சந்தேகத்துகிடமற்ற ஒப்பற்ற தலைவர் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்லை.
நீதி செத்துவிட்டதே என வருந்தாதீர்கள், கன்னட வக்கீல்களுடனான வாதமெனும் போரில் கன்னட நீதிபதியின் முன்னால் தமிழ் வக்கீல்கள் வென்றார்கள் என தமிழனாக இறுமாப்பு கொள்ளுங்கள்.
ஆகவே ஒரு தப்புக்கணக்கால் அவர் விடுதலையானதை குறை சொல்லாமல் அவர் விடுதலையான உடனே பல்லாயிரம் மாணவர்கள் கணக்குப் பாடத்தில் செண்டம் வாங்கிய ராசியைப் பாருங்கள்.
காவிரி போச்சே என கலங்காதீர்கள் அவர் பதவியேற்றதும் காவிரியே மழையாய் பொழிந்த அதிருஷ்டத்தைப் பாருங்கள்.
நீதி செத்துவிட்டதே என வருந்தாதீர்கள், கன்னட வக்கீல்களுடனான வாதமெனும் போரில் கன்னட நீதிபதியின் முன்னால் தமிழ் வக்கீல்கள் வென்றார்கள் என தமிழனாக இறுமாப்பு கொள்ளுங்கள்.
தற்போது உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தாலும், அது பேரம் படியாததால் வெளியான ஒரு குறை. சித்தராமையா அரசு கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் தலைநகரில் தத்து அவர்கள் சுளுக்கெடுத்து விடுவார்.
ஆனால் காந்தி கணக்கு போய் குமராசாமி கணக்கு என பழகு தமிழில் நாட்டார் வழக்காக நிலைபெற்றாலும் தத்து கணக்கு அதையும் விஞ்சலாம். ஆம். இது அம்மா அவர்களுக்காக பக்தியுடன் போடப்படும் கணக்கு. பக்தனின் பக்தியை மதிப்பிடுவது அபச்சாரம். ஊழலுக்கு கணக்கு பார்ப்பது தெய்வ குற்றம்.
“சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் தடையை நீக்கு!” –
சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே 02/06/2015 அன்று மதியம் 1.30 மணியளவில் வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம்.
காலை முதல் மதியம் வரை வழக்குரைஞர்களுக்கும், மக்களுக்கும் பிரசுரங்களை வழக்குரைஞர்கள் விநியோகித்தனர். சிலர் பிரசுரத்தை படித்தவுடன் சரியான போராட்டம் எனவும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே 02/06/2015 அன்று மதியம் 1.30 மணியளவில் வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம்.
சென்னை ஐ.ஐ.டி மாணவர்களின் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததின் மூலம் மாணவர்களின் ஜனநாயக குரலை நெறிக்கும் மோடி அரசை கண்டித்தும், அம்பேத்கர்-பெரியார் கருத்துக்களை தடை செய்த ஐ.ஐ.டி டீனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் பால் கனகராஜ் அவர்களும், செயலர் வழக்குரைஞர் அறிவழகன் அவர்களும், மூத்த வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், வழக்குரைஞர் தமிழினியன், வழக்குரைஞர் பாரதி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்குரைஞர்கள் செயலர் ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் மீனாட்சி, இந்திரா, பார்த்தசாரதி என பலரும் பேசினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், இந்துத்துவ வெறியர்களுக்கும் எதிராக போராடவேண்டும், பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் இந்துத்துவத்திற்கு கல்லறை எழுப்பவேண்டும் என்ற உணர்வை தருவதாகவும் அமைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஏற்பாடு :
உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், சென்னை.
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை. 9094666320
மதுரை வழக்குரைஞர்கள்
அம்பேத்கார் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
சென்னை ஐ.ஐ.டி டீன் சிவக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
கருத்துரிமையைக் காக்க வழக்கறிஞர்கள் களம் இறங்குவோம்!
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 02.06.2015-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
02.06.2015-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ”கடந்த ஆண்டு சென்னை அய்.அய்.டி-யில் தொடங்கப்பட்ட அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் செயல்பாடுகள் மோடியின் கார்ப்பரேட்-பார்ப்பனீய சேவையை விமர்சித்ததால் தற்போதைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே மோடி காங்கிரஸ் உள்ளிட்ட பலரையும் விமர்சித்தே பதவிக்கு வந்தார். அதேபோல் சென்னை அய்.அய்.டி.யில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான விவேகானந்தா மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குருமூர்த்தியை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் நடத்துகின்றனர். பெரியார்-அம்பேத்கர் பெயர் அவர்களை அச்சுறுத்துகிறது. நாளை நமக்கும் இது நடக்கும். ஆகவே இந்த பார்ப்பனீய-மனுதர்ம தடையை எதிர்க்க வேண்டும்” என்றார்.
அடுத்துப் பேசிய வழக்கறிஞர் தி. லஜபதிராய் ”இந்தத் தடையால் பல நன்மைகள் நடந்துள்ளது. மும்பை, கான்பூரில் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமஸ்கிருத திணிப்பு,உயர்கல்வியில் காவிமயம் என்னும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தடையும் உயர்கல்வியில் காவிமயத்தின் ஓர் அங்கம்தான். மோடி நாட்டைக் கூறுபோட்டு விற்று வருகிறார். எழுத்தாளர் அருந்ததிராய் இதனை சுட்டிக் காட்டியுள்ளார். அரசியல் சட்டத்தின்படி இத்தடை சட்டவிரோதமானது. இந்த அபாயமான போக்கை நாம் மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
“சென்னை அய்.அய்.டி.யில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான விவேகானந்தா மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குருமூர்த்தியை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் நடத்துகின்றனர்.”
தனது வாயில் கருப்புத் துணியைக் கட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்து, மிகவும் உணர்சிப்பூர்வமாக உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் “இந்திய அரசியல் சட்டம் சரத்து 19-ன்படி எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை உண்டு. இதை அய்.அய்.டி நிர்வாகமும், மத்திய அரசும் பறிப்பது மாபெரும் அரசியல் சட்ட மீறல். பா.ஜ.க.தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசும்போது மோடிக்கு எதிராகப் பேசுவது தேசத் துரோகம் என்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
“பா.ஜ.க.தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசும்போது மோடிக்கு எதிராகப் பேசுவது தேசத் துரோகம் என்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.”
மோடி அரசு வந்ததிலிருந்து மக்கள் விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. இதை எதிர்க்காமல் எப்படி இருக்க முடியும்? மோடி அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதுதான் தேசபக்தி; எதிர்க்காமல் இருப்பது தேசத் துரோகம் என்று நான் சொல்கிறேன். இத்தடை இயற்கை நீதிக்கு எதிரானது. இதற்கெதிராக கடும் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அதிகாரம், பாசிசம் வன்முறை வடிவில் வந்தால், நாமும் அவ்வடிவிலே எதிர்ப்பதுதான் இதற்கான ஒரே தீர்வு” என்றார்.
மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்கள் “குஜராத்திலிருந்து இவர்களது அநீதிகள் அரங்கேறி வருகின்றன. குஜராத் படுகொலையின்போது உயர்காவல்துறை அதிகாரிகள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு நாங்கள் தப்பித்ததே பெரிய விசயம் என்றனர். நாம் நேரடியாக அங்கு சென்று உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். அம்பேத்கர் பார்ப்பனீயத்தின் கொடுங்கோண்மைகளை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் இன்று பி.ஜே.பி அம்பேத்கரைத் தூக்கி வருகிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருங்கிணந்து போராட வேண்டும்” என்றார்.
“அம்பேத்கர் பார்ப்பனீயத்தின் கொடுங்கோண்மைகளை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் இன்று பி.ஜே.பி அம்பேத்கரைத் தூக்கி வருகிறது.”
அதன்பின் பேசிய வழக்கறிஞர்கள் சாஜி செல்லன், வாமனன், பானுமதி, எழிலரசு, சங்க செயலர் மாணிக்கம் ஆகியோர் சென்னை அய்.அய்.டி நிர்வாகத்தையும், மோடி அரசையும் வன்மையாகக் கண்டித்து, அய்.அய்.டி.யின் பார்ப்பனத் தன்மையை அம்பலப்படுத்தி, பெரியார்-அம்பேத்கரைப் பிரிக்கும் பார்ப்பன சூழ்ச்சியைக் கண்டித்து, மோடி-அம்மா லேடி கூட்டணியைச் சாடி, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலைப் புரிந்து கொண்டு பெரியார்-அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆர்ப்பாட்டத்தில் “வினவு-இணையதள” செய்தியை துண்டறிக்கையாக மாற்றியும், அய்.அய்.டி.நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் மொட்டைக் கடிதத்தின் நகலும் விநியோகிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் வெறும் போனில் தகவல் சொல்லி அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டாலும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை:
அம்பேத்கார் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
சென்னை ஐ.ஐ.டி டீன் சிவக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
கருத்துரிமையைக் காக்க வழக்கறிஞர்கள் களம் இறங்குவோம்!
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடித் தலையீட்டின் பெயரில், சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டு மாணவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் மீதான இந்தத் தடை நடவடிக்கை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பிய மொட்டைக் கடுதாசியின் பேரில் எந்த விசாரணையுமின்றி ஐஐடி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டிருக்கிறது.
நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என அரசு உறுப்பின் ஒவ்வொரு கதவுகளையும் மனு மேல் மனுபோட்டும் பதில் கிடைக்காமல் இருக்கிற பொழுது ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐஐடி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது என்றால் அந்தக் கடுதாசியில் இருந்த பிராதுதான் என்ன?
பாசிச மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளான நிலக் கையகப்படுத்துதல் சட்டம், காப்பீடு சட்டம், தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் கார்ப்பேரட் கைக்கூலியாகச் செயல்படுகிற மோடியை மாணவர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விமர்சிக்கிறதாம் இவ்வமைப்பு.
இந்துத்துவக் காலிகளின் சமஸ்கிருத இந்தி திணிப்பு, கர் வாப்சி, பசுவதைத் தடைச் சட்டம், லவ் ஜிகாத் கொள்கைகளை இவ்வமைப்பு விமர்சித்து துண்டுப்பிரசுரம் வழங்குகிறதாம்.
குறிப்பாக அம்பேத்கர் பெரியார் கொள்கைகளை பரப்புவதன் மூலம் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் இவ்வமைப்பு திரட்டுகிறதாம். (இதன் மூலமாக தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறது மோடி அரசின் இந்துத்துவக் கும்பல்)
மேற்கண்ட குற்றச் செயல்களுக்கு (!!!) சாட்சியாக ஏப்ரல்-14 அன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அமைப்பு வழங்கிய துண்டுபிரசுரத்தைக் காட்டியிருக்கிறது இந்த மொட்டைக்கடுதாசி.
அமைச்சகத்தின் உத்தரவிற்கு பதில் சொல்லும் விதமாக சென்னை ஐ.ஐ.டி டீன் எம். சீனிவாசன், இவ்வமைப்பு ஒழுங்கு விதிகளை மீறியிருக்கிறது என்று சொல்லி எந்த விசாரணையுமின்றி தடை செய்திருக்கிறார். அது என்னடா ஒழுங்குவிதி என்றால் துண்டு பிரசுரமோ, போஸ்டரோ, டீனின் ஒப்புதல் இன்றி வழங்கப்படக் கூடாதாம்.
ஆனால், ஏப்ரல்-14-ல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கிற்கு பிற்பாடான நாட்களில் அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ஒழுங்குவிதி மீறலைக் கண்டுபிடிக்காத ஐ.ஐ.டி நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ் காலிகள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மொட்டைகடுதாசி அனுப்பிய பிறகு தான் இது ஒழுங்குவிதி மீறல் என்று எதேச்சதிகாரத்துடன் மாணவர் அமைப்பை தடை செய்கிறது என்றால் இந்து பாசிசத்தின் எத்துணை கொடூரமான காலகட்டத்தில் இந்த நாடு போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரியவரும்.
ஆனால் இதே ஒழுங்குவிதி மீறல் விவேகானந்தா வாசகர் வட்டத்திற்கு கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் சென்னை ஐ.ஐ.டி, தென்னிந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் கேந்திரமாக விவேகானந்த வாசகர் வட்டம் மூலமாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஐ.ஐ.டி விடுதி, நூலகங்களை கைப்பற்றுவது, ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடத்துவது, வெறியுடன் பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது என்று பல காலி வேலைகளை செய்து வருகிறது.
மேலும் குருமூர்த்தி இந்துத்துவ லெக்சர் கொடுக்கவோ, அரை டவுசர் அரவிந்த நீலகண்டன் ஏகாந்தவாதம் பேசுவதற்கோ அவாள் நிர்வாகம் சாம்பிராணி போடுகிறது. ஆனால் அம்பேத்கர்-பெரியார் பெயரைக் கண்டவுடனே அலறித்துடித்து ஆயிரம் ஆண்டுகால பார்ப்பனிய வன்மத்துடன் மாணவர்களின் சனநாயக குரல்வளையை நசுக்குகிறது. இந்த கேடுகெட்ட சந்தர்ப்பத்திலும் கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் திசைதிருப்புகிறது என்று சொல்வதன் மூலமாக தனது சனாதன வர்ணாசிரம பாசிசத்தை ஆழ்ந்து நிறுவுகிறது.
ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கான கல்வி நிலையமாக இருந்துவரும் வேளையில் சமூக பாசிசக் கொள்கைகள் மாணவர்களை உந்தித் தள்ளி போராட வைக்கிறது. நலிந்த பின்புலத்திலும் சாதியக்கட்டுமானத்தில் பழிவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களையும் சனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்ட பிற மாணவர்களையும் அங்கு அப்பட்டமாக செயல்பட்டு வரும் பார்ப்பன-பாசிசத்திற்கு எதிராக போராட வைக்கின்றன.
தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கங்களின் தாக்கத்தாலும் பல்வேறு மாநிலங்களின் மாணவர் இயக்கங்களின் பின்புலத்தாலும் சென்னை ஐ.ஐ.டியின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் முன் எப்பொழுதையும் விட மாணவர்களால் தீர்க்கமாக எதிர்க்கப்பட்டு போராடப்பட்டுவருகின்றன. இதன் குரல்வளையை நசுக்கும் சந்தர்ப்பமாக இந்துத்துவ பாசிச மோடி கும்பல் நேரடியாக தலையிட்டு மாணவர் அமைப்பை துடைத்தெறிய எத்தனித்திருக்கிறது.
ஆனால் சென்னை ஐ.ஐ.டி இந்துவக்காலிகளுக்கான இடமல்ல. அது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனம் என்றும் அது மக்களுக்கானது என்றும் அங்கே மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டிப்பதற்கு மாணவர்களாகிய எங்களுக்கு தார்மீக உரிமை உண்டு என்று சொல்கிற மாணவர்களின் குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து வருகிறது .இத்தகைய தருணத்தில் மாணவர்களுக்கு நாம் ஆதரவாக நிற்பதுடன் இந்து பார்ப்பனியத்தின் பாசிசக் கொள்கைகளை கருவறுத்திட வாசகர்களும் பிற கல்லூரி மாணவர்களும் அறிவுத்துறையினரும், வழக்கறிஞர்களும், மக்கள் திரளினரும் கைகோர்த்திட வேண்டும்.
இந்துத்துவம், கொடூரங்களின் கூடாரம் என்றார் அம்பேத்கர். ஸ்மிருதிகளையும் ஸ்ருதிகளையும் கொண்டிருக்கும் மதம் அழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர் (இதைச் சொன்னதற்காகவும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது!). இவையிரண்டிற்கும் வழிவகுத்து பார்ப்பனியத்திற்கு சாட்டையடி கொடுத்தது பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபு. ஆனால் இன்று இத்தலைவர்களின் பெயரைத்தாங்கிய மாணவர் திரளின் அமைப்பே கலைக்கப்பட்டு இந்து பாசிசம் நிலைநிறுத்தப்படுகிறது.
இதை இன்று நாம் எதிர்க்காவிட்டால் நாளை நாமும் அடிமையாவோம்! எனவே பார்வையாளராக இருந்தது போதும்! போராட்டங்களில் பங்கேற்பாளராக மாறுவோம்! கருத்துரிமைக்கெதிரான பார்ப்பன மதவாதத்தை வீழ்த்துவோம்! சமத்துவ சமூகத்தை நிறுவுவோம்!
இவண்: வழக்கறிஞர்கள், மதுரை
9865348163, 9443421368.
தகவல்: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை. 9443471003, 9865348163.
தஞ்சை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் செயல்பட்டு வரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் முன்முயற்சியால் பார் அசோசியேசனுக்கு கடிதம் வழங்கப்பட்டது. APSC மீதான தடையை நீக்க வேண்டிய அவசியத்தை தோழர்கள் விளக்கிப் பேசினர். இதனை ஏற்று பார் அசோசியேசன் சார்பாக நீதிமன்ற வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையையொட்டி தமிழகமெங்கும் நடத்தப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள் பற்றிய செய்திகளின் அடுத்த பகுதி…
02.06.2015 அன்று கோவையில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்துக்கு அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்துக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் மணிவண்ணன் தலைமையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலர் திலீப் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஆர்.ஐ, எஸ்.ஆர்.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களும், அரசுக் கலைக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் பங்கேற்றனர்.
பேருந்து நிலையத்துக்கே எதிரே என்பதால் பெருவாரியான மக்களின் பார்வையில் பதிந்தது. உளவுப் பிரிவு, அதில் பல வகைகள் மற்றும் போலீசு என ஒரு பெரும் படையே நின்று கொண்டிருந்தனர். நிருபர் ஒருவர், “தோழர் சீக்கிரம் துவங்குங்க, பாரத் சேனா கலெக்டர் ஆபீஸ் முற்றுகையாமா..? நாங்க அங்க போகணும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.
சி.ஆர்.ஐ, எஸ்.ஆர்.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களும், அரசுக் கலைக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் பங்கேற்றனர்.
நாம் ஒரு உளவுப் பிரிவு போலீஸிடம், “என்னங்க, கலெக்டர் ஆபீஸ் முற்றுகையாமா, அங்க போகாம இங்க நின்னுகிட்டுருக்கீங்க..” என கேட்க,
அவர், “அவனுக சும்மா டம்மி பீசுங்க, நீங்க இங்க முதல்ல முடிங்க., நாங்க அப்புறமா போய்க்கிறோம்” என்று கூறிவிட்டார்.
தோழர்களின் எழுச்சிகரமான முழக்கம் பேருந்து நிலையத்தை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை ஈர்த்தது.
அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் பேசுகையில், “மாணவ வர்க்கம் என்பது எப்போதும் துடிப்புடன் இருக்கும் வர்க்கம். நீ அங்கயே கை வச்சுட்ட. தேன் கூட்ல கை வச்ச மாதிரி, இனி இந்த நெருப்பு இந்தியா முழுக்க பற்றி படரும்” என சூளுரைத்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அதன் பின்னர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி பேசுகையில்,
“பார்ப்பானுக்கு முன் புத்தியும் இல்ல, பின் புத்தியும் இல்லைனு அய்யா சொன்னது சரியா போச்சு. சும்மா இல்லாம இப்பிடி பண்ணி, இப்ப இந்தியா முழுக்க பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டு போய்ட்டான்.
இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் மாதிரி டூமாங்கோலிகள் எல்லாம், எங்களுக்கு அம்பேத்கர் வேணும் பெரியார் வேண்டாம்னு சொல்லப் போக, எல்லோரும் ஏன்னு, கேட்க ஆரம்பிச்சு பெரியாரை படிக்க ஆரம்பிக்கராங்க.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தம்பி, இது நீ சொன்னதா கேள்வி கேட்காம ஏத்துக்கற லும்பன் கும்பல் அல்ல. படித்துக் கொண்டிருக்கும் மாணவ வர்க்கம். ஏன் எதுக்கு ன்னு கேள்வி கேட்கற வர்க்கம். அம்பேத்கரை கூட பார்ப்பனியம் அரவணைச்சு கெடுத்துருச்சு. ஆனா இறந்து போயி நாப்பது வருஷம் ஆனாலும் பார்ப்பனியத்துக்கு எதிரான நேர் நிகரான முனை மழுங்கா வாளாக இருக்கிறது அய்யா தந்தை பெரியார் தான். அதனால் தான் சொல்றோம். இந்த ஆரிய பார்ப்பன கும்பலை முறியடிக்க நாம பெரியாரிய ஆயுத பாணிகளாக மாறணும்னு.
சென்னை ஐ.ஐ.டி மாதிரி இந்தியா முழுக்க இருக்கிற ஐ.ஐ.டிகள்ல அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் துவங்குவோம். நீ என்ன புடுங்க முடியுமோ புடுங்கு, அப்டினு சொல்லி மாணவர்கள் தன்னெழுச்சியா துவங்கறாங்க..!
பார்ப்பானுக இப்ப கடும் சிக்கல்ல மாட்டிட்டானுக. தமிழ்நாடு பிஜெபி காரனுகளுக்கு என்ன பேசறதுன்னே தெரியாம ஒளரிட்டு இருக்கானுக. இப்டி தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கிட்டானுக இந்த காவிக் கல்லுளி மங்கனும் அவன் கூட்டமும்” என பேசி முடித்தார். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை
மதுரை
02/06/2015 மாலை 5.30 மணிக்கு மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ” எந்தவொரு நபரையும் பற்றி பேசக்கூடாது. எந்தவொரு சாதியை பற்றியும் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தை பற்றியும் பேசக்கூடாது” என ஏகப்பட்ட கூடாது களை நிபந்தனையாக்கி நெருக்கியது காவல்துறை .
மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர்.ராமலிங்கம் “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு மோடி அரசு தடை போட்டுள்ளது. இன்று மோடி அரசு அமல்படுத்தி வரும் இந்துத்துவ கொள்கைகளுக்கு அம்பேத்கரும் பெரியாரும் எதிரானவர்கள். பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக போராடியவர்கள். மோடியின் இந்து பாசிச திணிப்பு நடவடிக்கைகளை அம்பேத்கர் பெரியார் சிந்தனை கொண்டவர்கள் எதிர்ப்பதால் தான் இந்தத் தடை. இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை முறியடிக்க பள்ளி, வீடு, வீதி என எல்லா இடங்களிலும் இத்தகைய படிப்பு வட்டங்களை உருவாக்க வேண்டும். இது தான் அதற்கு சரியான தருணம்.” என உரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பு.ஜ.தொ.மு தோழர்.போஸ், “ஐ.ஐ.டி.யில் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்ததை அ.தி.மு.க எதிர்க்கவில்லை. மேலும், ஐ.ஐ.டி.யில் இந்துத்துவ கருத்துக்களை தடை செய்யவில்லை . மோடியின் ஆட்சி நீடிக்க நீடிக்க இது போன்ற தடைகள் அதிகரிக்கும் ” என அம்பலப் படுத்தி பேசினார்.
உசிலை வட்ட வி.வி.மு தோழர் தென்னரசு, ‘மொட்டை கடுதாசியை வைத்துக் கொண்டு தடை செய்திருப்பதை’ சுட்டிக்காட்டி, “ஹெச்.ராஜா போன்றவர்கள் பெரியாரை இழிவு படுத்தி பேசிய போது, ரோட்டில் விட்டு செருப்பால் அடித்திருந்தால், இன்று திமிர்த்தனமாக பேசி இருக்க மாட்டான்” என ஹெச்.ராஜா பேச்சிற்கு செருப்படி கொடுத்தார்.
ம.உ.பா.மைய மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனி ராஜ், பிஜேபி அரசு பெரியார் அம்பேத்கர் கருத்துக்களுக்கு தடை விதித்துக் கொண்டே, அம்பேத்கருக்கு விழா எடுப்பதை அம்பலப் படுத்தியும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாளர் போல பேசும் மோடியின் இரட்டை நாக்கை தோலுரித்தும் பேசினார் . தமிழகம் மட்டுமே பார்ப்பன எதிர்ப்பு மரபை வரித்துக் கொண்டு போராடி வருகிறது என்றும் இந்தத் தடையை முறியடிக்க வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கிப் பேசினார்.
இறுதியாக ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் , “கல்விக் கூடத்தில் பெரியாருக்கு என்ன வேலை ?” என்ற இமக அர்ஜுன் சம்பத் க்கு பதிலடி கொடுக்கும் விதமாக , “அதே ஐ.ஐ.டி யில் ஜெய்ஹிந்த் , வந்தேமாதரம், துருவா போன்ற 20க்கும் மேற்பட்ட பார்ப்பன அமைப்புகள் பயங்கரவாத பிரச்சாரம் செய்வது ஏன்” என கேள்வி எழுப்பியும் , “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தேசவிரோத சக்திகள் என்று சொல்லும் ஹெச்.ராஜாவே ! மோடி உலகம் முழுவதும் டூர் அடித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு நாட்டை கூவிக் கூவி விற்பது தேசத் துரோகம் இல்லையா ?” என பார்ப்பனக் கும்பலின் புளுகை , அவர்களின் தேசத் துரோக செயல்களை அம்பலப் படுத்தி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டம் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் படியாக இருந்தது.
ஆர்ப்பாட்டம் எழுச்சியூட்டும் முழக்கங்களுடன் மக்களுக்கு உணர்வூட்டும் படியாகவும், பார்ப்பனக் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் படியாகவும் இருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாகினர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் தலைமையில் பழைய ரயில்வே ஸ்டேசன் அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.
ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் முற்றுகையின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.
நகரின் மையப்பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு இழுத்துமூடினர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் முற்றுகையின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சமூக ஆர்வலர் ஜீ.வரதராஜன் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். சுற்றிலும் கூடியிருந்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வழக்கம் போல காலதாமதமாக வந்த போலிசார் சுமார் 30-க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தனர்.
தகவல் பு.ஜ செய்தியாளர், திருச்சி 9943176246
விழுப்புரம்
விழுப்புரத்தில் வி.வி.மு , பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் 02.06.2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இணைச் செயலர் தோழர் ரஞ்சித் தலைமை தாங்கி பேசுகையில், “ஐ.ஐ.டி என்கிற நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அது பார்ப்பனர்களின் கோட்டையாகவே செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் 400 க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள் தான். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமில்லை என்பது தான் அதன் வரலாறு. அப்பேற்பட்ட பார்ப்பனர்களின் கோட்டைக்குள் அம்பேத்கர்- பெரியார் கருத்துக்கள் நுழைந்தது தான் பார்ப்பன இந்துமதவெறி பாசிச மோடி கும்பலுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்துத்துவாவை விரட்டியடித்து தமிழகத்தில் சுயமரியாதையை நிலை நாட்டியவர் தந்தை பெரியார். இந்த மண்ணில் அம்பேத்கர்-பெரியாருக்கு தடை விதித்ததை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உடனடியாக தடையை நீக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று கூறி முடித்தார்.
“உடனடியாக தடையை நீக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.”
அடுத்ததாக திரு.ஜனார்த்தனன், புதுவை பல்கலைக்கழக மாணவர் பேசுகையில், “அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டது மாணவர்களின் கருத்துரிமையை பறிக்கும் செயல். மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது. அப்படி பேசினால் தடை விதிக்கப்படும் என்றால் உண்மையில் இது ஜனநாயக நாடு தானா” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “ஐ.ஐ.டி யில் சம்ஸ்கிருத-இந்தி திணிப்பு, மாட்டுகறிக்கு தடை, நிலம் கையகப்படுத்துதல் மசோதா போன்றவை குறித்தெல்லாம் மாணவர்கள் பேசியதால்தான் தடை விதித்துள்ளார்கள். அம்பேத்கர்-பெரியாரின் சித்தாந்தம் இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் இயங்க முடியாது. உடனடியாக இந்தத் தடையை நீக்க வேண்டும். இல்லை என்றால் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார்.
“மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது.”
அவரை தொடர்ந்து பேசிய திரு. புருசோத்தமன், புதுவை பல்கலை கழகம் மாணவர், “ஐ.ஐ.டி வளாகத்தில் விவேகானந்தர் படிப்பு வட்டம், வசிஸ்டர் படிப்பு வட்டம், ராமாயணம், வந்தே மாதரம் உள்ளிட்ட பிற்போக்கு மாணவர் அமைப்பினர் செயல்படுகின்றனர். அவற்றைத் தடை செய்யாமல் முற்போக்கு கருத்துக்களை பிரச்சாரம் செய்த, இந்தி, சம்ஸ்கிருத திணிப்புக்கு எதிராக கருத்தரங்கம் நடத்திய அம்பேத்கர்-பெரியார் அமைப்பை தடை செய்தது இந்து மதவெறியர்களின் காட்டுமிராண்டி செயல்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
இந்தி,சம்ஸ்கிருத திணிப்புக்கு எதிராக கருத்தரங்கம் நடத்திய அம்பேத்கர்-பெரியார் அமைப்பை தடை செய்தது இந்து மதவெறியர்களின் காட்டுமிராண்டி செயல்.
இறுதியாக, கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “மோடி அரசு பதவியேற்றது முதல் மக்கள் விரோத செயல்களையே செய்து வருகிறார். குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் சட்டம், மாட்டிறைச்சிக்கு தடை, மாணவர் அமைப்பிற்கு தடை என்று கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார். தாயையும் தண்ணீரையும் ஒன்று என்பார்கள். அது போல் தான் நிலமும். காலம் காலமாக உழுது பயிரிட்டு வந்த நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கொடுக்கும் புரோக்கர் வேலை செய்யும் தேச துரோகி மோடி என்பதை தான் அம்பலப்படுத்தினர் மாணவர்கள்.
அம்பேத்கர் பெரியார் பெயரில் இயங்குவது தான் பார்ப்பன மதவெறி கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு தான் இந்த தடை.
இதற்காக அமைப்பை தடை செய்வது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அம்பேத்கர் பெரியார் பெயரில் இயங்குவது தான் பார்ப்பன மதவெறி கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு தான் இந்த தடை. இந்த சமூக அமைப்பில் மாணவர்கள், சமூக ஜனநாயக சக்திகள் என யாரும் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதை தான் இந்த தடை நமக்கு உணர்த்தும் உண்மை… எனவே நிலவுகின்ற இந்த அரசு கட்டமைப்பை தகர்த்துவிட்டு நமக்கான அரசமைப்பை நிறுவினால் தான் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள். உழைக்கும் மக்கள் அனைவரின் பிரச்சனைக்கும் தீர்வு. அதற்கு நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரள வேண்டும்” என்பதை உணர்த்தும் விதமாக பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்- இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும், குழந்தைகள்,பெண்கள் ஜனநாய சக்திகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்
புதுச்சேரி
புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ௦2.௦6.2015 அன்று மாலை 5:30 மணிக்கு முத்தியால் பேட்டை மார்கெட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாநில பு.ஜ.தொ.மு தலைவர் எம்.கே.கே.சரவணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுவை பெரியார் திராவிட விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கோகுல்காந்திநாத், புதுவை பு.ஜ.தொ.மு இணை செயலர் தோழர் ஆர்.லோகநாதன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
தோழர் சரவணன் தனது தலைமை உரையில், “ஒரு இனபடுகொலை குற்றவாளியான மோடியின் கையில் நாடு ஒப்படைக்கப்பட்டதால் அவர் இன்று கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக, எடுபிடியாக செயல்பட்டு வருவதையும் நாடு மீண்டும் அடிமையாக்கப்படும் தேசதுரோகச் செயலையும்” அம்பலப்படுத்தினார்.
“சென்னை ஐ.ஐ.டி யில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் ஆய்வு மாணவர்களை சிந்திக்கத் தூண்டுவதால் அதற்கு இந்த பார்ப்பனபாசிச அரசு தடைவிதிக்கிறது” என்பதை தோலுரித்து, “இதை முறியடிக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என்று அறைகூவினார்.
தோழர் கோகுல்காந்தினாத் தனது கண்டன உரையில் பார்ப்பன மதவெறி பாசிச மோடிகும்பலை பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலபடுத்தினார். மோடி பதவிக்கு வந்ததும் சங்கராச்சாரி உட்பட கொலைகார கும்பல்களை அடுத்து அடுத்து விடுதலை செய்து நாட்டையே பாசிசமயமாக்கி வருவதை அம்பலப்படுத்தினார். “கருத்து சுதந்திரத்தை எப்போதும் தடுப்பதுதான் மோடியின் இழிசெயலாக தொடர்ந்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகதான் ஐ.ஐ.டி யில் படிப்பு வட்டத்தின் மீதான தடை” என அம்பலப்படுத்தினார். “பெரியாரும், அம்பேத்கரும் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடியதில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இங்குள்ள பார்ப்பன பாசிச கும்பலோ அம்பேத்கரை ஏற்பதாகவும் பெரியாரை எதிர்ப்பதாகவும் உளறிவருகின்றன” என்று கேலிக்கூத்தை திரைகிழித்து பேசினார்.
தோழர் லோகநாதன் தனது கண்டன உரையில், “ஐ.ஐ.டி என்பது உயர்கல்வி தொழில்நுட்ப கல்லூரி. அங்கு அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் பார்ப்பன பாசிச கும்பலின் பித்தலாட்டங்களை, ஜனநாயக ஒடுக்கு முறைகளை, சட்டத்தை மதிக்காமல் மனுநீதியை நடைமுறைப் படுத்தி வரும் மக்கள்விரோத செயல்களை அம்பலபடுத்தியது.
உழைக்காமல் உட்கார்ந்து தின்னும் இந்த பார்ப்பனபாசிச கும்பல் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது கண்டு நமக்கு கோவம் வரவேண்டாமா?” எனக் கூடிநின்ற மக்களிடம் கேள்வி எழுப்பினார். “எச் ராஜா என்கிற பார்ப்பனபாசிச நச்சுப்பாம்பு மாணவர்களுக்கு அரசியல் கூடாது. எனவும் படிக்க மட்டும் செய்ய வேண்டும் எனவும் உளறிவருகிறார். ஆனால் இந்த பார்ப்பன பாசிச கும்பல் பள்ளி மாணவர்கள்உட்பட நாடுமுழுவதும் “ஷாகா” என்கிற பெயரில் பார்ப்பன நச்சுக்கருத்துக்களை ஊட்டி அவர்களை கொலைகார கும்பல்களாக தனது அடியாள்படையாக வளர்த்து வருவதை அம்பலப்படுத்தி இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் ரவுடிகளையும் உருவாக்கிவரும் பாசிச கும்பல்களுக்கு முடிவு கட்ட ஜனநாயாக சக்திகளையும் புரட்சிகர அமைப்புகளோடு இணைத்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடவேண்டும் ” என விளக்கி பேசினார்.
“மக்கள் அதிகாரத்தை கையில்எடுக்காமல் இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க முடியாது ” என்ற உண்மையை உணர்த்தி பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி
கடலூர்
கடலூரில் “பார்ப்பன இந்துத்துவா தாக்குதல் முறியடிப்போம்” என்ற தலைப்பில் 02-06-2015 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பு.மா.இ.மு தோழர்கள் பார்ப்பனபாசிச நடவடிக்கையை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்குரைஞர் செந்தில்குமார் மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருக்கிற ஸ்மிருதி இரானி மோசடி செய்து படித்து பதவிக்கு வந்தவர் என்று அம்பலப்படுத்தி பேசினார்.
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இணைச்செயலர் தோழர் நந்தா, “ஐ.ஐடி ஒரு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். ஆனால், அது எப்போதும் பார்ப்பன-பாசிச நச்சு கருத்துகளை பரப்புகின்ற கூடாரமாக செயல்படுகிறது.
பெரியார்-அம்பேத்கர் இருவரும் பார்ப்பன கொடுங்கோன்மையை தோலுரித்து காட்டி மக்களுக்கு வழி காட்டியவர்கள். அப்பேற்பட்ட தலைவர்கள் பெயரில் இயங்குவதற்கு தடையா? மாணவர்கள் ஜனநாயக பூர்வமாக சிந்தித்து மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை விவாதிப்பது தவறா? அதே ஐ.ஐ.டி. யில் ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் அமைப்பு மூலம் அறிவியலுக்கு புறம்பான புராண கட்டுக்கதைகளை பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள்.
முகவரி இல்லாத யாரோ அனுப்பிய மொட்டை கடிதத்துக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் அன்றாடம் திங்கள் கிழமை மனுநாளில் கலக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்து பல வருடமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள், மக்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ஆகவே, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் இந்த அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.
சுமார் இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது எம்பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்களின் போராட்டம். நிரந்தரமாக்குதல், போனசு, மாதச் சம்பளம் போன்ற மிக மிக அடிப்படையான உரிமைகளுக்காகக் கூட கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலை.
பெஸ்ட் பம்ப்ஸ் முதலாளி ஸ்ரீப்ரியா வீட்டின் முன்பு குழந்தைகள் மனைவிகளுடன் குடும்பமாக வாரக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள் தொழிலாளிகள். தினசரி ஒரு அற்பப் பார்வையை வீசியபடி கடந்து போய்க் கொண்டும் வந்து கொண்டேயிருந்தார் ஸ்ரீப்ரியா. ஜூன் 1-ம் தேதி அவரை வெளியே போக விடாமல், “எங்களுக்கு பதில் சொல்லிவிட்டு போங்க..” என வழியை மறிக்க
சி.ஆர்.ஐ போன்ற கார்பரேட் முதலாளியை அல்லது பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கோ எதிராக பயன்படுத்த ஒரே ஆயுதம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான நக்சல்பாரிக் கட்சிதான்.
இத்துணை வாரமாக, “என்னடா இவங்க., ஒரு முடிவும் எடுக்க மாட்டேங்குறாங்க, இவங்க ஏதாவது முடிவெடுத்தா தானே நாம ஏதாவது ஒரு முடிவு எடுக்க முடியும்” என்று எண்ணியவாறு தேவுடு காத்திருந்த காவல் துறை “கெடச்சுதுடா சான்ஸ்: என்று எண்ணியவாறு வழக்கம் போல தனது ஒருதலைப் பட்சமான வழியில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது.
முறையாக தொழிலாளர் நலக் கோர்ட்டில் கேஸ் போட்டு, “ஏ.சி.எல் க்கு வா, டி.சி.எல்.க்கு வா” எனக் கூப்பிட்டு கூப்பிட்டு ஓய்ந்தும் வராமல் இருப்பது சட்ட விரோதம் இல்லை.
கலெக்டரிடம் மனு கொடுத்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் வராமல் இருப்பது சட்ட விரோதம் இல்லை.
20 வருடங்களாக தினக்கூலியாகவே வைத்திருந்து இ.எஸ்.ஐ, பி.எஃப் என எந்த உரிமையும் கொடுக்காமல் சட்டத்தையும் நியாயத்தையும் தனது உரோமத்துக்கு சமானமாக அலட்சியப்படுத்தியது சட்ட விரோதம் இல்லை.
ஆனால், இவ்வளவு சுமையையும் பொறுத்துக் கொண்டு சுமார் இரண்டு மாதங்களாக குடும்பமாக போராடியதையும் இந்த நொடி வரை போராடிக் கொண்டிருப்பதையும் அரசமைப்பின் அனைத்து உறுப்புகளும் அவாளுக்கு ஆதரவாக நிற்பதை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்போது இப்படி மறித்து, “எங்களுக்கு ஒரு நியாயஞ் சொல்லிட்டு போ..” என்று கேட்டது சட்ட விரோதமாம்.
குழந்தைகள் பெண்களோடு சேர்த்து சுமார் 90 பேர் கைதாகினர். அதில் பெண்கள் குழந்தைகளை தவிர்த்து விட்டு சுமார் 33 பேரை மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர்படுத்தி அதில் முன்னணியாளர்களான தோழர்கள் சரவணன், மகேந்திரன், சுரேஷ் மற்றும் நந்தகுமார் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.
பல முறை கூறினாலும் இது மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மை : இது போன்ற தொடர் போராட்டங்களை பாரம்பரியமான சங்கங்களை வைத்துள்ள தேசியக் கட்சிகளோ அல்லது இன்ன பிற எந்த அரசியல் கட்சியோ நடத்த முடியாதது.
சி.ஆர்.ஐ போன்ற கார்பரேட் முதலாளியை எதிர்ப்பதற்கோ அல்லது பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற மிக தீவிரமான முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கோ எதிராக பயன்படுத்த ஒரே ஆயுதம்தான் இருக்கிறது. அது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான நக்சல்பாரிக் கட்சிதான்.
தமிழ்நாட்டில் மட்டுமே இயங்கக் கூடிய அதிலும் போலிக் கம்யூனிஸ்டுகளை போல மூலைக்கு மூலை கிளை இல்லாத இந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடியை சமாளிக்க முடியாமல் எஸ்.ஆர்.ஐ கம்பெனியில் தனது சங்கத்தை கலைக்க தயாராகி விட்டது சி.ஐ.டி.யு.
“அவங்கள மாதிரியே ஒப்பந்தம் போடணும்னா அவங்க சங்கத்துக்கே போய்க்கங்க..!” என பொதுக் குழுவிலேயே அறிவித்தும் விட்டார்கள். நமது சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இது எப்படி சாத்தியமாகிறது? சி.ஆர்.ஐ மற்றும் பெஸ்ட் பம்ப்ஸ் மாதிரியான தொடர் போராட்டங்கள் எப்படி சாத்தியம். எப்படியெனில், இது நக்சல்பாரிப் படை.
ரசியப் புரட்சியை நடத்தி முடித்த லெனினியத்தின் வேலை நடை ரசியப் புரட்சிகர வீச்சு என்றால்., இங்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி யின் ரத்த ஓட்டமாக இயங்குவது நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பு. அதே நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பு தான் இந்து மதவெறியின் கழுத்தை நெறித்தவாறே முதலாளித்துவத்தின் நெற்றியில் துவக்கை நிறுத்துகிறது.
இப்போது இது சிறுபான்மையாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் புரட்சியின் அடிநாதம் நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பே. இங்கு இன்னும் ஏராளமான வெற்றிகளை ஈட்டக் காத்திருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையே இந்த கட்சி. இந்த நாட்டின் தேசபக்தர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் உணர்வும் உற்சாகமும் ஊட்டிக் கொண்டிருக்கும் ஒரே சொல் நக்சல்பாரி. இந்த போராட்டத்தின் உள்ளுணர்வு நக்சல்பாரி.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை
மே 25 நக்சல்பாரி பேரெழுச்சி நாள்
நக்சல்பாரி பாதைதான் கோவைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஏற்ற பாதை.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் தோழர் குமார வேல் தலைமை தாங்கினார். “நக்சல்பாரி சங்கமான பு.ஜ.தொ.மு வில் இணைந்த காரணத்தால் நாங்கள் சுயமரியாதை பெற்றோம். எங்கள் வாழ்நாளிலேயே கிடைக்காத உணர்வுகளை எல்லாம் பெற்றோம். பு.ஜ.தொ.மு வில் இணையாமல் இருந்தால் சி.ஆர்.ஐ முதலாளியால் சூறையாடப்பட்டிருப்போம். நக்சல்பாரி பாதைதான் கோவைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஏற்ற பாதை” என்று முழங்கினார்.
பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில் நக்சல்பாரியின் மாண்புகளை பட்டியலிட்டு பேசினார்.
“சில ராகங்கள் பாடும் போது தான் இனிமையாக இருக்கும். ஆனால் பெயரை கேட்டாலே இனிக்கும் ராகம், உச்சரித்தாலே உற்சாகம் தரும் ராகம் நக்சல்பாரி.
இமயத்தின் அடிவாரத்தில் இந்தியாவின் இதயத்தின் இடது மூலையில் மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி வட்டத்தில் சுமார் 300 சதுர மைல் பரப்பளவில் நக்சல்பாரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த ராகம் 1967 மே 25-ல் இசைக்கப்பட்டது. வில் அம்பு போன்ற கருவிகள் துணையுடன் ஆளும் வர்க்கங்களான ஜோதிதார் எனப்படும் நிலப்பண்ணைகளுக்கு எதிராகவும் அவர்களின் வேட்டை நாய்களான போலீசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக முழங்கியது நக்சல்பாரி.
இதன் இசை கேட்ட தோழர் மாவோ இந்தியப் புரட்சி என்னும் வசந்தத்தின் இடி முழக்கம் என்று வரவேற்றார்.
“உழுபவனுக்கு நிலம்” “உழைப்பவனுக்கே அரசியலதிகாரம்” என்கிற நக்சல்பாரியின் பாடல் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டு காலமாக உலக வங்கியின் கைக்கூலி மன்மோகன் சிங், ‘உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நக்சல்கள்’ என ஓயாமல் ஒப்பாரி வைத்தார்.
சத்தீஸ்கரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாசிச மோடி, ‘மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு ஏர்க்கலப்பையை தூக்க வேண்டும்’ எனப் பேசியிருக்கிறார்.
ஏர்க்கலப்பையை தூக்கி விவசாயம் செய்துவிட்டு விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் தூக்கில் தொங்க வேண்டும் என்பதுதான் மோ(ச)டியின் அறிவிப்பு.
1967-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி நடந்த ஆயுதந் தாங்கிய பேரெழுச்சியின் முக்கியச் செய்தியே அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போர்ப்பிரகடனமாக இருந்த காரணத்தால்தான் ஆளும்வர்க்கங்கள் இன்று வரை அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளனர்.
இந்த போர்ப் பிரகடனத்தின் சிறப்பு என்னவென்றால்
இது ஒரு ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியை குறிக்கிறது.
“ஏர்க்கலப்பையை தூக்கி விவசாயம் செய்துவிட்டு விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் தூக்கில் தொங்க வேண்டும் என்பதுதான் மோ(ச)டியின் அறிவிப்பு.”
நாடாளுமன்ற போலி ஜனநாயகத்திற்கு வெளியே உழைக்கும் மக்களை அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கின்ற போராட்டத்திற்கு அணிதிரட்டும் மையமாக விளங்குகிறது.
நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில் விழுந்து புரளும் ஒட்டுக் கட்சிகளை காரி உமிழ்ந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார வர்க்க ராணுவ அரசமைப்பை தாக்கித் தகர்ப்பதற்கான பேராயுதமாக விளங்கியது.
உழைக்கும் மக்களை நேரடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரே பாதையை காட்டியது.
நக்சல்பாரி பேரெழுச்சியின் போர்ப்பிரகடனத்தை தோழர் மாவோ தலைமையிலான அரசால் வழிநடத்தப்பட்ட சீனாவின் பீகிங் வானொலி சீரிவரும் இந்தியப் புரட்சி சிறுத்தையின் முன்பாதம் எனவும், போலி மார்க்சிஸ்டுகளை “மக்களை ஏய்க்கும் எதிர் புரட்சியாளர்களின் கருவி” என அம்பலப்படுத்தியது.
நக்சல்பாரியில் எழுந்த இந்த பேரெழுச்சி, உழைக்கும் மக்களுக்கு உண்மையான கட்சியாக யார் இருக்க முடியும் என்பதை பறைசாற்றியது. அந்த வகையில் இப்பேரெழுச்சி ஓர் உண்மையான புரட்சிகரமான கம்யூனிச கட்சிக்கு அடித்தளமிட்டது. இதன் தாக்கம் நாடு முழுவதும் இருந்தது.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் மாணவர்களும் சொந்த வாழ்க்கை மீதான பிடிப்பினைத் துறந்து புரட்சிகர இயக்கத்தில் இணைந்தனர்.
கோவையில் தோழர் எல்.அப்பு தலைமையில் சி.எஸ்.டபில்யு, காளீஸ்வரா சோமசுந்தரா மில் தொழிலாளர்கள் 1500 பேர் ஊர்வலமாகச் சென்று டவுன் ஹாலில் கூட்டம் நடத்தி நக்சல்பாரி போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இவர்களை நக்சல்பாரிகள் என்றும் நக்சலைட்டுகள் என்றும், தீவிர கம்யூனிஸ்டுகள் என்று ஆளும் வர்க்கம் முத்திரை குத்தி வேட்டையாடத் துவங்கியது. நக்சல்பாரிகளின் கட்சியாகிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 1969-ம் ஆண்டு ஆசான் லெனினின் 100-வது பிறந்த நாளான ஏப்ரல் 22-ல் உதயமானது.
“நக்சல்பாரியில் எழுந்த இந்த பேரெழுச்சி, உழைக்கும் மக்களுக்கு உண்மையான கட்சியாக யார் இருக்க முடியும் என்பதை பறைசாற்றியது. “
நக்சல்பாரியின் சிறப்பே புதிய பாதையை உருவாக்கி சாதனை படைத்தது ஆகும். போலி பாராளுமன்றப் பாதையை திரை கிழித்தது நக்சல்பாரி. சுரண்டல் ஒடுக்குமுறைகளை எதிர்க்க தன்னை தவிர வேறு மார்க்கம் இந்தியாவில் இல்லை என ஒளிச் சுடராக எழுந்து நின்றது, நிற்கிறது நக்சல்பாரி.
நக்சல்பாரியின் பின்னடைவுகள் எல்லாம், அதன் தோல்விகள் எல்லாம் நடை பழகும் குழந்தை தடுமாறி கீழே விழுவதை போன்ற அழகுதான். மாபெரும் தியாகங்களை நிகழ்த்திய, கோரிய நக்சல்பாரிதான் புரட்சிகர ஆற்றல் முன்பு தோல்வியும் அழகுதான்.
இன்று ஆளும் வர்க்கத்தின் அரசுக் கட்டமைப்பு தோற்றுப் போய் திவாலாகி எதிர்நிலை சக்திகளாக மாறி ஆளும் அருகதையற்று விட்டது. அதன் பாதிப்பால் தொழிலாளர்களான நாம் தெருவில் நிற்கிறோம்.
கதவடைப்பு செய்ய வேண்டுமானால் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என சட்டம் உள்ளது. சட்டத்தை மதிக்காமல் அனுமதி வாங்காமல் கதவடைப்பு செய்கிறான் முதலாளி. அரசின் கட்டுமான உறுப்புகள் முதலாளியை எதிர்த்து முனகக் கூட முடியவில்லை.
480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசின் ஒரு அங்கமான தொழிலாளர் துறை உத்தரவே போடுகிறது. ஒரு அரசு அதிகாரியின் உத்தரவுக்கு நீதித் துறை ஒரு காரணமும் கூறாமல் தடை போடுகிறது. பெஸ்ட் தொழிலாளர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பிஎஃப், இஎஸ்ஐ கூட பிடித்தம் செய்யாமல் அரசை ஏமாற்றுகிறார் முதலாளி.
அரசு கட்டமைப்பான தொழிலாளர் துறை; இஎஸ்ஐ கார்ப்பரேசன் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மாவட்ட ஆட்சித் தலைவர் என எங்கு புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
முதலாளியின் முன் அரசு கட்டமைப்பு செயலிழந்து நிற்கிறது. ஆளும் தகுதியிழந்து விட்டது. இதனை அடித்து நொறுக்கினால்தான் தீர்வு என வெளிப்படையாகத் தெரிகிறது. நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கட்டமைப்பு நெருக்கடி தெரிகிறது. இதனை எதிர்த்து போராடக் கூட யாருக்கும் துப்பில்லை.
ஆனால், நக்சல்பாரிகளான நமக்கு இதனை எதிர்த்து போராடும் புரட்சிகர ஆற்றல் உள்ளது. போராடுவது மட்டுமல்ல மாற்று மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவும் ஆற்றலும் உள்ளது. எனவே, நாம் நமது குடும்பம், நமது வீதி, நமது ஊர் என எங்கும் நாங்கள் நக்சல்பாரிகள் என்று முழங்குவோம், இந்த நாட்டின் உண்மையான புதல்வர்கள், நக்சல்பாரிகள்தான்” என அறைகூவல் விடுப்போம் என முடித்தார்.
நக்சல்பாரி எழுச்சி நாள் கூட்டத்தில் ஆர்வத்துடன் தொழிலாளிகள்
நக்சல்பாரியின் வரலாற்றை முதன் முதலில் செவி மடுத்த தொழிலாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். பொருத்தமான விடைகள் சொல்லப்பட்டன. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டம் தொழிலாளர்கள் மத்தியில் தேடலுக்கான புதிய திசைகள் திறந்து விட்டுள்ளன.
உருக்குலைந்து வரும் விவசாயம் நல்லாருந்துச்சுன்னா இந்த ஜனங்க ஏன் இப்படி திசைக்கொருத்தரா ஓடப் போறாங்க!
கலைவாணிக்கு முப்பது வயசு கூட இருக்காது. ஏழை விவசாயக் குடும்பம், அம்மா செத்து, குடிகார அப்பனோட மல்லுக்கட்ட முடியாம, இன்னொரு ஏழைக்கு வாக்கப்பட்டு, சென்னைக்கு குடி வந்து, அங்க ஒரு பணக்கார மாளிகையில குடும்பத்தோட இடுப்பொடியற மாறி வேல பாத்து, அந்த கிழட்டு முதலாளியோட வக்கிர புத்திய எதித்து கேட்டு, இருந்த வேலையும் போக, ஐந்து வயசு புள்ளையோட அடுத்து என்ன பண்ணணும்ங்கிற நிலைமையிலதான் சிங்கப்பூரு தெய்வமாட்டம் வந்துது.
ஏழைன்னாலும் கலைவாணி ஊருல கௌரவமா வாழணும்கிறது ஒரு நியதி. ஏழையா கஷ்டப்பட்டு வாழ்றத விட ஏழைன்னு சொல்லிக்கிறதுதான் நம்ம ஆட்களுக்கு ரொம்ப அவமானம். அதனாலதான் கலைவாணி பட்டணத்துக்கு போய் ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேல பாத்தா. இலவச வீடு திட்டத்துல சேந்து ஒரு இலட்சம் கடன வாங்கி குடிசைக்கு தளம்போட்டா. மகளை இங்கிலீஸ் மீடியத்துல சேக்குறதுக்கு பணம் சேத்து வைச்சா. இதுக்கா அவ அடைஞ்ச துன்பத்த பாத்தீங்கன்னா நம்பவே மாட்டீங்க. இதுல கொஞ்சம் தப்பி விழுந்தா அவங்க ஊர்ல உடனே மருந்து குடிச்சு முடிச்சுக்குவாங்க. கலைவாணி சின்ன வயசுல இருந்தே வாழ்றதுக்கு போராடிக்கிட்டே இருந்தவங்கிறதுன்னால இன்னும் அந்த முடிவுக்கு போகல.
அவளோட வீட்டுக்காரரு ஒரு வாயில்லாப் பூச்சி. மாடு மாதிரி வேல மட்டும் பாப்பாரு. அத வுட்டா ஒரு சின்ன விவரம் கூட விசாரிக்க தெரியாத அப்பாவி. இதுல எதுன்னாலும் கலைவாணிதான் முடிவு செஞ்சாகணும். ஆனா வேலை இல்லாம, ஊருக்குள்ள எப்படி தலை காட்டமுடியும்? வயித்து பிழைப்ப எப்படி ஓட்ட முடியும்?
அவளோட நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுய சாதி நண்பர் ஒருவர், “சிங்கப்பூரில் வீட்டு வேலை இருக்கு”ண்ணு சொன்னாரு. “கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வேலை செய்யலாம்னாலும், கையில் பெண்ணுக்கான விசா மட்டும்தான் இருக்கு”ண்ணு தூண்டில வீசுனாரு. மீனும் சிக்கியிருச்சு. “முதலில் நீங்கள் புறப்பட்டு போங்க, இரண்டு மாசத்துக்குள்ள உங்க வீட்டுக்காரரும் சேந்துக்கலாம். இதுக்காக நீங்கள் பத்து பைசா கூட செலவு வேணாம். பாஸ்போட்டும் விமான டிக்கட்டுக்கான பணமும் ஏற்பாடு செஞ்சா போதும்”னு பேசியிருக்கிறார்.
ஒரு ஏழைக்கு விடிவு காலத்தை கண்ணுல காட்டுறதுக்கு இது போதாதா என்ன? கலைவாணி சம்மதிச்சதும் அவரு மிச்ச ஏற்பாடுகள செஞ்சாறு.
“நீங்க வேலை செய்யுற வீடு தமிழ் குடும்பந்தான், எந்தப் பிரச்சனையும் இல்லை. சிங்கப்பூர் போய் சேருவதற்கான எல்லா செலவையும், சட்டரீதியான ஏற்பாடுகளையும் அவங்களே பாத்துக்குவாங்க”ண்ணு சொன்னாரு. “எத்தனையோ பேரு போக ரெடியா இருக்காங்க ஆனா நாணயமா இருப்பிங்கன்னு தான் உங்கள அனுப்புறேன்”னு நம்பிக்கையூட்டினார்.
மத்தவங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு நல்ல வேலை நம்மள நம்பி ஒப்படைச்சுருக்காங்கண்ணு கலைவாணிக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு. நாமெல்லாம் சீரியல பாத்தே அழுவுற அப்பாவிங்களாச்சே!
சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.
நான்கு மாத சிங்கப்பூர் சிறை வாழ்க்கையை அவளது வார்த்தையிலேயே கேளுங்க.
“சிங்கப்பூருல நான் வேலைக்கு போன குடும்பத்துல கணவன் மனைவியோட 18 வயசுல ஒரு பொண்ணு 13 வயசுல ஒரு பொண்ணுன்னு மொத்தம் நாலு பேரு இருந்தாங்க.
அந்த வீட்டுக்குள்ள நொழைஞ்சதுமே தூக்கி வாரி போட்ட முதல் விசயம் ஒரு கால் சட்டையையும், பிரா மாறி ஒரு பனியனையும் கொண்டு வந்து யூனிஃபாமாட்டம் போட்டுக்கன்னு சொன்னதும் உயிரே போச்சு. “இந்தாங்க இதையெல்லாம் நான் போட்டுக்க மாட்டேன். இதெல்லாம் போட்டுதான் ஆகனுன்னா இப்பையே என்னை வண்டி ஏத்தி விட்டுறுங்க நான் போயிர்ரே”ன்னு சொல்லிட்டேன். சரி வேல பாக்குற மாட்டுக்கு சட்டைன்னா என்ன, சேலைன்னா என்னண்ணு விட்டுட்டங்க போல.
அவங்க வீடு இருந்தது ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்துல. எங்க ஏறுனோம் எங்க எறங்குனோம் எத்தனாவது மாடியில இருக்கோம் எதுவும் தெரியாது. ஒரு மாசம் வரைக்கும் காலையில 8 மணிக்கி பூட்டிட்டு போனா ராத்திரி 8 மணிக்கு வந்துதான் திறப்பாங்க. வெளிக்காத்து இல்லாம போன ரெண்டு நாளுலயே மனசு வாடிப்போச்சு. கிராமத்துல சுத்தி சுத்தி பொழங்குனவங்களுக்கு ஒரு கட்டிடத்துக்குள்ளயே அடைஞ்சு கிடக்கணும்னா எப்படி இருக்கும்? சரி, நம்ம வயித்து கஷ்டத்துக்கு ஜெயில்ல இருக்குறதா மனச தேத்திக்கிட்டேன்.
பாத்ரூம தவிர வீட்ட சுத்தி கேமரா இருக்கும் ஒரு நிமிசம் நேரம் சும்மா உக்கார முடியாது. நடந்துகிட்டே இருக்கனும். கொஞ்ச நேரம் அக்கடான்னு உக்காந்தா கேமரா காட்டிக் கொடுக்கும். பாத்ரூம்ல கொஞ்சம் அதிக நேரம் இருந்தாக்கூட வூட்டம்மா கூச்சப்படாம ஏன் எதுக்குன்னு கேப்பாங்க. அந்தக்காலத்துல கங்காணி காலிப்பயலுவ மாறி இப்போ காமராவ அடியாள வச்சுருக்காங்க.
அதுனாலதான் எனக்கும் காமரா இல்லேங்கிறதால பாத்ரூம்தான் எதோ கொஞ்சம் பிடிச்சிருந்துச்சுன்னு சொல்லலாம். அங்கதான பல நாளு மனம் விட்டு அழுதிருக்கேன். கால் கழுவுற தண்ணியோட கண்ணீரும் சேந்து ஓடும்.
வீடு சன்னல் டாய்லெட்டு சுத்தமா தொடச்சு வாசனையா வச்சுக்கனும். நெதமும் பெட்சிட்டு, கதவு ஜன்னலு ஸ்க்ரின், தலையணை உரை, மிதியடின்னு ஒரு நாள் பாக்கி விடாம தொவைக்கனும். ஒரு நிமிசம் சும்மா இருந்தா, “என்ன ரெஸ்ட் எடுக்குரியா. வேலையை பாரு”ன்னுவா வூட்டம்மா. வீட்டுல யாரும் இல்லேன்னாலும் ரெஸ்ட் எடுக்க முடியாது. வந்தா நான் என்ன செஞ்சேன்னு காமராவா பாத்து தெரிஞ்சுக்குவாங்க.
A maid cleans a window in Singapore November 3, 2006. REUTERS/Nicky Loh
நான் சிங்கப்பூர் நாலு மாசத்துல ஒரு உருண்ட சோறு கூட சாப்புடல. அந்த வீட்டுல மூனு நேரமும் ப்ரெட்டுதான். பிரெட்ட துண்டு துண்டா வச்சு நடுவுல ஆம்லேட் இல்ல தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்கா, முட்டகோசு அது மேல ஏதோ டப்பாவுலேருந்து பிசுனாட்டம் ஊத்தி திம்பாங்க பாத்தாலே கொமட்டிக்கிட்டு வரும் என்னால திங்கவே முடியாது. வெறும் பிரெட்ட மட்டும் தின்னுட்டு தண்ணிய ஒன்னுக்கு ரெண்டு செம்பா குடிச்சிட்டு படுத்துருவேன்.
கறி மீனு வாங்கியாந்து ஃப்ரிஜ்ஜு நிறையா வச்சுருவாங்க. அதை அப்பிடியே கழுவிட்டு என்னமோ ஓவன்னு ஒரு அடுப்புல வச்சு சுட்டு அது மேல எதையோ ஊத்தி தின்னுவாங்க. இருவது ஆளு நின்னு வயல்ல நடவு செஞ்சாலும் ஒத்தாளா நின்னு ஆக்கி எறக்கிருவேன். ஆனா இவங்க சமையல செய்ய ரொம்பவே செரம்ப்பட்டேன். அவங்களுக்கு பிடிக்கிறது அவங்க நல்லா சாப்பிட்டடும். ஆனா நம்மள மாறி வேற ஊருக்காரங்க என்ன சாப்பிடுவோம்ணு கூட நினைக்கா மாட்டாங்களா?
அவங்க பேசரதே புரியாது. எல்லாருமே இங்லீஷ்லதான் பேசிக்குவாங்க. என்ன இங்லீஷ்லதான் திட்டுவாங்க. என்ன வேலை சொல்றாங்கன்னு புரியாது. அந்த அம்மாவுக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் ஆனா பழக்க தோசத்துல எல்லாத்தையும் இங்லீஷ்லேயே சொல்லும். புரியலன்னு அதுக்கும் திட்டும். ஸ்டுப்பிடுங்கற வார்த்தையும் அவங்க கொடூரமான மொகத்தையும் பாத்து ஏதோ திட்றாங்கன்னு புரியும். ஊமையப் போல கை சாடையும் கண் சாடையுமா கேட்டு தெரிஞ்சுக்கறதுக்குள்ள போதும்டா சாமி, பிசாசுங்களுக்கு மத்தியில மாட்டிகிட்டோன்னு மட்டும் புரிஞ்சுச்சு.
ஆரம்பத்துல ஏஜெண்டு என்ன சொன்னாருன்னா, சிங்கப்பூருல தமிழ வெச்சுக்கிட்டே பிழைச்சுரலாம், அரசாங்க மொழியா இருக்குன்னு ஏதோதோ சொன்னாரு. இங்க பாத்தா தமிழ் ஆளுங்களே கூட தமிழ்ல பேச மாட்டாங்க. சரி திட்டறதுக்கு தமிழ் ஒத்து வராதுன்னு, இங்கிலீசுல திட்டுறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.
ஒரு மாசம் கழிச்சு பக்கத்துல இருக்குற பள்ளிக்கூடத்துல போயி சின்ன பொண்ண அழைச்சுட்டு வான்னு அனுப்புனாங்க. கீழ இறங்கி வந்து மக்க மனுசங்கள பாத்ததும் தான் மூச்சே வந்துச்சு. ஒரு மாசம் வூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து, சுவரையும், காமராவையும் பாத்து பாத்து நானே கொஞ்சம் லூசாயிட்டேன்னு வையேன்.
ரெண்டு நாள் கழிச்சு அரைமணி நேரத்துக்கு முன்னாடியே கெளம்பி வெளிய வந்து வேடிக்க பாத்துட்டு பிள்ளைய அழைச்சுட்டு வந்தேன். அன்னைக்கி வீட்டுக்கு வந்ததும் வராத்துமா திட்டுச்சு பாரு அந்தம்மா! இங்லீஷ்சு பேய் படம் மாறி இருந்துச்சு.
அந்த பிள்ளையும் சும்மா சொல்லப்படாது நான் கூட்டிட்டு வரும்போது என் மோகத்தையே பாத்துட்டு வரும். யாருகிட்டயும் பேசுரனா, சிரிக்கிறனா எங்கனா பாக்குறனான்னு வந்ததும் ஒண்ணு விடாம போட்டு கொடுத்துரும். நம்ம கிராமத்துல குழந்தைங்க கொஞ்சம் மிராசுதார் வூடா இருந்தாலும் ஜனங்கன்னு இல்ல, வேலையாளுங்க எல்லாருகிட்டயும் மரியாதையா நடந்துக்குவாங்க. இங்க ஒரு குழந்தை கூட ஏட்டையா மாறி அதிகார தோரணையா வேலை செய்யுறவங்கள நடத்துங்கிறத என்னால ஜீரணிக்கவே முடியல.
அப்ப வூட்டம்மா என்ன திட்றாங்கன்னு புரிஞ்சுக்க முடியாம கட்டையாலேயே ஓங்கி மண்டையில போட்றலாம் போல இருக்கும்.
இதெல்லாம் பரவாயில்லை அந்த வீட்டுக்கார கம்முனாட்டி நடந்துகிட்டத நெனச்சா இருதயமே நடுங்குது. அம்மணமா பாத்ரூம்ல நின்னுகிட்டு துண்டு கேப்பான். பொண்டாட்டி காரி எடுத்து குடுக்க சொல்லுவா. தெரிஞ்சு பாதி, தெரியாம பாதின்னு நின்னுகிட்டு துண்ட வாங்குவான். அவன் ட்ரெஸ்சு போட்டுருந்தாலும் பாதி நேரம் முழுசா தெரியிரா மாறிதான் போட்ருப்பான். “பேப்பர எடு, ரிமோட்ட எடு, சோபாவுக்கு கீழ நல்லா பெருக்கு”ன்னு நாம அந்த கண்றாவிய பாக்குறா மாறிதான் வேலையும் சொல்லுவான், லூசுப்பய. இதெல்லாம் நம்ம சினிமாவுலதான் பாத்திருப்போம். இப்படியெல்லாம் நிசத்துல நடக்கும்கிறத அங்கதான் தெரிஞ்சுகிட்டேன்.
பொண்டாட்டி வேலைக்கு போன பிறகு அசிங்கமான படமெல்லாம் போட்டு பாப்பான். அதையும் வேல பாக்குற நேரத்துல போடுவான். நான் பாக்குறனான்னு ஓரக்கண்ணால நோட்டம் பாப்பான் அந்த படுபாவி. இதுக்குத்தான் தமிழ்நாட்டுல இருந்து வேலைக்கு பொண்ணுங்கள கூட்டிட்டு வாரனுகளோ இந்த பாவிங்கன்னும் தோணும்.
எனக்கு படுக்க கொடுத்த இடம் பெரிய பொண்ணு பொழங்குற ரூம். அந்த பொண்ணு பல நாளு வெளிய போனா ராத்திரிக்கு வராது. அத வெச்சு இந்தாளு ராத்திரி தூங்கும்போது அலமாரில எதையோ தேடறாப்போல ஒரசுரதும் கால மிதிக்கிறதும் அவனோட போக்கு கூடிகிட்டே போச்சு. ஏதோ நடக்கப் போகுது எப்புடியாவது நம்ம ஊருக்கு போயிறனுமின்னு தோனுச்சு. ஆனா எப்படின்னு தெரியாம அழுக மட்டுந்தான் வந்துச்சு. இத ரெண்டு வார்த்தையில ஆறுதலா சொல்லி அழவும் அங்க நமக்கு சனமில்ல. ஃபோனும் இல்லை.
இந்த நாலு மாசத்துல ஊருக்கு பேசணும்னா மாசத்துல ஒரு வாட்டி ஃபோன கொடுத்து வூட்டம்மா பேசச் சொல்லும். அதுலயும் ரெக்கார்ட போட்டுக்கு கொடுக்கும். நாம என்ன செய்யறோம்னு பாக்குறவங்க, என்ன பேசுறோம்ங்கிறதையும் பதிவு செஞ்சு கேப்பாங்களாம். நல்லா இருக்குடி உங்கூரு நாகரீகம்.
யாருகிட்ட சொல்றது எப்புடி தப்பிக்கிறதுன்னு ஒன்னுமே வெளங்கல. என்னை அனுப்புன ஊர்க்கார நண்பருக்கும் இந்த வீட்டு ஓனருக்கும் நேரடி தொடர்பு இல்ல. இவங்களுக்கிடையில ஏஜெண்டு இருந்துருக்கான். ஒரு மாசம் கழிச்சு எஜெண்டு என் சம்பளப் பணத்தை கமிஷனா வாங்க வந்தப்பதான் அதுவும் எனக்கு தெரியும்.
வந்தவரு, “எதுத்து பேசக்கூடாது, சொல்றத கேட்டு பணிவா நடந்துக்கனும், அவங்களா போன் பண்ணி கொடுத்தாதான் பேசனும், நீயா கேக்க கூடாது. செல்போன் வச்சிக்கிட்டு பேச கூடாதுன்னு அக்ரிமெண்ட் போட்டுருக்கு, இந்த பணத்த வச்சுகிட்டு யாருக்கும் தெரியாம காயின் போட்டு உம்மக(ள்) கூட பேசிக்க”ன்னு சொல்லி நம்ம காசுக்கு ஆயிரம் ரூவா கொடுத்துட்டு கெளம்பிட்டாரு. தாசில்தாரு ஐயாவ பாக்கப் போன எப்படி நடந்துக்கணும்னு நம்ம தலையாரி சொல்லித்தர மாறி இருந்துச்சு. ஃபோன்ல பேசக்கூடாதன்னெல்லாம் அக்ரிமெண்ட் போட்டுருக்காணுகண்ணா நான் என்ன மிலிட்டிரியிலயா வேல பாக்குறேன்.
கிட்டதட்ட நம்மள வித்துட்டாய்ங்கென்னு மட்டும் புரிஞ்சுது. இந்த நெலமையில யாருகிட்ட உதவி கேப்பேன். இனிமே நம்ம பிள்ளைய போயி பாக்க முடியாது போலருக்கேன்னு தோணும் போது தான் பிள்ளைய பாத்தே ஆகனுமுன்னு மனசு கெடந்து துடிச்சுது. பிள்ள நெனப்பு வந்தப்புறம் பத்து நாள் வரைக்கும் ஒரு பீசு ரொட்டி துண்டு கூட என்னால சாபிட முடியல. வந்த இடத்துல பிசாசுங்களுகிட்ட மாட்டிகிட்டோம் எப்படி தப்பிக்கிறதுன்னு நெனச்சேன்.
ஏஜெண்டு குடுத்த அந்த காசுலேருந்து திருட்டு தனமா ஸ்கூலுக்கு வரும்போது என்னோட மாமா பையனுக்கு ஒரு போன் போட்டேன். அவன் கொஞ்சம் படிச்சவன். எப்படியாவது உதவ முடியுமா, இன்னும் ஒரு மாசம் இங்க இருந்தேன்னா நான் வேற மாறி மாறிருவேன். இல்ல செத்துருவேன்னு அழுதுட்டேன். “அவங்க போன் நம்பர் தா முயற்சி செய்றேன்”னு சொன்னான். அத ஏழு கடல், ஏழு மலை தாண்டி எப்படியோ விசாரிச்சு சொன்னேன்.
“குழந்தைக்கி உடம்பு சரியில்லாம ரொம்பவும் சீரியசா இருக்கு ஆஸ்பத்திரியில சேந்துருக்கு உடனே அனுப்புங்க”ன்னு சொல்லி தந்தி குடுத்தான். அதுக்கு அவங்க மசியல. பிறகு போன் செஞ்சு, “குழந்தை நெலமை கவலையா இருக்கு, அம்மா பக்கத்துல இருக்கனும்ன்னு டாக்டர் சொல்றாங்க, இப்பையும் நீங்க அனுப்பலன்னா சட்டபடிதான் போகுற மாறி இருக்கும், ஒரு 15 நாள் லீவு குடுத்து அனுப்புங்க, அது போதும்”னு சொன்னதும் அந்தம்மா ஒத்துகிச்சு.
ஊருக்கு அனுப்புறதுன்னு முடிவு செஞ்சதும் மூணு நாளைக்கு என்னை தூங்கவே விடலை, “அலமாரிய சுத்தம் பண்ணு, பொழங்காத அழகு பாத்திரத்தை தொடச்சு வை”ன்னு வேலை குடுத்துகிட்டே இருந்துச்சு. எது செய்ய சொன்னாலும் பரவாயில்ல உசிரோட பிள்ளைய பாத்தா போதுன்னு தொனுச்சு.
ஏற்கனவே ஏஜெண்டு ஒரு மாச சம்பளத்த வாங்கிட்டு போயிட்டான். மீதி ரெண்டு மாச சம்பளத்தை இந்த வூட்டம்மாவே வச்சுகிச்சு. கேட்டா, “சிங்கப்பூர் வந்ததுக்கு சட்டபடியான செலவு 65 ஆயிரம் ஆச்சு. நீ வேலை பாத்த சம்பளம் இதுக்கே சரியாப் போச்சு. இனிமே வேலை பாத்தாதான் உனக்கு காசுன்னு ஒரு பைசா காசு கையில கொடுக்கல. ஜெயில்ல இருந்து வெளிய போறவ காசோட போகனுன்னா நினைக்கப் போறேன்?
நான் கிளம்பி வர்ரேன்னு எங்க வீட்டுக்கு கூட தகவல் சொல்லாம ஏர்போட்டுக்குள்ள விட்டுட்டு, கையில மூணு டிக்கெட்ட குடுத்துட்டு 15 நாள்ல திரும்பி வந்துருன்னு சொல்லிய கையோட அந்தம்மா பாட்டுக்கு போயிருச்சு.
எத்தன மணிக்கி பிளைட்டு கெளம்புது, எங்கன நிக்குது, எதுக்கு மூணு டிக்கட்டு குடுத்தாங்க எதுவும் புரியல. கேட்டு தெரிஞ்சுக்குற மாதிரி எந்த மூஞ்சியும் கண்ணுல அகப்படல. பித்துக்குளி மாதிரி ஒரே எடத்துல நின்னுகிட்டு இருந்தேன். தெய்வமாட்டம் ஒரு மகராசன் வந்தாரு. பட்டுக்கோட்டையாம். துபாய்க்கி போறாறாம். உதவி செஞ்சாரு.
“பத்து நிமிசம் தான் இருக்கு பிளைட்டு கெளம்ப. அது சி கேட்டுல நிக்குது. நீங்க இன்னும் ஏ கேட்டுல நிக்கிறிங்களே”ன்னு சொன்னதும் உள்ள உயிரும் போச்சு. “எம்பின்னாடியே ஓடிவாங்க”ன்னு சொல்லிகிட்டே ஓடுனாரு. முன்ன பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும் நான் ஏர்போட்ட கண்டேனா? ஃபிளைட்ட கண்டனா? பின்னாடியே ஓடுனேன்.
செக்கிங்கு நடக்கும் போது பட்டுக்கோட்டையாரு சொன்னாரு, “மலேசியாவுல, கொழும்புல நிக்கும் போது வெளிய எங்கயும் எழுந்துருச்சு போயிராதிங்க. போனிங்க அங்கேயே கெடக்க வேண்டியதுதான்.”
“என்னா சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியலயே, இது நம்மூருக்கு போற டிக்கெட்டு இல்லையா”ன்னேன்.
“இந்தியாதான் போறிங்க. ஆனா மூணு பிளைட்டு மூணு நாடு மாறி போறீங்க. அப்படிதான் டிக்கட்டு வச்சுருக்கிங்க”ன்னு சொன்னதும், முடிஞ்சது சோலி ஊருக்கு போயி பிள்ளைய பாத்தா மாறிதான்னு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். “அழுதுகிட்டு நின்னியன்னா பிளைட்டு போயிரும் சாமிய வேண்டிகிட்டு போயி ஏறுங்க”ன்னு அனுப்பி வச்சாரு. நாந்தான் பிளைட்டுக்கே கடைசி ஆளு, ஏறுன அடுத்த நிமிசமே புறப்பட்டுருச்சு.
காசு கம்மின்னு இப்படி சுத்தல்ல டிக்கெட்டு எடுத்து குடுத்துருக்கு அந்த மூதேவின்னு ஊருக்கு வந்துதான் தெரிஞ்சுகிட்டேன்.
விமானத்துல அழுதுகிட்டே இருந்தத பாத்துட்டு திருவாரூக்காரரு ஒருத்தரு என்ன ஏதுன்னு விசாரிச்சாரு. அப்பாடா இங்கேயும் ஒரு தெய்வம் இருக்குன்னு நிம்மதி மூச்சு விட்டுட்டு விசயத்த சொன்னேன். “நானும் திருச்சிதாங்க போறேன். கவலை படாதிங்க நான் உங்கள பத்திரமா அழைச்சிட்டு போறேன்”னாரு. சாமி கைவிடலன்னு தோணுச்சு. ஆனா அவரும் ஆதாயத்துக்குதான் என்ன விசாரிச்சாருங்கிறது அடுத்த பத்து நிமிசத்துக்குள்ள தெரிஞ்சு போச்சு.
மூணு பவுனு நகைய குடுத்து, “கழுத்துல போட்டுக்கங்க திருச்சில வந்து வாங்கிக்கறேன். ஆம்பளைங்க நகை எடுத்துட்டு வரக்கூடாது”ன்னாரு. அவரு தயவு இல்லாம ஊருக்கு போக முடியாது. வேற யாரும் தமிழும் கெடையாது. எது சொன்னாலும் செஞ்சுதான் ஆகனும். வாங்கி போட்டுகிட்டு விமானம் மாறி ஏறும் போது அவரு கூடவே இருந்தேன்.
திருச்சியில வந்து சோதனை செய்யும் போது அத்தன கேள்வி கேக்குறாங்க. “எத்த பவுணு. எதுக்கு கழுத்த மறைச்சு மறைச்சு வச்சிங்க, நகை வாங்கின பில்லு காமிங்க, சிங்கப்பூர் போயி எத்தன மாசம் ஆச்சு, எதுக்கு திரும்பி வர்ரீங்க, அதுக்கு உண்டான ஆதாரத்த காட்டுங்க”ன்னு என்னமோ நாந்தான் பெரிய கடத்தல்காரி மாறி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஏதோ மாட்டப்போறோம் புடிச்சு உள்ள வக்கெ போறாய்ங்கன்னு கதி கலங்கிருச்சு. இப்படியெல்லாம் கேள்வி கேப்பாங்கன்னு அந்த திருவாரூக்காரரு சொல்லியாவது இருந்துருக்கலாம்.
திருவாரூரு பையனை அழைக்க காரோட குடும்பமே வந்துருந்தாங்க. நகைய சொமந்து வந்த நன்றி கடனுக்கும், பொட்டப்புள்ளன்னு பரிதாபபட்டும் கார்லேயே எங்க கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற டவுணு வரைக்கும் கொண்டு வந்து விட்டாங்க. சிங்கப்பூர் போகும் போது ஆயிரம் ரூபா கொண்டு போனேன். இப்ப என்ன மிச்சம்? சிங்கப்பூர்ல ஏஜெண்டு கொடுத்த ஆயிரம் ரூபாயல ஒண்ணு ரெண்டு ஃபோன் பேசுன காசு போக உள்ள மிச்சம் இருந்துச்சு.
விடியக்கால நாலு மணி எங்க கிராமத்துக்கு பஸ்சு கிடையாது இருந்த காசுக்கு ஒரு ஆட்டோ புடிச்சு ஊரு வந்து சேந்தேன்.
செவத்துல அடிச்ச பந்தாட்டொம் இருந்த எடத்துக்கே திரும்பி வந்துட்டேன். இனி சிங்கப்பூருக்கு போறதுக்கு கடனா வாங்குன 15,000 ரூபாய எப்படியாவது அடைச்சாகணும்.
இனி பட்டினி கிடந்து செத்தாலும் கிராமத்துலேயே இருக்கணும்ணு முடிவு பண்ணிட்டேன். இத தெரிஞ்சுக்கத்தான் சிங்கப்பூர் போனேன்னு வையேன்!
உலகமயம் ஆக்கிரமித்திருக்கும் காலத்தில் பல்வேறு நிறுவன, தனிநபர் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு பெருமளவு கூலிப்படை தேவைப்படும் காலமிது. சொத்துக்களை கைப்பற்றவோ இல்லை ஒப்பந்த தொழிலாளிகளை வெளியேற்றவோ, மனிதர்களை கொல்லவோ என இக்கூலிப்படைகள் பல்வேறு சேவைகள் புரிந்து வருகின்றன.
கூலிப்படைக்கு தேவைப்படும் ஒழுங்கு வாங்கிய காசுக்கு ‘நேர்மை’யாக கொல்வதோ, குதறுவதோ சரியாக செய்து முடிக்க வேண்டும். படைகளின் தளபதி மற்றும் தாக்குதல் திட்டத்தை அறிவாளி கிரிமினல்கள் ஏற்றுக் கொண்டாலும் நடைமுறை ரவுடி வேலைகளுக்கு குடிசைப் பகுதிகளிலிருந்து உதிரியான இளைஞர்கள் தேவைப்படுவார்கள்.
வானரப்படையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதன்றி மேல்தட்டு, நடுத்தர வர்க்கங்களில் சொத்து மற்றும் இதர பண்பாட்டு பிரச்சினைகள், நுகர்வு கலாச்சாரங்களுக்காக நடக்கும் கொலைகள், வன்முறைகள் தனி. இத்தகைய கூலிப்படை சர்வீஸ்கள் மதத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் கூட பல்வேறு முறைகளில் தேவைப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்-ஸும் இப்படித்தான் கூலிப்படை இந்துக்களை மட்டுமல்ல கூலிப்படை இந்து இயக்கங்களையும் பயன்படுத்தி வருகிறது. அவர்களது கலவரம், வெறுப்பு, பிரிவினை, தாக்குதல்…… பின்பு தேர்தல், அறுவடை எனும் தொடர்கதைக்கு இக்கூலிப்படைகள் தேவைப்படுகின்றார்கள். 1947-க்கு பிந்திய வரலாற்றில் இதற்கென ஏராளமான சான்றுகள் உள்ளன.
இதன் சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
கடந்த 2012 ஜனவரி ஒன்றாம் தேதி, கர்நாடக மாநிலம் சிந்தகியில் உள்ள தாசில்தார் அலுவலம் பக்கமாக வந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தது. இந்திய நாட்டில், பாகிஸ்தான் கொடியை ஏற்றி, புத்தாண்டு கொண்டாடுபவர்கள் யார் என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.
சரியாக, அப்போது பார்த்து, ‘இது இந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் செய்த செயல்…’ என்ற நச்சு தூவப்பட்டது. ஒளியை விட வேகமாக இந்த வாசகம் மக்களின் செவியை அடைந்தது. முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, அடுத்தடுத்து வெவ்வேறு வார்த்தைகளுடன் இதே அர்த்தம் பொதிந்த சொற்களை எதிர்கொள்ள நேர்ந்ததும், ஒருவேளை அப்படி இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தார்கள். விளைவு, சில மணி நேரங்களில், சிந்தகி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.
ஆனால், இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஸ்ரீராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ஸ்ரீராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’ என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர்.
இதற்கு முன்பு ஜனவரி, 2009-ல் மங்களூரு பப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது ஸ்ரீராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்து கொண்டது.
மராட்டிய மாநிலத்தில் இயங்கும் சிவசேனாதான் கூலிப்படை இந்துத்துவாவின் முன்னோடி.
அதன் பிறகு இவ்வானரப்படையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.
இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ஸ்ரீராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கும் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.
மேலதிக விவரம் வேண்டுவோர் இணைப்பிலுள்ள கட்டுரைகள் படியுங்கள்.
மராட்டிய மாநிலத்தில் இயங்கும் சிவசேனாதான் இக்கூலிப்படை இந்துத்துவாவின் முன்னோடி. அதற்கு முன்பே சாவர்க்கர் புகழ் இந்து மகா சபை நேரடியாக பிரிட்டீஷ் காசில், தயவில் இயங்கியது என்றாலும் சிவசேனாதான் பரந்து பட்ட மக்களை கூலிப்படை அரசியல் நலனுக்காக அணிதிரட்டியது.
70களில் மும்பையிலுள்ள கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களை கருவறுக்க முதலாளிகள் மற்றும் காங்கிரசு கட்சி, தாக்கரேவின் சேனாவுக்கு காசும், அரசு ஆதரவையும் அள்ளிக் கொடுத்து வேட்டை நாய் போல வளர்த்தது. ஆரம்பத்தில் மராத்திய இனவெறியும் பின்பு அதிலிருந்து பிரிக்க முடியாத படி இணைந்திருக்கும் ஆதிக்க சாதி + இந்துமதவெறியும் கொண்டு சிவசேனா மக்களை பிரித்தது. தொழிற்சங்களை கைப்பற்றியது. பின்னர் பாபர் மசூதி இடிப்பின்போது பெரும் கலவரம் நடத்தி முக்கிய கட்சியாக மாறியது. தற்போது பா.ஜ.க கூட்டணியோடு அங்கே ஆண்டு வருகிறது.
82 மண்டைக்காடு கலவரத்தை மூலதனமாக வைத்து இராம கோபாலன் எனும் பார்ப்பன வெறியர் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் இந்து முன்னணியை வளர்த்தார்
ஆர்.எஸ்.எஸ் எனும் வட இந்திய பருப்பு, பெரியாரின் தமிழகத்தில் வேகாத காரணத்தால் இங்கே இறக்கப்பட்ட வானரம்தான் இந்து முன்னணி. வடக்கே விஸ்வ ஹிந்து பரிஷத் செய்து வந்த பணிக்கு இங்கே தமிழ் ஃபிளேவரில் இ.முவாக இறக்கினார்கள். 82 மண்டைக்காடு கலவரத்தை மூலதனமாக வைத்து இராம கோபாலன் எனும் பார்ப்பன வெறியர் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் இந்து முன்னணியை வளர்த்தார். கோவையும், குமரியும் பின்னர் சிறுபான்மை மக்கள் கணிசமாக வாழும் பகுதிகளும் இ.முவின் வேட்டைக்காடானது.
என்ன இருந்தாலும் இந்து முன்னணி என்பதே பார்ப்பன முன்னணி என்பதை சில சூத்திர இந்துமதவெறியர்கள் புரிந்து கொண்டு ‘கலகம்’ செய்தார்கள். உடனே நீங்கள் இவர்கள் பார்ப்பனியத்தை புரிந்து கொண்டு எதிர்த்தார்கள் என்று பாஸ் மார்க் கொடுக்க கூடாது. இவர்கள் இந்து முன்னணியின் ‘இலட்சிய’ப் பயணத்தில் கிடைத்த அரசியல் செல்வாக்கு, பணம், புரவலர் வசதிகளில் பங்கு கிடைக்காததால் பிரிந்து போனவர்கள். கொள்ளைக்கூட்டத்தின் சில்லறை சண்டைகளுக்கான பிரிவினை இது.
போனவர்கள் சிவசேனா, அனுமன் சேனா, சுடுகாட்டு போண்டா என்று ஊருக்கு ஒன்றாய் பன்றி விட்டைகளாக பெருத்தார்கள். இந்த விட்டையில் அளவில் பெரிதான ஒன்று இந்து மக்கள் கட்சி. கோவையில் மார்வாடி, சேட்டுக்கள் சிலரின் நேரடியான கவனிப்பில் இக்கூட்டத்திற்கு பெரும் பண வசதிக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் கோவையில் இக்கும்பல் தனக்கென்று ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, கமிஷன் என்று வைட்டமீன் ப ரீதியாக நிலைநாட்டிக் கொண்டது. இதன் பயனாக ஊருக்கு ஒன்றோ இரண்டோ சில வானரங்கள் இக்கூட்டத்திற்கு கிடைத்தன. எலும்புகளுக்கு அலையாத பைரவர் யார்?
அம்பேத்கார் வாழ்க, பெரியாரை ஒழிப்போம், கம்யூனிசத்தை விரட்டுவோம் என்று பல்வேறு அஜெண்டாக்களை இக்கூலிப்படை காசுக்கேற்ற பேக்கேஜ்களாக எடுத்து விடுகிறது.
மேலும் இராம கோபாலனின் இந்து முன்னணி எங்கே வீக்காக இருக்கிறதோ அதை இக்கூட்டம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. முதலில் இந்துமதமே வட இந்திய சமாச்சாரம் எனும் உண்மையை மறைக்கும் முகமாக ஈழம், தமிழ், சாதி வேறுபாடு கூடாது என்றெல்லாம் பேசியது. இதை வெட்கம் கெட்ட தமிழின குழுக்கள் அனைத்தும் அங்கீகரித்து மேடையேற்றவும் செய்தன.
ஆனால் தமிழ் இன குழுக்களின் மேடையில் ஏறிய வானரங்கள் அதில் தமது இந்துமதவெறியை பகிரங்கமாகவே பேசினார்கள். தமிழ இன குழுக்களும் அடிப்படையில் தமிழ் ஆர்.எஸ்.எஸ் ஆக செயல்பட்ட படியால் இவர்களிடையே பங்காளி உறவு இயல்பாக ஏற்பட்டது.
தமிழகத்தில் பார்ப்பனியத்தின் எதிரியான பெரியார் – திராவிட இயக்கம் – பொதுவுடமை இயக்கங்களின் செல்வாக்கு பொதுவில் கருத்தளவில் இன்னமும் இருந்து வருகிறது. இதை முறியடிக்க பார்ப்பன ஊடகங்கள் இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படையை பயன்படுத்திக் கொண்டன.
இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் தினமணி வைத்தி. மாதத்திற்கு ரெண்டு நடுப்பக்க கட்டுரையை அர்ஜுன் சம்பத் பெயரில் போட்டு அவரை தமிழ் இந்து சான்றோராக மார்கெட் செய்தார். பிறகு தந்தி டி.வி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இக்கூலிப்படை கூட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து விற்பனை செய்தன.
அம்பேத்கார் வாழ்க, பெரியாரை ஒழிப்போம், கம்யூனிசத்தை விரட்டுவோம் என்று பல்வேறு அஜெண்டாக்களை இக்கூலிப்படை காசுக்கேற்ற பேக்கேஜ்களாக எடுத்து விடுகிறது.
வழக்கமாக மெயின் ஸ்டிரீம் ஆர்.எஸ்.எஸ் கும்பலிலிருந்து வழி தவறிய ஆடுகளை பரப்பிரம்ம மேய்ப்பர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் முற்போக்கு மரபை முறியடிப்பதற்காகவே இக்கொள்கையை மாற்றி இந்து மக்கள் கட்சி எனும் இந்த வானரத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
பெரியார் சிலை உடைப்பு, தீட்திதர் ஆதரவு ஊர்வலம் என இக்கூலிப்படை பல்வேறு கிரிமினல் செயல்களை காசு வாங்கிக் கொண்டு செய்கிறது.
மேலும் கர்நாடக ஸ்ரீராம் சேனா போல அவ்வப்போது முழுப்பொய்களை வதந்திகளாக, அதிரடி உண்மைகளாக பரப்பவும் செய்கிறது. இதற்கு பல்வேறு ஊடகங்கள் ஒத்துழைத்தும் வருகின்றன.
நியூஸ் 7 சேனலில் ஐ.ஐ.டி பிரச்சினை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட கூலிப்படை தலைவர் ராம ரவிக்குமார்
சமீபத்திய ஐ.ஐ.டி பிரச்சினையில் கூட இக்கூலிப்படை ஆஜராகி அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட தடை சரி என்று ‘போராடியது’. மேலும் இதை நியாயப்படுத்தும் வண்ணம் ஐ.ஐ.டி-க்கு அம்பேத்கர் பெயரை வைக்குமாறு ஒரு கோரிக்கையை அவிழ்த்து விட்டது. மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்தபோது சிவசேனா நடத்திய கலவரம், அம்பேத்கரின் சொந்த நூலகத்தை கொளுத்திய அயோக்கியத்தனம், மும்பையில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அதை எதிர்த்த தலித் இளைஞர்களை போலிசால் சுட்டுக் கொன்றது, அம்பேத்கரின் ராமன் கிருஷண்ன புதிர் நூலை தடை செய்யக் கோரியது இவைதான் அம்பேத்கர் குறித்த இந்துமதவெறியரின் உண்மையான அக்கறை.
ஐ.ஐ.டி பிரச்சினை தொடர்பாக தமிழ் தொலைக்காட்சிகள் இக்கூலிப்படை தலைவர்களை வெட்கம் கெட்ட முறையில் அழைத்து அநாகரிகமாகவும், உளறலாகவும் பேசுவதை ரசிக்கின்றன. அவர்களும் கோவையில் பாகிஸ்தான் கொடி ஏற்றினார்கள், மோடி – ஸ்மிருதி இரானியை தவறாக இணைத்து பேசினார்கள் என்று கூசாமல் புளுகி அலறுகிறார்கள். இந்து மக்கள் கட்சி லும்பன்களை ஸ்டூடியோவில் ஏற்றும் போது பிக்பாக்கெட், ரவுடி, தாதா, மாஃபியா போன்றோரை மட்டும் புறக்கணிப்பது தர்மமாகாது.
சரி, இவர்கள் கூலிப்படை என்பதற்கு என்ன ஆதாரம்?
நியூஸ் 7 சேனலில் ஐ.ஐ.டி பிரச்சினை குறித்த விவாதம் ஒன்றில் இக்கூலிப்படையில் தலைவர் ராம ரவிக்குமார் எனும் வானரம் கலந்து கொண்டார். வடபழனி மேக்கப்பில் ஜொலிக்கும் சந்தனம், பொட்டு, காவி பட்டு என பார்ப்பதற்கே ஒரு மார்க்கமான மாமாவாக தென்பட்டார். மேற்கண்ட பாகிஸ்தான் கொடி ஏற்றம், தவறான உறவு செய்திகளை பாதி நேரம் பேசினார். மீதி நேரம் என்ன ஏசினார்?
உரையாடலை நடத்திய தொகுப்பாளர், “ஐ.ஐ.டியில் எதற்காக அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தார்கள்” என்று நூறு முறை கேட்கிறார். அந்த கூலிப்படை தலைவனோ எல்லா முறையும் கொட்டைப்பாக்கின் விலையை கூறுகிறார். ஆக வாங்கிய காசுக்கு கூவ வேண்டும் என்பதைத் தாண்டி என்ன மாதிரி கூவ வேண்டும் என்று கூட அந்த அடிமுட்டாளுக்கு தெரியவில்லை.
இது கூட பரவாயில்லை. “ஏன் அம்பேத்காரை ஆதரிக்கிறீர்கள், பெரியாரை எதிர்க்கிறீர்கள்” என்று கேட்ட போது அந்த ராம ரவிக்குமார் வழக்கமான ஆர்.எஸ்.எஸ் வானர பதிலை கூறுகிறார். அதாகப்பட்டது, ‘அம்பேத்கார் சீர்திருத்த வாதி, இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்கு மாறினார், பெரியார் பார்ப்பனர்களை வெறுத்தார், இந்துக்களை பிரித்தார், கைக்கூலி’ என்றெல்லாம் உருப்போட்டதை வெறுப்போடு வாந்தி எடுத்தார்.
அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர், “சரி அய்யா நான் இப்போது பெரியார் மேற்கோள் சிலவற்றை வாசிக்கிறேன், அதை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா” என்று கேட்டு விட்டு படிக்கிறார். அந்த வாசிப்பின் போது இடையிடையே பெரியாரை முட்டாள் என்று ஏகத்துக்கும் திட்டுகிறது அந்த கூலிப்படை லூசு. இறுதியில் தொகுப்பாளர் வாசித்த பிறகு இதுவரை வாசித்தது பெரியாருடையது அல்ல அம்பேத்கருடையது என்ற உண்மையை தெரிவிக்கிறார்.
இது வரை தான் ஆடியது எல்லாம் போய் இப்போது அடி முட்டாளாக அம்மணமாக மாறிவிடுகிறார். அம்மணத்தை மறைக்க அந்த தாடி லூசு தாட் பூட்டென்று மீண்டும் கத்துகிறது. “நீங்கள் கருத்தை எதிர்க்கிறீர்களா, நபரை எதிர்க்கிறீர்களா என்று நிரூபிப்பதற்கே இப்படி பொய் சொன்னேன்” என்று தொகுப்பாளர் கச்சிதமாக முடித்தார். பிறகும் விவாதம் தொடர்ந்தாலும் இந்த காப்பிய தருணத்திற்கு இணை இல்லை. இதை நிலைய விவாதத்தில் கலந்து கொண்ட ஏனைய பெருமக்கள் ரசித்தார்களா தெரியவில்லை.
ஆக, அம்பேத்கார் சொன்னதை பெரியார் சொன்னதாக எதிர்த்த அந்த அற்பம் உண்மையில் அம்பேத்கரை ஆதரிப்பதாக சொன்னதற்கு என்ன பொருள்? பெரியரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சதி மற்றும் பெரியாரை வந்தேறி என்று நிறுத்தும் தமிழின பாசிஸ்டுகளின் சதியோடும் இந்த கூலிப்படை தலைவன் பேசுகிறார். இதனால்தான் இந்துமத்தை எதிர்த்து இருவரும் ஒரு போல சொன்னதை அவர்கள் விசமத்தனமாக மறைக்கிறார்கள்.
இப்பேற்பட்ட கூலிப்படை கூட்டத்தை ஊடகங்கள் அழைத்து அழகு பார்ப்பதன் அவசியம் என்ன? ஏனெனில் எந்த முதலாளிகள் கூலிப்படைகளை அமர்த்தி உலவ விடுகிறார்களோ அவர்களே ஊடகங்களுக்கும் கொட்டி அளக்கிறார்கள். மேலும் பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வமற்ற தமிழக அடியாளாக இந்து மக்கள் கட்சி தேவைக்கேற்ப செயல்படுகிறது. அந்த வகையில் இந்த முட்டாள்களை நிலையத்தில் அமர்த்தி பணிவோடு கேள்வி கேட்க வேண்டியதும் ஊடகங்களின் கடமையாகிறது.
அதை நியூஸ் 7 தொகுப்பாளர் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனால் இதே கச்சிதத்தை அவர் மணற்கொள்ளையன் வைகுண்ட ராசனுக்கு பயன்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை.
அல்லது நாளையே வைகுண்டராசனின் கவனிப்பு பட்டியிலில் இந்து மக்கள் கட்சி வந்து விட்டால் இந்தக் கூலிப்படைக்கு இங்கேயும் சிவப்பு கம்பள வரவேற்பு நிச்சயம்.
இந்த வானரத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் ஏதோ முனைவர் கலாநிதி, முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தர் என்று ஒரு சூட்டு கோட்டு போட்ட கனவானும் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் ஏகப்பட்ட விஞ்ஞான உண்மைகள் உள்ளன, கால்வாசி ஜெர்மனி மக்களுக்கு தேவபாஷை தெரியும் என்றெல்லாம் இதுவும் உளறியது. முன்னது கூலிப்படை என்றால் இதை என்னவென்று அழைப்பது?
அதற்குள் இந்த வீடியோவை பார்த்து விடுங்கள்! காலியாக வயிற்றை வைத்துக் கொண்டு பார்க்காதீர்கள்! சிரிப்பின் வலியில் செத்தே விடுவீர்கள்!
கூலிப்படை என்றால் கொடூரமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை! ஆனால் கூலிப்படை குறித்து நாமும் இரக்கத்தோடு இருக்க வேண்டியதில்லை!!
பேச ஆரம்பித்தவுடன்
பேசினால் பிரச்சனையாகும்
என்கிறார்கள்.
“அடுத்தவனை கேள்வி கேட்க விடாமலே தடுத்துவிட்டு அவாள் மட்டுமே அறிவாளி என்று பேசித்திரிவதுதான் பார்ப்பனோ டெக்னாலஜி!”
சரி
பிரச்சனைகள் பற்றி பேசினால்?
அதுதான்
பிரச்சனையே என்கிறார்கள்!
இந்த
தொழில்நுட்பத்திற்கு பெயர்தான்
“இந்துவெறி இன்ஸ்டூயுட் ஆஃப் டெக்னாலஜி”!
அடுத்தவனை
கேள்வி கேட்க விடாமலே தடுத்துவிட்டு
அவாள் மட்டுமே அறிவாளி
என்று பேசித்திரிவதுதான்
பார்ப்பனோ டெக்னாலஜி!
இவ்வளவு காலம்
கேட்பாரற்ற
வேதக் கடிகையாகவும்
பார்ப்பனர் மட்டுமே பயிலும்
பிரம்ம புரியாகவும்
தனிக்காட்டு ராஜாங்கம் நடத்திய
தயிர்சாதக் கோட்டையில்
பெரியார்- அம்பேத்கர் குரல்
ஒலிக்கும் போது
அவாளுக்கு எப்படி இருந்திருக்கும்?
ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கம்பியில் விடலாம் ‘பூணூல்’ தாங்குமோ?
ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை
கம்பியில் விடலாம்
‘பூணூல்’ தாங்குமோ?
அனுமார்களும், ராமனும் மட்டுமே
கொட்டமடித்த
அய்.அய்.டி-ன்
அடர்ந்த கானகத்தை
பிளந்த சம்புகக்குரல்
இதோ….
இந்தியாவெங்கும் எதிரொலிக்கிறது….
அய். அய். டி. யை
இயக்குவதற்கு
அரசியல் இருக்கும் போது
அய். அய். டி மாணவனுக்கு
ஏன் அரசியல் கூடாது?
பன்னாட்டுக் கம்பெனித் திட்டங்களுக்கு
மெட்ரோ வளர்ச்சித் திட்டங்களுக்கு
உயர்கல்விக் கூடத்தை நீ பயன்படும் போது
உழைக்கும் மக்களின்
அரசியல் திட்டங்களுக்கு
நாங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது?
பன்னாட்டு கார்ப்பரேட்டுக்காக
நீங்கள்
சொம்பு ராமாயணம் நடத்தும் போது
எங்கள் பரம்பரை நிலங்களை பறிப்பதை எதிர்த்து
நாங்கள் ஏன் பேசக்கூடாது?
பேசுவோம்… பெரியார் குரலில், அம்பேத்கர் குரலில்…
பேசுவோம்…
பெரியார் குரலில்,
அம்பேத்கர் குரலில்…
விசாரிப்போம்…
ராமன் செய்த கொலையை
மோடி செய்யும் அழிவை!
பேசுவதற்கென்றே உங்களை
பிரம்மன் படைத்ததாய்
நீங்கள் நம்பலாம்,
கேட்ப்பதற்க்கு
நாங்கள் தயாராயில்லை!
பேசுகிறோம் கேளுங்கள்..
நாட்டை வைத்து சூதாடும்
உங்கள் ‘மாகாபாரத’க் குப்பையை
நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும்,
ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
ராமபாணம் தலை தூக்கினால்
பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
உனக்கு-
ராமனிருக்கும் இடம்தான்
சீதைக்கு அயோத்தி என்றால்,
இனி
பெரியார்-அம்பேத்கர் இருக்குமிடந்தான்
எங்களுக்கு அய்.அய்.டி.!
சென்னை ஐ.ஐ.டி.யில் “அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்” என்ற மாணவர் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 02-06-2015 அன்று நடத்தப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணியினர் ஒசூரில் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டிருந்த்து. அதற்கு போலீசு அனுமதி மறுத்தது.
ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் போலீசு.
இருந்தபோதிலும் தங்களது கருத்துரிமையை நிலைநாட்டிடும் வண்ணம் திட்டமிட்ட வகையில் இன்று ஒசூர் பேருந்து நிலையம் அருகே குவிந்த இவ்வமைப்பினர், மாணவர் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரியும், மோடி அரசின் கருத்துரிமையை பறிக்கும் சட்டவிரோத, மக்கள்விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் தங்களது பேனர், செங்கொடிப் பதாகைகளை உயர்த்திப்பிடித்து வழிநெடுகிலும் மக்களிடையே துண்டறிக்கைகளை விநியோகித்துக் கொண்டே விண்ணதிர முழக்கமெழுப்பியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். கைக்குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஊர்வலம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்தியாவில் ஆட்சி புரியும் அரசை விமர்சிக்கக் கூடாது, பெரியார் அம்பேத்கர் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வாதிகாரம் மட்டுமல்ல, இது பார்ப்பனிய பயங்கரவாதம். தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை இந்த நாட்டில் பயன்படுத்த கூடாது என்பது மக்களை ஒடுக்குவதின் மற்றொருவடிவம்.
ஒருபுறம் நில அபகரிப்புச் சட்டம், சாலை பாதுகாப்புச் சட்டம், வங்கித்துறை – இரயில்வே தனியார்மயம் என்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைக்கூலியாக செயல்படும் மோடி அரசை விமர்சிக்கவும் அதற்கெதிராக போராடவும் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனை மறுப்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடியாள் வேலை செய்வதற்கு ஒப்பானதாகும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன், இவ்வமைப்பின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர் சரவணன் மற்றும் இவ்வமைப்பின் முன்னணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
போலீசார் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்ததைக் கண்டித்து, “ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னாலே கைது செய்வது, கருத்துரிமையின் கழுத்தை நெறிப்பதாகும். எங்களது கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். பேச கூட அனுமதிக்காமல் கைது செய்வது சட்டவிரோதம்” என கண்டனம் எழுப்பினர்.
போலீசு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்காமல், அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது. இந்தக் கைதைக் கண்டித்து போர்க்குணத்துடன் முழக்கமெழுப்பியபடியே 30 பேர் கைதாகினர்.
பேரணியை மறித்து கைது செய்த போலீசு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பேருந்து நிலையத்தில் மாலையில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கைது நடவடிக்கைக் கண்டித்தும், போலீசை எதிர்த்தும் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.
தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.
கரூர்
சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்கருக்குத் தடையை எதிர்த்து கரூர் பேருந்து நிலையம் அருகில் 02-06-2015 அன்று காலை 10.30 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்
செல் : 9894166350
தர்மபுரி
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்திற்கு மோடி அரசின் தடையைக் கண்டித்து 02-06-2015 அன்று மாலை 4 மணிக்கு தருமபுரி தந்தி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளுக்கு போலீசு அனுமதி கொடுத்தது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக தோழர்கள் 2 நாட்களாக தருமபுரி நகரம், சுற்றியுள்ள கிராமங்கள், பேருந்து பிரச்சாரம் செய்திருந்தனர்.
2-ம் தேதி காலை திடீரென்று அனுமதி ரத்து என்று தகவல் தெரிவித்தது.
தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் இராஜா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை பலரும் தங்கள் செல்ஃபோனில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். ஒரு மணி நேரம் திட்டமிட்டிருந்தாலும், அரை மணி நேர ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு போலீஸ் ஆண் தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றியது.
பெண் தோழர்களை கைது செய்ய பெண் போலீஸ் இல்லாததால், பெண் தோழர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தடையை மீறிய ஆர்ப்பாட்டம் மக்களுக்கு போராட்டத்தை கற்றுக் கொடுப்பதாக அமைந்தது.
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி 9943312467
புரட்சிகர அமைப்புகள் பிரச்சாரம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
விருத்தாச்சலம்
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை மோடி அரசின் உத்தரவை கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்.
2014-ல் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து அரசும், ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்களும் நிறைவேற்றி வரும் மறுகாலனியாக்க மற்றும் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை அம்பலபடுத்தி பிரசுரம் வினியோகித்து கூட்டங்களை நடத்திவந்த அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்யக் கோரி ஆர்.எஸ்.எஸ் வானரம் ஒன்று அனுப்பிய மொட்டை கடுதாசிக்கு பாய்ந்து நடவடிக்கை எடுத்த மனித வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அவ்வமைப்பை தடை செய்துள்ளது ஐ.ஐ.டி நிர்வாகம்.
இதை கண்டித்து விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ன்ணி சார்பாக 02-06-2015 காலை 10 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ன்ணி சார்பாக 02-06-2015 காலை 10 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கிநடத்தினார். பறையிசை முழக்கமும், மோடியரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்களுடனும் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தின் தலைமையுரையில், “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் அந்த அமைப்பு மோடி அரசின் பார்ப்பன பயங்கரவாத நடவடிக்கைகளையும், மறுகாலனியாக்க தாக்குதல்களையும் அம்பலபடுத்தியதே என்பதையும் ஐ.ஐ.டியில் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் மீது பார்ப்பனியம் தொடுத்து இருக்கும் தாக்குதலின் ஒருபகுதி என்பதையும்” விளக்கி பேசினார்.
மேலும் இதை எதிர்த்து உழைக்கும் மக்களும் மாணவர் இளைஞர்களும் போராட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பேசினார்.
அடுத்தாக, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் புஷ்பதேவன் கண்டன உரையாற்றினார். தனது உரையில், “ஜெயலலிதா வழக்கு, ஜெயந்திரன் வழக்கு என அனைத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் காரணமாக விடுதலை செய்யப்படுவது நடந்துள்ளது. இன்னொரு பக்கம், மக்கள் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்றும் கொடைக்கானலில் மலைகளை ஆக்கரமிப்பதற்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இந்த அரசு அவர்கள்மீது தாக்குதல் நடத்தி வழக்கு போடுகிறது. ஐ.ஐ.டி விசயத்திலும் குறைந்தபட்ச சட்ட வழிமுறைகளை கூட இந்த மோடி அரசும் ஐ.ஐ.டியும் பின்பற்றவில்லை” என விளக்கி பேசினார்.
இறுதியாக, ஜெயங்கொண்டம் பகுதி பு.மா.இ.மு தோழர் சேகர் பேசும் போது, “பார்ப்பனியம் சாதி ரீதியாக உழைக்கும் மக்களை பிரித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதை முறியடிக்க உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்” என்பதை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டார்கள். பொதுமக்கள் திரளாக நின்று கவனித்தார்கள்.
அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தைத் தடை செய்த ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்து 02-06-2015 அன்று காலை 9.45 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தலைமையேற்று பேசிய ம.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிவேல், “அம்பேத்கர் – பெரியார் கருத்துக்குத் தடை என்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.
காமராஜர் நற்பணி மன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “இந்தத் தடையை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்தப் போராட்டத்தை நாடு முழுவதும் பரவச் செய்வோம்” என்று பேசினார்.
நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் .
சி.பி.எம்-ஐச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மரிய ஸ்டீபன் மற்றும் மூத்த வழக்கறிஞர் செலஸ்டின் மதவெறி திட்டத்தோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து பேசினர். விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு மார்க்சிய லெனியின கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பத்திரிகையில் வெளியான செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கன்னியாகுமரி மாவட்டம்
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வட்டம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கிலும் மாணவர்கள், மக்கள் திரளினர் மற்றும் அறிவுத்துறையினரிடையே வீச்சான விவாதங்களும் போராட்டங்களும் களச்செயல்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையையொட்டி பாசிச இந்துத்துவ மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும், இந்துமயமாக்கலையும் மாணவர்கள் தீரமுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக விவாத மேடையில் முன்வைக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்புத்தியின் பேரில் இந்துத்துவ ஊடகங்களால் முன்வைக்கப்படும் பல்வேறு அவதூறுகளையும் இந்தப் பதிவு, கேள்வி பதில் வடிவில் ஆதாரங்களுடன் எதிர்கொள்கிறது.
1. பார்ப்பனியத்தின் நைச்சியம் என்றால் என்ன?
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட பிறகு, அவாள் நிர்வாகம் தனது சொந்தப் பிள்ளையான இந்துத்துவக் காலிகளின் விவேகானந்தா வாசகர் வட்டத்தின் லோகோவை ராவோடு ராவாக மாற்றியிருக்கிறது. தற்பொழுதைய காட்சியின் படி விவேகானந்தா வாசகர் வட்டம் ஐ.ஐடி மெட்ராசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னிச்சையான மாணவர் அமைப்பு (IIT Madras Approved Independent Student’s Body) என்று புதிய வேதம் ஓதப்பட்டிருக்கிறது!
இதற்கு முன்பு வரை இந்த வாசகர் வட்டத்தின் அதிகாரப்பூர்வ வாசகம் An IITM’s Student Initiative for nation building through man-making என்பது மட்டுமே!
முந்தைய தரப்பு வாக்கியம் அவாள் நிர்வாகத்தின் ஒருதலைபட்ச நடவடிக்கையை அம்பலப்படுத்திவிடும் என்பதால் இப்படியொரு ஏற்பாட்டை கனஜோராக நிகழ்த்தியிருக்கிறது அவாள் கும்பல்.
பார்ப்பனியம் தன் இருப்புக்கு பங்கம் ஏற்படுகிற பொழுதெல்லாம் கடவுளின் பெயரில் விதிகளை உருவாக்குவது, ஸ்மிருதிகளைக் கொண்டு மக்கள் திரளை அடக்குவது, தீர்ப்பில் கணக்குப் பிழை விடுவது, இப்படி லோகோவை மாற்றி தான் ஒரு நடுநிலை என்று அழுச்சாட்டியம் செய்வது என பலதரப்பட்ட புல்லுருவித்தனத்தைத்தான் பார்ப்பனிய நைச்சியம் என்கிறோம். இந்த நைச்சியத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்! இது நீடிப்பதன் பொருட்டே மந்திரங்களும் வாக்கிய தந்திரங்களும் உருவாகின்றன. கீதை, இராமயாணம், பாரதம் போன்ற பாசிசக் கதைகளின் தோற்றமும் இத்தகையதுதான்.
மாற்றிய பின்பு:
தற்பொழுதைய காட்சியின் படி விவேகானந்தா வாசகர் வட்டம் ஐ.ஐடி மெட்ராசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னிச்சையான மாணவர் அமைப்பு (IIT Madras Approved Independent Student’s Body) என்று புதிய வேதம் ஓதப்பட்டிருக்கிறது!
மாற்றப்படுவதற்கு முன் (இணைய சேமிப்பு சேவையின் தரவுப்படி):
மே 16, 2015 அன்று எடுக்கப்பட்ட ஆதாரத்தின்படி இந்த வாசகர் வட்டத்தின் அதிகாரப்பூர்வ வாசகம் An IITM’s Student Initiative for nation building through man-making
2. அவாள் நிர்வாகத்தின் தீர்வு எத்தகையது? வரலாறு மாறியிருக்கிறதா?
ஆர்.எஸ்.எஸ்.-ன் கோட்டையாக இருக்கிற சென்னை ஐ.ஐ.டி, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான அறிவுபூர்வமான விமர்சனத்தையோ, விவாதத்தையோ முன்வைக்காமல் ஒழுங்குவிதி என்று இல்லாத ஒன்றை வைத்து பகடையை உருட்டிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கர்-பெரியார் பெயரைக்கண்டாலே அலர்ஜி என்பதற்காக, இல்லாத ஒழுங்குவிதிகளை ஐ.ஐ.டி காட்டுவதும், ஐ.ஐ.டி ஒரு தன்னாட்சி அமைப்பு என்று பாசிச மோடி அரசு கள்ள மவுனம் காப்பதும் புது வரலாறல்ல! பார்ப்பனியத்தின் போக்கே இப்படித்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு மதுரை வீரன் வரலாறு.
மாணவர்களுக்கு பல்வேறு சனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவிப்பதைப்போல அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டங்களை வீதிதோறும் அமைப்பதைப் போல அன்றைக்கு பார்ப்பனியக் கோட்டை கொத்தளத்திற்குள்ளேயே மதுரைவீரனுக்கு சிலை எடுத்தார்களாம்.
சென்னை ஐ.ஐ.டி போன்றே மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் தான் அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது. இதில் சக்கிலியரான மதுரை வீரன், கோயிலில் மீனாட்சிக்கு மஞ்சம் ஆட்டும் வெள்ளையம்மாள் மீது காதல் கொண்டு கோயிலுக்குள் புகுந்து சந்திக்கச் சென்றனாம். (இங்கே அவாள் கோட்டையில் முற்போக்கு மாணவர்கள் உள்ளே புகுந்து அம்பேத்கர்- பெரியாரை நிலைநாட்டுகின்றனர் என்பதைக் கவனிக்க!) வெள்ளையம்மாளும் மதுரை வீரனும் கோயிலில் இருந்து வெளிவருகிற பொழுது, பார்ப்பனிய நிர்வாகம் கோயிலுக்குள் ‘ஒரு சக்கிலியப் பையன் நுழைந்துவிட்டான்’ என்று கூக்குரல் இடவில்லை! மாறாக, “வெள்ளையம்மாளை கவர்ந்து செல்கிறான்” என்று சொல்லி நைச்சியமாக மதுரை வீரனின் மாறு கால் மாறு கை வாங்கினர்.
இங்கே மாறுகால்-மாறு கைக்கு பதிலாக அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டு பார்ப்பனியத்தின் புனிதம் காப்பது எத்தனிக்கப்படுகிறது. இங்கே பார்ப்பனிய நிர்வாகத்திற்கு எப்படி பாசிச மோடி அரசு, முட்டுக்காலாக இருக்கிறதோ அன்றைக்கு மதுரை வீரன் காலத்தில் திருமலை நாயக்கர் அரசு இருந்தது. பிறகு அரசு என்றால் அப்படித்தானே இருக்கும்?!
இன்றைக்கு இருக்கிற மாணவர் எழுச்சி போல், அன்றைக்கு மதுரை வீரனை வாழ்த்தி வணங்கினார்களாம் ஒடுக்கப்பட்ட மக்கள்! அதுவும் இன்றைக்கு, எப்படி மாணவர்களுக்கு பல்வேறு சனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவிப்பதைப்போல அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டங்களை வீதிதோறும் அமைப்பதைப் போல அன்றைக்கு பார்ப்பனியக் கோட்டை கொத்தளத்திற்குள்ளேயே மதுரைவீரனுக்கு சிலை எடுத்தார்களாம்.
மதுரை வீரனும் கம்படித்தடி வீரா என்று போற்றப்பட்டு வந்தானாம். இது கண்டு பொறுக்காத பார்ப்பனிய நிர்வாகம், ‘சக்கிலியன் என்பதற்காகத்தானே தீர்த்துக்கட்டினோம்; இன்றைக்கு கோயிலுக்குள்ளேயே சக்கிலியனுக்கு சன்னிதியா’ என்று விழிபிதுங்கி இஞ்சி தின்ன ஓநாயாக அவாள் கூட்டம் புதுப் புது அமைப்பு விதிகளை உருவாக்கியதாம்.
துரோகத்தின் வரலாறாக மதுரை வீரன் வெளியேதான் நிற்கிறான்! இதே தீர்வைத் தான் அவாள் நிர்வாகமும் அம்பேத்கர்-வாசகர் வட்டத்திற்கு வைத்திருக்கிறது.
அரசு என்றால் அதன் வஞ்சகத்தைப் புரியாத மக்கள், திருமலை நாயக்கரின் கட்டுப்பாட்டிற்கு இணங்கி, “மதுரைவீரனுக்கு கோயில் சரி. ஆனா அது ஏன் அவாள் கோட்டைக்குள்ள இருக்கணும்; பேசாம கோயிலுக்கு வெளிய வெச்சுட்டா என்ன”வென்று ரூல்ஸ் போட்டு தீட்டு என்பதைக் காரணம் காட்டி மதுரை வீரனுக்கு, கோயிலுக்கு வெளியே ஒரு சின்னக் கோயில் கட்டினார்களாம்.
அன்றைய நாளிலிருந்து இன்றைக்குவரைக்கும் துரோகத்தின் வரலாறாக மதுரை வீரன் வெளியேதான் நிற்கிறான்! இதே தீர்வைத் தான் அவாள் நிர்வாகமும் அம்பேத்கர்-வாசகர் வட்டத்திற்கு வைத்திருக்கிறது.
புதுப்புது அமைப்பு விதி என்ற பெயரில் அம்பேத்கர்-பெரியார் பெயர்களை போராட்டக்களத்தை விட்டே விரட்டி விட்டால் என்னெவென்று யோசிக்கிறது அவாள் கும்பல்.
ஊர் பற்றி எரிகிற பொழுது, பார்ப்பனக் கோட்டையை மக்கள் திரள் தாக்க முற்படுகிற பொழுது, அனந்த சயனத்தில் இருக்கும் பெருமாளுக்கு ஐந்து வேளை தீபாராதனை காட்டும் அவாள் கும்பலின் செயலுக்கு மண்டகப்படி வேலை என்று பெயர். இதன் படி தடை செய்யப்பட்ட அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நியாயம் கேட்கும் பொருட்டு போராடப் போவதாக அறிவிக்கிற பொழுது அவாள் நிர்வாகம் சர்வே என்ற பெயரில் மாணவர்களுக்கிடையே மண்டகப்படி வேலையை ஆரம்பித்திருக்கிறது. மேற்படி அவாள் நிர்வாகம் சர்வே என்ற பெயரில் என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்கிறது என்று சாம்பிளுக்கு இரண்டு பார்க்க வேண்டும்.
1. மாணவர் கூட்டம் (Board of students meeting) இன்னும் நடைபெறாமல் இருக்கிற பொழுது, அம்பேத்கர்–பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நினைக்கிறாயா?
பார்வை: மாணவர் கூட்டம் (Board of students meeting) இன்னும் நடைபெறவில்லை என்று சொல்கிற அவாள் நிர்வாகம் பிறகு மாணவர்களின் ஒப்புதல் இன்றி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை எப்படி தடை செய்ய இயலும்? எதன் அடிப்படையில் ஐ.ஐ.டி நிர்வாகம் இந்தக்கேள்வியை முன்வைக்கிறது?
2. APSC அமைப்பு, மாணவர் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டுதான் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க சென்றிருக்க வேண்டுமென்று நினைக்கிறாயா? இது இன்னொரு கேள்வி
பார்வை: இது ஒழுக்கக் கேள்வி எனில் இந்துத்துவக் காலிகள் மாணவர் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு அது எடுபடாமல் தான் பாசிச மோடி அரசிற்கு மொட்டைக் கடிதாசி போட்டார்களா? இதே கேள்வியை ஏன் அவாள் நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் கும்பலை முன்வைத்துக் கேட்கவில்லை?
பிள்ளை இல்லாதவன் வீட்டிலே கிழவன் துள்ளி விளையாண்ட கதையாக மோடி கும்பலின் இந்துத்துவ திணிப்பு ஊழிக்கூத்தாக இருக்கிறது. இந்த ஊழிக்கூத்து தான் புதியதலைமுறை நேர்படப் பேசு விவாதத்திலும் ஏ.பி.வி.பி இந்துத்துவக் காலிகளை “இது எங்கள் ஆட்சி” என்று கேலிக்கூத்தாக வெளிப்படையாக கொக்கரிக்க வைத்திருக்கிறது!
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அங்கே மண்டபத்திற்குள் நடப்பதோ இந்துத்துவக் காலிகளின் அட்டூழியம்! ஏற்கனவே தீஸ்தா செதல்வாத்தின் கருத்துரையின் போது உள்ளே புகுந்து ஆட்டம் போட்ட ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர்களை வேடிக்கை பார்த்த அவாள் நிர்வாகம் இன்றைக்கு சர்வே எடுக்கிறது என்றால் மண்டகப்படியின் முழுப்பரிமாணம் அத்தகையது என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
3. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்துத்துவத் திணிப்பு நடவடிக்கைகள் இது முதல் தடவையா?
இல்லை. இன்றைக்கு எப்படி இந்துத்துவ வானரங்கள் மொட்டைக் கடிதாசி கொடுத்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம், மோடி அரசுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் இருக்கிறது என்று சொல்லி அமைப்பை தடை செய்து பாசிசத்தை கட்டவிழ்த்து விடுகிறார்களோ அதேபோன்று மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆர்.எஸ்.எஸ், ‘ஐ.ஐ.டி.-ல் படிக்கிற மாணவர்கள் அசைவ உணவால் தாம்ச குணங்களை பெறுவதாகவும் சைவ உணவு உண்பவர்களுக்கு தனி உணவு விடுதி வசதியை ஏற்படுத்தி தரவேண்டுமெ’ன கடிதம் எழுதியது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அன்றைக்கும் ஸ்மிருதி ஈரானி அமைச்சகம், “அனைத்து ஐ.ஐ.டி.யிலும் சுத்த சைவ உணவு விடுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று சுற்றறிக்கை வெளியிட்டது.
இந்த சுற்றறிக்கை வருவதற்கு முன்னரே இத்தகைய பாசிச அரங்கேற்றத்திற்கு முன்னோடியாக இருந்தது சென்னை ஐ.ஐ.டிதான். அன்றைக்கு விடுதியில் ஊழியர் சங்கத்தில் இருந்த நிரந்தர தொழிலாளிகள் ஒவ்வொரு விடுதியிலும் சிறப்பான முறையில் உணவு வழங்கி வந்தனர். அன்றைக்கு இதே இந்து வானரங்கள், “முட்டை, அசைவம் வழங்குவது சுத்தம் பத்தம் இல்லை” என்று சொல்லி சுத்த சைவ உணவு விடுதியை தனியாக ஏற்படுத்திக்கொண்டனர். சுத்த சைவ உணவு விடுதி என்பது அசைவ உணவு விடுதியில் இருந்தே பாத்திரம் கரண்டி என அனைத்து வகையிலும் முற்றிலும் வேறுபட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இது அவாளின் விருப்பம் என்றால் மாட்டுக்கறி உண்பதும் இந்துக்களின் உரிமை தான். அதை அவாள் நிர்வாகம் நிறைவேற்றியதா?
சொல்லப்போனால் ஸ்மிருதி ஈரானியின் சுற்றறிக்கைக்குப் பின்பு பெரும்பாலான ஐ.ஐ.டி.க்களில் அசைவ உணவு வழங்குவதே நிறுத்தப்பட்டிருக்கிறது. டில்லி ஐ.ஐ.டி.யில் அசைவ உணவு வழங்குவதற்கு கேண்டின்களில் டெண்டர் எடுக்க யாரும் வரவில்லை என்ற பொய்க்காரணம் முன்வைக்கப்பட்டது. இது பாசிச அரங்கேற்றலுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.
4. சென்னை ஐ.ஐ.டி, உயர் கல்வியின் கேந்திரமா? ஆர்.எஸ்.எஸ்ஸின் கேந்திரமா?
அரசிலும் ஆட்சியிலும் மதத்தை தனியாக பிரிப்பதுதான் பொது சிவில் சமூகத்தின் உண்மையான நோக்கம் என்றிருக்கும் பொழுது, இது வரை ஐ.ஐ.டி சென்னையைப் பற்றி அறியாதவர்கள் இந்தப் புகைப்படத்திற்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருமுறை பட்டம் வழங்குகிற பொழுது பட்ட உறுதியேற்பு மொழியோடு வேத வழிபாட்டை சமஸ்கிருதத்தில் அச்சடித்துத் தருகிறது சென்னை ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம். அந்த சமஸ்கிருத சுலோகம் இப்படி போகிறது.
மக்கள் வரிப்பணத்தில் செயல்படுகிற ஓர் உயர்கல்வி நிறுவனத்திற்கு இது வெட்கக்கேடான விசயம் இல்லையா? இங்கு நூற்றுக்கு 99% விசயங்கள் இப்படித்தான் நடைபெறுகின்றன. வேத காலத்தில் நியுரோ சயின்ஸ் என்று அடித்துவிடுவது, சின்ன ஜீயரைக் கூப்பிட்டு பரிணாமம் குறித்து வகுப்பெடுப்பது என்று இங்கு நடக்கிற அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் இந்துத்துவத்தை சுவாசிக்கிற அற்ப இதயங்கள், ‘அரபு நாட்டில் குரான் இருக்கிற பொழுது இந்திய நாட்டில் இந்துமதம் தான் இருக்கும்’ என்று பல்லிளிக்கின்றன.
இந்தக் கூட்டம் இதை இந்துமதத்தின் அதிகாரப்பூர்வ எழுத்து என்று எதை வைத்து சொல்கிறது? இது யாருக்கெல்லாம் பொதுவானதாக இருந்தது? இது எப்பொழுது இந்த மக்களின் மதமாக இருந்தது என்று நேர்பட விவாதிக்க முன்வருமா? தடையே விவாதிக்க கூடாது என்பதற்குத்தானே!
5. எதற்காகத் தடை? இனி அடுத்தது என்ன?
அருந்ததிராய் சரியாகச் சுட்டிக்காட்டுவதைப் போன்று இத்தகைய மாணவர் அமைப்புகள் இச்சமூகத்தின் ஆகக்கேடான முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்தையும் சரியான பார்வையில் முன்வைத்து விமர்சிக்கின்றனர். இது ஆளும் வர்க்கத்தை எதை விடவும் அதிகமாக வினைபுரிய வைக்கிறது. இதை அவர்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்த சமூக விடுதலைக்கான உயிர்நாடியை செயல்தந்திரத்தை இன்றைக்கு மாணவ சமுதாயம் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.
மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் கும்பல்களும் பாசிசத்தை செலுத்தும் இந்துத்துவக் கும்பலும் 50-50 சமன்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆகக்கேடான முறையில் சுரண்டி வருகிறது. இன்றைக்கு சந்தைக்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் கார்ப்பரேட்டுகளின் பகாசுர கொள்ளைக்கு தீனி போட முடியாத ஏழையாக இந்தியா நிற்கப்போகிறது.
இந்த இரு கூட்டுக்களவாணிகளையும் அடித்துநொறுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை மாணவ சமுதாயம் அரசியல் அரங்கிற்கு தீர்க்கமாகக் கொண்டுவந்திருக்கிறது. புரட்சியின் வித்துக்கள் இப்படித்தான் தோற்றுவிக்கப்படுகின்றன; ‘இந்தப்போராட்டம் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை’ என்று பகத்சிங் சொல்லியதை அரசியல் அரங்கில் நிரூபித்துக்காட்டுகின்றன. அதை பதியம் போட்டு வளர்த்தெடுப்பதும் போராட்டத்தில் ஒன்றிணைவதும் சனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவர் முன் நிற்கும் கடமையாகும்.
6. எல்லாம் சரி. போராடுவதற்கு பயமாக உள்ளதே என்ற கேள்வி இருக்கிறதா?
அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் தெருவில் இறங்கி போராடிய பொழுது ஆளும் வர்க்கமும் காவல்துறையும் மூர்க்கமாக போரிட்டன. தோழர்கள் பாசிசத்தை அம்பலப்படுத்தி ஆளும் வர்க்கத்தின் முகத்திரையை கிழித்தனர். இதைப் பார்க்கிற மாணவர்களுக்கு நாமும் போராட வேண்டும் என்ற உத்வேகம் வருகிற அதே சமயம் இந்த ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிற பொதுபுத்தியோ போலீசு, அடக்குமுறை என்று பயம் காட்டவே செய்யும். அங்கு சனநாயகத்தை சரி என்று சொல்கிற மாணவர்கள் தனித்தனி தீவுகளாக நிற்கிற பொழுது பயம் ஆட்கொள்ளுதல் இயல்பே. இங்குதான் நாம் பயத்தின் அரசியலை கண்டு கொள்ள வேண்டும்.
பய உணர்ச்சி, தனிமநிலை உணர்ச்சியல்ல (It is not an absolute feeling). அது சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களை சார்ந்து எழுகிற சார்பு நிலை (Relative feeling) உணர்ச்சிதான்.
சான்றாக தனிமனிதரின் பயத்தைவிட போலீசு வர்க்கத்தின் பயம் நேற்றைய போராட்டத்தில் கடுமையாக இருந்தது. எங்கே சிவப்பு சட்டைகள் போராடினால் கலகம் பிறக்குமோ என்று அஞ்சிக் கொலைநடுங்கியது ஆளும்வர்க்கத்தின் ஏவல் வர்க்கம். இந்த பயத்தினாலேயே பேட்டியளிப்பதற்கு முன் தோழர்களை அள்ளிச்சென்றது போலீசு.
பயத்தினாலேயே பேட்டியளிப்பதற்கு முன் தோழர்களை அள்ளிச்சென்றது போலீசு.
இதே ஆளும் வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது பார்ப்பனிய அவாள் நிர்வாகத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது தனிமனிதனின் பயம் மிக மிக அற்பமானது. சான்றாக, இதே சென்னை ஐ.ஐ.டியில் மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் காரணமாக கொத்து கொத்தாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அம்பலப்படுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் ஐ.ஐ.டி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவப்புச் சட்டைகளை கண்ட அவாள் நிர்வாகம் அன்றைக்கு ஐ.ஐ.டி முழுவதும் 144 தடை உத்தரவு போட்டது. வேளச்சேரி, கிண்டி, தரமணியின் கதவுகள் இறுக்கிச் சாத்தப்பட்டன. பு.மா.இ.மு எதிர்த்துப் போராடுவதை செய்தியிலும் வரவிடாமல் பார்த்துக் கொண்டன.
சில மாணவர்களுக்கே பார்ப்பனியத்திற்கு முதுகுத்தண்டை சில்லிட வைக்கிற மரணபயம் அன்றைக்கு இருந்தது. அப்படியானால் சமூக விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்கிற மாணவர்களின் பயமோ இந்த ஆளும்வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது சொற்பமானது மட்டுமல்ல; அற்பமானதும் கூட. இதைப் புரிந்து கொள்வது மட்டுமல்ல; இத்தகைய புரிதலை பெளதிக சக்தியாகவும் முன்னிறுத்த வேண்டும்.
இந்த வகையில் பயம் தெளிய வேண்டுபவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணினரை தொடர்பு கொண்டு நேரடி அனுபவத்தை பெறலாம். நாடெங்கிலும் பல்வேறு மாணவர்கள் உரத்துக் கூறுவதைப்போல வீதிதோறும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தைக் கட்டியமைக்கலாம்.
Ambedkar – Periyar Study Circle Banned in Chennai IIT
Countering the lies and slanders of the IITM admin….
What really happened?
Interview with IIT research student Mr. Ramesh
Based on the thoughts of Ambedkar and Periyar we question Hindu religion and its tenets.
They say that Ambedkar-Periyar Study Circle violated the code of conduct of IIT? What is that Code of Conduct? Which section of that did you violate?
There is no such code of conduct. There has never been one. Now, they are inventing one to defend themselves against their indefensible action.
They say, that you have misused the name of IITM?
We have never used IIT’s emblem in our posters. We have only stated that this study circle is an Initiative by IITM students, which is a fact. For example, when Presidency college students put out a poster in support of Srilankan tamils, they call themselves as Presidency College students. What else should they say? Similary, we say that we are IIT students. That is all.
People think that IIT students enjoy more freedom than students of other colleges?
Nothing. All the activities of the students are monitored here. In the past 4 years, the number of CCTV cameras inside the campus have increased manifold. They have installed them in all departments. Contracts are given to fit them outdoors too. In hostels, even on the road sides, they are planning to install cameras. You are under alround surveillance here. Your every move is monitored.
They say that you didn’t obtain prior permission for your activities
No one takes prior permission here. For example, ISKCON – Hare Rama Hare Krishna – conducts Bhajans every week. They do not go to the Dean of Students every week and seek permission.
Do you mean that right to propagate Hindu belief is sanctioned – not the right to criticize?
Indeed! THAT is the issue. Based on the thoughts of Ambedkar and Periyar we question Hindu religion and its tenets. For them it is intolerable.
Even when Congress was in power, the autonomous IITM was ruled by BJP
You mean, they allow Hindu religeous propaganda or even Hindu communal propaganda?
Gurumurthy keeps coming for talks. He comes to many departmnets and presents R.S.S view points on various issues. He will come to Economics Department, other student bodies, rightwing student bodies for talks.
The institute itself invites him many a times, he will be invited as a Chartered accountant. But the accountant speech would be R.S.S-Hindutva propoganda
To be specific, before the general elections in 2014, when Congress was in power, IITM admin did everything to support BJP. Sangh parivar students even conducted election campaign inside the campus.
so… its a MATTER of name ?
It seems, even when Congress was in power, the autonomous IITM was ruled by BJP.
Yes, indeed. Kiran Bedi came before elections (for a talk sponsored by IITM). Winding up her speech, she canvassed for BJP. Yes, she did that openly.
What facilities IITM extends to your Study Circle.
Nothing. IIT does not extend us any facility. We use the class rooms. That too is not provided by IIT admin. Our professor helps us to get the classroom.
For funds IIT never supports us anyway. We invite speakers, print pamphlets and posters only with the help of student contributions.
But, Kiran Bedi etal meetings funded by IITM.
Yes, no doubt. IIT funded them. Details of these accounts are never made public. Tax payers money used to bring BJP to power.
Did the Dean asked you not to name your study circle after Ambedkar – Periyar? Did he say that explicitly?
Yes. When we talked to him, he said that this name is polarising. He said that it is also politically coloured. “You change the name; choose some sort of a generalized name, something from their thoughts if you wish. Or better choose some other name.” he said. When we tried to put forth our view point, he categorically said, “Nothing to debate. This is an order of the Dean. Better follow my order.” He did use these very words – THIS IS AN ORDER OF THE DEAN
We have spoken out openly against the anti people economic policies and Hindutva programs.
so… its a MATTER of name ?
The essence of the whole issue is whatever we did in APSC was against Brahminism. That is the MATTER
On what issues you have conducted meetings?
We have conducted a meeting against Imposition of Sanskrit, inviting a person from Linguistics field. Then against ban on beef, on Ghar Wapsi.
When they started putting name boards in (Sanskritized) Hindi, even the Hindi speaking students could not understand those words. We exposed that this (imposition of Hindi) is a blatant Brahminical, Hindutva fanaticism.
We conducted meetings against Land acquisition bill and labour law amendments.
We have spoken out openly against the anti people economic policies and Hindutva programs. We have also written on them.
All these are against the government at the centre. Infact, this is what they accused us of.
Is it true that IITM refused to conduct a meeting to honour Bhagat Singh?
Yes. Last September, we (APSC) approached the co-ordinator ofExtra Mural Lectures (EML). We emailed him “We should hold a meeting on Bhagat Singh. APSC has no funds, moreover, it would be better if you you conduct the meeting. You can get funds from IITM. We could invite Prof. Chamanlal (the Bhagat Singh biographer)”. But our request was rejected by EML core team as well as the faculty advisor.
A student organization from IIT Mumbai, another from TIS (Tata institute of Social Sciences) have extended their support.
A core member of the EML mailed back, “EML is not a suitable platform for this. Better do it on your own”
When we spoke to him, he argued that Bhagat Singh would not be a acceptable person to majority of IIT students. So, this is not needed. This is how he responded.
But, Aravindan Neelakandan (a Hindutva propagandist of Tamil Nadu) was invited to the same platform. It was a meeting conducted exclusively for right wing students. That was funded by IIT.
Shall we accuse IITM of illegitemately channelising Tax payers money to promote Brahminical and right wing agenda?
Yes. That is how it is. You dont have to believe my word. Go to the FB page, type EML and see the list of lectures conducted. Then decide for yourself.
Arundhati Roy has issued a statement in support.
So far, we were talking about right wing hindutva lectures. There is another side to it. The rest of the lectures are all pro corporate.
I will give you one recent example. Recently Kris Gopalakrishnan of Infosys and Yashwant Sinha came to speak.
Krish puts forward his demands to YS. He says taxation is a hurdle, hence should be relaxed, then the labour laws – still a source of nuisance.
Hereinafter, he says no more 8 hours work days, no more monthly salaries etc. The IT sector, he said is getting automated, and preferred to go for hourly wage system. In effect, Krish demands the labour laws to go.
This was also an Extra Mural Lecture funded by IIT. Such corporate lectures and conferences, discussions on how to promote privatization of education etc are a regular phenomena here.
This is an issue faced by students in all institutions of higher learning.
What is the level of support you have gained so far in your struggle?
We have got overwhelming support from intellectuals. A student organization from IIT Mumbai, another from TIS (Tata institute of Social Sciences) have extended their support.
SFI has supported us. Professor Chamanlal has written in support of us. Arundhati Roy has issued a statement in support.
Newyork Times, BBC India and The Guardian have also covered this issue.
It is not just an issue pertaining to APSC. This is an issue faced by students in all institutions of higher learning. IIT Mumbai students shared an experience. They wanted to organize a meeting inviting a lecturer from Kashmir. IIT Mumbai admin stopped the program saying that Kashmir is a very sensitive issue.
A wrong trend indeed. Yet its happening all over India.
Shall we conclude that from APSC to Land Grab Act, Labour law amendments or Kashmir, IITM will encourage only those views that are anti people?
Yes. You can say that. That is how IIT is administered. Its not a secret, inside IIT anyone can come and see this plain truth.
“பெரியார் அம்பேத்கர் சொன்ன கருத்துகளின் அடிப்படையிலிருந்து நாங்க இந்து மதத்தை கேள்விக்கு உட்படுத்துறோம்.”
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ஐ.ஐ.டியின் நடத்தை விதிகளை மீறி விட்டதாக சொல்கிறார்களே. அது என்ன நடத்தை விதி? அதன் எந்தப் பிரிவை மீறி விட்டீர்கள்?
code of conduct-னு, விதிமுறைகள்னு ஏதும் ஐ.ஐ.டி-ல இல்ல. இந்தப் பிரச்சனைக்கு அப்பறம் தங்களை தற்காத்துக் கொள்வதற்காகத்தான் இப்படி புதுசா ஒண்ணு கொண்டு வர்றாங்க.
நீங்கள் ஐ.ஐ.டி-யினுடைய பெயரை முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே?
ஐ.ஐ.டி-யினுடைய எம்ப்ளத்தை வச்சி எல்லாம் நாங்க போஸ்டர் எதுவும் போடக் கிடையாது. நாங்க initiated by IITM students-னு, ஐ.ஐ.டி மெட்ராஸ்ல படிக்கக் கூடிய மாணவர்கள்னு சொல்லியிருக்கோம், அவ்வளவுதான். பிரசிடென்சி காலேஜ் மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராட வர்றாங்கன்னா பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்னு அவங்களோட பேனர்ல போட்டுப்பாங்க. அப்படித்தான் போட முடியும். அதே மாதிரி ஐ.ஐ.டியினுடைய மாணவர்கள்னு நாங்க போட்டிருக்கோம்,
“இத சாதாரண அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் பிரச்சனையா பார்க்கல. இந்தியாவில இருக்கக் கூடிய எல்லா உயர்கல்வி நிலையங்கள்லயும் பிரச்சனையாத்தான் இருக்கும்.” (அம்பேத்கர் – பெரியார் தடையை கண்டித்து ஐ.ஐ.டி கான்பூர் மாணவர்கள்)
ஆனால், மற்ற கலைக்கல்லூரிகளை விட ஐ.ஐ.டியில் மாணவர்களுக்கு சுதந்திரம் அதிகம் என்றல்லவா சொல்கிறார்கள்?
அப்படியெல்லாம் கிடையாது. இங்க மாணவர்களுடைய நடவடிக்கைகள் அத்தனையும் முழுசாகவே கண்காணிக்கப்படுது. கடந்த 4 வருட காலமாக ஐ.ஐ.டிக்குள்ள சி.சி.டி கேமரா எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பொருத்தியிருக்காங்க. இன்னும் வெளியிடங்கள்ள பொருத்தறதுக்காக contract விட்டிருக்காங்க, மாணவர்கள் ஆஸ்டல் சைட், ரோட் சைட் எல்லாம் கண்காணிக்கறதுக்காக. இங்க கடுமையான கண்காணிப்பு உண்டு. நீங்க என்ன செஞ்சாலும் அட்மினுக்குத் தெரியும்.
உங்கள் செயல்பாடுகளுக்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே?
அப்படி முன் அனுமதி பெற்று யாரும் செய்றது கிடையாது. எடுத்துக்காட்டுக்கு ஒரு விஷயத்தை சொல்லலாம். இஸ்கான் – ஹரே ராமா ஹரே கிருஷ்ணா – வாரா வாரம் பஜனை நடத்துறாங்க. இந்த பஜனைக்காக வாரா வாரம் போய் அவங்க அட்மின் கிட்ட, டீன் ஆஃப் ஸ்டூடன்ட்ஸ் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வர்றதில்ல.
அப்போ இந்து மத பிரச்சாரத்துக்கு சுதந்திரம் உண்டு, மதத்தை விமர்சனம் செய்ய சுதந்திரம் கிடையாதுன்னு சொல்லலாமா?
உண்மையா, அதுதான் அங்க பிரச்சனையா இருக்கு. பெரியார் அம்பேத்கர் சொன்ன கருத்துகளின் அடிப்படையிலிருந்து நாங்க வெளிப்படையாக இந்து மதத்தை கேள்விக்கு உட்படுத்துறோம். அதுதான் அவங்களுக்கு பிரச்சனையா இருக்கு.
இந்து மதப் பிரச்சாரத்துக்குதான் அனுமதி என்கிறீர்களா? அல்லது இந்து மதவெறி பிரச்சாரத்துக்கும் அனுமதி இருக்கிறதா?
குருமூர்த்தி தொடர்ந்து பேச உள்ளே வர்றாரு. அவர் ஆர்.எஸ்.எஸ்-னுடைய கருத்தை முன் வைத்து பல்வேறு விதங்களில் சரி என்று பேசுவதற்கு எல்லா டிபார்ட்மென்டுக்கும் வருவார். எகனாமிக்ஸ் டிபார்ட்மென்ட்ல, மத்த ஸ்டூடன்ட்ஸ் ஆர்கனைசேஷன், ரைட் விங் ஆர்கனைசேஷன்ல வந்து பேசுவாரு. இன்ஸ்டிட்யூட்டே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் டேகுக்குள்ள கூப்பிடுவாங்க. ஆனா அவரு பேசுவது எல்லாமே ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா கருத்துக்களாத்தான் இருக்கும்.
ரொம்ப குறிப்பா சொல்றதா இருந்தா, 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாத காலத்துக்கு முன்னாடியே, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே, இவங்க முழுமையா பி.ஜே.பிக்கு சார்பாக எல்லா நடவடிக்கைகளும் நடத்தினாங்க. பி.ஜே.பிக்கு ஓட்டு போடணும் என்று சங்க பரிவார ஆதரவு மாணவர்கள் உள்ளேயே பிரச்சாரம் பண்ணினாங்க.
டெல்லியில காங்கிரஸ் ஆட்சியில நடந்த போதே ஐ.ஐ.டியில பா.ஜ.க ஆட்சி நடந்தது என்று சொல்கிறீர்களா?
ஆமா. கிரண் பேடி உள்ள டாக் குடுக்கும் போது பி.ஜே.பிதான் கரெக்ட். நான் பி.ஜே.பிக்குதான் ஆதரவு தரப் போறேன். அதையே நீங்க பண்ணணும் என்று மேடையிலேயே நின்னு பேசி முடிச்சிட்டு போனாங்க.
டெல்லியில காங்கிரஸ் ஆட்சியில நடந்த போதே ஐ.ஐ.டியில பா.ஜ.க ஆட்சி நடந்தது (படம் : பேஸ்புக்கிலிருந்து)
உங்களுடைய படிப்பு வட்டத்திற்கு ஐ.ஐ.டி வழங்கும் சலுகைகள் என்ன?
இல்ல. ஐ.ஐ.டில இருந்து எங்களுக்கு எதுவுமே கொடுக்கறது இல்ல. ஒரே ஒரு விஷயம் மட்டும் கொடுக்குறாங்க. நாங்க கிளாஸ் ரூம்ச வாங்கிக்கிறோம். அது ஐ.ஐ.டி நிர்வாகம் கொடுக்கல. நாங்க வேறு ஒரு பேராசிரியர் துணையோடு அவரு வாங்கிக் கொடுப்பாரு. ஐ.ஐ.டியிடமிருந்து எந்தவித சப்போர்ட்டும் கிடையாது. கூட்டங்களை நடத்துவதற்காக மாணவர்கள் கிட்ட உண்டியல் ஏந்தி ஸ்பீக்கர்சுக்கு, பேம்ப்லட்ஸ், போஸ்டருக்கு உண்டான செலவுகள் எல்லாத்தையும் பண்ணியிருக்கோம்.
ஆனால், கிரண்பேடி, குருமூர்த்தி கூட்டங்களுக்கு ஐ.ஐ.டி பணம். அப்படித்தானே?
ஆமா, ஆமா. ஐ.ஐ.டிதான் பணம் கொடுத்திருக்கு. அது ஐ.ஐ.டியுடைய பணத்திலருந்துதான் நடக்குது. இதுக்குண்டான வரவு செலவு எதுவும் மாணவர்கள் மத்தியில வெளியிடுவது இல்ல. மக்களுடைய வரிப்பணத்தை பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதற்காக நிர்வாகமே பயன்படுத்துது.
உங்களுடைய படிப்பு வட்டத்திற்கு அம்பேத்கர் – பெரியார் பெயரை வைக்கக் கூடாது என்று டீன் வெளிப்படையாகவே சொன்னாரா?
அவர்கிட்ட பேசப் போகும்போது டீன் சிவகுமார், “இந்தப் பேரு polarising ஆ இருக்கு. பின்னாடி பொலிடிக்கல் கலர் இருக்க மாதிரி இருக்கு. நீங்க பேர மாத்துங்க, ஒரு ஜெனரலைஸ்ட் நேம் வச்சிக்குங்க. இல்லாட்டி வேறு பேரு வச்சுக்குங்க” என்றார். நாங்க அது குறித்து அவர்கிட்ட டிபேட் பண்ண போகும்போது, “இதில டிபேட் பண்றதுக்கெல்லாம் ஒண்ணும் இல்ல. இது டீன் ஆஃப் ஸ்டூட்ன்ட்சுடைய ஆர்டர். இத நீங்க ஃபாலோ பண்ணணும்.” என்றார். இதே வார்த்தைய பயன்படுத்தினார். இது டீன் ஆஃப் ஸ்டூடன்சுடைய ஆர்டர்.
அப்போ பெயர்தான் பிரச்சனையா?
ஒட்டு மொத்த பிரச்சனையோட சாராம்சமே அம்பேத்கர் – பெரியார் ஸ்டடி சர்க்கிளில் பேசப்பட்ட விஷயங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரா இருக்கு. அதுதான் முக்கியமான விஷயமே.
உங்களுடைய படிப்பு வட்டத்தின் சார்பில் என்ன பிரச்சனைகளுக்காக கூட்டங்கள் நடத்தியிருக்கிறீர்கள்?
நாங்க சான்ஸ்கிரீட் இம்போசிஷன் எதிர்த்து லிங்குவிஸ்டிக்ஸ், ஏரியால வொர்க் பண்றவர வச்சு கூட்டம் நடத்தியிருக்கோம். கர் வாபசி பத்தி கூட்டம் நடத்தியிருக்கோம். பீஃப் பேன் பண்ணது பத்தி பேசியிருக்கோம்.
ஐ.ஐ.டி-ல நேம் போர்ட்ஸ் எல்லாம் ஹிந்தியிலயும் எழுதினாங்க. ஹிந்தியில எழுதினது ஹிந்தி படிச்சவங்களுக்கே தெரியல, இது அப்பட்டமான பார்ப்பனிய வெறி, இந்துத்துவா வெறி அப்படீன்னு நாங்க புரூவ் பண்ணி காமிச்சோம்.
லேண்ட் அக்விசிசன் பில் பத்தி, லேபர் லா பத்தி கூட்டம் நடத்தியிருக்கோம்.
இப்படி மக்களுடைய அடிப்படை வாழ்வை பாதிக்கக் கூடிய அரசாங்கம் கொண்டு வரக் கூடிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், ஹிந்துத்துவா அடிப்படையில் கொண்டு வரக் கூடிய எல்லா திட்டங்களை குறித்து நாங்க பகிரங்கமா பேசியிருக்கோம். அனலைஸ் பண்ணி கட்டுரை எழுதியிருக்கோம். இது எல்லாமே, இப்ப நடந்துகிட்டு இருக்கிற அரசாங்கத்துக்கு எதிரானதா இருக்கு என்பதுதான் எங்க மேல் இருக்கிற குற்றச்சாட்டே.
பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் கூட நடத்த முடியாது என்று ஐ.ஐ.டி மறுத்து விட்டதாமே, உண்மையா?
பகத்சிங் பிறந்தநாள் செப்டம்பர் மாசம் வந்தப்ப அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள்ல இருந்து எக்ஸ்ட்ரா முயூரல் லெக்சருடைய கோ-ஆர்டினேட்டர அணுகினோம். “பகத் சிங்க பத்தி பேசணும். அத நாங்க நடத்துறத விட, நீங்க நடத்துனீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். நீங்க ஐ.ஐ.டி கிட்ட ஃபண்ட் வாங்கி நீங்க நடத்துங்க. சமன்லாலை கூப்பிடலாம்”னு சொல்லி மெயில் அனுப்பினோம். அதை எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சரோட கோர் டீமும் ஒத்துக்கல, ஃபாகல்டி அட்வைசரும் ஒத்துக்கல.
எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சருடைய கோர் மெம்பர் ஒருத்தர், ரிப்ளை பண்ணும் போது, “ஈ.எம்.எல் இதுக்கு சூட்டபிள் பிளாட்பார்ம் கிடையாது. நீங்க வேறு விதத்தில, வேற சப்போர்ட்ல நடத்திக்குங்க” என்று சொன்னாரு.
அவர்கிட்ட தனிப்பட்ட முறையில பேசும் போது அவர் முன் வைச்ச வாதம், ஐ.ஐ.டி உள்ளே இருக்கக் கூடிய பெரும்பான்மை மாணவர்களுக்கு பொதுவான ஒரு ஆளா பகத் சிங் இருக்க மாட்டாரு. சோ இப்படி நடத்துவது தேவையில்லாதது என்று ரிப்ளை பண்ணாரு.
ஆனா, அரவிந்தன் நீலகண்டன் ஒரு கூட்டம் நடத்தினாரு. அந்தக் கூட்டம் நடத்தப்பட்டதே, வலது சாரி சிந்தனை உள்ள மாணவர்களுக்கு மட்டும்தான். அரவிந்தன் நீலகண்டன் பேசினது ஐ.ஐ.டி மெட்ராஸ் பணம் கொடுத்து நடந்த லெக்சர்.
பார்ப்பனியத்தையும் வலதுசாரி கருத்துகளையும் பரப்புவதற்கு மக்கள் வரிப்பணத்தை ஐ.ஐ.டி சென்னை முறைகேடாக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டலாமா?
உண்மையா அப்படித்தான் பயன்படுத்தப்படுது. இத நான் சொல்றேன்னு பார்க்க வேணாம். பேஸ்புக்குக்குப் போய் eml-னு டைப் பண்ணினா என்ன லெக்சர் நடத்தியிருக்காங்கன்னு லிஸ்ட் வரும். அந்த லிஸ்ட பார்த்து யார் வேண்டும்னாலும் புரிஞ்சிக்கலாம்.
இப்ப இவ்வளவு நேரம் வலது சாரி சிந்தனை, இந்துத்துவா சிந்தனை சார்பா நடந்த லெக்சர பத்தி பேசிக்கிட்டிருந்தோம். இன்னொரு சைடு இருக்கு எல்லாமே கம்ப்ளீட்லி ப்ரோ கார்ப்பரேட்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். சமீபத்தில இன்ஃபோசிஸ் நிர்வாகி கிருஷ் கோபாலகிருஷ்ணன், யஷ்வந்த் சின்ஹா வந்து பேசினர்.
கிருஷ் கோபாலகிருஷ்ணன் யஷ்வந்த் சின்ஹாகிட்ட டிமாண்ட் வைக்கிறாரு, கிருஷ் கோபாலகிருஷ்ணன். எங்களுக்கு டாக்ஸ், இந்தத் துறையில் வரிகள் சம்பந்தமான பிரச்சனைகள் பெரிய ஹர்டிலா இருக்கு. அத நீங்க ஃப்ரீ பண்ணி கொடுக்கணும். யூனியன், லேபர் லா சம்பந்தமான விஷயங்கள் சிக்கலா இருக்கு. இன்னும் எங்களுக்கு சார்பா மாத்திக் கொடுக்கணும்.
இனிமேல், ஐ.டி துறையில் 8 மணி நேர வேலை, மாதா மாதம் சம்பளம் கொடுக்கிறது எல்லாம் இல்ல. ஃபுல்லா ஆட்டமேசன் பண்ணப் போறோம். அவர் பேசிஸ்ல வேலை கொடுத்து வாங்கப் போறோம். இதுக்கெல்லாம் ஏற்றாற்போல நீங்க சட்டங்களை மாத்தணும். இப்படிப்பட்ட டிமாண்ட்களை வைக்கிறாரு, கிருஷ் கோபாலகிருஷ்ணன்.
அதுவும் எக்ஸ்ட்ரா மூரல் லெக்சர்தான், ஐ.ஐடி ஃபண்டட். இதோ போல் புரோ கார்ப்பரேட், கல்வியில் தனியார்மயத்தை எப்படி கொண்டுவ ருவது தொடர்பான நிறைய கான்ஃபரன்ஸ், நிறைய மீட்டிங் உள்ளே நடக்கும்.
இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?
அறிவுத்துறையினர் மத்தியில் பெரும்பான்மையினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. ஐ.ஐ.டி பாம்பே ஸ்டூடன்ட் ஆர்கனைசேசன், டி.ஐ.எஸ் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசல் ஸ்டடீஸ்ல ஒரு ஸ்டூடண்ட் ஆர்கனைசேசன் எங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருக்குது.
எஸ்.எஃப்.ஐ முழு ஆதரவு கொடுக்கிறோம். சமன்லால் எங்களுக்கு ஆதரவா பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அருந்ததி ராய், உங்களுக்கு சார்பா நான் ஸ்டேட்மென்ட் தர்றேன் என்று சொல்லியிருக்காங்க
நியூயார்க் டைம்ஸ், பி.பி.சி இந்தியா, கார்டியன் இது மாதிரி விஷயங்களில் இருந்து கூட எங்களுக்கு ஆதரவு வந்திருக்கு.
இத சாதாரண அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் பிரச்சனையா பார்க்கல. இந்தியாவில இருக்கக் கூடிய எல்லா உயர்கல்வி நிலையங்கள்லயும் பிரச்சனையாத்தான் இருக்கும். பேஸ்புக்ல ஐ.ஐ.டி மும்பையில இருந்து ஷேர் பண்ணியிருந்தாங்க. சமீபத்தில காஷ்மீர்ல இருந்து ஒரு லெக்சரரா கூட்டி வந்து கூட்டம் நடத்தினாங்களாம். ஐ.ஐ.டி மும்பை நிர்வாகம், காஷ்மீர் ரொம்ப சென்சிடிவான இஷ்யூ, அதை நடத்தக் கூடாதுன்னு தடை விதிச்சிட்டாங்களாம்.
இது ரொம்பத் தவறானாது. இது இந்தியா முழுக்க எல்லா பகுதிகளிலும் நடக்குது.
அம்பேத்கர் பெரியாரில் தொடங்கி, நில அபகரிப்பு சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தம், காஷ்மீர் பிரச்சனை வரை அனைத்திலும் மக்களுக்கு எதிரான கருத்தை மட்டும்தான் ஐ.ஐ.டி நிர்வாகம் ஊக்குவிக்கும் என்று நாம் கூறலாமா?
அப்படித்தான், அப்படி எடுத்துக்கலாம். ஐ.ஐ.டி நிர்வாகமே நடைமுறையில் அப்படித்தான் நடக்குது. உள்ள யார் வேண்டும்னாலும் புரிஞ்சிக்கலாம். அது ரகசியம் கிடையாது. வெளிப்படையான உண்மை அது.
Ambedkar Periyar Study Circle (APSC) தடையை கண்டித்து ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் மோடியின் உருவப்படம் எரிப்பு!
பாசிச மோடி அதிகாரத்திற்கு வந்த பிறகு முற்போக்கு இயக்கங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மிக கடுமையான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதேசமயத்தில், இந்துத்துவத்தை வாழ்த்தி பேசுவதற்கும் சிறுபான்மை மக்களை தாக்குவதற்கும் சங்க பரிவார இயக்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பத்திரிகைகளும் தொலைக்காட்சி செய்திகளும் மோடி அரசின் ஓர் ஆண்டு வேதனைகளை மறைத்து சாதனைகளாக பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த பாசிச அரசை தோலுரிப்பது ஜனநாயக சக்திகளின் தலையாய கடமையாகும்.
கடந்த ஓர் ஆண்டு காலமாக கல்வித்துறையில் பல சீரழிவுகளை இந்த மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது.
சமஸ்கிருத வாரத்தை கொண்டாடுவதற்கு ஆணை பிறப்பித்தது, சமஸ்கிருதத்தை கட்டாயமாக புகுத்தியது, கிறிஸ்மஸ் தினத்தன்று விடுமுறையை மறுக்க வேண்டுமென்றே வாஜ்பாயி குறித்த போட்டிளை பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்தியது, வரலாற்றுத் துறையில் பழம் பஞ்சாங்கங்களை கொண்டு வந்தது என பல நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவை எல்லாவற்றிலும் பார்ப்பனிய மேலாதிக்க வக்கிரமும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யும் திட்டமுமே உள்ளன.
மேல்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் மாணவர்களை குறிவைத்து அமல்படுத்தப்பட்டன. ஆனால், பெரிதாக பேசப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் நிலைமை மிகக் கொடுமையாக உள்ளது. பல மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்பே இல்லை, காரணம் பல்கலைக்கழக நிர்வாகங்கள் மாணவர் தேர்தலை பல ஆண்டுகளாக நடத்துவதே இல்லை. உதாரணமாக, ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University—EFLU) மாணவர் அமைப்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது, மாணவர் தேர்தலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை.
இந்நிலையில் பல மத்திய பல்கலைக்கழகங்களில் முற்போக்கு மாணவர் அமைப்புகளுக்கு மறைமுகமாக நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய வளர்ச்சியின் ஒரு அங்கமாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IITs) மாணவர்கள் தம்மை முற்போக்கு வாதிகள் என்று அடையாளப்படுத்துவதற்குக் கூட இயலாதநிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் உள்ளிட்ட பல IIT-களில் இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சமஸ்கிருதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளச்சொல்லி கட்டாயப் படுத்துவது போன்ற பார்ப்பனிய இம்சை பல பேராசிரியர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஹிந்துத்துவம் மேலோங்கி இருக்கும் இவ்வாறான மத்திய நிறுவனங்களில் முற்போக்கு அரசியலை பேசுவதென்பதே ஒரு பெரிய போராட்டமாக உள்ளது. மேலும், அவ்வாறு மாற்று அரசியலை பேசும் மாணவர்களை திட்டமிட்டு துறைரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகுவதும் இதுபோன்ற நிறுவனங்களில் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் இந்த நிறுவனங்களில் பரவி இருக்கும் பார்ப்பனிய காவி பயங்கரவாதத்தையும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு எதிராக இந்நிறுவனங்களில் நிலவும் சூழலையும், இந்த பாசிச அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களையும் மாணவர்களின் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை dean of students (DOS) தடை செய்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதேசமயத்தில் இதுபோன்ற தடைகள் மட்டுமல்ல இம்மாதிரியான நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடமில்லை என்பதனையும் மறைமுகமாக இந்தத் தடையின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் நமக்கு சொல்லியிருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.ஐ.டி-களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் பேராசிரியர்களை நியமிப்பதில் இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றுவதில்லை.
முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக இருக்கும் இந்த நிறுவனங்களை கண்டித்தும் கருத்து சுதந்திரத்திற்கு தடைவிதிக்க ஆணை பிறப்பித்திருக்கும் பாசிச மோடி அரசை வன்மையாக கண்டித்தும் நாடுதழுவிய அளவில் APSC வாசகர் வட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.
துணைவேந்தரின் ஊழலை விவரித்தும் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று கூறியும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் பல பல்கலைக்கழகங்களில் இருந்து தொடர்ந்து மாணவர்கள் அமைப்புகளின் மூலமாகவும் பேராசிரியர்களின் அமைப்புகள் மூலமாகவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதில்கூட கூறாத இந்த அமைச்சகம் ஒரு பெயரிடாத மொட்டைக் கடிதத்திற்கு வினையாற்றி உடனேடியாக மாணவர் அமைப்பை தடைசெய்ய கோரி மறைமுகமாக உத்திரவிட்டிருக்கிறது.
ஏன் என்றால், இந்த அமைப்பு அவர்களின் அரசின் திட்டங்களில் உள்ள வக்கிரத்தையும், பார்ப்பன காவி பயங்கரவாததையும் துண்டுபிரசுரங்கள் வாயிலாக அம்பலப்படுத்தி இருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்தத் தடையை விதித்து இருக்கும் இந்துத்துவத்தின் கூடாரமான IIT சென்னையையும் காவி கும்பலின் அதிகார மையமான பாசிச மோடி அரசையும் நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தத் தடையை எதிர்த்து ஹைதராபத்தில் உள்ள ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று ஒஸ்மானிய பல்கலைக்கழக வளாகத்தில் மாலை ஐந்து மணியளவில் மோடியின் உருவப்படத்தை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
முன்னதாக “மோடி அரசு ஒழிக”, “போராடுவோம் போராடுவோம், பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம்” என்ற வாசகங்களோடு கோஷமிட்டவாறே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஊர்வலம் வந்தனர். மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தையும் APSC மாணவர்களுக்கு ஆதரவையும் தெரிவித்தனர்.
தகவல்: ஆய்வு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைகழகம் (EFLU) ஹைதராபாத்