ஜா புயலால் பாதிப்பிற்குள்ளான காவிரி டெல்டா மாவட்டங்களில் புணரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்து வந்துள்ள தோழர்கள் இடிந்த குடிசை வீடுகளை தற்காலிகமாக சீர்செய்வது மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப நிவாரணப் பொருட்களை சேகரித்து வீடு தோறும் விநியோகித்து வருகின்றனர்.

குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப் பணியாகிறது.

நிவாரணப் பொருட்களை சேகரிப்பதில் உள்ள பொருளாதார ரீதியான தடைகள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே சில வாரங்கள் தங்கி புணரமைப்புப் பணிகளை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, இப்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர், மக்கள் அதிகாரம் தோழர்கள். இவர்களோடு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்களும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை தாலுகா, தம்பிக் கோட்டை வடகாடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பாடப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினம் பகுதி.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, நொச்சியூர் கிராமம்.

வேதாரண்யம், அவுரிகாடு பகுதி.

வேதாரண்யம், வாட்டாக்குடி இரணியன் நகர்.

திருவாரூர் மாவட்டம் தாய்மண் பாரம்பரிய வேளாண்சார் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை மக்கள் அதிகார தோழர்களிடம் வழங்கினர்.

படிக்க:
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

களப்பணியில் இணைந்து பணியாற்ற / நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் மக்கள் அதிகாரம் தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம், சென்னை – 9176 801656
மக்கள் அதிகாரம், திருவாரூர் – 9962 366321, 9626 352829
பு.மா.இ.மு., வேதாரண்யம் – 6383 461270

தகவல்:
மக்கள் அதிகாரம்

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க