ரசு உத்தரவிட்டாலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவில் பூண்டையும், வெங்காயத்தையும் சேர்க்க முடியாது என “அட்சய பாத்ரா” எனும் என்.ஜி.ஓ. நிறுவனம் மறுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அரசு மற்றும் அரசு ஆதரவுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள். இங்கு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கர்நாடக அரசு பல்வேறு என்.ஜி.ஓ. அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

அதில் ஒரு என்.ஜி.ஓ-தான் “அட்சய பாத்ரா”. இந்நிறுவனம் இந்துத்துவா அமைப்பான “இஸ்கான்” (ISCKON) அமைப்பின் துணை நிறுவனமாகும். கர்நாடகத்தின் மிகப்பெரிய மதிய உணவு வழங்குனராக இந்த என்.ஜி.ஓ செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் பணம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நன்கொடைகள் பெறுவதன் மூலமாக கர்நாடகாவில் மட்டும் சுமார் 4.43 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் தங்களது நம்பிக்கையின்படி ’சாத்விக’ உணவுகளையே சமைக்கவும் உண்ணவும் செய்வார்களாம். அந்த அடிப்படையில் கடந்த 16 ஆண்டுகளாக மாணவர்களுக்கு சமைத்து வழங்கும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அறவே தவிர்த்து வருகிறது.  ஏனெனில் அவை ’தமஸ்’ வகைப்பட்ட உணவுகளாம்.

இந்நிலையில், அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கவேண்டும் என மதிய உணவு வழங்கல் திட்டத்தின் அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த நிறுவனம் அரசுடன் 2018-19-ம் ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட மறுத்து, சாத்விக உணவுகளையே தாம் தொடர்ந்து வழங்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து கர்நாடக அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனர் எம்.ஆர். மாருதி கூறுகையில் “சமீபத்தில்தான் அந்நிறுவனத்திடம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்க்கக் கூறி வழிகாட்டுதல் அனுப்பினோம். மதிய உணவில் வெங்காயமும், பூண்டும் சேர்ப்பது ஊட்டச்சத்தை மட்டுமல்ல, உணவின் சுவையையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டே நாங்கள் அந்நிறுவனத்தை மாநில அரசு தரும் பட்டியலின்படி உணவு வழங்கக் கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்கள் கடிதத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.” என்றார்.

கர்நாடகத்தில் மொத்தம் 71 என்.ஜி.ஓ. நிறுவனங்கள் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துகின்றன. சுமார் 9.31 இலட்சம் மாணவர்கள் இந்த மதிய உணவுத் திட்டத்தின் கீழ பயனடைகின்றனர். இதில் 4.43 இலட்சம் மாணவர்களுக்கான உணவை அட்சய பாத்ரா என்.ஜி.ஓ. வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இணைந்திருக்கும் பிற தன்னார்வ நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் அரசாங்கம் தரும் பட்டியலை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ‘அட்சய பாத்ரா’ என்.ஜி.ஓ. மட்டும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

‘அட்சய பாத்ரா’ தனது அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில், “மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் மனித வளத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஊட்டச்சத்துக்கள் இருக்கும்படியான உணவையே நாங்கள் வழங்குகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அதாவது “பூண்டையும் வெங்காயத்தையும் சேர்க்க முடியாது. உன்னால் ஆனதைப் பார்” என்பதையே நாசூக்காக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மதிய உணவு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளதன் மூலம், “பள்ளி மாணவர்களை பட்டினி போட்டுவிடுவேன், ஜாக்கிரதை” என மறைமுகமாக மிரட்டியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆதிக்க சக்திகள் தமது கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதற்கான ஏற்பாடுதான் இந்துத்துவா என்.ஜி.ஓ.-க்கள் என்பதை ‘அட்சய பாத்ரா’ தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

கர்நாடக மதிய உணவுத் திட்டம்

சமூக வலைதளங்களில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் பல்வேறு இந்துத்துவவாதிகள் “அட்சய பாத்ரா”-வுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ”தொண்டு நிறுவனத்தின்” மத நம்பிக்கையை குமாரசாமி அரசு பறிக்க நினைப்பதாக கூச்சலிடுகின்றனர். இது தொண்டு நிறுவனத்தின் மத நம்பிக்கையா? அல்லது சனாதன தர்மமா?

இந்து சனாதன கும்பலான இஸ்கான் அமைப்பின் ஒரு பிரிவான ‘அட்சய பாத்ரா’ நடைமுறைப்படுத்துவது சுத்தமான பார்ப்பனியமே. வட இந்திய பார்ப்பனமயமாக்கப்பட்ட ஜெயின்களின் நம்பிக்கையின் படி வெங்காயம், பூண்டு ஆகியவை தமஸ் குணத்தைக் கொண்ட காய்கறிகள். அதாவது ‘சூத்திர’ காய்கறிகள். இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு. காய்கறிகளிலும் கூட தமது சாதிய வன்மத்தைக் காட்டுகிறார்கள்.

“இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது ”அக்சய பாத்ரா”-வைச் சேர்ந்தவர்களையோ யாரும் பூண்டையும், வெங்காயத்தையும் தின்னச் சொல்லவில்லையே. இவர்களது சனாதன தர்மம் வகுத்துத்தந்த விதிப்படி சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட இலட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகள்தானே? இந்த ’சூத்திரக் காய்கறிகளை’ சமைத்துப் போடுவதற்கு இவர்களுக்கு என்ன கேடுவந்தது?” என நீங்கள் கேட்கலாம். ஆனால் இவர்கள் சூத்திரக் காய்களை சமைக்கக்கூட மாட்டார்களாம். அவ்வளவு ஆச்சாரமாம் ! ஏனெனில் சூத்திரனை தொட்டாலே தீட்டுதான் அல்லவா?

படிக்க:
ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

ஆனால் இந்த என்.ஜி.ஓ. நிறுவனம் மதிய உணவுத் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோரிடம் நன்கொடை பெறுகிறது. இந்த ஆயிரக்கணக்கானோரில் 99% ‘சூத்திரர்களும்’ ‘பஞ்சமர்களும்’தானே ! அவர்கள் இரத்தத்தில் ‘சூத்திரக்’ காய்கறிகளான வெங்காயமும் பூண்டும் கலந்தில்லாமல் இருக்குமா ? இவர்களுக்கு ‘சூத்திரன்’ கசக்கிறானாம். சூத்திரக் காய்கறி கசக்கிறதாம். ஆனால், சூத்திர பஞ்சமர்களின் பணம் மட்டும் இனிக்கிறதாம் இந்தக் கும்பலுக்கு.

இணையத்தில் அட்சய பாத்ரா-வுக்கு ஆதரவாக லாவணி பாடும் இந்துத்துவக் கும்பல், கர்நாடக அரசுக்கு 4.43 இலட்சம் மாணவர்களின் உணவுக்கு அட்சய பாத்ரா நிறுவனம் வழங்கும் பங்களிப்பின் அருமை தெரியவில்லை எனக் கூறிவருகிறது. அதாவது 4.43 இலட்சம் மாணவர்களுக்கு அட்சய பாத்ரா அமைப்பு போனால் போகட்டும் என பொங்கிப் போடுகிறதாம். கர்நாடக அரசுக்கு அதன் அருமை புரியவில்லையாம்.

ஆனால் உண்மை என்ன ? இலட்சக்கணக்கான ‘சூத்திர’ மாணவர்களைக் காட்டிதான் இந்த ‘அட்சய பத்ரா’ என்.ஜி.ஓ. ஆயிரக்கணக்கான ‘சூத்திரர்களிடம்’ பணம் பெற்று தனது நிறுவன தொந்தியையும், தமது இந்துத்துவ அரசியல் நோக்கையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை.

இந்தப் பார்ப்பனக் கொழுப்பை கொத்தி எடுக்காமல் நமது குழந்தைகளுக்கு சத்துணவும் கிடையாது, சமத்துவமும் கிடையாது.


நந்தன்
செய்தி ஆதாரம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

இதையும் பாருங்களேன்…
அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்

84 மறுமொழிகள்

 1. சும்மா . . மணிகண்டன உசுப்பி விடுறதே வினவுக்கு பொழப்பா போச்சு . . . !

  • அட நீங்க வேற ! எங்க மணி மாமாவ பத்தி உங்களுக்கு என்ன தெரியும் ? இந்த மாதிரி ஏடாகூடமான போஸ்டுலலாம் அவரு ஆஜர் ஆக மாட்டாரு …

   நீங்க இங்க கூப்பிட்டு இப்போ வம்பிழுத்தா உடனே வந்திடுவாரா ?

 2. மடப்பயலாட்டும் எழுதப்பட்ட பதிவு. அவங்களுக்கு விருப்பம் இல்லாதத அந்த தொண்டு நிறுவனம் செய்யலன்னா உனக்கு எங்க வலிக்குது? வேணாம்னு சொல்லீட்டு வேற இடத்துல சாப்பட வேண்டியத்துதானே. முஸ்லிம்கள பன்னி கறி சமைக்க சொல்ற மாதிரி இருக்கு. இதுக்கு பேர்தான் பறத்தனம்னு சொல்றது. தாழ்வு மனப்பாண்மை எத பாத்தாலும் பயப்பட வைக்குது. யாராச்சும் உத்து பாத்தாக்கூட நான் பறையன்றனாலதான் அப்படி பாக்கறான்னு சிந்திக்க வைக்குது. பாப்பான் திருந்தறது ஒரு பக்கம் இருக்கட்டும், உங்களோட அழுக்கு என்னான்னும் தெரிஞ்சிக்கிங்க. இல்லன்னா எதுவும் மாறாது. இன்னும் ஆயிரம் வருசத்துக்கு கத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

  • மணிகண்டன எதிர்பார்த்தோம் வேறொன்னு வந்திருக்கு . .
   //இதுக்கு பேர்தான் பறத்தனம்னு சொல்றது. //
   ஏன்டா . . ! பாப்பாரப் பயலே !
   அவங்க தாழ்வு மனப்பான்மைக்கே நீங்களும் உங்க பார்ப்பனீயமும்தானே காரணம்.
   //முஸ்லிம்கள பன்னி கறி சமைக்க சொல்ற மாதிரி //
   இதுல முஸ்லிம்களை ஏம்பா இழுக்குற. அவங்க மூத்திரத்தை குடிக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதா?
   இஸ்லாமியர்கள் மற்றவர்கள் பன்னிக்கறி சாப்பிடுவதை தடுப்பதில்லை. அரபு நாடுகளிலேயே பன்றிக் கறி கிடைக்கிறது.
   //அவங்களுக்கு விருப்பம் இல்லாதத அந்த தொண்டு நிறுவனம் செய்யலன்னா உனக்கு எங்க வலிக்குது? //
   மக்கள்கிட்ட பிச்சை வாங்கி தொண்டு நிறுவனம் நடத்துறான். அதை மக்களுக்கு திருப்பி தரும்போது மக்களுக்கு தேவைப்பட்ட மாதிரிதானே கொடுக்கனும். இவன் இஷ்டத்துக்கு கொடுக்குறதுக்கு இவன் வீட்டு காசா என்ன ?
   மக்களிடம் வாங்கியதுதானே . . !

 3. இப்போது சென்னை ஐஐடியில், உணவகத்தில் சுத்த சைவம், சைவம், அசைவம் என பின்பற்ற படுவதாகவும் கை கழுவும் இடம் கூட தனித்தனியே இருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது. எல்லோரும் கவனிக்கும் உணவகத்திலேயே இத்தகைய பாகுபாடு எனும்போது மதிப்பெண்கள் அளிப்பதில் எத்தனை பாகுபாடுகள் காட்டப்படும் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.

 4. நாம் பயன்படுத்தும் சைக்கிள் முதல் விமானம் வரை கண்டுபிடித்து தயாரித்தவர்கள் மாட்டுக்கறி தின்னும் ஐரோப்பியரும் அமெரிக்கரும் தான். மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற யூதர்கள் ஆடு, மாடு, கோழி என எதையும் விடாமல் உண்ணக்கூடியவர்கள். நம்முடைய அம்பிகள் தான் மாட்டுக்கறி தின்னும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போவதற்கு விசா வாங்க தூதரகங்கள் முன்னர் வரிசைகட்டி நிற்கிறார்கள். கேவலம்.

  • வழக்கமான கிறிஸ்துவ பொய்களை சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

   சைக்கிள் முதல் விமானம் வரை கண்டுபிடிக்க அடிப்படை காரணம் இந்திய வேத அறிவியல் தான். இஸ்லாமிய கிறிஸ்துவ படையெடுப்புகள் மட்டும் நடக்கவில்லை என்றால் இன்று அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்திய தூதரகத்தின் வாசலில் நின்று இந்திய விசாவிற்காக தவம் இருந்து இருப்பார்கள்.

   இந்தியாவை தேடி தானே கொலம்பஸ் அமெரிக்கா சென்றான்…. இந்தியாவை கொள்ளையடிக்க தானே இஸ்லாமியர்களும், ஐரோப்பியர்களும் தொடர்ச்சியாக படையெடுத்து பெரும் அழிவை கொண்டு வந்தார்கள், இந்தியாவின் அறிவை கற்றுக்கொள்ள தானே சீனர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள்.

   போய் உங்களின் பொய்களை கிறிஸ்துவ சர்ச்சுகளில் சொல்லுங்கள்.

 5. இந்துமதப் புராணங்களில், வேதங்களில் இருப்பது புஷ்பகவிமானம் போன்ற கற்பனைகளும் அறிவியல் சிந்தனைக்கு ஒவ்வாத பாற்கடல், தயிர்க்கடல், மோர் கடல் போன்ற கட்டுக்கதைகளும் தான். இவற்றில் ஏதாவது ஓரிரண்டு அறிவியல் கோட்பாடுகள் இருந்தாலும் அவை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பூடகத்தன்மை கொண்டவை. இந்த மாதிரியான கற்பனைக் கதைகளும் கட்டுக்கதைகளும் உலகின் எல்லா நாடுகளின் பழைய (பைபிள் உள்ளிட்ட) மத நூல்களிலும் இலக்கியங்களிலும் உண்டு. இவற்றை அடிப்படையாக வைத்து தான் மேற்கத்திய அறிஞர்கள் எல்லாவற்றையும் எளிதாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்வது அவர்களின் அறிவு வளர்ச்சி, முயற்சி மற்றும் உழைப்பு ஆகியவற்றை புறக்கணிப்பது ஆகும். ரைட் சகோதரர்கள் உங்கள் புராணங்களை படித்துவிட்டுத்தான் எளிதாக விமானங்களை தயாரித்தார்களா? ஆரம்ப முயற்சிகளில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். அது அவர்களின் தொடர்ந்த முயற்சிகளின் விளைவு. இப்படி ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பும் பல்வேறு தோல்விகளுக்குப் பின்னர் தான் உருவானது. உங்களுடைய வேதங்களிலும் புராணங்களிலும் இருப்பதை படித்துவிட்டு உடனடியாக உருவாக்கிவிடவில்லை. இந்த மாதிரி கட்டுக் கதைகளை நம்பி தற்பெருமை கொண்டிருப்பதால்தான் ஒரு சவர பிளேடு மாதிரியான கண்டுபிடிப்புகளை கூட இங்கு இருப்பவர்களால் செய்ய முடியவில்லை. மேலும் அந்நியப் படையெடுப்பு, அந்நியப் படையெடுப்பு என கூறுகிறீர்கள். இந்த உலகின் எந்த பகுதியில் தான் போர் நடக்கவில்லை? இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பா கண்டம் தற்கொலைக்கு போனது. அணுகுண்டுகளால் ஜப்பான் முற்றிலும் அழிந்தது. இப்படி எல்லா நாடுகளும் போர்களாலும் கொள்ளைகளாலும் பாதிக்கப்பட்டவை தான். ஆனால் அவர்கள் முயற்சி செய்து தோல்விகள் கடந்து புதிய அறிவியல் கோட்பாடுகளையும் கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் மாட்டுக்கறி தின்பவர்கள். அதை ஒரு பிரச்சினையாக வைத்துக்கொண்டு இந்த மதவெறிக் கும்பல் இந்த நாட்டை கெடுத்து வருகிறது.

  • கிறிஸ்துவ உலகம் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த காலத்தில் இங்கே குருகுல பள்ளிகள், நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வியில் உயர்ந்து இருந்தது, உலகின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து நாளந்தா காஞ்சி போன்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றார்கள்.

   உலகம் உருண்டை என்று சொன்னவருக்கு(Galileo) சர்ச்சுகள் மரண தண்டனை கொடுத்த போது, அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே உலகம் உருண்டை என்று சொன்னது மட்டும் இல்லாமல் சூரியனை தான் உலகம் சுற்றி வருகிறது என்று இந்தியர்கள் சொன்னார்கள்… பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தை கச்சிதமாக சொன்னார்கள், மற்ற கிரங்களை பற்றியும் இந்தியர்கள் சொன்னார்கள். இதற்கு உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் வானசாஸ்திரம் பொய், ஜாதகம் மூட நம்பிக்கை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

   இப்படி எவ்வுளவோ சொல்லி கொண்டு போகலாம். ஆனால் உங்களை போன்ற கிறிஸ்துவர்களின் அடிமை புத்தியில் ஆங்கிலேயன் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் உள்ளது (அதற்கு காரணம் உங்களின் சர்ச்சுகள்) அதனால் இந்தியாவை பற்றி எப்போதுமே மட்டமாக பேசுவீர்கள்.

   அறிவியலின் அடிப்படைகள் பெரும்பாலும் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது (zero, Pi value , measurement scale , medical etc etc)

   ஒரு பக்கம் இஸ்லாமிய படையெடுப்பில் பல அறிவியல் களஞ்சியங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டது (நாளந்தா பல்கலைக்கழகமும் இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்டது தான்), எஞ்சியவைகளை ஆங்கிலேயர்கள் திருடி சென்றார்கள்.

   • “கிறிஸ்துவ உலகம் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த காலத்தில் இங்கே குருகுல பள்ளிகள், நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வியில் உயர்ந்து இருந்தது”

    If you are correct, Can you explain me India’s position in this modern world ? And what is the reason for that (Do not blame Muslims and other minorities for everything)

    • R: Without mentioning of Islamic and Christian looting and destructions of Indian society, you can’t talk about India’s position in modern world.

     ஆயிரம் வருடங்களாக இந்தியர்களின் அடிமை மற்றும் வறுமை வாழ்விலும் அவர்களின் அறிவியல் அறிவு உலகின் எந்த ஒரு நாட்டிற்கும் சளைத்தது அல்ல.

     புவி ஈர்ப்பு விசை பற்றி நியூட்டனுக்கு முன்பே இந்தியர்களுக்கு தெரியும் ஆனாலும் உங்களை போன்ற கிறிஸ்துவ அடிமைகள் நியூட்டன் தான் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்று சொல்லி கொண்டு திரிகிறீர்கள் அதையும் பாட புத்தகத்தில் எழுதி வைத்து இருக்கிறீர்கள். இதை மாற்றி ஆரியபட்டா மற்றும் ப்ரஹ்மகுப்தா புவி ஈர்ப்பு விசையை பற்றி நியூட்டனுக்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே சொன்னார்கள் என்று சொன்னால் அதை ஹிந்து மதவாதம் மதவெறி என்று வினவு போன்ற இந்தியா விரோதிகள் சொல்வார்கள்.

     Marconi ரேடியோ ட்ரான்ஸ்மிஷஸின் கண்டுபிடித்தார் என்று தான் உலகம் சொல்கிறது ஆனால் அவருக்கு முன்பே Jagadish Chandra Bose கண்டுபிடித்தார் ஆனால் பெயர் மார்க்கோனிக்கு JS Bose கண்டுபிடிப்பால் தான் இன்று மொபைல் டெக்னாலஜி, ரேடார், தொலைத்தொடர்பு சாதனங்கள் இயங்குவதற்கான அடிப்படை காரணம் ஆனால் யாரும் இதை ஏற்க மாட்டோம்.

     உங்களை போன்ற கிறிஸ்துவர்களின் அடிமை புத்தியால் மேற்கத்தியர்கள் தான் உயர்ந்தவர்கள் இந்தியர்கள் தாழ்ந்தவர்கள் என்ற அடிமை எண்ணம் ஊறி போய் இருக்கிறது.

     அந்த அடிமை புத்தி தான் உங்களை இந்த மாதிரி கேள்விகள் கேட்க வைக்கிறது.

 6. நீண்ட காலமாக மதங்களில் இருப்பது குப்பை என்று சொல்லப்பட்டு வருகிறது

  ஆனால் பேனா, பேப்பர், ஓலை சுவடி என்று எதுவுமே இல்லாத காலங்களில் ரிஷிகள் அனைத்தையும் ‘கதைகளாக’ அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக சொல்லி வைத்தனர்

  உதாரணமாக சந்திரன் ‘ரிஷப’ ராசியில் உச்சம். இதை அறிவியல் ரீதியாக மக்களுக்கு சொல்லாமல், அந்த காலத்தில் (பேனா, பேப்பர், ஓலை சுவடி என்று எதுவுமே இல்லாத) எளிதாக புரிந்து கொள்ள கதையாக சொல்லப்பட்டது

  அதாவது, சந்திரனுக்கு ’27 மனைவிகள்’, அதில் அவருக்கு பிடித்த மனைவி ‘ரோகினி’ என்று சொல்லப்பட்டது இப்போது சொல்வது போல் Vector, Astro physics என்று சொல்வது அந்த காலத்தில் மிகவும் கடினம்

  இதை புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தான் மதம் ஒரு மாயை, குப்பை என்று சொல்லுகின்றனர்

 7. வேதங்களிலும் புராணங்களிலும் ஆரம்பநிலை அறிவியலும் மருத்துவமும் கொஞ்சம் உண்டு.. மற்றபடி பெரும்பாலும் கட்டுக் கதைகளும் கற்பனைகளுமே. நீங்கள் சொல்வது மாதிரி ஆகாய விமானம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற வளர்ந்த நிலை அறிவியல் அப்போது இல்லை. இது மாதிரியான ஆரம்பநிலை அறிவியல் மற்றும் மருத்துவ அறிவு உலகின் எல்லா நாகரிகங்களிலும் உண்டு. மற்றபடி பெரும்பாலும் கற்பனையும் கட்டுக்கதைகளும் தான். மேற்கத்திய விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் பலமுறை தோற்று உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏதோ வேதங்களையும் சாஸ்திரங்களையும் காப்பி அடித்து கண்டுபிடித்ததாக நீங்கள் கப்சா விடக்கூடாது. இந்த மாதிரியான சிந்தனை தான் இந்தியா அறிவியல் துறையில் வளர்ச்சி அடையாததற்கு காரணம். மேலும் நான் கிறிஸ்தவன் அல்ல. உலகின் மற்ற நாடுகளில் படையெடுப்புகளாலும் கொள்ளைகளாலும் இந்தியாவில் ஏற்பட்டதை விட மிகப்பெரிய பாதிப்பு உண்டானது. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் மீண்டெழுந்து விட்டன. ஏனெனில் பாரம்பரியம் பண்பாடு என்ற பெயரில் அவர்கள் கட்டுக்கதைகளை நம்புவதில்லை. நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டிருந்தாலும் இப்போதும் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அதைப் படித்து ஏன் இங்கு இருப்பவர்கள் ஒன்றையும் கண்டு பிடிக்கவும் இல்லை. தயாரிக்கவும் இல்லை .யார் இவர்கள் கையை பிடித்து கட்டிப் போட்டார்கள். மேற்கத்திய உலகம் மதம் என்கிற கோட்டை தாண்டி போனதால்தான் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாயின. இங்கு உங்களை மாதிரி ஆட்கள் இருப்பதால்தான் எதுவும் உருப்படாமல் இருக்கிறது. பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்டால் அதற்கு முகலாயர்கள் மீதும் மவுண்ட்பேட்டன் மீதும் மோதிலால் நேரு மீதும் பழிபோடும் மோடியின் பித்தலாட்டத்தை ஒத்தது உங்கள் வாதம்.

  • கிறிஸ்துவர்கள் எல்லாம் ஏன் இந்தியாவை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அப்படியே இந்தியர்களால் எதாவுது கண்டுபிடிக்கப்பட்டால் அதை பற்றி குறைகளையும் அவதூறுகளையும் பேசுவதாகவே உள்ளது உங்களின் வாதம்.

   இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைகள்

   1. Binary numbers – இந்த நம்பர் இல்லாமல் இன்றைய கம்ப்யூட்டர் இல்லை.
   2. Cataract Surgery – கேட்ராக்ட் ஆபரேஷன் முதன் முதலில் (உங்கள் கிறிஸ்துவ உலகம் காடுகளில் மிருகங்களை வேட்டையாடிக்கொண்டு இருந்தபோது) இந்தியாவில் செய்யப்பட்டது. இந்தியாவில் ஆபரேஷன் செய்து கொள்ள சீனா, கிரீக் போன்ற நாடுகளில் இருந்து எல்லாம் வந்தார்கள். கிரீக் சீனா மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெற்று சென்றார்கள். இந்தியாவில் இருந்து தான் கேட்ராக்ட் ஆபரேஷன் சீனாவிற்கு சென்றது.
   3. Steel & Metal works – உங்கள் கிறிஸ்துவ உலகத்திற்கு மெட்டல் பற்றி தெரிவதற்கு 2000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் இரும்பு பயன்படுத்தப்பட்டது.
   4. Fibonacci Numbers
   5. Cotton cultivation – உங்களின் கிறிஸ்துவ உலகம் மிருக தோலை உடையாக உடுத்தி கொண்டு இருந்த போது, இந்தியாவில் பருத்தி பயிரிட்டு, பருத்தி ஆடையை உடுத்தினார்கள் (இயேசு பிறப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே)… உலகத்திற்கு உடை கொடுத்தவர்கள் இந்தியர்கள்.
   6. Ink – இந்தியாவில் தான் musi என்று சொல்லப்படும் பேணா மை (4 ம் நூற்றாண்டு) கண்டுபிடிக்கப்பட்டது, இங்க தொட்டு எழுத்தும் கூர்மையான முனை தென் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது.

   இப்படி எவ்வுளவோ சொல்லி கொண்டு போகலாம் ஆனால் உங்களை போன்ற கிறிஸ்துவ அடிமைகளுக்கு இந்தியாவின் உயர்வு பற்றி புரிய போவதில்லை.

  • உங்கள் வார்த்தைகளில் சொல்வது என்றால் வெள்ளைக்காரர்கள் பல தோல்விக்கு பிறகு ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கினார்கள் என்றால் இந்தியர்கள் மட்டும் எப்படி telescope கூட இல்லாமல் பூமி சந்திரன் இடையே தூரத்தை அளந்தார்கள் என்பதை சொல்ல முடியும்மா ?

   முதலில் உங்களின் அடிமை கிறிஸ்துவ மனநிலையில் இருந்து வெளியே வந்து இந்தியாவை பாருங்கள்.

   • பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே இருக்கும் தூரத்தை அளந்தார்கள் என்பது உங்களை மாதிரி ஆட்கள் ஜோடிக்கும் கப்சா ஆக தான் இருக்க முடியும். நவீன விஞ்ஞானத்தின் படி சந்திரனும் சூரியனும் கிரகங்களே அல்ல. ராகு கேது என்னும் கிரகங்கள் கிடையவே கிடையாது. ஆனால் உங்களுடைய வேதங்களிலும் புராணங்களிலும் நவகிரகங்கள் என்னும் பெயரில் இவற்றை கிரகங்கள் வரிசையில் உள்ளடக்கிய முட்டாள்தனம் உண்டு. சூரியன் அடிப்படையில் ஒரு விண்மீன். சந்திரன் ஒரு துணைக்கோள். என்னே உங்கள் ரிஷிகளின் அறிவு.

    • உங்களை போன்ற கிறிஸ்துவ அடிமைகள் இந்தியாவை பற்றிய அறிவு சிறிதும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது ஆனால் உங்களுக்கு இஸ்ரேல் வாடிகன் பற்றி கேட்டால் அனைத்தும் தெரியும். மதவெறி உங்களை போன்ற கிறிஸ்துவர்களின் கண்களை மூடி மறைக்கிறது.

     வேத காலத்தில் இப்படி தான் தூரத்தை அலைந்தார்கள், பூமிக்கும் சந்திரனுக்குமான தூரம் சந்திரனின் 108 விட்டம் (diameter) அளவு.

     அதேபோல் பூமிக்கும் சூரியனுக்குமான தூரம் 108 சூரிய விட்டம் (diameter)

     Distance between Sun and Earth = (Diameter of the Sun) x 108 = (1.39 million km) x 108 = 150.12 million கிம்

     நவீன அறிவியல் சூரியனுக்கும் பூமிக்குமாக தூரம் 149.6 million km என்று அறிவித்து இருக்கிறார்கள். வேத காலத்தில் இருந்த அளவிற்கும் நவீன அறிவியலுக்கும் இருக்கும் வித்தியாசம் மிக மிக குறைவானது.

     ரிக் வேதத்தில் இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது, சூரிய வணக்கத்தில் சூரிய ஒளி அரை நிமிடத்தில் 2,202 யோஜனஸ் பிரயாணம் செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். அதுவும் இன்றை நவீன அறிவியலுக்கு பொருந்தி போகிறது.

 8. “Vector, Astro physics என்று சொல்வது அந்த காலத்தில் மிகவும் கடினம்”
  Vector, Astro physics எல்லாம் தெரிந்த உங்கள் ரிஷிகளுக்கு பேனா பேப்பர் பென்சில் ஆகியவற்றை கண்டுபிடிப்பதில் என்ன சிரமம் இருந்திருக்க முடியும். ஏன் அவற்றை கண்டுபிடிக்கவில்லை. சமஸ்கிருத மொழியானது கிபி நான்காம் நூற்றாண்டு வரை எழுத்து வடிவம் இல்லாமல் நாடோடி கூட்டத்தோடு அலைந்து திரிந்த தாக வரலாறு கூறுகிறது ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் கூட கொடுக்க இயலாத ரிஷிகள் தான் மேற்படி சமாச்சாரங்களை கண்டுபிடித்து வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வைப்பாட்டி ரக கதைகளாக புனைந்து வைத்தார்களா.

 9. வழக்கமான மத எதிர்ப்பு பதில்கள் தான் இவை

  நீங்கள் சொல்லும் ‘கற்பனை கதைகள்’, ‘கட்டு கதைகள்’ அனைத்தும் ஏதாவது ஒரு விஷயத்தை எளிதாக புரிந்த கொள்வதற்காகவே சொல்ல பட்டு இருக்கும்

  உதாரணமாக விநாயகர் ஏன் யானை முகத்துடன் காட்சி அளிக்கிறார் ? ஏன் வேறு விலங்குகளின் ‘தலையை’ விநாயகருக்கு பொருத்தி இருக்கலாமே ?

  நீங்கள் ஏற்று கொள்வது, ஏற்று கொள்ளாதது எல்லாம் பிறகு. இவற்றை பற்றி தெரிந்து கொள்ள முதலில் பொறுமை வேண்டும்.

  // பின்னர் பலமுறை தோற்று உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏதோ வேதங்களையும் சாஸ்திரங்களையும் காப்பி அடித்து கண்டுபிடித்ததாக நீங்கள் கப்சா விடக்கூடாது //

  இவ்வாறு நான் எங்கு கூறி உள்ளேன் ?

  // பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்டால் அதற்கு முகலாயர்கள் மீதும் மவுண்ட்பேட்டன் மீதும் மோதிலால் நேரு மீதும் பழிபோடும் மோடியின் பித்தலாட்டத்தை ஒத்தது உங்கள் வாதம். //

  பெட்ரோல் பற்றி இவ்வளவு கவலை படும் தாங்கள் ‘ஊடகங்களை’ தான் கேள்வி எழுப்ப வேண்டும். ‘ராமர் பிள்ளை’ என்னவானார் ? மூலிகை பெட்ரோல் மார்க்கெட்டுக்கு வரும் ‘சற்று நேரம்’ முன் அவர் கைது செய்யப்பட்டார். அவரின் தற்போதைய நிலை என்ன ?

  // அதைப் படித்து ஏன் இங்கு இருப்பவர்கள் ஒன்றையும் கண்டு பிடிக்கவும் இல்லை. தயாரிக்கவும் இல்லை .யார் இவர்கள் கையை பிடித்து கட்டிப் போட்டார்கள். மேற்கத்திய உலகம் மதம் என்கிற கோட்டை தாண்டி போனதால்தான் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாயின //

  ஆர்யபட்டார் உருவாக்கிய ‘0’ உபயோகப்படுத்தாமல் இருப்பார்களா ? இது கண்டுபிடுப்பு இல்லையா ?

  வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போய் விட்டால், ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று தீர்மானம் போட்டவர்கள் வாதம் போல் உள்ளது தங்கள் வாதம்

  இந்தியாவில் இன்றும் நிறைய கண்டுபிடுப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறன்றன. உதாரணமாக ‘நாற்று நடுவதற்கு’ எளிய கருவி உள்ளது மற்றும் ‘வீட்டில் கொள்ளை போவதை’ தவிர்க்க எளிய செல் போன் செயலி போன்று ஒன்று உள்ளது ஆனால் அவைகளுக்கு சரியான ‘marketing’ இல்லை என்பதே உண்மை.

  // Vector, Astro physics எல்லாம் தெரிந்த உங்கள் ரிஷிகளுக்கு பேனா பேப்பர் பென்சில் ஆகியவற்றை கண்டுபிடிப்பதில் என்ன சிரமம் இருந்திருக்க முடியும். //

  அவர்கள் Vector, Astro physics என்று சொல்லாமல் இருந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அந்த காலத்திற்கு ஏற்றார் போல் (மொழி வடிவம் இல்லாத காலத்தில்) வேறு ஏதேனும் சொற்களை கண்டிப்பாக உபயோகிப்படுத்தி இருப்பார்கள்

  // ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் கூட கொடுக்க இயலாத ரிஷிகள் தான் மேற்படி சமாச்சாரங்களை கண்டுபிடித்து வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வைப்பாட்டி ரக கதைகளாக புனைந்து வைத்தார்களா. //

  ஈ வெ ரா கோஷ்டியினர் தான் வழக்கமாக இது போல் புலம்புவார்கள். முதலில் மொழி, பிறகு எழுத்து வடிவம் என்று படிப்படியாக தானே வர முடியும்

  ஏன் உங்கள் விஞ்ஞானிகள் எடுத்தவுடனேயே ‘boeing 777ஐ’ உருவாக்கவில்லை ?

  • உங்கள் ரிஷிகளுக்கு தான் எல்லாம் தெரியுமே. அவர்கள் போயிங் விமானம் உருவாக்கிய விஞ்ஞானிகளை போல காப்பி அடிக்கும் ஆட்கள் அல்லவே. அதனால்தான் கேட்டேன்.

 10. பண்டைய இந்தியாவில் ஏற்பட்ட ஆரம்ப நிலை அறிவியல் மற்றும் மருத்துவ வளர்ச்சியை பூதாகரம் செய்வதும் மேற்கத்திய உலகத்தின் கடந்த இருநூறு ஆண்டுகால மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வேதங்களையும் சாஸ்திரங்களையும் காப்பியடித்து உண்டானது என்று பிதற்றுவதும் எந்த வகையிலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவாது. என்னை கிறிஸ்தவன் என்றோ கிறிஸ்தவ அடிவருடி என்றோ அழைப்பதால் இந்து மதத்தில் இருக்கும் மூடத்தனங்களை நியாயப்படுத்திவிட முடியாது. பண்டைய இந்திய மன்னர்கள் போர் தொழில்நுட்பம் உள்ளிட்ட எல்லாமே வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டு விட்டது இனி புதிதாக கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று இருந்ததால்தான் போர் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆனால் எண்ணிக்கையில் குறைவான முகலாயர்கள் இவர்களை வெற்றி கொண்டார்கள். இப்படிப்பட்ட குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் சிந்தனையை ஆர் எஸ் எஸ் கும்பலின் அனுதாபிகள் ஆகிய உங்களை போன்றோர் வளர்த்து எடுப்பதால் எந்த முன்னேற்றமும் இந்திய சமூகத்தில் ஏற்படாது. மூடத்தனங்கள் தான் இன்னும் வரும். கற்பனைகள், ஆபாச கதைகள் ஆகியன மதத்தில் இருக்கும் அறிவியல் எனும் பெயரில் இந்திய சமூகத்தை பிடித்து ஆட்டுகிறது என்பது உங்களிடம் இருந்து தெரிகிறது. உருப்பட வழியே இல்லை.

 11. நான் கேட்ட எந்த கேள்விக்கும் தாங்கள் பதில் அளிக்கவில்லை , மாறாக ஈ வெ ரா கோஷ்டியை போல் புலம்பி கொண்டு இருக்கிறீர்கள்

  // மேற்கத்திய உலகத்தின் கடந்த இருநூறு ஆண்டுகால மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வேதங்களையும் சாஸ்திரங்களையும் காப்பியடித்து உண்டானது என்று பிதற்றுவதும் எந்த வகையிலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவாது //

  இதற்க்கு முன்பே பதில் சொல்லியாகிவிட்டது.

  வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போய் விட்டால், ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று தீர்மானம் போட்டவர்கள் வாதம் போல் உள்ளது தங்கள் வாதம்

  // வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போய் விட்டால், ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று தீர்மானம் போட்டவர்கள் வாதம் போல் உள்ளது தங்கள் வாதம் //

  இங்கே வாதம் செய்பவர்கள் எல்லாம் RSS அனுதாபிகள் என்று நீங்களாகவே நினைத்து கொண்டால் நான் எதுவும் செய்ய முடியாது

  மதம் என்றாலே ‘மூடத்தனம்’ என்று சொல்வது தான் ‘மூடத்தனம்’. நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே உங்களுக்கு கிடைக்கும்

  நன்றிகள்

 12. நான் முதலில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் ஐயா. மேற்கத்திய உலகில் அறிவியல் ஆய்வாளர்கள் இரவு பகல் பாராமல் முயற்சி செய்து பல்வேறு கட்ட தோல்விகளுக்குப் பின்னர் மேற்கொள்ளும் கண்டுபிடிப்புகளை வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றில் இருக்கும் அரைவேக்காட்டு தனங்கள், கட்டுக்கதைகள் ஆகியவற்றோடு தொடர்புபடுத்துவது கயமைத்தனம் இல்லையா. இந்த கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகளில் மிகப் பலர் பைபிளைக் கூட சரியாக படிக்காதவர்கள். ஒரு சிலர் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள். அவர்களுக்கும் இந்துமத வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றுக்கும் என்ன சம்பந்தம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாலந்தா பல்கலைக்கழகம் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் மனித இனம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய பாய்ச்சலை ஐரோப்பாவும் அமெரிக்காவும் நிகழ்த்தியுள்ளன. இந்தியாவில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்றால் இந்த நாடுகளை தான் முன்மாதிரியாக கொள்ள முடியும். நீங்கள் சொல்லும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டால் கடைசியில் மாட்டு மூத்திரத்தில் டானிக் தயாரிப்பதில் போய் முடியும். இப்போது அதுதான் நடக்கிறது. உங்கள் முனி புங்குடு கள் பூமிக்கும் சூரியனுக்கும் ஆன தூரத்தை அளந்து வைக்கக்கூடிய அளவுக்கும் ஒளியின் வேகத்தையும் கணக்கிடக்கூடிய அளவுக்கும் அறிவாளிகள் என்றால் ஏன் சூரியன் என்னும் விண்மீனையும் சந்திரன் என்னும் துணைக் கோளையும் கிரகங்கள் எனக் குறித்தார்கள். இல்லாத ராகுவையும் கேதுவையும் கிரகங்கள் என்று ஏன் குறித்தார்கள். நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கிரகங்களை ஏன் குறிக்கவில்லை. ஏன் கிரகணத்தை பாம்பு நிலாவை விழுங்குவதாக குறித்தார்கள். இதிலிருந்தே இதெல்லாம் கட்டுக்கதை அல்லது அரைவேக்காட்டுத்தனம் என தெரிகிறது. ஈவேரா கூட்டம் என்றைக்கும் புலம்பியது கிடையாது. வலுவான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் உங்களை மாதிரி ஆட்கள் தான் பித்தலாட்டம் செய்து புலம்பியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ உலகம் என்பதே இல்லை. மேற்கத்திய உலகில் தட்பவெப்பம் பருத்தி உற்பத்திக்கு ஒவ்வாத ஒன்று. இந்தியாவில் தோல் செருப்பு அணிகிறார்கள். உங்கள் முனிபுங்கவர்கள் கூட புலித்தோலின் மீது உட்கார்ந்தது உங்களுக்கு தெரியாதா.

 13. நீங்கள் பல விஷயங்களை போட்டு குழப்பி கொண்டு இருகிறார்கள். ஈ வே ரா புலம்பியது இல்லை என்று குறிப்பிடுவதில் இருந்தே இது தெரிகிறது. ஈ வெ ரா மற்ற மதங்களை பற்றி என்ன விமர்சனங்களை வைத்துள்ளார் என்பதை நீங்கள் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்

  நமது முன்னோர்கள் நமது “வாழ்க்கை முறைக்கு” மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதே உண்மை. அதன் விளைவு தான்

  (1) ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடு
  (2) ஜோதிட சாஸ்திரம்
  (3) மனையடி சாஸ்திரம்
  (4) வாஸ்து சாஸ்திரம் போன்றவை. வழக்கம் போல் இவை எல்லாம் குப்பை என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் இதை எடுத்து காட்ட வேண்டியது என் பொறுப்பு

  மேலை நாட்டவர்களின் ‘area of interest’ வேறு. நமது முன்னோர்களின் ‘area of interest’ வேறு.. இதை நீங்கள் புரிந்து கொண்டால் இவ்வளவு கேள்விகளை கேட்க மாட்டீர்கள்

  1) வேதங்களில் இருந்து தான் அனைத்தும் கண்டுபிடிக்கபட்டன என்று இங்கு யார் ‘ஆணித்தரமாக’ வாதாடி கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை

  2) நீங்கள் ‘அல்லோபதி’ மருத்துவம் பற்றி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறன் . சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி என்று நம் நாட்டார்வகளும் பக்க விளைவு இல்லாத மருத்துவத்தை கையாள்கின்றனர். சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதிக்கு அரசாங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு என்பதையும் விவாதிக்க வேண்டும். அது தனி விவாதம்

  3) // நீங்கள் சொல்லும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டால் கடைசியில் மாட்டு மூத்திரத்தில் டானிக் தயாரிப்பதில் போய் முடியும். இப்போது அதுதான் நடக்கிறது //

  இந்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதை விட ‘அண்ணா பல்கலைக்கழக’ துணை வேந்தர் பதிலை YouTubeல் தேடி படித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் நீங்களும் படித்தவர், துணை வேந்தரும் படித்தவர்

  மாட்டு மூத்திரத்தை தொடாவிட்டால் விவாதம் நிறைவடையாது போல் 🙂

  4) // சூரியன் என்னும் விண்மீனையும் சந்திரன் என்னும் துணைக் கோளையும் கிரகங்கள் எனக் குறித்தார்கள். இல்லாத ராகுவையும் கேதுவையும் கிரகங்கள் என்று ஏன் குறித்தார்கள். நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கிரகங்களை ஏன் குறிக்கவில்லை. ஏன் கிரகணத்தை பாம்பு நிலாவை விழுங்குவதாக குறித்தார்கள். இதிலிருந்தே இதெல்லாம் கட்டுக்கதை அல்லது அரைவேக்காட்டுத்தனம் என தெரிகிறது //

  இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி சொல்லி எனக்கு அலுத்துப்போய் விட்டது. FBல் ஒரு நாத்திக குழு இருக்கிறது. அவர்களும் தெளிவாக சிந்திக்க தெரிந்தவர்கள் போல் என்னிடம் நீங்கள் ‘மேற்சொன்ன கேள்விகளோடு இன்னும் நிறைய ஜோதிட சம்பந்தப்பட்ட’ பல அறிவு பூர்வமான கேள்விகளை கேட்டனர்

  அவற்றிற்கு நானும் பொறுமையாக பதில் சொல்லி முடித்தேன். என்ன இருந்தாலும் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா ? நேரம் கிடைக்கும் பொது அந்த linkஐ தேடி கண்டுபிடித்து பதிகிறேன்

  5) // ஈவேரா கூட்டம் என்றைக்கும் புலம்பியது கிடையாது. வலுவான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் உங்களை மாதிரி ஆட்கள் தான் பித்தலாட்டம் செய்து புலம்பியிருக்கிறார்கள். //

  என்ன இருந்தாலும் உலகின் முதல் பகுத்தறிவாதி ‘ஈ வெ ரா’ தானே. அது மட்டுமின்றி நமக்கும் ‘மானமும், அறிவும்’ ‘ஈ வெ ரா’ மூலமாக தானே வந்தது. அதனால் கேள்விகள் அப்படி தான் இருக்கும்

  வரலாற்று வாசனையே இல்லாதவர்கள் தான் நீங்கள் மேற்சொன்னதை அப்படியே ஏற்று கொள்வார்கள். ‘ஈ வெ ரா’ பித்தலாட்டத்தை என்னாலும் பட்டியல் போட முடியும்.

  உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லியாகிவிட்டது என்று நம்புகிறேன்

  நன்றிகள்

 14. // ஆனால் உங்களுடைய வேதங்களிலும் புராணங்களிலும் நவகிரகங்கள் என்னும் பெயரில் இவற்றை கிரகங்கள் வரிசையில் உள்ளடக்கிய முட்டாள்தனம் உண்டு. சூரியன் அடிப்படையில் ஒரு விண்மீன். சந்திரன் ஒரு துணைக்கோள். என்னே உங்கள் ரிஷிகளின் அறிவு. //

  ரிஷிகளுக்கு தான் அறிவு இல்லை. சரி. ஆனால் மேற்கத்தியர் முதலில் ‘சூரியனை’ சூரியன் என்று அழைக்காமல் ‘central fire’ என்றே அழைத்தனர். இது ஏன் ? அவர்களுக்கு தான் எல்லாமே தெரியுமே

  10வது கிரகம் என்று ERISஐ அறிவித்து விட்டு பின்பு ஏன் கிரகம் இல்லை என்று மாற்றி கொண்டனர் ?

 15. ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்து பண்பாடு கிடையாது. இந்தியப் பண்பாடும் கிடையாது. அது வெள்ளை இனத்தவர் இந்தியாவை ஆக்கிரமித்த போது உள்ளே வந்த கிறிஸ்தவ பண்பாடு. பண்டைய இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை, துணைவிகளை வைத்திருப்பது சகஜம். இந்து கடவுளர்களும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. ஏதாவது நல்ல விஷயம் என்றால் அது இந்தியாவையும் இந்து மதத்திலும் இருப்பது, கெட்ட விஷயம் என்றால் மற்ற மதங்களில் மற்ற நாடுகளில் தான் இருப்பது என ஜோடிப் பது ஆர் எஸ் எஸ் சார் பாலர்களின் குணம். அந்தக் குணம் உங்களுக்கும் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் எல்லாம் ஊருக்கு ஒன்று, ஆளுக்கு ஒன்று என எழுதிவைத்திருக்கிறார்கள். இதில் எது உண்மையானது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். பஞ்சாங்கங்களும் அப்படித்தான். தெலுங்கு புத்தாண்டு பஞ்சாங்கம், தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் என ஓராயிரம் கப்சாக்கள் உண்டு. இப்போது சீன வாஸ்து சாஸ்திரம் என ஒன்று வெளிநாட்டிலிருந்து நுழைந்திருக்கிறது. இவற்றில் எது உண்மை என்பது உங்களுக்கும் உங்கள் ரிஷிகளுக்கும் தான் வெளிச்சம்.
  பக்கவிளைவு இல்லாத மருத்துவம் என்பதே கிடையாது. அது சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என எதுவாக இருந்தாலும் கூட. இஞ்சி ஒரு இயற்கையான பொருள். அது சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நான்கு நாட்களுக்கு வெறும் வயிற்றில் இஞ்சி காபியை குடித்துப் பாருங்கள். அல்சர் வந்துவிடும். இந்த உலகில் நாம் உட்கொள்ளக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும், அது இயற்கையோ செயற்கையோ, பின் விளைவு என்பது நிச்சயம் உண்டு. அது கம்மியா அதிகமா என்பதில் தான் வேறுபாடு. ஆகையால் மனம்போன போக்கில் கப்சா விடக் கூடாது. இந்தியாவில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான பகுத்தறிவுவாதிகள் ஆதிகாலம் இருந்து வருகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவின் இந்தப் பகுதியில் பகுத்தறிவுக்கு வலுவான அடித்தளம் போட்டவர் ஈவேரா. அவர் சில விடயங்களில் அதீதமாக பேசி இருக்கலாம், செயல்பட்டிருக்கலாம். இருந்தாலும் அவர் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலானவை மிக நியாயமானவை.
  இந்தியா ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் மக்களைக் கொண்ட நாடு ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அங்கன்வாடி மையங்களில் முட்டைக்கு கூட தடை விதித்திருக்கிறது. இப்போது வெங்காயம், பூண்டு ஆகியவற்றுக்கும் தடை.

  • //ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்து பண்பாடு கிடையாது. இந்தியப் பண்பாடும் கிடையாது. அது வெள்ளை இனத்தவர் இந்தியாவை ஆக்கிரமித்த போது உள்ளே வந்த கிறிஸ்தவ பண்பாடு//

   ஏம்பா உன் கிறிஸ்துவ பொய்களுக்கு அளவே இல்லையா ? ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை உருவாக்கியது ராமன்… அது ஒவ்வொரு ஹிந்து மனதிலும் மிக ஆழமாக பதிந்து இருக்கும் விஷயம். இந்த நாட்டின் பெரியோர்கள் கற்பு பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் உண்டு என்று சொல்வதற்காக தான் ராமனை உதாரணமாக காட்டுகிறார்கள்.

   உங்கள் கிறிஸ்துவ உலகில் இன்றும் கூட குழந்தை பெற்றுக்கொள்வது இல்லை, அப்படியே குழந்தை பற்றுக்கொண்டாலும் அது யாருக்கு பிறந்த குழந்தை என்று தெரியாத நிலை தான் இன்றும் உள்ளது.

   பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளில் எல்லாம் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள சொல்லி அரசே விளம்பரங்களும், குழந்தை வளர்ப்பிற்காக அரசு மாத மாதம் பணமும் கொடுக்கிறது.

   //நான்கு நாட்களுக்கு வெறும் வயிற்றில் இஞ்சி காபியை குடித்துப் பாருங்கள். அல்சர் வந்துவிடும்//

   நான் பள்ளி நாட்களில் இருந்து இன்று வரையில் தினமும் சுக்கு பால் தான் சாப்பிடுகிறேன் அல்சர் அல்லது வேறு எந்த நோயும் இது வரையில் வந்தது இல்லை. நான் பள்ளியில் படிக்கும் சிறுவனாக இருந்த போது ஜுரம் என்று மருத்துவரை ஒரு முறை பார்த்தேன் அதன் பிறகு, 14 வருடங்களுக்கு மேலாக இன்று வரையில் மருத்துவரை பார்த்ததே இல்லை.

   சும்மா ஏதாச்சும் சொல்ல வேண்டும் என்பதற்காக இல்லாத பொய்களை எல்லாம் சொல்ல வேண்டாம்..

   சுக்கு இஞ்சி போன்றவைகள் எல்லாம் உடல் நலத்திற்கு நல்லது.

 16. // ஜோதிட சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் எல்லாம் ஊருக்கு ஒன்று, ஆளுக்கு ஒன்று என எழுதிவைத்திருக்கிறார்கள். //

  ஜோதிட சாஸ்திரத்தை பற்றி எழுதவோ, விளக்கவோ எனக்கு நேரமில்லை. நீங்கள் சொல்வது ஒன்றும் புதிதல்ல.

  // பஞ்சாங்கங்களும் அப்படித்தான். தெலுங்கு புத்தாண்டு பஞ்சாங்கம், தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் என ஓராயிரம் கப்சாக்கள் உண்டு. //

  இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எங்கே இருந்து கிடைக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை

  உங்கள் சுப.வீ பஞ்சாங்கம் உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார் ஐயா. அதை கவனத்தில் கொள்ளவும். பஞ்சாங்கம் என்பது ஒன்றும் கிடையாது. காலண்டர் போன்றது. அவ்வளவு தான்.

  // அது இயற்கையோ செயற்கையோ, பின் விளைவு என்பது நிச்சயம் உண்டு. அது கம்மியா அதிகமா என்பதில் தான் வேறுபாடு. ஆகையால் மனம்போன போக்கில் கப்சா விடக் கூடாது. //

  உணவே மருந்து. மருந்தே உணவு என்பது நம் இயற்க்கை வைத்தியம். எதை எப்படி சாப்பிட வேண்டுமோ அதை அப்படி தான் சாப்பிட வேண்டும்

  ஈ வெ ரா ‘வைக்கம் வீரர்’ என்று சொன்னதை விடவா இது கப்ஸா ?

  // ஆனால் தென்னிந்தியாவின் இந்தப் பகுதியில் பகுத்தறிவுக்கு வலுவான அடித்தளம் போட்டவர் ஈவேரா. //

  அப்படி சொல்லுங்கள். தென்னிந்தியாவில் ஈ வெ ரா அடித்தளம் போட்டாரா ? அவர் தமிழ்நாட்டில் கூட அடித்தளம் போடவில்லை. அடித்தளம் போட்டவர்களை ‘அடியோடு’ மறைத்தது தான் ‘திராவிட சூழ்ச்சி’

  ‘ரெட்டைமலை ஸ்ரீனிவாசன்’, ‘அயோத்திதாச பண்டிதர்’, ‘ராஜா’, ‘வைகுண்டர்’ இவர்கள் எல்லாம் யார் ? ஏன் இவர்களை பற்றி நாம் நம்முடைய ‘பள்ளி அல்லது கல்லூரி’ பாடங்களில் படிக்கவேயில்லை ?

  // அவர் சில விடயங்களில் அதீதமாக பேசி இருக்கலாம், செயல்பட்டிருக்கலாம். இருந்தாலும் அவர் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலானவை மிக நியாயமானவை //

  எப்படி ஊருக்கு ஒரு நியாயம் ? அவருக்கு ஒரு நியாயம். அது தானே? அப்படி தானே வரலாறு சொல்கிறது

  // இந்தியா ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் மக்களைக் கொண்ட நாடு ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அங்கன்வாடி மையங்களில் முட்டைக்கு கூட தடை விதித்திருக்கிறது //

  இது கண்டிக்கத்தக்கது

  நன்றிகள்

  • ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் ஆகியோர் முன்னர் இருந்தனர். ஆனால் இவர்கள் வீச்சு ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. தலித் மக்களுக்கு மட்டுமே இவர்கள் எட்டினார்கள். இன்றைக்கு தமிழகத்தில் நினைத்த அளவுக்கு வளரமுடியாமல் இந்துத்துவ வெறித்தனம் திணறி கொண்டிருப்பதற்கு காரணம் ஈவேரா போட்ட இடிப்பதற்கு கடினமாக இருக்கும் அடித்தளம் தான்.

   • // ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் ஆகியோர் முன்னர் இருந்தனர். ஆனால் இவர்கள் வீச்சு ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. தலித் மக்களுக்கு மட்டுமே இவர்கள் எட்டினார்கள் //

    ‘ரெட்டைமலை ஸ்ரீனிவாசன்’, ‘அயோத்திதாச பண்டிதர்’, ‘ராஜா’, ‘வைகுண்டர்’ இவர்கள் எல்லாம் யார் ? ஏன் இவர்களை பற்றி நாம் நம்முடைய ‘பள்ளி அல்லது கல்லூரி’ பாடங்களில் படிக்கவேயில்லை ?

    இந்த கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. இந்த கேள்வி மிக முக்கியமான கேள்வி. ஏனென்றால் மற்றவர்களை பற்றி படித்தால் தான் அவர்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள் என்பது தெரியவரும்

    இல்லை என்றால் கடைசி வரை ‘ஈ வெ ரா’ இல்லை என்றால் எதுவுமே நடந்து இருக்காது என்கிற பொய் தான் வரும் எல்லா தலைமுறைகளும் நம்புவர்

    தலித் மக்களுக்காக போராடாமல் வேறு யாருக்காக போராட வேண்டும் ? அவர்கள் தானே மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். உங்கள் ஈ வெ ரா தலித் மக்களுக்காக எதனை போராட்டங்களை நடத்தி இருக்கிறார் ? வைக்கம் போராட்டம் ‘காங்கிரஸ்’ கட்சினியுடைய போராட்டம். ஆகையால் அதை சொல்ல வேண்டாம்

    பறையனை, சூத்திரனோடு சேர்ப்பது தான் தீண்டாமை ஒழிப்பா என்பர் கேட்டவர் தான் உங்கள் ‘ஈ வெ ரா’. அவர் ‘நடுசாதி’ என்று யாரை சொன்னார் என்று நீங்கள் தான் எனக்கு விளக்க வேண்டும்

    // இன்றைக்கு தமிழகத்தில் நினைத்த அளவுக்கு வளரமுடியாமல் இந்துத்துவ வெறித்தனம் திணறி கொண்டிருப்பதற்கு காரணம் ஈவேரா போட்ட இடிப்பதற்கு கடினமாக இருக்கும் அடித்தளம் தான். //

    நீங்கள் தூங்கி கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்க தோன்றுகிறது. இங்கே தான் ஒரு பார்ப்பனர் 6 முறை முதல் அமைச்சராக இருந்து இருக்கிறார்

    ஈ வெ ரா வை பற்றி தெரியாத உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் ‘தலித்’ முதல் அமைச்சர் ஆக முடிகிறது. ஈ வெ ரா மண்ணில் ஏன் அது முடியவில்லை ? தேர்தல் மற்றும் கட்சி அரசியல் மீது பழியை தூக்கி போட வேண்டாம்

    வினவு தளத்திலேயே ‘கோவை நகரம் ‘ காவி மயமாகிவிட்டது என்று கட்டுரை வந்து இருக்கிறது. Building Strong, basement weak என்பது போல் உள்ளது உங்கள் வாதம்

    ‘பார்ப்பன ஒழிப்பில்’ ஆரம்பித்து அது கடைசியில் ‘முதலியார் ஒழிப்பில்’ போய் நின்றது உங்கள் ‘ஈ வெ ரா’ கொள்கை. இது தான் உண்மை

 17. மணிகண்டன்!
  ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்துகொண்டு பேச வேண்டும். எதையாவது பேசக்கூடாது. பலதார மணம் என்பது தான் இந்து பண்பாடு. பண்டைய இந்தியாவிலும் மத்திய காலத்திலும் இதுதான் நடந்தது. அதனால்தான் ஒரே ஒரு மனைவியை மட்டும் கொண்ட ராமனை ஏகபத்தினி விரதன் என வேறுபடுத்தி அழைத்தார்கள். அதனையே இந்த இந்துத்துவவாதிகள் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். ஒருதார மணம் என்பது இந்து பண்பாடு கிடையாது. இன்று மேற்கத்திய உலகில் கிறிஸ்தவ மதத்தை யாரும் சரியாக பின்பற்றுவது கிடையாது. அதனால்தான் இஷ்டத்துக்கு மனம்போனபடி பாலியல் வாழ்க்கை நடத்துகிறார்கள். திருமண உறவு குறித்தும் பாலியல் வாழ்க்கை குறித்தும் கிருத்துவ மதம் சொல்வதற்கு எதிராக வாழ்ந்து வருகிறார்கள். ஏனெனில் மேற்கத்திய உலகில் மதத்தின் செல்வாக்கு குறிப்பாக சர்ச்சின் செல்வாக்கு மிகவும் குறைந்துவிட்டது. தனிநபர் உரிமை, சுதந்திர சிந்தனை ஆகிய கோட்பாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதனால்தான் கிழக்கத்திய நாடுகளின் மீது சர்ச் கவனத்தை திருப்பி உள்ளது. நான் சொன்னது இஞ்சி காபியை வெறும் வயிற்றில் குடிப்பது குறித்து. நாம் உண்ணும் எந்த பொருளுக்கும், அது இயற்கையோ செயற்கையோ, பக்க விளைவு நிச்சயம் உண்டு. அது ஆளைப் பொறுத்து, அளவை பொறுத்து, கூட இருப்பதைப் பொறுத்து மாறும். பக்கவிளைவு இல்லாத உண்ணும் பொருளே இந்த உலகில் கிடையாது. அதுதான் மருத்துவ உண்மை. இஷ்டத்துக்கு எதையாவது பிதற்ற கூடாது.

  • கிறிஸ்துவம் உலகம் முழுவதும் இதை தான் செய்து கொண்டு இருக்கிறது… மாற்று மதத்தை பற்றி அவதூறுகளும் பொய்களையும் பரப்பி வெறுப்பை வளர்த்து மத மாற்றம் செய்வார்கள்… அந்த பொய்யை தான் நீங்கள் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். இந்திய பண்பாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது இன்று நேற்று அல்ல பல ஆயிரம் வருடங்களாக பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்படும் ஒரு விஷயம். ஒருவனுக்கு பல தாரம் என்பது சமூகத்தில் ஏற்கப்படாத விஷயம், சட்டப்படி (ஹிந்துக்களுக்கு மட்டும்) பலதாரமனம் தண்டனைக்கு உரிய குற்றம்.

   சரி உங்களுக்கு ஒரு கேள்வி Mary Magdalene யார் என்று உங்களுக்கு தெரியும்மா ? இயேசுவின் மனைவி, அவர் ஒரு விபச்சாரி என்று உங்கள் கிறிஸ்துவம் தான் சொல்கிறது, ஜேசுவிற்கும் Mary Magdalene க்கும் திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தையும் இருப்பதாக கிறிஸ்துவ வரலாறு கூறுகிறது (இதை சொன்னதற்காக தான் Da Vinci Code படத்தை தடை செய்திர்கள், அந்தளவுக்கு மதவெறி உங்களை போன்ற கிறிஸ்துவர்களின் கண்களை மூடி மறைத்து இருக்கிறது)

   உங்கள் இயேசுவின் வரலாறே இப்படி இருக்கும் போது நீங்கள் கற்பை பற்றி பேசலாமா ? அதற்கு கிறிஸ்துவர்களுக்கு தகுதி இருக்கிறதா ?

   குறிப்பு: இந்த வரலாற்றை நான் படித்தது Independent என்ற இங்கிலாந்து பத்திரிகையில்.

   சரி உங்கள் கிறிஸ்துவ உலகில் ஒரு ராமனையோ அல்லது கண்ணகியையோ உதாரணம் காட்ட முடியும்மா ?

   • ஐயா
    மேரியின் வாழ்க்கையைப் பற்றியும் கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றியும் நான் எதுவும் சொல்லவில்லை. நீங்கள் படித்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் பைபிளில் பாலியல் ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்னும் கோட்பாடு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோட்பாடுதான் வெள்ளையர்கள் இந்தியாவை பிடித்த பின்னர் இந்து மதத்தில் இருக்கும் பலதாரமணம் தடை செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்து மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் பலதார மணத்துக்கு தடையில்லை. அதனால்தான் பண்டைய மன்னர்கள், உங்கள் ரிஷிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை, துணைவிகளை மதத்தின் தடையில்லாமல் வைத்திருக்க முடிந்தது. ஒரே ஒரு மனைவியை கொண்ட ராமனை ஏகபத்தினி விரதன் என வேறுபடுத்தி பார்த்தார்கள். அந்தக் காலத்தில் அனைவரும் ஒரே ஒரு மனைவியை கொண்டிருந்தால் எதற்கு ஒருவருக்கு மட்டும் ஏகபத்தினி விரதன் என்னும் பட்டம் கொடுக்க வேண்டும். இதுதான் உண்மை. இயேசுவின் பிறப்பு, மேரி மற்றும் கிறிஸ்தவப் பாதிரிகளின் யோக்கியதையை ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள். பைபிளை பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்பது தான் வலியுறுத்தப்படுகிறது. தீவிர கிறிஸ்தவர்கள் இதை பின்பற்றுகிறார்கள். இப்போது மேற்கத்திய உலகில் தனிநபர் சுதந்திரம், பாலியல் சுதந்திரம் ஆகியன மேலோங்கி இருப்பதால் யாரும் பைபிளை மதிப்பதில்லை. இதுதான் உண்மை மேலும் இன்றைக்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு உலகிலேயே இந்தியா என்னும் ஒரு நாடுதான். மற்ற எல்லா நாடுகளிலும் மற்ற மதத்தவர் குறிப்பாக ஆபிரகாமிய மதத்தவர் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து மதம் ஒரு பொருட்டே கிடையாது. ஏனெனில் இந்த உலகமே அவர்களுடைய அதிகாரத்தில் இருக்கிறது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என அறிவிக்கப்பட்ட போதும் இந்தியாவை இந்து நாடு என அறிவிக்காமல் நேரு தயங்கியதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று.

    • சுசுசுசுசுசுசு.. யப்பா முடியல.

     உங்களின் பைபிள் பழைய ஏற்பாட்டின்படி பலதாரமனம் ஏற்கப்பட்ட ஒன்று, இதோ ஆதாரம்

     Exodus 21:10
     10 If he takes another wife to himself, he shall not diminish her food, her clothing, or her marital rights.

     2 Samuel 12:8
     8 I gave your master’s house to you, and your master’s wives into your arms. I gave you all Israel and Judah. And if all this had been too little, I would have given you even more.

     இப்படி எவ்வுளவோ ஆதாரங்களை உங்கள் பைபிள் இருந்து கொடுக்கலாம், கிறிஸ்துவம் பலதாராமனத்தை ஏற்கிறது பல மனைவிகளுக்கு பிறகும் பிள்ளைகளுக்கு எப்படி சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என்ற விவரத்தையும் பைபிள் கொடுத்து இருக்கிறது.

     அதே போல் இந்தியாவில் இஸ்லாமியர்கள் பல பெண்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள், மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்துவ மதப்பிரிவான Pu Chana páwl பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் உள்ளது.

     சும்மா உங்கள் பொய்களை எல்லாம் வேறு யாரிடமாவுது போய் சொல்லுங்கள்…

     ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை ராமாயணம், திருக்குறள் என்று எத்தனையோ ஹிந்து வேதங்கள் வலியுறுத்தி இருக்கின்றன…

     • பழைய ஏற்பாடு என்பது யூதர்கள் இஸ்லாமியர்களாகிய அனைவருக்கும் பொதுவான ஒன்று. புதிய ஏற்பாட்டில் என்ன சொல்கிறது என்று பாருங்கள். கம்பராமாயணத்தில் தசரதனுக்கு 60,000 பெண்டாட்டிகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இது மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் தன்னை அறிவாளி என்று நினைப்பவன் அடுத்தவர்களை முட்டாள்களாக நினைக்க மாட்டான். திருக்குறள் ஒன்றும் இந்துமத காப்பியம் அல்ல.

      • அரசனின் கடமை, பசு, பிராமணர்கள், மாமிசம் உண்ணாமை, மறுபிறப்பு, காமம், காதல், இல்லறம் பற்றி எல்லாம் பேசும் திருக்குறள் ஹிந்து வேதம் இல்லாமல் வேறு என்னவாம்….

      • பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடோ உங்களின் கிறிஸ்துவ பைபிள் பலதார மனத்தை ஏற்கிறது… DOT

 18. நோயின்றி உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்றால் வெங்காயமும் பூண்டும் அவசியமானவை என்பதுதான் சித்தர்கள் மற்றும் தமிழர் மரபு. நமது மரபுக்கு எதிராக ஒரு கருத்து வருகிறது அது நடைமுறைப்படுத்தப் படுகிறது என்றால் அது என்ன மரபு? இந்த மரபை யார் வகுத்தது? இதையொட்டிய விவாதம் செய்வதே சரியானதாக இருக்க முடியும்.

  பார்ப்பன் சனாதன மதத்தின் அதாவது இன்று இந்து மதம் என்றழைக்கப்படும் பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூலான மனு தரும சாஸ்திரத்தில் வெங்காயத்தையும் பூண்டையும் இரு பிறப்பாளர்கள் சாப்பிடக் கூடாது என மனு மிகத் தெளிவாகச் சொல்கிறான். (மனு: 5-5). மீறுவோரை சாதி விலக்கம் செய்கிறான் (மனு: 5-19). இங்கே இருபிறப்பாளர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வருணத்தாரைக் குறிக்கும். இவர்கள் பணூல் அணிந்து கொள்ளும் தகுதி பெற்றவர்கள் என்பதால் இருபிறப்பாளர்கள் ஆகிறார்கள். ஆதாவது உபநயனம் செய்து கொள்வது இரண்டாவது பிறப்பு. நான்காவது வருணமான சூத்திரர்களுக்கு இந்த உணவு கட்டுப்பாடு கிடையாது. கலியுகத்தில் பாப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரு வருணங்கள் மட்டுமே உண்டு. சத்தியர் மற்றும் வைசிசியர் ஆகிய வருணங்கள் கிடையாது. தவிர திரவிடம் உள்ளிட்ட பல்வேறு நாட்டினத்தினரும் பார்ப்பர்களை எதிர்த்தமையால் சூத்திரர்களாக்கப்பட்டார்கள். மேலும் பார்ப்பனர்கள் மட்டுமே இன்று வருணமாக தங்களைக் கருதிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறார்கள். எனவே மனுவின் கூற்றுப்படி இன்று பார்ப்பனர்கள் மட்டுமே பூண்டையும் வெங்காயத்தையும் சாப்பிடக் கூடாது. இன்றைய பார்ப்பனர்கள் ஓரளவுக்கு இன்றும் இதை கடைபிடித்து வருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். இதை ஏன் அவர்கள் சூத்திரர்கள் மீது திணிக்க வேண்டும்? இதைத்தான் பார்ப்பன மேலாதிக்கம் என்கிறோம். பார்ப்பன மேலாதிக்கத்திற்கு சவக்குழி தோண்ட வெங்காயம் – பூண்டிலிருந்து தொடங்குவோம்.

  5-5. Garlic, leeks and onions, mushrooms and (all plants), springing from impure (substances), are unfit to be eaten by twice-born men.

  5-19. A twice-born man who knowingly eats mushrooms, a village-pig, garlic, a village-cock, onions, or leeks, will become an outcast.

  • வெங்காயம், பூண்டு போன்ற உணவு வகைகளை சாப்பிடும் போது நம் மனம் கட்டுப்பாட்டில் இருக்காது, அதனால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த உணவுகளை தவிர்க்க சொல்கிறார்கள்.

   பௌத்தர்களும் ஜைனர்களும்கூட பூண்டை தவிர்க்கின்றனர். ஜெயின் ஓட்டல்களில் இன்றும் பூண்டு, வெங்காயம் உபயோகிக்கப்படுவதில்லை இது எல்லோருக்கும் தெரியும்.